ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

வீட்டுப் பராமரிப்பு

View previous topic View next topic Go down

வீட்டுப் பராமரிப்பு

Post by சிவா on Fri Nov 04, 2011 1:40 pm

தட்டுமுட்டுச் சாமான்கள் இல்லாத வீடு கிடையாது. அவற்றை ஒழுங்காக வைக்காவிட்டால் வீடு வீடாக இருக்காது. குப்பைக்கூளம் போல காட்சியளிக்கும். சேர்கள் முதல், பாத்திரங்கள் வரை எல்லாமே தட்டுமுட்டுச் சாமான்கள் தான். அவற்றை அடுக்கி வைத்திருந்தால் அழகு, அழுக்கு படியாமல் பாதுகாத்தால் அழகோ அழகு. சுகமும் கூட. இல்லாவிட்டால் வீட்டிற்கு வரும் விருந்தினர் முகம் சுளிப்பர், ஏன், நாம்கூட உற்சாகம் இழந்து விடுவோம்.

தட்டுமுட்டுச் சாமான்கள் (பர்னிச்சர்கள்) பொலிவை இழப்பதற்கு கறை, விரிசல், சிராய்ப்பு என பல காரணங்கள் உண்டு. உணவுப் பொருட்கள் சிந்துவதால் பர்னிச்சர் அழகை இழக்கும். சாப்பிட்ட உடன் சிந்திய உணவுத் துணுக்குகளை துடைத்து விட்டால் சுத்தமாகி விடும். இல்லாவிட்டால் உறைந்து போய் கறையை ஏற்படுத்தலாம். காபி, டீ சிந்துவதாலும் கறை தோன்றலாம். கறை நீக்கி கொண்டு கறையை சுத்தம் செய்யுங்கள்.

பர்னிச்சர்களில் அன்றாடம் படிவது தூசுகள் தான். இவற்றை உடனுக்குடன் சுத்தம் செய்யாவிட்டால் அவை அழுக்காக படிந்து விடும். அழுக்குகளை நீக்குவது எளிது தான் என்றாலும், தினசரி செய்ய முடியாததால் அவை பர்னிச்சர்களின் அழகை பாழாக்கும். அழுக்குகளை சுத்தம் செய்ய பாலிஷ், ஸ்பிரே தெளித்து சுத்தமான துணியால் பர்னிச்சர் முழுவதையும் துடைக்கவும்.

கறைகளை விட சிராய்ப்புகளே பர்னிச்சர்களின் அழகை அதிகமாக சிதைக்கிறது. குழந்தைகள் விளையாடுவது, பொருட்களை வைத்து எடுப்பது, இடம் பெயர்த்துவது போன்றவற்றால் சிராய்ப்புகள் ஏற்படுகின்றன. முட்டை மஞ்சள்கருவுடன், சிறிது வினிகர் சேர்த்து பசைபோல ஆக்கி சிராய்ப்பில் பூசிவிட்டு சில நிமிடங்களுக்கு பிறகு துடைத்து விடுங்கள் சிராய்ப்பு மறைந்துவிடும். மெழுகையும் தேய்க்கலாம்.

ஆழமான சிராய்ப்புகளை வாதுமைக் கொட்டைகளைக் கொண்டு சரி செய்யலாம். பள்ளத்தின் அளவுக்கேற்ப வாதாம் கொட்டையை நறுக்கி அதில் அழுத்திவிட்டு, சீராக உரசிவிடுவதன் மூலம் சரிப்படுத்தி விடலாம். வெட்டுக் காயம்போல ஏற்பட்டுள்ள சேதங்களில் `இன்ஸ்டன்ட் காபி பவுடரை` சிறிது நீருடன் சேர்த்து பேஸ்ட் பதத்தில் எடுத்து பூசி சரி செய்யலாம். ஆனால் இது கறுப்பு நிற பர்னிச்சர்களுக்குத்தான் நன்றாக இருக்கும்.

சேர்கள் நன்றாக இருந்தும் கால்கள் பழுதுபட்டால் பயனற்றுப் போய்விடும். இருக்கையின் கால்கள் தேய்ந்து அல்லது உடைந்து போயிருந்தால் ரப்பர் தக்கையை அல்லது கடல்நுரையை பயன்படுத்தி நிற்க வைக்க முயற்சிக்கலாம். பிளாஸ்டிக் பொருட்களை ஒட்ட வைக்கும் பசை கூட விற்பனைக்கு கிடைக்கிறது. அவற்றை வாங்கி உடைந்த துண்டுகளையோ அல்லது ரப்பர் தக்கைகளையோ ஒட்டி வைத்து பயன்படுத்தலாம்.

அடிக்கடி முற்றம் அல்லது தோட்டத்திற்கு எடுத்துச் சென்று பயன்படுத்தும் இருக்கையின் கால்கள் அதிகம் தேய்மானத்தை சந்திக்கும். அதன் கால்களில் சிறிய பிளாஸ்டிக் அல்லது தகர தக்கையை பொருத்தி தேய்மானத்தை குறைக்கலாம். இதனால் சேர்களை இழுத்துக் கொண்டு சென்றாலும் ஒன்றும் ஆகாது. பாலிஷ் செய்யும்போது கீழே பழைய சாக்கை விரித்துக் கொண்டால் வடியும் வார்னிஷை உறிஞ்சி விடும்.

சேர்கள் சுவர் ஓரமாக போடப்பட்டு இருக்கும்போது சுவரில் உரசும். அதேபோல அதில் அமருபவர்கள் சுவரில் சாய்வதால் எண்ணெய் கறை சுவரில் படியலாம். இதை தவிர்க்க ரப்பர் மெத்தைகளை வாங்கி தலைசாயும் இடம், இருக்கைகள் சுவரில் உரசும் பகுதிகளில் பொருத்தலாம். பர்னிச்சர் பாலிஷை அகற்ற வினிகருடன் பாதியளவு தண்ணீர் சேர்த்து துடைக்கவும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: வீட்டுப் பராமரிப்பு

Post by மாணிக்கம் நடேசன் on Fri Nov 04, 2011 2:09 pm

நன்றி சிவா சார்.
இத எங்க இல்லதரிசியிடம் காட்ட மாட்டேன். அப்புறம் எல்லா வேலையும் என் தலையிலதான்.
அதனால என் புதையல் பெட்டியில பத்திரப் படுத்திட்டேன்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum