புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கின்னஸ் சாதனை புரிந்த ஆற்றுக்கால்பகவதி அம்மன்  Poll_c10 கின்னஸ் சாதனை புரிந்த ஆற்றுக்கால்பகவதி அம்மன்  Poll_m10 கின்னஸ் சாதனை புரிந்த ஆற்றுக்கால்பகவதி அம்மன்  Poll_c10 
69 Posts - 58%
heezulia
 கின்னஸ் சாதனை புரிந்த ஆற்றுக்கால்பகவதி அம்மன்  Poll_c10 கின்னஸ் சாதனை புரிந்த ஆற்றுக்கால்பகவதி அம்மன்  Poll_m10 கின்னஸ் சாதனை புரிந்த ஆற்றுக்கால்பகவதி அம்மன்  Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
 கின்னஸ் சாதனை புரிந்த ஆற்றுக்கால்பகவதி அம்மன்  Poll_c10 கின்னஸ் சாதனை புரிந்த ஆற்றுக்கால்பகவதி அம்மன்  Poll_m10 கின்னஸ் சாதனை புரிந்த ஆற்றுக்கால்பகவதி அம்மன்  Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
 கின்னஸ் சாதனை புரிந்த ஆற்றுக்கால்பகவதி அம்மன்  Poll_c10 கின்னஸ் சாதனை புரிந்த ஆற்றுக்கால்பகவதி அம்மன்  Poll_m10 கின்னஸ் சாதனை புரிந்த ஆற்றுக்கால்பகவதி அம்மன்  Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
 கின்னஸ் சாதனை புரிந்த ஆற்றுக்கால்பகவதி அம்மன்  Poll_c10 கின்னஸ் சாதனை புரிந்த ஆற்றுக்கால்பகவதி அம்மன்  Poll_m10 கின்னஸ் சாதனை புரிந்த ஆற்றுக்கால்பகவதி அம்மன்  Poll_c10 
111 Posts - 59%
heezulia
 கின்னஸ் சாதனை புரிந்த ஆற்றுக்கால்பகவதி அம்மன்  Poll_c10 கின்னஸ் சாதனை புரிந்த ஆற்றுக்கால்பகவதி அம்மன்  Poll_m10 கின்னஸ் சாதனை புரிந்த ஆற்றுக்கால்பகவதி அம்மன்  Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
 கின்னஸ் சாதனை புரிந்த ஆற்றுக்கால்பகவதி அம்மன்  Poll_c10 கின்னஸ் சாதனை புரிந்த ஆற்றுக்கால்பகவதி அம்மன்  Poll_m10 கின்னஸ் சாதனை புரிந்த ஆற்றுக்கால்பகவதி அம்மன்  Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
 கின்னஸ் சாதனை புரிந்த ஆற்றுக்கால்பகவதி அம்மன்  Poll_c10 கின்னஸ் சாதனை புரிந்த ஆற்றுக்கால்பகவதி அம்மன்  Poll_m10 கின்னஸ் சாதனை புரிந்த ஆற்றுக்கால்பகவதி அம்மன்  Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

கின்னஸ் சாதனை புரிந்த ஆற்றுக்கால்பகவதி அம்மன்


   
   
கேசவன்
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 3429
இணைந்தது : 01/08/2011

Postகேசவன் Fri Dec 30, 2011 9:00 pm



கேரளத்தில் உள்ள எல்லா பகவதி கோவில்களிலும், உற்சவம் நடக்கும் போது இறுதி நாளில் தேவிக்கு பெண்கள் பொங்கலிடுவது வழக்கம். கோவிலின் சிறப்புக்கேற்ப பொங்கலிடும் பெண்களின் எண்ணிக்கை நூற்றுக் கணக்கிலும் ஆயிரக்கணக்கிலும் லட்சக் கணக்கிலும் இருக்கும்.
லட்சக்கணக்கில் பெண்கள் பகவதி தேவிக்கு பொங்கலிடும் பெருமை யைப் பெற்றதுதான்- ஆற்றுக் கால் பகவதி க்ஷேத்ரம்.

திருவனந்தபுரத்தில்- மணக் காடு என்னுமிடத்தில் இருக்கிறது இந்த ஆலயம். இந்தக் கோவிலில் நடை பெறும் மகோற்சவத்தின் 9-ஆம் நாள் நடக்கும். "பொங்காலே' (நாம் பொங்கல் என்று கூறுவதை கேரளத்தைச் சேர்ந்தவர்கள் "பொங்காலே' என்று சொல்கிறார்கள்.) விழாவில் பங்கெடுக்கும் பெண்களின் எண்ணிக்கை ஒவ்வொரு வருடமும் கூடிவருகிறது.

இதில் பங்கு பெற்ற பெண்களின் எண்ணிக்கை, கின்னஸ் புத்தகத்தில் இரண்டு முறை இடம் பெற்றிருக்கின்றன. உலகளவில் அதிக பெண்கள் பங்கெடுக்கும் திருவிழா என்கிற முறையில் அங்கீகாரத்தைப் பெற்றிருக்கிறது. சென்ற வருடம் (2010) நடந்த பொங்காலே மகோற்சவத்தில் ஏறக் குறைய 30 லட்சம் பேர் (பெண்கள், சிறுமிகள்) பங்கு கொண்டார்கள். இந்த ஆண்டு அதைவிட கூடுதலான பெண்கள் பங்கேற்றனர்.

கேரளத்தின் பல பாகங்களிலிருந்தும், தமிழ்நாட்டின் சில பாகங்களிலிருந்தும் (குறிப்பாக கோயம்புத்தூர், நாகர் கோவில், திருநெல்வேலி, மதுரை) ஏராளமான பெண்கள் இந்த உற்சவத்தில் கலந்துகொண்டு தேவிக்கு பொங்கலிட பக்திச் சிரத்தையுடன் வருகிறார்கள். வெளிநாட்டிலிருந்து வரும் இந்துக் களும்; கனடா, அமெரிக்கா போன்ற நாடுகளில் வசிக்கும் மேல்நாட்டுக்காரர் களும் இதில் அடங்கும். சபரிமலைக்கு ஒருமுறை சென்றவர்கள் மீண்டும் மீண்டும் ஒவ்வொரு வருடமும் செல் வதைப்போல, ஆற்றுக்கால் தேவி பொங்காலே மகோற்சவத்தில் கலந்து கொண்டு தேவிக்கு ஒருமுறை பொங்கல் இட்டவர்கள், தவறாமல் ஒவ்வொரு வருடமும் வருகிறார்கள். ஆற்றுக்கால் தேவி க்ஷேத்ரம் பெண்களின் சபரிமலை என்றும் அழைக்கப்படுகிறது.
ஆற்றுக்கால் தேவி என்ற பெயரில் வழிபடப்படுவது கண்ணகியே என்பதற்கு கோவிலில் நிலவிவரும் ஐதீகமும், கோவிலில் காணப்படும் கண்ணகியின் வரலாற்றைச் சொல்லும் சுதைச் சிற்பங் களும், அங்கு பாடப்படும் பாடல்களும் சான்றாக இருக்கின்றன. முதலில் ஐதீகத்தைத் தெரிந்து கொள்வோம்.



கண்ணகி மதுரையை எரித்துவிட்டு கோபாவேசமாக கொடுங்கல்லூர் நோக்கிச் சென்றபோது, வழியில்- தற்போது கோவில் இருக்கும் இடத்தில் ஒரு சிறுமி வடிவம் எடுத்துத் தங்கி இருந்ததாகவும்; அப்போது ஆற்றங்கரையில் (ஆற்றுக் காலில்) வசித்து வந்த முல்லவீடு காரணவர் என்பவர் அந்தச் சிறுமிக்கு பொங்கல் செய்து தர ஆசைப்பட்டு பொருள் சேகரித்துத் திரும்பி வந்தபோது அந்தச் சிறுமியைக் காணவில்லை என்றும் கூறப்படுகிறது. கோவிலின் அருகிலுள்ள கிள்ளியாற்றில் அவர் மன வருத்தத்துடன் குளிக்கச் சென்றபோது மறுகரையில் அந்தச் சிறுமியைக் கண்டார். அவருக்குப் பரமானந் தம்! ஆச்சரியம்! சிறுமி தன்னை எதிர்கரையில் கொண்டு விடும்படி சொன்னாள். காரணவர் நீந்தி அவளை அடைவதற்குள் அவள் இந்தப் பக்கம் வந்து விட்டாள். காரணவருக்கு மறுபடியும் ஏமாற்றம்.

அன்றிரவு அந்தச் சிறுமி அவரது கனவில் தோன்றி, கோவிலின் எல்லையை வரையறுத்துக் கொடுத்ததாக வும்; பிரதிஷ்டை செய்ய விக்ரகம் எதுவும் செய்யாமல் கும்பாபிஷேகத்திற்கு ஏற்பாடு செய்த தினத்தன்று- கூட்டத்தில் இருந்த அந்தச் சிறுமியே கருவறையில் வந்து அமர்ந்து கொண்டதாகவும் கூறப்படுகிறது. சிறுமி வடிவத்தில் வந்த கண்ணகியே ஆற்றுக்கால் பகவதிதேவி விக்ரகமாக உள்ளதாக அறிகிறோம்.

உற்சவ நாட்களில் கோவலன்- கண்ணகி வரலாறு, "தோற்றம் பாட்டாக' பாடப்படுகிறது. தமிழும் மலையாளமும் கலந்த மொழியில், கையில் பெரிய தாளங்களை வைத்துக்கொண்டு தினமும் பாடுகிறார்கள்.

கோவில் மண்டபத்தைச் சுற்றியுள்ள மூன்று பக்கங்களிலும் கோவலன்- கண்ணகி வரலாறு அற்புதமான சுதைச் சிற்பங்களாகக் காணப்படுகின்றன. இந்தச் சிற்பங்களை கோவிலுக்கு வெளியே இருந்து பார்த்தால் நன்றாகப் பார்க்கலாம்.

கோவலன்- கண்ணகி திருமணம், அரச சபையில் நாட்டியமாடும் மாதவியை வைத்த கண் வாங்காமல் பார்க்கும் கோவலன், மாதவி யுடன் தொடர்பு, கானல்வரி பாடிய மாதவியை விட்டு கோவலன் பிரிவது, கோவலனும் கண்ணகியும் கவுந்தி அடிகளுடன் மதுரையை நோக்கிச் செல்வது, கோவலன் பொற்கொல்ல னிடம் கால் சிலம்பை விற்க முயல்வது, கோவலன் கொடுத்த சிலம்பு திருட்டுப்போன பாண்டிமாதேவியின் சிலம்பென தவறாகக் கருதி கோவலனின் தலை வெட்டப்படுவது, நீதி கேட்டு வந்த கண்ணகி தன் கால் சிலம்பில் இருந்த மாணிக்கப் பரல்களை வெளிப்படுத்துவது, உண்மையை அறிந்த மன்னன், "யானோ அரசன்... யானே கள்வன்' என்று கூறி உயிர்விட, அவனுடன் பாண்டிமாதேவியும் உயிர் துறப்பது, கோபாவேசம் கொண்ட கண்ணகி மதுரையை எரிப்பது, அது நடந்த பதினான்காம் நாளில் புஷ்பக விமானத்தில் வந்த கோவலனுடன் செல்வது, கோவலன்- கண்ணகி கதையை இளங்கோவடிகள் மூலம் சேரன் செங்குட்டுவன் அறிந்து, கேரளத்தில் கொடுங்கல்லூரில் கண்ணகி சிலையைப் பிரதிஷ்டை செய்து கோவில் கட்டுவது என எல்லாவற்றையும் காணலாம். நுணுக்கமான வேலைப்பாடுகள்

அமைந்த உயிருள்ள சிற்பங்களாக விளங்கு கின்றன இந்த வடிவங்கள்.

இனி பொங்காலே தினத்தன்று நடக்கும் சடங்குகளைப் பார்ப்போம்...

ஏறக்குறைய ஒரு வாரத்திற்கு முன்பிருந்தே திருவனந்தபுரத்திலுள்ள கிழக்குக்கோட்டை (ஸ்ரீபத்பநாப சுவாமி கோவில் இங்குதான் இருக்கிறது) பகுதியில் இருந்து ஆற்றுக்கால் கோவில் இருக்கும் இடம் வரை உள்ள பல இடங்களிலும் மண்பானைகளும் சட்டிகளும் நூற்றுக்கணக்கில் அடுக்கி வைத்து வியாபாரம் செய்வதைப் பார்க்கலாம். பொங்காலே தினத் திற்கு இரண்டு நாட்கள் முன்பு "திரளி இலை'யும் விற்பனைக்கு கிடைக்கும்.

முன்தினம் கோவிலைச் சுற்றியுள்ள இடங் களில் இடம் பிடிப்பதற்காக பெண்கள் ஒரு செங்கல்லை வைத்து விடுவார்கள். பல இடங் களிலும் செங்கற்கள் விற்பனைக்கு கிடைக்கின்றன.
பொங்காலே தினத்தன்று விடியற்காலை நேரத்திலேயே பல பெண்களும் பொங்கல் இடுவதற்குத் தேவையான பொருட்களோடு, காய்ந்த தென்னங் கீற்றுகளையும் தென்னை மட்டையையும் சுமந்துகொண்டு பொங்கல் இடும் இடத்தை நோக்கிச் செல்வதைக் காணலாம்.

திருவனந்தபுரத்தில் அன்றைய தினத்தின் முதல் நாள் இரவு முழுவதும் பெண்கள் பயமின்றி வருவதற்கு வசதியாகச் சாலைகளில் டியூப் விளக்குகள் வெளிச்சத்தைப் பரப்பிக் கொண்டிருக்கும் (பக்தர்களின் உபயம்).

பல பெண்களும் அன்றைய தினத்தில் கேரள பாணியில் செட்டு முண்டு உடுத்தி, அல்லது வெளிர் சந்தன நிறத்தில் புடவை உடுத்தி, நெற்றியில் சந்தனக்குறியுடன் காணப் படுவதைப் பார்க்க மிகவும் ரம்யமாக இருக்கும்.



கோவிலைச் சுற்றி ஏறக்குறைய ஐந்து கிலோமீட்டர் சுற்றளவில் கோவிலைத் தொடர்ந்து பல திசைகளிலும் உள்ள தெருக்களில்- வீடுகளில்- மைதானங்களில்- வணிக வளாகங்களில் பொங்கலிடுகிறார்கள். (அன்று மாநில அரசு விடுமுறை- திருவனந் தபுரத்திற்கு மட்டும். பல தனியார் நிறுவனங் களிலும் விடுமுறை விடப்படுகிறது.)

எல்லா பெண்களும் தேவியின் சொரூப மாகக் கருதப்படுகிறார்கள். பெண்களில் ஆற்றுக்கால் தேவியும் ஏதோ ஒரு உருவத்தில் வந்திருக்கலாம் என்று நினைக்கிறார்கள். மூன்று செங்கற்களை வைத்து அடுப்பு உருவாக்கி, பொங்கலிடத் தொடங்கும் அறிவிப்பிற்காகக் காத்திருக்கிறார்கள்.

அடுப்பின் அருகில் ஒரு வாழை இலை. அதில் பழம், பொரி, உதிரிப்பூக்கள்... அருகில் ஒரு சிறிய குத்துவிளக்கு.

இடைப்பட்ட நேரத்தில் சிலர் திரளிஅப்பம் (திரளி இலையின் இடையில் வைத்து செய்யப்படும் கொழுக்கட்டை), மண்டைப் புட்டு (உருண்டை வடிவத்தில் இருக்கும் மாவிளக்கு) செய்கிறார்கள்.
ஆற்றுக்கால் பகவதி கோவிலினுள்ளும் தேவிக்குப் பொங்கலிடப்படுகிறது. அந்த அடுப்பிற்கு "பண்டார அடுப்பு' என்று பெயர். அந்த அடுப்பைப் பற்ற வைக்கும் நேரமே மங்களகரமான நேரம். கருவறையில் உள்ள விளக்கில் இருந்து தீ எடுத்து, கோவிலில் உள்ள பண்டார அடுப்பைப் பற்ற வைக்கும் காட்சி பல தொலைக்காட்சிகளிலும் ஒளிபரப்பப் படுகிறது.

செண்டைகளின் ஒலி வெகுதூரம் கேட்கிறது. பொங்கலிடும் பெண்கள் அறிவிப்பைத் தெரிந்து கொள்கிறார்கள். பொங்கலிட ஆரம்பிக்கிறார்கள்.

மீண்டும், பொங்கலை நிவேதனம் செய்யும் நேரத்திற்காகக் காத்திருக்கிறார்கள். சுமார் மூன்றரை மணி அளவில் வானத்தில் ஒரு ஹெலிகாப்டர் பறந்து சென்று கோவிலைச் சுற்றியுள்ள இடங்களில் பூக்களைப் பொழிகிறது. கோவிலில் உள்ள பண்டார அடுப்பில் செய்யப்பட்ட பொங்கல், தேவிக்கு நிவேதனம் செய்யப்படுகிறது.

கோவிலின் அருகிலுள்ள இடங்களில் கோவிலிலிருந்து வரும் அர்ச்சகர்கள், அந்தச் சடங்கைச் செய்கிறார்கள். பின்னர் அனைவரும் பொங்கல் பானையை எடுத்துக் கொண்டு மனநிறைவுடன் வீடு திரும்புகின்றனர்.

ஆற்றுக்கால் தேவி அனைவருக்கும் அன்னையைப் போன்றவள்; சகோதரியைப் போன்றவள்; தோழியைப் போன்றவள். மனம் திறந்து நமது சங்கடங்களை அவளிடம் சொல்லலாம்; குறைகளைச் சொல்லலாம்; பிரார்த்தனையும் செய்யலாம்.

இவளை வணங்கும் திருமணமாகாத பெண்களுக்குத் திருமணம் நடக்கின்றது. குழந்தை இல்லாதவர்களுக்கு குழந்தை பிறக்கிறது. வேலை தேடி அலைபவர்களுக்கு வேலை கிடைக்கிறது. குடும்பப் பிரச்சினை கள் தீருகின்றன. இன்னும் எத்தனை எத்தனையோ பிரார்த்தனைகள் நிறைவேறுகின்றன. ஆற்றுக்கால் தேவிக்கு பொங்கலிட்டு வழிபட்டு மனமுருக பிரார்த்தனை செய்தால், தேவி எல்லா மனக்குறைகளையும் தீர்த்து வைப்பாள் என்று உறுதியாக நம்புகிறார்கள். தேவியும் அருள் புரிகிறாள். ஒவ்வொரு வருடமும் லட்சக்கணக்கில் பொங்கலிடும் பெண்களின் எண்ணிக்கை கூடி வரும் காரணம் அதுதான்.

ஆற்றுக்கால் பகவதி கோவில், திருவனந் தபுரம் ரயில்வே ஸ்டேஷன் மற்றும் பேருந்து நிலையத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது. ஆட்டோவில் செல்வது வசதியானது.

-----------------------------

நன்றி http://www.nakkheeran.in/users/frmArticles.aspx?A=8620



இருப்பது பொய் போவது மெய் என்றெண்ணி நெஞ்சே!
ஒருத்தருக்கும் தீங்கினை உன்னாதே - பருத்த தொந்தி
நமதென்று நாமிருப்ப நாய் நரிகள் பேய் கழுகு
தம்ம தென்று தாமிருக்கும் தான்"


-பட்டினத்தார்
உண்ணுவதெல்லாம் உணவல்ல உலகத்து உயிர்காள்
இன்னுயிரை எடுக்காத இரையே இரை


நற்றுணையாவது நமச்சிவாயமே
 கின்னஸ் சாதனை புரிந்த ஆற்றுக்கால்பகவதி அம்மன்  1357389 கின்னஸ் சாதனை புரிந்த ஆற்றுக்கால்பகவதி அம்மன்  59010615 கின்னஸ் சாதனை புரிந்த ஆற்றுக்கால்பகவதி அம்மன்  Images3ijf கின்னஸ் சாதனை புரிந்த ஆற்றுக்கால்பகவதி அம்மன்  Images4px
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Dec 30, 2011 9:55 pm

தெய்வங்களின் திருவிளயாடல்கள் தெரிய தந்தமைக்கு நன்றி கேசவ் நன்றி அன்பு மலர்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





 கின்னஸ் சாதனை புரிந்த ஆற்றுக்கால்பகவதி அம்மன்  Ila
Dr.சுந்தரராஜ் தயாளன்
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 5326
இணைந்தது : 03/09/2011

PostDr.சுந்தரராஜ் தயாளன் Sat Dec 31, 2011 7:55 am

மிகவும் நன்றி..கேசவன்...இதைப்போலவே கண்ணகி கோவில்கள் நிறைய இருக்கின்றனவாம் கேரளத்தில். மங்களூர் நகரம் கூட, கண்ணகியின் இன்னொரு பெயரான மங்களாதேவி என்ற பெயரில் இருந்துதான் வந்தது என்றும் கூறுகிறார்கள். தெரிந்து கொள்ள வேண்டியது நிறைய இருக்கிறது. மகிழ்ச்சி மகிழ்ச்சி

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக