புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   Poll_c10ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   Poll_m10ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   Poll_c10 
69 Posts - 58%
heezulia
ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   Poll_c10ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   Poll_m10ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   Poll_c10 
41 Posts - 34%
mohamed nizamudeen
ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   Poll_c10ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   Poll_m10ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   Poll_c10ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   Poll_m10ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   Poll_c10ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   Poll_m10ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   Poll_c10 
111 Posts - 59%
heezulia
ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   Poll_c10ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   Poll_m10ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   Poll_c10 
62 Posts - 33%
mohamed nizamudeen
ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   Poll_c10ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   Poll_m10ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   Poll_c10ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   Poll_m10ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்


   
   

Page 1 of 2 1, 2  Next

கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jul 19, 2011 7:37 pm

ஒரு ஜனநாயக தேசத்தை மன்னராட்சிப் பாணியில் ஆட்சி செய்தால் என்ன தண்டனை கிடைக்கும் என்பதற்கு சமீபத்திய தேர்தலில் தி.மு.கவுக்கு கிடைத்த தோல்வியே சாட்சி.

அதே போல, ஒரு மக்களாட்சியை சர்வாதிகாரத்துடன் ஆட்சி செய்தால் சில சமயங்களில் அவமானங்களையும் சந்திக்க நேரும் என்பதற்கு சமச்சீர் கல்வி விவகாரமே சாட்சி. இதே போல சர்வாதிகாரியாக ஆட்சி செய்ததன் விளைவாக 1996ஆம் ஆண்டிலும் 2006ஆம் ஆண்டிலும் ஆட்சியை பறி கொடுத்த ஜெயலலிதா எந்த பாடத்தையும் கற்கவில்லை என்பது மீண்டும் நிரூபிக்கப்படுகிறது. தி.மு.க அரசு கொண்டு வந்தது என்பதாலேயே சமச்சீர் கல்வித் திட்டத்தை குப்பைத் தொட்டியில் வீச நினைக்கும் ஜெயலலிதா நீதித் துறையிடம் வரிசையாக மூன்று முறை தோற்றிருக்கிறார். இந்த வருடம் சமச்சீர் கல்வியையே அமல்படுத்த வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் கொடுத்திருக்கும் தெளிவான தீர்ப்பையும் மீறி ஜெயலலிதா உச்ச நீதிமன்றத்திற்கு மேல் முறையீடு செல்லக்கூடும் என்று பேசப்படும் அளவுக்கு பிடிவாதமிக்கவராக ஒரு தலைவர் இருப்பது ஆபத்தானது.

அ.தி.மு.க அரசின் பிடிவாதம் மக்கள் மத்தியில் அக்கட்சியின் ஆட்சிக்கு எவ்வளவு கெட்ட பெயர் ஏற்படுத்துகிறது என்ற தகவல் அவரைச் சென்று சேர்கிறதா என்று தெரியவில்லை.

ஒரு வலுவான எதிர்க்கட்சியே இல்லாமல் ஆட்சி செய்து வரும் சமயத்தில் ஜெயலலிதா இவ்வாறு வலியப் போய் பிரச்சனையை சந்திப்பது அவரின் மாறாத இயல்பைக் காட்டுகிறது. அ.தி.மு.க ஆட்சி குறித்து என்னென்ன நல்லெண்ணங்கள் உருவானதோ அவை அனைத்தையும் சமச்சீர் கல்வித் திட்டத்தில் அவரது பிடிவாதம் நாசமாக்குகிறது. இதே நிலை தொடர்ந்தால் 2001-06 ஆட்சிக் காலம் போலவே ஜெயலலிதா மக்களால் வெறுக்கப்படும் தலைவியாக மாறிவிடக்கூடும். 1 கோடி மாணவர்களின் கல்வியை நிர்கதியில் வைத்திருப்பது அவரின் முந்தை ஆடு, கோழி பலி தடைச் சட்டத்தைவிட மோசமான பின்விளைவுகளை ஏற்படுத்தும்.

உண்மையில் ஜெயலலிதா கெட்ட பெயருக்கு பதில் நிறைய நிறைய நல்லெண்ணத்தை உருவாக்க வேண்டிய தருணம் இது. ஏனெனில் ஒரு மிகப் பெரிய கண்டத்தை அடுத்து கடக்கவிருக்கிறார் அ.தி.மு.க தலைவி ஜெயலலிதா. பெங்களூருவில் நடந்து வரும் ஜெயலலிதாவுக்கு எதிரான 66 கோடி ரூபாய் சொத்துக் குவிப்பு வழக்கு தீர்ப்புக் கட்டத்தை எட்டிவிட்டது. அதில் அவர் சிறை செல்வது உறுதி என்று சட்டத் துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது. குற்றம்சாட்டப்பட்டவர்கள் தங்கள் தரப்பு தரப்பு வாதங்களை முன்வைப்பதற்காக ஜூலை 27ந் தேதி நேரில் ஆஜராகி ஆஜராகுமாறு உத்தரவிடப்பட்டிருக்கிறது. அவ்வாறு குற்றவாளிக் கூண்டில் நிற்பதே அவரின் பிம்பத்திற்கு மிகப் பெரிய அடியாக இருக்கும்.

தி.மு.கவினர் ஏராளமானோர் வரிசையாக சிறை சென்றாலும் ஒரு கட்சியின் தலைவரே சிறை செல்வது என்பது அக்கட்சியின், ஆட்சியின் பிம்பத்திற்கு தீராத களங்கத்தை உண்டாக்கும்; மற்ற அனைத்தையும்விட மோசமான களங்கமாக அது இருக்கும். மீண்டும் ஓ.பன்னீர்செல்வத்திற்கு அழைப்பு விடுக்க வேண்டிய தேவை உருவாகி வரும் ஒரு காலக் கட்டத்தில், ஜெயலலிதா தனது சர்வாதிகார குணங்களை மாற்றிக்கொள்ளாமலிருப்பது அவரது கட்சிக்கு மட்டுமின்றி, மக்களுக்கும் சமூகத்திற்கும் ஆபத்தானது.

கருணாநிதியின் எதிர் துருவமாக செயல்படும் ஜெயலலிதா, தி.மு.க கொண்டு வந்த திட்டம் என்றோ, சமச்சீர் கல்வியில் உள்ள குளறுபடிகளை வைத்து அதை நிராகரிக்க வேண்டும் என்றோ நினைப்பது ஒரு வழி. மாநில வாரியம், மெட்ரிக் வாரியம் என்ற பிரிவை அகற்றியது மட்டுமே தி.மு.கவின் சமச்சீர் கல்வியின் ஒரே சாதனை என்பதை புரிந்துகொண்டு கல்வியாளர்கள் அனைவரும் விரும்பும் பொதுக் கல்வியை நோக்கி அடியெடுத்து வைப்பது இன்னொரு வழி. கலைஞர் காப்பீட்டுத் திட்டத்தை புதிய முழுமையான காப்பீட்டுத் திட்டம் என்றும், கலைஞர் வீட்டு வசதித் திட்டத்தை பசுமை வீடுகள் திட்டம் என்று கொண்டு வர முடிந்த ஜெயலலிதாவால், சமச்சீர் கல்வித் திட்டத்தை மேம்படுத்தப்பட்ட பொதுக் கல்வித் திட்டமாக கொண்டு வர முடியாதா? அதைத் தடுப்பது யார்? சோ போன்ற வலதுசாரி, அடித்தட்டு மக்கள் விரோத ஆலோசகர்களா? தங்களின் கல்விக் கொள்ளைக்கு எந்த கடிவாளமும் வர விரும்பாத மெட்ரிகுலேஷன் பள்ளிகளின் பண செல்வாக்கா? ஜெயலலிதாவுக்கும் மக்கள் உணர்வுகளை மதிக்கத் தெரியாத அவரின் மனசாட்சிக்குமே வெளிச்சம்.


உயிரோசை

நட்புடன்
நட்புடன்
நிர்வாகக் குழு

பதிவுகள் : 1399
இணைந்தது : 22/06/2011

Postநட்புடன் Tue Jul 19, 2011 8:43 pm

கல்வியில் சமச்சீர் இருக்கிறதோ இல்லையோ
அம்மாவின் ஆணவத்தில், சர்வாதிகாரத்தில்
அவர் என்றுமே சமச்சீர் தான்
அன்றிலிரிந்து இன்றுவரை
அவர் இருக்கும் வரை.




நட்புடன் - வெங்கட்
kummachi
kummachi
பண்பாளர்

பதிவுகள் : 156
இணைந்தது : 24/05/2011

Postkummachi Tue Jul 19, 2011 9:48 pm

நல்ல கட்டுரை. பெங்களூர் நீதிமன்ற தீர்ப்பை தமிழகமே எதிர் பார்திருக்கிறது.. மீண்டும் ஒரு தர்மபுரி எரிப்பு நடக்காமல் இருந்தால் சரி.



கும்மாச்சி
அன்பே சிவம்
kitcha
kitcha
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5554
இணைந்தது : 11/04/2011

Postkitcha Tue Jul 19, 2011 9:58 pm

சர்வாதிகாரியாக ஆட்சி செய்ததன் விளைவாக 1996ஆம் ஆண்டிலும் 2006ஆம் ஆண்டிலும் ஆட்சியை பறி கொடுத்த ஜெயலலிதா எந்த பாடத்தையும் கற்கவில்லை என்பது மீண்டும் நிரூபிக்கப்படுகிறது.

ஆணவம் என்பது அவர்களுக்கு என்னவென்று தெரியாது.ஏனென்றால் அதனினுள் தானே அம்மையார் இருக்கிறார். அதை விட்டு வெளியே வந்தால் தான் தெரியும்.



கடவுளுக்குச் செலுத்தும் காணிக்கையை
உன் பிள்ளைகளின் கல்விக்குச் செலுத்து
அது உனக்குப் பயன் தரும்

- Dr.அம்பேத்கர் [/size][/size]
--------------------------------------------------
வாழும் பொழுது வாழக் கற்றுக் கொள்,ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   Image010ycm
கே. பாலா
கே. பாலா
மன்ற ஆலோசகர்

பதிவுகள் : 5594
இணைந்தது : 01/01/2011
http://www.mvkttp.blogspot.com

Postகே. பாலா Tue Jul 19, 2011 10:48 pm

kummachi wrote:நல்ல கட்டுரை. பெங்களூர் நீதிமன்ற தீர்ப்பை தமிழகமே எதிர் பார்திருக்கிறது.. மீண்டும் ஒரு தர்மபுரி எரிப்பு நடக்காமல் இருந்தால் சரி.
சியர்ஸ் சியர்ஸ் சியர்ஸ்

அப்துல்லாஹ்
அப்துல்லாஹ்
சிறப்புப் பதிவாளர்

பதிவுகள் : 1413
இணைந்தது : 24/04/2011
http://abdullasir.blogspot.com/

Postஅப்துல்லாஹ் Tue Jul 19, 2011 11:06 pm

ஒரு மிக நல்ல நேர்த்தியான கட்டுரையை பகிர்ந்த உங்களுக்கு என் மனமார்ந்த அன்பு மலர் நன்றி சார்.



மன்னனும் மாசறக்கற்றோனும் சீர் தூக்கின்
மன்னனில் கற்றோன் சிறப்புடையன் - மன்னர்க்குத்
தன் தேசம் அல்லால் சிறப்பில்லை கற்றோர்க்குச்
சென்ற இடமெல்லாம் சிறப்பு.

ஆழ்கடல்...
ஆழ்மனத்தின்...

ஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   Aஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   Bஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   Dஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   Uஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   Lஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   Lஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   Aஜெயலலிதா வின் சர்வதிகாரமும் சமச்சீர் கல்வியும்   H
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jul 19, 2011 11:16 pm

என் மாற்றுக்கருத்தை பதிய அனுமதி உண்டா?




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jul 19, 2011 11:22 pm

நாம் அனைவருமே இந்த பிரச்சினையை கட்சிக் கண்ணோட்டத்தில் பர்க்கிறோமோ என்னும் ஐயம் மேலிடுகிறது. சமச்சீர்கல்வி திட்டத்தை கருணாநிதி அரசு கொண்டு வரும்போதே பல கல்வி நிபுணர்கள் எதிர்ப்பு தெரிவித்ததை பொருட்படுத்தாமல் தன்னிச்சையாக நடந்துகொண்ட கருணாநிதி அரசும் சரி, இப்போது அதை கண்மூடித்தனமாக எதிர்க்கும் ஜெயலலிதா அரசும் சரி, வழக்கின் நுணுக்கங்களை அராய்ந்தறியாமல் ஒரு தலைப்பட்சமாக தடலடியாக தீர்ப்பளித்த உயர் நீதி மன்றமும் சரி,உடனே அதை முழுமையாக பாகுபடுத்தி அறியாமல் பாராட்டும் நாமும் சரி...

யாருமே இங்கே சரியில்லை..!






நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jul 19, 2011 11:23 pm

1. கலைஞர் அரசு சரிவர அனைத்துத் தரப்பையும் கலந்தாலோசியாமல் ( முன்னர் இவர் நியமித்த சமச்சீர்கல்வி ஆலோசகர் குழு முழுக்க முழுக்க திமுகவின் அடிப்பொடிகளே என்பதை இங்கே கவனிக்கவேண்டும்.) தமது சுய புராணம் இடம்பெறவேண்டும் என்பதில் குறியாகவும் தனியார் கல்விநிறுவனத்தினர்களை ரான்சம் செய்யும் முயற்சியிலும் தான் இந்த சமச்சீர்கல்வியை கொண்டுவர முயன்றார்.

2. சமச்சீர் கல்வி என்னும் எல்லா மட்டத்துக்கும் ஒரே கல்வி என்னும் நிலை மாணவர்களை ஒரு ரோபோ ஆக்கும் முயற்சி அல்லது அரசாங்க கால்குலேட்டர் ( க்ளர்க்குகள்) ஆக்கும் முயற்சி என்பதை கல்வியாளர்கள் அறிவார்கள்.

3. கல்வித்திட்டத்தில் சமச்சீரைக் கொணர முயலும் போது கல்வித்தரம் உயர்ந்திருக்கவேண்டும். 25 சதவீத தேர்ந்தறிவுடைய மாணவர்களுக்கும் அறிவுப்பசியூட்டும் விதமாக இருந்திருக்கவேண்டும். உதாரணத்துக்கு சி பி எஸ் சி யின் பாடத்திட்டத்தைக் காணும் போது இந்த பாகுபாடும் மேம்படுத்தும் நிலையும் இருப்பதைக் காணலாம். அதை விடவா இவர்களின் சமச்சீர் கல்வி மாணவர்களை மேம்படுத்தும் நோக்கில் உள்ளது என்பதை சிந்திக்கவேண்டும்.

4. தாம் இருக்கும் காலத்திலேயே திமுகவின் புகழ் பாடபப்டவேண்டும்; தமது சாதனைகள் போற்றப்படவேண்டும் என்னும் கீழ்த்தரமான எண்ணமே கலைஞரின் நோக்கமாக இருந்தது என்பதையும் கருணாநிதியின் புகழ் பாடப்படுகிறது என்ற ஒரே காரணத்தால் அதை குருட்டுத்தனமாக எதிர்ப்பதை தவிர்த்து கொஞ்சம் கால அவகாசம் கொடுத்து மாணவர்களின் இக்கல்வியாண்டு பாதிப்படையாத வகையில் தற்சமயம் நடைமுறைப்படுத்தி ஓராண்டு காலத்தில் அதிலுள்ள குறைபாட்டை அகற்றி இந்த விஷயத்தைக் கொஞ்சம் பொறுமையாகக் கையாண்டிருக்க வேண்டிய ஜெயலலிதாவும் எடுத்தோம் கவிழ்த்தோம் என்றே செயல்பட்டு இருப்பதையும் நடுநிலையில் ஆலோசிப்பார் யாருமில்லை இங்கே..!

5. கனம் கோர்ட்டார் அவர்கள் மெத்தப்படித்த மாமேதைகள். அவர்களாவது மாணவர்களின் எதிர்காலம் குறித்த சீரிய கவலை கொண்டு அதற்குத் தக்கபடி சுமுகமான அதே சமயம் சமநோக்குடன் தீர்ப்பளித்திருகக் வேண்டும்.

6. அதனை விமரிசிக்க விரும்பும் நாம் உண்மையில் சமச்சீர் கல்வி என்ன செய்ய வந்தது? அதன் நோக்கம் நிறைவேறிற்றா? அல்லது தொலை நோக்கிலாவது அதன் பயன்கள் தென்படுகிறதா என்பதை ஆலோசித்து நமது கருத்தினைக் கூற வேண்டும். அப்படி இல்லாது கருத்தளிக்கும் யாருமே ஒன்று கருணாநிதிக்கு ஆதரவாக அல்லது ஜெயலலிதாவுக்கு ஆதரவாக என்னும் இரண்டே நிலை எடுத்து கருத்துகளை முன் வைத்தல் சரியா என்று சிந்திக்கவேண்டும்.

என் கருத்துகள் முற்றும் முழுமையும் என்று பறை சாற்ற வரவில்லை. நம் சிந்திக்கும் நோக்கு எப்படி இருக்கவேண்டும் என்று கூற விழைந்தேன் அவ்வளவே..!





நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Tue Jul 19, 2011 11:24 pm

ஒரு நூறு மாணவர்களை ராண்டமாக தேர்வு செய்தால் அதில் 25 சதவீதம் மிக அதிக நுண்மாண்நுழைபுலம் அறிந்த ஐக்யூ மிக அதிகமுள்ள மாணவர்களையும் 25 சதவீதம் சராசரிக்கும் குறைவான ஐக்யூ கொண்டவர்களாகவும் மீதி 50 சதவீதம் சராசரியான நிலையிலும் இருப்பதை அனைவருமே ஏற்றுக்கொள்வர்.

கல்வித்திட்டம் அமையும் போது இந்த மூன்று சாராரையும் அடிப்படையாகக் கொண்டு அமைதல் வேண்டும். சிபிஎஸ்சி பாடத்திட்டம் இதனை மனதில் கொண்டு வகுக்கப்பட்டுள்ளது. ( கடந்த 22 வருடங்களாக இந்த பாடத்திட்டத்தைப் போதிப்பவன் நான் ) இது அனைத்து சாரார் மாணவர்களையும் ஒருங்கிணைக்கும் பாடத்திட்டம்.

மெட்ரிகுலேஷன்களிலும் கான்வெண்ட்களிலும் மேதகு அறிவாளர்களைக் கொண்டு மேற்சொன்ன மேம்பட்ட 25 சதவீத மாணவ்ர்களைக் கருத்தில் கொண்டும், அரசாங்கபாடத்திட்டத்தில் மீதிப்பிரிவினரை மனதில் கொண்டும் பாடத்திட்டங்களைக் கொண்டும் உள்ளது. இது தமிழகத்தில்மட்டுமலல் மிக்காரும் மாநில கல்விக்கொள்கைகள் இவ்வண்ணமே உள்ளன.

நிற்க,

தமிழக அரசின் கருணாநிதி அமைச்சு இவர்கள் அனைவரையும் ஒருங்கிணைக்கும் நோக்கில் அனைவருக்கும் ஒரே விதமான சமச்சீர் கல்வி என்னும் பெயரால் பாடத்திட்டத்தினை வகுத்தது. இதில் முதல் 25 சதவீத மாணவர்களுக்கு அவர்களின் சிந்திக்கும் திறனுக்கு ஏற்புடைய பாடத்திட்டம் அமையாமல் சராசரிக்கும் கீழே ஒரு கலவை சாதம் கிண்டி அதை அனைவருக்கும் வழங்க முற்பட்டது. இதில் தற்பெருமை தம்பட்டம் இதெல்லாம் மேலே போடப்பட்ட தாளிதங்கள்.

இந்த கல்வித்திட்டத்தை தனியார் பள்ளி நிர்வாகங்கள் எதிர்த்தன. காரணம் சுயநலம். தமது பள்ளிகளுக்கென இருந்து வந்த மேல்தட்டு வர்க்கத்தினரின் ஆசிர்வாதங்கள் போய்விடும் என்னும் அபாயம்.

ஆனால் உண்மையான நல்ல நோக்குடைய கல்வியாளர்கள் என் கருத்தினை முன்வைத்து அதாவது அனைத்து மாணவர்களுக்கும் அவரவர் தன்மைக்கேற்ப பொருளடக்கம் இருக்கவேண்டுமே அலலாது சமச்சீர் கிசசடி அவசியமில்லை என வாதிட்டனர்.

செவிடன் காதில் ஊதப்பட்ட சங்கென அவை தவிர்க்கப்பட்டு கருணாநிதியால் இந்த சமச்சீர் கல்வித்திட்டம் முன்வைக்கபப்ட்டது.

இதன் மூலம் நான் கூறிய படி ரோபோக்களும் அரசாங்க கால்குலேட்டர்களும் தான் தயாராகுமே தவிர மாணவனின் தனிப்பட்ட திற்மை வெளிப்படப்போவது இல்லை என்பதே உண்மை.

இந்த விளக்கம் போதுமானதாக இருக்குமென நம்புகிறேன்.

நன்றி நண்பர்களே..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக