உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» ஈகரையை படிக்க மட்டும் செய்பவர்கள் இங்கே செல்லலாம் -RSS
by T.N.Balasubramanian Today at 8:13 pm

» இளவரசர் பட்டத்தை துறந்தார் ஹாரி
by T.N.Balasubramanian Today at 6:40 pm

» கோபுர தரிசனம் - தொடர் பதிவு
by T.N.Balasubramanian Today at 6:31 pm

» ஆறாத் துயரம் மாறாதோ ?
by T.N.Balasubramanian Today at 6:28 pm

» கடந்த 5 ஆண்டுகளில் 2200 மத்திய ஆயுதப்படை வீரர்கள் தற்கொலை
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:19 am

» வாழ்த்தலாம் வாருங்கள் உறவுகளே, க்ரிஷ்ணாம்மா அவர்களின் பிறந்த தினம்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:09 am

» பிறந்தநாள் பரிசு!
by பழ.முத்துராமலிங்கம் Today at 11:02 am

» நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ்.
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:56 am

» ட்ரீட்மென்டுக்கு டி.வி.சீரியல்ல வர்ற டாக்டர்கிட்டதான் போகணுமாம்..!!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:51 am

» பேலஸ் தியேட்டரில் இரண்டு இருக்கைகள் காலி!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:50 am

» பெண் குழந்தைகளுக்கு மரியாதை!
by பழ.முத்துராமலிங்கம் Today at 10:49 am

» வேலன்:-யூடியூப் வீடியோக்களை MP3 பைல்களாக பதிவிறக்கம் செய்திட-4K Youtube to MP3
by velang Today at 7:20 am

» ஊரார் குறைகளை அடுக்கும் முன்…(கவிதை)
by ayyasamy ram Today at 5:23 am

» ஜன., 23 நேதாஜி பிறந்த தினம்
by ayyasamy ram Today at 5:18 am

» வினோபாஜி ஆன்மிக சிந்தனைகள்
by ayyasamy ram Today at 4:45 am

» ஷீரடியில் முழு 'பந்த்' : கோவில் மட்டும் இயங்கியது
by ayyasamy ram Today at 4:38 am

» மைசூரு: மேயர் பதவியை பிடித்த முஸ்லிம் பெண்
by ayyasamy ram Today at 4:35 am

» மத ஒற்றுமைக்கு உதாரணமாக மசூதியில் ஹிந்து திருமணம்
by ayyasamy ram Today at 4:30 am

» களத்தில் மட்டும் தான் வீரன்: கருணை காட்டிய காளை
by T.N.Balasubramanian Yesterday at 7:48 pm

» இவை யாவும் உங்களுடன் பகிரும் இன்பம் கொடு.---- [b]மீள் பதிவு [/b]
by T.N.Balasubramanian Yesterday at 7:05 pm

» கணிதப் புதிர்- தொண்ணூறிலிருந்து எழுபத்தைந்து...
by T.N.Balasubramanian Yesterday at 6:43 pm

» அவரை பிரிந்ததால் போதைக்கு அடிமையானேன் - விஷ்ணு விஷால்
by T.N.Balasubramanian Yesterday at 6:39 pm

» சென்னையில் புதுப்பொண்ணு……………..அன்று
by சக்தி18 Yesterday at 2:47 pm

» இதப்படிங்க முதல்ல...(சினிமா செய்திகள்- வாரமலர்)
by சக்தி18 Yesterday at 12:58 pm

» அச்சம் என்பது மடமையடா!
by சக்தி18 Yesterday at 12:47 pm

» சினிமா- பழைய பாடல்கள்- காணொளிகள்
by சக்தி18 Yesterday at 12:34 pm

» கணினி/இணைய உலகில் ஒரு சில துளி டிப்ஸ்
by சக்தி18 Yesterday at 12:31 pm

» அருமையான வாழைப்பூ புளிக்குழம்பு
by ayyasamy ram Yesterday at 10:38 am

» தூங்குவதும் தனி ‘டயட்’ தான்
by ayyasamy ram Yesterday at 10:36 am

» வேலன்:-வீடியோவில் உள்ள சப் டைடிலை நீக்கிட-MKV Tool Nix
by velang Yesterday at 7:45 am

» வேலன்:-இரண்டு தேதிகளுக்கு இடைப்பட்ட நாட்களை கணக்கிட-Calculator Days
by velang Yesterday at 7:43 am

» இந்தியா-ஆஸ்திரேலியா மோதும் கடைசி ஒருநாள் கிரிக்கெட் போட்டி: பெங்களூருவில் இன்று நடக்கிறது
by ayyasamy ram Yesterday at 7:26 am

» செல்ஃபி மோகத்தால் இளம் பெண்ணுக்கு முகத்தில் 40 தையல்
by ayyasamy ram Yesterday at 7:22 am

» யானை சிலை கோயில்
by ayyasamy ram Yesterday at 7:13 am

» நாட்டு நடப்பு - கார்ட்டூன் & வாட்ஸ் அப் பகிர்வு
by ayyasamy ram Yesterday at 6:59 am

» சீனாவை மிரட்டும் 'கொரனோ' வைரஸ்: கோவை விமான நிலையத்தில், 'அலர்ட்'
by ayyasamy ram Yesterday at 6:54 am

» கார் விபத்தில் காயமடைந்த நடிகை ஷபானா ஆஸ்மி குணமடைய மோடி பிரார்த்தனை
by ayyasamy ram Yesterday at 6:53 am

» வசூல்ராஜா பட பாணியில் தேர்வெழுத வந்த இளைஞர்
by ayyasamy ram Sat Jan 18, 2020 10:41 pm

» ஈகரையில் இந்து என்ற தலைப்பில் வந்த..........
by T.N.Balasubramanian Sat Jan 18, 2020 10:18 pm

» இரட்டை வேடத்தில் யோகிபாபு
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:42 pm

» நயன்தாராவுக்கு அண்ணன்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:40 pm

» விண்ணைத்தொடும் கட்டடங்கள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 7:34 pm

» ஆஹா கோதுமை ரெசிப்பிகள்
by ஜாஹீதாபானு Sat Jan 18, 2020 5:16 pm

» கண்ணதாசன் பாடல்களில் பிடித்த சில வரிகள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 5:13 pm

» திரைப்பட பாடல் வரிகள் - ரசித்தவை
by ayyasamy ram Sat Jan 18, 2020 5:09 pm

» நல்லவை சூழ்ந்திருக்க அல்லாதவை அணுகுமா?
by ayyasamy ram Sat Jan 18, 2020 4:48 pm

» ஈசாப் கதைப் பாடல்கள் - ஜாதி நாய
by ayyasamy ram Sat Jan 18, 2020 4:24 pm

» நல்லவை முப்பது
by ayyasamy ram Sat Jan 18, 2020 4:21 pm

» தேன் தினை லட்டு
by ayyasamy ram Sat Jan 18, 2020 1:23 pm

» ஊக்கம் தரும் அறிவுரைகள்
by ayyasamy ram Sat Jan 18, 2020 1:04 pm

Admins Online

சுலபமான முறையில் இனிப்புகள் ! - கோதுமை ரவை கேசரி !

best சுலபமான முறையில் இனிப்புகள் ! - கோதுமை ரவை கேசரி !

Post by krishnaamma on Sat Jul 16, 2011 5:32 pm

First topic message reminder :

இந்த திரி இல் பலவகை இனிப்புகள் செய்யும் (ஈசியான) முறைகளை பார்க்கலாம்.
முதலில் திரட்டுப்பால் .

பொதுவாக எங்கள் வீடுகளில் இது இல்லாமல் எந்த பண்டிகையும் இருக்காது. கல்யாணம் கார்த்திகை எல்லாத்துக்கும் திரட்டுப்பால் வேண்டும்.

தேவையானவை:

வெண்ணை நிறைந்த  பால் 1 லிட்டர்
சர்க்கரை  200 கிராம்

செய்முறை:

அடிகனமான உருளி இல் பாலை விட்டு அடுப்பை சின்னதாக வைக்கணும் .
பால் பொங்கி வராமல் இருக்க அதில் ஒரு சின்ன கிண்ணி யை போட்டுவைக்கலாம்.
நன்கு பால் குறைந்து வரும்பொழுது, கிண்ணியை எடுத்துவிட்டு கிளறவும்.
சர்க்கரை சேர்க்கவும்.
நன்கு சுருண்டு வந்ததும் அடுப்பை அணைக்கவும்.
வேண்டுமானால் ஏலப்பொடி போடலாம்.
அப்படியேவும் நன்றாக இருக்கும்.
இளம் 'பிங்க்' நிறத்தில் நன்றாக இருக்கும்.


Last edited by krishnaamma on Thu May 12, 2016 10:35 am; edited 1 time in total


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down


best Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கோதுமை ரவை கேசரி !

Post by krishnaamma on Fri Oct 24, 2014 7:12 pm

@ஜாஹீதாபானு wrote:அட அட படமே அழகா இருக்கு... பாதுஷா வட்டம் போட்டது ஆரு? அழகா தட்டி இருக்காங்க.

சென்னை வரும்போது செய்து கொண்டு வாங்கஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1099088

ஆமாம் பானு, சூப்பர் ஆக இருந்தது போட்டோ வில், உடனே "சூப்பர் " என்று voice chat அனுப்பிட்டேன் ராஜாவுக்கு புன்னகை ..அப்புறம் பானு, whatsup வைத்துக்கொள்ள android போன் வேண்டாம் பானு, சாதாரண போன் இல் கூட டவுன்லோட் செய்யலாம்.....உங்க பிள்ளையை கேளுங்க ............செய்து தருவான் புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

best Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கோதுமை ரவை கேசரி !

Post by T.N.Balasubramanian on Fri Oct 24, 2014 7:47 pm

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கோதுமை ரவை கேசரி ! - Page 6 HuVwQdWrTIGskVvkcbsO+220

சுலபமான முறையில் இனிப்புகள்  ! - கோதுமை ரவை கேசரி ! - Page 6 UrnVdXqWTePuytglZE3t+0264


வாழ்த்துக்கள் ராஜா !
sweet ஆக  கழியும் விடுமுறைக்காக !!

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25878
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9350

Back to top Go down

best Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கோதுமை ரவை கேசரி !

Post by ராஜா on Sat Oct 25, 2014 2:49 am

1 : 3 : 3 அல்லது 1 : 2 1/2 : 2 1/2
என்ற அளவில் கடலை மாவு , நெய் , சீனி

செய்முறை :

கடலை மாவை நன்றாக மனம் வரும் வரைக்கும் அல்லது பச்சை வாசனை போகும் அளவிற்கு வறுத்து கொள்ள வேண்டும்.

நெய்யை உருக்கி அடுப்பு பக்கத்திலேயே வைத்துகொள்ளுங்கள் , இளம்சூடாக இருந்தால் கிண்டுவதற்கும் நல்லது மைசூர்பாகின் temperature குறையாமலும் இருக்கும் அதனால் சுவையும் நன்றாக இருக்கும்.

அடுத்து கடலைமாவை ஒரு கிண்ணத்தில் போட்டு சிறிது சிறிதாக நெய் விட்டு (கடலை மாவு பஜ்ஜி பதத்திற்கு கரைத்து வைத்து கொள்ளுங்கள்). இணையத்தில் மாவை அப்படியே போடா சொல்லியிருந்தார்கள் மாவாக போட்டால் கட்டிபிடித்துவிடுமெ என்று தான் கரைத்து பயன்படுத்தினோம் மிக நன்றாக இருந்தது.
கரைப்பதற்கு அரை கப் அல்லது சற்று அதிகம் ஆகும் , மீதி இருப்பது போதும் கிளரும் பொது கலப்பதற்கு.

அடுத்து , சர்க்கரையை ஒரு அடிகனமாக வாணலியில் போட்டு அதே அளவிற்கு தண்ணீர் விட்டு கம்பி பாகம் வரும் வரைக்கும் காய்ச்சவும்.

கம்பி பாகம் வந்ததும் கடலை மாவை , சின்ன குழி கரண்டி கொண்டு எடுத்து கொஞ்சம் கொஞ்சமாக ஊற்றி அதே அளவிற்கு நெய் ஊற்றி கிளறவும். கைவிடாமல் கிளறி கொண்டே இருக்க வேண்டும் (இது தான் மிக கஷ்டமான வேலை ...... )

இது போல முழு மாவும் + நெய்யும் ஊற்றிய பிறகும் கிளறுவதை நிறுத்தாமல் தொடர்ந்து கிளறிக்கொண்டே இருக்க வேண்டும்.

இப்பவே மைசூர்பாக்கின் மனம் அருமையாக வர ஆரம்பித்திருக்கும். ஒரு கட்டத்தில் மைசூர் பாகில் இருந்து நெய் தனியாக பிரிந்து வர ஆரம்பிக்கும் இது தான் சரியான பதம். உடன் எடுத்து
ஒரு நெய் தடவிய தட்டில் கொட்டி சமபடுத்தி கொள்ளுங்கள்.
கொஞ்சம் நேரம் ஆகியருந்தாலும் பரவாயில்லை அடுத்தடுத்து செய்யும்போது சரியான பதம் உங்களுக்கு தெரிந்துவிடும்.


சிறிது சூடு ஆறியதும் கத்தி கொண்டி கோடுபோட்டு , நன்றாக ஆறியதும் எடுத்து சாப்பிடுங்கள்.
அடுத்து ஆனந்தபவன் / ஸ்ரீ கிருஷ்ணா பக்கமெல்லாம் போகமாட்டீர்கள்.


- எதோ எனக்கு தெரிந்த வரைக்கும் சொல்லிவிட்டேன் , நிறை குறைகளை எங்கள் குருஜி திருமதி IAS ஆபிசர் ( அதாங்க ரமணீயன் ஐயா சொன்னாரே அவர் தான்) வந்து விளக்குவார்
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

best Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கோதுமை ரவை கேசரி !

Post by ஜாஹீதாபானு on Sat Oct 25, 2014 4:20 pm

ம்ம்ம் செய்து பார்க்கிறேன். நன்றீ ராஜா புன்னகை சூப்பருங்க சூப்பருங்க
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30904
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7332

Back to top Go down

best Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கோதுமை ரவை கேசரி !

Post by krishnaamma on Sat Oct 25, 2014 5:41 pm

// எதோ எனக்கு தெரிந்த வரைக்கும் சொல்லிவிட்டேன் , நிறை குறைகளை எங்கள் குருஜி திருமதி IAS ஆபிசர் ( அதாங்க ரமணீயன் ஐயா சொன்னாரே அவர் தான்) வந்து விளக்குவார் //

ஐயோ அதெல்லாம் இல்லை ராஜா புன்னகை அவர்  கலாட்டா செய்கிறார் !

//
அடுத்து கடலைமாவை ஒரு கிண்ணத்தில் போட்டு சிறிது சிறிதாக நெய் விட்டு (கடலை மாவு பஜ்ஜி பதத்திற்கு கரைத்து வைத்து கொள்ளுங்கள்). இணையத்தில் மாவை அப்படியே போடா சொல்லியிருந்தார்கள் மாவாக போட்டால் கட்டிபிடித்துவிடுமெ என்று தான் கரைத்து பயன்படுத்தினோம் மிக நன்றாக இருந்தது.
கரைப்பதற்கு அரை கப் அல்லது சற்று அதிகம் ஆகும் , மீதி இருப்பது போதும் கிளரும் பொது கலப்பதற்கு. //


இந்த step நல்லா இருக்கு, எங்க அம்மா பாட்டி எல்லாம், ஒவ்வொரு கரண்டியாக மாவை தூவி, தூவி கிளறுவா..............அது கஷ்டம் சிலசமையம் மாவு கட்டி தட்டிவிடும் என்று  நான், கடலை மாவை வறுக்கும்போதே நிறைய நெய் விட்டு வறுத்துவிடுவேன்...............அதாவது நீங்கள் சொல்லும் 'தோசைமாவு' பதத்துக்கு நெய் விட்டு....................... அடுப்பிலே அது சூடாக இருக்கும்போதே..................... அருகில் கொதித்துக் கொண்டிருக்கும்   சர்க்கரை பாகை இதில்  விடுவேன்..................ஸோ, கட்டி தட்டாமல் இருக்கும்................

ஒருமுறை நீங்க சொன்னது போலவும் செய்து பார்க்கிறேன்.................எது easy  யோ அதை தொடரலாம் புன்னகை

விளக்கமான செய்முறைக்கு  ரொம்ப நன்றி ராஜா புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

best Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கோதுமை ரவை கேசரி !

Post by T.N.Balasubramanian on Sat Oct 25, 2014 5:56 pm

ராஜா (IAS -under  probation )--கங்க்ரஜுலெஷன்   

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
T.N.Balasubramanian
T.N.Balasubramanian
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 25878
இணைந்தது : 03/02/2010
மதிப்பீடுகள் : 9350

Back to top Go down

best Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கோதுமை ரவை கேசரி !

Post by ஜாஹீதாபானு on Sat Oct 25, 2014 6:04 pm

@krishnaamma wrote:
@ஜாஹீதாபானு wrote:அட அட படமே அழகா இருக்கு... பாதுஷா வட்டம் போட்டது ஆரு? அழகா தட்டி இருக்காங்க.

சென்னை வரும்போது செய்து கொண்டு வாங்கஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1099088

ஆமாம் பானு, சூப்பர் ஆக இருந்தது போட்டோ வில், உடனே "சூப்பர் " என்று voice chat அனுப்பிட்டேன் ராஜாவுக்கு புன்னகை ..அப்புறம் பானு, whatsup வைத்துக்கொள்ள android போன் வேண்டாம் பானு, சாதாரண போன் இல் கூட டவுன்லோட் செய்யலாம்.....உங்க பிள்ளையை கேளுங்க ............செய்து தருவான் புன்னகை
மேற்கோள் செய்த பதிவு: 1099132

நான் வச்சிருக்கிற போன் நெட் உபயோகிக்க முடியாதுமா. கூடிய சீக்கிரம் வாங்கிடுறேன்புன்னகை
ஜாஹீதாபானு
ஜாஹீதாபானு
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 30904
இணைந்தது : 16/04/2011
மதிப்பீடுகள் : 7332

Back to top Go down

best Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கோதுமை ரவை கேசரி !

Post by ராஜா on Sat Oct 25, 2014 6:18 pm

@T.N.Balasubramanian wrote:ராஜா (IAS -under  probation )--கங்க்ரஜுலெஷன்   
ரமணியன்
சிரி சிரி நன்றி
ராஜா
ராஜா
தலைமை நடத்துனர்


பதிவுகள் : 31207
இணைந்தது : 07/04/2009
மதிப்பீடுகள் : 5684

http://www.eegarai.net

Back to top Go down

best Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கோதுமை ரவை கேசரி !

Post by krishnaamma on Sat Oct 25, 2014 6:21 pm

@ஜாஹீதாபானு wrote:
@krishnaamma wrote:
@ஜாஹீதாபானு wrote:அட அட படமே அழகா இருக்கு... பாதுஷா வட்டம் போட்டது ஆரு? அழகா தட்டி இருக்காங்க.

சென்னை வரும்போது செய்து கொண்டு வாங்கஜாலி
மேற்கோள் செய்த பதிவு: 1099088

ஆமாம் பானு, சூப்பர் ஆக இருந்தது போட்டோ வில், உடனே "சூப்பர் " என்று   voice  chat  அனுப்பிட்டேன் ராஜாவுக்கு புன்னகை ..அப்புறம் பானு, whatsup  வைத்துக்கொள்ள android  போன் வேண்டாம் பானு, சாதாரண போன் இல் கூட டவுன்லோட் செய்யலாம்.....உங்க பிள்ளையை கேளுங்க ............செய்து தருவான் புன்னகை  
மேற்கோள் செய்த பதிவு: 1099132

நான் வச்சிருக்கிற போன் நெட் உபயோகிக்க முடியாதுமா. கூடிய சீக்கிரம் வாங்கிடுறேன்புன்னகை

நோ ப்ரோப்ளேம்...........பானு...அவசரம் ஒன்றும் இல்லை............என்னுடையதும் android இல்லை புன்னகை


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

best முந்தரி ஹல்வா !

Post by krishnaamma on Tue May 05, 2015 4:08 pm

தேவையானவை:

1cup முந்தரி விழுது (150gm முந்திரியை ஊறவைத்து, கொஞ்சம் பாலில் அரைத்து வைக்கவும் )
2cup சர்க்கரை
2 1 /2cup சக்கரை இல்லாத கோவா
2sp நெய்
2sp முந்திரி உடைத்து
சிறிதளவு ஏலப்பொடி (தேவையானால் )
பால் சிறிதளவு

செய்முறை:

ஒரு அடிகனமான பாத்திரத்தில், முந்தரி விழுது, நெய் போட்டு அடுப்பில் வைக்கவும்.
அடுப்பை நிதானமாக எரியவிடவும், கிளறிக்கொண்டே இருக்கவும்.
இப்பொழுது கோவாவை துருவி அல்லது உதிருதுப்போடவும்.
நன்கு கிளறவும், கொஞ்சம் கெட்டியாகும்போது, சிறிது சிறிதாக நெய் விட்டு கிளறவும்.
சர்க்கரை சேர்க்கவும்.
கைவிடாமல் கிளறவும்.
நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது ஏலப்பொடி, உடைத்துவைதுள்ள முந்தரி தூவி, கிளறி இறக்கவும்.
சுவையான முந்தரி ஹல்வா தயார்.

குறிப்பு: வெறும் முந்தரி விழுது போடும் இந்த ஹல்வா செய்யலாம. (பாதாம்
ஹல்வா) போலவே.
சர்க்கரை இல்லாத கோவா கடையில் வாங்கினாலும் ஓகே அல்லது, ஒரு லிட்டர் பாலை சுண்டக் காய்ச்சியும் நாமே தயாரிக்கலாம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

best காரட் - காஜர் ஹல்வா !

Post by krishnaamma on Tue May 05, 2015 4:23 pm

காரட் - காஜர் ஹல்வா - ரொம்ப சுலபமான ஹல்வா.

தேவையானவை:

1kg 'பிரெஷ்' காரட்
1 1 /2lt பால்
500gm சர்க்கரை
ஏலப்பொடி கொஞ்சம்
2sp நெய்
2sp உடைத்த பாதாம், பிஸ்தா, முந்தரி துண்டங்கள்.

செய்முறை :

காரட்டை நன்கு கழுவி துருவவும்.
ஒரு அடிகனமான பாத்திரத்தில், பால், காரட் துருவல் போட்டு அடுப்பில் வைக்கவும்.
அடுப்பை நிதானமாக எரியவிடவும், கிளறிக்கொண்டே இருக்கவும்.
பொங்கி வழியாமல் பார்த்துக்கொள்ளவும்.
நன்கு குறுகினதும், சர்க்கரை போடவும். கிளறவும்.
நெய் ஊற்றவும்.
நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது ஏலப்பொடி தூவி இறக்கவும்.
ஒரு அழகான பேசினில் போட்டு உடைத்த பருப்புகள் கொண்டு அலங்கரிக்கவும்.

குறிப்பு: ஹல்வா கிளரும் நேரத்தை குறைக்க துருவின காரட்டை பால் விட்டு குக்கரில் இல் வேகவைத்துவிட்டு, சர்க்கரை இல்லாத கோவா போட்டும் செய்யலாம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

best பலவகை ஹல்வா செய்யும் முறை :

Post by krishnaamma on Tue May 05, 2015 4:24 pm

பலவகை ஹல்வா செய்யும் முறை :

காரட் - காஜர் ஹல்வா போலவே, அதேமுறையில் பூசணி (வெள்ளை பூசணி ),
பரங்கிக்காய் ( கல்யாண பூசணிக்காய் - அரசாணிக்காய் ), பீட் ரூட் மற்றும் சுரைக்காய் போன்ற காய்கறிகளிலும் செய்யலாம்.

பூசணி, சுரைக்காய் போன்ற காய்கறி களில் செய்வதானால், அவற்றை துருவி
வடிதட்டில் போட்டு வடியடவேண்டும். பிறகு நன்கு பிழிந்து விட்டு துருவலை மாத்திரம் உபயோகிக்கவேண்டும். பிழிந்த நீரை 'சூப்' செய்ய உபயோகிக்கலாம்.

மேலும் இந்த ஹல்வாகள் செய்ய 'சர்க்கரை இல்லாத கோவா' உபயோகித்தால் அது ஹல்வாவின் சுவையை கூட்டும் .

, கல்யாண பூசணி , மற்றும் காரட் - காஜர் ஹல்வாவிற்கு கலர் ஏதும் போட வேண்டாம் , மற்ற ஹல்வாகளுக்கு போடணும்.

பூசணி ஹல்வாவின் மறு பெயர் 'காசி ஹல்வா' இந்த ஹல்வா செய்யும் போது சர்க்கரை அளவை சிறிது அதிகரித்தால் கடையில் செய்வது போல் துண்டம் போடவரும். கேசரி கலர் போடலாம்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

best பேரிச்சம்பழ ஹல்வா

Post by krishnaamma on Tue May 05, 2015 4:26 pm

தேவையானவை:

600gms பேரிச்சம்பழம (விதைகளை எடுக்கவும், துண்டுகள் போடவும் )
1tin Condensed milk ( milkmaid tin )
2 தேக்கரண்டி நெய்
2 தேக்கரண்டி மைதா / corn flour
1 /2cup தண்ணீர்

செய்முறை:

ஒரு வாணலியில் நெய் விட்டு மைதாவை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
உடனே தண்ணீர் விட்டு கிளறவும்.
அது கொதித்து அடங்குமுன், பேரிச்சம்பழ துண்டுகள் போடவும்.
பின் Condensed milk ஊற்றவும் .
நன்கு கிளறவும்.
நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது இறக்கவும்.
அவ்வளவுதான் பேரிச்சம்பழ ஹல்வா ரெடி.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

best மிக்சட் ப்ரூட் ஹல்வா

Post by krishnaamma on Tue May 05, 2015 4:27 pm

பேரிச்சம்பழ ஹல்வா போல், மிக்சட் ப்ரூட் ஹல்வாவும் செய்யலாம். இந்த ஹல்வாவை குழந்தைகள் மிகவும் விரும்புவார்கள்.

தேவையானவை:

200gms பேரிச்சம்பழம (விதைகளை எடுக்கவும், துண்டுகள் போடவும் )
2cup டுட்டி பிரூட்டி
1cup உலர்ந்த திராக்ஷை
2cup உடைத்த பாதாம், பிஸ்தா, முந்தரி துண்டங்கள்.
2cup உலர்ந்த அத்திப்பழம் (துண்டுகளாக்கவும்)
1 தேக்கரண்டி செர்ரி (தேனில் ஊறவைத்து கடையில் கிடைக்கும் , வாங்கி துண்டுகளாக்கவும் )
1tin Condensed milk ( milkmaid tin )
2 தேக்கரண்டி நெய்
2 தேக்கரண்டி மைதா / corn பலூர்
1cup சர்க்கரை
1 cup தண்ணீர்

செய்முறை:

ஒரு வாணலியில் நெய் விட்டு மைதாவை போட்டு ஒரு நிமிடம் வதக்கவும்.
உடனே தண்ணீர் விட்டு கிளறவும்.
அது கொதித்து அடங்குமுன், பேரிச்சம்பழ துண்டுகள், டுட்டி பிரூட்டி,உலர்ந்த திராக்ஷை, உடைத்த பாதாம், பிஸ்தா, முந்தரி துண்டங்கள்,உலர்ந்த அத்திப்பழம், செர்ரி போடவும்.
பின் Condensed milk ஊற்றவும் , சர்க்கரை சேர்க்கவும்.
நன்கு கிளறவும்.
நன்கு பந்து போல் சுருண்டுவரும்போது, நெய் தடவிய தட்டில் கொட்டவும்.
ஆறினதும் துண்டம் போடவும்.
அவ்வளவுதான் மிக்சட் ப்ரூட் ஹல்வா ரெடி.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

best பூந்தி லட்டு

Post by krishnaamma on Tue May 05, 2015 4:28 pm

தேவையானவை :

1cup கடலை மாவு
1sp அரிசி மாவு
1tabsp முந்தரி பருப்பு
1tabsp உலர்ந்த திராக்ஷை
10 - 15 கிராம்பு
2sp நெய்
ஆரஞ்சு கலர் 2 சிட்டிகை
அரை ஸ்பூன் ஏலப்பொடி
உப்பு ஒரு சிட்டிகை
'baking powder ' - சோடா உப்பு ஒரு சிட்டிகை
பொரிக்க நெய்/எண்ணெய்

சர்க்கரை பாகுகாக :
1 3 /4cup சர்க்கரை
3 /4cup தண்ணீர்

செய்முறை:

கடலை மாவு, அரிசி மாவு, உப்பு ஒரு சிட்டிகை,ஆரஞ்சு கலர், சோடா உப்பு ஒரு சிட்டிகை எல்லாம் போட்டு நன்கு கலக்கவும்.
தண்ணீர் விட்டு 'தோசை மாவு' பதத்துக்கு கரைக்கவும்.
வாணலியில் எண்ணெய் வைத்து சுட்டதும்,
பூந்தி கரண்டி இல் மாவை விட்டு, ஒரு கரண்டியால் தட்டவும்
பூந்திகள் எண்ணெய் இல் தொடர்ந்து விழனும்.
பிறகு பொறித்த பூந்திகளை வடிதட்டில் போடவும்.
இது போல் மொத்த மாவையும் பூந்தி யாக பொரிக்கவும்.
ஒரு பெரியபேசினில் மொத்த பூந்திகளையும் போடவும்.
நெய் விட்டு உலர்ந்த திராக்ஷை, கிராம்பு , முந்திரியை பொரித்து போட்டு கலக்கவும்.
மற்றும் ஒரு அடுப்பில் சர்க்கரை பாகுகாக ஆழமான பத்திரத்தில் சர்க்கரை + தண்ணீர் விடவும். ஏலப்பொடி போடவும்.
கம்பி பதம் வரும் வரை கொதிக்கவிடவும்.
சர்க்கரை பாகை பூந்தி மேல் கொட்டவும்.
கரண்டியால் கிளறி விடவும்.
கொஞ்சம் சூடு ஆறினதும் லட்டு பிடிக்கவும்.


http://krishnaammas.blogspot.in/

Dont work hard, work smart புன்னகை


Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா  ஹரே ஹரே !! !!
krishnaamma
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 60320
இணைந்தது : 22/04/2010
மதிப்பீடுகள் : 12233

Back to top Go down

best Re: சுலபமான முறையில் இனிப்புகள் ! - கோதுமை ரவை கேசரி !

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை