புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_c10திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_m10திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_c10திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_m10திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_c10திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_m10திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_c10 
4 Posts - 4%
லதா மெளர்யா
திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_c10திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_m10திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_c10திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_m10திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_c10 
3 Posts - 3%
prajai
திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_c10திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_m10திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_c10 
3 Posts - 3%
Ratha Vetrivel
திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_c10திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_m10திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_c10 
2 Posts - 2%
manikavi
திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_c10திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_m10திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_c10 
2 Posts - 2%
Barushree
திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_c10திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_m10திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_c10 
1 Post - 1%
Pampu
திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_c10திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_m10திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_c10திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_m10திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_c10 
216 Posts - 42%
heezulia
திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_c10திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_m10திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_c10திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_m10திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_c10திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_m10திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_c10 
18 Posts - 3%
sugumaran
திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_c10திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_m10திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_c10திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_m10திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_c10 
6 Posts - 1%
prajai
திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_c10திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_m10திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_c10 
4 Posts - 1%
manikavi
திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_c10திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_m10திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_c10திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_m10திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_c10திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_m10திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை


   
   
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 04, 2011 12:39 pm

திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Kat1
திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவில் நிலவறைகளில் கிடைத்த ரூ.1 லட்சம் கோடிக்கும் மேலான பொக்கிஷம், அந்த கோவிலை உலகின் மிகப்பெரிய பணக்கார கோவில் பட்டியலில் சேர்த்து இருக்கிறது.

இதைத்தொடர்ந்து தமிழகத்தில், மன்னராட்சியோடு தொடர்புடைய புராதன சிறப்பு மிக்க கோவில்களிலும் விலை மதிக்க முடியாத பொருட்கள் பதுக்கி வைத்து பாதுகாக்கப்பட்டு இருக்கலாம் என்ற சந்தேகப்பார்வை மெலிதாக விழத்தொடங்கி இருக்கிறது.

இதில் சைவ சமயத்தின் பெரியகோவில் என்று அழைக்கப்படும் திருவாரூர் தியாகராஜர்கோவில், பூலோக வைகுந்தம் என போற்றப்படும் ஸ்ரீரங்கம் ரெங்கநாதர் கோவில் உள்ளிட்ட சில கோவில்கள் பட்டியலிடப்படுகின்றன.

பிறந்தாலே முக்திதரும் திருத்தலமாகவும், பஞ்சபூத தலங்களில் பூமி தலமாகவும், 64 சக்தி பீடங்களில் ஒன்றானதும், தேவார ஆசிரியர்கள் அனைவராலும் பாடல்பெற்ற திருத்தலமாகவும் திருவாரூர் தியாகராஜசுவாமி திருக்கோவில் விளங்குகிறது. மூலவர் வன்மீகநாதர் (புற்றிடங்கொண்டார்) அம்பாள் நாமம் கமலாம்பிகை.

20 ஏக்கர் பரப்பளவில் இந்த கோவில் அமைந்துள்ளது. அதே அளவிற்கு தெப்பக்குளம் அமைந்து இருப்பதும் குறிப்பிடத்தக்கது.

திருவாரூர் தேர் அழகு என்பதற்கேற்ப இங்குள்ள ஆழித்தேர் தமிழ்நாட்டிலேயே பெரிய தேர் ஆகும். பழம்பெருமை வாய்ந்த இந்த கோவிலுக்கு மன்னர்கள் பலர் திருப்பணி செய்து உள்ளனர். பத்மநாபசாமி நிலவறை பொக்கிஷம் கண்டுபிடிக்கப்பட்டதை தொடர்ந்து திருவாரூர் கோவிலிலும், அன்னியர்களின் படையெடுப்புக்கு அஞ்சி கோவிலின் உள்ளே விலைமதிக்க முடியாத பொருட்கள் பாதுகாப்பான இடத்தில் பதுக்கி வைக்கப்பட்டு இருக்கக்கூடும் என்ற ஐயப்பாடு எழுந்து உள்ளது.

திருவாரூர் தியாகராஜர் கோவிலில் மூலவர் புற்றிடங்கொண்டார் கர்ப்பக்கிரகத்தையொட்டி அர்த்தமண்டபம், முகமண்டபம் ஆகியவை உள்ளன. இந்த தியாகராஜர் கோவில், முன்பு செங்கற்கட்டுமானமாக இருந்தது. அதை கி.பி.1029-31-ல் அனுக்கியர் பரவை நங்கை என்பவரின் வேண்டுகோளுக்கு இணங்க ராஜேந்திரசோழன் கருங்கல் கோவிலாக கட்டினான். இந்தகோவிலை செம்பு தகடுகளாலும், தங்க தகடுகளாலும் போர்த்தி அழகு செய்தான் என்பதை அந்த கோவிலில் உள்ள பேரரசனின் கல்வெட்டுகள் கூறுகின்றன. அந்த கல்வெட்டுகள் இன்னும் அழியாமல் உள்ளன.

இந்த கோவிலின் கர்ப்பக்கிரகத்தில் இருந்த தியாகராஜர் திருமேனி விக்ரகம் தற்போது கர்ப்பக்கிரகத்தின் உள்ளே இல்லை. முகமண்டபத்தில் உள்ளது. கர்ப்பக்கிரகத்தோடு இணைந்துள்ள அர்த்தமண்டபம், தற்போது கதவுகளுடன் பூட்டப்பட்ட நிலையில் காணப்படுகிறது.

திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Kat2

இந்த அர்த்தமண்டப அறையை கோவிலின் பாதுகாப்பு பெட்டகமாக பயன்படுத்தி வருகிறார்கள். ஆனால் கர்ப்பக்கிரகத்தின் வாயில் முழுவதுமாக கருங்கல் கொண்டு மூடப்பட்டு உள்ளது. இது பல நூற்றாண்டுகளுக்கு முன்பு மூடப்பட்டு இருக்கும் என்று கருதப்படுகிறது. அந்த அறையில் என்ன இருக்கிறது என்பது யாருக்கும் தெரியாது. யாரும் அந்த அறையை திறந்து பார்க்க இதுவரை முயற்சி செய்யவில்லை.2-வது பிரகாரத்தில் வடமேற்கு பகுதியில் அனந்தீஸ்வரம் என்ற ஒரு சிறிய சிவாலயம் உள்ளது. அந்த சிவாலயத்தின் தென்மேற்கு பகுதியில் 2-ம் பிரகார மதிலோடு இணைத்து ஒரு அறை கட்டப்பட்டு உள்ளது. அந்த அறை 4 பக்கமும் மூடப்பட்ட நிலையிலேயே உள்ளது. இந்த அறையும் பல நூற்றாண்டுகளாக திறந்து பார்க்காத நிலையிலே உள்ளது.

கி.பி. 1758-ல் பிரெஞ்சு தளபதி லாலி என்பவன் நாகூர் மற்றும் கீவளூர் சிவாலயங்களை கொள்ளையிட்ட பின்பு திருவாரூர் கோவிலுக்கு வந்து கொள்ளையிட முயன்ற போது எந்த பொருட்களும் அவனுக்கு கிடைக்கவில்லை. அவன் வருவதற்கு முன்பாகவே அக்கோவில் உடைமைகள் மறைக்கப்பட்டு விட்டன. தனக்கு ஒன்றும் கிடைக்காத நிலையில் கோவில் குருக்கள்கள் சிலரை பிடித்து எங்கு கோவில் பொருட்கள் மறைக்கப்பட்டு இருக்கின்றன என்று விசாரித்த போது அவர்கள் தெரியாது என்று கூறவே அவர்களை துப்பாக்கியால் சுட்டு வீழ்த்தினான். இந்த நிகழ்ச்சி, இங்கிலாந்து எழுத்தாளர் ராபர்ட் ஓம் என்பவர் எழுதிய ""STORY OF THE MILITARY TRANSACTIONS OF THE BRITISH NATION IN INDUSTAN'' என்ற நூலில் (பக்கம் 321) குறிப்பிடப்பட்டு உள்ளது. எனவே 1758-க்கு முன்பே இந்த கோவில் உடமைகள் ரகசியமாக மறைக்கப்பட்டு இருப்பதற்கான சாத்தியக்கூறுகள் உள்ளன.



திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 04, 2011 12:40 pm

16 செப்பேடுகள்

தற்போது திருவாரூர் கோவில் பாதுகாப்பில் 16 செப்பேடுகள் உள்ளன. இவற்றில் 7 செப்பேடுகள் சிதம்பரம் நடராஜர் கோவிலுக்கு உரியவை ஆகும். ஒரு காலக்கட்டத்தில் தில்லைக்கோவில் (சிதம்பரம்) உடைமைகள் திருவாரூர் கோவிலில் பாதுகாப்புக்காக கொண்டு வந்து பின்னர் எடுத்துச்சென்றதாக அறியமுடிகிறது. அவ்வாறு எடுத்துச்செல்லும் போது திரும்ப எடுத்துச்செல்லப்படாமல் தங்கியவையே இந்த செப்பேடுகள் ஆகும். எனவே திருவாரூர் கோவிலுக்குரிய செப்புச்சிலைகள், விக்ரகங்கள், செப்பேடுகள், அணிகலன்கள் ஆகியவற்றையும் தில்லை கோவிலுக்குரிய சில உடைமைகளையும் திருவாரூர் கோவிலில் வைத்து பாதுகாத்து இருக்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது. அவை மேலே குறிப்பிடப்பட்டு உள்ள 2 அறைகளில் இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன.

சிதம்பரம் நடராஜர் கோவிலில் முதல் குலோத்துங்க சோழனின் உயர்நிலை அதிகாரியாக இருந்த மணவிற்கூத்தன் காளிங்கராயன் என்பவர் மூவர் தேவாரங்களையும் செப்பேடுகளில் எழுதி சிதம்பரம் நடராஜர் கோவிலில் வைத்து பாதுகாத்தார். இதனை அவர் அக்கோவிலில் பதிவு செய்து வைத்து இருக்கிற கல்வெட்டு பாடல்கள் தெளிவாக கூறுகின்றன. அதில் ஒருபாடல்

"முத்திறத்தால் ஈசன் முதல் திறத்தை பாடியவாறு
ஒத்து அமைத்த செப்பேட்டின் உள்ளே எழுதி இத்தலத்தில்
எல்லைக்கு உரியவா இசை எழுதினான் கூத்தன்
தில்லைச்சிற்றம்பலத்தே சென்று''
- என உள்ளது.

இவ்வாறு கல்வெட்டு குறிப்பிடும் மூவர் தேவார பாடல்கள் எழுதப்பட்ட செப்பேடுகளின் தொகுதி சிதம்பரம் நடராஜர் கோவிலில் இடம்பெறவில்லை. ஒரு காலக்கட்டத்தில் எதிரிகளுக்கு பயந்து சிதம்பரம் நடராஜர் கோவில் பொருட்கள் திருவாரூர் கோவிலுக்கு கொண்டு வரப்பட்டதால் மீண்டும் அவை திரும்பிச்செல்லும் போது இச்செப்பேடுகளை கொண்டு செல்லாமல் இங்கேயே வைத்து பாதுகாத்து இருக்கக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன. இந்த இரு அறைகளையும் திறந்தால் அவைகள் கூட கிடைக்கக் கூடிய வாய்ப்புகள் உள்ளன.

திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Kat3

மாலிக்காபூர் படையெடுப்பு

இதுகுறித்து பிரபல வரலாற்று கல்வெட்டு ஆராய்ச்சியாளர் குடவாயில் பாலசுப்பிரமணியன் கூறியதாவது:-

கி.பி. 1311-ல் மாலிக்காபூரும், 1318-ல் குஸ்ருகாலும் டெல்லி சுல்தானின் தளபதிகளாக தமிழ்நாட்டின் மீது படையெடுத்து வந்து திருக்கோவில்களை சூறையாடினர். அப்போது தெய்வத்திருமேனிகளை சேதப்படுத்தியதோடு, உலோக விக்கிரகங்களையும், அணிகலன்களையும் மற்றும் உயர்ந்த பொருட்களையும் கொள்ளையடித்துச்சென்றனர்.

அப்போது சோழநாட்டு கோவில்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாயின என்பதை மாலிக்காபூருடன் பயணம் செய்த பயண எழுத்தாளர் அமீர் குஸ்ரூ தன் குறிப்பேட்டில் பதிவு செய்துள்ளார். திருவாரூர் கோவிலும் அப்போது தாக்குதலுக்கு உள்ளாகி இருக்கலாம்.

மேலும் மாலிக்காபூர் படையெடுப்புக்கு பயந்து பல கோவில்களில் செப்புத்திருமேனிகளையும், பிற பொருட்களையும் புதைத்தனர் என்பது திருவாரூர் மாவட்டத்தின் பல்வேறு ஊர்களில் புதைந்திருந்து வெளிப்படும் உலோகச்சிலைகள், பூஜை பாத்திரங்கள் வாயிலாக அறிய முடிகிறது. எனவே திருவாரூர் தியாகராஜர் கோவிலில் தியாகேசர் கருவறையிலும் ஆனந்ததேசம் எனும் சுற்றுக்கோவிலின் ரகசிய அறையிலும் டெல்லி, மதுரை சுல்தான்களின் படையெடுப்புக்காலங்களில் (கி.பி.1311 முதல் 1371-க்குள்) ஏதேனும் உயர்ந்த பொருட்களையோ, தெய்வ உருவங்களையோ பாதுகாப்பாக வைத்து கர்ப்பக்கிரக வாயிலை கற்கொண்டு மூடி (கல்திரை இட்டு) இருக்க வேண்டும்.

17, 18-ம் நூற்றாண்டுகளில் அவுரங்கசீப்பின் படையெடுப்பு, ஆற்காட்டு நவாப், பிரெஞ்சு படையினரின் படையெடுப்பு ஆகியவை காரணமாக கோவில்கள் சூறையாடப்பட்டன. குறிப்பாக தில்லை (சிதம்பரம்) திருவாரூர் கோவில்கள் மிகவும் பாதிப்புகளுக்கு உள்ளாயின.

திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Kat4

செப்பேடு சொல்லும் சேதிகள்

திருவாரூர் கோவில் பாதுகாப்பில் பல செப்பேடுகள் உள்ளன. அவற்றில் 5 செப்பேடுகள் தில்லை (சிதம்பரம்) நடராஜர் கோவிலுக்கு உரிமையானவையாகும். ஏதோ ஒரு காலக்கட்டத்தில் தில்லை கோவிலுக்குரிய அச்செப்பேடுகள் பாதுகாப்பு காரணமாக திருவாரூர் கோவிலுக்கு கொண்டுவரப்பெற்று பின்பு மீண்டும் அவை தில்லைக்கோவிலுக்கு திரும்பாமலேயே இங்கு தங்கி விட்டன.

அச்செடுப்பேடுகளில் நான்கில் சிதம்பரம் நடராஜர் 23-12-1648 முதல் 14-11-1686 முடிய 37 ஆண்டுகள் 10 மாதம், 20 நாட்கள் சிதம்பரத்தில் இல்லாமல் பாண்டிநாடு சென்று 40 மாதங்கள் குடுமியா மலையிலும், பின்னர்மதுரையிலும் இருந்து இறுதியாக சிதம்பரம் வந்தார் என்று கூறப்பட்டுள்ளது.

கி.பி.1686-ல் மீண்டும் நடராஜர் தில்லைவந்து சேர்ந்ததால் கும்பாபிஷேகம் நடத்தப்பட்டது. அப்போது எழுத பெற்றவையே மேற்குறித்த இந்த செப்பேடுகளாகும். 1686-க்கு பிறகு தான் சிதம்பரம் கோவிலுக்குரிய செப்பேடுகள் திருவாரூர் கோவிலுக்கு வந்துசேர்ந்திருக்க வேண்டும்.

1758-ல் திருவாரூர் கோவில் பிரெஞ்சு தளபதி லாலி என்பவரால் சூறையாடப்பட்டது. லாலியின் கொள்ளையடிப்புக்கு பயந்து திருவாரூர் கோவில் உடைமைகள் மறைக்கப்பெற்றன. அச்சமயத்தில் கூட தியாகராஜர் பெருமானின் கருவறையையும், அனந்ததேசத்து ரகசிய அறையையும் கல் திரையிட்டு மூடப்பட்டு இருக்கலாம் என கருத முடிகிறது. திருவாரூர் திருக்கோவிலில் உள்ள இரண்டு மூடப்பெற்ற ரகசிய அறைகளில் திருவாரூர், தில்லை கோவில்களுக்குரிய செப்புத்திருமேனிகள், செப்பேடுகள், அணிகலன்கள் பிற கோவில் பொருட்கள் மறைத்து வைக்கப்பெற்றிருக்கக்கூடிய சாத்தியம் இருப்பதால் மேற்குறித்த இரண்டு அறைகளையும் ஆய்வு செய்வது இன்றியமையாத ஒன்றாகும்.

இவ்வாறு அவர்கூறினார்.



திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91534
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sun Sep 04, 2011 12:41 pm

கண்டுபிடிப்பது எப்படி?

திருவாரூர் கோவிலில் தியாகராஜ பெருமானின் கருவறையும், அனந்ததேசத்து ரகசிய அறையும் கல் திரையிட்டு மூடப்பட்டுள்ளன. ஆகம விதிப்படி கோவில் திருப்பணிகள் செய்து தான் இவற்றை திறந்து உள்ளே என்ன இருக்கிறது என்று கண்டுபிடிக்க வேண்டும் என்பது இல்லை.
திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Kat5

திருவாரூர் தியாகராஜர் கருவறையில் அபிஷேக நீர் வெளியேறக்கூடிய கோமுகம் உள்ளது. அந்த கோமுகம் வழியே நவீன கருவிகளை செலுத்தி அறையின் கல் திரையை நீக்காமலேயே உள்ளே என்ன பொருள் இருக்கிறது என்று ஆராயலாம். அனந்ததேசம் ஆலயத்திலுள்ள (இரண்டாம் பிரகாரம்) ரகசிய அறையை ஆலய சுவரில் உள்ள மாடத்தில் ஒரு துளையிட்டு அதன் வழியே ஆராயலாம். வல்லுனர்களின் துணையுடன், நவீன கருவிகள்மூலம் திருவாரூர் கோவிலில் உள்ள இரண்டு ரகசிய அறைகளையும் முதல் கட்டமாக ஆராய்ந்து பின்பு அறைகளை திறக்க முயற்சி மேற்கொள்ளலாம். இதற்கான நவீன கருவிகள் திருச்சி பெல் போன்ற பெரிய நிறுவனங்களில் உள்ளன.

***

`தோவாளை புதையல்' எங்கே?

குமரி மாவட்டம் முன்பு திருவாங்கூர் சமஸ்தானத்துடன் இணைந்து இருந்தது. 1950-ம் ஆண்டில் குமரி மாவட்டம் தோவாளை பகுதியைச் சேர்ந்த ஒருவருடைய வீட்டில் கிணறு தோண்டியுள்ளனர். அப்போது பெரிய செம்பு குடத்தில் தங்க கட்டிகள், தங்க நாணயங்கள் அடங்கிய பொற்குவியல் கிடைத்தது.

அப்போதைய திருவாங்கூர் மன்னர் சித்திரை திருநாள் பாலராம வர்மாவின் உத்தரவின்படி அந்த தங்கப்புதையல் திருவனந்தபுரம் கோட்டை பகுதியில் உள்ள முதன்மை துணை கருவூல பாதுகாப்பு அறைக்கு கொண்டு செல்லப்பட்டது. அப்போது அதுதான் திருவாங்கூரின் கருவூலமாக இருந்தது.

1956-ம் ஆண்டு மாநிலங்கள் சீரமைக்கப்பட்டபோது தோவாளை பகுதி தமிழ்நாட்டுடன் இணைக்கப்பட்டது. அப்போது தோவாளையில் கண்டெடுக்கப்பட்ட புதையல் யாருக்கு சொந்தம்? என்பது குறித்து இரு மாநிலங்கள் இடையே பிரச்சினை எழுந்தது. அன்றைய நாட்களில் சட்டசபையிலும் இதுபற்றி விவாதம் நடைபெற்றது.

பத்மநாபசாமி கோவில் புதையல் அம்பலமானதை தொடர்ந்து, தோவாளை புதையல் விவகாரம் மீண்டும் சூடு பிடிக்க தொடங்கி உள்ளது.

***

உயிர்ப்பலி வாங்குமா புதையல்?


புதையல் என்றாலே அதில் எல்லோருக்கும் ஒரு எதிர்பார்ப்பும், சுவாரசியமும் வந்து விடும்.

புதையல்களை பூதம் காப்பதாகவும், அவற்றை தோண்டி எடுத்தால் பூதம் அடித்துக் கொன்றுவிடும் என்றும் காலம் காலமாக செவிவழிச் செய்திகள் உண்டு.

இப்போது இருப்பதை போன்ற பாதுகாப்பு பெட்டக வசதிகளெல்லாம் அந்த காலத்தில் கிடையாது. அந்த காலத்தில் பெரும் செல்வந்தர்கள், கள்ளர்களிடம் இருந்து பாதுகாப்பதற்காக தங்களிடம் உள்ள நகைகளை மண்பாண்டத்தில் வைத்து யாருக்கும் தெரியாமல் ஏதாவது ஒரு அடையாளத்துடன் மண்ணில் புதைத்து வைத்து விடுவார்கள். காலப்போக்கில் அதை யாரிடமும் தெரிவிக்காமல் அவர்கள் இறந்து விடும் வாய்ப்பும் உள்ளது.

பிற்காலத்தில் வீடு கட்டவோ அல்லது வேறு ஏதாவது காரணத்திற்காகவோ அந்த இடத்தை தோண்டும் போது அந்த புதையல் கிடைக்கும். கிராமங்களில் புதையல் கிடைத்ததாக நாம் எப்போதாவது கேள்விப்படுகிறோமே...அது இப்படித்தான்.

ஆனால் புதையலை எடுத்தால், அதை எடுத்தவர்களுக்கு ஏதாவது தீங்கு ஏற்படும் என்ற ஒரு கருத்தும் நிலவுகிறது. புதையல் உயிர்ப்பலி வாங்காமல் விடாது? என்று கிராமப்புறங்களில் உள்ள பெரியவர்கள் சொல்வது உண்டு. இதற்கு வரலாற்றிலும் பல சான்றுகள் உள்ளன.

உதாரணத்துக்கு ஒன்று....

1941-ம் ஆண்டு அப்போதைய ரஷிய அதிபர் ஸ்டாலின், சமர்கண்ட் நகரில் உள்ள (தற்போது உஸ்பெகிஸ்தான் நாட்டில் உள்ளது) மங்கோலிய தளபதி தைமூரின் கல்லறையை தோண்டி தைமூரின் உடலுடன் புதைக்கப்பட்ட அவரது வாளை எடுத்து வருமாறு கூறி நிபுணர்கள் குழு ஒன்றை அங்கு ரகசியமாக அனுப்பி வைத்தார். அவர்கள் அங்கு சென்று கல்லறையில் எழுதப்பட்டு இருந்த எச்சரிக்கை வாசகங்களையும், ஏற்பட்ட சில கெட்ட சகுனங்களையும் மீறி 1941-ம் ஆண்டு ஜுலை 21-ந் தேதி கல்லறையை தோண்டி தைமூரின் பிணத்தை வெளியே எடுத்தார்கள். ஆனால் வாளை கண்டுபிடிக்க முடியவில்லை. அந்த குழுவினர் மாஸ்கோ நகருக்கு திரும்பி வருவதற்குள் ஒருவர் பின் ஒருவராக விபத்துகளிலும், விலங்குகள் தாக்கியும் உயிர் இழந்தனர். இதற்கிடையே, தைமூரில் கல்லறை தோண்டப்பட்ட மறுநாளே ஜெர்மன் சர்வாதிகாரி ஹிட்லரின் படைகள் ரஷியாவுக்குள் புகுந்தன. ரஷியா பெரும் அழிவை சந்தித்தது.இது புதையல் பூதத்தின் வேலையா? அல்லது இயற்கையாக நிகழ்ந்ததா? என்பதில் மாறுபட்ட கருத்துகள் உள்ளன.

சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்து பத்மநாபசாமி கோவில் தங்க புதையலை அம்பலப்படுத்திய தமிழ்நாட்டை சேர்ந்த வக்கீல் சுந்தரராஜன் சமீபத்தில் திடீரென்று மரணம் அடைந்தது நினைவு இருக்கலாம்.

குருவி உட்கார பனம்பழம் விழுந்ததா? அல்லது பனம்பழம் விழுந்த சமயத்தில் குருவி சென்று பனை மரத்தில் அமர்ந்ததா? யாருக்கு தெரியும்?

***

6-வது அறையை திறந்தால் ஆபத்தா?

திருவனந்தபுரம் பத்மநாபசாமி கோவிலில் உள்ள 6-வது பொக்கிஷ அறை இன்னும் திறக்கப்படவில்லை. அந்த அறையை திறந்தால் ஆபத்து ஏற்படும் என்று எச்சரிக்கப்பட்டு உள்ளது.

6-வது அறையை திறப்பது தொடர்பாக சமீபத்தில் ஜோதிடர்கள் தேவபிரசன்னம் பார்த்தனர். தேவபிரசன்னத்தில், அந்த அறையை திறப்பவர்களின் குடும்பம் அழிவை சந்திக்க நேரிடும் என்று தெரிய வந்ததாக அதிர்ச்சி குண்டு ஒன்றை தூக்கி வீசி இருக்கிறார்கள். அந்த அறையை திறப்பதை தடுக்க தேவபிரசன்னம் என்ற பெயரில் பயமுறுத்துகிறார்கள் என்று மற்றொரு தரப்பினர் கூறுகிறார்கள்.

இந்த பிரச்சினைக்கு விரைவில் ஒரு முடிவு ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

***

ஆந்திராவிலும் தோண்டுகிறார்கள்

மன்னர்கள் ஆட்சி காலத்தில் பாதுகாப்பு கருதி கோவில்கள், கோட்டைகள் ஆகிய இடங்களில் அவர்கள் தங்கத்தை புதைத்து வைத்ததாக கருதப்படுகிறது. ஆந்திராவில் விஜயநகர மன்னர்கள் மற்றும் சாளுக்கியர்கள், காகதீய ஆட்சியாளர்கள் காலத்தில் அவர்கள் தொடர்புடைய கோவில்கள், கோட்டைகள், வரலாற்று சின்னங்கள் ஆகிய இடங்களில் தங்கம் புதைத்து வைக்கப்பட்டதாக ஆந்திராவில் பரவலாக ஒரு நம்பிக்கை உள்ளது.

இதனால் மேடக் மாவட்டத்தில் உள்ள பழங்கால சித்தேஸ்வர சுவாமி கோவில், கரீம் நகர் மாவட்டத்தில் உள்ள நகுனூரில் உள்ள சக்லேஷ்வரர் கோவில் உள்ளிட்ட வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த இடங்களில் பொக்கிஷங்களை அபகரிப்பதற்காக மர்ம மனிதர்கள் பூமியை தோண்டி சிலைகள் மற்றும் சிற்பங்களை சேதப்படுத்தி உள்ளனர். ஆனால் இதுவரை யாருக்கும் தங்கப்புதையல் எதுவும் கிடைத்ததாக தகவல் இல்லை.

புதையல் வேட்டை என்ற பெயரில் இவ்வாறு வரலாற்று சின்னங்கள் சேதப்படுத்தப்படுவதை தடுக்க ஆந்திர அரசு தீவிர நடவடிக்கை எடுத்து உள்ளது.

தினதந்தி



திருவாரூர் கோவிலிலும் பொக்கிஷமா? - கட்டுரை Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக