புதிய பதிவுகள்
» ஜூனியர் தேஜ் பேஜ் - சிறுகதைகள் 5 தொகுதிகள் -நூல் விமர்சனம்: அ.முஹம்மது நிஜாமுத்தீன்.
by mohamed nizamudeen Yesterday at 10:36 pm

» மழையில் நனைவது உனக்கு பிடிக்கும்...
by T.N.Balasubramanian Yesterday at 5:13 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 5:00 pm

» 17-ம் தேதி மக்களவை4 கூடுகிறது- தற்காலிக சபாநாயகர் வீரேந்திரகுமார்
by ayyasamy ram Yesterday at 4:59 pm

» மக்களின் அறியாமையை அடித்து கேட்டிருக்கிறார்.. Hats off: கங்கனாவை அறைந்த கான்ஸ்டபிளை பாராட்டிய சேரன்
by T.N.Balasubramanian Yesterday at 4:59 pm

» இன்றைய செய்திகள்....
by ayyasamy ram Yesterday at 3:46 pm

» கருத்துப்படம் 07/06/2024
by mohamed nizamudeen Yesterday at 8:10 am

» கோயிலின் பொக்கிஷத்தை கட்டுப்படுத்தும் அரச குடும்பம்!
by ayyasamy ram Yesterday at 7:13 am

» ஒன்னு வெளியே, ஒன்னு உள்ளே - காங்கிரஸ் கட்சிக்கு இன்ப அதிர்ச்சி - கூடிய பலம் குறையப்போகும் சோகம்!
by ayyasamy ram Yesterday at 7:08 am

» பாவாடை தாவணியில் பார்த்த உருவமா
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:29 pm

» மழை - சிறுவர் பாடல்
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:51 pm

» இமை முளைத்த தோட்டாக்கள்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:49 pm

» மக்கள் மனதில் பக்தியும், நேர்மையும் வளர வேண்டும்!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:46 pm

» சாதனையாளர்களின் வெற்றி சூட்சமம்.
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:44 pm

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:42 pm

» தங்கம் விலை.. இன்றைய சென்னை நிலவரம்..!
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:40 pm

» நாட்டு நடப்பு -காரட்டூன் (ரசித்தவை)
by ayyasamy ram Thu Jun 06, 2024 7:38 pm

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by T.N.Balasubramanian Thu Jun 06, 2024 4:58 pm

» உமா ரமணன் பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:48 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 4:40 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Thu Jun 06, 2024 4:23 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 4:16 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Thu Jun 06, 2024 4:11 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:27 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Thu Jun 06, 2024 3:17 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 3:06 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:55 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:35 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Thu Jun 06, 2024 2:19 pm

» எம்.பி.க்களுடன் சந்திரபாபு நாயுடு ஆலோசனை
by ayyasamy ram Thu Jun 06, 2024 1:12 pm

» செய்தி சுருக்கம்...
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:53 am

» 12.2 ஓவரிலேயே அயர்லாந்தை சாய்த்த இந்தியா..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:46 am

» திரைப்பட செய்திகள்
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:26 am

» கேட்டதை கொடுக்கும் தொட்டால் சிணுங்கி..!!
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:23 am

» பாமகவை ஓரம்கட்டிய நாம் தமிழர் கட்சி..
by ayyasamy ram Thu Jun 06, 2024 9:22 am

» நிலவோடு வான்முகம் வான்முகில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 8:45 pm

» தமிழ் சினிமாவில் நெப்போடிசமா? வாணி போஜன் பதில்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:22 am

» புஜ்ஜி விமர்சனம்
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:18 am

» உலக கோப்பை ஏ பிரிவில் இந்தியா – அயர்லாந்து இன்று பலப்பரீட்சை
by ayyasamy ram Wed Jun 05, 2024 7:14 am

» ஆந்திராவில் ஆட்சியை கைப்பற்றியதை தனது குடும்பத்துடன் கேக் வெட்டி கொண்டாடிய சந்திரபாபு நாயுடு
by ayyasamy ram Tue Jun 04, 2024 5:31 pm

» உடலிலுள்ள வியாதிகளை ஆட்டம் காண வைக்கும் ஆடாதோடை!!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:58 am

» வெற்றிச் சிகரத்தில் - கவிதை
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:57 am

» 200 ஆண்டுகால தேர்தல் வரலாற்றில் முதல் பெண் அதிபர்.. மெக்சிகோ மக்கள் கொண்டாட்டம்..!
by ayyasamy ram Tue Jun 04, 2024 8:34 am

» முகமூடி அணிவதில் தவறில்லை...!
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» வாழ்க்கை என்பது சூரியன் அல்ல...
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:19 am

» செய்திகள்- ஜூன் 3
by ayyasamy ram Tue Jun 04, 2024 7:06 am

» ரீஎண்ட்ரி கொடுத்த ராமராஜன்…
by ayyasamy ram Mon Jun 03, 2024 11:40 am

» உமாபதி ராமையா நடிக்கும் பித்தல மாத்தி
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:57 am

» மேஜிக் மேன் வேடத்தில் யோகி பாபு
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:55 am

» 03.06.2024 - தின மற்றும் ராசி பலன்கள்
by ayyasamy ram Mon Jun 03, 2024 9:53 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜபக்சே­வுக்குப் புதிய தலையிடி!!!!  Poll_c10ராஜபக்சே­வுக்குப் புதிய தலையிடி!!!!  Poll_m10ராஜபக்சே­வுக்குப் புதிய தலையிடி!!!!  Poll_c10 
69 Posts - 58%
heezulia
ராஜபக்சே­வுக்குப் புதிய தலையிடி!!!!  Poll_c10ராஜபக்சே­வுக்குப் புதிய தலையிடி!!!!  Poll_m10ராஜபக்சே­வுக்குப் புதிய தலையிடி!!!!  Poll_c10 
41 Posts - 34%
mohamed nizamudeen
ராஜபக்சே­வுக்குப் புதிய தலையிடி!!!!  Poll_c10ராஜபக்சே­வுக்குப் புதிய தலையிடி!!!!  Poll_m10ராஜபக்சே­வுக்குப் புதிய தலையிடி!!!!  Poll_c10 
5 Posts - 4%
T.N.Balasubramanian
ராஜபக்சே­வுக்குப் புதிய தலையிடி!!!!  Poll_c10ராஜபக்சே­வுக்குப் புதிய தலையிடி!!!!  Poll_m10ராஜபக்சே­வுக்குப் புதிய தலையிடி!!!!  Poll_c10 
5 Posts - 4%

இந்த மாத அதிக பதிவர்கள்
ayyasamy ram
ராஜபக்சே­வுக்குப் புதிய தலையிடி!!!!  Poll_c10ராஜபக்சே­வுக்குப் புதிய தலையிடி!!!!  Poll_m10ராஜபக்சே­வுக்குப் புதிய தலையிடி!!!!  Poll_c10 
111 Posts - 59%
heezulia
ராஜபக்சே­வுக்குப் புதிய தலையிடி!!!!  Poll_c10ராஜபக்சே­வுக்குப் புதிய தலையிடி!!!!  Poll_m10ராஜபக்சே­வுக்குப் புதிய தலையிடி!!!!  Poll_c10 
62 Posts - 33%
mohamed nizamudeen
ராஜபக்சே­வுக்குப் புதிய தலையிடி!!!!  Poll_c10ராஜபக்சே­வுக்குப் புதிய தலையிடி!!!!  Poll_m10ராஜபக்சே­வுக்குப் புதிய தலையிடி!!!!  Poll_c10 
7 Posts - 4%
T.N.Balasubramanian
ராஜபக்சே­வுக்குப் புதிய தலையிடி!!!!  Poll_c10ராஜபக்சே­வுக்குப் புதிய தலையிடி!!!!  Poll_m10ராஜபக்சே­வுக்குப் புதிய தலையிடி!!!!  Poll_c10 
7 Posts - 4%

நிகழ்நிலை நிர்வாகிகள்

ராஜபக்சே­வுக்குப் புதிய தலையிடி!!!!


   
   
ராசுக்குட்டி
ராசுக்குட்டி
புதியவர்

புதியவர்
பதிவுகள் : 29
இணைந்தது : 01/06/2011
http://rajtherock7.wordpress.com

Postராசுக்குட்டி Sun Jun 26, 2011 12:17 pm

இந்திய
- இலங்கை இடையிலான பரந்துபட்ட பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கையானது
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்­வுக்குப் புதிய தலையிடியாக மாறியிருக்கிறது என்று
மத்திய கிழக்கைத் தளமாகக் கொண்ட சவூதி கஸட் என்ற ஊடகத்தில் பைசல் சமத்
எழுதியுள்ள செய்தி ஆய்வின் தமிழாக்கம் இது.



ராஜபக்சே­வுக்குப் புதிய தலையிடி!!!!  Rajapakshe-srilanka
இந்தியாவுக்கும்
இலங்கைக்கும் இடையிலான பரந்துபட்ட பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாட்டை
(Indo&Lanka Comprehensive Economic Partnership Agreement- CEPA)
எதிர்த்து இலங்கை வர்த்தக சமூகத்தினர் வீதிக்கு இறங்கிப் போராட்டங்களை
நடத்தியதை அடுத்து, உடன்படிக்கையை நடைமுறைப்படுத்துவதில் இருந்து கொழும்பு
அரசு பின்வாங்கி கிட்டத்தட்ட ஓராண்டாகிவிட்டது.


இலங்கையின் பொருளாதார
நலன்களுக்குப்பாதகமாக அமையும் எத்தகைய உடன்பாட்டிலும் தான் ஈடுபடமாட்டார்
என்று ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ உறுதியளித்த பின்னரே ஆர்ப்பாட்டக்காரர்கள்
தங்களது போராட்டத்தைத் தற்காலிக மாகக் கைவிட்டிருந்தனர்.


சிக்கலில் வர்த்தக உடன்படிக்கை
இரு
நாடுகளுக்கும் இடையிலான பொருளாதார உடன்பாடானது உடனடியாக எட்டப்படுவதோடு
விரைவாக நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்று இந்தியா கடும் அழுத்தங்களைப்
பிரயோகித்துவரும் நிலையில் மீண்டும் பிரச்சினை தோன்றியுள்ளது.


இந்தியாவின் அழுத்தத்துக்கு
அடிபணிவதா அல்லது செல்வாக்குமிக்க உள்ளூர் வர்த்தகர்களது
நிலைப்பாட்டுக்குத் துணைபோவதா என்ற குழப்பத்துக்குள் ஜனாதிபதி இப்போது
சிக்கிக் கொண்டுள்ளார். மஹிந்த அரசுக்கு நிதிரீதியாகவும் இதர வழிவகைகளிலும்
துணையாக இருப்பது இந்த வர்த்தக சமூகத்தினர்தான் என்பதால் அவர்களை அவரால்
அடியோடு புறந்தள்ளிவிட முடியாது.


பரந்துபட்ட பொருளாதார
உடன்பாடானது, இந்திய உற்பத்திப் பொருள்கள் குறைந்த விலையில் இலங்கையின்
சந்தைகளுக்குத் தங்குதடையின்றி வருவதற்கு வழிசெய்கிறது என்றும் ஏன்
தொழிலாளர்கள் கூடக் குறைந்த ஊதியத்தில் அங்கிருந்து தருவிக்கப்படுவதற்கு
இடமளிக்கிறது என்றும் வாதிடும் இலங்கை வர்த்தகர்கள், இதன் விளைவாக
இலங்கையின் உள்ளூர் தொழில்துறை மாத்திரமின்றி தொழில் சந்தையும் பெரும்
பின்னடைவைச் சந்திக்கும் என்கிறார்கள்.


வர்த்தகர்கள் எதிர்ப்பு
தற்போது
நடைமுறையிலிருக்கும் சுதந்திர வர்த்தக உடன்படிக்கையானது (Indo&Lanka
Free Trade Agreement-FTA), இறக்குமதி செய்யப்படும் இந்திய உற்பத்திப்
பொருள்களின் அளவை மட்டுப்படுத்துகிறது. ஆனால், பரந்துபட்ட பொருளாதார
ஒத்துழைப்பு உடன்பாடானது வங்கிச்சேவைகள் உள்ளிட்ட தொழில்சார் அம்சங்களும்
இந்தியாவிலிருந்து தங்கு தடையின்றித் தருவிக்கப்படுவதற்கு வழிசெய்கிறது
என்று இந்த உடன்படிக்கைக்கு எதிரான போராட்டத்தை முன்னின்று நடத் தும்
செல்வாக்குமிக்க உள்ளூர் வர்த்தகரான சமந்த குமாரசிங்க கூறுகிறார்.


"குறிப்பிட்ட இந்த உடன்பாடு
கைச்சாத்திடப் பட்டால் இந்தியாவிலுள்ள சவரத் தொழிலாளி ஒருவர் தனது
குடும்பத்துடன் இலங்கைக்குக் குடிபெயர்ந்து முடிதிருத்தும் நிலையம் ஒன்றைத்
திறக்கமுடியும்'' என்கிறார் இந்த வர்த்தகர்.


கடந்த மேயில் ஊடகம் ஒன்றுக்கு
வழங்கிய செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டிருக்கிறார். இரண்டு
நாடுகளுக்கும் இடையிலான சுதந்திர வர்த்தக உடன்படிக்கை 1998ஆம் ஆண்டு
கைச்சாத்திடப்பட்டிருந்தது.


பரந்துபட்ட பொருளாதார ஒத்துழைப்பு
உடன் படிக்கையானது நாட்டின் வர்த்தகத்திலும் சேவைகளிலும் அரசுக்கு
இருக்கும் கட்டுப்பாட்டை இல்லாது செய்துவிடும். அத்துடன் இந்த உடன்பாடு
இந்திய வர்த்தகர்களுக்கும் துறைசார் நிபுணர் களுக்கும்தான் அதிக நன்மைகளைப்
பெற்றுக்கொடுக்கப் போகிறது எனக் குமாரசிங்க கூறுகிறார்.


குற்றச்சாட்டு
எவ்வாறிருப்பினும்
இலங்கையின் உள்ளூர் தொழில் துறையாளர்கள் சோம்பல் பிடித்தவர்கள் என்றும்
தொழிலில் போட்டிக்கோ அன்றி தங்களது வாடிக்கையாளர்களுக்குத் தரமான
உற்பத்திகளை வழங்குவதற்கோ இவர்கள் தயாராக இல்லை என்றும் இலங்கையின் மூத்த
பத்திரிகையாளர் குசல பெரேரா கூறுகிறார்.


"மூன்றாம் தரப் பொருள்களையே
உற்பத்தி செய்யும் இவர்கள், போட்டிக்கு அஞ்சுகிறார்கள். போட்டியென்று
வந்தால்தான் நுகர்வோருக்கு தரமான உற்பத்திகள் கிடைக்கும்'' என்கிறார் இவர்.
இந்த வர்த்தக சமூகம்தான் அரசியல் ரீதியாகவும் நிதி ரீதியாகவும் அரசுக்கு
முண்டுகொடுத்து நிற்பதால் அதைப் பகைத்துக்கொள்ள இன்றைய மஹிந்த அரசு
விரும்பவில்லை.


பரந்துபட்ட பொருளாதார ஒத்துழைப்பு
உடன் பாட்டில் விரைவாகக் கைச்சாத்திடுவது மற்றும் அதனை விரைவாக
நடைமுறைப்படுத்துவது தொடர்பாக அண்மைய வாரங்களில் கொழும் பிலும்
வெளிநாட்டிலும் இலங்கை இந்திய அதி காரிகளுக்கு இடையில் தொடரான அரசியல்
கலந் துரையாடல்கள் இடம்பெற்றுவருகின்றன.


அரசியல் ரீதியில் நோக்குமிடத்து
நாட்டின் சிறுபான்மைத் தமிழர்களுக்குரிய அதிகாரங்களை வழங்கும் வகையில்
மேலுமதிக அரசியல் விட்டுக்கொடுப்பை இலங்கை மேற்கொள்ள வேண் டும் என இந்தியா
விரும்புகிறது. இது கொழும்பில் பெரும் வாதப்பிரதிவாதங்களைத்
தோற்றுவித்திருந்தது. அத்துடன் பரந்து பட்ட பொருளாதார ஒத்துழைப்பு
உடன்படிக்கை விரைந்து நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் இந்தியா
தொடர்ந்தும் வலியுறுத்தி வருகிறது.


இலங்கைக்கும் சீனாவுக்கும்
இடையில் வேகமாக வளர்ந்து வரும் அரசியல் மற்றும் பொருளாதார உறவுகள் தொடர்பாக
இந்தியா அதிக கரிசனை கொண்டிருக்கின்றது என்று அரசியல் ஆய்வாளர்கள்
கூறுகிறார்கள்.


சீனாவால் வரும் சிக்கல்கள்
இலங்கையில்
இந்தியா வகிக்கும் பங்கு எதுவோ அதனை ஒத்த அல்லது அதற்கும் மேலான பங்கை
வகிப்பதற்கே சீனா விரும்புகிறது. இலங்கைக்கு அதிகளவில் வர்த்தகக் கடன்
வழங்கும் நாடு சீனா தான். அத்துடன் வீதிகள், துறைமுகங்கள் மற்றும் விமான
நிலையங்கள் போன்ற உட்கட்டுமான அபிவிருத்திப் பணிகளிலும் சீனா துணை
நிற்கிறது.


இந்த நிலையில், குறிப்பாக 30
ஆண்டுகாலப் போர் முடிவுக்கு வந்துவிட்ட இந்த வேளையில் தனது பொருளாதார
ரீதியிலான நுழைவை விரிவாக்கும் வகையில், இந்தியா கொழும்பு மீது தொடர்ந்து
அழுத்தம் கொடுக்கிறது.


இலங்கையில் வாழ்க்கைச் செலவு
அதிகரித்து விட்டது என்ற கருத்து பொதுமக்கள் மத்தியில்
வலுப்பெற்றிருக்கிறது. இந்த நிலையில் பரந்துபட்ட பொருளாதார ஒத்துழைப்பு
உடன்படிக்கையிலும் கைச்சாத்திடவேண்டும் என்று இந்தியா வலியுறுத்துவது
மஹிந்தவின் தலையிடியை அதிகரித்திருக்கிறது.


தனியார் ஓய்வூதியச் சட்டத்துக்கு
எதிரான போராட்டம், தமக்கான ஊதியத்தை அதிகரிக்க வேண்டும் என்ற பல்கலைக்கழக
ஆசிரியர்களின் போராட்டம், பஸ் கட்டணங்களை அதிகரிக்க வேண்டும் என்ற கோரிக்கை
உள்ளிட்ட இதர சம்பவங்களின் ஊடாக இலங்கையில் வாழ்க்கைச் செலவு எவ்வளவுக்கு
உயர்ந்துள்ளது என்பதை விளங்கிக்கொள்ள முடியும்.


சரியும் அரச செல்வாக்கு
மக்கள்
மத்தியில் அதிபர் ராஜபக்ஷவுக்கான செல்வாக்கு இன்னமும் குறையாமல்
இருந்தாலும் அவரது அரசு மக்கள் செல்வாக்கை இழந்து வரு கிறது என்கிறார்
அரசியல் ஆய்வாளர் பேராசிரியர் கீத பொன்கலன். கடந்த மார்ச்சில் இடம்பெற்ற
உள்ளூராட்சி சபைத் தேர்தலில் அரசு வெற்றியீட்டிய போதிலும் பிரதான
எதிர்க்கட்சியான ஐக்கிய தேசியக் கட் சிக்கு விழுந்த வாக்கு வீதம் கடந்த
தேர்தலுடன் ஒப்பிடும் போது அதிகரித்திருக்கிறது.


"எந்தவொரு முயற்சியையும்
எடுக்காமலேயே ஐ.தே.க. இந்த வாக்குகளைப் பெற்றிருக்கிறது'' என்கிறார் கீத
பொன்கலன். பரந்துபட்ட பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாடானது உள்ளூர்
பொருளாதாரத்தில் இந்தியாவின் செல்வாக்கு அதிகரிப்பதற்கே வழிசெய்யும்
என்பதால் இலங்கையின் பொருளாதாரத்துக்கே அது பாதகமானது என்றும் அவர் கூறு
கிறார்.


"அதிக வளர்ச்சி பெற்ற இந்திய
நிறுவனங்கள் மற்றும் சேவைகளுடன் உள்ளூர் நிறுவனங்கள் போட்டியிடுவது
கடினமானதாகவே இருக்கும். உள்ளூர் வர்த்தகர்கள் இந்த உடன்படிக்கையை
எதிர்ப்பதன் அடிப்படை அதுவே'' என்கிறார் பொன்கலன். தவிர, குறித்த இந்த
உடன்பாட்டை முன்னெடுத்துச் செல்வதற்கு அரசும் விரும்பவில்லை என்பது அவரது
கருத்து.


"அரசில் இடம்பெற்ற
கூட்டுக்கட்சிகளும் இந்த உடன்படிக்கையை எதிர்க்கின்றன. இலங்கை மீது இந்தியா
செல்வாக்குச் செலுத்துவதை இந்தக் கட்சிகளில் சில விரும்பவில்லை.
பரந்துபட்ட பொருளாதார ஒத்துழைப்புத் தொடர்பான தனது கரி\னையை இந்தியாவுக்கு
வெளிப்படுத்துவதற்கு கொழும்பு வேறுபட்ட வழிகளைப் பயன்படுத்துவதாக நான்
கருதுகிறேன்'' என்கிறார் ஆய்வாளர் பொன்கலன்.


அரியதொரு நிகழ்வாக கடந்தவாரம்
இலங்கை அரசுடன் இணைந்து செயற்படுகின்ற கட்சிகளும் பிரதான எதிர்க்கட்சியான
ஐக்கிய தேசியக் கட்சியும் குறித்த இந்த உடன்பாட்டுக்கு எதிரான
போராட்டத்தில் ஒன்று திரண்டிருந்தன.


பரந்துபட்ட பொருளாதார ஒத்துழைப்பு
உடன்பாட்டுக்கு எதிரான வர்த்தகர்குழு என்ற அமைப்பினால் ஏற்பாடு
செய்யப்பட்டிருந்த பொதுக்கூட்டம் ஒன்றில் ஐ.தே.க.வின் பொதுச் செயலாளர்
திஸ்ஸ அத்தநாயக்கவும் அரசுடன் இணைந்து செயற்படும் தேசிய வாதக் கட்சிகளின்
அரசியல்வாதிகளும் இணைந்து கலந்து கொண்டனர். குறித்த இந்த உடன்படிக்கைக்கு
எதிரான பொதுத் தீர் மானம் ஒன்றையும் கொண்டுவந்திருந்தனர்.


வர்த்தக உடன்படிக்கைக்கு ஆதரவு


பொருளாதார உடன்பாட்டு விடயத்தில்
இலங்கை அரசு அரசியல் சித்து விளையாட்டுக்காட்டுகிறது என்று அரசியல்
அவதானிப்பாளர் குசல பெரேரா கூறுகிறார்.


"உள்ளூர் வர்த்தகர்களை
எதிர்ப்பதற்கு அரசு தயாராக இல்லை. இதுவொரு குறுகிய பார்வையுடன்கூடிய
சிந்தனையே. முன்மொழியப்பட்டிருக்கும் இந்த உடன்பாடு
நடைமுறைப்படுத்தப்பட்டால் இலங்கைக்குத்தான் அதிக நன்மைகள் கிடைக்கும்''
என்கிறார் குசல பெரேரா.


உதாரணமாக, வெளிநாடுகளிலிருந்து
மருத்துவர்கள் இலங்கைக்கு வந்து பணிசெய்வதற்கு அனுமதிக்கப்படுமெனில்
மருத்துவ ஆலோசனைக்காக அதிக பணத்தை வாங்கும் மருத்துவர்கள் தங்களது சேவையை
மேம்படுத்த வேண்டிய தேவை எழும் என்கிறார் இவர்.


"தாங்கள் மக்களுக்குச் சிறந்த
சேவையை ஆற்றுகிறார்களெனில் இங்குள்ள மருத்துவர்களோ அல்லது இதர துறைசார்
நிபுணர்களோ இந்த உடன்படிக்கை குறித்துக் கவலைகொள்வதற்கான தேவை எதுவுமில்லை.
தவிர உள்ளூர் துறைசார் வல்லுநர்களுக்கு நாட்டிலுள்ள மொழிகள் பரிச்சயம்
என்பதால் இங்கு வெளிநாட்டு மருத்து வர்களைவிட இவர்களுக்குததான் அதிக
நன்மைகள் கிடைக்கின்றன. இவ்வாறிருக்க இந்த மருத்து வர்கள் ஏன்
அஞ்சுகிறார்கள்?'' என குசல கேள்வி எழுப்புகிறார்.


இலங்கைக்கான பயணம் ஒன்றை
மேற்கொள்வதற்கு விடுக்கப்பட்ட அழைப்பை இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங்
அண்மையில் ஏற்றுக் கொண்டிருக்கிறார். இந்தியப் பிரதமரின் இத்தகைய பயணம்
நிச்சயமாக அளவில் சிறிய இலங்கைத்தீவு மீது உத்தேச உடன்படிக்கையை
நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என அழுத்தம் அதிகரிப்பதற்கே வழிசெய்யும்.


குறித்த இந்தப் பரந்துபட்ட
பொருளாதார ஒத்துழைப்பு உடன்படிக்கையை வரைவதற்கு நீண்ட காலங்கள்
எடுத்திருந்தது. அத்துடன் இலங்கைத் தீவு மீதான இந்தியாவின் அரசியல் மற்றும்
பொருளாதார நலன்கள் அதிகரித்துச்செல்வதைக் காட்டும் ஒரு சம்பவமாகவும் இந்த
உடன்பாடு அமைகிறது.


நன்றி:உதயன்







-
-இவண்--
--ராஜபக்சே­வுக்குப் புதிய தலையிடி!!!!  599303 ராசுக்குட்டிராஜபக்சே­வுக்குப் புதிய தலையிடி!!!!  599303--

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக