புதிய பதிவுகள்
» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Today at 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Today at 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Today at 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Today at 8:34 am

» கருத்துப்படம் 02/06/2024
by ayyasamy ram Today at 8:29 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Today at 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Today at 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Today at 7:06 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:50 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:36 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:26 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:07 pm

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 3:20 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 12:49 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:39 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:26 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 11:50 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 11:44 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Yesterday at 11:40 am

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 11:36 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 11:25 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Yesterday at 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Yesterday at 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Yesterday at 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Yesterday at 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:11 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:19 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

» தேர்தல் – கருத்துக்கணிப்பு-தமிழ் நாடு
by ayyasamy ram Sun Jun 02, 2024 2:46 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Sun Jun 02, 2024 1:39 pm

» உன்னுடன் என்றால் அம்பது லட்சம் வண்டியில் போகலாம்!
by ayyasamy ram Sun Jun 02, 2024 12:02 pm

» ஆணுக்கும் பெண்ணுக்கும் சிறு வித்தியாசம்தான்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:29 pm

» சர்வதேச பெற்றோர்கள் தினம் இன்று.
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:22 pm

» ஸ்பெல்லிங் பீ’ போட்டோ -மீண்டும் இந்திய வம்சாவளி மாணவர் வெற்றி
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:01 pm

» மகிழ்ச்சியான வாழ்விற்கு 10 தாரக மந்திரம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 8:00 pm

» “அம்மாவின் மறைவிற்குப் பிறகு எனக்குள் நிறைய மாற்றங்கள் ஏற்பட்டிருக்கிறது” – ஜான்வி கபூர்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:55 pm

» நரசிம்மர் வழிபட்ட அருள்மிகு கஸ்தூரி அம்மன் திருக்கோயில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:53 pm

» சிவபெருமானின் மூன்று வித வடிவங்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:52 pm

» ஹிட் லிஸ்ட் – திரைவிமர்சனம்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:51 pm

» இனி வரும் புயலுக்கான பெயர்கள்…
by T.N.Balasubramanian Sat Jun 01, 2024 7:50 pm

» பிரதோஷம் நடக்காத ஒரே சிவாலயம்
by ayyasamy ram Sat Jun 01, 2024 7:50 pm

» வண்ண வண்ண பூக்கள்
by ayyasamy ram Sat Jun 01, 2024 3:16 pm

» செய்திகள்- சில வரிகளில்
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:20 pm

» சிரிக்கலாம் வாங்க
by ayyasamy ram Sat Jun 01, 2024 1:16 pm

» சர்தாரும் நீதிபதியும்!
by ayyasamy ram Sat Jun 01, 2024 12:57 pm

» சிகாகோ மாநாட்டின் இறுதி நாளில் விவேகானந்தர் ஆற்றிய உரையின் வரிகள் மோடிக்கு தெரியுமா?: சீதாராம் யெச்சூரி கேள்வி
by ayyasamy ram Sat Jun 01, 2024 6:43 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று கிரிக்கெட் தீபாவளி இந்தியா & பாகிஸ்தான் மோதல் Poll_c10இன்று கிரிக்கெட் தீபாவளி இந்தியா & பாகிஸ்தான் மோதல் Poll_m10இன்று கிரிக்கெட் தீபாவளி இந்தியா & பாகிஸ்தான் மோதல் Poll_c10 
21 Posts - 66%
heezulia
இன்று கிரிக்கெட் தீபாவளி இந்தியா & பாகிஸ்தான் மோதல் Poll_c10இன்று கிரிக்கெட் தீபாவளி இந்தியா & பாகிஸ்தான் மோதல் Poll_m10இன்று கிரிக்கெட் தீபாவளி இந்தியா & பாகிஸ்தான் மோதல் Poll_c10 
11 Posts - 34%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
இன்று கிரிக்கெட் தீபாவளி இந்தியா & பாகிஸ்தான் மோதல் Poll_c10இன்று கிரிக்கெட் தீபாவளி இந்தியா & பாகிஸ்தான் மோதல் Poll_m10இன்று கிரிக்கெட் தீபாவளி இந்தியா & பாகிஸ்தான் மோதல் Poll_c10 
63 Posts - 64%
heezulia
இன்று கிரிக்கெட் தீபாவளி இந்தியா & பாகிஸ்தான் மோதல் Poll_c10இன்று கிரிக்கெட் தீபாவளி இந்தியா & பாகிஸ்தான் மோதல் Poll_m10இன்று கிரிக்கெட் தீபாவளி இந்தியா & பாகிஸ்தான் மோதல் Poll_c10 
32 Posts - 32%
mohamed nizamudeen
இன்று கிரிக்கெட் தீபாவளி இந்தியா & பாகிஸ்தான் மோதல் Poll_c10இன்று கிரிக்கெட் தீபாவளி இந்தியா & பாகிஸ்தான் மோதல் Poll_m10இன்று கிரிக்கெட் தீபாவளி இந்தியா & பாகிஸ்தான் மோதல் Poll_c10 
2 Posts - 2%
T.N.Balasubramanian
இன்று கிரிக்கெட் தீபாவளி இந்தியா & பாகிஸ்தான் மோதல் Poll_c10இன்று கிரிக்கெட் தீபாவளி இந்தியா & பாகிஸ்தான் மோதல் Poll_m10இன்று கிரிக்கெட் தீபாவளி இந்தியா & பாகிஸ்தான் மோதல் Poll_c10 
2 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

இன்று கிரிக்கெட் தீபாவளி இந்தியா & பாகிஸ்தான் மோதல்


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 26, 2009 9:27 am

இன்று கிரிக்கெட் தீபாவளி இந்தியா & பாகிஸ்தான் மோதல் மாலை 6 மணிக்கு தொடக்கம்


செஞ்சுரியன்: சாம்பியன்ஸ் டிராபியில் இந்தியா பாகிஸ்தான் அணிகள் மோதும் லீக் போட்டி செஞ்சுரியன் சூப்பர் ஸ்போர்ட் பார்க் மைதானத்தில் இன்று மாலை 6 மணிக்கு தொடங்குகிறது. நீண்ட இடைவெளிக்குப் பின் 2 அணிகளும் நேருக்கு நேர் மோதுவதால் ரசிகர்கள் மத்தியில் இந்தப் போட்டி பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது.

காயம் காரணமாக அதிரடி வீரர் சேவாக், அனுபவ பந்து வீச்சாளர் ஜாகீர்கான் இல்லாத நிலையில், ஆல்ரவுண்டர் யுவராஜ் சிங்கும் விலகியுள்ளது அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

இந்த சூழ்நிலையில் இந்திய அணி பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. சச்சின், டிராவிட், கம்பீர், ரெய்னா, டோனி, யூசுப் பதான் என்று பேட்டிங் வரிசை வலிமையாக இருந்தாலும் பந்து வீச்சு பலவீனமாகவே உள்ளது. இலங்கை முத்தரப்பு தொடரில் ஆசிஷ் நெஹ்ரா, ஹர்பஜன் மட்டுமே சிறப்பாக பந்து வீசி அசத்தினர். இஷாந்த், ஆர்.பி.சிங் இருவரது பந்து வீச்சும் எடுபடவில்லை. இதுமட்டுமல்லாமல் சமீபத்திய போட்டிகளில் இந்திய பீல்டிங் மிகவும் மோசமாக இருக்கிறது. பந்து வீச்சு, பேட்டிங் இரண்டிலும் மிகச் சிறப்பாக செயல்பட்டால் மட்டுமே இந்தியாவால் வெற்றி பெற முடியும்.

யூனிஸ்கான் ரெடி: காயம் காரணமாக வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான முதல் ஆட்டத்தில் விளையாடாத கேப்டன் யூனிஸ்கான் இன்றைய ஆட்டத்தில் களம் இறங்குவதை உறுதி செய்துள்ளார். கம்ரன் அக்மல், அப்ரிடி, மிஸ்பா, சோயிப் மாலிக், யூனிஸ்கான் போன்ற அனுபவ வீரர்கள் விளையாடுவதால் பாக். அணி கூடுதல் பலத்தோடு உள்ளது.

வெஸ்ட்இண்டீசுக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் சற்று தடுமாறி வெற்றி பெற்ற பாகிஸ்தான், உலகக் கோப்பையில் இந்தியாவை வீழ்த்தியதில்லை என்பது மட்டுமே டோனி அன்ட் கோவுக்கு சாதகமான அம்சமாகும். எது எப்படியோ, இந்தியா பாக். போட்டி என்றாலே ஆட்டத்தில் "அனல் பறக்கும்" என்று உறுதியாக நம்பலாம்.



இன்று கிரிக்கெட் தீபாவளி இந்தியா & பாகிஸ்தான் மோதல் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Sep 26, 2009 9:44 am

இன்று கிரிக்கெட் தீபாவளி இந்தியா & பாகிஸ்தான் மோதல் 168113

கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Sep 26, 2009 10:19 am

இன்று கிரிக்கெட் தீபாவளி இந்தியா & பாகிஸ்தான் மோதல் Dhoni-Yunisசாம்பியன்ஸ் டிராபி தொடரில், இன்றைய லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தானை எதிர்கொள்கிறது. பரபரப்பாக எதிர்பார்க்கப்படும் இந்த போட்டியில் இந்தியா வென்று, தொடரை வெற்றியுடன் துவக்குமா என்று ரசிகர்கள் எதிர்பார்ப்பில் உள்ளனர்.
களத்திற்கு வெளியே வீராவேசமாக பேசிவரும் பாகிஸ்தான் வீரர்களுக்கு, மைதானத்தில் கேப்டன் தோனி தலைமையிலான இந்திய வீரர்கள் பதிலடி கொடுப்பார்கள் என எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
தென் ஆப்ரிக்காவில் சாம்பியன்ஸ் டிராபி (மினி <உலக கோப்பை) தொடர் நடக்கிறது. இதில் இந்தியா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து உள்ளிட்ட "டாப்-8' அணிகள் பங்கேற்றுள்ளன. தலா 4 அணிகள் வீதம் இரண்டு பிரிவுகளாக பிரிக்கப்பட்டு போட்டிகள் லீக் முறையில் நடக்கின்றன.
ஒவ்வொரு பிரிவிலும் முதல் இரு இடங்களை பிடிக்கும் அணிகள் அரையிறுதிக்கு முன்னேறும். பிரிவு "ஏ'ல் நடக்கும் இன்றைய போட்டியில் இந்திய அணி தனது முதல் போட்டியில் பாகிஸ்தானை எதிர் கொள்கிறது.
கவலைதரும் காயங்கள்:
இந்திய அணியில் ஏற்கனவே சேவக், ஜாகிர் கான் இருவரும் காயம் காரணமாக தொடரில் பங்கேற்காத நிலையில், பயிற்சியில் "ஆல் ரவுண்டர்' யுவராஜ் சிங்கும் காயமடைந்து வெளியேறி இருப்பது, "மிடில் ஆர்டரில்' அணிக்கு பெரும் பின்னடைவாக உள்ளது. இந்த வெற்றிடத்தை சரிக்கட்டுவது என்பது தோனிக்கு பெரும் சிரமம் தான். இந்நிலையில் பாகிஸ்தான் வீரர்களின் பேச்சுக்கள் கேப்டன் தோனிக்கு மனக்கவலையை ஏற்படுத்தி இருப்பது நிச்சயம்.
பேட்டிங் நம்பிக்கை:
இந்திய அணியின் பலம் என்றால் பேட்டிங் தான். முத்தரப்பு தொடர் பைனலில் சதம் கடந்து சாதித்த சச்சின், இன்றும் அசத்துவார் என நம்பப்படுகிறது. இவரது ஜோடி காம்பிர், பயிற்சிப்போட்டியில் பங்கேற்காமல் நீண்ட இடைவெளிக்கு பின் நேரடியாக இன்று களம் காணுகிறார். வழக்கம் போல, டிராவிட், தோனி கைகொடுக்கலாம். தினேஷ் கார்த்திக், சுரேஷ் ரெய்னா, விராத் கோஹ்லி மூவரும் தங்களுக்கு கிடைத்த வாய்ப்புகளை பயன்படுத்த வேண்டும். சமீப காலமாக சொதப்பி வரும் யூசுப் பதான், இன்று சாதித்ததாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்.
கைகொடுக்குமா ஆடுகளம்:
சென்சுரியன் ஆடுகளம் (ஸ்லோ டிராக்) புதிய பந்தில் பவுலிங் செய்யும் இந்திய பவுலர்களுக்கு சாதகமாக இருக்காது என தெரிகிறது. இதனால் தான் பயிற்சி போட்டியில் ஆர்.பி.சிங் சோபிக்கவில்லை. இஷாந்த் சர்மா, ஆஷிஸ் நெஹ்ரா, துவக்கத்தில் விக்கெட் வீழ்த்த முயற்சிக்க வேண்டும். முத்தரப்பு தொடர் "சுழல்' நாயகன் ஹர்பஜன் சிங், இன்றும் அசத்தலாம். "பார்ட் டைம்' பவுலர் யுவராஜ் இல்லாத குறையை யூசுப் பதான் நீக்க வேண்டும்.
முன்னணி சொதப்பல்:
வெஸ்ட் இண்டீசுக்கு எதிரான முதல் போட்டியில் பாகிஸ்தான் அணியின் முன்னணி பேட்ஸ்மேன்கள் சொதப்பினர். காயம் குணமடைந்து இன்றைய போட்டியில் கேப்டன் யூனிஸ் கான் களமிறங்குவது அணிக்கு பலம். தவிர, மிஸ்பா உல் ஹக், முகமது யூசுப், கம்ரான் அக்மல் இன்று சாதிக்க காத்திருக்கிறார்கள். இளம் வீரர் முகமது அக்மல், பேட்டிங் திறமையை வெளிப்படுத்துவது கேப்டனுக்கு ஆறுதல் தான். ஆல் ரவுண்டர் அப்ரிதியும் தனது அதிரடியை தொடர <உள்ளார்.
பவுலிங் பலம்:
பாகிஸ்தான் அணிக்கு பலம், பவுலிங் பிரிவு தான். இளம் வீரர் முகமது ஆமெர் எழுச்சி, இந்திய வீரர்களுக்கு அதிர்ச்சி தான். தவிர, நவீது உல் ஹசன், உமர் குல் ஆகியோரின் "ரிவர்ஸ் சுவிங்' பவுலிங்கும் சோதனையை அதிகரிக்கும். இலங்கையின் முரளிதரன், மெண்டிஸ் போல சுழலில் சயீத் அஜ்மல் மிரட்டுகிறார். இவருடன் அப்ரிதி இணைந்து கைகொடுக்கும் பட்சத்தில் இந்திய "மிடில் ஆர்டர்' பேட்ஸ்மேன்களுக்கு சிக்கல் அதிகரிப்பது <உறுதி.
டாஸ் முக்கியம்:
பகலிரவு போட்டி என்பதால் இன்றைய போட்டியில் "டாஸ்' முக்கிய பங்கு வகிக்கும். முக்கிய போட்டிகளில் "டாஸ்' வெல்லும் நமது கேப்டன் தோனிக்கு, இன்றும் அதிர்ஷ்டம் கைகொடுக்கும் என எதிர்பார்க்கலாம். கடந்த 2003 உலக கோப்பை (50 ஓவர்) போட்டியில் இம்மைதானத்தில் இந்திய அணி, பாகிஸ்தானை வென்றுள்ளது. இதற்கு பழிதீர்க்க பாகிஸ்தானும், வெற்றியை தொடர இந்தியாவும் காத்திருப்பதால் இன்றைய போட்டி அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.
கூடுதல் பேட்ஸ்மேன்கள்: தோனி
பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் கூடுதல் பேட்ஸ்மேன்களுடன் களமிறங்க இருப்பதாக இந்திய அணியின் கேப்டன் தோனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில்,"" இன்றைய ஆட்டத்தில் அமித் மிஸ்ராவுடன் களமிறங்க விருப்பம் தான். ஆனால் ஆறு பேட்ஸ்மேன்களுடன் களமிறங்கும் போது, ஒருவேளை முன்னதாக விக்கெட்டுகள் விழுந்துவிட்டால், போட்டியில் இருந்து மீள்வது கடினமாகி விடும். எங்களுக்கு தேவை ஆல்-ரவுண்டர். கடந்த சில வாரங்களாக சேவக், ரோகித் சர்மா, யுவராஜ் என ஐந்து பகுதி நேர பவுலர்ளை இழந்துள்ளோம். பேட்டிங் "பவர்-பிளேயில்' அசத்தலாக ஆடும் யுவராஜ் சிங் இடத்தை, நிரப்புவது கடினம்,'' என்றார்.
சச்சினை வீழ்த்துவேன்: ஆமெர் ஆணவம்
இன்றைய போட்டியில் சச்சின் விக்கெட்டை கைப்பற்றுவற்கு தேவையான திட்டங்கள் வைத்துள்ளேன் என்கிறார் 18 வயது பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர். இதுகுறித்து அவர் கூறுகையில்,"" சச்சின் மிகச்சிறந்த வீரர். எங்கள் சீனியர் வீரர் வாசிம் அக்ரம், சச்சினுக்கு எப்படி பவுலிங் செய்துள்ளார் என வீடியோ காட்சிகளை பார்த்து தெரிந்து கொண்டுள்ளேன். இன்று அவருக்கு எப்படி பந்து வீசுவது என திட்டம் வகுத்துள்ளேன். எப்படியும் சச்சினை மிக விரைவில், வீழ்த்த ஆர்வமாக உள்ளேன். இது எனக்கு மட்டுமல்ல, ஒட்டுமொத்த பாகிஸ்தான் அணிக்கும் பரிசு கிடைத்தது போல் இருக்கும்,'' என்றார்.
எதுவேண்டுமானாலும் நடக்கலாம்: மியாண்தத்
இந்திய, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இன்றைய போட்டி குறித்து பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் மியாண்தத் கூறுகையில்,"" இரு அணிகளுக்கும் பலம், பலவீனம் உள்ள நிலையில் எதுவேண்டுமானாலும் நடக்கலாம். இந்திய அணியில் சச்சின், டிராவிட் விளையாடுவது மிகப்பெரிய பலம். ஆனால் பாகிஸ்தான் அணியின் பந்து வீச்சு, இந்திய பேட்ஸ்மேன்களுக்கு கடும் சவாலாக இருக்கும். களத்திற்கு வெளியே வீரர்கள் பேச்சுக்கள், இந்த போட்டியின் பரபரப்பை அதிகரித்துள்ளது. இருப்பினும் களத்தில் உணர்ச்சிவசப்படாமல், அமைதியாக நடந்து கொள்ளும் அணிக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது,'' என்றார்.
இரு அணிகள் இதுவரை:
* இந்திய, பாகிஸ்தான் அணிகள் இதுவரை 117 ஒருநாள் போட்டிகளில் பங்கேற்றுள்ளன. இதில் இந்தியா 45 போட்டிகளிலும், பாகிஸ்தான் அணி 68 போட்டிகளிலும் வென்றுள்ளது. 4 போட்டிகளில் முடிவு எட்டப்படவில்லை.
* இந்திய அணி அதிகபட்சமாக கடந்த 2005ல் 9 விக்கெட்டுக்கு 356 ரன்கள் எடுத்துள்ளது. பாகிஸ்தான் அணி, அதிக ரன்களாக கடந்த 2004ல் 8 விக்கெட்டுக்கு 344 ரன்கள் எடுத்துள்ளது.
* கடந்த 1978ல் இந்திய அணி, பாகிஸ்தானுக்கு எதிராக 78 ரன்களுக்கு ஆல் அவுட்டாகியுள்ளது. 1985ல் பாகிஸ்தான் அணி, இந்தியாவுக்கு எதிராக 85 ரன்களுக்கு ஆல் அவுட்டாகி குறைந்த பட்ச ஸ்கோரை பதிவு செய்துள்ளது.
* பாகிஸ்தான் வீரர் அகிப் ஜாவித், கடந்த 1991ல் 37 ரன்கள் கொடுத்து 7 விக்கெட் வீழ்த்தியுள்ளார். இந்தியா சார்பில் 1997ல் கங்குலி 16 ரன்களுக்கு 5 விக்கெட் கைப்பற்றியுள்ளார்.
* இரு அணிகள் சந்தித்துள்ள 34 பகலிரவு போட்டிகளில் இந்தியா 15, பாகிஸ்தான் 19 போட்டிகளில் வென்றுள்ளன.
*கடைசியாக இரு அணிகள் விளையாடியுள்ள 10 ஒருநாள் போட்டிகளில் இந்திய அணி 6 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. பாகிஸ்தான் அணி 4 போட்டிகளில் வென்றுள்ளது.
இந்தியா சாதனை:
சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.,) சார்பில் நடத்தப்படும் உலக கோப்பை தொடர்களில் (50 ஓவர், "டுவென்டி-20') பயிற்சி ஆட்டமாக இருந்தாலும் சரி, லீக் போட்டி, காலிறுதி, அரையிறுதி மற்றும் பைனல் என எந்த போட்டியாக இருந்தாலும் சரி, இந்திய அணி தான் இதுவரை வெற்றி பெற்று வந்துள்ளது.
ஆனால் இதுவரை நடந்துள்ள ஐந்து சாம்பியன்ஸ் டிராபி தொடரில் இந்தியா, பாகிஸ்தான் அணிகள் ஒரே ஒரு போட்டியில் மட்டுமே சந்தித்துள்ளன. இதில் இந்தியா 3 விக்கெட் வித்தியாசத்தில் தோல்வியடைந்துள்ளது. (ஸ்கோர்: இந்தியா 49.5 ஓவரில் 200 ஆல்அவுட், பாகிஸ்தான் 49.2 ஓவரில் 7 விக்கெட்டுக்கு 201 ரன்கள்)

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 19854
இணைந்தது : 30/07/2009
http://varththagam.co.in/index.php

Postபாலாஜி Sat Sep 26, 2009 10:48 am

நல்ல தகவல், நீங்கள் தீவிர கிரிக்கெட் ரசிகர் என்பது உங்கள் பதிவுகள் மூலம் தெரிகிறது.வாழ்த்துக்கள்.

இன்று கிரிக்கெட் தீபாவளி இந்தியா & பாகிஸ்தான் மோதல் 677196 இன்று கிரிக்கெட் தீபாவளி இந்தியா & பாகிஸ்தான் மோதல் 677196 இன்று கிரிக்கெட் தீபாவளி இந்தியா & பாகிஸ்தான் மோதல் 677196

மீனு
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 12052
இணைந்தது : 08/04/2009

Postமீனு Sat Sep 26, 2009 12:30 pm

மீனுவுக்கு கிரிகெட் என்றுமே புரிந்தது இல்லை ..இங்கே கிரிகெட் ஸ்போர்ட்ஸ் எதுவும் டிவி ல காமிக்கவும் மாட்டாங்க ..

புரியா விட்டாலும் படித்தேன்..தகவலுக்கு நன்றிகள் ஷிவா அண்ணா ,கோவை ஷிவா



srinivasan
srinivasan
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 520
இணைந்தது : 27/04/2009
https://eegarai.darkbb.com/

Postsrinivasan Sat Sep 26, 2009 12:48 pm

இன்று கிரிக்கெட் தீபாவளி இந்தியா & பாகிஸ்தான் மோதல் 677196



என்றும் நட்புடன்

உங்கள்
ஸ்ரீனிவாசன்
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Sep 26, 2009 1:22 pm

இன்று கிரிக்கெட் தீபாவளி இந்தியா & பாகிஸ்தான் மோதல் 678642 இன்று கிரிக்கெட் தீபாவளி இந்தியா & பாகிஸ்தான் மோதல் 678642

Manik
Manik
நிர்வாகக் குழு

பதிவுகள் : 18689
இணைந்தது : 09/06/2009

PostManik Sun Sep 27, 2009 1:12 pm

அநியாயமா இந்தியா தோத்துப்போச்சு........ சச்சின் ஏமாத்திட்டாரு..... காம்பீரின் வேகம் நல்லது. தோனி ஒரு சொதப்பல் வீரர். டிராவிட் நேரத்திற்கு ஏற்றார் போல் ஆட்டத்தை மாற்றியிருக்கலாம் ஆனால் செய்யவில்லை இது டெஸ்ட் மேட்ச் இல்லப்பா. ரைய்னா முன்பை விட பரவாயில்லை......... மொத்தத்தில் இந்தியா சந்தேகம் அரை இறுதிக்குச் செல்வது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக