ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
``2 நிமிசம்தான் டைம்... அதுக்குள்ள தப்பிச்சி ஓடிரு!"
 ayyasamy ram

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 T.N.Balasubramanian

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 SK

புத்தகங்கள் தேவை !
 PKishanthini

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 SK

பூங்கொத்து விளையாட்டு
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ஜாஹீதாபானு

ஏழு தாளங்கள்
 SK

கரையே இல்லாத ஆறு
 T.N.Balasubramanian

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 SK

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 SK

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 SK

துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

சினி துளிகள்
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

வில்லனா சீமான்? வீறிடும் விஜயலட்சுமி

View previous topic View next topic Go down

வில்லனா சீமான்? வீறிடும் விஜயலட்சுமி

Post by மஞ்சுபாஷிணி on Mon Jun 06, 2011 8:41 am

'என்னை மூணு வருஷமா லவ் பண்ணினார். கல்யாணம் பண்ணிக் கிறதாச் சொல்லி ஆசையாப் பழகினார். ஆனால், இப்போ கல்யாணத்துக்கு மறுக்கிறார். என்னை மன உளைச்சலில் தள்ளிய அவர் மீது நடவடிக்கை எடுங்கள்!'' - இயக்குநர் சீமான் மீதுதான் இப்படி ஒரு புகார்... கிளப்பி இருப்பவர் நடிகை விஜயலட்சுமி! புகார் கொடுத்த கையோடு சில சினிமா புள்ளிகளிடம் பேசிய விஜயலட்சுமி, ''உலகம் முழுவதும் வாழும் தமிழர்களுக்கு ஹீரோவாக இருக்கும் சீமான் என் வாழ் வில் வில்லனாகிவிட்டார். புகாரை வாபஸ் வாங்கச் சொல்லி யாரும் வற்புறுத்தினால் தற்கொலை செய்துகொள்வேன்!'' எனப் புலம்பி இருக்கிறார்.

விஜயலட்சுமிக்கு அப்படி என்னதான் பிரச்னை?

'ப்ரண்ட்ஸ்’ படம் மூலமாக தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் விஜயலட்சுமி. பெரிய வாய்ப்புகள் ஏதும் இல்லாததால் சின்னத்திரையிலும் தலையைக் காட்டினார். சீமானின் இயக்கத்தில் வெளியான 'வாழ்த்துகள்’ படத்திலும் நடித்தார். பரபரப்பு சர்ச்சையில் அவர் பெயர் சிக்குவது இது முதல் முறை அல்ல. ஏற்கெனவே இயக்குநர் ஏ.ஆர்.ரமேஷ், தன்னைக் காதலித்து ஏமாற்றியதாகப் புகார் கொடுத்தார். அப்போது, தூக்க மாத்திரை களை விழுங்கி தற்கொலைக்கும் முயன்றார். 2006-ல் கன்னட நடிகர் சுஜான் லோகேஷ§டன் மூன்று வருடங்களாக குடும்பம் நடத்துவதாகச் சொல்லி பரபரப்பு கிளப்பினார். டி.வி நிகழ்ச்சியின் இயக்குநர் ஒருவர் மீதும் கல்யாண கலாட்டா’ புகாரைக் கொடுத்து பரபரக்க வைத்தார். இப்போது அதே வெடிகுண்டை சீமான் மீதும் வீசி இருக்கிறார். பரபரப்பு கிளப்புவதும் பின்னர் அப்படியே அமைதியாகிவிடுவதும் விஜயலட்சுமியின் வழக்கமான வாடிக்கைதான்.சீமானுக்கும் விஜயலட்சுமிக்கும் எப்படிப் பழக்கம்?

ஒன்றரை வருடத்துக்கு முன்பு விஜயலட்சுமியின் சகோதரிக்கு குடும்ப ரீதியான சிக்கல். அப்போது விஜயலட்சுமி கண்ணீரோடு சீமானை அணுக, அவர் மகளிர் ஆணையத்தின் தலைவராக இருந்த ராமாத்தாளிடம் அனுப்பினார். விஜயலட்சுமியின் சட்டப் போராட்டத்துக்கு சங்கமித்திரை என்ற வழக்கறிஞர் மூலமாக உதவினார். மேற்கொண்டு நடந்ததை சீமானின் வழக்கறிஞர் சந்திரசேகர் விவரிக்கிறார்.

''ஈழ விவகாரத்தில் மிகுந்த தீரத்தோடு போராடும் சீமானுக்கு இழுக்கு உண்டாக்கும் விதமாகவே இப்படி ஒரு புகாரைப் பரப்பி இருக்கிறார் விஜயலட்சுமி. குடும்பப் பிரச்னை யில் மனிதாபிமான முறையில் இரக்கப்பட்டதைத் தவிர அந்தப் பெண்ணுக்கும் சீமானுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. சம்பந்தமே இல்லாமல் சீமானின் செல்லுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பி தேவையற்ற மன உளைச்சலை உண்டாக்கியது விஜயலட்சுமிதான். 'என் மீது கயல் விழி என்கிற ஆவியை ஏவிவிட்டு என் குடும்பத்தின் நிம்மதியையே குலைத்து விட்டீர்கள். தயவு செய்து என் மீது ஏவி இருக்கும் ஆவியை விரட்டுங்கள். இல்லையேல் நான் தற்கொலை செய்துகொள்வேன்!’ என்கிற எஸ்.எம்.எஸ்-ஐ சமீபத்தில் சீமானுக்கு அனுப்பினார். (அதை நம்மிடம் காட்டுகிறார்!) எத்தனையோ இக்கட்டுகளையும் பொருட்படுத்தாமல் ஈழ விவகாரத்தில் தொடர்ந்து போராடிவரும் சீமான், ஆவியை ஏவிவிடுகிறார் என்றால் சிரிக்கத்தானே முடியும்? பகுத்தறிவுக் கொள்கையில் உறுதி பிறழாமல் இருக்கும் சீமான் மீது பில்லி சூனியப் பிரச்னையைக் கிளப்புவதில் இருந்தே அந்தப் பெண்ணின் குணம் எப்படிப்பட்டது என்பது தெரிகிறது. அவதூறு பரப்பிய விஜய லட்சுமி மீது ஐந்து கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு வழக்குத் தொடர இருக்கிறோம். விஜயலட்சுமியை இயக்கும் சூத்திரதாரிகளையும் சும்மா விட மாட்டோம்!'' என்றார் சந்திரசேகர்.

இன்னும் சிலரோ, ''விஜயலட்சுமி புகார் கொடுக்க கமிஷனர் ஆபீஸ் போவதற்கு முன்னரே காங்கிரஸ் புள்ளி ஒருவர் அனைத்து பத்திரிகை யாளர்களுக்கும் போன் செய்து 'கமிஷனர் ஆபீஸில் முக்கியச் செய்தி!’ எனப் பரப்பி இருக்கிறார். ஈழ விவகாரத்தில் தீவிரமாக இருக்கும் சீமானை சிதைக்கும் விதமாகவே திட்டமிட்டு சிலர் விஜயலட்சுமி மூலமாக இந்த நாடகத்தை நடத்துகிறார்கள். விஜய லட்சுமி மீது தாக்குதலை நடத்தி பழியை சீமான் மீதும் போட்டு சிக்கவைக்கவும் சிலர் திட்டமிட்டு வருகிறார்கள். விஜயலட்சுமி சீமானை திருமணம் செய்ய நினைத்திருந்தால் அவருடைய உறவினர்களைத்தானே அணுகி இருக்க வேண்டும். அதைச் செய்யாமல் போலீஸி டம் புகார் கொடுத்ததிலேயே சீமானின் இமேஜை உடைப்பதுதான் அவருடைய நோக்கம் என்பது புரிந்துவிட்டது. ஈழப் போர் தீவிரமாக நடந்த நேரத்தில் சிங்கள அரசுக்கு எதிராக தொடர்ந்து முழங்கி வந்த சி.மகேந்திரன் மீது வெளிநாட்டுப் பெண் ஒருவர் பாலியல் புகார் கொடுத்தார். அதன் பின்னணியில் சிங்கள உளவுப் புள்ளிகளின் கைங்கர்யம்தான் செயல்பட்டது. அதேபோல் இப்போது சீமான் மீதும் பரபரப்பு கிளப்பப்படுகிறது. உலகளாவிய அளவில் சீமானுக்கு எழுந்திருக்கும் ஆதரவை சிதைக்க உளவுப் புள்ளிகள் நிகழ்த்தும் சதிதான் இது!'' என்கிறார்கள் அவர்கள்.

'பகலவன்’ பட டிஸ்கஷனில் இருந்த சீமானை சந்தித்தோம். எதையும் சட்டையே செய்யாதவராக சிரித்தவர், ''காதல் செய்கிற நிலையிலா நான் இருக்கேன்? ஒரு வருஷத் துக்கும் மேல் சிறையில் இருந்துட்டு வெளியே வந்த எனக்கு ஈழ விவகாரங்களுக்காகப் போராடவும் காங் கிரஸுக்கு எதிராகப் பரப்புரை செய்யவுமே நேரம் இல்லை. படிக் கவோ தூங்கவோ நேரம் இல்லாத அளவுக்கு தீவிரமாக இயங்கிவரும் எனக்குக் கண்டவர்களோடும் டூயட் பாடுவதுதான் வேலையா? ஏற்கெனவே இலங்கைப் புள்ளிகள் சிலரை தமிழகத்துக்கு அனுப்பி என்னைக் கொலை செய்ய முயற்சி நடந்தது. அதையே சட்டை செய்யாத நான் இந்த மாதிரி சின்னத்தனமான அவதூறுகளையா பொருட்படுத்துவேன்? யுத்த களத்தில் நின்றால் குண்டுகளையும் அரசியல் களத்தில் நின்றால் அவதூறுகளையும் எதிர்கொண்டுதான் ஆகவேண்டும். விட்டுத் தள்ளுங்கள் அந்த வெட்டிக் கதைகளை எல்லாம்...'' என்றார் சீறலாக!

நன்றி ஜுனியர் விகடன்
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum