ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
உணவுக்கு மட்டுமா உப்பு…
 சிவனாசான்

பெண் கல்விகட்டண சலுகை:பா.ஜ., தீர்மானம்
 சிவனாசான்

* கடவுளின் திருவுள்ளப்படியே உலகம் இயங்குகிறது.
 சிவனாசான்

10 நாள் திருவிழாவில், 10 ஆயிரம் நாய் பலி!
 ayyasamy ram

உலக மசாலா: என்ன கொடுமை இது?
 ayyasamy ram

உலக மசாலா: சுவாரசியமான காதல்!
 ayyasamy ram

பெண்களை பெண்களாகவே வளர்க்க வேண்டும்…!
 சிவனாசான்

ஆசிய ஜூனியர் மல்யுத்தம் சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு தங்கம்
 ayyasamy ram

மூளைக்கு தேவை பூண்டு
 ayyasamy ram

வேடனின் வடிவில் முருகன்
 ayyasamy ram

இது மாலை நேரத்து மயக்கம்
 ayyasamy ram

பண்ணாரி பொருள் என்ன?
 ayyasamy ram

ஆன்மாவை விடுவிக்கும் கழுகு
 பழ.முத்துராமலிங்கம்

உலகத்திலேயே மிக்க ஆற்றலுள்ள கருவி…!
 Mr.theni

முதியோர் காதல்
 பழ.முத்துராமலிங்கம்

அழிவை நோக்கி நியூட்டன் ஆப்பிள் மரம்
 ayyasamy ram

வேஷம் – கவிதை
 பழ.முத்துராமலிங்கம்

வெஜிடபிள் பிரெட்
 ayyasamy ram

ஆழ்கடல் அதிசயம் – ஹைக்கூ
 பழ.முத்துராமலிங்கம்

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 Mr.theni

ஜோக்ஸ்
 பழ.முத்துராமலிங்கம்

பெற்றோர்கள்+குழந்தைகள்
 Mr.theni

பபுல் கம்மை விழுங்கினால்…!
 பழ.முத்துராமலிங்கம்

மகளிருக்கான டிப்ஸ்..
 பழ.முத்துராமலிங்கம்

வித்தியாசமான விடுகதைகள்
 ayyasamy ram

வீட்டுக்குறிப்பு
 ayyasamy ram

ஹார்மோன் பிரச்சனையா? இதோ வந்தாச்சு தீர்வு!
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 Mr.theni

``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

பெண்களின் ஒன்பது முகங்கள்

View previous topic View next topic Go down

பெண்களின் ஒன்பது முகங்கள்

Post by சிவா on Thu Sep 29, 2011 8:09 am

ஒரு பெண்ணுக்கு எத்தனை கைகள்? எல்லோருக்கும் தெரிந்தது, இரண்டு கைகள்தான். ஆனால் அவள் தினமும் எட்டு கைகள் பார்க்கக்கூடிய அளவுக்கு கடுமையான வேலைகளை பார்க்கவேண்டியதிருக்கிறது. அதை எடுத்துக்காட்டும் விதத்தில்தான் பெண் தெய்வமான காளி தேவியை எட்டுக்கைகளுடன் படைத்தார்கள். அதைப் பார்த்து பெண்கள் பிரமிக்கிறார்களே தவிர, தங்களிடம் எட்டு கரத்துடன் உழைக்கும் அளவிற்கு சக்தி இருக்கிறது என்பதை உணரத் தயங்குகிறார்கள்.. என்று புது விளக்கம் தருகிறார்கள், இன்றைய புதுமைப் பெண்கள்!

`இந்த விளக்கம் சூப்பராகத்தான் இருக்கிறது. இப்போது இந்தியாவே நவராத்திரி விழாவுக்கு தயாராகிக் கொண்டிருக்கிறது. நவராத்திரி விழா பெண்களின் சிறப்பை எப்படி எடுத்துரைக்கிறது என்பதை சொல்லுங்களேன்..?' என்று கேட்டால், இவர்கள் தரும் பதில் சுவாரஸ்யமானது. பெண்கள் பெருமைப்படத்தக்கது.

"நவராத்திரி விழா துர்க்கை அம்மனை சிறப்பிக்கும் விழா என்று அறியப்பட்டாலும், துர்க்கையின் பிரதிநிதிகளாக இந்த உலகில் வாழும் பெண்களை, பெண்மையை சிறப்பிக்கும் விழா அது என்பதுதான் உண்மை. அதனால்தான் இந்த விழாவில் சிறுமிகள் முதல் சுமங்கலி பெண்கள் வரை அத்தனை பேரும் கவுரவப்படுத்தப்படுகிறார்கள்.

அன்பு, கருணை, தாய்மை, தைரியம், எதிரிகளை அழிக்கும் ஆற்றல், அழகுணர்வு, கலை உணர்வு, கர்வம், கனிவு போன்ற ஒன்பது விதமான குணங்கள் எல்லா பெண்களிடமும் இருக்கவேண்டும். இத்தனை தன்மைகளையும் கொண்ட பெண்களால்தான் இந்த உலகில் சிறப்பாக வாழ முடியும். அதை பிரதிபலிக்கும் விதத்தில்தான் நவராத்திரியில் துர்க்கை அம்மனை ஒன்பது குணங்கள் கொண்டவளாக, ஒன்பது விதமாக அலங்காரம் செய்கிறோம். இந்த விழாவினை பெண்கள் கொண்டாட தயாராகும்போதே இந்த ஒன்பது குணாதிசயங்களும் தங்களிடம் இருக்கிறதா என்று ஆத்மபரிசோதனை செய்துகொள்ள வேண்டும். ஏதாவது ஒன்று தங்களிடம் இல்லாவிட்டால்கூட அதை உணர்ந்து, இந்த விழாக் காலத்தில் அந்த குணத்தையும் உருவாக்கி முழுமை நிறைந்த பெண்களாக தங்களை ஆக்கிக்கொள்ள வேண்டும்.

அன்பு, பெண்மைக்கு பெருமை சேர்க்கும் மிகப்பெரிய சொத்து. பெண்களிடம் எப்போதும் அன்பு வற்றாத ஜீவநதிபோல் பெருகிக்கொண்டே இருக்க வேண்டும் என்பதை சுட்டிக்காட்டத்தான் துர்க்கையை அன்பின் சின்னமாக நவராத்திரியில் ஒருநாள் அலங்காரம் செய்து வழிபட்டு மகிழ்கிறோம். கருணை என்றாலே நமக்கு கடவுளும், தாயும்தான் நினைவுக்கு வருவார்கள். இந்த உலகில் வாழும் ஒவ்வொரு பெண்ணும் கருணையின் வடிவம்தான். பெண் எப்போதும் கருணைமிக்கவளாக இருக்கவேண்டும் என்பதற்காகத்தான், துர்க்கையை ஒருநாள் கருணை நிறைந்தவளாக உருவகப்படுத்தி, அலங்காரப்படுத்தி நவராத்திரி வழிபாடு செய்கிறோம்.

தாய்மை பெண்களின் தனிப்பெரும் சொத்து. தாய்மை உணர்வால் பெண், எல்லா உயிர்களையும் தன் உயிராக நினைக்கும் பக்குவ நிலைக்கு உயர்கிறாள். அதனால் துர்க்கையை தாய்மையின் சின்னமாகவும், நவராத்திரியில் பெருமைப்படுத்தி, பெண்களின் சிறப்பை மேம்படுத்திக்கொள்கிறோம்.

பெண்களிடம் கருணை, கனிவு, அன்பு போன்ற அனைத்தும் இருந்தாலும் அவர்கள் அநீதிகளைக் கண்டால் சினந்தெழுந்து அதர்மக்காரர்களை அழிக்க தயங்கக்கூடாது என்பதை துர்க்கை வழிபாடு நமக்கு காட்டுகிறது. அநீதி நிகழ்ந்தபோது அந்த துர்க்கையே சினந்தெழுந்து அசுரர்களை அழித்தார் என்று கூறி, பெண்களிடம் எப்போதும் போராட்டக்குணம் இருந்து கொண்டிருக்கவேண்டும் என்று உணர்த்தப்படுகிறது. அதனால்தான் துர்க்கை மகிஷனை வதம் செய்ததை நினைவுகூர்ந்து, அவளை மகிஷாசுரமர்த்தினியாக வழிபடுகிறோம்...'' என்று நீண்ட விளக்கம் தருகிறார்கள், ஆன்மிக ஆர்வலர்களான பார்வதி பாலசுப்பிரமணியனும், ஸ்ரீரஞ்சினி மோகன்குமாரும்!

"அலங்காரம் என்பது பெண்மைக்கே உரிய விஷயம். அழகுணர்ச்சி கொண்ட பெண், தான்நேசிக்கும் எல்லாவற்றையும் அழகு படுத்திப்பார்ப்பாள். தனது குழந்தையையும் அழகுபடுத்துவாள். தான் வழிபடும் கடவுளையும் அலங்காரத்தால் அழகுபடுத்துவாள். பெண்களிடம் இருக்கும் அழகுணர்ச்சி நாளுக்கு நாள் வளர வேண்டும் என்பதற்காகத்தான் நவராத்திரி விழாக்காலத்தில் ஒன்பது நாளும், ஒன்பது விதமாக துர்க்கையை பெண்கள் அலங்காரம் செய்கிறார்கள். அந்த அலங்காரம் அவளது திறமையை வெளிப்படுத்தும் அதே நேரத்தில் மகிழ்ச்சியையும், மற்றவர்களிடம் இருந்து பாராட்டையும் பெற்றுத் தருகிறது. நாங்கள் நவராத்திரியில் துர்க்கையை அலங்காரம் செய்வதில் எப்போதும் தனிக்கவனம் செலுத்துவோம். வருடத்திற்கு வருடம் அதில் புதுமைபடைத்து எங்களுக்குள் இருக்கும் அழகுபடுத்தும் திறமையை வளர்த்துக் கொண்டிருக்கிறோம்..'' என்கிறார், சுஷ்மா.

நவராத்திரி பட்சணங்கள் பக்கம் தன் பேச்சை திருப்புகிறார், சுபாஷினி.

"மனிதர்கள் உயிர்வாழ முக்கியமானது உணவு. சுவையும், குணமும், நிறமும், புதுமையும் இருந்தால்தான் அதை நாம் விரும்பி உண்போம். பட்சணங்களில் சுவையைவிட ஆரோக்கியம் மிக முக்கியம். பெண்கள் அனைவரும் சமையலை கற்றுக்கொள்ளவேண்டும். அவர்கள் சமைக்கும் உணவில் புதுமை, ருசி, ஆரோக்கியம் போன்றவை இருக்கவேண்டும் என்பதை, நவராத்திரி போன்ற பண்டிகைகள் மக்களுக்கு கற்றுத் தருகின்றன. ஒன்பது நாளும் கடவுள் பெயரால் வெவ்வேறுவிதமான உணவுகளை சமைத்து, கடவுளுக்கு படைத்து நாம் உண்ணுகிறோம். இப்போது டீன்ஏஜ் பெண்களில் பலர் தங்களுக்கு சமைக்கத் தெரியாது என்று சொல்வதை பேஷனாகக் கொண்டிருக்கிறார்கள். அது சரியல்ல, எல்லோரும் சமைக்க கற்றுக்கொள்ளவேண்டும் என்பதை பண்டிகைகாலங்கள் நமக்கு நினைவூட்டுகின்றன. நான் ஒவ்வொரு பண்டிகை காலத்திலும், குறைந்தது நாலைந்து புதிய உணவுவகைகளையாவது கற்றுக்கொள்வேன்'' என்கிறார், அவர்.

கொலு வைப்பதன் தத்துவம் உணர்த்தும் விஷயங்களை புதுமையாக விளக்குகிறார், ஆகாங்ஷா.

"கொலுவைப்பது என்பது பொம்மைகளை வரிசையாக அடுக்கிவைத்து, அழகு பார்ப்பது என்றுதான் பலரும் நினைத்துக்கொண்டிருக்கிறார்கள். அதுவல்ல உண்மை. கலைநயம், சேகரிப்பு திறன், அழகின் வெளிப்பாடு, பொறுமை, நிறங்களின் தன்மையை புரிந்து கொள்ளல், படைத்தல், பாதுகாத்தல் போன்ற பல விஷயங்களை கொலு நமக்கு சொல்லித்தருகிறது.

பொம்மை தயாரிப்பது என்பது குடிசைத் தொழில்போல் லட்சக்கணக்கான குடும்பங்களுக்கு வாழ்வளித்துக் கொண்டிருக்கிறது. விழாக்களின் பெயரில் பொம்மைகளை வாங்கி, அந்த குடிசை தொழிலாளர்களை ஊக்குவிப்பது நம் கடமையாகும். ஒரு பெண் பொம்மைகளைவாங்க முன்வருகிறாள் என்றாலே, அவள் அதை உருவாக்கும் கலைஞர்களுக்கு வாழ்வளிக்கும் நல்ல மனதை பெற்றிருக்கிறாள் என்று அர்த்தம். ஒரு பெண்ணிடம் எப்படிப்பட்ட கலைநயம் இருக்கிறது என்பதை அவள் பொம்மைகளை தேர்ந்தெடுப்பதைவைத்து கண்டுபிடித்துவிடலாம். வாங்குதல், சேகரித்தல், அவைகளை அடுக்குதல், பாதுகாத்தல் போன்றவைகளில் ஈடுபடும்போது அந்த பெண்ணிடம் நிதானம், பொறுமை போன்றவை ஏற்பட்டுவிடுகிறது. பொம்மைகளை வாங்கும் விதத்திலும், அவைகளை வரிசைப்படுத்தி கொலுவில் அடுக்கும் விதத்திலும் நிறங்களை வகைப்படுத்தும் அறிவு எந்த அளவுக்கு அந்த பெண்ணிடம் இருக்கிறது என்பதை புரிந்துகொள்ளலாம். அதனால் கொலு என்பது பார்த்து ரசிக்கும் ஒரு விஷயம் அல்ல. பெண்களின் அழகுணர்ச்சி, உள்ளத்தின் உணர்வுகள், மகிழ்ச்சி, உதவும்தன்மை போன்ற பலவிஷயங்களையும் கொலு வெளிப்படுத்துகிறது..'' என்கிறார்.

"பெரும்பாலான விழாக்கள் பெண்களுக்கு வேலை சுமையை உருவாக்கிவிடும். வேலை சுமை உருவாகும்போது, பெண்களுக்கு ஓய்வற்ற உழைப்பும், சோர்வும் ஏற்பட்டு அந்த விழாவை மகிழ்ச்சியற்றதாக மாற்றிவிடும். ஆனால் நவராத்திரி விழா பெண்களின் அழகு, ஆட்டம், மகிழ்ச்சிக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கிறது. பெண்கள் அழகழகாக உடை அணிந்து, ஆடிப் பாடி மகிழ்வார்கள். வாழ்க்கையை சுவாரஸ்யப்படுத்த நடனங்கள் மிக இன்றியமையாதவை. பெண்கள் சிறுவயதில் இருந்தே கலாசார நடனங்களை கற்றுக்கொள்ளவேண்டும். வாழ்க்கையின் எல்லா காலங்களிலும் அந்தந்த விழாக்களின்தன்மைக்கு தக்கபடி அவர்கள் ஆடவேண்டும். மகிழ்ச்சியாக வாழவேண்டும். ஆடவேண்டும் என்றால், ஆரோக்கியமான உடல் தேவை. அதனால் அழகு, ஆரோக்கியம், மகிழ்ச்சி போன்றவைகளை எல்லாம் பெண்களுக்கு தரும் விதத்திலும், பெண்மையின் சிறப்புகளை ஆண்கள் உணர்ந்து அவர்களுக்கு மதிப்பு தரும் விதத்திலும் நவராத்திரி பண்டிகை இருக்கிறது. அது கடவுள் வழிபாட்டோடு இந்த உலகுக்கு உணர்த்தப்படுகிறது..'' என்கிறார், சஞ்சனா.

பண்டிகைகளில் பக்திக்கு அப்பால் இத்தனை விஷயங்கள் இருக்கிறதா! நவராத்திரி விழா இன்றைய பெண்களுக்கு இருக்கவேண்டிய ஒன்பது குணாதிசயங்களைக் கொண்ட வித்தியாசமான முகங்களை அழகாக எடுத்துக்காட்டுகிறது என்பது பெண்களுக்கு பெருமைதரும் விஷயம்தான்!

தினதந்தி
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பெண்களின் ஒன்பது முகங்கள்

Post by மாணிக்கம் நடேசன் on Thu Sep 29, 2011 8:39 am

பெண்களுக்கு ஒன்பது முகமா? ஐயோ பொய் சொல்லாதீங்க. உண்மையிலேயே நான் ஒரு முகத்தில் தொன்னுற்று ஒன்பது முகங்களை பார்க்கிறேன் சிவா சார். இதெல்லாம் அனுபவிச்சு பாத்தவங்களுக்குத்ஆன் தெரியும்.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: பெண்களின் ஒன்பது முகங்கள்

Post by சிவா on Thu Sep 29, 2011 9:00 am

nadesmani wrote:பெண்களுக்கு ஒன்பது முகமா? ஐயோ பொய் சொல்லாதீங்க. உண்மையிலேயே நான் ஒரு முகத்தில் தொன்னுற்று ஒன்பது முகங்களை பார்க்கிறேன் சிவா சார். இதெல்லாம் அனுபவிச்சு பாத்தவங்களுக்குத்ஆன் தெரியும்.

ஆமா, அனுபவத்தை விட வேறு சிறந்த பாடம் கிடையாது. அதில் பத்ரகாளி முகமும் உங்களுக்கு அனுபவப்பட்டிருக்குமே!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பெண்களின் ஒன்பது முகங்கள்

Post by மாணிக்கம் நடேசன் on Thu Sep 29, 2011 9:20 am

அந்த பதரகாளிளிளிளிளிளிளி முகம் தானே நான் முழிக்கிறது.
அப்புறம் ஒரு நிமிடத்துக்கு ஒரு முகம்.
தப்பு எல்லாம் என் மேலதான்
பென்சன் எடுக்கிற அன்றைக்கு மட்டும் ஒரே முகம். எனக்கும் தான்

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4225
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: பெண்களின் ஒன்பது முகங்கள்

Post by gladish on Thu Sep 29, 2011 2:26 pm

இது தான் வாழ்க்கை நேற்றைய மருமகள் இன்றைய மாமியார். என் அனுபவத்தில் என்க்கு தெரிந்த ஒரு பழமொழி "குனியா குனியா குட்டுகிறவன் முட்டாள், குட்ட குட்ட குனிக்கிறவனும் முட்டாள்" ஆனால் "விட்டு கொடுப்பவர் கெட்டுபோவதிலை. கெட்டுபோபவர்கள் விட்டு கொடுப்பதில்லை"
பெண் என்றால் தாய் அவளிடம் அன்பு, கருணை, பொறுமை, நிதானம், ஒற்றூமை, மன்னிக்கும் மனப்பான்மை எல்லாம் இருக்கும். இன்று பல மாமியார்கள் தங்கள் மருமகளை ஒரு வேலைகாரியைபோல் நடத்துவதாலும், மருமகள்கள் தங்கள் மாமியாரை சுமையாகவும் நினைப்பதால் பல குடும்பத்தில் குளப்பமும், சண்டையும்.

என் கருத்தில் தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.
நன்றி

என்றும் அன்புடன்
கிளாடிஷ்
பெங்களூரு.

avatar
gladish
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 24
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: பெண்களின் ஒன்பது முகங்கள்

Post by சிவா on Thu Sep 29, 2011 3:15 pm

@gladish wrote:இது தான் வாழ்க்கை நேற்றைய மருமகள் இன்றைய மாமியார். என் அனுபவத்தில் என்க்கு தெரிந்த ஒரு பழமொழி "குனியா குனியா குட்டுகிறவன் முட்டாள், குட்ட குட்ட குனிக்கிறவனும் முட்டாள்" ஆனால் "விட்டு கொடுப்பவர் கெட்டுபோவதிலை. கெட்டுபோபவர்கள் விட்டு கொடுப்பதில்லை"
பெண் என்றால் தாய் அவளிடம் அன்பு, கருணை, பொறுமை, நிதானம், ஒற்றூமை, மன்னிக்கும் மனப்பான்மை எல்லாம் இருக்கும். இன்று பல மாமியார்கள் தங்கள் மருமகளை ஒரு வேலைகாரியைபோல் நடத்துவதாலும், மருமகள்கள் தங்கள் மாமியாரை சுமையாகவும் நினைப்பதால் பல குடும்பத்தில் குளப்பமும், சண்டையும்.

என் கருத்தில் தவறுகள் இருப்பின் மன்னிக்கவும்.
நன்றி

என்றும் அன்புடன்
கிளாடிஷ்
பெங்களூரு.


சரியாகத்தான் கூறியுள்ளீர்கள் கிளாடிஷ்

என்றும் நட்புடன்
சிவா
கோலாலம்பூரு
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: பெண்களின் ஒன்பது முகங்கள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum