ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கண்டதேவிப் புராணம்

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:03 am

First topic message reminder :

கண்டதேவிப் புராணம்
திரிசிரபுரம் மஹாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றியது.இஃது சிவநேசம் பொருந்திய வெளிமுத்தி வயிரவ ஐயாவவர்கள் அநுமதிப்படி தேவகோட்டை மு.குப்பான் செட்டியாரவர்கள் குமாரர் முத்தரசப்பசெட்டியாரால் சென்னை இலக்ஷ்மீவிலாச அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.


கடவுள் வாழ்த்து


1 விநாயகர்
பூமேவு பரையொருபாற் பெருமான்பின் பாற்றழுவிப் புணர்ந்தொன் றாய
மாமேவு பெண்பாலாண் பாலொடுமா றுற்றெரிந்து மாறு றாமே
தூமேவு முன்பால்வந் துறத்தழீஇ யொருமருப்பாற் றுணைப்பா லாய
தேமேவு முகமலரும் வலம்புரிக்குஞ் சரத்திருதாள் சேர்ந்து வாழ்வாம் 1

2 சொர்ன்னவருடேசர்
மாமேவு கடவுளருந் தடவுளருஞ் சுரும்பமர்பூ மாலை வேந்துங்
கோமேவு மலரானும் பலரானும் புகழ்திகிரிக் குரிசி றானுந்
தேமேவு பண்ணவரு நண்ணவருள் சுரந்துகண்ட தேவி மேவும்
பாமேவு புகழ்ச்செம்பொன் மாரிபொழிந் தவர்மலர்த்தாள் பரசி வாழ்வாம் 2

3 தேமாரி யமன்பதைக ளுளங்கருதி யன்னையுஞ்சீர் திகழ்பி தாவு
மாமாரி யனுமுலவாப் பெருங்கதியு நீயேயென் றடைந்து போற்றக்
காமாரி யாயிருந்துங் கவுமாரி யொடுங்கலந்த கருணை மூர்த்தி
பூமாரி சுரர்பொழியப் பொன்மாரி பொழிந்தபிரான் பொற்றாள் போற்றி 3

4 பெரியநாயகி
சொற்றபெரும் புவனமெலா மொருங்கீன்ற பெருந்தலைமைத் தோற்றத் தானோ
கொற்றமிகு பெருங்கருணை சுரக்குமிறை மையினானோ குமரி யாயுங்
கற்றமையிப் பெயர்பூண்டா யெனுமருத வாணரெதிர் கனிவா யுள்ளாற்
சற்றமைய முறுவலித்து மகிழ்பெரிய நாயகிதா டலைமேற் கொள்வாம் 4

5 வாய்ந்தபர சத்தியாய் விந்துவாய் மனோன்மணியாய் மகேசை யாய்ச்சீர்
வேய்ந்தவுமை யாய்த்திருவாய்ப் பாரதியா யிவரன்றி வேறா யின்னு
மேய்ந்தசிறை யிலிநாத னெத்திறநிற் பானதனுக் கியைய நின்றே
தோய்ந்தவுயிர்க் கின்புதவும் பெரியநா யகிதுணைத்தா டொழுது வாழ்வாம் 5

6 சபாநாயகர்.
மறையாதியியம்புகுறிகுணங்கடந்தோரைந்தெழுத்தேவடிவமாகி
நிறையாதிபடைப்பாதிதுடியாதியோரைந்துநிகழ்த்தநாளு
மிறையாதிதவிர்ந்திருவர்வியந்தேத்தவுமைதிருக்கண்விழைந்துசாத்த
வறையாதிமணிமன்றுண்டநவிலும்பெருவாழ்வையடுத்துவாழ்வாம் 6

7 சிவகாமியம்மை.
ஆன்றதாயடைந்தசுகங்கருவுமடைதருமாலென்றறைகூற்றிற்கோர்
சான்றதாயெவ்வுயிருமடையின்பந்தானடையுந்தவாலின்பாக
நான்றதாய்மிளிர்சடிலநாதனியற்றானந்தநடனங்காணு
மீன்றதாய்சிவகாமவல்லியிருதாமரைத்தாளிறைஞ்சிவாழ்வாம் 7

8 தட்சணாமூர்த்தி.
வேறு.
ஆய்தருபொருளுமாராய்ந்தடிநிழலடங்குமாண்பும்
வேய்தருமலர்நேரங்கைவிரலிருகூற்றிற்றேற்றித்
தோய்தருமுனிவர்நால்வர்துதித்திடக்கல்லாலென்னும்
பாய்தருவடிவாழ்முக்கட்பரனடிக்கன்புசெய்வாம் 8

9 வயிரவர்.
புகர்படுசெருக்குமேவல்புன்மையென்றெவருந்தேறப்
பகர்மறைகமழாநிற்கும்பரிகலமங்கையேந்தி
நிகரின்மான்முதலோர்மேனிநெய்த்தோர்கொண்டொளிர்பொன்மாரி
நகரினிதமர்ந்துவாழும்வடுகனைநயந்துவாழ்வாம் 9

10 மருதவிருட்சம்.
வேறு.
பரவியநாதமூலமாப்பராரைபணைகிளைகொம்பொடுவளாரும்
விரவியபஞ்சசத்தியாத்தளிர்கள்வேதமாமலர்களாகமமாக்
கரவியலாதவாசமைந்தெழுத்தாக்காமருசுகோதயமதுவா
வுரவியன்ஞானசொரூபமேயாகியொளிர்தருமருதினைத்துதிப்பாம் 10

11 வலம்புரிவிநாயகர்.
வேறு.
ஓங்குபெருந்தனக்கினமாயுற்றமதவாரணங்களொருங்குதேம்பி
யேங்குதிறமுறவருத்திவணக்கிடுமங்குசபாசமென்னுநாமந்
தாங்குபடையிரண்டுமொருதனைவணங்கக்கரத்தேந்தித்தலைமைபூண்டு
தேங்குநெடுங்கருணைபொழிவலம்புரிக்குஞ்சரத்திருதாள்சென்னிசேர்ப்பாம் 11

12 சுப்பிரமணியர்.
வெயிலேறவிரிக்குமுடிவானவர்விண்குடியேறவெள்ளையானை
குயிலேறவரிபிரமர்புள்ளேறவம்மனைவேர்கூடாமாதர்
கயிலேறமிளர்கடக்கையேறமெய்யேறக்கவினார்தன்கை
யயிலேறவமர்ந்துசிறைமயிலேறும்பெருமானையடுத்துவாழ்வாம். 12

13 திருநந்திதேவர்.
வேறு.
வரைபொடிபடுக்கும்வச்சிரப்படையும்வலிசெழுதண்டவெம்படையும்
விரைசெலற்றிறத்தின்மாற்றலர்நடுங்கும்விளங்கொளித்திகிரியம்படையும்
புரையமைசமழ்ப்புப்பொருந்தவில்வீசிப்பொலியும்வேத்திரப்படைதாங்கி
யுரையமைகயிலைகாத்தருணந்தியொருவனைமருவியேத்தெடுப்பாம். 13

14 தமிழாசிரியர்.
வேறு.
பன்னிருதடங்கைச்செம்மல்பாற்சிவஞானம்பெற்றுப்
பன்னிருகதிருமொன்றாம்பான்மையின்விளங்கிநாளும்
பன்னிருதவமாணாக்கர்பழிச்சிடமலையமேவப்
பன்னிருசரணநாளுந்தலைக்கொடுபரவுவோமே. 14

15 திருஞானசம்பந்தசுவாமிகள்.
அறைவடமொழிநவின்றபாணினியகத்துநாண
விறையமர்மயிலைமூதூரிருந்தவோர்தாதுகொண்டே
நிறைதரவொராறுமேலுநிரப்புதென்மொழிநவின்ற
மறையவன்காழிவேந்தன்மலரடிக்கன்புசெய்வாம். 15

16 திருநாவுக்கரசுசுவாமிகள்.
நீற்றுமெய்ச்சிவனேயென்றுமவனினுநிறைந்தாரென்றுஞ்
சாற்றுதற்கியையத்தந்தைதன்பரியாயப்பேரு
ளீற்றுமெய்கெடுத்தொன்றிற்பன்னிரண்டன்மெய்கொடுத்துக்கூறத்
தோற்றுமெய்ப்புகழ்சானாவிற்கரசினைத்தொழுதுவாழ்வாம். 16

17 சுந்தரமூர்த்திசுவாமிகள்.
எண்ணியமறுமைப்பேறுமிம்மையேயுற்றதென்ன
மண்ணியவியங்கும்வெள்ளிமால்வரையெருத்தமேறி
யண்ணியவியங்காவெள்ளிமால்வரையடைந்துவாழும்
புண்ணியமூர்த்திநாவற்புலனைப்போற்றிவாழ்வாம். 17

18 மாணிக்கவாசக சுவாமிகள்.
மாயவனறியாப்பாதமலரவன்மனைவிமேனி
தோயவுமலரோன்காணாச்சுடர்முடியனையானீன்ற
பாயநீருடுத்தமங்கையிவரவுமுருகிப்பாடுந்
தூயவர்கமலபாதத்துணையுளத்திருத்திவாழ்வாம். 18

19 தண்டீசநாயனார்.
மலர்புரைகுடங்கைவெள்வாய்மழுப்படையொன்றுதாங்கி
யலர்பசுவோம்பியின்னுமுண்ணுதலாதியாவும்
பலர்புகழ்தனக்கென்றொன்றும்வேண்டிலாப்பரன்போற்கொண்ட
நலர்செறிசேய்ஞலூர்வாழ்பிள்ளையைநயத்தல்செய்வாம். 19

20 அறுபத்துமூன்றுநாயன்மார்.
வேறு.
பூன்றதன்மையில்புன்மையேநெஞ்சகத்
தேன்றவஞ்சகமாதியிருப்பினுந்
தோன்றவோர்புரஞ்சூழ்ந்துறவாழ்வரா
லான்றமேன்மையறுபத்துமூவரே. 20

21 பஞ்சாக்கரதேசிகர்.
பூதங்கடந்துபொறிகடந்துபுலனுங்கடந்துபுகல்காண
பேதங்கடந்துகாலமுதலனைத்துங்கடந்துபெருவிந்து
நாதங்கடந்துவளர்துறைசைநமச்சிவாயதேசிகன்பொற்
பாதங்கடந்துபற்றறுத்தானினிமேலல்லற்படலிலையே. 21

22 அம்பலவாண்தேசிகர்.
வேறு.
மருடருவினைகடேய்த்தோமாமலக்குறும்புமாய்த்தோ
மிருடருபிறப்பில்வாரோமென்றுமோரியல்பிற்றீரோ
மருடருதுறைசைமேவுமம்பலவாணதேவன்
பொருடருகமலத்தாளெந்தலைமிசைப்புனைந்தபோதே. 22

23 சித்தாந்தசைவர்கள்.
பண்ணியபுறமார்க்கங்கள்பாழ்படவொழித்துமேலாம்
புண்ணியவிபூதியக்கமணியொடைந்தெழுத்தும்போற்றி
யண்ணியசிவானந்தத்தேனிரம்பவுண்டமையாநிற்கும்
தண்ணியகுணசித்தாந்தசைவரைவணக்கஞ்செய்வாம். 23

24 ஆலப்பணிசெய்வோர்கள்.
அரவுநீர்ச்சடையானெங்களம்மையோடகிலமெல்லாம்
பரவுமாறமர்பொன்மாரிப்பதிப்பெருந்தளியிற்றொண்டின்
விரவுநான்மறையோராதியலகிடல்விழைந்தோரீறா
முரவுசேர்தவத்தர்யாருமுவந்தியாந்தொழுந்தேவாவார். 24


கடவுள் வாழ்த்து முற்றிற்று.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:16 am

248 அன்னமால்வரைதனைத்தொழுவலிகுறித்தன்றோ
மின்னவாவியமார்புடைவித்தகனொருகை
முன்னமோர்வரையெடுத்திடமெலியதாமுடிந்து
நன்னர்வான்குடையாயதுநானிலம்வியப்ப. 11

249 அயனையோர்மலர்சுமக்குமற்றரியைநீர்சுமக்கும்
வியனிலாவுமிவ்வேதுவான்மெல்லியரவரே
பயனிலாவுமிம்மால்வரைசுமத்தலிற்பரனே
சயநிலாம்வலியோனெனிற்சாற்றுவதென்னே. 12

250 வானநாடவர்சூட்டியபொன்னரிமாலைக்
கானமெங்கணுங்கிடப்பனகழித்திடவீழ்ந்து
பேனவார்திரைப்பாற்கடற்பெருக்கமேற்பிறங்கி
யானபற்பலாயிரந்துகிர்க்கொடிப்படர்வனைய. 13

251 பொலங்கொள்கற்பகப்புதுமணம்போர்த்தியபுரமு
நலங்கொள்சத்தியவுலகமும்வைகுந்தநகரு
நிலங்கொளவ்வரைக்கடிமையாய்நிகழ்தலின்றோ
வலங்கொளப்பொலிதரலுடன்மாறுமாறுறினே. 14

252 உலகுபற்றுயிர்சரியையாதியவொருமூன்று
மிலகுபொற்புறப்புரிதலவ்வரைகுறித்தென்னி
லலகுமுற்றுறாவத்தகுமால்வரைப்பெருமை
பலகுறித்துளத்தெண்ணினும்பாடமுற்றுவதோ. 15

253 வேறு.
அன்னமால்வரைமேலாயிரங்கோடியவிரிளங்கதிரொருங்குதித்தா
லன்னமாமதில்கோபுரங்கருக்கிரகமத்தமாமண்டபம்விமான
மன்னமாநடையாராடரங்காதியாடகப்பசும்பொனான்மணியா
னன்னகாவண்ணமமைத்ததம்மனையோடங்கணரினிதமர்கோயில். 16

254 அனையவான்றளியுளாயிரங்கரமுமாயிரங்கால்களாநிறுவிப்
புனையவாங்கதிரேமேற்பரப்பாகப்பொருந்தியதென்னமண்டபமொன்
றெனையநாவலரும்புகழமுற்றாததிலங்குமம்மண்டபநாப்பண்
வினையம்வாய்ந்தவருமிற்றெனப்படாதமிளிர்மணிவேதியொன்றம்ம. 17

255 அத்தகுமணிசெய்வேதிமேல்விறல்சாலாளரியாகியஞான்று
பொத்தியவகங்காரந்தவிர்த்தாண்டபுண்ணியந்தெரிந்ததுவிளைக்கும்
வித்தகமலசத்தியுந்தவிர்த்திடுவான்விழைந்தரிமுழுவதுமரியா
யுத்தமனடிகடாங்கினாலென்னவொளிர்மணிமடங்கலாதனமேல். 18

256 உருவுளொன்றாயும்விழியுளொன்றாயுமொளிவளர்தலைக்கலனாயு
மருவியவிரதக்காலுளொன்றாயும்வைகிடமாயும்வீற்றிருப்பெற்
கொரவரங்களங்கமொழியெனவிரப்பவொழித்தலுமுவந்தருடெரிப்பான்
வெருவருமதியமுடிமிசைப்பொலியும்விதமெனவெண்குடைநிழற்ற. 19

257 அற்புதமுடிமேல்விரையிலாவருக்கமகற்றுபுதாம்வதிதருவான்
பொற்புறமலர்வெண்டாமரைமலர்கள்புந்தியுற்றெழுந்திருபாலும்
விற்பயின்மதிகண்டுறத்தலைகவிழ்ந்துமீளவுமெழுந்துழிதரல்போ
லெற்பொலிபசும்பொற்பூணணிமடவாரிரட்டுசாமரைதலைபனிப்ப. 20


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:16 am

258 புலிதருசருமப்பிருதிவியரையிற்பொங்கொளியப்புவான்முடியி
னொலிதருதழல்கைநுதற்கணினடியாருறுமலக்குரோதவானுளத்தின்
மலிதருநம்போலெங்கணுங்கலந்துவயங்குவதில்லெனவுவந்து
கலிதருசிவிறிவிடுவளியெழுந்துகமழ்திருமெனிமேற்றவழ. 21

259 திரிபுரமெரித்தாய்காலனைக்குமைத்தாய்சிலைமதனீறெழவிழித்தா
யரிபிறப்பைந்திற்றண்டநன்குஞற்றியதண்முதலறிகுறிபூண்டாய்
பரிகலமறையோன்றலையறுத்துவந்தாய்பற்பலதேவரென்பணிந்தா
யிரிதரவசுரரளவிலர்ச்செற்றாயென்றுவந்தியர்விறல்பாட. 22

260 பலமுகமுழவமுதற்பலவியமும்படர்கணத்தவர்சிலரதிர்ப்ப
நலமலிபணிலம்வயிர்குழல்பீலிநகுதுளைக்கருவிகள்பிறவுஞ்
சிலகணமிசைப்பத்திவவியாழெடுத்துச்சிலர்நரம்புளர்ந்திசையமுத
மலகறவூற்றவரம்பையர்முதலோரபிநயத்தொடுமெதிர்நடிப்ப. 23

261 சாரணரியக்கர்சித்தர்கந்தருவர்தக்ககிம்புருடர்கின்னரர்வெள்
வாரணரமரர்தயித்தியரரக்கர்மடலவிழ்கமலம்வீற்றிருக்கு
மாரணர்நறியபசுந்துழாய்ப்படலையலங்கியவிலங்கெழினிறத்து
நாரணர்பிறருந்தலைமிசைக்கரங்கணன்றெழீஇக்குவித்தனர்நெருங்க. 24

262 குழிவிழிப்பிறழ்பற்குடவயிற்றிருண்மெய்க்குறுகுறுநடந்திடுகுறுத்தாட்
பழிதபுத்தியங்குபாரிடக்குழுவும்பற்பலவயிரவர்கணமுங்
கழியருட்கொடியசிறுவிதிமகத்தைக்கருக்கியவீரனுமறத்தை
யழிவறக்காக்குமையனும்பிறருமணிமையினெருங்கினர்நிற்ப. 25

263 முனைவனங்குரவன்றிருமரபினுக்குமுதற்குருவாகியமுன்னோ
னனைவரும்பரமசிவனெனப்புகழ்வராரருணிரம்புறப்பெற்றோன்
றனைநிகர்கருணைநந்தியெம்பெருமான்றடங்கரச்சூரல்சற்றசைத்து
நினையவரவர்தந்தராதரந்தெரிந்துநிறுத்துபுதிருமுனருலாவ. 26

264 கயமுகத்தவுணனுயிர்தபமாட்டிக்கடவுளர்பலரையும்புரந்த
வயவொருமருப்புப்புகர்முகக்கடவுள்வலப்புறத்தினிதுவீற்றிருப்ப
வியனமருலகமுழுதுமீன்றெடுத்தும்விளங்கருட்கன்னியேயாய
கயன்மருள்கருங்கட்செய்யவாய்ப்பசுந்தோட்கவுரிமற்றிடத்துவீற்றிருப்ப. 27

265 ஒருவரைதாழ்த்திக்கொடுந்தொழிற்றகுவருடலெனும்பலவரையுயர்த்தி
வெருவருமொருவாரிதியறச்சுருக்கிவிளம்பியதகுவர்மெய்நெய்த்தோர்
பெருகியபலவாரிதியுறப்பெருக்கிப்பிறங்குமத்தகுவரைச்சாய்த்துப்
பொருவில்வானவரைநிமிர்த்தவேடனக்கும்புண்ணியவுமைக்குநள்ளிருப்ப. 28

266 சடைமுடிநிலவுவெள்ளமுதொழக்கச்சற்பங்கள்காரமுதொழுக்க
வடையொருகரமானுடையெனப்பொலியுமரைப்புலியஞ்சியதேய்ப்ப
மிடைமிசைத்தாவவெள்ளியதரங்கம்விரிபுனல்கைத்தழலெழறேர்ந்
துடைதரும்பொருட்டுக்கிழக்கிழிதரவேரொருங்கமைதிருமுகம்பொலிய. 29

267 புண்ணியநீறுநெற்றியிற்பொலியப்பொங்கிமேலெழுந்தழனோக்கந்
திண்ணியபகைதேர்ந்தடங்கியதொளிரத்திருமுகக்கண்களோரிரண்டுங்
கண்ணியகருணைமடைதிறந்தென்னக்கதிர்த்திடக்கரிசறுப்பவரே
யெண்ணியகழலிற்கழலுறத்தனிவீற்றிருந்தனனெம்மையாளுடையான். 30


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:17 am

268 வேறு.
காமருதிருவோலக்கங்கண்களிகொள்ளநோக்கித்
தேமருவலரின்மேலான்றிகழ்மணிமறுவினோடு
மாமருவலங்கன்மார்பன்வலனுயிர்குடித்ததோன்றல்
பாமருவியசீர்மற்றயாவரும்படிந்தாரின்பம். 31

269 அவரவர்முறைப்பாடெல்லாமஞ்செவிநிறையவேற்றுத்
துவர்படுசடிலத்தோன்றறூயநன்மொழியாற்கங்கை
யிவர்முடியசைப்பானோக்குநோக்கினாலின்பமெய்தக்
கவரருள்செய்துபோக்கிக்கவுரியோடெழுந்தானன்றே. 32

270 காந்தளம்போதிற்செய்யகமலமென்மலரேய்ந்தென்ன
மாந்தளிர்மேனியம்மைவலக்கரமிடக்கைபற்றிப்
பூந்தளிரடிப்பூமாயோன்புதல்வன்வாய்வைத்துக்காப்புற்
றாய்ந்தபாதுகைமேற்சூட்டியந்நின்றுபெயர்ந்தானன்றே. 33

271 மரகதச்சுடரினோடுமாணிக்கச்சுடரெழுந்து
பரவுறநடந்தாலென்னப்பயப்பயநடந்துசென்று
கரவறவெதிர்தாழ்வோர்க்குக்கண்ணருள்வழங்கிப்புக்கான்
குரவமந்தாரமாதிகுலவுபூந்தெய்வச்சோலை. 34

272 புண்ணியப்பொழிலினூடுபுகுதலும்பொழில்காப்பாளர்
நண்ணியவிருப்பிற்போற்றிநயந்திருபாலுமோடித்
தண்ணியமலர்களகொய்துதருந்தொறும்வாங்கிமோந்து
துண்ணியமருங்குனாசிநுனையினுஞ்சேர்த்தாநின்றான். 35

273 அறிபொருள்செறியத்தோன்றுமான்றவர்கவிபோல்வித்துச்
செறிகனிசுமந்துநிற்குந்தாடிமச்சிறப்புநோக்காய்
குறிபருப்பொருளொன்றேய்ந்தசெய்யுளிற்குலவித்தோன்றும்
பறிகனிசுமவாநின்றுபரந்தமுந்திரிகைநோக்காய். 36

274 மிகுபொருளமையக்கற்றும்வெளிப்படைசெய்யார்போல
மிகுகனிமண்ணுட்கொண்டுவெளிசெயாப்பலவுநோக்காய்
நகுபொருள்பலவுமியாருந்தெவ்வுறநயப்பார்போல
நகுகனிபலவுமியாரந்தெவ்வவாழ்நன்மாநோக்காய். 37

275 தம்முடையாயுள்காறுநூலொன்றேசமைப்பார்போல
விம்முகாய்க்குலையொன்றம்மவெளிசெயுமரம்பைகாணா
யம்மபற்பலசெய்வாரினடர்பழக்குலைபல்கொண்டு
செம்மையுமுயர்வுவாய்ந்துதிகழ்தருதெங்குகாணாய். 38

276 சிலகவியானுஞ்செய்துசெறிதருபயன்படாரா
யலகறவுரைவிரித்துப்பயன்படுமவரையொப்பச்
சிலகனியானுமீன்றுசெறிதருபயன்படாவா
யலகறவலர்விரித்துப்பாடலமமைவநோக்காய். 39

277 ஒருகவியேதுக்கொண்டுபலவிரித்துரைப்பார்போன்றோர்
மருவடிகொண்டுபற்பல்விரிந்தமாதவியைநோக்காய்
பெருகியசெய்யுட்கோதம்பிறங்கிலக்கணமாறுற்றுக்
கருதடியொன்றேகொண்டவஞ்சியைத்தெரியக்காணாய். 40


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:17 am

278 ஆன்றநின்கொங்கைபோலவரும்பியக்கொங்கைமேலாற்
சான்றவொண்சுணங்குபோலத்தண்சுணங்கெழமலர்ந்தே
யேன்றநின்பதத்துமென்மையெனப்பொலிபஞ்சிகாய்த்துத்
தோன்றவிங்கமராநிற்குஞ்சொற்பொலிகோங்கம்பாராய். 41

279 ஏயுநின்மேனிவண்ணமெனப்பசுந்தளிர்களீன்ற
யாயும்வெண்ணகையின்வண்ணமாமெனவரும்புகான்று
சாயுநுண்மருங்குல்வண்ணமெனத்தளர்தொசிவதாகித்
தோயுமென்குணத்தமுல்லைக்கொடிபலதுவன்றல்காணாய். 42

280 எனப்பொழில்வளத்துட்சில்லவிமயமீன்றெடுத்தபாவை
தனக்கினிதியம்பியெங்கடம்பிரானங்கண்மேய
மனக்கினிதாயசெம்பொன்மண்டபத்தினிதுமேவி
யுனற்கருமுவப்பிற்சிங்கவொளிரணையிருந்தான்மன்னோ. 43

281 அண்ணலவ்வாறுமேவமற்றவனனுஞைபெற்று
வண்ணமென்மலர்கள்கொய்வான்மலைமகளாயவன்னை
யெண்ணருமிகுளைமார்களேவலினுவந்துமேவக்
கண்ணகனாங்கோர்பாங்கர்க்கயிற்சிலம்பொலிக்கச்சென்றாள். 44

282 உந்தியின்வனப்பைவவ்வியொளித்தனவென்றுதேர்ந்து
முந்தியமௌவல்கொய்துமுளையெயிற்றழகுவவ்வி
யந்திலிங்கொளித்ததென்றுதளவரும்படங்கக்குற்றுஞ்
சந்தணிகொங்கைநங்கைவேறிடஞ்சாரச்சென்று. 45

283 படர்வளியலைப்பத்தேம்பிப்பற்றுக்கோடின்றியொல்கு
மடர்பசுங்கொடிகட்கெல்லாந்தனித்தனியவிர்கொம்பூன்றித்
தொடர்புசெய்திடுமினென்றுதோழியர்சிலரையேவி
யிடர்தபுத்தெம்மையாளுமேந்திழையந்நின்றேகி. 46

284 மற்றொருபாங்கரண்மிமணங்கமழ்ந்திங்குமேய
பொற்றபாடலத்தின்பூவும்புதுமதுப்பொழியுங்கோங்குஞ்
செற்றமந்தாரப்பூவுஞ்செறிதரக்கொணர்மினென்றே
யுற்றவர்சிலரைப்போக்கியந்நின்றுமுவந்துசென்று. 47

285 வேறுமோரிடத்தையண்மிமென்புனலகத்துப்பூத்த
நாறுசெங்கழுநீர்நீலநக்ககோகனகமின்ன
கூறுகொண்டணைமினென்றுகூடநின்றவரையேவித்
தேறுநர்க்கருளந்தேவிதனித்தனடிருமினாளே. 48

286 மதிமுடிக்கணவற்சாரும்வாஞ்சையின்வருபிராட்டி
திதியமைபாண்டிநாடுசெய்தமாதவத்தின்பேற்றால்
வதிமருதவனச்சீர்த்திவானமும்பொதிர்த்துச்செல்ல
வதிரருமகிழ்ச்சியாலேயாடலொன்றகத்துட்கொண்டு. 49

287 பாதசாலங்களெல்லாம்பாதமேற்செலவொதுக்கி
யோதருங்காஞ்சியாதியுத்தராசங்கங்கொண்டு
மேதகமரங்குல்யாத்துமென்மெலநடந்துபின்போய்ப்
பூதநாயகன்முகக்கண்புதைத்தனண்மலர்க்கைகொண்டு. 50


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:17 am

288 நிறைகலைமதியத்தேவேநிகழ்கதிர்த்தேவேநீவி
ரிறையவன்முகத்துக்கண்ணாயிருக்கினும்விடேம்யாமென்று
கறைமுகில்கரங்கணீட்டிக்கதுமெனமறைத்ததொக்கு
மறைபெரும்புவனமின்றாளையர்கண்புதைத்தகாட்சி. 51

289 மூராரியென்றுரைக்கும்பெண்யான்முதலைநீங்குபுதனித்து
விராம்வனத்துறைவதோர்ந்தும்வெளிப்பட்டுமறைந்தும்வாட்ட
லிராவகையொழிப்பவின்றேயென்றவண்மறைத்ததொக்கும்
புராதனர்முகத்துநாட்டம்புராதனிமறைத்தகாட்சி. 52

290 மறைமொழியிகந்தபாவிமகத்தவியுண்ணப்புக்கு
முறைதிறம்புற்றுமையன்முகத்துவீற்றிருந்துநாளு
மறைதரவிளங்கலொல்லாதவிரிருகதிர்காளென்று
பிறைநுதல்சினந்துபொத்தும்பெற்றியும்பொரூஉமக்காட்சி. 53

291 அடியவருளத்துநீங்காவருட்பிரான்முகத்துநாட்டங்
கடியமைக்குழலிவ்வாறுகரங்களாற்புதைத்தலோடு
நெடியபல்புவனமுற்றுநிறைந்தபல்லுயிருஞ்சாம்பக்
கொடியகேவலமேயென்னக்குருட்டிருள்பரந்ததம்மா. 54

292 எண்ணருநாள்கடோறுமெழுந்துதற்காயாநிற்கு
மண்ணலங்கதிர்கடம்மையடர்த்திடவலியிலாமை
யொண்ணலமின்றித்தேம்பியொடுங்கியவந்தகாரந்
தண்ணமுதனையாள்செங்கைத்தலங்களைப்புகழ்ந்ததன்றே. 55

293 தெறுபகையொழிந்ததென்றுசெறிந்தெழுமிருளோடொத்துக்
கறுவுநம்பகையுந்தீர்ந்துகழிந்ததென்றுவப்புமேவி
மறுவறவிதுசெய்தாட்குமாறெவன்செய்வாமென்று
குறுநகைச்செவ்வாய்மாதைக்கூகையும்புகழ்ந்ததம்மா. 56

294 செய்யதாமரைநேர்நாட்டச்செல்வனுமெண்கணானு
மையவாயிரங்கணானுமிமைப்பிலாதமர்விண்ணோரும்
வெய்யவாளவுணர்சித்தர்விஞ்சையர்முதலோர்யாரு
மொய்யவாமிருள்வீக்கத்தான்மூட்டமொத்திருந்தாரன்றே. 57

295 வெருவில்பாதலத்துநாளுமேவிவாழுலகரெல்லா
மிருபுலன்கவராநிற்குமேற்றமார்நமதுகண்க
ளொருபுலன்கவருமற்றையொருபுலன்கவர்ந்ததில்லை
மருவுகாரணம்யாதோவென்றெண்ணினர்மயங்காநின்றார். 58

296 மம்மருற்றுயிர்களெல்லாமின்னணமயங்காநிற்ப
வம்மவென்செய்தாள்பேதையாயினார்போலவென்று
செம்மலெம்பெருமான்வலலேதிருவுளத்திரக்கம்பூண்டு
விம்முசெந்தழனுதற்கண்டிறந்தனன்றிமிரம்வீய. 59

297 நுதல்விழிதிறத்தலோடுநோக்கியவெம்பிராட்டி
விதலையுற்றஞ்சியென்னாய்விளைந்ததென்செய்தாமென்று
முதலவனெதிரேவந்துமுன்னுறாதிழைத்தகுற்ற
மதலையாய்பொறுத்தியென்றுவணங்கினளெழுந்துநின்றாள். 60


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:18 am

298 திருவடிவணங்கிநின்றசேயிழையணங்கைநோக்கிப்
பொருவருங்கருணைமூர்த்திபுண்ணியப்பூங்கொம்பன்னா
யொருவருமுயிர்கண்மம்மருழந்திடநீயென்செய்தாய்
மருவுநித்தியமுன்னாயகருமங்கண்மாய்ந்தவன்றே. 61

299 நீள்வரியறலைவென்றநிறைகுழற்கொம்பனாய்நம்
வாள்விழிபுதைத்துவிட்டவரையறைகணமேயேனு
மாள்செய்பல்லுயிர்க்குமூழியாயிற்றேயனையதாய
மூள்வருபாவநின்மேற்றன்றியார்முகந்துகொள்வார். 62

300 எண்ணரும்பாவமேனுமிரித்தருள்கொழிக்கவல்ல
கண்ணருநமதிலிங்கபூசனைகைக்கொண்டன்றிப்
பண்ணருங்கழுவாய்வேறுபகர்ந்திலமனையதாய
நண்ணருங்கழுவாயாற்றினாம்வந்துகலப்பேமென்றான். 63

301 என்றலும்பிரியாத்தேவிபிரிவதற்கிரங்கியேங்கி
யொன்றியபிரிவாற்றோன்றுமச்சமுமுஞற்றுபூசை
நன்றியல்சிறப்பாற்றோன்றுமன்புநன்கிருபாலீர்ப்பத்
தன்றுணைப்பெருமான்றுாளிற்றாழ்ந்தெழுந்திதனைச்சொல்வாள். 64

302 அடிகளோடடியேனாற்றுமாடலைக்கருதியன்றோ
தொடியவாங்கரத்தாற்கண்கள்புதைத்ததுசொல்லொணாத
கொடியதீவினையாய்வந்துமுடிந்ததுகூறலென்னே
கடியதாம்பிரிவையுன்னிநெஞ்சகங்கலங்காநின்றேன். 65

303 எவ்விடத்தடியேன்சென்றுபூசனையியற்றாநிற்ற
லெவ்வமுற்றொழியநீவந்தருளுநாளெந்நாளென்று
கௌவையிற்றேவிநெஞ்சங்கரைந்துவிண்ணப்பஞ்செய்யக்
கௌவையிற்கடனஞ்சுண்டோன்கனிந்திஃதருளிச்செய்வான். 66

304 மங்கைநீயஞ்சேனின்னைப்பிரிந்தியாம்வழங்கலில்லை
துங்கமார்பரதகண்டந்துற்றமர்பன்னாட்டுள்ளுஞ்
சிங்கலிறமிழ்நாடொன்றேசிறந்ததந்நாட்டினுள்ளும்
பங்கயப்பழனஞ்சூழும்பாண்டிநாடுயர்ந்ததாமால். 67

305 அத்தகுபாண்டிநாட்டுளருச்சுனவனமென்றொன்று
வித்தகமாயதானம்விருப்பமிக்குடையேமன்ன
வுத்தமதலத்திலியாமேயாதலாலுங்கணெய்திச்
சித்தம்வைத்தருச்சிப்பார்க்குவிரைந்தருள்செய்தல்கூடும். 68

306 ஆதலாங்கணெய்தியருச்சனையாற்றினொல்லைக்
காதலாலருள்வோமியாம்வந்தென்றனன்கருணைமூர்த்தி
போதெலாம்பொலியுங்கூந்தற்பொற்கொடியிருகைகூப்பி
மாதர்சாலனையதானத்தெல்லையைவகுத்தியென்றாள். 69

307 தன்னுயிர்த்தேவிவேண்டத்தம்பிரானருளிச்செய்வான்
றென்னுயிர்த்தழகுவாய்ந்ததிருப்பெருந்துறைக்குச்சற்றே
மின்னுயிர்த்தனையாய்மேற்கில்விரிபொழிற்சாலிவாடி
யென்னுயிர்த்தலத்திற்குத்தென்கீழெனவிசைக்குந்திக்கில். 70


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:18 am

308 மன்னியவளஞ்சால்வீரைவனத்திற்குத்தெற்குவாய்மை
மின்னியதிருவாடானைத்தலத்திற்குவடக்குமேலோர்
பன்னியவொருதேனாறும்பகர்தருவிரிசலாறுந்
துன்னியவடக்குந்தெற்குந்துன்னவுற்றுளதத்தானம். 71

309 அத்தகுபெருந்தானத்தினருச்சுனவலிருக்கநீழ
லுத்தமவிலிங்கமாகியொளிருவோம்வன்மீகத்துள்
வித்தகநீயங்கெய்திமேதகுருபூசையாற்றிற்
சத்தறிவின்பயாம்வந்தருளுதுஞ்சார்தியென்றான். 72

310 என்றருள்புரிந்துபெம்மானிரும்பொழிலிருக்கைநீத்து
மின்றிகழ்பேரத்தாணியகத்தெழுந்தருளிமேவி
யொன்றவந்திரப்போர்க்கெல்லாமருள்சுரந்துறைந்தானிப்பான்
மன்றலங்குழலாள்கூடத்தொடர்ந்தனண்மாதர்சூழ. 73

311 நாயகனிருக்கைசார்ந்துநளினமென்பதத்திற்றாழ்ந்து
தூயநல்விடையும்பெற்றுத்துவன்றியகணங்கள்சூழப்
பாயதென்னாடுசெய்தபாக்கியப்பேற்றாலம்மை
யாயமென்மருதவைப்பையணைவதற்குள்ளங்கொண்டாள். 74

312 இன்னநற்காதைகேட்டுமிண்டையாதனத்தினானைப்
பன்னகப்பாயலானைப்பானுவைமற்றையோரை
யுன்னரும்பிரமமென்பாரொள்ளியவாயும்வாழ்க
நன்னர்கொணாவும்வாழ்கவென்றுமேனவிலலுற்றான். 75

திருக்கண்புதைத்தபடலம் முற்றிற்று.
ஆக படலம் 5 -க்கு திருவிருத்தம். 312.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:19 am


6. தேவிதவம்புரி படலம். (313 - 362 )


313 பன்னியெவருந்தழுவுபாண்டிவளநாட்டு
மன்னியவருச்சுனவனம்புகுதும்வாஞ்சை
முன்னியெழவேழுலகுமுற்றுமினிதீன்ற
சுன்னிதலைமீதுகுவிகையொடுமெழுந்தாள். 1

314 வாழியறமோம்புமலைமங்கையெழலோடும்
வீழிபொருவாயெழிலனிந்திதைமுன்மேய
தோழியரெழுந்தனர்துவன்றிமகிழ்துள்ளிக்
காழ்வலியமைந்துயர்கணங்களுமெழுந்த. 2

315 குடைகவரிசாமரைகொழுஞ்சிவிறிபிச்ச
மிடையொலியறோரணம்விரும்புவடவட்டந்
தடையறநெருங்கினதடாரிபணைதக்கை
யுடைகடன்முழங்குமுழவாதிகளொலித்த. 3

316 சங்குவயிர்பீலியுறுதாரைகணரன்ற
நங்குதவிர்வீணையினரப்பொலியெழுந்த
மங்குதலில்கஞ்சவொலியாதிகண்மலிந்த
பொங்குமறைவாழ்த்தொலிபொலிந்துதிசைபோர்த்த. 4

317 பன்னரியசெங்கதிர்பலப்பலதிரண்டா
லன்னதொருதிப்பியவிமானமெதிரண்ணப்
பொன்னகரவாணர்பொழிபூமழையின்மூழ்கித்
தன்னனையதாய்மகிழ்தலைக்கொளலிவர்ந்தாள். 5

318 ஏவறலைநிற்குமடமாதருமிவர்ந்தார்
காவலமைகூன்குறள்கனன்றுமுனெழுந்த
வோவவிலதாவிருதுமாகதருரைப்ப
நாவலர்சொறென்றிசைநடத்தினள்விமானம். 6

319 வடாதுதிசைநின்றுயர்தெனாதுதிசைவாஞ்சை
படாதமகிழ்வோடெழுபருப்பதமடந்தை
தடாதவலியோனமர்தலந்தொறுமணைந்து
விடாநசையினேத்துபுவிமானமிசையுய்ப்பாள். 7

320 காசியையடைந்துவிரிகங்கைநதிமூழ்கிப்
பூசியவிபூதியொடுபுண்டரிகன்மாயோன்
பேசியபுகழ்ப்பரமர்பெய்கழல்வணங்கி
யாசில்பலநாடுநதியாவையுமிகந்து. 8

321 தண்டையெனநெல்விளைதடம்பணையுடுத்த
தொண்டைவளநாட்டுமகிழ்துன்றிடவணைந்து
கண்டைவிடையானமர்கவின்பொலிதலந்தோ
றிண்டைமலராதிகொடுபூசனையியற்றி. 9

322 நாடுபலபோற்றுநடுநாட்டகநுழைந்து
காடுபடுசெஞ்சடையர்காமர்தலமெல்லா
நீடுபெருகன்புநிகழப்பெரிதுபோற்றி
யாடுமயிலன்னவியலாவயினகன்று. 10


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:19 am

323 பொங்குபுனறங்குபொருபொன்னிவளமன்னி
யெங்குநிகழ்சோழவளநாட்டினிடையெய்தித்
தங்குபலவாகியதலந்தொறுமிறைஞ்சிக்
கொங்குமலர்தூயதுகடந்துகுறிகொள்வாள். 11

324 வெடிகெழுவராலெழுபுமேகமிசைபாயும்
படிகெழுதடங்கள்பொலிபாண்டிவளநாட்டுத்
துடிகெழுமருங்குலொருதோகையடைகுற்றாள்
வடிகெழுமலர்த்தொகுதிவானவரிறைப்ப. 12

325 ஆங்குமருவந்தலமனேகமும்வணங்கிப்
பாங்குபெறுகோனுரைகுறிப்படிபடர்ந்து
தீங்குதவிரன்புநெகிழ்சிந்தையுணிரம்ப
வோங்குநலருச்சுனவனத்தினருகுற்றாள். 13

326 மதுநதியுமான்மியம்விழாவிரிசலென்னு
முதநதியுநாயகன்மொழிந்தபடிகண்டாள்
சதுமுகன்முன்னோர்தொழுதலங்களொருநான்கும்
புதுமையுறநாற்றிசைபொலிந்துறுதல்கண்டாள். 14

327 இறைவனுரைசெய்தலமிதேயெனமதித்து
நிறையொளிவிமானமிசைநின்றுடனிழிந்து
குறையறுகணங்கண்முதலோர்குழுமியேத்தப்
பொறைகெழுமடந்தைபுவிபோந்தனள்பணிந்தாள். 15

328 வேறு.
பணிந்தெழந்துபராவிக்கரங்குவித்
தணிந்தபாங்கியரியாருமணைதரத்
துணிந்தவென்றிக்கணங்களுஞ்சூழ்வரத்
தணிந்தசாகையத்தாழ்வனம்புக்கனள். 16

329 செல்லச்செல்லச்சிவானந்தமூற்றெழ
வொல்லற்காயவுரோமஞ்சிலிர்த்திட
மல்லற்றோகைமயில்பலவற்றையும்
வெல்லற்காம்பலவிம்மிதநோக்குவாள். 17

330 பகலெலாம்பன்மரத்தோடொன்றாயிருந்
திகலிலாவிரவெய்திடும்போழ்தினிற்
புகரிலாவழல்பொங்கியதொத்தொளிர்
நிகரிலாதநெடுந்தருவோர்புறம். 18

331 இளமரத்தின்கனைப்பங்கெழுந்தொறுங்
களமிலாவிளங்கன்றுகனைத்ததென்
றுளநெகிழ்ந்துகனைத்துறமேதியவ்
வளநிலம்புகுமாட்சியுமோர்புறம். 19

332 கொம்பரேறில்வெண்கோட்டுக்களிறுமா
வம்பொற்றேர்முதலாகியவற்புத
மும்பராரும்வியப்பவுண்டாக்கிடும்
வம்பறாததருவொருமாடரோ. 20


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:20 am

333 பட்டகட்டையிற்பாதுகைசெய்ததி
லொட்டவேறினுடனும்பரார்பதிக்
கிட்டமாகவெழுந்துகொடுசெலுங்
கட்டமில்லாத்தருவொருகண்ணெலாம். 21

334 உறவிளைத்தவுடம்புடையார்களு
முறவடுப்பினுதிப்பவளாரினா
லுறவடித்துமறலியுறுநக
ருறவிடுக்குந்தருவுமொருபுறம். 22

335 அடித்துமோதியலைக்குந்தருவொரீஇத்
துடித்தயற்புறந்துன்னினச்செல்லலை
நொடித்துவல்லையுயச்செயுநோன்றருப்
பிடித்துமேவப்பிறங்குமொருபுறம். 23

336 ஆயைநீத்தவமலன்றிருவருண்
மேயையாலெத்தவம்விளைத்தாய்கொலிம்
மாயைநீத்தவடிவமுறற்கெனச்
சாயைநீத்ததருவுமொருபுறம். 24

337 எந்தநோயினிடர்ப்படுவார்களு
முந்தவந்துபரிசித்துமோப்பரே
லந்தநோய்நரையாதித்துயரொடுஞ்
சிந்தநல்குந்தருவுஞ்செறியுமால். 25

338 கவலைவெம்பசிகாற்றுஞ்செயலிலார்
திவலைபாலுணிற்றிங்களோராறள
வுவலைபோன்றவுடம்பைவருத்துமத்
தவலைநீக்குந்தருவுமொருபுறம். 26

339 அன்னபேதியகிலமவாங்கருஞ்
சொன்னபேதிசுடுவிடத்திற்கமு
தன்னபேதியூன்பேதியவைமுதற்
சொன்னபேதித்தருக்கடுவன்றுவ. 27

340 போற்றுநீர்நிழல்போலப்பொலிதரு
மேற்றுவார்கொடியெந்தைகொலோவெனச்
சாற்றுமேன்மைதனைப்பிறர்காணுறத்
தோற்றுறாததருவுந்துவன்றுவ. 28

341 கருநிறத்தவுங்காலையிளங்கதிர்
பொருநிறத்தவுமாகிப்பொலிதரு
திருநிறத்தவிர்சித்திரமூலங்கள்
வருநிறத்தவ்வனத்தொருபாலெலாம். 29

342 வெட்டுகின்றநலியம்விளங்கொளி
பட்டுமல்கும்பசியபொன்னாயுறு
முட்டுநீக்கமுகிழ்க்குந்தருக்களும்
பெட்டுநிற்கும்பிறங்கியோர்பாலெலாம். 30


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:20 am

343 வேறு.
இன்னவாயவளம்பலவெங்கணுநோக்கின
ணன்னரற்புதமற்புதமென்றுநயந்தனண்
முன்னருஞ்சிவலிங்கமுகிழ்த்தவருச்சுன
மன்னநின்றதெங்கன்றுதுருவினள்வல்லியே. 31

344 அன்னமென்னடையாடுருவிச்செலுமாயிடை
யென்னரும்புகழ்கின்றவருச்சுனமென்பது
நன்னர்மேயசெழுமையிளமைநலங்கொடு
முன்னர்நின்றதுகண்டனளின்பமுகிழ்த்தெழ. 32

345 வானமுட்டவெழுந்ததருக்கண்மலிந்தவிக்
கானமுட்டறுமாலயமாகக்கவின்றதா
லீனமுட்டறவெண்ணினர்க்கும்மருள்சூக்கும
மானமுட்டிலருச்சுனமென்றுவியந்தனள். 33

346 தேவியங்ஙனஞ்செப்பிவியந்ததிறத்தினா
லோவிலாதுசிறுமருதூரென்றுரைப்பராற்
காவிமேயகழிக்கடல்சூழுநிலத்தவர்
பாவியத்தருநோக்கினும்பண்ணவனாவனே. 34

347 அன்னதாருவையங்கைகுவித்தடிநோக்கினாண்
முன்னமாலயன்காணரிதாயமுழுமுதன்
மன்னமேயவன்மீகமுங்கண்டுவணங்கின
ளின்னவற்புதங்கண்டறியேனெங்குமென்றனள். 35

348 செய்யதாமரைமேலுறைநான்முகச்செம்மலும்
பையராவணைமேற்றுயில்செங்கட்பகவனு
மையவின்னமுநாடருஞ்சிற்பரவற்புதன்
வெய்யவெற்கெளிதாயினனென்றுவியந்தனள். 36

349 பூசையாற்றும்விருப்பமுளத்துப்பொலிதர
மாசைநீத்தமணியிற்பொலிந்துவயங்கரு
ளீசைமேற்றிசையெய்தியோர்தீர்த்தமுண்டாக்கின
ளோசைகூர்சிவகங்கையையங்கணுறுத்தினள். 37

350 இன்னதீர்த்தப்பெயர்சிவகங்கையென்றிட்டனள்
சொன்னநூல்விதிபோற்றியத்தீர்த்தந்துளைத்தனண்
மன்னநீறுபுனைந்தொளிர்கண்மணிமாலையு
மன்னமென்னடைபூண்டலர்கொய்யவெழுந்தனள். 38

351 தோழிமாருமத்தீர்த்தந்துளைந்துவெண்ணீறணிந்
தாழிபோலுமருட்பரைபாங்கரடுத்திட
வாழிவாய்ந்தபிடகைமலர்க்கரந்தாங்கியே
யூழிநாளுமுலப்பருநந்தனத்துற்றனள். 39

352 வேறு.
நந்தியாவட்டமலரிபுன்னாகஞாழன்மந்தாரமொண்வகுளங்
கொந்தவிழ்செருந்தியசோகுகூதாளங்கொழுமலர்வழைகன்னிகாரங்
கந்தமார்கடுக்கைபாடலங்கொன்றைகருதுவெட்பாலைசெவ்வகத்தி
முந்தியவேங்கைகொக்குமந்தாரைமுகித்தபொன்னாவிரைவெட்சி. 40


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:20 am

353 மருவுபொன்மத்தமாதளைபட்டிமராமலர்பருத்திசெவ்வரத்தம்
பொருவருகாஞ்சிகடம்பெருக்கழிஞ்சில்புரசுபன்னீர்திருவாத்தி
கருநிறச்செம்பைதுரோணம்வெள்ளிலோத்தங்கண்டங்கத்திரிவழுதுணைமா
வொருவருங்கூத்தன்குதம்பைநற்றாளியொள்ளியகுராமலர்கோட்டம். 41

354 கரைதருவில்வஞ்சதகுப்பைதிருமால்காந்திபச்சறுகொளிர்வன்னி
யுரைதருநாவல்செவ்வந்திதுளசியோங்குவெண்காக்கணம்பூளை
விரைதருபச்சைகருவிளங்காசைவிருப்புறுகாரைசெங்கீரை
வரைதருதருப்பைமருதிருவேலிமருவுநீர்முள்ளிமாதவியே. 42

355 தூவிலாமிச்சவேர்வெட்டிவேரொண்சூரியகாந்திமஞ்சணாத்தி
தாவிலாநரந்தமெலுமிச்சைபாரிசாதகமுறுபுலிதொடக்கி
மேவியகிளுவைசந்தனநாணல்வெள்ளின்மாவிலிங்கநாயுருவி
பாவியவிதழொன்றுடையதாமரையெட்பசுமலர்கொட்டையங்கரந்தை. 43

356 நெல்லியொண்கரந்தையிலந்தைசிந்துவாரநீர்மிட்டான்கேதகைவாகை
சொல்லியகுச்சிப்புல்கருங்காலிதோன்றிசாலிப்பயிர்தான்றி
மெல்லியகுருந்துமருமருக்கொழுந்துவெற்றிலைமல்லிகைமயிலை
நல்லியற்குளவிகுமுதமென்குவளைநளினமற்றிவைமுதற்கொய்து. 44

357 சுவைபடுகனிகளுள்ளனகவர்ந்தூயநன்மருதடியடைந்து
செவையுறமுகந்துதோழியர்கொடுக்குஞ்சிவகங்கைமஞ்சனமாட்டி
நவையறவாய்ந்தபூமுதற்பலவுநன்மனுப்புகன்றுறச்சூட்டிக்
குவைபடுகனிகளூட்டிவன்மீகக்குழகனைப்பூசனைபுரிந்து. 45

358 திருந்துவன்மீகந்தனக்கியல்வடகீழ்த்திசையுறுகாடுமுற்றகழ்ந்து
பொருந்துபல்கணங்களியற்றிடப்பட்டபுனிதமாம்பன்னசாலையின்க
ணருந்துதெள்ளமுதுநஞ்சமாக்கொண்டவண்ணலார்திருவுருநினைந்தே
யிருந்தனள்புவனத்துயிரெலாம்வருந்தாதீன்றுகாத்தருளுமெம்பிராட்டி. 46

359 புற்றிடங்கொண்டசிவலிங்கப்பெருமான்பூசனைகாலங்கடோறும்
பற்றிடங்கொண்டவன்பொடுபுரிந்துபன்னசாலையினினிதமர்ந்து
கற்றிடங்கொண்டகருத்தினர்கருத்திற்கழலுறாக்கழலகத்திருத்தி
மற்றிடங்கொண்டவுலகமுற்றுயிர்த்தாள்வைகலுமமர்பவளானாள். 47

360 மலர்மணமெனவுமணியொளியெனவுமதுச்சுவையெனவுமுற்றுணர்ந்த
பலர்புகழ்பெருமானிடத்தகலாதபாவைமாதவம்புரிபண்பா
லலர்செறியனையவனத்தரிக்குருளையானைக்கன்றோடளவளாவு
முலர்தலிலுழுவைமுலைபொழிசுவைப்பாலுணங்குமான்கன்றினையருத்தும்.< 48

361 கொடுவெயிலுடற்றநெளியராக்குருளைகுளிர்நிழல்பெறச்சிறைவிரித்துக்
கடுமுரட்கலுழன்மீமிசைப்பயிலுங்கருப்பைகளுணங்குறாவண்ணம்
படுவிடப்பாந்தள்பரூஉப்பணம்பைக்கும்பைம்புதலிடையகப்பட்ட
வடுவறுமானமானுடையுரோமம்வானரமெலவிடுவிக்கும். 49

362 பட்டபன்மரமுநனிதழைத்தரும்பிப்பண்புறக்காய்த்துறப்பழுத்த
துட்டபல்விலங்குமியங்குவார்க்கியன்றதொழிற்றலைநின்றுபகரிப்ப
கட்டமிலனையபுதுமைமுற்றளந்துகட்டுரைத்திடுநருமுளரோ
வட்டவொண்சடையாய்தெரிதியென்றுரைத்துமாதவச்சூதன்மேலுரைப்பான். 50

தேவிதவம்புரிபடலம் முற்றிற்று.
ஆக படலம் 6-க்கு திருவிருத்தம். 362.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:21 am

7. தேவியைக் கண்ணுற்றபடலம். (363-412 )

363 அறிதருநெறிதழுவுநராயவமரர்கண்மனநிலையழிவெய்தக்
குறிதருகொடுவினைநனியாற்றுங்கோணைவல்லவுணர்கள்களியெய்தச்
செறிதருபிறவுயிர்களும்வாடித்திசைதிசைநிலைகுலைதரமுன்னா
ளெறிதருபெருவலிமிகுசண்டனென்றொருதானவனுளனானான். 1

364 எரிவடவனல்குளிர்தருகண்ணானிகலுருமொலிநிகர்குரலுள்ளான்
வரிகழலொலிகழல்வலிமிக்கான்வடவரைகவிழ்தருதிணிதோளான்
றரியலர்பிறகிடநகைசெய்வான்சலதியினிலையெனுமுருவத்தான்
கரிபரியிரதமெய்வலிவீரர்கடல்பலவெனவளைதரவுற்றான். 2

365 பொருவலியவுணர்கள்பலர்சூழப்புகரெனுமொருகுரவனையுற்றுத்
திருகறவருள்செயுமடிகேணின்சேவடிசரணெனவடைகுற்றேன்
மருவியவொருகதியிலிநாயேன்வாழ்வகையருளிதியெனத்தாழ்ந்தான்
கருதியகுரவனுமெழுகென்றுகருணையின்முகமலர்ந்திதுசொல்வான். 3

366 வலிமிகுவானவர்நினக்கையமாற்றலராயினுமென்னாவ
ரெலிபலகூடினுமொருநாகமெறியுமுயிர்ப்பினிலறமாயும்
பொலிதருபனிவரைப்பாலண்மிப்புரிசடைக்கடவுடனடியுள்ளி
மலிதவமியற்றினவ்வருளாளன்வந்துவரம்பலநல்குவனால். 4

367 இமையவர்மாற்றலராதலினீயியற்றுதவத்தினுக்கிடையூறே
யமைதரவாற்றுவரவைக்கேதுமஞ்சலையெஞ்சலிறவமோங்க
வுமையொருபாலுடைப்பெருமான்வந்தொல்லையினருளுவனுறுசெல்வஞ்
சமைதரவோங்கிடுமின்னேநீதாழ்க்கலைநடமதியென்றனனால். 5

368 என்றருளாரியனடிபோற்றியெழுந்தனனிமவரைப்பாற்சென்றான்
பொன்றலில்மனவலியுடையோனாய்ப்பொறிவழிச்செலவுமுற்றறவோப்பி
மன்றவெழுந்தழல்சூழ்ந்தோங்கிமல்கவளர்த்ததனடுவைகிக்
கொன்றைமுடிப்பெருமான்பாதங்குறித்துணறீர்ந்தருந்தவஞ்செய்தான். 6

369 இடிபலவீழ்த்துதன்முதலாகவெண்ணரிதாமிடையூறாற்றிக்
கடிமலர்மாலிகைமுடிவானோர்கழிந்தனரொன்றுமஞ்சிலனென்றே
மடிவருமொருநிலையினனாகிவரடமோராயிரந்தவமாற்றப்
பொடியணிமேனியெம்பெருமான்முன்போந்தனனவன்புரிதவமகிழ்ந்தே. 7

370 இறையவன்காட்சிதந்தனனமக்கீங்லென்றுணர்ந்தெழுந்தனனடிபணிந்தான்
முறைவலம்வந்தனன்சென்னிமிசைமுகிழ்த்தகைவிரித்திலன்முன்சென்று
மறைநவிறோத்திரம்பலசெய்துவரழ்ந்தனன்வாழ்ந்தனனென்றுரைத்தான்
கறைகெழுகண்டனண்மகிழ்ச்சியனாய்க்கருதியவரமெவனரையென்றான். 8

371 ஐயநின்னடிமலரிடத்தென்றுமளப்பருமன்பெனக்குண்டாக
வையமும்வானமும்பாதலமுமாற்றலரிரிதாத்துரந்தரசு
செய்யவெவ்வுலகினுமாணுருவஞ்சிவணினர்சிவணியவிரண்டாலு
மெய்யமராற்றுழியுடையாதவித்தகவீரமிக்குளதாக. 9

372 இந்திரன்மாலயன்முதலாகயாவருமென்பணிதலைக்கொள்ள
வந்திலிவ்வரங்கொடுத்தருளென்றானண்ணலுமிளநகைமுகத்தரும்பச்
சந்தணிமுலைக்கொடியிடைமடவார்தமைப்பொருள்படுத்திலன்வானோர்செய்
சிந்தலிறவப்பயனெனமகிழ்ந்துசெப்பியயாவுந்தந்தனமென்றான். 10


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:22 am

373 மனநிலைபலவரமும்பெற்றேன்வாழ்ந்தனன்வாழ்ந்தனனடியேனென்
றனகன்மெல்லடிமலர்மிசைப்பணிந்தானங்கணன்மறைந்தனனவணின்று
தனதருட்குரவனதிடஞ்சார்ந்துதாழ்ந்தனன்றவம்புரிந்ததும்பெம்மான்
கனவரங்கொடுத்ததுமெடுத்தோதிக்களிப்பொடுவிடைகொடுபுறம்போந்தான். 11

374 வேறு.
வானளவோங்கியவொருபருப்பதத்தைமாகடல்வளைந்தெனவவுணர்தற்சூழக்,
கானளவோங்கியகற்பகநாட்டிற்காற்றினும்விரைதரப்புகுந்தறைகூவி,
யூனளவோங்கியபெரும்படைவானோருடன்றமராடினரொருங்குடைந்தோட,
மீனளவோங்கியபாற்கடல்கலக்கும்வெற்பெனக்கலக்கினன்விறலுடைச்சண்டன். 12

375 வஞ்சினம்பகர்ந்தனன்வச்சிரம்விதிர்த்தான்மதமலையுகைத்தனன்விழியழல்கால,
வெஞ்சினங்கொடுசமர்புரிந்தனன்மகவான்விளைசமர்க்காற்றிலனோட்டெடுத்துய்ந்தா,
னஞ்சினர்யாவருமனையபொன்னுலகையடிப்படுத்தினன்கொடிநாட்டினனினப்பா,
லெஞ்சினவுலகங்களெங்கணும்புகந்தானிருஞ்சமராடினனிகலறுத்தெழுந்தான். 13

376 மீதலத்தமரரிந்திரனயன்மாலோன்வெந்கொடுத்திரிதரத்துரந்தனன்பொருது,
பூதலத்தியங்கினனொருநொடிப்பொழுதிற்பொள்ளெனத்தாட்படுத்துறுபிலவழியே,
பாதலத்திழிந்தனனாவயிற்பொலியும்பலரையும்வாட்டினனாணைவைத்தெழுந்து.
மாதலத்துயரியபூமியின்மீட்டும்வந்தனன்பற்பலமாதரைமணந்தான். 14

377 விரைதரத்தென்றிசைமயன்சமைத்துதவும்விசயமென்றுரைசெயுநகர்குடிபுகுந்து,
புரைதரச்சிங்கவொண்மணியணையிருந்துபூங்குடைநிழற்றிடச்சாமரையிரட்டக்,
கரைசெயற்கரும்பலதேவரும்போற்றக்கண்ணில்பல்லவுணருங்களித்தனர்சூழ,
வுரைசெயற்கரும்பலபோகமுந்துய்த்தேயுவந்தரசிருந்தனனுறுவலிக்கொடியோன். 15

378 கொடியவனிங்ஙனமரசுசெய்நாளிற்குளிர்விசும்பமரர்கள்கற்பகமாலை,
முடியவனெனுமகபதிநறிதாயமுண்டகம்வீற்றிருப்பவன்றுளவணியு,
நெடியவன்முதலியவமரர்கள்குழுமிநிலைகுலைந்தென்னினிச்செய்குதுமென்று,
கடியவன்மனத்தவன்புரிதொழிற்கஞ்சிக்கயிலையங்கிரியினையடைந்தனர்மாதோ. 16

379 வெள்ளியங்கிரிமிசையிவர்ந்தனர்நந்திவிமலனையடிதொழுதேத்தினரடிகே,
டுள்ளியகொடுந்தொழிற்பெருவலிச்சண்டாசுரன்றவம்புரிந்துபல்வரங்களும்பெற்று,
நள்ளியவெங்களைஞாட்பிடைப்பொருதுநடுநடுங்கிடத்துரந்தெவ்வகைவளனு,
மெள்ளியகுறிப்பொடுந்தெவ்வினனமர்வானிதுமுறையிடுவதற்கடைந்தனமென்றார். 17

380 என்றலுமிரங்கியநந்தியெம்பெருமானிறையவன்றிருமுனமிமையவர்பலருஞ்,
சென்றிடவிடுத்தனன்கொன்றையஞ்சடிலத்தேவெதிர்சென்றனர்தொழுதடிவிழுந்தா
, ரொன்றியகவலையங்கடற்கரைகாணாதுயங்கினமடிகளென்றுரைத்துரைத்தழுதார்,
கன்றியமத்தெமைக்காத்தல்செய்திரங்காய்களைகண்மற்றிலமுனையன்றியென்றிரந்தார். 18

381 பெருந்தவமாற்றியடுவலிச்சண்டன்பெறும்படியடிகண்முன்னருளியவரத்தாற்,
கருந்தலையவுணர்கள்பலரொடும்புகுந்துகற்பகநாடுமுற்பற்பலநாடு,
மருந்திறல்வலியினிற்கவர்ந்தனமர்வானவனுயிர் தொலைத்தெமைப்புரத்தியின்றென்
னிலிருந்தநின்களவிடத்தினைவெளிவிடுத்தியின்றெனினுதல்விழியாவதுதிறத்தி. 19

382 இசைந்தவித்திறங்களிலியாதுசெய்திடுதியியம்புகென்றடிபணிந்தனாரவரைக்கண்,
ணசைத்தவன்றிருவுளமிரங்கிமற்கருணையலர்முகத்தெழவிசைத்தருளுவனமரீர்,
பசைத்தவிர்தருதலின்மன்னுடையவுணன்பகரருந்தவம்புரிந்துறுவரங்கொளுநாள்,
வசைத்தலைவிடுமெனமகளிரைப்பொருளாமதித்திலனதுநுமக்குதவியதுணர்வீர். 20


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:22 am

383 வேறு.
ஆணுருவமைந்தோராலுமமைந்தனவாலுமாலு
மேணுருவனையான்றன்னைவேறலின்றிமையீர்பெண்மை
பூணுருவொன்றேயன்னாற்பொருதுயிர்சவட்டுமற்றான்
மாணுருவுமையாள்பாதம்வணங்கியீதுரையினென்றான். 21

384 என்றலுமயன்மாலாதியிமையவரெம்பிரானே
நன்றருள்செய்தாயெங்கணாயகியமர்வதெங்கே
கன்றலின்றெளியேமுய்யக்கருணைசெய்தருள்வாயென்றா
ரன்றவர்க்கியம்பியெங்கோனருள்சுரந்தருளுமன்னோ. 22

385 நம்மிடையொருவினோதநயந்துகண்புகைத்தலாலே
விம்முபேரிருளின்மூழ்கிமெலிந்துயிர்கருமநீத்த
வம்மவிப்பிழைதீரும்பாக்காற்றுதிகழுவாயென்று
செம்மைசேர்புவியுண்மேவச்செலவிடுத்தனமெங்கென்னில். 23

386 நாவலந்தீவின்மேலாம்பரதகண்டத்துநாளு
மோவரும்பலதேயத்துமுத்தமமாகிவைகுந்
தாவருந்திராவிடி்சாறேயத்துத்தவத்தாரன்றி
முவரம்பாண்டிநாட்டுவிளங்குமோர்தெய்வத்தானம். 24

387 மதுநதிவடபாலோடவயங்கியவிரிசலென்னு
முதுநதிதென்பாலோடமுகிழ்த்ததோரடவியாங்கு
விதுவெனவிளங்காநிற்கும்வெள்ளியமருதொன்றுண்டா
லதுதுயரகற்றாநிற்குமடைந்துகண்டவர்க்குநாளும். 252

388 அத்தருநிழலில்யாமோரருட்குறிவடிவமாகி
நித்தலும்வசிப்போநம்மைநெடியவன்மீகமொன்று
பொத்தியாங்கிருக்குமந்தப்புண்ணியதலத்தைச்சார்ந்து
சித்திசானமக்குமேலாற்றீர்த்தமொன்றியற்றிக்கொண்டு. 26

389 காலங்கடொறுந்தப்பாமேகருத்துறுபூசையாற்றி
யேலங்கொள்குழலாள்பன்னசாலைசெய்தினிதுமேவிச்
சீலங்கொணமைத்தியானஞ்செய்துவீற்றிருப்பளந்த
மூலங்கொடலத்தையுற்றுமொழிமினீதனையாட்கின்னும். 27

390 அனையமாதலத்தைநீவிர்காதலித்தடைந்தபோதே
நினைவெலாமுற்றாநிற்குநெடும்பகைக்கிறுதிகூடுந்
துனையநம்மருளும்வந்துசூழ்தருமாதலாலே
புனையவாமமரீரங்குப்போவதுகுறிமின்யாமும். 28

391 பெய்வளைக்கருளுமாறுபின்னரேவருதுமென்றா
னெய்வளைத்தொளிருமொண்கூர்நேமியோனாதிவானோர்
மைவனைத்தன்னகண்டவள்ளலார்செம்பொற்பாதங்
கைவளைத்திரைஞ்சிப்போற்றிவிடைகொண்டார்களித்துமாதோ. 29

392 விடைகொடுபோந்துவானோர்வெள்ளியங்கயிலைநீங்கி
யுடைகடற்புடவியுற்றாருறுவலிச்சண்டற்கஞ்சி
யடையுருமுழுதுமாறியாற்றிடைப்பட்டகங்கைச்
சடையவன்றானமெல்லாந்தாழ்ந்துதாழ்ந்திறைஞ்சிப்போந்தார். 30


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:22 am

393 காழகிற்றுணியுஞ்சந்துங்கதிர்மணித்திரளுநால்வாய்
வேழமெண்மருப்பும்பொன்னுநித்திலக்குவையும்வீசி
யாழ்கடற்கிடங்குதூர்க்குமகன்புனற்பொருனைசூழ்ந்து
வாழியவளமிக்கோங்கும்வழுதிநன்னாடுபுக்கார். 31

394 சங்கினமுயிர்த்தமுத்தந்தலைத்தலைநிலவுவீசிக்
கங்குலும்பகலேயாகக்கண்டிடும்பாண்டிநாட்டி
லெங்குளதலமும்போற்றியெம்பிரானருளிச்செய்த
பொங்குமாதலமெங்குள்ளதென்றுளம்பொருந்தவாய்ந்தார். 32

395 வரைபெயர்த்தெறிந்துசெல்லுமதுநதிகண்டுகொண்டு
கரையகலந்நீருள்ளுங்களிப்பினுங்கலந்துமூழ்கி
விரைசெலற்பெருக்குவாய்ந்தவிரிசலாறதுவுங்கண்டக்
குரைபுனலகத்துமூழ்கிக்குலவுபேரின்பமுற்றார். 33

396 இருதிறநதியுங்கண்டோமிவைக்கிடையுள்ளதாய
மருமலர்வனமேயம்மான்வன்மீகத்தமராநிற்குந்
திருவமர்மருதமேவித்திகழ்வனமென்றுதேர்ந்து
பொருவிறம்முருவங்கொண்டார்பொய்யுருவகற்றிமாதோ. 34

397 தேவியைக்காண்பான்சிந்தைசெய்தினிதேகுவார்முன்
மேவியவளியலைப்பவிடபங்களசையுந்தோற்றங்
காவியங்கண்ணாளென்னுளிருக்கின்றாளென்றக்கானம்
பூவியல்கரங்கணீட்டிப்புலவரையழைத்தல்போலும். 35

398 மருதமர்கானமெங்குமாமலர்பொலியுந்தோற்றங்
கருதுநந்தமைநீங்காதகடவுளர்பலரும்வந்தா
ரொருதனிமுதல்விசெய்யுமோங்கருட்குரியராவார்
பொருதடுபகையுந்தீர்வாரெனப்பொலிதோற்றம்போலும். 36

399 நால்வகைநோயுமின்றிநண்ணியதருச்சால்கானம்
பால்வகைவளங்களெல்லாங்கண்குளிர்படைப்பப்பார்த்து
மால்வகைகழிந்ததூயமனத்தினராகிப்புக்குச்
சேல்வகையுகளுந்தெய்வச்சிவகங்கைத்தீர்த்தந்தோய்ந்தார். 37

400 வெள்ளியநீறுபூசிவிரும்புகண்மணியும்பூண்டு
வள்ளியவெழுத்தைந்தெண்ணிமருதமர்தானஞ்சார்த்து
தெள்ளியவன்மீகத்திற்செறிசிவக்கொழுந்தைக்கண்டு
துள்ளியவுவகையோராய்ச்சூழ்ந்துதாழ்ந்தெழுந்தார்வானோர். 38

401 தந்தையைக்கண்டுகொண்டோந்தாயினைக்காண்போமென்று
சிந்தையுட்களிப்புமேவவடகிழக்கெல்லைசேர்ந்து
நிந்தையில்பன்னசாலைநேருறப்புகந்தாராங்கு
முந்தைமாமறையுங்காணாமுதல்வியைக்கண்டாரன்றே. 39

402 காண்டலுமுவகைபொங்கக்கண்கணீரருவிபாய
நீண்டமெய்ப்புளகம்போர்ப்பநெஞ்சநெக்குருகாநிற்பத்
தாண்டவம்புரியாநிற்குந்தம்பிரானிடப்பான்மேய
மாண்டவொண்குணத்துத்தேவிமலரடிதொழுதுவீழ்ந்தார். 40


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:23 am

403 அடியரேமுய்ந்தேமுய்ந்தேமசுரரால்வருத்தப்பட்ட
மிடியரேமுய்ந்தேமுய்ந்தேம்வெவ்வினைத்தொடக்குண்டஞ்சுங்
கொடியரேமுய்ந்தேமுய்ந்தேங்கோலங்கண்டின்பமுற்ற
படியரேமுய்ந்தேமுய்ந்தேமெனப்பகர்ந்தாடினாரே. 41

404 அரியநாயகியைக்கண்டோமம்பலத்தாடியுள்ள
மரியநாயகியைக்கண்டோம்வண்மையினமையாட்கோடற்
குரியநாயகியைக்கண்டோமுலகெலாமொருங்குபெற்ற
பெரியநாயகியைக்கண்டோமெனப்பலபேசினாரே. 42

405 வழுத்துவார்பவநோய்தீர்க்கமலைவருமருந்தேவன்மை
கொழுத்தவாளவுணன்சாடக்குலைகுலைந்தடைந்தவேழைத்
தொழுத்தையேமுய்யுமாறுசுரந்தருள்செய்யிலென்று
முழத்தபேரறிவினூடுமுயக்கியதாகுமென்றார். 43

406 இவ்வண்ணமலறியோலமிடுமையவரைநோக்கி
யவ்வண்ணம்போலவெங்குமறிவுருவாகிநிற்குஞ்
செவ்வண்ணப்பெருமான்பாகந்தீர்தராச்செல்விநுங்கட்
கெவ்வண்ணமுற்றதிங்ஙனெய்தியதெற்றுக்கென்றாள். 44

407 என்றலும்பிரமனேர்சென்றிருகரங்கூப்பிச்சொல்வான்
மன்றலங்குழலாய்சண்டனென்பவன்றவத்தான்மாண்டு
மின்றயங்கிடைநல்லாரைப்பொருள்செயான்விண்ணோராதி
யொன்றமற்றியாவராலுமுடைதராவரம்பெற்றுள்ளான். 45

408 அன்னபாதகனானாடுமுதலியவனைத்துந்தோற்றுப்
பன்னகாபரணன்முன்போய்ப்பகர்ந்தனங்கயிலாயத்தின்
முன்னவனின்பான்மேவமுடுக்கினானிங்குமேவி
யுன்னதாள்போற்றப்பெற்றோமென்றுரையாடினானே. 46

409 வண்ணப்பொன்மலரின்மேலான்மலர்க்கரங்குவித்துச்செய்த
விண்ணப்பமுழுதுங்கேட்டுமிகுபெருங்கருணைகூர்ந்து
தண்ணப்பண்சடைப்பிரானார்தந்திருவருளோநீவிர்
கண்ணத்துன்பகற்றுமிங்குக்கலந்ததென்றுவகைபூத்தாள். 47

410 நிறைவலியவுணன்சாடநிலைகுலைந்திங்குமேய
கறையில்வானவர்காணெஞ்சங்கவன்றிடீரஞ்சல்வேண்டா
குறைபடவனையாற்கொன்றுகுலத்தொடுநம்மைக்காப்போ
மிறையிலென்றபயமீந்தாளேழுலகீன்றசெல்வி. 48

411 தேவியாதரவிற்கூறும்வார்த்தைதஞ்செவியிற்கேட்டுப்
பாவியேமுய்ந்தேம்யாதும்பயமிலையினிமேலென்று
மேவிமாமலரிற்சீர்த்தமென்பதம்பலகாற்போற்றி
வாவிசூழனையகானமருவிவீற்றிருந்தார்வானோர். 49

412 வண்மைசாறவத்துவாய்மைச்சவுநகமனிவர்வானோர்
திண்மைசாலங்குச்சென்றுதேவியைக்கண்டவாற்றா
லொண்மைசாலறிஞர்கண்டதேவியென்றுரைப்பரந்தத்
தண்மைசாலறத்தையென்றுசாற்றிமேற்சாற்றுஞ்சூதன். 50

தேவியைக்கண்ணுற்றபடலம் முற்றிற்று.
ஆக படலம் 7-க்கு, திருவிருத்தம்- 412.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:23 am

8. சண்டாசுரன்வதைப் படலம். (413- 544 )

413 கந்தமலரோன்முதல்வானோர்கண்டதேவியெனுந்தலத்து
நந்தமருதினடியமருநம்மானடித்தாமரைமலருஞ்
சந்தமுலைமென்கொடிமரங்குற்றலைவியடித்தாமரைமலர
முந்தவணங்கிப்பெருகன்பின்முதிர்ந்துபணிசெய்தொழுகுநாள். 1

414 மிறைசெயவுணன்கொடுங்கோன்மைவெள்ளிவரைநம்பெருமான்பால்
முறையினியம்பமருதவனமுற்றியிறைவியடிவணங்கி
யறைமினெனவுய்த்தனனிறைவியடிசார்ந்துரைப்பவஞ்சாமே
யுறைதீர்கவலையொழித்துமெனவுரைத்தாளுரைத்தமொழிப்படியே. 2

415 வல்லையியற்றும்படிதுதிப்போம்வம்மினெனவானவர்யாரு
மொல்லையெழுந்துசிவகங்கையுற்றுமூழ்கிநீறணிந்து
செல்லையலைக்குமருதவனத்தேவதேவனடிபணிந்து
முல்லைமுறுவற்பெருந்தேவிமுன்வந்திறைஞ்சித்துதிக்கின்றார். 3

416 எல்லாம்வல்லசிவபெருமானெழிலார்தருநின்னொடுகலந்தே
யெல்லாவுலகும்படைத்திடுவானெல்லாவுலகும்புரந்திடுவா
யெல்லாவுலகுந்துடைத்திடுவானெல்லாவுயிர்க்குமறைப்பருள்வா
னெல்லாவுயிர்க்கும்வீடருள்வானென்றாற்பெரியநாயகிநீ. 4

417 எல்லாமறையின்வடிவானாயெல்லாமறையும்வியாபித்தா
யெல்லாமறையுந்தொழப்படுவாயெல்லாமறையுமேகலையா
யெல்லாமறைக்குமுதலானாயெல்லாமறையின்முடியமர்வா
யெல்லாமறையின்முடிவுணராயென்றாற்பெரியநாயகிநீ. 5

418 என்றுதுதிக்கும்வானவருக்கிரங்கியருள்கூர்ந்தருட்செல்வி
நன்றுநுமதுதுதிமகிழ்ந்தோநயந்துபெரியநாயகியென்
றின்றுநமைநீர்சொற்றமையாலென்றுநமக்கிப்பெயராக
வொன்றுநுமதுகவலையுமின்றொழிப்போமுணர்மினென்றுரைத்து. 6

419 பொல்லாவவுணன்மடவாரைப்பொருளாமதித்திடாமையினா
லொல்லாவனையானவமதித்தார்தமைக்கொண்டவனையொறுத்தலே
நல்லாதரஞ்செய்திறனென்றுநன்றாராய்ந்துதன்கூற்றி
னெல்லாவுலகுநடுங்கவருவித்தாளொருபெண்ணிறைவியே. 7

420 கரியகடலொன்றிரண்டுபிறைகவ்வியெழுந்ததோற்றமெனத்
தெரியவுயர்ந்தபெருவடிவஞ்சிலைக்கும்வாயில்வளையெயிறும்
பெரியவடமேருவுஞ்சமழ்க்கப்பிறங்குமுலையுமிளங்காலைக்
குரியகதிராயிரம்வளைந்தாலொக்குமரையிற்செம்பட்டும். 8

421 வாளதாதிபொலிகரமும்வடவைகால்கண்களுமண்ட
கோளமேவுநெடுமுடியுங்குறிக்குந்திசைபேர்த்திடுபுயமு
மூளவெழுந்தசினக்கனலுமுழங்குமுருமிற்பொலிகுரலுங்
காளவுருவுங்கொடுதோன்றிக்காளியெனும்பேர்தழீஇநின்றாள். 9

422 நின்றகாளியிறைவியடிநேர்சென்றிரைஞ்சிப்போற்றியெழுந்
தொன்றவுலகம்வாய்மடுக்கோவுருட்டிவரைகள்பொடிபடுக்கோ
கன்றவயன்மாலாதியரைக்கையிற்பிசைந்துபொட்டிடுகோ
துன்றவமைந்தகடல்குடிக்கோசொற்றிபுரியும்பணியென்றாள். 10


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:24 am

423 என்றுகுமரிகூறுதலுமிமையோர்க்கிடுக்கணனிசெய்யுங்
குன்றுநிகர்தோட்சண்டனுயிர்குடித்திநினக்குப்பணிபுரிய
வொன்றுமகளிர்பற்பலருமுகைக்கும்விறல்சாலூர்தியுநா
மின்றுபடைத்தத்தருகின்றோமென்றாணினைந்தாளப்பொழுதே. 11

424 குன்றுபிளப்பவுலகநிலைகுலையமுழங்குங்குரல்யாளி
யொன்றுவெளிப்பட்டதுகடல்வந்தொருங்கசூழ்ந்தாலெனவதிர்த்துத்
துன்றவலிசாலிடகினிகள்சூழ்ந்தார்குமரியூர்தியா
யொன்றுபணிசெய்திடுவாராயுறுகமாவேமடவீரே. 12

425 என்றுகருணைநோக்கருளியிகல்சால்வீரியுருவஞ்சித்
துன்றுமனத்துட்குடையாராய்த்தூரத்தகலுமாலாதிக்
கன்றுமமரர்தமைநோக்கிக்கடவுளானீரெல்லீரு
மொன்றுமடவார்வடிவமெடுத்துறுவீர்குமரியுடனென்றாள். 13

426 என்றபொழுதேயிந்திரன்மற்றிந்திராணியுருக்கொண்டான்
மன்றல்கமழுமலர்மேலான்வயங்குபிராமியாயினான்
வென்றதிகிரிப்படைமாயோன்விறல்சாலொருவைணவியானா
னொன்றமற்றைவானவருமுற்றமடவாருக்கொண்டார். 14

427 கோடிகோடிவானவர்தங்கூறென்றுரைக்குமடவாருங்
கோடிகோடிவலவைகளுங்கூடிப்போற்றவெழுந்துலகங்
கோடிகோடிமுறையுயிர்த்தாள்குளிர்தாட்கமலமிசைநறும்பூ
கோடிகோடிதூய்ப்பணிந்துகொண்டாள்விடைவெங்குரற்காளி. 15

428 கண்ணார்மருதவனத்தளவுங்காலானடந்துகடந்தப்பா
னண்ணார்வெருவவருகாளிநாடுமுழுதுங்குடியேற
விண்ணார்நகரந்திருவேறவிழைபுண்ணியமுமீடேற
வெண்ணார்நிறங்கீண்டுதிரம்வாய்மடுக்கும்யாளியேறினாள். 16

429 கலிக்குந்தத்தமூர்திமிசையிவருமாறுகடைக்கணிப்ப
வொலிக்குமணிப்பூண்மடவார்கள்பலருமுள்ளமுவந்திவர்ந்தார்
சலிக்கும்புடவிவெரிநெளியத்தாங்கக்கடலுங்குமிழியெழ
வலிக்குமொருதென்றிசைநோக்கிவிடத்தாள்யாளிமாகாளி. 17

430 இருகுரோசத்தளவெய்தியாளியிழிந்தங்கினிதிருந்தா
ளருகுமாதரரசாதற்கபிடேகஞ்செய்தடிபணிந்து
பெருகுகாலமெனச்சூழ்ந்துபேணிக்காவல்புரிந்திருந்தார்*
கிருகுதீரவ்விடஞ்சிவணுந்தேலிசாலமெனுந்திருப்பேர். 18

431 அன்னதேவிசாலபுரமம்மைசெம்மையபிடேக
மென்னநவிலந்திருவடைந்தவிடமாதலினந்நகருள்ளார்
பன்னவரியபெருந்திருவம்பொருந்திப்பயில்வரடைந்தோருஞ்
சொன்னமுதலாம்பலவளனுந்துலங்கப்பெறுவரெஞ்ஞான்றும். 19

432 அந்தத்தலத்தினினிதமர்ந்தவலகைக்கொடியாள்வைணவிமற்
சந்தக்குவிமென்முலைமடவார்தம்மைநோக்கியொருதூது
முந்தப்பகைவனிடத்தனுப்பிமுன்னந்தெரிந்துமற்றவன்போர்
நந்தப்பொருதலறனென்றாணன்றென்றுரைத்தாரெல்லாரும். 20


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:24 am

433 ஆனாலங்குப்போய்மீளுமாற்றலுடையார்யாரென்ன
மானாவியன்றகருநெடுங்கண்மடந்தைபிராமியெனப்படுவாள்
போனானன்றுபுகன்றுவருமென்றுபுகன்றாள்வயிணவிமற்
றூனால்விளங்குஞ்சூலத்தாளுள்ளதுரைத்தாய்நீயென்றாள். 21

434 என்றலோடும்பிராமியெழுந்திறைஞ்சியானேபோய்வருவ
லொன்றவிடைதந்தருளென்றாளுவப்புற்றனையாண்முகநோக்கி
மன்றவிசையநகரடைந்துவல்லவவுணன்றனைக்கண்டு
கன்றவியற்றல்கடனன்றுகடவுளாரையெனப்புகறி. 22

435 ஈதுமொழியினவன்மறுப்பானென்னில்விரைந்துபடையோடு
மோதுசமருக்கெழுதியெனமொழிந்துவருதியென்றுரைத்தாள்
காதுகொடுஞ்சூற்கங்காளிகருதும்பிராமிநன்றென்று
போதுமலர்தூய்ப்பணிந்தெழுந்துபோந்தாள்விசையநகர்நோக்கி. 23

436 வெளியேவழியாவிரைந்தெழுந்துசென்றுவிசையநகர்புகுந்து
களியேயடைத்தமனத்தவுணர்கைகள்கூப்பித்தொழுதெத்த
வொளியேமண்மாமண்டபத்துளோங்குமடங்கலாதனமே
லளியேயாதகுணத்தினமர்சண்டாசுரன்முன்னடுத்தனளால். 24

437 அடுத்துநிற்குமடந்தைமுகமவுணர்கோமானெதிர்நோக்கிக்
கடுத்துநமக்குநேராகக்காமர்மங்கையிவளடைதற்
கெடுத்துநிறுவுகருமம்யாதிவள்யாரின்னேயறிதுமென
மடுத்துநீயார்நின்வரவென்மடந்தாயுரைத்தியாலென்றான். 25

438 உலகுபோற்றுமருதவனத்துறையாநின்றமாதேவி
யிலகுசரணமடுத்திறைஞ்சியேத்தியிமையாரெல்லாரு
மலகுதவிர்நின்பெருங்கொடுமையறைந்துகாத்தியென்றுரைப்ப
நலகுமானைமுன்னுயிர்த்தநங்கையொருமங்கையையுயிர்த்தாள். 26

439 மேருவிடிக்கவேண்டிடினும்வீரைகுடிக்கவேண்டிடினும்
பாரும்விசும்புமேல்கீழாப்படுத்துநிறுத்தவேண்டிடினு
மாரும்வியக்கவொருநொடியிலமைப்பாள்காளியெனும்பெயராள்
சோருமமரர்தமைப்புரந்துதுட்டர்தமைமாட்டிடுந்துணிபாள். 27

440 அனையள்விடுக்கவருந்தூதியான்பிராமியெனப்பெயரே
னினையவமரர்கொடுங்கோன்மையியற்றுகுணநீத்தெஞ்ஞான்றும்
புனையவமையுஞ்செங்கோன்மைபொருத்துகுணநீபொருந்திலுனை
முனையசூலப்பெருமாட்டிமுனியாதுவக்குமுயிர்வாழ்வாய். 28

441 அன்றேலவள்கைப்படைக்குவிருந்தாதல்சரதமிதுபுகல்வா
னின்றேயினளென்றனையுணர்தியிதுநீகருத்தினுறக்கொள்ளி
னன்றேபணியவுடன்போதியன்றேலமர்க்குநண்ணுதிவன்
குன்றேபுரையுந்தோளாயென்னுரைத்திகூறுகூறென்றான். 29

442 கேளாமாற்றங்கேட்டிடலுங்கிளர்வெங்கோபந்தலைக்கொண்டு
மூளாநிற்பவிழிசிவந்துமுகரோகங்கடுடிதுடிக்க
வாளாநகைத்துக்கையெறிந்துவானமுழுதுமடிப்படுத்த
தாளாண்மையினேற்கிம்மொழியுங்கேட்டறகுமென்றிஃதுரைப்பான். 30


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:24 am

443 நீயோர்பேதைநின்னைவிடுத்தவளுநினக்குமூத்தாளே
பாயோரரவாக்கொண்டான்முற்பலரும்போரிற்புறங்கண்டே
னாயோர்பகையுமில்லாதேற்கடுத்தபகையுமழகிற்றே
பேயோர்கொடியாடூதுவிடுபெற்றிநினைக்குந்தொறும்வியப்பே. 31

444 பேதாயிங்குநீமொழிந்தபேச்சுமுழுதும்பெரிதாய
தீதாய்முடிந்ததுனைத்தண்டஞ்செய்தல்புகழன்றிவணின்று
போதாய்விரைந்தென்றனன்கேட்டபொற்கொம்பனையாண்முறுவலித்துக்
கோதாய்விடுமேகுணமுமழிகாலங்குறுகினென்றிசைத்தாள். 32

445 என்றலோடுமோதிபிடித்திழுத்துவம்மினிவளையென
நின்றசிலரைப்பார்த்துரைக்கநெடியோனாதிவானவர்மே
லொன்றவேவாதுரைத்தமொழியுரைக்கவந்தவொருபெண்மே
லின்றவாவியேவியதென்னென்றுபிணங்கியவரகன்றார். 33

446 கண்டமாதுமுறுவலித்துக்கழியுங்காலங்குறுகிற்று
சண்டவிரைந்தாகவபூமிதன்னிலுனதுபெரம்படையோ
டண்டவடைந்திலாயெனினின்னாண்மையெவனாமென்றுரைத்துக்
கொண்டவிரைவினவணின்றுமெழுந்தாடேவிமுன்குதித்தாள். 34

447 கண்டதேவிவாழ்வானோகழிவானோசண்டாசுரனுட்
கொண்டதுணிபென்னுரையென்றாள்குணப்பிராமியடிவணங்கி
மண்டநெடும்போராற்றுதற்கேவருவான்வந்துமாய்வான்மற்
றண்டர்புரிமாதவம்பழுதாங்கொல்லோவன்னாயறியென்றாள். 35

448 சான்றதேவியொருதேவிசாலபுரத்திவ்வாறிருந்தா
ளான்றவிசையநகர்மேவுமவுணர்கோமானுளங்கறுத்துத்
தோன்றவமைச்சர்படைத்தலைவர்முதலோரிங்குத்துன்னகவென்
றேன்றதூதுவிடவவருமிறுத்தார்பணியென்னெனவினவி. 36

449 வந்தார்முகத்தைவாளவுணர்கோமானோக்கிமறமுடையீர்
சந்தார்முலையோர்மாகாளிசாற்றிவிடுத்ததுணர்ந்தீரே
முந்தாரவத்திற்படைகளொடுமுழங்கிஞாட்பிற்கெழுகவென
வந்தார்புனையுமவரிசைந்தாரமைச்சர்பல்லோருளுங்கனகன். 37

450 தொழுதுநவில்வான்பெருமான்பாற்றோலாவரநீகொண்டநாள்
பழுதுபடுமேந்திழையாரென்றெண்ணிப்பொருளாப்பற்றிலா
யெழுதுபுகழாயதனாலேயெண்ணிப்போருக்கெழுகென்றா
னுழுதுவரிவண்டுழக்குதாருரவோன்சினங்கொண்டீதுரைப்பான். 38

451 அந்தநாளிற்பொருளாகமதித்தேனல்லேனதுமறப்புற்
றிந்தநாளிற்பொருளாகமதித்துளேன்கொலென்னுரைத்தாய்
முந்தவமருக்கஞ்சினாயென்றுமொழிந்தவவன்கருத்தை
யுந்தவுணராதிகந்துரைத்தான்மூர்க்கர்க்குணர்த்துவாருளரோ. 39

452 அன்னபொழுதின்மகதியாழ்முனிவன்விரைவினாங்கடுத்து
மன்னநினக்கேயாக்கமுளவாகவென்றுவாய்மொழிந்து
பொன்னங்கடுக்கைமுடிக்கணிந்தபுத்தேணினக்குக்கொடுத்தவரந்
தன்னமுணராதொருமடந்தைசமருக்கெழுந்தாள்படையோடும். 40


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:25 am

453 படையுமிடையுஞ்சிறுமருங்குற்பாவைமாரையென்றக்கா
லடையும்விறன்மற்றவட்காமேயண்ணால்பெண்ணென்றிகழாமே
யுடையுங்கடனேர்படையினொடுமுருத்துச்சென்றுபோர்புரிதி
மிடையும்வாகைநின்னதேயென்றான்கேட்டவெங்கொடியோன். 41

454 குய்யம்வைத்துமுனியுரைத்தகூற்றைக்கூற்றென்றெண்ணானா
யையநன்குமதித்துரைத்தாயறிஞர்சூடாமணிநீயே
வெய்யபெரும்போராற்றிடினும்வெற்றிகொள்வேனொருகணத்தென்
செய்யவல்லாளொருபேதையென்றுநகைத்துச்செப்பினான். 42

455 வல்லையதுசெய்யென்றுமுனிவரனுண்மகிழ்ந்துவிடைகொண்டான்
மல்லைவிழைக்குந்திணிதோளான்வயவரானார்தமைநோக்கி
யொல்லைநமதுபெரும்படையோடொருங்குசென்றுகாளியம
ரைல்லையடைமின்யாமும்விரைந்தெய்துவாமென்றார்த்தெழுந்தான். 43

456 இறைவனுரைத்தமொழிப்படியேயெழுகபடையென்றுறவியவ
ரறையுமுரசமெருக்குதலுமாங்காங்குள்ளமதகளிறு
நிறையுங்கலினவாம்பரியுநெருங்குகொடிஞ்சிப்பொற்றேரும்
பிறையுஞ்சமழ்க்குமெயிற்றவுணர்குழுவுமெழுந்தபெருங்கடல்போல். 44

457 எட்டிமுகிலைத்துதிக்கைவளைத்திறுகப்பிழிந்துநீர்குடிப்ப
கிட்டிமருப்பாற்றிசையானைகீளப்பொதிர்ப்பமால்வரையை
முட்டியருகுசாய்த்திடுவமுருகுவிரிகற்பகக்குளகு
கட்டியெனக்கொள்வனவலகங்கலங்கவெழுந்தமால்யானை. 45

458 பற்றார்முடிமேற்குரமழுந்தப்பதிப்பவுததியோரேழும்
பொற்றார்புலம்பத்தாவுவபல்புவனமுழுதுமுழிதருவ
சுற்றார்தரவல்லிடிமாரிசொரியுமேனுந்துளக்கறுவ
கற்றாராலுமதித்துரையாக்கடுப்பிற்படர்வவாம்பரியே. 46

459 முடியால்விசும்பைப்பொதிர்த்திடுவமுழக்கான்முகிலையடக்கிடுவ
வடியானிலனைப்பிளந்திடுவவச்சால்வரையைப்பொடித்திடுவ
கடியாலினனைமழுக்கிடுவகடுப்பாற்காற்றைத்துடைத்திடுவ
கொடியால்வெளியைமறைத்திடுவகூடாரஞ்சுங்கூவிரமே. 47

460 இடியுங்கனலுங்கொடுவிடமுமேகவுருக்கொண்டனநீரார்
படியும்விசும்புநிலைகுலையப்பரவையேழுங்குடித்தெழுவார்
கடியுஞ்சினக்கூற்றெதிர்ந்தாலுங்கலங்காரருளற்றுழிதருவார்
மிடியுந்துயருமுலகுறுத்தும்வெய்யோர்வெய்யவாள்வீரர். 48

461 தானக்களிறுசுறவாகத்தாவும்புரவிதிரையாக
மானக்கொடிஞ்சிப்பொலந்திண்டேர்வயங்குஞ்சிதைப்பாரதியாக
வானத்தவர்தம்பகைவீரர்வருமீனெறியுமவராக
வீனக்கொடியோன்பெரும்படைதானெழுந்துகடலிற்படர்ந்ததே. 49

462 இன்னவாறுபடையேகவெழுந்தசண்டாசுரன்புனலுண்
முன்னமூழ்கியுண்டுடுத்துமுடிகுண்டலமாதிகளணிந்து
பன்னவரியபடைக்கலங்கள்பலவுமாராய்ந்தனனெடுத்தப்
பொன்னங்கொடிஞ்சிநெடுந்திண்டேரிவர்ந்தான்சங்கம்புயன்முழங்க. 50


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:26 am

463 ஆர்த்தமுரசுமுழவுபணையார்த்தபணிலம்வயிர்பீலி
யார்த்தவயவரணிந்தகழலார்த்தவிறற்றோள்புடைக்குமொலி
யார்த்தவளைந்தவெஞ்சிலைநாணார்த்தபுழைக்கைமால்யானை
யார்த்தகடுப்பின்வாம்புரவியார்த்தபலவுமடங்காதே. 51

464 கண்டான்வீணைத்திருமுனிவன்கடிதுபடர்ந்துகாளிமுனந்
தொண்டானிறைஞ்சியெழுந்துவலிதோலாத்திறல்சால்வீரரொடு
மண்டாகின்றபடைநெருங்கவந்தான்வானோர்புலஞ்சாய்த்த
சண்டாசரனீபோர்க்கெழுதிதாழாயெனக்கூறினன்போனான். 52

465 வேறு.
முனிவரனுரைத்தவார்த்தைகேட்டுவந்துமுகிழ்நகையரும்பினளிருந்தா
ணனிவளமடியார்பெறவருள்பெரியநாயகியுயிர்த்தமாகாளி
வனிதையர்பலருமொய்யெனவெழுந்துவட்டுடையரையுறப்புனைந்து
கனியிருட்கூந்தனாண்கொடுவரிந்துகச்சிறுக்கினர்முலைமறைய. 53

466 பரிசையும்வாளும்பற்றினர்சில்லோர்பகழிசால்கூடுவெந்நசைத்து
வரிசிலைகுழையவாங்கினர்சில்லோர்வடித்தவேலேந்தினர்சில்லோ
ரெரிகிளர்ந்தனையபரசுவெஞ்சூலமிருகையுந்தரித்தனர்சில்லோர்
விரிசுடர்க்குலிசமேந்தினர்சில்லோர்விறற்கதைசமந்தனர்சில்லோர். 54

467 இன்னராய்மகளிர்யாவருங்குழுமியெரிகிளர்ந்தெனச்சினமூண்டு
நன்னராதரத்தினிறைவிபொற்றிருத்தாணயந்தனர்தாழ்ந்துதாழ்ந்தெழுந்து
முன்னராடமர்க்குவிடைகொடுத்தருடிமுதல்வியென்றிரத்தலுமனையாள்
சொன்னவாறடைந்தாடுகசமர்யாமுந்தொடர்ந்தடைகுதுமெனவிடுத்தாள். 55

468 கரியிவர்ந்தாருமரியிவர்ந்தாருங்காய்கடுந்தழலுமிழ்செங்க
ணரியிவர்ந்தாருமறுகிவர்ந்தாருமலைதொழிற்பேயிவர்ந்தாரும்
விரிசிறைபறவைமிருகமற்றுள்ளவிழைந்திவர்ந்தாருமாயெவரும்
பரிகரியிரதந்துவன்றியவவுணர்படைக்கடல்கலந்தனரார்த்தே. 56

469 பரந்துவந்தடுத்தபாவையராயபகைப்பெருங்கடலினைக்குய்யஞ்
சுரந்துகொண்டிருக்குமன்னுடையவுணர்சுடர்விழிநெருப்பெழநோக்கி
நிரந்தரம்பந்துங்கழங்குமம்மனையுநிகழ்தரக்கோடலையொழித்தே
யரந்தடிபடைகளேந்திவந்தடுத்தீரரிவைமீரெனநகைத்தமர்த்தார். 57

470 ஒருகடலொடுமற்றொருகடல்கலந்தாலொப்பெனவிருதிறத்தாரும்
வெருவறக்கலந்தார்வெஞ்சிலைவளைப்பார்விறல்கெழுநாணொலியெறிவார்
பொருதிறற்பகழிபற்பலதொடுப்பார்போகயர்வரைபொடிபடக்கும்
பெருவிறற்றண்டஞ்சுழற்றினரடிப்பார்பிறங்குசக்கரந்திரித்தெறிவார். 58

471 மகபடாமிழந்துங்கிம்புரிவயங்குமுதுபெருங்கோடுகனிழந்து
மகனிலந்துழாவும்புழைக்கரமிழந்துமடர்நிரியாணமற்றிழந்தும்
புகர்முகமிழந்தும்போகுவாலிழந்தும்புகல்கறைக்காத்திரமிழந்தும்
தகவமருயிரேயிழந்துமிவ்வாறுசலித்தனகலித்தமாலியானை. 59

472 கடுநடையிழந்துங்கடுநடையொருநாற்கால்களுமிழந்துநாற்காலோ
டடுதிறல்படுபாய்த்திழந்துமப்பாய்த்தொடமைவலிமார்பகமிழந்து
மிடுகிலம்மார்போடெறுழ்வெரிநிழந்துமிசைத்தவவ்வெரிநொடுமணிகள்
படபெருங்கலனையிழந்துமிவ்வாறுபட்டனபட்டவாம்புரவி. 60


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:26 am

473 கொடிபலமுறிந்துங்கொடிஞ்சிகளழிந்துங்குடங்குடைமதலியவிழந்தும்
வடிமணிசிதர்ந்துங்கிடுகள்முறிந்தும்வயங்கியதட்டுகளுடைந்தும்
படிகிழித்தியங்குகால்பலகழன்றும்பரியநீளச்சுகடெறித்துங்
கடியவிர்செம்பொணாதனம்விரிந்துங்கழிந்தனகலந்ததேரெல்லாம். 61

474 தாளொடுகழலுந்தலையொடுமுடியுந்தயங்கியபூணொடுமார்பும்
வாளொடுகரமுமிறுகுறச்செறிந்தவட்டுடையொடுமிடையிடையுந்
தோளொடுதொடையும்விழியொடுகனலுந்தும்பைமாலிகையொடுபோருங்
கோளொடுகுரலுங்குலைந்தனர்வீழ்ந்தார்கொடியபோரேற்றவல்லவுணர். 62

475 வேறு.
புரந்துளைத்தனதுளைத்தனபொம்மல்வெம்முலையைக்
கரந்துளைத்தனதுளைத்தனவட்டுடைக்கலானை
யுரந்துளைத்தனதுளைத்தனவொண்டொடிப்புயத்தைச்
சிரந்துளைத்தனமகளிர்கட்டெவ்வர்வில்விடுகோல். 63

476 முறிந்தவாளிகள்முறிந்தனகேடகம்வடிவான்
முறிந்தவங்குசமுறிந்தனபிண்டிபாலங்கண்
முறிந்ததோமரமுறிந்தனமுழுக்கதைஞாங்கர்
முறிந்தவெஞ்சிலையிருதிறத்தவர்க்குமொய்போரில். 64

477 மலையுருண்டனவெனத்தலையுருண்டனவையக்
கலையுடைந்தனவெனக்கமழரக்குநீரெழுந்த
நிலைகுலைந்தனநிகழறக்கடையெலாமென்னத்
தலையவிந்தனசாடியவவுணர்தந்தானை. 65

478 எங்கணுங்குடரெங்கணுங்குருதியெங்கணுமென்
பெங்கணுங்கொழுவெங்கணுநாடியெங்கணுந்தோ
லெங்கணுந்தடியெங்கணுமிருளெங்கணுங்கை
யெங்கணுஞ்சிரமெங்கணுமழன்களாயிறைந்த. 66

479 ஆடுகின்றனகுறைத்தலைப்பிணங்களோடலகை
யோடுகின்றனவுற்றநெய்த்தோரொடுமுயிர்கண்
மூடுகின்றனதசைகுடர்வழும்பொடுமூளை
வீடுகின்றனகொண்டமானத்தொடுவீரம். 67

480 இன்னவாறிருபடையினும்பெருஞ்சிதைவெய்த
முன்னமேயமர்புரிந்திலமெனச்சினமூண்டு
சொன்னதானவர்தொழுமிறைமகன்றொகுவானோர்
வென்னவாவதிவீரனென்பவன்விரைந்தெழுந்தான். 68

481 வாங்கினான்கொடுமரத்தினைமால்வரைகுலையத்
தாங்கினானெறிந்தார்த்தனன்சரம்பலதொடுத்தா
னேங்கினாரரமாதர்கள்பலருமெய்த்திருதோள்
வீங்கிநேரெழுந்தார்தார்த்தனள்விறலயிராணி. 69

482 இருவர்வார்சிலையுமிழ்தருசிலீமுகமெழுந்து
மருவுவார்கடல்குடிப்பனவரைபொடிபடுப்ப
வொருவுறாதுவிண்பொதிர்ப்பனவுருவுவவையம்
வெருவினார்பலவுலகரும்விளைந்ததுபெரும்போர். 70


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:26 am

483 கொடியதானவனாயிரங்கொடுங்கணைகோத்து
நெடியசீரயிராணிமேல்விடுத்தனனிகழும்
படியபல்கணையவையெலாம்பாய்தலற்றொல்லை
யொடியவேவினளத்தொகைப்பகழிமற்றொருத்தி. 71

484 தருநறுந்தொடைமிலைச்சியதையலாயிரங்கோ
லொருவன்மேற்றொடுத்தேகினளவுணனுட்சினந்து
வெருவிலாயிரங்கோறொடுத்தவையெலாம்வீழ்த்தான்
பருவமங்கையேவினளொருபிறைமுகப்பகழி. 72

485 ஆலமேயெனவதுசினந்தடுத்தலுமடுதீக்
கோலமேயெனவவனொருபிறைமுகங்கொடுங்கோன்
ஞாலமேவிசும்பேயிவைநடுங்கிடவுய்த்தான்
சாலமேயெனக்கலாய்த்துமாய்ந்தனதளர்ந்திரண்டும். 73

486 தீயன்வச்சிரமெடுத்தயிராணிமேற்செலுத்தப்
பாயவச்சிரமேவினாளுடல்விழிப்பாவை
யாயமற்றிருபடைகளுநெடும்பொழுதமர்த்துச்
சாயவெய்த்தனவிட்டவர்கைத்தலஞ்சார்ந்த. 74

487 கடியவாயிரம்பகழியோராயிரங்கண்ணி
நெடியயானைமேற்செலுத்தினானெடியவாளவுண
னொடியமற்றவையாயிரங்கடுங்கணையுகைத்துக்
கொடியன்றேரினையாயிரஞ்சரங்களாற்குலைத்தாள். 75

488 வேறுதேரிவர்ந்தாயிரங்கடுங்கணைவிடுத்துத்
தாறுபாய்களிநான்மருப்பியானையைச்சாய்த்திட்
டூறுசோரிமிக்கொழுகிடவானநாடுடையா
ளேறுகோமலர்மேனியைத்துளைத்தனனிளைத்தாள். 76

489 இளைத்ததோர்ந்தனனகையெறிந்தார்த்தனனிருங்கை
வளைத்தவெஞ்சிலையொடுங்கணைமழையொடுமுழிதந்
துளைத்தவான்மடமாதர்களொருங்குவீழ்ந்தவிய
முளைத்ததீயனான்சிறிதுதன்மொய்ம்புகாட்டினனால். 77

490 ஈதுநோக்கியவயிணவிகலுழன்மேலிவர்ந்தாள்
சாதுநோக்கியமகளிரைத்தளரற்கவென்றாள்
போதுநோக்கியகைத்தலங்கார்முகம்பொறுத்துத்
தீதுநோக்கியசிலீமுகம்பற்பலசெறித்தாள். 78

491 தலையிழந்தனர்சிலர்நறுந்தாரணிதடந்தோண்
மலையிழந்தனர்சிலர்பெருவாரிநின்றன்ன
நிலையிழந்தனர்சிலர்நிலைகுலைதரநிகழ்த்துங்
கொலையிழந்தனர்சிலர்துழாய்வயிணவிகோலால். 79

492 ஓடினார்சிலரொளிந்துகொண்டுய்வதற்குறுதே
நாடினார்சிலரொளிந்துமென்னென்றுளநைந்து
வீடினார்சிலர்தலையறுபடவிசையொடுநின்
றாடினார்சிலரவுணருளவனதுகண்டான். 80


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 2 of 4 Previous  1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum