ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

பூமி என் தாய்
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

டாக்டர் ஊருக்குப் புதுசு

View previous topic View next topic Go down

டாக்டர் ஊருக்குப் புதுசு

Post by சிவா on Sat Oct 01, 2011 10:05 am
''நம்ம சனங்களுக்கு வைத்தியம் பாக்கிறதுக்காக மருதையிலேருந்து டாக்டர் ஐயா வந்திருக்காரு! ஆத்திர அவசரத்துக்கு எப்ப வேணும்னாலும் அவரைப் பார்க்கத் தோதா ஆஸ்பத்திரியிலேயே தங்கிக்கிறாரு! நாம எல்லோரும் அவருக்கு ஒத்தாசையா இருக்கணும்னு உங்ககிட்டே நான் கேட்டுக்கிறேன்'' என்று தொட்டியபட்டி ஊர் நாட்டாண்மை பேசி முடித்தார்.

டாக்டர் மூர்த்தி ஹவுஸ் சர்ஜன் டிரைனிங் முடித்த கையோடு, புதிதாக கிளினிக் வைக்க நல்ல ஊரைத் தேடி பல பட்டிதொட்டிகள் அலைந்து திரிந்து, கடைசியில் மதுரைக்குக் கிழக்கே முப்பது கி.மீ. தொலைவில் உள்ள தொட்டியபட்டியில் இன்று கிளினிக் துவக்கிவிட்டார்.

''டாக்டர் ஐயா! இவன் பேரு முத்து. என் பெரியப்பா பேரன். நம்ம ஊரு ரேசன் கடையிலே வேலை பாக்குறான். மிச்சமிருக்கிற நேரத்திலே உங்க கூடமாட வேலைக்கு கம்பவுண்டரா வச்சக்கலாம். நல்ல பையன்'' என்று நாட்டாண்மை 'ரெக்கமன்டேஷ'னுடன் முத்து வேலையில் சேர்ந்தான்.

நோயாளிகளின் 'வெய்ட்டிங் ஹாலில்' ''உஷ்ஷ்ஷ்ஷ்ஷ்ஷ் சைலைன்ஸ்'' என்று வாயில் வலது சுட்டு விரலை வைத்துக் கொண்டு சொல்லும் சிறுமியின் படம் இருந்தது.

நோயாளிகள் யாருமே இல்லாததால் கிளினிக் ரொம்பவும் 'சைலண்டாக' இருந்தது.

அன்று மாலை உலகப் பளு தூக்கும் போட்டியில் வரும் பயில்வான் போல ஒருவன் வந்தான். ''ரெண்டு நாளா வயித்துவலி!'' என்றான்.

''ஹலோ! மைக் டெஸ்டிங்! ஒன்! டூ! திரி!'' என்று ஒலிபெருக்கிக்காரன் மைக்கைத் தட்டுவது போல, டாக்டர் வயிற்றைத் தட்டிக் கொண்டே, ''எங்கே வலிக்குது'' என்றார்.

''நடு சென்டர்லே'' என்றான். அவனுக்கு அல்சர் என்று தெரிந்து கொண்ட டாக்டர், ''வயித்திலே புண் இருக்கு. தெனம் நிறைய பால் குடிக்கணும்'' என்றார்.

''பசும்பாலா? எருமைப் பாலா? ஆட்டுப்பாலா?''

''பசும்பாலே குடிங்க.''

''காய்ச்சியா? பச்சையாவா?''

''காய்ச்சித்தான் குடிக்கணும்.''

''ஜீனி போட்டா? போடாமலா?''

''ஜீனி போட்டே குடிங்க!''

''ஆனா ஜீனியா? மண்டை வெல்லமா?''

''ஆனா ஜீனி, ஆவன்னா ஜீனி, ஈனா ஜீனி, ஈயன்னா ஜீனி எது வேண்ணாலும் போட்டுக் குடிங்க'' என்றார் பொறுமையை இழந்த டாக்டர்.

''அந்த ஜீனியெல்லாம் நம்மூர்லே கெடைக்காது. பனங்கல்கண்டு போட்டுக் குடிக்கலாமா?'' என்று கேட்டான்.

''குடிக்கலாம்!'' என்று, கோபத்தை அடக்கிக் கொண்டு டாக்டர் சொன்னார்.

''நம்மூர்லே பால் கிடைக்காதுங்க! கள்ளு தாராளமாக கிடைக்கும்! பாலுக்குப் பதிலா கள்ளு குடிக்கலாமில்லே!'' என்று கேட்டான்.

''கள்ளு குடிக்கக்கூடாது'' என்றார் டாக்டர்.

''உடம்பு சூட்டைக் குறைக்க கள்ளு குடிக்கணும்னு சொல்றாங்களே!'' என்றான். இதற்கு மேல் அவனுடன் வாக்குவாதம் செய்ய விரும்பாத டாக்டர், ''அப்போ உங்க இஷ்டம்' என்று சொன்னார்.

''அப்போ நான் போயிட்டு வர்றேங்க!'' என்று சொல்லி, 'விறு விறு' என்று வெளியேறியவன், வெளியில் வெயிட்டிங் ஹாலில் உட்கார்ந்திருந்த ஒருவனிடம், ''எலே! ஒன் ஒடம்புக்கு என்னடா?'' என்றான்.

''வயித்து வலிண்ணே'' என்று அவன் சொன்னான்.

''நானும் வயித்துவலி காமிக்கத்தான் வந்தேன்டா! கள்ளு குடிச்சா சரியாப் போயிடும்னு டாக்டரே சொல்லிட்டாரு! ஊசிக்குக் குடுக்கிற ரூபாய்க்குக் கள்ளு சாப்பிடலாம்! வாடா!'' என்று அவனையும் கூட்டிக் கொண்டு போனான்.

அன்று இரவு, கதவை, 'தட தட'வெனத் தட்டும் சத்தம் கேட்டு டாக்டர் விழித்துக் கொண்டார். இன்னும் கொஞ்ச நேரம் கதவைத் திறக்காவிட்டால், கதவை உடைத்து விடுவார்கள் போலத் தட்டினார்கள்.

''யாருய்யா இந்நேரத்திலே!'' என்று சலித்துக் கொண்டே முத்து கதவைத் திறந்தான். பாதி பனைமர உயரம் இருந்த அந்த ஆள், ''டெண்ட் கொட்டகையிலே படம் பார்த்துக்கிட்டு இருந்தப்போ ஏதோ கடிச்சிருச்சு!'' என்றான்.

''எங்கே கடிச்சது?'' என்று கேட்டார் டாக்டர்.

''அதான் சொன்னேனே! டெண்ட் கொட்டகையிலேன்னு' என்றான்.

''உங்க உடம்பிலே எங்கேய்யா கடிச்சது? அந்த இடத்தைக் காட்டுய்யா!'' என்று டாக்டர் விளக்கமாகக் கேட்டார்.

''இங்கேதான் சார்!'' என்று வலதுகால் சுண்டு விரலைக் காட்டினான்.

விரலைத் தடவிப் பார்த்த டாக்டர்,

''பாம்புக்கடி, தேள் கடி எல்லாம் இல்லே! பெருச்சாளிதான் கடிச்சிருக்கணும்! எதுக்கும் ஒரு தடுப்பூசி போட்டுக்குங்க!'' என்றார்.

''இதுக்கெல்லாமா ஊசி போட்டுக்குவாங்க? சீமெண்ணெயை ரெண்டு சொட்டு விட்டாபோதும்! அப்போ நான் போவட்டுங்களா?'' என்று அந்த ஆள் புறப்பட ஆயத்தமானான்.

முத்து அவசரமாக அவனிடம், ''டாக்டர் பீஸ் பத்து ரூபா குடுங்க!'' என்றான்.

ஊசிதான் போடலியே! எதுக்கு ரூபா?'' என்று திருப்பிக் கேட்டான்.

''ராத்திரியிலே எந்திருச்சி உன்னோட பேசறதுக்குத்தான் இந்த பீஸ்'' என்று முத்து கண்டிஷனாகப் பேசினான்.

''அப்போ புளுகாண்டின்னு என் பேர்லே ஒரு சிட்டையைப் போட்டு எழுதி வச்சுக்க! மொத்தமா தர்றேன்'' என்று சொல்லி விட்டு ''விடுவிடு' என்று வேகமாக நடையைக் கட்டினான்.

அவன் போன பிறகு, முத்து டாக்டரிடம், ''சார்! இவனுக்கு மாரியப்பன், ராமசாமி, அருணாசலம், சமுத்திரம்ன்னு பல பேரு இருக்கு சார்! சுத்திப்பட்டியிலே இருக்கிற எல்லா டாக்டர்கிட்டேயும் இவனுக்குக் கடன் இருக்கு சார்! பில்லு பணத்தை மொத்தமா அறுவடைக்குப் பிறகு தர்றேன்னு சொல்லுவான். தரமாட்டான். ரொம்ப அழுத்திக் கேட்டா, 'பயிரு எல்லாம் பட்டுப் போச்சு! அடுத்த அறுவடைக்குத் தர்றேன்'பான். இப்பிடியே இழுத்தடிப்பான் சார்'' என்றான்.

''அவனைப் பத்தி இவ்வளவு தெரிஞ்சும் நீ ஏன் உள்ளே விட்டே?'' என்று டாக்டர், முத்துவிடம் கோபமாகக் கேட்டார்.

''தேன்கூட்டைப் பறிக்கப் போறவன் மாதிரி அவன் தலையிலேருந்து கால் வரைக்கும் போர்வையைப் போட்டு மூடியிருந்தான் சார். அதனாலே அவன் மூஞ்சி தெரியலே!'' என்றான்.

''சரி! இனிமே யார் வந்தாலும் என்ன? ஏது?''ன்னு விசாரிச்சு அதுக்கப்புறமா உள்ளே கூட்டி வா!'' என்று முத்துவிடம் சொல்லிவிட்டு டாக்டர் தூங்கப் போனார்.

மறுநாள் மதியம் சுமார் எழுபது வயதுடைய ஒருவர், ''டொக்! டொக்!'' என்ற கைத்தடியின் சத்தம் முன்னே வர, மெதுவாய் உள்ளே வந்து டாக்டருக்கு அருகில் இருக்கும் ஸ்டூலில் அமர்ந்தார்.

''பட்டணத்திலே இருக்கிற என் பேரனுக்கு நான் கடுதாசி போடணும்'' என்றார்.

''போடுங்க! உங்க உடம்புக்கு என்ன?'' என்று டாக்டர் கேட்டார்.

''ஒடம்புக்கு ஒண்ணுமில்லீங்க! ஒரு இங்கிலாந்து லெட்டர் குடுங்க'' என்று சட்டைப் பையிலிருந்து சில்லறைகளை அள்ளி எடுத்து மெதுவாக எண்ணிக் கொடுத்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: டாக்டர் ஊருக்குப் புதுசு

Post by சிவா on Sat Oct 01, 2011 10:06 am''இங்கிலாந்து லெட்டரா?'' என்று யோசித்த டாக்டர், ''ஓ! இன்லாண்ட் லெட்டரா? அது எங்கிட்டே இல்லீங்களே!'' என்றார்.

''என்னய்யா தபாலாபீசு வச்சு நடத்துறீங்க! சே!'' என்று சலித்துக் கொண்டு, ''டொக்! டொக்!'' என்று மெதுவாக வெளியேறினார்.

டாக்டர், முத்துவிடன் ''என்னப்பா! ஒண்ணும் புரியலையே! காலையிலே ஒருத்தன் வந்து நெளிஞ்சி போன மோதிரத்தை குடுத்து, ''இதை அடமானமா வச்சிக்கிட்டு, மட்டமா முந்நூறு ரூபா போட்டுக் குடுங்க'ன்னு கேட்டுட்டுப் போனான். இப்போ இந்தாளு இன்லாண்ட் லெட்டர் கேக்குறான்?'' என்று கேட்டார்.

''சார்! நாம இருக்கிற இந்த இடத்திலே இதுக்கு முந்தி போஸ்டாபீஸ் இருந்துச்சி! அதுக்கு முந்தி ஒரு அடகுக்கடை இருந்திச்சு!'' என்று சொன்னான்.

''நல்லவேளை! கசாப்புக்கடை இல்லாமப் போச்சு! இருந்திருந்தா யாராச்சும் அரைக் கிலோ தொடைக் கறி கேட்டு வந்திருப்பாங்க!'' என்றார்.

அப்போது குள்ளமாக, குண்டாக, சில்க் ஜிப்பா போட்ட ஒருவர் வந்தார். ஆட்டு மந்தை மேய்ந்துவிட்டுப் போன கீரைப்பாத்தி மாதிரி அவர் தலை இருந்தது. எதிர் எதிரே கோபத்துடன் சண்டை போடத் தயாராக இருக்கும் இரண்டு முள்ளம் பன்றிகளைப் போல அவரது புருவங்கள் இருந்தன. நெற்றியில் குன்னக்குடி வைத்தியநாதன் மாதிரி பெரிய குங்குமப் பொட்டு வைத்திருந்தார். கறுப்பும் வெள்ளையும் கலந்த ம.பொ.சி. மீசை வளர்த்திருந்தார். இருபது வருடங்களுக்கு மேலாக வெற்றிலை மெல்லும் பழக்கமுடையவர் என்பதை அவரது வாயில் இருந்த ஒரு சில சிவப்புப் பற்கள் சொல்லின.

அவரைப் பார்த்து டாக்டர், ''உடம்புக்கு என்ன?'' என்றார்.

''ஆண்டவன் புண்ணியத்திலே என் ஒடம்பு நல்லா இருக்குங்க! நீங்க நம்ம ஆளுன்னு கேள்விப்பட்டேங்க! அதான் பாத்துட்டுப் போகலாம்னு வந்தேங்க! நாளைக்கு மத்தியானம் விருந்து சாப்பிட நம்ம வீட்டுக்கு நீங்க அவசியம் வரணுங்க!'' என்று அன்பொழுகப் பேசினார்.

''தொட்டிபட்டியில் ஒரு பாலைவனச் சோலையா?'' என்று ஆச்சரியம் அடைந்த டாக்டர், ''வர்றேங்க!'' என்றார்.

''நாளைக்கு மத்தியானம் நானே வந்து உங்களை அழைச்சுட்டுப் போறேங்க! இப்ப உத்தரவு வாங்கிக்கிறேங்க!'' என்று சொல்லிவிட்டுப் போகும்போது, ''கறி சாப்பிடுவீங்கில்லே?'' என்று கேட்டார்.

''ம்'' என்ற டாக்டரின் பதிலைக் கேட்டு அவர் திருப்தியுடன் சென்றார்.

அவர் போனதும் முத்து பதறியபடி, ''சார்! இவரு பெரிய கில்லாடி சார்! தேங்காச்சில்லு வச்சி எலியைப் பிடிக்கிற மாதிரி இவர் மாப்பிள்ளை பிடிப்பாரு சார்!'' என்றான்.

''என்னப்பா சொல்றே நீ? எங்க அப்பா அம்மாவுக்கு நான் ஒரே பிள்ளை!'' என்றார் டாக்டர் பயந்தபடி.

''நம்ம சுத்துவட்டாரத்திலே கல்யாணமாகாத டாக்டர் யாராச்சும் புதுசா கிளினிக் வச்சா, இவரு நைசா பழகி, வீட்டுக்குக் கூட்டிப் போயி, விருந்து வச்சி இவரு பொண்ணு மேலே லவ் பண்ண வச்சிடுவாரு. பிற்பாடு, நகை நட்டு, சீரு சினத்தி இல்லாம ஓசியிலே கல்யாணம் முடிச்சிடுவாரு! அஞ்சு பொண்ணு பெத்தா அரசனும் ஆண்டி ஆவான்பாங்க! ஆண்டியா இருந்த இந்த ஆளு அஞ்சு பொண்ணுங்களைப் பெத்ததாலே அரசனா ஆயிட்டாரு சார்! இப்போ கடைசிப் பொண்ணு ஒண்ணுதான் பாக்கி. அதை செட்டப் செய்யத்தான் உங்களை வளைக்கிறாரு!'' என்று முத்து விளக்கினான்.

''அப்போ நாளைக்கு இவரு வந்தா நான் என்ன செய்றது?'' என்று ஆலோசனை கேட்ட டாக்டரிடம், ''நீங்க கவலைப்படாதீங்க சார்! அந்தாளை நான் சமாளிச்சிக்கிறேன்'' என்று ஆறுதல் சொன்னான் முத்து.

அன்று மாலை வயதான ஜோடி ஒன்று உள்ளே நுழைந்தது. ''யாருக்கு ஒடம்பு சரியில்லே?'' என்று டாக்டர் கேட்டார்.

''இவளுக்குத்தான்!'' என்று கிழவர் பதில் சொன்னார்.

கிழவியை உட்காரச் சொல்லிவிட்டு, ''பாட்டி! ஒடம்புக்கு என்ன செய்யுது?'' என்று டாக்டர் கேட்டார். கிழவி பதில் சொல்லாமல், ஒரு கையை மட்டும் நீட்டினாள்.

''பாட்டி ஊமையா தாத்தா?'' என்றார் டாக்டர்.

''இவ வாயைத் தொறந்தா ரெண்டு நாளானாலும் மூடமாட்டா! அப்படிப் பேசுவா!'' என்று பதில் சொன்னார் கிழவர்.

'ஒருவேளை செவிடோ?' என்று நினைத்த டாக்டர், ''பாட்டீ! ஒங்க உடம்புக்கு என்ன?'' என்று சத்தம் போட்டு கேட்டார்.

''இவ ஒடம்புக்கு என்னன்னு கையைப் பாத்து நீங்கதான் சொல்லணும்! அவ சொல்ல மாட்டா!'' என்றார் கிழவர்.

''என்னன்னு சொல்லாம வைத்தியம் பாக்கணும்னா நீங்க 'வெடர்னரி' ஆஸ்பத்திரிக்குத்தான் போகணும்! இங்கே பாக்க முடியாது!'' என்றார் டாக்டர்.

''எந்திருடி! அந்த ஆஸ்பத்திரிக்கே போவோம்'' என்று கிழவியைக் கூட்டிக் கொண்டு வீறாப்புடன் வெளியேறினார் கிழவர்.

அன்று இரவு மாட்டு வண்டியில் ஒரு அவசர கேஸ் வந்தது. நோயாளியை இரண்டு பேர் தூக்கிக் கொண்டு வந்து 'பெட்'டில் படுக்கப் போட்டார்கள்.

''காலையிலேருந்து இவளுக்கு வயித்தாலே போயிருக்கு! யார்கிட்டேயும் சொல்லாம இருந்திட்டா! நாலு பொட்டப்புள்ளே இருக்குய்யா! நீங்கதான் சாமி எப்பிடியாவது காப்பாத்தணும்!'' என்று ஒரு பெரியவர் கையெடுத்துக் கும்பிட்டு அழுதபடி சொன்னார்.

அந்தப் பெண்ணைப் பரிசோதித்த பிறகு டாக்டர், ''இந்தம்மாவுக்கு காலரா வந்திருக்கு! நெலமை ரொம்ப மோசமா இருக்கு! இருபது முப்பது பாட்டில் குளுகோஸ் ஏத்தணும்! ஆயிரம் ரூபாய்க்கு மேலே செலவாகும்'' என்றார்.

''பணத்தைப் பத்தி பயப்படாதீங்கய்யா! எம் பொண்ணைக் காப்பாத்தினா போதும்'' என்று அவர் மறுபடியும் கும்பிட்டார்.

அந்த நோயாளிக்கு வேண்டிய சிகிச்சையை டாக்டர் வேகமாக ஆரம்பித்தார்.

முத்து அந்தப் பெரியவரிடம் ''ஐநூறு ரூபா மொதல்லே கட்டுங்க'' என்றான். ''அவசரத்திலே கொண்டு வரலே பையா, நாளைக்கு காலைலே தர்றேன்'' என்றார்.

மறுநாள் காலை அந்தப் பெரியவரைக் காணவில்லை. நோயாளியின் நிலைமை கொஞ்சம் கொஞ்சமாக முன்னேற்றம் அடைந்து கொண்டே வரும்போது, சுற்றியிருந்த நபர்களும் கொஞ்சம் கொஞ்சமாகக் குறைந்து கொண்டே வந்தார்கள். கடைசியில், நோயாளி எழுந்து உட்காரும்போது, அவரது எட்டு வயது மகள் மட்டுமே பக்கத்தில் இருந்தாள்.

முத்து அந்த நோயாளியிடம், ''இன்னிக்கு ராத்திரிக்குள்ளே மொத்தப் பணமும் கட்டியாகணும்! இல்லாட்டி நீங்க இங்கேயே இருக்க வேண்டியதுதான்! வீட்டுக்கு அனுப்ப மாட்டோம்!'' என்று கறாராகச் சொன்னான்.

அதிகாலையில் முத்து அவசரமாக டாக்டரை எழுப்பி, ''சார்! காலரா பேஷண்டைக் காணோம் சார்!'' என்றான். அதிர்ச்சியடைந்த டாக்டர், ''நல்லா பாருப்பா!'' என்றார்.

''நல்லா பாத்துட்டேன் சார்! அவளுக்குக் கொடுத்த தலையணை; போர்வையைக்கூட காணலை சார்! அதையும் சுருட்டிக்கிட்டுப் போயிட்டாங்க!'' என்றான்.

டாக்டர் கவலையில் கலங்கிப் போனார். அப்போது, தலையிலிருந்து ரத்தம் சொட்டச் சொட்ட ஒருவன் வந்தான். ''தரையிலே உக்காந்திட்டு வேகமா எந்திரிச்சேன். ஜன்னல் கதவு நுனி வெட்டிடுச்சு!'' என்றான்.

நான்கு தையல்கள் போட்டு, பாண்டேஜ் கட்டி கையைக் கழுவும்போது ஒரு போலீஸ் கான்ஸ்டபிள் வந்து, 'அட்டென்ஷனில்' நின்று சல்யூட் அடித்தார்.

''சார்! நேத்து ராத்திரி முழுக்க இவன் வைப்பாட்டி வீட்லே இருந்திருக்கான். காலையிலே வீட்டுக்குள்ளே நுழையும்போது, இவன் பொண்டாட்டி பிடிச்சிக்கிட்டா! விறகுக் கட்டையாலே தலையிலே அடிச்சிட்டா, அதைக் கேள்விப்பட்டு இவன் வைப்பாட்டி ஓடிவந்து தோசைக்கரண்டியாலே இவன் பொண்டாட்டி மண்டடையைப் பொளந்துட்டா! ரெண்டு பேரும் ஸ்டேஷன்லே இருக்காங்க! எப்.ஐ.ஆர். போட்டாச்சு! கோர்ட்லேயிருந்து சம்மன் வந்தா நீங்க சாட்சி சொல்ல வர வேண்டியிருக்கும்ன்னு இன்ஸ்பெக்டர் ஐயா உங்ககிட்டே சொல்லச் சொன்னாரு!'' என்றார்.

அன்று இரவு தெருவில் யாரோ கூச்சல் போடும் சத்தம் கேட்டு, டாக்டர் ஜன்னல் வழியாக மெதுவாக எட்டிப் பார்த்தார்.

''டேய் முத்து! நீ ஆம்பளையா இருந்தா வெளியே வாடா! விடியறதுக்குள்ளே உன் தலையைச் சீவலே நான் ஒரு அப்பனுக்குக் பொறந்தவன் இல்லேடா'' என்று கத்திக் கொண்டே இரண்டு அடி நீள அரிவாளைச் சுழற்றினான், ஒரு தடியன்.

டாக்டருக்கு கை, கால் வெடவெட என நடுங்கியது. உடம்பு பூராவும் வியர்த்துக் கொட்டியது. முத்து சன்னமான குரலில் மெதுவாக,

''இவன் பேரு சல்லி முருகன் சார்! ரேசன் கடையிலே மாமூலா இந்த மாதிரி ரெளடிகளுக்கு வாரம் அஞ்சு ரூபா கொடுப்போம்.'' இவன் பத்து ரூபா கேட்டான். தர முடியாதுன்னேன். அதான் தண்ணி போட்டுட்டு வந்து குரைக்கிறான்!'' என்றான்.

ரேசன் கடையில் ஜீனி நிறுத்துப் போட்டுக் கொண்டிருந்த முத்துவிடம், 'கள்ளுக்குடி' காட்டான், ''எலே முத்து! ரெண்டு மூணு நாளா உங்க ஆஸ்பத்திரி மூடிக்கிடக்கே! உங்க டாக்டர் எங்கே போயிட்டாரு?'' என்று கேட்டான்.

''அவருக்கு உடம்பு சுகமில்லேண்ணே! அதான் டிரீட்மெண்ட் எடுக்க மருதைக்குப் போயிருக்காரு'' என்றான்.

''ஒரே மரத்துக் கள்ளை ஒரு மாசம் தொடர்ந்து சாப்பிடச் சொல்லுடா! அவரு தொத்தல் ஒடம்பு சும்மா கும்முனு ஏறிடும்!'' என்று மருத்துவ ஆலோசனையை இலவசமாக வழங்கினான்.

அதே நேரத்தில் டாக்டர் மூர்த்தி கிளினிக் வைக்க நல்ல ஊரைத் தேடி மதுரைக்கு மேற்கே பஸ்ஸில் போய்க் கொண்டிருந்தார்.

சுப்ரியா சாந்திலால்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: டாக்டர் ஊருக்குப் புதுசு

Post by dsudhanandan on Sat Oct 01, 2011 11:26 am

சிரிப்பு சிப்பு வருது டாக்டர் நிலமைய நினைச்சு எனக்கு உடம்பு சரியில்லாம போச்சு.. (சிரிச்சு வயிறு வலிக்குது)
avatar
dsudhanandan
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3624
மதிப்பீடுகள் : 428

View user profile

Back to top Go down

Re: டாக்டர் ஊருக்குப் புதுசு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum