புதிய பதிவுகள்
» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by ayyasamy ram Yesterday at 7:48 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 4:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» கருத்துப்படம் 06/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:33 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

» உங்கள் இதயத்துடன் பேசுங்கள்...
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:15 pm

» தேர்தலுக்குப் பிந்தைய கருத்துக் கணிப்புகள்
by ayyasamy ram Sun Jun 02, 2024 11:10 pm

» பரங்கிக்காய் ஸ்மூதி
by ayyasamy ram Sun Jun 02, 2024 9:42 pm

» கருடன் - திரை விமர்சனம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:33 pm

» முட்டை பணியாரம்
by ayyasamy ram Sun Jun 02, 2024 5:17 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
sani peyarchi palangal Poll_c10sani peyarchi palangal Poll_m10sani peyarchi palangal Poll_c10 
62 Posts - 57%
heezulia
sani peyarchi palangal Poll_c10sani peyarchi palangal Poll_m10sani peyarchi palangal Poll_c10 
41 Posts - 38%
mohamed nizamudeen
sani peyarchi palangal Poll_c10sani peyarchi palangal Poll_m10sani peyarchi palangal Poll_c10 
3 Posts - 3%
T.N.Balasubramanian
sani peyarchi palangal Poll_c10sani peyarchi palangal Poll_m10sani peyarchi palangal Poll_c10 
2 Posts - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
sani peyarchi palangal Poll_c10sani peyarchi palangal Poll_m10sani peyarchi palangal Poll_c10 
104 Posts - 59%
heezulia
sani peyarchi palangal Poll_c10sani peyarchi palangal Poll_m10sani peyarchi palangal Poll_c10 
62 Posts - 35%
mohamed nizamudeen
sani peyarchi palangal Poll_c10sani peyarchi palangal Poll_m10sani peyarchi palangal Poll_c10 
5 Posts - 3%
T.N.Balasubramanian
sani peyarchi palangal Poll_c10sani peyarchi palangal Poll_m10sani peyarchi palangal Poll_c10 
4 Posts - 2%

நிகழ்நிலை நிர்வாகிகள்

sani peyarchi palangal

அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Sat Sep 26, 2009 4:13 pm

http://tamil.webdunia.com/religion/astrology/specialpredictions/0908/28/1090828100_1.htmsani peyarchi palangal 1090828100_1

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 26, 2009 4:16 pm

சனிப் பெயர்ச்சி பலன்கள் - மகரம்
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்

எந்தச் செயலையும் திறம்பட செய்யும் நீங்கள், மற்றவர்களால் செய்ய முடியாத வேலையையும் துணிச்சலுடன் சாதித்துக் காட்டுவதில் வல்லவர்கள்.

இதுவரை அட்டமத்தில் நின்று கொண்டு உங்களை அலற வைத்த, அழ வைத்த சனிபகவான் 26.09.2009 முதல் 21.12.2011 முடிய 9வது வீட்டில் அமர்ந்து நல்லதைச் செய்வார்.

தண்ணீருக்குள் அழுகின்ற மீன் தரையிலிருப்பவர்களுக்கு தெரியாததைப் போல உள்ளுக்குள் புழுங்கி தவித்த உங்களை உணராமல் சுற்றியிருப்பவர்களெல்லாம் பலவாறு தொந்தரவு கொடுத்தார்களே! உங்களைப் பார்த்தாலே எழுந்து நின்று கை கட்டி மரியாதை செய்தவர்களெல்லாம் உங்கள் மீது கை ஓங்குமளவுக்குப் போனதே! அவர்களுக்கெல்லாம் பதிலடி கொடுப்பீர்கள்.

பெரிய ஏமாற்றங்கள், பேரிழப்புகளில் இருந்து மீள்வீர்கள். கடன் பிரச்சனைக்கு முற்றுப்புள்ளி வைப்பீர்கள். கணவன்-மனைவிக்குள் நிலவி வந்த கருத்து வேறுபாடுகள் எல்லாம் நீங்கி அன்யோன்யம் பிறக்கும். பிரிந்தவர்கள் ஒன்று சேர்வீர்கள்.

வீடு, மனை வாங்கவேண்டுமென எவ்வளவு காலமாக கனவு கண்டீர்களே! இப்பொழுது நிறைவேறும். இனி திட்டமிட்டு எதையும் செய்வீர்கள்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் அட்டமாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திர சாரத்தில் 26.09.2009 முதல் 19.09.2010 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் எதிலும் வெற்றி உண்டு. முடங்கிக் கிடந்த வேலைகள் முழுமையடையும். வழக்கு சாதகமாக முடியும். வேற்று மதத்தினர், நாட்டினர் உதவுவர். திருமணத்தை முன்னின்று நடத்துவீர்கள்.

உங்களின் சப்தமாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திர சாரத்தில் 20.09.2010 முதல் 14.10.2011 வரை சனிபகவான் செல்வதால் வீடு, மனை வாங்குவீர்கள். வாகனம் வந்து சேரும். வீடு சுப நிகழ்ச்சிகளால் களைக்கட்டும். மனைவிக்கு பிடித்தமான உயர்ரக ரத்தினங்கள், ஆடைகள் வாங்கித் தருவீர்கள்.

உங்களின் சுக, லாபாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திரம் சாரத்தில் 15.10.2011 முதல் 21.12.2011 வரை சனி பகவான் செல்வதால் பெரிய பதவிகள் தேடி வரும். புது வீட்டில் குடியேறுவீர்கள்.

வரும் 10.1.2010 முதல் 8.05.2010 வரை மற்றும் 23.01.2011 முதல் 15.06.2011 வரை வக்ரத்தில் செல்வதால் அக்காலகட்டத்தில் சிறுசிறு விபத்துகள், மனஉளைச்சல்கள், மனைவி வழியில் செலவினங்களும், உடல் நலத் தொந்தரவுகளும் வந்து செல்லும்.

பாதைத் தவறிச் சென்ற பிள்ளைகள் இனி உங்கள் ஆலோசனையை ஏற்று நல்வழிக்கு திரும்புவார்கள். மகனுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தள்ளிப் போய் கொண்டிருந்த திருமணமும் நல்ல இடத்தில் முடியும். உடன்பிறந்தவர்கள் உங்களின் உண்மையான பாசத்தை புரிந்து கொள்வர்.

வியாபாரத்தில் தொடர் தோல்விகளையும், இழப்புகளைச் சந்தித்து ஒரு குறுகிய வட்டத்திற்குள் அடைபட்டீர்களே! இனி தொலைநோக்குச் சிந்தனையால் லாபம் கூடும். உணவு, மருந்து, ஸ்டேஸ்னரி வகைகளால் ஆதாயம் உண்டு. இனி அனுபவமிகுந்த நல்ல வேலையாட்கள் கிடைப்பார்கள். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பதால் கடையை கொஞ்சம் அழகுபடுத்துவீர்கள்.

உத்தியோகத்தில் அற்ப சம்பளத்திற்காக அடிமைப்போல் அதிக பணிகளை செய்து வந்தீர்களே! இந்த நிலையெல்லாம் மாறும். உங்கள் தகுதி உயரும்.

கன்னிப்பெண்களே! தள்ளிப் போன கல்யாணம் கூடி வரும். தடைபட்ட கல்வியில் வெற்றியுண்டு. மாணவ, மாணவிகளே! படிப்பில் ஆர்வம் பிறக்கும். கெட்ட நண்பர்களிடமிருந்து விடுபடுவீர்கள். கலைஞர்களே! நழுவிப்போன வாய்ப்புகள் தேடி வரும். பிரபலமாவீர்கள்.

இந்தச் சனிப் பெயர்ச்சி அஸ்திவாரமாய் அழுந்திக் கிடந்த உங்களை கோபுரமாய் மிளிர வைப்பதாக அமையும்.

sani peyarchi palangal Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
அபிராமிவேலூ
அபிராமிவேலூ
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2492
இணைந்தது : 02/09/2009

Postஅபிராமிவேலூ Sat Sep 26, 2009 4:21 pm

சிவா wrote: சனிப் பெயர்ச்சி பலன்கள் - மகரம்

மகரம் உங்களுக்கா அண்ணா

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 26, 2009 4:29 pm

ஆம், மகரம் என்னுடைய ராசி!

sani peyarchi palangal Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
கோவைசிவா
கோவைசிவா
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 2106
இணைந்தது : 05/09/2009
http://www.kovaiwap.com

Postகோவைசிவா Sat Sep 26, 2009 4:35 pm

அடிக்கடி கற்பனை, கனவுகளில் மிதக்கும் நீங்கள் மனசுக்குள்ளேயே புதுத் திட்டங்கள் போட்டுக் கொண்டே இருப்பீர்கள்.

இதுவரை உங்கள் ராசிக்கு 4ஆம் வீட்டில் அமர்ந்து கொண்டு உங்களை படாதபாடுபடுத்தி வந்த சனி பகவான் இப்போது 26.09.2009 முதல் 21.12.2011 வரை உள்ள காலகட்டங்களில் 5ஆம் வீட்டில் அமர்வதால் உங்களின் தயக்கம், தடுமாற்றம் விலகும்.

இனி எந்த வேலையையும் விரைந்து முடிப்பீர்கள். உங்களுக்குள் அடங்கிக் கிடந்த ஆற்றல்கள் வெளிப்படும். தைரியம் பிறக்கும். சோகமான முகம் மலரும். குடும்பத்தில் உங்கள் வார்த்தைக்கு மதிப்புக் கூடும். கணவன்-மனைவிக்குள் சின்னச் சின்ன விஷயத்துக்கெல்லாம் பெரிய சண்டை வந்ததே! சில தம்பதியர்கள் சந்தேகத்தால் பிரிந்தீர்களே! அந்த அவல நிலை இனி மாறும். ஒருவரை ஒருவர் புரிந்து கொள்வீர்கள்.
தாயாருடன் இருந்த மனக்கசப்பு நீங்கும். அவரின் உடல் நிலை சீராகும். பிள்ளைகள் ஸ்தானத்தில் சனி அமர்வதால் பிள்ளைகளிடம் உங்கள் எண்ணங்களை திணிக்காதீர்கள். அவர்களின் போக்கில் விட்டுப் பிடியுங்கள். சில சமயங்களில் பாதை மாறி போக நேரும். உயர் கல்வியில் கூடுதல் கவனம் செலுத்துங்கள்.

மகளுக்கு நல்ல வரன் அமையும். சொந்த, பந்தங்கள் மெச்சும் படி திருமணத்தை நடத்தி முடிப்பீர்கள். மகனுக்கு வெளிநாடு தொடர்புடைய நிறுவனத்தில் வேலை அமையும். உங்களுக்குள் வீண் குழப்பத்தையும், சிக்கல்களையும் உண்டாக்கிய சிலரை இனி தவிர்ப்பீர்கள்.

மூட்டு வலி, தலைச்சுற்றல் எல்லாம் நீங்கும். சில நேரங்களில் உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டு பல நேரங்களில் இப்படியெல்லாம் பேசி இருக்கக் கூடாது என வருந்தி வதங்கினீர்களே! இனி மற்றவர்கள் மனம் புண்படாத படி பேசுவீர்கள்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் சுகாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திர சாரத்தில் 26.09.2009 முதல் 19.09.2010 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் புது முயற்சிகள் யாவும் வெற்றியடையும். புது வீடு கட்டி குடியேறுவீர்கள்.

உங்களின் தைரிய ஸ்தானாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திர சாரத்தில் 20.09.2010 முதல் 14.10.2011 வரை சனி பகவான் செல்வதால் எதிர்பாராத பணவரவு, பொருள் சேர்க்கை, உயர் பதவி, சமூக அந்தஸ்து என யாவும் கிட்டும்.

உங்களின் சப்தம விரையஸ்தானாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திர சாரத்தில் 15.10.2011 முதல் 21.12.2011 வரை சனிபகாவன் செல்வதால் மனைவி வழி உறவினர்கள் மதிப்பார்கள். சொத்து சேரும்.

வரும் 10.1.2010 முதல் 8.05.2010 வரை மற்றும் 23.01.2011 முதல் 15.06.2011 வரை உள்ள காலக்கட்டத்தில் சனி பகவான் வக்ரத்தில் செல்வதால் உறவினர் பகை, வீண் செலவுகள், அலைச்சல்கள் ஏற்படக்கூடும்.

சனி பகவான் ஏழாம் வீட்டை பார்ப்பதால் முன்பின் அறியாதவர்களிடம் குடும்ப விஷயங்களை பகிர்ந்துக் கொள்ள வேண்டாம். வாக்கு ஸ்தானத்தையும் பார்ப்பதால் மற்றவர்களை விமர்சித்து பேச வேண்டாம். வெளிவட்டாரத்தில் நிதானம் அவசியம். வழக்கில் வெற்றி கிட்டும்.

அக்கம், பக்கம் வீட்டாரிடம் அளவாகப் பழகுங்கள். யோகா, தியானம் செய்யுங்கள். மனஅமைதி கிட்டும். நீண்ட நாள் பிரார்த்தனைகளை நிறைவேற்றுவீர்கள்.

வியாபாரத்தில் பழைய பாக்கிகள் வசூலாகும். சரக்குகள் உடனுக்குடன் விற்றுத் தீரும். வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும். அயல்நாட்டு தொடர்புடைய நிறுவனங்கள் உங்கள் நிறுவனங்களுடன் ஒப்பந்தம் செய்வார்கள். கூட்டுத்தொழிலில் பங்குதாரர்கள் உங்கள் ஆலோசனையை ஏற்றுக் கொள்வார்கள்.

உத்யோகத்தில் மறைமுக எதிர்ப்புகள் விலகும். உங்களை குறை கூறுவதற்கென்றே ஒரு கூட்டமே இருந்ததே! இனி உங்கள் சேவையை எல்லோரும் மதிப்பர். நீங்கள் கேட்ட இடத்திற்கே மாற்றம் கிடைக்கும்.

கன்னிப் பெண்களே! படிப்பை தொடர்வீர்கள். பெற்றோரின் ஒத்துழைப்பு அதிகரிக்கும். மாணவ, மாணவிகளே! அதிகாலையில் எழுந்து படிப்பதை வழக்கப்படுத்திக் கொள்ளுங்கள். உயர்கல்வியில் வெற்றியுண்டு. கலைஞர்களே! மூத்த கலைஞர்களின் ஆதரவு கிடைக்கும். பெரிய நிறுவனத்திலிருந்து வாய்ப்புகள் தேடி வரும்.

இந்த சனிப்பெயர்ச்சி கடன் பிரச்சனைகளிலிருந்து மீளச் செய்வதுடன் புது அத்தியாயத்தை தொடங்குவதாக அமையும்.

சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sat Sep 26, 2009 5:28 pm

மீனத்திற்கு இல்லையா ? sani peyarchi palangal Icon_question

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 26, 2009 5:30 pm

சனிப்பெயர்ச்சி பலன்கள் - மீனம்
ஜோதிட ரத்னா முனைவர் க.ப.வித்யாதரன்

அயராது உழைத்து சிகரத்தின் எல்லைக்கே சென்றாலும் பெரியோர்களை மதித்து நடந்துக் கொள்ளும் குணமுடையவர்கள் நீங்கள்தான்.

இதுவரை உங்கள் ராசிக்கு 6வது வீட்டில் அமர்ந்து அடிப்படைய வசதி வாய்ப்புகளை அதிகப்படுத்தியதுடன், அதிகாரப் பதவியில் இருப்பவர்களுடன் நெருக்கமாகப் பழகும் சூழலையும் உருவாக்கித் தந்த சனி பகவான் வரும் 26.09.2009 முதல் 21.12.2011 வரை உங்கள் ராசிக்கு 7வது வீட்டில் நுழைந்து பலன் தரப்போகிறார்.

7வது வீட்டுக்கு சனி வருகிறாரே என்று பதற்றப்படாதீர்கள். இனி எதையும் திட்டமிட்டு செய்யப் பாருங்கள். கணவன்-மனைவிக்குள் சின்னச்சின்ன சந்தேகம் வரக்கூடும். பணம் வரும். வீண் செலவுகளை குறைத்து சேமிக்கப் பாருங்கள். பிள்ளைகளால் செலவுகளும், அலைச்சலும் வரும்.

மகனுக்கு அயல்நாட்டில் வேலை கிடைக்கும். நீங்களும் அயல்நாடு சென்று வருவீர்கள். மகளின் கல்யாணத்தை போராடி முடிப்பீர்கள். சகோதர வகையில் அதிக உரிமையெடுத்துக் கொள்ள வேண்டாம். பூர்வீகச் சொத்துப் பிரச்சனைகள் தலை தூக்கும்.

சனிபகவானின் நட்சத்திர சஞ்சாரம்: உங்களின் சஷ்டமாதிபதியான சூரியனின் உத்திரம் நட்சத்திர சாரத்தில் 26.09.2009 முதல் 19.09.2010 வரை சனிபகவான் செல்வதால் இக்கால கட்டத்தில் பணப் பற்றாக்குறை, வீண் அலைச்சல், நெஞ்சுவலி, வீண் பழி வந்து செல்லும்.

உங்களின் பூர்வ புண்யாதிபதியான சந்திரனின் அஸ்தம் நட்சத்திர சாரத்தில் 20.09.2010 முதல் 14.10.2011 வரை சனிபகவான் செல்வதால் குழந்தை பாக்கியம் கிட்டும். பணவரவு உண்டு. சொத்து வாங்குவீர்கள். நீண்ட நாள் ஆசைகள் நிறைவேறும். பிள்ளைகளுக்கு நல்ல வருங்காலத்தை அமைத்துத் தருவீர்கள்.

உங்களின் தன பாக்யாதிபதியான செவ்வாயின் சித்திரை நட்சத்திர சாரத்தில் 15.10.2011 முதல் 21.12.2011 வரை சனிபகாவன் செல்வதால் குடும்பத்தில் மகிழ்ச்சியும், விருந்தினர் வருகையும் உண்டு. உடன் பிறந்தவர்கள் உதவுவார்கள்.

வரும் 10.1.2010 முதல் 08.05.2010 வரை சனி பகவான் வக்ரத்தில் செல்வதால் வழக்கில் வெற்றி, சித்தர் தொடர்பு, வெளிநாட்டுப் பயணங்கள் வரக்கூடும். 23.01.2011 முதல் 15.06.2011 வரை வக்ரத்தில் செல்வதால் வீண் அலைச்சல்,சிறுசிறு நஷ்டங்கள் வந்து செல்லும்.

சனி பகவான் உங்கள் ராசியை பார்ப்பதால் சர்க்கரை நோய், இரத்த அழுத்தம் அதிகரித்தல், இரும்பு, சுண்ணாம்புச் சத்து குறைவு ஏற்படக்கூடும். மருத்துவக் காப்பீடு எடுத்துக் கொள்ளுங்கள். மறதியால் பொருட்களை இழக்க நேரிடும்.

பெற்றோரின் உடல்நிலை பாதிக்கும். வராது என்று நினைத்திருந்த பணம் கைக்கு வரும். மற்றவர்களுக்காக எதிலும் சாட்சிக் கையெழுத்திட வேண்டாம். வி.ஐ.பி.கள் தக்க நேரத்தில் உதவுவார்கள். நெருங்கிய உறவினர் அல்லது நண்பர் ஒருவரின் இழப்பு உங்களை வாட்டும். லேசாக கால் வலி, உடல் அசதி, தோலில் நமச்சல் வந்து நீங்கும்.

பழைய வாகனத்தை விற்றுவிட்டு நவீன வாகனம் வாங்குவீர்கள். வியாபாரத்தில் மற்றவர்களை நம்பி புது முதலீடுகள் வேண்டாம். அயல்நாட்டுத் தொடர்புடைய நிறுவனங்கள் மூலம் லாபம் உண்டாகும். கறாராக இருங்கள். வேலையாட்கள் முரண்டு பிடிப்பர். கமிசன், கன்சல்டன்ஸி, கட்டிட உதிரி பாகங்களால் ஆதாயம் உண்டு.

உத்தியோகத்தில் ஆர்வம் அதிகரிக்கும். உயர் அதிகாரிகளை விமர்சிக்க வேண்டாம். சக ஊழியர்களின் ஆதரவு கிடைக்கும். கன்னிப் பெண்களே, பெற்றோருடன் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் வரும். திருமணம் தாமதமாக முடியும்.

மாணவ-மாணவிகளே! கணிதம், வேதியியல் பாடங்களில் அலட்சியம் வேண்டாம். ஆசிரியர் ஒத்துழைப்பார். கலைஞர்களே! தனி நபர் விமர்சனத்தைத் தவிர்க்கவும். அரசு பாராட்டும். இந்தச் சனிப் பெயர்ச்சி ஒருபுறம் அலைச்சலுடன் அனுபவ அறிவையும், மறுபுறம் செல்வாக்கையும் தருவதாக அமையும்.

sani peyarchi palangal Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers

ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சதீஷ்குமார்
சதீஷ்குமார்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1242
இணைந்தது : 24/05/2009

Postசதீஷ்குமார் Sat Sep 26, 2009 5:37 pm

sani peyarchi palangal Icon_cheers ஒடனடி பதிலை,
அருமையான பதிவை கொடுத்த

சகோதரர்

சிவாவிற்கு மிக்க நன்றிகள் sani peyarchi palangal 154550 sani peyarchi palangal 154550 sani peyarchi palangal 154550

Sponsored content

PostSponsored content

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக