ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

பூமி என் தாய்
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கருப்பை புற்றுநோய் தடுக்க..

View previous topic View next topic Go down

கருப்பை புற்றுநோய் தடுக்க..

Post by முஹைதீன் on Thu Nov 24, 2011 4:47 pmகருப்பை புற்றுநோய் தடுக்க..Thursday 24 November 2011


தாய்மை
என்பது பெண்ணுக்கு அளிக்கப்பட்ட வரம். பெண்களுக்கு பெருமையை தருகின்ற
கருப்பையில் ஏற்படும் பல்வேறு பிரச்னைகள் பெண்களை மிரட்டி வருகின்றன.
கருத்தடை முறைகள், மாதவிலக்கின் போது சுகாதாரமின்மை மற்றும் கிருமித்
தொற்று போன்ற காரணங்களால் கருப்பை வாய் மற்றும் கருப்பை புற்றுநோய்க்கான
வாய்ப்புகள் அதிகரித்துள்ளது. ஆரம்ப அறிகுறிகளை கண்டுபிடித்து சிகிச்சை
செய்தால் கருப்பை புற்றுநோயை முற்றிலுமாக ஒழிக்க முடியும் என்கிறார்
மகப்பேறு மருத்துவர் கல்பனா சம்பத்.

வாழ்க்கை
முறை மாற்றம், சுற்றுச் சூழல் மாசு, பரம்பரைக் காரணங்களால் கருப்பை,
கருப்பை வாயில் புற்றுநோய் ஏற்படலாம். பத்து ஆண்டுகளுக்கு முன்பு வரை
பெண்களுக்கு மாதவிடாய் நின்ற பின்னர் புற்று நோய்க்கான வாய்ப்புகள் அதிகம்
இருந்தது. தற்போது 30 வயதிலேயே பலர் பாதிப்புக்கு ஆளாவதாக
கண்டறியப்பட்டுள்ளது. இதனால் பெண்கள் திருமணம் முடிந்து 5 ஆண்டுகள் முதலே
கருப்பை பகுதியில் புற்று நோய்க்கான அறிகுறிகள் உள்ளதா என்பதை ஆண்டு
தோறும் சோதனை மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள வேண்டும்.

கருப்பையில்
புற்றுநோய் ஏற்பட எச்.பி.வி. வைரசும் காரணம் என கண்டறிப்பட்டுள்ளது.
கேன்சர் உருவாக 80 சதவீதம் வரை எச்.பி.வி. வைரஸ் முக்கிய காரணமாகிறது. இந்த
வைரஸ் பாதிப்பில் இருந்து காத்துக் கொள்ள தடுப்பூசியும்
கண்டறியப்பட்டுள்ளது. பெண்கள் திருமணம் முடிந்து 5 ஆண்டுகளில் இருந்து இந்த
தடுப்பூசியைப் போட்டுக் கொள்ளலாம்.

குறிப்பிட்ட இடைவெளியில் பேப்ஸ்மியர் டெஸ்ட் மூலம் கருப்பை வாயில் புற்றுநோய்க்கான அறிகுறி தென்படுகிறதா என சோதிக்க வேண்டும்.
கருப்பை
புற்று நோய் இருக்கும் பட்சத்தில் சில அறிகுறிகள் தென்படலாம். உறவின்
போதோ அல்லது அதற்குப் பின்னரோ ரத்தம் வெளிப்படுதல், வெள் ளைப் படுதல்
அதிகம் இருக்கலாம். வெள்ளைப்படுதலுடன் சிறிது ரத்தம் கலந்து வரலாம். இரண்டு
மாதவிடாய்க்கு இடையில் அடிக்கடி ரத்தம் வெளிப்படுதல் போன்ற அறிகுறிகள்
இருந்தால் கருப்பைப் புற்று நோய்க்கான பரிசோதனை செய்ய வேண்டியது அவசியம்.

பயாப்சி
மற்றும் பேப்ஸ்மியர் சோதனைகள் மூலம் புற்று நோய் கண்டறியப்படுகிறது.
புற்று நோய் ஆரம்பிக்கும் சமயத்தில் கண்டறிந்தால் கருப்பையை அகற்றுவதன்
மூலம் முழுமையாக குணப்படுத்த முடியும். நோய் பரவிய பின்னர் தாமதமாக
கண்டறியப்படும் போது ரேடியோ தெரபி மற்றும் ஹீமோ தெரபி போன்ற சிகிச்சைகள்
அளிக்கப்படும். வந்த பின் தவிப்பதைவிட வரும் முன்னர் கண்டறிந்து தடுப்பதே
சிறந்தது.

பாதுகாப்பு முறை
பெண்
குழந்தைகள் சிறு வயதில் இருந்தே குறிப்பாக பூப்பெய்திய பின்னர் சத்தான
உணவுகளை உட்கொள்ள வேண்டும். அதே போல் ஆரம்ப கட்டத்தில் ஏற்படும் மாதவிலக்கு
கோளாறுகளை மருத்துவரிடம் காண்பித்து உடனே சரி செய்து கொள்ள வேண்டும்.
திருமணத்துக்கு பின்னர் சுகாதாரத்தை கடை பிடிக்க வேண்டும்.

பால்வினை
நோய்கள் தாக்காமல் காத்துக் கொள்ள வேண்டும். புற்றுநோய் தடுப்பூசி
போட்டுக் கொள்வது அவசியம். சத்தான உணவு மற்றும் டென்ஷன் இல்லாத வாழ்க்கை
முறையை அமைத்துக் கொள்ள வேண்டும்.

உடல்
எடை அதிகரிக்காமல் கட்டுக்குள் வைத்திருக்க வேண்டியது அவசியம். உடல்
நலத்துக்கு கேடு விளைவிக்கும் உணவுகளை தவிர்த்து, உடற்பயிற்சி மூலம் எடையை
பேண வேண்டும். 30 வயதுக்கு பின்னர் கண்டிப்பாக ஆண்டுக்கு ஒரு முறை பெண்கள்
தங்களது உடல் நலம் சார்ந்த பரிசோதனை செய்வதை நடை முறைப்படுத்திக் கொள்ள
வேண்டும். அதே போல் கருப்பை புற்றுநோய்க்கான அறிகுறி தென்பட்டால் உடனடியாக
அது சார்ந்த மருத்துவ பரிசோதனை செய்து கொள்ள வேண்டியதும் அவசியம்.


ரெசிபி

குடைமிளகாய்
ஊத்தப்பம் குடைமிளகாய் ஒன்றைக் கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ளவும். சின்ன
வெங்காயம் ஒரு கப், மிளகாய்த்தூள் ஒரு டீஸ்பூன், பூண்டு துருவல் ஒரு
டீஸ்பூன், கொத்தமல்லி, கருவேப்பிலை சுத்தம் செய்து நறுக்கிக் கொள்ளவும்.
தோசை மாவு, உப்பு, எண்ணெய் தேவையான அளவு எடுத்துக் கொள்ளவும். வாணலியில்
கடுகு தாளித்து, நறுக்கிய குடை மிளகாய், வெங்காயம் மற்றும் பூண்டு துருவல்,
மிளகாய்த் தூள் சேர்த்து நன்றாக வதக்கவும். தேவையான அளவு உப்பு சேர்த்து
கொத்தமல்லி, கருவேப்பிலை சேர்த்து இறக்கவும். தோசைக் கல்லில்
ஊத்தப்பத்துக்கு தேவையான மாவு ஊற்றி அதன் மீது வதக்கிய கலவையைத் தூவி மேலே
மூடி வைத்து ஆவியில் வேக விட்டு எடுக்கவும்.


முட்டைக்கோஸ்
துவையல் முட்டைக்கோஸ் பொடியாக நறுக்கியது ஒரு கப், தக்காளி 2, சின்ன
வெங்காயம் ஒரு கப், வரமிளகாய் 3, பூண்டு தேவையான அளவு, புளி சிறிதளவு,
உப்பு தேவைக்கு எடுத்துக் கொள்ளவும். வாணலியில் எண்ணெய் விட்டு அனைத்தையும்
நன்றாக வதக்கி

அரைத்து எடுத்தால் முட்டைக் கோஸ் துவையல் ரெடி.

ஆப்பிள்
கேசரி ஆப்பிளைப் பொடியாக நறுக்கிக் கொள்ளவும். முந்திரி, திராட்சை
ஆகியவற்றை நெய்யில் வறுத்து வைத்துக் கொள்ளவும். வாணலியில் ரவையின் அளவை
விட 3 அல்லது 4 மடங்கு தண்ணீர் வைத்து கொதிக்க விடவும், சர்க்கரை சேர்த்து
கொதித்த பின்னர் சுவைக்காக சிறிதளவு உப்பு சேர்த்து கொதிக்கும் தண்ணீரில்
ரவை சேர்க்கவும். ரவை வெந்த பின்னர் நெய் சேர்த்து, நெய்யில் வறுத்த
முந்திரி, திராட்சை, நறுக்கிய ஆப்பிள் துண்டுகள் சேர்த்து கிளறி இறக்கவும்.டயட்
கருப்பை
புற்றுநோய் இருப்பின் அதிக ரத்தப்போக்கு, மாதவிலக்கு சமயத்தில் அதிக வலி,
மாதவிலக்கு நின்ற பின் உடல் எடை அதிகரிப்பு போன்ற அறிகுறிகள் தென்படலாம்.
பரம்பரையில் யாருக்காவது கருப்பை புற்றுநோய் இருந்திருந்தால் வர
வாய்ப்புள்ளது. ஹார்மோன் ரீபிளேஸ்மென்ட் மூலம் வரலாம், சர்க்கரை அளவு
அதிகரித்தல், உடல் எடை அதிகரிப்பு போன்ற காரணங்களாலும் ஏற்பட
வாய்ப்புள்ளது. இவற்றை தவிர்க்க சாதத்தின் அளவைக் குறைத்து காய்கறிகள் அளவை
அதிகரித்து சாப்பிட வேண்டும். பட்டாணி சேர்த்துக் கொள்ளலாம். தினமும்
பழங்கள் சாப்பிடுவது முக்கியம். ஆவியில் வேக வைத்த உணவுகள் சாப்பிடலாம்.
அதிகம் புரதம் உள்ள உணவுகளை கூடுமான வரை தவிர்க்கவும். காய்கறிகளில்
முட்டைக் கோஸ், காலிபிளவர், முளை கட்டிய பயறு வகை இதில் ஏதாவது ஒன்றை
சேர்த்துக் கொள்ளவும். இவற்றில் இருக்கும் இன்டோல் திரீ கார்பினால் கேன்சரை
உருவாக்கும் கிருமிகளை அழிக்கிறது. மஞ்சள் மற்றும் சிவப்பு நிறத்தில் உள்ள
பழங்கள் அதிகளவில் சேர்த்துக் கொள்வதன் மூலம் உடலுக்கு நோய் எதிர்ப்பு
சக்தி கிடைக்கிறது. ஆப்பிள், எலுமிச்சை, தக்காளி, சாத்துக்குடி ஆகியவற்றில்
எதிர்ப்பு சக்தி உள்ளது. சிவப்பு குடைமிளகாயில் உள்ள பைட்டோகெமிக்கலும்
புற்றுநோய் வராமல் தடுக்கும். பாதாம், பிஸ்தா உள்ளிட்ட கொட்டை வகைகள்
சேர்த்துக் கொள்ளலாம். அசைவ வகைகளில் மீன் மட்டும் ஆவியில் வேக வைத்து
அல்லது குழம்பு செய்து சாப்பிடலாம். சத்தான, உடல் நலத்துக்கு ஏற்ற உணவுகளை
சாப்பிடுவதன் மூலம் புற்று நோய் வருவதைத் தடுக்கலாம் என்கிறார் உணவு
ஆலோசகர் சங்கீதா.


பாட்டி வைத்தியம்

அசோகமரப்பட்டை,
மாதுளம் பழத்தை காய வைத்து பொடி செய்து, தினமும் காலை, மாலை இரண்டு
வேளையும், மூன்று சிட்டிகை அளவுக்கு தண்ணீரில் கலந்து குடித்தால் கருப்பை
கோளாறுகள் குணமாகும்.


கருப்பை கோளாறுகள் வராமல் தடுக்க அசோகமரப் பட்டையை பொடி செய்து பாலில் கலந்து குடிக்கலாம்.

அருகம்புல் வேருடன் வெண்ணெய் சேர்த்து அரைத்து சாப்பிட்டால் வெள்ளைப்படுதல் பிரச்னை குணமாகும்.

ஆலமரப் பட்டையை பொடி செய்து பாலில் கலந்து குடித்து வந்தால் கருப்பை வீக்கம் குணமாகும்.

ஆற்றுத்
தும்பட்டியை மூலப்பொருளாக கொண்டு செய்யப்படும் குன்மகுடோரி மெழுகை
கடைகளில் வாங்கி பட்டாணி அளவு தினமும் சாப்பிட்டு வந்தால் கருப்பை சார்ந்த
அத்தனை கோளாறுகளும் தீரும்.


பத்து கிராம் இம்பூறல் வேர்ப்பட்டையுடன் ஒரு கிராம் பெருங்காயம் சேர்த்து கஷாயம் வைத்து குடித்தால் மாதவிலக்கு கோளாறு சரியாகும்.

கரிசலாங்கண்ணி
கீரைச்சாறு 30 மில்லியுடன் பருப்பு கீரை சாறு 30 மில்லி எடுத்து
இரண்டையும் ஒன்றாகக் கலந்து தினமும் காலையில் சாப்பிட்டால் ஆரம்ப நிலைப்
புற்றுநோய் குணமாகும்.http://www.thedipaar.com/news/news.php?id=37270
avatar
முஹைதீன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4318
மதிப்பீடுகள் : 1075

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum