ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
டால்பின்களை கொடுமைப்படுத்தியதாக நடிகை திரிஷாவுக்கு எதிர்ப்பு
 krishnaamma

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 krishnaamma

மங்கையர் மலர் வாசகிகளின் பயனுள்ள குறிப்புகள் - தொடர் பதிவு
 krishnaamma

என்னைப் பற்றி ஞான முருகன்
 krishnaamma

நட்பு நாடுகளின் பொருட்களுக்கு வரி குறைப்பு சீனா முடிவு
 krishnaamma

NATRAJ மற்றும் AAKASH ACCADEMY வெளியிட்ட TNPSC NOTES
 thiru907

தற்போதைய செய்தி சுருக்கம் - தொடர் பதிவு
 ayyasamy ram

எம்.பி., எம்.எல்.ஏ.க்கள் மீதான கிரிமினல் வழக்குகளை விசாரிக்க சென்னையில் தனிக்கோர்ட்டு அமைக்கப்பட்டது
 ayyasamy ram

ரயில்களில் விற்கப்படும் டீ, காபி விலை உயர்கிறது !
 ayyasamy ram

சென்னை-சேலம் 8 வழி சாலை திட்டம் ரத்து ஆகும் ஐகோர்ட்டில் மத்திய அரசு தகவல்
 ayyasamy ram

ஆர்.எஸ்.எஸ்., கொள்கைகளில் மாற்றமா: டில்லி மாநாடு சொல்வது என்ன?
 ayyasamy ram

கவுரவ டாக்டர் பட்டத்தை மறுத்த சச்சின்
 ayyasamy ram

இதை அடிக்கடி படிக்கவும்......
 krishnaamma

காவல் பூட்டு - கவிதை
 ayyasamy ram

உணவுகளின் போட்டோகள் ! :) - பருப்புப்பொடிக்கான சாமான்கள் !
 krishnaamma

கணவரோட கழுத்து வலி சரியாகணும்னா, கொஞ்ச நாளைக்கு அவரோட நீங்க பேசாம இருக்கணும்...!!
 krishnaamma

உலகளவில் மிகவும் பிரபலமான உணவு வகைகளின் சமையல் குறிப்புகள் ! 'உப்பு பாதாம்' - salted badham
 krishnaamma

வாட்ஸ் அப் -ல் ரசித்தவை - பல்சுவை
 ayyasamy ram

கார்த்திகை பட்சணங்கள் - மனோகரம் - என் செய்முறை விடியோவுடன் !
 krishnaamma

சேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதம் உயர்வு: மத்திய அரசு உத்தரவு
 krishnaamma

அர்த்தமுள்ள இந்து மதம் ஒலிவடிவ புத்தகம்
 gnanarayan

85015 பதிவுகள் கடந்த நம் தல சிவா அவர்களை வாழ்த்தலாம் வாங்க
 சிவா

சிறுகதைகள் பற்றிய ஆய்வு செய்ய நல்ல சிறுகதை ஆசிரியரை பரிந்துரைக்க முடியுமா...?
 சிவா

சுய‌ அறிமுகம் - சே.செய்யது அலி
 சே.செய்யது அலி

மிக இளம் வயதிலேயே சிங்கப்பூரில் எம்.பி ஆன தமிழர்!
 T.N.Balasubramanian

முத்தான பதினோராம் வருடத்தில் அடியெடுத்து வைக்கும் ஈகரை தமிழ் களஞ்சியத்திற்கு வாழ்த்துகள்
 T.N.Balasubramanian

150 பிணங்களை ஏற்றிக்கொண்டு சுற்றித்திரியும் லாரி - அதிர்ச்சியில் மெக்ஸிகோ பொதுமக்கள்
 ayyasamy ram

விராட் கோலி , மீராபாய் சானுக்கு ராஜீவ் காந்தி கேல் ரத்னா விருது மத்திய அரசு அறிவிப்பு
 ayyasamy ram

உபநயனம் என்றால் என்ன?
 ayyasamy ram

வீரயுக நாயகன் வேள் பாரி - 100 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 பிரபாகரன் ஒற்றன்

10 நாட்களுக்குள் மூன்று இந்தியா - பாகிஸ்தான் கிரிக்கெட் போட்டி?- மகிழ்ச்சியில் ரசிகர்கள்
 SK

தில்குஷ் கேக்!
 SK

முக்கியச் செய்திகள்
 SK

அவருக்கு ஜான் ஏறினா முழம் சறுக்குது...!!
 SK

மங்களகரமான கிராமம்!
 SK

துர்குணங்களை மாற்றுங்கள்...!!
 SK

இந்த வார சினிமா செய்திகள்
 ayyasamy ram

இன்னிசை மன்னர்கள்!’ என்ற நுாலிலிருந்து:
 ayyasamy ram

ஜோசப் புலிட்சர்! – உண்டாக்கிய அறக்கட்டளை
 ayyasamy ram

தெய்வ அருள் இருந்தால்…
 ayyasamy ram

மழை காலங்களில்…
 ayyasamy ram

திறந்திடு சீஸேம் 01: வெட்டத் தெரிந்த வாள்
 ayyasamy ram

மாட்டு கோமியத்தில் குளியல் சோப்! - அமேசானில் கால்பதிக்கும் ஆர்.எஸ்.எஸ்
 SK

நான் இன்னும் மாசமே ஆகலை சார்...!!
 SK

சுவிஸ் வங்கிக்கு ரூ.170 கோடி பரிமாற்றம் செய்த மல்லையா- சிபிஐ விசாரணையில் தகவல்
 ayyasamy ram

புயல் சின்னம் - 6 துறைமுகங்களில் ஒன்றாம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றம்
 சிவா

சுய அறிமுகம்
 M.M.SENTHIL

ஒரு பக்கக் கதை - தலைவர்
 ayyasamy ram

நம்பர் 1 பெண்கள் துப்பறியும் நிறுவனம்
 சே.செய்யது அலி

பெண்கள் ஆண் நண்பரை வாடகைக்கு எடுக்கும் புதிய செயலி அறிமுகம்
 சிவனாசான்

கிரிக்கெட் நேரலையில் பார்க்க சுட்டிகள் | Cricket Live Streaming Links
 சிவா

தூதுவளை இலை - பயன்கள்
 சிவா

ஏழாம் சுவர்க்கத்தில்
 சிவா

ஒரத்தநாடு கார்த்திக் வலைபூ பார்க்க முடியவில்லை
 சிவா

தென்னிந்திய சினிமாவை நோக்கிப் படையெடுக்கும் பாலிவுட் நடிகர்கள்
 SK

எழுத்தாளர் கொண்டபல்லி கோடேஸ்வரம்மா மறைந்தார்..!
 ayyasamy ram

சுய அறிமுகம்
 ayyasamy ram

தண்ணீர் பருகுவதால் உடலில் உள்ள பல பிரச்சினைகள் தீர்க்கிறது
 SK

மருந்து சீட்டை டாக்டர்கள் கையால் எழுத கூடாது'
 T.N.Balasubramanian

தலைக்கு மேல் தனம் வந்தாலும் தலகாணியின் மேல் உட்காராதே. - பழமொழி விளக்கம்
 krishnaamma

நாவல்கள் | தொடர்கள்

Admins Online

ஆடிப்பெருக்கு

View previous topic View next topic Go down

ஆடிப்பெருக்கு

Post by சிவா on Sun Jul 31, 2011 8:17 amகுழந்தை செல்வம், நீடித்த ஆயுள், வாழ்வில் சுபிட்சம் பெற ஆடிப்பெருக்கன்று பெண்கள் ஆற்றங்கரைக்கு சென்று சிறப்பு வழிபாடு நடத்துவார்கள். சுமங்கலி பெண்கள் மாங்கல்ய பூஜை செய்து தாலிச்சரடை மாற்றிக்கொள்வார்கள். இந்த இன்ப திருவிழா வருகிற 3-ந் தேதி (புதன்கிழமை) கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

"ஆடியிலே பெருக்கெடுத்து ஆடி வரும் காவேரி வாடியம்மா எங்களுக்கு வழித்துணையாக, எம்மை வாழவைக்க வேண்டுமம்மா சுமங்கலியாக'' என்று காவிரி நதியை அன்னையாக பாவித்து பாடினார் கவிஞர் கண்ணதாசன்.

தமிழ் மாதங்களில் ஒன்றான `ஆடி' அம்மனுக்குரிய மாதமாக போற்றப்படுகிறது.

பூமாதேவி அம்மனாக பூமியில் அவதரித்தது ஆடிமாதத்தில் என்பதால் இம்மாதத்தில் வரும் செவ்வாய், வெள்ளிக்கிழமைகள் அதிகம் முக்கியத்துவம் பெறுகின்றன.

தை மாதம் முதல் ஆனி மாதம் வரை பூமத்திய ரேகைக்கு வடக்கில் பயணம் செய்து வந்த சூரியன் அடுத்த ஆறு மாத காலத்திற்கு (ஆடி முதல் மார்கழி வரை) தன் பயணத்தை பூமத்திய ரேகைக்கு தெற்கில் தொடங்குகிறான். இக்காலம் தட்சிணாயண புண்ணிய காலம் என்று அழைக்கப்படுகிறது. இறைவனை அடைய அன்னை பராசக்தி கடும் தவம் இருந்தது ஆடி மாதத்தில் தான். இதை நினைவு கூரும் விதத்தில் `ஆடித்தபசு' நிகழ்ச்சி நெல்லை மாவட்டம் சங்கரன் கோவிலில் இன்றும் விழாவாக கொண்டாடப்படுகிறது.

முற்காலத்தில் அரியும், சிவனும் ஒன்று என்பதை உலகிற்கு உணர்த்துவதற்காக பார்வதி தேவி, புன்னை வனத்தில் தவம் இருந்தார். அவரது தவத்தை பாராட்டி சிவனும், விஷ்ணுவும் ஆடி மாத பவுர்ணமியன்று சங்கர நாராயணராக காட்சி அளித்தனர். அம்பிகை தவம் இருந்த இடம் சங்கரன் கோவில் ஆகும். இது திருநெல்வேலியில் இருந்து சுமார் 50 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. இங்கு சுவாமி சங்கரலிங்க மூர்த்தியாக எழுந்தருளி அம்பிகையை மணந்து கொண்டார். அம்மன் தவம் இருந்து பலனை அடைந்ததால் இங்கு பக்தர்களின் பிரார்த்தனைகள் நிறைவேறி நலன் பெறுகின்றனர். பார்வதி தேவியின் தவத்தை மெச்சிய பரமசிவன் ஆடிமாதம் அம்மன் மாதமாக இருக்க வேண்டும் என்று வரம் கொடுத்தார். காற்றும், மழையும் ஆடி மாதத்தில் அதிகமாக இருக்கும். காற்றை காளியும், மழையை மாரியம்மனும் கட்டுப்படுத்துகின்றனர். இதனால் அம்மன் அருள் வேண்டி ஆடி வெள்ளிக்கிழமைகளில் அம்பிகை வழிபாடு நடைபெறுகிறது.

திருமணம் ஆகாத பெண்கள் செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் தங்களுக்கு நல்ல வரன் அமைய வேண்டி கோவிலுக்கு சென்று கூழ்வார்த்து வழிபட்டு வருகின்றனர். ஆடிச்செவ்வாய் தேடிக்குளி, அரைச்ச மஞ்சளை பூசிக்குளி என்பது பழமொழி.

ஆடி மாத செவ்வாய்க்கிழமைகளில் எண்ணெய் தேய்த்து அரைச்ச மஞ்சளை பூசி குளிப்பதால் சுமங்கலி பெண்களின் மாங்கல்யம் பலம் பெறும் என்பது நம்பிக்கை.

ஆடி பதினெட்டாம் நாள் காவிரியில் புதுவெள்ளம் பெருக்கெடுத்து ஓடிவரும்.

நடந்தாய் வாழி காவிரி


அப்போது காவிரியை பெண்ணாகவும், சமுத்திர ராஜனை ஆணாகவும் கருதி காவிரி பெண் தனது கணவரான சமுத்திர ராஜனை அடைவதை மங்கலம் பொங்கும் விழாவாக காவிரி டெல்டா மக்கள் கொண்டாடி வருகிறார்கள். காவிரிக்கரையில் இருமருங்கிலும் வெள்ள பிராவகமாக செல்லும் காவிரியை இளங்கோவடிகள் சிலப்பதிகாரத்தில் நடந்தாய் வாழி காவிரி எனக்கூறி வாழ்த்துவார். கங்கையின் புனிதமாய் காவிரி நடுவிற்பாய என்கிறார் ஆழ்வார். காவிரி சோழநாட்டை வாழ்விக்க வந்த தாய் என்பார்கள்.

ஆடிப்பதினெட்டாம் நாள் காவிரி பெண்ணுக்கு மசக்கை என்று கூறி மக்கள் பலவகையான அன்னங்களை தயாரித்து கொண்டு போய் காவிரி கரையில் வைத்து நோன்பு நோற்பார்கள்.கணவனை சென்றடையும் காவிரிக்கு மங்கல பொருட்களான மஞ்சள், பனை ஓலையால் செய்யப்பட்ட காதோலை, கருகுமணிமாலை, வளையல், அரிசி, வெல்லம், பழங்கள் ஆகியவற்றை வழங்கி பூஜை செய்வர்.

புதுமணத்தம்பதிகள் அதிகாலை 4 மணிக்கே எழுந்து காவிரி கரைக்கு சென்று எண்ணெய் தேய்த்து தலையில் அருகம்புல், வெற்றிலைபாக்கு, வாழைப்பழம் வைத்து ஆற்றில் மூழ்கி குளிப்பார்கள். பின்னர் அவர்கள் அணிந்திருந்த ஆடையை களைந்துவிட்டு புத்தாடை அணிந்து கொள்வர். தொடர்ந்து காவிரி கரையோரம் உள்ள காவல் தெய்வங்களின் சன்னதிகளுக்கு சென்று வழிபடுவர். பெண்கள் மாங்கல்ய பூஜை செய்து புது தாலி கயிறை(மாங்கல்ய சரடு) அணிந்து கொள்வர்.

சிறுவர்கள் சிறிய அளவிலான மரச்சப்பரம் செய்து இழுத்துச்செல்வர். திருச்சி ஸ்ரீரங்கம், தஞ்சை திருவையாறு, ஒகேனக்கல் மேட்டூர், பவானி கூடுதுறை, மயிலாடுதுறை போன்ற காவிரி கரையோரம் உள்ள கோவில்களில் ஆடிப்பெருக்குவிழா ஆண்டுதோறும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.

திருச்சி ஸ்ரீரங்கம் அம்மாமண்டபம் படித்துறையில் ஆடிப்பெருக்குவிழா விமரிசையாக கொண்டாடப்படும். பெருமாள் மண்டபத்துக்கு எழுந்தருள்வார். இந்த நிகழ்ச்சியை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கூடுவர்.

வரலட்சுமி விரதம், நாகபஞ்சமி, பண்டிகைகள் இம்மாதத்தில் வருவது குறிப்பிடத்தக்கது.

ஆடிமாதத்தில் கிராமப்புறத்தில் காவல் தெய்வமாக விளங்கும் சுடலைமாடன், ஐயனாரப்பன், மதுரைவீரன், மாடசாமி, கருப்பண்ணசாமி போன்ற கிராம தேவதைகளுக்கு பூஜைகளும், விழாக்களும் நடைபெறும். முளைப்பாரி திருவிழா, நையாண்டி மேளம் கரகாட்டம், வில்லுப்பாட்டு, கச்சேரி என்று விழா அமர்க்களப்படும். இந்த திருவிழாவின் போது பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொள்கின்றனர்.

***

தனி ஆலயத்தில் காவிரி தாய்தஞ்சை மாவட்டம் கும்பகோணத்தில் இருந்து குடவாசல் செல்லும் வழியில் திருச்சேறை என்ற ஊர் உள்ளது. இங்கு சாரப்புட்கரணி என்ற குளத்தின் தென்மேற்கு கரையில் காவிரி தாய்க்கு தனிக்கோவில் உள்ளது. இங்கு காவிரி தாய் தனது மடியில் கிருஷ்ணனை வைத்தபடி காட்சி தருகிறாள். ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு தினத்தன்று சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின்றன.

கும்பகோணம் அருகே திருவாவடுதுறை ஆதீனத்திற்கு சொந்தமான திருமங்கலக்குடி பிராணநாதேஸ்வரர் மங்களாம்பிகை கோவில் உள்ளது. இங்கு உள் பிரகாரத்தில் காவிரி அம்மனுக்கு தனி சன்னதி உள்ளது. ஆடிப்பெருக்கன்று காவிரி அம்மனுக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெறும். திருமணம் ஆன புதுமண தம்பதிகள் தாலிச்சரடை வைத்து பூஜை செய்து அணிந்து கொள்வர். வெற்றிலை, பாக்கு, பூ மாலை ஆகியவற்றை தண்ணீரில் விடுவார்கள்.

***

ஆடி மாதத்தில் சுப காரியங்கள் நடத்த தடையா?

திருமணம், புதுமனை புகுவிழா போன்ற சுபகாரியங்கள் செய்ய ஆடி மாதம் ஏற்றதல்ல என்று கூறப்படுவதுண்டு. ஆடி மாதம் திருமணமான பெண்கள் கருத்தரித்தால் 10-வது மாதமான சித்திரையில் குழந்தை பிறக்கும். அப்போது வெயில் அதிகமாக இருக்கும். அந்த மாதத்தில் குழந்தை பிறந்தால் குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறையும். இதனால் ஆடி மாதத்தில் திருமணம் செய்து கொள்வதை தவிர்த்தனர். ஆடி மாதம் புதுமண தம்பதியினரை பிரித்து வைக்கிறார்கள்.

ஆடி மாதம் அதிகம் காற்று வீசும். பலத்த மழையும் பெய்யும். அதனால் கிரகபிரவேசம் போன்றவற்றை செய்வதில்லை.

***

நாகபஞ்சமி


ஆடி மாதத்தில் நாகபஞ்சமி விரதம் பெண்களால் சிறப்பாக கடைப்பிடிக்கப்படுகிறது. நாகப்பாம்பு கடித்து இறந்து போன 5 சகோதரர்களுக்காக, சகோதரிகள் நாகராஜன் பூஜை செய்து சகோதரர்களை உயிர் பெறுமாறு செய்தனர். ஆடி மாத வளர்பிறையில் பஞ்சமியன்று இந்த விரதத்தை கடைபிடிப்பர். இந்த விரதம் மேற்கொள்பவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். குழந்தைகள் வாழ்நாள் முழுவதும் குறையின்றி வாழ்வார்கள்.

***

அம்மன் கோவில்களில் கூழ் வார்க்கும் திருவிழா

தவத்தில் சிறந்து விளங்கிய ஜமத்கனி முனிவரை பொறாமை காரணமாக கார்த்த வீரியார்சுனனின் மகன்கள் கொன்று விடுகின்றனர். இதை கேள்விப்பட்டு துக்கம் தாங்கமுடியாமல் ஐமத்கனி முனிவரின் மனைவி ரேணுகாதேவி உயிரை விட முடிவு செய்து தீயை மூட்டி அதில் இறங்குகிறார்.

அப்போது இந்திரன் மழையாக மாறி தீயை அணைத்தார். தீக்காயங்களால் ரேணுகாதேவியின் உடலில் கொப்பளங்கள் ஏற்பட்டன. வெற்றுடலை மறைக்க அருகில் இருந்த வேப்ப மர இலைகளை பறித்து ஆடையாக அணிந்தார். ரேணுகாதேவிக்கு பசி ஏற்பட்டதால் அருகில் உள்ள கிராம மக்களிடம் சென்று உணவு கேட்டார். அப்போது மக்கள் அவருக்கு பச்சரிசி, வெல்லம், இளநீரை உணவாக கொடுத்தனர். இதைக்கொண்டு ரேணுகாதேவி கூழ் தயாரித்து உணவருந்தினார். அப்போது சிவபெருமான், தோன்றி ரேணுகாதேவியிடம், உலக மக்களின் அம்மை நோய் நீங்க நீ அணிந்த வேப்பிலை சிறந்த மருந்தாகும். நீ உண்ட கூழ் சிறந்த உணவாகும். இளநீர் சிறந்த நீராகாரமாகும் என்று வரம் அளித்தார். இச்சம்பவத்தை நினைவு கூரும் வகையில் ஆடி மாதத்தில் அம்மன் கோவில்களில் கூழ் வார்க்கும் திருவிழா சிறப்பாக நடைபெற்று வருகிறது.

***

திருமணத்தடையை நீக்கும் வரலட்சுமி விரதம்

வரலட்சுமி விரதம் ஆடி மாதம் சுக்லபட்சத்து வெள்ளிக்கிழமையில் அனுஷ்டிக்கப்படுகிறது. எட்டுவகை செல்வங்களுக்கும் அதிபதியான ஸ்ரீமகாலட்சுமியை நினைத்து பூஜை செய்யப்படுவதால் இவ்விரதம் வரலட்சுமி விரதம் என்று பெயர் பெற்றது. இந்த விரதம் மேற்கொண்டு லட்சுமி தேவியை பூஜை செய்தால் குடும்பத்தில் குதூகலம், நீடித்த ஆயுள், அன்பு, புகழ், அமைதி, இன்பம், ஆரோக்கியம் கிடைக்கும்.

திருமணமான ஒவ்வொரு பெண்ணும் அவசியம் அனுஷ்டிக்க வேண்டிய விரதம் இது. சுமங்கலி பெண்களுக்கு மாங்கல்ய பலம் கிட்டும். கன்னி பெண்களுக்கு நல்ல கணவர் அமைவர். இந்த ஆண்டு வரலட்சுமி விரதம் ஆகஸ்டு மாதம் 12-ந் தேதி (வெள்ளிக்கிழமை) வருகிறது. அன்றைய தினம் வரலட்சுமி விரதத்தை சந்தியா கால வேளையில் தொடங்க வேண்டும்.

பூஜையை முதல் வெள்ளிக்கிழமை செய்ய வசதி இல்லாதவர்கள் மறு வெள்ளிக்கிழமை செய்ய வேண்டும். வரலட்சுமி விரதம் இருப்பதால் கர்மநோய்கள் நீங்கும். திருமணத்தடை அகலும். குழந்தை செல்வம் உண்டாகும்.

***

பெண்கள் புதிய தாலிச்சரடை கட்டிக்கொள்வது ஏன்?


ஆடிப்பெருக்கின் போது வெள்ளப் பிராவகமாய் பொங்கியெழுந்து வரும் காவிரி ஆற்றை பெண்கள் கங்கா தேவியாக நினைத்து வணங்குவர். ஆறு பெருக்கெடுத்து ஓடுவதை போல தங்கள் குடும்பமும், அனைத்து நன்மைகளையும் பெற்று சுபிட்சமாக வாழவேண்டி பெண்கள் திருமாங்கல்ய சரடை மாற்றிக்கொள்கிறார்கள்.முன்னதாக பெண்கள் மஞ்சள் குங்குமம், கலப்பரிசி (வெல்லம், அரிசி) தேங்காய், பழம், தாலிச்சரடு, ஆகியவற்றை வைத்து பூஜை செய்கிறார்கள். பின்னர் சுமங்கலி பெண்கள் ஒருவருக்கொருவர் புதிய தாலிச்சரடை கட்டிக்கொள்கிறார்கள்.

புதுமணத்தம்பதிகள் அதிகாலையிலேயே காவிரி கரைக்கு சென்று அங்கு அரசு, வேம்பு மரத்தை சுற்றி வலம் வந்து வணங்கி மஞ்சள் நூலை கட்டுவர். அரசமரமும், வேப்ப மரமும், சிவசக்தி அம்சமாக கருதப்படுகிறது. அரச மரத்தை விருட்சராஜன் என்றும், வேப்ப மரத்தை விருட்ச ராணி என்றும் அழைப்பர். சக்தி ரூபமாக திகழும் வேப்ப மரத்தை சுற்றி பெண்கள் மஞ்சள் நூலை கட்டுகிறார்கள். இவ்வாறு செய்தால் திருமணமாகாத பெண்களுக்கு விரைவில் நல்ல கணவர் கிடைப்பார் என்றும், திருமணமான பெண்களுக்கு சந்தானலட்சுமி கடாட்சம் கிடைக்கும் என்பதும் ஐதீகம்.

நன்றி: தினதந்தி


தள விபரங்கள்: பதிவுகள்: 1168347 | உறுப்பினர்கள்: 32742 | தலைப்புகள்: 132904 |  புதிய உறுப்பினர்: Jeengoalagarsamy
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 85071
மதிப்பீடுகள் : 10675

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆடிப்பெருக்கு

Post by முரளிராஜா on Sun Jul 31, 2011 9:31 am


ஆடிபெருக்கு பற்றிய விளக்கமான பதிவை இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி சிவா
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: ஆடிப்பெருக்கு

Post by சிவா on Sun Jul 31, 2011 9:42 am

@முரளிராஜா wrote:
ஆடிபெருக்கு பற்றிய விளக்கமான பதிவை இங்கு பகிர்ந்தமைக்கு நன்றி சிவா

நலமா முரளி! நீண்ட நாட்களாகக் காணவில்லையே? நிலம் ஆக்கிரமிப்பு வழக்கில் உங்களுக்கும் தொடர்பு உள்ளதாம்? அதனால்தான் தலைமறைவாகிவிட்டீர்கள் என கேள்விப்பட்டேன்!


தள விபரங்கள்: பதிவுகள்: 1168347 | உறுப்பினர்கள்: 32742 | தலைப்புகள்: 132904 |  புதிய உறுப்பினர்: Jeengoalagarsamy
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 85071
மதிப்பீடுகள் : 10675

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆடிப்பெருக்கு

Post by அருண் on Sun Jul 31, 2011 11:05 am

திருமணத்தடையை நீக்கும் வரலட்சுமி விரதம்!

இது ஆண்களுக்கும் பொருந்துமா..! அய்யோ, நான் இல்லை
தகவலுக்கு நன்றி அண்ணா..!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: ஆடிப்பெருக்கு

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum