புதிய பதிவுகள்
» மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் விநாயகர்....
by ayyasamy ram Today at 1:24 pm

» தமிழ்நாட்டு பாமரர் பாடலகள்
by ayyasamy ram Today at 1:08 pm

» கிளி பறந்தது! - தமிழ்நாடு பாமரர் பாடல்கள்
by ayyasamy ram Today at 1:07 pm

» நடிகர் சார்லி மகனின் திடீர் திருமணம்.. முதலமைச்சர் ஸ்டாலின் என்ட்ரி..
by ayyasamy ram Today at 1:01 pm

» பனைமரத்தை பற்றி நாம் அறியாத பல நல்ல தகவல்கள்
by ayyasamy ram Today at 12:58 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Today at 9:50 am

» வீட்டுக்கு வீடு வாசற்படி....
by ayyasamy ram Today at 9:47 am

» செய்தி தொகுப்பு
by ayyasamy ram Today at 7:04 am

» Prizes that will make you smile.
by cordiac Today at 6:46 am

» நடிகை, நடிகர்கள் மாறு வேஷத்துல நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 7:56 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Yesterday at 7:28 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 7:17 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 7:11 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 7:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 6:55 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 6:45 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:39 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:26 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:13 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:05 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Yesterday at 5:24 pm

» ஆமை வடை சாப்பிட்டால்…!
by ayyasamy ram Yesterday at 3:45 pm

» நகைச்சுவை - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 12:03 pm

» ஆம்புலன்ஸுக்கே தெரிஞ்ச சேதி!
by ayyasamy ram Yesterday at 12:02 pm

» Search Sexy Womans in your town for night
by Geethmuru Yesterday at 10:25 am

» வலைப்பேச்சு - ரசித்தவை
by ayyasamy ram Yesterday at 9:25 am

» இன்றைய செய்திகள்- 10-06-2024
by ayyasamy ram Yesterday at 9:18 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Yesterday at 9:12 am

» உடல் சூட்டை குறைக்கும் சப்ஜா விதைகள்
by ayyasamy ram Yesterday at 8:03 am

» முத்தக்கவிதை..!
by ayyasamy ram Yesterday at 8:01 am

» பாகிஸ்தானை வீழ்த்திய இந்தியா: பும்ரா‌ அபாரம் | T20 WC
by ayyasamy ram Yesterday at 7:16 am

» 3-வது முறை பிரதமராக பதவியேற்றார் மோடி: அமித் ஷா, ராஜ்நாத் சிங் உள்ளிட்ட 71 அமைச்சர்களும் பதவியேற்பு
by ayyasamy ram Yesterday at 7:14 am

» கருத்துப்படம் 09/06/2024
by mohamed nizamudeen Sun Jun 09, 2024 8:20 pm

» ரசித்த பதிவு ---முகநூலில்
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:58 am

» ஒன்றுபட்டால் மறுவாழ்வு! - கவிதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:55 am

» வங்கி வேலை வாய்ப்பு;
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:53 am

» யார் மிகவும் மென்மையான பெண் – விக்ரமாதித்தன் வேதாளம் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:50 am

» அரசனுக்கு அதிர்ச்சி தந்த காவலன் – விக்ரமாதித்தன் கதை
by ayyasamy ram Sun Jun 09, 2024 9:47 am

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:31 pm

» நாவல்கள் வேண்டும்
by prajai Sat Jun 08, 2024 10:25 pm

» மன அழுக்கைப் போக்கிக்க வழி செஞ்ச மகான்"--காஞ்சி மஹா பெரியவா
by T.N.Balasubramanian Sat Jun 08, 2024 6:13 pm

» நாவல்கள் வேண்டும்
by Srinivasan23 Sat Jun 08, 2024 1:06 pm

» இளையராஜா பாடல்கள்
by heezulia Sat Jun 08, 2024 12:53 pm

» வீட்டில் குபேரனை எந்த பக்கம் வைக்க வேண்டும்...
by ayyasamy ram Sat Jun 08, 2024 10:52 am

» ரெட்ட தல படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்டை வெளியிட்ட அருண் விஜய்!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:43 am

» எனக்கு கிடைத்த கவுரவம்: 'இந்தியன் 2' இசை விழா குறித்து ஸ்ருதிஹாசன் பெருமிதம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:38 am

» சீனாவின் மிக உயரமான அருவி... அம்பலமான உண்மை: அதிர்ச்சியில் சுற்றுலாப் பயணிகள்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:36 am

» தனுஷ்கோடியில் கடல் சீற்றம்
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:35 am

» கங்கனாவை அறைந்த பெண் காவலருக்கு வேலை தருவதாக பாடகர் விஷால் தத்லானி உறுதி!
by ayyasamy ram Sat Jun 08, 2024 8:34 am

» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Fri Jun 07, 2024 10:36 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_m10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10 
31 Posts - 70%
heezulia
உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_m10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10 
11 Posts - 25%
Geethmuru
உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_m10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10 
1 Post - 2%
cordiac
உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_m10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10 
1 Post - 2%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_m10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10 
158 Posts - 57%
heezulia
உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_m10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10 
94 Posts - 34%
T.N.Balasubramanian
உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_m10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10 
11 Posts - 4%
mohamed nizamudeen
உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_m10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10 
9 Posts - 3%
Srinivasan23
உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_m10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10 
2 Posts - 1%
prajai
உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_m10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10 
2 Posts - 1%
Geethmuru
உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_m10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10 
1 Post - 0%
Ammu Swarnalatha
உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_m10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10 
1 Post - 0%
cordiac
உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_m10உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து Poll_c10 
1 Post - 0%

நிகழ்நிலை நிர்வாகிகள்

உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து


   
   
சுரேஷ்
சுரேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 14/07/2011
http://rsuresh.weebly.com

Postசுரேஷ் Wed Sep 28, 2011 5:04 pm

உலகம் - கவிப்பேரரசு வைரமுத்து

அருமை நண்பர்களே,
புதிய முயற்சிகளில் ஈடுபடுவோரை இந்த உலகம் பழிக்கத்தான் செய்கிறது!.. பலர் திறமைசாலிகளாய் இருந்தும், ஊர் என்ன சொல்லுமோ என்கின்ற அச்சத்தால், அல்லது மற்றவர் ஒப்புக்கொள்வார்களா என்னும் தேவையற்ற யோசனைகளால், காட்டுக்குள் காயும் நிலா போல் பயனற்றுப்போகின்றனர்.

' நாலு பேர் என்ன சொல்வார்களோ?'

' ஊர் உலகம் ஏற்றுக்கொள்ளுமா?'

என்பன போன்ற முடக்கு வாதங்களால் ஒடுங்கிப்போனவர்களுக்காக இந்தக் கவிதை.

தன்னம்பிக்கை கொள்ளச்செய்யும் அற்புதத்தை நிகழ்த்தும் இக்கவிதையை உஙகள் சிந்தனைக்கு வைக்கிறேன்.

( கவிப்பேரரசு வைரமுத்துவின் 'தமிழுக்கு நிறம் உண்டு' என்னும் தொகுப்பிலிருந்து )

உலகம்
***********

உன்னைப் பார்த்து உலகம் குரைக்கும்
தன்னம்பிக்கை தளர விடாதே
இரட்டைப் பேச்சு பேசும் உலகம்
மிரட்டும் தம்பி மிரண்டு விடாதே

ஒவ்வொரு வாயிலும் ஒற்றை நாக்கு
உலகின் வாயில் இரட்டை நாக்கு
எனக்கு நேர்ந்த இழிமொழி எல்லாம்
உனக்குச் சொல்கிறேன் உள்ளத்தில் எழுது

***********
இன்னிசைத் தமிழை எளிமை செய்தேன்
இலக்கியம் இல்லை லேகியம் என்றது
திரைப்பாட்டுக்குள் செழுந்தமிழ் செய்தேன்
பரிமே லழகரை வரச்சொல் என்றது

குறுந்தொகை கம்பன் கொட்டி முழக்கினேன்
குண்டுச் சட்டியில் குதிரை என்றது
எலியட் நெருடா எல்லாம் சொன்னேன்
திறமை எல்லாம் திருடிய தென்றது

எளிய தோற்றமே இயல்பென ருந்தேன்
வடுக பட்டி வழியுது என்றது
அழகாய் நானும் டைகள் கொண்டேன்
கழுதைக் கெதற்குக் கண்மை என்றது

மேடையில் கால்மேல் காலிட் டமர்ந்தேன்
படித்த திமிர்தான் பணிவில்லை என்றது
மூத்தவர் வந்தததும் முதலில் எழுந்தேன்
கவிஞன் நல்ல 'காக்கா' என்றது

உயர்ந்தோர் பெருமை உவந்து புகழ்ந்தேன்
காதில் பூ வைக்கிறான் கவனம் என்றது
விரல் நகத்தளவு விமர்சனம் செய்தேன்
அரிவாள் எடுக்கிறான் பத்து என்றது

மற்றவர் சூழ்ச்சியால் மண்ணில் விழுந்தேன்
புத்தி கொழுத்தவன் புதைந்தான் என்றது
மூச்சுப் பிடித்து முட்டி முளைத்தேன்
தந்திரக்காரன் தள்ளி நில் என்றது

பகையைக் கண்டு பைய நகர்ந்தேன்
பயந்து விட்டான் பாவம் என்றது
மோதி மிதித்து முகத்தில் உமிழ்ந்தேன்
விளங்கி விட்டதா மிருகம் என்றது

***********
பணத்தில் பொருளில் பற்றற் றிருந்தேன்
வறுமையின் விந்தில் பிறந்தவன் என்றது
என்னைத் தேய்த்து மண்டபம் கட்டினேன்
புலவன் இல்லை பூர்ஷ்வா என்றது

சொந்த ஊரில் துளி நிலம் இல்லை
இவனா மண்ணின் மைந்தன் என்றது
தென்னை மரங்கள் தேடி வாங்கினேன்
பண்ணையார் ஆனான் பாவலன் என்றது

கயவர் கேட்டால் காசு மறுத்தேன்
கறக்க முடியாக் கஞ்சன் என்றது
உண்மை ருந்தால் உறுபொருள் கொடுத்தேன்
உதறித் திரியும் ஊதாரி என்றது

மங்கைய ரிடையே மெளனம் காத்தேன்
கவிஞன் என்ற கர்வம் என்றது
பெண்கள் சிலருடன் பேசத் தொடங்கினேன்
கண்களைக் கவனி காமம் என்றது

விருதுகள் கழுத்தில் வீழக் கண்டேண்
குருட்டு அதிர்ஷ்டம் கூடிய தென்றது
மீண்டும் மீண்டும் விருதுகள் கொண்டேன்
டெல்லியில் யாரையோ தெரியும் என்றது

திசைகள் தோறும் தேதி கொடுத்தேன்
அய்யோ புகழுக்கு அலைகிறான் என்றது
நேரக் குறைவு நிறுத்திக் கொண்டேன்
கணக்குப் பார்க்கிறான் கவிஞன் என்றது

***********
அப்படி இருந்தால் அதுவும் தப்பு
இப்படி ருந்தால் இதுவும் தப்பு
கத்தும் நாய்க்குக் காரணம் வேண்டாம்
தன் நிழல் பார்த்து தானே குரைக்கும்

உலகின் வாயைத் தைத்திடு; அல்லது
இரண்டு செவிகளை இறுக்கி மூடிடு
உலகின் வாயைத் தைப்பது கடினம்
உந்தன் செவிகள் மூடுதல் சுலபம்.[/size][/b]


***************************************
http://rsuresh.weebly.com/vairamuthu.html



நல்லதோர் வீணைசெய்தே:
நல்லதோர் வீணைசெய்தே - அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி; - எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ, - இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி, சிவசக்தி! - பாரதி
சுரேஷ்
சுரேஷ்
பண்பாளர்

பதிவுகள் : 74
இணைந்தது : 14/07/2011
http://rsuresh.weebly.com

Postசுரேஷ் Wed Sep 28, 2011 6:16 pm


  • வைரமுத்து (Vairamuthu, ஜூலை 13, 1953), புகழ் பெற்ற தமிழ்த் திரைப்பட பாடலாசிரியர், கவிஞர். சிறந்த பாடலாசிரியருக்கான இந்திய அரசின் விருதை ஐந்து முறை பெற்றுள்ளார்.நிழல்கள்(1980) எனும் திரைப்படத்தில் “பொன்மாலை பொழுது” எனும் பாடலை முதன்முதலில் எழுதிய இவர் ஜனவரி 2009 வரை 5800 பாடல்களை எழுதியுள்ளார்.முன்பு இளையராஜவுடனும் , பின்னர் ஏ.ஆர்.ரஹ்மானுடனும் இவர் இணைந்து வழங்கியப் பாடல்கள் காலத்தால் அழியாப் புகழையும் பல விருதுகளையும் பெற்றுள்ளன.

  • சிறந்த பாடலாசிரியருக்கன தேசிய விருது (ஆறு முறை). விருது பெற்ற திரைப்படங்கள் (பாடல்கள்)

    • முதல் மரியாதை (பாடல்:பூங்காற்று திரும்புமா)
    • ரோஜா (பாடல்:சின்னச்சின்ன ஆசை)
    • கருத்தம்மா (பாடல்:போறாளே பொன்னுத்தாயி...)
    • சங்கமம் (பாடல்:முதன் முறை கிள்ளிப் பார்த்தேன்)
    • கன்னத்தில் முத்தமிட்டால் (பாடல்:விடை கொடு எங்கள் நாடே..)
    • "தென்மேற்கு பருவக்காற்று" (பாடல்:கள்ளிக்காட்டில் பிறந்த தாயே..)

  • -Wiki



    நல்லதோர் வீணைசெய்தே:
    நல்லதோர் வீணைசெய்தே - அதை
    நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
    சொல்லடி, சிவசக்தி; - எனைச்
    சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
    வல்லமை தாராயோ, - இந்த
    மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
    சொல்லடி, சிவசக்தி! - பாரதி

    View previous topic View next topic Back to top

    மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

    ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

    உறுப்பினராக பதிவு செய்க

    ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


    பதிவு செய்ய

    உள்நுழைக

    ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


    உள்நுழைக