ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 ayyasamy ram

என் அப்பா.
 ayyasamy ram

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 ayyasamy ram

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 ayyasamy ram

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 ayyasamy ram

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 ayyasamy ram

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 ayyasamy ram

வில்லியாக நடிக்க ஆசை!
 ayyasamy ram

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

கரையே இல்லாத ஆறு
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 sandhiya m

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
ayyasamy ram
 

Admins Online

வள்ளலாரின் இறுதி பேருரை !!!

View previous topic View next topic Go down

வள்ளலாரின் இறுதி பேருரை !!!

Post by கிருபானந்தன் பழனிவேலுச்சா on Mon Jan 16, 2012 8:00 pm

(சிதம்பரம் இராமலிங்கம் (ஞான விண்ணப்பம் & பேருபதேசம்)--இருந்து எடுக்க பட்ட முக்கிய வாசகங்கள்!சன்மார்க்க கொடியை முதன்முதலில் ஏற்றி வைத்து ஆற்றிய உரை:

மேலும், சிலர் "இது ஆண்டவர் வருகின்ற தருணமாக இருக்கின்றதே! இத்தருணத்தில் முயற்சி செய்வானேன்? ஆண்டவர் வந்தவுடனே பெற வேண்டியதை நாம் பெற்றுக் கொள்ளப்படாதோ?" என்று வினவலாம். ஆம், இஃது - தாம் வினவியது நலந்தான். ஆண்டவர் வரப்போகின்றது சத்தியந்தான். நம்மவர்களின் திரை நீங்கப் போகின்றதும் சத்தியந்தான். நீங்களெல்லவரும் பெற வேண்டியதைப் பெற்றுக்கொள்ளுகின்றதுஞ் சத்தியந்தான்.

அவற்றில் தெய்வத்தைப் பற்றிக் குழூஉக் குறியாகக் குறித்திருக்கிறதேயன்றிப் புறங்கவியச் சொல்லவில்லை. அவ்வாறு பயிலுவோமேயானால் நமக்குக் காலமில்லை. ஆதலால் அவற்றில் லக்ஷியம் வைக்க வேண்டாம். ஏனெனில், அவைகளிலும் அவ்வச்சமய மதங்களிலும் - அற்பப் பிரயோஜனம் பெற்றுக் கொள்ளக்கூடுமேயல்லது, ஒப்பற்ற பெரிய வாழ்வாகிய இயற்கையுண்மை என்னும் ஆன்மானுபவத்தைப் பெற்றுக் கொள்கின்றதற்கு முடியாது.நான் முதலில் சைவ சமயத்தில் லக்ஷியம் வைத்துக் கொண்டிருந்தது இவ்வளவென்று அளவு சொல்ல முடியாது. அப்போது எனக்கு அவ்வளவு கொஞ்சம் அற்ப அறிவாக இருந்தது.

இப்போது ஆண்டவர் என்னை ஏறாத நிலைமேலேற்றியிருக்கின்றார். இப்போது எல்லாவற்றையும் விட்டு விட்டதினால் வந்த லாபம் இது

மேலும், இதுகாறும் தெய்வத்தின் உண்மையைத் தெரிய வொட்டாது, அசுத்த மாயாகாரிகளாகிய சித்தர்கள் மறைத்து விட்டார்கள். சுத்தமாயாகாரியாகிய தெரிந்த பெரியோரும் இல்லை. சன்மார்க்கமும் இல்லை. சன்மார்க்கம் இருந்தால், அனுபவித்தறியாத அனுபவமும் கேட்டறியாத கேள்வியும் நாம் கேட்டிருப்போம். மேலும் இறந்தவர்கள் மீளவும் எழுந்து வந்திருப்பார்கள்.

இங்குள்ள எல்லவர்க்கும் சுவர்க்க நரக விசாரமில்லை. சுவர்க்க நரக விசாரமுள்ளவர்கள் தங்கள் கருத்தின்படி பலவகைச் சாதனங்களைச் செய்து அற்ப பிரயோஜனத்தைப் பெற்று, முடிவில் தடைப்பட்டுத் திருவருட்டுணையால் கருணை நன் முயற்சியெடுத்துக்கொண்டு, பின் முடிவான சித்தி இன்பத்தைப் பெறுவார்கள். அஃது அருமை.

இவ் விசாரஞ் செய்து கொண்டிருந்தால், ஆண்டவர் வந்தவுடனே, கண்டமாக உங்களுக்குத் தெரிவிக்க வேண்டியதைத் தெரிவிப்பார். மறுபடியும் உங்களுக்கு உரிமை வந்தவுடனே அகண்டமாகத் தெரிவிப்பார். ஆதலால் நீங்கள் இந்த முயற்சியிலிருங்கள். இரண்டரை வருஷமாக நான் சொல்லிக் கொண்டு வந்தேன். இனிச் சொல்பவர்கள் சில நாள் தடைப்பட்டிருப்பார்கள். இனி நீங்கள் இதுவரைக்கும் இருந்ததுபோல் இராதீர்கள். இது கடைசி வார்த்தை.!

இப்படி இருந்து கொண்டிருந்தால் ஆண்டவர் வந்தவுடனே எல்லா நன்மையையும் பெற்றுக் கொள்வீர்கள். இது சத்தியம், சத்தியம், சத்தியம்.!

சிந்தனைக்கு:
1)ஆண்டவர் ஒருவர் பூமிக்கு வரப்போவது உண்மை என்பது வள்ளலாரால் உருதிபடுத்தபடுகிறது!யார் அவர்?
2)அது நடக்கும் போது இறந்தவர்கள் மீளவும் எழுந்திருப்பார்கள்!!!
3)அவர் வந்து சகல உண்மைகளையும் உங்களுக்கு புரியவைப்பார்!
4)அது வரை தயவு,சன்மார்க்கத்தை கடை பிடித்து அருட்பெரும்ஜோதியாகிய ஏகஇறைவனை வழிபடுவது & சுவர்க்கம்;நரகம் குறித்த பயத்துடன் விசாரம் செய்து கொண்டிருப்பது ஆகியவை வள்ளலாரால் தனது உரையில் வழிகாட்டபட்டுள்ளது!இந்த உரையை இறுதி வழிகாட்டலாகவும் எடுத்துகொள்ளலாம்!
வரப்போகிற அந்த ஆண்டவர் யார்?
ஆதி இந்து மதம் கல்கி யுகம் தொடங்கும் போது அந்த யுக புருசனாகிய கல்கி கடவுளிடமிருந்து பூமிக்கு வந்து ஆட்சி செய்வார் என சுட்டியுள்ளது!அதற்கு முன்பு பேரழிவு உண்டாகி உலகம் அழியும்!அதன் பிறகு மனிதர்கள் உயிரோடு எழுப்பபட்டு நியாயத்தீர்ப்பு நடைபெறும்!இறைதூதர் கிரிஸ்ணர் தாம் பரலோகம் செல்லுமுன் தர்மருக்கு கலியுகம் பிறக்க போவதைபற்றியும் அதன் அடையாளத்தையும் முன்னறிவித்தார்!கலியுகத்தில் பூமி கலிபுருசனுக்கு ஒப்படைக்க பட்டுள்ளது!அசுரர்கள் பூமியில் விதவிதமான மாயைகளை மனித மனங்களில் கொண்டுவந்து அவர்களை தீமைகளுக்குள் நடத்துவர்!அப்போது உடனடியாக கடவுள் அதை தடுக்க மாட்டார்!ஆனால் துன்ப துயரங்களில் தவித்து யார் கடவுளை நாடுகிறார்களோ அவர்களுக்கு தம்மை வெளிபடுத்துவார்!அவ்வப்போது கடவுளின் அபிஸேகத்துடன் இறைதூதர்கள் வருவர்!வழிகட்டுவர்!வேதம் அருளப்படும்!ஆனாலும் அதனை அசுரர்கள் தவறான வியாக்கியானம் கொடுத்து கலப்படைய செய்வார்கள்!


இதை மறைத்தவன் ஓர் வல்லவன். அவன் மறைத்ததை இதுவரைக்கும் ஒருவரும் கண்டபாடில்லை. அவன் பூட்டிய அந்தப் பூட்டை ஒருவரும் திறக்கவில்லை. இதுவரைக்கும் அப்படிப்பட்டவன் பூட்டிய பூட்டை உடைக்க ஒருவரும் வரவில்லை.---வள்ளலார் குறிப்பிடும் அந்த வல்லவன் கலிபுருசனே!

இந்த கலிபுருசனை மத்திய கிழக்கு ஆசியாவில் வாழ்ந்த ``ஆப்ராம்`` என்ற நிறைபக்தனுக்கு கடவுள் வெளிபாடுத்தினார்!அவரை கடவுளை கடவுள் என்று மட்டும் அழைத்து வழிபடும் `ஏக இறை கொள்கைக்கு`` அழைத்தார்!அதற்கு அடையாளமாக `விருத்தசேதனம்` அல்லது சுன்னத் உள்ளது!இவரின் வாரீசுகளே யூதர்கள்&முஸ்லீம்கள்!இந்த பரம்பரையில் 25 இறைதூதர்கள் வரை வந்து சிறுகசிறுக வேதத்தை கொணர்ந்தார்கள்!முக்கியமானவர்கள் மோசே.இயேசு&முஹமது! தவ்ராத்(பழைய ஏற்பாடு பைபிள்)&குரான் என்னும் வேதங்கள் இவை!

இந்த வேதத்தில் கடவுளின் வார்த்தை அருள் நிலையில் மனிதர்கள் மூலமாக இறங்கியுள்ளன!இவைகளும் கலியுக முடிவில் நியாயத்தீர்ப்பு செய்ய ஒரு ஆண்டவர் வர உள்ளார் என எச்சரிக்கிறது!கடவுளை மட்டுமே வழிபடுவது,வேதம் வழிகட்டுதலை கடைபிடிப்பது என்று இருந்தாலும் ``தஜ்ஜால்`` என்ற கலிபுருசனின் ஆளுமையில் பூமி இருப்பதால் தவறான விளக்கங்கள் கொடுக்க பட்டு ஜனங்கள் கெடுக்க பட்ட வரலாறு பைபிளில் பல உதாரணங்கள் உள்ளது!``தஜ்ஜால்`` என்ற கலிபுருசனை மீண்டும் இயேசு பூமிக்கு வந்து அழிப்பார்!கல்கி யுகத்தை நிறுவுவார் என முஹமதுவுக்கு வெளிப்படுத்தபட்டுள்ளது!ஆனாலும் இயேசு இறைதூதர் மட்டுமே கடவுளல்ல!கல்கி யுகத்தின் முடிவிலும் மீண்டும் அசுரர்களுக்கு சில காலம் ஆளுகை கொடுக்க படும்!அப்போது அவர்களுடன் கெட்டு போணவர்களும் அசுர ஆவிகளும் முற்றிலும் அழிக்க படுவர்!இது இரண்டாம் நியாயத்தீர்ப்பு! அதன் பிறகே கடவுளை நேரடியாக எல்லா மனிதர்களாலும் தரிசிக்க முடியும்!தேறிய அணைத்து ஆத்துமாக்களும் பரலோக பாக்கியம் பெறுவர்!இது சாதாரண பொதுமக்களும் கடவுளை அடையும் வழி!இதற்கு சொர்க்கம் ,நரகம் பற்றிய எச்சரிக்கையும் நியாயத்தீர்ப்பை பற்றிய பயமும் வேண்டும்!

இங்குள்ள எல்லவர்க்கும் சுவர்க்க நரக விசாரமில்லை. சுவர்க்க நரக விசாரமுள்ளவர்கள் தங்கள் கருத்தின்படி பலவகைச் சாதனங்களைச் செய்து அற்ப பிரயோஜனத்தைப் பெற்று, முடிவில் தடைப்பட்டுத் திருவருட்டுணையால் கருணை நன் முயற்சியெடுத்துக்கொண்டு, பின் முடிவான சித்தி இன்பத்தைப் பெறுவார்கள். அஃது அருமை.!

ஆப்ராம் சந்ததியில் அடுத்தடுத்து இறைதூதர்கள் வந்து முஹமதுவோடு முற்றுபெற்றுவிட்டது!அந்த வேதங்களை அவர்கள் கடைபிடித்தாலும், அசுரர்களால் தவறாக வியாக்கியாணம் கொடுக்கபடுவதும்,வேதமே படிக்காமல் மறக்கடிக்கபடுவதும்,அதற்கு ஏறுக்கு மாறாக வாழ்வதும் அதனை சிலர் சீர்திருத்துவதுமாக உள்ளனர்!

இந்தியாவிலும் இறைதூதர்கள் பரம்பரை உள்ளது!கலியுகத்திற்கு முந்தய ராமர்,கிரிஸ்ணர்!இவர்கள் வெற்றிகரமாக இறைபேரரசை ஸ்தாபித்தவர்கள்!அசுரர்களை அழித்தவர்கள்!கலியுகத்திற்கு பின்னால் புத்தர்,மஹாவீரர்,குருனானக்,வள்ளலார் என கடவுளின் வெளிப்பாடுகள் வந்தனவே தவிற அவைகள் கிள்ளப்பட்டுவிட்டன!

கல்கி யுகம் வரும்வரை ஏக இறைவனை ``அருட்பெரும்ஜோதி`` என வழிபடுவதை பிரபலபடுத்துவதும் அதற்கு கருவியாக தயவு,சன்மார்க்கத்தை கடைபிடித்து சொர்க்கம் நரகம் என்ற கோட்பாடுகளை உலகில் கடவுள் வெளிபடுத்தியுள்ள பைபிள்,குரானை,ஆதி இந்து கொள்கைகளை விசாரம் செய்தும் வரவேண்டும்!

வள்ளலாரின் சீடர்கள் இந்த முக்கியமான வழிகாட்டுதலை ஓரங்கட்டிவிட்டு தயவு என்கிற ஒன்றை மட்டுமே அதிக முக்கியப்படித்தி `புலால் உண்ணாமை` என்பதற்கான இயக்கமாக பரிணமித்து கொண்டுள்ளது வருந்ததக்கது!`புலால் உண்ணாமை` என்பதை புளு க்ராஸ் இயக்கத்தினரும் செய்து வருகிறார்கள்!இவர்களுக்கும் ஆண்மீக வாதிகளுக்கும் வித்தியாசம் வேண்டாமா?

இந்த மயக்கத்தை சீரமைக்க கடவுளே ஒரு இறைதூதரை இந்தியாவிற்கு அணுப்பவேண்டும் என்பதே அடியேனுக்கு உண்டான உணர்த்துதல்!இதற்காகவாவது வள்ளலாரின் சீடர்கள் பிரார்திக்க கூடாதா?
avatar
கிருபானந்தன் பழனிவேலுச்சா
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 578
மதிப்பீடுகள் : 109

View user profile http://kirubarp.blogspot.in

Back to top Go down

Re: வள்ளலாரின் இறுதி பேருரை !!!

Post by அசுரன் on Tue Jan 17, 2012 2:06 am

முன்கூட்டியே நமது முடிவு தெரிந்துவிட்டாலும் வாழ்வில் ஒரு முழுமை இருக்காது. வாழும்வரை நல்லவர்களாக இருப்போம். அருமையான பகிர்வு. மிக்க நன்றி
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11637
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum