புதிய பதிவுகள்
» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Today at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Today at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Today at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Today at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Today at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Today at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Today at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Today at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Yesterday at 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Yesterday at 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Yesterday at 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Yesterday at 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Yesterday at 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Yesterday at 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Yesterday at 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Yesterday at 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Yesterday at 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Yesterday at 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Yesterday at 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Yesterday at 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Yesterday at 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

» ஏழையின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்!
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:50 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Poll_c10சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Poll_m10சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Poll_c10 
69 Posts - 58%
heezulia
சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Poll_c10சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Poll_m10சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Poll_c10 
41 Posts - 34%
T.N.Balasubramanian
சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Poll_c10சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Poll_m10சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Poll_c10 
5 Posts - 4%
mohamed nizamudeen
சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Poll_c10சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Poll_m10சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Poll_c10 
4 Posts - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Poll_c10சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Poll_m10சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Poll_c10 
111 Posts - 60%
heezulia
சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Poll_c10சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Poll_m10சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Poll_c10 
62 Posts - 33%
T.N.Balasubramanian
சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Poll_c10சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Poll_m10சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Poll_c10 
7 Posts - 4%
mohamed nizamudeen
சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Poll_c10சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Poll_m10சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Poll_c10 
6 Posts - 3%

நிகழ்நிலை நிர்வாகிகள்

சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று நூலகம் செல்வதே கவிஞர் இரா.இரவி


   
   
eraeravi
eraeravi
தளபதி

தளபதி
பதிவுகள் : 1817
இணைந்தது : 08/07/2010
http://www.kavimalar.com

Posteraeravi Sat Oct 15, 2011 8:08 am

சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? –
சாலவும் நன்று நூலகம் செல்வதே கவிஞர் இரா.இரவி

ஆலயங்களினால் தான் இன்று மனிதன் அமைதி இழந்து தவிக்கின்றான். இந்தியா முழுவதும்
இராமருக்கு 7000 கோயில்கள் இருந்தபோதும். பாபர் மசூதி இருக்கும் இடத்தில் தான்
இராமர் பிறந்தார். எனவே அங்குதான் ஆலயம் கட்டுவோம் என்று பாபர் மசூதியை
இடித்ததன் விளைவாக நாடெங்கும் கலவரம் வெடித்தது. 1000-க்கும் மேற்பட்ட மனித
உயிர்கள் பலியாயின. விலை மதிப்பற்ற மனித உயிர்கள் மடிந்தன. கோத்ரா ரயில்
படுகொலை இப்படி தொடரும் வன்முறை.

பாகிஸ்தானில் இஸ்லாமிய தீவிரவாதிகள் சிலர் மசூதியில் தொழுது கொண்டு
இருந்தவர்களை குண்டு வைத்துக் கொன்றனர். இந்தியாவில் உள்ள இந்துமதவெறி
அமைப்புகள் வன்முறையைத் தூண்டி விடுகின்றன. ஒவ்வொரு பிள்ளையார், சதுர்த்தியின்
போதும் வயிற்றில் நெருப்பைக் கட்டிக் கொண்டு இருக்க வேண்டி உள்ளது.

ஒரு கன்னத்தில் அடித்தால் மறு கன்னத்தைக் காட்டு என்று பொறுமையும் சகிப்புத்
தன்மையையும் போதித்த கிறித்துவ ஆலயங்களை உடைப்பது, சிதைப்பது என்ற நிலை இன்று
தொடர்ந்து கொண்டு இருக்கின்றது. வட மாநிலங்களில் கிறித்துவர்களை அடிப்பது,
விரட்டுவது, எரிப்பது என வன்முறை தொடர்ந்து கொண்டு இருக்கின்றது.

ஆலயங்களில் இருப்பவன், இலலாதவன் என்று வேறுபடுத்தும் விதமாக பணம்
கட்டுபவர்களுக்கு அருகில் சிறப்பு தரிசனம், ஏழைகளுக்கு தூரத்தில் தர்ம தரிசனம்
என வேறுபாடு. அது மட்டுமல்ல; பிறப்பால் பிராமணராக இருந்தால் மட்டும் கருவறையில்
அனுமதி, அனைத்து ஜாதியினர் அர்ச்சகராகலாம் என்று சட்டம் இயற்றிய போதும்,
பயிற்சிகள் தந்த போதும் இன்னும் நாட்டில் நடைமுறைக்கு வரவில்லை. ஆனால்
நூலகத்தில் எந்த வேறுபாடும் இல்லை. எல்லோரும் சமம். யாரும் எங்கும் செல்லலாம்.

ஆலயங்களுக்குள் நுழைவதே பெரும் போராட்டமாக உள்ளது. பல்வேறு சோதனைகள்
செய்துதான் உள்ளே அனுப்புகின்றனர். காரணம் என்ன? இந்த நிலை ஏன் வந்தது? மதம்,
மனித மனங்களை நெறிப்படுத்துவதற்குப் பதிலாக ஏன் ? இப்படி வெறிப்படுத்தும் வேலையை
செய்து கொண்டு இருக்கின்றது.

நூலகம் என்பது அறிவுத் திருக்கோயில், இங்கு வந்தவர்கள் IAS, IPS என்று
உயர்கின்றார்கள். சென்னை கன்னிமாரா நூலகத்திலும்,அண்ணா நூலகத்திலும் லட்சக் கணக்கான

நூல்கள் உள்ளது.

மதுரை மாவட்ட மைய நூலகத்தில் 2 இலட்சம் நூல்கள் இருக்கின்றன.
அப்படி என்றால் 2 இலட்சம் அறிஞர்கள் இருக்கின்றார்கள் என்று பொருள். நூலகம்
என்பது பெரிய சொத்து, மனிதனை, மனிதனாக்கும், அறிஞனாக்கும், விஞ்ஞானியாக்கும்
திறன் வளர்க்கும்.

ஓர் இனத்தை அழிக்க வேண்டுமானால், முதலில் அவர்களின் இலக்கியத்தை அழிக்க
வேண்டும் என்பார்கள். அதனால் தான் இன்று இனவெறியோடு தமிழர்களை அழிக்கும்
சிங்களத்தினர், அன்று தமிழர்களின் இலக்கியக் களஞ்சியமான மாபெரும் யாழ் நூலகத்தை
தீயிட்டுக் கொளுத்தினார்கள்.

ஒரு நூலகம் திறக்கப்படும்போது நூறு சிறைச் சாலைகள் மூடப்படுகின்றன .இது
பொன்மொழி. ஆனால் இன்று, ஒரு ஆலயம் திறக்கப்படும்போது நூறு பேர்
கொல்லப்படுகின்றனர் என்பது பு்துமொழி. ஆலயங்கள் அன்பைப் போதிப்பதற்கு பதிலாக
இன்று வம்பைப் போதிக்கின்றன.

தசாவதாரம் திரைப்படத்தில், கலைஞானி கமலஹாசன் ஒரு வசனம் பேசுவார். கடவுள் இல்லை
என்று சொல்லவில்லை, இருந்தால் நன்றாக இருக்கும் என்று. இந்த வசனம் சிறப்பாக
இருந்தது என்று நான் ஒரு சமயம் பேராசிரியர் கு .ஞான சம்பந்தன் மூலமாக கமலை
செல்லிடப் பேசியில் தொடர்பு கொண்டு அவரைப் பாராட்டிய போது, அவர் சொன்னார்,

இந்த வசனத்தைச் சொன்னது உங்கள் மதுரைக்காரரான
அறிஞர் தொ. பரமசிவம் என்றார். கடவுளைக் கேலி செய்து அறிஞர் தொ. பரமசிவம்பேசியபோது

பேராசிரியர் கு .ஞான சம்பந்தன் கடவுள் இல்லை என்கிறீர்களா என்ற போது கடவுள் இல்லை
என்று சொல்லவில்லை, இருந்தால் நன்றாக இருக்கும். என்றார் .இந்தவசனம் பேசும் போது

நானும் உடன் இருந்தேன் .அதைத்தான் படத்தில் சொன்னேன் .என்றார் கமல் இது வசனம் மட்டுமல்ல,
நினைத்துப் பார்த்தால் உண்மை விளங்கும்.

மாமனிதர் அப்துல்கலாம் அவர்கள் குடியரசுத் தலைவராக பதவி ஏற்றபோது நூலகரை
வரவழைத்துத்தான் கவுரவப்படுத்தினார்கள். இன்று சந்திராயன் சந்திரனில் தேசியக்
கொடியை நான்காவது நாடாக நட்டு இருக்கின்றது என்றால் அதற்குக் காரணம் அறிவியல்
நூல் அறிவு. கோவை அருகே கோதவாடி என்ற கிராமத்தில் பிறந்த மயில்சாமி அண்ணாத்துரை என்ற தமிழர்.

ஆலயத்தில் பூஜை மட்டும் செய்து கொண்டிருந்தால் சந்திராயனை நம்மால்
அனுப்பி இருக்க முடியாது.

அறிஞர் அண்ணா படிக்கத் தொடங்கிய ஒரு நூலைப் படித்து முடிக்க வேண்டும்
என்பதற்காக அறுவை சிகிச்சையை ஒரு நாள் தள்ளி வைத்தார்கள். கன்னிமாரா நூலகத்தில்
எந்த நூல் எங்கு உள்ளது என்பது நூலகரைக் காட்டிலும் அறிஞர் அண்ணாவிற்கு நன்கு
தெரியும். ஆங்கில அறிஞர்களிடையே அண்ணா பேசும்போது ABCD என்ற நான்கு எழுத்து
வராமல் நூறு வார்த்தைகள் சொல்ல முடியுமா? என்று கேட்டார். யாருக்கும்
தெரியவில்லை. ஒரு பையனைக் கூப்பிட்டு one, two, three சொல்லச் சொல்லி Ninty
nine வரை சொன்னதும், Stop என்றார். 100 வார்த்தை வந்துவிட்டது. இத்தகைய
நுட்பமான அறிவு, அறிஞர் அண்ணாவிற்கு வரக் காரணம் நூலக அறிவு. அறிஞர் அண்ணா
ஆலயம் செல்வதில்லை. ஆனால் நூலகம் செல்வதை வழக்கமாக கொண்டிருந்ததால் தான்
அறிஞராக மாற முடிந்தது.

மாவீரன் பகத்சிங் தூக்குமேடைக்குச் செல்லும் வரை நூல்கள் படித்துக்
கொண்டிருந்தார். 10-ஆம் நூற்றாண்டு பாரசீக மன்னன் அப்துல் காசிம் இஸ்மாயில்
1,70,000 நூல்கள் வைத்து இருந்தார். அவரது படைத்தளபதிகள் படையெடுத்துச்
செல்லும்போது நூல்களைத் தான் அள்ளி வருவார்களாம். அக்பருக்கு எழுதப் படிக்கத்
தெரியாது. ஆனாலும் நூல்களைப் படிக்கச் சொல்லி, கேட்டு அறிந்து மிகப் பெரிய
அறிஞராக உருவானார். நெப்போலியன் சிறையில் இருக்கும் போது நூல்களைத்தான்
படித்தார். ஜவகர்லால் நேருவிற்கு ஆலயம் செல்லும் பழக்கம் இல்லை. ஆனால் நூல்கள்
படிக்கும் பழக்கம் நிறைய இருந்தது.

தந்தை பெரியார் பிள்ளையார் சிலை உடைப்பு போராட்டம் நடத்தும்போது கோவிலிலிருந்து
எடுத்து வந்து பிள்ளையாரை உடைக்க மாட்டார். தனது சொந்தப் பணம் கொடுத்து
பிள்ளையார் சிலை வாங்கி வரச் சொல்லி உடைத்துக் காட்டி போராட்டம் நடத்தினார்.
அறிவு நாணயமும், பொது ஒழுக்கமும் மிகுந்தவர் தந்தை பெரியார். ஆனால் இன்று எந்த
நாத்திகனும் ஆலயத்தைச் சிதைப்பதில்லை. ஆனால் ஆத்திகர்கள் தான், மாற்று
மதத்தினர் ஒருவருக்கொருவர் ஆலயங்களைச் சிதைத்துக் கொண்டு மோதிக் கொண்டு
பலியாகின்றனர். மதுரை சிறையில் 5000 கைதிகளில் அனைவரும் ஆத்திகர்கள் தான்.
ஆலயம் மனதை பண்படுத்தவில்லை என்பதற்கு இதுதான் எடுத்துக்காட்டு.

காந்தியடிகளுக்கு வாசிக்கும் பழக்கம் அதிகம் உண்டு. அதனால்தான் திருக்குறளின்
காரணமாக தமிழையும் நேசித்தார். சத்திய சோதனை நூல் வடிக்கக் காரணமாக இருந்தது
நூல் அறிவு. மாமேதை அப்துல்கலாம், அக்னிச்சிறகுகள் எனும் தன்னம்பிக்கை விதையை
பல்வேறு மொழிகளில் படைத்து விற்பனையில் சாதனை படைத்தது. இந்நூல் வடிக்க காரணமாக
இருந்தது நூல் அறிவு. தனிமையையும், கவலையையும் விரட்டுவது நூல்கள். வீடு
கட்டும் போது வரவேற்பறை, படுக்கையறை, பூஜையறை, கழிவறை கட்டுகின்றோம். நூலக அறை
கட்டுவதில்லை. இனி ஒவ்வொரு தமிழரும் வீடு கட்டும்போது நூலக அறை கட்ட வேண்டும்.
பட்டிமன்ற நடுவர். அறிஞர், முனைவர் இரா. மோகன் அவர்தம் வீட்டிற்குச்
சென்றவர்களுக்கு இதன் உண்மை விளங்கும். வீட்டில் நூலக அறை வேண்டும் என்கிறோம்.
ஆனால் நூலகத்திற்குள் வீடு உள்ளது என்று சொல்லும் அளவிற்கு திரும்பிய பக்கம்
அனைத்திலும் நூல்கள்தான் இருக்கும். சங்கத் தமிழ் முதல் இன்று வந்த நூல்கள் வரை
அனைத்தும் இருக்கும். அதன் காரணமாகத்தான் பட்டிமன்றங்களில் நடுவராகக்
கலக்குகின்றார். 85 நூல்கள் எழுதிக் குவித்துள்ளார்.

இது கணினி யுகம், இணைய தளங்கள், மின்னணு நூலகங்கள் வந்துவிட்டன. விஞ்ஞான உலகில்
இன்று இணைய தளங்களில் புகழ் பெற்ற தேடுதளங்களான கூகுள். யாகூ. என பல்வேறு
தளங்களில் உங்களுக்கு என்ன தேவையோ அதைக் கேட்டால் அது தொடர்பான அனைத்துத்
தகவல்களும் உங்கள் விரல் நுனியில் வந்துவிடும், விழிகளுக்கும் செவிகளுக்கும்
விருந்து தரும் பல தகவல்கள் களஞ்சியமாக உள்ளது. இணையம் என்பது தீ போன்றது, தீயை
சமைக்கவும், வெளிச்சம் பெறவும், ஆக்க சக்தியாகப் பயன்படுத்தலாம். தீயை
எரிக்கவும், கொளுத்தவும் அழிவு சக்தியாகவும் பயன்படுத்தலாம். இணையத்தை இனி
அறிவு வளர்க்கும் ஆக்க சக்தியாக மட்டும் பயன்படுத்துவோம். அறிவைத் சிதைக்கும்
ஆபாச அழிவு சக்திக்குப் பயன்படுத்தாமல் இருப்போம்.
எனவே, சாலவும் நன்று எது? என்று கேட்டால் நூலகம் செல்வதே என்பது எனது கருத்து.
ஆலயம் செல்வது இன்று ஆடம்பரமாகி விட்டது. எனவே மனிதனைப் பண்படுத்தும்,
நெறிப்படுத்தும் மகிழ்வூட்டும், அறிவுத்திறன் வளர்க்கும் நூலகம் செல்வோம். நமது
குழந்தைகளை நூலகம் அழைத்துச் சென்று பழக்குவோம். வாசிக்கும் பழக்கத்தை
சுவாசிப்பதைப் போன்று வழக்கப்படுத்துவோம். நமது பண்பாட்டைச் சிதைத்துச்
சீரழிக்கும் திரைப்படம் தவிர்த்து அத்தி பூத்த மாதிரி வரும் சில நல திரைப்படங்களை மட்டும் பார்போம்
தொல்லைக்காட்சியாகிவிட்ட பழிக்குப் பழி வாங்கும் வக்கிரம் வளர்க்கும் தொலைக்காட்சித் தொடர்கள்
பார்ப்பதை விடுத்து ,நூலகம் செல்வோம். ஆரோக்கியமான மனித சமுதாயம்
படைப்போம். ஜாதி மத மோதல்களை விடுப்போம். பகுத்தறிவைப் பயன்படுத்துவோம்.
மனிதநேயம் வளர்ப்போம். மானுடம் காப்போம். சமத்துவ, சமதர்ம சமுதாயம் அமைப்போம்.

சதாசிவம்
சதாசிவம்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1758
இணைந்தது : 02/04/2011

Postசதாசிவம் Sat Oct 15, 2011 9:35 am

நல்ல கட்டுரையை பகிர்தமைக்கு நன்றி ........... சூப்பருங்க



சதாசிவம்
சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி 1772578765

"தேமதுரத் தமிழோசை திசையெங்கும்
பரவும் வகை செய்தல் வேண்டும் "



Authors who never give you something to disagree with never give you anything to think about " - Michael Larocca
ஆளுங்க
ஆளுங்க
இளையநிலா

இளையநிலா
பதிவுகள் : 557
இணைந்தது : 31/03/2011
http://aalunga.in

Postஆளுங்க Sat Oct 15, 2011 12:44 pm

உங்கள் கருத்தில் இருந்து மாறுபடுவதற்கு வருந்துகிறேன்...

"ஆலயம் தொழுவது சாலவும் நன்று" என்பது ஒளவை வாக்கு..
இதனை மட்டும் வைத்து வாதிடல் நன்றோ?

ஆலயம் தொழுவது சாலவும் நன்று
என்று தான் எழுதப்பட்டுள்ளது...
"ஆலயம் தொழுவது மட்டுமே சாலவும் நன்று" என்று சொல்லவில்லையே??

அதே கொன்றை வேந்தனில் இருக்கும் கீழ்காணும் வரிகளையும் படியுங்கள்:
கைப் பொருள் தன்னின் மெய்ப்பொருள் கல்வி
இதன் மூலம் கல்விச் செல்வமே அனைத்தை விட உயர்ந்தது என்று கூறவில்லையா?

அதே போல, ஓதுவதை விட ஒழுக்கம் முக்கியம் என்றும் எழுதப்பட்டு இருக்கிறது!!
ஓதலின் நன்றே வேதியர்க்கு ஒழுக்கம்

எனவே, சாலவும் நன்று ஆலயம் தொழுவது..
எனினும், கல்வியும் ஒழுக்கமும் அதை விட முக்கியம் என்று தான் ஒளவை கூறுகிறார்..

பி.கு:
கடவுள் மேல் நம்பிக்கை இருந்தாலும் சரி இல்லாவிடிலும் சரி , "ஆலயம் தொழுவது மட்டுமே சாலவும் நன்று" என்றே கூறுவேன்..

தாயினையும் தந்தையையும் தெய்வமாகத் தொழலாமே!
அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம்

தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை
தாயிற் சிறந்ததொரு கோயிலும் இல்லை




சாலவும் நன்று ஆலயம் தொழுவதா? நூலகம் செல்வதா? – சாலவும் நன்று  நூலகம் செல்வதே   கவிஞர் இரா.இரவி Yesterday_today_tomorrow%2Bcopy-793757

மனிதனாய் ஒரு மண்ணில் பிறக்கிறோம்; அதன் பின் பேசுகிறோம்
எனவே, முதலில் மனிதன், அதன் பின் இந்தியன்; பின் தமிழன் !
-அன்புடன்
ஆளுங்க
அன்பு தளபதி
அன்பு தளபதி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9227
இணைந்தது : 26/12/2009
http://gkmani.wordpress.com

Postஅன்பு தளபதி Sat Oct 15, 2011 2:33 pm

நல்ல கட்டுரை ஆனால் இன்று அரசு நூலகங்களின் கதியை சென்று பார்த்தால் மிக மோசமாக இருக்கிறது. அரசு கவனம் கொள்ளுமா பல பத்தாண்டுகளுக்கு முன்பு உள்ள புத்தகங்களே உள்ளன, புதியவை சொர்ப்பம்தான் அதுவும் சிறுவர் நூலாகவும் ஆங்கில நூலாகவும் உள்ளது

Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

Similar topics
» எல்லோர்க்கும் பிடிக்கும் ! நூல்ஆசிரியர் : கவிஞர் வாசகன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» கிழிந்த நோட்டு நூலாசிரியர் : கவிஞர் பாக்யபாரதி நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» மெல்லப் பதுங்கும் சாம்பல் நிறப் பூனை ! நூல் ஆசிரியர்கள் : தமிழில் கவிஞர் வதிலை பிரபா ! ஆங்கில மொழிபெயர்ப்பில் கவிஞர் அமரன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !
» நித்திரைப் பயணங்கள் !நூல் ஆசிரியர் கவிஞர் மு .ஆ .பீர்ஒலி.விமர்சனம் கவிஞர் இரா .இரவி

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக