ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 Mr.theni

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

நரை கூறிய அறிவுரை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

urupinar arimugam
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

தாய்லாந்தில் மியூசியமாக மாறுகிறது 12 சிறுவர்கள் மீட்கப்பட்ட குகை
 ayyasamy ram

வீட்டுக்குறிப்புகள் - தொடர் பதிவு
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Top posting users this week
SK
 
சாமி
 
Mr.theni
 
ராஜா
 

Admins Online

அழகர்சாமியின் குதிரை விமர்சனம்..

View previous topic View next topic Go down

அழகர்சாமியின் குதிரை விமர்சனம்..

Post by மஞ்சுபாஷிணி on Thu May 19, 2011 3:50 pm

கிராமத்துத் திருவிழா சமயம்... அழகர் 'சாமி’யின் குதிரை காணாமல் போக, 'அழகர்சாமி’யின் குதிரை ஒன்று அதே ஊருக்குள் வந்தால் என்ன ஆகும்?
அப்புக்குட்டி போல ஒரு ஹீரோவை முன்வைத்த ரசனைக்கும் துணிச்சலுக்கும் முதல் பாராட்டுக்கள். விகடனில் வெளிவந்த பாஸ்கர் சக்தியின் 'சற்றே பெரிய சிறுகதை’யை அதே பெயரில் படமாக்கி இருக்கிறார் இயக்குநர் சுசீந்திரன்.
ஒரு கிராமம், அதன் வெள்ளந்தி - வில்லங்க மாந்தர்கள், ஒரு குதிரை, ஒரு குதிரைக்காரன்... இவர்களும் இவர்களுக்கு இடையிலான சம்பவங்களும்தான் படம்.
'குதிரை’யைக் காணோம் என்று பிரசிடென்ட் தலைமையில் ஊரின் தலைக்கட்டுகள் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கும் காட்சியை, வாசிப்பு சுவாரஸ்யம் குறையாத திரை அனுபவம் ஆக்கியதில் இருக்கிறது இயக்குநரின் சாமர்த்தியம்!


தன்மையான முரட்டுத்தனம் காட்டும் ஊர் பிரசிடென்ட், நாத்திக க்ரூப் இளந்தாரிகள், மலையாளக் கோடங்கியின் உதார், கிராமப் பஞ்சாயத்தில் அந்து நொந்து நூலாகும் இன்ஸ்பெக்டர், மாலை போட்டு இருக்கும் சமயமும் 'சுத்தபத்தம்’ காக்காத மைனர், உளவு பார்க்க வந்து 'மினி சாமியார்’ ஆகும் சூரி எனப் படம் நெடுக அடுக்கப்பட்டு இருக்கும் குட்டிக் கதாபாத்திரங்கள் வசீகரம்.
கொடைக்கானல் ஏரியில் குதிரை ஓட்டிக்கொண்டு இருந்தவரை நடிக்க வைத்ததுபோல, அப்புக் குட்டியிடம் அசல் குதிரைக்கார உடல்மொழி! மலையாளக் கோடங்கி வரவால் வெகுண்டெழுந்து ஊறுகாய் எலுமிச்சம் பழங்களுக்கு குங்குமம் பூசி, பொண்டாட்டி கையால் பூசை வாங்கும் உள்ளூர் கோடங்கியின் ராவடிகள் கலீர் கலகலப்பு!
'ஸ்டார் அட்ராக்ஷன்’ இல்லாத படத்தின் நட்சத்திரக் கவர்ச்சி, 'கோழியைக் களவாண்டு தின்னும் தொத்தலாத்தானே இருக்கான்!’ போன்ற பாஸ்கர் சக்தியின் கிண்டல், நக்கல், எள்ளல், கேலி தொனிக்கும் வசனங்கள்தான். 'குதிக்கிற குதிக்கிற...’ பாடலிலும், பின்னணி இசையிலும் மலைவாசஸ்தல ட்ரிப் அடித்த உணர்வை உண்டாக்குகிறார் இளையராஜா. ஒளிப்பதிவு, அறிமுகம் 'தேனி’ ஈஸ்வர். ஜன்னல் வழிக் காட்சியாக கிராமத்தின் உயிர்ப்பைப் பிரதிபலிக்கும் கேமரா, அந்தரத்தில் மிதந்து, தவழ்ந்து மலைக் கிராமத்தின் அழகைக் கொள்ளைகொள்கிறது.
அப்புக்குட்டிக்கும் குதிரைக்கும் இடையிலான பிணைப்பு அழுத்தமாகப் பதியாததால், அவர் குதிரைக்காக அழுது புரள்வது அத்தனை தாக்கத்தை உண்டாக்கவில்லை. சரண்யா மோகனுக்கு அப்புக்குட்டி மீது தீராக் காதல் ஏற்படுவதற்கான காரணமும் ம்ஹூம். ஊரில் அதீத வறட்சி என்பதைக் காட்சிகளில் காட்டவே இல்லை. குதிரை காணாமல் போனதின் படபடப்பும், யார் அந்தத் திருடன் எனும் பரபரப்பும்... அழுத்தமாக இல்லை. புரோட்டாவின் விலையை வைத்து கதை எண்பதுகளில் நடக்கிறதுபோல என்று அனுமானிக்க வேண்டி இருக்கிறது. ஆனால், இப்போதும் இப்படியான கிராமங்களும் மூட நம்பிக்கைகளும் இருக்க, ஏன் தெளிவு இல்லாத எண்பதுகள் தொனி?
ஆங்காங்கே நின்று நிதானித்து வந்தாலும், அழகர்சாமி குதிரையின் ஓட்டத்தை ரசிக்கலாம்!

நன்றி விகடன்...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: அழகர்சாமியின் குதிரை விமர்சனம்..

Post by Thiraviamurugan on Thu May 19, 2011 3:58 pm

சிறுகதைகள் படமாக்கபடுவதை வரவேற்போம்
avatar
Thiraviamurugan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 154
மதிப்பீடுகள் : 16

View user profile

Back to top Go down

Re: அழகர்சாமியின் குதிரை விமர்சனம்..

Post by மஞ்சுபாஷிணி on Thu May 19, 2011 4:03 pm

அன்பு நன்றிகள் திரவிய முருகன்.
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: அழகர்சாமியின் குதிரை விமர்சனம்..

Post by சிவா on Thu May 19, 2011 4:19 pm

விமர்சனத்தைப் படித்ததும் படம் பார்க்க வேண்டும் என்ற எண்ணம் ஏற்படுகிறது! நன்றி அக்கா!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: அழகர்சாமியின் குதிரை விமர்சனம்..

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum