ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கொலு வைக்க சில டிப்ஸ் :)

View previous topic View next topic Go down

கொலு வைக்க சில டிப்ஸ் :)

Post by krishnaamma on Tue Sep 27, 2011 9:59 am

ஆச்சு, மகாளயம் முடிந்து விட்டது, இன்று மகாளைய அமாவாசைபுன்னகை இன்று பரணில் இருக்கும் கொலு பொம்மைகளை எடுத்து, படி கட்டி கொலு வைக்க வேண்டியது தான். அப்படி வைக்கும் போது உபயோகப்பட சில டிப்ஸ். நீங்களும் இங்கு எழுதுங்கள் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கொலு வைக்க சில டிப்ஸ் :)

Post by ரேவதி on Tue Sep 27, 2011 10:30 am

வணக்கம் அம்மா நல்ல திரி எங்கள் வீட்டில் செய்யும் முறைகளையும் கொஞ்சம் சொல்கிறேன் ....

1. முதலில் படிகளை அழகுபடுத்த அதை நன்கு சுத்தம் செய்து துணி போட்டு ஒவொரு படியிலும் ஏதாவது அழகிய வேலைப்பாடு செய்தால் பார்க்க நன்றாக இருக்கும் .

2. அடுத்து கோலம் போடும்போது கலர் பொடி அல்லது துருவிய உலர்த்த தேங்காயீயை கோல பொடியில் கலந்து கோலம் போட்டால் நன்றாக இருக்கும்

அடுத்து கேட்டு சொல்கிறேன் அம்மா
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: கொலு வைக்க சில டிப்ஸ் :)

Post by ரேவதி on Tue Sep 27, 2011 10:36 am

இது தினமலரில் படித்தது

செப்.28ல், நவராத்திரி ஆரம்பமாகிறது. இதையொட்டி கொலு வைக்க தயாராகி
வருவீர்கள். இந்த வருடம் நவராத்திரக்காக கொலு வைப்பவர்கள் 27.9.2011 அன்று
மகாளய அமாவாசையாக இருப்பதால் அன்றைய தினத்தில் நல்ல நேரம் பார்த்து கொலு வைக்கலாம். வருஷம்தோறும் ஒரே மாதிரியான பொம்மைகளை அடுக்கி போரடிச்சு போச்சா! இந்த வருஷம், மேற்குவங்காளத்தில் இருந்து புதுசா புதுசா, சின்னதா, அழகா பொம்மைகள் வந்திருக்கு! அதுபற்றி தெரிஞ்சுகிட்டு வாங்கிட்டு
வாங்களேன்! கொலு வைக்கும் போது, ஒற்றைப்படை எண்ணில், மேடை படி அமைப்பது வழக்கம். ஒவ்வொரு வருஷமும், புதுசா மூணு பொம்மையாவது வாங்கவேண்டுங்கிறது சம்பிரதாயம். நம் வீட்டுக்கு மட்டுமல்ல! கோயில்களில் நடக்கிற கொலுவுக்கும் பொம்மை வாங்கிக் கொடுப்பது மிகப்பெரிய கைங்கர்யம். ஆளுக்கு மூணு பொம்மை வாங்கிக் கொடுத்தாலும், ஒரு ஊரே வாங்கிக் கொடுக்கும் போது, கோயிலில் பொம்மைகள் குவிஞ்சிடும்! இந்த வருஷம் பூம்புகார் நிலையங்களுக்கு, தஞ்சாவூர், காஞ்சிபுரம், திண்டிவனம், விழுப்புரம், மதுரை ஆகிய ஊர்களில் இருந்து விற்பனைக்காக பொம்மைகள் வந்துள்ளன. காதிபவன், சர்வோதய சங்கம், பூம்புகார் விற்பனை நிலையங்களுக்கு போனா இதையெல்லாம் பார்க்கலாம்.களிமண், பேப்பர்கூழ், பீங்கான் ஆகியவற்றால் தயாரிக்கப்படும் இந்த பொம்மைகள் 15ரூபாயில் இருந்து
1600ரூபாய் வரைக்கும் விற்குது!

பெங்கால் பொம்மைகள்:
பூம்புகார் விற்பனை மையத்தில் நவராத்திரி விழாவிற்காக இந்த ஆண்டு பெங்கால்
பொம்மைகள்அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளன. இவை கோல்கட்டாவில் இருந்து
வரவழைக்கப் பட்டுள்ளன. வடக்கத்திய கிராமிய ஆண், பெண் பொம்மைகள், காய்கறி விற்கும் பெங்காலி பெண், தச்சர், கொல்லர், குயவர், பூஜை செய்யும்
சிவாச்சாரியார், கூடை பின்னுபவர் போன்ற பொம்மைகள் 75ரூபாயில் இருந்து
ரூ.120 வரை விற்குது!.

பஜனை கோஷ்டி பொம்மை:
பெங்களூரு, மும்பை, திருப்பதி,
தமிழகத்திலுள்ள பெரிய நகரங்களில் இஸ்கான் அமைப்பு நிர்வகிக்கும் ராதா
கிருஷ்ணன் கோயிலுக்கு நீங்க போயிருப்பீங்க! அங்கே கோஷ்டியாக பஜனை
பாடுபவர்களை பார்த்தால் நமக்கும் ஆடத்தோன்றும். அந்தக் கோஷ்டியை பொம்மையாக
வடித்து விற்பனைக்கு அனுப்பியிருக்காங்க! இதற்கு இஸ்கான் செட் பொம்மைன்னு
பெயர். ஜால்ரா,ஹார்மோனியம், ஸ்ருதி சேர்ப்பவர், பாடுபவர் என்னும் நான்கு பேர்
கொண்ட இந்த செட்டின் விலை ரூ.400. நார்த் இந்தியன் தாத்தா பாட்டி பொம்மை
செட் எல்லாரையும் கவரும். விலை ரூ170. இதன் ஸ்பெஷாலிட்டி என்னவென்றால்,
பாட்டி சொல்றதை சம்மதிப்பது போல தாத்தாவும், தாத்தா சொல்றதைக் கேட்பது போல
பாட்டியும் ஸ்பிரிங் கழுத்துடன் தலையாட்டுவது ரசிக்கும்படியா இருக்குது!
விதவிதமான கிருஷ்ணர்:
மகாவிஷ்ணுவின் அவதாரங்களான
மச்சம், கூர்மம், வராகம், நரசிம்மம், வாமனம், பரசுராமன், ராமன், பலராமன்,
கிருஷ்ணர், கல்கி ஆகிய தசாவதார செட்டின் விலை ரூ500. குழலூதும் கண்ணன்,
வெண்ணெய் திருடுபவன், ராதாகிருஷ்ணன், பாலகிருஷ்ணன், புன்னைவன கிருஷ்ணன்,
பசுமேய்க்கும் கிருஷ்ணன் என்று விதவிதமான கிருஷ்ணர் சிலைகளும் இருக்குது!
விலை ரூ. 200 முதல் ரூ400 வரை. ஆறுகோபியர் கண்ணனைச் சூழ்ந்து நடனமாடும்
கோபியர் செட் ரூ400. செராமிக் என்னும் பீங்கானால் ஆன பிள்ளையார், ஐயப்பன்,
போகசக்தி அம்பாள் மற்றும் குதிரை, முயல், நாய் சிலைகளும் இங்குள்ளன.
இச்சிலைகள் விருத்தாசலத்தில் இருந்து வந்திருக்கு! மெழுகினால் செய்யப்பட்ட
காய்கறி, பழங்கள்,லவ்பேர்ட்ஸ், நூலினால் பின்னப்பட்ட பொம்மைகள், ராஜேஸ்வரி
சபை செட், பர்வதமலை செட், பெருமாள் செட்டும் புதுரகம்.
தஞ்சாவூர்
பொம்மைகள்: தஞ்சாவூர் தலையாட்டி பொம்மைகள் காலத்தால் அழியாதவை. குழந்தையின்
அழுகையை நிறுத்த, டென்ஷனைக் குறைக்க இந்த பொம்மைகளுக்கு சக்தியுண்டு
என்பர். செட்டியார், ஆச்சி, டான்சிங் கேர்ள் என பலவிதமான தலையாட்டி
பொம்மைகளும் வந்திருக்கு! விலை ரூ80முதல் ரூ1000 வரை. மயில், குருவி,
குயில், கிளி, லவ்பேர்ட்ஸ் ஜோடியாக விற்கப்படுகின்றன. ஒருஜோடி ரூ50க்கும்,
இரண்டு ஜோடிரூ75க்கும் உள்ளன.

கொலு வைப்பது ஏன்:
நவராத்திரி வந்தால் கொலு வைக்க
வேண்டும், சுண்டல் நைவேத்யம் செய்ய வேண்டும், வீட்டுக்கு வருபவர்களுக்கு
பிரசாதம் கொடுக்க வேண்டும் என்ற விஷயமெல்லாம் நமக்கு அத்துப்படி. ஆனால்,
ஏன் கொலு வைக்க வேண்டும் தெரியுமா? பலவகை பொம்மைகளை அடுக்குகிறோமே, அதற்கான
ஆன்மிக காரணத்தை தெரிந்து வைத்திருக்கிறீர்களா? தேவி ஆதிபராசக்தி
இப்பூவுலகம் முழுவதிலும் அருளாட்சி செய்கிறாள். யாதுமாகி நின்றாய் காளி
என்று தேவியே இந்த உலகமாக இருக்கிறாள் என்கிறார் பாரதியார். புல், பூண்டு,
புழு, மரம், பசு, புலி, மனிதர் என்று எல்லாவித உயிர்களுமாக விளங்குகிறாள்
பராசக்தி. ஆக, அனைத்து உயிர்களிலும், பொருள்களிலும் அவளைக் காண வேண்டும்
என்பதே கொலு வைப்பதன் நோக்கம். இதனால்தான் கொலுவிற்கு சிவை ஜோடிப்பு
என்றும் பெயருண்டு. சிவை என்றால் சக்தி. சக்தியின் வடிவே பொம்மை
அலங்காரமாகச் செய்யப்படுகிறது. எனவே, கொலு வைத்தால் மட்டும் போதாது. எல்லா
உயிர்களையும் தன்னுயிர் போலக் கருதும் மனப்பான்மையை வளர்த்துக் கொள்ள
வேண்டும்.

கொலு மேடைக்கு பூஜை செய்வது எப்படி?

நூல் சுற்றிய கும்பத்தில் (குடம்) பச்சரிசி, மஞ்சள் கிழங்கு, குங்குமம், ஒரு
ரூபாய் காசு, வெற்றிலை, பாக்கு, எலுமிச்சை ஆகியவற்றை போட வேண்டும்.
குடுமியுடன் கூடிய மஞ்சள் தடவிய தேங்காயில் சந்தனம், குங்குமம் வைத்து,
மாலை சூட்டி அதன் மீது வைக்க வேண்டும். சுற்றிலும் மாவிலைகளை அடுக்க
வேண்டும். கொலுமேடை முன்பு மேஜையிட்டு அதில் கும்பத்தை வைக்க வேண்டும். அதை
அம்பாளாக நினைத்து, தினமும் காலை, மாலையில் பூஜை செய்ய வேண்டும்.

பொம்மைகளை அடுக்கும் முறை

மனிதனாகப்
பிறந்தவன் படிப்படியாக தனது குணநலனை மாற்றி, தெய்வநிலைக்கு உயர வேண்டும்.
இந்த தத்துவத்தின் அடிப்படையில் ஒன்பது படிகளில் கொலு பொம்மைகளை அடுக்குவது
மரபு. கொலு வைக்கும் முன் வீட்டை சுத்தமாக்கி, அழகிய கோலம் போடவேண்டும்.
கொலு மேடையின் உயரம் கைக்கெட்டும் அளவில் இருக்கும்படி பார்த்துக்கொள்வது
நல்லது. கீழிருந்து மேலாக படிகளில் பொம்மைகளை அடுக்க வேண்டும்.
முன்னரெல்லாம் களிமண்ணால் செய்யப்பட்ட எறும்பு, புழு உள்ளிட்ட பொம்மைகளைக்
கூட தங்கள் கையாலேயே செய்து வைத்தனர். இப்போது கடைகளில் கிடைக்கும்
பொம்மைகளையே வைப்பதால், அழகுக்கு தரும் முக்கியத்துவம் ஆன்மிகத்துக்கு
தரப்படுவதில்லை என்பது வருத்தத்தை அளிக்கிறது. இந்த ஆண்டில் இருந்தாவது,
எந்தெந்த படிகளில் என்னென்ன பொம்மைகள் இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து
செய்யலாமே!
avatar
ரேவதி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13101
மதிப்பீடுகள் : 2199

View user profile

Back to top Go down

Re: கொலு வைக்க சில டிப்ஸ் :)

Post by krishnaamma on Tue Sep 27, 2011 11:42 am

அருமை ரேவதி புன்னகை சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க

நான் டைப் செய்தது, கரண்ட் போனப்போ போய்விட்ட்து சோகம் இதோ மீண்டும் செய்கிறேன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கொலு வைக்க சில டிப்ஸ் :)

Post by உமா on Tue Sep 27, 2011 11:47 am

எங்க வீட்டில் இந்த கொலு வைக்கும் பழக்கம் இல்லை....
அதனால் எனக்கு ஏதும் தெரியாது.... புன்னகை நீங்கள் கொலு வைத்தால் படங்களை இணையுங்கள்...பார்த்து ரசிக்கிறேன்..
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: கொலு வைக்க சில டிப்ஸ் :)

Post by krishnaamma on Tue Sep 27, 2011 12:09 pm

கொலு பொம்மைகள் எவ்வளவு படிகள் வைத்தாலும் பார்க் வைத்தால் தான் கொலு முழுமை பெற்றது போல் இருக்கும் எனக்குபுன்னகை அந்த பார்க் வைக்க சில டிப்ஸ் இங்கே புன்னகை

1. நாம் பல் குத்த உபயோகிக்கும், tooth pick ஐ கொஞ்சம் இடைவெளி விட்டு பூ தொடுப்பது போல் தொடுக்கவும். உங்க பார்க் க்கு அருமையான 'fence' ready:)

2. பாதாம் , பிஸ்தா, வேர்கடலை போன்றவற்றின் ஓடுகள் பார்க் இன் நடைபாதை ஓரத்தை அலங்கரிக்க உதவும். ஜாலி

3. வால்நட்டின் ஓடுகள் பாறைகளாக உபயோகப்படும்.

4. பார்க் இல் பல்பு வைக்க, முத்து பொருத்திய குண்டூசி உதவும். :idea:

5. பார்க் இல் செடி போட, கண்டிப்பாக கடுகோ எள்ளோ உபயோகிக்காதீங்க . வீட்டில் அவை இரண்டும் வளரக்கூடாது கூடாது கூடாது கூடாது

6. கோதுமை மற்றும் கேழ்வரகு போடுங்கள், நல்ல உயரமாய் குச்சி குச்சி யாய் வளரும்.

7. உப்யோகமாய் வளர்க்கணும் என்றால், அதாவது, நவராத்திரி ஆனதும் வளர்ந்த பயிரை தூக்கி போடாமல் உபயோகிக்கணும் என்றால், வெந்தயம் அல்லது கொத்தமல்லி யை போடுங்கள். நவராத்திரி முடிந்ததும் ஒருநாள் இல்ல 2 நாள் சமையலுக்கு ஆகும் ஜாலி ஜாலி ஜாலி

8. வெந்தயத்தை அப்படியெவும், கொத்தமல்லி விதை யை 'செருப்பு காலால் தேய்த்த' பிறகும் விதைக்க போடணும்.புன்னகை

9. ஒரு ட்ரே இல் கொஞ்சம் மஞ்சள் பொடி தூவி, பிளாஸ்டிக் சீட் வைத்து அதன் மேல் மண் பரப்பி பிறகு விதை தூவவும். இதனால் மண்ணுக்கு எறும்பு வராமல் தடுக்கலாம் புன்னகை

10. மண்ணில் 'welcome' போல் ஏதாவது எழுதி , அதில் விதைகளை ஊன்றினால், அதே போல் செடி வளரும் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கொலு வைக்க சில டிப்ஸ் :)

Post by krishnaamma on Tue Sep 27, 2011 12:17 pm

எங்களுக்கு பழக்கம் உண்டு உமா , இன்று இவர் ஆஃபிஸ் லிருந்து வந்ததும் தான் வைக்கணும் புன்னகை நேற்று இரவு ஓரளவு டெகோரேட் செய்து விட்டோம் படி கட்டி பொம்மை வைக்கணும் இன்று புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கொலு வைக்க சில டிப்ஸ் :)

Post by உமா on Tue Sep 27, 2011 12:20 pm

@krishnaamma wrote:எங்களுக்கு பழக்கம் உண்டு உமா , இன்று இவர் ஆஃபிஸ் லிருந்து வந்ததும் தான் வைக்கணும் புன்னகை நேற்று இரவு ஓரளவு டெகோரேட் செய்து விட்டோம் படி கட்டி பொம்மை வைக்கணும் இன்று புன்னகை

படங்களை பதியனும்.....
சியர்ஸ் சியர்ஸ்
avatar
உமா
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 16837
மதிப்பீடுகள் : 3247

View user profile

Back to top Go down

Re: கொலு வைக்க சில டிப்ஸ் :)

Post by krishnaamma on Tue Sep 27, 2011 12:32 pm

கொலு படிக்கட்டு எப்பவும் வெள்ளை துணியால் ( வேஷ்டி ரொம்ப நல்லது புன்னகை )
இருக்கணும். அப்ப தான் பொம்மைகள் பளீரென்று இருக்கும்.

மேலே முதல் படி இல் வழக்கம் இருந்தால் கலசம் வைக்கணும். பிறகு பிள்ளையார் , பெருமாள் சிவன் போன்ற தெய்வங்கள்.

அடுத்த  படி இல் தசாவதாரம், முருகர் வள்ளி செட், ராதா கிருஷ்ணர் போன்றவை வைக்கலாம்.

அடுத்த படி இல் சாய்பாபா, ராகவேந்திரர் போன்ற மனித தெய்வங்களை வைக்கலாம்.

அடுத்த படி இல் ஆச்சரியர்களான, சங்கரர், இராமானுஜர், மத்வர் போன்றவர்களை வைக்கலாம் .

அடுத்த படி இல் ராம கிருஷ்ண பரம ஹம்ஸர் , விவேகானந்தர் , வள்ளுவர் போன்றவர்களை வைக்கலாம்.

அடுத்த படி இல் தேச தலைவர்கள்  பொம்மைகளை வைக்கலாம்.

கடைசி படி இல் செட்டியார் , செட்டிச்சி பொம்மைகள், உப்பு, பருப்பு , புளி யுடன் வைக்கணும். + மரப்பாச்சி பொம்மைகள் வைக்கணும்.

பிறகு, பார்க், ரயில்வே ஸ்டேஷன் என உங்களுக்கு பிடித்ததை தரை இல் வைக்கலாம் புன்னகை அது படி கணக்கில் வராது. ஒற்றை படை இல் படி வைக்கணும் புன்னகை


Last edited by krishnaamma on Mon Oct 12, 2015 11:10 am; edited 1 time in total


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கொலு வைக்க சில டிப்ஸ் :)

Post by krishnaamma on Tue Sep 27, 2011 12:34 pm

@உமா wrote:
@krishnaamma wrote:எங்களுக்கு பழக்கம் உண்டு உமா , இன்று இவர் ஆஃபிஸ் லிருந்து வந்ததும் தான் வைக்கணும் புன்னகை நேற்று இரவு ஓரளவு டெகோரேட் செய்து விட்டோம் படி கட்டி பொம்மை வைக்கணும் இன்று புன்னகை

படங்களை பதியனும்.....
சியர்ஸ் சியர்ஸ்

கண்டிப்பாக உமா புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கொலு வைக்க சில டிப்ஸ் :)

Post by krishnaamma on Tue Sep 27, 2011 12:45 pm

அடுத்தது கோலம் :

நிறைய கலர் பொடி வாங்கினால் வேஸ்ட் ஆகும் என்று நினைப்பவர்கள் இப்படி செயலாம் புன்னகை

1. டிகாஷன் போட்ட பின் மீதி இருக்கும் காஃபி மட்டும் டீ இன் கப்பியை காயவைத்து எடுத்துக்கணும் . இப்ப Brown Colour ready.

2. கறிவேப்பிலை அல்லது புதினா காய்ந்த து இருந்தால் பொடித்துக்கொள்ளுங்கள் . இப்ப Green Colour ready.

3. மஞ்சள் பொடி இருக்கு அத னால் Yellow Colour Ready.

4. தேங்காய் பால் எடுத்த பின்பு வரும் சக்கையை காய வைத்துக்கொள்ளுகள் , எந்த கலர் பொடியுடனும் கலக்கலாம். நிறைவாக தெரியும்.

5. சிவப்பு நிறத்துக்கு மஞ்சளும் சுண்ணாம்பும் கலக்குங்கள் சூப்பர் சிவப்பு கிடைக்கும்.

6. முத்து கோலம் போடணும் என்றால், தாம்பாளத்தில் கோலம் வரைந்து, அதன் மேல் ஃபெவிகால் தடவி ஜவ்வரிசி யை ஒட்டவும். காய்ந்ததும், ஒவ்வொரு பகத்திலும், கலர் அலல்து பூவிதழ்கள் போடவும். ரொம்ப அழகாக இருக்கும்.

7. கால் படாது என்பதால், அரிசி மற்றும் தானியங்களை ஒட்டியும் கோலம் போடலாம்.

8. வெள்ளை கல்ருக்கு தான், கோலமாவு, அரிசி மாவு மைதா மாவு என பலதும் இருக்கே புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கொலு வைக்க சில டிப்ஸ் :)

Post by krishnaamma on Mon Oct 12, 2015 11:11 am

நாளை நவராத்திரி பூஜை ஆரம்பம், எனவே இன்றே , அமாவசை அன்றே கொலு வெச்சுடணும் . இந்த பழைய திரியை மேலே கொண்டுவருகிறேன்........பலருக்கு உபயோகப்படும் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கொலு வைக்க சில டிப்ஸ் :)

Post by சசி on Mon Oct 12, 2015 12:16 pm

நன்றி அம்மா அழகான பழக்க வழக்கங்கள், உறவுகளை வரவழைக்க மீண்டும் ஒரு சந்தர்ப்பம். அருமையான பதிவு
avatar
சசி
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1353
மதிப்பீடுகள் : 742

View user profile

Back to top Go down

Re: கொலு வைக்க சில டிப்ஸ் :)

Post by krishnaamma on Tue Oct 13, 2015 11:08 am

Sasiiniyan Sasikaladevi wrote:நன்றி அம்மா அழகான பழக்க வழக்கங்கள், உறவுகளை வரவழைக்க மீண்டும் ஒரு சந்தர்ப்பம். அருமையான பதிவு
மேற்கோள் செய்த பதிவு: 1168417

நன்றி சசி........அதனால் தானே அந்த காலத்தில் பண்டிகைகள் கொண்டாடினார்கள் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கொலு வைக்க சில டிப்ஸ் :)

Post by விமந்தனி on Tue Oct 13, 2015 12:33 pm

நீங்க வச்சுடீங்களா கிருஷ்ணாம்மா.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கொலு வைக்க சில டிப்ஸ் :)

Post by krishnaamma on Tue Oct 13, 2015 12:44 pm

@விமந்தனி wrote:நீங்க வச்சுடீங்களா கிருஷ்ணாம்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1168625

இங்கு சௌதி இல் ஒண்ணும் பண்ண முடியாது விமந்தனி சோகம்....ஸ்லோகம் படிக்கலாம் அவ்வளவுதான்............பெங்களூரில் ஆர்த்தியும் கிருஷ்ணாவும் வெச்சுட்டா புன்னகை .......ஆமாம் , நீங்க வெச்சாச்சா?.......வழக்கம் உண்டா? புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கொலு வைக்க சில டிப்ஸ் :)

Post by விமந்தனி on Tue Oct 13, 2015 1:04 pm

ஓ! ஆர்த்தி வச்சாச்சா..... சூப்பருங்க
.
..
.
.
.
எங்களுக்கு வழக்கம் இல்லை கிருஷ்ணாம்மா.


avatar
விமந்தனி
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 8244
மதிப்பீடுகள் : 2520

View user profile

Back to top Go down

Re: கொலு வைக்க சில டிப்ஸ் :)

Post by krishnaamma on Tue Oct 13, 2015 1:10 pm

@விமந்தனி wrote:ஓ! ஆர்த்தி வச்சாச்சா..... சூப்பருங்க
.
..
.
.
.
எங்களுக்கு வழக்கம் இல்லை கிருஷ்ணாம்மா.
மேற்கோள் செய்த பதிவு: 1168640

ஆமோதித்தல் ஆமோதித்தல் ஆமோதித்தல்


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55820
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: கொலு வைக்க சில டிப்ஸ் :)

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum