நண்பன் படம்
துவக்கப்பட்ட செய்தி வந்தவுடன் பரபரப்பு தொடங்கவில்லை..ஏற்கனவே த்ரீ
இடியட்ஸ் பற்றி மக்களுக்கு தெரியும் என்பதால் பெருசா யாரும் கண்டுக்கலை..

இதுவே ஷங்கரின் நேரடி படத்தில் விஜய் நடிக்கிறார் என்றிருந்தால் பரபரப்பு
ஏற்பட்டிருக்குமோ என்னவோ..ஆனால் வெள்ளிக்கிழமை முதன் முதலில் நண்பன் பட
போஸ்டரை பார்த்து மிரண்டு விட்டேன்..


பாவம் விஜய்க்கு காமெடி வராது என்பதாலும், கொஞ்ச நாளாக முரட்டுத்தனமாக
ரயிலை தாண்டுவதும் ,கடலில் பறந்து பறந்து நீச்சல் அடித்ததாலும், முகம்
களைப்படைந்து காணப்பட்டது...


அதில் கோமாளி வேஷம் போட்டுவிட்டு..ஷங்கர் நன்றாக பழி வாங்கிவிட்டார்.
வேட்டைக்காரன் பட வெற்றி விழாவின் போது ...ஷங்கர் விஜய்யுடன் நான் படம்
பண்ண வேண்டும் என்பது விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பாக இருக்கிறது..கூடிய
சீக்கிரம் அந்த விருப்பம் நிறைவேறும் என நினைக்கிறேன் என்ரார்..


அவர் பேசி முடித்தவுடன் இது பற்றி விஜய் என்ன பேசுவார் என ரசிகர்கள்
அனைவரும் ஆர்வமுடன் இருந்தார்கள்..நானும் எதிர்பார்த்தேன்.... விஜய் மைக்
முன் வந்ததும்...அழகென்ற சொல்லுக்கு அனுஷ்கா என்று ஜொள்ளு விட்டுக்கொண்டு
பாட ஆரம்பித்தார்..


செம கொடுமை..அட..புண்ணாக்கு என நான் நினைத்தேன்..ஷங்கர் முகத்தில் ஈயாட வில்லை..விஜய் மனைவியும் அட..அசடே என நினைத்திருப்பார்..


நாடே ஆர்வமுடன் உலககோப்பை கடைசி ஓவரில் தோனி நான்கு ரன் எடுக்கமாட்டாரா ?
என காத்திருக்கும் போது சிக்சர் அடிக்காமல் டக் அவுட் ஆனால்
எப்படியிருக்குமோ அப்படியிருந்தது...


விஜய்யின் சொதப்பல்..கடைசி வரை ஷங்கருடனான தன் கூட்டணி பற்றி விஜய்
வாய்திறக்கவே இல்லை...இந்த தலைக்கனத்திற்கு ஷங்கர் இன்று அடித்திருக்கும்
ஆப்பு சூப்பர்..அடட..என்ன ஒரு கண்கொள்ளா காட்சி... ரஜினியே ஷங்கர் கிட்ட
சாப்பிடக்கூட முடியாம அல்லாடுனார்..


இன்னிக்கு விஜய்..சும்மா சும்மா கேரவனுக்குள்ள புகுந்துகிட்டு ,ஒரு
அல்லக்கையை வெளியே நிறுத்தி வெச்சிட்டு, அண்ணன் ரெஸ்ட் எடுக்குறார் என பீலா
விடுவதும்,ஜில்பான்ஸ் பண்ணுவதுமாக இருந்த விஜய்யை இன்று நன்றாக ஷங்கர்
சுளுக்கெடுப்பார் என்றே நம்புகிறேன்..ஷங்கர் வேகத்துக்கு ஈடுகொடுக்க
,முடியாமல் அண்ணன் உச்சா போயிருவார்
நன்றி
TMT