புதிய பதிவுகள்
» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 6:37 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 4:15 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 2:45 pm

» கவிதை தூறல்
by ayyasamy ram Today at 2:44 pm

» பாட்டி மொழி - கவிதை
by ayyasamy ram Today at 2:44 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 1:35 pm

» கருத்துப்படம் 19/04/2024
by mohamed nizamudeen Today at 8:59 am

» நாவல்கள் வேண்டும்
by Baarushree Today at 8:35 am

» மக்களவைத் தேர்தல் 2024: முதல் சுற்றில் மோதும் நட்சத்திர வேட்பாளர்கள்... கனிமொழி டூ நிதின் கட்கரி வரை!
by ayyasamy ram Today at 7:30 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 6:30 am

» பும்ராவின் மிரட்டல் பந்து வீச்சு ..!! கடைசி ஓவரில் வெற்றியை ருசித்த மும்பை !!
by ayyasamy ram Today at 5:58 am

» சாவித்திரிபாய் பூலே
by ayyasamy ram Yesterday at 10:07 pm

» வாழ்க்கையில் மாற்றம் என்பது...
by ayyasamy ram Yesterday at 9:56 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:59 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 6:40 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, நாடகங்கள்
by heezulia Yesterday at 5:23 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 5:08 pm

» நேர்மறை எண்ணங்களைப் பெருக்கும் ஓம் எனும் மந்திரம்….!
by ayyasamy ram Yesterday at 11:26 am

» கல்யாணம் பண்ணுங்க சார்! லைஃப் ரொம்ப நல்லா இருக்கும்!
by ayyasamy ram Yesterday at 11:24 am

» எனது கனவு எழுத்தாளர்!
by ayyasamy ram Yesterday at 11:20 am

» தூக்கத்திலே துணி தோய்க்கிற வியாதி..!
by ayyasamy ram Yesterday at 11:18 am

» திருடனைப் பார்த்து நாய் வாலாட்டுதே…!!
by ayyasamy ram Yesterday at 11:17 am

» பரோட்டா & பராத்தா – வித்தியாசம்
by ayyasamy ram Yesterday at 11:15 am

» ஸ்ரீ ராம நவமி நல்வாழ்த்துகள்
by சிவா Wed Apr 17, 2024 9:02 pm

» பதிவிறக்கம் பணண இயலவில்லை
by லதா மெளர்யா Wed Apr 17, 2024 8:20 pm

» உடலும் மனமும் ஆராக்கியமாய் இருக்க....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:43 pm

» பலநாள் திருடன்..
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:34 pm

» உண்மையிலேயே #மஹாராணிகள்....
by ayyasamy ram Wed Apr 17, 2024 3:18 pm

» சில பயனுள்ள கிச்சன் டிப்ஸ்
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:54 pm

» குடும்ப பெண்களுக்கு பயனுள்ள வீட்டு குறிப்புகள்...!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:52 pm

» பழங்களும் அவற்றின் அற்புத பலன்களும்....!!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:49 pm

» ஐபிஎல்2024: தனி ஒருவனாக அடித்து தூக்கிய பட்லர்.. ராஜஸ்தான் அபார வெற்றி..!
by ayyasamy ram Wed Apr 17, 2024 12:44 pm

» ஸ்ரீ ராமநவமி -17-04-2024
by ayyasamy ram Wed Apr 17, 2024 10:20 am

» நாவல்கள் வேண்டும்
by M. Priya Tue Apr 16, 2024 11:50 pm

» பாகற்காயில் உள்ள கசப்பு போக…(கிச்சன் டிப்ஸ்)
by ayyasamy ram Tue Apr 16, 2024 7:14 pm

» மிரட்டிய பத்திரனா. வீணானது ரோஹித் சதம்.சொந்த மண்ணில் மும்பையை வீழ்த்திய சென்னை ..!
by ayyasamy ram Mon Apr 15, 2024 7:23 am

» இஸ்ரேலில் தொடரும் பதட்ட நிலை..
by ayyasamy ram Sun Apr 14, 2024 5:35 pm

» வீட்டிற்கு ஒரு மோகினி பிசாசை வளர்ப்போம்!!
by ayyasamy ram Sun Apr 14, 2024 2:39 pm

» சித்திரைத் திருநாள் வாழ்த்துகள்
by ayyasamy ram Sun Apr 14, 2024 12:17 pm

» பலாப்பழ பாயாசம்
by ayyasamy ram Sun Apr 14, 2024 8:28 am

» கொல்கத்தா அணியும், லக்னோ அணியும் இன்று மதியம் மோதுகிறது
by ayyasamy ram Sun Apr 14, 2024 7:59 am

» உஸ்…ஸ்… தாங்க முடியல….????????
by ayyasamy ram Sat Apr 13, 2024 5:01 pm

» தன்னம்பிக்கையே பலம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 1:26 pm

» பல்லு முக்கியம்…!!! …
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:16 am

» இயலாத்து என்று எதுவும் இல்லை
by ayyasamy ram Sat Apr 13, 2024 11:12 am

» போருக்கு தயாராகும் வடகொரியா... அதிபரின் அறிவிப்பால் பதற்றம்!
by ayyasamy ram Sat Apr 13, 2024 10:59 am

» உரிய ஆவணங்கள் இருந்தா விட்டுடு. …
by ayyasamy ram Sat Apr 13, 2024 9:59 am

» திருவருள் பெருக்கும் திருமெய்யம்
by ayyasamy ram Sat Apr 13, 2024 7:31 am

» வெற்றிகரமான வாழ்க்கை வாழ...
by ayyasamy ram Sat Apr 13, 2024 6:56 am

இந்த வார அதிக பதிவர்கள்
heezulia
நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10 
55 Posts - 51%
ayyasamy ram
நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10 
34 Posts - 31%
mohamed nizamudeen
நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10 
4 Posts - 4%
prajai
நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10 
3 Posts - 3%
லதா மெளர்யா
நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10 
3 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10 
3 Posts - 3%
manikavi
நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Ratha Vetrivel
நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10 
2 Posts - 2%
Baarushree
நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10 
1 Post - 1%
Rutu
நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10 
216 Posts - 42%
heezulia
நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10 
196 Posts - 38%
Dr.S.Soundarapandian
நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10 
52 Posts - 10%
mohamed nizamudeen
நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10 
18 Posts - 3%
sugumaran
நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10 
16 Posts - 3%
ஆனந்திபழனியப்பன்
நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10 
6 Posts - 1%
manikavi
நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10 
4 Posts - 1%
prajai
நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10 
4 Posts - 1%
Abiraj_26
நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10 
3 Posts - 1%
லதா மெளர்யா
நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_m10நுனிப்புல் தின்போமா  ? - Page 4 Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

நுனிப்புல் தின்போமா ?


   
   

Page 3 of 20 Previous  1, 2, 3, 4 ... 11 ... 20  Next

ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011

Postayyamperumal Thu Aug 18, 2011 5:38 pm

First topic message reminder :


நுனிப்புல் தின்போமா  ?


   அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில்  எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு
         நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் அனைவருக்கும் இலக்கிய பசி இருப்பதை நான் அறிவேன்.  பசித்திருக்கும் ஒருவன் நொறுக்கு தீனிகளை தின்பது போல நாம், நம் இலக்கிய பசிக்கு நொறுக்கு தீனி திண்போம். இதில் ஓர் நன்மையும் உண்டு. நொறுக்கி தீனிகள் பசியை அதிகப் படுத்தும் ஆனால் பசியை தீர்க்காது. அதைப்போல இந்த நுனிப் புல் மேய்வதால் இலக்கியத்தை முழுதாய் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வளரும்.                

இதற்க்காக நாம் பெரிதாய் ஒன்றும் செய்ய  தேவை இல்லை. சிறுவயதில் படித்த இடம் சுட்டி பொருள் விளக்குக என்கிற  பாடத்தை மீண்டும் படித்தால் போதும்.


உதாரணம் !
இடம் சுட்டி பொருள் விளக்கு

முருகிர் சிறந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் கூந்தல் !  
                                        இது போன்ற எதேனும் இலக்கியத்தில் உள்ள வரிகளை எழுதி கேள்வி கேளுங்கள்.
இதன் பதிலை தருவதற்க்கு சிலராவது தயாராய் இருப்பார்கள் ஆனால் பெரும்பாலானோர் அதனை தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.    
இதனை நன்கு இலக்கியப்பரிச்சயம் உள்ள யாரேனும் கவனத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்.



M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Tue Jun 23, 2015 10:44 am

இனி அடுத்த நுனிப் புல்லை மேய்வோமா !

இடம் சுட்டிப் பொருள் விளக்குக .
========================

கல்லாதான் கற்ற கவி .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
ayyasamy ram
ayyasamy ram
வழிநடத்துனர்

பதிவுகள் : 81884
இணைந்தது : 30/09/2013
https://rammalar.wordpress.com/

Postayyasamy ram Tue Jun 23, 2015 10:46 am


மாணிக்கவாசகரால் பாடப்பட்டு இறைவனால்
எழுதப்பட்டது என்ற சிறப்பினைக் கொண்ட ஒரு நூல்.
திருவாசகம்
-
“திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும்
உருகார்” என்பது மிகைப்படுத்தப் பட்ட கூற்று அல்ல
என்பதினை இந்நூலினைப் படித்தோர் அறிவர்.”
-
இந்நூலில்தான் மாணிக்கவாசகர்
“தென்னாடுடைய சிவனே போற்றி
எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி”
என்கிறார்
-
எந்நாட்டவர்க்கும் இறைவா என்றுக் கூறினாலும்,
இறைவனை தென்னாடுடையவன் என்று சிறப்பாகக்
கூறுகின்றார் மாணிக்கவாசகர்
-
அவர் அவ்வாறு சொல்ல வேண்டியக் காரணம் என்ன?
-
மாணிக்கவாசகர் ’தென்னாடுடைய’ என்னும்
சொல்லினை ‘தென்னவனின் நாட்டினைச் சிறப்பாக
உடைய’ என்னும் அர்த்தத்தினில் பயன் படுத்தி
இருக்கின்றார்.
-
‘தென்னவனின் நாடா???”
-
சற்று விளக்கமாகப் பார்ப்போம். இங்கே தான் மொழி
அறிஞர்கள் நம் உதவிக்கு வருகின்றார்கள்.
-
தென்னவன் என்றச் சொல் பாண்டியனைக் குறிக்கும்.
பாண்டியன் என்பதின் அர்த்தம் ‘பழைய நாட்டினை
ஆண்ட மன்னன்’ என்பதே ஆகும். ‘பாண்டி’ என்றால்
‘பழைய’ என்றும் தமிழில் அர்த்தம் இருக்கின்றது.
-
எனவே ‘தென்னாடு’ என்றால் ‘பாண்டியனால்
ஆளப்பட்ட பழைய நாடே ஆகும்’. சிவன் அந்த
நாட்டினில் சிறப்பாக இருக்கின்றார் என்றே மாணிக்கவாசகர்
கூறுகின்றார்.
-
“பழைய நாடா???” - பாண்டியன் மதுரையை அல்லவா
ஆண்டான் என்று கூறுபவர்களுக்கு, இப்பொழுது இருக்கும்
மதுரை மூன்றாவது மதுரை. இதற்கு முன்னர் இருந்த
இரு மதுரைகள் கடற்கோள்களினால் அழிந்துப் போயின.
அது வரலாறு!!! குமரிக்கண்ட வரலாறு!!! மாணிக்கவாசகர்
‘தென்னாடு’ என்றுக் குறிப்பிடுவதும் இந்த
குமரிக்கண்டத்தையேதான்.
-
ஏன் சிவனை ‘குமரிக்கண்டத்தை சிறப்பாக உடையவன்’
என்று மாணிக்கவாசகர் குறிப்பிடுகிறார்.
-
ஏனெனில், இறைவன் மனிதனை முதன் முதலில்
படைத்தது இக்கண்டத்திலேயே தான்.
-
ஏன் இறைவனைப் பற்றிய எழுச்சி தமிழகத்தில் தமிழில்
எழுந்தது?
-
ஏனெனில், உலகின் முதல் மனிதன் தமிழன். அவன்
இறைவனிடம் பேசிய மொழி தமிழ்!!! இவை தான் அந்தக்
கேள்விகளுக்கு பதில்…
-
------------------

நன்றி--இணையம்

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 24, 2015 5:32 pm

இடம் சுட்டிப் பொருள் விளக்குக .
========================

கல்லாதான் கற்ற கவி





ஔவையாரின் மூதுரை விளக்கம் – 14
=====================================

கான மயிலாடக் கண்டிருந்த வான்கோழி
தானும் அதுவாகப் பாவித்துத் – தானுந்தன்
பொல்லாச் சிறகைவிரித் தாடினாற் போலுமே
கல்லாதான் கற்ற கவி.

விளக்கம்.
============

நூல்களைப் படிக்காதவன், மற்றவர்கள் படிக்கும் போது அதைப் பார்த்து அரை குறையாகக் கற்றுக்கொண்டு பாட்டைப் பாடுவது, காட்டிலே மயிலானது தனது அழகிய தோகையை விரித்து ஆடிக்கொண்டிருக்க , அதைப்பார்த்துக் கொண்டு பக்கத்திலேயிருந்த வான்கோழியானது தன்னையும் அம்மயில் என நினைத்துத் தன்னுடைய விகாரமான இறக்கைகளைப் பரப்பி ஆடினதை ஒக்கும்.

(கருத்து – கல்வியறிவில்லாதவன் கற்றவர்களைப் போல் நடிப்பது கூடாது என்பதாம்)

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Wed Jun 24, 2015 5:36 pm

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !
==========================================

செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 26, 2015 10:37 am

நம் தமிழினத்தின் நாகரிகத்தினைப் படம்பிடித்துக் காட்டும் பாடலிது. இது குறுந்தொகையில் 40 ஆவது பாடல், தலைவனும் தலைவியும் எதிர்பாராமல் சந்திக்கின்றனர்.காதலிக்கின்றனர், அங்கே சாதி, மத வேறுபாடில்லை. ஆனால், தலைவிக்கு தலைவன்மேல் ஒரு சந்தேகம் வருகிறது. இவன் நம்மைப் பிரிந்துவிடுவானோ என்பதுதான் அது!   அவளின் இந்த உள்ளக் குறிப்பைக்கூட, அவள் கூறாமலே உணர்ந்து கொள்கின்றான் தலைவன். அவர்கள் கண்ணெதிரே, மழை நீர் மண்ணோடு கலந்து ஓடுகிறது. தலைவியின் அச்சத்தை, எதைச் சொல்லி, எப்படிச் சொல்லித் தெளிவிப்பது? என்று நினைத்தத் தலைவனுக்குக் கண் முன்னே தோன்றும் நீரும் நிலனுமே கைகொடுக்கிறது. “இந்த நிலத்தோடு பிரிக்க முடியாதவாறு மழைநீர் சேர்ந்துவிட்டதல்லவா? அதைப் போன்றதுதான் நம் அன்பும்” என்கிறான் தலைவன். தலைவனின் அன்பு மொழிக்கு முன் தலைவியின் அச்சம் காணாமல் போவது இயல்பு தானே? இதோ பாடல்….

யாயும் ஞாயும் யார் ஆகியரோ?
எந்தையும் நுந்தையும் எம்முறைக் கேளீர்?
யானும் நீயும் எவ்வழி அறிதும்?
செம்புலப் பெயல் நீர் போல
அன்புடை நெஞ்சம் தாம் கலந்தனவே.

பாடலைப் பாடியவர்- செம்புலப் பெயல்நீரார்

குறிஞ்சித்திணைப் பாடல்

கருத்துரை:

என் தாயும் உன் தாயும் எவ்வாறு உறவினர்? என் தந்தையும் உன் தந்தையும் எம்முறையில் உறவானவர்கள்? எந்த உறவின் வழியாக நீயும் நானும் ஒருவரை ஒருவர் அறிந்து கொண்டோம்? செம்மண்ணில் பெய்த மழை நீர் எவ்வாறு அம்மண்ணோடு ஒன்று கலந்து பிரிக்கமுடியாதவாறு ஆகிவிடுகிறதோ அதைப்போல ஒன்றுபட்ட அன்பினால் நம் நெஞ்சங்களும் ஒன்று கலந்தன. (அதனால் நெஞ்சம் ஒன்று கலந்த நம் அன்பும் என்றும் பிரியாது. மண்ணோடு கலந்த நீரை எப்படி பிரிக்கமுடியாதோ, அவ்வாறே நம்மையும் பிரிக்க முடியாது.)

சொல்பொருள் விளக்கம்:

யாயும்-என் தாயும், ஞாயும்- உன் தாயும், யார் ஆகியரோ- யாருக்கு யார் உறவினர், எந்தையும்- என் தந்தையும், நுந்தையும்- உன் தந்தையும்,எம்முறை- எந்த முறையில், கேளீர்- உறவினர்,யானும் நீயும் –நானும்- நீயும் நானும், எவ்வழி- எந்த உறவின் வழியாக, அறிதும்- அறிந்து கொண்டோம்? செம்புலப் பெயல் நீர் போல-செம்மண் நிலத்தில் பெய்த மழை நீர் போல, அன்புடை நெஞ்சம்– அன்பான நெஞ்சங்கள், தாம் – தாமாகவே(யாதொரு உறவுமின்றி), கலந்தனவே- கலந்துகொண்டனவே.
எவ்வாறு மழையினை செம்புலம் ஏற்றதோ அவ்வாறே தலைவனின் அன்பினையும் தலைவி ஏற்றாள். இங்கே நிலம்-தலைவி, நீர்- தலைவன் .

பண்பும் அன்பும் போட்டியிடும் இப்பாடல் என்றும் நம் உள்ளத்திலும் செம்புலப்பெயல் நீராதல் இயல்புதானே

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Fri Jun 26, 2015 10:45 am

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !


மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே,




இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 27, 2015 7:41 am

ஆற்றா மாக்கள் அரும் பசி களைவோர்
மேற்றே உலகின் மெய்நெறி வாழ்க்கை
மண் திணி ஞாலத்து வாழ்வோர்க்கெல்லாம்
உண்டி கொடுத்தோர், உயிர் கொடுத்தோரே,
உயிர்க் கொடை பூண்ட உரவோய்!

நூல்: மணிமேகலை

பாடியவர்: சீத்தலைச் சாத்தனார்

சூழல்: பாத்திரம் பெற்ற காதை : வற்றாமல் உணவை அள்ளித் தருகிற அமுதசுரபி என்கிற பாத்திரத்தை மணிமேகலை பெறுகின்ற அத்தியாயம் இது. அப்போது அவளிடம் தீவதிலகை என்ற பெண் சொன்ன வார்த்தைகள் இவை


மணிமேகலையே,
பசியைப் பொறுக்கமுடியாத ஏழைகளின் வேதனையைப் போக்குவதுதான் இந்த வாழ்க்கைக்கு உரிய உண்மையான நெறி.
அணுக்களால் நிறைந்த இந்த உலகத்தில் வாழ்பவர்களுக்கெல்லாம் நீ உணவு கொடுத்தால், அது அவர்களுக்கு உயிரைக் கொடுத்ததற்குச் சமம்.
ஆகவே, உன்னுடைய அறிவைச் சரியானபடி பயன்படுத்து, எல்லாருக்கும் உயிரைத் தானமாகக் கொடு!

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sat Jun 27, 2015 2:32 pm

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !

இடம்சுட்டிப் பொருள் விளக்குக
========================
மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடுங் கான்போந்து
சோவரணும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த
சேவகன்சீர் கேளாத செவி என்ன செவியே
திருமால்சீர் கேளாத செவி என்ன செவியே;

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 28, 2015 9:52 am

‘நெஞ்சை அள்ளும் சிலப்பதிகாரம்’ என்று பாரதியாரால் பாடப்பட்ட சிலம்பில் இளங்கோ கூறுவதைப் பார்ப்போம்.
இறைவன் நமக்கு நாக்கைக் கொடுத்ததே நாராயணன் புகழ் பாடத்தான் என்று இளங்கோ அடிகள் பாடுகிறார்.

மூ உலகும் ஈரடியால் முறைநிரம்பா வகைமுடியத்
தாவியசே வடிசேப்பத் தம்பியொடும் கான் போந்து,
சோ அரணும் போர்மடியத் தொல் இலங்கைக் கட்டழித்த
சேவகன் சீர் கேளாத செவியென்ன செவியே!
திருமால் சீர் கேளாத செவியென்ன செவியே!

சிலப்பதிகாரம், ஆய்ச்சியர் குரவை, இளங்கோ அடிகள்

பொருள்: மூன்று உலகங்களையும் இரண்டே அடிகளில் முடித்தான் (வாமன அவதாரம்). அந்த அடிகள் சிவக்குமாறு தம்பியுடன் காட்டுக்குப் போனான் ‘சோ’ என்னும் அரணை அழித்ததைவிட பழமைமிகு இலங்கையின் காவலை அழித்தான். இந்த சேவகன் புகழைக் கேட்காத காதுகளும் காதுகள் என்று சொல்லத் தகுதி உண்டா?

M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 5382
இணைந்தது : 18/04/2015

PostM.Jagadeesan Sun Jun 28, 2015 2:54 pm

இனி அடுத்த நுனிப்புல்லை மேய்வோமா !

இடம்சுட்டிப் பொருள் விளக்குக :
--------------------------------------------------------------

நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம் .



இருந்தமிழே ! உன்னால் இருந்தேன் ; இமையோர்
விருந்தமிழ்தம் என்றாலும் வேண்டேன் !
Sponsored content

PostSponsored content



Page 3 of 20 Previous  1, 2, 3, 4 ... 11 ... 20  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக