ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Page 15 of 18 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17, 18  Next

View previous topic View next topic Go down

சிறந்த நடிகர் விக்ரம்! - அனுஷ்கா

Post by கார்த்திநடராஜன் on Mon Apr 18, 2011 4:01 pm

First topic message reminder :

இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவர் விக்ரம் என்று பாராட்டியுள்ளார் நடிகை அனுஷ்கா.


விஜய் இயக்கும் தெய்வத் திருமகன் படத்தில் அனுஷ்காவும் விக்ரமும் முதல்முறையாக இணைந்து நடித்துள்ளனர்.

இந்தப் படத்தில் விக்ரமின் நடிப்பு குறித்து ரொம்பவே சிலாகிக்கிறார்
அனுஷ்கா. அவர் கூறுகையில், "இந்திய அளவில் சிறந்த நடிகர்களில் ஒருவராக நான்
விக்ரமைப் பார்க்கிறேன்.

ஒரு கேரக்டருக்காக அவர் படும் சிரமங்களை நேரில் பார்த்து பிரமித்தேன். தான்
மட்டுமல்ல, தன்னுடன் நடிப்பவர்களும் ஏனோ தானோவென்று நடிக்கக் கூடாது
என்பதில் தீர்மானமாக உள்ளார் விக்ரம். இது எனக்குப் புதிய அனுபவம். தமிழில்
இதற்கு முன் எனக்கு யாரும் இப்படி நடிக்கணும் என்று கூட சொல்லிக்
கொடுத்ததில்லை.

இந்தப் படம் அவருக்கு பல விருதுகளையும், அங்கீகாரத்தையும் பெற்றுத் தரும்.
இந்தப் படத்தில் எனக்குப் பிடித்த இன்னொரு விஷயம் இசை. மனதைக்
கவர்ந்துவிட்டார் ஜிவி பிரகாஷ்குமார்," என்றார் அனுஷ்கா.
நன்றி
TMT


Last edited by கார்த்திநடராஜன் on Thu Apr 21, 2011 10:26 am; edited 1 time in total
avatar
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 303
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down


Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Tue May 10, 2011 9:34 am

வானம் வெற்றிக்கு சிம்பு கொடுத்த விருந்து


இறங்கு முகத்தில் இருந்த சிம்புவின் மாக்கெட், "விண்ணைத்தாண்டி வருவாயா" படத்திற்கு பிறகு ஏறுமுகத்தில் தொடங்கியது. அதன்தொடர்ச்சி இப்போது வெளியாகி இருக்கும் "வானம்" படத்திலும் தொடர்கிறது. கடந்தவாரம் ரிலீசான "வானம்" படம் நல்ல வரவேற்பை பெற்று இருக்கிறது. இந்த வெற்றியை விருந்து கொடுத்து கொண்டாடி இருக்கிறார் சிம்பு.

தெலுங்கில் வெளிவந்த "வேதம்" படம் தமிழில் "வானம்" என்ற பெயரில் உருவாகி இருக்கிறது. இப்படத்தில் சிம்பு, பரத், அனுஷ்கா, பிரகாஷ்ராஜ் வேகா, சோனியா அகர்வால், சரண்யா, சந்தானம் என்று ***ஒரு பெரிய நடிகர் பட்டாளமே நடித்து இருக்கிறது. டைரக்டர் கிரிஷ் இயக்கி இருக்கிறார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்து இருக்கிறார். கடந்த ***வாரம் வெளியான வானம் படம், நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இடையில் பா.ஜ.,வினரின் எதிர்ப்பையும் கடந்து படம் நன்றாக ஓடிக் கொண்டு இருக்கிறது. இந்த வெற்றியை சிம்பு பார்ட்டி கொடுத்து கொண்டாடி இருக்கிறார். சென்னை ஜெமினி மேம்பாலம் அருகில் உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த விருந்து நிகழ்ச்சி நடந்தது. இதில் “வானம்” படத்தில் நடித்த சோனியா அகர்வால், வி.டி.வி. கணேஷ், மற்றும் இயக்குனர் தரணி, நடிகை டாப்சி, நடிகர் சாந்தனு உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Tue May 10, 2011 9:34 am

இசைஞானி எதிர்பார்க்கும் இரண்டுஇசைஞானி இளையராஜா சமீபமாக தான், இசையமைத்துள்ள எண்ணற்ற படங்களில் இரண்டு படங்களின் வெளியீட்டை பெரிதாக எதிர்பார்த்து காத்திருக்கிறார். அதில் ஒரு படம் சுசீந்திரன் இயக்கியுள்ள "அழகர்சாமியின் குதிரை" மற்றொருபடம் ரத்னகுமார் இயக்கியுள்ள "செங்காத்து பூமியிலே". இந்த இரண்டு படங்களின் ரீ-ரெக்கார்டிங்கிலும் காட்சிகளைப் பார்த்து கண்கலங்கியதாக சொல்லும் இசைஞானி, சில மாத இடைவெளியில் அடுத்தடுத்து நடந்த இந்த இரண்டு பட இசை வெளியீட்டிலும் கலந்து கொண்டு நெஞ்சுருக பேசியது குறிப்பிடத்தக்கது. பொதுவாக இளையராஜா தான் இசையமைத்த படங்கள் என்றாலும் அதன் ஆடியோ வெளியீட்டில் கலந்து கொள்ளாமல் இருந்து வந்ததும் இங்கு கவனிக்கத்தக்கது.
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Tue May 10, 2011 9:35 am

ஈரம்' அறிவழகன் + நகுல்....


அருள்நிதியின் கால்ஷீட்டுக்காக காத்திருந்த 'ஈரம்' பட இயக்குனர் அறிவழகன், தற்போது நகுலை வைத்து தன் அடுத்த பட வேலைகளை தொடங்கி இருக்கிறார்.

அறிவழகன் வெங்கடாசலம். சுருக்கமாக அறிவழகன். இயக்குனர் ஷங்கரின் மாணவர். தொழில்நுட்ப மிரட்டல் பிளஸ் நருக் சுருக் திரைக்கதையால் முதல் படமான 'ஈரம்' மூலம் கவனம் ஈர்த்தவர்.

இந்தப் பட வெற்றியைத் தொடர்ந்து 'எங்களுக்கு ஒரு படம் பண்ணித் தாங்க' என்ற வரிசையில் வந்த தயாரிப்பாளர்களை புறந்தள்ளி தன் கதைக்கு தோதானவர் என்று 'வம்சம்' ஹீரோ அருள்நிதியை அணுகினார். ஒரு கூடைப்பந்தாட்ட வீரரின் வாழ்க்கைதான் கதை என்பதால் தன் உயர உடல்வாகுக்கு தோதாக இருக்கும் என்று அருளும் அறிவின் கதையை டிக் அடித்தார். போட்டோசெஷன் கூட முடிந்தது.

ஆனால் இது கொஞ்சம் காலம் எடுக்கக்கூடிய புராஜெக்ட் என்பதை லேட்டாக உணர்ந்த அருள், நீண்ட தயக்க மயக்கங்களுக்குப் பின் அதிலிருந்து பின்வாங்கினார்.

கதாநாயகனுக்காக காத்திருப்பது முட்டாள்தனம் என்பதை காலதாமதமாக உணர்ந்த அறிவழகன், அந்தக் பேஸ்கட் பால் பிளேயர் கதையை நகுலுக்கு தோதாக மாற்றினார். உடனடி வெற்றிக்கு காத்திருந்த நகுலும் மறுபேச்சு பேசாமல் ஒப்புக்கொண்டு நடித்து வருகிறார். நகுல் என்றால் சன் பிக்சர்ஸ் இல்லாமலா... இந்தப் படத்தை சன் பிக்சர்ஸ்தான் வெளியிடும் என்கிறார்கள்!
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Tue May 10, 2011 9:37 am

அதிரடி வில்லனாக நடிக்க தயார்! - அஜ்மல்


'அஞ்சாதே' படம் மூலம் அறிமுகமான நடிகர் அஜ்மல், 'திருதிரு துறுதுறு' படத்தில் கதாநாயகனாக நடித்தார். தற்போது ஜீவாவுடன் இணைந்து நடித்த 'கோ' படம் ரிலீசாகி வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. 'கதிர்வேலு', 'கருப்பம்பட்டி' படங்களில் நாயகனாக நடித்து வருகிறார். இதுகுறித்து அஜ்மல் அளித்த பேட்டி:- 'கோ' பட வெற்றி மகிழ்ச்சி அளிக்கிறது. இதில் நான் நடித்துள்ள இளம் அரசியல்வாதி கேரக்டருக்கு பாராட்டுகள் குவிகின்றன. ஜீவா எனது நண்பர். கதை பிடித்ததால் அவருடன் இணைந்து நடித்தேன். மலையாளம் போன்ற பிற மொழிப் படங்களில் இரண்டு மூன்று கதாநாயகர்கள் சேர்ந்து நடிக்கின்றனர். தமிழ் படங்களில் அது இல்லாமல் இருக்கிறது. இரு கதாநாயகர்கள் இணைந்து நடிக்க முன்வர வேண்டும். 'கருப்பம்பட்டி' படத்தில் அப்பா, மகன் என இரு வேடங்களில் நடிக்கிறேன். 'கதிர்வேலு' ஆக்ஷன் கதை. நடிகைகளில் நயன்தாரா, த்ரிஷா அழகானவர்கள். நயன்தாராவை பிரபுதேவா திருமணம் செய்ய முடிவெடுத்திருப்பது அவரின் சொந்த விருப்பம். தமிழ் படங்களில் நடிக்கவே விரும்புகிறேன். எனது தாய் தமிழ்நாட்டை சேர்ந்தவர். 'கோ' படம் பார்த்து எனது மனைவி ரெஞ்சு பாராட்டினார். நடிகைகள் அம்பிகா, ராதா போன்றோரும் பாராட்டினர். நல்ல கதையம்சம் உள்ள படங்களில் வில்லனாகவும் நடிக்கத் தயார் என்றார்.
கோடம்பாக்கத்துக்கு அதிரடி வில்லன் கெடைச்சுட்டாருங்கோ...........
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Tue May 10, 2011 9:39 am

அழகர்சாமியின் குதிரை - பட முன்னோட்டம்


வெண்ணிலா கபடி குழு', 'நான் மகான் அல்ல' படத்திற்கு பிறகு சுசீந்திரன் இயக்கி இருக்கும் படம் 'அழகர்சாமியின் குதிரை'. அப்புக்குட்டி, சரண்யா மோகன் மற்றும் பலர் நடித்து இருக்கிறார்கள். இளையராஜா இசையமைத்து இருக்கிறார். மதன் தயாரித்து இருக்கிறார். தயாநிதி அழகிரி தனது க்ளைவுட் நைன் நிறுவனம் மூலம் வெளியிட இருக்கிறார்.

ஷோபா சக்தி எழுதிய சிறுகதையை திரைப்படமாக உருவாக்கி இருக்கிறார்கள்.

தங்களது கிராமத்தில் மழை பெய்ய வேண்டும் என்று வேண்டி, திருவிழா எடுக்க ஒரு குதிரை ஒன்றை தயார் செய்கிறார்கள். திருவிழா நெருங்கும் சமயத்தில் அந்த குதிரை காணாமல் போகிறது.

அழகர்சாமி சின்ன வயதில் இருந்தே குதிரையுடனே வளர்கிறான். அவனுக்கு திருமணம் நெருங்கும் நேரத்தில் அவன் வளர்த்த குதிரை காணாமல் போனதால் திருமணமும் நின்று விடுகிறது. குதிரை கிடைத்ததா, மழை பெய்ததா, கல்யாணம் நடந்ததா என்பதை காமெடி, செண்டிமெண்ட் கலந்து சொல்லி இருக்கிறாராம் இயக்குனர் சுசீந்திரன்.

"நான் இந்த கதையை படமாக்க நினைத்த போது இப்படத்தின் நாயகனாக அப்புக்குட்டியை தான் முடிவு செய்தேன். இது ஒரு அழகான திரைப்படம். இப்படம் முழுவதும் எனக்கு உடனிருந்து உதவிய ஷோபா சக்திக்கு நன்றி" என்று இசை வெளியீட்டு விழாவில் பேசினார் இயக்குனர் சுசீந்திரன்.

இப்படத்தினல் மொத்தம் மூன்று பாடல்கள். ஹங்கேரியில் இருந்து கலைஞர்களை வரவழைத்து பின்னணி இசை அமைத்து இருக்கிறார் இளையராஜா.

எல்லா தரப்பு மக்களுக்கும் பிடித்த படமாக இது இருக்கும் என்று கூறி வரும் படக்குழு, இப்படத்தை பல்வேறு திரைப்பட விழாக்களுக்கு அனுப்ப திட்டமிட்டு வருகிறார்களாம்.
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Tue May 10, 2011 9:39 am

லிப் கிஸ், பிகினி எல்லாம் தப்பில்லை: பியா

"கோ" வில் பத்திரிகை அலுவலகத்தில் பணிபுரிபவராக, இயல்பாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றிருக்கிறார் பியா. கோவா, பொய் சொல்ல போறோம், ஏகன், பலே பாண்டியா இந்த படங்களில் எல்லாம் வித்யாசமாக நடித்து இருந்தாலும், கோ படம் பிரிவியூ பார்த்துவிட்டு தான் இறந்த காட்சியை திரையில் பார்த்தவுடன் கதறி அழுதிருக்கிறார். இவரது தலைமுடி கொஞ்சம் வித்யாசமாக இருந்தாலும், தற்போது கிராமத்து கதைகளில் பாவாடை தாவணியோடு நடிக்க ரொம்பவே காத்திருக்கிறாராம்.

லிப் கிஸ், பிகினி இவற்றுக்கெல்லாம் சளைக்காமல் பதில் சொல்கிறார். படத்திற்கு காட்சி தேவை என்றால் அப்படி நடிப்பது ஒன்றும் தப்பில்லை, அதில் ஆபாசம் தான் கூடாது என்கிறார். மணிரத்னம் படத்தில் நடிக்க ஆசையாம், வி***ரைவில் பாலிவுட்டில் ஒரு படத்தில் நடிக்க இருக்கிறாராம். இன்னமும் தமிழ் கற்றுக் கொள்ள முடியாமல் திணறும் பியாவிற்கு தெரிந்த வார்த்தைகள் சரிப்பா, கண்டிப்பா, சாப்பிட்டியா போன்றவை தான். புரிந்து கொள்ளும் அளவிற்கு பேச வரவில்லையாம். அடுத்த வருடத்திற்குள் தமிழ் பேசிவிடுவேன் என்று உறுதியாக சொல்கிறார். இனி அவர் நல்ல நல்ல படங்களில் என்னை பார்க்லாம் என்று பெரும் நம்பிக்கையோடு சொல்கிறார்.
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Tue May 10, 2011 9:40 am

மிஸ்ஸான ஆட்டம்


மஹதீரா படத்தை மாவீரன் என்ற பெயரில் தமிழில் டப்பிங் செய்து வெளியிடப் போகிறார்கள். மஹதீராவில் ஹீரோவாக நடித்திருப்பவர் சிரஞ்சீவியின் மகன் ராம்சரண் தேஜா. மகன் படமாச்சே என்று ஒரு காட்சியில் சிரஞ்சீவியே ஆடியிருப்பார்.
படத்தை தமிழில் வெளியிடும் போது அந்த காட்சியும் இருக்க வேண்டும் என்று நினைத்திருக்கிறார் படத்தை வாங்கிய உதயநிதி ஸ்டாலின். ஆனால் இல்லையாம். தமிழிலும் ஏராளமான ரசிகர்கள் இருக்கிறார்கள் சிரஞ்சீவிக்கு. நானே அவருடைய டான்சுக்கு ரசிகன்.
அப்படியிருக்கும் போது குறிப்பிட்ட அந்த காட்சியை எடுக்க வேண்டுமா? உடனே படத்தில் இணையுங்கள் என்று உத்தரவிட்டாராம். எல்லாம் சரி. மாவீரன் திரைக்கு வருவது எப்போது? அதை இன்னும் சொல்லலியே.
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Tue May 10, 2011 9:40 am

அசின்-தீபிகா இடையே பனிப்போர்


ராணாவில் ரஜினிக்கு ஜோடியாகும் வாய்ப்பை பறித்த தீபிகா மீது பெரும் கோபத்தில் இருக்கிறார் அசின் என்று செய்திகள் வெளியாகியுள்ளன. ஆனால் இதற்கு உடனடியாக மறுப்பு தெரிவித்துள்ளார் அசின்.

பாலிவுட்டில் கஜினி என்ற ஒரேயொரு ஹிட் படத்தைக் கொடுத்துவிட்டு இன்னும் முன்னணி நாயகி என்று வலம் வருபவர் அசின். தீபிகா படுகோனுக்குப் போட்டியாக இவரை மீடியா சித்தரிக்க ஆரம்பித்துள்ளது.

தமிழ் - இந்தியில் வெளியாகும் ரஜினியின் ராணா படத்தில் நாயகியாக முதலில் பேசப்பட்டவர் அசின்தான்.

ஆனால் பல்வேறு காரணங்களால் அசினை தள்ளி வைத்துவிட்டு தீபிகா படுகோனேயை இந்தப் படத்தில் ஒப்பந்தம் செய்தனர்.

இதனால் தீபிகா படுகோன், அசின் இடையே மோதல் ஏற்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

இதுபற்றி பாலிவுட் பத்திரிகைகளில் வெளியாகியுள்ள செய்திகளை மேற்கோள் காட்டி அசினிடம் கேட்டபோது, சக நடிகர்-நடிகைகளுடன் நான் நட்பாகவே பழகுகிறேன். யாரையும் போட்டியாக நினைப்பதில்லை. தீபிகா படுகோனேக்கும் எனக்கும் எந்தப் பிரச்சினையும் இல்லை. ஒருவரையொருவர் நன்றாகப் புரிந்து கொண்டுள்ளோம். நீ உயர்வா? நான் உயர்வா? என்ற சிந்தனைகள் எங்களுக்குள் எழுந்ததே இல்லை.

அதே போல ஜெனிலியாவுடனும் நல்ல நட்பு உள்ளது. என்னுடன் நடித்த கதாநாயகர்களுடன் இணைத்து காதல் கிசுகிசுக்கள் வருகின்றன. யாரையும் நான் காதலிக்கவில்லை.

அக்ஷய்குமாருடன் ஹவுஸ்புல்- 2 படத்தில் நடிக்க உள்ளேன். மேலும் சில படங்களில் நடிக்க பேச்சு நடக்கிறது. ராணாவில் நடிக்க முடியாமல் போனது பற்றி கருத்து கூற விரும்பவில்லை. மற்றபடி தமிழில் நல்ல கதையம்சம் உள்ள படங்கள் வராததால் நடிக்கவில்லை. இவற்றில் தீபிகாவின் வாய்ப்பு எதையும் நான் பறிக்கவில்லை.., என்றார்.
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Tue May 10, 2011 9:41 am

வேலாயுதம் - பட முன்னோட்டம்


விஜய்க்கும் ஜெயம் ராஜாவுக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. இரண்டு பேரின் ரீமேக் படங்கள் அனைத்துமே வெற்றி தான். இவர்கள் இரண்டு பேரும் இணைந்து இருக்கும் படம் 'வேலாயுதம்'

'வேலாயுதம்' படமும் தெலுங்கில் வரவேற்பை பெற்ற 'ஆசாத்' படத்தின் ரீமேக் தான் என்று கூறி வருகிறார்கள். விஜய், ஹன்சிகா, ஜெனிலியா, சந்தானம் மற்றும் பலர் நடித்து இருக்கும் இப்படத்தை ஜெயம் ராஜா இயக்க விஜய் ஆண்டனி இசையமைத்து இருக்கிறார். ஆஸ்கார் பிலிம்ஸ் சார்பில் ரவிச்சந்திரன் தயாரித்து இருக்கிறார்.

ஒரு சாதாரண மனிதன் எப்படி சமுதாயத்தை மாற்றி அமைக்கிறான் என்பதே 'வேலாயுதம்' படத்தின் கதை. விஜய் இப்படத்தில் பால்காரனாகவும், ஜெனிலியா பத்திரிகை நிருபராகவும், ஹன்சிகா விஜய்க்கு காதலியாகவும் நடித்து இருக்கிறார்கள்.

ஜெனிலியா ஒரு சூப்பர் ஹீரோ இந்த ஊரை காப்பாற்றிக் கொண்டு இருக்கிறார் என்று சொல்ல, அந்த நேரத்தில் விஜய்யும் ஊரை காப்பாற்ற தற்செயலாக சூப்பர் ஹீரோ ஆகிறாராம் விஜய்.

வேலாயுதம் கண்டிப்பாக அனைத்து தரப்பு மக்களையும் கவரும் விதமாக இருக்கும் என்று கூறி வருகிறார் இப்படத்தின் இயக்குனர் ஜெயம் ராஜா.

வேலாயுதம் படம் தான் விஜய் நடித்து வெளிவரும் ரொம்ப காஸ்ட்லியான படம் என்கிறது தயாரிப்பு தரப்பு. 15 வில்லன்கள் 30 காமெடியன்கள் விஜய்யுடன் இணைந்து நடித்து இருக்கிறார்கள்.

"ஆஸ்கார் பிலிம்ஸ் போன்ற பெரிய தயாரிப்பு கம்பெனியுடன் இணைந்து ஜெயம் ராஜா இயக்கத்தில் நடிப்பது சந்தோஷமாக இருக்கிறது. இப்படம் கண்டிப்பாக வெற்றி படமாக அமையும்" என்று கூறிகிறார் விஜய்.
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Tue May 10, 2011 9:42 am

தபாங் ரீ-மேக்கில் சிம்புவுக்கு ஜோடி


இந்தியில் சல்மான் கான் நடித்து மாபெரும் வெற்றி பெற்ற "தபாங்" படம் தமிழில் ரீ-மேக் செய்யப்பட இருக்கிறது. இப்படத்தை தில், தூள், கில்லி போன்ற ஹிட் படங்களை கொடுத்த டைரக்டர் தரணி இயக்குகிறார். "குருவி" படத்திற்கு பின் தமிழில் நீண்ட இடைவெளிக்கு பின்னர் தரணி இப்படத்தை இயக்குகிறார். படத்தின் ஹீரோவாக நமது சிம்பு என்ற எஸ்.டி.ஆர்., நடிக்கிறார். படத்தில் சிம்புவுக்கு நாயகியாக பாலிவுட் நடிகை ஒருவர் நடிப்பதாக கூறப்பட்டு வந்தநிலையில், இறுதியாக தெலுங்கு நடிகை ரிச்சா நடிக்க ஒப்பந்தமாகி இருக்கிறார். தமன் இசையமைக்க, கோபிநாத் ஒளிப்பதிவு செய்கிறார். இப்படத்தின் பூஜை 9ம் தேதி திங்கள் அன்று துவங்குகிறது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக இந்தி தபாங் படத்தின் தயாரிப்பாளரும், சல்மான்கானின் சகோதராருமான அர்பாஸ் கான் பங்கேற்கிறார்.
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Tue May 10, 2011 9:43 am

"ராஜேஷ்கிட்ட ஒப்படைச்சிட்டேன்"


தமிழ் சினிமாவின் இளம் தயாரிப்பாளர் உதயநிதி ஸ்டாலின் இப்போது ஹீரோ அரிதாரம் பூசியிருக்கிறார். 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்தில் உதயநிதி தான் ஹீரோ. உதயநிதியின் நடை, உடை, பாவனையில் ஒரு பக்காவான ஹீரோவுக்குத் தேவையான மாற்றம். பட்டரில் இழைத்த லேட்டஸ்ட் இறக்குமதி ஹன்ஸிகா மோத்வானிதான் ஜோடி. 'பாஸ் என்கிற பாஸ்கரன்' படத்தில் கிடைத்த 'டச்' மூலமாக உதயநிதி ஸ்டாலினும், இயக்குநர் ராஜேஷும் 'நண்பேன்ன்ன்டா...' என்று இப்படம் மூலம் கைகோர்த்திருக்கிறார்கள்.

"கண்களை மூட வைக்கிற ஆபாசமோ, காதுகளை கூச வைக்கிற இரட்டை அர்த்த வசனங்களோ இல்லாத படங்களைத்தான் ஒரு தயாரிப்பாளராக இதுவரை கொடுத்திருக்கேன். நான் நடிகன் ஆனாலும் இந்த டீஸன்ட்டான ஃபார்முலாவை விட்டுக் கொடுக்கமாட்டேன். எல்லோரும் குடும்பத்தோடு உட்கார்ந்து பார்க்கிற படங்களை எடுக்கிறது, நடிக்கிறதுதான் என்னோட ஆசை" என்று தனது ஃபேவரிட் புன்னகையைத் தவழ விடுகிறார் உதயநிதி ஸ்டாலின்.

உதய் சொல்ற ஃபார்முலாவுக்கு 'ஒரு கல் ஒரு கண்ணாடி' படத்துல நான் கியாரண்டி! இந்த சிங்கிள் ஸ்டேட்மெண்ட்டோடு, அடுத்த ஷாட்டுக்கு கிளம்புகிறார் இயக்குநர் ராஜேஷ். மொழு மொழுவென இருக்கும் ஹன்ஸிகா பக்கம் நம் பார்வை திரும்ப, அதைப் புரிந்துகொண்டு புன்னகைத்த உதயநிதி, "பெண்களுக்குத்தான் முதல் இடம். நீங்க அவங்ககிட்ட முதல்ல பேசுங்க" என்று எஸ்கேப்பாகப் பார்த்தார். ஆனால், ஒரே அமுக்காக அமுக்கினோம்.

ஹேய்.. உதய் ரொம்ப கூல் யா... தனுஷ், ஜெயம் ரவி இவங்க கூட சேர்ந்து படம் பண்ணியிருக்கிறேன். அவங்க அளவுக்கு உதய்க்கு அனுபவம் இல்லாட்டாலும் கூட கேமராவுக்கு முன்னாடி கேஷுவலாக நிற்கிறார். ஆக்டிங்கும் நல்லா வருது.. உதய்க்கு 'பெட்டர் ஆக்டிங்' சர்டிஃபிகேட் கொடுத்தார் 'பட்டர் லுக்கிங்' ஹன்ஸி.

ஐயையோ! சும்மா சொல்றாங்க. நான் எப்படி நடிக்கப் போறேன்னு டைரக்டர் ராஜேஷ் முதல்ல பயந்தது உண்மைதான். 'உங்களை வைச்சு ஒரு டெஸ்ட் ஷூட் பண்ணலாமா'ன்னு கேட்டார். ஓ.கே சொன்னேன். அவ்வளவுதான். இருபது நாள் எல்லா சீன்களிலும் நடிக்க வைச்சு டிரில் எடுத்துட்டார். ஆனால் அந்த டெஸ்ட் ஷூட் விஷுவல்களை பார்த்ததும் ரிலாக்ஸாகிட்டார். எனக்கும் ஒரு நம்பிக்கை வந்துடுச்சு. இப்பக்கூட நாங்க இதுவரை எடுத்த காட்சிகளை எடிட் பண்ணி, ரஷ் பார்த்தோம். நல்லா வந்திருக்கு.

'ஆதவன்' படத்துல ஒரே காட்சியில மட்டும்தான் நடிச்சேன். அதுல என்னோட ஸ்கிரீன் பாடிலாங்வேஜ் சுமாராகத்தான் இருந்துச்சுன்னு நிறையப்பேர் சொன்னாங்க. சூர்யா, நயன்தாரா, சரோஜா தேவி அம்மான்னு பெரிய ஆர்டிஸ்ட்டுகள் இருந்ததால ஒரு உதறல் இருந்துச்சு. அதுவுமில்லாம திடீர்னு நடிக்கச் சொல்லிட்டாங்க. அந்த உதறல் இருக்கக் கூடாதுன்னு இப்போ தினமும் டான்ஸ் கிளாஸூக்கு போறேன். பவர் பாண்டியன் மாஸ்டர்கிட்ட ஆக்ஷன் பயிற்சிகள் பண்றேன். ஜிம்முக்குப் போறேன். இப்போதாங்க ஒரு ஹீரோவாகிறது எவ்வளவு கஷ்டம்னு புரியுது.

நான் ஹீரோவாக நடிக்கப் போறேன்னு சொன்னதுமே சூர்யாவும், ஆர்யாவும் என்னை உற்சாகப்படுத்தினாங்க. ஆர்யா தினமும் காலையில ஆறு மணிக்கே போன் பண்ணி, 'என்ன பாஸ் ஜிம்முக்கு இன்னும் கிளம்பலையா'ன்னு கேட்பார். உடனே தடதடக்க கிளம்பி ஓடுவேன். இவங்க உற்சாகப்படுத்துறது ஒரு பக்கம்னா, அப்பாவும் பிஸியான பிரசார நிகழ்ச்சிகளுக்கு நடுவேயும் சாயந்தரமா போன் பண்ணி விசாரித்தாங்க. அதனால என்னோட பொறுப்பை உணர்ந்து ஒரு நடிகனாக என்னை இயக்குநர் ராஜேஷ்கிட்ட ஒப்படைச்சிட்டேன், என்று சிரிக்கிறார் உதயநிதி ஸ்டாலின்.

'ஓ.கே...ஓ.கே' என்றபடி நாம் கை குலுக்க, 'பாஸ்.. இதுவும் எங்க படத்தோட டைட்டில்தான். 'ஒரு கல் ஒரு கண்ணாடி'யைத்தான் சுருக்கமாக 'ஓ.கே..ஓ.கே..'ன்னு வைச்சிருக்கோம் என்றார் உற்சாகமாக.
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Tue May 10, 2011 9:45 am

ஹன்சிகாவுக்கு ஊசி


ஹன்சிகா மோத்வானியின் பருமனான உடம்பை பார்த்து வயசு இருபதுக்கும் மேல் இருக்குமா என்று கேட்கிறார்களாம் திரையுலகத்தில். உண்மையில் என் வயசு இவ்வளவுதான் என்று அவர் சொல்லும் வயசை கேட்டால் மயக்கமே வந்துவிடும். பதினாறுக்கும் கம்மி என்கிறாராம்.

சிவப்பா இருக்கிறவங்க பொய் சொல்ல மாட்டாங்க என்ற வடிவேலுவின் டயலாக் இவருக்கு தெரிந்து இப்படி சொல்கிறாரோ என்று கிண்டலடித்தாராம் ஒரு ஹீரோ. எப்படியோ இவர் குறித்து ஆராய்ந்து பார்த்து விசாரித்து தெரிந்து கொண்ட யூனிட் ஆட்கள் ஹன்சிகாவின் வளர்த்திக்கு ஒரு சரியான காரணம் கண்டு பிடித்துவிட்டார்கள்.

அதைதான் போகிற இடத்திலெல்லாம் பரப்பி வருகிறார்கள். முன்பு மந்த்ரா என்றொரு நடிகை இருந்தார். அவர் எப்படி ஹார்மோன் ஊசியை போட்டுக் கொண்டு பெரிய மனுஷியாக காட்சியளித்தாரோ, அதே மருத்துவ மகத்துவம்தான் இவர் விஷயத்திலும் என்கிறார்கள். எது உண்மையோ?
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Tue May 10, 2011 9:46 am

தள்ளிப்போட்ட விமல்

முன்னணி நடிகர்கள் யார் திருமணம் செய்தாலும் குறைந்தபட்சம் பத்திரிகையாளர்களுக்கு அழைப்பிதழாவது வைப்பார்கள். சிலர் எல்லாரையும் நேரில் வரவழைத்து விருந்து கொடுப்பது சம்பிரதாயம். இந்த வழக்கம் எதையும் பின்பற்றவே இல்லை விமல்.
காரணம் இவரே அவசரம் அவசரமாக வீட்டுக்கு தெரியாமல் திருமணம் செய்து கொண்டதுதான். ஒரு முறை வேறொரு பிரஸ்மீட்டில் பத்திரிகையாளர்களிடம் இதற்காக வருத்தம் தெரிவித்தவர், விரைவில் உங்களையெல்லாம் அழைத்து உங்கள் முன்னிலையில் ஒருமுறை எங்கள் திருமணத்தை நடத்தணும்னு ஆசைப்படுறேன் என்றார்.
அந்த பிரஸ்மீட்டோடு அதையும் மறந்துவிட்டார். இப்போது விமல் அப்பாவாக ஆகப் போகிறாராம். மனைவி மூன்று மாத கர்ப்பம். பேசாம குழந்தையும் பிறந்தபின் குடும்பத்தோடு பிரஸ்சை மீட் பண்ணினா போச்சு. என்ன அவசரம்?
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by கலைவேந்தன் on Tue May 10, 2011 11:49 am

இன்றைய சினிமா செய்திகள் அனைத்துக்கும் மிக்க நன்றி கார்த்தி..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Tue May 10, 2011 4:48 pm

நயனதாரா கல்யாணம் நடக்கட்டும், பார்க்கலாம்-பொடி வைக்கும் சிம்பு


எனக்கு ஏற்ற பெண்ணாக அமையும் போது திருமணம் செய்து கொள்வேன். அது காதல் கல்யாணமாகக் கூட இருக்கலாம் என்று கூறியுள்ளார் நடிகர் சிம்பு.

அதை விட முக்கியமாக, நயனதாரா கல்யாணம் நடந்தால் பார்க்கலாம் என்றும் அவர் பொடி வைத்துப் பேசியிருப்பதால் நயனதாரா கல்யாணத்தில் ஏதாவது சிக்கல் வருமோ என்ற பரபரப்பும் கூடியுள்ளது.

தனது தங்கைக்கு திருமணம் செய்ய பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாகவும், அது முடிந்த பின்னர்தான் தனது கல்யாணம் குறித்து யோசிக்கப் போவதாகவும் சிம்பு கூறுகிறார். தனக்குப் பிடித்த, ஏற்ற பெண்ணாக அமைந்தால் கல்யாணம் செய்ய தயாராக இருப்பதாக கூறியுள்ள அவர் தனது கல்யாணம், காதல் கல்யாணமாகவும் இருக்கலாம் என்றும் தெரிவித்துள்ளார்.

சரி நயனதாரா கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாரே என்ற கேள்விக்கு, கல்யாணம் நடக்கட்டும் பார்க்கலாம் என்று பொடி வைத்துப் பேசியுள்ளார் சிம்பு.

வானம் படத்தின் வெற்றியால் சிம்பு பெரும் குஷியடைந்துள்ளார். அதே சூட்டோடு தற்போது ஒஸ்தி என்ற புதிய படத்தில் நடிக்கப் போகிறார். தரணி தான் படத்தை இயக்குகிறார்.

டபாங் படத்தின் ரீமேக்தான் இது. இதில் சிம்பு நாயகனாக நடிக்கவிருக்கிறார். படத்தின் பூஜை முடிந்து விட்டது. படப்பிடிப்பும் தொடங்கியுள்ளது.
தட்ஸ் தமிழ்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Tue May 10, 2011 4:51 pm

துபாய் ரசிகர்களிடம் சிக்கித் தவித்த நயனதாரா - பிரபுதேவா


நயனதாராவுக்கும், பிரபுதேவாவுக்கும் இடையே காதல் மலர்ந்து இப்போது கல்யாணத்தில் முடிந்து விட்டதாக கூறப்படுகிறது. சென்னையில் தனி பங்களா ஒன்றில் இருவரும் குடித்தனம் செய்து வருவதாகவும் கூறப்படுகிறது.

திருமணச் செய்தியை இருவரும் இதுவரை உறுதிப்படுத்தவில்லை.

இந்த நிலையில், நயனதாராவும், பிரபுதேவாவும் துபாய்க்கு ஜோடியாக சென்றுள்ளனர். துபாயில்தான் நயனதாராவின் அண்ணன் வசிக்கிறார். அவரிடம் பிரபுதேவாவை அறிமுகப்படுத்தவே நயன் அழைத்துச் சென்றுள்ளதாக தெரிகிறது.

துபாய் சென்ற இருவரும் ஜோடியாக ஷாப்பிங் மால் ஒன்றுக்கு போனார்கள். பல்வேறு வகையான அழகு சாதனப் பொருட்கள், செருப்பு உள்ளிட்டவற்றை வாங்கிக் குவித்தார் நயன்.

இந்த நிலையில் தமிழர்கள் அதிகம் இருந்த ஒரு கடைக்குத் தெரியாத்தனமாக போய் விட்டனர். இருவரையும் ஜோடியாக பார்த்த ரசிகர்களுக்கு குஷியாகி விட்டது.

இருவரையும் சூழ்ந்து கொண்டனர். கையில் இருந்த கேமராக்கள், செல்போன் கேமராக்கள் மூலம் இருவரையும் படம் பிடித்துத் தள்ளினர். ஆளாளுக்கு ஆட்டோகிராபும் கேட்டனர். இருவரையும் ஜோடியாக சேர்ந்து நிற்குமாறு கூறி புகைப்படம் எடுக்க முயன்றனர். ஆனால் அதற்கு மட்டும் பிரபுதேவா, நயன் சம்மதிக்கவில்லையாம்.

ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு நீண்ட நேரமாக விடாததால் நயனதாராவும், பிரபுதேவாவும் அங்கிருந்து கிளம்ப பெரும்பாடு பட வேண்டியதாயிற்று.

ஒரு வழியாக அத்தோடு ஷாப்பிங்கை முடித்துக் கொண்டு ரசிகர்களின் அன்புப் பிடியிலிருந்து மீண்டு வெளியேறினார்களாம் நயனும், பிரபுதேவாவும்.
தட்ஸ் தமிழ்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

'டீலுக்கு' வருவாரா நயனதாரா?

Post by ந.கார்த்தி on Tue May 10, 2011 4:52 pm

சன் டிவியின் கேம் ஷோக்களிலேயே பிரமாண்டமானதாக பேசப்பட்ட டீலா நோ டீலா, டிஆர்பி ரேட்டிங்கில் எதிர்பார்த்த முன்னேற்றத்தைக் காட்டவில்லையாம். இதனால் அப்செட் ஆகியுள்ள தயாரிப்பாளர்கள் அதற்கு சினிமா நடிகைகள் மூலம் புது மெருகூட்ட களம் இறங்கியுள்ளனர்.

நடிகர் ரிஷி தொகுத்து வழங்கும் நிகழ்ச்சிதான் டீலா நோ டீலா. ரூ. 1 முதல் ரூ. 50 லட்சம் வரையிலான பணப் பெட்டிகள் போட்டியில் வைக்கப்படும். அதை தேர்வு செய்வது வெல்வது யார் என்பதுதான் போட்டி.

இந்தப் போட்டிக்கு ஆரம்பத்தில் அடடே சூப்பரப்பூ என்று ஆர்வம் அதிகமாக இருந்தது. ஆனால் போகப் போக நிகழ்ச்சிக்கான மவுசு குறைந்து வருகிறதாம். டிஆர்பி ரேட்டிங்தான் ஒரு டிவி நிகழ்ச்சியின் பிரபலத்தை நிர்ணயிப்பதாகும். அந்த அடிப்படையில் டீலா நோ டீலா நிகழ்ச்சிக்கு எதிர்பார்த்த அளவுக்கு ரேட்டிங் கிடைக்கவில்லையாம்.

நமது நிகழ்ச்சிக்கு இப்படி ஒரு நிலையா என்று கடுப்பாகிப் போன சேனல், நிகழ்ச்சித் தயாரிப்பாளர்களை அழைத்து எதையாவது செய்து நிகழ்ச்சிக்கு மெருகூட்டுமாறு கூறியுள்ளதாம்.இதையடுத்து தயாரிப்பாளரர்கள் பேசாமல் ஒரு நடிகையை வைத்து நிகழ்ச்சியை தேற்றினால் என்ன என்ற எண்ணத்திற்கு வந்துள்ளனர்.

இதுதொடர்பாக சில பிரபலமான நடிகைகளை அணுகினர். ஆனால் அவர்களை ஸாரி என்று கூறி விட்டனராம். இதனால் அப்செட் ஆன தயாரிப்பாளர் குழு, சேனல் கூப்பிட்டுமா வர மறுக்கிறீர்கள் என்று கோபத்தைக் காட்ட அந்த நடிகைகள் கண்டு கொள்ளவில்லையாம்.

இதையடுத்து மார்க்கெட் இழந்து டான்ஸ் ஆடிக் கொண்டுள்ள நயனதாராவை எப்படியாவது நிகழ்ச்சிக்கு இழுத்து வந்த விடும் நோக்கோடு அவரை அணுகவுள்ளனராம்.

சமீபத்தில்தான் தனது பிடிவாத பாலிசியை தளர்த்திக் கொண்டு விளம்பரம் ஒன்றில் நடிக்க ஒப்புக் கொண்டார் நயனதாரா. எனவே இதை சாக்காக வைத்து அவரை டீலா நோ டீலா நிகழ்ச்சிக்கு இழுக்க முயற்சிக்கப் போகிறார்களாம்.

டீலுக்கு ஒத்து வருவாரா நயனதாரா...?
தட்ஸ் தமிழ்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by balakarthik on Tue May 10, 2011 4:55 pm

இதையும் உங்க சினிமா பகுதியிலயே பதியலாமே கார்த்தி அன்பு மலர்


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Tue May 10, 2011 5:13 pm

@balakarthik wrote:இதையும் உங்க சினிமா பகுதியிலயே பதியலாமே கார்த்தி அன்பு மலர்
சாரி மாற்றி விடுங்கள் அண்ணா சோகம்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Wed May 11, 2011 8:35 am

படத்தை வெளியிட தேதிக்காக சண்டையிடும் அஜய் தேவ்கன், ஷாஹீத்


மும்பை: படத்தை வெளியிடும் தேதிக்காக அஜய் தேவ்கனும், ஷாஹீத் கபூரும் சண்டை போடுகின்றனர்.

பாலிவுட்டில் பெரிய நடிகர்கள், நடிகைகள் ஒருவருக்கொருவர் ஒத்துபோவதே இல்லை. எந்தப் பக்கம் திரும்பினாலும் சண்டை. சேச்சே சின்னப் புள்ளத் தனமா இருக்கே என்று நினைத்தால், அஜய் தேவ்கனும், ஷாஹீத் கபூரும் கூட இப்போது சண்டையில் குதித்துள்ளனராம்-ஆனால் இன்னும் சட்டையெல்லாம் கிழியவில்லையாம்.

நம் சூரியாவின் சிங்கம் படம் இந்தியில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. அதில் சிங்கமாய் வருவது அஜய் தேவ்கன். இந்த படத்தை கோல்மால் புகழ் ரோஹித் ஷெட்டி இயக்கியுள்ளார். சிங்கம் படத்தை வரும் ஜூலை மாதம் 22-ம் தேதி வெளியிட அஜய் திட்டமிட்டுள்ளார்.

அதே தேதியில் தனது மௌசம் படத்தை வெளியிட முடிவு செய்துள்ளார் ஷாஹீத் கபூர். அஜய் தேவ்கனிடம் தேதியை மாற்றிக் கொள்ளுமாறு ஷாஹீத் கேட்டுக் கொண்டாராம். ஆனால் படத்தின் இயக்குனர் ரோஹித் மாறுவதாக இல்லை.

ரோஹித் ஷாஹீத் கபூருக்கு முன்பே சிங்கம் வெளியீட்டு தேதியை அறிவித்தார். இந்த பிரச்சனையைத் தீர்க்க ஷாஹீத் தந்தை பங்கஜ் கபூர் ரோஹித்தை சந்தித்து பேசவிருக்கிறார்.
தட்ஸ் தமிழ்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Wed May 11, 2011 8:35 am

பொன்னியின் செல்வன் ட்ராப்... அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டது!

மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படம் துவங்கியதாக முதன்முதலில் அறிவித்தது தட்ஸ்தமிழ் இணையதளம். அதன் பிறகு அந்தப் படம் தொடர்பாக மணிரத்னம் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளையும் அறிவித்து வந்தோம். இந்தப் படத்துக்காக மைசூர் லலிதமகாலை அவர் பார்வையிட்டது வரை தொடர்ச்சியாக செய்திகளைத் தந்திருந்தோம்.

ஆனால் சில பல காரணங்களால் பொன்னியின் செல்வன் கைவிடப்படும் சூழல் எழுந்தது. அது குறித்த செய்தியையும் முதன்முதலில் நமது தட்ஸ்தமிழ்தான் வெளியிட்டது என்பது நினைவிருக்கலாம்.

இதோ, நாம் சொன்ன செய்தியை மணிரத்னமே உறுதிப்படுத்தியுள்ளார்.

ஆம்... பொன்னியின் செல்வன் முயற்சி கைவிடப்பட்டது என அவர் கூறியுள்ளார். இந்தப் படத்துக்காக அட்வான்ஸ் தரப்பட்டு, கால்ஷீட் பெறப்பட்ட விஜய் உள்ளிட்ட அத்தனை நடிகர் நடிகைகளுக்கும் படம் கைவிடப்பட்டது என்ற தகவலை மணிரத்னமே அனுப்பியுள்ளார்.

பொன்னியின் செல்வன் என்ற பிரமாண்ட நாவலைப் படமாக்குவதில் உள்ள நடைமுறை சிரமங்கள், அதற்காகும் பெரும் நிதியை தர நிறுவனங்கள் முன்வராத நிலை மற்றும் இந்தப் படத்துக்கான வியாபாரம் குறித்த நிச்சயமற்ற நிலை.. போன்றவை காரணமாகவே மணிரத்னம் இந்த முடிவுக்கு வந்ததாகக் கூறுகிறார்கள். மேலும் படத்தைத் தயாரிக்கவிருந்த பிரபல சேனலுக்கும் படத்தின் நாயகன் விஜய்க்கும் ஒத்துப் போகாததாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டதாகக் கூறுகிறார்கள்.

பொன்னியின் செல்வன் முயற்சியை கைவிட்டாலும், அடுத்து ஒரு பெரிய நட்சத்திரத்தை வைத்து தளபதி ரேஞ்சுக்கு பக்கா ஆக்ஷன் படம் தரும் திட்டமும் உள்ளதாம் மணிரத்னத்துக்கு. இந்த முயற்சியாவது கை கூடட்டும்!
தட்ஸ் தமிழ்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Wed May 11, 2011 8:36 am

இலியானா மீது தடை கோரி 3 தயாரிப்பாளர்கள் புகார்... சிக்கலில் விஜய் படம்!!


எக்கச்சக்கமான அட்வான்ஸ் வாங்கிக் கொண்ட பிறகும், படத்துக்கு தேதி தராமல் இழுத்தடித்த நடிகை இலியானாவுக்கு தெலுங்கு மற்றும் தமிழில் தொழில் ரீதியான தடையை விதிக்க வேண்டும் என்று பிரபல தயாரிப்பாளர் மோகன் நடராஜன் புகார் கொடுத்துள்ளார்.

மோகன் நடராஜன் தயாரிப்பில் உருவாகியுள்ள 'விக்ரமனின் தெய்வ திருமகள்' படத்தில் நாயகியாக நடிக்க ரூ 35 லட்சம் அட்வான்ஸ் கொடுத்து இலியானாவை ஒப்பந்தம் செய்திருந்தாராம். ஆனால் இந்தப் படத்துக்குக் கொடுத்த அதே தேதிகளை, ஷங்கர் இயக்கும் 3 இடியட்ஸ் தமிழ் ரீமேக் நண்பனுக்குக் கொடுத்து சொதப்பினாராம் இலியானா.

இதனால் கடுப்பான மோகன் நடராஜன், சென்னையில் உள்ள தென்னிந்திய திரைப்பட வர்த்தக சபையில் ஒரு புகார் கொடுத்துள்ளார். அதில், "பேசிய சம்பளத்துக்கு ஒப்புக்கொண்டு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட பிறகும், இலியானா கால்ஷீட் தராமல் இழுத்தடித்தார். எனக்குக் கொடுத்த கால்ஷீட்டை நண்பன் படத்துக்கு கொடுத்துள்ளார். இதனால் எனக்கு ஏகப்பட்ட நஷ்டம். வாங்கிய அட்வான்ஸையும் திருப்பித் தரவில்லை. போன் செய்தால், அதை எடுக்கக் கூட மறுக்கிறார். எனவே இவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கில் நடிக்க தடை விதிக்க வேண்டும்," என்று கேட்டுக் கொண்டுள்ளார்.

தெலுங்கிலும் பிரச்சினை...

இதற்கிடையே, இலியானா நாயகியாக நடித்த தெலுங்குப் படங்கள் 'சக்தி' மற்றும் 'நேனு நா ராக்ஷஸி' ஆகியவற்றின் விளம்பரம் உள்ளிட்ட எந்த நிகழ்ச்சியிலும் பங்கேற்க மறுத்துவிட்டாராம் இலியானா. இதில் சக்தி படம் சில வாரங்களுக்கு முன் வெளியாகி படுதோல்வியைத் தழுவியது. இந்தப் படத்தின் ஹீரோ ஜூனியர் என்டிஆருக்கும் இலியானாவுக்கும் படப்பிடிப்பின்போதே கடும் தகராறு ஏற்பட்டதாகக் கூறுகிறார்கள். மேலும் படம் ரிலீசானதும், சக்தி ஒரு மோசமான படம் என்று வேறு இலியானா கமெண்ட் அடித்தாராம். இதனால் படத்தின் தயாரிப்பாளர் வைஜெயந்தி மூவீஸ் சார்பிலும் இலியானா மீது தெலுங்கு பட தயாரிப்பாளர் சங்கத்தில் புகார் தரப்பட்டுள்ளது. இந்தப் படத்துக்கு இலியானா வாங்கிய சம்பளம் ரூ 1.40 கோடி!

நிதினுடன் இவர் நடித்த 'ரெச்சிபோ' என்ற தெலுங்குப் படத்தின் தயாரிப்பாளருடனும் இலியானா தகராறு செய்ய, அவரும் இப்போது தயாரிப்பாளர் சங்கத்தில் முறையிட்டுள்ளார்.

எனவே இலியானாவுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்படலாம் என்று தெரிகிறது. ஆனால் இதுபற்றியெல்லாம் கவலைப்படாமல், நண்பன் படத்தில் விஜய்யுடன் நடித்துக் கொண்டுள்ளார் இலியானா! தயாரிப்பாளர் சங்கம் தடைபோட்டால், முதல் பாதிப்பு விஜய்யின் நண்பன் படத்துக்குத்தான் என்பது குறிப்பிடத்தக்கது!
தட்ஸ் தமிழ்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Wed May 11, 2011 8:38 am

மருத்துவர்கள் அனுமதியுடன் கோயிலுக்குச் சென்று வந்த ரஜினி!

நடிகர் ரஜினிகாந்த், ஓய்வெடுக்கவும் நவீன சிகிச்சை மேற்கொள்ளவும் அமெரிக்கா செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பிரபல அரசியல் விமர்சகர் ராஜகோபாலன் தனது ட்விட்டரில், "விரைவில் நடிகர் ரஜினிகாந்த் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வார் என தெரிகிறது. இதற்கான முன் அனுமதி கடிதம் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரது பயணத்துக்கான விசா விண்ணப்பமும் அனுப்பப்பட்டுள்ளது. டெல்லியின் உதவியுடன் அவர் அமெரிக்கா செல்லவிருக்கிறார்", என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒரு வாரமாக இசபெல்லா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ரஜினி, இன்னும் ஓரிரு தினங்களில் வீடு திரும்பவிருக்கிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராணா படத்தில் முழு வீச்சில் ஈடுபடும் முன் சுத்தமான சூழலில் பூரண ஓய்வு அவசியம் என்பதால் அவர் அமெரிக்கா செல்வதாகக் கூறப்படுகிறது.
தட்ஸ் தமிழ்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by கலைவேந்தன் on Wed May 11, 2011 8:44 am

பொன்னியின் செல்வன் விடபப்ட்டது நல்லதே... இவர்களால் அந்த கதையை மூலம் சிதறாமல் எடுக்க இயலாது.

ரஜினி நலம் பெற இறைவனை வேண்டுகிறேன்..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by ந.கார்த்தி on Wed May 11, 2011 9:00 am

ஓய்வுக்காக அமெரிக்கா செல்கிறார் ரஜினி?

நடிகர் ரஜினிகாந்த், ஓய்வெடுக்கவும் நவீன சிகிச்சை மேற்கொள்ளவும் அமெரிக்கா செல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதுகுறித்து பிரபல அரசியல் விமர்சகர் ராஜகோபாலன் தனது ட்விட்டரில், "விரைவில் நடிகர் ரஜினிகாந்த் மேல் சிகிச்சைக்காக அமெரிக்கா செல்வார் என தெரிகிறது. இதற்கான முன் அனுமதி கடிதம் டெல்லிக்கு அனுப்பப்பட்டுள்ளது. அவரது பயணத்துக்கான விசா விண்ணப்பமும் அனுப்பப்பட்டுள்ளது. டெல்லியின் உதவியுடன் அவர் அமெரிக்கா செல்லவிருக்கிறார்", என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த ஒரு வாரமாக இசபெல்லா மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வரும் ரஜினி, இன்னும் ஓரிரு தினங்களில் வீடு திரும்பவிருக்கிறார். அவரது உடல்நிலை சீராக உள்ளதாகவும், அவர் நல்ல ஆரோக்கியத்துடன் உள்ளதாகவும் அவருக்கு சிகிச்சை அளித்துவரும் மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ராணா படத்தில் முழு வீச்சில் ஈடுபடும் முன் சுத்தமான சூழலில் பூரண ஓய்வு அவசியம் என்பதால் அவர் அமெரிக்கா செல்வதாகக் கூறப்படுகிறது.
தட்ஸ் தமிழ்
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6112
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: ரோஜா கார்த்தியின் சினிமா செய்திகள்....

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 15 of 18 Previous  1 ... 9 ... 14, 15, 16, 17, 18  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum