ஒரு படத்தில் நடித்து
பிரபலமாகிவிட்டாலே, அந்த நடிகையை தங்களது விளம்பர படங்களில் நடிக்க வைக்க
போட்டா போட்டி ஏற்படும். அந்தவகையில் பிரபல ஜவுளி நிறுவனம் ஒன்று, நடிகை
ஹன்சிகா மோத்வானியை தங்களது விளம்பரத்தில் நடிக்க புக் செய்துள்ளது.
"மாப்பிள்ளை", "எங்கேயும் ***காதல்" இந்த இரண்டு படங்கள் தான் தமிழில்
ஹன்சிகா மோத்வானி நடித்து வெளிவந்த படம். இரண்டு படமும் சரியாக போகவில்லை
என்றாலும், அம்மணிக்கு தமிழ் சினிமாவில் ஏகப்பட்ட வரவேற்பு. விஜய்யுடன்
"வேலாயுதம்", உதயநிதியுடன் "ஒரு கல் ஒரு கண்ணாடி" உள்ளிட்ட படங்களில்
நடித்து வருகிறார். இதுதவிர தெலுங்கிலும் பிஸியாக உள்ளார்.

சினிமாவில் தான் ஹன்சிகாவை, தங்களது படத்தில் நடிக்க வைக்க
தயாரிப்பாளர்கள், இயக்குநர்கள் போட்டி போடுகிறார்கள் என்றால், பிரபல
நிறுவனங்கள் பலவும் தங்களது விளம்பர படங்களில் ஹன்சிகாவை நடிக்க வைக்க
போட்டி போட்டு கொண்டு இருக்கின்றனராம். பொதுவாக ஒரு நடிகை டாப்பில்
இருக்கும் போது, அவரை சென்னையில் இருக்கும் டாப் ஜவுளிக்கடைகள், தங்களின்
மாடல்களாக நடிக்க வைத்துவிடுவர். அதுபோல் ஹன்சிகாவையும், பிரபல ஜவுளி
நிறுவனமான சென்னை சிலக்ஸ், தங்களது விளம்பரத்தில் நடிக்க புக்
செய்துள்ளதாம். இதற்காக அவருக்கு கொடுக்கப்பட்ட சம்பளம் ரூ.50 லட்சம்
என்றும் கூறப்படுகிறது. ஹன்சிகாவுக்கு கொடுக்கப்பட்ட இந்தசம்பளம்,
படத்தில் அவர் வாங்கும் சம்பளத்தை விட அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.