சமீபகாலமாக தெலுங்கு படங்களை தமிழில்
டப்பிங் செய்வதும், தமிழ் படங்களை தெலுங்கில் டப்பிங் செய்வதும்
அதிகரித்து கொண்டே போகிறது. அந்தவரிசையில் கடந்த ஆண்டு கார்த்தி, காஜல்
அகர்வால் நடிப்பில் சுசீந்திரன் இயக்கத்தில் வெளியாகி சூப்பர் ஹிட்டான
"நான் மகான் அல்ல" படம், இப்போது தெலுங்கில் "நா பேரு சிவா" என்ற பெயரில்
உருவாகியுள்ளது. இப்படத்தின் ஆடியோவை கார்த்தி நேற்று ரிலீஸ் செய்தார்.
யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். இப்படம் ஜூலை முதல் வாரத்தில்
திரைக்கு வருகிறது. கூடவே ஜூலை முதல்வாரம், அதாவது 3ம் தேதி கார்த்தி -
ரஞ்சனியின் திருமணமும் கூட. இதனால் இரட்டிப்பு மகிழ்ச்சியில் இருக்கிறார்
கார்த்தி. ஏற்கனவே கார்த்தியின் "பையா" படம் தெலுங்கிலும் சூப்பர்
ஹிட்டானது குறிப்பிடத்தக்கது.
TMT