ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

நாவல் தேவை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

செய்யத் தகாத 16.
 சிவனாசான்

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

புத்தாண்டு ராசிபலன் - 2012

View previous topic View next topic Go down

புத்தாண்டு ராசிபலன் - 2012

Post by சிவா on Fri Dec 30, 2011 1:18 pm

மேஷம்

அசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்)

குரு பெயர்ச்சிக்குப் பிறகு குதூகலம்!

சவால் விடுவதையும் அதை சமாளிப்பதையும் கைவந்த கலையாகக் கொண்ட மேஷ ராசி நேயர்களே!

தைரியத்தோடும், தன்னம்பிக்கையோடும் வாழ்க்கை நடத்துபவர்கள் நீங்கள் தான். தாமாகவே உதவி செய்யவும் முன் வருவீர்கள். தடம் மாறி செல்பவர்களைக் கண்டால் தட்டிக் கேட்கவும் தயங்கமாட்டீர்கள். இப்படிப்பட்ட உங்களுக்கு இந்த புத்தாண்டு 2012-ன் கிரக நிலைகள் சாதகமாக இருக்கின்றனவா? என்பதைப் பற்றி பார்ப்போம்.

வருடத் தொடக்கத்தில் ஜென்ம குரு, விரயாதிபதி குரு ஜென்மத்தில் சஞ்சரிக்கும் போது ஆண்டின் தொடக்கமே ஆதாயத்தைக் காட்டிலும், விரயம் அதிகரிக்குமா என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். குரு பெயர்ச்சிக்கு பிறகு உங்கள் இல்லத்தில் குதூகலம் பிறக்கும்.

1.1.2012 முதல் 16.5.2012 வரை

இக்காலத்தில் உங்கள் கூட்டு முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். மாற்றினத்தவர்கள் மகிழ்ச்சியோடு வந்து உதவி செய்வர். வீட்டுத் தேவைகள் உடனுக்குடன் பூர்த்தியாகும். ராசிநாதன் செவ்வாய் வருடத் தொடக்கத்தில் வக்ரம் ஆகவில்லை என்றாலும், ஜனவரி 22-ம் தேதி முதல் வக்ரம் பெறுகிறார். ஏப்ரல் 11-ம் தேதி வக்ர நிவர்த்தியாகிறார். அதுவரை ஆரோக்கியத்தில் கொஞ்சம் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. பாசமாக பழகிய சகோதரர்கள் பக்குவமில்லாமல் பேசலாம். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது.

தொழில் வளர்ச்சியைப் பொறுத்த வரை எதிர்பார்த்ததைக் காட்டிலும் சிறப்பாகவே இருக்கும். தொழில் ஸ்தானத்தில் இருக்கும் கிரகம் மற்றும் அதன் அதிபதியைப் பொறுத்து தான் லாபத்தை நிர்ணயிக்க முடியும். அந்த அடிப்படையில் புதிய ஒப்பந்தங்கள் வந்து சேரும் என்றே சொல்ல வேண்டும். குருவின் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிவதால் பிள்ளைகளின் முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். பூர்வீக சொத்துக்களை விற்பதா? வைத்துக் கொள்ளுவதா? என்ற சிந்தனைக்கு முற்றுப் புள்ளி வைத்து, நாமே சொத்தை வைத்துக் கொள்ளுவோம் என்ற முடிவு எடுப்பீர்கள்.

17.5.2012 முதல் 31.12.2012 வரை

இக்காலத்தில் ரிஷபத்தில் குரு சஞ்சரிக்கப்போகிறார். உங்கள் ராசிக்கு விரயாதிபதி தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் விரயத்திற்கு ஏற்ற தனவரவு வந்து கொண்டே இருக்கும். எனவே, வீடு வாங்க வேண்டுமென்றால் வீடு வாங்குவீர்கள். காதிற்கு தோடு வாங்க வேண்டுமென்று சொன்னால் தோடு வாங்குவீர்கள். இந்தக்காலத்தில் குருவை கும்பிட்டு மகிழ்வதோடு வியாழக்கிழமை விரதமும் இருப்பது நல்லது.

ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் சனி, செவ்வாய் சேர்க்கை ஏற்படுகிறது. எனவே இக்காலத்தில் எதையும் ஒரு முறைக்கு பல முறை யோசித்துச் செய்ய வேண்டிய காலமாகும். உத்தியோகம் மற்றும் தொழிலில் திடீர் திருப்பங்கள் ஏற்படும். வி.ஆர்.எஸ் வாங்கிக் கொண்டவர்கள். ஏன் வேலையை விட்டு விலகினோம் என்று கவலைப்படுவார்கள். வெளிநாட்டுக்குச் சென்றவர்கள் அங்கு மற்றொரு மாற்றம் காண்பர்.

ஆயினும், அக்டோபர் மாதத்தில் குரு வக்ரம் பெறப் போகிறார். இதன் விளைவாக ஆச்சரியப்படத்தக்க சம்பவங்கள் சில நடைபெறலாம். இழப்புகளை ஈடுகட்டும் வாய்ப்பு கிடைக்கும்.

வருடக் கடைசியில் ராகு, கேதுக் களின் பெயர்ச்சி ஏற்படுகிறது. ஜென்ம ராசியில் கேதுவும், ஏழில் ராகுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். எனவே, ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். ஏமாற்றிய கூட்டாளிகள் இணைந்து வந்து செயல்படுவார்கள். பயணங்கள் அதிகரிக்கும். பணத் தேவைகள் கூடும்.

குருவின் பார்வை 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிவதால் எதிர்ப்புகள் அகலும். இல்லம் தேடி நல்ல செய்திகள் வந்து சேரும். உத்தியோக முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். ரிஷப குருவின் பார்வையால் பாதிக்கு மேல் கடன்சுமை குறையும். பழைய பங்குதாரர்கள் விலகி, புதியவர்கள் இணைவார்கள்.

சாதனை நிகழ்த்த சமயோசித புத்தி தேவைப்படும் காலம்!

புத்தாண்டு 2012-ல் செவ்வாய், புதன், குரு, சுக்ரன், சனி இந்த ஐந்து கிரகங்களும் இடைஇடையே வக்ரம் பெறுகிறார்கள். இக்காலங்கள் பொற்காலங்களாக மாற வேண்டுமானால், சமயோசித புத்தியோடு நீங்கள் நடந்து கொள்ள வேண்டும்.

* செவ்வாயின் வக்ர காலத்தில் உடல் நலத்தில் கவனம் செலுத்தினால் தான் உற்சாகத்தோடு இயங்கலாம்.

* புதனின் வக்ர காலத்தில் உடன் பிறப்புகளை அனுசரித்து செல்வது நல்லது.

* சுக்ரனின் வக்ர காலத்தில் தன வரவில் தடை ஏற்பட்டு அகலும். பற்றாக் குறையைச் சமாளிக்க சிக்கனத்தைக் கடைபிடியுங்கள்.

* குருவின் வக்ரகாலத்தில் குடும்பப் பெரியவர்களின் குணம் அறிந்து செயல்படுவது நல்லது.

* சனியின் வக்ர காலத்தில் சஞ்சலங்கள் அதிகரிக்கலாம். தொழில் பங்குதாரர்களிடம் மட்டும் அல்லாமல், தொகை கொடுக்கல் வாங்கல்களிலும் விழிப்புணர்ச்சி கூடினால், விரயங்களைத் தவிர்க்கலாம்.

புத்தாண்டில் வளம் பெற முத்தான வழிபாடு!

உங்கள் ராசிநாதன் செவ்வாய் என்பதால், செவ்வாய்க்கிழமை அன்று விரதங்களையும், வழிபாடுகளையும் மேற்கொண்டால், வியக்கும் வாழ்க்கை அமையும்.

முருகப்பெருமான் சந்நிதியில்,
`பன்னிரு கையோனே!
பக்தர்களைக் காப்பவனே!
என்னுடைய கனவுகளை
இனிதே நனவாக்கு!' என்று சொல்லுங்கள். உங்கள் கனவு நனவாகும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புத்தாண்டு ராசிபலன் - 2012

Post by சிவா on Fri Dec 30, 2011 1:20 pm

ரிஷபம்

கார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீரிஷம் 1, 2 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: இ, உ, ஏ, ஓ, வ, வி, வு, வே, வோ உள்ளவர்களுக்கும்)

புதிய பாதை புலப்படும்!

உழைப்புக்கு முக்கியத்துவம் கொடுத்து உலகத்தையே வசப்படுத்தி கொண்டிருக்கும் ரிஷப ராசி நேயர்களே!

வரவு அதிகரிக்க என்ன செய்யலாம் என்பதைப் பற்றியே சிந்திப்பவர் நீங்கள். அக்கம் பக்கத்தில் இருப்பவர்களுக்கு எல்லாம் நீங்கள் பக்க பலமாக இருப்பீர்கள். உங்களுக்கு இந்த புத்தாண்டு (2012) பொன் கொழிக்கும் ஆண்டாக அமையுமா? பொருளாதாரத்தில் நிறைவு ஏற்படுமா? என்பதைப் பற்றி பார்ப்போம்.

வருடத் தொடக்கத்தில் ஜென்ம ராசியில் கேது, ஏழில் ராகு சஞ்சரிக்கிறார்கள். உலா வரும் சனி பகவான் வருடப் பிறப்பிற்கு சில தினங்கள் முன்னதாகவே உங்கள் ராசிக்கு ஆறில் சஞ்சரித்து ஆதரவு கரம் நீட்டுவோரின் எண்ணிக்கையை அதிகரிக்க வைத்து விட்டார். இனி என்ன கவலை? எல்லாமே வெற்றிதான்.

1.1.2012 முதல் 16.5.2012 வரை

இக்காலத்தில் உங்கள் ராசிநாதன் சுக்ரன் ஒன்பதாம் இடத்தில் இருந்து உலா வந்து நீச்சமாகாமல், வக்ரமாகாமல் குடும்ப ஸ்தானம் வரை வந்து சேர்கிறார். எனவே, பெற்றோர் வழியில் பிரியம் கூடும். உற்றார், உறவினர்கள் உங்கள் தொழிலுக்கு உறுதுணை புரிவர். குடும்பத்தில் மங்கல நிகழ்ச்சிகள் நடைபெறும்.

குருவின் பார்வை 4, 6, 8 ஆகிய இடங்களில் பதிவதால் ஆண்டின் தொடக்கம் அற்புதமாகவே இருக்கும். இடம், பூமி வாங்கும் எண்ணம் நிறைவேறும். ரண சிகிச்சை செய்தால் தான் நல்லது என்று சொன்ன மருத்துவர்கள். சாதாரண சிகிச்சையே போதும் என்று சொல்லி சந்தோஷப்படுத்துவர். சர்ப்ப தோஷத்தின் அமைப்பில் உங்கள் ராசி இருப்பதால், சர்ப்ப சாந்தியை செய்து கொண்டால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

17.5.2012 முதல் 31.12.2012 வரை

இக்காலத்தில் தேவைக்கேற்ப பணம் வந்து கொண்டேயிருக்கும். தெய்வீகச் சிந்தனை மேலோங்கும். சனியின் வக்ர இயக்கம் மட்டுமல்லாமல், விரயாதிபதி செவ்வாயுடன், சனியும் இணைந்து ஜுலை, ஆகஸ்ட் ஆகிய மாதங்களில் கன்னி ராசியில் சஞ்சரிக்கப் போகிறார்கள். இந்த கூட்டுக்கிரக சேர்க்கை நற்பலன் தருமா? என்பது சந்தேகம் தான். எனவே, இடம், பூமி வாங்கும் போதும், பத்திரப்பதிவுகளில் ஈடுபடும் போதும் மிகுந்த கவனம் செலுத்துவது நல்லது. தன்னை அறியாமலேயே தடுமாற்றங்களும், ஏமாற்றங்களும் ஒரு சிலருக்கு வந்து சேரலாம்.

இல்லத்தில் உள்ளவர்களின் உள்ளத்தில் இடம்பெற எவ்வளவு திருப்திபடுத்தினாலும், அவர்கள் நன்றி காட்ட மாட்டார்கள், பள்ளிகளில் பயிலும் உங்கள் குழந்தைகளை முறையாக மேற்பார்வையிடுவது நல்லது. இப்படிப்பட்ட சம்பவங்களை எல்லாம் சந்திக்காமல், இனிய சம்பவங்களை மட்டும் நீங்கள் சந்திக்க உங்கள் ராசியின் சின்னமான காளைக்கு உரிய நந்தியை பிரதோஷ நேரத்தில் வழிபாடு செய்வது நல்லது.

இக்காலத்தில் குரு ரிஷப ராசியில் சஞ்சரிக்கப்போகிறார். அது உங்களைப் பொறுத்தவரை ஜென்ம குருவாகும். ஜென்ம குரு இடமாற்றம், ஊர்மாற்றம், வீடு மாற்றங்களை உருவாக்கும் என்று சொல்வர். உங்கள் சுய ஜாதகம் பலமாக இருந்தால் இருக்கும் இடத்திலேயே சிறு மாற்றம் ஏற்படும், பலம் குறைவாக இருந்தால் நீண்ட தூர பயணங்களால் நிம்மதி ஏற்படும்.

அதன் பார்வை, உங்கள் ராசிக்கு 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே, பிள்ளைகள் வழியில் சுபகாரியங்கள் நடைபெறலாம். பூர்வீக சொத்துகள் கைக்கு கிடைத்து புதிய பாதை புலப்படும். ஆர்வத்தோடு மணமாலை சூடி அழகிய தம்பதிகளாய் காட்சியளிப்பீர்கள். தந்தையின் ஒத்துழைப்பு கிடைக்கும்.

வருடக் கடைசியில் வரும் ராகு-கேது பெயர்ச்சி உங்களுக்கு வருமானத்தை பல மடங்காக உயர்த்தி தரப்போகிறது. ஆறாமிடத்தில் ராகு அஷ்டலெட்சுமி யோகத்தை வழங்குவார். எனவே, பணப்புழக்கம் அதிகரிக்கும். கூட்டு முயற்சிகளில் இருந்து விடுபட்டு தனித்தியங்க முற்படுபவர்களுக்கு இது ஒரு பொற்காலமாகும். உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும், உத்யோக உயர்வும் எதிர்பார்த்தபடி வந்து சேரும்.

சாதனை நிகழ்த்த சமயோசித புத்தி தேவைப்படும் காலம்!

கிரகங்கள் பலம் பெற்றிருக்கும் போது நாம் எதைச் செய்தாலும், தொட்டதில் எல்லாம் வெற்றி கிடைக்கும். அவை பலம் இழந்திருக்கும் நேரத்தில் நாம் பரிகாரங்களைச் செய்து, அதற்குரிய தெய்வங்களை வழிபட்டு, காரியங்களைத் தொடங்கினால் வாய்ப்புகளில் ஓரளவாவது உபயோகப்படுத்திக் கொள்ள இயலும்.

* இந்த ஆண்டு செவ்வாயின் வக்ர காலத்தில் பயணங்களை ஏற்றுக் கொள்ளும் போது யோசிப்பது நல்லது.

* புதனின் வக்ர காலத்தில் பொருளாதாரத்தில் பற்றாக்குறை பட்ஜெட் ஏற்படும்.

* சுக்ரனின் வக்ர காலத்தில் திடீர் தன லாபம் உருவாகும். ஆனால், ஆரோக்கியத்திற்கு என்று ஒரு தொகை செலவாகும்.

* குருவின் வக்ர காலத்தில் நல்ல தகவல் இல்லம் தேடி வரும்.

* சனியின் வக்ர காலத்தில் தொழிலில் குறுக்கீடுகள் அதிகரிக்கும். வியாபார விரோதங்களைச் சமாளிக்க நேரிடும்.

புத்தாண்டில் வளம் பெற முத்தான வழிபாடு!

உங்கள் ராசிநாதன் சுக்ரன் என்பதால், வெள்ளிக்கிழமை செய்யும் வழிபாட்டுக்கு நல்ல பலன் கிடைக்கும். அன்றைய தினம் அம்பிகை சந்நிதியில்

ஆதிசிவன் மேனியிலே,
பாதியுடல் பெற்றவளே!
போதுமெனச் சொல்லும் வரை,
பொருள் வரவு தந்திடுவாய்! என்று சொல்லுங்கள். உங்கள் பொருளாதார நிலை உயரும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புத்தாண்டு ராசிபலன் - 2012

Post by சிவா on Fri Dec 30, 2011 1:21 pm

மிதுனம்

மிருகசீரிஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள் : க, கா, கி, கு, ஞ, ச, கே, கோ உள்ளவர்களுக்கும்)

கனவுகள் நனவாகும்

எடுத்த முடிவுகளை எளிதில் மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே!

நீங்கள் யாரையும் நம்பி செயல்பட மாட்டீர்கள். நம்பிக்கைக்கு உரியவர்தானா என்று ஆராய்ந்து பார்த்த பின்பே மற்றவர்களிடம் பொறுப்பை ஒப்படைப்பீர்கள். உங்களுக்கு இந்தப் புத்தாண்டான 2012 மாற்றத்தைக் கொடுக்குமா, ஏற்றத்தைக் கொடுக்குமா என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

வருடத் தொடக்கத்தில் உங்களின் ராசிநாதன் புதன் உங்கள் ராசியைப் பார்க்கிறார். அதோடு சகாய ஸ்தானாதிபதி சூரியனும் இணைந்திருக்கிறார். எனவே வருடத் தொடக்கமே உங்களுக்கு வளர்ச்சியை உருவாக்கும்.

1.1.2012 முதல் 16.5.2012 வரை

இக்காலத்தில் உங்கள் ராசிநாதன் புதன், சுக ஸ்தானத்திலும், பஞ்சம ஸ்தானத்திலும் சஞ்சரித்து இடையில் பிப்ரவரி 28 அன்று மீனத்தில் நீச்சம் பெறுகிறார். அங்கு மார்ச் 10-ம் தேதி வரை தங்கியிருந்து மீண்டும் கும்பத்திற்கே வக்ரமாகிறார். நீச்சம் பெறும் இந்த நேரத்தில் மட்டும் நீங்கள் மிக, மிக விழிப்புணர்ச்சியுடன் செயல்படுவது நல்லது.

உடல் பலமாக இருந்தால் உள்ளத்தில் கவலை மேலோங்கும். உள்ளம் பலமாக இருந்தால் உடல் ஒத்துழைப்பு கொடுக்க மறுக்கும். எனவே தொழில் ரீதியாக எடுக்கும் முயற்சிகளில் நம்பிக்கையோடு செயல்படுவதாகச் சொன்னவர்கள் பின் வாங்குவர். சொன்ன சொல்லை நிறைவேற்ற முடியுமா? என்பது சந்தேகம் தான்.

எனவே ஒரு காரியத்தைத் தொடங்கும் போது, இதைச் செய்தால் என்ன பலன் ஏற்படும் என்பதை அறிந்து செயல்பட்டால் ஓரளவு நன்மையைப் பெற முடியும். மாமன் மைத்துனர் வழியில் உள்ள மனக்கசப்புகள் மாறும். அஷ்டமாதிபதி செவ்வாயை, சப்தமாதிபதி குரு பார்ப்பதால் இழந்த சொத்துக்களை மீண்டும் பெறக்கூடிய சூழ்நிலை ஒரு சிலருக்கு உருவாகலாம்.

குருவின் பார்வை 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிவதால் வழக்குகளில் வெற்றிக் கிடைக்கும். கலக்கத்தோடு இருந்தவர்களுக்குக் கடன் சுமை குறைய பிள்ளைகளின் சம்பாத்தியமும் கைகொடுத்து உதவும். சப்தம ஸ்தானத்தை குரு பார்ப்பதால், கல்யாண கனவுகள் நனவாகும். அரசியல்வாதிகள் தங்களுக்கு வரும் பதவிகளை உடனடியாக ஏற்றுக் கொள்வது நல்லது.

17.5.2012 முதல் 31.12.2012 வரை

இக்காலம் உங்களுக்கு இனிய காலமாகும். தக்க நேரத்தில் உறவினர்களும், நண்பர்களும் ஒத்துழைப்புச் செய்ய முன் வருவார்கள். செல்வ நிலை உயரும். இனி புதன் பலம் பெற்றுச் சஞ்சரிக்கப் போகிறார். எனவே உற்சாகத்தோடு செயல்படுவீர்கள். ஊர் மாற்றச் சிந்தனைகள் வெற்றி தரும். கண் சம்பந்தபட்ட தொல்லை அகலும்.

புதன், ராசியிலேயே மே 31-ம் தேதி சஞ்சரிக்கப் போகிறார். ஆனால் அதே நேரத்தில் ஜ×ன் 23-ம் தேதி முதல் கன்னி ராசிக்குள் செவ்வாய் பிரவேசிக்கிறார்.

ஆகஸ்ட் 13-ம் தேதி வரை சனி, செவ்வாய் இரண்டும் சுக ஸ்தானத்தில் சேர்க்கை பெறுவது அவ்வளவு நல்லதல்ல. வாகனங்களில் மிகுந்த விழிப்புணர்ச்சியோடு செல்ல வேண்டும். பழைய வாகனங்கள் வைத்திருப்பவர்கள் அதை மாற்றுவதன் மூலம் ஆபத்தில் இருந்து தப்பிக்கலாம்.

இக்காலத்தில் குரு ரிஷப ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் 12-ல் சஞ்சரிக்கும் போது உங்களுக்கு விபரீத ராஜயோக முறையில் பலன்கள் செயல்படும். அதே நேரத்தில் குருவின் பார்வை 4, 6, 8 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே செவ்வாய், சனி இரண்டும் சனியின் பார்வைக்குள் வந்து விடுகிறது. எனவே குரு வழிபாடு மிக அவசியம்.

வருடக் கடைசியில் வரும் ராகு, கேது பெயர்ச்சி திடீர் இடமாற்றம், ஊர் மாற்றங்களைக் கொடுக்கலாம். இளைய சகோதரருடன் இருந்த பிரச்சினை அகலும். இக்காலத்தில் சர்ப்ப சாந்தி செய்வதன் மூலம் சராசரி வாழ்க்கையில் சகல வசதிகளையும் பெற இயலும்.

சாதனை நிகழ்த்த சமயோசித புத்தி தேவைப்படும் காலம்!

கிரகங்கள் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் நாம் எதைச் செய்தாலும், `தொட்டதெல்லாம் வெற்றி பெறும்.' கிரகங்கள் பலமிழந்திருக்கும் போது நாம் அதற்குரிய தெய்வங்களைத் தேடிச் சென்று, அதன் பாதார விந்தங்களை பணிந்து வணங்க வேண்டும். அப்போதுதான் மனக்கவலை மாறும். ஒரு சிலருக்கு வக்ர காலமே வளர்ச்சியான காலமாக இருக்கும்.

* உங்கள் ராசியை பொறுத்தவரை செவ்வாயின் வக்ர காலத்தில் எதிர்ப்புகள் அகலும்.

* புதனின் வக்ர காலத்தில் ஆரோக்கியத்திற்காகச் செலவிடும் சூழ்நிலை உருவாகும். வீடு மாற்றச் சிந்தனையும் உருவாகும்.

* குருவின் வக்ர காலத்தில் தொழில் வளம் சிறப்பாக இருக்கும். பிரிந்தவர் இணைவர்.

* சுக்ரனின் வக்ர காலத்தில் பயணங்கள் அதிகரிக்கும்.

* சனியின் வக்ர காலத்தில் வரவு இரு மடங்காகும்.

புத்தாண்டில் வளம் பெற முத்தான வழிபாடு!

உங்கள் ராசிநாதன் புதன் என்பதால் புதன்கிழமை விரதத்தையும், வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். விஷ்ணுவின் சந்நிதியில்

சக்ராயுதம் கொண்ட சாமியாம் விஷ்ணுவே,
விக்னத்தை விலக்கி விருப்பத்தை
நிறைவேற்று! என்று சொல்லுங்கள். விருப்பங்கள் நிறைவேறும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புத்தாண்டு ராசிபலன் - 2012

Post by சிவா on Fri Dec 30, 2011 1:22 pm

கடகம்

புனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம் வரை.

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ஹி, ஹீ, ஹே, ஹோ, ட, டி, டே, டோ உள்ளவர்களுக்கும்)

திகைக்க வைக்கும் திடீர் மாற்றம்!

எதற்கும் கலங்காத மனமும், எதிர்ப்பைக் கண்டு அஞ்சாத குணமும் கொண்ட கடக ராசி நேயர்களே!

வலிய சென்று உதவுவதில் வல்லவர்கள் நீங்கள். உதவும் குணம் உங்களிடம் ஒட்டிக் கொண்டிருப்பதால் தான் பதவியில் இருப்பவர்கள் கூட உங்களுக்கு பக்கபலமாக இருக்கிறார்கள். நினைவாற்றல் மிக்க உங்களுக்கு இந்த புத்தாண்டு புதிய திருப்பத்தைக் கொடுக்குமா? என்பதைப் பற்றி பார்ப்போம்.

வருடத் தொடக்கத்திலேயே அர்த்தாஷ்டமச்சனியின் ஆதிக்கம் நடைபெறுகிறது. அது மட்டுமல்லாமல், பத்தாமிடத்து குருவும் பலம் பெற்று சஞ்சரிக்கிறார். எனவே, பணியிடத்தில் மாற்றம், கனிவோடு பேசுபவர்கள் காரசாரமாக பேசும் சூழ்நிலை, இனிய குடும்பத்தில் ஏதேனும் ஒரு குழப்பம் என்று ஒவ்வொரு சிக்கல்களாக வந்து கொண்டே இருக்கும் என்பதால் ஆண்டின் தொடக்கத்தில் இருந்தே நீங்கள் ஆலய வழிபாட்டை முறைப்படி மேற்கொள்வது நல்லது. அர்த்தாஷ்டமச் சனி வக்ரம் பெறும் போது மட்டும் அலைச்சலுக்கேற்ற ஆதாயம் வந்து சேரும். சனிக்கிழமை எள் தீபம் ஏற்றி சனீஸ்வரரை வழிபடுவதன் மூலம் சங்கடங்களில் இருந்து விடுபடலாம்.

1.1.2012 முதல் 16.5.2012 வரை

இக்காலத்தில் சுபச் செலவுகள் அதிகம் ஏற்படும். தன ஸ்தானத்தில் செவ்வாய் பலம் பெற்றும், வக்ரம் பெற்றும் இயங்கும் நேரம் இது. 5, 10-க்கு அதிபதி வக்ரம் பெறும் இந்த நேரத்தில் பிள்ளைகள் வழியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. தொழிலில் பழைய பங்குதாரர்கள் விலக நேரிடலாம். வாகன மாற்றம், இடமாற்றம், இலாகா மாற்றம் போன்றவற்றை சந்திக்க நேரிடும். நீண்டதூர பயணங்களை மேற்கொள்வதை தவிர்த்து நிம்மதிக்காக ஒரு சிலர் சிறு மாற்றங்களை மட்டும் மேற்கொள்ளுவர்.

குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே எப்படித்தான் அர்த்தாஷ்டமச்சனியின் ஆதிக்கம் நடந்தாலும், அந்தச் சனியைக் குரு பார்ப்பதால் கடைசி நேரத்தில் காரியங்கள் கைகூடி வரும். கவலை தீர குரு வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். கல்யாண வாய்ப்புகள் கைகூடும். தாயின் உடல்நலம் சீராகும். கடன் சுமை குறைய வழி பிறக்கும்.

17.5.2012 முதல் 31.12.2012 வரை

இக்காலத்தில் சகாய ஸ்தானத்தைக் குரு பார்ப்பதால் வழக்குகள் ஒவ்வொன்றாக முடிவுக்கு வரும். வருமானம் போதுமானதாக இருக்கும். புதிய பொறுப்புகளும், பதவிகளும் ஒரு சிலருக்கு வந்து சேரும். ஜுன் 23-ம் தேதி முதல் கன்னி ராசியில் செவ்வாய் சஞ்சரிக்கிறார். ஜுலை மாதம் முழுவதும் அங்குதான் இருக்கிறார். ஆகஸ்ட் மாதம் 14-ம் தேதி துலாம் ராசியில் செவ்வாய் அடியெடுத்து வைக்கிறார்.

இந்த சனி, செவ்வாய் சேர்க்கை அவ்வளவு நல்லதல்ல, 3-ல் உலா வரும் இந்த இரண்டு கிரகங்களும் ஒன்பதாம் இடத்தைப் பார்க்கின்றன. எனவே பாகப் பிரிவினைகளில் பலவித நிர்பந்தங்களும், மனக் கசப்பும் ஏற்படும். சுய ஜாதகத்தில் தெசாபுத்திக் கேற்ப தெய்வ வழிபாடுகளைத் தேர்ந்தெடுத்துச் செய்வதோடு அங்காரக ஸ்தலத்திற்கும் அடியெடுத்து வையுங்கள். அப்போதுதான் இல்லத்திலும் அமைதி ஏற்படும்.

இக்காலத்தில் குரு பெயர்ச்சியும் நிகழ இருக்கிறது. இக்காலத்தில் ரிஷபத்தில் சஞ்சரிக்கும் குரு 3, 5, 7 ஆகிய இடங்களில் தன் பார்வையை பதிக்கிறார். எனவே முக்கியப் புள்ளிகள் உங்கள் இல்லம் தேடி வருவர். உங்கள் முன்னேற்றத்திற்கும் வழிவகுப்பர். சிக்கல்களும், சிரமங்களும் இனி அகலும், சிறப்பான குருவின் பார்வை பலன் கொடுக்கும். விலகிச் சென்ற உடன்பிறப்புகள் விரும்பி வந்து சேர்வர். வாழ்க்கைத் துணை வழியிலும், வரவு வந்து சேரும். பிள்ளைகள் வழியிலும், உதிரி வருமானங்கள் கிடைக்கும். வேலை வாய்ப்பிற்கு ஏற்பாடு செய்திருந்த குழந்தைகளுக்கு வேலை கிடைக்கும். மாலை வாய்ப்பிற்காக காத்திருக்கும் பிள்ளைகளுக்கு மாலை கிடைக்கும்.

வருடக் கடைசியில் வரும் ராகு-கேது பெயர்ச்சி காலம் உங்கள் எதிர்பார்ப்புகளை நிறைவேற்றும். இல்லத்தில் உள்ளவர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்து மகிழ்வீர்கள். விலை உயர்ந்த பொருட்கள் வீடு வந்து சேரும். பழைய சொத்துகளை விற்று விட்டு, புதிய சொத்துகளை வாங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள்.

சாதனை நிகழ்த்த சமயோசித புத்தி தேவைப்படும் காலம்!

கிரகங்கள் சுய ஜாதகத்தில் பலம் பெற்றிருக்கின்றதா? என்று பார்க்க வேண்டும். பலம் குறைவாக இருந்தால் பரிகாரம் செய்ய வேண்டும். இந்த புத்தாண்டில் செவ்வாய், புதன், வியாழன், சுக்ரன், சனி ஆகிய ஐந்து கிரகங்களும், இடை, இடையே வக்ரம் பெறுகின்றன. அவை பின்னோக்கி செல்லும் போது நாம் முன்னோக்கி செல்ல வழிபாடுகளே கைகொடுக்கும்.

* அந்த அடிப்படையில் செவ்வாய் வக்ர காலத்தில் பிள்ளைகள் வழியில் ஏற்படும் சச்சரவுகளை சமாளிப்பீர்கள்.

* புதன் வக்ர காலத்தில் பயணங்களால் பலன் கிடைக்கும்.

* குரு வக்ர காலத்தில் உத்தியோக மாற்றங்கள் உறுதியாகும்.

* சுக்ரன் வக்ர காலத்தில் நினைத்தது நிறைவேறும்.

* சனியின் வக்ர காலத்தில் எதிர்பார்ப்புகள் எல்லாம் நிறைவேறும்.

புத்தாண்டில் வளம் பெற முத்தான வழிபாடு!

திங்கள் தோறும் வைரவர் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். உங்கள் ராசிநாதன் சந்திரன். எனவே, தேய்பிறை அஷ்டமியில் வைரவர் சந்நிதியில்,
`தைரியம், துணிவுடன் தரணியில் செயல்பட,
வைரவ தெய்வமே! வரம் தந்து காப்பாய்!'
என்று சொல்லுங்கள். வருங்காலம் நலமாக அமையும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புத்தாண்டு ராசிபலன் - 2012

Post by சிவா on Fri Dec 30, 2011 1:23 pm

சிம்மம்

மகம், பூரம், உத்ரம் 1-ம் பாதம் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ம, மி, மு, மெ, மோ, ட, டி, டு, டே உள்ளவர்களுக்கும்)

ஏழரை விலகி இன்பம் வழங்கும்!

புகழ் பெற்றவர்களின் பட்டியலில் இடம் பிடிக்கும் பொன்னான சிம்ம ராசி நேயர்களே!

எடுத்த காரியத்தை முடிப்பதில் அசகாய சூரர்கள் நீங்கள். இனம், மதம் பார்க்காமல் எல்லோர்க்கும் உதவுவீர்கள். பாதி வாழ்க்கைக்கு மேல் உங்களுக்குப் பக்கபலமாக இருப்பது தெய்வங்கள் தான் என்பதை அனுபவத்தில் தெரிந்து கொள்ளுவீர்கள். இப்படிப்பட்ட புத்தாண்டு உங்களுக்குப் புதிய திருப்பங்களைத் தருமா? என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

வருடத் தொடக்கத்தில் 7 1/2 சனி விலகி இனிமைகளைச் சேர்க்கும் நேரம் இது. நாளும், பொழுதும் நல்ல வாய்ப்புகள் உங்களுக்கு வந்து சேரும். குடும்பத்தில் அமைதி பெருகும். தொழிலில் கூடுதல் லாபம் கிடைக்கும். பொது நலத்தில் ஈடுபாடு கொண்டவர்களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து கொண்டே இருக்கும். விலகிய சனியை ஒரு முறை ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வாருங்கள்.

1.1.2012 முதல் 16.5.2012 வரை

இக்காலத்தில் உங்களுக்கு புத-ஆதித்ய யோகமும், குரு மங்கல யோகமும் செயல்படும் நேரமாகும். தொட்டது துலங்கும், வெற்றிச் செய்திகள் வீடு வந்து சேரும். உற்றார், உறவினர்கள் உங்களை விட்டு ஏன் விலகினோம் என்று வருத்தப்படுவர். கொட்டும் பண மழையில் நனையப் புதிய தொழில்கள் வாய்க்கும். கோலாகலமான வாழ்க்கைக்கும் அஸ்திவாரம் இடுவீர்கள். குரு மங்கள யோகத்தால் குடும்பத்தில் சுபச் செலவுகள் ஏற்படும்.

குருவின் பார்வைபலம் உங்கள் ராசிக்கு 1, 3, 5 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். கார், பைக் வாங்குவதற்காகக் காத்திருந்தவர்களுக்கு கடன் கிடைத்து வாகனம் வாங்கி மகிழ்வர். ஊர் மாற்ற சிந்தனைகள் மேலோங்கும்.

உத்தியோகத்தில் இருப்பவர்களுக்கு கூட உன்னத நிலை உருவாகும். அண்ணன், தம்பிகளுக்குள் இருந்த சண்டை அகலும், ஆரோக்கியத்தில் இதுவரை இல்லாத சுறுசுறுப்பு இப்போது ஏற்படும். எண்ணிய எண்ணங்களையெல்லாம் செயல்படுத்த குருவின் 9-ம் பார்வையும் வழிவகுக்கிறது.

17.5.2012 முதல் 31.12.2012 வரை

இக்காலத்தில் எண்ணற்ற மாற்றங்களும், ஏற்றங்களும் வந்து சேரும் நேரம் இது. குறிப்பாக ராகு சுக ஸ்தானத்திலும், கேது 10-லும் இருப்பதால் பாகப்பிரிவினைகள் சுமுகமாக முடியும். விருதுகளும், வெற்றி வாகைகளும் சூடும் வாய்ப்பு கிடைக்கும். அதே நேரத்தில் சனி வக்ரம் பெறுகிறார்.

ஜுன் 23-ம் தேதி முதல் ஆகஸ்ட் 13-ம் தேதி வரை கன்னி ராசிக்குள் செவ்வாய், சனி சேர்க்கை ஏற்படுகிறது. `கன்னிச் செவ்வாய் கடலும் வற்றும்' என்பது பழமொழி. எனவே எதிர்பாராத விரயங்கள் ஏராளமாக வந்து சேரலாம். வாங்கிய சொத்தை விற்க நேரிடும். சித்தப்பாவும், பெரியப்பாவும் சீற்றம் கொண்டு சண்டைக்கு வருவர்.

நீங்கள் செய்த புண்ணியம் குருவின் பார்வை சனி, செவ்வாய் மீது பதிவதுதான். ரிஷபத்தில் குரு சஞ்சரிக்கும் இந்த நேரத்தில் உங்கள் நிகழ்காலத் தேவை பூர்த்தியாகும். இன்பமும், துன்பமும் மாறி, மாறி வந்து கொண்டே இருக்கும். வாழ்க்கையில் குருவை நீங்கள் முழுமையாக நம்பி வழிபட்டால் குதூகலங்களையே வரவழைத்துக் கொள்ள இயலும்.

அதன் அருள்பார்வை 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிவதால், உறவினர்களுக்குள் இருந்த பனிப்போர் விலகும். உதாசீனப்படுத்தியவர்கள் உங்களை விட்டு விலகுவர். தடைபட்ட திருமணங்கள் தடையின்றி நடைபெறும். தாய் வழித் தனலாபம் கிடைக்கும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும்.

`ஊரோரத்தில் ஒரு செய்' என்பதற்கு இணங்க இடம், மனை வாங்கும் யோகம் கிடைக்கும். எதிரிகள் உதிரிகளாவர். லாபம் சுயதொழிலில் பெருக்கெடுக்கும்.

வருடக் கடைசியில் வரும் ராகு-கேது பெயர்ச்சி எழிலான வாழ்க்கைக்கு அஸ்திவாரம் இடும். டிசம்பர் 2-ம் தேதி 3-ல் ராகுவும், 9-ல் கேதுவும் சஞ்சரிக்கிறார்கள். இந்த நேரம் தான் உங்கள் முன்னேற்றம் கருதி முடிவெடுக்க வேண்டிய நேரமாகும்.

சாதனை நிகழ்த்த சமயோசித புத்தி தேவைப்படும் காலம்!

சில கிரகங்கள்-வக்ர காலத்தில் நன்மையைக் கொடுக்கும். சில கிரகங்கள் வழிபட்டால்தான் வக்ர காலத்தில் நன்மையை கொடுக்கும். மனிதர்கள் பலமிழந்த காலத்தில் மருத்துவமனைக்கும் செல்வது போல கிரகங்கள் பலமிழந்த காலத்தில் நாம் கோவில்களுக்குச் செல்ல வேண்டும்.

* செவ்வாயின் வக்ர காலத்தில் குடும்பத்தில் உள்ளவர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

* புதனின் வக்ர காலத்தில் புறப்பட்டு வெளிநாடு சென்றவர்கள் போதிய வசதி இல்லையே என்று கவலைப்படுவீர்கள்.

* குருவின் வக்ர காலத்தில் வரவும்-செலவும் சமமாகும்.

* சுக்ரனின் வக்ர காலத்தில் சகோதர சச்சரவு ஏற்படாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

* சனியின் வக்ர காலத்தில் பதவி வாய்ப்புகள் கிடைக்கும்.

புத்தாண்டில் வளம் பெற முத்தான வழிபாடு!


உங்கள் ராசிநாதன் சூரியன் என்பதால் ஞாயிற்றுக்கிழமை தோறும் சிவன் வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சிவனின் சந்நிதியில்

`கங்கையை முடியில் அணிந்திடும் சிவனே
என்குறை தீர்த்து இனிதே அருள்வாய்!' என்று சொல்லுங்கள். குறை நீங்கி குதூகலம் கூடும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புத்தாண்டு ராசிபலன் - 2012

Post by சிவா on Fri Dec 30, 2011 1:24 pm

கன்னி

உத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ப, பி, பு, பூ, ஷ, ண, ட, பே, போ உள்ளவர்களுக்கும்)

ஐந்தாம் மாதம் முதல் அதிர்ஷ்டம்!

நாலுபேர் நம்மை பாராட்ட வேண்டும் என்று விரும்பும் கன்னி ராசி நேயர்களே!

சிக்கனம் வீட்டை காக்கும்! சேமிப்பு நாட்டைக் காக்கும்! என்ற கருத்தை அறிந்து வாழ்க்கை நடத்துபவர்கள் நீங்கள். எக்கணமும் இன்பமயமாக இருக்க வேண்டுமென்று விரும்புவீர்கள்.

உங்களுக்கு இந்த புத்தாண்டு எப்படி இருக்கும் என்பதைப் பற்றி பார்ப்போம்.

வருடத் தொடக்கத்திலேயே ஏழரைச்சனியின் ஆதிக்கம் இருக்கிறது. குடும்பச் சனி நடைபெறுவதால் இதுவரை தடையாக இருந்த சுபகாரியங்கள் இனி தானாகவே நடைபெறும். இடைïறுகள் அகலும். இருப்பினும், அஷ்டமத்தில் அல்லவா குரு சஞ்சரிக்கிறார். எனவே, குரு கவசம் பாடி குருவை வழிபாடு செய்வதோடு, வியாழன் தோறும் விரதமிருப்பதும் நல்லது.

1.1.2012 முதல் 16.5.2012 வரை


இக்காலத்தில் நீங்கள் எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. எடுத்தோம், முடித்தோம் என்று எந்தக் காரியத்தையும் செய்ய இயலாது. ராசிநாதன் புதன் விரயாதிபதியுடன் கூடியிருப்பதால் வரவைக்காட்டிலும் செலவு கூடும். வளர்ச்சிக்கு உறுதுணை புரிந்தவர்கள் உங்களை விட்டு விலகலாம். இருப்பினும், கவலைப்பட வேண்டியதில்லை. உச்ச சனியின் ஆதிக்கத்தாலும், அதைக் குரு பார்ப்பதாலும், புதிய பங்குதாரர்கள் இணைந்து செயல்படுவர்.

குருவின் பார்வை பலம் உங்கள் ராசிக்கு 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே கொடிகட்டிப் பறந்த குடும்ப தகராறுகள் ஓரளவு குறையும். தாய் வழித் தனலாபம் உண்டு. மாமன் வழி உறவில் இருந்த மனக்கசப்பு மாறும், சேமிப்பும் உயரும். மருத்துவச் செலவு சிறிது உண்டு.

திடீர்ப் பயணங்கள் தித்திக்க வைக்கும். அந்நிய தேச யோகம் ஆண்டாண்டு காலமாக வரவில்லையே என்று ஏங்கியவர்களுக்கு எண்ணியபடியே கைகூடும். பதவி மாற்றங்களும் ஒரு சிலருக்கு ஏற்படும்.

17.5.2012 முதல் 31.12.2012 வரை

இக்காலம் உங்களுக்கு நல்ல பலன்கள் இல்லம் வந்து சேரும் காலமாகும். உள்ளம் மகிழும் சம்பவங்கள் ஒவ்வொரு நாளும் நடைபெறும். காரணம் குருவின் பார்வை பலம்தான், இக்காலத்தில் பலவிதமான நன்மைகளைக் கொடுக்கப் போகிறது.

இதற்கிடையில் ஜுன் 23-ம் தேதி கன்னி ராசிக்குள் செவ்வாய் உலா வரப்போகிறார். அங்கேயே சனியுடன் இணைந்து 13.8.2012 வரை சஞ்சரிக்கப்போகிறார். இந்த சனி, செவ்வாய் சேர்க்கை அவ்வளவு நல்லதல்ல. உடலும், மனமும் ஒரு சேர பாதிக்காமல் இருக்கவும், உற்சாகம் குறையாமல் செயல்படவும் அங்காரகனையும், சனிபகவானையும், சிறப்பு ஸ்தலங்களுக்குச் சென்று வழிபட்டு வருவது நல்லது. சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

சாதாரணமாக ஏதேனும் நோய், நொடிகளுக்கான அறிகுறிகள் தோன்றினால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவதே உத்தமம். உத்தியோகத்தில் உள்ளவர்கள் விருப்ப ஓய்வு பெறும் சூழ்நிலை உருவாகலாம். பிள்ளைகளை அனுசரித்துச் செல்வதோடு, அவர்கள் வழியில் வரும் சச்சரவுகளை சாமர்த்தியமாகச் சமாளிப்பது நல்லது. சேமிப்புகள் குறையலாம், செலவுகள் கூடலாம்.

குருவின் பார்வை உங்கள் ராசியின் மீதும், 3, 5 ஆகிய இடங்களிலும் பதிவாகும் நேரமிது. எனவே ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். அனைத்துக் காரியங்களிலும் வெற்றி கிடைக்கும். குழப்பங்களில் இருந்து விடுபடுவீர்கள். சகோதர உறவு பலப்படும். செல்வந்தர்களின் ஒத்துழைப்போடு சிறு சிறு சிக்கல்களை தீர்த்துக் கொள்ளுவீர்கள். குழந்தைகளின் கல்வி நலன் கருதியும், கடல் தாண்டும் முயற்சி கருதியும் எடுத்த காரியங்கள் அனுகூலமாகும்.

வருடக் கடைசியில் வரும் ராகு-கேது பெயர்ச்சி உங்களுக்குப் பொருளாதார நிலையை உயர்த்திக் கொடுக்கும். பொதுவாக தன ஸ்தானத்தில் ராகு சஞ்சரிக்கும் போது பணப்புழக்கம் அதிகரிக்கும். மனக் குழப்பம் மாறும், தினம் தோறும் திருநாளாக மாறும் விதத்தில் தொழில் வளர்ச்சி மேலோங்கும். 8-ல் கேது சஞ்சரிப்பதால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும்.

சாதனை நிகழ்த்த சமயோசித புத்தி தேவைப்படும் காலம்!

கிரகங்கள் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் நாம் எதைச் செய்தாலும், `தொட்டதெல்லாம் வெற்றி பெறும்' கிரகங்கள் பலமிழந்திருக்கும் போது நாம் அதற்குரிய தெய்வங்களை தேடிச் சென்று, அதன் பாதாரவிந்தங்களைப் போற்றி வணங்க வேண்டும். அப்போதுதான் அது நன்மையைக் கொடுக்கும்.

* செவ்வாய் வக்ரம் பெறும் நேரத்தில் உங்கள் செயல்களில் வெற்றி கிடைக்கும்.

* புதன் வக்ரம் பெறும் நேரத்தில் உடல் ஆரோக்கியத்திலும், தொழிலும் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

* குருவின் வக்ர காலத்தில் பயணங்களால் பலன் கிடைக்கும், கல்யாண வாய்ப்புகள் கை கூடும்.

* சுக்ரனின் வக்ர காலத்தில் சேமிப்பு கரையும்.

* சனியின் வக்ர காலத்தில் உத்தியோக மாற்றங்களும், இடமாற்றங்களும் வந்து சேரும்.

புத்தாண்டில் வளம் பெற முத்தான வழிபாடு!

உங்கள் ராசிநாதன் புதன் என்பதால், புதன்கிழமை தோறும் விஷ்ணுவையும், லட்சுமியையும் வழிபட்டு வருவது நல்லது. தெய்வ சந்நிதியில்

`செந்தாமரை தனில் சிரித்திடும் லட்சுமி
வந்தே அருள்க! வசதியைத் தருக!' என்று சொல்லுங்கள்.

லட்சுமி மூலம் விஷ்ணுவின் அருள் உங்களுக்கு வந்து சேரும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புத்தாண்டு ராசிபலன் - 2012

Post by சிவா on Fri Dec 30, 2011 1:25 pm

துலாம்

சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ர, ரி, ரு, ரே, த, தி, து, தே உள்ளவர்களுக்கும்)

விடாமுயற்சியால் வெற்றி

துவளாத மனதுக்குச் சொந்தக்காரர்களாக விளங்கும் துலாம் ராசி நேயர்களே!

தவறான கருத்துக்களைச் சொன்னால் அதைத் தட்டிக் கேட்க முன் வருபவர்கள் நீங்கள். அதனால் பகை வந்தாலும் பரவாயில்லை என்று நினைப்பீர்கள். ஆனால் நகை முகத்தோடு நாசூக்காக காரியங்களைச் சாதிக்க நடுவயதில் உங்களுக்கு அனுபவம் வந்து விடும்.

உங்களுக்கு இந்தப் புத்தாண்டு ஜென்மச் சனியின் ஆதிக்கத்தில் பிறக்கிறது. இனி நன்மைகள் நடைபெறுமா, இல்லை நாடு போற்றும் வாழ்க்கை அமையுமா என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

வருடத் தொடக்கத்தில் வளர்ச்சியும், தளர்ச்சியும் மாறி, மாறி வரும். 2-ல் ராகுவும், 8-ல் கேதுவும் அல்லவா சஞ்சரிக்கிறார்கள். எனவே இனம் புரியாத கவலை மேலோங்கும். பணப்புழக்கத்துக்கு குறைவிருக்காது என்றாலும், பக்க பலமாக இருப்பவர்களின் எண்ணிக்கை குறையலாம்.

பொதுவாக ஜென்மச் சனியின் ஆதிக்கக் காலத்தில் எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்தே முடிவு எடுக்க வேண்டும். சனி கவசம் பாடி சனீஸ்வரரை வழிபட்டு எள் தீபம் ஏற்றுங்கள்.

1.1.2012 முதல் 14.5.2012 வரை

இக்காலத்தில் அஷ்டமத்து கேதுவால் அலைச்சல் அதிகரிக்கலாம். அடுத்தவர்களுக்காக வாங்கிக் கொடுத்த தொகை வருவதில் தாமதம் ஏற்படலாம். இடையில் செவ்வாய் வக்ரமும், சனி வக்ரமும் உருவாகிறது. குடும்பச் சுமை கூடும். கொடுக்கல்-வாங்கல்களில் கூடுதல் கவனம் தேவை. சகோதரர்களை அனுசரித்துச் செல்வது நல்லது.

குருவின் பர்வை உங்கள் ராசியிலும் 3 மற்றும் 11 ஆகிய இடங்களிலும் பதிவாகிறது. எனவே ஆரோக்கியத்தில் குறைபாடு ஏற்பட்டாலும் உடனடியாக அகன்று விடும். படுத்த படுக்கை என்ற நிலை மாறிவிடும். இருப்பினும் முக்கிய நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள முடியாத சூழ்நிலை உருவாகி விடும். வழக்குகளில் வெற்றி கிடைக்கும். ஆனால் புதிய வழக்குகளும் முளைக்கும். லாப ஸ்தானத்தில் செவ்வாய் நிற்க, அதைக் குரு பார்ப்பதால் வரவு எந்த ரூபத்திலாவது வந்து கொண்டே இருக்கும். மே மாதம் வரை பொறுத்திருந்தால் மிகச் சிறந்த பலன்களை நீங்கள் காணலாம்.

17.5.2012 முதல் 31.12.2012 வரை

இக்காலம் உங்களுக்கு ஓர் இனிய காலமாகவே அமையும். குரு அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் போது அருமையான காலம்தானா என்று கேட்கலாம். உங்கள் ராசியைப் பொறுத்தவரை ராசி நாதனுக்கு குரு பகைவன். எனவே அது மறைவிடங்களுக்குச் செல்லும் போது எல்லாம் மகத்தான பலன்களைக் கொடுக்கும். மேலும் 6-ம் இடத்துக்கு அதிபதி 8-ம் இடத்தில் சஞ்சரிக்கும் போது, `கெட்டவன் கெட்டிடின் கிட்டிடும் ராஜயோகம்' என்ற அமைப்பு செயல்படப் போகிறது. நீங்கள் திட்டமிடாது செய்யும் காரியங்கள் இக்காலத்தில் வெற்றி பெறும். குரு பார்வை பலம் பக்க பலமாக உங்களுக்கு இருக்கும். உங்கள் ராசிக்கு 2, 4 மற்றும் 12 ஆகிய இடங்களில் குரு பார்வை பதிவாகிறது.

குருவின் பார்வை பதியும் இடங்களில் எல்லாம் குழப்பங்கள் அகலும். வருவாய் பெருகுவதற்கும் வழி கிடைக்கும். வாகன யோகமும் உருவாகும். ஆனால் ஜென்மச் சனியின் ஆதிக்கம் இருப்பதால், அது இந்த நேரத்தில் பின்னோக்கிச் சென்று வக்ர கதியிலும் இயங்குவதால், வாகனங்களில் செல்லும் போது விழிப்புணர்ச்சி தேவை.

ஜுன் 23-ம் தேதி கன்னி ராசிக்குள் செவ்வாய் உலா வரப்போகிறார். அங்கேயே சனியுடன் இணைந்து 13.8.2012 வரை சஞ்சரிக்கப் போகிறார். விரய ஸ்தானத்தில் இரண்டும் ஒன்று கூடுவது அவ்வளவு நல்லதல்ல. வாங்கிய சொத்தை விற்க நேரிடும். தேங்கிய காரியம் அதிகரிக்கும். செலவு நடைகளைப் பற்றிக் கவலைப்படுவீர்கள். பத்திரப் பதிவுகளில் கவனம் தேவை. பாசமுள்ள சகோதரர்கள் வேஷம் போடுகிறார்களே என்று நினைப்பீர்கள்.

வருடக் கடைசியில் ராகு-கேதுக்களின் பெயர்ச்சி ஏற்படுகிறது. ஜென்ம ராகு உங்களுக்கு நன்மையையே வழங்கும். சப்தம கேது வாழ்க்கைத் துணை வழியே அனுசரித்துச் செல்ல வேண்டிய சூழ்நிலையை உருவாக்கும்.

சாதனை நிகழ்த்த சமயோசித புத்தி தேவைப்படும் காலம்!

கிரகங்களின் வக்ர காலத்தில் வழிபாட்டின் மூலம் நீங்கள் வளர்ச்சி காணலாம். பாதியிலேயே சில பணிகள் நிற்கும். வாதிடும் சூழ்நிலை உருவாகும். மோதல் இல்லாத வாழ்க்கை அமைய மூல கணபதியை வழிபடுவது நல்லது.

* செவ்வாய் வக்ரத்தில் பணப் பற்றாக்குறை ஏற்படும்.

* புதன் வக்ரத்தில் உறவினர் பகை மாறும்.

* குரு வக்ரத்தில் நல்ல காரியங்கள் நடைபெறும்.

* சுக்ரன் வக்ரத்தில் ஆரோக்கியத்தில் கவனம் தேவை.

* சனி வக்ரத்தில் பிள்ளைகள் வழியில் சுபகாரிய பேச்சுகள் நல்ல முடிவுக்கு வரும்.

புத்தாண்டில் வளம் பெற முத்தான வழிபாடு!

உங்கள் ராசிநாதன் சுக்ரன் என்பதால், வெள்ளிக்கிழமை தோறும் விரதமிருந்து அம்பிகையை வழிபடுவது நல்லது. அம்பிகை சந்நிதியில்,

`இன்பங்கள் அனைத்தும் இல்லம் வந்திட,
அம்பிகையே நீ! அருள் மழை பொழிவாய்!' என்று சொல்லுங்கள்.

அருளும் கிடைக்கும், பொருளும் கிடைக்கும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புத்தாண்டு ராசிபலன் - 2012

Post by சிவா on Fri Dec 30, 2011 1:27 pm

விருச்சிகம்

விசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை முடிய

(பெயரின் முதல் எழுத்துக்கள்: தோ, ந, நி, நே, நோ, ய, யி, யு உள்ளவர்களுக்கும்)

சேமிப்பு வளரும்! செல்வாக்கு உயரும்!

விதியை மதியால் வெல்லலாம் என்பதற்கு எடுத்துக்காட்டாக விளங்கும் விருச்சிக ராசி நேயர்களே!

விடா முயற்சி தான் உங்கள் வெற்றியின் ரகசியம். உடல் வலிமையைக் காட்டிலும், உங்கள் உள்ளத்திற்கு வலிமை அதிகம்.

உங்களுக்கு இந்த புத்தாண்டு பொன்னான வாழ்க்கையை அமைத்து கொடுக்குமா? மன்னாதி மன்னர்களைப் போல வாழ வழிகாட்டுமா? எந்நாளும் இன்பங்களை வாரிவழங்குமா? என்பதைப் பற்றி பார்ப்போம்.

வருடத் தொடக்கமே உங்களுக்கு வசந்தமாக அமையும். ஜென்ம ராகு செல்வாக்கை உயர்த்தும். சேமிப்பை அதிகரிக்கச் செய்யும். ஏழரைச் சனி தொடங்கினாலும், உங்கள் ராசியைப் பொறுத்தவரை சகாய ஸ்தானத்திற்கு அதிபதியாக சனி விளங்குவதால், அனைத்திலும் வெற்றியை அள்ளிக் கொடுப்பவர் சனி பகவான்தான். எனவே, விடாது விநாயகர் வழிபாட்டையும், வேலவன், வள்ளி தெய்வானை வழிபாட்டையும், அனுமன் வழிபாட்டையும், சனி பகவான் வழிபாட்டையும் மேற்கொள்ளுங்கள். எண்ணங்கள் எளிதில் நிறைவேறும்.

1.1.2012 முதல் 16.5.2012 வரை

இக்காலம் உங்களுக்கு இனிய காலம் தான். வருடத் தொடக்கத்திலேயே ராசிநாதன் செவ்வாய் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். எனவே, தொழில் வளம் மேலோங்கும். புதிய ஒப்பந்தங்கள் அதிகரிக்கும். வீடு கட்டும் முயற்சிக்கு வித்திடுவீர்கள். சுக்ர பலத்தால் சகோதர ஒற்றுமை பலப்படும்.

மீனத்தில் புதன் சஞ்சரிக்கும் போது விபரீத ராஜயோகம் செயல்படப் போகிறது. எனவே, திட்டமிடாது செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். தெய்வ தரிசனங்களுக்காக பயணங்களை மேற்கொள்ளுவீர்கள்.

குருவின் பார்வை பலம் உங்கள் ராசிக்கு 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிவதால் குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி பெறும். கொடுக்கல், வாங்கல்கள் ஒழுங்காகும். புதிய ஒப்பந்தங்கள் அதிகரிக்கும். ஆரோக்கியத்தில் தொல்லை ஏற்படாமல் இருக்க ஆகாரத்தில் கட்டுப்பாடு செலுத்துங்கள். பார்க்கும் குருவைப் பலப்படுத்த தெட்சிணாமூர்த்தி வழிபாட்டை மேற்கொள்ளுங்கள்.

17.5.2012 முதல் 31.12.2012 வரை

இக்காலம் உங்களுக்கொரு பொற்காலம் ஆகும். தன பஞ்சமாதிபதி குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிகிறது. அதிலும் சப்தம பார்வை சகல யோகங்களையும் வழங்கும். எனவே, தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் ரீதியாக எடுத்த முயற்சிகளில் அனுகூலம் ஏற்படும். மாமன், மைத்துனர் வழியில் ஏற்படும் மங்கல நிகழ்ச்சிகளை முன் நின்று நடத்துவீர்கள். சேமிப்பு உயரும் இந்த நேரத்தில் விலை உயர்ந்த பொருட்களை எல்லாம் வாங்கி மகிழ்வீர்கள்.

குருவின் பார்வை ஜென்ம ராசியில் பதிவதோடு, 3 மற்றும் 11 ஆகிய இடங்களிலும் பதிவாகிறது. எனவே, உடன்பிறப்புகளின் ஒத்துழைப்பு ஒப்பற்ற விதத்தில் கிடைக்கும். அரசியல் செல்வாக்கு மேலோங்கும். அரசு வழி ஒத்துழைப்போடு புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். இளைய சகோதரத்தின் உறவு பலப்படும். பூர்வீக சொத்துகளில் இருந்த சிக்கல்கள் அகன்று புதிய திருப்பம் ஏற்படும்.

ஜுலை, ஆகஸ்ட் மாதங்களில் சனி, செவ்வாய் சேர்க்கை லாப ஸ்தானத்தில் ஏற்படுகிறது. இருப்பினும், குருவின் பார்வை அதில் பதிவதால் குழப்பங்களிலிருந்து விடுபடுவீர்கள்.

சகோதரர்களை அனுசரித்து செல்ல வேண்டிய நேரமிது. அரசியல் ஈடுபாடு கொண்டிருப்பவர்களுக்கு புதிய பொறுப்புகள் வந்து சேரலாம். கூட்டாளிகளையும், பணியாளர்களையும் கொஞ்சம் கூட யோசிக்காமல் மாற்றி அமைப்பீர்கள். ஆற்றல் மிக்கவர்கள் உங்களுக்கு பின்னணியாக இருப்பதால் அனைத்துக் காரியங்களிலும் உங்களுக்கு வெற்றி கிடைக்கும்.

வருடக் கடைசியில் ராகு-கேது பெயர்ச்சி நடைபெற இருக்கிறது. டிசம்பர் 2-ம் தேதிக்கு மேல் கேது 6-லும், ராகு 12-லும் சஞ்சரிக்கப் போகிறார்கள். மறைவிடங்களில் ராகு, கேதுக்கள் சஞ்சரிப்பதன் மூலம் நிறைவான பலன்கள் உங்களுக்கு கிடைக்கும். இறை வழிபாட்டில் சர்ப்ப சாந்தியையும் நீங்கள் சேர்த்துக் கொண்டால் குறைகள் அகலும். குடும்ப முன்னேற்றமும் கூடும்.

சாதனை நிகழ்த்த சமயோசித புத்தி தேவைப்படும் காலம்!

சில கிரகங்கள் வக்ர காலத்தில் நன்மையைக் கொடுக்கும். சில கிரகங்கள் வழிபாட்டால் தான் வக்ர காலத்தில் நன்மை தரும். மனிதர்களின் உடல் பலமிழந்த காலத்தில் மருத்துவமனைக்குச் செல்வது போல, கிரகங்கள் பலமிழந்த காலத்தில் நாம் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

* செவ்வாயின் வக்ர காலத்தில் ஆரோக்கியத்தில் அக்கறை தேவை.

* புதனின் வக்ர காலத்தில் பொருளாதார நிலை உயரும்.

* சுக்ரனின் வக்ர காலத்தில் விலை உயர்ந்த பொருள்களை வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள்.

* குருவின் வக்ர காலத்தில் குடும்பத்தில் உள்ளவர்களையும், குழந்தைகளையும் அனுசரித்து செல்வது நல்லது.

* சனியின் வக்ர காலத்தில் பூமி விற்பனையும், தன லாபங்களும் ஏற்படும். உடன் பிறப்புகளை அனுசரித்துச் செல்ல வேண்டியது அவசியமாகும்.

புத்தாண்டில் வளம் பெற முத்தான வழிபாடு!

உங்கள் ராசிநாதன் செவ்வாய் என்பதால் முருகப் பெருமான் வழிபாட்டை மேற்கொள்வது நல்லது. முருகன் சந்நிதியில், செல்வம் குவிந்திட, செல்வாக்கு உயர்ந்திட,

வள்ளிமணாளா!
வரம் தந்து காப்பாய்! என்று சொல்லுங்கள்.

வள்ளி மணாளன் எல்லா நாட்களையும் உங்களுக்கு இனிய நாட்களாக அமைத்துக் கொடுப்பான்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புத்தாண்டு ராசிபலன் - 2012

Post by சிவா on Fri Dec 30, 2011 1:28 pm

தனுசு

மூலம், பூராடம், உத்ராடம் 1-ம் பாதம் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: யே, யோ, ப, பி, பு, பூ, பா, ன, டே, பே உள்ளவர்களுக்கும்)

வருடக் கடைசியில் வசந்தம்

தன்னை நாடி வந்தவர்களுக்குத் தாராளமாக உதவி செய்யும் எண்ணம் கொண்ட தனுசு ராசி நேயர்களே!

செய்த உதவிக்குப் பிறர் நன்றி செலுத்தாவிட்டாலும் மீண்டும், மீண்டும் நீங்கள் உதவி செய்து கொண்டே இருப்பீர்கள். சாமர்த்தியமாகப் பேசி சமாளிக்கும் ஆற்றல் உங்களுக்கு கைவந்த கலை. உங்களுக்கு இந்தப் புத்தாண்டு பொன்னான ஆண்டாக அமையுமா? புதிய பாதையை அமைத்துத் தருமா? என்பதைப் பற்றிப் பார்ப்போம்.

ஆண்டின் தொடக்கத்தில் ராசிநாதன் குரு உங்கள் ராசியையே பார்க்கிறார். 9-க்கு அதிபதி சூரியன், 10-க்கு அதிபதி குருவுடன் கூடி உங்கள் ராசியிலேயே சஞ்சரிக்கிறார். எனவே திட்டமிட்ட காரியங்களைத் திட்டமிட்டபடியே நடத்தி முடிக்கும் ஆற்றல் வந்து சேரும். உச்ச சனியின் பார்வை உங்கள் ராசியில் பதிவதால் திடீர் தாக்குதல்களும், திட்டமிட்ட காரியங்கள் திசைமாறிப் போகும் சூழ்நிலையும் உருவாகலாம். பொதுவாக உங்கள் ராசியைப் பொறுத்தவரை தன-சகாய ஸ்தானாதிபதியாக விளங்கும் சனி உச்சம் பெறுவதால் மனக் கவலை இருக்குமே தவிரப் பணக் கவலை இருக்காது என்றே சொல்லலாம்.

1.1.2012 முதல் 16.5.2012 வரை

இக்காலம் உங்களுக்கு வளர்ச்சி கூடும் காலம் என்றே சொல்ல வேண்டும். ராசிநாதனின் வக்ர இயக்கம் நீங்கி ஆண்டு பிறப்பதால் ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். புத-ஆதித்ய யோகத்தால் அரசு வழியில் ஆதரவு கிடைக்கும். அதிகாரத்துவ யோகம் உங்களுக்கு வந்து சேரலாம். குருவின் பார்வை பலம் உங்கள் ராசியிலும், 9, 11 ஆகிய இடங்களிலும் பதிவாகிறது.

`குரு பார்க்கக் கோடி நன்மை' என்பதற்கு ஏற்ப தன் வீட்டை தானே பார்ப்பதால் புகழ், கீர்த்தி மேலோங்கும். பொருளாதாரப் பற்றாக்குறை அகலும். இடையில் ஏற்படும் செவ்வாயின் வக்ரம் உங்களுக்கு எதிர்பாராத நன்மையைக் கொடுக்கும். ஆனால் அதே நேரம் புத்திர ஸ்தானாதிபதியாகவும் செவ்வாய் விளங்குவதால் பிள்ளைகள் வழியில் கவலை தரக்கூடிய தகவல் வரலாம்.

குருவின் பார்வையைப் பலப்படுத்தினால் சகல பாக்கியங்களும் உங்களுக்கு வந்து சேரும். வியாழன் தோறும் முல்லைப் பூ போட்டும், திசை மாறிய தென்முகக் கடவுளைத் தேடிச் சென்றும் வழிபாடு செய்யுங்கள். அசையாத சொத்துகளை விற்று அதற்கு இணையாகப் புதிய சொத்துகளை வாங்கும் சூழ்நிலையும் கிடைக்கும்.

17.5.2012 முதல் 31.12.2012 வரை

இக்காலம் உங்களுக்கு ஓர் பொற்காலமாகும். எது, எது எல்லாம் நடைபெற வேண்டும் என்று கனவு கண்டீர்களோ, அது, அது எல்லாம் நடைபெற்று மகிழ்ச்சியைக் கொடுக்கும். கேந்திராதிபத்ய ஆதிக்கம் பெற்ற குரு 6-ல் வரும் போது அதன் பார்வை பலத்தால் வாழ்வை வளப்படுத்துவார். வருமானம் திருப்தி அளிக்கும். கூட்டு முயற்சியை உதறித் தள்ளிவிட்டுத் தனி முயற்சியில் வெற்றி காண்பீர்கள்.

குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிவாவதால் வீடு வாங்கும் வாய்ப்பு கிடைக்கும். வியக்கும் செய்திகள் வீடு வந்து சேரும். அந்நிய தேசப் பயணங்கள் எண்ணியபடியே நடைபெறும். ஆயினும் இக்காலத்தில் செவ்வாய்-சனி சேர்க்கை ஏற்படுவதால் தொழிலில் கூடுதல் விழிப்புணர்ச்சி காட்டுவது நல்லது.

செவ்வாய், உங்கள் ராசியின் அடிப்படையில் விரயாதிபதி ஆவார். சனி உங்கள் ராசியின் அடிப்படையில் தனாதிபதி ஆவார். அந்த இரண்டும் ஒன்று சேர்ந்து தன ஸ்தானத்தில் சஞ்சரிப்பது அவ்வளவு நல்லது அல்ல. ஜுன் 23-ம் தேதி கன்னி ராசியில் செவ்வாய் சஞ்சரிக்கப் போகிறார். ஆகஸ்ட் 13-ம் தேதி வரை சனியோடு இணைந்திருக்கிறார். எனவே கர்ம ஸ்தானம் பலப்படுவதால் பெற்றோர்களின் உடல் நலத்தில் பாதிப்புகள் ஏற்படலாம். கற்றவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடப்பதோடு, சுய ஜாதக ரீதியாக பரிகாரங்களை மேற்கொள்ளுவது நல்லது.

வருடக் கடைசியில் ராகு-கேதுக்களின் பெயர்ச்சி வசந்தத்தை உருவாக்கும். லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு சேமிப்பை உயர்த்தும், செல்வாக்கை கூட்டும். சுயதொழில் வாய்ப்பு கைகூடும். 5-ல் உள்ள கேதுவால் பிள்ளைகள் வழியில் நடைபெற வேண்டிய விவாகப் பேச்சுக்கள் நல்ல முடிவுக்கு வரும்.

சாதனை நிகழ்த்த சமயோசித புத்தி தேவைப்படும் காலம்!

கிரகங்கள் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் நாம் எதைச் செய்தாலும், `தொட்டதெல்லாம் வெற்றி பெறும்'. கிரகங்கள் பலமிழந்திருக்கும் போது நாம் அதற்குரிய தெய்வங்களைத் தேடிச் சென்று பாதாரவிந்தங்களைப் பணிந்து வணங்க வேண்டும்.

* செவ்வாயின் வக்ர காலத்தில் பிள்ளைகள் வழியில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது.

* புதனின் வக்ர காலத்தில் தொழிலில் விழிப்புணர்ச்சி தேவைப்படும்.

* சுக்ரனின் வக்ர காலத்தில் நினைத்தது எல்லாம் நிறைவேறும்.

* குருவின் வக்ர காலத்தில் ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்கள் ஏற்பட்டு அகலும்.

* சனியின் வக்ர காலத்தில் தனவரவில் பற்றாக்குறை உருவாகலாம்.

புத்தாண்டில் வளம் பெற முத்தான வழிபாடு!

உங்கள் ராசிநாதன் குரு என்பதால் வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குரு தெட்சிணாமூர்த்தியை வழிபாடு செய்யுங்கள், குருவின் சந்நிதியில்,

குருவே உன்னைக் கும்பிடுகின்றேன்!
அருளைத் தந்தே ஆதரித்திடுவாய்! என்று சொல்லுங்கள்.

குரு பார்வை உங்கள் குழப்பங்களை அகற்றும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புத்தாண்டு ராசிபலன் - 2012

Post by சிவா on Fri Dec 30, 2011 1:29 pm

மகரம்

உத்ராடம் 2, 3, 4-ம் பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2-ம் பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: போ, ஜ, ஜி, ஜீ, ஜே, ஜோ, க, கா, கி உள்ளவர்களுக்கும்)

மங்கல நிகழ்ச்சிகள் மனையில் நடைபெறும்

கடமையிலேயே கண்ணும் கருத்துமாக விளங்கும் மகர ராசி நேயர்களே!

பொறுமையாகச் செயல்பட்டு பெருமை காண்பவர்கள் நீங்கள். எந்த காரியத்தை செய்தாலும் அதில் ஒரு தனி முத்திரையை பதிப்பீர்கள். படிப்பை விட அனுபவ அறிவு அதிகம் பெற்றிருப்பதால் பலருக்கும் தக்க சமயத்தில் யோசனைகளை தாராளமாக அள்ளி விடுவீர்கள்.

உங்களுக்கு இந்த புத்தாண்டு உன்னதமான ஆண்டாக இருக்குமா? உள்ளத்தில் எண்ணியவற்றை தெள்ளத்தெளிவாக நிறைவேற்ற முடியுமா? என்பதைப் பற்றி பார்ப்போம்.

வருடத் தொடக்கத்தில் ராசி நாதன் சனி உச்சம் பெறுவது யோகம் தான். அதே நேரத்தில் தனாதிபதியாகவும் சனி விளங்குவதால் பொருளாதார பற்றாக்குறை அகலும். புகழ், கீர்த்தி மேலோங்கும். அஷ்டமத்துச் செவ்வாயின் ஆதிக்கம் மட்டும் ஆரம்பத்தில் உள்ளது. அது விலகும் வரை பொறுமையோடு செயல்படுவது நல்லது.

1.1.2012 முதல் 16.5.2012 வரை

இக்காலம் உங்களுக்கு எதையும் யோசித்துச் செய்ய வேண்டிய காலமாகும். இயல்பான வாழ்க்கையில் எந்த தடையும் இருக்காது என்றாலும், அஷ்டமத்துச் செவ்வாயின் ஆதிக்கம் ஆரோக்கியத்தில் அடிக்கடி அச்சுறுத்தல்களை ஏற்படுத்தும். எலும்பு, நரம்பு சம்பந்தபட்ட பாதிப்புகள் ஏற்பட்டால் உடனடியாக மருத்துவ ஆலோசனை பெறுவது நல்லது. வருடத் தொடக்கம் முதல் ஜுன் 22 வரை செவ்வாய் சிம்மத்தில் சஞ்சரிக்கிறார். இடையில் வக்ரகதியிலும் இருக்கிறார். சுகாதிபதியாக இருந்து வக்ரம் பெறுகிறார்.

எனவே, வாகனங்களில் செல்லும் போது விழிப்புணர்ச்சி தேவை. சகோதர வழி சச்சரவுகளை சந்திக்கா திருக்க அனுசரித்து செல்வது நல்லது. குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிவாவது நன்மைதான். மலை போல் வந்த துயர் பனி போல் விலகும் என்பதற்கேற்ப சிக்கல்களிலிருந்து விடுபடும் வாய்ப்புகளை குரு பகவான் வழங்குவார்.

எனவே, பார்க்கும் குருவைப் பலப்படுத்த வியாழன் தோறும் விரதமிருந்து தென்முக கடவுளை வழிபட்டு வாருங்கள். விரயாதிபதி குருவின் பார்வை பதிவதால், இடம், பூமி வாங்கும் யோகங்கள் கூட ஒரு சிலருக்கு ஏற்படலாம். ராசி நாதனாக இருந்து உச்சம் பெற்ற சனியை குரு பார்ப்பதால், காரியங்கள் கடைசி நேரத்திலேயே முடிந்தாலும், நல்ல விதமாக முடியும்.

17.5.2012 முதல் 31.12.2012 வரை

இக்காலம் உங்களுக்கு ஒரு இனிய காலமாகும். குருவின் பார்வை உங்கள் ராசியிலேயே பதிவதால் தடைகள் அகலும். தனவரவு பெருகும். வரன்கள் வாயில் தேடி வந்து சேரும்.

குருவின் பார்வை உங்கள் ராசியில் பதிவதோடு, ஒன்பது, பதினொன்று ஆகிய இடங்களிலும் பதிவாகிறது. தந்தை வழியில் இருந்த விரிசல் அகலும். பூர்வீக சொத்துகளில் இருந்த இடைïறுகள் விலகி, சொத்துகள் கைக்கு வந்து சேரும். சுகங்களும், சந்தோஷங்களும் அதிகரிக்கும்.

அதே நேரத்தில் செவ்வாய், சனியின் சேர்க்கையும் இக்காலத்தில் ஏற்படுகிறது. பூர்வ-புண்ணிய ஸ்தானம் எனப்படும் 9-ம் இடத்தில் ஜுன் 23 முதல் ஆகஸ்ட் 13 வரை இணையும் இந்த சனி, செவ்வாய் சேர்க்கை மிகுந்த எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டிய காலமாகும். மனக்கசப்பு தரும் சம்பவங்களை சந்திக்காமல் இருக்க மால்மருகனையும், மாலவனையும் வழிபாடு செய்வதோடு, சுய ஜாதக ரீதியாக பரிகாரங்களும், சர்ப்ப சாந்தியும் செய்வது நல்லது.

வருடக் கடைசியில் ராகு, கேதுக்களின் பெயர்ச்சி ஏற்படுகிறது. பத்தாமிடத்தில் சஞ்சரிக்கப் போகும் ராகு முத்தான பலன்களை உங்களுக்கு அள்ளி வழங்கும். நட்பு வட்டம் விரியும். உடன்பிறப்புகளின் இல்ல திருமணங்களை முன்னின்று நடத்தி வைப்பீர்கள்.

தாய் ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால் தாயின் உடல் நலத்தில் அடிக்கடி தொல்லைகள் ஏற்பட்டு அகலும். பங்காளிப் பகையை வளரவிடாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

சாதனை நிகழ்த்த சமயோசித புத்தி தேவைப்படும் காலம்!

கிரகங்கள் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் நாம் எதைச் செய்தாலும், `தொட்டதெல்லாம் வெற்றி பெறும்'. கிரகங்கள் பலமிழந்திருக்கும் போது நாம் அதற்குரிய தெய்வங்களைத் தேடிச் சென்று, அதன் பாதார விந்தங்களை பணிந்து வணங்க வேண்டும். அப்போதுதான் மனக்கவலை மாறி, மகிழ்ச்சி கூடும்.

* செவ்வாயின் வக்ர காலத்தில் ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல் ஏற்பட்டு அகலும்.

* புதனின் வக்ர காலத்தில் திட்டமிடாமல் செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும்.

* குருவின் வக்ர காலத்தில் அலைச்சலுக்கேற்ற ஆதாயம் கிடைப்பது அரிது.

* சுக்ரனின் வக்ர காலத்தில் பிள்ளைகள் வழியிலும், தொழில் ரீதியாகவும், வரும் சிக்கல்களை சாமர்த்தியமாக சமாளிக்கும் சூழ்நிலை உருவாகும்.

* சனியின் வக்ர காலத்தில் சனீஸ்வர வழிபாட்டின் மூலம் குடும்பத்தில் ஏற்படும் குழப்பங்களில் இருந்து விடுபடலாம்.

புத்தாண்டில் வளம் பெற முத்தான வழிபாடு!

உங்கள் ராசிநாதன் சனி என்பதால் சனிக்கிழமை தோறும் விரதமிருந்து சனீஸ்வர வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். அதோடு, ராமபிரான் வழிபாடும் நலம் சேர்க்கும். ராமர் சந்நிதியில்,

`சீதையை மணந்த சிறப்புரு ராமா!
பாதையை காட்டி, பாக்கியம் அருள்க!'

என்று சொல்லுங்கள், யோகங்கள் வந்து சேரும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புத்தாண்டு ராசிபலன் - 2012

Post by சிவா on Fri Dec 30, 2011 1:30 pm

கும்பம்

(அவிட்டம் 3, 4-ம் பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3-ம் பாதங்கள் வரை)

பெயரின் முதல் எழுத்துக்கள்: கு, கூ, கோ, ஸி, ஸீ, ஸே, ஸோ, தா உள்ளவர்களுக்கும்)

லட்சியங்கள் நிறைவேறும்

கொடுத்த வாக்கை எப்படியாவது காப்பாற்ற வேண்டும் என்று நினைக்கும் கும்ப ராசி நேயர்களே!

மற்றவர்கள் அறிமுகம் செய்யாமலேயே, நெருங்கிப் பழகும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. உழைப்பை மூலதனமாக்கி முன்னேற்றம் காண்பீர்கள். பயணங்களில் அதிக ஆர்வம் காட்டுவீர்கள்.

உங்களுக்கு இந்த புத்தாண்டு அஷ்டமத்துச் சனி விலகும் ஆண்டாக இருப்பதால், அடுத்தடுத்து நல்ல நிகழ்ச்சிகள் கிடைக்குமா? நாளைய பொழுதை நல்ல பொழுதாக்க எதை வழிபட வேண்டும்? என்பதைப் பற்றி பார்ப்போம்.

ஆண்டின் தொடக்கத்திலேயே சகாய ஸ்தானாதிபதி செவ்வாய் உங்கள் ராசியை பார்க்கிறார். அந்தச் செவ்வாயை தனலாபாதிபதி குரு பார்க்கிறார். எனவே, பணப்புழக்கம் அதிகரிக்கும். பக்குவமாகப் பேசி காரியங்களை சாதித்துக் கொள்ளுவீர்கள். இனத்தார் பகை மாறும். இனி விலகிய சொந்தங்கள் விரும்பி வந்து சேரும். வேலை இல்லாதவர்களுக்கு வேலை கிடைக்கும். விருப்ப ஓய்வில் வந்தவர்கள் தொழில் தொடங்குவர். வாலில் மணிகட்டிய ஆஞ்சநேயரை வழிபட்டால் வளர்ச்சி கூடும்.

1.1.2012 முதல் 16.5.2012 வரை

இக்காலம் உங்களுக்கு இனிய காலம்தான். எளிதில் எந்த காரியத்தையும் சாதித்துக் கொள்ளுவீர்கள். சகோதர பாசம் கூடும். தாய் வழி உறவினர்களால் நன்மை கிடைக்கும்.

குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே, கல்யாண கனவுகள் நனவாகும். கடன் சுமை அதிகரிக்கின்றதே என்ற கவலை அகலும். முல்லைப் பூ மாலை சூட்டி குரு வழிபாட்டையும் மேற்கொண்டால், எல்லையில்லாத நற்பலன்கள் கிடைக்கும்.

பூர்வீக சொத்துகளை விற்றுவிட்டு, புதிய சொத்துகள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். அந்நிய தேச யோகம் எதிர்பார்த்தபடி அமையும். வாகனங்களை மாற்றுவது நல்லது.

17.5.2012 முதல் 31.12.2012 வரை

இக்காலம் உங்களுக்கு கூடுதல் கவனம் தேவைப்படும் நேரமாகும். குரு அர்த்தாஷ்டமக் குருவாக மாறுகிறார். சனி அஷ்டமத்துச் சனியாக மாறுகிறார். இது போன்ற ஆதிக்க காலங்களில் நினைப்பது ஒன்றும், நடப்பது ஒன்றுமாக இருப்பதால் எந்த முடிவெடுத்தாலும், குடும்ப உறுப்பினர்களை கலந்தாலோசித்து எடுப்பதே நல்லது. தொழில் கூட்டாளிகளை மாற்ற நேரிடும். இடமாற்றம், வீடு மாற்றம், இலாகா மாற்றம் போன்றவைகள் திடீரென வந்து சேரும்.

சுய ஜாதகத்தின் வலிமையைப் பொறுத்து முடிவெடுப்பது நல்லது. சனியும், செவ்வாயும் இணையும் நேரமிது. குருவின் பார்வை அதன் கடுமையைக் குறைத்தாலும் கூட, அஷ்டமத்தில் சனியும், செவ்வாயும் சேருவது அவ்வளவு நல்லதல்ல. மணியான யோசனையைச் சொல்லும் நீங்களே, மற்றவர்களிடம் யோசனை கேட்கும் சூழ்நிலை உருவாகலாம்.

குறிப்பாக, ஜுன் 23 முதல் ஆகஸ்ட் 13 வரை அனைவரையும் அனுசரித்து செல்ல வேண்டும். கடுமையாகப் பேசினால் காரியம் கெட்டுவிடும். வரவு, செலவுகளில் கவனம் தேவை. வாய்ப்புகள் விலகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. வாங்கிய சொத்துகளை விற்க நேரிடலாம். இது போன்ற முரண்பாடான கிரகங்கள் இணையும் நேரத்தில் சிறப்பு வழிபாடுகளை செய்வது தான் நல்லது. சர்ப்ப சாந்தி செய்தால் ஏற்ற இறக்கமில்லாத வாழ்க்கை அமையும்.

குருவின் பார்வை 8, 10, 12 ஆகிய இடங்களில் பதிவதால் இழப்புகளை ஈடுகட்ட புதிய நண்பர்கள் வந்திணைவர். ஒப்பந்தங்கள் அதிகரிப்பதாலும், யோசித்து கையெழுத்து இடுவது நல்லது. வருடக் கடைசியில் ராகு-கேதுக்களின் பெயர்ச்சியும் ஏற்படுகிறது. கேது சகாய ஸ்தானத்திலும், ராகு 9-ம் இடத்திலும் சஞ்சரிக்கப் போகிறார்கள். புதன், சுக்ரன், சனி, ராகு இணையும் இந்த நேரம் பொன்னான நேரமாகும். வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்ள நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். பதவிகள் வந்து சேரும். மறைமுக எதிர்ப்புகள் விலகும். உத்தியோகஸ்தர்களுக்கு ஊதிய உயர்வும், உத்தியோக உயர்வும் கிடைக்கும்.

சாதனை நிகழ்த்த சமயோசித புத்தி தேவைப்படும் காலம்!

சில கிரகங்கள் வக்ர காலத்தில் நன்மைகளைச் செய்யும். சில கிரகங்கள் வழிபட்டால்தான் வக்ர காலத்தில் நன்மையை கொடுக்கும். மனிதர்களின் உடல் பலமிழந்த காலத்தில் நாம் மருத்துவமனைக்கு செல்வதைப் போல கிரகங்கள் பலமிழந்த காலத்தில் நாம் கோவிலுக்குச் செல்ல வேண்டும்.

* செவ்வாயின் வக்ர காலத்தில் சகோதர பாசம் குறையும்.

* புதனின் வக்ர காலத்தில் பிள்ளைகளால் சிக்கல்கள் ஏற்பட்டு மறையும்.

* குருவின் வக்ர காலத்தில் பணப் பொறுப்புகள் சொல்வதை தவிர்ப்பது நல்லது.

* சுக்ரனின் வக்ர காலத்தில் பெற்றோர்களின் ஒத்துழைப்பு குறையலாம்.

* சனியின் வக்ர காலத்தில் வருமானம் திருப்தி தரும் என்றாலும், உடல்நிலையில் தொல்லைகள் உருவாகலாம்.

புத்தாண்டில் வளம் பெற முத்தான வழிபாடு!

உங்கள் ராசிநாதன் சனி என்பதால், சனிக்கிழமை தோறும் விரதமிருந்து சனியை வழிபடுவதோடு, அனுமனையும் வழிபட்டு வாருங்கள். அனுமன் சந்நிதியில் நின்று

`வாலில் பலத்தை வைத்ததோர், அனுமனே!
நாளும் பொழுதும் நலம் பெறச்செய்திடு!'

என்று சொல்லுங்கள். நலமும், வளமும் வந்து சேரும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புத்தாண்டு ராசிபலன் - 2012

Post by சிவா on Fri Dec 30, 2011 1:31 pm

மீனம்

பூரட்டாதி 4-ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி முடிய

(பெயரின் முதல் எழுத்துக்கள்: தீ, து, ஓ, ஸ்ரீ, தே, தொ, சு உள்ளவர்களுக்கும்)

சவால்களைச் சமாளிக்க நேரிடும்!

எவரிடமும் எளிதாக நெருங்கிப் பழகும் இயல்பைப் பெற்ற மீன ராசி நேயர்களே!

உதவி செய்வதை ஒரு குறிக்கோளாகக் கொண்டிருப்பவர்கள் நீங்கள். தாய் பாசம் மிக்கவர்களாக விளங்குவீர்கள். சமூகத்தில் நிறைய நல்ல காரியங்கள் செய்து விட்டு ஓசைப்படாமலேயே வாழ்ந்து கொண்டிருப்பவர்கள் நீங்கள். நீங்கள் யாருடன் சேர்ந்தாலும் அவர்கள் நன்மை அடைவார்கள்.

இப்படிப்பட்ட உங்களுக்கு இந்த புத்தாண்டு பொருளாதார விருத்தியை தருமா? புது முயற்சிகளில் வெற்றியைக் கொடுக்குமா? அஷ்டமத்துச் சனி அதிக கவலையை உருவாக்குமா? என்பதைப் பற்றி எல்லாம் பார்ப்போம்.

பொதுவாக, ஆண்டின் தொடக்கத்தில் ஆறில் செவ்வாய், அஷ்டமத்தில் சனி. எனவே, யோசித்தும், இறைவனை பூஜித்தும் செயல்களைச் செய்தால்தான் வெற்றி கிடைக்கும். சுற்றி இருப்பவர்களையும் அனுசரித்துச் செல்வதுநல்லது.

1.1.2012 முதல் 16.5.2012 வரை

இக்காலம் உங்களுக்கு எதையும் யோசித்துச் செய்ய வேண்டிய காலமாகும். தொழில் பங்குதாரர்கள் விலகலாம். குடும்பத்தில் ஒருவர் மாற்றி ஒருவருக்கு வைத்தியச் செலவுகள் வருகின்றதே என்று நினைத்து கவலைப்படலாம். ஆனால், எந்தப் பிரச்சினை வந்தாலும் வந்த மறு நிமிடமே நல்ல முடிவுக்கு வந்து விடும். காரணம் சனியைக் குரு பார்ப்பது தான். தூர தேசப் பயணங்கள் அமைய வாய்ப்பு உண்டு.

குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 6, 8, 1 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே, எதிரிகள் விலகுவர். அதிக நாட்களாக நடைபெறாதிருந்த ஒரு காரியம் அடுத்த மாதமே நடைபெறலாம். உத்தியோகத்தில் மாற்றம் உறுதியாகாமல் இருக்க குரு வழிபாடு உங்களுக்கு கை கொடுக்கும். அதே நேரத்தில் தனாதிபதி செவ்வாய் வக்ர இயக்கம் பெறுவதால் தனவரவில் பற்றாக்குறையும் ஏற்படலாம், குடும்பச் சுமை கூடும். உடன்பிறப்புகள் வழியே செய்த ஒப்பந்தங்களில் மாற்றம் ஏற்படலாம்.

இது போன்ற கிரகங்களின் வக்ர இயக்கம் வரும் போதெல்லாம் அதற்குரிய தெய்வத்தை விடாது வழிபாடு செய்ய வேண்டும். பொதுவாக உங்கள் ராசியைப் பொறுத்தவரை முருகப் பெருமான் வழிபாட்டையும், சனி பகவான் வழிபாட்டினையும் தொடர்ந்து செய்து வருவதன் மூலம் துயரங் களிலிருந்து விடுபடலாம்.

17.5.2012 முதல் 31.12.2012 வரை

இக்காலம் வெற்றிகள் ஸ்தானத்தில் குரு சஞ்சரிக்கும் காலம். அதே நேரம் குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஆகிய இடங்களில் பதிவாகிறது. எனவே பணத் தேவைகள் பூர்த்தியாகும். தொகை கைக்கு வந்தவுடன் வீண் விரயமாகாமல் சுப விரயமாக மாறும்.

குழந்தைகளின் கல்வி நலன் கருதியும், பெற்றோரின் மணி விழா நடத்தவும் செலவிடுவீர்கள். அதே நேரம் பெண் குழந்தைகளின் பூப்புனித நீராட்டு விழா போன்றவையும் நடக்கலாம். நகை வாங்குவது முதல் நல்ல வீடு வாங்குவது வரை சுப பலன்களை கிரக சஞ்சாரங்கள் வழங்கும். இருப்பினும் அஷ்டமத்துச் சனி ஆதிக்கம் முடியும் வரை எதையும் யோசித்து ஏற்றுக் கொள்ளுவதே உத்தமம்.

குருவின் பார்வை பலத்தால் திருமண வாய்ப்புகள் கைகூடி வந்தாலும், சனியின் ஆதிக்கம் இருப்பதால் யோசித்து, பொருத்தம் பார்த்து செய்வதே நல்லது. விலை உயர்ந்த பொருட்களை விற்கும் சூழ்நிலை ஒரு சிலருக்கு ஏற்படும். இக்காலத்தில் செவ்வாய், சனி சேர்க்கையும் ஏற்படுகிறது. உங்கள் ராசிக்கு 7-ல் இரண்டும் இணைவது அவ்வளவு நல்லதல்ல. எனவே உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை செலுத்துவதோடு, அலைச்சல்களைக் குறைத்துக் கொள்ளுவதும் நல்லது. வாகனங்களில் செல்லும் போது, கூடுதல் கவனம் தேவை. பதவியில் இருப்பவர்கள் மேல் அதிகாரிகளை அனுசரித்து செல்ல வேண்டும்.

`கன்னிச் செவ்வாய் கடலும் வற்றும்' என்பது பழமொழி. எனவே, வரவைக்காட்டிலும், செலவு கூடலாம். ஒரு கடனை அடைக்க மற்றொரு கடனை வாங்கும் சூழ்நிலை ஒரு சிலருக்கு ஏற்படும். மாற்று கருத்துடையோரின் எண்ணிக்கை கூடாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

சாதனை நிகழ்த்த சமயோசித புத்தி தேவைப்படும் காலம்!

கிரகங்கள் பலம் பெற்றிருக்கும் நேரத்தில் நாம் எதைச் செய்தாலும், `தொட்டதெல்லாம் வெற்றி பெறும்'. கிரகங்கள் பலமிழந்திருக்கும் போது, நாம் அதற்கு உரிய தெய்வங்களைத் தேடிச் சென்று அதன் பாதாரவிந்தங்களை பணிந்து வணங்கி, வழிபட வேண்டும். அப்போதுதான் இல்லம் தேடி இனிய தகவல்கள் வந்து சேரும்.

* செவ்வாயின் வக்ர காலத்தில் பணப்பற்றாக்குறை ஏற்படும்.

* புதனின் வக்ர காலத்தில் ஆரோக்கியத்திலும், தொழிலிலும் அக்கறை செலுத்த வேண்டும்.

* சுக்ரனின் வக்ர காலத்தில் வாய்ப்புகள் வாயில் கதவைத் தட்டும்.

* சனியின் வக்ர காலத்தில் வரவும்-செலவும் சமமாகும்.

புத்தாண்டில் வளம் பெற முத்தான வழிபாடு!

உங்கள் ராசிநாதன் குரு என்பதால், குரு தட்சணாமூர்த்தியையும், கல்விக்கு அதிபதியான சரஸ்வதியையும் வழிபட வேண்டியது அவசியமாகும். சரஸ்வதி தேவி சந்நிதியில் நின்று,

`நிலையாய் செல்வமும், நிம்மதியும் பெற,
கலைமகளே நீயும் கனிவுடன் அருள்வாய்!' என்று சொல்லுங்கள்.

நிம்மதியும், நிலைத்த புகழும் கிடைக்கும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: புத்தாண்டு ராசிபலன் - 2012

Post by ரேவதி on Fri Dec 30, 2011 1:43 pm

என்னுடைய ராசிக்கு பலன்கள் பரவாயில்லை
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13100
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: புத்தாண்டு ராசிபலன் - 2012

Post by ஜாஹீதாபானு on Fri Dec 30, 2011 1:54 pm

அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லைavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30292
மதிப்பீடுகள் : 7082

View user profile

Back to top Go down

Re: புத்தாண்டு ராசிபலன் - 2012

Post by Lakshman on Fri Dec 30, 2011 2:29 pm

எதிர்ப்பு
avatar
Lakshman
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 91
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: புத்தாண்டு ராசிபலன் - 2012

Post by krishnaamma on Thu Jan 05, 2012 8:15 pm

நன்றி சிவாபுன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: புத்தாண்டு ராசிபலன் - 2012

Post by மாணிக்கம் நடேசன் on Fri Jan 06, 2012 10:26 am

சிவா அங்கிள் ஜோசியம் கீட பாப்பாரா, சொல்லவே இல்ல.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: புத்தாண்டு ராசிபலன் - 2012

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum