ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 சிவனாசான்

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 சிவனாசான்

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நல்ல மனம் தீய மனம்

View previous topic View next topic Go down

நல்ல மனம் தீய மனம்

Post by மணிகண்டன் on Thu Jul 21, 2011 1:53 pm

நல்ல மனம் தீய மனம்

மனம் என்பது மரணப் பட்டினம் நோக்கி அழைத்துச் செல்லும் வாகனம். மனதின் போக்கில் வாழ்ந்த யாருமே சாகாக் கல்வியைப் பயில முடியாது. இதையே இடைகாடார் அழகாகக் கூறுவார்,

" சாகாதிருக்க தான்கற்ற கல்வியன்றோ வாகான மெய்க்கல்வி வகுத்தறி நீ கன்மனமே !"
என்கிறார். இங்கு 'கன்மனமே' என்றது தீங்கான மனமே விலகு என்று பொருள்படும்.

உலகின் கொடுமை என்னவென்றால் மனதிற்கு அடிமையான, மனதின் சீற்றத்தில் சிக்கிய சீமான்களை மக்கள் ஆன்மீகம் தேடி அடி பணிகிறார்கள். அந்தோ பரிதாபம் ! மனதின் கேட்டிற்கு அடிமையானதின் அடையாளம் மூன்று:
1 . ஓய்ந்து ஒரு இடத்தில இருக்க முடியாது
2 .மனிதர்களோடு ஊடாடுவதிலும், மகிழ்வதிலும், போதிப்பதிலும், விவாதிப்பதிலும் நாட்டம்.
3 . பணத்தைப் பயன்படுத்தும் பயன்பாட்டிலேயே சிந்திப்பது, பணத்தின் தேவையிலேயே மூழ்கி இறப்பது.

மனதை வென்று மனதிற்கு மரணம் கொடுப்பவர்களின் நிலை:
1 . தனித்து மௌனம் கண்டு வாழ்வார்கள்
2 . மனித சந்தடியை விட்டு ஒதுங்கிச் சிந்திப்பார்கள்.
3 . தனக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு மட்டுமே அவர்களிடம் இருந்து வெளிப்படும்.

நமது உடலுக்கு ஆயுள் இருப்பது போல நமது மனதிற்கும் ஆயுள் உண்டு. ஆயுள் முடிந்ததும் அடுத்த சந்ததியை உருவாக்கும். மனம் ஒரு மனிதனுக்குள் இல்லறம் நடத்தினால் அவனே பெரும் குடும்பி. சில மனிதர்களுக்குள் ஆயிரக்கணக்கில் மனக் குழந்தைகள் வாழும். ஆனால் ஞானியின் சிந்தையில் ஒரே ஒரு மனமே வாழும். அதுபற்றி விரிவாகக் காண்போம்.

நாம் ஏழு வயதிற்குள் வாழும் வரை எத்தனையோ சம்பவங்கள், உணவு, உடை, உறவுகள், விளையாட்டு இப்படி அனுபவித்து இருப்போம். ஆனால், அவைகள் இன்று ஞாபகம் இல்லை. அவைகள் இறந்த மனமாகும். எவ்வளவு முயன்று ஞாபகப்படுத்தினாலும் இன்று ஞாபகத்திற்கு வராது.
பத்து மாதக் குழந்தையாகத் தவழும் பருவத்தில் நாம் ஒரு செம்பு நிறைய தண்ணீர் கீழே சிந்தாமல் மண்டியிட்டபடி எம் தாத்தாக் கையில் கொடுத்தோம். அவர் வாங்கிக் குடிப்பதற்குள் செம்பு தவறி விழுந்து தண்ணீர் கொட்டியதாம். அன்று இரவே தாத்தா இறந்து விட்டார். இன்று அவரின் முகம் எமக்கு நினைவில் இல்லை. காரணம் அந்த மனம் இறந்து விட்டது. சில மனங்களுக்கு இருபது நிமிடங்கள்தான் ஆயுள். அதாவது அடர்ந்த மக்கள் கூட்டமுள்ள இடங்களுக்குப் போனால் அனைவரது முகத்தையும் பார்ப்போம். ஆனால் அடுத்த கணமே அந்த மனம் இறந்து விடும். பிடித்தமான சில முகங்களைப் பார்த்தால் அந்த மனம் இருபது வருடங்கள் கழிந்தாலும் இறக்காமல் வாழும்.

மனதின் ஆயுளைக் குறைப்பதுதான் தவம். அதற்குச் சில யுக்திகள் உள்ளன.

* பிச்சை எடுத்து வாழ்தல்
* ஓரிடத்தில் நிலையாக தாங்காமல் வாழ்தல்
* தன்னை எப்போதுமே தாழ்வாக விமர்சனம் செய்தபடி சிந்தித்தல்.

இதில் முதலாவதாக உள்ள பயிற்சியைப் பட்டினத்தார் செய்தார். அதாவது பிச்சை எடுத்து வாழ்வது எதற்கு என்றால், ஒரு சம்பவத்தால் நாம் மகிழ்ச்சி அடைந்தாலோ அல்லது துக்கம் அடைந்தாலோ நமது மனதின் ஆயுள் அதிகமாகி விடும். ஒருவன் நமக்கு துரோகம் செய்துவிட்டால் அந்த மனம் நாம் சாவது வரை மறக்காமல் வாழும். இதனை அழிக்கவே ஞானிகள் பிச்சை எடுத்தார்கள். அப்படிச் செய்யும் பொது பலரும் திட்டுவார்கள்; சிலர் பாராட்டுவார்கள். எதிலும் சம்பந்தப்படாமல் வாழும் பக்குவம் உருவாகும்.

அதேபோலத் தன்னைப் பெருமையாகப் பேசுபவர்களின் மனதின் ஆயுள் சாகாமல் நீடிக்கும். ஞானிகள் தன்னையே திட்டிக் கொண்டு, விமர்சனம் செய்து கொண்டு, தவத்தின் போது தமது உடலை, மனத்தைக் கேவலமாகப் புறக்கணித்து மனதின் ஆயுளைக் குறைத்து, மனதை ஆக்கிக் கொன்று விடுவார்கள். மனம் உடம்பை நோயாளி ஆக்கினால் பைத்தியம். உடம்பு மனதை நோயாளி ஆக்கினால் ஞானி.

தெரிந்தோ தெரியாமலோ ஒவ்வொரு மனிதனும் தனக்குள் வாழும் மனதை சாகடிக்கவே முயல்கிறான். மனம் செய்கிற இன்னல்களை உடல் தாங்க முடியாமல் அவதிப்படும் போது மனதின் மீது விரக்தி உண்டாகும். இதை உணரும் மனங்கள் சாணக்கியமாகச் செயல்பட்டு தனது சந்ததிகளை உண்டாக்கிவிடும். ஒரு மனிதன் உலக இன்பத்தை ஆழ்ந்து சுவைக்கின்றான், திடீரென்று அவனது மனைவி நோய் வந்து இறக்கிறாள். உடனே கடவுளைத் தேடி கோவிலுக்குச் செல்லும் சந்ததி மனம் உருவாகிவிடும். காலப்போக்கில் கோவிலும் சலித்துவிடும். அப்புறம் தியான மன்றத்தைத் தேடிய சந்ததி மனம் உண்டாகும். அங்கு விதம் விதமாகப் மனப் பயிற்சி அளித்து சாவது வரை வினோதமான மனதை உண்டாக்கி விடுவார்கள்.

மனதின் ஏஜெண்டுகள்தான் தியான மன்றங்கள். அங்குப் போனால் நிறைய சந்ததி மனங்கள் கிடைக்கும். முன்னூறு வருடங்கள் வாழ்ந்தாலும் மனதை அழிக்க முடியாதபடி கட்டுக்கட்டாகப் புத்தகங்கள், தகவல்கள், பயிற்சிகள், தத்துவங்கள், பாடல்கள், உளறல்கள், இப்படியே சண்டாள மனதின் சந்ததிகளை மூலையில் திணித்து விடுவார்கள். இதுவா ஆன்மீகம்? இது மரணகீதம்.

மனதின் இந்திர ஜாலங்களில் முக்கிய சக்தி நிமிட நேரங்களில் பல்லாயிரம் சந்ததிகளைப் படைத்துவிடும். அனைத்தையும் அழிக்க நமது நூறு வருட ஆயுள் கூட போதாமல் போகலாம். சாகாக் கல்வி பயில்பவர்கள் நூல்களையோ, தத்துவங்களையோ மதிப்பது கிடையாது. மனம் உள்ளவரை கடவுளைக் காணவே முடியாது. எனவே, மனதைச் சாகடிக்கும் முயற்சியில் இறங்குவார்கள் சித்தர்கள். இதையே

"சினம் இறக்கக் கற்றாலும் சித்தி எல்லாம் பெற்றாலும்
மனம் இறக்கக் கல்லார்க்கு வாயேன் பராபரமே "
என்பார் தாயுமானவர்.

சாகாக் கல்வி பயில குருமார்கள் தேவையில்லை. நாம் எந்த குருவிடமும் கற்கவில்லை. "முழு ஆன்ம வலிமை" இருந்தால் தானாகவே வரும். அப்படி வலிமை குறைவாக உள்ளவர்கள் குருவிடம் பாடம் கற்கலாம். அந்த குரு மனதின் மூலம் சொல்லித்தர மாட்டார். வார்த்தைகளோ, சொற்பொழிவோ இருக்காது. மனம் இறந்த மௌன மொழியால் பயிற்சி தொடங்கும், நிறைவு பெறும்.

சாகாக் கல்வியை ஒரு நூல் வடிவில் நாம் கொடுப்பது கூட எமது முட்டாள்தனம் தான். வேறு வழியில்லை, முள்ளை முள்ளால் எடுப்பது போல, மனதினால் காயப்பட்டு மாய்பவர்களை, மனதின் மூலம் எழுத்தாகப் படைத்து மனத்தால் சிந்திக்க வைத்து சாகாக்கல்வி பயில ஆர்வத்தை ஊட்டுகிறோம்.

மனம் உள்ளவரை..... மனப்பாடம் உள்ள வரை........... மனிதனுக்கு விமோசனம் இல்லை. எனவே மனதைக் கொல்லும் ஆயுதத்தைக் கையில் எடுப்போம், மனதைக் கொல்வோம். அதற்கு ஒரே வழி, மனதிற்கு நிறைய துன்பங்கள், வறுமைகள், கஷ்டங்கள் கொடுத்துப் பழக வேண்டும். ஏதாவது ஒரு இன்பத்தை மனம் அடைந்தால் கூட சந்ததியை உருவாக்கி விடும்.

அதுபோல நமக்கு உதவி செய்யும் மனம், கொடுமை செய்யும் மனம் என இரு வகைகள் உள்ளன. தாய், தந்தை மூலம் வந்த மனங்கள் உதவி செய்யும் மனங்கள், நாம் பிறந்த பிறகு சந்ததியைப் பெருக்க விட்ட மனங்கள் தீய மனங்கள். தீய மனங்களின் ஆயுள் குறைவு ஆனால், கொடுமைகள் அதிகம். சாப்பிடத் தூண்டுதல், அனுபவிக்கத் தூண்டுதல் இந்த தீய மனதின் வெளிப்பாடுகள். தீய மனத்தால் குற்றங்கள் பெருகி உடம்புக்குத் தண்டனை கிடைக்கும் போது மனசாட்சி போல வந்து நல்ல மனங்கள் பேசி உதவி செய்யும். நல்ல நூல்களைப் படிப்பது, தியானம் மற்றும் தவம் செய்யத் தூண்டுவது இந்த நல்ல மனங்களே ஆகும். கடவுளைத் தேடுவதும் இந்த நல்ல மனங்கள்தாம். இவற்றில் தீய மனங்களை இனம் கண்டு அழித்து விடலாம். ஆனால் நல்ல மனங்கள் கடுவுளை அடையும்போது இடையுறு செய்து எதிரியாக மாறும். அப்போது நல்ல மனதையும் அழிக்க வேண்டிய நிலை உருவாகும். அதற்குச் சந்ததி மனங்களை உருவாக்கத் தெரியாது. இந்த நல்ல மனமும் அழிந்த பிறகுதான் கடவுள் தரிசனம் உண்டாகும்.

இன்று பலரும் தீய மனதின் தூண்டுதலால் குற்றவாளிகளாக உலவுவதை நேரிடையாகக் காண முடியும். ஆனால், நல்ல மனதின் தாக்கத்தால் பலர் சீரழிவது பலருக்குத் தெரியாது. அதாவது, வள்ளலார் பாடலை மனப்பாடம் செய்தது ஒரு நல்ல மனம், அதன்பிறகு வல்லார் கொள்கையை ஏற்றது அதே நல்ல மனம்.
ஆனால் அருட்பெரும்ஜோதி அனுபவம் அடைய விடாமல் நல்ல மனம் தடையாக நிற்பதைத் தடுக்க முடியாமல் அந்த நல்ல மனம் கள்ள மனமாகி ஜோதியைக் காட்டுவதையும், கனவில் வள்ளலாரைப் பார்த்ததையும் வைத்து வாழ்நாள் முழுக்க அறிவாளி என்கிற போர்வையில் சிக்கிக் கடைசியில் மரணப் படுக்கையில் படுக்கும்போது சன்மார்க்கமும் உதவாது, சாவும் ஒதுங்காது.

இப்படிப் பலரும் செத்துச் செத்துப் பார்த்தும் பலகோடி சன்மார்க்கிகள் திருந்துவதாகத் தெரியவில்லை. நல்ல மனதின் அடிமைகளாக நல்லவர் என்ற பெயரில் வாழ்வைக் கடத்துகிறார்கள். இப்படிதான் பல மன்றங்கள் நெஞ்சுமுட்டும் அளவுக்கு உபதேசங்கள் செய்கின்றன. இதை ஆன்மீகம் என்ற பெயரில் அமோகமாய் விற்பனை செய்து, வயிறு வளர்த்து..... வாயாடி..... வயதாகி...... வாய்க்கரிசி போட வைப்பார்கள். நல்ல மனத்தையும் கெட்ட மனத்தையும் நன்கு புரிந்து கொண்டால் கடைத்தேறலாம்.

--- தவயோகி ஞான தேவ பாரதி சுவாமிகள்.

இந்த பதிவை சற்று சிந்தித்து பாருங்கள்....
avatar
மணிகண்டன்
புதியவர்

புதியவர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2
மதிப்பீடுகள் : 10

View user profile

Back to top Go down

Re: நல்ல மனம் தீய மனம்

Post by kitcha on Thu Jul 21, 2011 2:02 pm

மனதை வென்று மனதிற்கு மரணம் கொடுப்பவர்களின் நிலை:
1 . தனித்து மௌனம் கண்டு வாழ்வார்கள்
2 . மனித சந்தடியை விட்டு ஒதுங்கிச் சிந்திப்பார்கள்.
3 . தனக்கும் இறைவனுக்கும் உள்ள உறவு மட்டுமே அவர்களிடம் இருந்து வெளிப்படும்.

அருமையான பதிவு நண்பா. சூப்பருங்க சூப்பருங்க அருமையிருக்கு அருமையிருக்கு மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
kitcha
மன்ற ஆலோசகர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5555
மதிப்பீடுகள் : 1331

View user profile

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum