ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
சென்னையின் பல்வேறு பகுதிகளில் பெய்து வரும் கனமழை
 ayyasamy ram

கடற்கரை ஒழுங்குமுறை மண்டலம்
 ayyasamy ram

சுதந்திர தினத்தில் காந்தியடிகள்
 ayyasamy ram

'யூ - டியூபில்' தேசிய கீதம் சாதனை
 ayyasamy ram

அதிமுக ஆண்டு விழாவின் போது எம்.ஜி.ஆர். படத்தின் அருகில் கருணாநிதி படத்தையும் வைக்க வேண்டும்: நடிகர் ரஜினிகாந்த் பேச்சு
 Mr.theni

1000 + கதைகள் பதிவிறக்கம் செய்துகொள்ள [PDF லிங்க்] பி டி எப் ...
 aeroboy2000

நடிகை மிஷ்டி
 ayyasamy ram

பிளாஸ்டிக்கை ஒழிக்க உதவுமா பயோ பிளாஸ்டிக்?!
 T.N.Balasubramanian

36 ஆண்டுகளுக்கு பின் கணவரை சந்தித்த பெண் : வாலிபராக சென்று வயோதிகராக திரும்பினார்
 T.N.Balasubramanian

வெட்கம் என்பது…
 ayyasamy ram

அவங்களுக்குள்ளே கெமிஸ்டிரி ஒர்க் அவுட் ஆயிடுச்சாம்…!!
 ayyasamy ram

சத்தீஸ்கர் கவர்னர் காலமானார்
 ayyasamy ram

வங்கியில் ரூ.94 கோடி கொள்ளை
 ayyasamy ram

திமுகவின் நிதி தவறாகப் பயன்படுத்தப்படுகிறது; கட்சியின் சொத்துகளை அபகரிக்க முயற்சி: அழகிரி குற்றச்சாட்டு
 M.Jagadeesan

முதலாளிக்கு என்ன ஆச்சு? – ஒரு பக்க கதை
 T.N.Balasubramanian

முகம் கோரமாக இருக்கும் சாபி பொம்மையை திருமணம் செய்கிறார் இளம் பெண்
 T.N.Balasubramanian

பாகிஸ்தானில் இன்று 72-வது சுதந்திர தினம்: நாடு முழுவதும் கொண்டாட்டம்
 ஜாஹீதாபானு

கென்யாவில் போட்டோ எடுக்க முயன்ற சுற்றுலாப்பயணியை கடித்து கொன்ற நீர்யானை
 SK

தெரிஞ்சுக்கோங்க -புழுக்கள்
 ஜாஹீதாபானு

சண்டை காட்சியில் நடித்த போது விபத்து : நடிகை அமலா பால் காயம்
 SK

ஆசியாவிலேயே மிகப்பெரிய தொலை நோக்கி வான்வெளி ஆராய்ச்சி மையம்
 Mr.theni

காந்திய சிந்தனை தேர்வு: 92.5 சதவீத மார்க் வாங்கிய தாதா
 SK

துருக்கி பிரச்னை: இந்திய ரூபாய் மதிப்பு கடும் சரிவு
 SK

ஞான வறட்சி…!!
 SK

அவங்க பாத்ரூம் பாடகி…!!
 SK

ரொம்ப நாளா எனக்கு ஒரு டவுட்டு…!!
 SK

தவிக்க வெச்சுட்டானே – ஒரு பக்க கதை
 SK

நோபல் பரிசு பெற்ற முதல் பெண் விஞ்ஞானி - மேரி கியூரி
 SK

பிளாஸ்டிக் கொடி வேண்டாம்: மத்திய அரசு
 SK

உலகை மாற்றிய சக்தி வாய்ந்த பெண் சாதனையாளர்கள்
 SK

பெண்ணுக்கு ஓரப் பார்வை…!!
 SK

வீரம் முதல் காதல் வரை... சங்க இலக்கியத்தில் யானைகள்!
 SK

சிரிப்பு திருடர்கள்!
 SK

பேஷண்டுகள்தான் எனக்கு தெய்வம்…!!
 SK

30 வயதை தாண்டியும் திருமணம் செய்து கொள்ளாத நடிகைகள்
 SK

முடிவு
 SK

முத்துலட்சுமி ராகவன் நூல்கள்
 udhayam72

கதைகள் பதிவிறக்கம் செய்ய PDF
 udhayam72

சி[ரி]த்ராலயா
 heezulia

மெரினாவில் உள்ள சமாதிகளை அகற்ற சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடருவேன் - டிராபிக் ராமசாமி
 சிவனாசான்

வேண்டுதல்
 சிவனாசான்

ஜப்பானில் லட்சுமிக்கு கோவில்
 ayyasamy ram

முன்னாள் சபாநாயகர் சோம்நாத் சாட்டர்ஜி காலமானார்
 ayyasamy ram

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வாட்ஸ் அப் பகிர்வு - பல்சுவை
 aeroboy2000

அனைவரும் பின்பற்ற வேண்டிய நாகரிகங்கள் இவை:
 ஜாஹீதாபானு

அனுபவம் – ஒரு பக்க கதை
 SK

சரிடா செல்லம்..! – ஒரு பக்க கதை
 ஜாஹீதாபானு

நபிகள் நாயகம் – பொன்மொழிகள்
 ஜாஹீதாபானு

இது மணி ரத்னம் சர்ப்ரைஸ்!
 SK

நீ எப்படி மற்றவர்களைப் பார்க்கிறாயோ -Win மொழி:
 SK

கருணாநிதிக்கு பாரத ரத்னா விருது: திருச்சி சிவா எம்.பி வலியுறுத்தல்
 M.Jagadeesan

இலைகளில் பனித்துளி
 SK

கேரளா ஸ்பெஷல் அரவணப் பாயாசம்
 SK

வேலை – ஒரு பக்க கதை
 SK

வடமேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி: வானிலை ஆய்வு மையம்
 SK

காவல்துறையிலேயே இந்த நிலையா? கனிமொழி வெளிப்படுத்திய அதிர்ச்சித் தகவல்
 SK

ஸ்மார்ட்ஃபோனின் 5 தீமைகள் இவைதான்!
 ayyasamy ram

நேற்று அசாத்தியமாய் இருந்தது, இன்று சாத்தியமாகும்
 SK

ஹாய் மதன் – கேள்வி – பதில்
 ஜாஹீதாபானு

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை..

View previous topic View next topic Go down

விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை..

Post by சிவா on Tue Dec 06, 2011 12:37 pmகணவன்-மனைவி இடையே ஏற்படும் எல்லா பிரச்சினைகளுக்கும் ஒரே தீர்வு விவாகரத்துதான் என்று இப்போது பலரும் பேசத் தொடங்கியிருக்கிறார்கள். அதற்கு மாற்றாக வேறு எதைப்பற்றியும் சிந்திக்க அவர்களுக்கு நேரமில்லை என்கிறார்கள். இந்த கால கணவனும், மனைவியும் தங்களுக்குள் ஏற்படும் சிக்கல்களை அலசி, ஆராய்ந்து தீர்வு காணும் மனநிலையில் இல்லை.

ஆண், பெண் இருவரும் சரிசமம் என்று சொல்லிக் கொண்டு அசுர வேக வளர்ச்சியை காட்டும் இன்றைய தலைமுறையினரிடம் தங்கள் வாழ்க்கையில் ஏற்படும் எந்த ஒரு சிக்கலுக்கும் சரியான தீர்வு காணும் பொறுமை இல்லை. தற்போதைய காலகட்டத்தில் விவாகரத்து என்பது எளிதாக கிடைத்து விடும் என்ற கருத்து நிலவுகிறது. ஆனால் விவா கரத்துக்குப் பிறகு வாழும் வாழ்க்கை மிகவும் கொடுமையானது. அதைப் பற்றி யாரும் யோசிப்பது இல்லை. கையில் பணம் இருந்தால் எதையும் சாதித்து விடலாம் என்ற மனோபாவத்தில் விவாகரத்து முடிவு எடுக்கப்படுகிறது. ஆனால் அது உண்மையில்லை என்பதை உணரும்போது, வாழ்க்கையே முடிந்து போய் இருக்கும்.

தவறுகளே செய்யாத மனிதர்கள் இல்லை. அதை திருத்திக் கொள்ளும் முயற்சி தான் வாழ்க்கை. திருமணத்துக்கு முன் செய்யும் தவறுகளுக்காக பெற்றோர் பிள்ளைகளை தூக்கி எறிவது இல்லை. ஆனால் திருமணத்துக்கு பிறகு செய்யும் ஒவ்வொரு தவறுக்கும் கணவன், மனைவி இருவரில் யாராவது ஒருவரை தூக்கி எறியும் முடிவுக்கு இன்னொரு வர் வந்துவிடுகிறார்.

திருமணத்துக்கு முன்பு- திருமணத்துக்கு பின்பு என்று ஒருவருடைய வாழ்க்கையை இரண்டாக பிரித்துப் பார்த்த காலம் போய், இப்போது விவாகரத்துக்கு முன்பு- பின்பு என்று பிரித்துப் பார்க்கிறார்கள். அதில் பிந்தைய காலம் அனேகமாக பெண்களுக்கு இருண்ட காலம் ஆகிவிடுகிறது.

ஆண்களும் விவாகரத்துக்கு பிறகு அதிகமான மனநெருக்கடிக்கு உள்ளாகி விடு கிறார்கள். இதனால் அவர்களுடைய தொழில் பாதிப்படைகிறது. `தன்னைப் பற்றி தனக்கு பின்னால் என்ன பேசிக்கொள்வார்களோ!' என்ற எண்ணம் அவர்களுடைய நட்பு வட்டாரத்தை குறைக்கிறது அல்லது சிதைக்கிறது. அப்போது, தான் செய்யும் சின்னச் சின்ன தவறுகள் கூட, பெரிய வடிவத்தில் தன் கண்முன்னே வந்து நிற்கும். அந்த நேரத்தில் தன்மீதே தனக்கு கோபமும், டென்ஷனும் ஏற்பட்டு மன அழுத்தம் எல்லைமீறும். இதனால் காரை வேகமாக ஓட்டி தாறுமாறாக செல்வது, மது அருந்துவது, உறவுகளை புறக்கணிப்பது என்று முரண்பாடான பாதையில் பயணிக்க தொடங்கிவிடுவார்கள்.

அப்போது அவரது மாண்பும், மரியாதையும் சிறிது சிறிதாக அவருடைய வாழ்க்கையில் இருந்து விடைபெற்று சென்றுகொண்டே இருக்கும். இந்த இழப்பை பணத்தாலும், பதவியாலும் ஈடு செய்ய முடியாது என்பதை உணரும்போது, வாழ்க்கையில் தவறு செய்து விட்டதை புரிந்துகொள்வார்கள். ஒரு மனிதன் தன் தவறுகளை உணர்ந்து திருந்தினால் தவிர வாழ்க்கை அவன் வசப்படாது.

விவாகரத்தில் அதிகம் பாதிக்கப்படுவது பெண்கள்தான்! என்னதான் மனதளவில் அவள் தைரியமான பெண்ணாக இருந்தாலும், அவளுடைய சமூக அந்தஸ்து குறைந்து விடும். அதற்கு தக்கபடி அவள் தன் மனதை பக்குவப்படுத்திக்கொள்ளாவிட்டால், மனதளவில் உடைந்து போவாள். அப்போது தனக்கு முன்னால் இருக்கும் உலகம் வேறு, தனக்கு பின்னால் இயங்கும் உலகம் வேறு என்பதை உணர்வாள்.

உணர்கிறபோது அவர்களுக்குள் இன்னொரு கேள்வி எழும். அது, `நாம் மற்றவர்களுக்கு பாரமாக இருக்கிறோமோ?' என்ற கேள்வி! அப்போது விவாகரத்து என்பது தான் எடுத்த தவறான முடிவு என்ற குற்ற உணர்வு தோன்றும். தனது எதிர்காலம் என்ன ஆகுமோ என்ற கேள்விக்குறியும் தோன்றும். தன் வயதை ஒத்தவர்கள் வாழும் சந்தோஷ வாழ்க்கை யும் கண்களை உறுத்தி, கண்ணீர் வரச்செய்யும்.

அப்போது அவர்கள் தங்கள் பலத்தை எல்லாம் இழந்து விடுகிறார்கள். சுற்றி இருப்பவர் களிடம் மூர்க்கத்தனமாக நடந்து கொள்கிறார்கள். அவர்களது வாழ்க்கையில் தேவையற்ற டென்ஷனும், கோபமுமே மிஞ்சும். மனதில் பரவியிருக்கும் வெறுமை வார்த்தைகளில் வெறுப்பாக வெளிவரும். அது மற்றவர்களை புண்படுத்தி அவர்களையும் விலகச் செய்யும்.

கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்டால், அந்த நேரத்தில் பேச்சை குறைத்துக் கொள்ளவேண்டும். தேவையற்ற பேச்சு பிரச்சினையை அதிகமாக்கும். அமைதியாக தெளிவான சிந்தனையோடு, சிக்கல்களை முடிவுக்கு கொண்டுவர வேண்டும். விவகாரத் துக்கு முன் நிறைய யோசிக்க வேண்டும். முக்கியமாக அதற்கு பின்னால் வாழப்போகும் வாழ்க்கையை பற்றி யோசிக்க வேண்டும்.

`ஏற்கனவே விவாகரத்து ஆகிவிட்டது. இனி நான் என்ன செய்வது?' என்று கேட்கும் பெண்களுக்கான ஆலோசனை:

விவாகரத்தான பெண்கள் முதலில் குடும்ப உறவுகளை மேம்படுத்தவேண்டும். குடும்ப உறவுகள் மேம்பாடு அடையும்போது ஓரளவு மகிழ்ச்சி நிரந்தரமாகும். அதன் பின்பு அவர்கள் சமூக உறவை மேம்படுத்த வேண்டும்.

சமூக உறவை நீங்கள்தான் வளர்க்கவேண்டும். அதற்கு ஆரோக்கியமான சிந்தனையும், மகிழ்ச்சியும், புன்னகையும், தைரியமும் அவசியம். உங்களுடைய பழைய சோக கதைகளை கேட்க யாருமே விரும்ப மாட்டார்கள். உங்களை சுற்றியிருக்கும் சமூகத்துக்கு உங்களால் முடிந்த நன்மைகளை செய்து அவர்களை அனுசரித்து நடந்தால் அது ஒரு நல்ல சூழலை உங்களுக்கு ஏற்படுத்தி தரும். அதன் மூலம் உங்கள் மனதில் இருக்கும் வெறுமை அகலும்.

தினதந்தி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை..

Post by உமா on Tue Dec 06, 2011 12:42 pm

அண்ணா. சிறந்த ஒரு பதிவு அண்ணா. இதை படிக்கும்போதே எனக்கும் ஒரு சில குழப்பங்கள் தீர்ந்தது.
என் விருப்ப பொத்தானை பாவித்தேன்.
மிக்க நன்றி அண்ணா.
நன்றி தினத்தந்தி.
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16836
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை..

Post by மாணிக்கம் நடேசன் on Tue Dec 06, 2011 12:51 pm

விவாகரத்து என்னும் வார்த்தையை முதலில்விவாகரத்து செய்ய வேண்டும்
ஒரு கணவன் மனைவிக்கிடையில் கருத்து வேறுபாடு ஏற்படுவது தவிர்க்க முடியாதது. ஊடலும் கூடலும் உடன்பிறப்புகள், தொடர்ந்து வரும் இணைந்தும் வரும். ஊடலை ஓரத்தில் தள்ளி விட்டு அன்பான கூடலுக்கு வழி காண வேண்டும். புரிந்துணர்வோடு விட்டுக் கொடுக்க பழக வேண்டும், அதையே இல்லற வாழ்வில் இன்றியமையாத இன்பமாக ஏற்றுக் கொள்ள வேண்டும்.
ஒரு நல்ல கணவன் மனைவியை புறிந்துக் கொள்ள வேண்டும், ஒரு நல்ல மனைவி கணவனை அனுசரிக்க தெரிந்திருக்க வேண்டும், அன்பாக அரவணைக்க பழகிக் கொள்ள வேண்டும். இயல்பாகவே ஆண்கள் ஆதிக்கம் செய்பவர்கள், பெண்மையோ பாசத்தை பங்கிடுபவர்கள். எனவே, பாசம் என்னும் கயிற்றால் ஆண்மையை கட்டி கண்ணுக்குள் வைத்துக் கள்ள வேண்டும்.
ஆண்களும் தனது அன்பு மனைவியை, இன்ப அரசியை, பார்வையால், பாசத்தால் பதுமையாக்கி, அவளை புனிதமாக்க வேண்டும்.

இன்னும் எழுத நேரமில்லை,
இது எனது அனுபவங்களில் சிலவற்றை உங்களுடன் பகிர்ந்துக் கொண்டேன். இன்னும் உண்டு பிறகு விரிவாக இங்க வரைகிறேன்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4234
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: விவாகரத்துக்குப் பின்பு பெண்களின் வாழ்க்கை..

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum