ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 anikuttan

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 ayyasamy ram

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 ayyasamy ram

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 ayyasamy ram

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 ayyasamy ram

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ayyasamy ram

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 T.N.Balasubramanian

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 ayyasamy ram

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

கோழியும் மனிதனும்
 ayyasamy ram

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை - தொடர்பதிவு
 Dr.S.Soundarapandian

நகைச்சுவை – ரசித்தவை
 Dr.S.Soundarapandian

கோவையை தொடர்ந்து மராட்டியத்தில் ரூ.2000, ரூ.500 கள்ள நோட்டுகள் அச்சடிப்பு
 Dr.S.Soundarapandian

கணவன் மனைவ உறவு மேம்பட…
 Dr.S.Soundarapandian

ஆதித்த ஹிருதயம்
 பழ.முத்துராமலிங்கம்

கனடா போலீஸ்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
தமிழ்நேசன்1981
 
anikuttan
 

Admins Online

புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sun Jul 03, 2011 6:07 pm

First topic message reminder :

Nalla Tamil Arivom - purananuru

தமிழ் நூல்களில் பெரும் பிரிவு பதினெண் கீழ் கணக்கு நூல்கள், பதினெண் மேல் கணக்கு நூல்கள். கீழ் கணக்கு நூல்கள் வாழ்விற்கு தேவையான அறத்தையும் நீதி போதனையும் கூறுபவை ஆகும். மேல் கணக்கு நூல்கள் எட்டுத் தொகை, பத்து பாட்டு நூல்கள் ஆகும். எட்டுத் தொகை நூல்களுள் அறம், போர், வீரம் போன்ற புற வாழ்க்கை பற்றி கூறும் நூல் புற நானூறு. மொத்தம் நானூறு பாடல்களை கொண்டது.

தற்காலத்தில் நாம் ஒருவரிடம் உதவி கேட்டு, கேட்டது கிடைத்தால் அவரை பாராட்டுகிறோம். உதவியை மறுத்தாலோ, குறைத்து கொடுத்தோலோ அவரை பற்றி குறை கூறுவோம். அப்படி உதவியை தேடிப்போய் நமக்கு கிடைக்கும் என்று எதிர்பார்த்தது கிடைக்கவில்லை என்றாலும் நாம் அவரை பழிக்கக்கூடாது என்பதை மிக அழகாக இந்த பாடல் உணர்த்துகிறது. தமிழின் இனிமையும், வாழ்வியல் உண்மையும் இந்த சங்கப் பாடல்கள் மிக அழகாக எடுத்து காட்டுகிறது.

பாடல் 1: அதனினும் உயர்ந்தது
பாடியவர் : கழைதின் யானையார்
பாடப்பட்டோன் : வல் வில் ஓரி
திணை : பாடாண் துறை : பரிசில்

ஈஎன இரத்தல் இழிந்தன்று, அதன் எதிர்
ஈயென் என்றல் அதனினும் இழிந்தன்று;
கொள் எனக் கொடுத்தல் உயர்தன்று,
அதன் எதிர்
கொள்ளேன் என்றல் அதனினும் உயர்தன்று;
தெண்ணீர்ப் பரப்பின் இமிழ்திரைப் பெருங்கடல்
உண்ணார் ஆகுப, நீர் வேட்டோரே;
ஆவும் மாவும் சென்று உணக், கலங்கிச்,
சேறோடு பட்ட சிறுமையத்து ஆயினும்
உண்ணீர் மருங்கின் அதர்பல ஆகும்;
புள்ளும் பொழுதும் பழித்தல் அல்லதை
உள்ளிச் சென்றோர் பழியலர்; அதனாற்
புலவேன் வாழியர், ஓரி ; விசும்பின்
கருவி வானம் போல
வரையாது சுரக்கும் வள்ளியோய் ! நின்னே


பொருளுரை:

பிச்சை எடுப்பது இழிவான செயல் இல்லை, அதை விட
இழிவான செயல் பிச்சை இடாமல் இருப்பது
ஒருவனுக்கு கொடுத்தல் உயர்வான செயல் இல்லை, அதை விட
கொடுப்பதை வேண்டாம் என்று மறுத்தல் உயர்வானது
நுரை பொங்கும் கடல் நீர் மிகப் பெரியதாக இருந்தாலும்
தாகம் உள்ளவருக்கு குடிநீராகாது ; ஆனால்
பசுக்களும், மற்ற விலங்குகளும் சென்று நீர் அருந்தி
சேறு நிறைந்த சிறு குளம் ஆனாலும், மனிதர்கள்
தாகத்திற்கு அந்த குளத்து நீரையே அருந்துவர்.
அது போல் மிகப் பெரியவர் பலர் இருந்தாலும்
அவர்கள் கடல் நீரை போன்றவர்கள், எங்களின் துயர் துடைக்க மாட்டார்கள்,
நீ வறுமை அடைந்து வசதி குறைந்து இருந்தாலும்
பலன் எதிர் பார்க்காமல் கொடுக்கும் வானத்து மேகம் போல்
அள்ளி அள்ளி எங்களுக்கு வழங்குவாய்,
ஆனால் இன்று நீ வழங்காது இருப்பது எங்கள் குறையே,
நாங்கள் புறப்படும் வேளையில் பறவை செய்த சகுணங்கள் சரியில்லை,
எங்களின் நேரம் சரியில்லை.
கேட்டவர்க்கு கொடுக்கும் வள்ளல் ஓரியே, நீ நீடோடி வாழ்க


Last edited by சதாசிவம் on Sun May 27, 2012 7:52 am; edited 3 times in total
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down


Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by அ.இராஜ்திலக் on Sat Nov 12, 2011 2:42 pm

அரிய பதிவு பாராட்டுகள்

அ.இராஜ்திலக்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 279
மதிப்பீடுகள் : 50

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by ராஜா on Sat Nov 12, 2011 3:37 pm

நல்ல முயற்சி சதாசிவம் அய்யா , விரைவில் அனைத்து பக்கங்களையும் படித்துவிட முயல்வேன். [You must be registered and logged in to see this image.]
avatar
ராஜா
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 30941
மதிப்பீடுகள் : 5605

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sat Nov 12, 2011 5:27 pm

[You must be registered and logged in to see this link.] wrote:அரிய பதிவு பாராட்டுகள்

உங்கள் பாராட்டுக்கு நன்றி
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sat Nov 12, 2011 5:29 pm

[You must be registered and logged in to see this link.] wrote:நல்ல முயற்சி சதாசிவம் அய்யா , விரைவில் அனைத்து பக்கங்களையும் படித்துவிட முயல்வேன். [You must be registered and logged in to see this image.]

நன்றி,
தமிழின் பெருமையும் தமிழரின் பெருமையும் சொல்லும் சிறந்த நூல் புறநானூறு.
அனைத்து தமிழர்களும் படித்து அறிய வேண்டிய அருமையான நூல் இது.
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sat Dec 10, 2011 9:36 pm

தமிழ் முதியவளின் வீரம்

தமிழ்நாட்டில் ஆண்கள் மட்டுமா வீரத்தில் சிறந்தவர்கள் ?, வீரத்தில் பங்கு அளிப்பவர்கள் அவர்கள் மட்டுமா?. வீர மகனைப் பெற்று அவனை போருக்கு அனுப்பும் தாயும் கூட சிறந்தவள் தான். அப்படி ஒரு சிறந்த தாயின் வீர மரபை பற்றிக் கூறும் அழகான பாடல் இந்தப் புறப்பாடல். அந்த காலத்தில் போருக்கு செல்வதில் சில மரபுகள் இருந்தது. போருக்கு ஆள் தேர்ந்தெடுப்பதிலும், அவர்களை போர் முனையில் நிறுத்தி வைக்கும் முறையிலும் தமிழன் மனிதத்தன்மையுடன் தான் இருந்தான். அதாவது திருமணம் ஆகி குழந்தை பெறாதவர், வீட்டுக்கு ஒரேப் பிள்ளையாக இருப்பவர்கள், வயது முதிர்தோர் ஆகியவர்களை போரில் முதல் வரிசையில் நிற்க வைக்காமல், அல்லது முதல் நாள் போரில் கலந்து கொள்ளச் செய்யாமல், போர் தொடர்ந்து நடைபெற்று மற்ற ஆட்கள் இறந்து மேலும் ஆட்கள் தேவைப்படும் சூழ்நிலையில் மட்டுமே அவர்கள் போரில் நிறுத்தப்பட்டனர். இது தான் தமிழ் மண்ணின் மரபு. அப்படி ஒரு பாடலின் சிறப்பைக் காண்போம்.

பாடல் 19: பெரிது உவந்தனளே (புறம் : 278)
பாடியவர் : காக்கைப்பாடினார் நச்செள்ளையார்
திணை : தும்பை துறை : உவகைக் கலுழ்ச்சி

'நரம்பு எழுந்து உலறிய நிரம்பா மென் தோள்,
முளரி மருங்கின், முதியோள் சிறுவன்
படை அழிந்து, மாறினன்' என்று பலர் கூற,
மண்டு அமர்க்கு உடைந்தனன் ஆயின், உண்ட என்
முலை அறுத்திடுவென், யான்' எனச் சினைஇ,
கொண்ட வாளொடு படு பிணம் பெயரா,
செங்களம் துழவுவோள், சிதைந்து வேறு ஆகிய
படு மகன் கிடக்கை காணூஉ,
ஈன்ற ஞான்றினும் பெரிது உவந்தனளே!


பொருள் விளக்கம்

நரம்பு தெரியும் அளவுக்கு மெலிந்த தோள்கள், தாமரை இலை போல் மெலிந்த ஒட்டிய வயிறை உடைய முதியவளின் சிறு மகன், போரில் தோற்றுப் போனான், புற முதுகு காட்டி ஓடி இறந்தான் என்று பலர் கூற, அப்படி அவன் இறந்திருந்தால் அவனுக்கு பால் கொடுத்த இந்த மார்பகத்தை அறுத்து எறிவேன் என்று கையில் வாளைக் ஏந்திக் கொண்டு மகன் இறந்து இருக்கும் இடம் சென்றாள். இரத்தம் சிதறி சிகப்பு கம்பளம் விரித்தது போல் சிவந்து கிடந்த போர்க்களத்தில் மகனின் உடலைத் தேடுகிறாள். தன் மகன் சிதைந்து இரு துண்டுகளாய் ஆன உடலைக் கண்டு பதறுகிறாள், அந்த உடல் மார்பில் பாய்ந்த வேலால் சிதைந்து அந்த வேல் முதுகை கிழித்து தான் உடலை இரண்டு துண்டாக்கி உள்ளது. என் மகன் புறமுதுகு காட்டி இறக்கவில்லை. அவனைப் பெற்ற பொழுது அடைந்த மகிழ்ச்சியை விட இப்பொழுது தான் நான் பெரிது மகிழ்கிறேன்.


பாடலின் சிறப்பு.


பல நாட்கள் குழந்தை இல்லாமல் வயது முதிர்ந்த நிலையில் பிறந்த மகன் என்று இந்த பாடல் இலைமறை காயாக கூறுகிறது. தாயை தோள் மெலிந்த வெள்ளை முடி உள்ளவளாகவும், மகனை சிறுவனாகவும் கூறுவதால் வயதான பெண்ணின் இளம் வயது மகன் என்று பொருள் படுகிறது. இப்படி வீட்டுக்கு ஒரே பிள்ளையாக இருக்கும் மகனையும் போரில் இழந்ததை நினைத்து வருத்தப்படாமல் அவன் புறமுதுகு காட்டி இறந்து விட்டான் என்று பிறர் கூறுவதை கேட்டுப் பொறுக்க முடியாமல், என் மகன் அப்படி இறக்க மாட்டான், அவனுக்கு நான் வீர்ப்பால் அல்லவா ஊட்டினேன்.அப்படி இறந்திருந்தால் அவனுக்கு பாலூட்டிய என் தனங்களை அறுத்து எறிவேன் என்று சூளுரைத்து அவன் இறந்த உடலை கண்டு மார்பில் பாய்ந்த வேல் தான் அவன் நெஞ்சைக் கிழித்து முதுகில் வெளி வந்து இருக்கிறது. என் மகன் புறமுதுகு காட்டவில்லை என்று பெருமைப்படும் கூறும் தமிழ் நாட்டுத் தாயின் பாடல் இது.


வயது முதிர்ந்தவள் இப்படி என்றாள், தமிழ் இளையவள் எப்பை இருப்பாள். வீட்டில் இருக்கும் ஒவ்வொரு ஆண்மகனையும் போருக்கு அனுப்பும் பெண்ணின் வீரத்தை அடுத்த பாடலில் காண்போம்.


புறம் வளரும்
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by பிஜிராமன் on Sat Dec 10, 2011 10:47 pm

பள்ளி நாடகங்களில் பார்த்த இந்த கதையை, உங்கள் வரிகள் மூலம், உட்கருத்தோடு படித்தது, மிகவும் நன்று ஐயா.......மிக்க நன்றிகள் புன்னகை நன்றி
avatar
பிஜிராமன்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6199
மதிப்பீடுகள் : 1772

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sat Dec 17, 2011 4:17 pm

தமிழ் இளையவளின் வீரம்

வீரம் என்பது பிறப்பில் வரவேண்டும். வழி வழியாக இரத்தத்தில் ஊறி வருகிறது. எல்லைகள் காக்க வீரம், கௌரவம் காக்க வீரம், பெருமைக்கு வீரம், ஆண்மையை வெளிப்படுத்த வீரம், பெண்மையை கவர வீரம் என்று வீரம் பல காரணங்களில் வெளிப்படுகிறது. ஒரு குடும்பம் சுழல ஆண், பெண் என்ற இரண்டு சக்கரங்கள் தேவை. அது போல் நாடு வளம் பெற ஆண் பெண் என்ற இரண்டு பேரும் வேண்டும். நாடு வளம் பெற, வளம் பெற்ற நாடு பிறர் வசம் வீழாமல் இருக்க வீரம் வேண்டும். வீரம் ஆண் பெண் என்ற இரண்டு பேருக்கும் வேண்டும். அப்படி இருவருக்கும் இருக்கும் போது தான் விதைக்கும் விதை வீறுகொண்டு வீரத்தோடு இருக்கும். இப்படி ஒரு வீரத்தில் விளைந்த ஒரு இளையவளின் பெருமையை பாடும் புறப் பாடல் இது. வயதில் இளையவளாக இருந்தாலும் இவளை மூத்தாள், மூத்த குடியில் பிறந்தவள் என்று இந்த பாடல் பெருமையுடன் கூறுகிறது.

பாடல் : செல்கென விடுமே (புறம் 279)
பாடியவர் : ஒக்கூர் மாசாத்தியார்
திணை : வாகை துறை : மூதின் முல்லை

கெடுக சிந்தை; கடிது இவள் துணிவே;
மூதில் மகளிர் ஆதல் தகுமே:
மேல்நாள் உற்ற செருவிற்கு இவள் தன்னை,
யானை எறிந்து, களத்து ஒழிந்தனனே;
நெருநல் உற்ற செருவிற்கு இவள் கொழுநன்,
பெரு நிரை விலங்கி, ஆண்டுப் பட்டனனே;
இன்றும், செருப் பறை கேட்டு, விருப்புற்று, மயங்கி,
வேல் கைக் கொடுத்து, வெளிது விரித்து உடீஇ,
பாறு மயிர்க் குடுமி எண்ணெய் நீவி,
ஒரு மகன் அல்லது இல்லோள்,
செருமுகம் நோக்கிச் செல்க' என விடுமே!


பொருள் விளக்கம்

இவள் சிந்தை கொடியது, கடுமையானது இவள் துணிவு. மூத்த மகள் என்று கூற தகுதி உடையவள் இவள். முதல் நாள் போரில் இவளுடைய தந்தை போரில் யானை தூக்கி எறிந்து இறந்தான். நேற்று நடந்த போரில் இவள் ஆசைக் கணவன் பசு நிரைகளைக் மீட்கச் சென்று இறந்து போனான். இன்று போர் முரசைக் கேட்டு, தெருவில் பரட்டை தலையோடு விளையாடும் தன் ஒரே மகனை, வீட்டில் இருக்கும் ஒரே ஆண் மகனை அழைத்து எண்ணை இட்டு, போர் அலங்காரம் செய்து,கையில் வேல் கொடுத்து விருப்பத்துடன் போருக்குச் செல் என்று அனுப்பி வைக்கிறாள். என்னே இவள் துணிவு. இவள் துணிவு பெருமை மிக்கது. இவள் மூத்தோள் என்று கூறத் தகுதியானவள் தான்.

பாடலின் சிறப்பு

அன்றைய தமிழகத்தில் போருக்கு செல்வது இவ்வளவு பெருமைப் பட வேண்டிய விஷயமாக கருதப்படுகிறது. பெருமை உள்ளவரைத் தான் பெண் விரும்புகிறாள். ஒவ்வொரு காலத்திலும் சிறப்பும் பெருமையும், வசதியும் உள்ளவரை தான் பெண் விரும்புகிறாள். இரண்டாம் உலகப் போரின் போது ஐரோப்யாவில் உள்ள ஜெர்மன், ஃபிரான்ஸ் போன்ற நாடுகளில் போர் வீரர்களுக்கு என்று தனி மரியாதை இருந்தது, தன் காதலன் போர் வீரன் என்று கூறுவது பெருமை மிக்கதாய் இருந்தது. இன்று விளையாட்டு வீரர்களை, சினிமாக்காரர்களை நாம் எப்படி கொண்டாடுகிறோம், அதைப் போல் பழைய காலம் முதல் இரண்டாம் உலகப் போர் நடக்கும் வரை சமுதாயத்தில் போர் வீரர்களுக்கு தனி மரியாதை இருந்தது, அவர்களை கொண்டாடி வந்தோம். ஆனால் இன்று ஒரு சினிமாவில் கேமராவிற்கு பின்னால் இருக்கும் களைஞர்கள் பேர் கூட நமக்குத் தெரிகிறது. பிரபல கிரிக்கெட் வீரர் காலையில் டீ சாப்பிடுவாரா, காபி சாப்பிடுவாரா என்றும் தெரிந்திருக்கிறது. ஆனால் இந்தியாவின் முப்படை தளபதியின் பெயரைக் கேட்டால் தெரிவதில்லை. இது தான் இன்றைய வீரம். போரில் இறந்து ஒருவரைப் பற்றி தினசரி பத்திரிக்கையில் வரும் வரை நாம் போர் வீரர்களை நினைப்பதில்லை.

இப்படி வீர மரணம் அடையும் வீரனுக்கு நம் தமிழ் மண் என்ன மரியாதை செய்தது, அடுத்த பாடலில் பாப்போம்.

புறம் வளரும்.avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sat Dec 31, 2011 10:00 am

வருமா வீர மரணம்

போர் களத்தில் புறமுதுகு காட்டாமல் வீரத்தோடு சண்டை போட்டு வெற்றிப் பெறுவது நம் தமிழ் வீரனின் விருப்பம். எதற்காக இப்படி செய்கிறான். நாட்டுப் பற்றும், ஆண்மைத் திறனின் வெளிப்பாடும், வெற்றியும், வீரக் களிப்பும், விருந்தும், புகழ் மாலையும் தான் ஒரு வீரனை போற்களம் நோக்கிச் செலுத்துகிறது. இப்படி போற்களம் செல்லும் வீரனுக்கு நம் தமிழ் மன்னன் செய்யும் மரபு என்ன. இன்று ராணுவத்தில் வீர மரணம் அடைந்து உள்ள வீரனுக்கு தேசியக் கொடி போர்த்துவது புதிதல்ல, பன்னெடுங்காலமாக உள்ள வழக்கத்தின் தொடர்ச்சி தான் இது என்பதை இந்த பாடல் மூலம் அறியலாம்.

பாடல் 21 : பலர் மீது நீட்டிய மண்டை (பாடல் 286)
பாடியவர் : ஔவையார்
திணை கரந்தை; துறை வேத்தியல்.

வெள்ளை வெள் யாட்டுச் செச்சை போலத்
தன் ஓரன்ன இளையர் இருப்ப,
பலர் மீது நீட்டிய மண்டை என் சிறுவனைக்
கால் கழி கட்டிலில் கிடப்பி,
தூ வெள் அறுவை போர்ப்பித்திலதே!


பொருள் விளக்கம்

வெள்ளை ஆட்டுக் கிடாய் போல் வரிசையாக வீரர்கள் பலர் நிற்க இந்த சிறு வயதுள்ள வீரனின் சிறப்பான செயல் கண்டு அவனுக்கு மன்னனே மண்டையில் (ஒரு வகையான கிண்ணம், வொய்ன் கிலாஸ் போல) கள் கொடுத்து சிறப்பு செய்தான். இது அவனுக்கு உற்சாகம் அளிக்கிறது. இந்த உற்சாகம் அவனுக்கு திடம் அளித்து போற்களம் செல்லச் செய்கிறது. காலில்லாத கட்டிலாகிய பாடையில் கிடத்தி அவன் உடல் மேல் வெள்ளை ஆடை போர்த்த இன்னும் அவன் வீர மரணம் அடையவில்லை. இதுவே அவனுக்கு வருத்தத்தை தருகிறது.

பாடலின் சிறப்பு

மூப்பு, நோய் வந்து இறப்பதை சுத்த தமிழ் வீரன் விரும்பவில்லை. போற்களம் சென்று வீர மரணம் அடைவதை தான் விரும்பினான் என்று இந்த பாடல் உணர்த்துகிறது. பரம் வீர் ஸக்ரா விருந்து வாங்கிய ராணுவ வீரனை ஜனாதிபதியும் எழுந்து வரவேற்க வேண்டும் என்று இன்று உள்ள வழக்கமும் இது போன்ற ஒரு மரபில் இருந்து வந்தது தான்.

மாரத்தான் ஓட்டத்தில் வெற்றி பெற்ற வீரனுக்கு மன்னன் கொடுக்கும் பரிசு ஆலிவ் மர சிறு இலை தான், ரோமானிய வீர விளையாட்டில் வெற்றி பெரும் வீரனுக்கு மன்னன் செய்யும் மரியாதை சிறுகையசைப்பும், விருந்து உபசாரமும் தான். பரிசு சிறுசு, ஆனால் அது தரும் உற்சாகம், கௌரவம் பெருசு, இதற்கு உயிரை விடவும் வீரர்கள் தயாராகி விடுகின்றனர். இன்று பணிசெய்பவர்கள் தங்களின் கீழ் சிறப்பாக பணி செய்பவர்களுக்கு தனி மரியாதை செய்ய வேண்டும் என்று நமக்கு கற்றுத்தரும் பாடல் இது.

தொடரும்


Last edited by சதாசிவம் on Sat Dec 31, 2011 10:24 am; edited 1 time in total
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by Dr.சுந்தரராஜ் தயாளன் on Sat Dec 31, 2011 10:11 am

மிகவும் அருமை.... மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
Dr.சுந்தரராஜ் தயாளன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 5306
மதிப்பீடுகள் : 1843

View user profile http://sundararajthayalan.com/

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Mon Jan 02, 2012 11:12 am

[You must be registered and logged in to see this link.] wrote:மிகவும் அருமை.... மகிழ்ச்சி மகிழ்ச்சி

மிகவும் நன்றி ஐயா
நன்றி அன்பு மலர்
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Wed Jan 18, 2012 6:19 pm

யாருக்கு முதல் மரியாதை

போரில் ஆண்கள் அனைவரும் தான் ஈடுபடுகின்றனர். இப்படி ஈடுபடுபவர்கள் அனைவருக்கும் ஒரே மரியாதை தான் கிடைக்கிறதா. இல்லை என்று தான் சொல்ல வேண்டும். தமிழ் பாடல்கள் வாயிலாக பார்க்கும் போதும், இன்றுள்ள தலைவர்கள் போல் இல்லாது, அன்றைய மன்னர்கள் வீரத்துடன் நேரடியாக பேரில் பங்கு பெற்றனர். இப்படி பங்கு பெரும் மன்னனின் உயிர் மிகவும் மதிப்பு மிக்கதாக இருந்தது. போரில் ஈடுபடும் மன்னனைக் காக்க தனி மெய்க் காவல் படை வீரர்கள் இருந்தனர். இவர்கள் வழிவழியாக (பரம்பரை பரம்பரையாக) மன்னனின் உயிர் காக்கும் பணியில் ஈடுபட்டு இவர்கள் உயிர் இழந்து மன்னனின் உயிரை காப்பாறி உள்ளனர். பொன்னியின் செல்வனிலும் கல்கி வேளாளப்படை பற்றிய குறிப்புகளைச் சொல்கிறார். இவர்களுக்கு அரசனிடமும், அரண்மனையிலும் தனி மரியாதை இருந்ததாக கூறப்படுகிறது. உயிரைத் துச்சமாக மதித்து மன்னனின் உயிரை காப்பதாலும், இவர்களில் பெரும்பாலும் அற்ப ஆயுளில் போரில் இறந்து விடுவதாலும் இந்த சலுகைகள் அவர்களுக்கு வழங்கப்பட்டது. இப்படி உள்ள வீரனுக்கு முதல் மரியாதை, முதல் சலுகைகளை மன்னன் வழங்கினான், வழங்க வேண்டும் என்பதை இந்த புறப் பாடல் நமக்கு எடுத்துக் கூறுகிறது.

பாடல் 22: மறப்புகழ் நிறைந்தோன் (பாடல் 290)
பாடியவர் :ஔவையார்
பாடப்பட்டோன் பற்றிய குறிப்பு பாடலில் இல்லை
திணை : கரந்தை துறை : குடிநிலை உரைத்தல்

இவற்கு ஈத்து உண்மதி, கள்ளே; சினப் போர்
இனக் களிற்று யானை, இயல் தேர்க் குருசில்!
நுந்தை தந்தைக்கு இவன் தந்தை தந்தை,
எடுத்து எறி ஞாட்பின் இமையான், தச்சன்
அடுத்து எறி குறட்டின், நின்று மாய்ந்தனனே;
மறப் புகழ் நிறைந்த மைந்தினோன் இவனும்,
உறைப்புழி ஓலை போல,
மறைக்குவன் பெரும! நிற் குறித்து வரு வேலே


பொருள் விளக்கம்

முதலில் இவனுக்கு கள்ளை கொடு, குடித்து மகிழட்டும். அன்று நடந்த பெரும் சேதத்தை விளைவித்த போரில், ஆண் யானை மேல் இருந்த ஒருவன் அழகான தேரில் அமர்ந்து இருந்த உன் பாட்டன் மேல் (தந்தையின் தந்தை) எறிந்த அம்புகளை எறியும் போது , இந்த வீரனின் பாட்டன் (தந்தையின் தந்தை) கண் இமைக்காமல் தச்சனின் ஆரச் சக்கரக் குடம் (கேடயம்) போல் தடுத்து உயிர் விட்டான். அந்த புகழ் நிறைந்த வீரப் பரம்பரையில் வந்த மறக் குடியில் பிறந்த வீரன் இவன்.

பனை ஓலையில் செய்யப்பட்ட குடை மழையைத் தடுப்பது போல் இவன் உன் மேல் பகைவர் பொழியும் வேல்களைத் தடுப்பான். உனக்கு இவன் மெய்க்காப்பாலனாக இருப்பான். குடி மரபு இது. இவனுக்கு முதலில் சிறப்பு செய்க. கள் வார்த்துக் கொடு, இவனே முதல் மரியாதைக்குரியவன்.

இப்படி மன்னன் கொடுக்கும் கள்ளுக்கா இவன் ஆசைபடுகிறான். இப்படி உள்ள வீரன் ஆசைப்படுவது என்ன, அடுத்த பாடலில் காண்போம்.

புறம் வளரும்


avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sun Jan 22, 2012 1:04 pm

தமிழ் வீரனின் ஆசை

மன்னனிடம் முதல் மரியாதை வாங்குவது மிகச் சிறந்த வீரனின் ஆசை. இப்படி முதல் மரியாதையில் மன்னன் கையில் கிடைக்கும் கள்ளுக்காகவா ஒரு சுத்த வீரன் ஆசைபடுகிறான் ? நன்கு படித்த மாணவன் எப்போது தேர்வு வரும், முதல் மதிப்பெண் எடுக்கலாம் என்று காத்து இருப்பான், நன்கு கவிதை புனையும் கவிஞன் எப்போது கவிதைப் போட்டி வரும் என்று காத்து இருப்பான். அதுபோல் சுத்த வீரன் காத்திருப்பது அவன் வீரத்தை நிரூபிக்க வாய்ப்பு கிடைக்கும் போர்க்களத்தை தான். அப்படி ஒரு தமிழ் வீரன் ஆசைப் படுவது போர்க்களமே என்று இந்தப் புறப் பாடல் கூறுகிறது.


பாடல் 22:
ஆயும் உழவன் (பாடல் 289)
பாடியவர் : கழாத்தலையார்
திணை , துறை : கிடைக்கவில்லை

ஈரச் செவ்வி உதவினஆயினும்,
பல் எருத்துள்ளும் நல் எருது நோக்கி,
வீறு வீறு ஆயும் உழவன் போல,
பீடு பெறு தொல் குடிப் பாடு பல தாங்கிய
மூதிலாளருள்ளும், காதலின்
தனக்கு முகந்து ஏந்திய பசும் பொன் மண்டை,
'இவற்கு ஈக!' என்னும்; அதுவும் அன்றிசினே;
கேட்டியோ வாழி பாண! பாசறை,
'பூக் கோள் இன்று' என்று அறையும்
மடி வாய்த் தண்ணுமை இழிசினன் குரலே?


பொருள் விளக்கம்

ஈரம் மிகுந்த வளமான செழிப்பான வயல்களாக இருந்தாலும், அதில் விளைவிக்க உழவு செய்ய வேண்டும். பல எருதுகள் இருந்தாலும், நன்கு கடினமாக உழைக்கும், பலம் பொருந்திய எருதுகளைத் தேடித் தேடி தேர்ந்தெடுக்கும் உழவனைப் போல், பெருமை பல உள்ள பரம்பரையில் உதித்த வீரம் நிறைந்த வீரர்கள் பல இருந்தாலும் அதில் சிறந்து விளங்கும், இவனை அன்பினால் கௌரவித்து கள் அளித்து நாட்டு அரசன் சிறப்பித்தான். இவனுக்கே மதுவை முதலில் தருக என்று ஊக்குவித்தான்.

பாடல் பாடும் பாணனே இதை கண்டு வியக்கிறாய். அதோ பூ கொள்க என்று பறை அறைந்து தெரிவிக்கும் போர்ச் செய்தி கேட்டாயா !!!அவனுக்குக் கள் பெரிதன்று களமே பெரிது.

பாடலின் சிறப்பு

வயல் வளமாக இருந்தாலும் அதை உழுதால் தான் வயல் செழிப்படையும். அது போல் ஒரு நாடு எத்தனை வளமுடன் இருந்தாலும், அந்த நாட்டைக் காக்க போர் வீரர்கள் அவசியம் என்று அழகிய உதாரணத்துடன் விளக்குகிறது.

ஒலிம்பிக் செல்ல நினைக்கும் விளையாட்டு வீரன் உள்ளாட்டு சிறு விளையாட்டுகளில் சிறந்து விளங்கினால் மட்டுமே மேலும் மேலும் வளர்ந்து ஒலிம்பிக் செல்ல முடியும். ஒரு சிறந்த விளையாட்டு வீரனைத் தேர்ந்தெடுத்து தான் பெரிய போட்டிக்கு அனுப்புகிறார்கள். அது போல் தான் போரும், வீரத்தில் சிறந்து விளங்கி, உயிரை துச்சமாக நினைக்கும், நாட்டின் மேல் பற்று இருக்கும் மிகச் சிறந்த தமிழ் வீரனைத்தான் போர்க்களம் அனுப்பியதாக இந்த பாடல் மூலம் அறியலாம். சுத்த தமிழ் வீரன் வெறும் விருத்துக்கும் கேளிக்கைகளுக்கும் கள்ளுக்கும் ஆசைபடவில்லை. அவன் ஆசைப்படுவது போர்க்களமே என்று இந்த பாடல் அழகாகக் எடுத்துக் கூறுகிறது.

தொடரும்.....
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sun Feb 05, 2012 6:13 pm

சொன்ன சொல் தவறாதவன்

போர்க்களம் செல்லும் வீரன் விரும்புவது வெற்றியைத் தான். இன்று ஒவ்வொரு விளையாட்டு வீரன் குறித்து நாம் எவ்வளவு பெருமைப்படுகிறோம்.இவர் விளையாட்டு களத்தில் நுழைந்தால் கண்டிப்பாக சதம் அடிப்பார். குழுவின் வெற்றிக்கு இவரே காரணம் என்று. இப்படி கூறும் விளையாட்டு வீரனை விட உயிரை துச்சமாக நினைத்து காலம் சென்று போரிடம் வீரன் மிகச் சிறந்தவன். தமிழ் மரபில் இருக்கும் ஒரு வழக்கம் சூளுரைத்தல், ஒன்றைச் செய்வேன் என்று சபதம் செய்தல். மகாபாரத் போரிலும் தன் மகன் அபிமன்யுவைக் கொன்றவனை மறுநாள் சூரிய அஸ்தமனம் முன்பு கொள்வதாக அர்ஜுனன் சபதம் செய்கிறான். இப்படி ஒரு சபதம் செய்த வீரனைப் பற்றிய புறப்பாடல் இது. ஒருவர் சபதம் செய்யும் போது அவனின் சொன்ன சொல் தவறாத தன்மையை கேள்விப்பட்டு எதிரிகள் பயப்படுகிறார்கள். அந்தப் பாடலை இப்போது காண்போம்.

பாடல் 23: எம்முன் தப்பியோன் (புறம் 304)
பாடியவர் : அரிசில்கிழார்
திணை : தும்பை துறை : குதிரை மறம்

கொடுங் குழை மகளிர் கோதை சூட்டி,
நடுங்கு பனிக் களைஇயர் நார் அரி பருகி,
வளி தொழில் ஒழிக்கும் வண் பரிப் புரவி
பண்ணற்கு விரைதி, நீயே; 'நெருநை,
எம்முன் தப்பியோன் தம்பியொடு, ஒராங்கு
நாளைச் செய்குவென் அமர்' எனக் கூறி,
புன் வயிறு அருத்தலும் செல்லான், வன் மான்
கடவும் என்ப, பெரிதே; அது கேட்டு,
வலம் படு முரசின் வெல் போர் வேந்தன்
இலங்கு இரும் பாசறை நடுங்கின்று


பொருள் விளக்கம்

ஏவலனே (ஏவல் செய்வபனே = வேலைக்காரன்) காதில் அழகிய குழைகள் (கம்மல்) அணிந்த மகளிர் உனக்கு மாலை சூட்டிப் பின் அவர்கள் வார்த்துக் கொடுக்கும் கள்ளை குளிர் நீக்க பருகுக. காற்றுக்கு தொழில் எதிர்ப்பு விசையை ஏறுபடுத்துதல், அப்படி எதிர்க்கும் காற்றின் தொழிலை ஒழிக்கும் வண்ணம் காற்றைக் கிழித்து கொண்டு செல்லும் வலிமையான குதிரையை தேர்ந்தெடுத்து கொடுத்தவுடன் அதனை போருக்கு அலங்கரித்து தயாராக வைக்க என்று உனக்கு கட்டளையிட்டுள்ளான்.

எனக்கு மூத்தவனை கொன்றவனையும், அவனது தம்பியையும் ஒன்றாக நாளை போரில் கொல்வேன், என்று அந்த எதிரிகள் மேல் சூளுரைத்துள்ளான். பசிக்கும் வயிறுக்கு உணவு உண்ணக் கூடச் செல்லவில்லை, குதிரைப் கொட்டகையில் இருந்த பல குதிரைகளில் நல்ல திறமையான குதிரையை தேர்ந்தெடுப்பதில் மும்முரமாக இருக்கிறான்.

இவன் சூளுரைத்ததை ஒற்றன் மூலம் கேட்டுத் தெரிந்த பகை மன்னனின் பாசறையில் இருந்த வீரர்கள் நடுங்குகிறார்கள். அவன் சொன்ன சொல் தவறான். சொன்னைத் செய்பவன் கண்டிப்பாக அவன் சொன்னது போல் நம் மன்னனைக் கொல்வான் என்று கூறியவாறே நடுங்குகிறார்கள்.

பாடலின் சிறப்பு:

ஒரு நாட்டில் பேசும் செய்தி அறிந்து அதை அடுத்த நாட்டில் உள்ள தன் மன்னனுக்குச் சொல்லும் ஒற்றர்களின் திறமையை இந்தப் பாடல் புலப்படுத்துகிறது. சொன்னச் சொல் தவறாதவன் என்று கூறும் போது அந்த மன்னனின் திறமை, இதற்கு முன் செய்த செயல்கள், அவனது வரலாறு இந்த ஒற்றனுக்கும், எதிரிப் படை வீரர்களுக்கும் தெரிந்து இருக்கிறது.

தொடரும்
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by T.PUSHPA on Sun Feb 05, 2012 6:25 pm

"சொன்ன சொல் தவறாதவன்" மட்டும் தான் படித்தேன். அருமையாக இருக்கிறது. மற்றவைகளையும் படிக்கிறேன். நன்றி. தொடருங்கள்....
avatar
T.PUSHPA
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 96
மதிப்பீடுகள் : 6

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sun Feb 05, 2012 8:28 pm

[You must be registered and logged in to see this link.] wrote:"சொன்ன சொல் தவறாதவன்" மட்டும் தான் படித்தேன். அருமையாக இருக்கிறது. மற்றவைகளையும் படிக்கிறேன். நன்றி. தொடருங்கள்....

நன்றி தோழி,

வாசியுங்கள் நம் பழம் பெரும் பெருமை வாய்ந்த தமிழ்பாட்டன் பாடிய பாடல்களை வாசியுங்கள்.


avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by கபாலி on Sun Feb 05, 2012 9:28 pm

மிகச்சிறந்த திரி. நான் முதலில் இருந்து வாசித்து என் கருத்துகளைக் கூறுகிறேன் நண்பரே..

கபாலி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 578
மதிப்பீடுகள் : 75

View user profile http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by கபாலி on Sun Feb 05, 2012 9:49 pm

முதல் பக்கம் வாசித்தேன் நண்பரே... ஔவையின் பாடலும் கடமைகள் குறித்த புறநானூற்றுப் பாடல்களின் பொருள் விளக்கம் மிக அருமை.

சில அருஞ்சொற்களின் பொருளைக் கீழே தந்தால் இன்னும் பயனுடையதாக இருக்கும்.

நான் வேண்டுமானால் உதவத்தயார். என் சிற்றறிவுக்கு ஏற்ப பொருள் தருவேன்.

இன்னும் பிற பக்கங்களைத் தொடர்கிறேன்.

ஈகரையின் தலை சிறந்த திரிகளில் இதுவும் ஒன்று. நன்று.

கபாலி
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 578
மதிப்பீடுகள் : 75

View user profile http://உங்கள் இதயம் தான்..

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by அசுரன் on Sun Feb 05, 2012 9:56 pm

அந்த காலத்தில் சொன்ன சொல் தவறாதவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை நினைக்கையில் மிகவும் பிரம்மிப்பாக உள்ளது. இப்ப இருக்குறவங்களை நினைச்சா சிரிப்பு சிரிப்பா வருது புன்னகை

அருமையான விளக்கம் சதாசிவம் - பாராட்டுகள்
avatar
அசுரன்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 11642
மதிப்பீடுகள் : 2861

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Mon Feb 06, 2012 11:23 am

[You must be registered and logged in to see this link.] wrote:முதல் பக்கம் வாசித்தேன் நண்பரே... ஔவையின் பாடலும் கடமைகள் குறித்த புறநானூற்றுப் பாடல்களின் பொருள் விளக்கம் மிக அருமை.

சில அருஞ்சொற்களின் பொருளைக் கீழே தந்தால் இன்னும் பயனுடையதாக இருக்கும்.

நான் வேண்டுமானால் உதவத்தயார். என் சிற்றறிவுக்கு ஏற்ப பொருள் தருவேன்.

இன்னும் பிற பக்கங்களைத் தொடர்கிறேன்.

ஈகரையின் தலை சிறந்த திரிகளில் இதுவும் ஒன்று. நன்று.

நன்றி கபாலி,

அருஞ்சொற் பொருளைத் தந்தால் பள்ளிக்கூட உரை படிப்பது போன்ற மாயை இருக்கும் என்று கருதியதால் சேர்க்கவில்லை. பாடலின் பொருளைப் படித்து பாடலை ஒருமுறை வாசித்து உணர வேண்டும் என்பதால் இந்த முறையைக் கையாண்டுள்ளேன்.

உங்கள் பங்களிப்பும் தாருங்கள்.அருஞ்சொற் பொருள் இணைக்க எனக்கு ஆட்சேபனை இல்லை.
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Mon Feb 06, 2012 11:24 am

[You must be registered and logged in to see this link.] wrote:அந்த காலத்தில் சொன்ன சொல் தவறாதவர்கள் இருந்திருக்கிறார்கள் என்பதை நினைக்கையில் மிகவும் பிரம்மிப்பாக உள்ளது. இப்ப இருக்குறவங்களை நினைச்சா சிரிப்பு சிரிப்பா வருது புன்னகை

அருமையான விளக்கம் சதாசிவம் - பாராட்டுகள்

நன்றி அசுரன்
சூப்பருங்க
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sun Feb 19, 2012 1:04 pm

போர்வீரனின் பொருளாதார நிலைமை

நாட்டுக்கு போர் பல புரிந்து, பல பதக்கங்கள் பெற்றாலும், பெருமைகளை வென்றாலும் போர் வீரர்களின் பொருளாதார நிலைமை பின் தங்கி தான் உள்ளது. போர், போர்ப்பயிற்சி, விளையாட்டு, கேளிக்கை என்று அவனது காலம் செல்வதால் பொருளாதார தேவைகளை நிறைவேற்றும் பணம் சம்பாதிக்கும் எண்ணம் குறைந்துவிடுகிறது. அல்லது நம் நாடு, நம் மக்கள் நம்மை அரசு கவனிக்கும் என்று எண்ணி தங்களை கவனிக்க விட்டு விடுகின்றனர். போரில் வீரத்துடன் போரிடும் வீரனுக்கு வழங்கப்படும் சலுகைகள் பெரும்பாலும் போர்முனை பாரா போர்வீரனுக்கோ, அல்லது அங்கு ராணுவத்தில் வேலை செய்யும் வேறு வகை பணியாளர்கள் தான் அனுபவிக்க வேண்டிய சூழல் அமைகிறது. பிணங்களில் சட்டை பைகளிலும் காசு கிடைக்குமா என்று எண்ணும் மனிதனைப் போல், சிலநேரங்களில் இவர்களின் சலுகைகளிலும் ஊழல் செய்து பணம் பறிக்கும் அரசியல்வாதிகள் தான் இன்று நிலவுகிறது. அன்றைய தமிழகத்தில் ஊழல் இல்லையென்றாலும் வீரத்துடன் போரிட்ட தமிழக வீரன் பணம் பொருளுக்கு ஆசைப்படவில்லை, தன் சுய தேவைக்கு வேண்டிய பணத்தையும் சம்பாதிக்கவில்லை என்று இந்தப் பாடல் கூறுகிறது. தனக்கு கிடைத்ததையும் அடுத்தவருக்கு கொடுத்து, பிறரிடம் இருந்து கடன் வாங்கி தன் குடும்பத்தை காக்கும் போர் வீரனின் நிலைமையை இந்த புறப்பாடல் எடுத்துக் கூறுகிறது.

பாடல் 24: வரகின் குப்பை (புறம் 327)
பாடியவர் : பெயர் தெரியவில்லை
திணை : வாகை துறை : மூதின் முல்லை

எருது கால் உறாஅது, இளைஞர் கொன்ற
சில் விளை வரகின் புல்லென் குப்பை,
தொடுத்த கடவர்க்குக் கொடுத்த மிச்சில்
பசித்த பாணர் உண்டு, கடை தப்பலின்,
ஒக்கல் ஒற்கம் சொலிய, தன் ஊர்ச்
சிறு புல்லாளர் முகத்து அவை கூறி,
வரகு கடன் இரக்கும் நெடுந் தகை
அரசு வரின் தாங்கும் வல்லாளன்னே


பொருள் விளக்கம்

எருது கால்களைக் கொண்டு உழாமல், இளைஞர்கள் காலால் மிதித்து பதப்படுத்திய சிறு விளைநிலத்தில் விளைந்த, புல் உடன் ஒத்து இருக்கும் குப்பை போன்ற வரகு பயிர்கள். இதில் இருந்து விளைந்த கொஞ்சம் அளவு உள்ள வரகை கடன் வாங்கியவருக்குக் கொடுத்தது போக மீதி இருக்கும் கொஞ்சம் வரகையும் தன் இல்லத்தை தேடி வரும் பசித்த பாணனுக்கு கொடுத்து உதவுவான் இந்த வீரன். அதுவும் தீர்ந்து விட்டால் வறுமையுடன் இருக்கும் தன் மனைவி, குழந்தை, சொந்த பந்தங்களுக்கு உதவுவதற்கு கடன் கொடுக்கும் அற்பர்களிடன் சென்று மீண்டும் கடன் வாங்குவான். போர் வந்தால் பெரு நில மன்னனுக்காக போரிட்டு வெற்றி பெரும் வீரம், நம்பிக்கை அவனிடம் உள்ளது. வெற்றிப் பெற்று மன்னனிடம் இருந்து கொண்டு வரும் பொருளைக் கொண்டு அவனது கடன் அடைப்பான்.

பாடலின் சிறப்பு :

எருது கொண்டு உழும் அளவுக்குக் கூட இந்தப் போர் வீரனுக்கு நிலம் இல்லை. வெறும் காலால் உழுது வரகு விதைக்கிறான். புல் போன்று இருக்கும் விளைந்து இருக்கும் குப்பையில் இருந்து கிடைக்கும் கொஞ்சம் வரகை (கேழ்வரகு) எடுக்கிறான். அதில் கிடைத்ததை கடன் வாங்கியவனுக்கு கொடுத்து விடுகிறான். இருக்கும் மிச்சதையும் வீட்டு வாசலில் வந்து காத்து இருக்கும் பாணனுக்கு கொடுத்து விடுகிறான். தன் தேவைக்கு மறுபடி கடன் வாங்குகிறான். நெல் விளைவிக்கும் அளவுக்கு நிலமும் இல்லை, வசதியும் இல்லை. வசதி குறைந்த காலத்திலும் தன்னை நாடி வந்த ஒருவனுக்கு இருப்பதை கொடுக்கும் உண்ணத குணம் அவனிடம் இருக்கிறது. போர் வந்தால் மட்டுமே பொருள், அது இல்லாத காலத்தில் போர் வீரர்கள் வறுமையில் இருந்தனர் என்பதை இந்த பாடல் மூலம் உணரலாம்.


தொடரும்........
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by சதாசிவம் on Sun Mar 25, 2012 2:51 pm

மன்னனின் இழப்பு

போர் வெற்றியை மட்டும் தருவதில்லை, பல உயிர்களின் இழப்பையும் தருகிறது. வீரம், ஆண்மை, பெருமை, பீடு, குடிமரபு என்ற பல பேசினாலும் இழப்பு இழப்பு தான், ஈடு செய்ய இயலாதது மனித உயிரின் இழப்பு. வெற்றிக் கொண்டாட்டம், கூத்து, கள், களிப்பு என்ற வாழ்க்கை போரின் ஒரு புறம் இருந்தாலும், மறு புறம் அமங்கலி, தந்தை இழந்தவன், கை இழந்தவன், கால் இழந்தவன் என்ற நிலையும் இருக்கிறது. அன்று மட்டுமல்ல, இன்று வரை.........

இப்படி நடந்த ஒரு வீரப் போரில் உயிரை இழந்து இருக்கும் மன்னனின் நாட்டில் இருக்கும் கவலையான நிலைமையை இந்த புறப் பாடல் விளக்குகிறது.

பாடல் 25: முல்லையும் பூத்தியோ (புறம் 242)
பாடியவர் : குட வாயிற் தீரத்தனார்
பாடப்பட்டோன் : ஒல்லையூர் கிழான் மகன் பெருஞ்சாத்தான்
திணை : பொதுவியல் துறை : கையறுநிலை

இளையோர் சூடார் வளையோர் கொய்யார்
நல்லியாழ் மருப்பின் மெல்ல வாங்கிப்
பாணன் சூடான் பாடினி யணியாள்
ஆண்மை தோன்ற வாடவர்க் கடந்த
வல்வேற் சாத்தன் மாய்ந்த பின்றை
முல்லையும் பூத்தியோ வொல்லையூர் நாட்டே.


பொருள் விளக்கம்

போருக்குச் செல்லும் இளைஞர்கள் சூட மாட்டார்கள், வளையல் அணிந்த பெண்கள் சூட மாட்டார்கள், நல்ல யாழ் கொண்டு பாட்டுப் பாடி மக்களை, மன்னனை மகிழ்விக்கும் பாணனும் சூட மாட்டான், அவன் துணைவி பாடினி (பாணினியும்) சூட மாட்டாள், இப்படி யாரும் சூடாமல் இருக்கும் இந்த ஒல்லை ஊரில் வீணாக ஏன் பூத்துக் கிடைக்கிறாய் முல்லைப் பூவே.... தன் ஆண்மையின் வீரத்தால் எதிரிகளைக் கடந்து வலிமையான வேல் எறியும் பெருஞ் சாத்தான் இறந்த பின்னும் பூத்தியோ முல்லைப் பூவே........கவலையில் கலை இழந்து இருக்கும் இந்த ஒல்லை ஊரில் யார் உன்னைச் சூடப் போகிறார்கள்..

புறம் வளரும் ........
avatar
சதாசிவம்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1758
மதிப்பீடுகள் : 1117

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by கா.ந.கல்யாணசுந்தரம் on Sun Mar 25, 2012 6:12 pm

நல்ல தமிழ் அறிவோம் - இலக்கியம் அறிதல் மிகப் பெரிய மானுட செயலாக இப்போது இருக்கிறது. தங்களின் தமிழ்ப் பணி மாந்தர்தம் தமிழறிவு தாகப் பிணிக்கு மருந்தாக அமைந்துள்ளது.

இயல்பாய் கவிதைகள் நவீனம், புதுக்கவிதை மற்றும் ஹைக்கூ என எழுதும் எனக்கு இந்த இலக்கியங்களைப் புரட்டும் போது வாழ்நாள் இன்னும் நீடித்திருக்க வேண்டும் என இறைவனை இறைஞ்சுகிறேன். அத்துணை இலக்கியங்களையும் இந்த வாழ்வு முடிவத்ர்க்குள் படித்தாகவேண்டும் என்ற எண்ணம் தோன்றுகிறது.
avatar
கா.ந.கல்யாணசுந்தரம்
சிறப்புக் கவிஞர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 3794
மதிப்பீடுகள் : 578

View user profile http://kavithaivaasal.blogspot.in/

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by Aathira on Sun Mar 25, 2012 9:38 pm

சூடாத முல்லையைப் பாடி ஒல்லையின் போர்க்கு முற்றுப் புள்ளி வைக்க எண்ணிய போர்நிறுத்தப் பாடல் அருமை. இதே போல ஒளைவையார் தூது சென்ற பாடல் இரண்டு உள்ளன புறநானூற்றில். பொதுவாக காதலும் வீரமும் மட்டுமே சங்க காலம். அதில் புலவர்கள் மன்னனின் வீரத்தைப் பாடிப் பாடி உசுப்பேற்றி விடுவார்கள் எனறு பரவலாக நிலவி வரும் கருத்துக்குப் புரனானது இப்பாடல்கள்.

அழகிய தேவையான பதிவுக்கு நன்றி சதாசிவம். நன்றி


[You must be registered and logged in to see this link.]
avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by sinthiyarasu on Sun Mar 25, 2012 9:42 pm

உண்மையாகவே அருமையான பதிவு. மகிழ்ச்சி
avatar
sinthiyarasu
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 546
மதிப்பீடுகள் : 76

View user profile

Back to top Go down

Re: புறநானூறு - நல்ல தமிழ் அறிவோம் - தொடர் பதிவு

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum