ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

கண்டதேவிப் புராணம்

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Go down

கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:03 am

கண்டதேவிப் புராணம்
திரிசிரபுரம் மஹாவித்துவான் மீனாட்சிசுந்தரம் பிள்ளையவர்கள் இயற்றியது.இஃது சிவநேசம் பொருந்திய வெளிமுத்தி வயிரவ ஐயாவவர்கள் அநுமதிப்படி தேவகோட்டை மு.குப்பான் செட்டியாரவர்கள் குமாரர் முத்தரசப்பசெட்டியாரால் சென்னை இலக்ஷ்மீவிலாச அச்சுக்கூடத்தில் பதிப்பிக்கப்பட்டது.


கடவுள் வாழ்த்து


1 விநாயகர்
பூமேவு பரையொருபாற் பெருமான்பின் பாற்றழுவிப் புணர்ந்தொன் றாய
மாமேவு பெண்பாலாண் பாலொடுமா றுற்றெரிந்து மாறு றாமே
தூமேவு முன்பால்வந் துறத்தழீஇ யொருமருப்பாற் றுணைப்பா லாய
தேமேவு முகமலரும் வலம்புரிக்குஞ் சரத்திருதாள் சேர்ந்து வாழ்வாம் 1

2 சொர்ன்னவருடேசர்
மாமேவு கடவுளருந் தடவுளருஞ் சுரும்பமர்பூ மாலை வேந்துங்
கோமேவு மலரானும் பலரானும் புகழ்திகிரிக் குரிசி றானுந்
தேமேவு பண்ணவரு நண்ணவருள் சுரந்துகண்ட தேவி மேவும்
பாமேவு புகழ்ச்செம்பொன் மாரிபொழிந் தவர்மலர்த்தாள் பரசி வாழ்வாம் 2

3 தேமாரி யமன்பதைக ளுளங்கருதி யன்னையுஞ்சீர் திகழ்பி தாவு
மாமாரி யனுமுலவாப் பெருங்கதியு நீயேயென் றடைந்து போற்றக்
காமாரி யாயிருந்துங் கவுமாரி யொடுங்கலந்த கருணை மூர்த்தி
பூமாரி சுரர்பொழியப் பொன்மாரி பொழிந்தபிரான் பொற்றாள் போற்றி 3

4 பெரியநாயகி
சொற்றபெரும் புவனமெலா மொருங்கீன்ற பெருந்தலைமைத் தோற்றத் தானோ
கொற்றமிகு பெருங்கருணை சுரக்குமிறை மையினானோ குமரி யாயுங்
கற்றமையிப் பெயர்பூண்டா யெனுமருத வாணரெதிர் கனிவா யுள்ளாற்
சற்றமைய முறுவலித்து மகிழ்பெரிய நாயகிதா டலைமேற் கொள்வாம் 4

5 வாய்ந்தபர சத்தியாய் விந்துவாய் மனோன்மணியாய் மகேசை யாய்ச்சீர்
வேய்ந்தவுமை யாய்த்திருவாய்ப் பாரதியா யிவரன்றி வேறா யின்னு
மேய்ந்தசிறை யிலிநாத னெத்திறநிற் பானதனுக் கியைய நின்றே
தோய்ந்தவுயிர்க் கின்புதவும் பெரியநா யகிதுணைத்தா டொழுது வாழ்வாம் 5

6 சபாநாயகர்.
மறையாதியியம்புகுறிகுணங்கடந்தோரைந்தெழுத்தேவடிவமாகி
நிறையாதிபடைப்பாதிதுடியாதியோரைந்துநிகழ்த்தநாளு
மிறையாதிதவிர்ந்திருவர்வியந்தேத்தவுமைதிருக்கண்விழைந்துசாத்த
வறையாதிமணிமன்றுண்டநவிலும்பெருவாழ்வையடுத்துவாழ்வாம் 6

7 சிவகாமியம்மை.
ஆன்றதாயடைந்தசுகங்கருவுமடைதருமாலென்றறைகூற்றிற்கோர்
சான்றதாயெவ்வுயிருமடையின்பந்தானடையுந்தவாலின்பாக
நான்றதாய்மிளிர்சடிலநாதனியற்றானந்தநடனங்காணு
மீன்றதாய்சிவகாமவல்லியிருதாமரைத்தாளிறைஞ்சிவாழ்வாம் 7

8 தட்சணாமூர்த்தி.
வேறு.
ஆய்தருபொருளுமாராய்ந்தடிநிழலடங்குமாண்பும்
வேய்தருமலர்நேரங்கைவிரலிருகூற்றிற்றேற்றித்
தோய்தருமுனிவர்நால்வர்துதித்திடக்கல்லாலென்னும்
பாய்தருவடிவாழ்முக்கட்பரனடிக்கன்புசெய்வாம் 8

9 வயிரவர்.
புகர்படுசெருக்குமேவல்புன்மையென்றெவருந்தேறப்
பகர்மறைகமழாநிற்கும்பரிகலமங்கையேந்தி
நிகரின்மான்முதலோர்மேனிநெய்த்தோர்கொண்டொளிர்பொன்மாரி
நகரினிதமர்ந்துவாழும்வடுகனைநயந்துவாழ்வாம் 9

10 மருதவிருட்சம்.
வேறு.
பரவியநாதமூலமாப்பராரைபணைகிளைகொம்பொடுவளாரும்
விரவியபஞ்சசத்தியாத்தளிர்கள்வேதமாமலர்களாகமமாக்
கரவியலாதவாசமைந்தெழுத்தாக்காமருசுகோதயமதுவா
வுரவியன்ஞானசொரூபமேயாகியொளிர்தருமருதினைத்துதிப்பாம் 10

11 வலம்புரிவிநாயகர்.
வேறு.
ஓங்குபெருந்தனக்கினமாயுற்றமதவாரணங்களொருங்குதேம்பி
யேங்குதிறமுறவருத்திவணக்கிடுமங்குசபாசமென்னுநாமந்
தாங்குபடையிரண்டுமொருதனைவணங்கக்கரத்தேந்தித்தலைமைபூண்டு
தேங்குநெடுங்கருணைபொழிவலம்புரிக்குஞ்சரத்திருதாள்சென்னிசேர்ப்பாம் 11

12 சுப்பிரமணியர்.
வெயிலேறவிரிக்குமுடிவானவர்விண்குடியேறவெள்ளையானை
குயிலேறவரிபிரமர்புள்ளேறவம்மனைவேர்கூடாமாதர்
கயிலேறமிளர்கடக்கையேறமெய்யேறக்கவினார்தன்கை
யயிலேறவமர்ந்துசிறைமயிலேறும்பெருமானையடுத்துவாழ்வாம். 12

13 திருநந்திதேவர்.
வேறு.
வரைபொடிபடுக்கும்வச்சிரப்படையும்வலிசெழுதண்டவெம்படையும்
விரைசெலற்றிறத்தின்மாற்றலர்நடுங்கும்விளங்கொளித்திகிரியம்படையும்
புரையமைசமழ்ப்புப்பொருந்தவில்வீசிப்பொலியும்வேத்திரப்படைதாங்கி
யுரையமைகயிலைகாத்தருணந்தியொருவனைமருவியேத்தெடுப்பாம். 13

14 தமிழாசிரியர்.
வேறு.
பன்னிருதடங்கைச்செம்மல்பாற்சிவஞானம்பெற்றுப்
பன்னிருகதிருமொன்றாம்பான்மையின்விளங்கிநாளும்
பன்னிருதவமாணாக்கர்பழிச்சிடமலையமேவப்
பன்னிருசரணநாளுந்தலைக்கொடுபரவுவோமே. 14

15 திருஞானசம்பந்தசுவாமிகள்.
அறைவடமொழிநவின்றபாணினியகத்துநாண
விறையமர்மயிலைமூதூரிருந்தவோர்தாதுகொண்டே
நிறைதரவொராறுமேலுநிரப்புதென்மொழிநவின்ற
மறையவன்காழிவேந்தன்மலரடிக்கன்புசெய்வாம். 15

16 திருநாவுக்கரசுசுவாமிகள்.
நீற்றுமெய்ச்சிவனேயென்றுமவனினுநிறைந்தாரென்றுஞ்
சாற்றுதற்கியையத்தந்தைதன்பரியாயப்பேரு
ளீற்றுமெய்கெடுத்தொன்றிற்பன்னிரண்டன்மெய்கொடுத்துக்கூறத்
தோற்றுமெய்ப்புகழ்சானாவிற்கரசினைத்தொழுதுவாழ்வாம். 16

17 சுந்தரமூர்த்திசுவாமிகள்.
எண்ணியமறுமைப்பேறுமிம்மையேயுற்றதென்ன
மண்ணியவியங்கும்வெள்ளிமால்வரையெருத்தமேறி
யண்ணியவியங்காவெள்ளிமால்வரையடைந்துவாழும்
புண்ணியமூர்த்திநாவற்புலனைப்போற்றிவாழ்வாம். 17

18 மாணிக்கவாசக சுவாமிகள்.
மாயவனறியாப்பாதமலரவன்மனைவிமேனி
தோயவுமலரோன்காணாச்சுடர்முடியனையானீன்ற
பாயநீருடுத்தமங்கையிவரவுமுருகிப்பாடுந்
தூயவர்கமலபாதத்துணையுளத்திருத்திவாழ்வாம். 18

19 தண்டீசநாயனார்.
மலர்புரைகுடங்கைவெள்வாய்மழுப்படையொன்றுதாங்கி
யலர்பசுவோம்பியின்னுமுண்ணுதலாதியாவும்
பலர்புகழ்தனக்கென்றொன்றும்வேண்டிலாப்பரன்போற்கொண்ட
நலர்செறிசேய்ஞலூர்வாழ்பிள்ளையைநயத்தல்செய்வாம். 19

20 அறுபத்துமூன்றுநாயன்மார்.
வேறு.
பூன்றதன்மையில்புன்மையேநெஞ்சகத்
தேன்றவஞ்சகமாதியிருப்பினுந்
தோன்றவோர்புரஞ்சூழ்ந்துறவாழ்வரா
லான்றமேன்மையறுபத்துமூவரே. 20

21 பஞ்சாக்கரதேசிகர்.
பூதங்கடந்துபொறிகடந்துபுலனுங்கடந்துபுகல்காண
பேதங்கடந்துகாலமுதலனைத்துங்கடந்துபெருவிந்து
நாதங்கடந்துவளர்துறைசைநமச்சிவாயதேசிகன்பொற்
பாதங்கடந்துபற்றறுத்தானினிமேலல்லற்படலிலையே. 21

22 அம்பலவாண்தேசிகர்.
வேறு.
மருடருவினைகடேய்த்தோமாமலக்குறும்புமாய்த்தோ
மிருடருபிறப்பில்வாரோமென்றுமோரியல்பிற்றீரோ
மருடருதுறைசைமேவுமம்பலவாணதேவன்
பொருடருகமலத்தாளெந்தலைமிசைப்புனைந்தபோதே. 22

23 சித்தாந்தசைவர்கள்.
பண்ணியபுறமார்க்கங்கள்பாழ்படவொழித்துமேலாம்
புண்ணியவிபூதியக்கமணியொடைந்தெழுத்தும்போற்றி
யண்ணியசிவானந்தத்தேனிரம்பவுண்டமையாநிற்கும்
தண்ணியகுணசித்தாந்தசைவரைவணக்கஞ்செய்வாம். 23

24 ஆலப்பணிசெய்வோர்கள்.
அரவுநீர்ச்சடையானெங்களம்மையோடகிலமெல்லாம்
பரவுமாறமர்பொன்மாரிப்பதிப்பெருந்தளியிற்றொண்டின்
விரவுநான்மறையோராதியலகிடல்விழைந்தோரீறா
முரவுசேர்தவத்தர்யாருமுவந்தியாந்தொழுந்தேவாவார். 24


கடவுள் வாழ்த்து முற்றிற்று.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:04 am

அவையடக்கம்.

25 தரைபுகழ்வேதசாரமாம்விபூதிசாதனமேபொருளாக்கொண்
டுரைபுகழ்சிறந்ததேவிசாலப்பேருத்தமவணிகர்கள்யாரும்
வரைபுகழமைந்தகண்டதேவியிற்பொன்மாரிபெய்தருளியபெருமான்
குரைபுகழ்விளங்குதெய்வமான்மியமாய்க்குலவியபெருவட்மொழியை. 1

26 மொழிபெயர்த்தெடுத்துமதுரமிக்கொழுகிமுழங்கிமுப்புவனமும்போற்றப்
பழிதபுத்துயர்ந்துபரவுசெந்தமிழாற்பாடுகவென்றலுமனையார்
கழிசிறப்புவகைமீக்கொளப்புகன்றகட்டுரைமறுப்பதற்கஞ்சி
யுழிதரற்றகையமனமுடையானுமுரைசெயத்துணிந்தனன்மன்னோ. 2

27 வேறு.
இருவகையெழுத்துமல்லாவாய்தமுற்குறிலுமீற்று
மருவுவல்லெழுத்துங்கூடவன்னமாயெழுதல்போல
விருவகைவழக்குமல்லாவென்கவியிறைவன்சீரு
மருவுநற்பெரியோரன்புங்கூடலான்மதிக்கும்பாவாம். 3

28 வேறு.
மறைமுழுதுணர்ந்தசிறையுடைக்கழுகுவானகந்துருவியுமுணராப்
பிறைவளர்முடிமேற்சிறையிலாக்கழுகுபெய்தபூநிறைதரக்கொண்ட
விறையவன்செவிகற்றுணர்ந்தவர்மொழிபாவேற்றலிற்கற்றுணராத
குறையினேன்மொழியும்பாக்களுமேற்குங்குறித்துணர்பொருட்டிறமதனால். 4

29 மறையவனுணராமதிமுடிப்பெருமான்மருதமர்வனப்பெருங்கோயி
லுறைபவன்புராணமுரைக்குநீபொருளுக்கொக்குமாறுரைப்பைகொலென்னி
னிறையவனருளாவியன்றமட்டுரைப்பேனிமித்தகாரணனெனற்கந்த
விறையவன்குலாலனென்றுரைத்ததுதானெற்றுமற்றற்றுணர்ந்தவரே. 5


அவையடக்க முற்றிற்று.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:05 am

சிறப்புப்பாயிரம்.

30 இலங்குமதிநதிபொதியுஞ்சடிலத்தெம்மா
னினிதுமகிழ்ந்திருக்குமுயர்கண்டதேவித்
தலங்குலவுமான்மியநன்கெம்மனோர்க
டருக்கியுணவமுதுகுசெந்தமிழாற்செய்தா
னலங்குலவுஞானகலைமுதலாவெண்ணி
னவில்கலைகளுந்தெரிந்தநல்லோனெங்குந்
துலங்குபெரும்புகழ்படைத்தவொருமீனாட்சி
சுந்தரநாவலவனுயர்தோற்றத்தானே. 1

சிறப்புப்பாயிர முற்றிற்று.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:06 am

1. திருநாட்டுப்படலம். (31- 110)

31 பிறங்கருள்வடிவமானபெரியநாயகியாரோடு
மறங்கிளர்செம்பொன்மாரிபொழிந்தவரமர்ந்துமேவு
நிறங்குலாங்கண்டதேவிமுதற்பலநெருங்கக்கொண்ட
திறங்கமழ்பாண்டிநாட்டின்வளஞ்சிலசெப்பலுற்றாம். 1

32 வான்றவழிமயமென்னமாலயற்கரியனாய
தேன்றவழ்கடுக்கைவேணிச்செம்மலைமருகாப்பெற்ற
மீன்றவழ்வசத்தண்ணல்விளங்குவெண்குடைநன்னீழ
றான்றவழ்தரப்பொலிந்துதழைவதுபாண்டிநாடு. 2

33 திருந்துபல்லுயிர்க்குஞ்செம்பொற்றிருவடிநீழனல்கும்
பெருந்தகைவழுதியீன்றபேரெழிலணங்கைவேட்டுப்
பொருந்துபொன்முடிகவித்துப்பொலிகுடைநீழல்செய்ய
வருந்தவம்புரிந்ததம்மாவணிகெழுபாண்டிநாடு. 3

34 உமைநிகர்சிறப்புவாய்ந்தவுலோபாமுத்திரையோடன்பி
னமைசிவபெருமானன்னவகத்தியமுனிவர்கோமான்
கமைமிகுதமிழ்விரித்துக்கவினவீற்றிருக்குந்தெய்வச்
சிமையமால்வரையுடைத்தத்திருத்தகுபாண்டிநாடு. 4

35 பெரும்பொருள்வெறுப்பத்தோற்றும்பெற்றியான்மற்றைநாடும்
விரும்புறத்தக்கதாகிமெலிதராவிளையுணாளு
மரும்புபல்செல்வர்சான்றோரமைதரவுடையதாகி
யிரும்புகழ்படைத்துமேவுமேற்றஞ்சால்பாண்டிநாடு. 5

36 புனைபிருதுவிமுனைந்தாம்பூதகாரியமேயென்று
நினைதருபுவனமோம்பநிலவுமப்பூதமைந்து
ளினைதலிலொன்றுதெவ்வவெண்ணியப்புகழ்சால்பூதந்
தனைநிகருருவக்கொண்மூதழைவிசும்பாறுசென்று. 6

37 பொழிபுனன்மிகவும்வேண்டும்புகழ்ப்பணைக்காவல்பூண்ட
வழிமதுக்கற்பமாலைவானவன்றிசையிற்புக்குக்
கழிபுனல்வெறுப்பவுண்டுகரைந்தவைம்பூதந்தம்மு
ளழிவுசெயொன்றைநட்டாங்கதனுருக்கொண்டுமீண்டு. 7

38 நாட்டுமைம்பூதந்தம்முண்டுநிலைப்பூதமாயும்
வாட்டுவெங்கோடையோடுமருவியெவ்வுயிருந்தீய
மூட்டுதல்கருத்துட்கொண்டுமுதுசினங்கொடுமுழங்கிப்
பூட்டுதல்செய்யாச்சாபம்பொருக்கனவொன்றுவாங்கி. 8

39 அளவருந்தீட்டாவம்புமலங்குபமின்னெனும்பல்வாளும்
பளகரும்வலியிற்றாங்கிப்பரவிடங்கொடுக்குமாற்ற
லுளவொருபூதமாயவாகவப்பூமியுற்று
வளனமைமற்றோர்பூதமருவுவெப்பொழிந்ததென்ன. 9

40 திசைபுகழ்ந்தேத்துங்கண்டதேவியின்மருதநீழ
லசைவறவமர்ந்தவெங்கள்சிறையிலியண்ணன்முன்னம்
வசைதவிரரசற்காகப்பொழிந்தபொன்மாரிபோல
விசைநிமிர்ந்தெழுச்சிமேவப்பொழிந்தனவெங்கு மாதோ. 10


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:06 am

41 புலவர்கள்பெருமான்முன்னம்பொழிந்தபொன்மாரியாலே
நலவர்கள்புகழ்காங்கேயன்வெங்கலிநசித்தாற்போல
வலவர்களுவக்குங்கொண்மூவளவறப்பொழிந்தநீராற்
குலவரகணெருங்கும்பார்வெங்கோடைபோயொழிந்ததன்றே. 11

42 சிறையிலிநாதர்பெய்தசெம்பொன்மாமழையாலன்று
தறையகத்துள்ளவாயசிலவுயிர்தழைத்தவின்று
குறையறவாரியுண்டுகுயின்பொழிமழையினாலே
நிறைபலவுயிர்களெல்லாந்தழைத்தனநிரம்பினமண்மேல். 12

43 நிறத்துமின்னுடையதாகிக்கறுத்தமானேயம்பூண்டே
யறத்தினாலுலகமோம்புமென்பதையறையக்கேட்டோ
நிறத்துமின்னுடையதாகிக்கறுத்தமானேயம்பூண்டே
யறத்தினாலுலகமோம்புமென்பதையமையக்கண்டோம். 13

44 வான்றமிழ்பொதியக்குன்றமழைபொழிபெருநீரெங்குந்
தான்றவழ்கின்றதோற்றஞ்சந்தனஞ்செறியக்குன்ற
மான்றவெங்கோடைமாயவடர்ந்துமிக்கெழுகார்கால
மீன்றதண்குளிர்க்குடைந்துவெண்படாம்போர்த்ததேய்க்கும். 14

45 வரையகங்காந்தட்டீபம்வயக்கினகலிகைகானத்
தரையகமாம்பியோம்பித்தழைந்தனநாரையோடை
நிரையகம்பீலியூதிநிரைத்தனநெய்தல்பூத்த
திரையகம்பவளமுத்தஞ்சிந்தினமுகிற்புத்தேட்கே. 15

46 தலைமிசைவீழ்ந்தநன்னீரடியுறத்தள்ளிமீட்டுந்
தலைமிசைக்கொள்ளாக்குன்றந்ததையருவியினகைக்குந்
தலைமிசைவீழ்ந்தநன்னீரடியுறத்தள்ளிமீட்டுந்
தலைமிசைக்கொள்ளும்பல்பாதவஞ்செறிகானைமாதோ. 16

47 உண்டதுபோகவெஞ்சியுள்ளதைப்புறத்துவீசுந்
தண்டருச்செறிந்தகானந்தளவினானகையாநிற்கு
முண்டதுபோகவெஞ்சியுள்ளதைப்புறம்போக்காது
தண்டலில்சிறையினாக்குந்தடம்பணைவைப்பைமாதோ. 17

48 மழைபொழிநன்னீர்முற்றுஞ்சுவைகெடாவண்ணந்தேக்கி
விழைதரவுதவம்பண்ணைநாரையான்மிகநகைக்கு
மழைபொழிநன்னீர்முற்றுஞ்சுவைகெடும்வண்ணந்தேக்கி
விழைதரப்படாதாச்செய்யும்வீரையைநோக்கிமாதோ. 18

49 வெள்ளியமேகம்பச்சைவீரைநீர்மடுத்துத்தாமு
நள்ளியபசுமையந்தமேகநன்னீர்மடுத்துத்
துள்ளியவேனிலாலேவெள்ளெனுந்தோற்றமுற்ற
வொள்ளியபுவியும்புல்லாற்பசந்ததாலொருங்குமாதோ. 19

50 முன்றளையுண்டதின்னுமயர்த்திடாமுகில்களெல்லா
நன்றளைபாண்டிநாட்டிற்பொழிவளநவில்வார்யாரே
யென்றளையோங்கலாதியிருந்திணையைந்துண்முன்னங்
குன்றளைவளந்தொகுத்துக்கூறுதலுற்றாஞ்சில்ல. 20


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:07 am

குறிஞ்சி.

51 வேறு.
அமரமான்மியமுள்ளதென்றறிஞரேயறையுந்
தமரமோங்கிடப்பெருவளநனிகொடுதழையும்
பமரமார்தொடைப்பசுவருக்கத்தகப்படாத
குமரவேளினிதிருந்தரசாட்சிசெய்குறிஞ்சி. 21

52 கிளக்குந்தெய்வமான்மியமுடைத்தாதலிற்கிரிக
ளளக்கலாவளவரும்பொருள்வறப்பினுமளித்த
றுளக்கலாநிலைதோற்றமுற்கொடுகலைத்தொகைகள்
விளக்குமாரியர்க்கொப்பெனவிளங்குவமாதோ. 22

53 கருங்குடாவடியிறவுளர்காய்கணைக்கஞ்சி
மருங்கொர்கந்தரம்புக்கதுமற்றதுகதிர்கண்
டொருங்குவெந்தழல்பொழிதரவுள்ளலைந்துயங்கு
முருங்குதுன்பமெவ்விடஞ்சென்றுமுருக்கிடாரொத்தே. 23

54 வட்டமாகியபளிக்கறைநடுவொருவழுவை
யிட்டமேவுறத்துயிறல்கண்டிறவுளர்மடவார்
பட்டநீரலாற்கறைமதிப்பிரதிவிம்பந்தா
முட்டவானுயர்வரையகமுகிழ்க்குமோவென்பார். 24

55 தலைவரில்வழிமாரவேட்குறுசரந்தந்து
மலையுமாசெயலென்னெனமங்கையருதைப்ப
வுலைவில்பூப்பலமீளவுநல்குமொண்செயலை
நிலையதங்குணம்வருத்தினுநீக்குறார்நிகரும். 25

56 விளவுதாழ்வரைச்சாதல்வாய்விழைபிடிவாய்த்தே
னளவிறால்பறித்தூட்டுவமால்களிறதுகண்
டுளவுபாதியினறுமுறுத்துறவிழிசிவப்பார்
களவுமேற்கொடாவயிற்பயில்காளையரம்மா. 26

57 காந்தண்மெல்லரும்புடைதரக்கண்டமாமஞ்ஞை
பாந்தள்பைத்ததுபணமெனப்படர்ந்தெதிர்கொத்தி
யேய்ந்தநாணமுற்றுள்ளவாறரவெதிர்வரினு
மாய்ந்தசிந்தையினையமுற்றுழிதருமம்மா. 27

58 மறந்தவாவிழிமங்கையர்புணர்ச்சியைமதித்துச்
சிறந்தவாடவர்நள்ளிருட்முறியிடைச்செலும்போ
துறந்தசெம்மணிவிளக்கெடுத்திடையிடையுதவ
நிறந்தவாவரவீன்றிடுநெடுவரைச்சாரல். 28

59 அறையிடைத்தினைக்குரல்பலபரப்பியிட்டவைமேற்
கறையடிச்சிறுகன்றுகள்சுழன்றிடக்கண்டு
பிறைமருப்புலக்கையினரற்குழியவைபெய்து
குறையறுத்தவைத்தளாவியின்றேன்கொள்வார்பலரும். 29

60 ஐயவற்புதக்குமரவேள்வள்ளியோடமரச்
செய்யமாதவமுஞற்றியசிலம்புயர்சீர்மை
யெய்யவல்லவர்யாவரேபலவளமியைந்து
பெய்யவல்லகானத்திறஞ்சிறிதுபேசிடுவாம். 30


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:07 am

முல்லை.

61 பராவுகற்பொருமடந்தைபாற்பாற்றியதோட
மராவுமாறுளங்குறித்தளவிறந்தகற்பாகி
விராவுமேன்மையிற்பொலிதரவிருத்திசெய்தென்று
முராரிவாழ்வதற்கிடமெனத்திகழ்வதுமுல்லை. 31

62 எவ்விடங்களும்பசுந்துழாய்க்குலஞ்செறிந்திடலால்
வெவ்விடங்கொள்கட்பிருந்தையைப்புணர்சுகம்விராவ
வவ்விடங்குடிகொண்டனனலங்குநான்முகத்துக்
கவ்விடங்கொளப்பூத்தவோருந்தியங்கடவுள். 32

63 என்றுமால்சிவபத்தரிற்சிறந்தவனென்ப
தொன்றும்வாய்மையேகூவிளங்குருந்தொளிர்தூர்வை
கொன்றையானைந்துமல்கியவிடங்குடிகொண்டான்
பொன்றுமாறிலாப்பூசனைபுரிதரற்பொருட்டே. 33

64 ஒன்றுமுல்லையுந்தெய்வதபூமியென்றுரைத்தற்
கென்றுமோரிடையூறிலையேதுவென்னென்னிற்
றுன்றுதேவெலாமுறுப்புறச்சுமந்தபல்பசுவு
மன்றவண்டரும்வைகலேசாலுமால்மதியீர். 34

65 தூயவேய்ங்குழலோசையுந்தொகுநிரைக்கழுத்தின்
மேயமாமணியோசையுமேகம்வாய்விடுக்கும்
பாயவோசையுந்தனித்துறைபாவையருவப்பா
ராயநாயகர்தேர்வருமோசைகேட்டம்மா. 35

66 வளர்த்தநாந்தனித்தமர்வுழிமாரவேளெய்து
தளர்த்தவீசுவீரரும்பெனத்தையலார்நகைக்க
விளர்த்தமுல்லைகண்மீளவும்வீசுவவரும்பு
கிளர்த்மாதரார்கிளர்நகைக்கெதிர்நகைத்தென்ன. 36

67 மலர்ந்தபூம்புனமுருக்குகள்சூழ்ந்தனமருவ
வலர்ந்தபூவைகளதனடுப்பொலிதருங்காட்சி
கலந்தசெந்தழற்கோட்டையுள்வாணண்முற்கரையும்
வலந்தவாவிறற்றானவருறைவதுமானும். 37

68 பூத்துநின்றிடுபலாசுநஞ்சிவபிரான்புரையு
மேத்துகார்புறஞ்சூழ்ந்ததுகரியதளியையும்
வார்த்தசெய்யதேனத்தகுதோனின்றுவழியு
மார்த்தபுண்ணிழிநீரெனலாம்வனத்தம்மா. 38

69 வரகுஞ்சாமையுமவரையுந்துவரையுமலிந்து
விரவும்பல்வளமேதகப்பொலிவனவொருபாற்
பரவுதீஞ்சுவைப்பாறயிர்மோர்பகர்வெண்ணெ
யுரவுவாசநெயிவ்வளம்பொலிவனவொருபால். 39

70 கன்றுமாக்களுஞ்சேக்களும்பொலிபெருங்கானத்
தொன்றுமேன்மையையென்னுரைசெய்தனமுலவா
தென்றுநீர்வளமலிந்துகண்கவர்பொழிலியைந்து
துன்றுமென்மைசான்மருதத்தின்வளஞ்சிலசொல்வாம். 40


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:08 am

மருதம்

71 தருவுந்தேனுவுஞ்சங்கமும்பதுமமுமணியும்
வெருவும்வாள்வலித்தேவருமிடுபணிவிரும்பத்
திருவுநேர்கலாச்சசிமுலைச்சுவடுயர்திணிதோண்
மருவுமிந்திரன்காவலிற்பொலிவதுமருதம். 41

72 மருதமென்பதுந்தெய்வமான்மியமுளதென்று
கருதவோரிடையூறிலைகமழ்சுராபான
மொருவுறாதுசெய்வார்களங்குறைதலுமாம்பை
வெருவுறாதமர்நீர்மையுமேதகுசான்றாம். 42

73 கொங்குதங்கியசந்தமுங்காரகிற்குறடுந்
தங்குமால்கரிக்கோடுமாமயிற்பெருந்தழையு
மெங்குமாகவெள்வயிரஞ்செம்மணிபலவெடுத்துப்
பொங்குவெண்டிரைகொழித்துலாய்வரும்பெரும்பொருநை. 43

74 வலியவச்சிரமேந்திவெள்வாரணமூர்ந்து
பொலியநன்கரம்பைகடழீஇத்தானத்திற்பொருந்தி
யொலியகற்பகக்கானளாயுறுதலிற்பொருநை
கலியவாம்கழற்காலுடையிந்திரன்கடுக்கும். 44

75 ஓதிமஞ்செலுத்திடுதலாலொளிகெழுபணில
மாதியேந்துபுபூமணந்திடுதலாலலவன்
சோதிமாமணியரவஞ்சார்வேணிசூழ்தரலா
னீதிமூவருநிகர்ப்பதுநெடும்புனற்பொருநை. 45

76 அன்றுதாகநோயொருகுறடணிந்திடவார்த்து
வென்றுவந்ததுபற்பலதாகநோய்வீட்ட
வின்றுவந்ததோவென்றிடமிகப்பெருக்கெடுத்து
நன்றுபொங்கியார்த்தெழுத்ததுநலமலிவையை. 46

77 போந்துமேகம்வாய்மடுத்தொழித்திடுமெனல்பொய்யே
யேந்துமிந்நதிமடுத்துவரொழித்தநீரெடுத்து
மாந்துவிண்ணினிதாப்பெயுமெனவராவளர்கண்
மோந்துபொங்கியார்த்தெழுவதுமுதுமதுநதியே. 47

78 வாரியேழுமொன்றாயினுமதித்திடப்படுமோ
ரேரிபோல்வதோவெனப்புகல்பற்பலவேரி
மூரிநீர்கடைபோகவுமுதுகரையலைத்து
மாரியாரினுமறாதருள்வாமெனமலிந்த. 48

79 மொழிபல்லேரியினதிகளின்புனன்முதுமதகின்
வழிபுகுந்துபோய்வயலெலாம்புகுந்தனமறாத
பழிவிளைத்திடுமலமறப்பத்திசெய்தொழுகு
மிழிவிலாரிடத்தெம்பிரானருள்புகுந்தென்ன. 49

80 திரைபரந்தெழுதீம்புனல்வயறொறும்புகுத
நுரைபரந்தெழுகட்புனனுளையவாய்ப்புகுத்தி
வரைபரந்தெழுதோளுடைமள்ளருண்மகிழ்ந்து
விரைபரந்தெழுபூம்பணைபுகுந்தனர்விரைந்தே. 50


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:08 am

81 பிறங்குமாயவன்மனைவிதன்பேருடல்பிளப்ப
நிறங்குலாமவனொருபவத்துறுபடைநிறுத்தி
மறங்குலாவுதென்றிசையினானூர்திவன்பிடரி
னறங்குலாநுகம்பிணைத்தனர்மேழிகையணைத்தார். 51

82 வலக்கையுட்குறுமுட்டலைக்கோலொன்றுவாங்கி
விலக்கருங்கடுப்பமைதரவிளாப்பலகோலி
நலக்குறும்படைச்சால்செறிதரநகுபலவு
முலக்கவன்பகடுரப்பினருழுதனர்மாதோ. 52

83 முன்னநம்முருக்கொண்டவன்முருக்குவெம்படையே
யன்னவன்றிருமனையொடுநம்மையுமடர்ப்ப
தென்னறிந்திலமெனச்சிலமீனெழீஇத்துள்ளும்
பன்னருந்துயருற்றொளித்திடும்பலகூர்மம். 53

84 கரக்குமாந்தர்பாலிரவலர்முகமெனக்கவிழ்ந்த
புரக்குமாயவன்கண்ணிலும்பொலிபலகமலம்
பரக்குமின்னனவிங்ஙனமாகவும்பாரார்
தரக்குமஞ்சியவலியினாலுழுதொழில்சமைந்தார். 54

85 வடக்கிருந்துதென்றிசைசெலநடத்தியும்வயங்கு
குடக்கிருந்துகீழ்த்திசைசெலநடத்தியுங்குளிர்செ
யடக்குபுன்முதலியாவையுமழிந்துசேறாகிக்
கிடக்கும்வண்ணமேயுழுதனர்கெழுவலிமள்ளர். 55

86 செறுவின்சீருறவரம்புருக்குலைந்ததுதேர்ந்து
மறுவில்செய்ப்புகழ்நுமக்குறாதெனமறுப்பார்போற்
பெறுவலத்துயர்மள்ளர்கள்பேணுகங்கரிந்து
கொறுகொறுத்துஞெண்டுழன்றிடக்குலையுயர்த்தினரால். 56

87 ஓதுவேதியர்முதலியோர்நடுநிலையுறுதற்
கேதுவாஞ்செறுநடுநிலையெனுஞ்சமமெய்தத்
தீதுதீர்பரம்பேறுபுமள்ளர்தாஞ்செலுத்தக்
கோதுதீர்படிமக்கலம்போற்சமங்கொண்ட. 57

88 மேகவாகனனாகியவேந்தனைத்தொழுது
பாகமார்தரச்சமைந்தநென்முளைகள்பற்பலவும்
வேகமாய்விதைத்துறவழிநாட்புனல்வீழ்த்திக்
காகமாதிகளுறாவகையோப்பினர்களமர். 58

89 வெள்ளியங்குரித்தெனப்பொலிமுளையெலாம்விழைநீ
ரள்ளியுண்டுயர்மரகதமங்குரித்தென்னப்
புள்ளிதீர்பசப்புற்றதுபொற்புறத்தளிர்த்தாங்
கொள்ளிதாலெனத்தளிர்த்தனபெரும்பணையொருங்கு. 59

90 உற்றகேவலத்துயிர்களைப்புவனங்களொருங்கு
பற்றவற்றதோர்பருவத்துவிடுபராபரன்போ
லற்றமற்றபைம்பயிர்களைப்பருவநன்கறிந்து
கொற்றமள்ளர்கள்கொண்டுபோய்வயறொறுநடுவார். 60


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:09 am

91 நட்டபைம்பயிர்நன்னிலந்தாழ்ந்தெழுநயமே
யொட்டமுன்புதாழ்ந்தெழுந்துபின்வளர்வுழியூறா
வட்டவாய்மலர்தாமரைகுமுதங்கண்மலிந்த
பட்டவாயிறங்குணங்களும்பாற்றுலோபம்போல். 61

92 எறிதருங்களையெறிதரும்பருவமீதென்று
செறிதரும்புயவலியுடைக்களமர்கள்செப்பக்
குறிதருங்கருங்கயல்விழியுழத்தியர்குழுமி
மறிதரும்புனல்வயலிடையனமெனப்புகந்தார். 62

93 அங்கண்மேவியவுழத்தியரளவையோராம்ப
லங்கண்வாங்கயல்வெண்டரங்கங்களேயாம்ப
லங்கண்ஞெண்டுநாற்காலிலோர்கானடையாம்ப
லங்கண்மாரிகைபொழிதரக்களைவதுமாம்பல். 63

94 கண்ணுமாற்றுக்காலாட்டியர்கொங்கைகோகனகங்
கண்ணுமற்றவர்குழல்பொழிமதுவுங்கோகனகங்
கண்ணும்வாண்மெய்யினொளியுமற்றையகோகனகங்
கண்ணுமாதெனத்தடிவதுமதுப்பெய்கோகனகம். 64

95 வாயுரைப்பதுவள்ளைகைதடிவதும்வள்ளை
யாயகையணிநகுவளையழிப்பனகுவளை
யோயமாய்ப்பதுசைவலமிசைவலமுடைய
பாயமென்பணையகம்புகூஉத்தொழில்செய்பாவையரே. 65

96 இன்னவாறுபல்களைகளைந்தெழுதலுமுலோப
மென்னவோதுதலொழிதரக்குணந்தடித்தென்னப்
பன்னவாம்பயிர்முழுமையுந்தடித்துறப்பணைத்துப்
பின்னர்வான்சதிரீன்றனபேருலகுவப்ப. 66

97 உம்பல்வாய்கிழித்தெழுமரப்பெனக்கதிரொருங்கு
நம்புபைம்பயிர்மடல்கிழித்தெழுந்துநன்மதியம்
பம்பவாக்கியகிரணத்தாலினியபால்பற்றி
யம்பர்முற்றுறவிளைந்துசாய்ந்தனபணையகத்து. 67

98 பிறையுருப்புனையிரும்புகைக்கொடுபெருங்களமர்
முறையறுத்தவைமுழுமையும்வரிந்திருங்களத்து
நிறைதலைச்சுமையாக்கொடுசென்றுபோய்நிரப்பிச்
சிறைகுலைத்துமேற்கடாம்பலமிதித்திடச்செய்வார். 68

99 சங்கநின்றும்வெண்டாளம்வேறெடுத்தெனவைநின்
றங்களத்தடுசெந்நெல்வேறெடுத்தினிதாகத்
துங்கமார்தருவளியெதிர்தூற்றினர்குவித்தார்
சிங்கலில்லதோர்காலெடுத்தளந்தனர்சிறப்ப. 69

100 இறைவன்பாகமுமேனையர்க்கீவதுமீந்து
குறையிலெஞ்சியயாவையுங்கொண்டுபோய்மனைவாய்
நிறையவிட்டுவைத்தைம்பலத்தாற்றையுநிலைசெய்
மிறையிலாக்குடியெங்கணுநிறைந்துளமேன்மேல். 70


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:09 am

101 கரும்புமஞ்சளுமிஞ்சியுந்தெங்குமொண்கமுகும்
விரும்புமேனம்பொலிதருமருதத்தின்மேன்மை
யரும்பும்வாஞ்சையிற்சிறிதுரைத்தனஞ்சிறிதறைவாஞ்
சுரும்புசூழ்தருநெய்தல்சார்தொடுகடல்வளமும். 71

நெய்தல்.

102 வேறு.
வருணன்காவலின்வயங்குநெய்தல்வாய்ப்
பொருணன்கீட்டியபோகுதோணியு
மருவிலவல்விரைஇவருபொற்றோணியு
மொருவுறாதொன்றோடொன்றுமுட்டுமே. 72

103 மிக்ககைதையும்விரவுஞாழலுந்
தொக்கபுன்னையுந்தோட்டுநெய்தலு
மொக்கவீசுதோறுற்றவாசனை
புக்குலாவலிற்புலவுமாறுமே. 73

104 கொடியிடைப்பரத்தியர்குழற்கணி
நெடியதாழைவாசனைநிரம்பலாற்
படியின்மற்றவர்பகர்புலாற்கயல்
கடியமீனெனக்களித்துக்கொள்வரால் 74

105 உப்புமீனமுமொன்றுபட்டிட
வப்புநீர்மையினமைத்துணக்குவார்
தப்புறாதுபுள்சாயச்சாடுவார்
பப்புவாள்விழிப்பரத்திமார்களே. 75

106 வலையிழுப்பவர்வயக்குமோதையு
முலைதரத்திமிலுந்துமோதையும்
விலைபடுத்துமீன்விற்குமோதையு
மலைகடற்கெதிராய்முழங்குமே. 76

107 வேறு.
பரவுவாரிசூழ்நிலப்பெருவளமெவர்பகர்வார்
குரவுநெல்லியுமிருப்பையுங்கோங்கமுங்கொண்டு
விரவுநண்புடன்போக்கினர்விரும்புமாறேன்ற
புரவுசெய்திடுபாலையும்பொலியுமாங்காங்கு. 77

108 திணைமயக்கம்.
வரையகம்பொலிகளிறுகைநீட்டிவண்கானத்
தரையகம்பொலியிறுங்குகொள்வதுமொருசாராம்
விரையகம்பொலிகான்குயின்மென்பணையோடை
நிரையகம்பொலிமாந்துணர்கோதலுநிகழும். 78

109 பணைவிராவியவயலைபோய்ப்புன்னைமேற்படாப்
பெணைவிராவியகடற்றுகிர்வஞ்சிமேற்பிறங்கு
மணைவிராவியசங்கினான்பாலோடுதேனு
மிணைவிராவியமாங்கனிச்சாறும்வீழ்ந்தியையும். 79

110 இன்னவாயவைந்திணைவளப்பாண்டிநாட்டியல்பைப்
பன்னகேசனும்பகரமுற்றாதெனப்பகர்வா
னென்னின்யாமெவன்சொற்றனநகரங்களெவைக்கு
முன்னிலாவியகண்டதேவிப்புகழ்மொழிவாம். 80

திருநாட்டுப்படல முற்றிற்று.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:10 am

2. திருநகரப்படலம். (111- 200 )

111 அண்டருமுனிவருமவாவிச்சூழ்வது
தண்டருமறம் பொருளின் பஞ்சார்ந்தவர்க்
கெண்டரும்படியளித்தெச்சமெய்தவுங்
கண்டருமான்மியக் கண்டதேவியே. 1

112 பூமருவுயிர்த்தெழுபுவனம்போர்க்குங்கா
வாமருவுலகமுமங்கைகூப்பிடப்
பாமருபுண்ணியம்பலவுமாக்கிடுங்
காமருவளத்ததுகண்டதேவியே. 2

113 ஏற்றமார்தனைக்குறித்தெவருமாதவ
மாற்றவாழம்மையேயடைந்துமாதவம்
போற்றவாந்தலமெனிற்புரைவதில்லைதோங்
சாற்றவாமான்மியக்கண்டதேவியே. 3

114 சிறைவலிக்கழுகொன்றுதேடிக்காணுறா
நறைமலர்த்திருமுடிநயந்துகண்டொரு
குறையுடைக்கழுகருள்கூடச்செய்தது
கறையறப்பொலிவளக்கண்டதேவியே. 4

115 பண்ணியமாதவப்பண்பினோர்க்கலா
லண்ணியவேனையோர்க்கமைதராததா
லெண்ணியயாவையுமெளிதினல்கிடுங்
கண்ணியபெருவளக்கண்டதேவியே. 5

116 புறநகர்.
கருங்கடலுவர்ப்பொடுபுலவுங்காற்றுவர்
னொருங்குமுற்றுறவளைந்துறுத்துதித்தெனப்
பெருங்குரற்புட்களின்பெருமுழக்கொடு
மருங்குறச்சூழ்தரும்பசியவான்பொழில். 6

117 அக்கருங்கடலகத்தளாந்துகிர்க்கொடி
யிக்கருஞ்சோலைவாயிளையமாதரா
ரக்கருங்கடலகத்தலங்குநித்தில
மிக்கருஞ்சோலையுளிலங்கரும்பரோ. 7

118 அனையபைங்கடலகத்தாயநுண்மண
லினையபைஞ்சோலைவாயியைந்தபூம்பொடி
யனையபைங்கடலலையெழுந்தவெள்வளை
யினையபைம்பொழனை்மிசையிலங்குவெண்பிறை. 8

119 தலம்புகுநல்லவர்தங்களுக்கிரு
நலம்புகுமன்னவைநல்குமாதரார்
குலம்புகுமாதனங்குழுமியென்னநீர்
நிலம்புகுமோரிருநிறத்தகஞ்சமும். 9

120 ஐயநீர்ப்பெருந்தடம்யாககுண்டமாஞ்
செய்யதாமரையழல்செறியுங்காரளி
வெய்யவாம்புகையழல்வளர்க்கும்வேதியர்
மையறீர்சுற்றெலாம்வயங்குமன்னமே. 10


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:11 am

121 வானவர்சூழ்தலினவர்மரீஇயமர்
தானமென்றறிதரத்தக்கபன்மல
ரானவைசெறியவண்டளிகண்மொய்த்திட
வீனமினந்தனஞ்சூழுமெங்குமே. 11

122 ஒன்றுநந்தனவனத்தொருங்குகாரளி
சென்றுசென்றுழக்குவபகைவர்சேரிட
மென்றுகண்டசுரர்களெய்திநாடொறு
மன்றுதல்புரிந்தளாயடர்த்தன்மானுமே. 12

123 ஒருகழுகினுக்கருளுதவிக்காத்தவன்
றிருநகராதலிற்சேர்ந்தியாமெலா
மருவிடினக்குமின்னருள்வழங்குமென்
றொருவில்பைம்பொழிலுள்வீயொருங்குவைகுமே. 13

124 நன்மலர்செறிதருநந்தனந்தொறு
மின்மலர்செருந்திகள்வீயுகுப்பன
வன்மலர்களத்தினானருளின்முன்னைநாட்
பொன்மழைபொழிந்ததைப்புதுக்கினாலென. 14

125 தம்முருவெடுத்தவன்றனதுவெம்பகைக்
கம்மவீதினமெனவறிந்தடர்த்தல்போற்
செம்மலிதளர்பலசெறிந்தமாவெலாங்
கொம்மெனமிதித்தளாய்க்குயிலுலாவுமே. 15

126 கதிர்படுசெந்நென்மென்காற்றினாலசைந்
ததிர்வருகரும்படியறைந்துகீறலா
லெதிரறப்பொழிந்தசாறெழுந்துபோயயற்
பிதிர்வறவரம்பைகள்வளர்க்கும்பேணியே. 16

127 நம்மையூருமையயற்றலத்துநன்புலஞ்
செம்மையிற்காத்தலிற்றெவ்வலாமென
வம்மதண்பணைதொறுமளாவிநெற்கதிர்
கொம்மெனப்பசுங்கிளிக்குலங்கொண்டேகுமே. 17

128 பித்தருமிகழ்தராப்பெரியநாயகி
கைத்தலமமர்தலிற்காமர்கிள்ளைக
ளெத்தலத்தெதுகவர்ந்தேகுமாயினுஞ்
சித்தமிக்குவப்பரந்நகரஞ்சேர்ந்துளார். 18

129 மருவலர்முடித்தலைதெங்கங்காயின்வைத்
தொருவறமிதித்தலினுறுசெந்நீரினாற்
கருவுரனிகர்த்தலாற்கறையடிப்பெய
ரிருபொருள்படப்புனைவழுவையெண்ணில. 19

130 உருமுறழ்முழக்கினவூழித்தீயென
வெருவருந்திறலினவீசுவாலின
பொருபிறைக்கோட்டினபுலிங்கக்கண்ணின
வருகளிறுகள்செறிகூடமல்குவ. 20


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:11 am

131 விழைமதகளிறுகண்மிக்குலாவுவ
தழைகருங்கீழிடந்தயங்குமேலிட
மழைமதச்சுரகரிமகிழ்ந்துலாவுவ
பிழைதபுவாரிகள்பிறங்குமெங்குமே. 21

132 ஒன்னலர்மணிமுடியுருளத்தாவுவ
பன்னருமனத்தினும்பகர்கடுப்பின
வென்னருநடுநடுக்கெய்துந்தோற்றத்த
பொன்னணிமணிவயப்புரவியெண்ணில. 22

133 குலமகளெனத்தலைகவிழுங்கொள்கையி
னிலகுவெம்பரிசெறியிலாயமீமிசை
யுலவதல்வழக்கெனவுவந்துலாவுறு
மலருமப்பெயர்புனைவானமீனரோ. 23

134 ஆருறுகுடத்தினவம்பொற்சுற்றின
பாருறுவன்மையைப்பகிர்ந்துசெல்வன
காருறுவிண்ணையுங்கலக்குஞ்சென்னிய
தேருறுமிருக்கைகள்சிவணும்பற்பல. 24

135 அடித்தலந்தேர்பலவமைத்தகூடத்து
முடித்தலந்தவழுதன்முறைமையாமெனத்
தடித்தலமரவொளிர்பரிதிசாலுந்தேர்
நொடித்தலங்கூர்ந்துசெனோக்கமிக்கதே. 25

136 வாளொடுபரிசையும்வயக்குங்கையினர்
தாளொடுகூடியகழலர்தாங்கிய
கோளொடுகூற்றொடுமலைக்குங்கொள்கையர்
வேளொடுநிகர்த்தமாவீரரெண்ணிலர். 26

137 தெள்ளியவிஞ்சையர்வியக்குஞ்சீர்த்திய
ரெள்ளியபுறக்கொடையென்றுமில்லவர்
நள்ளியவினைத்திறநாளுநாடியாற்
றொள்ளியதாயகல்லூரியும்பல. 27

138 அன்றுவெங்கரிபரியாதிபோலநா
மென்றங்கீழ்நோக்குதலில்லையாலெனா
நன்றுமேனோக்குபுநடக்குமொட்டகங்
கன்றுறாதமர்தருங்கைப்பவாவியே. 28

139 கரிபரிதேர்க்குறுகருவியோடுகால்
வரிகழல்வீரர்கள்வயக்குமேதிகள்
புரிநர்பல்வளத்தொடுபொலியுஞ்சேரியுந்
தெரிதரினளப்பிலசிறந்தவாவயின். 29

140 அறநகரெனப்புகலனையமாநகர்ப்
புறநகர்வளஞ்சிலபுகன்றுளாமினி
துறநகர்பலவுமுள்ளுவக்குஞ்சீரிடைத்
திறநகர்வளஞ்சிலசெப்புவாமரோ. 30


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:12 am

141 இடைநகர்.
வேறு.
வாவியோடைமலர்ந்தவுய்யானமு
மாவியன்னவணங்கனையாரொடு
மேவிமைந்தர்விராவுசெய்குன்றமு
மோவியம்புனைமாடமுமோங்குவ. 31

142 குழல்கையேந்திக்குறுந்தொடியார்களுங்
கழலினாடவருங்கலந்தாடுவா
ரொழுகுநீர்களிறும்பிடியும்விராய்
முழுகுநீர்கைமுகந்திறைத்தாடல்போல். 32

143 இம்மையேமறுமை்பயனெய்துதல்
செம்மைசாலித்தலத்தின்சிறப்பென
வம்மையூர்மனைமேற்பயிலந்நலார்
கொம்மைவான்றருவின்கனிகூட்டுண்பார். 33

144 ஒண்ணிலாநுதலாரொளிர்மாடமேல்
வெண்ணிலாமுற்றத்தாடவிழுமலர்
கண்ணிலாங்குப்பைகாற்றவுங்கற்பக
மெண்ணிலாமலர்க்குப்பையிறைக்குமே. 34

145 மாடமேனிலைமண்ணுந்தொழிலினர்
பாடமைந்தகளிப்புறப்பான்மதி
கூடவாங்குக்குலவுமக்கல்லற
னீடவாக்கிநிலவுறமண்ணுமே. 35

146 புதுமணத்தமர்பூவையர்நாணுறா
மதுமலர்ப்பந்தின்வண்சுடர்மாற்றலு
முதுமணிக்கலமொய்யொளிவீசலா
லெதுவினிச்செயலென்றுகண்பொத்துவார். 36

147 தோன்றுமாடமிசைத்தொடிக்கையினார்
சான்றவெம்முலைசார்ந்துபவனத்து
ளான்றவொன்றடுப்பக்கண்டவாடவர்
மூன்றுகொங்கைமுகிழ்த்தமையென்னென்பார். 37

148 மன்னுமேனிலைமாடத்தின்மூடிய
மின்னனார்முத்தமாலைகைவீசுபோ
தன்னமாலைசிதறிவிண்ணாழ்ந்தன
வின்னுமோதுவர்தாரகையென்னவே. 38

149 நன்றுநுங்கணலியுமருங்குலவிண்
ணென்றும்வெல்லுமிரண்டுகும்பங்கொளா
வொன்றுகொண்டநலிவில்விண்ணொப்புவ
தன்றுகாணென்றுவப்பிப்பராடவர். 39

150 வளியுலாமதரூடுதன்மாண்கர
மொளிநிலாவுறப்போக்குதலொண்மல
ரளிநிலாங்குழலார்முகத்தாரெழில்
களிநிலாவக்கவர்வதற்கன்றுகொல். 40


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:12 am

151 மேகந்தாழநிவந்தவெண்மாடமேற்
போகுசூலம்பொலிவுற்றுத்தோன்றிடு
மாகர்போற்றவயங்குகயிலைமே
லேகபாதவுருத்திரனின்றென. 41

152 மாண்டசெம்பொன்வயங்குசெய்குன்றினைக்
காண்டருங்கருமேகம்வளைத்திடல்
பூண்டவந்திநிறத்தொருபுண்ணிய
னீண்டயானைத்தோல்போர்த்தனிகர்க்குமே. 42

153 உள்ளெலாம்வயிரத்தொளியோங்கிட
வெள்ளிநீலம்வெளிவைத்திழைத்தலி
லுள்ளுசத்துவமுட்புறந்தாமதங்
கொள்ளுங்கோலவுருத்திரன்போலுமே. 43

154 நீலவம்மனைகைக்கொடுநேரிழைக்
கோலமங்கையராடக்கொழுநர்தா
மாலநின்றமனத்தொடுதாமரைப்
பாலவீழ்வண்டுபற்பலவென்பரால். 44

155 ஊசலாடுவரொள்ளிழைமாதரார்
காசுலாமவர்காதிற்குழையொடு
மாசிலாதவலியுடையாடவர்
நேசமார்மனமுந்நெகிழ்ந்தாடுமால். 45

156 கொந்துவார்குழற்கோதையர்மேற்றுகில்
சந்துவாண்முலைநீங்கத்தவாதுபொற்
பந்தடிப்பர்பகைக்குத்தெரிவித்தே
யுந்துதண்டமவைக்குறுப்பாரென். 46

157 உன்னுதம்மொழியொப்புமைநோக்கல்போன்
மன்னுமாளிகைமீமிசைமாதரார்
பன்னும்யாழ்கொடுபாடுவர்விஞ்சையர்
துன்னும்வாஞ்சையிற்கேட்டுத்துணிவரே. 47

158 ஊடலோதையுமூடலுணர்த்துபு
கூடலோதையுங்கோலத்திவவுயாழ்
பாடலோதையும்பாடற்சதிதழீஇ
யாடலோதையுமல்குவவாயிடை. 48

159 பூவுஞ்சுண்ணமுஞ்சாந்தும்பொரியும்வின்
மேவுமுத்தமும்வெள்வயிரங்களும்
பாவுசெம்மணியும்பலவாயமற்
றியாவுங்குப்பையிடைநகர்வீதியே. 49

160 அளவிலாவளமாயவிடைநக
ரளவிலாச்சிறப்பாருறைசெய்பவ
ரளவிலாப்பல்குடியமையுண்ணக
ரளவிலாச்சிறப்பிற்சற்றறைகுவாம். 50


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:12 am

161 உண்ணகர்.
வேறு.
மடலவிழ்துளபத்தண்டார்மாயவனாயமீனம்
படலரும்வலிசார்கூர்மங்கலக்கிடப்படாததாய
கடல்கொலிவ்வகழியென்றுகருதிடப்பரந்துநீண்டு
தொடலரிதென்னவாழ்ந்துசூழ்ந்ததுகிடங்குமாதோ. 51

162 வெள்ளியதரளமொண்பூவிரைகுளிர்புறத்தும்வெம்மை
நள்ளியவன்மீனாதியகத்துங்கொணகுகிடங்கு
வள்ளியபுறத்துச்செம்மையகத்துவன்கொடுமைபூண்ட
தெள்ளியவிலைமின்னாரொத்திருப்பதுதெரியங்காலே. 52

163 அன்றுலகளந்தமாயோன்வளர்ந்ததிவ்வளவையென்ன
நன்றுலகறியத்தேற்றித்தானவர்நடுங்கச்சூழ்ந்து
சென்றுபோர்மலையாவண்ணந்தேவர்வாழ்நகருங்காத்துப்
பொன்றதலறநிற்கும்பாம்புரிவளையகப்பாமாதோ.. 53

164 பொறிபலவடக்கலானுஞ்சலிப்பறுபொலிவினானும்
பறிநிகர்வேணியெங்கள்பரனையுட்கோடலானு
மறிவருமுயற்சியானும்பகையறவயங்கலானு
முறிவருந்தவத்தின்மேலாமுனிவரும்போலுநொச்சி. 54

165 சாற்றுகிர்க்குறிகைகொண்டுதட்டல்பற்குறியணைத்தல்
போற்றுநல்லமுதுதுய்த்தன்முதற்புறக்கரணமோடு
மாற்றகக்கரணமாயகரிகரமாதியாவுந்
தோற்றுவபரத்தைமாதர்சுடர்மனப்புறத்திலோவம். 55

166 பன்னரும்வனப்பினானும்பயின்றபல்விஞ்சையானு
நன்னலக்கண்டதேவிநகரமர்கணிகைமாதர்
பொன்னமர்திருவைவேதன்புணர்மடமாதைவென்றா
ரன்னவரற்றைநாடொட்டலர்மடந்தையரானாரே. 56

167 சுவைநனியுடையவூனும்பிறர்விழிசிறிதுதொட்டா
னவைமிகுமெச்சிலென்றேகழிக்குநன்மறையோர்தாமு
மவையகம்புகுதுநல்லார்பலர்நுகரதரவூறல்
செவையெனக்கொள்வார்தெய்வவலியெனத்தெளிந்தார்போலும். 57

168 அந்தணராதிநால்வரனுலோமராதியாக
வந்தவர்யாவரேனுமறாமலின்பளிக்குநீராற்
சந்தணிகுவவுக்கொங்கைத்தாழ்குழற்பரத்தைமாதர்
செந்துவர்ச்சடிலமோலிச்சிவபிரான்றானோதேறோம். 58

169 கணிகையர்சிறந்தோரென்றுகரைவதற்கையமின்று
மணிகெழுகூந்தலாதிமாந்தளிரடியீறாக
வணிகெழுமைந்தர்தம்மைமயக்குமற்றனையார்நல்கு
பணியுடைகளுமயக்குமவர்மயங்காதபண்பால். 59

170 உருவுடைமைந்தர்யாருமுறுபெருவிரத்தியாரிற்
பருவநன்மனைவியாதிப்பலரையம்வெறத்துமிக்க
பொருண்முதலனைத்துநல்கிப்பணிகளும்புரிவர்ஞானக்
குருவெனக்கொண்டார்போலுமவர்திறங்கூறற்பாற்றோ. 60


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:12 am

171 விருந்துவந்துண்டாலன்றிமென்மலராதிகொண்டு
திருந்துசுத்திகளோரைந்திற்சிவார்ச்சனைசெய்தாலன்றி
வருந்துதீர்த்திரப்போருள்ளமகிழ்ச்சிசெய்திட்டாலன்றி
யருந்துதல்செய்யார்சாவாவமுதமும்வேளாண்மாக்கள். 61

172 ஒழுக்கமன்பருளாசாரமுறவுபசாரமுற்று
விழுக்குடிப்பிறப்பையோம்பிமேவபிமானம்பூண்டு
மழுக்கலில்சிறப்பில்வாழும்வண்மைசால்வேளாண்மாக்கள்
செழுங்குடிக்கிரகமேயதிருமறுகணிவிண்போலாம். 62

173 மழைகருக்கொண்டதெண்ணீர்முழுவதுமாநீர்ஞாலத்
துழையுறவிழுதலன்றிவிண்முதலுறாமைபோலத்
தழைதருபுவியினாயதவாப்பொருளெலாமந்நாயகர்
விழைதருமாடமன்றிவேறிடம்புகுதாவென்றும். 63

174 புலியதளுடுத்துவானும்பொலந்தருநல்கவாங்கி
மெலுவறவுடுத்துவாருமன்றிவேறிடத்துள்ளாரு
ளொலிபுகழ்க்கண்டதேவிநகருறைவணிகமாக்கண்
மலிநியமத்துளாடைவாங்குவான்புகாரும்யாரே. 64

175 மலைவருமணிகமாக்கண்மருவியநியமமெல்லா
முலைவருகளங்கநீக்கியுவாமதியினைச்சேறாக்கி
நிலையுறப்பூசியன்னசுண்ணவெண்ணிகழ்ச்சியாலே
கலைமகளெனலாம்பற்பல்கலையமைந்திருத்தல்சான்றே. 65

176 கோடுதலின்றிக்கோடிகோடியாக்கொடுக்கவல்லார்
நாடுயரவரேயன்றிஞாலத்துமற்றையார்கா
ணீடுறக்கொள்வானெண்ணியெத்தனைபேர்வந்தாலுங்
கூடுகைசலிப்புறாதுகொடுத்திடுவிரதம்பூண்டார். 66

177 நென்முதலொருபாலாகுநேத்திரமொருபாலாகும்
பன்மணியொருபாலாகும்பரவுபொன்வெள்ளிசெய்பூ
ணென்னவுமொருபாலாகுமிருங்கலையொருபாலாகு
மன்னவர்நியமம்பொற்கோனருங்கருவூலம்போலும். 67

178 வருந்தியெவ்விடத்துஞ்சென்றுமாண்பொருளீட்டல்போலத்
திருந்தியவன்னதானஞ்சிவாலயப்பணிமுன்னான
பொருந்தியபலவுஞ்செய்துபுண்ணியப்பொருளுமீட்டிப்
பெருந்திருவேற்றோர்க்கீய்ந்துபெரும்புகழ்ப்பொருளுங்கொள்வார். 68

179 கரப்பினெஞ்சுடையராகிக்கடனறிவாருமாய்ச்சீர்
பரப்புமவ்வணிகரானோர்பாலிரவாருமில்லை
நிரப்புமற்றவரைக்கண்டநேயத்தோரூருமில்லை
யிரப்புமற்றவரானாளுமிழிவினையடைந்ததில்லை. 69

180 வெள்ளியநீறுபூசிவிளங்குகண்மணிகள்பூண்டு
தெள்ளியவெழுத்தைந்தெண்ணிச்சிவார்ச்சனைவிருப்பினாற்றித்
தள்ளியவினைஞராகித்தழைந்துவாழ்வணிகமாக்க
ளொள்ளியமாடவீதியுரைத்திடமுற்றுங்கொல்லே. 70


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:13 am

181 வரூபரிதரங்கங்காட்டமதமலைமகரங்காட்டத்
திருவளர்கொடிஞ்சிப்பொற்றேர்செறிதருநாவாய்காட்டப்
பொருபடைக்கலமீன்காட்டப்பொருனர்மீனெறிவார்காட்டக்
கருநிறக்கடலேமானுங்காவலர்மாடவீதி. 71

182 மருவலர்தருமண்கொண்டுவானகமவர்க்குநல்கிப்
பேருமையிலிழிந்ததேற்றுப்பிறங்கிமிக்குயர்ந்ததாய
பொருவருமின்பநலகும்புண்ணியப்பிரானையொத்த
திருவளர்மன்னர்வாழுந்தெருவளஞ்சொல்லப்போமோ. 72

183 பசுவுடம்பழித்துமுக்கட்பதியுடம்போம்பிக்கொள்வார்
வசுவளர்த்ததனுட்சொன்னவள்ளலைத்தரிசிப்பார்பன்
முசுவுகள்சோலைதோறுமொய்த்தவானவரைக்கூவி
யுசுவினூண்மகத்தினூட்டுமொண்மையர்வீதியோர்பால். 73

184 காலையின்முழுகியாப்பிகைக்கொடுபவித்திரஞ்செய்
மாலையினட்டில்புக்குமடையமைத்தேந்தியுச்சி
வேலையினதிதியர்க்குவிருப்புடனூட்டுமஞ்சொற்
சோலையிற்கிளியன்னாராற்றுலங்குவமறையோரில்லம். 74

184 எண்ணில்வேதாகமங்களையமெய்தாமையாய்ந்து
மண்ணிலான்மார்த்தத்தோடுபரார்த்தமும்வயங்கப்பூசித்
தொண்ணிதியருட்பேறெய்தியொழிந்தமும்மலத்தினாராம்
புண்ணியவாதிசைவர்பொலிதிருமறுகுமோர்பால். 75

186 எழுமதமழகுபத்துங்குற்றமீரைந்தும்போகத்
தழுவியொண்கருத்துமுன்னாச்சாற்றியவைந்தனாலுங்
கெழுதகுபிறவாற்றாலுங்கிளரியலுரைக்கவல்ல
முழுதுணர்புலவர்மேயகழகமுமுகிழ்க்குமோர்பால். 76

187 புண்ணியமறையோராதியாவரும்புகுந்துமேலோர்
கண்ணியவுமையோர்பாகக்கண்ணுதற்பெருமான்பொற்றா
ணண்ணியவின்பேயென்றுநயப்புறவின்பமேன்மேற்
பண்ணியதாயதண்ணீர்ப்பந்தரும்பொலியுமோர்பால். 77

188 வேதியராதியோர்கள்விலாப்புடைவீங்கவுண்பான்
கோதியலாதவல்சிகுய்கமழ்கருனைபாகு
மோதியசுவையநெய்பான்முதலியபலவுநல்குந்
தீதியலாதசெல்வத்திருமடங்களுமுண்டோர்பால். 78

189 குலவியதெய்வஞானக்குரவனாரருளினாலே
நிலவியசமயமாதிநிகழொருமூன்றும்பெற்றுக்
கலவியபாசமைந்துங்கழிதரவொன்றியொன்றா
தலவியலாதவின்பமுறுநர்வாழ்மடமுமோர்பால். 79

190 இன்னபன்மறுகுஞ்சூழவெறிகதிர்மதாணிநாப்பண்
மின்னவிர்மணயேபோலவிளக்கமிக்கமைந்துமேவும்
பின்னமில்கருணைத்தாயாம்பெரியநாயகியோடெங்கண்
முன்னவன்மருதவாணன்முனிவறப்பொலியுங்கோயில். 80


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:13 am

191 உருத்திரப்பெருமான்றீர்த்தமுலகளந்தவன்செய்தீர்த்தந்
திகுத்தகுபிரமதீர்த்தஞ்செறிபுகழ்ச்சடாயுதீர்த்த
மருந்தபன்மலரும்பூத்துவாசமெண்காதம்வீசிக்
கருத்தமைகோயில்சூழ்ந்துகவின்கொடுபொலியாநிற்கும். 81

192 திரிபுரமெரித்தஞான்றுசேணுலகனைத்துந்தாங்கப்
பரிபுரம்புலம்பும்பூந்தாட்பரையொருபாகத்தண்ண
றெரிபுரம்பொலியுமேருவேறொன்றசெறித்ததென்ன
வரிபுரந்தரன்முன்னானோரடைபொற்கோபுரநின்றன்றே. 82

193 பகைத்தமும்மதிலுநீறுபட்டமையுணர்ந்துதீயா
நகைத்தவனருள்கொள்பாக்குநயந்துயரொன்றுமேவி
யுகைத்தவெஞ்சினத்துத்தீயருறாவகையொதுக்கிச்சூழ்ந்து
தகைத்ததுநிற்றல்போலுந்தவாச்சுடர்ச்செம்பொனிஞ்சி. 83

194 ஒருமதிலின்னதாகவொருமதிலுணர்ந்துவல்லே
தருமவெள்விடையினார்க்குத்தவாநிழனாளுஞ்செய்ய
மருமலர்த்தருவொன்றாகிநிழல்செய்துவயங்கிற்றென்னப்
பொருவில்வெண்மருதநாளும்பூத்துறத்தழையாநிற்கும். 84

195 மற்றுமோர்மதிலும்போந்துமண்டபமாதியாய
முற்றுமாய்ப்பொலிந்ததென்னமொய்த்தகால்பத்துநூறு
பற்றுமண்டபமுன்யாவும்பாரிடைக்கருங்கற்போழ்ந்து
செற்றுநன்கமைத்தலாலேகருங்கதிர்திகழவீசும். 85

196 தனைத்தவர்செய்தஞான்றுதனக்கெதிர்முளைத்ததோர்ந்து
நினைத்தபொன்மேருவள்ளனிறையருணிரப்பிக்கொள்ள
முனைத்தபல்விமானமாகிமுகிழ்த்ததென்றெவரும்பேச
வினைத்தெனவறிதராப்பொன்விமானங்களெங்குமோங்கும். 86

197 கூண்டவன்புடையதாயகுட்டிமமுன்றிலெங்கு
நீண்டவன்முதல்வானோருநிறைபெரும்புவியுளார
மாண்டவன்புடையராகிவந்துபொன்மாரிதூர்ப்பா
ராண்டவன்பொழிந்தவாறேயடியரும்பொழிவாரென்ன. 87

198 மழைநிகர்களத்துப்பெம்மான்வண்மைசால்திருமுன்னாகத்
தழைமலர்சிறிதுமின்றிப்பிறதழைமலரேசார
வுழையமாமிசையுமின்றியொருதருநின்றுசூழ்வோர்
விழைதருபலன்களெல்லாங்கொடுத்திடுமேலுமேலும். 88

199 அரகரமுழக்குநால்வரருட்டிருப்பாடலார்ப்பு
முரசதிரொலியும்வீணைமுழவெழுமிசைப்புமம்மான்
பரவுசந்நிதிமுன்னாகப்பணிந்தெழுமடியார்பாவ
வுரவுவெங்களிறுமாய்க்குமரிமுழக்கொத்திசைக்கும். 89

200 கண்ணலங்கனிந்தவன்பிற்கடவுளோர்முதலோரீண்டி
யெண்ணலங்கனிந்தவெல்லாமெய்தியின்படையநல்கிப்
பெண்ணலங்கனிந்ததெய்வப்பேரருட்பெரியாளோடு
மண்ணலங்கனிந்தமேனியமலனக்கோயின்மேவும். 90

திருநகரப்படலம் முற்றிற்று.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:14 am

4. நைமிசைப்படலம். (201 - 237)

201 தருப்பொருந்தலாற்சலதரமூர்தலாற்சசியை
விருப்பொருங்குறத்தழுவலால்விண்ணவர்விழையுந்
திருப்பொருந்தலாற்கண்மலராயிரஞ்செறிந்த
வுருப்பொருந்தலானைமிசமிந்திரனொக்கும். 1

202 மலரணங்குறத்தழுவலான்மருவுநால்வாயா
லலர்மிசைப்பொலிமாண்பினான்மண்ணளித்தலினா
னலர்விரும்புபல்கலைப்பொலிவுடைமையானாளு
முலர்தராதநைமிசவனம்விதியையுமொக்கும். 2

203 உற்றதானவர்தமையொழித்தமரரையூட்டக்
கற்றமேன்மையாற்பூமணம்பொருந்தலாற்கருங்கார்
செற்றமேனிவந்தமைதலாலளிவளர்திறத்தாற்
கொற்றநேமியங்கடவுளும்போலுமக்குளிர்கான். 3

204 பிறையுங்கங்கையுமீமிசைத்தவழ்தலாற்பிறங்கி
நிறையும்பல்சடையுடைமையானிலவுபூங்கொன்றை
நறைமணத்தலாற்கூவிளநயத்தலானாளுங்
குறைவிலாச்சிவபரனையுமானுமக்குளிர்கான். 4

205 திருந்துவானவர்முனிவரர்மொய்த்தலாற்செவ்வே
யிருந்துநன்னலமெய்தினர்க்களித்தலாலால
மருந்துசெய்தவனமர்தலாற்சலிப்பரும்வலியாற்
பொருந்துவெள்ளியங்கயிலையும்போலுமக்கானம். 5

206 மோகமாதிகளொழிந்தவம்முழுத்தவவனத்து
யாகசாலையினெழும்புகையெங்கணுந்துழாவி
மேகமார்தருவெளியிடைப்படிதலாலன்றோ
மாகமார்நிறம்புகைநிறமென்பர்மண்ணுலகோர். 6

207 ஓங்குநைமிசத்துஞற்றிடுமகத்தழற்கொழுந்து
வீங்குபொன்னுலகுருக்குமென்றஞ்சியேவிண்ணோர்
தேங்குகங்கையுமங்குலுங்கீழுறச்செய்தா
ராங்குநின்றிவணுறுவதுங்குளிரவாயன்றோ. 7

208 மேயபற்பலதருக்களினின்றுமேலிடத்துப்
போயபல்விடபங்களின்மலர்தொறும்புகுந்து
பாயவண்டுகளுகுத்தசெந்தாதுவீழ்பண்பாற்
றேயமோதும்விண்ணுலகுசெந்தாதுலகென்றே. 8

209 விண்ணளாவியமகத்தழற்கொழுந்துமேலெழுந்து
கண்ணளாவியமரமுதற்கரைதருக்கொழுந்த
மெண்ணளாவியவேற்றுமைதெரிவரிதென்றுந்
தண்ணளாவியதண்மையும்வெப்பமுந்தவிர்ந்து. 9

210 அண்டவாணர்தம்பசிதவிர்த்தருளுமத்தானம்
புண்டரீகமுமாம்பலும்புரிமகப்பொருட்டி
னண்டுகூர்மமும்பறவையுமளப்பரியதாய
வண்டுமொய்த்தலின்வனமெனற்கொத்ததுமாதோ. 10


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:14 am

211 வேறு.
இன்னபல்வளத்தநைமிசவனத்திலிருப்பவர்விதிவிலக்கமைதி
சொன்னமெய்ப்பொருணூலாகியமறையுந்துளக்கமிலங்கமோராறும்
பன்னரும்புகழ்சாலாகமத்திரளும்பகர்தருமற்றுளவெவையு
நன்னயம்பயப்பப்பாலுணுங்குருகினவையொருமூன்றுமற்றுணர்ந்தார். 11

212 கொடுமருத்தெழுந்துநெடுவரைபிடுங்கிக்குவலயநடுங்கவீசிடினும்
படுதிரைக்கடலோரேழுமொன்றாகிப்பரந்துமேற்பொங்கினுங்கொண்மூ
வடுதிறற்பெருந்தீயுருமுவீழ்த்திடினுமணுத்துணையஞருமுட்கொளார்வெங்
கடுமிடற்றமைத்தகண்ணுதற்பெருமான்கழல்கழலாதுள்வைத்திருப்பார். 12

213 வானமர்நறவுக்கற்பகநீழல்வாழ்பவன்றோற்றமுயிறப்புங்
கானமர்கமலமலர்மிசைப்பொலியுங்கடவுடன்றோற்றமுமிறப்பு
மூனமர்திகிரிவலனெடுத்துவணமுயர்த்தவன்றோற்றமுயிறப்புந்
தானமர்காலமெனப்பலகண்டார்தவாதினும்பற்பலகாண்பார். 13

214 இருவினைப்பயனென்றுரைசெயப்பட்டவின்பமுந்துன்பமுமெய்தி
னுருவினைவிடாமுன்னமைந்தனவேயென்றுவப்புறார்முனிதராரென்றுங்
கருவினையொழிக்குஞ்செயல்செயலன்றிக்கருதுறார்பிறநகையிடத்தும்
வருவினையருளினிரிதரக்காண்பார்மாசறுகாட்சியிற்பொலிவார். 14

215 என்னபல்பிறப்புந்துயரமேவிளைக்குமித்தகுபிறப்பறற்குபாயம்
பன்னருமறையீறளப்பரும்பெருமான்பாதங்காணுதலதற்குபாய
மன்னவன்விபூதிகண்மணிபுனைந்தோரைந்தெழுத்தெண்ணியாங்காங்கு
மன்னவீற்றிருக்குந்தலப்புகழ்கேட்டுமனங்கொளலென்றுளந்துணிந்தார். 15

216 மொழிதருதவத்துச்சவுநகமுனிவன்முதற்பலமுனிவரர்குழுமி
வழிதருமதுப்பூங்கொன்றையானுவக்குமாமகம்பன்னிரண்டாண்டிற்
கழிதருமொன்றுபுரிந்தனரதனைக்காணியநீற்றொடுபரமன்
விழிதருமணிபூண்முனிவரர்பலருமேவினாரம்முனிவரருள். 16

217 செங்கதிரகத்துப்பொலிந்ததென்றுரைத்தல்செய்யமெய்ஞ்ஞானமும்புறத்துத்
தங்கவெண்மதியம்போர்த்ததென்றுரப்பத்தவலரும்விபூதியுமுடையோன்
பங்கமில்பரமன்விழிமணிபூண்டுபரவெழுத்தைந்துமுட்கணித்துத்
துங்கமாணவர்தங்குழாம்புடைசூழத்சூதமாமுனிவனும்வந்தான். 17

218 வந்தமாமுனியையிருந்தமாமுனிவர்மகிழ்ந்தெதிர்சென்றடிபணிந்து
சந்தமாரிருக்கையழகுறவிட்டுத்தனித்ததன்மேலுறவிருத்திக்
கந்தமாமலர்முற்கொண்டருச்சித்துக்கவின்றபாத்தியமுதலளித்துத்
தந்தமாதரவிற்பணிந்தனரிருந்தார்சவுநகமுனிவரனுரைப்பான். 18

219 மறைமுழுதுணர்ந்துவகுத்துபகரித்தவாதராயணமுனிவரன்பாற்
குறையறவுணர்ந்தவருட்பெருங்கடலேகோதிலாக்குணப்பெருங்குன்றே
துறைபலதெரிக்கும்புராணமுற்றளந்துதொகைவகைவிரியினிற்றெரித்து
மிறைதபுத்தருளுங்கற்பகதருவேவிமலவாழ்வேயெனத்துதித்து. 19

220 துன்னியகருணைச்சிவபிரானுவக்கத்தொடங்கினமொருமகமுடிப்பான்
மன்னியவதுபோதனையனேயிரங்கிவந்தெனவந்தனையொருநீ
முன்னியநினதுதரிசனமதனான்முடிந்ததித்தினஞ்சுபதினமாய்
நன்னியமத்தேநானுமற்றியாருநன்மகமிம்மகமன்றோ. 20


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:15 am

221 ஓரிடந்தலமற்றோரிடந்தீர்த்தமோரிடமூர்த்திநீர்சூழ்ந்த
பாரிடமதனிற்சிறந்ததாயிருக்கும்பகர்ந்தவோர்மூன்றன்மான்மியமு
மோரிடஞ்சிறந்தேயிருப்பதெத்தானமுரைக்கினுங்கேட்கினும்விழைவு
பாரிடங்குணிப்பக்குனிக்குநம்பரமன்பரிந்தருள்செய்வதெத்தானம். 21

222 எத்தலநினையிற்றருமமாமதனோடெத்தலமுரைக்கினன்பொருளா
மெத்தலவங்காணினின்பமாமவையோடெத்தலம்வசிக்கின்வீடாகு
மெத்தலமனாதிமுத்தனெம்பெருமானிடையறாதிருப்பதுமற்று
மெத்தலமயன்மாலாதியர்போற்றியிறைஞ்சிடவெற்றைக்கும்பொலியும். 22

223 இத்தனைவளங்கண்முழுவதுமமைந்தவிருந்தலமொன்றுநீநவின்றா
லத்தனையனையாயுய்குவமறைந்ததகலிடத்துண்டுகொலிலைகொன்
முத்தனையவதுநன்கிருந்திடுமேன்மொழிந்தவெம்பாக்கியமாமாற்
சித்தனையாதுதெளிதரவுரைத்திதேசிகோத்தமத்தவவென்றான். 23

224 தவத்துயர்பெருமைச்சவுநகமுனிவன்றன்மொழியகஞ்செவியேற்றுச்
சிவத்துயர்கருணைச்சூதமாமுனிவன்செம்மனத்துவகையனாகிப்
பவத்துயரகற்றுமிதுபகரென்றபடிநனிநன்றுநன்றந்தோ
வவத்துயரிதுபோற்களைவதுபிறிதின்றகலிடத்தென்றுரைசெய்வான். 24

225 நெடியமாதவத்துச்சவுநகமுனிவநீவினாவியதுலகோம்பும்
படியதாயெவர்க்கும்பேருபகாரப்பண்பதாய்நின்றதுகண்டாய்
கொடியதாகியநஞ்சமுதுசெய்தருளாற்குவலயம்புரந்தாம்பெருமா
னடியவாயடைதற்குபாயமீதன்றியாய்தரினும்பிறிதிலையே. 25

226 விழைவினீவினாயபடியெலாம்பொருந்திமேவுமோர்தலமுமுண்டதன்வாய்க்
கழைகுலாஞ்சிலையோற்காய்ந்தவர்தமக்குக்கயிலையாதிகளினும்பிரியந்
தழைதருமனையதலமிதுகாறுஞ்சாற்றியதிலையொருவருக்குங்
குழைதருமனத்தினீவினாவியதாற்கூறுதுமனையமந்தணமே. 26

227 மிகுபுகழ்படைத்ததமிழ்வளநாட்டுண்மேதகுபாண்டியநாட்டிற்
றகுபெருந்துறைக்குச்சற்றுமேற்றிசையிற்சாற்றுறும்யோசனையொன்றி
னகுபொழிற்கானப்பேருக்கீசானநற்றிசையோசனையொன்றி
னுகுதலில்சாலிவாடியூர்க்கழலோனுறுதிசையோசனையரையில். 27

228 ஒருதிருப்புத்தூர்க்குற்றகீழ்த்திசையினொன்றரையோசனையளவிற்
பொருவருபுனவாயிலுக்கியைமருத்துப்புணர்திசையோசனையொன்றிற்
றருவடர்பொழிலாடானைக்குவடபாற்றழைதிசையோசனையொன்றில்
வெருவருவீரைவனத்திற்குத்தென்பால்விராந்திசையோசனையொன்றில். 28

229 மதுநதிவிரிசன்மாநதிமுறையேவடக்கினுந்தெற்கினுமொழுகப்
புதுமதிமுடித்தான்றனக்கிடமாகிப்பொலிதருமொருதலமதன்பேர்
முதுதவமருதவனமெனமொழிவர்முளைத்தொருமருதமர்திறத்தா
லிதுவலாற்கண்டதேவியென்றொருபேரெய்தியதின்னமும்பலவால். 29

230 போற்றியநாமகாரணம்பின்னர்ப்புலப்படுமித்தலமேன்மை
யூற்றியலமைந்தசுவையுடைக்காந்தத்துருத்திரசங்கிதையுரைக்குந்
தேற்றியகானப்பேர்ப்புராணத்துஞ்செப்பியதுண்டிவையனைத்து
மாற்றியதவத்தோய்கேண்மதியுரைப்பாமற்புதம்பயப்பதென்றறிமோ. 30


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:15 am

231 செறியொருமுகுர்த்தமெண்ணியுமிதன்மேற்சிறந்ததாயொருதலமுணரே
மறிவுருவனையதலமகத்துவத்திற்காகரமாயதுமற்று
முறிவினாற்பொருளுஞ்சேய்த்திருந்தகத்துமுன்னினுங்கொடுப்பதுகண்டாய்
குறிகெழுமனையதலத்துமான்மியமுற்கூறுதுந்தொகுத்துளங்கோடி. 31

232 ஊழியுஞ்சலியாக்கயிலையங்கிரியினும்பர்தம்பிரான்றிருமுகக்கண்
வீழியங்கனிவாய்வெண்ணகையுமையாண்மென்கரங்கொடுபுதைத்ததுவும்
வாழியவனையானேவலிற்கழுவாய்வயக்கிடவுலகமுற்றுயிர்த்தாள்
பூழியர்நாட்டினருச்சுனவனத்துப்புகுந்துமாதவம்புரிந்ததுவும். 32

233 வழிகெழுசண்டன்கொடுந்தொழிற்கஞ்சிமாலயன்முதலியோர்கயிலை
யொலிகெழுகழற்காற்சிவபிரானேவவொருங்குவந்தளவிலாவளமை
பொலிகெழுமருதவனத்திடைப்புகுந்துபூரணிதன்னைக்கண்டதுவுங்
கலிகெழுசண்டாசுரனுயிரவியக்காளியைத்தோற்றுவித்ததுவும். 33

234 தேவியைமருதவனத்தமர்பெருமான்றிருக்கலியாணஞ்செய்ததுவுங்
காவியங்களத்தோனருடலைக்கொண்டுகருதுருத்திரப்பெருமானு
மோவியமனையாளுற்றமாமார்பத்தொருவனுங்கலைமகடவனும்
வாவிமூன்றாங்குத்தனித்தனியகழ்ந்துவரமலிபூசைசெய்ததுவும். 34

235 நிறைபுகழ்க்கதிருமதியுமாங்கெய்திநெடுந்தடந்தனித்தனிதொட்டுக்
குறையறப்போற்றிப்பூசைசெய்ததுவுங்கொடியவாளரக்கனோடமர்த்துச்
சிறையிலியாயசடாயுபூசித்துத்திருத்தகுமுத்தியெய்தியது
மறைவிதிப்படிகாங்கேயனோர்தீர்த்தம்வகுத்துறப்பூசித்தவாறும். 35

236 மற்றவன்பொருட்டுமருதமர்நிழல்வாழ்வள்ளல்பொன்மழைபொழிந்ததுவுங்
கொற்றவெங்சிலைமான்றனைவதைத்ததுவுங்குளிர்சிவகங்கையின்சிறப்பு
மற்றமிறலத்துப்பெருமையும்புகழ்சாலத்தலமான்மியமென்று
கற்றவர்புகழுஞ்சூதமாமுனிவன்கனிவொடுதொகுத்தினிதுரைத்தான். 36

237 மன்னியதவத்துச்சவுநகமுனிவன்மற்றதுகேட்டுளமகிழ்ந்து
மின்னியபுகழோய்தொகுத்துரைத்ததனைவிரித்துரைத்தருளியென்றிரப்பத்
துன்னியவுவப்பிற்குசூதமாமுனியுஞ்சொற்றனனதனைமாதவத்தோர்
பன்னியதமிழான்மொழிபெயர்த்தெடுத்துப்பாடுவான்றுணிந்தனனுய்ந்தேன். 37

நைமிசைப்படலம் முற்றிற்று.
ஆக படலம் 4-க்கு, திருவிருத்தம். 237.


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by சிவா on Mon Jun 20, 2011 3:16 am

5. திருக்கண் புதைத்தபடலம். (238 -312)

238 வண்டுதுற்றதாமரைமலர்மிசையமர்மறையோன்
றண்டுசக்காம்வளைசிலைவாள்கொள்கைத்தலத்தோ
னண்டுவண்பதத்தோற்றமுமிறுதியுமனந்தங்
கண்டுநிற்பதுகண்ணுதல்வெள்ளியங்கயிலை. 1

239 அரவுகான்றசெம்மணிபலமேற்பொதிந்தலங்கப்
பரவுமேன்மையிற்பொலிவரைபரம்பரனுதற்க
ணுரவுசால்விழிச்செந்தழற்கொழுந்தகத்தொருதான்
விரவுதன்மையைத்தெரித்ததுபோன்மெனவிளங்கும். 2

240 அகத்துவைகியசெந்தழல்புறஞ்சுலாயழற்ற
மிகத்தழங்குபாற்புணரிமேற்பொங்கினாலொக்கு
நகத்தழைந்தசெந்தளிர்ப்பொழில்சூழ்விராய்நண்ண
மகத்துவம்பொலிந்தோங்கியவன்னமால்வரையே. 3

241 மருவுபாற்கடல்பொங்கிமேலெழுதரமாலு
மொருவுறாதுமீமிசைக்கிடந்துறங்குவதேய்ப்பப்
பொருவிலாதுயர்ந்தோங்கியவத்தகுபொருப்பின்
றிருவலாஞ்சிகரத்துமாலுறங்குவசெறிந்தே. 4

242 அடிவறைத்தலைமடங்கறாழ்கந்தரமணையா
முடிவிலாவருவித்திரளாரமாமோலி
நெடியநாயகன்கோயிலாநிறைமதிகுடையாப்
படியிலாவரசிருக்குமத்தகுபருப்பதமே. 5

243 எய்துமானிறக்கறுப்பன்றிக்கறுப்புவேறில்லை
தையன்மார்நடுத்தளர்வன்றித்தளர்வுவேறில்லை
வெய்யதங்கணனுதல்விழியன்றிவேறில்லை
யையபாதவவஞ்சமன்றில்லைமற்றாங்கே. 6

244 பற்றுபேரிருண்முழுமையுமழிதரப்பருகிச்
சுற்றுமேயசெம்மணிநடுச்சுடர்ப்பெருங்கற்றை
செற்றுமால்வரைத்தோற்றமொண்செந்தழனாப்பண்
மற்றுவெண்ணிறப்புனலெழுந்தமைவதுவயக்கும். 7

245 மிக்கபேரொளியவ்வரைவீற்றிருந்தருளத்
தக்கவாதனமாகியதன்மைதேர்ந்தன்றோ
மைக்கண்மெல்லியறழுவிடக்குழைந்தமெய்வானோன்
கைக்கும்வில்லெனக்குழைந்ததோர்காமருபொருப்பு. 8

246 நறியபைம்பொழிலவ்வரைத்தியானஞ்செய்நலத்தாற்
குறியமாமுனியொருகரம்மைத்தலுங்கோள்செ
னெறியபாவமாயினதெனுங்கவலைநீத்துவப்ப
வறியயாவருமழுந்தியதொருவரைபிலத்தே. 9

247 இறைவன்மேனியுமேனியிற்பூதியுமேற்ற
பிறையுந்தும்பைமருக்கமுமனவும்பேணிறகு
நிறையுமேறுமால்யானையும்வெள்ளெனநிலாவி
யுறையுமவ்வரையுறுசுடர்மூழ்கலானன்றோ. 10


[You must be registered and logged in to see this image.]

[You must be registered and logged in to see this link.] | [You must be registered and logged in to see this link.]
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: கண்டதேவிப் புராணம்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 4 1, 2, 3, 4  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum