ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 ayyasamy ram

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 ayyasamy ram

செய்யத் தகாத 16.
 ayyasamy ram

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 ayyasamy ram

போராட்டம்...
 ayyasamy ram

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 Logeshwaran kob

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

எது மென்மை
 முனைவர் ப.குணசுந்தரி

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

சனிபெயர்ச்சி பலன் 2009

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

சனிபெயர்ச்சி பலன் 2009

Post by மீனு on Tue Sep 08, 2009 8:19 pm

சனிபெயர்ச்சி பலன் 2009

மேஷம்

மேஷராசி அன்பர்களே நீங்கள் அற்ப ஆசை அற்றவர் களாகவும் வாக்குவன்மை நிறைந்தவர்களாகவும் இருப்பர். உங்களுக்கு தற்போது சனி பகவான் 5-ம் இடத்தில் இருந்து 6-ம் இடத்திற்கு இடமாறுகிறார். அவர் ஐந்தில் இருக்கும்போது பல்வேறு இடைïறையும் இன்னலையும் கொடுத்திருப்பார். குறிப்பாக குடும்பத்தில் பல்வேறு பிரச்சனைகளை ஏற்படுத்தி இருப்பார். கருத்துவேறுபாடு காரணமாக கணவன்-மனைவி இடையே பிரிவு ஏற்பட்டு இருக்கும். இந்த பிரச்சினைகள் அனைத்துக்கும் விடை கொடுக்கும் காலம் இது. சனிபகவான் தற்போது 6-ம் இடத்துக்கு வந்து பல்வேறு நன்மை உள்ளார். அவர் நல்ல பணப்புழக்கத்தையும், எடுத்த காரியத்தில் வெற்றியையும் கொடுப்பார். அபார ஆற்றலால் எதிரிகளை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்குவீர். உடல் நலம் சிறப்பு அடையும். மேலும் சனியின் 10-ம் இடத்துப்பார்வையும் சிறப்பாக அமையும். அதன் மூலம் அவர் பொருளாதார வளத்தையும் காரிய அனுகூலத்தையும் தருவார். தொழிலில் நல்ல முன்னேற்றத்தை கொடுப்பார். செப்டம்பர் 2009 - ஏப்ரல் 2010 கடந்த காலங்களில் நீங்கள் பட்ட கஷ்டத்திற்கு இனி விடை கொடுத்து முன்னேற்றத்துக்கு அடியெடுத்து வைக்கும் காலம். சனி இனி பொருளாதார நிலையை மேம்படுத்துவார். பழைய கடன்கள் அடைபட்டு சேமிப்பு அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தி ஆகும். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். பின்னர் புதிய இடம், வீடு வாங்கலாம். புதிய வாகனம் வாங்க வாய்ப்பு உண்டு. குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே இருந்த பிணக்குகள் அடியோடு மறையும். பிரிந்த குடும்பம் ஒன்று சேரும். வீட்டிற்கு தேவையான ஆடம்பர பொருட்களை வாங்கலாம். தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் டிசம்பருக்கு பிறகு கைகூடும். அதுவும் நல்ல வரனாக அமையும். குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர். விருந்து விழா என சென்று வருவீர்கள். உத்தியோகத்தில் தற்போது நிலவும் பிற்போக்கான பலன்கள் அனைத்தும் டிசம்பர் 15-ந் தேதிக்கு பிறகு விலகும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும். ஏதோ காரணத்தால் வேலையை விட்டு விலகியவர்கள் அதே வேலையை மீண்டும் கிடைக்க பெறுவர். வேலையின்றி இருக்கும் படித்தவர்களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரத்தில் நஷ்டம் என்ற நிலை இருக்காது. கேதுவால் இருந்துவந்த எதிரிகளின் தொல்லை இனி இருக்காது. அவர்களின் சதி உங்களிடம் எடுபடாமல் போகும். அரசிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். இரும்பு தொடர்பான வியாபாரிகள் நல்ல முன்னேற்றத்தை காணலாம்.வேலையின்றி இருப்பவர்கள் சுய தொழிலில் ஈடுபடலாம். அதுவும் 2010 ஜனவரி 10-ந் தேதிக்குள் தொடங்குவது சிறப்பு. கலைஞர்கள் கடந்த காலத்தில் இருந்த பின்தங்கிய நிலை மாறுபடும். டிசம்பருக்கு பிறகு புதிய ஒப்பந்தம் கிடைக்கும். அரசியல்வாதிகள் சமூகநல சேவகர்கள் மேம்பாடு காண்பர். மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு சிறப்பாக இருக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும். விவசாயத்தில் அதிக மகசூல் வரும். நெல், கோதுமை சோளம், மொச்சை. கரும்பு, எள் பனைத் தொழில் எந்த காலத்திலும் சிறப்பை தரும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும். கைவிட்டு போன சொத்துக்கள் மீண்டும் கிடைக்க வாய்ப்புண்டு.பெண்கள் முன்னேற்றம் காண்பர். கோவில் போன்ற புண்ணியத்தலங்களுக்கு சென்று வருவீர்கள். உடல்நலம் சிறப்பாக இருக்கும். குறிப்பாக வயிறு தொடர்பாக பிரச்சினை அடியோடு தீரும். மருத்துவ செலவு இனி இருக்காது. பரிகாரம்: ராகுவுக்கு அர்ச்சனை செய்யுங்கள். உளுந்து, படைத்து வணங்கலாம். ஆதரவற்றர்களுக்கு இயன்ற உதவி செய்யலாம். மே 2010-ஏப்ரல்2011 குடும்பத்தில் மகிழ்ச்சிக்கு குறை இருக்காது. வீட்டிற்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். கடந்த காலம்போல் இல்லாமல் செலவை சற்று குறைத்துக் கொள்ளவும். கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகளுக்கு தடை ஏற்படலாம். சில காலம் பொறுத்திருப்பது நல்லது. சிலருக்கு குரு வக்கிர காலத்தில் திருமணம் கைகூடலாம். தூரத்து உறவினர்கள் வகையில் இருந்து எதிர்பாராத விரும்பத் தகாத செய்தி வரலாம்.உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலையில் பளு அதிகரிக்கும். அலைச்சல் ஏற்படும். மேல் அதிகாரிகளிடம் அனுசரித்து போகவும். சக ஊழியர்களிடம் இருந்து எந்த உதவியையும் எதிர்பார்க்க முடியாது. சிலருக்கு விரும்பமில்லா இடமாற்றம் வரலாம். வியாபாரிகள், புதிய தொழில் தொடர்ந்து அனுகூலத்தை கொடுக்கும். ராகுவால் எதிரிகளின் இடைïறு அவ்வப்போது தலைதூக்கலாம். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். குருவால் செலவு அதிகரிக்கும். பணவிஷயத்தில் சற்று எச்சரிக்கை தேவை. 2011 பிப்ரவரி முதல் புதிய முதலீட்டை தவிர்க்கவும்.கலைஞர்கள் உங்கள் திறமைக்கு ஏற்ற புகழ், பாராட்டு போன்றவை கிடைக்காமல் போகலாம். அரசியல் வாதிகளுக்கும் எதிர்பார்த்த பதவி கிடைக்கமால் போகலாம். மாணவர்கள் இந்த கல்வி ஆண்டு அதிக சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும். ஆசிரியர்களின் உதவியை கேட்டு பெறுங்கள். விவசாயிகள் சிறப்பான வருவாயோடு காணப்படுவர். குறிப்பாக கரும்பு, எள், பயறுவகை மற்றும் பனை பொருட்களில் நல்ல லாபம் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும்.பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். அலைச்சலும் பளுவும் இருக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். பரிகாரம்: குருபகவானுக்கும் ராகுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள். ஏழைகள் படிக்கவும், வயதான மூதாட்டிகளுக்கும் உதவி செய்யலாம். மே 2011 - நவம்பர் 2011 பொருளாதார வளம் சிறப்பாகவே இருக்கும். அதேநேரம் கேதுவால் செலவுகள் அதிகரிக்கும். அவப்பெயர் மறைந்து செல்வாக்கு அதிகரிக்கும்.குடும்பத்தில் புதிய வீடு மனை வாங்கும் யோகம் கூடிவரும். கணவன்-மனைவி இடையே அன்பு நீடித்தாலும் ராகுவால் சிற்சில கருத்துவேறுபாடும், ஊடல்களும் வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். உறவினர்கள் வகையில் மனக்கசப்பு உருவாகலாம். எனவே அவர்களிடம் வாக்குவாதத்தை தவிர்க்கவும்.உத்தியோகத்தில் கடந்த காலத்தை போல் பிற்போக்கான நிலை இருக்காது. வேலையில் திருப்தி ஏற்படும். சிலருக்கு தற்காலிகமாக வெளிïர் பயணம் மேற்கொள்ள வேண்டியது இருக்கும். 2011 செப்டம்பர் முதல் டிசம்பர் வரை மட்டும் வேலையில் சற்று கவனமாக இருக்கவும்.வியாபாரத்தில் எதிரிகளின் இடைïறு இனி இருக்காது. அதே நேரம் பொருட்கள் திருட்டு போக வாய்ப்பு உண்டு. அரசு வகையில் சிற்சில பிரச்சினைகள் வரலாம். கலைஞர்களுக்கு இந்த காலம் சீராக இருக்கும். நல்ல பணப்புழக்கம் இருக்கும். அரசியல்வாதிகள் நல்ல வசதியுடன் இருப்பர். ஆனால் எதிர்பார்த்த பதவி கிடைப்பதில் தடைகள் வரலாம். மாணவர்கள் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியது இருக்கும். விவசாயிகள் நல்ல வருமானத்தை பெறலாம். கரும்பு, எள் போன்ற பயிர்களின் சிறப்பான மகசூல் கிடைக்கும். அதிக செலவு பிடிக்கும் பயிர்களை தவிர்க்கவும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். உடல் நலம் சிறப்பாக இருக்கும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும். பரிகாரம்: ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். விநாயகர் மற்றும் ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள்.
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: சனிபெயர்ச்சி பலன் 2009

Post by kirupairajah on Tue Sep 08, 2009 8:24 pm

சிவா, நீங்க மேஷ ராசி தானே

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: சனிபெயர்ச்சி பலன் 2009

Post by மீனு on Tue Sep 08, 2009 8:28 pm

உங்க ராசி சொல்லுங்க கிருபை..

மெயில் பாருங்க..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: சனிபெயர்ச்சி பலன் 2009

Post by kirupairajah on Tue Sep 08, 2009 8:29 pm

ரிஷபம்


ரிஷப ராசி அன்பர்களே நீங்கள் ஆடம்பரமாக வாழ ஆசைப்பட மாட்டீர்கள். உங்களுக்கு படிப்படியாக முன்னேற்றம் தரும் காலமாக இது அமையும். சனிபகவான் தற்போது அர்த்தாஷ்டமம் என்னும் 4-ம் இடத்தில் இருந்து 5-ம் இடத்திற்கு செல்கிறார். இது சுமாரான நிலை என்றாலும் கவலை கொள்ள வேண்டாம். சனிபகவான் 4-ம் இடத்தில் இருக்கும் போது, உங்களுக்கு பல்வேறு இடைïறை கொடுத்திருப்பார். உங்களை பல வழிகளில் அலைக்கழித்திருப்பார். தாயின் உடல் நலனும் பாதிப்படைந்து உங்களை கவலைக்குள்ளாக்கி இருக்கும். இந்த நிலையில் சனிப்பெயர்ச்சி நிகழ்கிறது. 5-ல் சனி இருக்கும் போது குடும்பத்தில் சிற்சில பிரச்சினைகளை தருவார் என்பது பொது விதி. சனி திருப்தியற்ற நிலையில் இருந்தாலும் அவரது 7 மற்றும் 10 இடத்து பார்வையும் சிறப்பாக உள்ளன. இதனால் நன்மைகள் கிடைக்கும். அதே நேரம் மற்றய கிரகங்களும் நன்மை தரலாம். மேலும் திருப்தியற்ற நிலையில் உள்ள கிரகங்கள் கெடுபலன்களை தரமுடியாது. செப்டம்பர் 2009 - ஏப்ரல் 2010 இந்த காலக்கட்ட தொடக்கத்தில் பல்வேறு சிறப்புகளை தரும். பொருளாதார வளம் நன்றாகவே இருக்கும். செலவுகளும் ஏற்படும். சிக்கனம் தேவை. உங்கள் முயற்சியில் தடைகள் வரலாம். மதிப்பு, மரியாதை சீராக இருக்கும். வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம். குடும்பத்தில் வசிதிகள் கிடைக்கும். ஆடம்பர பொருட்கள் வாங்குவதை தவிர்க்கவும். கணவன்-மனைவி இடையே கருத்துவேறுபாடு வரலாம். சிலரது குடும்பத்தில் தற்காலிகமாக பிரிவும்கூட உருவாகலாம்.உறவினர் வகையிலும் அவ்வளவு அன்னியோனியம் காணப்படவில்லை. சிலரது வீட்டில் பொருட்கள் திருட்டு போகலாம். வீடு-மனை வாங்கும் எண்ணத்தை தற்காலிகமாக ஒத்தி போடுங்கள். உத்தியோகம் பார்ப்பவர்கள் தொடக்கத்தில் சிறப்பாக இருப்பர். ஆனால் டிசம்பர் 15-ந் தேதிக்கு பிறகு வேலையில் பளு அதிகரிக்கும். அலைச்சல் கூடும். சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. ஆனால் உங்களுக்கு வர வேண்டிய பொறுப்பு தட்டி பறிக்கப்படலாம். உங்கள் வேலைகளை வேறுநபரிடம் ஒப்படைக்க வேண்டாம். யாரையும் எளிதில் நம்பி விடாதீர்கள். குருவின் பார்வை பக்க பலமாக இருப்பதால் எந்த விபரீத விளைவும் ஏற்பட்டு விடாது. வியாபாரிகள் கடந்த காலத்தில் இருந்த பின்தங்கிய நிலையில் இருந்து விடுபடுவீர்கள். பணவிஷயத்தில் சற்று கவனம் தேவை.. யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. எனவே வரவு-செலவு கணக்கை சரியாக வைத்திருக்கவும் புதிய தொழிலை இந்த காலத்தில் தொடங்க வேண்டாம். 2010 ஜனவரி10-ந் தேதி முதல் நன்மைகள் அதிகம் கிடைக்கும். கலைஞர்கள் அதிக முயற்சியின் பேரில் புதிய ஒப்பந்தம் கிடைக்க பெறுவர். அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் சுமாரான நிலையில் இருப்பர். எதிர்பாÖத்த பதவி கிடைக்காமல் போகலாம். மாணவர் கள் குருவின் பார்வை சிறப்பாக இருப்பதால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும்.விவசாயத்தில் அதிக செலவு பிடிக்கும் பயிர்களை தவிர்க்கவும். கால்நடை வளர்ப்பவர்களும் நல்ல பலனை காணலாம். பெண்கள் சீரான நிலையில் இருப்பர். அண்டை வீட்டாரிடம் வளவள பேச்சு வேண்டாம். உடல்நலம் சிறப்பாக இருக்கும். நெருப்பு தொடர்பான வேலையில் இருப்பவர்கள் சற்று கவனமாக இருக்கவும். பரிகாரம்: நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். பத்திரகாளி அம்மன் வழிபாடு நன்மையை தரும். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்குங்கள். சன்னியாசிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். மே 2010 - ஏப்ரல் 2011 பொருளாதார வளம் மேம்படும். தடைகளை எளிதில் முறியடித்து எடுத்த காரியத்தில் வெற்றி காண்பீர்கள். மதிப்பு-மரியாதை அதிகரிக்கும். உங்கள் அவப்பெயர் மறைந்து செல்வாக்கு

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: சனிபெயர்ச்சி பலன் 2009

Post by kirupairajah on Tue Sep 08, 2009 8:30 pm

அதிகரிக்கும். வீட்டில் கடந்த காலத்தில் இருந்து வந்த பிணக்குகள் குறையும். அதே நேரம் சனியும் ராகுவும் சாதகமாக இல்லாததால் தம்பதியர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போவது நல்லது. சிலர் புதிய வீடு வாங்குவர். அல்லது வசதியான வீட்டிற்கு குடிபுகலாம். இதுவரை தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். குழந்தை பாக்கியம் பெறுவர்.உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு பின்தங்கிய நிலை ஏற்?டும். புதிய பதவி வர வாய்ப்பு உண்டு. சம்பள உயர்வு வரும். சிலர் முக்கிய பொறுப்பு கிடைக்க பெறுவர். ஏதோ காரணத்தால் வேலையை இழந்தவர்கள் மீண்டும வேலை கிடைக்க பெறுவர். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. ஆகஸ்டு முதல் நவம்பர் வரை சற்று கவனமாக இருக்கவும்.வியாபாரிகள் பணப்புழக்கம் அதிகரிக்கும். 2011 ஜனவரிக்கு பிறகு சனி வக்கிரம் அடைவதால் கூடுதல் பலன்கள் கிடைக்கும். அரசு வகையில் தொடர்ந்து அனுகூலம் காணப்படவில்லை. எதிரிகள் வகையிலும் ஒரு கண் இருப்பது நல்லது. கலைஞர்கள் புத்துணர்ச்சி பெறுவர். புதிய ஒப்பந்தம் தாராளமாக வரும். அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் இதுவரை இருந்து வந்த தடை- தோல்வி இனி இருக்காது. மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் முன்னேற்றமான பலனை காணலாம். வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பும் சிலர் பெறலாம்.விவசாயிகள் சற்று முயற்சி எடுத்து புதிய சொத்துக்களை வாங்கலாம். பெண்கள் முன்னேற்றம் அடைவர். குழந்தை பாக்கியம் சிலருக்கு கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். கேதுவால் நெருப்பு தொடர்பான சிற்சில பிரச்சினைகள் வரலாம். பரிகாரம்: சனிக்கிழமைகளில் ஏதாவது கோவிலுக்கு சென்று சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றி வழிபட்டு வாருங்கள். சந்தர்ப்பம் கிடைக்கும்போது யானைக்கு கரும்பு கொடுங்கள். மே 2011 - நவம்பர் 2011 காரிய அணுகூலம் முயற்சியின் பேரில்தான் நிறைவேறும். எதையும் பெரியோர்களின் ஆலோசனையை கேட்டு செயல்படுத்துவது நல்லது. மதிப்பு, மரியாதை முன்புபோல் இல்லாவிட்டாலும் உங்கள் செல்வாக்குக்கு பங்கம் வராது. கணவன்-மனைவி அவ்வப்போது கருத்துவேறுபாடு வரத்தான் செய்யும். பொறுமையும் விட்டுக் கொடுக்கும் தன்மையும் தேவை. வீடு மனை வாங்க யோகம் தள்ளிபோகலாம். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதப்படலாம். தூரத்து உறவினர் வகையில் இருந்து துக்ககரமான செய்தி வரலாம். திருட்டு சம்பவம் அடியோடு மறையும்.உத்தியோகத்தில் வேலைப்பளு அதிகரிக்கும். நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைப்பதில் தாமதம் ஏற்படலாம். சிலர் திடீர் இடமாற்றத்தை சந்திக்கலாம். வியாபாரத்தில் புதிய தொழில் தொடங்க தற்போது சிறப்பான நேரம் அல்ல. ஆனால் அதிக முதல் போடாமல் சிறு தொழில் தொடங்குவதில் எந்த தவறும் இல்லை. அரசு வகையில் இருந்த பிரச்சினை இனி இருக்காது. சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகலாம். யாரிடமும் கவனமுடன் பழகவும்.வழக்கு விவகாரங்கள் சுமாராகவே இருக்கும். கலைஞர்கள் சுமாரான பலனை காணலாம். சமுக நல சேவகர்கள் அதிக முயற்சி மேற்கொள்ள வேண்டியதிருக்கும். மாணவர்கள் மிகவும் சிரத்தை எடுத்து படிப்பது நல்லது. . பெண்கள் சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும். அக்கம்பக்கத்தினரிடம் வீண் வாக்குவாதம் வேண்டாம். பிள்ளைகள் வகையில் பெருமையும், மகிழ்ச்சியும் அடைவர். உடல்நலம் சீராக இருக்கும். நெருப்பு தொடர்பான உபாதை இனி இருக்காது. பரிகாரம்: எல்லா கிரகங்களும் சாதகமாக இல்லாததால் சந்தர்ப்பம் கிடைக்கும் போது நவக்கிரகங்களை சுற்றி வரவும். விநாயகர் வழிபாடு முன்னேற்றத்திற்கு வழிவகுக்கும்

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: சனிபெயர்ச்சி பலன் 2009

Post by சிவா on Tue Sep 08, 2009 8:30 pm

@kirupairajah wrote:சிவா, நீங்க மேஷ ராசி தானே
மகரம் கிருபை
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: சனிபெயர்ச்சி பலன் 2009

Post by kirupairajah on Tue Sep 08, 2009 8:30 pm

meenuga wrote:உங்க ராசி சொல்லுங்க கிருபை..

மெயில் பாருங்க..

நான் துலா ராசி

kirupairajah
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4621
மதிப்பீடுகள் : 120

View user profile

Back to top Go down

Re: சனிபெயர்ச்சி பலன் 2009

Post by மீனு on Tue Sep 08, 2009 8:34 pm

மிதுனம்:


மிதுன ராசி அன்பர்களே உங்கள் பேச்சில் சாமர்த்தி யம் காணப்படும். இதுவரை சனிபகவான். மூன்றாம் இடமான சிம்மத்தில் இருந்து உங் களுக்கு பல்வேறு நன்மைகளை தந்து கொண்டிருந்தார். குறிப்பாக பொருளாதார வளத்தை கொடுத்து உங்களை முன்னேற்ற பாதைக்கு அழைத்து சென்றிருப்பார். எடுத்த காரியம் அனைத்தும் வெற்றிகரமாக முடிந்திருக்கும். தொழில் நல்ல முன்னேற்றம் கண்டிருக்க வேண்டும். இந்த நிலையில் சனிபகவான் தற்போது 4-ம் இடமான கன்னிக்கு அடியெடுத்து வைக்கிறார். இது அவ்வளவு சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. பொதுவாக 4-ம் இடத்தில் இருக்கும் போது சனிபகவான் குடும்பத்தில் வீண்விரோதத்தை கொடுப்பார். ஊர் விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். தாயை பிரிந்து செல்லும் நிலை ஏற்படலாம்.- இவை எல்லாம் பொதுவான பலன். இதைக்கண்டு அஞ்ச வேண்டாம். சனி சாதகமற்ற இடத்தில் இருந்தாலும் அவரது 3-ம் இடத்துப்பார்வை மிகச்சிறப்பான இடத்தில் விழுகிறது. இது மிக உகந்த நிலை. செப்டம்பர் 2009 - ஏப்ரல் 2010 உங்கள் முயற்சியில் சிற்சில தடைகள் வரலாம். ஆனாலும் எளிதில் முறியடிக்கலாம். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பு, மரியாதை சிறப்படையும். உங்கள் மீதான பொல்லாப்பு மறையும். ராகு சிறப்பாக இல்லாததால் சிற்சில கருத்துவேறுபாடு வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். புதிய வீடு மனை வாங்கும் யோகம் உண்டு. ஆனால் அதற்காக கடன் வாங்க நேரிடலாம். வீட்டில் நிகழும் திருட்டு சம்பவங்கள் அனைத்தும் நவம்பர் மாதம் முதல் அடியோடு மறையும்.உத்தியோகத்தில் இருப்பவர்கள் வேலையில் திருப்தி காண்பீர்கள். மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். சிலருக்கு விரும்பிய இடமாற்றம் கிடைக்கும். அரசு ஊழியர்கள் சற்று கவனமாக இருக்கவும். ஆனாலும் சக ஊழியர்கள் உறுதுணையாக இருப்பர். வியாபாரிகள் தொடக்கத்தில் சற்று மந்த நிலையில் இருந்தாலும் டிசம்பருக்கு பிறகு முன்னேற்றம் ஆரம்பிக்கும். லாபம் அதிகரிக்க தொடங்கும். எதிரிகள் வகையில் சற்று கவனம் தேவை. அரசு வகையில் அனுகூலமான போக்கு காணப்படவில்லை. பொருள் விரயம், பணம் மாயம் போன்ற சம்பவங்கள் நவம்பருக்கு பிறகு இருக்காது.கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். போட்டி கடுமையாக இருந்தாலும் அதில் வெற்றி காண்பர். அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் புதிய பதவி கிடைக்கப்பெறுவர்.மாணவர்கள் இந்த கல்வி ஆண்டில் நல்ல மதிப்பெண் கிடைக்கும். விவசாயிகள் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஆனால் அதற்கு ஏற்ப வருமானம் கிடைக்காமல் போகாது. வழக்கு விவகாரங்கள் சீராக இருக்கும். புதிய வழக்கு எதிலும் சிக்க வேண்டாம்.பெண்கள் உற்சாகமாக காணப்படுவர். குழந்தைகளால் பெருமை காண்பீர்கள். விருந்துவிழா என சென்று வருவீர்கள். குடுபத்தினரிடம் சற்று விட்டுக் கொடுத்து போகவேண்டும். உடல் நலனை பொறுத்தவரை சிலர் வீண் மனஉளைச்சலில் இருப்பர். நெருப்பு தொடர்பான உபாதைகள் பூரண குணம் அடையும். பரிகாரம்: சனிக்கிழமை தோறும் ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள். ஊனமுற்றவர்களுக்கும் கணவரை இழந்து தவிக்கும் பெண்களுக்கும் இயன்ற உதவியை செய்யுங்கள். பாம்பு புற்றுக்கு பால் ஊற்றலாம். மே 2010 - ஏப்ரல் 2011 பொருளாதார நிலையில் முன்பு போல் இல்லாவிட்டாலும் தேவையை பூர்த்தி செய்யும் அளவுக்கு பண வரவு இருக்கும். செலவுகள் அதிகரிக்கும். சிக்கனத்தை கடைபிடிப்பது நல்லது. ஜனவரிக்கு பிறகு நல்ல பணப்புழக்கம் இருக்கும். உங்கள் முயற்சியில் தடைகள் வரலாம். முக்கிய காரியங்களை குடும்ப பெரியோர்களின் ஆலோசனையின் பேரில் நிறைவேற்றவும். மதிப்பு, மரியாதை சுமாராக இருக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தடைபடலாம். குருவின் வக்கிர காலமான ஆகஸ்டு முதல் டிசம்பருக்குள் கைகூடலாம். கணவன்-மனைவி இடையே பிணக்குகள் அவ்வப்போது தலைதூக்கும். உறவினர்கள் வகையில் வாக்குவாதத்தை தவிர்க்கவும். உத்தியோகத்தில் கடந்த காலத்தைவிட அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். மேல் அதிகாரிகளை அனுசரித்து போகவும். வியாபாரத்தில் அலைச்சலும் பளுவும் இருக்கும். எதிர்பார்த்த வருமானம் கிடைக்காமல் போகலாம். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். ஜனவரிக்கு பிறகு நிலைமை மேம்படும்.கலைஞர்கள்: சுமாரான நிலையில் இருப்பர். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் எதிர்பார்த்த பதவி பொறுப்பு கிடைக்காது. வக்கீல்கள், எழுத்தாளர்கள் போன்றோரும் சுமாரான பலனை பெறுவர். கூலி வேலை செய்பவர்கள் மனமகிழ்ச்சியுடன் காணப்படுவர். சேமிப்பு இருக்கும். மாணவர்கள் விரும்பிய பாடம் கிடைக்க பெறலாம். பெண்கள் சிற்சில விஷயங்களில் விட்டுக் கொடுத்து போகவேண்டும். உடல்நலம் சுமாராக இருக்கும். தாயாரின் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டியது வரும். பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணா மூர்த்திக்கு மஞ்சள் நிற மலர் மாலை அணிவித்து வழிபாடு நடத்துங்கள். பத்திரகாளி அம்மனையும் வழிபட்டு வாருங்கள். ஊனமுற்றவர்களுக்கு தொடர்ந்து உதவி செய்யுங்கள். மே2011 - நவம்பர்2011 பொருளாதார வளம் அதிகரிக்கும். உங்கள் முயற்சியில் தடைகள் அனைத்தும் மறையும். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். செல்வாக்கு அதிகரிக்கும்.கணவன்-மனைவி இடையே இருந்து வந்த பிணக்குகள் மறையும். கருத்துவேறுபாடு காரணமாக பிரிந்து இருந்தவர்கள் ஒன்று சேருவர். உறவினர்கள் மத்தியில் இருந்து வந்த பிரச்சினைகள் மறையும். தடைப்பட்டு வந்த திருமணம் கைகூடும். புதிய வாகனம் வாங்கலாம். உத்தியோகம் வேலையில் ஆர்வம் பிறக்கும். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். வேலை இன்றி இருப்பவர்களுக்கு இந்த காலத்தில் வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு. அரசு ஊழியர்கள் மேம்பாடு காண்பர்.வியாபாரிகள் முன்னேற்றம் காண்பர். இதுவரை நஷ்டத்தில் தவித்து கொண்டு இருந்தவர்கள் அதில் இருந்து விடுபட்டு தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி பணத்தை விரயமாக்கியவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். புதிய தொழில் தொடங்கலாம். அரசின் உதவிகள் கிடைக்கும்..செலவு அதிகரிக்கும். கலைஞர்களுக்கு பாராட்டு விருது போன்றவை கிடைக்க வாய்ப்பு உண்டு. அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் செல்வாக்குடன் இருப்பர். எழுத்தாளர்கள், வக்கீல்கள் போன்றோர் சிறப்பான பலனை காண்பர். மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் சற்று முயற்சி செய்தால் வெளிநாடு சென்று படிக்கலாம். விவசாயிகள் நல்ல வளத்தை காணலாம். சிலர் புதிய சொத்து வாங்குவர். வழக்கு விவகாரங்கள் எதிர்பார்த்த படி அமையும். இழந்த சொத்து மீண்டும் கிடைக்கும்.பெண்கள் முன்னேற்றமான பலனை காண்பர். கணவர் மற்றும் குடும்பத்தார் உங்களை மெச்சுவர். உடல் நலம் சுமாராக இருக்கும். பித்தம் போன்ற சிறுசிறு பாதிப்புகள் வரலாம். தாயாரின் உடல்நலனில் படிப்படியாக முன்னேற்றம் தெரியும். பரிகாரம்: சனி உங்களுக்கு சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அவருக்கு தொடர்ந்து அர்ச்சனை செய்யுங்கள். மேலும். ஞானிகளை சந்தித்து அவர்களுக்கு காணிக்கை செலுத்தி ஆசி பெறுங்கள்.
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: சனிபெயர்ச்சி பலன் 2009

Post by மீனு on Tue Sep 08, 2009 8:55 pm

கடகம்


கடக ராசி அன்பர்களே குடும்பத்தாரிடம் அளவுக்கு அதிகமாக பாசம் வைத்திருக்கும் நீங்கள் சாமர்த்தியமாக பேசும் திறமை படைத்தவர்கள். உங்களுக்கு இது மிக சிறப்பான காலம். ஏழரை சனியின் பிடியில் இருந்து பூரணமாக விடுபட்டு விட்டீர்கள். சனிப்பெயர்ச்சி பல்வேறு முன்னேற்றங்களை தர உள்ளது. ஏழரை சனி காலத்தில் நீங்கள் பட்ட துன்பங்கள் கணக்கில் அடங்காது. தொட்டதெல்லாம் தோல்வி என்ற நிலையே ஏற்பட்டு இருக்கும். குடும்பத்திலும் பல்வேறு பிரச்சினைகள் தலைதூக்கி இருக்கும். சிலர் குடும்பத்தை விட்டே பிரிந்து சென்றிருக்க கூடும். வீட்டில் அடிக்கடி பொருட்கள் கூட களவு போயிருக்க வாய்ப்பு உண்டு. இந்த நிலையில் இப்போது சனிபகவான் 3-ம் இடமான கன்னிக்கு மாறுகிறார். இது உன்னத நிலை. அவர் உங்கள் முயற்சிகள் அனைத்தையும் வெற்றி அடைய செய்வார். பொருளாதார வளத்தை மேம்படுத்துவார். தொழிலில் சிறந்தோங்க செய்வார். செப்டம்பர் 2009 - ஏப்ரல் 2010 தொடக்க காலத்தில் சனியின் பலத்தால் நல்ல பொருளாதார வளத்தை காணலாம். பின்னர் ராகுவும் சாதகமான இடத்துக்கு வந்து மேலும் நன்மை தருவார்கள். இதனால் இது ஒரு பொற்காலமாக அமையும். எந்த ஒரு காரியத்தையும் கச்சிதமாக செய்து முடிப்பீர்கள். தேவைகள் பூர்த்தி ஆகும். ஆடம்பர பொருட்களை வாங்கி குவிப்பீர்கள். மதிப்பு, மரியாதை சீராக இருக்கும். வீண்விவாதங்களை தவிர்க்கவும். குடும்பத்தில் டிசம்பர் வரை குதூகலம் அதிகம் இருக்கும் திருமணம் போன்ற சுப காரியங்கள் நடக்கும். அதன்பின் நற்காரியங்கள் தள்ளி போகலாம். கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும். உறவினர்கள் மத்தியில் வீண் விரோதம் ஏற்பட வாய்ப்பு உண்டு. எனவே யாரிடமும் அளவாக பேசி உறவை வலுப்படுத்திக் கொள்ளவும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். சிலருக்கு வீடு கட்டும் யோகம் வரும். புதிய வாகனம் வாங்கலாம்.உத்தியோகம் பார்ப்பவர்கள் டிசம்பர் வரை சிறப்பான பலனை பெறலாம். மேல் அதிகாரிகளின் ஆதரவோடு முன்னேற்றம் காண்பீர்கள். அதன்பின் வேலைப்பளு அதிகமாக இருக்கும். அலைச்சல் கூடும்.வியாபாரம் சிறப்படையும். புதிய வியாபாரம் நல்ல லாபத்தை தரும். அரசு வகையில் எதிர்பார்த்த அனுகூலம் கிடைக்கும்.
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: சனிபெயர்ச்சி பலன் 2009

Post by மீனு on Tue Sep 08, 2009 8:56 pm

இரும்பு வியாபாரம், தரகு போன்ற தொழில் நல்ல வளர்ச்சி அடையும். வேலையின்றி இருப்பவர்கள் சுய தொழிலில் இறங்கலாம். கலைஞர்கள் விடா முயற்சியோடு உழைத்து வெற்றி காண்பீர்கள். எதிர்பார்த்த விருது, பாராட்டு போன்றவை கிடைப்பதில் தாமதமாகும். பணப்புழக்கம் அதிகரிக்கும். அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் நல்ல வளமாக காணப்படுவர். மாணவர்களுக்கு விரும்பிய பாடம் கிடைக்க அதிகமாக முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும். ஆனாலும் குருவின் பார்வை சாதகமாக இருப்பதால் பாதிப்புக்கு உள்ளாகும் நிலை ஏற்படாது. விவசாயம் புதிய சொத்து வாங்கலாம். நவீன விவசாயத்தை பயன்படுத்தி முன்னேறுவர். கூலி தொழிலாளர்கள் பணச் செழிப்புடன் இருப்பர். சுய தொழிலில் ஈடுபடுபவர்கள் அதை விரிவு படுத்தலாம். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். பெண்கள் குதூகல நிலையிலே இருப்பர். பிள்ளைகள் நலனில் தனி அக்கறை காட்டவும். அக்கம் பக்கத்தாரிடம் அனாவசிய பேச்சை தவிர்க்கவும்.. பிறந்த வீட்டில் இருந்து எந்த வரவையும் எதிர்பார்க்க முடியாது.உடல்நலம் சுமாராக இருக்கும். கேதுவால் சிறு உபாதைகள் வந்தாலும் பாதகம் இருக்காது. பரிகாரம்: குருவுக்கு மஞ்சள் வஸ்திரம் சாத்தி அர்ச்சனை செய்யலாம். கேதுவுக்கும் அர்ச்சனை செய்யுங்கள் ஆசிரியர்கள், ஞானிகள். சன்னியாசிகள் ஆகியோருக்கு இயன்ற உதவி செய்யுங்கள் மே2010 - ஏப்ரல்2011 இந்த காலம் மேலும் சிறப்பானதாக அமையும். காரிய அனுகூலங்கள் ஏற்படும். பணவிரயம் மறைந்து பொருளாதாரவளம் பெருகும். மதிப்பு, மரியாதை அதிகரிக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். உங்கள் மீதான பொல்லாப்பு மறையும். கடந்த சில மாதங்களாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். குருவின் வக்கிர காலமான ஆகஸ்டு முதல் நவம்பர் வரை சுப நிகழ்ச்சிகளை தவிர்க்கலாம். குழந்தை பாக்கியம் கிடைக்கப் பெறுவர். உறவினர்கள் உதவிகரமாக இருப்பர். உத்தியோகம் கடந்த சில மாதங்களாக நீங்கள் அனுபவித்த பிரச்சினைக்கு முடிவு ஏற்படும். விரும்பிய இடத்திற்கு மாற்றம் கிடைக்கும்.சிலருக்கு முக்கிய பொறுப்பு கிடைக்கும். படித்துவிட்டு வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும். வியாபாரிகள் புதிய தொழில் அனுகூலத்தை தரும். லாபம் அதிகரிக்கும். சேமிப்பு அதிகரிக்கும். வேலை இன்றி இருப்பவர்கள் குறைந்த முதலீட்டில் புதிய தொழில் தொடங்கலாம். ஜனவரிக்குள் தொடங்குவது நல்லது. கலைஞர்களுக்கு புகழ், பாராட்டு கிடைக்கும். அரசியல்வாதிகள் சமூகநல சேவகர்கள் மேம்பாடு காண்பர். மாணவர்கள் கடந்த ஆண்டைவிட நல்ல மதிப்பெண் பெறலாம். விவசாயத்தில் கால்நடை செல்வம் பெருகும். பெண்கள் முன்னேற்றம் காண்பர். கணவரின் அன்பு கிடைக்கும். பெற்றோர் வீட்டில் இருந்து பொருள்கள் கிடைக்கும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். உடல்நலம் சுமாராக இருக்கும். பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் வரலாம். பரிகாரம்: பாம்பு புற்றுள்ள கோவிலுக்கு சென்று பால் ஊற்றுங்கள் மேலும் சன்னியாசிகளுக்கும் இயன்ற உதவி செய்யலாம். இதனால் நன்மைகள் மேலும் அதிகரிக்கும். மே 2011 - நவம்பர் 2011 காரிய அனுகூலம் ஏற்படும். சில தடைகள் வந்தாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள். வீண்விவாதங்களை தவிர்க்கவும். கணவன்-மனைவி இடையே அவ்வப்போது பிணக்குகள் வரலாம். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தடைபடலாம். சற்று முயற்சி செய்தால் நவம்பர், டிசம்பர் மாதங்களில் சுபங்கள் கைகூடலாம்.உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்புபோல் உற்சாக பலனை எதிர்பார்க்க முடியாது. வேலைப்பளு அதிகரிக்கும். விருப்பம் இல்லாத இடத்திற்கு மாற்றம் ஏற்படலாம். வியாபாரம் லாபம் கிடைக்கும். அதேநேரம் செலவும் அதிகரிக்கும். புதிய வியாபாரம் சிறப்பை தரும். பொருள் இழப்பு இருக்காது. பழைய கழிவு பொருட்கள் தொடர்பான தொழில் மற்றும் இரும்பு தொடர்பான தொழில் சிறப்பாக நடைபெறும்.கலைஞர்கள் சிரத்தை எடுத்தால்தான் ஒப்பந்தங்கள் கிடைக்கும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான பலனை காண்பர். மாணவர்கள் சிலருக்கு விரும்பிய பாடம் கிடைக்காமல் போகலாம். விவசாயத்தில் அதிக உடல்உழைப்பை சிந்த வேண்டியதிருக்கும. கரும்பு, எள், பனை தொழில் மற்றும் மானாவாரி பயிர்களில் அதிக மகசூல் கிடைக்கும்.பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வர். உடல்நலம் பித்தம் மயக்கம் போன்ற உபாதைகள் பூரண குணம் அடையும். வீண் மனஉளைச்சல் இருக்கலாம். பரிகாரம்: வியாழக்கிழமை கொண்டக்கடலை தானம் செய்யலாம். ராகுவுக்கும் அர்ச்சனை செய்து கணவரை இழந்த மூதாட்டிகளுக்கு உதவி செய்யுங்கள். எந்த துறையில் இருந்தாலும் அதில் தனித்திறமை காட்டும் சிம்ம ராசி அன்பர்களே ஏழரை சனியின் பிடியில் சிக்கியுள்ள நீங்கள் கடந்த சில ஆண்டுகளாகத்தான் அளவுக்கு அதிகமான சிக்கலையும் பிரச்சினைகளையும் சந்தித்து வந்திருப்பீர்கள். அதற்கு காரணம் சனி உங்கள் ராசியில் இருந்தது தான். அவர் அதிக அலைச்சலை உருவாக்கி இருப்பார். வேலைப்பளு அதிகமாக இருந்திருக்கும். உறவினர்கள் வகையில் அனுகூலமான போக்கு இருந்திருக்காது. உங்கள் உதவியை நாடி வந்திருப்பார்களே தவிர உங்களுக்கு எந்த உதவியும் செய்திருக்க மாட்டார்கள். சிலர் வேலை நிமித்தமாக குடும்பத்தை விட்டு பிரிந்து சென்றிருக்க வேண்டியதிருக்கும்.இப்படிப்பட்ட சூழ்நிலையில் சனிபகவான் உங்கள் ராசியில் இருந்து 2-ம் இடமான கன்னிக்கு மாறுகிறார். இதுவும் சிறப்பான இடம் அல்ல. ஏழரை சனி காலம் இன்னும் இரண்டரை ஆண்டு காலம் தொடரும். சனி 2-ம் இடத்தில் இருக்கும் போது குடும்பத்தில் பிரச்சினைகளை உருவாக்குவார். பொருட்களை களவு கொடுக்க நேரிடும். பொருளாதார இழப்பு ஏற்படும்.-இது பொதுவான விதி. ஆனால் மற்றய கிரகங்களின் நிலையை ஆராய்ந்து பார்த்தால் வரும் இரண்டரை ஆண்டு காலம் கொடுமையாக அமையாது. காரணம் இது ஏழரை சனியின் இறுதிகட்டம். இந்த காலக்கட்டத்தில் சனி அதிக பளுவை கொடுத்தாலும், அதற்கான பலனையும் தர தயங்க மாட்டார். மேலும் சனிபகவானின் 10-ம்இடத்துப் பார்வை உங்களுக்கு சிறப்பாக அமைந்து உள்ளது. அதன் மூலம் நற்பலன்கள் கிடைக்கும்.
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: சனிபெயர்ச்சி பலன் 2009

Post by மீனு on Tue Sep 08, 2009 9:13 pm

மன்னிக்கவும் சிம்ம ராசி பலன்கள் தற்சமயம் தர முடியாம உள்ளது ....

Anbudan meenuga..
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: சனிபெயர்ச்சி பலன் 2009

Post by மீனு on Tue Sep 08, 2009 9:15 pm

கன்னி


கன்னி ராசி அன்பர்களே மென்மை யான அணுகு முறையை கொண்ட உங்களுக்கு சனிபகவான் நல்லது தரும் காலம் அல்ல. கடந்த சில ஆண்டுகளாகவே சனி பகவானால் நீங்கள் எண்ணற்ற இடர்பாடுகளை சந்தித்து வந்திருப்பீர்கள். குறிப்பாக பொருள் நாசம், வீண்அலைச்சல், காரியம் கைகூடாமை, மனஉளைச்சல் போன்ற இன்னல்கள் ஏற்?ட்டிருக்கலாம். இந்த நிலையில் இப்போது சனிப் பெயர்ச்சி நிகழ்கிறது. சனிபகவான் 12-ம் இடத்தில் இருந்து உங்கள் ராசிக்கு வருகிறார். இது ஏழரை சனியின் உச்சக்கட்டம். அதற்காக கவலை கொள்ள வேண்டாம். பொதுவாக சனி உங்கள் ராசியில் இருக்கும் இரண்டரை ஆண்டு காலம் உடல் உபாதைகள் பாதிக்கப்படலாம், உறவினர்கள் வகையில் வீண்மனக்கசப்பு வரலாம். வெளிïர் அலைச்சல் இருக்கும். என்று ஜோதிடம் கூறுகிறது. அதைக்கண்டு அஞ்ச வேண்டாம். மற்ற கிரகங்களால் நன்மை கிடைக்கும். சனிபகவான் 3-ம் இடத்துப்பார்வை சிறப்பாக அமைந்துள்ளது. செப்டம்பர் 2009 - ஏப்ரல் 2010 இந்த காலகட்டத்தின் தொடக்கத்தில் சிறப்பான பலன்கள் கிடைக்கும். முக்கிய காரியங்களை டிசம்பருக்குள் செயல்படுத்துங்கள். அதில் வெற்றி கண்டுவிடலாம். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். டிசம்பருக்கு பின் வீண்விவாதங்களை தவிர்க்கவும்.குடும்பத்தில்சீரான வசதி இருக்கும். தம்பதியினரிடையே அன்பு நீடிக்கும். கணவன்-மனைவி இடையே இருந்து வந்த பிரச்சினை அக்டோபர் 27-க்கு பிறகு சுமூக நிலைக்கு வந்துவிடும். உறவினர்கள் வகையில் அனுகூலமான போக்கு காணப்படுகிறது. திருமணம் போன்ற சுப காரியங்கள் டிசம்பருக்குள் நடைபெறும். அதன்பின் தடைகள் வரலாம். உத்தியோகம் பார்ப்பவர்கள் முக்கிய கோரிக்கைகளை டிசம்பருக்குள் நிறைவேற்றி கொள்ளுங்கள். சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. ஆனால் நீங்கள் எதிர்பார்த்த பதவி உயர்வு கிடைக்காமல் போகலாம். வியாபாரிகள்: அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். கூட்டாளிகள் யாரையும் நம்பி விட வேண்டாம். புதிய தொழில் தற்போது தொடங்க வேண்டாம். எதையும் ஒன்றுக்கு 10 முறை சிந்தித்து செயல்படுத்துவது நல்லது. குருவின் 9-ம் இடத்துப்பார்வையும் சனியின் 3-ம் இடத்துப் பார்வையும் சிறப்பாக அமைந்திருப்பதால் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்படமாட்டீர்கள். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற்று முன்னேற்றம் காணலாம். டிசம்பருக்கு பிறகு சிரத்தை எடுத்தே முன்னேற வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள் மற்றும் பொது நல ஊழியர்கள் பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும். மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு சுமாரான காலம்தான். குருவின் பார்வை சிறப்பாக அமைந்திருப்பதால் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்காமல் போகாது. விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற பலனை தான் பெற முடியும். சிலர் அதை விட குறைவான வருமானம் கூட காணலாம். சிறு தொழில் செய்பவர்கள் சீரான வருமானம் காணலாம். வழக்கு விவகாரங்கள் சுமாராக இருக்கும். தீர்ப்பு பாதகமாகவும் அமைய வாய்ப்பு உண்டு. பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். ஆடம்பர செலவை குறைப்பது புத்திசாலித்தனம்.உடல்நலம் சுமாராக இருக்கும். பித்தம், மயக்கம் மற்றும் கண் தொடர்பான உபாதைகள் வரலாம். பரிகாரம்: சனிபகவானை சனிப்பெயர்ச்சி நாளில் வணங்குங்கள் மேலும் ஆஞ்சநேயரை வழிபட்டு வாருங்கள். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு முல்லை மாலை அணிவித்து வணங்குங்கள். மே 2010 - ஏப்ரல் 2011 தேவைகள் பூர்த்தியாகும். வீடு மனை வாங்க யோகம் கூடி வரும். வாகனங்கள் வாங்கலாம். ஆனால் அதற்காக கடன் வாங்க வேண்டிய நிலை உருவாகலாம். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். எடுத்த காரியம் அனுகூலம் ஆகும். தம்பதியினரிடையே ஒற்றுமை மேலோங்கும். உறவினர்கள் உங்களை நாடி வருவர். தடைப்பட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். குழந்தை பாக்கியம் கிட்டும்.உத்தியோகம். கடந்த ஓராண்டாக வேலையில் இருந்த பிரச்சினைக்கு விடிவு ஏற்படும். வேலையில் ஒரு தன்னம்பிக்கை பிறக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்கும்.வியாபாரம் சிறப்படையும். இது ஏழரை சனி காலம் என்பதால் எதிலும் அதிக முதலீடு போடவேண்டாம். எதிரிகள் தொல்லை இருக்கத்தான் செய்யும். கலைஞர்கள் வசதியுடன் வாழ்வர் புகழ் பாராட்டு வரும். சிலர் அரசிடம் இருந்து விருது பெறவாய்ப்பு உண்டு. அரசியல்வாதிகள் மேம்பாடு அடைவர். பதவியும் பணமும் கிடைக்கும். மாணவர்கள் மேல்படிப்பில் விரும்பிய பாடம் கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்பை பெறுவர். விவசாயம் சிறப்படையும். நெல், சோளம் போன்ற வகைகளில் அதிக மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். பெண்கள் கணவரின் அன்பு கிடைக்கும், வேலைக்கு செல்லும் பெண்கள் சிறப்பான வளர்ச்சியை காண்பீர்கள்.உடல் நலம்: சீராக இருக்கும். தாயாரின் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டியது வரும். பரிகாரம்: துர்க்கை வழிபாடு நடத்துங்கள்.ராகு காலத்தில் நடக்கும் பைரவர் பூஜையில் கலந்து கொள்ளவும். காக்கைக்கு அன்னமிட்டு சாப்பிடுங்கள். மே 2011-நவம்பர் 2011 பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். மதிப்பு மரியாதை சுமாராக இருக்கும். வீண்விவாதங்களை தவிர்க்கவும். ஆடம்பரச் செலவுகளை தவிர்க்கவும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் முன்பு போல் அவ்வளவு எளிதாக நடக்காது. சற்று சிரத்தை எடுத்தால் நடக்கும். குறிப்பாக நவம்பர், டிசம்பர் மாதங்களில் கைகூடும். கணவன்-மனைவி இடையே அன்பு நீடிக்கும்.உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு கடந்த காலம் போல் அனுகூலமாக இருக்காது. வேலைப்பளு அதிகரிக்கும். குருவின் பார்வை பக்க பலமாக இருப்பதாலும் நிலைமை சீராக இருக்கும்.வியாபாரத்தில் உழைப்புக்கு தகுந்த பணவரவு இருக்கும். அரசு வகையில் எதிர்பார்த்த உதவி கிடைப்பது அரிது. எதிலும் அதிக முதலீடு போட வேண்டாம்.கலைஞர்கள் எதிர்பார்த்த அனுகூலங்கள் கிடைக்க தாமதம் ஆகலாம். அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் சுமாரான நிலையில் இருப்பர். மாணவர்கள் இந்த ஆண்டு அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டும் விவசாயிகள் கால்நடை வளர்ப்பவர்களும் ஓரளவு பலனை காணலாம். வழக்கு விவகாரங்கள் சுமாராகவே உள்ளது. பெண்கள் முன்னேற்றம் அடைவர். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். பித்தம், மயக்கம் போன்ற உபாதைகள் குணம் அடையும். மருத்துவச் செலவு குறையும். பரிகாரம்: ஊனமுற்றவர்களுக்கு இயன்ற உதவியை செய்யவும். சன்னியாசிகளுக்கு காணிக்கை கொடுத்து ஆசி பெறவும். ஏழைகள் படிக்க உதவி செய்யவும்.
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: சனிபெயர்ச்சி பலன் 2009

Post by மீனு on Tue Sep 08, 2009 9:16 pm

துலாம்


துலாம் ராசி அன்பர்களே யாரிடமும் அதிகமாக நெருங்கி பழக மாட்டீர்கள். அனாவசியமாக யார் விஷயத் திலும் தலையிட மாட்டீர்கள். சனிபகவான் இதுவரை 11-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மை தந்தார். செய்தொழில் மூலம் சிறப்பாக வருமானம் பெற்றிருக்கலாம். வீட்டில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் இருந்திருக்கும். பொன் பொருள் என வாங்கி இருப்பீர்கள். இப்போது சனி 11-ம் இடத்தில் இருந்து 12-ம் இடத்திற்கு செல்கிறார். இனிமேல் அவரால் முன்புபோல் நற்பலனை எதிர்பார்க்க முடியாது. இது உங்களுக்கு ஏழரை சனி ஆரம்ப காலம். சனி 12-ம் இடத்தில் இருக்கும் போது பொருளாதார இழப்பு வரலாம். வெளிïர் பயணம் ஏற்படும். எதிரிகளின் இடைïறு அவ்வப்போது வரலாம் என்பது ஜோதிட வாக்கு.இப்படிப்பட்ட பிற்போக்கான பலனை கண்டு அஞ்ச வேண்டாம். காரணம் சனி சாதகமற்ற நிலையில் இருந்தாலும் சனியின் 7-ம் இடத்து பார்வை 6-ம் வீடான மீனத்தில் விழுகிறது. இது சிறப்பான இடம். இதன் மூலம் அவர் நல்ல பொருளாதார வளத்தை கொடுப்பார். பகைவர்களை எதிர்கொள்ளும் ஆற்றல் கிடைக்கும். செப்டம்பர் 2009 - ஏப்ரல் 2010 எந்த தடைகள் வந்தாலும் முறியடித்து வெற்றி காண்பீர்கள்.மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். தற்போது இருப்பதை விட வசதியான வீட்டிற்கு குடிபுகுவர். டிசம்பருக்கு பிறகு திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். திருட்டு தொந்தரவு இனி இருக்காது. உறவினர்கள் வகையில் இருந்த பிணக்குகள் மறையும். அவர்கள் அனுகூலமாக இருப்பர்.உத்தியோகம் ?Öர்ப்?வர்களுக்கு டிசம்பருக்கு பிறகு நற்பலன்கள் அதிகமாக கிடைக்கும். முக்கிய தேவைகளை கேட்டு பெறவும். விருப்பான இடமாற்றத்தை முயற்சி செய்து பெற்று விடவும். வியாபாரிகளுக்கு வருமானம் அதிகரிக்கும். ஆனால் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். சிலர் வணிகம் விஷயமாக வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கூட்டுத்தொழிலில் நல்ல வளத்தை காணலாம். வாடிக்கையாளர்களிடம் அனுசரணையாக நடந்து அவர்கள் ஆதரவை தக்க வைத்துக் கொள்ளவும். மாணவர்கள் கடந்த கல்வி ஆண்டைவிட கூடுதல் மதிப் பெண்கள் கிடைக்கபெறலாம். கலைஞர்களுக்கு புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். எதிரிகளால் இருந்து வந்த முட்டுக்கட்டைகள் விலகும். சிலருக்கு வெளிநாடு செல்லும் பாக்கியம் கிடைக்கும். பத்திரிகையாளர்கள், எழுத்தாளர்கள் நற்பெயரோடு பண வரவையும் காண்பர். வக்கீல்கள் மற்றும் பொதுநல சேவகர்கள் நல்ல முன்னேற்றம் காண்பர். விவசாயிகள்: வளர்ச்சி காண்பர். நெல் கோதுமை கேழ்வரகு சோளம் மற்றும் மானாவாரி பயிர்கள் நல்ல வருமானத்தை தரும். கைத்தொழிலில் ஈடுபடுபவர்களும் மேம்பாடு அடைவர்.வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். தீர்ப்பு உங்கள் பக்கம் அமையலாம். பெண்கள் உங்கள் மூலம் குடும்பம் சிறக்கும். விருந்து, விழா என சென்று வருவீர்கள். சிலருக்கு பிறந்த வீட்டில் இருந்து பொன், பொருள் வரலாம். பிள்ளை வளர்ப்பில் பெருமை அடைவீர்கள்.உடல் நலம் சிறப்பாக இருக்கும். பித்தம் மயக்கம் மற்றும் கண் தொடர்பான உபாதைகளால் அவதிபட்டு வந்தவர்கள் குணம் அடைவர். பரிகாரம்: பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். . காக்கைக்கு அன்னமிட்டு உணவு சாப்பிடுங்கள். ஞானி களை சந்தித்து காணிக்கை செலுத்தி ஆசி பெறுங்கள். மே 2010 - ஏப்ரல் 2011 குடும்பத்தில் சீரான வசதி இருக்கும்.தம்பதியினரிடையே அன்பு நீடிக்கும்.உறவினர்கள் வகையிலும் அனுகூலமான போக்கு காணப்படும். திருமணம் போன்ற சுப காரியங்கள் தடை படலாம். உத்தியோகம் பார்ப்பவர்கள் முன்புபோல் சிறப்பான பலனை எதிர்பார்க்க முடியாது. வேலைப்பளு அதிகரிக்கும். சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. உங்கள் பொறுப்புகளை யாரையும் நம்பி ஒப்படைக்க வேண்டாம்.கோரிக்கைகளை அதிக முயற்சி எடுத்தே நிறைவேற்ற வேண்டியது இருக்கும்.வியாபாரிகள் உங்கள் முயற்சிக்கு தகுந்த பலன் கிடைக்கும். தானிய வியாபாரம் சிறப்பாக இருக்கும். புதிய தொழில் தற்போது தொடங்க வேண்டாம். ராகு பலமாக இருப்பதால் பணவிஷயத்தில் எந்த கஷ்டமும் வராது. மேலும் சனியின் 3-ம் இடத்துப் பார்வை சிறப்பாக அமைந்திருப்பதாலும் பின்தங்கிய நிலைக்கு தள்ளப்படமாட்டீர்கள்.கலைஞர்கள் எதிர்பார்த்த மதிப்பு பாராட்டு விருது பறிக்கப்படலாம். அரசியல்வாதிகள் மற்றும் பொது நல ஊழியர்கள் பதவியை எதிர்பாராமல் பாடுபட வேண்டியதிருக்கும்.மாணவர்களுக்கு இந்த கல்வி ஆண்டு உங்களுக்கு சுமாராகவே இருக்கும். விவசாயிகள் உழைப்புக்கு ஏற்ற பலனை தான் பெற முடியும். அதிக முதலீடு பிடிக்கும் விவசாயம் எதையும் செய்ய வேண்டாம். வழக்கு விவகாரங்கள் சுமாராக இருக்கும். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். வேலைக்கு செல்லும் பெண்கள் மிகவும் பளுவை சுமக்க வேண்டியதிருக்கும். ஆடம்பர செலவை குறைப்பது புத்திசாலித்தனம். உடல்நலம் மருத்துவ செலவு குறையும் சிலர் மனத்தளர்ச்சியுடன் காணப்படுவர். பரிகாரம்: சனிபகவானுக்கு அர்ச்சனை செய்யுங்கள். திருநள்ளாறு, தேனிமாவட்டம் குச்சனூர், மதுரை அருகே திருவாதவூர் ஆகிய ஏதாவது ஒரு தலத்திற்கு சென்று வரலாம் வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். மே 2011 - நவம்பர் 2011 மதிப்பு மரியாதை சிறப்படையும். உங்கள் செல்வாக்கு அதிகரிக்கும். குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே அன்பு பெருகும். அதே நேரம் ராகு சாதகமற்ற இடத்தில் இருப்பதால் அவ்வப்போது கருத்து வேறுபாடுகள் வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக்கொடுத்துபோகவும். ஏதோ காரணத்தால் தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். புதிய வீடு மனை வாங்கும் யோகம் தேடி வரும் உத்தியோகத்தில் வேலைப்பளு குறையும். வேலையில் திருப்தி காண்பீர்கள் பதவி உயர்வு சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும். கோரிக்கைகள் நிறைவேறும். மேல் அதிகாரிகளின் அனுசரணை கிடைக்கும். சிலர் வேலை நிமித்தமாக குடும்பத்தைவிட்டு தற்காலிமாக பிரிய நேரிடலாம்.வியாபாரத்தில் சீரான பணப்புழக்கம் இருக்கும். அதிக அலைச்சல் இருக்கும். யாரையும் நம்பி பணத்தை கொடுக்க வேண்டாம். கலைஞர்களுக்கு அரசிடம் இருந்து விருது பெறவாய்ப்பு உண்டு. அரசியல்வாதிகள் மேம்பாடு அடைவர். பதவியும் பணமும் கிடைக்கும. மாணவர்கள் இந்த கல்வி ஆண்டு சிறப்பை காணலாம். மதிப்பெண் கூடுதலாக கிடைக்கும். சிலர் வெளிநாடு சென்று படிக்கும் வாய்பை பெறுவர்.விவசாயம் நெல், கோதுமை, சோளம் வகைகளில் அதிக மகசூல் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சுமாராகவே இருக்கும். பெண்கள் கணவர் மற்றும் குடும்பத்தாரிடம் விட்டுக் கொடுத்து போகவும்.. புத்தாடை அணிகலன்கள் வாங்குவீர்.உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டியதிருக்கும். உஷ்ணம், பித்தம், மயக்கம், சளி போன்ற உபாதைகள் வரலாம். பரிகாரம்: சனிக்கிழமை சனி பகவானுக்கு நல்லெண்ணை தீபம் ஏற்றுங்கள்.துர்க்கை வழிபாடு நடத்துங்கள். காக்கைக்கு அன்னமிட்டு உணவு உண்ணுங்கள்.
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: சனிபெயர்ச்சி பலன் 2009

Post by மீனு on Tue Sep 08, 2009 9:18 pm

விருச்சிகம்


விருச்சிக ராசி அன்பார்களே நீங்கள் உங்கள் சாதுரியத் தால் எதையும் சிறப்பாக செய்து முடிப்பீர்கள். கடந்த சில ஆண்டுகளாக நீங்கள்பட்ட இன்னல்களை சொல்லி மீள முடியாது. எவ்வளவுதான் உழைத்து உழைத்துப் பார்த்தாலும் முன்னேற்றம் என்பது காணல் நீராகவே இருந்திருக்கும். அதற்கு காரணம் எந்த முக்கிய கிரகங்களுமே சாதகமாக இல்லாததுதான். இதுவரை சனிபகவான் பல்வேறு கெடு பலனை கொடுத்திருப்பார். குறிப்பாக அவர் கடந்த இரண்டரை ஆண்டுகளாக உடல் உபாதைகளையும் தொழிலில் மந்த நிலையையும் தந்திருப்பார். உங்கள் செல்வாக்கு கவுரவம் போன்றவைக்கு பங்கம் வந்திருக்கும். இதுவரை இருந்துவந்த பிரச்சினைகளுக்கெல்லாம் விடை கொடுக்கும் காலம் வந்துவிட்டது. சனிபகவான் 11-ம் இடமான கன்னிக்கு வந்து பல்வேறு நன்மைகளை தர உள்ளார். பொன், பொருள் கிடைக்கும். மகிழ்ச்சியும், ஆனந்தமும் அதிகரிக்கும். பெண்களால் முன்னேற்றம் காணலாம். செப்டம்பர்2009 - ஏப்ரல்2010 உங்கள் முயற்சிகளில் இருந்துவந்த தடைகள் அனைத்தும் அகலும். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும், மரியாதை சுமாராக இருக்கும். வீண் விவாதங் களை தவிர்க்கவும். கணவன்- மனைவி இடையே அன்பு இக்கும். உறவினர் கள் வகைளில் விரோதம் ஏற்படலாம். எனவே அவர்கள் வகையில் அதிக நெருக்க வேண்டாம். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தடைபடலாம். சிலர் புதிய வீடு-மனை வாங்கலாம். புதிய வாகனம் கிடைக்கும். உத்தி யோகம் பார்ப்பவர் கள் சுமாரான நிலையில் இருப்பர். வேலைப் பளு அதி கரிக் கும். மேல் அதி காரிகளி டம் அனுசரித்து போகவும். சம்பள உயர்வு கிடைக்கும். டிசம்பர் 15-ந் தேதிக்கு பிறகு நிலைமை ஓரளவு சீரடையும். வியாபாரிகள் தொழிலில் இருந்து வந்த தொய்வு நிலை மாறும். வீண் அலைச்சல் இனி இருக்காது. புதிய தொழில் தொடங்கலாம். வேலை இன்றி இருப்பவர்கள் தொழில் தொடங்குவதன் மூலம் நல்ல வளத்தை காணலாம். எதிரிகளின் சதியை உங்களது சாமர்த்தியத்தால் முறியடிப்பீர்கள். பரிகாரம்: வியாழக்கிழமை தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். வசதி இருந்தால் திருச்செந்தூர், அல்லது ஆலங்குடி சென்று வரலாம். ஏழைகள் படிக்க உதவுங்கள் பத்திரகாளி அம்மனுக்கு எலுமிச்சை பழ விளக்கு ஏற்றுங்கள். மே 2010 - ஏப்ரல் 2011 குடும்பத்தில் இருந்த பிற்போக்கான நிலை மாறும். ஆடம்பர பொருட்களை வாங்கலாம். வசதியான வீட்டிற்கு குடிபோகும் நிலை ஏற்படும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உறவினர்கள் மத்தியில் இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் மாறி , மகிழ்ச்சியும், ஒற்றுமையும் ஓங்கும். ஆனாலும் ராகுவின் சாதகமற்ற நிலையினால் தம்பதியினர் ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும்.உத்தியோகத்தில் தொழிலில் முன்னேற்றமும் தொடங்கி விட்டது. உங்களை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பர். பதவி உயர்வு, சம்பள உயர்வு போன்றவை கிடைக்கும்.வியாபாரத்தில் கூட்டாளிகள் இடையே ஒற்றுமையும், அனுகூலமான போக்கும் காணப்படும். புதிய தொழில் தொடங்கலாம். அரசிடம் இருந்து உதவி கிடைக்கும். எதிரிகளின்தொல்லை அடியோடு மறையும். கைத்தொழில் செய்பவர்கள், கூலி வேலை செய்பவர்கள் ஆனந்த வாழ்க்கை நடத்துவார்கள். கலைஞர்கள் எத்தனையோ நாட்களாக எதிர்பார்த்து பார்த்து. ஏங்கி கிடைக்காமல் போன பாராட்டுகள், விருதுகள் இனி கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் நல்ல வளத்தோடு புதிய பதவியும் கிடைக்க பெறுவர்.மாணவர்கள் நற்கல்வி பெறுவர். போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவர். நல்லவர்கள் சேர்க்கை மற்றும் ஆசிரியர்களின் அறிவுரை உங்களை மேலும் உயர்த்தும்.விவசாயம்: நெல் சோளம், கேழ்வரகு, எள் மற்றும் பனை போன்ற பயிர்களில் நல்ல வருமானம் கிடைக்கும். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும்.இழந்த சொத்து மீண்டும் கிடைக்கும்.பெண்கள் வாழ்க்கையில் ஒரு பிடிப்பு ஏற்படும். குழந்தை பாக்கியம் பெற்று மன நிம்மதி அடைவர். உங்களை புரிந்து கொள்ளாத உங்கள் குடும்பத்தினர் இனி படிபடிபயாக உங்களை புரியும் நிலை ஏற்பட்டு உங்களிடமே தஞ்சம் கொள்ளும் நிலை உருவாகும்.உடல்நலம் தொடர்ந்து சுமாராக இருக்கும். உஷ்ணம் தொடர்பான உபாதைகள்வரலாம். மனத்தளர்ச்சி மறையும்.. பரிகாரம்: துர்க்கை அம்மனை வணங்கி வாருங்கள். விதவை மூதாட்டிக்கு இயன்ற உதவி செய்யுங்கள். பவுர்ணமி நாளில் கேதுவுக்குஅர்சனை செய்யலாம். மே 2011 - நவம்பர் 2011 இந்த காலக்கட்டத்தில் பணப்புழக்கம் இருக்கும். மதிப்பு, மரியாதை சுமாராக இருக்கும். அதே நேரம் உங்கள் செல்வாக்குக்கு எந்த பங்கமும் வராது.வீட்டிற்கு தேவையான வசதிகள் கிடைக்கும். மகிழ்ச்சி நீடிக்கும். தம்பதியினரிடையே சிற்சில பிரச்சினை வரலாம். எதையும் பேசி தீர்க்கவும். குடும்ப பெரியோர்கள் சான்றோர்களின் ஆலோசனையை கேட்டு அதன்படி நடக்கவும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதம் ஆகலாம். உறவினர்கள் வகையில் இருந்து வந்த பிரச்சினை மறையும்.உத்தியோகத்தில் வேலையில் பளு அதிகரிக்கும். சிலர் தனிப்பட்ட மனக்குழப்பத்தில் வேலையில் ஈடுபாடு காட்டாமல் இருப்பர். வியாபாரத்தில் தொடர்ந்து நல்ல வருமானம் இருக்கும். ஜுனுக்கு பிறகு புதிய தொழிலை ஆரம்பிக்கலாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற சற்று முயற்சி எடுக்க வேண்டியதிருக்கும். அரசியல்வாதிகள் சமூகசேவகர்கள் பிரதிபலனை பாராது பணி செய்ய வேண்டியதிருக்கும்.மாணவர்கள் அதிக முயற்சி எடுத்து படிக்க வேண்டும். விவசாயத்தில் புதிய சொத்து வாங்கும் எண்ணம் நடக்கும். வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். கைவிட்டுப்போன சொத்து வாங்கலாம்.பெண்கள் வாழ்க்கையில் நல்ல மகிழ்ச்சியை பெறுவர். கணவர், மற்றும் குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போகவும்.உடல் நலம் சிறப்படையும் மருத்துவ செலவுகள் குறையும். பரிகாரம்: பத்திரகாளி அம்மனை தொடர்ந்து வணங்கி வாருங்கள். இதனால் மனத்தைரியம் கிடைக்கும். தடைகள் அகலும். ஞானிகளை சந்தித்து காணிக்கை செலுத்தி ஆசி பெறுங்கள்.
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: சனிபெயர்ச்சி பலன் 2009

Post by மீனு on Tue Sep 08, 2009 9:23 pm

தனுசு


தனுசு ராசி அன்பர்களே நீங்கள் பிறரது குற்றங்களை எளிதில் கண்டு கொள்ளும் திறன் கொண்டவர்கள். இது வரை சனி பகவான் உங்கள் ராசிக்கு 9-ம் இடத்தில் இருந்தார். இது சிறப்பான இடம் இல்லை. அவர் உங்கள் முயற்சியில் பல்வேறு தோல்விகளை தந்திருப்பார். பகைவர்களால் தொல்லைகள் அதிகம் ஏற்பட்டு இருக்கும். சிலர் அவர்களுக்கு கட்டுப்பட்டு அடங்கி போய் இருப்பர். உறவினர்கள், நண்பர்களிடம் மனக்கசப்பு உருவாகி அது பகையாக மாறி இருக்கும். இந்த நிலையில் இப்போது சனி பகவான் உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திற்கு வருகிறார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனால் பலன்கள் மாறுபடும். சனியால் இதுவரை இருந்து வந்த தடைகள் அகலும். செப்டம்பர் 2009 - ஏப்ரல் 2010 இந்த காலகட்டத்தின் பொருளாதார வளம் சீராக இருக்கும். செலவுகள் அதிகரித்தாலும் அதை ஈடுகட்டும் வகையில் வருமானம் வரும். எடுத்த காரியத்தை சிறப்பாக செய்து முடிப்பீர்கள். மதிப்பு மரியாதை கூடும். அதே நேரம் டிசம்பர் மாதத்திற்கு பிறகு வீண் விரோதத்தை தவிர்க்கவும்.குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். சிலர் சற்று முயற்சி செய்து புதிய வீடு-மனை வாங்கலாம். அதுவும் டிசம்பர் மாதத்திற்குள் கைகூடலாம். அதேபோல் சுப காரியங்களும் டிசம்பருக்குள் நடந்தேறும். நவம்பருக்கு பிறகு பிரிந்த குடும்பம் ஒன்று சேர வாய்ப்பு உண்டு. மழை விட்டாலும் தூவானம் விடவில்லை என்ற கருத்துப்படி ஒன்று சேர்ந்த தம்பதிகளிடையே கூட அவ்வப்போது கருத்துவேறு?Öடு வரத்தான் செய்யும். சில காலம் அனுசரித்து போவது நல்லது. வீட்டில் நிலவிய திருட்டு சம்பவங்கள் மறையும்.உத்தியோகம் பார்ப்பவர்கள் சிறப்பான நிலையில் இருப்பர். மேல் அதிகாரிகள் அனுகூலமாக இருப்பர். இந்த சாதகமான போக்கு டிசம்பருக்குள் கிடைக்கலாம். அதன்பின் வேலையில் பளு அதிகரிக்கும். அலைச்சலும் இருக்கும். வியாபாரம் தொழிலில் இருந்து வந்த மந்த நிலை மறையும். அரசியல்வாதிகள் வெளிநாடு சென்று வருவீர்கள். போட்டிகள் நிலவும். டிசம்பருக்கு பிறகு எதையும் தீவிர முயற்சி செய்தே பெறவேண்டியதிருக்கும். மாணவர்கள் சீரான நிலையில் இருப்பர் தேர்வு காலத்தில் சிரத்தை எடுத்து படிக்க வேண்டியதிருக்கும், விவசாயிகள் நல்ல மகசூலை காண்பர். சிலர் புதிய சொத்து வாங்குவர்.பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். சுப நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வர். பிறந்த வீட்டில் இருந்து உதவிகள் வரும். உல்லாச வாழ்க்கை கிடைக்கும்.உடல்நலம் சிறப்படையும். பித்தம், மயக்கம், டி.பி. போன்ற உபாதைகளால் அவதி பட்டவர்கள் நவம்பருக்கு பிறகு பூரண குணம் அடைவர். பரிகாரம்: நவக்கிரகங்களை வலம் வரவும். சனிபக வானுக்கு எள்சோறு படைத்து வணங்கலாம். வியாழக்கிழமை தட்சிணாமூர்த்தியை வணங்க தவறாதீர்கள். வசதி படைத்த தொழில் அதிபர்கள் முதியோர் இல்லத்துக்கு உதவி செய்யலாம். மே 2010-ஏப்ரல் 2011 குடும்பத்தில் தேவைகள் பூர்த்தியாகும். மனைவி வகையில் சிற்சில பிரச்சினைகள் வரலாம். சற்று விட்டுக்கொடுத்து போகவும். உறவினர்கள் மத்தியில் அவ்வப்போது சிற்சில மனக்கசப்புகள் வரலாம். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் முன்பு போல் எளிதில் கைகூடாது. தாமதம் ஆகலாம்.மதிப்பு, மரியாதை சுமாராகத்தான் இருக்கும். வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம். குருவின் வக்கிர காலத்தில் குடும்ப நிலைமை மேம்படும்.உத்தியோகம் பார்ப்பவர்கள் சீரான நிலையில் இருப்பர். அலைச்சல் இருக்கும். அதே நேரம் சம்பள உயர்வு, பதவி உயர்வு போன்றவை கிடைக்கும். சிலர் வேலை நிமித்தமாக குடும்பத்தைவிட்டு தற்காலிகமாக பிரியவேண்டியதிருக்கும். வியாபாரத்தில் போதிய லாபம் கிடைக்கும். யாரையும் நம்பி பணத்தை ஒப்படைக்க வேண்டாம். புதிய வியாபாரம் தற்போது வேண்டாம். கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் அவ்வளவு எளிதாக பெறமுடியாது. அரசியல்வாதிகள், பெண்கள் தேவைகளை குறைத்துக் கொள்ளவும் பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். உடல்நலம் சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு வெகுவாக குறையும். பரிகாரம்: பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். காக்கைக்கு அன்னமிடுங்கள். தட்சிணாமூர்த்திக்கு அர்ச்சனை செய்யுங்கள். முருகன் கோவிலுக்கு சென்று வாருங்கள் மே 2011 -நவம்பர் 2011 மதிப்பு மரியாதை சிறப்படையும். பொருளாதார வளம் அதிகரிக்கும். எந்த ஒரு காரியத்தையும் வெற்றிகரமாக செய்து முடிப்பீர்கள். உங்கள் ஆற்றல் மேம்படும். வீடு-மனை வாங்கும் எண்ணம் கைகூடி வரும்.குடும்பத்தில் இருந்த பிற்போக்கான நிலை மாறும்.கடந்த சில ஆண்டுகளாக கணவன்-மனைவி இடையே இருந்துவந்த பிரச்சினைகள் அனைத்தும் முடிவுக்கு வரும். வசதியான வீட்டிற்கு குடிபோகும் நிலை ஏற்படும். நீண்ட நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் நடந்தேறும். உறவினர்கள் மத்தியில் இருந்து வந்த பிரச்சினைகள் அனைத்தும் மாறி , மகிழ்ச்சியும், ஒற்றுமையும் ஓங்கும்.உத்தியோகத்திலும் மேம்பாடு காணலாம். உங்களை புரிந்து கொள்ளாத அதிகாரிகள் இனி உங்கள் திறமைக்கு அங்கீகாரம் கொடுப்பர். விரும்பிய இடத்துக்கு மாற்றம் பெறலாம். வியாபாரத்தில் இருந்து வந்த பின்தங்கிய நிலை மறையும். புதிய தொழில் வெற்றி அடையும். வேலை இன்றி இருப்பவர்கள் புதிய தொழிலை ஆரம்பிக்கலாம். அரசு வகையில் உதவி கிடைக்கும்.கலைஞர்கள் பாராட்டுகள், விருதுகள் இனி கிடைக்கும். நல்ல மனிதர்களின் தொடர்பு கிடைக்கும். அரசியல்வாதிகள், சமூகநல சேவகர்கள் நல்ல வளத்தோடு புதிய பதவியும் கிடைக்க பெறுவர். மாணவர்கள் போட்டி, பந்தயங்களில் வெற்றி பெறுவர். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்கும். விவசாயிகள் நெல் சோளம், கேழ்வரகு, எள், தினை போன்ற பயிர்களில் நல்ல வருமானம் கிடைக்கும். புதிய சொத்து வாங்கலாம்.பெண்கள் வாழ்க்கையில் தன்னம்பிக்கையை அடைவர். குழந்தை பாக்கியம் பெற்று மன நிம்மதி அடைவர். உங்களை புரிந்து கொள்ளாத குடும்பத்தினர் இனி புரிந்து உங்களுக்கு சாதகமாக நடந்து கொள்வர்.உடல்நலம்: சிறப்படையும். சிலர் வீண் மனஉளைச்சலுடன் காணப்படுவர். பரிகாரம்: சனிக்கிழமை ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள். துர்க்கை அம்மனை வணங்கி வாருங்கள். விதவை மூதாட்டிக்கு இயன்ற உதவி செய்யுங்கள். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: சனிபெயர்ச்சி பலன் 2009

Post by மீனு on Tue Sep 08, 2009 9:28 pm

மகரம்


மகர ராசி அன்பர்களே நீங்கள் மனைவி மீது அதிக பாசம் கொண்டவர்கள். எந்த வகையிலும் அவர்களின் ஆலோசனையை கேட்க தவற மாட்டீர்கள்.இது வரை சனிபகவான் அஷ்டமம் என்னும் எட்டாமிடத்தில் இருந்து பல்வேறு இடர்பாடுகளை தந்திருப்பார். குறிப்பாக குடும்பத்தில் நீங்கள் பட்ட கஷ்டங்கள் சொல்லி முடியாது. தம்பதியினரிடையே கருத்து வேறுபாடு வந்திருக்கலாம். உறவினர்கள் வகையில் மனக்கசப்பு உருவாகி இருக்கும். உங்கள் முயற்சிகளில் தடைகள் வந்து, நீங்கள் நினைத்ததை செய்ய முடியாமல் போய் இருக்கலாம். இந்த நிலையில் சனி பகவான் 9-ம் இடமான கன்னிக்கு வந்துள்ளார். இதுவும் சிறப்பான இடம் என்று சொல்ல முடியாது. ஆனால் இதற்கு முன்பு போல் கெடுபலனை தர மாட்டார். பொதுவாக சனி 9-ம் இடத்தில் இருக்கும் போது, உங்கள் முயற்சிகளில் தடைகள் வரலாம்; எதிரிகளின் இடைïறு தலைதூக்கும்; பிறருக்கு கட்டுப்பட்டு போகும் நிலை உருவாகும்; என்று ஜோதிடத்தில் கூறப்பட்டு உள்ளது. இந்த கெடுபலன்கள் அப்படியே நிகழும் என்று எண்ண வேண்டாம். பொதுவாக மற்ற முக்கிய கிரகங்களின் நிலையை கொண்டும் கோச்சார பலனை கணிக்க வேண்டும். அந்த வகையில் மற்றய கிரகங்கள் மூலம் அவ்வப்போது நன்மை கிடைக்கும். செப்டம்பர் 2009 -ஏப்ரல் 2010 பணப்புழக்கம் அதிகரிக்கும். அலைச்சலும் பளுவும் கூடும். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். ஆனால் சனியால் பங்கம் வரலாம். எனவே வீண்விவாதங்களை தவிர்க்கவும்.வீட்டிற்கு தேவையான அனைத்து வசதிகளும் கிடைக்கும். புதிய வீடு வாகனம் வாங்கலாம். விருந்து, விழா என சென்று வருவீர்கள். கணவன்-மனைவி இடையே அன்பு மேம்படும். டிசம்பருக்கு பிறகுசுப நிகழ்ச்சிகள் கைகூடும். உறவினர்கள் வகையில் பிணக்குகள் வரலாம். சிலர் தொழில் நிமித்தமாக குடும்பத்தை வெளிïர் மாற்ற வேண்டிது இருக்கும்.உத்தியோகம் பார்ப்பவர்கள் வேலையில் திருப்திகரமான நிலை இருக்கும். குறிப்பாக டிசம்பர் மாதத்திற்கு பிறகு பல்வேறு அனுகூலங்கள் நடக்கும். எதிரிகளின் இடைïறை முறியடிப்பீர்கள்.கலைஞர்கள் நல்ல புகழையும் பாராட்டையும் குரு பகவான் கொடுக்கும். அரசியல் வாதிகளுக்கு எதிர்பார்த்த பதவி கிடைக்கும்.மாணவர்கள் தொடக்கத்தில் தீவிரமாக படிக்க வேண்டும். டிசம்பருக்கு பிறகு கல்வியில் சிறப்பு அடைவீர்கள். சிலருக்கு வெளிநாடு சென்று படிக்க வாய்ப்பு கிடைக்கும்.விவசாயிகள் மகசூல் அதிகரிக்கும். கைதொழில் செய்பவர்கள் மனநிம்மதியுடன் காணப் படுவர். பெண்கள் மகிழ்ச்சியுடன் காணப்படுவர். குடும்பம் உங்களால் சிறப்பு அடையும். பிறந்த வீட்டில் இருந்து நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பொருட்கள், சொத்துகள் கிடைக்க வாய்ப்பு உண்டு.வழக்கு விவகாரங்கள் சிறப்பாக இருக்கும். கைவிட்டு போன பொருட்கள் மீண்டும் கிடைக்கும்.உடல்நலம்: சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு குறையும். பரிகாரம்: சனிக்கிழமை சனிபகவானை அர்ச்சனை செய்து வணங்கி வாருங்கள். கணவரை இழந்த மூதாட்டிகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள். மே2010 - ஏப்ரல் 2011 குடும்பத்தில் வசதிகள் இருக்கும்.. கணவன்-மனÛவி இடையே அன்பு பெருகும். சுபநிகழ்ச்சிகள் குருவின் பார்வையால் ஆகஸ்டு முதல் டிசம்பருக்குள் நடந்தேறும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் வகையில் அனுகூலம் இருக்கும். மதிப்பு, மரியாதை முன்புபோல் இருக்காது என்றாலும் உங்கள் கவுரவத்திற்கு பங்கம் ஏதும் வராது. வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம்.உத்தியோகம் கடந்த காலத்தை போல் உற்சாக பலன் கிடைக்காது. சிலருக்கு வேலையில் பங்கம் வரலாம். சிலர் பொறுப்புகளை பறிகொடுக்கலாம். உங்கள் பொறுப்புகளை யாரிடமும் ஒப்படைக்க வேண்டாம்.வியாபாரம் சீராக நடக்கும்.
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: சனிபெயர்ச்சி பலன் 2009

Post by மீனு on Tue Sep 08, 2009 9:33 pm

கும்பம்


பிறரின் குற்றங்களை எளிதில் கண்டு பிடிக்கும் தன்மை கொண்ட கும்ப ராசி அன்பர்களே உங்கள் ராசிக்கு 7-ல் இருந்த சனி இதுவரை குடும்பத்தில் பல்வேறு பிரச்சினைகளை கொடுத்திருப்பார். கருத்துவேறுபாடு காரணமாக சிலரின் குடும்பம் பிரிந்திருக்கலாம். அலைச்சலும் அலைக்களிந்திருக்கலாம். தீயோர் சேர்க்கை உங்களை அவப்பெய ருக்குள்ளாக்கி இருக்கும். இதனால் பணவிரயம் ஏற்பட்டு இருக்கும். இப்படி கெடுபலன்களை தந்த சனி இப்போது 8-ம் இடத்திற்கு சென்றுள்ளார். அஷ்டமத்தில் சனியால் எப்படி நன்மை தர முடியும்? இங்கு அவர் உங்கள் முயற்சிகளில் பல்வேறு தடைகளை உருவாக்குவார். உறவினர்கள் வகையில் மனக்கசப்பும் கருத்துவேறுபாடும் ஏற்படும். சிலர் ஊர்விட்டு ஊர் செல்லும் நிலை உருவாகும். இது அஷ்டமத்து சனியின் பொதுவான பலன்தான். ஆனால் இந்த கெடு பலன்கள் அப்படியே நடக்கும் என்று கவலை கொள்ள வேண்டாம். காரணம் கோச்சார பலனை கணிக்கும் போது மற்றய கிரகங்களையும் கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும். அந்த வகையில் குரு, ராகு, கேது ஆகிய கிரகங்கள் அவ்வப்போது நன்மை தருவார்கள். மேலும் பிறப்பகுதியில் சனிக்கு வேதையாக கேது வருவார். அந்த காலத்தில் சனியால் கெடுபலனை கொடுக்க முடியாது. இதேபோல் அவ்வப்போது கெடுபலன் தரும் கிரகங்களும் வேதையில் சிக்கி செயல்படாமல் இருக்கும். அதன்படி பார்த்தால் சனியால் நற்பலன்கள் கிடைக்காவிட்டாலும் மற்ற கிரகங்கள் உற்றதுணையாக நின்று பலனை கொடுக்கும் என்பதில் அய்யமில்லை. செப்டம்பர் 2009 - ஏப்ரல் 2010 குடும்பத்தில் தேவைகள் பூர்த்தியாகும். கணவன்- மனைவி இடையே கருத்து வேறுபாடு வரலாம். இதனால் சில குடும்பத்தில் தற்காலிகமாக பிரியும் நிலைகூட உருவாகலாம். டிசம்பருக்கு பிறகு வீட்டில் நிலைமை சற்று முன்னேற்றம் காணும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் தாமதம் ஆகலாம். மதிப்பு, மரியாதை சுமாராக இருக்கும். எனவே வீண்விவாதங்களில் ஈடுபடவேண்டாம். டிசம்பருக்கு பிறகு நிலைமை சீரடையும். வீடு மனை வாங்கும் எண்ணம் படிப்படியாக நிறைவேறும். உத்தியோகம் அதிகமாக உழைக்க வேண்டியதிருக்கும். ஒருவித மந்த நிலை உங்களை கீழ்நிலைக்கு கொண்டு செல்லும். டிசம்பருக்கு பிறகு மந்த நிலை மறையும். மேல் அதிகாரிகளின் ஆதரவு கிடைக்கும். ஆசிரியர்கள், எழுத்தாளர்கள், வக்கீல்கள் போன்றோர் கடந்த காலத்தை விட நல்ல வளம் காணலாம். வியாபாரத்தில் ராகு-கேதுவால் லாபம் தொடரும். இது அஷ்டமத்து சனி காலம் என்பதால் எதிலும் அதிக முதலீடு போட வேண்டாம். பகைவர்களின் இடைïறு அவ்வப்போது தலைதூக்கினாலும் அதை எளிதில் முறியடிப்பீர்கள். கலைஞர்கள் சுமாரான நிலையில் இருப்பர். பாராட்டு புகழை விட பொருளாதார வளத்தில் மேம்பாடு காண்பீர்கள். பரிகாரம்: சனி சிறப்பாக இல்லாததால் நீங்கள் சனிக்கிழமை தோறும் பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். ஊனமுற்றவர்களுக்கு உதவி செய்யலாம். ஏழைக் குழந்தைகள் படிக்க உதவி செய்யுங்கள். மே 2010 - ஏப்ரல் 2011 எந்த பிரச்சினை வந்தாலும் அதை எளிதில் முறிய டிப்பீர்கள். மதிப்பு, மரியாதை சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான அவப்பெயர் மறையும். செல்வாக்கு அதிகரிக்கும்.குடும்பத்தில் மகிழ்ச்சியும் குதுகலமும் பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் எளிதில் கைகூடும். குழந்தை பாக்கியம் கிடைக்கும். உறவினர்கள் வகையில் இருந்துவந்த பிணக்குகள் மறையும். சனியால் சிலரது வீட்டில் கருத்துவேறுபாடு தொடரலாம். ஒருவருக்குகொருவர் விட்டுக்கொடுத்து போகவும். உத்தியோகத்தில் இதுவரை இருந்துவந்த பின்தங்கிய நிலை மறையும். பல சிறப்பான பலனை காணலாம். வேலையில் பளு குறையும். வியாபாரத்தில் லாபத்துக்கு குறை இருக்காது சிலர் வணிகம் விஷயமாக வெளிநாட்டுக்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும். கூட்டாளிகளிடையே ஒற்றுமை ஏற்படும். கூட்டுத்தொழிலில் நல்ல வளத்தை காணலாம். சிலர் முயற்சி எடுத்து புதிய சொத்து வாங்குவீர்கள். கூலி வேலை செய்பவர்கள் நல்ல வருமானத்தை காண்பர். மருத்துவச்செலவு குறையும். பரிகாரம்: பெருமாள் கோவிலுக்கு சென்று வாருங்கள். ராகு நிலையும் சரியில்லாததால் துர்க்கை வழிபாடு நன்மையை தரும். வெள்ளி, செவ்வாய்க்கிழமைகளில் பத்திரகாளி அம்மனை வழிபடுங்கள். மே 2011 - நவம்பர் 2011 இதுவரை நன்மை தந்து கொண்டிருந்த குருபகவான் சாதகமற்ற இடத்திற்கு சென்று விட்டார். ஜுன் 9-ந் தேதி முதல் ராகு 10-ம் இடத்துக்கு வந்து நன்மை தருவார். குடும்பத்தில் தேவையான வசதிகள் இருக்கும். ஆடம்பர பொருட்களை வாங்க வேண்டாம். கணவன்-மனைவி இடையே சிற்சில பிணக்குகள் வரலாம். புதிய வீடு வாகனம் வாங்க யோகம் இல்லை. பிள்ளைகள் வகையில் இருந்த பிரச்சினை மறையும். உறவினர்கள் வகையில் அனுகூலம் இருக்காது.தீவிர முயற்சியின்பேரில் எடுத்த காரியம் வெற்றி அடையும். சாதாரண விஷயங்களைதள்ளிபோடவும். மதிப்பு மரியாதை சுமாராகவே இருக்கும். வீண்விவாதங்களை தவிர்க்கவும்.உத்தியோகம் பார்ப்பவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். சம்பள உயர்வுக்கு தடையேதும் இல்லை. ஆனால் உங்களுக்கு வர வேண்டிய பொறுப்பு தட்டி பறிக்கப்படலாம். குருவின் பார்வை பக்க பலமாக இருப்பதால் எந்த விபரீத விளைவும் ஏற்பட்டு விடாது.வியாபாரிகள் சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி பணத்தை விரயமாக்குவர். புதிய தொழிலை தொடங்க இது உகந்த காலம் அல்ல. சிலர் வேலை விஷயமாக குடும்பத்தை விட்டு பிரிய நேரிடலாம்.கலைஞர்கள் சுமரான நிலையில் இருப்பர். அரசியல்வாதிகள், சமூக நல சேவகர்கள் சுமாரன நிலையில் இருப்பர். மாணவர்கள் இந்த ஆண்டு சுமாரான பலனையே காணலாம். விவசாயிகள் சிரத்தை எடுத்து உழைக்க வேண்டும். வழக்கு விவகாரங்கள் சாதகமாக இருக்காது.பெண்கள் ஆடம்பரத்தை தவிர்க்கவும். பிள்ளைகளால் பெருமை கிடைக்கும். குழந்தை பாக்கியம் கிடைக்கும்.உடல்நலம்: சிறப்பாக இருக்கும். மருத்துவச் செலவு குறையும். பரிகாரம்: சந்தர்ப்பம் கிடைக்கும்போது நவக்கிரகங்களை சுற்றி வாருங்கள். சிவன் கோவிலுக்கு சென்று வாருங்கள்.துர்க்கை வழிபாடு நடத்துங்கள். வசதி படைத்த தொழில் அதிபர்கள் ஏழைகளுக்கு ஆடு வளர்க்க உதவி செய்யலாம்.
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: சனிபெயர்ச்சி பலன் 2009

Post by மீனு on Tue Sep 08, 2009 9:36 pm

மீனம்


மீன ராசி அன்பர்களே எதிலும் முன்னெச்சரிக்கை யுடன் நடந்து கொள்ளும் உங்களுக்கு சனி பகவான் இது வரை உங்கள் ராசிக்கு 6-ம் இடத்தில் இருந்து பல்வேறு நன்மைகளை தந்தார். குறிப்பாக நல்ல பணப்புழக் கத்தையும், எடுத்த காரியத்தில் வெற்றியையும் கொடுத்திருப்பார். மேலும் உங்களுக்கு அபார ஆற்றலை தந்து எதிரிகளை இருக்கும் இடம் தெரியாமல் ஆக்கி இருப்பார். உடல் நலத்தையும் சிறப்பாக வைத்திருப்பார். இந்த நிலையில் சனிபகவான் 7-ம் இடத்திற்கு செல்கிறார். இது சிறப்பான இடம் அல்ல. அவரால் முன்பு போல் நற்பலனை தர முடியாது. பொதுவாக இந்த இடத்தில் இருக்கும் போது சனி குடும்பத்தில் பல்வேறு பிரச்சினையை உருவாக்குவார். அலைச்சல் அதிகரிக்கும் வெளிïர் வாசம் நிகழும். தீயோர் சேர்க்கையால் அவதியுறுவர். இது சனியின் பொதுவான பலன்கள். இதைக் கண்டு அஞ்ச வேண்டாம். சனி சாதகமாக இல்லாவிட்டாலும் மற்றய கிரகங்கள் அவ்வப்போது நன்மை தருவார்கள். செப்டம்பர் 2009 - ஏப்ரல் 2010 தொடக்கத்தில் பொருளாதார வளம் சிறப்பாக இருக்கும். டிசம்பர் முதல் செலவுகள் அதிகரிக்கும். சிக்கனம் தேவை. நவம்பருக்கு பிறகு எதையும் சற்று சிரத்தை எடுத்தே முடிக்க வேண்டியது இருக்கும். மதிப்பு மரியாதை சிறப்பாக இருக்கும். ஆனால் டிசம்பருக்கு பிறகு வீண்விவாதங்களை தவிர்க்கவும். சனியால் சிற்சில பிரச்சினை வரலாம். ஒருவருக்கொருவர் விட்டுக் கொடுத்து போகவும். டிசம்பருக்குள் திருமணம் போன்ற சுப நிகழ்ச்சிகள் கைகூடும். அதன்பின் சுபங்கள் தாமதப்படலாம். பிள்ளைகளாலும் பிரச்சினை வரலாம். அதிக முயற்சி எடுத்தால் புதிய வீடு கட்டலாம். உத்தியோகத்தில் முன்னேற்றம் காண்பர். டிசம்பருக்குள் புதிய பதவி கிடைக்கலாம். அதன்பின் வேலையில் பளு அதிகரிக்கும். சிலர் எதிர்பாராத வகையில் இடமாற்றம் காண்பர். வேலை நிமித்தமாக சிலருக்கு குடும்பத்தை விட்டு தற்காலிகமாக பிரியும் நிலையும் உருவாகலாம்.வியாபாரிகள் கஷ்டப்பட்டு முன்னேற வேண்டியது இருக்கும். நவம்பருக்கு தொழிலில் பிரச்சினை வரலாம். எனவே அதிக கவனம் தேவை அரசு வகையில் அனுகூலம் கிடைக்காது.கூட்டாளிகளிடையே ஒற்றுமை இருக்கும்.கலைஞர்கள் தொடக்கத்தில் சிறப்பான பலனை எதிர்பார்க்கலாம். புதிய ஒப்பந்தங்கள் எளிதில் கிடைக்கும். ஆனால் டிசம்பருக்கு பிறகு சிரத்தை எடுத்தால்தான் ஒப்பந்தங்கள் வரும். அரசியல்வாதிகள், பொதுநல சேவகர்கள் சீரான பலனை காண்பர். வக்கீல்கள், எழுத்தாளர்கள் போன்றோரும் சுமாரான நிலையில்தான் இருப்பர். மாணவர்கள் இந்த ஆண்டு சிரத்தை எடுத்து படிக்க வேண்டிய திருக்கும் விவசாயத்தில் அதிக உடல்உழைப்பை சிந்த வேண்டியதிருக்கும். கூலி வேலை செய்பவர்கள் மனமகிழ்ச்சியுடன் காணப்படுவர். பெண்கள் குடும்பத்தில் முக்கிய அங்கமாக திகழ்வர். அதே நேரம் குடும்ப நன்மைக்காக விட்டுக் கொடுத்து போக வேண்டியது இருக்கும்.
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: சனிபெயர்ச்சி பலன் 2009

Post by மீனு on Tue Sep 08, 2009 9:37 pm

வழக்குவிவகாரங்கள் சுமாராக இருக்கும்.உடல்நலம் சிறப்பாக இருக்கும். பிள்ளைகள் உடல் நலனில் அக்கறை காட்ட வேண்டியதிருக்கும். பரிகாரம்: நவக்கிரகங்களை சுற்றி வரவும். விநாயகரை வணங்கி வாருங்கள். பத்திரகாளி அம்மன் வழிபாடு துணிவையும் முன்னேற்றத்தையும் கொடுக்கும். ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள். மே 2010 -ஏப்ரல் 2011 குடும்பத்தில் மகிழ்ச்சி அதிகரிக்கும். கணவன்-மனைவி இடையே சனி மற்றும் ராகுவால் சிற்சில பிணக்குகள் வரத்தான்செய்யும். தொடர்ந்து விட்டுக் கொடுத்து போகவும். விருந்து விழா என்று சென்று வருவீர்கள். வீட்டுக்கு தேவையான பொருட்கள் கிடைக்கும். சுப காரியங்கள் நடக்கும். உறவினர்கள் வகையிலும் பிணக்குகள் வரும். சிலர் தீவிர முயற்சி எடுத்து புதிய வீடு கட்ட வாய்ப்பு உண்டு. மதிப்பு மரியாதை கூடும். அதே நேரம் அனாவசியமாக எதிலும் மூக்கை நுழைக்காமல் இருக்கவும். உத்தியோகம் பார்ப்பவர்கள் கடந்த காலத்தைவிட சற்று முன்னேற்றம் காண்பர். வேலையில் பளு இருந்தாலும் அதற்கான பலன் கிடைக்கும். சிலர் இழந்த பதவியை மீண்டும் கிடைக்க பெறுவர். இடமாற்ற பீதி தொடரும். வியாபாரத்தில் பணப்புழக்கம் இருக்கும். புதிய தொழில் ஓரளவு அனுகூலத்தை கொடுக்கும். எதிலும் பணத்தை முதலீடு செய்வதைவிட அறிவை பயன்படுத்தி வருவாயை தேடவேண்டும். சிலர் தீயோர் சேர்க்கைக்கு ஆளாகி அவதிக்குள்ளாகலாம். ஜனவரிக்கு பிறகு சனியின் வக்கிரம் காரணமாக தொழிலில் முன்னேற்றம் காணலாம்.கலைஞர்கள் புதிய ஒப்பந்தங்கள் பெற சற்று முயற்சி எடுக்க வேண்டியது இருக்கும். மாணவர்கள் முன்னேற்றத்திற்கு வழி காண்பர். விரும்பிய பாடங்களை பெறுவர். குரு சாதகமற்ற நிலையில் இருப்பதால் தொடர்ந்து விவசாயிகள் பழைய கஷ்டத்தில் இருந்து சற்று மீளலாம். தேவையான மகசூல் கிடைக்கும்.பெண்கள்: வாழ்க்கையில் கணவர், மற்ற குடும்பத்தினரிடம் விட்டுக் கொடுத்து போவது நல்லது. பிள்ளைகள் வகையில் இருந்த பிரச்சினை மறையும். உடல் நலம் சீராக இருக்கும். கேதுவால் வயிறு தொடர்பான பிரச்சினை வரலாம். பரிகாரம்: தொடர்ந்து நவக்கிரங்களை சுற்றி வாருங்கள். விநாயகர் வழிபாடு ஏழை சிறுவர்களுக்கு படிக்க உதவி செய்யுங்கள்.. 2011 மே முதல் 2011 நவம்பர் வரை எடுத்த காரியம் கைகூடும். தடைகளை எளிதில் முறியடிப்பீர்கள். பணப்புழக்கம் அதிகரிக்கும். தேவைகள் பூர்த்தியாகும். மதிப்பும், மரியாதையும் சிறப்பாக இருக்கும். உங்கள் மீதான பொல்லாப்பு மறைந்து செல்வாக்கு மேம்படும். உங்கள் சொல்லுக்கு பிறர் கட்டுப்படும் நிலை உருவாகும்.குடும்பத்தில் மகிழ்ச்சியும் ஆனந்தமும் அதிகரிக்கும். தெய்வ அனுகூலம் கிடைக்கும். வீட்டில் நிலவி வந்த பிரச்சினை படிப்படியாக மறையும். பிழைப்புக்காக வெளிïர் சென்று இருந்தவர்கள் ஊர் திரும்புவர். உறவினர்கள் வகையில் இருந்து வரும் கருத்துவேறுபாடும் மறையும். வெகு நாட்களாக தடைபட்டு வந்த திருமணம் கைகூடும். சிலர் புதிய வீடு கட்ட வாய்ப்பு உண்டு. புதிய ஆபரணம் வாங்கப்பெறுவீர்கள். விருந்து விழா என உல்லாச பயணம் மேற்கொள்வீர்கள். உத்தியோகத்தில் பதவி உயர்வு கிடைக்கும். சிலர் அதிகார அந்தஸ்துக்கு உயர்த்தப்படுவர். சம்பள உயர்வு எதிர்பார்த்ததைவிட அதிகமாக கிடைக்கும். வேலையின்றி இருப்பவர்களுக்கு வேலை கிடைக்க வாய்ப்பு உண்டு.வியாபாரிகள் வீண் அலைச்சல் இனி இருக்காது. நீங்கள் சென்ற இடமெல்லாம் காரிய அனுகூலம் ஏற்படும். பொருள் விரையம் இனி இருக்காது. தீயோர் சேர்க்கையால் அவதி பட்டு வந்தவர்கள் அவர்கள் பிடியில் இருந்து விடுபடுவர். கலைஞர்களுக்கு அரசிடமிருந்து பாராட்டு, வெகுமதி கிடைக்கும். பொதுநல சேவகர்கள், அரசியல்வாதிகள் நினைத்ததை நிறைவேற்றிக்கொள்வீர்கள். மாணவர்கள் கல்வியில் சாதனை படைக்கலாம். வெளிநாடு சென்று படிக்கும் வாய்ப்பு வரும். விவசாயத்தில் புதிய தொழில் நுட்பத்தை பயன்படுத்தி சிறப்பான மகசூலை பெறுவர். சிலர் புதிய சொத்துக்கள் வாங்கலாம். நவீன இயந்திரங்கள் வாங்க வாய்ப்பு உண்டு. வழக்கு விவகாரங்கள் சாதகமாக அமையும்.பெண்கள் மிகவும் சிறப்பான நிலையில் இருப்பர். பிறந்த வீட்டில் இருந்து பொன், பொருள் வந்து சேரும். உறவினர்கள் வகையில்அன்னியோனியம் வரும்.உடல்நலம் சிறப்படையும். மருத்துவச் செலவு குறையும். பரிகாரம்: ஆஞ்சநேயரை வணங்கி வாருங்கள். மேலும் துர்க்கை வழிபாடு நடத்துங்கள். ராகு காலத்தில் நடைபெறும் பைரவர் வழிபாட்டில் கலந்து கொள்ளுங்கள்.ஏழைகளுக்கு இயன்ற உதவி செய்யுங்கள்.
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: சனிபெயர்ச்சி பலன் 2009

Post by மீனு on Tue Sep 08, 2009 9:39 pm

இங்கு சிம்ம ராசி தவிர எல்லா ராசிக்கும் சனிப் பெயர்ச்சி பலன்கள் உள்ளது..

அன்புடன் மீனுகா
avatar
மீனு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12052
மதிப்பீடுகள் : 150

View user profile

Back to top Go down

Re: சனிபெயர்ச்சி பலன் 2009

Post by ரூபன் on Tue Sep 08, 2009 10:35 pm

நான் விருச்சிகம்
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: சனிபெயர்ச்சி பலன் 2009

Post by Chocy on Tue Sep 08, 2009 10:37 pm

I am CANCER.
avatar
Chocy
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 747
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: சனிபெயர்ச்சி பலன் 2009

Post by ரூபன் on Tue Sep 08, 2009 10:39 pm

என்னது உங்களுக்கு கான்சரா
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: சனிபெயர்ச்சி பலன் 2009

Post by Chocy on Tue Sep 08, 2009 10:41 pm

ஆம் அண்ணா எனது ராசி பெயர் கடகம் அதை தான் CANCER என்று சொனேன்
avatar
Chocy
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 747
மதிப்பீடுகள் : 0

View user profile

Back to top Go down

Re: சனிபெயர்ச்சி பலன் 2009

Post by ரூபன் on Tue Sep 08, 2009 10:42 pm

ஒ அப்படியா எனக்கு இங்கிலீஷ் கொஞ்சம் வீக் தான்


Last edited by ruban1 on Tue Sep 08, 2009 11:17 pm; edited 1 time in total
avatar
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10784
மதிப்பீடுகள் : 72

View user profile http://www.eegarai.net/forum.htm

Back to top Go down

Re: சனிபெயர்ச்சி பலன் 2009

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum