ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கண்டதேவிப் புராணம்

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Go down

கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:03 am

First topic message reminder :

கண்டதேவிப் புராணம்
திரிசிரபுரம் மஹாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றியது.இஃது சிவநேசம் பொருந்திய வெளிமுத்தி வயிரவ ஐயாவவர்கள் அநுமதிப்படி தேவகோட்டை மு.குப்பான் செட்டியாரவர்கள் குமாரர் முத்தரசப்பசெட்டியாரால் சென்னை இலக்ஷ்மீவிலாச அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.


கடவுள் வாழ்த்து


1 விநாயகர்
பூமேவு பரையொருபாற் பெருமான்பின் பாற்றழுவிப் புணர்ந்தொன் றாய
மாமேவு பெண்பாலாண் பாலொடுமா றுற்றெரிந்து மாறு றாமே
தூமேவு முன்பால்வந் துறத்தழீஇ யொருமருப்பாற் றுணைப்பா லாய
தேமேவு முகமலரும் வலம்புரிக்குஞ் சரத்திருதாள் சேர்ந்து வாழ்வாம் 1

2 சொர்ன்னவருடேசர்
மாமேவு கடவுளருந் தடவுளருஞ் சுரும்பமர்பூ மாலை வேந்துங்
கோமேவு மலரானும் பலரானும் புகழ்திகிரிக் குரிசி றானுந்
தேமேவு பண்ணவரு நண்ணவருள் சுரந்துகண்ட தேவி மேவும்
பாமேவு புகழ்ச்செம்பொன் மாரிபொழிந் தவர்மலர்த்தாள் பரசி வாழ்வாம் 2

3 தேமாரி யமன்பதைக ளுளங்கருதி யன்னையுஞ்சீர் திகழ்பி தாவு
மாமாரி யனுமுலவாப் பெருங்கதியு நீயேயென் றடைந்து போற்றக்
காமாரி யாயிருந்துங் கவுமாரி யொடுங்கலந்த கருணை மூர்த்தி
பூமாரி சுரர்பொழியப் பொன்மாரி பொழிந்தபிரான் பொற்றாள் போற்றி 3

4 பெரியநாயகி
சொற்றபெரும் புவனமெலா மொருங்கீன்ற பெருந்தலைமைத் தோற்றத் தானோ
கொற்றமிகு பெருங்கருணை சுரக்குமிறை மையினானோ குமரி யாயுங்
கற்றமையிப் பெயர்பூண்டா யெனுமருத வாணரெதிர் கனிவா யுள்ளாற்
சற்றமைய முறுவலித்து மகிழ்பெரிய நாயகிதா டலைமேற் கொள்வாம் 4

5 வாய்ந்தபர சத்தியாய் விந்துவாய் மனோன்மணியாய் மகேசை யாய்ச்சீர்
வேய்ந்தவுமை யாய்த்திருவாய்ப் பாரதியா யிவரன்றி வேறா யின்னு
மேய்ந்தசிறை யிலிநாத னெத்திறநிற் பானதனுக் கியைய நின்றே
தோய்ந்தவுயிர்க் கின்புதவும் பெரியநா யகிதுணைத்தா டொழுது வாழ்வாம் 5

6 சபாநாயகர்.
மறையாதியியம்புகுறிகுணங்கடந்தோரைந்தெழுத்தேவடிவமாகி
நிறையாதிபடைப்பாதிதுடியாதியோரைந்துநிகழ்த்தநாளு
மிறையாதிதவிர்ந்திருவர்வியந்தேத்தவுமைதிருக்கண்விழைந்துசாத்த
வறையாதிமணிமன்றுண்டநவிலும்பெருவாழ்வையடுத்துவாழ்வாம் 6

7 சிவகாமியம்மை.
ஆன்றதாயடைந்தசுகங்கருவுமடைதருமாலென்றறைகூற்றிற்கோர்
சான்றதாயெவ்வுயிருமடையின்பந்தானடையுந்தவாலின்பாக
நான்றதாய்மிளிர்சடிலநாதனியற்றானந்தநடனங்காணு
மீன்றதாய்சிவகாமவல்லியிருதாமரைத்தாளிறைஞ்சிவாழ்வாம் 7

8 தட்சணாமூர்த்தி.
வேறு.
ஆய்தருபொருளுமாராய்ந்தடிநிழலடங்குமாண்பும்
வேய்தருமலர்நேரங்கைவிரலிருகூற்றிற்றேற்றித்
தோய்தருமுனிவர்நால்வர்துதித்திடக்கல்லாலென்னும்
பாய்தருவடிவாழ்முக்கட்பரனடிக்கன்புசெய்வாம் 8

9 வயிரவர்.
புகர்படுசெருக்குமேவல்புன்மையென்றெவருந்தேறப்
பகர்மறைகமழாநிற்கும்பரிகலமங்கையேந்தி
நிகரின்மான்முதலோர்மேனிநெய்த்தோர்கொண்டொளிர்பொன்மாரி
நகரினிதமர்ந்துவாழும்வடுகனைநயந்துவாழ்வாம் 9

10 மருதவிருட்சம்.
வேறு.
பரவியநாதமூலமாப்பராரைபணைகிளைகொம்பொடுவளாரும்
விரவியபஞ்சசத்தியாத்தளிர்கள்வேதமாமலர்களாகமமாக்
கரவியலாதவாசமைந்தெழுத்தாக்காமருசுகோதயமதுவா
வுரவியன்ஞானசொரூபமேயாகியொளிர்தருமருதினைத்துதிப்பாம் 10

11 வலம்புரிவிநாயகர்.
வேறு.
ஓங்குபெருந்தனக்கினமாயுற்றமதவாரணங்களொருங்குதேம்பி
யேங்குதிறமுறவருத்திவணக்கிடுமங்குசபாசமென்னுநாமந்
தாங்குபடையிரண்டுமொருதனைவணங்கக்கரத்தேந்தித்தலைமைபூண்டு
தேங்குநெடுங்கருணைபொழிவலம்புரிக்குஞ்சரத்திருதாள்சென்னிசேர்ப்பாம் 11

12 சுப்பிரமணியர்.
வெயிலேறவிரிக்குமுடிவானவர்விண்குடியேறவெள்ளையானை
குயிலேறவரிபிரமர்புள்ளேறவம்மனைவேர்கூடாமாதர்
கயிலேறமிளர்கடக்கையேறமெய்யேறக்கவினார்தன்கை
யயிலேறவமர்ந்துசிறைமயிலேறும்பெருமானையடுத்துவாழ்வாம். 12

13 திருநந்திதேவர்.
வேறு.
வரைபொடிபடுக்கும்வச்சிரப்படையும்வலிசெழுதண்டவெம்படையும்
விரைசெலற்றிறத்தின்மாற்றலர்நடுங்கும்விளங்கொளித்திகிரியம்படையும்
புரையமைசமழ்ப்புப்பொருந்தவில்வீசிப்பொலியும்வேத்திரப்படைதாங்கி
யுரையமைகயிலைகாத்தருணந்தியொருவனைமருவியேத்தெடுப்பாம். 13

14 தமிழாசிரியர்.
வேறு.
பன்னிருதடங்கைச்செம்மல்பாற்சிவஞானம்பெற்றுப்
பன்னிருகதிருமொன்றாம்பான்மையின்விளங்கிநாளும்
பன்னிருதவமாணாக்கர்பழிச்சிடமலையமேவப்
பன்னிருசரணநாளுந்தலைக்கொடுபரவுவோமே. 14

15 திருஞானசம்பந்தசுவாமிகள்.
அறைவடமொழிநவின்றபாணினியகத்துநாண
விறையமர்மயிலைமூதூரிருந்தவோர்தாதுகொண்டே
நிறைதரவொராறுமேலுநிரப்புதென்மொழிநவின்ற
மறையவன்காழிவேந்தன்மலரடிக்கன்புசெய்வாம். 15

16 திருநாவுக்கரசுசுவாமிகள்.
நீற்றுமெய்ச்சிவனேயென்றுமவனினுநிறைந்தாரென்றுஞ்
சாற்றுதற்கியையத்தந்தைதன்பரியாயப்பேரு
ளீற்றுமெய்கெடுத்தொன்றிற்பன்னிரண்டன்மெய்கொடுத்துக்கூறத்
தோற்றுமெய்ப்புகழ்சானாவிற்கரசினைத்தொழுதுவாழ்வாம். 16

17 சுந்தரமூர்த்திசுவாமிகள்.
எண்ணியமறுமைப்பேறுமிம்மையேயுற்றதென்ன
மண்ணியவியங்கும்வெள்ளிமால்வரையெருத்தமேறி
யண்ணியவியங்காவெள்ளிமால்வரையடைந்துவாழும்
புண்ணியமூர்த்திநாவற்புலனைப்போற்றிவாழ்வாம். 17

18 மாணிக்கவாசக சுவாமிகள்.
மாயவனறியாப்பாதமலரவன்மனைவிமேனி
தோயவுமலரோன்காணாச்சுடர்முடியனையானீன்ற
பாயநீருடுத்தமங்கையிவரவுமுருகிப்பாடுந்
தூயவர்கமலபாதத்துணையுளத்திருத்திவாழ்வாம். 18

19 தண்டீசநாயனார்.
மலர்புரைகுடங்கைவெள்வாய்மழுப்படையொன்றுதாங்கி
யலர்பசுவோம்பியின்னுமுண்ணுதலாதியாவும்
பலர்புகழ்தனக்கென்றொன்றும்வேண்டிலாப்பரன்போற்கொண்ட
நலர்செறிசேய்ஞலூர்வாழ்பிள்ளையைநயத்தல்செய்வாம். 19

20 அறுபத்துமூன்றுநாயன்மார்.
வேறு.
பூன்றதன்மையில்புன்மையேநெஞ்சகத்
தேன்றவஞ்சகமாதியிருப்பினுந்
தோன்றவோர்புரஞ்சூழ்ந்துறவாழ்வரா
லான்றமேன்மையறுபத்துமூவரே. 20

21 பஞ்சாக்கரதேசிகர்.
பூதங்கடந்துபொறிகடந்துபுலனுங்கடந்துபுகல்காண
பேதங்கடந்துகாலமுதலனைத்துங்கடந்துபெருவிந்து
நாதங்கடந்துவளர்துறைசைநமச்சிவாயதேசிகன்பொற்
பாதங்கடந்துபற்றறுத்தானினிமேலல்லற்படலிலையே. 21

22 அம்பலவாண்தேசிகர்.
வேறு.
மருடருவினைகடேய்த்தோமாமலக்குறும்புமாய்த்தோ
மிருடருபிறப்பில்வாரோமென்றுமோரியல்பிற்றீரோ
மருடருதுறைசைமேவுமம்பலவாணதேவன்
பொருடருகமலத்தாளெந்தலைமிசைப்புனைந்தபோதே. 22

23 சித்தாந்தசைவர்கள்.
பண்ணியபுறமார்க்கங்கள்பாழ்படவொழித்துமேலாம்
புண்ணியவிபூதியக்கமணியொடைந்தெழுத்தும்போற்றி
யண்ணியசிவானந்தத்தேனிரம்பவுண்டமையாநிற்கும்
தண்ணியகுணசித்தாந்தசைவரைவணக்கஞ்செய்வாம். 23

24 ஆலப்பணிசெய்வோர்கள்.
அரவுநீர்ச்சடையானெங்களம்மையோடகிலமெல்லாம்
பரவுமாறமர்பொன்மாரிப்பதிப்பெருந்தளியிற்றொண்டின்
விரவுநான்மறையோராதியலகிடல்விழைந்தோரீறா
முரவுசேர்தவத்தர்யாருமுவந்தியாந்தொழுந்தேவாவார். 24


கடவுள் வாழ்த்து முற்றிற்று.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:42 am

16. காங்கேயன்பூசைப்படலம் (768 - 798)

768 அருண்முகத்தமைந்தநெஞ்சிற்பாண்டிநாடடங்கவாழ்வோ
னிருண்முகந்துண்டுமேற்செலிலங்கிலையலங்கல்வேலான்
பொருண்முகந்தெடுத்துவீசிப்புவியெலாம்புரக்குங்கையான்
வெருண்முகந்தொழியாவென்றிக்காங்கேயனெனுமோர்வேந்தன். 1

769 தாறுபாய்களிற்றானேற்றதரியலர்மகுடமேலா
லேறுபாய்பரியானெங்குமெதிர்ந்துசெலிவுளித்தேரான்
மாறுபாய்வயவர்வெள்ளமகிதலமுழுதும்போர்க்கப்
பாறுபாய்களத்துச்சென்றுபகைப்புறங்காணவல்லான். 2

770 செழுமணிப்பூணான்சார்ந்தவுயிர்க்கெலாஞ்செய்யுநீழன்
முழுமதிக்குடையானெல்லாக்கலைகளுமுற்றக்கற்றான்
பழுதில்வெண்ணீற்றுச்செல்வம்பாலிக்கும்பண்புமிக்கான்
றொழுதகுசிவமேமேலாம்பரமெனத்துணிந்தநீரான். 3

771 காமருகண்டதேவி ெஇனுநகர்கலந்துநாளு
மாமருமனைவிமக்கண்மலிதரவாழுநீரான்
பூமருவீசுமாலைப்புயாசலன்கடுஞ்சொலில்லான்
றேமருவடைந்தார்காட்சிக்கெளியவன்றிறத்தான்மிக்கான். 4

772 அனையவன்மதியான்மிக்கவமைச்சராதியர்தற்சூழ
நினைதருசெங்கோலோச்சிநீடுலகளிக்குநாளின்
வினையுறுவலியென்சொல்வாமேவுகோணிலைதிரிந்து
வனைதருமாரியின்றிவற்கடநிரம்பிற்றன்றே. 5

773 பரவுசோதிடநூல்வல்லார்பற்பலர்தம்மைக்கூவி
யுரவுநீர்ஞாலத்தென்னோமழைபெயலொழிந்ததென்றான்
புரவுசேரளியாயாண்டுபன்னிரண்டொழிந்துபோனால்
விரவுநீர்பொழியுமேகமென்றனர்வேந்தன்சோர்ந்தான். 6

774 உற்றபல்லுயிருமந்தோவுணவின்றிவருந்துமேயென்
றற்றமிலரசன்வேறுகளைகணுமறியானாகிச்
சொற்றடுமாறவீழ்ந்துசோர்ந்தனன்சோராநின்ற
மற்றவனுயிருண்கூற்றின்வற்கடம்பரந்ததன்றே. 7

775 கருமுகிலேட்டிலன்றிக்ககனத்துக்காண்பாரில்லை
யொருவிறம்பாணியன்றியுண்டிடும்பாணியில்லை
மருவுவெந்தாகநோயும்பசிநோயும்வருத்தலாலே
பொருவில்வெங்காமவேளும்போர்த்தொழிலொழிந்தானன்றே. 8

776 உழுதொழின்மறந்தாரெல்லாவுழவருமுழன்றுவெம்போர்க்
கெழுதொழின்மறந்தாரெல்லாவீரருமெரியுட்டெய்வந்
தொழுதொழின்மறந்தாரெல்லாப்பனவறுஞ்சோறுசோறென்
றழுதொழின்மறந்தாரில்லையகலிடத்தெவருமம்மா. 9

777 பூசைசெய்தன்றியொன்றும்புரிதராப்புந்தியோர்க்கு
மாசைதம்முயிர்போகாமற்காப்பதையன்றியில்லை
மாசையேவிகை்குஞ்சோரமரீஇப்புணர்மடந்தைமாரு
மோசைகூர்கற்பின்மிக்கமாதரொத்திருந்தாரண்றே. 10


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:42 am

778 கமர்பலவுடையவாகிக்கடும்பணியுலகந்தோற்றி
யமர்பலவேரியெல்லாமறல்கவர்நசைமீக்கஐொண்டே
யிமிழ்முகிலினங்காள்வேட்கையிரிதரவொருங்குநீலி
ருமிழ்புனலென்றுகாண்போமென்றுவாய்திறத்தலொக்கும். 11

779 விரும்புசெஞ்சாலிமற்றைவெண்சாலியரம்பையிஞ்சி
கரும்புகள்விளையாநின்றகாமருகழனியெல்லாம்
வரம்புபோய்நின்னதென்னதெனக்கொளும்வழக்குமாறிக்
கரம்புகளாயவென்றாலுயிர்நிலைகரைதற்பாற்றோ. 12

780 பாதலம்புகுதற்காயபாதையொன்றமைப்பார்போலப்
பூதலங்குடைந்துதண்டமாயிரமகழ்ந்துபோந்துங்
காதலம்புனல்கண்காணார்காணிலங்கவருமுன்னர்
மீதலம்பயிலும்வெய்யோன்வெப்பமுண்டொழிக்குமன்றே. 13

781 நகர்வயினில்லந்தோறுநகுமடைப்பள்ளியெல்லாந்
தகரருமடுப்பினூடுதழைந்தனமுளைத்தவாம்பி
புகர்படுமாணைபல்லிபுகுந்தனமுட்டையிட்டு
நிகரறக்கிடக்குமேன்றானிகழ்த்துவதின்னுமென்னே. 14

782 விழைதருகுளகிலாதுமெலிதருகளிநல்யானை
மழைபொழிதுவாரம்போலமதம்பொழிதுவாரமாகிக்
குழைதருதூங்கலாயுங்குறித்துரையத்தியாயும்
பிழைகண்முற்றுறுதோலாயுமொழிந்தனபெயர்தலற்றே. 15

783 கடுவிசைமுரணிற்றாவுங்கவனவாம்பரிகளெல்லாம்
படுபுனலுணவோடற்றுப்பசித்தழல்வெதுப்பப்பட்டு
நெடுவிலாவெகும்புதோற்றிநெட்டுயிர்ப்பெறிந்துதேம்பி
முடுவல்போனாக்குநீட்டிமுயங்கினவியைமாதோ. 16

784 குடம்புரைசெருத்தலாக்கள்கோதனமீனாவாகி
விடம்புரைகருங்கட்செவ்வாய்த்தெய்வமெல்லியலாரொத்த
கடம்புரைபறவையெல்லாங்கடுப்பொடுபறத்தலற்றுத்
தடம்புரைசடாயுவேபோற்றரைத்தலைநடந்தமாதோ. 17

785 ஒருவர்மற்றரிதுபெற்றசிற்றமுதொருகலத்து
மருவவைத்துண்ணுங்காலைமனங்கொளார்மிச்சிலென்று
வெருவவந்தொருவரீர்ப்பர்விரைந்திருவரும்வந்தீர்ப்பர்
கருதருமிதனைநோக்கிக்கரந்துவெத்துண்பாராரும். 18

786 முன்னவர்வேதமோதுமுறைமையுமறந்தார்செங்கோன்
மன்னவர்படையெடுக்குமாட்சியுமறந்தார்நாய்க
ரென்னவர்துலைக்கோறூக்குமியற்கையுமறந்தார்மற்றைப்
பின்னவருழுதலென்னும்பெற்றியுமறந்தாரம்மா. 19

787 காய்பசிதணிக்கவேண்டிக்காட்டகத்தூடுபுக்கு
மாய்தருவனைத்துநோக்கித்தழைகளுமாண்டவென்பா
ராய்தருமாயோன்முன்னாண்மண்முழுதள்ளியுண்டா
னேய்தருமுணவிலாதவித்தகுகாலத்தென்பார்.. 20


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:43 am

788 இன்னணமுயிர்கள்சாம்பல்கண்டிரங்குறகாங்கேய
மன்னவன்றன்பண்டாரமன்னியநிதிகளெல்லா
முன்னரிதாகமொண்டுமொண்டுபல்லிடத்தும்வீசி
யன்னனும்வறியனானானாரினித்தாங்கவல்லார். 21

789 நிதியெலாமாண்டபின்னர்நெடுமணிப்பணிகளெனப்
பதியெலாம்விற்றுவிற்றுப்பாருயிரோம்பிவந்தான்
றுதியெலாப்பொருளும்விற்றுத்தோற்றபினியாதுசெய்வான்
றிதியெலாவுயிர்க்குஞ்செய்யுந்திருநெடுமாலைச்சார்ந்தான். 22

790 ஆண்டவனருளினாலேயலங்குமிந்நகரத்துள்ளாற்
காண்டகநிருதித்திக்கிற்கவின்றவோர்கோயில்கொண்டு
பூண்டநற்கருணையாலேபோற்றுவையுயிர்களெல்லா
மீண்டவந்தடுத்தவெய்யகலியிரித்திடாமையென்னே. 23

791 என்றளியரசன்றாழ்ந்துவேண்டலுமிணர்த்துழாய்மா
னன்றுளமிரங்கியன்னான்காணமுன்னணுகிமன்னா
வொன்றுவெங்காலத்தீமைக்கியற்றலொன்றில்லையேனுஞ்
சென்றுநம்பிரானைத்தாழ்ந்துதெரியவிண்ணப்பஞ்செய்வோம். 24

792 வருதியென்றரசனோடுமருதமர்நீழன்மேய
பெருவிறலடிகட்சார்ந்துபெய்மலர்ப்பாதம்போற்றி
முருகமர்மாலைவேந்தன்முகிழ்த்தவற்கடத்தினாலே
யிருநிலத்துயிர்கள்சாம்புமெனப்பெருந்துயரத்தாழ்வான். 25

793 அன்னவன்றுயரந்தீரவாரருள்சுரத்தல்வேண்டு
மென்னரும்பரவிப்போற்றவிணர்மருதடியில்வாழு
முன்னவவென்றுபோற்றிமுகுந்தன்மிக்கிரத்தலோடுந்
தன்னருள்சரந்துமுக்கட்டம்பிரானருளிச்செய்வான். 24

794 மாயநீயிரந்தவாறேமன்னவற்கருளிச்செய்வோ
மாயவெங்கலியைத்தாங்குமளிதலைக்கொண்டுநம்பான்
மேயநீயின்றுதொட்டுக்கலிதாங்கியெனவிளம்புந்
தூயபேரொன்றுகோடியென்றனன்றெழுதான்மாலே. 27

795 தொழுதுமானிருதித்திக்கிற்றோன்றுதன்கோயிலுற்றான்
பழுதுதீரன்றுதொட்டுக்கலிதாங்கிப்பகவனென்று
முழுதுலகவனையோதுமுழங்குமப்பெயர்சொல்வார்க
ளெழுதுசீர்த்தியராய்வெய்யகலியிரித்திருப்பரன்றே. 28

796 அளிகிளர்திருமாலேகவண்ணல்காங்கேயனென்பான்
களிகிளர்நிருதிமூலைகலந்தொருநீர்த்தமாக்கித்
தெளிகிளரந்நீர்மூழ்கித்திப்பியநீறுபூசி
யொளிகிளருருத்திராக்கம்பூண்டெழுத்தைந்துமுன்னி. 29

797 அன்னபுண்ணியநன்னீர்மொண்டமலனையாட்டியாட்டிப்
பன்னரும்வில்வமாதிப்பற்பலமலருஞ்சூட்டிச்
சொன்னபல்லுணவுமூட்டித்தொக்கபல்லுபசாரங்க
ளென்னவுமினிதுசெய்துதிருமுனரிறைஞ்சிநின்றான். 30

798 இன்னணம்பூசையாற்றியிலங்கிலைவேற்காங்கேய
மன்னவன்வருநாண்முக்கண்வானவன்மருதநீழன்
முன்னவனருளிச்செய்ததிறமினிமொழிவாமென்று
பன்னருஞ்சூதன்சொல்வான்சவுநகமுனியைப்பார்த்தே. 31

காங்யேன்பூசைப்படல முற்றிற்று.
ஆக படலம் - 16 - க்கு, திருவிருத்தம் - 798.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:44 am

17. பொன்மாரி பொழிந்த படலம் (799 - 835)

799 வட்டவெண்குடைக்காங்கேயமன்னவன்றன்னாலாக்கப்
பட்டநீராட்டியாட்டிப்பரம்பரன்றன்னைப்பூசித்
திட்டமிக்குறுநாளோர்நாளருளுவதெந்நாளென்று
முட்டகலன்பினோடுமுன்னின்றுதுதிக்கலுற்றான். 1

800 வற்கடகாலமேலிட்டுயிரெலாமயங்கச்சாடி
யற்குதலுடையதாகவடியனேவருந்திச்சோர்வே
னொற்கமிலுணர்ச்சியாளர்க்குள்ளொளியாகிநிற்குஞ்
சிற்கனசொரூபவென்றோதிருவருள்செய்யுநாளே. 2

801 உறுகலிவருத்தாநிற்கவுயிரெலாம்வாடநோக்கித்
தெறுவகையில்லேனாயசிதடனேன்வருந்துகின்றேன்
மறுவறதவத்தோருள்ளம்வயங்குபுமன்னாநிற்குஞ்
சிறுமருதூரவென்றோதிருவருள்செய்யுநாளே. 3

802 வாவிமேன்மேலும்வந்துவற்கடம்வருத்தாநிற்கப்
பாவியேன்வருந்துகின்றேன்பளகிலாக்குணத்தோர்தம்மைக்
கூவியாட்கொள்ளுந்தெய்வக்குணப்பெருங்கடலேகண்ட
தேவிவாழ்பரமவென்றோதிருவருள்செய்யுநாளே. 4

803 என்றுநெஞ்சுருகிநையவிருகணீரருவிபாய
நின்றுதன்வருத்தமோம்பனினைந்துவிண்ணப்பஞ்செய்யும்
பொன்றுதலில்லாவன்பற்கிரக்கமில்லாரேபோல
வொன்றும்வாய்மலராதையரிருந்தனருடைந்துபோனான். 5

804 போனவன்கிரகம்புக்குப்புந்திசெய்யுணவும்வேண்டா
னானவன்றரைமேல்வீழ்ந்துகிடந்தனனனையபோது
வானவனருளினாலேநித்திரைவந்ததாக
வூனவன்மயக்கந்தீர்ப்பான்கனவகத்துற்றானன்றே. 6

805 நரைபொலிசிகைமுடிந்துநாலநெற்றியில்வெண்ணீறுந்
திரைபொலிமார்பிற்பூண்டதெய்வப்பூணூலுமல்க
வரைபொலிசழங்கற்பின்போக்காடையுத்தரீயத்தோடு
தரைபொலிதாளராகித்தண்டமொன்றூன்றிச்சென்றார். 7

806 விருத்தவேதியராய்ச்சென்றார்வேந்தர்கோன்முன்னநின்று
கருத்தமைதுயரமெல்லாங்காற்றுதிபெரியாளோடும்
வருத்தமொன்றின்றித்தெய்வமருதர்சிவம்யாங்கண்டாய்
பொருத்lமின்றுன்னைவாட்டிப்பொருகலிக்கின்றுதொட்டு. 8

807 நிலவுநாமமர்வன்மீகநின்றொர்பொற்கொடிமேற்றோன்றுங்
கலவமற்றதையரிந்துகோடிநாடோறுநின்பாற்
கலவுவார்தமக்குநல்கக்காணுமென்றருளிவானோர்
பலவுபாயத்துங்காணாப்பரமனார்மறைந்துபோனார். 9

808 கற்றைவார்சடிலத்தையர்கனவில்வந்தருளிச்செய்த
வற்றைநாண்முதற்கொண்டியாருமவர்தமைவிரத்தரென்பார்
புற்றையார்பிரானோவென்றுபொருக்கெனவிழித்தான்வேந்த
னொற்றையாழியந்தேரோனுமொத்துடன்விழித்தானன்றே. 10


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:44 am

809 அதிசயம்பயப்பமன்னன்சிரமிசையங்கைகூப்பி
மதிமகிழ்சிறப்பவான்றமந்திரர்முதலோர்க்கூவிப்
புதியதன்கனவுகூறிப்பொருக்கெனவெழுந்துசென்று
கதியருடெய்வமேன்மைச்சிவகங்கைகலந்துமூழ்கி. 11

810 நித்திய கரும முற்றி நிறைந்துபே ரன்பு பொங்கச்
சத்திய ஞானா னந்தத் தனிப்பரஞ் சோதி வைகும்
பொத்திய திருவன் மீகத் தெதிர்புகுந் திறைஞ்சிக் கண்டான்
மெத்திய தேசு மிக்கோர் பொற்கொடி விளங்கா நிற்றல். 12

811 கனவிடை யையர் வந்து கட்டுரைத் திட்ட வாறே
நனவிடை நிரம்பக் கண்டு நயந்துகா ரேனக் கோடு
மனவிடை யமைத்தார் செய்த திருவருண் மதிக்குந் தோறப்
புனவிடை யாரைப் பல்காற் போற்றுவான் றுதிப்பான் மன்னன். 13

812 பூசைமுன் போலச் செய்து புற்றின்மேற் றோன்றா நிற்கு
மாசையங் கொடியை வாளா லரிந்துகைக் கொண்டு மாடத்
தோசையங் கழலான் சென்றா னற்றைநா ளுற்றோர்க் கெல்லா
மீசைபங் குடையான் றன்பே ரருணிகர்த் திருந்த தன்றே. 14

813 வழிவரு நாளு முன்போல் வந்துபூ சித்துச் செம்பொன்
பொழிகொடி முன்னை நாள்போற் பொலிந்திருந் திடவ ரிந்து
கழிமகிழ் சிறப்பக் கொண்டு கலந்தவர்க் கிலையென் னாது
பழிதப வன்று நல்கும் படிநிறைந் திருந்த தம்மா. 15

814 பற்பல நாளு மிந்தப் படியரிந் தரிந்தெ டுத்துப்
பொற்புற வருவோர்க் கெல்லாம் வறுமைபோக் கிடுவா னேனு
மற்புற வற்றைக் கன்றி மறுதினத் திற்க வாவும்
பெற்றிமற் றொழிந்த தின்றே யுயிர்க்கெனப் பெரிது முள்வான். 16

815 ஒருதினம் பண்டு போல வுற்றுவண் கொடியைப் பற்ற
மருதமர் முக்கண் மூர்த்தி மற்றவன் கவலை தீர்ப்பான்
கருதுபைங் கொடியை யுள்ளாற் செலுத்தினன் கவலை யோடு
வெருவுமுள் ளலைப்பப் பற்றி விடாதிழுத் தனன்பார் வேந்தன். 17

816 இழுத்தலும் புற்று விண்டு சிதர்ந்ததங் கிலிங்க மாய
முழுத்தசெஞ் சோதி தோன்ற முகிழ்த்தபொற் கொடியை விட்டே
யெழுத்தடந் தோளா னஞ்சி யிருகரங் குவித்து வீழ்ந்தான்
பழுத்தபே ரன்பன் காணும் படிவெளி வந்தா ரையர். 18

817 கனவகம் வந்தாற் போல நனவினுங் காட்சி நல்கும்
பனவரைக் கண்டு தாழ்ந்து பார்த்திபன் றுதித்து நின்றான்
றினகர கோடி யென்னத் திருவுருக் கொண்டு நின்ற
வனகமா மறையோர் பொன்பெ யெழிலியை நினைத்தா ரன்றே. 19

818 நினைத்தலு மோடி வந்து நெஞ்சநெக் குருகித் தாழ்ந்து
நனைத்தடங் கொன்றை மாலை நம்பனே பணியா தென்னக்
கனைத்தமா முகில்காள் கண்ட தேவியி னெல்லை காறு
முனைத்தபொன் பொழுதி ராலோர் முகுர்த்தமென் றருளி னானே. 20


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:44 am

819 இவ்வண்ணமருளிச்செய்தேயிலிங்கத்துண்மறைந்தானெம்மான்
வெவ்வண்ணவேலான்மிக்கவிம்மிதனாகிநின்றான்
செவ்வண்ணப்பெருமான்சொற்றதிருமொழிசென்னிமேற்கொண்
டவ்வண்ணப்புயல்களெல்லாமெழுந்துவானடைந்தமாதோ. 21

820 வானகம்பரந்துநின்றேவளர்கண்டதேவியெல்லை
யானவைங்குரோசமட்டுமமைதரவொருமுகுர்த்த
மீனமில்செம்பொன்மாரியெல்லையில்லாதுபெய்த
தேனகமலர்பூமாரிதேவரும்பொழிந்தாரன்றே. 22

821 புடவிபொன்னிறமேயென்பார்பொன்னெனாதென்னோவென்பா
ரிடவியபுவிமறைத்தவித்துணைச்செம்பொன்முற்றுந்
தடவியெங்கெடுத்துவந்தித்தண்முகில்பொழிந்ததென்பார்
மடவியல்வறுமைசெய்தவற்கடமொழிந்ததென்பார். 23

822 மன்னியபுகழ்க்காங்கேயன்வான்றவம்பெரியதென்பார்
மின்னியவனையானொக்கும்வேந்தருமுளரோவென்பார்
துன்னியவவன்செங்கோலேதூயசெங்கோல்காணென்பார்
பன்னியவவனேதெய்வம்படிக்குவேறில்லையென்பார். 24

823 வையகமாந்தரெல்லாமின்னணமகிழ்ந்துகூறச்
செய்யகோன்மன்னர்மன்னன்சேனையைக்காவலிட்டே
யையபொன்னடங்கவாரியமைந்ததென்மேருவென்ன
வெய்யவற்கடம்போய்நீங்கிவிலகுறக்குவித்துப்பார்த்தான். 25

824 மலையெனக்குவிந்தசெம்பொன்வளமுழுதமையநோக்கி
யிலையெனற்கிசையார்யாருமிரந்திடப்படுவோராகக்
கலையெனப்படுவவெவ்லாங்கற்றுணர்ந்தவருஞ்செல்வ
நிலையெனவாரிவாரிக்கொடுத்தனனிருபர்வேந்தன். 26

825 மிடிகெடமுகந்துசெம்பொன்வேந்தர்கோன்கொடுக்கும்போதே
படிகெடவருத்திநின்றபாவவற்கடகாலத்தின்
குடிகெடவெழுந்துகொண்மூகுரைகடலுண்டுவெய்யோன்
கடிகெடவிசும்புபோர்த்துக்கதிர்த்தவில்லொன்றுவாங்கி. 27

826 மிடிபுரிகாலந்தன்னைவாள்கொடுவெட்டியாங்குக்
கடிபுரிதடித்துவீசிச்சளசளவென்றுகான்ற
படிபுரிகளிநல்யானைப்பரூஉப்புழைக்கானேர்தாரை
வெடிபுரியேரியாதிவெள்ளமாய்முடியமாதோ. 28

827 விரம்புநீரெங்கும்போர்ப்பமென்பணையுழுதலாதி
யரும்புபஃறொழிலுமேன்மேன்மூண்டனவாதலாலே
யிரும்புலமெங்குஞ்செந்நெல்வெண்ணெலாதிகளுமீண்டக்
கரும்புபைங்கதலியாதிகஞலினபாண்டிநாடு. 29

828 உரம்பொலிவறுமைநீங்கியொழிந்துசெல்வஞ்செருக்கி
வரம்பொலிபாண்டிநாடுவாழ்தரக்கண்டமன்ன
னிரம்பொலிநறுநீர்வேணிநின்மலனருளாவலிந்தப்
பரம்பொலிமகிழ்ச்சியெங்கும்பராயதென்றுவகைபூத்தான். 30


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:45 am

829 சிறுமருதூரின்மேயதெய்வநாயகர்க்குமன்பிற்
பெறுமொளிர்கருணைமேனிப்பெரியநாயகிக்கும்பாசந்
தெறுமொருகுஞ்சிதத்தாட்டிருநடராசருக்கு
மறுதியின்மற்றையோர்க்குமாலயமெடுக்கலுற்றான். 31

830 வானளவோங்குசெம்பொற்கோபுரம்வயங்குநொச்சி
யூனமில்கருவிலத்தமண்டபமுரையாநின்ற
வேனவுஞ்செம்பொனாற்செய்திலங்குபன்மணிகால்யாத்துக்
கூனல்வெஞ்சிலையானன்னாட்கும்பாபிடேகஞ்செய்து. 32

831 குடைகொடிமுதலாயுள்ளவிருதும்பொற்குடமுன்னாக
மிடைபல்பாத்திரமுமோலியாதிவில்வீசுபூணு
மடைதருகனகவாடையாதிவட்டமும்பல்லூரு
முடைமதக்களிறுமாவுமெண்ணிலவுதவினானே. 33

832 நித்தியவிழவுமுன்னாநிகழ்பலவிழவுஞ்செய்து
சத்தியஞானானந்தத்தனிப்பரஞ்சுடர்க்குயாரும்
பொத்தியவொளிர்பொன்மாரிபொழிந்தவரென்னும்பேரிட்
டொத்தியனகர்க்குஞ்செம்பொன்மாரியென்றுரைத்தானாமம். 34

833 பொலிதருசெம்பொன்மாரிபொழிந்தவர்திருமுன்னாக
வொலிதருகழற்கான்மன்னனெஞ்சியவொளிர்பொன்னெல்லா
மலிதரும்படிபுதைத்துவைத்தனன்கணங்கள்காத்து
நலிதருவருத்தமாக்குமாங்குநண்ணுநரையின்னும். 35

834 எண்ணருநாள்களிவ்வாறிருந்தரசாட்சிசெய்து
நண்ணரும்பொன்பொழிந்தகண்ணுதலருளினாலே
நண்ணருஞ்சிவலோகத்தைநண்ணிவீற்றிருந்தான்வானோர்
மண்ணருமகிழ்ச்சிபொங்கமலர்மழைசொரிந்தாரன்றே. 36

835 போற்றுபொன்மாரியூரிற்காங்கேயன்பொலியமுந்நா
ளாற்றுநீர்படிவோர்யாருமரும்பெரும்போகத்தாழ்வார்
நீற்றுமாமுனிவசெம்பொன்பொழிந்தமைநிகழ்த்தினோமேற்
சாற்றுதுங்கேட்டியென்றுதவப்பெருஞ்சூதன்சொல்வான். 37

பொன்மாரிபொழிந்தபடலம் முற்றிற்று.
ஆக படலம்-17-க்கு-திருவிருத்தம்-835


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:46 am

18. சிலைமான் வதைப்படலம்

836 பஞ்சுசேரடிபங்காருள்செய,
மஞ்சுகான்றகனகத்துண்மன்னவ
னெஞ்சுசெம்பொன்புதைத்திருக்கின்றசொல்,
விஞ்சுமானிலத்தெங்கும்விராயதே 1

837 வடபுலத்தவன்வாய்ந்தபடையினா,
னடல்மிகுத்தவனாழியவாவினான்
மடனுடைச்சிலைமானெனும்பேரினான்,
விடனொருத்தன்விழைந்திதுகேட்டனன் 2

838 கேட்டபோதுகிளர்ந்தெழும்வேட்கையா,
னாட்டமார்கண்டதேவியைநண்ணி
யே, யீட்டரும்பொனெலாங்கவர்வாமெனா,
வோட்டமாய்வருவான்படையோடரோ. 3

839 வலத்துமிக்கவடபுலத்தான்வந்து,
கலக்கும்வார்த்தைமுன்கண்டவர்கூறிடத்
தலத்துமேவியயாருமவன்றனை,
விலக்குமாற்றலிலேமென்றுவெம்பினார். 4

840 என்னசெய்துயினியெனநாடியே,
முன்னவன்றிருக்கோயிலைமுன்னினா
ரன்னமன்னவணங்கொருபாலுடைச்,
சொன்னமாரிபெய்தாரைத்தொழுதனர். 5

841 சம்புசங்கரதற்பரவற்புத,
வெம்புமெங்கண்மெலிவைத்தவர்த்தருள்
வம்புசெய்யும்வடபுலத்தான்வந்துன்,
பம்புசெம்பொன்கொளாவகைபண்ணியே. 6

842 என்றுகூறியிறைஞ்சிமுறையிட,
வன்றுநாயகனாகாயவாணியா
லொன்றுமாறுரைப்பானொன்றுமஞ்சலீர்,
வென்றுமற்றவனாருயிர்வீட்டுவோம். 7

843 பின்னமில்லாப்பெரியசிறையிலி,
சின்னமேயசிறியசிறையிலி
யென்னவாழ்நம்மிடபமிரண்டையு,
முன்னமேவமுடுக்குவிடுமென்றான். 8

844 என்றசொற்செவியேற்றுமகிழ்ந்தனர்,
குன்றநேர்தருகுண்டையிரண்டையு
மன்றவையன்றிருமுன்வரவழைத்,
தொன்றநல்லுபசாரம்புரிவரால். 9

845 ஆட்டிநீரினரியவுணவெலா,
மூட்டியப்பியுவப்புறுசாந்தந்தார்
சூட்டியங்கைதொழுதுபகைவனை,
மாட்டிவம்மினென்றார்தலவாணரே. 10


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:46 am

846 தலையசைத்துப்பயப்பயத்தாள்பெயர்த்,
திலையப்பிலமாலையிலங்குற
நிலையகாரிருள்கோட்டணிநீக்கிட,
மலைபெயர்ந்தெனச்சென்றனமால்விடை. 11

847 கோடுகொண்டுவன்மீகங்குதர்ந்துநாத்,
தோடுகொண்டிருதுண்டந்துழாவியே
மாடுகொண்டெழுவாஞ்சையனைத்துரீஇ,
நீடுகொண்டகடுப்பொடுநேர்ந்தன. 12

848 காலினாற்சிலர்தம்மைக்கலக்கிடும்,
வாலினாற்சிலராருயிர்மாய்த்திடும்
வேலினாற்பொலிவீரர்தம்முட்சுவைப்,
பாலினாற்பொலிபுல்லங்களென்பவே. 13

849 பூட்டிநாண்விற்பொருகணையேவிட,
வீட்டியன்னவையாவும்விரைந்தெழீஇக்
கோட்டினாற்குத்திச்சாய்த்துக்குளிறிடு,
மீட்டினாற்பொலிபுல்லங்களென்பவே. 14

850 இன்ன வாறுப டையினை யீறுசெய்
தன்ன வெஞ்சிலை மானை யடர்ந்தெழுந்
துன்ன வாமவ னேதி யொருங்குமேற்
றுன்ன வாலின டித்துத் துடைத்தன. 15

851 கல்லி னைப்பொடி கண்டிடு தோளினான்
வில்லி னைப்பொடி காணமி தித்தவன்
மல்லி னைப்பொடி தோற்றி வயங்கிளர்
புல்லி னைப்பொடி பூணி முழங்கின. 16

852 ஆய காலைய வன்சினங் கொண்டுநேர்
பாய வேறுக ளும்மெதிர் பாய்ந்திடத்
தீய மார்பிற் றிணிமருப் பாழ்ந்தன
போய தாலவ னாவிபு லம்பியே. 17

853 மீண்டு நாயகன் கோயிலை மேவின
வாண்டி யாரும திசய மெய்தின
ரீண்டு வான்சிவ கங்கையி ரும்புகழ்
வேண்டு மாநவில் வரமெனுஞ் சூதனே. 18

சிலைமான்வதைப்படலம் முற்றிற்று.
ஆக படலம் - 18 - க்கு - திருவிருத்தம் - 853.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:47 am

19. சிவகங்கைப் படலம் (854- 868)

854 திருவளர் சிறப்பு வாய்ந்த சிவகங்கை மூழ்கு வோர்க்கு
மருவளர் தரும நல்கும் வளத்தினாற் றரும தீர்த்த
முருவள ரருத்த நல்கு முண்மையா லருத்த தீர்த்தங்
கருவளர் காம நல்கு மேதுவாற் காம தீர்த்தம். 1

855 பெறவரு முத்தி நல்கும் பெற்றியான் முத்தி தீர்த்த
முறலருந் தீர்த்த மெல்லா முறுதலிற் சறுவ தீர்த்த
மறவரு ஞான மேன்மேல் வளர்த்தலான் ஞான தீர்த்தஞ்
செறலரு மிட்ட மெல்லாஞ் செறித்தலி னிட்ட தீர்த்தம். 2

856 குட்டநோய் தொழுநோய் பொல்லாக் குன்மநோய் விழிநோய் வெய்ய
கட்டநோய் நெய்த்தோ ராதி காலுநோ யிரக்க முற்றும்
விட்டநோ யென்று யாரும் விளம்புநோ யனைத்து மாய்ந்து
பட்டநோ யாகு மந்தப் பட்டநீர் மூழ்கு வார்க்கே. 3

857 பெயர்வரி தாய மண்ணை பிரமராக் கதம்வெம் பூத
மயர்வரு மனைய தீர்த்த மாடினோர் தமைவிட் டேகு
முயருறு மனைய தீர்த்தத் தொருநுனி பட்ட போது
மயருறு பாவ மெல்லாம் வயங்கழ லிட்ட பஞ்சாம். 4

858 அன்னமா தீர்த்தக் கோட்டிற் றென்புலத் தவருக் காற்று
நன்னர்வான் செய்கை யெல்லா நயந்தனர் நாடி யாற்று
லென்னபா தகரே யேனு மெய்துவர் சுவர்க்க மாக
தன்னமு மடையா ரெல்லாப் போகமுந் தழுவி வாழ்வார். 5

859 ஆண்டுயர் தோற்ற மாதத் தோற்றமீ ரயனம் யாரும்
வேண்டுமீ ருவாவி யாள மதிகதிர் விழுங்கு கால
மீண்டுநற் சோம வார மிவைமுத லியநா ளன்பு
பூண்டதிற் படிவோ ரெய்தும் புண்ணிய மளவிற் றாமோ. 6

860 அலர்செறிகற்பநாட்டினமர்ந்துசெயரசுவேண்டின்
மலர்மிசையிருக்கைவேண்டின்மூசுணக்கிடக்கைவேண்டி
னுலர்வவென்றிவற்றையெள்ளியுறுபெருவாழ்க்கைவேண்டிற்
பலர்புகழனையதீர்த்தம்படிந்தினிதாடல்வேண்டும். 7

861 அன்னநீரகத்துதித்ததவளைமீனாதியாய
வென்னவுங்கயிலாயத்தையெய்திவீற்றிரந்துபன்னாட்
பின்னரத்தலத்தேவந்தோர்பெறலரும்பிறவியுற்று
நன்னர்மெய்ஞ்ஞானம்பெற்றுநம்பிரான்பதமேசாரும். 8

862 புண்ணியம்பயக்குநாளிற்பொங்குமத்தீர்த்தமூழ்கிக்
கண்ணியமருதவாணர்கழலடிக்கன்பராய
தண்ணியமறையோர்மற்றைச்சாதியோரெவர்க்குங்கையி
னண்ணியசெம்பொனாதிநல்குமாதவத்தின்மிக்கார். 9

863 மனைமகவாதியெல்லாச்சுற்றமுமருவவாழ்ந்து
கனைகடலுலகநீத்துக்கற்பகநாடுபுக்குப்
புனைபெரும்போகமார்ந்துபுண்ணியனருளாலீற்றிற்
றனைநிகர்சிவலோகத்திற்சார்ந்துவாழ்ந்திருப்பரன்றே. 10


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:48 am

864 விரிதிரைபரப்புங்கங்கைகாளிந்திவிருத்தகங்கை
புரிதருயமுனைகண்ணவேணிபொன்பொலிகாவேரி
யிரிதலில்பொரநையாதியெய்துபுபன்னாண்மூழ்கி
னுரியபேறனையதீர்த்தத்தொருதினம்படியினுண்டாம். 11

865 பற்பலவுரைப்பதென்னைபாரிடத்தெவருஞ்சென்று
சொற்பொலியனையதீர்த்தந்துளைகமுற்றாதேயென்னி
லற்புறவரவழைத்தாவதுபடிதருதல்வேண்டு
மற்பொலியதுவுமுற்றாதென்னின்மற்றுரைப்பக்கேண்மோ. 12

866 சாற்றுமந்நீரிற்றோய்ந்ததவமுடையரைக்கண்டேனும்
போற்றுதல்வேண்டுமன்னாரரியரேற்புகலத்தீர்த்த
மேற்றவழ்காற்றுவந்துமேனியிற்படுமாறேனு
மாற்றுதல்வேண்டும்போகமாதிகள்விரம்பினோரே. 13

867 மன்னியகதிரோன்றீர்த்தமதியவனியற்றுதீர்த்தம்
பன்னியசடாயுதீர்த்தம்பரவுகாங்கேயன்றீர்த்த
மன்னியபிரமனாதிமூவரும்புரிந்ததீர்த்த
நன்னியமத்தமேன்மைநவின்றனமுன்னங்கண்டாய். 14

868 எண்ணரும்புகழ்சாறேவியியற்றியவனையதீர்த்தக்
கண்ணரும்பெருமையாரேகணித்தெடுத்துரைக்கவல்லார்
பண்ணருந்தவத்தினாரேபற்றமத்தலத்தின்மேன்மை
விண்ணருமவாவுநீரதறியெனவிளம்புஞ்சூதன். 15

சிவகங்கைப்படலம் முற்றிற்று.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:49 am

20. தலவிசேடப் படலம்

869 பார்கெழுகயிலைமேருபருப்பதம்வாரணாசி
சீர்கெழுதிருக்காளத்திதிருவாலங்காடுகாஞ்சி
யேர்கெழுமுதுகுன்றண்ணாமலைகழுகிருக்குங்குன்ற
மார்கெழுதில்லைகாழியணியிடைமருதூராரூர். 1

870 ஆலவாய்திருக்குற்றாலமணியிராமீசமின்ன
சீலமார்தலங்களுள்ளுஞ்சிவபிராற்கினியதாய
மூலமாந்தலமாயெல்லாவளங்களுமுகிழ்ப்பதாயெக்
காலமுமுளதாயோங்குதலங்கண்டதேவியொன்றே. 2

871 புண்ணியமுதல்வியென்னும்புவனங்களீன்றதாயே
நண்ணியவிருப்பின்மேவிநற்றவம்புரிந்தாளென்னி
லெண்ணியவனையதானம்போல்வதொன்றினியுண்டென்று
கண்ணியவமையுங்கொல்லோகரையுமுப்புவனத்துள்ளும். 3

872 உலகெலாமீன்றசெல்வியுறுதவம்புரிந்ததன்றி
யலகிலத்தவத்தின்பேறாவையர்பாலளவிலாது
நிலவுபல்வரமுங்கொண்டுநிரப்பினண்மேலுமென்னிற்
குலவுமத்தலத்துக்கொப்பொன்றுளதெனல்கூடுங்கொல்லோ. 4

873 மிடிதவிர்த்தருளாயென்றுவேண்டிடுமடியார்க்கென்றும்
படியில்பொற்காசுமுன்னாப்பலவளித்திட்டதன்றி
நெடியபொன்மாரிபெய்ததுண்டுகொனெடுநீர்வைப்பி
லொடுவிலத்தலத்திற்கொப்பென்றொருதலஞ்சொல்லப்போமோ. 5

874 அன்னமாதலத்திலாதிசைவர்களமருமாறும்
பன்னகாபரணனன்பிற்பனலர்மற்றுள்ளோராய
வென்னருமமருமாறுமிடஞ்சமைத்துதவுவோரு
நன்னுமற்றவர்க்குவேண்டுமடைமுதல்வழங்குவோரும். 6

875 சத்திரமியற்றியன்னதானஞ்செய்திடுகின்றோரு
மொத்தியன்மடங்களாக்கிமுனிவருக்குதவுவோரு
மெத்தியபொழிலுண்டாக்கிவெள்விடைப்பெருமாற்கென்று
பத்தியினுதவுவோரும்பழனங்கணல்குவோரும். 7

876 திருமுடியாட்டுமாறுதிருந்துபால்பொழியாநிற்கும்
பெருமடித்தலத்தினாக்கள்பேணிநன்குதவுவோரு
மருவியகிலமாயுள்ளமண்டபமதின்முன்னாய
பொருவில்பற்பலவுநன்குபொலிதரப்புதுக்குவோரும். 8

877 திருவிழாச்சிறப்பிப்போரும்பூசையைச்சிறப்பிப்போரு
மருவியவேனிற்காலம்வளங்கெழுதண்ணீர்ப்பந்தர்
பொருவரவைக்கின்றோருநந்தனம்பொலியச்செய்து
திருவமர்பள்ளித்தாமஞ்சாத்திடல்செய்கின்றோரும். 9

878 இன்னவர்பலருமண்ணிலிருங்கிளைசூழவாழ்ந்து
பன்னருஞ்சுவர்க்கமேவிப்பற்பலபோகமார்ந்து
பின்னர்நம்பெருமான்செய்யும்பேரருட்டிறத்தினாலே
யன்னவன்சிவலோகத்தையடைந்துவாழ்ந்திருப்பரன்றே. 10

879 பற்பலவுரைப்பதென்னைபாரிடத்தறஞ்செய்வோர்க
ளற்பதம்பயவாநிற்குமத்தலமடைந்துசெய்யி
னற்பயன்மேருவாகுநவிலணுவளவேயேனுங்
கற்பனையன்றீதுண்மைகரிசறுத்துயர்ந்தமேலோய். 11

880 இத்தகுபுராணத்தாங்காங்கிசைத்தனமனையதானத்
துத்தமவிசேடமெல்லாமுரைத்திடமுற்றுங்கொல்லோ
சத்தறிவின்பரூபத்தனிமுதல்சரணஞ்சார்ந்த
சுத்தமெய்த்தவத்தோயென்றுசொற்றனன்சூதமேலோன். 12

881 சாற்றருமகிழ்ச்சிபொங்கச்சவுநகமுனிமுன்னானோர்
மாற்றருந்தலத்துச்சூதமாமுனிபாதம்போற்றி
யாற்றருமகமுமுற்றியனைவருமெழுந்துபோந்து
சேற்றருநறுநீர்வாவிச்சிறுமருதூரையுற்றார். 13

882 தெளிதருநன்னீராயசிவகங்கையாதித்தீர்த்தங்
களிதருசிறப்பின்மூழ்கிமருதடிகலந்துளானை
நளிதருகருணைவாய்ந்தபெரியநாயகியைப்போற்றி
யளிதருமுவகையோராய்நைமிசமடைந்துவாழ்வார். 14

883 பழுதகல்கண்டதேவிப்புராணத்தைப்படிப்போர்கேட்போ
ரெழுதுவோரெழுதுவிப்போரிரும்பொருளாய்வோர்சொல்வோர்
முழுதமைசெல்வத்தாழ்ந்துமுனிவரும்போகமாந்திப்
பொழுதுபற்பலதீர்ந்தீற்றிற்புண்ணியனடியேசார்வார். 15

884 வேறு.
சீர்பூத்தபொன்மாரிசிறுமருதூரெனுங்கணடதேவிவாழ்க
பார்பூத்தவனையதலபாலனஞ்செய்வணிகரெல்லாம்பரவிவாழ்க
கார்பூத்தகுழற்செவ்வாய்ப்பெரியநாயகியம்மைகருணைவாழ்க
வேர்பூத்தபொன்மழைபெய்தவர்மணிமன்றெடுத்தபொற்றாளென்றும்வாழ்க. 16

தலவிசேடப்படலம் முற்றிற்று.

-----------------------
கண்டதேவிப்புராணம் முற்றிற்று.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 4 of 4 Previous  1, 2, 3, 4

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum