புதிய பதிவுகள்
» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:45 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:07 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
Dam 999 - டேம் 999 Poll_c10Dam 999 - டேம் 999 Poll_m10Dam 999 - டேம் 999 Poll_c10 
50 Posts - 49%
ayyasamy ram
Dam 999 - டேம் 999 Poll_c10Dam 999 - டேம் 999 Poll_m10Dam 999 - டேம் 999 Poll_c10 
34 Posts - 33%
mohamed nizamudeen
Dam 999 - டேம் 999 Poll_c10Dam 999 - டேம் 999 Poll_m10Dam 999 - டேம் 999 Poll_c10 
4 Posts - 4%
ஆனந்திபழனியப்பன்
Dam 999 - டேம் 999 Poll_c10Dam 999 - டேம் 999 Poll_m10Dam 999 - டேம் 999 Poll_c10 
3 Posts - 3%
prajai
Dam 999 - டேம் 999 Poll_c10Dam 999 - டேம் 999 Poll_m10Dam 999 - டேம் 999 Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
Dam 999 - டேம் 999 Poll_c10Dam 999 - டேம் 999 Poll_m10Dam 999 - டேம் 999 Poll_c10 
3 Posts - 3%
manikavi
Dam 999 - டேம் 999 Poll_c10Dam 999 - டேம் 999 Poll_m10Dam 999 - டேம் 999 Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
Dam 999 - டேம் 999 Poll_c10Dam 999 - டேம் 999 Poll_m10Dam 999 - டேம் 999 Poll_c10 
2 Posts - 2%
Abiraj_26
Dam 999 - டேம் 999 Poll_c10Dam 999 - டேம் 999 Poll_m10Dam 999 - டேம் 999 Poll_c10 
1 Post - 1%
Baarushree
Dam 999 - டேம் 999 Poll_c10Dam 999 - டேம் 999 Poll_m10Dam 999 - டேம் 999 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
Dam 999 - டேம் 999 Poll_c10Dam 999 - டேம் 999 Poll_m10Dam 999 - டேம் 999 Poll_c10 
216 Posts - 42%
heezulia
Dam 999 - டேம் 999 Poll_c10Dam 999 - டேம் 999 Poll_m10Dam 999 - டேம் 999 Poll_c10 
191 Posts - 37%
Dr.S.Soundarapandian
Dam 999 - டேம் 999 Poll_c10Dam 999 - டேம் 999 Poll_m10Dam 999 - டேம் 999 Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
Dam 999 - டேம் 999 Poll_c10Dam 999 - டேம் 999 Poll_m10Dam 999 - டேம் 999 Poll_c10 
18 Posts - 4%
sugumaran
Dam 999 - டேம் 999 Poll_c10Dam 999 - டேம் 999 Poll_m10Dam 999 - டேம் 999 Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
Dam 999 - டேம் 999 Poll_c10Dam 999 - டேம் 999 Poll_m10Dam 999 - டேம் 999 Poll_c10 
6 Posts - 1%
manikavi
Dam 999 - டேம் 999 Poll_c10Dam 999 - டேம் 999 Poll_m10Dam 999 - டேம் 999 Poll_c10 
4 Posts - 1%
prajai
Dam 999 - டேம் 999 Poll_c10Dam 999 - டேம் 999 Poll_m10Dam 999 - டேம் 999 Poll_c10 
4 Posts - 1%
Kavithas
Dam 999 - டேம் 999 Poll_c10Dam 999 - டேம் 999 Poll_m10Dam 999 - டேம் 999 Poll_c10 
3 Posts - 1%
Abiraj_26
Dam 999 - டேம் 999 Poll_c10Dam 999 - டேம் 999 Poll_m10Dam 999 - டேம் 999 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

Dam 999 - டேம் 999


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 25, 2011 12:28 am

Dam 999 - டேம் 999 Tamil_News_large_353854

இயக்குனர்: சோகன் ராய்
தயாரிப்பாளர்: பிஸ்டிவி நெட்வர்க்
கதை: ரொப் டோபின், சோகன் ராய்
நடிப்பு: அஷிஷ் வித்யார்த்தி, ஜோசுவா பிரெட்ரிக் சிமித், ரஜித் கபூர், வினய் ராய், விமலா ராமன், லின்டா ஆர்செனியோ, மேகா பர்மன், ஜால பிக்கரிங், ஜினீத் ராத்
இசையமைப்பு: ஊசெப்பாச்சன்
ஒளிப்பதிவு: அஜயன் வின்சென்ட்
படத்தொகுப்பு: சுரேஷ் பாய்
விநியோகம்: வார்னர் பிரதர்ஸ்
வெளியீடு: நவம்பர் 25, 2011

டேம் 999 (Dam 999) என்பது 2011 இல் வெளிவர இருக்கும் ஒரு ஆங்கிலத் திரைப்படம். கேரளத்தைச் சேர்ந்த கடற்படை மாலுமியாக இருந்து திரைப்பட இயக்குநராக மாறிய சோகன் ராய் இத்திரைப்படத்தை இயக்கியுள்ளார். ஊழல்வாதியான மேயர் அரசியல் ஆதாயத்துக்காக வலுவற்ற அணையைக் கட்டுகிறார். அதனால் ஏற்படும் அணையின் உடைப்பால் ஏராளமான பேர் உயிர் இழப்பதையும், பழைய அணைகள் குறித்து விழிப்புணர்வையும் மையமாக வைத்து இந்தப் படம் எடுக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு அமீரகத்தில் நவம்பர் 24 அன்று வெளியாகும் இப்படம், இந்தியாவில் நவம்பர் 25 அன்று வெளியாகிறது. இத்திரைப்படம் ஆங்கிலம் தவிர, தமிழ், தெலுங்கு, ஹிந்தி ஆகிய மொழிகளிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

தடை கோரிக்கை

முல்லைப் பெரியாறு அணை விவகாரம் தொடர்பான "டேம் 999' திரைப்படத்தைத் திரையிடுவதற்குத் தடை விதிக்க வேண்டும் என்று ம.தி.மு.க. பொதுச் செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.

கேரள அரசின் நிதி உதவியுடன் தயாரிக்கப்பட்ட 'டேம் 999' என்ற திரைப்படத்தை இந்தியாவில் வெளியிடத் தடைவிதிக்க வேண்டும் என்று பாமக நிறுவனர் ராமதாஸ் கோரிக்கை விடுத்துள்ளார்..

டேம் 999 என்ற படம் மூலம் விஷமப் பிரச்சாரத்தை முழுவீச்சில் கட்டவிழ்த்துள்ளது கேரளா. தமிழக மக்களுக்கு இதன் மூலம் பூச்சாண்டி காட்டப் பார்க்கிறார்கள். முல்லைப் பெரியாறு அணை உலகின் மிகச் சிறந்த தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டது. இன்னும் 100 ஆண்டுகள் வலுவாக நிற்கும் அந்த அணைக்கு எதிரான இந்த விஷமப் படம் வெளியாக விட மாட்டோம். இதனை முழுவீச்சில் மதிமுக எதிர்க்கும்," என்றார் வைகோ.

ஊடகங்களில் டேம் 999

டேம் 999 திரைப்படம் குறித்து ஊடகங்களில் வெளியான செய்திகளின் சுருக்கம்.

ஊழல்வாதியான மேயர் ஒருவர் அரசியல் ஆதாயத்துக்காக கட்டும் வலுவற்ற அணை உடைவதால் ஏற்படும் பாதிப்புகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள டேம் 999 படம், தன் சொத்துக்களை விற்று மக்களின் நலன் காத்த பென்னி குக்கை கேவலப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது. - தினமலர்

இயக்குனர் கருத்து

டேம் 999 படத்தின் இயக்குனர் சோகன் ராய் வெளியிட்ட அறிக்கையில், "தமிழக மக்கள் அனைவருக்கும் உளப்பூர்வமான வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனது 'டேம் 999' திரைப்படம், தமிழக மக்களின் கலாசாரத்தையோ, உணர்வுகளையோ புண்படுத்தக்கூடிய படம் அல்ல. 'டேம் 999' முழுக்க முழுக்க உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கபட்ட படம். சீனாவின் பான்கியூ அணை 1975-ல் உடைந்ததால் ஏற்பட்ட பேரழிவில் சுமார் 2,50,000 பலியான சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது. மக்கள் பலரின் வாழ்க்கையை ஓர் அணை பேரழிவின் மூலம் எப்படி மூழ்கடித்தது என்பதையே இந்தப் படம் எடுத்துரைக்கிறது. மாறாக, இந்தியாவில் உள்ள அணைகளைப் பற்றியோ, குறிப்பாக தமிழகத்தில் உள்ள அணைகளைப் பற்றியோ சொல்லவில்லை. தமிழக மக்கள் மீது எனக்கு எப்போதும் பெருமதிப்பு உண்டு. அவர்களது கலாசாரத்தையும், உணர்வுகளையும் பாதிக்கும் எந்த செயலலிலும் எனக்கு உடன்பாடு இல்லை. எனது 'டேம் 999' படத்தில், தமிழ் மக்களுக்கோ அல்லது தமிழகத்துக்கோ தவறான எண்ணம் ஏற்படும் வகையில் எந்த ஒரு வசனமும் காட்சியும் இடம்பெறவில்லை” என்று தெரிவித்துள்ளார்.

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.



Dam 999 - டேம் 999 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 25, 2011 12:32 am

ஊழல்வாதியான மேயர் ஒருவர் அரசியல் ஆதாயத்துக்காக கட்டும் வலுவற்ற அணை உடைவதால் ஏற்படும் பாதிப்புகளை மையமாக கொண்டு எடுக்கப்பட்டுள்ள டேம் 999 படம், தன் சொத்துக்களை விற்று மக்களின் நலன் காத்த பென்னி குக்கை கேவலப்படுத்தும் விதத்தில் அமைந்துள்ளது.

கேரள மாநிலத்தைச் சேர்ந்தவர் சோஹன் ராய். கடற்படை மாலுமியாக இருந்து பின் திரைப்பட இயக்குநராக மாறிய இவர் இயக்கியுள்ள படம் தான் டேம் 999. ஊழல்வாதியான மேயர் ஒருவர் அரசியல் காரணங்களுக்கான வலுவற்ற அணை ஒன்றை கட்டுகிறார். இந்த அணை ஒன்று உடைவதால் ஏராளமானோர் பலியாகிறார்கள். பழமையான அணைகளால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து இப்படத்தில் விரிவாக தெரிவித்துள்ளதாக கூறுகிறார் சோஹன் ராய்.

இதுகுறித்து சோஹன் ராய் கூறுகையில், கடந்த 1975ம் ஆண்டு சீனாவில் உள்ள பான்கியோ டேம் உடைந்ததால் இரண்டரை லட்சம் பேர் உயிரிழந்ததாகவும், இதே போன்ற ஒரு அபாயம் பெரியாறு அணையிலும் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். மேலும், பெரியாறு அணை உடையும் பட்சத்தில், இதில் சிக்கி இறக்கப்போவது தமிழக மக்களும் தான் என்கிறார் சோஹன். படத்தைப் பார்த்த பின், பெரியாறு அணை விவகாரத்தில் தனது நிலையை தமிழக அரசு மாற்றிக்கொள்ளும் என்றும் நம்பிக்கை(?) தெரிவித்துள்ளார் சோஹன்.

படத்தில் காட்சிப்படி, ஊழல் மேயர் ஒருவர் கட்டிய அணை உடைவதாக படக்காட்சிகளை அமைத்துள்ளார் இயக்குநர் சோஹன் ராய். ஆனால், இங்கிலாந்து நாட்டவராயினும், அணை கட்டுமான பணியின் போது நிதிப்பற்றாக்குறை ஏற்பட்ட போதிலும், தனது சொத்துக்களை விற்று அணையை வலுவாக கட்டியவர் பென்னிகுக். படத்தின் மேயரையும், பென்னிகுக்கையும் ஒப்பிடும் வகையில், படத்தின் இயக்குநர் பேசியிருப்பது பென்னி குக்கை இழிவுபடுத்தும் வகையில் அமைந்துள்ளது. இப்படம் இந்தியாவில் வரும் 25ம் தேதி வெளியாகிறது. தமிழ், இந்தி மற்றும் தெலுங்கு மொழிகளில் இப்படம் வெளியாகவுள்ளது.

வைகோ எதிர்ப்பு: இப்படத்திற்கு ம.தி.மு.க., பொதுச்செயலாளர் வைகோ கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார்.

தினமலர்



Dam 999 - டேம் 999 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 25, 2011 12:34 am

சர்ச்சைக்குரிய 'டேம் 999' படத்தை தமிழக அரசியல் தலைவர்களுக்கு பிரத்யேகமாக திரையிட்டு காட்ட தயாராக இருப்பதாக, அப்படத்தின் இயக்குனர் சோஹான் ராய் அறிவித்துள்ளார்.

முல்லைப் பெரியாறு அணை உடைவது போல 'டேம் 999' என்ற ஆங்கிலப் படத்தில் காட்சி அமைக்கப்பட்டுள்ளது என்பது மதிமுக பொதுச் செயலர் வைகோ, பாமக நிறுவனர் ராமதாஸ் உள்ளிட்ட தமிழக அரசியல் தலைவர்களின் கருத்து.

இப்படத்துக்கு தமிழக கட்சிகளிடையே எதிர்ப்பு வலுத்துள்ள நிலையில், இதுதொடர்பாக நாடாளுமன்றத்தில் விவாதிப்பது என திமுகவும் அதிமுகவும் முடிவு செய்துள்ளன.

'டேம் 999' படம், ஐக்கிய அரபு நாடுகளில் வியாழக்கிழமையும், இந்தியாவில் வெள்ளிக்கிழமையும் வெளியாகிறது.

இந்த நிலையில், டேம் 999 படத்தின் இயக்குனர் சோஹன் ராய் இன்று வெளியிட்ட அறிக்கையில், "தமிழக மக்கள் அனைவருக்கும் உளப்பூர்வமான வணக்கத்தைத் தெரிவித்துக்கொள்கிறேன். எனது 'டேம் 999' திரைப்படம், தமிழக மக்களின் கலாசாரத்தையோ, உணர்வுகளையோ புண்படுத்தக்கூடிய படம் அல்ல.

'டேம் 999' முழுக்க முழுக்க உண்மைச்சம்பவத்தை அடிப்படையாக வைத்து எடுக்கபட்ட படம். சீனாவின் பான்கியூ அணை 1975-ல் உடைந்ததால் ஏற்பட்ட பேரழிவில் சுமார் 2,50,000 பலியான சம்பவத்தைத் தழுவி எடுக்கப்பட்ட படம் இது.

மக்கள் பலரின் வாழ்க்கையை ஓர் அணை பேரழிவின் மூலம் எப்படி மூழ்கடித்தது என்பதையை இந்தப் படம் எடுத்துரைக்கிறது. மாறாக, இந்தியாவில் உள்ள அணைகளைப் பற்றியோ, குறிப்பாக தமிழகத்தில் உள்ள அணைகளைப் பற்றியோ சொல்லவில்லை.

தமிழக மக்கள் மீது எனக்கு எப்போதும் பெருமதிப்பு உண்டு. அவர்களது கலாசாரத்தையும், உணர்வுகளையும் பாதிக்கும் எந்த செயலலிலும் எனக்கு உடன்பாடு இல்லை.

எனது 'டேம் 999' படத்தில், தமிழ் மக்களுக்கோ அல்லது தமிழகத்துக்கோ தவறான எண்ணம் ஏற்படும் வகையில் எந்த ஒரு வசனமும் காட்சியும் இடம்பெறவில்லை என்று உறுதிகூறுகிறேன்.

தமிழக மக்களின் உணர்வுகளை 'டேம் 999' எந்த விதத்திலும் பாதிக்காது என்று என்னால் நிச்சயமாக சொல்லமுடியும். இது, உண்மைக்கதையை அடிப்படையாகக் கொண்ட ஒரு சினிமா மட்டுமே என்பதை தெளிவுபடுத்த விரும்புகிறேன்.

ஒரு நல்ல நோக்கத்துக்காகவும், விழிப்பு உணர்வுக்காகவும் எடுக்கப்பட்ட இந்தப் படத்தை தயவு செய்து தமிழ் மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.

தமிழகத்தில் உள்ள மதிப்புமிக்க அரசியல் தலைவர்களுக்கு இந்தப் படத்தை பிரத்யேக காட்சி மூலம் திரையிட்டு காட்ட தயாராக இருக்கிறேன். அவர்கள் தவறானது எனச் சொல்லும் காட்சிகளையோ அல்லது வசனங்களையோ நீக்குவதற்கும் தயாராக இருக்கிறேன்.

முல்லைப் பெரியாறு அணையில் இருந்து தமிழகத்துக்கு தண்ணீர் தேவை என்பது எனது தனிப்பட்ட கருத்து. கேரளாவுக்கு போதுமான தண்ணீர் கிடைக்க வேண்டும் எனில், முல்லைப் பெரியாறு விவகாரத்தில் பழை அணைக்கு பதிலாக விரைவில் பெரிய அணை ஒன்றை கட்டுவதே தீர்வு என்று கருதுகிறேன். அப்போது தான், தமிழக மக்களுக்கு கூடுதல் தண்ணீர் கிடைக்கும்; கேரள மக்களின் வாழ்வாதாரமும் காக்கப்படும்," என்று சோஹன் ராய் கூறியுள்ளார்.

விகடன்



Dam 999 - டேம் 999 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 25, 2011 12:35 am




இது பார்க்கலாமா இல்லை இதுவும் தடை செய்யப்பட்டுள்ளதா சோகம்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





Dam 999 - டேம் 999 Ila
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Fri Nov 25, 2011 12:35 am

டேம் 999 என்ற படம் மூலம் விஷமப் பிரச்சாரத்தை முழுவீச்சில் கட்டவிழ்த்துள்ளது கேரளா. தமிழக மக்களுக்கு இதன் மூலம் பூச்சாண்டி காட்டப் பார்க்கிறார்கள். முல்லைப் பெரியாறு அணை உலகின் மிகச் சிறந்த தொழில்நுட்பத்துடன் கட்டப்பட்டது. இன்னும் 100 ஆண்டுகள் வலுவாக நிற்கும் அந்த அணைக்கு எதிரான இந்த விஷமப் படம் வெளியாக விட மாட்டோம். இதனை முழுவீச்சில் மதிமுக எதிர்க்கும்," என்றார் வைகோ.

முல்லைப் பெரியாறு அணையை உடைக்க வேண்டும் என்ற பிரச்சாரத்தை தாங்கி வருகிறது டேம் 999 என்ற ஆங்கிலப் படம். இதனை தமிழில் வெளியிட ஏற்பாடுகள் நடக்கின்றன.

இந்த நிலையில் இந்தப் படம் குறித்த விவரங்கள் வெளியானதால் தமிழக தலைவர்கள் மிகவும் கொதிப்படைந்துள்ளனர். கட்சி மற்றும் கொள்கைகளுக்கு அப்பால் தமிழர் நலன் என்ற விஷயம் அவர்களை ஒருங்கிணைத்துள்ளது.

முல்லைப் பெரியாறு அணை விஷயத்தில் தமிழர் உரிமைக்கு ஆரம்பம் முதலே குரல் கொடுத்து வரும் முக்கியத் தலைவர் மதிமுக பொதுச் செயலர் வைகோ.

இந்தப் படம் குறித்த முழு விவரங்களையும் திரட்டிய பிறகு, அப்படத்தை தமிழகம் மட்டுமல்ல, இந்தியாவிலேயே திரையிடக்கூடாது என்ற உறுதியுடன் போராட்டத்தில் குதித்துள்ளார் வைகோ.

இதுகுறித்து 'தட்ஸ்தமிழ்' நிருபர் எஸ் ஷங்கருக்கு அவர் இன்று அளித்த சிறப்புப் பேட்டி:

டேம் 999 என்பது முழுக்க முழுக்க கேரள அரசின் விஷமத்தனம். இந்த விஷமத்தனத்தை இன்று நேற்றல்ல, பல காலமாக அவர்கள் செய்து வருகிறார்கள். இப்போது சினிமா என்ற ஊடகத்தின் மூலம் இன்னும் வலுவாகச் செய்கிறார்கள்.

தமிழகத்தின் 5 பெரிய மாவட்டங்களின் வாழ்வாதாரமே இந்த முல்லைப் பெரியாறுதான். முழுக்க முழுக்க தமிழனுக்கு உரிமையான அணை அது.

இந்த அணையை உருவாக்கியதும் காப்பாற்றி வருவதும் தமிழன்தான். இந்த அணை உள்ள மண் கூட தமிழனுக்கு சொந்தமானதே. அன்றைய நிர்வாக தவறுகளால் அதனை கேரளத்தினர் சொந்தம் கொண்டாடுகின்றனர்.

இந்த அணை உடைந்து விடும் என்று கிராபிக்ஸ் மூலம் பொய்யாய் காட்சிகளை உருவாக்கி, மக்களை பயமுறுத்தும் பூச்சாண்டி வேலைதான் இந்தப் படம்.

ஏற்கெனவே அச்சுதானந்தன் முதல்வராக இருந்த போதே, முல்லைப் பெரியாறு அணை உடைவது போல கிராபிக்ஸில் படம் தயாரித்து 5 லட்சம் டிவிடிக்களை புழக்கத்தில் விட்டு மக்களை பயமுறுத்தப் பார்த்தனர். இப்போது அதை பெரிய திரையில் செய்யப் பார்க்கிறார்கள்.

இப்போது கேரள அரசும், ஜக்கிய அரபு அமீரகமும் இணைந்து பணம் போட்டு "டேம் 999' படத்தைத் தயாரித்துள்ளன. இந்தப் படத்தை இந்தியா, ஐக்கிய அரபு அமீரக நாடுகளில் மட்டும் வார்னர் பிரதர்ஸ் திரைப்பட நிறுவனம் வெளியிட உள்ளது. இதிலிருந்தே அரசின் சதிச்செயல் இதில் இடம் பெற்றுள்ளது தெரிகிறது. முல்லைப் பெரியாறு அணை உடைவதைப் போல் காண்பிப்பது அக்கிரமமானது.

100 ஆண்டுகளுக்கு முன்பே முல்லைப் பெரியாறு அணையை உலகின் மிகச் சிறந்த தொழில்நுட்பத்தில் உருவாக்கினார்கள். இந்த அணை இன்றல்ல... இன்னும் 1000 ஆண்டுகளுக்குப் பிறகும் நிலைத்து நிற்கும். அதில் சந்தேகம் வேண்டாம்.

படத்துக்கு வெளியிடவிடாமல் தடுக்க என்ன செய்யப் போகிறீர்கள்?

மதிமுக இந்தப் படத்தை வெளியிட விடாமல் தடுக்க அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்ளும். இந்தப் படம் வெளியாகவே கூடாது. அதற்கான போராட்டத்தில் மதிமுக இறங்குகிறது. இப்போது அமைதி வழியில் போராடுகிறோம். மீறி படத்தை வெளியிட முனைந்தால் போராட்டம் அடுத்த கட்டத்துக்கு போகும்.

முதல்வர் ஜெயலலிதா அவர்கள் இந்தப் படத்தை தமிழகத்தில் வெளியிடக்கூடாது என ஆணை பிறப்பிக்க வேண்டும். அத்துடன் மத்திய அரசையும் இதுகுறித்து வலியுறுத்தி இந்தியாவில் அந்தப் படம் வெளியாகாமல் தடுக்க வேண்டும்.

இந்திய ஒற்றுமை மற்றும் ஒருமைப்பாட்டில் மத்திய அரசுக்கு உண்மையிலேயே அக்கறை இருந்தால் டேம் 999 படத்தைத் தடுக்க வேண்டும். இப்படியொரு படத்தை கொஞ்சமும் சகித்துக் கொள்ள முடியாது.

உணவு உள்ளிட்ட பல்வேறு விஷயங்களுக்கு தமிழகத்தை சார்ந்துதான் கேரளா உள்ளது என்பதை அவர்கள் மறந்துவிடுகிறார்கள். இந்தப் படம் வெளியாகி, விரும்பத்தகாத விளைவுகள் ஏற்பட்டால் முதல் பாதிப்பு கேரளாவுக்குதான். அத்யாவசிய பொருள் சப்ளையே அவர்களுக்கு பாதித்துவிடும் என்று எச்சரிக்கிறேன்.

கேரள அரசே, முல்லைப் பெரியாறு அணைக்கு எதிரான சக்திகளே, நெருப்போடு விளையாடுகிறீர்கள், அதன் பாதிப்பு உங்களுக்குத்தான் என்பதை மறந்து!" என்றார்.

தட்ஸ்தமிழ்



Dam 999 - டேம் 999 Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
இளமாறன்
இளமாறன்
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 13977
இணைந்தது : 29/12/2009

Postஇளமாறன் Fri Nov 25, 2011 12:39 am

டேம் 999 படத்திற்கு தடை: தமிழக அரசு

தமிழ்நாடு மற்றும் கேரளா மாநிலங்களிடையே மட்டுமல்லாது தேசிய அளவில் கடந்த சில நாட்களாக பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வரும் டேம் 999 படத்திற்கு தமிழக அரசு தடை விதித்துள்ளது. தமிழக அரசின் தலைமைச் செயலாளர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் இதனை தெரிவித்துள்ளார்.

நக்கீரன்



நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்





Dam 999 - டேம் 999 Ila
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக