உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» வழிகாட்டிய மலர்கள்!
by ayyasamy ram Today at 2:00 pm

» மணி ரத்னம் தயாரிப்பில் சித் ஸ்ரீராம் இசையமைத்துள்ள வானம் கொட்டட்டும் படத்தின் பாடல்கள்!
by ayyasamy ram Today at 1:57 pm

» நான் ரசித்த சமீபத்திய கவிதைகள்
by ayyasamy ram Today at 1:50 pm

» உலகில் ஏன் இத்தனை மொழிகள்?
by ayyasamy ram Today at 1:42 pm

» தாத்தா காந்தி!
by ayyasamy ram Today at 1:41 pm

» நகைச்சுவை- இணையத்தில் ரசித்தவை
by சக்தி18 Today at 1:40 pm

» அடுத்த தலை முறை ஏ,பி,சி,டி
by சக்தி18 Today at 1:38 pm

» பொன்மொழிகள்! தொகுப்பு: சுவாமி கமலாத்மானந்தர்
by ayyasamy ram Today at 12:46 pm

» பள்ளிக்கு ஒருநாள் தலைமை ஆசிரியையான 10-ம் வகுப்பு மாணவி
by ayyasamy ram Today at 12:23 pm

» குளிக்காமலும் தரிசிக்கலாம்
by ayyasamy ram Today at 12:16 pm

» ராமர் சிலையை செருப்பால் அடித்ததை ஒப்புக்கொண்ட தி.க.,
by மாணிக்கம் நடேசன் Today at 12:11 pm

» கரோனா வைரஸ்: சீனாவில் வெளியே வர முடியாமல் தவிக்கும் தமிழக மாணவர்கள்!
by ayyasamy ram Today at 11:34 am

» முதியோர் இல்லத்தில் அடைத்துவைக்கப்பட்டிருந்த 73 பேர் மீட்பு
by ayyasamy ram Today at 11:31 am

» அதிமுக முன்னாள் எம்.பி. கே.சி. பழனிசாமி கைது
by ayyasamy ram Today at 11:30 am

» கூடையில் வெட்டுக்கிளி பார்சலை எடுத்து வந்த எம்.எல்.ஏ
by ayyasamy ram Today at 11:26 am

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by சண்முகம்.ப Today at 10:43 am

» நண்பா
by சண்முகம்.ப Today at 10:37 am

» குறியீடாய் மாறினாய்
by சண்முகம்.ப Today at 10:25 am

» தாழம்பூ - திரைப்பட பாடல் வரிகள் & காணொளி
by ayyasamy ram Today at 6:13 am

» அதிக வரி சமூக அநீதி: சுப்ரீம் கோர்ட் தலைமை நீதிபதி
by ayyasamy ram Today at 5:30 am

» சர்ச்சைகளில் மாட்டுவதில் நானும் கோலியும் ஒன்று: கங்கனா ரனாவத்
by ayyasamy ram Today at 5:24 am

» சேலையணிந்து வந்து ஸ்ரீரெங்கநாதரைதரிசித்த தாய்லாந்து நாட்டுப் பெண்கள்
by ayyasamy ram Today at 5:23 am

» குதிரையில் சவாரி செய்த மணப்பெண்கள்! எதற்காகத் தெரியுமா?
by ayyasamy ram Today at 5:22 am

» தாய்மையே அன்பு!
by ayyasamy ram Today at 5:16 am

» ஹெட்போன் ஜாக்கிரதை
by ayyasamy ram Today at 5:16 am

» பிரச்சனைகளை சிரிப்போடு கடந்து போக கற்றுக் கொள்ளுங்கள்..!!
by ayyasamy ram Today at 5:14 am

» எண்ணம் போல் வாழ்க்கை…!
by ayyasamy ram Today at 5:12 am

» ஏல இங்கிலீசு பேசலாம் வாரீயால?
by ayyasamy ram Today at 5:11 am

» நேரு காட்டிய நகைச்சுவை
by ayyasamy ram Today at 5:07 am

» ஜீரோவின் மதிப்பு!
by ayyasamy ram Today at 5:06 am

» ஆரோக்கியம் பெற எளிய வழி
by ayyasamy ram Today at 5:05 am

» புத்தகம் தேவை : இறையன்பு IAS
by prajai Yesterday at 10:26 pm

» ஒற்றுமைக் கும்மி
by duraisingam Yesterday at 9:38 pm

» குண்டூசி - ஆசிரியப்பா
by duraisingam Yesterday at 9:22 pm

» ஈகரையில் புதிய உறுப்பினராக இணைவது எப்படி - விளக்கம்
by syedbasha Yesterday at 9:22 pm

» சனிப் பெயர்ச்சி பலன்கள் - 2020 (மேஷம், ரிஷபம், மிதுனம், கடகம்)
by ayyasamy ram Yesterday at 6:13 pm

» குடியரசு தினம் ஏன் ஜனவரி 26ம் தேதி கொண்டாடப்படுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:11 pm

» ஹல்வா விழா : பட்ஜெட்டுக்கு முன்பு நிதி அமைச்சகம் ஏன் இதை கொண்டாடுகிறது?
by ayyasamy ram Yesterday at 5:06 pm

» தம்பி என்னப்பா வித்தியாமா ஃபிரண்ட் பிடிச்சிருக்க
by ஜாஹீதாபானு Yesterday at 4:24 pm

» கீழடி தொன்மை
by VEERAKUMARMALAR Yesterday at 2:55 pm

» மின் நூல் படிப்பவர்களுக்கு.............
by சக்தி18 Yesterday at 2:51 pm

» Microsoft Edge புதிய வடிவில்
by சக்தி18 Yesterday at 2:47 pm

» மொக்க ஜோக்ஸ்
by சக்தி18 Yesterday at 2:35 pm

» திரை இசையில் முருகன் பக்தி பாடல்கள்
by ayyasamy ram Yesterday at 1:36 pm

» கண்களை கட்டிக்கொண்டு தன்னை சுற்றி உள்ளதை கூறி அசத்தும் மாணவர்
by ayyasamy ram Yesterday at 1:07 pm

» இன்று தை அமாவாசை: ராமேசுவரம் அக்னி தீர்த்தக்கடலில் பக்தர்கள் புனித நீராடினர்
by ayyasamy ram Yesterday at 1:04 pm

» தட்டையான வயிற்றை பெற, கொழுப்பை கரைக்க உதவும் எளிய உடற்பயிற்சிகள்
by ayyasamy ram Yesterday at 12:35 pm

» ஆன்மிக தகவல் சரபப் பறவை
by ayyasamy ram Yesterday at 12:12 pm

» ஆக்கபூர்வமான சிந்தனை, ஆக்கபூர்வமான பேச்சு!
by ayyasamy ram Yesterday at 12:09 pm

» மனைவியும் ஒரு திருக்குறள் தான்…!!
by ayyasamy ram Yesterday at 12:08 pm

Admins Online

நுனிப்புல் தின்போமா ?

நுனிப்புல் தின்போமா ? - Page 12 Empty நுனிப்புல் தின்போமா ?

Post by ayyamperumal on Thu Aug 18, 2011 5:38 pm

First topic message reminder :


நுனிப்புல் தின்போமா  ?


   அழுது கொண்டிருந்தாலும் உழுது கொண்டிருக்க வேண்டும் என்பார்கள் ! அதை ஈகரை உறவுகளுக்கு நினைவு படுத்த கடைமை பட்டுள்ளேன். ஏன் எனில் நாம் தமிழை விரும்புபவர்கள். தமிழ் என்பது அரட்டை யடிப்பதிலும், கவிதை எழுதுவதிலும், மட்டுமே வளராது. நாம் இந்த தமிழ் சமுதாயத்தில் வாழ்கிறோம். இதற்க்கு முன்பு இங்கு தமிழ் மரத்தை வளர்த்தவர்களை அறிவோமா ? நம்மில்  எத்தனை பேருக்கு வேர்களை பற்றி தெரியும், அதன் தன்மைகளை பற்றி தெரியும்?. இதற்க்கு
         நமது வேலை பளுவும் ஒரு காரணம் தான் . நம்மில் அனைவருக்கும் இலக்கிய பசி இருப்பதை நான் அறிவேன்.  பசித்திருக்கும் ஒருவன் நொறுக்கு தீனிகளை தின்பது போல நாம், நம் இலக்கிய பசிக்கு நொறுக்கு தீனி திண்போம். இதில் ஓர் நன்மையும் உண்டு. நொறுக்கி தீனிகள் பசியை அதிகப் படுத்தும் ஆனால் பசியை தீர்க்காது. அதைப்போல இந்த நுனிப் புல் மேய்வதால் இலக்கியத்தை முழுதாய் படிக்க வேண்டும் என்கிற ஆர்வம் வளரும்.                

இதற்க்காக நாம் பெரிதாய் ஒன்றும் செய்ய  தேவை இல்லை. சிறுவயதில் படித்த இடம் சுட்டி பொருள் விளக்குக என்கிற  பாடத்தை மீண்டும் படித்தால் போதும்.


உதாரணம் !
இடம் சுட்டி பொருள் விளக்கு

முருகிர் சிறந்த கழுநீரும்
முதிரா இளைஞர் ஆருயிரும்
திருகிச் செருகும் கூந்தல் !  
                                        இது போன்ற எதேனும் இலக்கியத்தில் உள்ள வரிகளை எழுதி கேள்வி கேளுங்கள்.
இதன் பதிலை தருவதற்க்கு சிலராவது தயாராய் இருப்பார்கள் ஆனால் பெரும்பாலானோர் அதனை தெரிந்து கொள்ள வாய்ப்பிருக்கிறது.    
இதனை நன்கு இலக்கியப்பரிச்சயம் உள்ள யாரேனும் கவனத்தில் கொள்வீர்கள் என நம்புகிறேன்.


Last edited by T.N.Balasubramanian on Sat May 20, 2017 6:36 pm; edited 2 times in total (Reason for editing : spelling corretion)
ayyamperumal
ayyamperumal
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 2794
இணைந்தது : 23/06/2011
மதிப்பீடுகள் : 532

Back to top Go down


நுனிப்புல் தின்போமா ? - Page 12 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by Dr.S.Soundarapandian on Sun Oct 11, 2015 7:01 pm

நுனிப்புல் தின்போமா ? - Page 12 3838410834 நுனிப்புல் தின்போமா ? - Page 12 3838410834
Dr.S.Soundarapandian
Dr.S.Soundarapandian
கல்வியாளர்


பதிவுகள் : 5039
இணைந்தது : 23/10/2012
மதிப்பீடுகள் : 2794

http://ssoundarapandian.blogspot.in

Back to top Go down

நுனிப்புல் தின்போமா ? - Page 12 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by krishnaamma on Mon Oct 12, 2015 12:41 am

Sasiiniyan Sasikaladevi wrote:அருமை படைப்பு ஐயா, நிறைய தரம் வாசித்திருக்கிறேன். மிகவும் பிடித்த புத்தகம், கல்கியின் சிவகாமியின் சபதமும், பொன்னியின் செல்வனும் தான் ஐயா. நீங்கள் நேரில் கண்டு களித்து விட்டீர்கள். பொறாமையாக உள்ளது.

பார்த்திபன் கனவு படத்தில் கூட இந்த பாடலை குமாரி கமலா ரொம்ப அழகாய் ஆதுவார் சசி....அந்த பாடல் கிடைத்தல் போடுகிறேன் புன்னகை

அருமையானவை கல்கியின் சிவகாமியின் சபதமும், பொன்னியின் செல்வனும்......பலமுறை படித்திருக்கேன், வந்தியத்தேவனோடும் குந்தவையுடனும் வாழ்ந்ததாகவே தோன்றும் புன்னகை ......பொன்னி இன் செல்வனையும் வானதியையும் நந்தினியையும் ஆழ்வார்க்கடியானையும் யாரையுமே மறக்க முடியுமா சசி ? புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

நுனிப்புல் தின்போமா ? - Page 12 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by krishnaamma on Mon Oct 12, 2015 12:46 amஇந்தப்பாடல் எனக்கு ரொம்ப பிடிக்கும் புன்னகை


[You must be registered and logged in to see this link.]

Dont work hard, work smart [You must be registered and logged in to see this image.]


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

நுனிப்புல் தின்போமா ? - Page 12 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by ayyasamy ram on Wed Jan 27, 2016 4:43 pm

[You must be registered and logged in to see this image.]
-
[You must be registered and logged in to see this image.]
-
இந்தப் புலவர்களுக்கு நொச்சியிலையைப் பார்த்தால்
மயிலின் காலடி நினைவுக்கு வருகிறது என்றால்

இன்னொரு புலவருக்கு மயிலின் காலடியைப் பார்த்தால்
நொச்சியிலை நினைவுக்கு வருகிறதாம்.
-
எந்தப் பாடல் என தெரிந்தவர்கள் சொல்லுங்கள்
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52201
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நுனிப்புல் தின்போமா ? - Page 12 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by ayyasamy ram on Wed Feb 03, 2016 4:55 pm

முந்தைய இரவு, தலைவனின் வருகையை எதிர்பார்த்து
தலைவியும் தோழியும் உறங்காமல் காத்திருந்தும் தலைவன்
வரவில்லை.

மறுநாள் தோழி தலைவனை சந்திக்கிறாள். நான் வந்தேன்
ஆனால் நீங்கள் உறங்கிவிட்டீர்கள் என்று அவன் சொல்வதற்கு
இடந்தராமல் தோழி சொல்கிறாள்,

“இந்தப் பெரிய ஊரே தூக்கத்தில் ஆழ்ந்திருந்தாலும் நாங்கள்
நேற்றிரவு உறங்கவில்லை. எங்களுடைய வீட்டிற்கு அருகிலிருக்கும்
ஏழில்குன்றின் மேலுள்ள, மயிலின் காலடியைப் போன்ற இலைகளைக்
கொண்ட கரிய பூங்கொத்தை உடைய நொச்சியின் மெல்லிய காம்புகள்
நீலமணி போன்ற மலர்களை உதிர்க்கும் ஓசை கூட எங்களுக்குக் கேட்டது.
நீ வந்திருந்தால் எங்களுக்கு எப்படி தெரியாமல் போயிருக்கும் “ என்று
அவன் வரவில்லை என்பதை உறுதிபடக் குறிப்பிடுகிறாள்.
-
கொன் ஊர் துஞ்சினும், யாம் துஞ்சலமே-
எம் இல் அயலது ஏழில் உம்பர்,
மயில் அடி இலைய மாக் குரல் நொச்சி
அணி மிகு மென் கொம்பு ஊழ்த்த
மணி மருள் பூவின் பாடு நனி கேட்டே

(கொல்லன் அழிசி – குறுந்தொகை 138)

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52201
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நுனிப்புல் தின்போமா ? - Page 12 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan on Fri Jan 20, 2017 9:37 pm

நுனிப்புல் மேய்ந்து நீண்ட நாட்களாகிவிட்டது . எனவே இப்போது மேய வந்துள்ளேன் .

இடம் சுட்டிப் பொருள் விளக்குக :
============================
கொன்றதொரு வேந்தைக் குரங்கு .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

நுனிப்புல் தின்போமா ? - Page 12 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by ayyasamy ram on Fri Jan 20, 2017 9:54 pm

சுவையான இரண்டு கதைகள் மூலம் நீதியை
சொன்ன வெண்பா (நீதி வெண்பா 3)
-
அறிவன் பகையேனும் அன்புசேர் நட்பாம்
சிறுவன் பகையாம் செறிந்த - அறிவுடைய
வென்றி வனசரன்தான் வேதியனைக் காத்தான்முன்
கொன்றதொரு வேந்தைக் குரங்கு

-
பொருளுரை:

எதிரிலுள்ளவன் பகைவனேயானாலும் அறிவுள்ளவன்
அன்பு பொருந்திய நட்பைப் பாராட்டுவான்.
எதிரிலிருப்பவன் சிநேகனே ஆனாலும் மூடன் பகையையே
பாராட்டுவான்.

முன்னாளில், மிகுந்த அறிவையும், வெற்றியையும் உடைய
ஒரு வனவேடன் ஒரு பிராமணன் கள்வர்களால் கொலை
செய்யப்படுவதிலிருந்து காப்பாற்றினான்.
அறிவில்லாத ஒரு குரங்கு ஓர் அரசனைக் கொன்றது.
--
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52201
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நுனிப்புல் தின்போமா ? - Page 12 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by ayyasamy ram on Fri Jan 20, 2017 9:56 pm

[You must be registered and logged in to see this image.]

---

[You must be registered and logged in to see this image.]
-
ஓர் அரசன் ஒரு குரங்கினை அன்புடன் வளர்த்து வந்தான்.
ஒருநாள் அவ்வரசன் அக்குரங்கினிடம் ஒரு கத்தியைக்
கொடுத்து,
" இவ்வழியாக யாரையும் உள்ளே விடாதே;

எனக் கட்டளையிட்டு உறங்கச் சென்றான்.
-

அவன் உறங்கும்போது, அவன் உடம்பின் மீது
ஓர் ஈ வந்து உட்கார்ந்தது. குரங்கு அதனைப் பார்த்தது.
அரசன் அந்த ஈயைக் கொல்லத்தான் தன்னிடம் கத்தியைக்
கொடுத்ததாக அறிவில்லாமல் எண்ணியது.

அந்த ஈயைக் கொல்லக் கத்தியால் ஒரு வெட்டுப் போட்டது.
ஈ பறந்து விட்டது. அரசன் இரு துண்டானான்.
-
-

அரசனிடம் குரங்கு அன்பு கொண்டிருந்தாலும், அற்வில்லாமையால், இத்தீமையைச் செய்து விட்டது.


Last edited by ayyasamy ram on Fri Jan 20, 2017 10:01 pm; edited 1 time in total
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52201
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நுனிப்புல் தின்போமா ? - Page 12 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by ayyasamy ram on Fri Jan 20, 2017 9:59 pm

கதை 2
---------------

முன்னொரு காலத்தில் ஓர் அரசன் ஒரு பிராமணனுக்கு
ஒரு மாணிக்க மணியை வழங்கினான். அந்த மணியை க
ள்வர் கவர்ந்தால் என்ன செய்வது என்று ஆலோசித்தான்.

பின்னர் அந்த மணியை வாயில் போட்டு விழுங்கிவிட்டான்.
வீட்டிற்குச் சென்றதும் கக்கி அம்மணியை எடுத்துக்
கொள்ளலாம் என்பது அவன் எண்ணம்.

இதனை அறிந்த வேடன் ஒருவன், அந்தப் பிராமணன்
வீட்டிற்குப் போகும்பொழுது, அவனைத் தொடர்ந்துபோய்,
அடர்த்தியான காட்டுவழியில் அவனைத் தடுத்து நிறுத்தி,
"உன் வயிற்றில் இருக்கும் மாணிக்கத்தைக் கக்கு" என்றான்.
அதனைக் கேட்ட பிராமணன் அஞ்சி," மாணிக்கம் உன்
வயிற்றில்தானே இருக்கிறது" என்று கூறினான்.

இவ்விருவரும் இவ்வாறு சண்டையிட்டுக் கொண்டிருக்கும்
பொழுது கள்வர்கள் வந்து பிராமணனைப் பிடித்துக்கொண்டு,
மாணிக்கத்தைக் கக்கச் சொன்னார்கள்.

பிராமணனுக்கு வேடன் பகைவனாக இருந்தாலும், அறிவுள்ளவன்
ஆனதால், பிராமணன் மீது அன்பும் இரக்கமும் கொண்டு அவன்
உயிரைக் காக்க எண்ணி, கள்வர்களைப் பார்த்து, "ஐயா! நாங்கள்
விளையாட்டாகப் பேசிக்கொண்டோம்; மாணிக்கம் வயிற்றிலா
இருக்கும்? உங்களுக்கு விருப்பமானால் என் வயிற்றை அறுத்துப்
பாருங்கள்" என்றான்.

கள்வர்கள் வேடன் வயிற்றை அறுத்துப் பார்த்தார்கள்.
வயிற்றில் மாணிக்கம் இல்லை. உடனே இரக்கம் கொண்ட கள்வர்கள்,
"ஆ! இவ்வேடனை அநியாயமாகக் கொன்று விட்டோமே; இந்தப்
பார்ப்பானையாவது கொல்லாமல் விட்டிவிடுவோம்" என் எண்ணி
அவனைப் பிழைக்க விட்டார்கள்.

பார்ப்பான் உயிர் பிழைத்தான். பார்ப்பானுக்கு வேடன் பகைவனாக
இருந்தாலும். அறிவுள்ளவனாக இருந்ததால். அவன் மீது அன்பு
கொண்டு தன்னுயிரை விட்டான்.
-
--------------
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52201
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நுனிப்புல் தின்போமா ? - Page 12 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by ayyasamy ram on Fri Jan 20, 2017 10:00 pm

முன்னொரு காலத்தில் நிறைந்த அறிவுடைய வேடன் ஒருவன்,
ஒரு பார்ப்பான் உயிரைக் காப்பாற்றினான்.

ஆனால் அறிவற்ற ஒரு குரங்கு, தன்னை வளர்த்த அரசனையே
கொன்றுவிட்டது.

எனவே முட்டாளின் நட்பைவிட, அறிவுள்ளவனின் பகைமை மேலானது.
-
இக்கருத்தை கூற வந்த நீதி வெண்பா இதுவாகும்
-

ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52201
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நுனிப்புல் தின்போமா ? - Page 12 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan on Sat Jan 21, 2017 6:27 am

மிகவும் சரி .நன்றி ராம் அவர்களே !

இந்த நீதிவெண்பாவின் மேலும் ஒருகருத்து

" அறிவற்றவர்களின் கையில் அதிகாரம்கொடுத்தால் , அவர்கள் நம் உயிருக்கே உலை வைத்துவிடுவார்கள் "

இந்த நீதி இன்றைக்கும் பொருந்திவருவது காண்க .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

நுனிப்புல் தின்போமா ? - Page 12 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by ayyasamy ram on Sat Jan 21, 2017 7:36 am

[You must be registered and logged in to see this link.] wrote:மிகவும் சரி .நன்றி ராம் அவர்களே !

இந்த நீதிவெண்பாவின் மேலும் ஒருகருத்து

" அறிவற்றவர்களின் கையில் அதிகாரம்கொடுத்தால் , அவர்கள் நம் உயிருக்கே உலை வைத்துவிடுவார்கள் "

இந்த நீதி இன்றைக்கும் பொருந்திவருவது காண்க .
[You must be registered and logged in to see this link.]
-
சூப்பருங்க சூப்பருங்க சூப்பருங்க
ayyasamy ram
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 52201
இணைந்தது : 30/09/2013
மதிப்பீடுகள் : 12710

https://rammalar.wordpress.com/

Back to top Go down

நுனிப்புல் தின்போமா ? - Page 12 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan on Sat Jan 21, 2017 8:55 am

அடுத்த நுனிப்புல் மேய்வோமா !


" நுனியளவு செல் "
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

நுனிப்புல் தின்போமா ? - Page 12 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by T.N.Balasubramanian on Sat Jan 21, 2017 10:58 am

தலைப்பு "நுனிப்புல் தின்போமா " என்று இருக்கவேண்டுமல்லவா ?

அல்லது "நுனிப்புல் மேயுதல்" பழக்க வழக்கத்தில் உள்ளதுபோல் இருக்கவேண்டுமா ??

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25882
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9355

Back to top Go down

நுனிப்புல் தின்போமா ? - Page 12 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by M.Jagadeesan on Sat Jan 21, 2017 11:48 am

நீங்கள் சொல்வது சரி . " நுனிப்புல் தின்போமா " என்றுதான் இருக்கவேண்டும் . மூனுசுழி வராது ." நுனிப்புல் மேய்வோமா ? " என்பதும் நல்ல தலைப்புதான் .

தலைப்பை மாற்றுவது குறித்து திரியை ஆரம்பித்தவர்தான் சொல்லவேண்டும் .
M.Jagadeesan
M.Jagadeesan
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 5293
இணைந்தது : 18/04/2015
மதிப்பீடுகள் : 2467

Back to top Go down

நுனிப்புல் தின்போமா ? - Page 12 Empty Re: நுனிப்புல் தின்போமா ?

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை