ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நாள் 11-மாதம் 11-வருடம் 2011: 6 நட்சத்திரக்காரர்களுக்கு நவம்பர் 11-ல் யோகம்; வழிபட வேண்டிய தெய்வங்கள்

View previous topic View next topic Go down

நாள் 11-மாதம் 11-வருடம் 2011: 6 நட்சத்திரக்காரர்களுக்கு நவம்பர் 11-ல் யோகம்; வழிபட வேண்டிய தெய்வங்கள்

Post by இளமாறன் on Mon Oct 31, 2011 1:56 am

11-11-11 இந்த நாள் சரித்திரம் முக்கியத்துவம் நிறைந்த நாள் ஆகும். இது 100 ஆண்டுக்கு ஒரு முறை தான் வரும். இந்த அபூர்வ நாள் அடுத்த மாதம் வருவது விசேஷமான ஒன்று. 800 ஆண்டுகளுக்கு முன்பு வந்த 11-11-1111-ம் நாள் மிகவும் அதிர்ஷ்ட நாளாக கருதப்பட்டது. இதற்கு காரணம் தேதி, மாதம், ஆண்டு, என்று எல்லாமே 1-ஆக இருந்தது தான். தற்போது வரும் 11-11-2011-ம் மிகவும் அதிர்ஷ்டமான நாளாகும் என்கிறார் ஜோதிடர் சதீஷ்குமார். அவர் மேலும் கூறியதாவது:-

இந்நாள் வெள்ளிக்கிழமையில் வருவது கூடுதல் சிறப்பு. அதிலும் பரணி நட்சத்திரம், கிருத்திகை திதியில் வருவதால் மேலும் சிறப்பு பெறுகிறது. எண் கணித ராசிப்படி பார்த்தால் 11-11-2011-ம் நாளின் கூட்டு எண் 8 ஆகும். 8 என்பது சனிபகவானை குறிக்கிறது. சனியின் நட்பு கிரகங்கள் புதன், சுக்கிரன் இவைகள் தான் யோகம் தரும் கிரகங்களாகவும் திகழ்கின்றன.

சுக்கிரனின் அதி தேவதை மகாலட்சுமி தாயார். அதிர்ஷ்டம் நிறைந்த 11-11-11 நாளில் 108 திவ்ய பிரதேசங்களில் உள்ள மகாலட்சுமி தாயாரை நாம் வழிபட்டால் அள்ள அள்ள குறையாத செல்வங்களை பெறலாம். மகாலட்சுமியை அன்று காலை 6 முதல் 7 மணி வரையிலும், இரவு 8 முதல் 9 மணி வரையிலும் வழிபட்டால் அதிக யோக பலன்களைப் பெறலாம்.

வாகனம், ஆடை, ஆபரணங்கள் கிடைக்கும். சங்கீதத்தில் சிறந்து விளங்க முடியும். பெண்களால் லாபம் பெருகும், வீட்டிற்கு லட்சுமி கடாட்சம் கிடைக்கும், நவரத்தினங்கள், வைரம் போன்றவற்றையும் பெற முடியும். 11-ந் தேதி அதிர்ஷ்ட நாளில் விஷ்ணு (பெருமாள்) வழிபாடும் பல்வேறு யோகங்களை நமக்கு பெற்றுத் தரும்.

அன்றைய தினம் பெருமாளை காலை 7 முதல் 8 மணி வரையிலும், இரவு 9 முதல் 10 மணி வரையிலும் வழிபட சிறந்த நேரம் ஆகும். இந்நாளில் பெருமாளை வழிபடுவோர் கல்வி, கலைத்துறையில் கூடுதல் பலன்கள் கிடைக்கப் பெறுவர். வியாபாரத்தில் அதிக லாபம் பெறலாம். உத்தியோகத்தில் இருப்போருக்கு பதவி உயர்வு போன்றவை கிடைக்கும்.

6 நட்சத்திரங்களுக்கு யோகம்.........

சுக்கிரன் கிரகத்திற்கு உட்பட்ட பரணி, பூரம், பூராடம் நட்சத்திரக்காரர்களும், புதன் கிரகத்திற்கு உட்பட்ட ரேவதி, ஆயில்யம், கேட்டை நட்சத்திரக்காரர்களும் 11-11-2011 நாளில் அதிர்ஷ்டத்தை பெறுபவர்களாக உள்ளனர். எனவே இந்த 6 நட்சத்திரக்காரர்களும் அவரவர் குல தெய்வங்களை வழிபட்டால் கூடுதல் யோக பலன்களைப் பெறலாம்.

ராசிக்கேற்ற வழிபாடு.....

மேஷம்.........

மேஷ ராசியின் ராசி அதிபதி செவ்வாயை குரு பார்ப்பதால் பொருளாதாரத்தில் நல்ல வளர்ச்சியை பெறமுடியும். குடும்ப பிரச்சினை நீங்கி மகிழ்ச்சியுடன் வாழ்வர். 11-ந் தேதி மகாலட்சுமியை வழிபட்டால் சகல யோகங்களைப் பெறலாம்.

ரிஷபம்......

ரிஷப ராசி அதிபதி சுக்கிரன் 7-ம் இடத்தில் உள்ளார். இதனால் குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். பொன், பொருள் சேர்க்கை அதிகரிக்கும், தொழிலில் முன்னேற்றம் காணலாம். துர்க்கை அம்மனை வழிபட்டால் கூடுதல் பலன்களை பெற முடியும்.

மிதுனம்.....

மிதுன ராசிக்கு அதிபதியான புதன் 6-ல் உள்ளார். இதனால் காரிய தடை நீங்கி செல்வ செழிப்பை பெறலாம். பொருளாதாரத்தில் அதிக முன்னேற்றம் ஏற்படும். பெருமாளை வழிபட்டால் கூடுதல் யோகத்தை பெறலாம்.

கடகம்........

கடக ராசியின் அதிபதி சந்திரன் 10-ல் உள்ளார். தொழில், உத்தியோகத்தில் இருப்பவர்கள் நல்ல முன்னேற்றம் காணலாம். 11-ந் தேதி அதிர்ஷ்ட நாளில் சூரியன் அல்லது சிவனை வழிபட்டால் வீடு வாங்கும் யோகம் பெறலாம்.

சிம்மம்.........

சிம்ம ராசியின் அதிபதி சூரியன் நீச்சம் பெற்று துலாமில் உள்ளார். எவ்வளவு தான் தடைகள் வந்தாலும் அதை முறியடித்து வாழ்வில் வெற்றி பெறலாம். தொழிலில் லாபம் பெருகும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண தடை நீங்கும் 11-ந் தேதி அதிர்ஷ்ட நாளில் சூரியனை வழிபட்டால் கூடுதல் யோக பலன்களை பெறலாம்.

கன்னி......

கன்னி ராசியின் அதிபதியான புதன் 3-ல் உள்ளார். இதனால் குடும்பத்தில் உள்ள குழப்பங்கள் நீங்கும். தொழிலில் இருந்து வந்த நஷ்டங்கள் குறையும். உத்தியோகத்தில் இருப்போருக்கு பதவி உயர்வு கிடைக்கும். 11-ந் தேதி அதிர்ஷ்ட நாளில் சனி பகவானுக்கு நெய் விளக்கு ஏற்றி வழிபட்டால் சகல யோகங்களை பெறலாம். காமாட்சி அம்மனை வழிபடுவதும் சிறப்பை தரும்.

துலாம்........

துலாம் ராசியின் அதிபதியான சுக்கிரன் 2-ல் உள்ளார். இதனால் பொருளாதாரத்தில் வளர்ச்சி ஏற்படும். குடும்ப பிரச்சினை தீர்ந்து ஒற்றுமை ஏற்படும். வீடு வாங்கும் யோகம் கிடைக்கும். 11-ந் தேதி அதிர்ஷ்ட நாளில் விநாயகர், ஆஞ்சநேயரை வழிபட்டால் கூடுதல் யோக பலன்களை பெறலாம்.

விருச்சிகம்........

விருச்சிகம் ராசியின் அதிபதி செவ்வாய் சிம்மத்தில் உள்ளார். இதனால் நினைத்த காரியம் பலிக்கும். வியாபாரத்தில் வளர்ச்சி ஏற்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 11-ந் தேதி அதிர்ஷ்ட நாளில் முருகன் கோவிலுக்கு சென்று வழிபட்டால் வீடு கட்டும் யோகம் பெறலாம்.

தனுசு........

தனுசு ராசியின் அதிபதி குரு மேஷத்தில் வக்கிரம் பெற்றுள்ளார். இதனால் தொழிலில் இருந்து வந்த நஷ்டங்கள் அடியோடு நீங்கும். லாபம் பெருகும். திருமண தடை, காரிய தடைகள் நீங்கும். குடும்பத்தில் ஒற்றுமை ஓங்கும். 11-ந் தேதி அதிர்ஷ்ட நாளில் தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் சகல யோகங்களை பெறலாம்.

மகரம்........

மகர ராசியின் அதிபதி சனி கன்னியில் உள்ளார். இதனால் காரிய தடைகள் நீங்கும். சந்திரன் 4-ல் இருப்பதால் உறவினர்ககளுடன் நட்பு மேம்படும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். திருமண தடைகள் நீங்கும். 11-ந் தேதி அதிர்ஷ்ட நாளில் சனிபகவான், காமாட்சி அம்மனை வழிபட்டால் கூடுதல் யோக பலன்களை பெறலாம்.

கும்பம்........

கும்ப ராசியின் அதிபதி சனி 8-ல் உள்ளார். செவ்வாய் சிம்மத்தில் இருந்து கும்பத்தை பார்க்கிறார். இதனால் குடும்ப பிரச்சினைகள் நீங்கும். தொழிலில் லாபம் பெருகும். 11-ந் தேதி முருகபெருமானை வழிபட்டால் சகல யோகங்களும் பெறலாம்.

மீனம்.....

மீன ராசியின் அதிபதி குரு வக்கிரம் பெற்று மேஷத்தில் உள்ளார். இதனால் காரிய தடைகள் நீங்கும். வீடு கட்டும் யோகம் கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். 11-ந் தேதி தட்சிணாமூர்த்தியை வழிபட்டால் கூடுதல் யோகங்களை பெறலாம் என்கிறார் ஜோதிடர் சதீஷ்குமார்.

மாலைமலர்

நேசி.. உன்னை நீ நேசிப்பது போல பிறரையும் நேசி

நட்புடன் என்றும்... உங்கள் நண்பன் இளமாற‌ன்

avatar
இளமாறன்
மன்ற ஆலோசகர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13977
மதிப்பீடுகள் : 1559

View user profile

Back to top Go down

Re: நாள் 11-மாதம் 11-வருடம் 2011: 6 நட்சத்திரக்காரர்களுக்கு நவம்பர் 11-ல் யோகம்; வழிபட வேண்டிய தெய்வங்கள்

Post by aathma on Mon Oct 31, 2011 9:54 am

நல்ல தகவல் மாறன் ஸார் மகிழ்ச்சி

மிக்க நன்றிகள் நன்றி

பரவாயில்லையே , ஜோதிட தகவல்கள் எல்லாம் தருகிறீர்களே புன்னகை
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: நாள் 11-மாதம் 11-வருடம் 2011: 6 நட்சத்திரக்காரர்களுக்கு நவம்பர் 11-ல் யோகம்; வழிபட வேண்டிய தெய்வங்கள்

Post by பிரசன்னா on Mon Oct 31, 2011 10:29 am

பகிர்ந்தமைக்கு நன்றி... மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி ...
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: நாள் 11-மாதம் 11-வருடம் 2011: 6 நட்சத்திரக்காரர்களுக்கு நவம்பர் 11-ல் யோகம்; வழிபட வேண்டிய தெய்வங்கள்

Post by கேசவன் on Mon Oct 31, 2011 10:35 am

11-11-2011 என்பதால் சிறப்பு என்று சொல்லமுடியாது, எப்படி சாதாரண மற்றநாட்களோ, அதேபோலதான் 11-11-2011 தேதியும் ,எப்படி கிருத்திகை ,பிரதோஷம் போன்ற விசேச தினங்கள் வருகிறதோ அதுபோல் 11-11-2011 அன்று ஏதாவது விசேச தினமாக இருக்கலாம் , ஆனால் 11-11-2011 என்பதால் தான் விசேச தினம் என்று கூறமுடியாது
avatar
கேசவன்
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3429
மதிப்பீடுகள் : 516

View user profile

Back to top Go down

Re: நாள் 11-மாதம் 11-வருடம் 2011: 6 நட்சத்திரக்காரர்களுக்கு நவம்பர் 11-ல் யோகம்; வழிபட வேண்டிய தெய்வங்கள்

Post by சதாசிவம் on Mon Oct 31, 2011 10:51 am

நல்ல தகவல் பகிர்தமைக்கு நன்றி.

ஜோதிட அடிப்படையில் ஒரு கிரகம் ஒரு ராசியில் இருந்து ஒரு ராசியில் இடம் பெயரும் போது தான் பலன்கள் மாறுபடும். ஆங்கில புத்தாண்டு அன்றோ , 11.11.2011 அல்லது 10.10.2010, 9.9.2009, 08.08.2008 போன்ற நாட்களில் கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து ஒரு ராசியில் மாறுவதில்லை. இப்படி பட்ட நாட்கள் ஒவ்வொரு வருடமும் வந்து போகிறது.

பொதுவாக சந்திரன், சூரியன், புதன், சுக்ரன், செவ்வாய் போன்ற கோள்கள் குறைந்த காலத்தில் ஒரு ராசியில் இருந்து வேறு ஒரு ராசிக்கு மாறுகிறது, இவற்றை நாம் பெரிய விசேஷமாக கொண்டாடுவதில்லை. பெரிய கிரகங்கள் ஆனா குரு, ராகு கேது, சனி ஆகியவை முறையே 1 வருடம், 1.5 வருடம், 2.5 வருடத்திற்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசி மாறுகிறது. இதை நாம் கொண்டாடுகிறோம். இதனால் கோட்சரா பலன்கள் மாறும்.

நவீன காலத்தில் மக்கள் அளவுக்கு அதிகமாக ஜோதிடத்தை நம்ப தொடங்கிவிட்டனர், இதனால் கிரங்கள் வக்கிர கதியில் ராசி மாறுவதைக் கூட பலன், பரிகாரம் என்று சொல்லி காசு பார்க்கத் தொடங்கி விட்டனர். எல்லா கோவில்களும் பரிகார தலங்களாக சொல்லப்படுகிறது.

இது பண்டைய ஜோதிட அடைப்படையில் எழுந்த விஷயம் அல்ல. இது மட்டுமல்ல ஆங்கில புத்தாண்டு பலன்கள் என்று கூறுவதும் உண்மையல்ல. இது வெறும் மக்களை ஏமாற்றும் வழி.
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நாள் 11-மாதம் 11-வருடம் 2011: 6 நட்சத்திரக்காரர்களுக்கு நவம்பர் 11-ல் யோகம்; வழிபட வேண்டிய தெய்வங்கள்

Post by பிரசன்னா on Mon Oct 31, 2011 10:52 am

@KESAVAN wrote:11-11-2011 என்பதால் சிறப்பு என்று சொல்லமுடியாது, எப்படி சாதாரண மற்றநாட்களோ, அதேபோலதான் 11-11-2011 தேதியும் ,எப்படி கிருத்திகை ,பிரதோஷம் போன்ற விசேச தினங்கள் வருகிறதோ அதுபோல் 11-11-2011 அன்று ஏதாவது விசேச தினமாக இருக்கலாம் , ஆனால் 11-11-2011 என்பதால் தான் விசேச தினம் என்று கூறமுடியாது

நீங்கள் சொல்வதும் சரி தான், ஆனால் அந்த விசேசங்கள் மாதம் இரண்டு தடவை வரும் ஆனால் 11.11.11 100 வருடதிற்கு ஒரு முறை தான் வரும்; அப்படி வரும் போது விசேச நாட்களும் வருவது ஒரு தனி சிறப்பு...

avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: நாள் 11-மாதம் 11-வருடம் 2011: 6 நட்சத்திரக்காரர்களுக்கு நவம்பர் 11-ல் யோகம்; வழிபட வேண்டிய தெய்வங்கள்

Post by ARR on Mon Oct 31, 2011 11:04 am

நம் பஞ்சாங்கம் அமாவாசை அடிப்படையிலானது.. ஆஙகில நாட்கள் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது..

கும்ப ராசிக்கு முருகனை வழிபடணுமா..? நமக்கும் அந்தாளுக்கும் கேப் ஜாஸ்தியாயிற்றே..!

மீண்டும் சந்திப்போம்
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: நாள் 11-மாதம் 11-வருடம் 2011: 6 நட்சத்திரக்காரர்களுக்கு நவம்பர் 11-ல் யோகம்; வழிபட வேண்டிய தெய்வங்கள்

Post by பிரசன்னா on Mon Oct 31, 2011 11:07 am

@ARR wrote:நாம் பஞ்சாங்கம் அமாவாசை அடிப்படையிலானது.. ஆஙகில நாட்கள் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது..

கும்ப ராசிக்கு முருகனை வழிபடணுமா..? நமக்கும் அந்தாளுக்கும் கேப் ஜாஸ்தியாயிற்றே..!

மீண்டும் சந்திப்போம்

நண்பரே கொஞ்சம் புரியும்படி சொல்லவும்..... நானும் கும்ப ராசி / சதய நட்சத்திரம் என்பதால் இந்த ஆர்வம்...
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: நாள் 11-மாதம் 11-வருடம் 2011: 6 நட்சத்திரக்காரர்களுக்கு நவம்பர் 11-ல் யோகம்; வழிபட வேண்டிய தெய்வங்கள்

Post by T.N.Balasubramanian on Mon Oct 31, 2011 11:08 am

(11-11-11-11-11-11)

2011 ஆம் வருடம்,
11 ஆம் மாதம்,
11தேதி,
11 காலை மணி,
11நிமிடம்,
11வினாடியில் பிறக்கும் குழந்தை
சீரும் சிறப்பும் அடைந்து
பேறும் புகழும் அடைய பிரார்த்திக்கிறேன்.
ரமணியன்.
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22263
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: நாள் 11-மாதம் 11-வருடம் 2011: 6 நட்சத்திரக்காரர்களுக்கு நவம்பர் 11-ல் யோகம்; வழிபட வேண்டிய தெய்வங்கள்

Post by ராஜா on Mon Oct 31, 2011 11:10 am

@சதாசிவம் wrote:ஜோதிட அடிப்படையில் ஒரு கிரகம் ஒரு ராசியில் இருந்து ஒரு ராசியில் இடம் பெயரும் போது தான் பலன்கள் மாறுபடும். ஆங்கில புத்தாண்டு அன்றோ , 11.11.2011 அல்லது 10.10.2010, 9.9.2009, 08.08.2008 போன்ற நாட்களில் கிரகங்கள் ஒரு ராசியில் இருந்து ஒரு ராசியில் மாறுவதில்லை. இப்படி பட்ட நாட்கள் ஒவ்வொரு வருடமும் வந்து போகிறது.

பொதுவாக சந்திரன், சூரியன், புதன், சுக்ரன், செவ்வாய் போன்ற கோள்கள் குறைந்த காலத்தில் ஒரு ராசியில் இருந்து வேறு ஒரு ராசிக்கு மாறுகிறது, இவற்றை நாம் பெரிய விசேஷமாக கொண்டாடுவதில்லை. பெரிய கிரகங்கள் ஆனா குரு, ராகு கேது, சனி ஆகியவை முறையே 1 வருடம், 1.5 வருடம், 2.5 வருடத்திற்கு ஒரு முறை ஒரு ராசியில் இருந்து அடுத்த ராசி மாறுகிறது. இதை நாம் கொண்டாடுகிறோம். இதனால் கோட்சரா பலன்கள் மாறும்.

நவீன காலத்தில் மக்கள் அளவுக்கு அதிகமாக ஜோதிடத்தை நம்ப தொடங்கிவிட்டனர், இதனால் கிரங்கள் வக்கிர கதியில் ராசி மாறுவதைக் கூட பலன், பரிகாரம் என்று சொல்லி காசு பார்க்கத் தொடங்கி விட்டனர். எல்லா கோவில்களும் பரிகார தலங்களாக சொல்லப்படுகிறது.

இது பண்டைய ஜோதிட அடைப்படையில் எழுந்த விஷயம் அல்ல. இது மட்டுமல்ல ஆங்கில புத்தாண்டு பலன்கள் என்று கூறுவதும் உண்மையல்ல. இது வெறும் மக்களை ஏமாற்றும் வழி.
மிகச்சரியான பதில் , இவை எல்லாம் அரைகுறை ஜோதிடர்களின் விளம்பரயுக்திகள்.
avatar
ராஜா
தலைமை நடத்துனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30932
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாள் 11-மாதம் 11-வருடம் 2011: 6 நட்சத்திரக்காரர்களுக்கு நவம்பர் 11-ல் யோகம்; வழிபட வேண்டிய தெய்வங்கள்

Post by T.N.Balasubramanian on Mon Oct 31, 2011 11:16 am

@ARR wrote:நம் பஞ்சாங்கம் அமாவாசை அடிப்படையிலானது.. ஆஙகில நாட்கள் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது..

கும்ப ராசிக்கு முருகனை வழிபடணுமா..? நமக்கும் அந்தாளுக்கும் கேப் ஜாஸ்தியாயிற்றே..!

மீண்டும் சந்திப்போம்

நான் புரிந்து கொண்ட வரையில், சூரியன் ஒரு லக்னதிலிருந்து,அடுத்த லக்னம் செல்லும் நாட்களே,அந்தந்த மாதத்தின் முதல் நாள் என்ற ரீதியில்,பஞ்சாங்கம் அமைந்து உள்ளதாக நினைக்கிறேன். அமாவாசை அடிப்படையிலா? தெரிந்தவர்கள் விளக்கவும். நன்றி!
ரமணியன்.
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22263
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: நாள் 11-மாதம் 11-வருடம் 2011: 6 நட்சத்திரக்காரர்களுக்கு நவம்பர் 11-ல் யோகம்; வழிபட வேண்டிய தெய்வங்கள்

Post by சதாசிவம் on Mon Oct 31, 2011 11:28 am

ஜோதிடம் சந்திரன் சுழச்சி அடிப்படையிலும், சூரியன் சுழச்சி அடைப்படையில் கணிக்கப்படுகிறது, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் சூரிய சித்தாந்தம் அடைப்படையில் தான் பஞ்சாங்கமும், முகூர்தங்களும் நிச்சயிக்கப்படுகிறது, ஆதலால் நம்மை பொறுத்த வரை சூரிய அஸ்தமனம் பிறகு வருவது நல்ல முகூர்த்தம் அல்ல. ஆனால் ஆந்திராவில் திருமணம் கூட நள்ளிரவில் நடைபெறுகிறது. தமிழ் மாதங்கள் சூரியனின் அடைப்படையில் தான் கணிக்கப்படுகிறது.

இரண்டு முறையிலும் ஜோதிடம் எழுதப்படுகிறது. சந்திரன் திதி, கரணம், நட்சத்திரம் நிர்ணயம் செய்யவும், சூரியன் நாள் நிர்ணயம் செய்யவும், சூரியனும், சந்திரனும் யோகம் நிர்ணயம் செய்யவும் பயன்படுகிறது, இந்த ஐந்து அங்கங்களை (நாள், திதி, கரணம், யோகம் ,நட்சத்திரம்) ஆகியவை கொண்டு பஞ்சாங்கம் எழுதப்படுகிறது.
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: நாள் 11-மாதம் 11-வருடம் 2011: 6 நட்சத்திரக்காரர்களுக்கு நவம்பர் 11-ல் யோகம்; வழிபட வேண்டிய தெய்வங்கள்

Post by ARR on Mon Oct 31, 2011 11:35 am

@T.N.Balasubramanian wrote:(11-11-11-11-11-11)

2011 ஆம் வருடம்,
11 ஆம் மாதம்,
11தேதி,
11 காலை மணி,
11நிமிடம்,
11வினாடியில் பிறக்கும் குழந்தை
சீரும் சிறப்பும் அடைந்து
பேறும் புகழும் அடைய பிரார்த்திக்கிறேன்.
ரமணியன்.

ஏன் ரமணியன் அக்குழந்தைக்கு மட்டும் சிறப்பு வேண்டுதல்..?

மண்ணில் பிறக்கும் எல்லாக்குழந்தைகளுமே நலமுடன் வாழட்டும்..!

Last edited by ARR on Mon Oct 31, 2011 11:57 am; edited 1 time in total
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: நாள் 11-மாதம் 11-வருடம் 2011: 6 நட்சத்திரக்காரர்களுக்கு நவம்பர் 11-ல் யோகம்; வழிபட வேண்டிய தெய்வங்கள்

Post by ARR on Mon Oct 31, 2011 11:46 am

@பிரசன்னா wrote:
@ARR wrote:நாம் பஞ்சாங்கம் அமாவாசை அடிப்படையிலானது.. ஆஙகில நாட்கள் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது..

கும்ப ராசிக்கு முருகனை வழிபடணுமா..? நமக்கும் அந்தாளுக்கும் கேப் ஜாஸ்தியாயிற்றே..!

மீண்டும் சந்திப்போம்

நண்பரே கொஞ்சம் புரியும்படி சொல்லவும்..... நானும் கும்ப ராசி / சதய நட்சத்திரம் என்பதால் இந்த ஆர்வம்...

டரியல் ஆகாதீங்க பிரசன்னா..!

நாங்க நாமதாரிக் கூட்டம்.. பெருமாள்தான் எங்களுக்கு எல்லாம்.. அதனால் அப்படிச் சொன்னேன்..

எங்க அப்பத்தா அடிக்கடி சொல்லும்..

"முருகன் வேண்டியவுடன் எதையும் தரமாட்டான்.. ட்யூப் லைட் போல கொஞ்சம் லேட் ஆகும்..

ஐயப்பன் ரொம்ப தாமதிப்பான்.. சோடியம் வேப்பர் போல..

நம்ப சாமிதாண்டா குண்டு பல்பு.. ஸிவிட்சை போட்டவுடனே எரியும்..

இந்த உதாரணம் ரெஸ்பான்ஸ் டைமுக்கு மட்டும்தான்..
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: நாள் 11-மாதம் 11-வருடம் 2011: 6 நட்சத்திரக்காரர்களுக்கு நவம்பர் 11-ல் யோகம்; வழிபட வேண்டிய தெய்வங்கள்

Post by ARR on Mon Oct 31, 2011 11:55 am

@சதாசிவம் wrote:ஜோதிடம் சந்திரன் சுழச்சி அடிப்படையிலும், சூரியன் சுழச்சி அடைப்படையில் கணிக்கப்படுகிறது, தமிழ்நாடு, கேரளா ஆகிய மாநிலங்களில் சூரிய சித்தாந்தம் அடைப்படையில் தான் பஞ்சாங்கமும், முகூர்தங்களும் நிச்சயிக்கப்படுகிறது, ஆதலால் நம்மை பொறுத்த வரை சூரிய அஸ்தமனம் பிறகு வருவது நல்ல முகூர்த்தம் அல்ல. ஆனால் ஆந்திராவில் திருமணம் கூட நள்ளிரவில் நடைபெறுகிறது. தமிழ் மாதங்கள் சூரியனின் அடைப்படையில் தான் கணிக்கப்படுகிறது.

இரண்டு முறையிலும் ஜோதிடம் எழுதப்படுகிறது. சந்திரன் திதி, கரணம், நட்சத்திரம் நிர்ணயம் செய்யவும், சூரியன் நாள் நிர்ணயம் செய்யவும், சூரியனும், சந்திரனும் யோகம் நிர்ணயம் செய்யவும் பயன்படுகிறது, இந்த ஐந்து அங்கங்களை (நாள், திதி, கரணம், யோகம் ,நட்சத்திரம்) ஆகியவை கொண்டு பஞ்சாங்கம் எழுதப்படுகிறது.

விளக்கத்துக்கு நன்றி சதா..!
avatar
ARR
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1123
மதிப்பீடுகள் : 87

View user profile http://www.mokks.blogspot.com

Back to top Go down

Re: நாள் 11-மாதம் 11-வருடம் 2011: 6 நட்சத்திரக்காரர்களுக்கு நவம்பர் 11-ல் யோகம்; வழிபட வேண்டிய தெய்வங்கள்

Post by T.N.Balasubramanian on Mon Oct 31, 2011 12:59 pm

[quote="ARR"]
@T.N.Balasubramanian wrote:(11-11-11-11-11-11)

2011 ஆம் வருடம்,
11 ஆம் மாதம்,
11தேதி,
11 காலை மணி,
11நிமிடம்,
11வினாடியில் பிறக்கும் குழந்தை
சீரும் சிறப்பும் அடைந்து
பேறும் புகழும் அடைய பிரார்த்திக்கிறேன்.
ரமணியன்.

ஏன் ரமணியன் அக்குழந்தைக்கு மட்டும் சிறப்பு வேண்டுதல்..?

மண்ணில் பிறக்கும் எல்லாக்குழந்தைகளுமே நலமுடன் வாழட்டும்..!
[/குஓட்டே]

தலைப்பு 11/11/11/11/11/11 என்பதால் அந்த வாழ்த்து.
மண்ணில் பிறக்கும் எல்லா குழந்தைகள் மட்டுமின்றி,பிறந்த யாவரும் நலமுடன் ,வளமுடன் வாழ,
வாழ்த்துவதும் விரும்புவதும்,யாமே! அன்பு மலர் அன்பு மலர் அன்பு மலர்
ரமணியன்.
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22263
மதிப்பீடுகள் : 8293

View user profile

Back to top Go down

Re: நாள் 11-மாதம் 11-வருடம் 2011: 6 நட்சத்திரக்காரர்களுக்கு நவம்பர் 11-ல் யோகம்; வழிபட வேண்டிய தெய்வங்கள்

Post by பிரசன்னா on Mon Oct 31, 2011 5:46 pm

@ARR wrote:
@பிரசன்னா wrote:
@ARR wrote:நாம் பஞ்சாங்கம் அமாவாசை அடிப்படையிலானது.. ஆஙகில நாட்கள் எவ்வித பாதிப்பையும் ஏற்படுத்தாது..

கும்ப ராசிக்கு முருகனை வழிபடணுமா..? நமக்கும் அந்தாளுக்கும் கேப் ஜாஸ்தியாயிற்றே..!

மீண்டும் சந்திப்போம்

நண்பரே கொஞ்சம் புரியும்படி சொல்லவும்..... நானும் கும்ப ராசி / சதய நட்சத்திரம் என்பதால் இந்த ஆர்வம்...

டரியல் ஆகாதீங்க பிரசன்னா..!

நாங்க நாமதாரிக் கூட்டம்.. பெருமாள்தான் எங்களுக்கு எல்லாம்.. அதனால் அப்படிச் சொன்னேன்..

எங்க அப்பத்தா அடிக்கடி சொல்லும்..

"முருகன் வேண்டியவுடன் எதையும் தரமாட்டான்.. ட்யூப் லைட் போல கொஞ்சம் லேட் ஆகும்..

ஐயப்பன் ரொம்ப தாமதிப்பான்.. சோடியம் வேப்பர் போல..

நம்ப சாமிதாண்டா குண்டு பல்பு.. ஸிவிட்சை போட்டவுடனே எரியும்..

இந்த உதாரணம் ரெஸ்பான்ஸ் டைமுக்கு மட்டும்தான்..

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
பிரசன்னா
சிறப்புப் பதிவாளர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5599
மதிப்பீடுகள் : 830

View user profile

Back to top Go down

Re: நாள் 11-மாதம் 11-வருடம் 2011: 6 நட்சத்திரக்காரர்களுக்கு நவம்பர் 11-ல் யோகம்; வழிபட வேண்டிய தெய்வங்கள்

Post by Sponsored content

Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை

Back to top Go down

View previous topic View next topic Back to top

Permissions in this forum:
You cannot reply to topics in this forum