ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 09
 தமிழ்நேசன்1981

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

அப்பா
 M.M.SENTHIL

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 M.M.SENTHIL

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 சிவனாசான்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 சிவனாசான்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ஜாஹீதாபானு

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ஜாஹீதாபானு

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வலிது, வலிது; திருமணம் வலிது....!

View previous topic View next topic Go down

வலிது, வலிது; திருமணம் வலிது....!

Post by சிவா on Sun Dec 18, 2011 1:20 pmஒவ்வொரு பெண்மணியும் மறக்க முடியாத மறக்க விரும்பாத நாள் தங்களின் திருமண நாளாகும். சுற்றமும் உற்றவர்களும் சூழ, வேதியர்கள் மந்திரங்கள் ஓத, மங்கல இசை ஒலிக்க மங்கல நாண் பூணும் நேரம் உலகிலேயே மிக முக்கியமான நேரமாகக் கருதப்படுகிறது.

ஆனால் அதே பெண் சில வருடங்கள் அல்லது பல வருடங்கள் கழித்து, குடும்ப நல கோர்ட்டில், வக்கீல்கள் புடைசூழ நிற்க நீதிபதி "இவர்களுக்கு விவாகரத்து வழங்கப்படுகிறது' என்று கூறுகையில் அப்பெண்ணின் மனநிலை எப்படியிருக்கும்?

திருமணம் நடக்கையில் இருக்கும் பயமும், புதுமையும் விவாகரத்து முடிந்து தனி வாழ்க்கையை ஆரம்பிக்கும் பொழுதும் அதே பயமும், தயக்கமும், புதுமையும் இருக்கும் அல்லவா?

"பிடித்திருந்தால் திருமணம், பிடிக்காவிட்டால் டைவர்ஸ்' என்று இன்று இளைய தலைமுறையினர் கூறுகின்றனர். குடும்பக் கோர்ட்டுக்கு வந்து பார்த்தால், அங்கு முட்டி மோதும் கூட்டத்தை கண்டு திகைப்படைவீர்கள். தற்சமயம் சனி, ஞாயிறு கூட குடும்ப நல கோர்ட் பணி செய்கிறது என்று ஆழ்ந்த வருத்தத்துடன் குடும்ப நல கோர்ட்டு வக்கீலான திரு. எல்.ஆர்.கி÷ஷார்குமார் கூறுகிறார்.

"இந்திய வாழ்க்கை முறையில் பல கேடுகள் வந்துவிட்டன. அதனால் குடும்ப வாழ்க்கை குலைந்து வருகிறது' என்று மூத்த தலைமுறையினர் புலம்ப, "பிடிக்கவில்லை என்றால் விலகுவதுதான் சரியான முடிவு' என்று இளைய தலைமுறையினர் கூறுகின்றனர்.

"இந்த இரண்டுமே தவறு. திருமணம் என்பது இருவரின் உணர்வுகளின் சங்கமம். அதைச் சற்றே அறிவுப்பூர்வமாக அணுகுவதுதான் சரியான முறையாகும். திருமண பந்தங்கள் ஐந்து வகைப்படும். அதை அறிவுபூர்வமாகவும், விஞ்ஞான பூர்வமாகவும் சந்தித்தால், இன்று கோர்ட்டில் உள்ள பல விவாகரத்து கேஸ்கள் தோற்றுப்போய் கணவனும், மனைவியும் ஒற்றுமையாக வாழலாம்' என்று ஈ மாவிஸ் ஹெதெரிங்க்டன் எனும் அமெரிக்கர் கூறுகிறார்.

முப்பது ஆண்டுகளுக்கும் மேலாக விவாகரத்து கேஸ்களில் ஆராய்ச்சி செய்துள்ளார், இப்பெண்மணி. கணவன் மனைவிக்குள் ஏற்படம் மோதல்களில் அடிப்படையானது அபிப்ராய பேதத்தால்தான். முரண்பாடுகளின்றி நடக்கும் காதல் திருமணங்களும், மரபுவழி முறையாக நடத்தப்படும் திருமணங்கள் இவை இரண்டுமே உறுதியான திருமண பந்தமாக இருக்கின்றன.

மேவிஸ் ஹெதெரிங்க்டன் மூன்று விதமான திருமண பந்தங்களைப் பற்றி கூறுகிறார். அனுசரித்து நடப்பவர் விலகிச் செல்பவர், இடையே திருமணம் பந்தத்தை விட்டு ஒதுங்கும் திருமணங்கள்; உடல் சார்ந்த நடவடிக்கைகளை மேற்கொண்டு நடத்தப்படம் திருமணங்கள் இவை மூன்றிலும் எப்பொழுதும் விவாகரத்திற்கான காரணங்களே அதிக ஆழமாக இருக்கின்றன.

ஒட்டி உறவாடும் தன்மை கொண்ட திருமணங்களும், தனித்தன்மை மற்றும் சுதந்திர முடிவுகளோடு கொண்ட திருமணங்கள் ஆகிய இரண்டு விதமான திருமணங்களில் கம்மியான விவாகரத்து பிரச்சினைகளில் இரண்டாம் இடத்தை பிடிக்கின்றன.

இவ்வகை திருமணங்கள் மூலம் இணைந்த தம்பதிகள், ஒவ்வொரு கணமும் ஒருவரோடு ஒருவர் நேரம் செலவிட்டு ஒட்டி உறவாடுவதில்லை என்றாலும் அவர்களுக்கு ஓர் இணைப்பு உள்ளது.

இவ்வகை திருமணங்கள் தத்தம் பணிகளை முடித்துவிட்டு, கூட்டை நோக்கி வரும் பறவைகள் போன்று புதுப்பித்தக் கொள்ளுதல், ஆதரவு அளித்துப் பெற்றுக் கொள்ளுதல், பாசம் மற்றும் சிநேகம் ஆகியவற்றை அளிக்கின்றன என்று ஹெதெரிங்க்டன் கூறுகிறார்.

பெற்றோர்கள் ஆலோசித்து நிச்சயிக்கும் திருமணங்களில் ஆண் சம்பாதித்துப் பெண்ணிடம் அளிக்க, மனைவி வீட்டில் இருந்தபடி குடும்பத்தை நடத்தும் திருமணங்கள் மிகக்குறைவான பிரச்னைகளுடன் நிரந்தரத்தன்மையும் உள்ளன என்பது ஓர் ஆச்சரியமான விஷயமாக உள்ளது.

இப்படிப்பட்ட திருமணங்கள் உயர்ந்து, நன்றாக செழிக்க, கணவனும் மனைவியும் தத்தம் கடமைகளைச் சரிவரச் செய்து, அதில் மகிழ்ச்சியுடன் ஈடுபட்டு, ஒருவரையொருவர் மதித்து நடந்து கொள்ள வேண்டும்.

கிட்டத்தட்ட 80% திபருமணங்களில் அனுசரித்து நடப்பவர் மனைவியாக அமைகிறார். அவள் பிரச்சனைகளை இனம் கண்டு, பேசி சரி செய்யும் எண்ணத்தை மேற்கொள்கிறாள். ஆனால் கணவன், விலகிச் செல்வது, பிரச்னைகளை இனம் கண்டு கொள்ளாமல் இருப்பது, உட்கார்ந்து நேருக்கு நேர் பேசத் தவறுவது ஆகிய மூன்றøயும் கடைப்பிடித்துத் தள்ளி நின்று உறவுமுறையை கையாளும் வழியைப் பின்பற்றுகின்றனர் என்று ஹெதரிங்க்டன் கண்டுபிடித்தார்.

உதாரணமாக, மனைவி ஒரு பிரச்னையைப் பற்றிப் பேசுகிறார். அப்பொழுது கணவன் செய்தித்தாளை படிப்பது, தொலைக்காட்சியில் நிகழ்ச்சிகளை பார்ப்பது, அல்லது அவற்றை வெறித்து பார்ப்பது, பதிலேதும் கூறாமல் உணவை உண்பது போன்றவற்றைச் செய்கிறார். இதனால் மனைவிக்கு வெறுப்பு வந்து, தன் மனதையும் எணணங்களையும் சுருக்கிக் கொள்கிறாள். அதே போன்று கணவன் மனைவியின் பேச்சைத் தொண-தொணப்பு என்று எண்ணுகிறான்.

தனித்தன்மை கொண்ட திருமணங்கள் இரண்டு தனித்தன்மை வாய்ந்தவர்களை இணைக்கின்றது. இவர்களுக்கு நெருக்கமான உறவுமுறை தேவையில்லை எனும் எண்ணம் அல்லது உறவு முறைகளைக் கையாள இயலாது எனும் பயம் காரணமாக, ஒருவரையொருவர் சார்ந்து இருப்பதில்லை.

இவர்களுக்குள் அதிகமான விவாதங்கள் இருப்பதில்லை. தினமும் ஒருவரையொருவர் சந்திக்க வேண்டும் எனும் அவசியம் அவர்களிடம் இருப்பதில்லை.

இவையனைத்தும் மேற்பார்வைக்குச் சரியாக இருப்பது போலத் தோன்றினாலும் இவர்கள் தனித்தனியாகத் திருமணத்திற்கு முன் வாழ்ந்தது போன்றே வாழ்க்கையை நடத்துகின்றார்கள். ஆனால் பாசம், ஆதரவு போன்றவை இவ்வகை திருமணங்களில் இடம் பெறாது.

மூன்றாவது வகையான திருமண வாழ்க்கையில் உடல் சார்ந்த உணர்வுகளுக்கும், மன உணர்ச்சிகளுக்கும் மிக அதிகமான இடம் கொடுக்கப்படுகின்றது. சில சமயம் அதிக சந்தோஷம், சில சமயம் மிக அதிக வருத்தம் என்று இவர்கள் உணர்ச்சி மிக்கவர்களாக இருப்பார்கள். அதனால் சண்டை சச்சரவுகளும், அச்சண்டையில் கோபத்தைத் தணிக்க, உடல் ரீதியாக செயல்படுவதும் இவர்களிடம் மிக அதிகமாகக் காணப்படும்.

ஹெதரிங்க்டன் தன் ஆராய்ச்சியில் இம்மூன்றாவது வகை திருமணங்களில் மற்ற இரண்டுவகை திருமணங்களைவிட உடல் சார்ந்த திருப்தி இவர்களிடம் மிக மிக அதிகமாகக் காணப்படுகிறது என்று தெரிவிக்கின்றார்.

கோபம் - சண்டை - உடல் சார்ந்த திருப்தி என்ற வாழ்க்கை நடத்துகையில், கோபம் மற்றும் சண்டை காரணமாக மிகக் கோபமான வார்த்தைகளை அள்ளி வீசுவதினால் ஒருவரையொருவர் மிகக் கடுமையாகச் சாடுகின்றார்கள். இவ்வகைத் திருமணங்களில் பொதுவாக கணவன்தான் முதலில் விவாகரத்திற்கு வழி கோருகிறார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வலிது, வலிது; திருமணம் வலிது....!

Post by சிவா on Sun Dec 18, 2011 1:21 pm

இன்று இந்தியாவிலும் சுயமாக சிந்தித்து, சம்பாதிக்கும் எண்ணங்கள் பெண்களுக்கும், அதிகரித்து வருவதால் விவாகரத்துக்கள் பெருகி வருகின்றன. பணத்தைவிட உறவும், பாசமும் முக்கியம் எனும் எண்ணம் தோன்றுகையில் காலம் கடந்துவிடும் ஆபத்தும் உள்ளது.

பேச்சு கலை : இன்றைய காலகட்டத்தில் வேகமான வாழ்க்கை முறையில் திருமணங்கள் ஆல் போன்று தழைத்து நிற்க முதலில் ஒருவர் மற்றவருடன் பேசுவதில் கவனம் செலுத்த வேண்டும்.

வெளிநாட்டில் பல்லாயிரக் கணக்கான திருமணமான ஜோடிகளைப் பேட்டி கண்டு வீடியோ எடுத்ததை அந்த உரையாடல்களை கணினி மூலமாகப் பல பிரிவுகளாகப் பிரித்து ஆராய்ச்சி செய்தனர்.

அவற்றில் திருமணமான கணவன் மனைவியிடையே நடைபெறும் ஒரு சில வகை பேச்சு வார்த்தைகள், நிச்சயமாக அவர்களை விவாகரத்து வரையில் இழுத்து செல்லும் என்று தெரிய வருகின்றது.

பிரச்னைகளைத் தவிர்ப்பது : பொதுவாக திருமணமான கணவன் மனைவி பிரச்னைகளைத் தீர்ப்பதற்கு எதுவும் போசாமல் மௌனமாக, அமைதியா இருப்பது ஓர் சுலபமான வழி என்று எண்ணுகின்றார்கள். ஆனால் இத்தகைய நடைமுறை திருமண வாழ்விற்கு அதிக ஆபத்தை விளைவிக்கின்றது.

ஓர் குறிப்பிட்ட ஜோடியைத் தேர்ந்தெடுத்து தொடர்ந்து மூன்று வருடங்கள் அவர்களின் வாழ்க்கை முறையை ஆய்வு செய்தனர்.

திருமணமான புதிதில் அதிகம் விவாதங்கள் புரியாத ஜோடி மிகுந்த மகிழ்ச்சியுடன் இருந்தனர். அவர்கள் தங்கள் மகிழ்ச்சியைக் குறைத்த அளவான விவாதங்களோடு இணைத்தனர்.

ஆனால் 3 வருடங்கள் கழித்து நிறைய மாறுதல்கள் அவர்களுக்கிடையே ஏற்பட்டன. மனம் திறந்து பேசுவதின் மூலம் தங்களுக்குள் உள்ள மன வேற்றுமைகளைத் தீர்த்துவிட்டு, நிம்மதியான வாழ்வு வாழ்வதாக எண்ணிய அவர்கள், விவாகரத்தை நோக்கிச் செல்கிறார்கள்.

அமைதியாக இருப்பதும், மண வாழ்வில் சண்டை சச்சரவுகளைத் தவிர்ப்பதும் ஆனால் மனதில் அதற்கான காரணங்களை வைத்துக் கொண்டு புழுங்குவதும், மனதளவில் பிரிவினை ஏற்பட்டு விடும் ஆபத்தை உண்டாக்குகின்றது. இதனால் நல்ல உறவு முறையைப் பேணி வழி நடத்தும் தன்மையை இழக்கின்றனர்.

அலட்சியப்போக்கு : கணவன் மனைவி ஒருவரோடு ஒருவர் பேசுகையில் அலட்சியப் போக்கு இருந்தால் அத்திருமணம் பிரச்சனையில் உள்ளது என்று புரிந்து கொள்ளலாம்.

அலட்சியமான பேச்சு, மற்றவர்கள் கூறுவதை மறுப்பது, பேசுவதை உன்னிப்பாகக் கேட்காமல் குறுக்கே புகுந்து மறுப்பது, திட்டுவது, அவமானப்படுத்துவது போன்றவை இவற்றில் ஒன்றாகும்.

திருமண வாழ்க்கை முறையை ஆய்வு செய்யும் டாக்டர் ஜான் கோட்மான் எனும் அமெரிக்க மனநலம் நிபுணர் "அலட்சியப்போக்கு கணவன், மனைவி இருவரில் ஒருவருக்கு இருந்தால் கூட அது நிச்சயம் விவாகரத்திற்கு வழி வகுக்கும்' என்று கூறுகிறார்.

தவறான எண்ணங்கள் மற்றும் ஏமாற்றமடைவது : திருமண வாழ்க்கை எதிர்பார்த்தது போன்று அமையாதது, அல்லது ஏமாற்றமடைவது போன்ற எண்ணங்கள் கட்டாயமாக விவாகரத்திற்கு வழி வகுக்கும்.

நம்பிக்கை மோசம் : குட் மாஷர் ஸ்தாபனம் திருமண வாழ்வில் நம்பிக்கை துரோகம் செய்யும் காரண காரியங்களை ஆராய்ந்தது.

இந்த ஆய்வில் 2598 ஆண்களையும் பெண்களையும் பேட்டி கண்டனர். 18 வயது முதல் 59 வயது வரை உள்ள பெண்களிடம் பேசினர். அப்பெண்கள் 1992ஆம் ஆண்டின் தேசிய சுகாதாரம் மற்றும் சமூகவியல் வாழ்வு முறை கண்ணோட்டம் எனும் கருத்தரங்கில் பங்கு கொண்ட திருமணமானவர்கள்.

பொதுவாக ஒருவரையொருவர் ஏமாற்றுவது என்பது 11 சதவிகிதமே உள்ளது. தன் மனைவியை ஏமாற்றும் கணவன்மார்கள் அதிகம் உள்ளனர். ஏனென்றால் மனதளவிலும் உடலளவிலும் பல மாற்றங்களைச் சந்திக்கும் இவர்கள் அதிக உணர்ச்சி வசப்படுகின்றார்கள்.

இன்று கூட்டுக் குடும்ப வாழ்க்கையில் மாற்றம், வெளிநாட்டுக் கலாசாரத்தைப் பிரதிபலிக்கும் வாழ்க்கை முறை, இளவயதிலேயே அளவுக்கு அதிகமான பணபுழக்கம், என்று இந்தியாவிலும் இத்தகைய ஒரு வாழ்க்கை முறை அதிகரித்து வருகிறது என்பது வருந்தத்தக்கதாகும்.

இந்திய வாழ்க்கை முறையில் திருமணமான முதல் 5 வருடங்கள் மிகக் கடுமையானவை. இச்சமயத்தில் இன்றைய இளைய தலைமுறையினர் அவசர முடிவுகளுக்குச் செல்கின்றனர். அது மட்டுமல்ல; பெற்றவர்களும் இப்பிரச்சனைகளைத் தீர்ப்பதற்குப் பதிலாக எரிகிற நெருப்பில் எண்ணெய் வார்ப்பது போல பேசுகின்றனர்.

உயர்ந்த படிப்பு, பெரிய பதவி, அபரிதமான செல்வம் இவை மட்டுமே திடமான திருமண வாழ்க்கையை அறிவிப்பதில்லை. அவற்றையெல்லாம் ஒதுக்கி, ஒருவரையொருவர் நல்ல பண்பு, குணம், உண்மை போன்றவற்றிற்காகப் புரிந்து வாழ்வது உறவைப் பலப்படுத்தும்.

நம்பிக்கை, அன்பு, மரியாதை, பாசம் எனும் நான்கு தூண்களை ஆதாரமாகக் கொண்டு பல்லாயிரக்கணக்கான திருமணங்கள் செழித்து வாழ்கின்றன. அனைத்து திருமணங்களும் விவாகரத்தில் முடிவதில்லை.

அதற்கு முக்கிய காரணம் ஒருவரை ஒருவர் புரிந்து கொண்டு, செயல்படுவது, சின்ன விஷயங்களைப் பெரிது படுத்தாமல் விட்டு கொடுப்பது, உண்மையான அன்பு, பாசம் செலுத்துவது, தவறுகளை மன்னிப்பது போன்றவை வலுவான திருமணப்பந்தத்திற்கு பலமான அஸ்திவாரமாகும்.

காந்தலட்சுமி சந்திரமௌலி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வலிது, வலிது; திருமணம் வலிது....!

Post by harini29 on Tue Jan 10, 2012 10:18 am

நம்பிக்கை, அன்பு, மரியாதை, பாசம் எனும் நான்கு தூண்களை ஆதாரமாகக் கொண்டு பல்லாயிரக்கணக்கான திருமணங்கள் செழித்து வாழ்கின்றன. அனைத்து திருமணங்களும் விவாகரத்தில் முடிவதில்லை.

அருமையான கட்டுரை சூப்பருங்க
avatar
harini29
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 43
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: வலிது, வலிது; திருமணம் வலிது....!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum