ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நாய் புடிக்கலாம் வாங்க - பாலா

View previous topic View next topic Go down

நாய் புடிக்கலாம் வாங்க - பாலா

Post by balakarthik on Wed Oct 05, 2011 2:20 pm

முன்கூறிப்பு :-இது வழக்கமான மொக்கைப் பதிவல்ல. எனவே ஜோக் கம்மியா இருக்கு, உன் டச் இல்ல என்ற பின்னூட்டங்கள் செல்லாது செல்லாது. ஜோக்கே இல்லாம ஒரு காமெடி எழுதும் முயற்சி எனலாம்.முதல் ட்ரை(try) என்பதால் கொஞ்சம் ட்ரையாக (dry) இருக்கலாம். இருப்பினும் உங்கள் பார்வைக்கு...

”வீடில்லாததும் ஈடில்லாததுமான என் நாய்” இந்த வரிகள் எங்கே படித்தேன் என்று நினைவிலில்லை. ஆனால் அன்று முதல் ஒரு கேள்வி என் ஆழ்மனதில் எதிரொலிக்கத் தொடங்கியது. அது அவருடைய நாய் என்றால் அவர் வீட்டில் இருக்கலாமே? அவருக்கே வீடு இல்லையெனில் அதையேன் நாய்க்கு வீடில்லை என்று சொல்ல வேண்டும்? போகட்டும். அந்த நாயைப் போலவே (அந்தப் போலவே இல்லை) அந்த வரியும் அவருக்கு சொந்தமானது. முழுமையாக தெரியாமல் குழம்புவானேன்?

உயிர்களிடத்தில் அன்பு செலுத்துவதில் எனக்கு நிகர் யாருமில்லை என நினைப்பவன் நான். நாய் வளர்க்கப் போகிறேன். என்னைப் போலவே நாய் வளர்க்க… இங்கே கொஞ்சம் நில்லுங்கள். நானும் நாய் வளர்க்க ஆசைப்படுகிறேன். அதே போல் நீங்களும் ஆசைபடுகிறீர்கள். இதை எப்படி சொல்வது? என்னைப் போல் நாய் வளர்க்க ஆசைப்படும் நீங்கள் என்றால் நான் நாயாகிவிடும் அபாயம் இருக்கிறது. நாய் வளர்க்க வேண்டும் என்று நான் ஆசைப்படுவது போல நீங்களும் என்று எழுதலாம்தானே? எழுதலாம். அப்புறம் நடை சுவாரஸ்யமாக இருக்காது. அந்த நடை கிடக்கட்டும். வாங்க. நாய் கடைக்கு ஒரு நடை போயிட்டு வருவோம். எவ்வளவு நேரம்தான் நீங்களும் நிற்பீர்கள்?

நாய் வாங்குவதில் பல சூட்சமங்கள் உண்டு.இது போன்று நுணுக்கமான விஷயங்களில் என் அளவுக்கு விவரம் தெரிந்தவர்கள் யாரும் இல்லை என உறிதியாக சொல்கிறேன். எந்த நாயாக இருந்தாலும் அதன் பெற்றோரின் பெயர் தெரிந்துக் கொள்ள வேண்டும். பெயர் வைப்பதில் நம்ம மக்கள் விவரமானவர்கள். ஒபாமாவின் பெயரை தன் நாய்க்கு வைத்துவிட்டு அமெரிக்காவுக்கே தான் தான் எசமான் என்ற ரீதியில் யோசிப்பவர்கள். இல்லையேல் ஒசாமா என்று பெயரிட்டு மாலையில் அதை வாக்கிங் அழைத்து செல்லும் போது ஸ்காட்லாந்து போலிஸ் கணக்காக ஒசாமா என் கையில் என கதையளப்பார்கள். ஒபாமாவோ, ஒசாமாவோ நமக்கு வேண்டாம். இல்லையேல் நம் நாய்க்குட்டியை ஒ.நாய் என்று பலர் கிண்டலடிக்க நேரிடும்.நில்லுங்க. இங்கே உங்களுக்கு ஒரு சந்தேகம் வரலாம். பத்தி பெரிதாகிறது. எனவே அந்த சந்தேகத்தைப் பத்தி அடுத்த பத்தியில் பார்ப்போம்.அடுத்த பத்தி வரை நடந்து வந்து அங்கே நிற்கவும்.

நாயை நாய் என்று சொன்னால் அதன் அப்பா நாயையும் நாய் என்றுதானே சொல்ல வேண்டும்? அப்படியென்றால் எப்படி ஓ.நாய் ஆகும்? இல்லை,பெயரை வைத்து கூப்பிட்டால் நம் நாயின் பெயருக்கு முன்னால்தானே ”ஓ” சேரும்? இந்த சந்தேகம் உங்களுக்கு வந்ததா என்ற சந்தேகம் எனக்குண்டு. அதைப் பற்றி அடுத்த பத்தியிலும் பார்க்க மாட்டோம். பயப்பட வேண்டாம். இந்தப் பத்தியில் இந்த சந்தேகத்தை மட்டும் தீர்ப்போம். எதையும் நாம் அரைகுறையாக செய்வோம் என்பதால் இது சாத்தியமே. இன்னும் நாய் வாங்கவே இல்லை. அதற்குள் இந்த பெயர் பிரச்சினை தேவையில்லாதது. வேகமாய் நடங்க. கடை மூடிட போறான். நாய்கடைக்கு முன்னால் ஒரு நாயர் கடை உண்டு. டீ நன்றாக இருக்குமென நண்பன் சொன்னான்

என் நண்பனின் பெயர் நீலமேகம். ப்ளு க்ராஸில் உறுப்பினர். அதனால் அவன் பெயரை மாற்றிக் கொள்ளவில்லை. அந்த பெயர் இருந்ததாலும் அவன் அதில் சேரவில்லை. அது தற்செயலாக நடந்த ஒன்று. அவன் சொன்னான், நாய்களை வீட்டில் வைத்து வளர்ப்பது அவற்றின் மீது நம் அன்பு செலுத்தவதற்கு என்பது சொத்தை வாதமாம். அவற்றின் மீது உண்மை அன்பிருப்பவர்கள் அதை சுதந்திரமாக சுற்றவே அனுமதிப்பார்களாம். நானும் அவனும்தான் அறையை ஷேர் செய்திருக்கிறோம். வீட்டை நான் தான் சுத்தப்படுத்துவேன். வீட்டை பராமரிப்பதில் எனக்கு போட்டியாளரே இருக்க முடியாது. ஆனால் வாடகையை அவன் மட்டும் பார்த்துக் கொள்கிறான். மோசக்காரன். இவ்வளவு விலை கொடுத்து வாங்கி செல்லும் என் ஆசை நாயை நான் இல்லாத போது அவிழ்த்துவிட்டால் என்ன செய்வது?யோசிக்க வேண்டிய விஷயம். எனக்கு என ஒரு வீடு இல்லாத போது நாய் அவசியமா?

வீடில்லாத,ஈடில்லாத நான்..இப்போது என்ன செய்ய....:வணக்கம்:

பின்குறிப்பு:- இந்த பதிவில் பயன் படுத்தபட்டுள்ள வண்ணங்கள் அனைத்தும் ஈகரையிலிருந்தும் வண்ணம் பூசும் டெக்நிக்கை அய்யம் பெருமாளிடமிருந்தும் கடன் வாங்கி கல்லா கட்டியுள்ளேன் என்பதை நேரடியாகவும் மறைமுகமாகவும் பொது அஞ்சல் வழியிலும் கூறிக்கொள்வதில் பெருமை படுகிறேன் நன்றி அன்பு மலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாய் புடிக்கலாம் வாங்க - பாலா

Post by dsudhanandan on Wed Oct 05, 2011 2:34 pm

வீடில்லாத,ஈடில்லாத நான்..இப்போது என்ன செய்ய.

தெரு நாய்க்கு 2 பொறை வாங்கி போடலாம்....

அப்புறம் புளு க்ராஸ் உறுப்பினர் சொல்வது சரியா? என அய்யம் பெருமாள்கிட்ட சொல்லி ஒரு பொதுமடல் எழுதலாம்
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: நாய் புடிக்கலாம் வாங்க - பாலா

Post by balakarthik on Wed Oct 05, 2011 2:37 pm

நல்ல ஆலோசனை அப்படியே பொறை வாங்குவதற்க்கு காசும் தகவல் கொடுப்பதற்க்கு ஒரு மொபைலும் வாங்கி கொடுத்தால் இன்னும் நலமாக இருப்பேன்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாய் புடிக்கலாம் வாங்க - பாலா

Post by அருண் on Wed Oct 05, 2011 2:44 pm

ஒபாமாவின் பெயரை தன் நாய்க்கு வைத்துவிட்டு அமெரிக்காவுக்கே தான் தான் எசமான் என்ற ரீதியில் யோசிப்பவர்கள்.
சூப்பருங்க

தெரு நாய் கடித்து போல் கொதரமா ஹட்ச் டாக் போல் ஸ்மூத் அ இருக்கு பாஸ்.! சூப்பருங்க

சரி சரி வாங்க டைம் ஆயிடுது நாய் பிடிக்க போவோம்..!


Last edited by அருண் on Wed Oct 05, 2011 3:14 pm; edited 2 times in total
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12660
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: நாய் புடிக்கலாம் வாங்க - பாலா

Post by balakarthik on Wed Oct 05, 2011 2:47 pm

மணியோ இப்போ இங்க ஒன்ன்ட்ர
அதுக்குள்ள எதுக்கு நொன்ற

பொறுமையா போகலாம் தம்பி ஆறுதல்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாய் புடிக்கலாம் வாங்க - பாலா

Post by aathma on Wed Oct 05, 2011 3:51 pm

balakarthik wrote:எனக்கு என ஒரு வீடு இல்லாத போது நாய் அவசியமா?
வீடில்லாத,ஈடில்லாத நான்..இப்போது என்ன செய்ய....

வீட்டோடு மாப்பிள்ளையாகி விட்டு
கையோடு ஒரு நாயையும் வாங்கிக் கொண்டு போனால்
மாமனார் கவனித்து கொள்வார் இரு ஜீவன்களையும் சிப்பு வருது
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: நாய் புடிக்கலாம் வாங்க - பாலா

Post by balakarthik on Wed Oct 05, 2011 4:42 pm

யோசனை நல்லாத்தான் இருக்கு ஆனா அதுக்கெல்லாம் ஒரு கொடுப்பினை வேண்டுமே நாமல்லாம் அந்த அளவுக்கு நல்ல ஆத்மா கிடையாது


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாய் புடிக்கலாம் வாங்க - பாலா

Post by aathma on Wed Oct 05, 2011 4:46 pm

balakarthik wrote:நாமல்லாம் அந்த அளவுக்கு நல்ல ஆத்மா கிடையாது

You are Nallakarthik so you can புன்னகை
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: நாய் புடிக்கலாம் வாங்க - பாலா

Post by balakarthik on Wed Oct 05, 2011 4:49 pm

aathma wrote:
balakarthik wrote:நாமல்லாம் அந்த அளவுக்கு நல்ல ஆத்மா கிடையாது

You are Nallakarthik so you can புன்னகை

of course but i am an empty can you know


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாய் புடிக்கலாம் வாங்க - பாலா

Post by aathma on Wed Oct 05, 2011 5:08 pm

balakarthik wrote:
aathma wrote:

You are Nallakarthik so you can புன்னகை

of course but i am an empty can you know

காலியான குடத்தில் நீர் ஊற்றலாம்
நிரம்பி இருக்கும் குடத்தில் நீர் ஊற்றமுடியாது - 2011 இன் சிறந்த தத்துவம்

ஒரு மனிதன் empty ஆக இருந்தால் நிறைய உலக ஞானங்களை பெறலாம்

So Karthik , You are the best person to win the world and also obtain the dog புன்னகை

avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: நாய் புடிக்கலாம் வாங்க - பாலா

Post by உதயசுதா on Wed Oct 05, 2011 5:08 pm

நொந்து,நூலாகி ஈகரைக்கு போனா ரிலாக்சா இருக்கலாம்ன்னு வந்தா இவன் படுத்தர பாடு தாங்க முடியல.ஏண்டா பாலா இப்படி மொக்கை போடுற.\
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி
avatar
உதயசுதா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11839
மதிப்பீடுகள் : 1070

View user profile

Back to top Go down

Re: நாய் புடிக்கலாம் வாங்க - பாலா

Post by balakarthik on Wed Oct 05, 2011 5:12 pm

உதயசுதா wrote:நொந்து,நூலாகி ஈகரைக்கு போனா ரிலாக்சா இருக்கலாம்ன்னு வந்தா இவன் படுத்தர பாடு தாங்க முடியல.ஏண்டா பாலா இப்படி மொக்கை போடுற.\
மண்டையில் அடி மண்டையில் அடி மண்டையில் அடி

உங்களை மாதிரி நாலு பேரு நொந்து நூலானாத்தானே நானெல்லாம் நூடுல்ஸ் சாப்பிட முடியும் ஸோ எஞ்சாய் வித் ஈகரை அருமையிருக்கு அருமையிருக்கு


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாய் புடிக்கலாம் வாங்க - பாலா

Post by balakarthik on Wed Oct 05, 2011 5:12 pm

aathma wrote:காலியான குடத்தில் நீர் ஊற்றலாம்
நிரம்பி இருக்கும் குடத்தில் நீர் ஊற்றமுடியாது - 2011 இன் சிறந்த தத்துவம்

ஒரு மனிதன் empty ஆக இருந்தால் நிறைய உலக ஞானங்களை பெறலாம்

So Karthik , You are the best person to win the world and also obtain the dog புன்னகை


அடடா என்னா பாசம் என்னா பாசம் 🐰 🐰 🐰 🐰


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாய் புடிக்கலாம் வாங்க - பாலா

Post by aathma on Wed Oct 05, 2011 5:15 pm

balakarthik wrote:
அடடா என்னா பாசம் என்னா பாசம் 🐰 🐰 🐰 🐰

பாசம் சொல்லி பதிலை சொல்லாமல் போகும் பாலா கார்த்திக் வாழ்க மகிழ்ச்சி
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: நாய் புடிக்கலாம் வாங்க - பாலா

Post by balakarthik on Wed Oct 05, 2011 5:18 pm

அட நான் தரையில் ஒரே பாசம்னு சொன்னேன் வழுக்கி விழுந்திட கூடாதுல அதான் - கொக்கு மாக்கான கேள்விக்கு கெக்கே பிக்கே என சிரிக்காமல் சைலெண்டாக வைலண்ட் காட்டுபவர்கள் சங்கம் ஓமன் கிளை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாய் புடிக்கலாம் வாங்க - பாலா

Post by aathma on Wed Oct 05, 2011 5:31 pm

balakarthik wrote:அட நான் தரையில் ஒரே பாசம்னு சொன்னேன் வழுக்கி விழுந்திட கூடாதுல அதான் - கொக்கு மாக்கான கேள்விக்கு கெக்கே பிக்கே என சிரிக்காமல் சைலெண்டாக வைலண்ட் காட்டுபவர்கள் சங்கம் ஓமன் கிளை

தரையை பார்த்து தலை குனியும் தளபதிகார்த்திக் வாழ்க மகிழ்ச்சி
avatar
aathma
மகளிர் அணி
மகளிர் அணி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1481
மதிப்பீடுகள் : 121

View user profile

Back to top Go down

Re: நாய் புடிக்கலாம் வாங்க - பாலா

Post by balakarthik on Sun Apr 01, 2012 8:01 pm

aathma wrote:தரையை பார்த்து தலை குனியும் தளபதிகார்த்திக் வாழ்க மகிழ்ச்சி

எத பார்த்து எத குனிஞ்சாலும் முஸ்டாகுல சாண்ட் நான் ஸிட்டிக்காக இருப்போம் நாங்கள் என்பதை பெருமையாகவும் சிறுமையாகவும் மற்றும் அனைவருக்கும் பொருந்தும் சைஸிலும் சொல்லிக்கொள்ள கடமைபட்டுளேன் :வணக்கம்:


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாய் புடிக்கலாம் வாங்க - பாலா

Post by balakarthik on Sat Apr 07, 2012 12:39 pm

’ஜுஜ்ஜூ…. புஜ்ஜிம்மா…’ என்றெல்லாம் நாயைக் கொஞ்சுகிற ஆசாமிகளைக் கண்டால் எனக்கு எரியும்.

இது பரவாயில்லை. ஒரு நண்பர் இருந்தார் சென்னையில் அவர் வீட்டுக்குப் போனால் அழுக்கு லுங்கியோடு தரையில் உட்கார்ந்து வர்க்கி தின்று கொண்டிருப்பார். அவர் நாய் சோஃபாவில் உட்கார்ந்து டைம்ஸ் ஆஃப் இண்டியா பார்த்துக் கொண்டிருக்கும்.

“கார்த்திக் அண்ணாவுக்கு உக்கார இடம் குடு” என்பார்.

அது எழுந்து கொஞ்சம் நகர்ந்து நிற்கும். உட்கார்ந்த நொடியிலிருந்து தொடைக் கறியை லாவப் போகிறமாதிரி என்னையே பார்த்துக் கொண்டிருக்கும். ஐஸ் கட்டிமேல் உட்கார வைக்கப்பட்ட ஆப்பிரிக்காக்காரன் மாதிரி அசவுகர்யமாக உட்கார்ந்து கொண்டிருப்பேன். கொஞ்சம் அப்படி இப்படி அசைந்தாலும் முன்னங்கால் இரண்டையும் தொடைமேல் தூக்கி வைத்துக்கொண்டு ‘அஹ்ஹ்ஹ்ஹ்….அஹ்ஹ்ஹ்ஹ்ஹ்’ என்று அப்னா தேஷ் பாட்டில் ஆர்.டி.பர்மன் மாதிரி சப்தம் செய்யும்.

எனக்கு சப்த நாடியும் ஒடுங்கி பேதியாகும் போல ஆகிவிடும்.

இதைப் பார்த்து மிஸ்டர் பீன் காமெடி பார்த்த மாதிரி அந்த வீட்டுக்காரர்கள் சிரிப்பார்கள்.

“ஒண்ணும் பண்ணமாட்டான்” என்று வாக்குறுதி தருவார்கள். இதைவிட வேறே ஏதாவது கூடப் பண்ணும் போலிருக்கிறதே என்கிற திகிலைத்தான் அந்த வாக்குறுதி கொடுக்கும்.

நாய் கொஞ்சம் கவனக் குறைவாக இருக்கிற சமயமாகப் பார்த்து, “அப்ப நான் வரட்டுமா” என்று எழுந்தாலும்

“காப்பி சாப்டுட்டுப் போங்க” என்று தடுப்பார்கள்.

’காப்பியாவது பீப்பியாவது’ என்று ஓடிவந்து விடுவேன்.

உலகத்திலேயே அதிகமான தெருநாய்கள் இருக்கிற தெரு இப்போது நாங்கள் இருப்பதுதான். தினமும் ஆட்டோவிலும் லாரியிலும் அடிபட்டு செத்துப் போனவை நீங்கலாக சுமார் எண்பத்தேழு நாய்கள் இருக்கின்றன. நாய்பிடிக்க கார்ப்பரேஷன் வண்டி அனுப்புவதாக இருந்தால் இருபத்தைந்தடி கண்டைனர் லாரி கூடப் போதாது. கேட்டை என்னதான் சாத்தி வைத்தாலும் காம்பவுண்ட் சுவர் ஏறிக் குதித்து வந்து புதுப்புது இடங்களில் ஆய் போய் விடுகின்றன. அதைத் திங்காதே மலச்சிக்கல் வந்துடும், இதைத் திங்காதே மலச்சிக்கல் வந்துடும் என்கிறோம். இந்த நாய்களுக்கு மலச்சிக்கல் வந்து தொலையாதோ!

ஆக்ரோஷக் குரைப்பு, நுழைநரித்தனமான ஊளை, அழுகை, கேள்வி கேட்கிற பாணியில் ‘லொள்’ளிவிட்டு பதிலுக்குக் காத்திருக்கும் செவிட்செல்வங்கள் என்று ராத்திரி பூரா டார்ச்சர். நாய் அழுதால் அந்தத் தெருவில் சாவு நிகழும் என்பார்கள். அது நிஜமென்றால் எங்கள் தெருவில் நியாயத்துக்கு இப்போது நாய்கள் மட்டும்தான் இருக்கவேண்டும்.

எங்கள் அண்டை வீட்டுக்காரர் ஒருத்தர் வளர்க்கும் பெட்டை நாய்க்காக ஏகப்பட்ட ஸ்திரீ லோல் நாய்கள் வட்டமிடுகின்றன. அந்த நாயின் கள்ளக் காதலுக்குப் பிறக்கும் குட்டிகள் அட்வான்ஸ் புக்கிங் ஆகிவிடும்.

நாய் வளர்க்கிற ஆசை எனக்கும் சின்ன வயசில் இருந்திருக்கிறது. ஆனால், எனக்கும் நாய்களுக்கும் சின்ன வயசிலிருந்தே வேவ்லெங்த் மேட்ச் ஆகிறதில்லை.

நுங்கம்பாக்கத்தில் இருந்தபொழுது தெரு நாய் ஒன்றைப் பிடித்து அதைக் கரடு முரடான கப்பாணிக் கயிற்றால் திண்ணைக் கம்பத்தில் கட்டி வைத்திருந்தோம் நானும் என் நண்பர்களும். அதற்குப் பெருங்காயம் சேரக்கூடாது, உப்பு சேரக்கூடாது என்றெல்லாம் பிள்ளைத்தாய்ச்சிக்குப் பத்தியம் சொல்வது போல் பக்கத்து வீட்டு மாமி எச்சரித்துக் கொண்டே இருப்பார்.அதைப் புறக்கணித்துவிட்டு, பழைய இட்டிலி, வறட்டுத் தோசை, ஊசிப்போன உப்புமா, புளித்த பழையது, எரிச்ச குழம்பு என்று கண்டதையெல்லாம் கொடுப்போம். முதலில் வீரமாகக் குலைத்துக் கொண்டிருந்த அது இதையெல்லாம் தின்றதாலொ என்னவோ மெல்ல ஷீனமாகி சீக்குக் கோழி போலப் படுத்துவிட்டது.

சாய்பாபா ரொட்டி என்று ஒரு சமாச்சாரம் அப்போது ரொம்பப் பிரபலம். டீத் தண்ணீரை ஊற்றி ரொட்டி குட்டி போடுகிறது என்று அதை லேயர் லேயராகப் பிரித்தெடுத்து மாசக்கணக்கில் ஊரெல்லாம் சுழன்று கொண்டிருந்தது. அதில் ஒன்றை ஒரு பையன் எடுத்துவந்தான். அந்த டிஃபன் பாக்ஸை நாயின் முகத்தருகே வைத்துத் திறந்தான். பெல்ட் ஸ்லிப்பாகிற ரைஸ்மில் மாதிரி ஒருதரம் கத்திவிட்டு நாய் உடனடியாக சிவனடி!

கொஞ்சம் சாடிஸமாகத் தெரிந்தாலும் எங்களுக்கு ஒரு சுவாரஸ்யமான பொழுதுபோக்கு உண்டு.

ஒரு கொட்டாங்கச்சியில் சோற்றை வைத்துக் கொண்டு ‘தோ…. தோ’ என்று கூப்பிடுவோம்.அடுத்த தெருவிலிருந்து இந்த தேவலோகத்துக் கிண்கிணி அழைப்பைக் கேட்டு நாய்கள் நாலுகால் பாய்ச்சலில் வரும். மிகச் சரியாக பாயிண்ட் பிளான்க் ரேஞ்சில் அவை வந்தடையும்போது சட்டென்று கையில் கல்லை எடுப்போம். சடன் பிரேக் பிடித்து செல்லுபடியாகாமல் லா அஃப் கன்சர்வேஷன் அஃப் மோமெண்டம் படி அவை சர்ரென்று சறுக்கியபடி ஏறக்குறைய கல்லடி படுகிற அண்மைக்கு வந்து அதைத் தவிர்க்க அவசரமாகப் பின்வாங்கி அபவுட் டர்ன் அடிக்கும்.

கல்லூரியில் சேர்ந்த பிறகு ஒரு நாய் என்னுடன் நிர்ப்பந்தமான நட்பில் இருந்தது. வேலைக்குப் போனபிறகு கூட நட்பு தொடர்ந்தது. ஃபர்ஸ்ட் சிஃப்ட்டுக்காக காலை நாலு இருபது ரயிலைப் பிடிக்கப் போனால் பிளாட்ஃபாரம் வரை வந்து வழியனுப்பும். செகண்ட் ஷிஃப்ட் முடிந்து ராத்திரி பனிரெண்டு மணிக்கு வந்தாலும் ஸ்டேஷன் வாசலில் காத்திருக்கும்.

ரொம்பவும் உறவு பலப்பட்டதில், ஒருநாள் அதற்கு சோறு வைத்துவிட்டு தலையைத் தடவிக் கொடுத்தேன். அங்கே பிடித்தது வினை. முதலில் ஐட்லிங்கில் இருக்கும் இஞ்சினை ஆக்ஸிலரேட் செய்த மாதிரி கிர்ரென்றது. இது ஒரு எச்சரிக்கை என்று புரியாமல் மறுபடி தடவினேன். அவ்வளவுதான்.

‘வழ்..வழ்…வழ்…குர்ர்ர்ர்ர்ர்’ என்று ஒரு சத்தம்.

தொடையில் பிராண்டி, மணிக்கட்டில் கடித்துவிட்டு குண்டு வைத்த தீவிரவாதி மாதிரி மாயமாய் மறைந்துவிட்டது. பயம்

அடுத்த பதிநாலு நாட்களுக்கு காலை ஜி.ஹெச்சில் நாய்க்கடி வார்டில் முதல் ஓப்பி நான்தான். ஒவ்வொரு ஊசிக்கும் ஐந்து டிகிரி பெண்ட் ஆகி, பதிநாலாம் நாள் ராமாயணக் கூனி மாதிரி ஆகிவிட்டேன். ரோட்டில் வெறுமனே நடந்து போனாலே பெண்கள் எல்லாம் நான் தப்புப் பார்வை பார்ப்பதாக எண்ணி பல்லிடுக்கு வழியாக சபித்தார்கள். நல்லெண்ணை சேர்க்காதே, உப்பு சேர்க்காதே, புளி சேர்க்காதே என்று ஆளாளுக்குப் பத்தியம் சொன்னார்கள். எதுவுமே தின்னாமல் தெனாலிராமன் குதிரை மாதிரி ஆகி, சாப்பிடலாம் என்று சொன்ன போது தொட்டுக் கொள்ள மிளகாய்ப்பொடி கொடுத்தால் வைக்கோல் கூடத் தின்கிற நிலைக்கு வந்திருந்தேன். சோகம்

என்றைக்காவது கோபத்தில் நான் வாள்வாளென்று கத்தினால்

“சரியா எண்ணினீங்களா? பதிநாலுதானா, ஒண்ணுரெண்டு விட்டுப் போயிருக்கும் போலிருக்கே?” என்று சந்தேகப் பார்வை பார்க்கிறார் என் இல்லத்தரசி.
அதிர்ச்சி சோகம் சோகம்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாய் புடிக்கலாம் வாங்க - பாலா

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat Apr 07, 2012 1:16 pm

நல்ல கதை பாலகார்த்திக் ....நாய் சாவகாசம் சீலையைக் கிழிக்கும் என்பார்கள். அது உண்மைதான். மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: நாய் புடிக்கலாம் வாங்க - பாலா

Post by யினியவன் on Sat Apr 07, 2012 3:50 pm

இது வேலை கிடைக்காம வெட்டியா வீட்ட சுத்தறப்ப - அப்பாக்கள், அம்மாக்கள் சொல்றது தானே இது - ”வீடில்லாததும் ஈடில்லாததுமான என் நாய்” என்று. மறந்துட்டீங்களே பாலா. புன்னகைavatar
யினியவன்
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 29749
மதிப்பீடுகள் : 8439

View user profile

Back to top Go down

Re: நாய் புடிக்கலாம் வாங்க - பாலா

Post by ஜாஹீதாபானு on Sat Apr 07, 2012 4:11 pm

சிப்பு வருது சிப்பு வருது சிப்பு வருதுavatar
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30260
மதிப்பீடுகள் : 7072

View user profile

Back to top Go down

Re: நாய் புடிக்கலாம் வாங்க - பாலா

Post by balakarthik on Sat Apr 07, 2012 6:20 pm

கொலவெறி wrote:இது வேலை கிடைக்காம வெட்டியா வீட்ட சுத்தறப்ப - அப்பாக்கள், அம்மாக்கள் சொல்றது தானே இது - ”வீடில்லாததும் ஈடில்லாததுமான என் நாய்” என்று. மறந்துட்டீங்களே பாலா. புன்னகை

அதுசரி எங்கவீட்டுல இவ்வுலவு சங்க தமிழ்ல திட்டமாட்டாங்க பக்கா சென்னை தமிழ்லத்தான் திட்டினாங்க


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாய் புடிக்கலாம் வாங்க - பாலா

Post by Guest on Sat Apr 07, 2012 7:16 pm

ஜாலி ஜாலி o ஒவ் ஒவ் லொள் லொள்
Guest
Guest

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Re: நாய் புடிக்கலாம் வாங்க - பாலா

Post by balakarthik on Sat Apr 07, 2012 7:19 pm

அந்த நாய் சேகர் நீதானா அய்யோ, நான் இல்லை அய்யோ, நான் இல்லை


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23859
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: நாய் புடிக்கலாம் வாங்க - பாலா

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum