உறவுகளின் வலைப்பூக்கள்

புதிய இடுகைகள்
» சிந்தனையாளர் முத்துக்கள்
by ayyasamy ram Today at 4:48 am

» தாய்க்காக வேலையை விட்டவருக்கு கார் பரிசளித்த தொழிலதிபர்
by ayyasamy ram Today at 4:46 am

» டில்லியில் தாக்குதல் நடத்த சதி:உளவுத் துறை எச்சரிக்கை
by ayyasamy ram Today at 4:42 am

» 2 குழந்தைக்கு மேல் பெற்றால் அரசு வேலை இல்லை
by ayyasamy ram Today at 4:40 am

» தீபாவளி திருநாள் ஏன் எதற்காக கொண்டாடப்படுகின்றது?
by ayyasamy ram Yesterday at 10:11 pm

» இந்த வாட்ச்சைக் கட்டியிருந்தால் மெட்ரோ ரயிலில் டிக்கெட் எடுக்க வேண்டாம்! இது புதுசு
by ayyasamy ram Yesterday at 9:53 pm

» அப்பாடா..கடைசியில் பிஎஸ்என்எல் நிறுவனத்திற்கு அது வந்தே விட்டது!
by ayyasamy ram Yesterday at 9:51 pm

» தமிழகத்தில் 6 புதிய மருத்துவக் கல்லூரிகள் தொடங்க மத்திய அரசு அனுமதி
by ayyasamy ram Yesterday at 9:50 pm

» எடு பணத்தை- ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» தந்திரம் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:53 pm

» புறநகர் – ஒரு பக்க கதை
by ayyasamy ram Yesterday at 7:52 pm

» டெங்கு காய்ச்சலை தடுக்க டிப்!ஸ்
by ayyasamy ram Yesterday at 7:43 pm

» மருந்து கவர்ல சீரியல் பெயர் எழுதி இருக்கே, ஏன்?
by ayyasamy ram Yesterday at 7:40 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:36 pm

» பாதுகாப்புடன் தீபாவளி கொண்டாட டிப்ஸ்
by ayyasamy ram Yesterday at 7:00 pm

» துன்பத்தில் இருப்பவனை உடனே போய்ப்பார்!
by ayyasamy ram Yesterday at 6:50 pm

» வாழ்க்கை தத்துவம்...!
by ayyasamy ram Yesterday at 6:46 pm

» இது வாட்ஸப் கலக்கல் - தொடர் பதிவு
by ayyasamy ram Yesterday at 6:37 pm

» சொன்னதை செய்த இமான்.... மாற்றுத்திறனாளி இளைஞரை பாடகராக்கினார்
by ayyasamy ram Yesterday at 5:47 pm

» மீண்டும் ராஜமவுலி படத்தில் அனுஷ்கா
by ayyasamy ram Yesterday at 5:44 pm

» மொரீசியசில் நடந்த போட்டியில் திருமதி இந்தியா அழகி பட்டம் வென்ற கோவை பெண்
by ayyasamy ram Yesterday at 5:39 pm

» கலைத்திறனுக்கு தலை வணங்குவோம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:15 am

» மழைக்கால நோய்களுக்கு கஷாயம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:12 am

» அப்போ இது ஹிட்லரின் பதுங்கு குழி.. இனிமே இது ஹோட்டல்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:10 am

» வீட்டுக் குறிப்புகள்...
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:08 am

» 'ரயில் தண்டோரா' புதிய செயலி அறிமுகம்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:05 am

» கார்ட்டூன் & கருத்து சித்திரம் - தொடர் பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 11:04 am

» காரில் பதிவு எண்ணுக்கு பதில் ஆந்திர பிரதேச முதல் மந்திரி பெயர்; வழக்கு பதிவு
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:59 am

» கனடாவில் 'கிங் மேக்கர்' ஆகிறார் இந்தியர்
by பழ.முத்துராமலிங்கம் Yesterday at 10:56 am

» 2020- அரசு விடுமுறை பட்டியல் வெளியீடு
by ayyasamy ram Yesterday at 8:53 am

» கற்கள் உயிரைக் கொல்லும், சொற்கள் உயிரோடு கொல்லும்.!
by ayyasamy ram Tue Oct 22, 2019 7:19 pm

» மருந்தாகும் உணவு –சிகப்பு அரிசி
by ayyasamy ram Tue Oct 22, 2019 6:14 pm

» தீபாவளி ஸ்பெஷல்! --ஸ்வீட் & கார வகைகள்
by ayyasamy ram Tue Oct 22, 2019 5:47 pm

» கந்தன் வருவான்
by ayyasamy ram Tue Oct 22, 2019 5:40 pm

» அஜித் படத்தில் நஸ்ரியா?
by ayyasamy ram Tue Oct 22, 2019 5:38 pm

» காய்ச்சலும் கடந்து போகும்!
by ayyasamy ram Tue Oct 22, 2019 5:33 pm

» புருஷனை test எலியா மாத்தாதீங்க.!
by ayyasamy ram Tue Oct 22, 2019 4:40 pm

» வாகனங்களில் ஏன் பிரேக்குகள் வைக்கப்பட்டுள்ளன ?”
by ayyasamy ram Tue Oct 22, 2019 4:36 pm

» சை ,மோசமான ஆண்கள் ( 3 )--பண மோசடி: கருணாநிதி பேரன் கைது
by T.N.Balasubramanian Tue Oct 22, 2019 4:29 pm

» வைரல் சம்பவம்
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 22, 2019 4:27 pm

» ரமணியன் ஐயா -பிறந்த நாள் வாழ்த்துகள்.
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 22, 2019 4:25 pm

» 13031- 3131- ஒரு வித்தியாசமான எண்கள் இந்த பதிவில்
by T.N.Balasubramanian Tue Oct 22, 2019 3:54 pm

» நூல் வேண்டும் .கிடைக்குமா ?
by pkselva Tue Oct 22, 2019 2:24 pm

» சினி துளிகள்! - தொடர் பதிவு
by ayyasamy ram Tue Oct 22, 2019 1:47 pm

» சிங்கம் 4-ம் பாகத்தில் சூர்யா? – மீண்டும் ஹரி இயக்கத்தில் நடிக்கிறார்
by ayyasamy ram Tue Oct 22, 2019 1:30 pm

» ரவுடியாக ஆசை! ‘அசுரன்’ மாரியம்மா சொல்கிறார்
by ayyasamy ram Tue Oct 22, 2019 1:28 pm

» ஐஎன்எக்ஸ் மீடியா வழக்கு - ப.சிதம்பரத்துக்கு ஜாமீன் வழங்கியது உச்ச நீதிமன்றம்
by ayyasamy ram Tue Oct 22, 2019 1:06 pm

» நடிப்பதே தெரியக்கூடாது! நடிகை அம்மு அபிராமி
by ayyasamy ram Tue Oct 22, 2019 1:01 pm

» திருக்குறளின் யாப்பிலக்கண நெறி அறிவோம்
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 22, 2019 11:32 am

» மாற்றம் ஒன்றுதான் மாறாதது...!
by பழ.முத்துராமலிங்கம் Tue Oct 22, 2019 11:22 am

Admins Online

மனிதர்கள் ஜாக்கிரதை!

மனிதர்கள் ஜாக்கிரதை! Empty மனிதர்கள் ஜாக்கிரதை!

Post by சிவா on Fri Jun 17, 2011 3:38 pm

''நாய்கள் ஜாக்கிரதை!'' ன்னு அங்கங்கே போர்டு மாட்டியிருக்கறதைப் பார்த்திருப்பீங்க!

காலம் போற போக்கைப் பார்த்தா ''மனிதர்கள் ஜாக்கிரதை!'' ன்னு தெருவுக்குத் தெரு எழுதி மாட்டி வைக்கலாம் போல இருக்கு!

ஆமாம் சாரி! இவன் எப்ப வருவான்...? எந்த ரூபத்துலே வருவான்? என்ன செய்வான்? - ங்கறதை யூகிக்கறது ரொம்ப கஷ்டம்!

நுகர்வோர் பாதுகாப்பு (Consumer Protection) ன்னு எல்லாரும் சொல்றாங்களே... அந்தப் பாதுகாப்பு யாருகிட்டேயிருந்து?

மனுஷன் கிட்டேயிருந்து மனுஷனைப் பாதுகாக்கற ஒரு முயற்சிதானே அது!

புலியும் சிங்கமும் வந்தா, இங்கே கலப்படம் பண்ணிக்கிட்டிருக்கு?

கரடியும் நரியும் வந்தா பொய்யான முத்திரையை குத்தி வியாபாரம் பண்ணிக்கிட்டிருக்கு?

எல்லாம் மனுஷன் பண்ற தப்புதான்... மனுஷனே அதுக்கு பலியாகறான்!

மிளகாய்த் தூள்ளே மரத்தூளை கலந்து விட்டுடுறான் சார்! அதை வாங்கி ஆகா! பேஷ்!ன்னு சமையல் பண்ணி சாப்பிட்டுறான். அதுக்கப்புறமா வயத்தைப் புடிச்சிக்கிட்டு நிக்கிறான் - வயத்தை வலிக்குதேன்னு!

மனுஷன் பேர்லே உள்ள நம்பிக்கை மனுஷனுக்கு நாளுக்கு நாள் குறைஞ்சிகிட்டே தான் வருது!

இனிமேல் வருங்காலத்துலே மனஷனுடைய நடவடிக்கைகளை இயந்திரங்கள் கண்காணிக்க வேண்டிய கட்டாய சூழ்நிலை வந்துகிட்டிருக்கு! இப்ப கேட்டா ஆச்சரியப்படுவீங்க. ஆனா வரப்போறது என்னமோ உண்மைதான்!

யாருக்கும் தெரியாமே ஒரு மனுஷனுடைய நடவடிக்கைகளை கம்ப்யூட்டர் மூலமா கண்காணிக்க முடியும்!

தாய்லாந்துலே பதினைந்து வயதுக்கு மேற்பட்டவங்களுக்கெல்லாம் அடையான அட்டை கொடுத்துடறாங்களாம். அதுலே அந்த நபரோட வண்ணப்படம், முகவரி, அடையாளக்குறி, கைரேகை, குடும்பப் பின்னணி, குற்றப்பட்டியல் எல்லாம் இருக்கும்.

சிங்கப்பூர்லே உள்ள 27 லட்சம் மக்களுக்கு ஏற்கனவே இதுமாதிரியான மின்னணு அடையாளச் சீட்டு கொடுத்துட்டாங்களாம்! ஒவ்வொரு மோட்டார் வண்டியிலேயும் மின்னணு எண்பலகையும், சின்ன கருப்புப் பெட்டியும் பொருத்தப் போறாங்களாம்.

தெருக்களிலே சாலையின் மேற்பரப்புலேயும் உணர்கருவிகள் (sensors) பொருத்தப்படும். இது மூலமா தனி நபரின் சாலை உபயோகம் எவ்வளவுங்கறதை கணக்குப் பண்ணி அதுக்குத் தகுந்த மாதிரி வரி வசூல் பண்ணப் போறாங்களாம்.

சிறையிலேயிருந்து கைதிகள் விடுதலையாகறாங்கள்லே... அப்போ அவங்க உடம்புலே மின்னணு முறையாலே அடையாளம் போட்டுடறது... அப்புறம் அவங்க நடமாட்டத்தை கண்காணிக்கிறது... எங்கே போறாங்க வர்றாங்க... எங்கறது தெரிஞ்சுடும். இந்தப் பழக்கம் இப்பவும் அமெரிக்காவுலே உண்டாம்! ஒலியெழுப்புகிற ஒரு கருவியை (beeper) உடம்புலேயே மாட்டிவிட்டுடறாங்க. அதை ஒண்ணும் செய்ய முடியாது! (tamper proof beeper).

குற்றவாளி குறிப்பிட்ட எல்லையை மீறி எங்கேயாவது போனா... அந்தக் கருவி சத்தம் போட்டு அதிகாரிகளுக்குக் காட்டிக் கொடுத்துடும்.

இன்னொரு செய்தி என்ன தெரியுமா?

வலது கையிலே மின்னணுச் சில்லு (chip) ஒண்ணைப் பொருத்திக்கறது.

கடையிலே போயி பொருள்கள் வாங்கறோம். வாங்கிக்கிட்டு... அதுக்கப்புறம் வலதுகையை நுண்படம் எடுக்கற கருவி (Scanner) மேலே காட்டினா போதும்! உங்க பேங்கு கணக்குலே அந்த செலவு சரிகட்டப்படும்.

இன்னொரு நுண் சில்லு உண்டு... microchip! ரொம்பச் சின்னது... இதை ஊசிமூலமாக உடம்புக்குள்ளே செலுத்தி விடலாம். அதுக்கப்புறம் அந்த ஆள் எங்கே போனாலும் தெரிஞ்சு போயிடும். இப்போ மிருகங்களுக்கு இதை செஞ்சிக்கிட்டிருக்காங்களாம்!

மனுஷன் தொடர்ந்து ஏமாத்திக்கிட்டிருந்தா அவனுக்கும் இதுமாதிரி செய்ய வேண்டிய அவசியம் வந்துடும்!

இதையெல்லாம் நினைச்சுப் பார்த்தாவது மனுஷன் திருந்தணும்!

இன்னொருத்தரை ஏமாத்தற வேலையை நிறுத்தணும்! இல்லேன்னா வருங்காலத்திலே இப்ப நான் சொன்னதுலாம் வந்துதான் தீரும்! அவ்வளவு தூரத்துக்கு ஏன்?

எழுத்துலேகூட ஏமாத்து வேலை நடக்குது சார்!

ஒரு ஆளு, ஒரு புத்தகம் எழுதினார்:

''பணம் சம்பாதிக்க நூறு வழிகள்'' - அப்படின்னு!

இப்படி ஒரு புத்தகம் எழுதிவிட்டு அவரே பிச்சை எடுத்துக்கிட்டிருந்தார்.

''என்னங்க இது? 'பணம் சம்பாதிக்க நூறு வழிகள்'ன்னு புத்தகம் எழுதிவிட்டு... நீங்களே பிச்சை எடுக்கறீங்களே!'' ன்னு கேட்டாங்க. அதுக்கு அவர்:

''அந்த நூறு வழிகள்லே இதுவும் ஒரு வழிங்க!'' அப்படின்னாராம்!

தென்கச்சி கோ.சுவாமிநாதன்


அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/sivastar
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்

பதிவுகள் : 86356
இணைந்தது : 19/09/2008
மதிப்பீடுகள் : 10878

http://www.eegarai..net

Back to top Go down

மனிதர்கள் ஜாக்கிரதை! Empty Re: மனிதர்கள் ஜாக்கிரதை!

Post by பாலாஜி on Fri Jun 17, 2011 3:48 pm

மலர்களின் கலப்டம் (அயல்மகரந்த சேர்க்கை) மூலம் புதிய அழகான
மலர்கள் கிடைக்கின்றன ..

ஆனால் மனிதனின் கலப்படம் மூலம் சமூக கேடு ...

பாலாஜி
பாலாஜி
சிறப்புப் பதிவாளர்


பதிவுகள் : 19843
இணைந்தது : 30/07/2009
மதிப்பீடுகள் : 4006

http://varththagam.lifeme.net/

Back to top Go down

மனிதர்கள் ஜாக்கிரதை! Empty Re: மனிதர்கள் ஜாக்கிரதை!

Post by கோவை ராம் on Fri Jun 17, 2011 6:30 pm

எந்த சிப் கண்டுபிடித்தாலும் அதை செய்யலிழக்கவும் வேற ஒரு சிப் கண்டுபிடிப்பான் மனிதன்

ராம்
கோவை ராம்
கோவை ராம்
இளையநிலா

இளையநிலா

பதிவுகள் : 977
இணைந்தது : 16/03/2009
மதிப்பீடுகள் : 51

Back to top Go down

மனிதர்கள் ஜாக்கிரதை! Empty Re: மனிதர்கள் ஜாக்கிரதை!

Post by சரவணன் on Fri Jun 17, 2011 7:24 pm

அருமையான பதிவு... மகிழ்ச்சி
சரவணன்
சரவணன்
நிர்வாகக் குழுவினர்


பதிவுகள் : 11122
இணைந்தது : 06/02/2010
மதிப்பீடுகள் : 520

http://fb.me/Youths.TYD

Back to top Go down

மனிதர்கள் ஜாக்கிரதை! Empty Re: மனிதர்கள் ஜாக்கிரதை!

Post by முரளிராஜா on Fri Jun 17, 2011 10:20 pm

நல்ல பதிவு
முரளிராஜா
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 10488
இணைந்தது : 12/01/2011
மதிப்பீடுகள் : 1179

Back to top Go down

மனிதர்கள் ஜாக்கிரதை! Empty Re: மனிதர்கள் ஜாக்கிரதை!

Post by மஞ்சுபாஷிணி on Fri Jun 17, 2011 10:31 pm

பயனுள்ள பகிர்வு சிவா....
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
மதிப்பீடுகள் : 888

http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

மனிதர்கள் ஜாக்கிரதை! Empty Re: மனிதர்கள் ஜாக்கிரதை!

Post by முஹம்மத் on Fri Jun 17, 2011 11:18 pm

மனிதர்கள் ஜாக்கிரதை! 677196 மனிதர்கள் ஜாக்கிரதை! 677196 மனிதர்கள் ஜாக்கிரதை! 677196 நல்ல பதிவு நன்றி !
முஹம்மத்
முஹம்மத்
பண்பாளர்


பதிவுகள் : 70
இணைந்தது : 03/05/2011
மதிப்பீடுகள் : 13

http://www.tndawa.blogspot.com

Back to top Go down

மனிதர்கள் ஜாக்கிரதை! Empty Re: மனிதர்கள் ஜாக்கிரதை!

Post by Sponsored content


Sponsored content


Back to top Go down

View previous topic View next topic Back to top

பின்னூட்டம் எழுத உள்நுழைக அல்லது உறுப்பினராக பதிவு செய்க

ஈகரை உறுப்பினர்கள் மட்டுமே இங்குள்ள பதிவுகளுக்கு பின்னூட்டம் (மறுமொழி) எழுத முடியும்

உறுப்பினராக இணையுங்கள்

உறுப்பினராக பதிவு செய்து ஈகரை குடும்பத்துடன் இணையுங்கள்!


ஈகரையில் உறுப்பினராக இணைய

உள்நுழைய

நீங்கள் ஈகரையின் உறுப்பினரா?? இங்கு உள்நுழையுங்கள்.


உள் நுழை