ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

நரை கூறிய அறிவுரை
 T.N.Balasubramanian

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2010-2011

View previous topic View next topic Go down

குருப்பெயர்ச்சி பலன்கள் - 2010-2011

Post by krishnaamma on Wed May 04, 2011 12:41 pm

குரு பகவானின் தன்மைகள்


ஆட்சி வீடுகள் - தனுசு, மீனம்
உச்ச வீடு - கடகம்
நீச்ச வீடு - மகரம்
உகந்த நட்சத்திரங்கள் - புனர்பூசம், விசாகம், பூரட்டாதி
தசையின் காலம் - 16 வருடங்கள்
பார்வைகள் - 5,7,9ஆம் பார்வைகள்
நிறம் - மஞ்சள்
சுவை - இனிப்பு
உலோகம் - தங்கம்
வாகனம் - யானை
நட்புக் கிரகங்கள் - சூரியன், சந்திரன், செவ்வாய்
தானியம் - கொண்டைக் கடலை.
ரத்தினம் - புஷ்பராகம்
திசை - வடக்கு
பஞ்ச பூதங்களில்... - ஆகாயம்
பரிகார ஸ்தலங்கள் - ஆலங்குடி, தென்குடித் திட்டை, திருச்செந்தூர், திருப்புலிவனம், திருவலிதாயம், இலம்பையங் கோட்டூர்.
ஒரு ராசியில் சஞ்சரிக்கும் காலம் - சராசரியாக ஒரு வருடம்
மலர் - முல்லை.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

மேஷம்

Post by krishnaamma on Wed May 04, 2011 12:50 pm

குரு பகவான்,
2011, மே 9 அதிகாலை (மே8 நள்ளிரவு) 1.09 மணிக்கு, மீனராசியில் இருந்து
மேஷராசிக்கு பெயர்ச்சியாகிறார். இவர் 2012 மே 17 வரை இந்த ராசியில்
சஞ்சரிப்பார்.

(அசுவினி, பரணி, கார்த்திகை1)

தன் தகுதிக்கேற்ற செயல்களைச் செய்து வெற்றிக்கனி பறிக்கும் மேஷராசி அன்பர்களே!
உங்கள்
ராசிக்கு பிதா, பாக்ய விரய ஸ்தானாதிபதியாகிய குருபகவான் மீனத்தில் இருந்து
பெயர்ச்சியாகி மேஷத்தில் அமர்வு பெற்றுள்ளார். ஜென்மராசியில் குருபகவான்
அமர்வதால் எந்த செயலிலும் மிகுந்த பொறுப்புணர்வுடன் செயல்படுவது அவசியம்.
ராசியில் உள்ள குரு 5, 7, 9 பார்வையால் பூர்வ, புண்ணிய, புத்திர, களத்திர,
நட்பு ஸ்தானங்களை பார்க்கிறார். குருவின் பார்வை பதிகிற இடங்களின் வழியாக
தாராள நற்பலன் கிடைக்கும்.
அளவுடன் பேச வேண்டும். கடும் உழைப்பால்
முக்கிய தேவைகளை பூர்த்தி செய்வீர்கள். இளைய சகோதரர்களின் ஒத்துழைப்பு
அதிகமாக இருக்காது. வீடு, வாகன வகையில் இப்போது இருப்பதை தக்க வைத்துக்
கொண்டாலே போதும். தாயின் தேவை அறிந்து நிறைவேற்றுவதால் பல நலமும்
பெறுவீர்கள். பூர்வ புண்ணிய பலம் பரிபூரணமாக துணைநிற்கும்.
புத்திரர்கள்
உங்கள் வழிகாட்டுதலை மனமுவந்து ஏற்று படிப்பு, ஒழுக்கத்தில் முன்னேற் றம்
காண்பர். பூர்வசொத்து உள்ளவர்களுக்கு எதிர்பார்த்த பணவரவு கிடைக்கும்.
நீங்கள் நன்மை செய்ய நினைத்தாலும் சிலர் இடைஞ்சல் செய்யும் வகையில்
செயல்படுவர். பொறுமையும் விவேகமும் பின்பற்றுவதால் சிரமம் தவிர்க்கலாம்.
சிறு அளவில் வரும் உடல்நல பாதிப்புகளை தகுந்த சிகிச்சையின் மூலம்
சரிசெய்வீர்கள். ஏற்கனவே உள்ள கடன் நெருக்குதல் தருமென்பதால், புதிய
கடன்களை தேவையின்றி பெறக்கூடாது.
கணவன் மனைவி பொறுமையுடன் செயல்பட்டு
குடும்ப சிரமங்களை ஒழுங்குபடுத்துவர். மகிழ்ச்சியும் நம்பிக்கையும் வளரும்.
நண்பர்கள் முக்கிய தருணங்களில் இயன்ற உதவி புரிவர். பாதுகாப்பு குறைவான
இடங்களுக்கு செல்லக்கூடாது. கஷ்டமான சூழ்நிலையிலும் குடும்பத்தேவை
ஓரளவுநிறைவேறும். வழக்கில் இருந்த தந்தைவழி சொத்து வந்துசேரும்.
குடும்பத்தில் திட்டமிட்ட சுபநிகழ்ச்சி நிறைவேறும்.
தொழிலதிபர்கள்: மருத்துவமனை,
ஓட்டல், கல்வி நிறுவனம், ரியல் எஸ்டேட், விவசாயக்கருவிகள், கட்டு மானப்
பொருட்கள் உற்பத்தி செய்பவர்கள், மருந்து,சோப்பு, பட்டாசு உற்பத்தி
செய்பவர்கள் உற்பத்தி மற்றும் வளர்ச்சிப்பணியில் மிகுந்த கவனம் வேண்டும்.
லாபம் சுமாராக இருக்கும். பிற தொழில் செய்பவர்களுக்கு குறுக்கீடு
அதிகமாகும். பழைய பாக்கியை வசூலிப்பதால் மூலதன தேவைக்கு பயன்படும்.
கூட்டுத்தொழில் புரிபவர்கள் புரிதல் தன்மையுடன் நடந்து முன்னேற்றமும்,
திட்டமிட்ட பணவரவும் அடைவர்.
வியாபாரிகள்:
நகை, ஜவுளி, மளிகை, வாகனம், மொபைல், கட்டுமானப் பொருள், காய்கறி,
இறைச்சி, பழம், குளிர்பானம், விவசாய இடுபொருட்கள், மின்சார உபகரணங்கள்,
பட்டாசு, சமையலறை சாதனங்கள், பேக்கரி, பாத்திர வியாபாரிகள் பலத்த போட்டியை
எதிர்கொள்கிற நிலை அதிகரிக்கும். லாபம் சுமார். மற்ற வியாபாரிகள் லாபம்
குறைத்து விற்பனை செய்ய வேண்டியிருக்கும். இருப்பு வைக்கும் இடங்களில்
பாதுகாப்பு நடவடிக்கைகளை கடைபிடிப்பதால் பொருள் இழப்பைத் தவிர்க்கலாம்.
புதிய நிறுவனங்களுடன் தொடர்பு ஏற்படும்.
பணியாளர்கள்: அரசு,
தனியார் துறையில் பணிபுரிபவர்கள் கவனமாக செயல்படுவதால் மட்டுமே குளறுபடி
அதிகரிக்காத தன்மை இருக்கும். சக பணியாளர்கள் பணிசார்ந்த வளர்ச்சிக்கு
உதவுவர். பதவி உயர்வு, சலுகை பெறுவதில் தாமதம் ஏற்படும்.
பெண்கள்: பணிபுரியும்
பெண்கள் மனதை ஒரு நிலைப்படுத்தி செயல்படுவதால் மட்டுமே பணி நடைமுறை எளிதாக
இருக்கும். வேலைகளை முடிக்க பணி நேரத்துக்கும் அதிகமாக அலுவலகத்தில்
இருக்க வேண்டி வரும். சலுகைகளைப் பெறுவதில் அவசரம் காட்டக்கூடாது.
குடும்பப் பெண்கள் கணவரை அனுசரித்து நடப்பர். செலவை சிக்கனப்படுத்தி
குடும்ப மகிழ்ச்சிக்கு வழிவகுப்பர். புத்திரப்பேறு இல்லாதவர்களுக்கு
நற்பலன் உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள் கடின உழைப்பின் பேரில் சுமாரான
லாபம் பெறுவர்.
மாணவர்கள்:
இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம், விவசாயம், கேட்டரிங், கம்ப்யூட்டர்,
ரசாயனத் துறை சார்ந்த மாணவர்கள் வெளி விவகாரங்களில் கவனம் கொள்வதை
தவிர்ப்பது அவசியம். மற்றதுறை மாணவர்களும் கவனமாகவே இருக்க வேண்டும்.
பத்தாம் வகுப்பு, பிளஸ்2 மாணவர்கள் "டிவி' முதலான பொழுது போக்குகளைத்
தவிர்த்தால் தான் எதிர்பார்த்த மதிப்பெண் பெற இயலும். கடினமாக உழைப்பவர்களை
குரு கை தூக்கி விடுவார். படிப்பிற்கான பணவசதி அளவுடன் இருக்கும். சக
மாணவர்களின் உதவி கிடைத்து மனம் மகிழ்வீர்கள். தந்தையின் வழிகாட்டுதலை
பின்பற்றி நடந்து குடும்பத்திற்கு பெருமை தேடித்தருவீர்கள்.
அரசியல்வாதிகள்:
கடந்த காலங்களில் கிடைத்த புகழை தக்கவைப்பதில் கவனம் அவசியம். அரசு
தொடர்பான செயல்பாடுகளை நிறைவேற்ற தாமதமாகும். நண்பர்களின் ஆலோசனையைப்
பெற்று புதிய திட்டங்களை செயல்படுத்துவீர்கள். ஆதரவாளர்களின் நம்பிக்கை
படிப்படியாக அதிகரிக்கும்.
விவசாயிகள்:
குறைந்த செலவில் அதிக பலன் தருகிற தானியங்களை பயிரிடுவதில் ஆர்வம்
கொள்வீர்கள். அளவான மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் கிடைக்கிற
பணவரவு முக்கிய செலவுகளுக்கு பயன்படும். நிலம் தொடர்பான விவகாரத்தில்
பொறுமை நல்லது.

பாட வேண்டிய பாடல்
காசினி இருளை நீக்கும்
கதிரொளியாகி எங்கும்
பூசனை உலகோர் போற்ற
பொசிப்புடன் சுகத்தை நல்கும்
வாசியேழுடைய தேர்மேல்
மகாகிரி வலமாய் வந்த
தேசிகா எனை ரட்சிப்பாய்
செங்கதிரவனே போற்றி! போற்றி!

பரிகாரம்
தினமும் சூரியோதய வேளையில், சூரியபகவானை வழிபடுவதால் வாழ்வில் நற்பலன் அதிகரிக்கும். சூரியனார்கோவிலுக்கு சென்று வாருங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

ரிஷபம் (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம்)

Post by krishnaamma on Wed May 04, 2011 12:52 pmகுரு பகவான், 2011, மே 9 அதிகாலை (மே8
நள்ளிரவு) 1.09 மணிக்கு, மீனராசியில் இருந்து மேஷராசிக்கு
பெயர்ச்சியாகிறார். இவர் 2012 மே 17 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.

ரிஷபம் (கார்த்திகை 2,3,4 ரோகிணி, மிருகசீரிடம்)

நல்லதை நினைத்து நல்லதையே அறுவடை செய்யும் ரிஷபராசி அன்பர்களே!
உங்கள்
ராசிக்கு அஷ்டம, ஆதாய ஸ்தான அதிபதியாகிய குருபகவான் மீனத்தில் இருந்து
பெயர்ச்சியாகி ராசிக்கு பன்னிரெண்டாம் இடமான மேஷத்தில் அமர்வு
பெற்றுள்ளார். இதனால் உங்கள் வாழ்வில் பல மாற்றங்கள் உருவாகும். குருவின்
அமர்வு சிரமம் தந்தாலும், தனது 5, 7, 9 ஆகிய பார்வையால் தாய், வீடு, கடன்,
பிணி, ஆயுள் ஸ்தானத்தை பார்ப்பதால் அவற்றின் மூலம் சிறப்பான பலன்
கிடைக்கும்.
பணவரவு குறையும் என்பதால் சிக்கனத்தை தாரக மந்திரமாகக்
கொள்ள வேண்டும். முக்கிய தேவைகளுடன் நிறுத்திக்கொண்டால் கடன் ஏற்படாமல்
தவிர்க்கலாம். குடும்ப சூழ்நிலை காரணமாக இடமாற்றம், நெடுந்தூர பயணம்
ஏற்படும். தம்பி, தங்கைகளிடம் பாசம் அதிகரிக்கும். வீடு, வானகத்தில்
கிடைக்கிற வசதி உங்களை திருப்தி அடையச்
செய்யும். தாய் சொல்லும் அறிவுரை வாழ்வில் மாற்றத்தை ஏற்படுத்தும். புத்திரர்கள் ஆடம்பரப் பொருட்களை கேட்டு நிர்ப்பந்தம் செய்வர்.
சொத்து
ஆவணங்களை பிறர் பொறுப்பில் தரக்கூடாது. உடல்நலக்குறைவு சரியாகி ஆரோக்கியம்
அதிகரிக்கும். வழக்கு, விவகாரங்களில் சாதகமான தீர்வு கிடைக்கும். புதிய
விவகாரங்களில் ஈடுபடாமல் விலகியிருப்பது நல்லது.
இதுவரை எதிரியாக நடந்த
உறவினர்கள் பாŒக்கரம் நீட்டும் விசித்திர சூழ்நிலை ஏற்படும். கணவன், மனைவி
கவுரவப்பிரச்னையால் கருத்து வேறுபாடு கொள்வர். விட்டுக்கொடுத்து
செல்லவும்.
நண்பர்கள் கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து செல்வர். சில
கஷ்டமான சூழ்நிலைகளை எதிர்கொண்டாலும் அதிலிருந்து விடுபட குருவருள்
துணைநிற்கும். தந்தைவழி உறவினர்கள் மரியாதையுடன் நடந்துகொள்வர்.
தொழிலதிபர்கள்:
லாட்ஜ், ஓட்டல், மருத்துவமனை, பால், டிராவல்ஸ், கல்வி, நிதிநிறுவனம்,
காகிதம், டெக்ஸ்டைல்ஸ், ஆட்டோமொபைல், கிரானைட் தொழிற்சாலை அதிபர்கள், மரம்,
பர்னிச்சர், தோல், பிளாஸ்டிக், கண்ணாடி தொழிலதிபர்களுக்கு சிறு சுணக்கநிலை
இருக்கும். ஒப்பந்தங்களுக்கு ஏற்ப உற்பத்தியை விரைவுபடுத்துவது அவசியம்.
மற்ற தொழில் செய்பவர்களுக்கு நிர்வாகத்தின் புகழையும், உற்பத்தி தரத்தையும்
தக்கவைக்க கடுதல் முயற்சி தேவைப்படும். பணியாளர்களின் ஒத்துழைப்பு பெற
அதிக சம்பளம் கொடுக்க வேண்டியிருக்கும். பயணங்களை பயன்கருதி மேற்கொள்வதால்
நன்மை உண்டாகும்.
வியாபாரிகள்: நகை,
ஜவுளி, மளிகை, அழகு சாதனம், பால், பிளாஸ்டிக், தோல், கண்ணாடி பொருட்கள்,
எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனம், கட்டுமானப்பொருட்கள், ஆட்டோமொபைல்
உதிரிபாகங்கள், மருந்து, எண்ணெய், பழம், பூ, காய்கறி வியாபாரிகளுக்கு அதிக
பணத்தேவை ஏற்படும். மற்ற பொருள்களை விற்பவர்களுக்கு போட்டி குறைந்து
விற்பனை வளர்ச்சியால் மனதில் நம்பிக்கை வளரும். கடன் பெற்று மூலதனம்
இடவேண்டியிருக்கும். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் ஒற்றுமையுடன்
முன்னேற்றம் காண்பர்.
பணியாளர்கள்:
அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் முக்கிய வேலைகளை அதிகாரிகளின்
ஆலோசனை பெற்று நிறைவேற்றுவதால் சிரமம் தவிர்க்கலாம். உங்கள் மீது
நிர்வாகத்தினருக்கு இருந்த சந்தேக எண்ணம் விலகும். உங்களுடன் ஒத்துழைத்த
பணியாளர்கள் விலகினாலும், விலகிச்சென்றவர்கள் விரும்பி வந்து
ஒட்டிக்கொள்வர். சலுகைகள் ஓரளவுக்கு இருக்கும்.
பெண்கள்:
பணிபுரியும் பெண்கள் எதிர்வரும் குறுக்கீடுகளை உரிய வகையில் சரிசெய்வர்.
தக்க நபர்களின் ஆலோசனை பணியில் வேகத்தைக் கூட்டும். சலுகைகள் ஓரளவு
கிடைக்கும். குடும்பப் பெண்கள் தாய்வழி உறவினர்களின் பாராட்டு பெறுவர்.
கணவரின் கருத்துக்கு மரியாதை தருவதால் மட்டுமே குடும்ப நலன் சிறக்கும்.
வீட்டுச்செலவில் சிக்கனம் நல்லது. சுயதொழில் புரியும் பெண்கள் சந்தையில்
போட்டி குறைந்து நம்பிக்கையுடன் செயல்படுவர். உற்பத்தி, விற்பனை
முன்னேற்றும். லாபம் சுமாராக இருக்கும்.
மாணவர்கள்:
மருத்துவம், இன்ஜினியரிங், சட்டம், விவசாயம், வணிகவியல், கம்ப்யூட்டர்,
நூலக அறிவியல் துறை மாணவர்கள் படிப்பதற்குரிய அனுகூல சூழ்நிலை வளரும்.
மதிப்பெண் பெறுவதில் முன்னேற்றம் காண்பர். மற்றதுறை மாணவர்கள் இவர்களை விட
நன்றாகப் படிப்பர். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2மாணவர்களின் கல்வித்திறன்
முன்னேறும். சக மாணவர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு சரியாகும். தாயின்
பாசம் கிடைக்கும். படிப்பு முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் ஓரளவு
அனுகூலம் உண்டு.
அரசியல்வாதிகள்: எதிரிகள்
மனமாற்றத்துடன் உங்களிம் நட்பு பாராட்டுவர். அரசு தொடர்பான செயல்பாடுகளில்
முன்னேற்றம் இராது. ஆதரவாளர்கள் நல்ல முறையில் பழகுவர். புத்திரர்களின்
உதவி சிறு அளவில் மட்டுமே கிடைக்கும். தலைமையின் அன்பைப் பெற கடும் முயற்சி
எடுப்பீர்கள்.
விவசாயிகள்: இடுபொருட்கள்
விலை உயர்வு காரணமாக மகசூலில் சிறு பாதிப்பு ஏற்படும். விளைபொருட்களுக்கு
ஓரளவே விலை கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் முன்னேற்றமும் கூடுதல் பணவரவும்
கிடைக்கும். நிலம் தொடர்பான சிரமங்களுக்கு தீர்வு வரும்.

பாட வேண்டிய பாடல்
கருவுடை மேகங்கள் கண்டால்
உன்னைக் கண்டாலொக்கும் கண்கள்
உருவுடையாய்! உலகேழும்
உண்டாக வந்து பிறந்தாய்
திருவுடையாள் மணவாளா!
திருவரங்கத்தே கிடந்தாய்
மருவி மணம் கமழ்கின்ற
மல்லிகைப்பூ சூட்ட வாராய்.

பரிகாரம்
ரங்கநாதரை வழிபடுவதால் சிரமம் குறைந்து பணவசதி கூடும். ஸ்ரீரங்கம் ரங்கநாதர் கோயிலுக்கு சென்று வாருங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

மிதுனம் (மிருகசீரிடம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3)

Post by krishnaamma on Wed May 04, 2011 12:55 pmகுரு பகவான், 2011, மே 9 அதிகாலை (மே8
நள்ளிரவு) 1.09 மணிக்கு, மீனராசியில் இருந்து மேஷராசிக்கு
பெயர்ச்சியாகிறார். இவர் 2012 மே 17 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.

மிதுனம் (மிருகசீரிடம் 3,4 திருவாதிரை, புனர்பூசம் 1,2,3)

மாறுபட்ட கருத்துக்களை துணிவுடன் தவிர்த்திடும் மிதுனராசி அன்பர்களே!
உங்கள்
ராசிக்கு சப்தம, தொழில் ஸ்தான அதிபதியாகிய குருபகவான் மீனத்தில் இருந்து
பதினொன்றாம் இடமாகிய மேஷத்தில் அமர்வு பெற்றுள்ளார். ஆதாய ஸ்தானத்தில் உள்ள
குரு பலநாளாக சிந்தித்து, திட்டமிட்ட செயல்களை இனிதாக நிறைவேற்ற உதவுவார்.
5, 7, 9 ஆகிய பார்வையால் ராசிக்கு மூன்றாம் இடமான புகழ், ஐந்தாம் இடமான
புத்திரம், பூர்வ புண்ணியம், ஒன்பதாம் பார்வையாக களத்திரம், நட்பு
ஸ்தானங்களை பார்க்கிறார். மேற்கண்ட ஸ்தானங்களின் வழியாகவும், அதிக அளவில்
சுபமான பலன் வந்து சேரும்.
நம்பிக்கையுடன் செயல்பட்டு தாராள வெற்றி
பெறுவீர்கள். அக்கம் பக்கத்தவருடன் இருந்த மனவேறுபாடு விலகி அன்பு வளரும்.
அதிக பணவரவு பெறுவதற்கான புதிய வழி பிறக்கும். தகுந்த முறையில் பயன்படுத்தி
பணம் சேமிப்பீர்கள். தம்பி, தங்கை வகையில் தாமதமான சுப நிகழ்ச்சி இனிதாக
நிறைவேறும். வீடு, வாகன வகையில் திட்டமிட்ட வளர்ச்சிப்பணிகளை நிறைவேற்றி
மகிழ்வீர்கள். தாய்வழி உறவினர் உங்கள் நற்குணங்களை மதித்து பாசத்துடன்
நடந்துகொள்வர்.
புத்திரர்கள் சிறப்பாகப் படித்து படிப்பிலும், வேலை
வாய்ப்பிலும் முன்னேற்றம் காண்பர். குடும்பத்திற்கான முக்கிய தேவைகள்
பெருமளவில் பூர்த்தியாகும். சொத்தும் வாங்க யோகமுண்டு. நல்ல பழக்க
வழக்கங்களை பின்பற்றி உடல்நலத்தை சிறப்புற பாதுகாப்பீர்கள். எதிரிகள்,
துன்பம் அணுகாத சந்தோஷ வாழ்வு பெறுவீர்கள். நிலுவை கடன் அறிந்து
சரிசெய்வீர்கள்.
தம்பதியர் ஒருவருக்கொருவர் அன்புடன் செயல்படுவர்.
குடும்பத்தில் மகிழ்ச்சி நிறைந்திருக்கும். திட்டமிட்ட சுபநிகழ்ச்சியை
சிறப்பாக நடத்த தாராள பணவசதி கிடைத்து நிறைவேறும். நற்குணம் உள்ள நண்பர்கள்
உதவிகரமாக செயல்படுவர். சுற்றுலா பயணம் மேற்கொள்வீர்கள். தந்தை யின்
ஆலோசனை முக்கிய பலன்பெற வழிகாட்டும்.
தொழிலதிபர்கள்: ஓட்டல்,
மருத்துவமனை, கல்வி, நிதி நிறுவனம், லாட்ஜ், டிராவல்ஸ், டெக்ஸ்டைல்ஸ்,
காகிதம், பட்டாசு, எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், மினரல்
வாட்டர்,கட்டுமானப் பொருள், உற்பத்தி செய்பவர்கள் நடத்துபவர்கள் வியத்தகு
முன்னேற்றம் பெறுவர். மற்ற தொழில் செய்வோருக்கு அபரிமிதமான வளர்ச்சியும்,
நல்ல லாபமும் கிடைக்கும். பணியாளர்களின் ஒத்துழைப்பு திருப்திகரமாக
இருக்கும். பொருட்களின் தரம் உயர்ந்து கூடுதல் ஆர்டர் கிடைக்கும்.
சிலருக்கு தொழிலதிபர் சங்கங்களில் பதவி கிடைக்கும். தொழில் சிறக்க
புத்திரரின் பங்களிப்பும் உண்டு.
வியாபாரிகள்: நகை,
ஜவுளி, மளிகை, மருந்து, ஸ்டேஷனரி, பேக்கரி, அழகுசாதனம், ஆட்டோமொபைல்
உதிரிபாகங்கள், இறைச்சி, பூஜை பொருள், புத்தகம், "சிடி', தானியங்கள்,
மின்சார உபகரணங்கள், குளிர்பானம், கட்டுமானப் பொருட்கள், தோல்பொருள்,
பிளாஸ்டிக், கண்ணாடி பொருள் வியாபாரம் செய்பவர்களுக்கு விற்பனை உயர்ந்து
தாராள பணவரவு கிடைக்கும். மற்றவர்களுக்கு இவர்களை விட அதிக லாபத்துடன்
புதிய கிளை துவங்கும் முயற்சியும் நிறைவேறும். சக வியாபாரிகள் உங்கள் மீது
நல் அபிப்ராயம் கொள்வர். புத்திரர்களின் ஆலோசனை வியாபார முன்னேற்றத்திற்கு
உதவும்.
பணியாளர்கள்: அரசு,
தனியார் துறையில் பணிபுரிபவர்கள் உற்சாகமாக செயல்புரிந்து நிர்வாகத்தின்
பார்வை தங்கள் மீது திரும்பும் வகையில் நடந்து கொள்வர். பதவி உயர்வு, சொந்த
ஊருக்கு மாற்றம், சம்பள உயர்வு, ஓவர்டைம் உள்ளிட்ட சலுகைகள், பாராட்டு,
பரிசு பெறலாம். சக பணியாளர்களின் அன்பில் மனம் நெகிழ்வீர்கள்.
பெண்கள்: பணிபுரியும்
பெண்கள் அதிகாரிகளின் வழிகாட்டுதல் கிடைக்கப்பெறுவர். பணித்தரம் சிறந்து
குறித்த காலத்தில் வேலைகள் முடியும். பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம்,
பிற சலுகைகள் கிடைக்கும். குடும்பப் பெண்கள் கணவரின் பாசம் பெற்று நிம்மதி
நிறைந்த வாழ்வு நடத்துவர். குடும்ப செலவுக்கான பணவசதி நன்றாக இருக்கும்.
புத்திரப்பேறு, பொன், பொருள் சேர்க்கை வகையில் அனுகூல பலன் உண்டு.
சுயதொழில் புரியும் பெண்கள் அதிக மூலதனம் இடும் வகையில் வருமானம் கூடும்.
உற்பத்தி, விற்பனை சிறந்து உபரி வருமானம் கிடைக்கும். உபதொழில் தொடங்கலாம்.
மாணவர்கள்:
இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம், விவசாயம், வங்கியியல், வணிகவியல்,
ஆசிரியர் பயிற்சி, நிதி மேலாண்மை, இலக்கிய ஆராய்ச்சி, கம்ப்யூட்டர் துறைக
ளில் பயிற்சிபெறும் மாணவர்களுக்கு கடந்த காலத்தில் மனதில் இருந்த
குழப்பநிலை நீங்கும். படிப்பில் ஆர்வம் வளரும். மற்ற துறை மாணவர்களும்
நன்றாகப் படிப்பர். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் கடுமையாக
பாடுபட்டால், சிறந்த ராங்க் பெறும் அளவுக்கு முன்னேற்றம் கிடைக்கும். சக
மாணவர்கள் உதவுவர். படிப்புக்கான பணவசதி எதிர்பார்த்த வகையில் கிடைக்கும்.
சிலர் விளையாட்டில் பரிசு, பாராட்டு பெறுவர். படிப்பை முடித்தவர்களுக்கு
வேலைவாய்ப்பில் முன்னுரிமை உண்டு.
அரசியல்வாதிகள்:
உங்களை ஏளனமாக நினைத்தவர்கள் கூட வியந்து பார்க்கும் நிலை ஏற்படும்.
சமூகப்பணி சிறந்து மனதை மகிழ்விக்கும். ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் உங்களை
அணுகுவர். வெகுநாள் எதிர்பார்த்த பதவி தேடிவரும். வழக்கு, விவகாரங்களில்
சாதகமான தீர்வு கிடைக்கும். எதிரிகள் விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன்
செயல்படுவர். அரசியல்பணி சிறக்க புத்திரராலும் உதவி உண்டு. வாகனம், சொத்து
திட்டமிட்டபடி வாங்குவீர்கள்.
விவசாயிகள்: மகசூல்
சிறந்து உற்பத்தி பெருகும். கால்நடை வளர்ப்பில் முன்னேற்றமும் உபரி
பணவருமானமும் உண்டு. கூடுதல் நிலம் வாங்கலாம். பரிகாரம்: திருச்செந்தூர்
சென்று முருகப்பெருமானை தரிசித்து வந்தால், பலன்களின் அளவு மேலும் கூடும்.

பாட வேண்டிய பாடல்
வந்த வினையும் வருகின்ற
வல்வினையும் கந்தனென்று
சொல்லக் கலங்கிடுமே!
செந்தில்நகர் சேவகா என்று
திருநீறு அணிவார்க்கு
மேவ வராதே வினை.

பரிகாரம்
முருகப்பெருமானை வழிபட வாழ்வில் அனைத்து நன்மைகளும் உண்டாகும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சி பலன்கள் - 2010-2011

Post by krishnaamma on Wed May 04, 2011 12:57 pmகுரு பகவான், 2011, மே 9 அதிகாலை (மே8
நள்ளிரவு) 1.09 மணிக்கு, மீனராசியில் இருந்து மேஷராசிக்கு
பெயர்ச்சியாகிறார். இவர் 2012 மே 17 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.

கடகம் (புனர்பூசம் 4, பூசம், ஆயில்யம்)

ஒழுக்கத்தை விருப்பமுடன் பின்பற்றி வாழும் கடகராசி அன்பர்களே!
உங்கள்
ராசிக்கு பிணி, விவகாரம், பிதா, பாக்ய ஸ்தான அதிபதியாகிய குருபகவான்
மீனத்தில் இருந்து பத்தாம் இடமாகிய மேஷத்தில் அமர்வு பெற்றுள்ளார்.
"பத்தில் குரு பதவிக்கு இடர்' என்பது ஜோதிட பழமொழி. குருபகவான் தனது 5, 7, 9
ஆகிய பார்வைகளால் தன, குடும்ப, வீடு, வாகன, பிணி, வில்லங்க ஸ்தானங்களைப்
பார்க்கிறார். இதனால் சிரம பலன்கள் குறைந்து நன்மை ஏற்படும். மனதை
ஒருநிலைப்படுத்தி செயல்படுவதால் செயல்பாடு களில் ஓரளவு வெற்றி கிடைக்கும்.
பணவரவு குறையலாம் என்பதால், கிடைக்கிற வாய்ப்பை பயன்படுத்தி பலன் பெறலாம்.
பேச்சில்
சாந்தமும் சத்தியத்தை பின்பற்றும் குணமும் நிறைந்திருக்கும். தம்பி,
தங்கைகளுடன் குடும்ப விவகாரங்களில் கருத்து வேறுபாடு ஏற்படலாம். தாயின்
ஆசியும், தாய்வழி உறவினரால் நன்மையும் ஏற்படும். வீடு, வாகன வகையில்
திருப்திகரமான பலன் தற்போதைய நிலையில் தொடரும். புத்திரர்கள் தங்கள்
தேவைகளை நிறைவேற்றிக்கொள்ளும் பொருட்டு உங்களை நிர்ப்பந்தம் செய்வர்.
அவர்களிடம் பக்குவமாக நடந்து கொள்வது நல்லது.
பூர்வ சொத்தில் நம்பிக்கை
குறைவான நபர்களை பணியில் அமர்த்தக்கூடாது. வீடு வாடகைக்கு விடுவோர் மிக
கவனமாக ஆட்களை குடியமர்த்த வேண்டும். உடல்நலக்குறைவு நீங்கி உற்சாகம்
பெறுவீர்கள். வழக்கு விவகாரத்தில் இருந்த தொல்லை குறையும். கணவன், மனைவி
இடையே கருத்து வேறுபாடு வரலாம் என்பதால், விட்டுக்கொடுக்கும்
மனப்பான்மையுடன் நடந்துகொள்வது நல்லது. நண்பர்களின் செயல்பாடுகளில் குற்றம்
சொல்வது, அளவுக்கு மீறி பணபரிவர்த்தனை செய்வது பிரிவைத் தரும். கவனம்.
சங்கங்களில் பொறுப்பான பதவியை பெற்றவர்கள், பதவிப்பொறுப்பில் இருந்து விடுபட விரும்புவர். தந்தைவழி சொத்தின் பலன் ஓரளவு கிடைக்கும்.
தொழிலதிபர்கள்:
ரியல் எஸ்டேட், மருத்துவமனை, ஓட்டல், டிராவல்ஸ், குளிர்பானம், லாட்ஜ்,
கல்வி, நிதி நிறுவனம் நடத்துவோர், கடல்சார் பொருட்கள், வாசனை திரவியம்,
எண்ணெய், கட்டுமானப் பொருள், டெக்ஸ்டைல்ஸ், காகிதம், தோல், மெட்டல்
தொடர்பான தொழில் செய்பவர்கள் உற்பத்தியை பெருக்குவதிலும் நிர்வாக நடைமுறையை
பராமரிப்பதிலும் சில குறுக்கீடுகளைச் சந்திக்கலாம். போட்டி அதிகரிக்கும்.
லாபம் சுமாராக இருக்கும். மற்ற தொழில் செய்பவர்கள் ஓரளவுக்கு ஆர்டர்
பெறுவார்கள். பணவரவு திருப்திகரமாகும்.
பணியாளர்கள்:
அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும்.
ஆர்வமுடன் பணிபுரிவதால் மட்டுமே குளறுபடி வராத தன்மை இருக்கும். சிலர்
நிர்வாகத்தின் கண்டிப்புக்கு உட்படுவர். அரியர்ஸ் தொகை கிடைக்கும்.
சகபணியாளர்கள் நல்ல எண்ணத்துடன் அணுகும் சூழ்நிலை உருவாகும். பணபரிவர்த்தனை
செய்கிற பணியில் உள்ளவர்கள் பொறுப்புடன் செயல்படுவது அவசியம்.
வியாபாரிகள்:
நகை, ஜவுளி, மளிகை, குளிர்பானம், மருந்து, மினரல் வாட்டர், வாசனை
திரவியம், கட்டுமானப்பொருள், பாத்திரம், எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ்
சாதனங்கள், கண்ணாடி, தோல், பிளாஸ்டிக், ரப்பர் பொருட்கள், ஆட்டோமொபைல்
உதிரிபாகங்கள் வியாபாரிகள் போட்டியை சமாளிக்க போராடுவர். விற்பனை ஓரளவுக்கு
இருக்கும். லாபம் சுமார் நிலை. கூட்டு வியாபாரம் செய்பவர்கள்
ஒருவருக்கொருவர் நம்பிக்கை கொள்வதில் குளறுபடி ஏற்படலாம்.
பெண்கள்:
பணிபுரியும் பெண்கள் பணிச்சுமைக்கு உட்படுவர். நிர்வாகத்தின் வழிகாட்டுதலை
தகுந்த முறையில் பின்பற்றுவதால் மட்டுமே நற்பெயர் பெறலாம். சலுகைகள்
கிடைக்க பொறுமை காப்பது அவசியம். குடும்பப் பெண்கள் கணவரின் சிரமங்களை
சரிசெய்ய இயன்ற வகையில் உதவுவர். தாய்வீட்டு சீர்முறை எதிர்பார்த்தபடி
கிடைக்கும். வீட்டுச்செலவுக்கு வரவும் செலவும் சரியென செல்லும். சுயதொழில்
புரிபவர்கள் வாடிக்கையாளர்களை தக்கவைப்பதில் கவனம் கொள்வது அவசியம்.
உற்பத்தி, விற்பனை சுமாராக இருக்கும்.
மாணவர்கள்:
இன்ஜினியரிங், மருத்துவம், விவசாயம், சட்டம், கேட்டரிங், இதழியல்,
கம்ப்யூட்டர், ஓட்டல் மேனேஜ்மென்ட், ஆசிரியர் பயிற்சி, வங்கியியல்,
வணிகவியல், ரசாயனம், பவுதிகத்துறை மாணவர்கள் மனதில் இருந்த குழப்பம் விலகி
மிகுந்த கருத்துடன் செயல்படுவர். மற்ற துறை மாணவர்களுக்கும் படிப்பில்
கவனம் அதிகரிக்கும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் தரத்தேர்ச்சியும்
நற்பெயரும் பெறுவார்கள். சக மாணவர்களுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடு
சரியாகும். படிப்புக்கான பணவசதி திருப்திகரமாக கிடைக்கும். தாய்வழி உறவினர்
விரும்பி உபசரிப்பர். பயிற்சி நிறைவு பெற்றவர்களுக்கு வேலைவாய்ப்பில்
ஓரளவு அனுகூலம் உண்டு.
அரசியல்வாதிகள்: கடந்த
காலத்தில் பெற்ற நற்பெயரை தக்கவைப்பதில் கவனம் கொள்வீர்கள். அரசு தொடர்பான
காரியம் நிறைவேறுவதில் அனுகூலம் வளரும். எதிரிகளும் அனுகூலத்துடடன்
நடந்துகொள்வர். தாய்வழி உறவினர்கள் இயன்ற உதவிபுரிவர். வழக்கு
விவகாரங்களில் அனுகூலத் தீர்வு கிடைக்கும். அரசியல் பணிக்கு உதவுவதில்
புத்திரர்கள் தயக்கம் கொள்வர்.
விவசாயிகள்:
ஓரளவு மகசூல் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் உபரி பணவரவு உண்டு. நிலம்
தொடர்பான விவகாரங்களில் சாதகத்தீர்வு ஏற்படும். புதிய நிலம் வாங்குவதில்
நிதான நடவடிக்கை அவசியம்.

பாட வேண்டிய பாடல்
வாள்நுதற் கண்ணியை
விண்ணவர் யாவரும் வந்திறைஞ்சி
பேணுதற்கு எண்ணிய
எம்பெருமாட்டியை பேதை நெஞ்சில்
காணுதற்கு அண்ணியள் அல்லாத
கன்னியைக் காணும் அன்பு
பூணுதற்கு எண்ணிய எண்ணமன்றோ
முன்செய் புண்ணியமே!

பரிகாரம்
அபிராமி அன்னையை வழிபடுவதால் மனக்கஷ்டம், பணநஷ்டம் வராத நன்னிலை பெறலாம். திருக்கடையூர் சென்று அபிராமியை வழிபட்டு வாருங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1)

Post by krishnaamma on Wed May 04, 2011 1:00 pm


குரு பகவான், 2011, மே 9 அதிகாலை (மே8
நள்ளிரவு) 1.09 மணிக்கு, மீனராசியில் இருந்து மேஷராசிக்கு
பெயர்ச்சியாகிறார். இவர் 2012 மே 17 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.

சிம்மம் (மகம், பூரம், உத்திரம் 1)

இன்பவாழ்வின் திசை நோக்கி திரும்பியுள்ள சிம்மராசி அன்பர்களே!
உங்கள்
ராசிக்கு பூர்வ புண்ணிய, புத்திர, அஷ்டம ஸ்தான அதிபதியாகிய குரு பகவான்,
ஒன்பதாம் இடமான மேஷத்திற்கு பெயர்ச்சியாகி உள்ளார். குருவின் பார்வை
ராசியில் பதிகிறது. குரு தனது 5, 7, 9 ஆகிய பார்வையால் முறையே ராசி, புகழ்,
புண்ணிய, புத்திர ஸ்தானங்களை பார்க்கிறார். கடந்த காலங்களில் நீங்கள்
செய்த நற்செயல்களின் பலன் இப்போது தேடி வந்து உதவிசெய்யும். மனதில்
புத்துணர்வு பெறுவீர்கள். நல்ல சிந்தனைகளும் புதிய செயல் திட்டங்களும்
உருவாகி வெற்றியைத்தரும். பேச்சில் நியாயம் நிறைந்திருக்கும். பணம்
தாராளமாக கிடைக்கும். உறவினர், நண்பர்களுக்கு உதவி புரிந்து புகழ்
பெறுவீர்கள். தம்பி, தங்கைகள் உயர்ந்து உங்களையும் மதிப்புடன் நடத்துவர்.
அசாத்தியமான செயல்களையும் எளிதாக நிறைவேற்றுவீர்கள். வீடு, வாகன வகையில்
பெறுகிற வசதி திருப்திகரமாக இருக்கும்.
புதிய வீடு, வாகனம் வாங்குகிற
யோகம் உண்டு. தாய்வழி உறவினர்களிடம் இருந்த மனவேறுபாடு சரியாகும்.
பூர்வசொத்தில் பெறுகிற வருமானத்தின் அளவு உயரும். புத்திரர்கள் உங்கள் சொல்
கேட்டு நடந்து படிப்பு, நல்ஒழுக்கத்தில் சிறப்பிடம் பெறுவர்.
பிள்ளைகளால்
பெருமை பெற உகந்த காலம். உடல்நலம் நன்றாக இருக்கும் என்பதால் சந்தோஷமாக
இருப்பீர்கள். வழக்கு, விவகாரங்களில் சாதகநிலை ஏற்படும். எதிரிகளின்
கெடுசெயலை முறியடிக்க தகுந்த யுக்தியும், உறவினர்களின் ஆதரவும் கிடைக்கும்.
கணவன், மனைவி ஒற்றுமையுடன் செயல்பட்டு குடும்பநலன் பேணுவர். சுற்றுலா
பயணங்கள்
இனிதாக நிறைவேறும். நண்பர்கள் உங்களின் கருத்துக்களை நல்மனதுடன் ஏற்றுக்கொள்வர்.
தொழிலதிபர்கள்: ரியல்
எஸ்டேட், கல்வி, நிதி நிறுவனம், லாட்ஜ், ஓட்டல், டிராவல்ஸ் நடத்துவோர்,
டெக்ஸ்டைல்ஸ், காகிதம், தோல், மினரல் வாட்டர், பால்பண்ணை, வாகனம் சார்ந்த
தொழிலதிபர்கள் இதுவரை இருந்த தடை விலகி கூடுதல் உற்பத்தி செய்வார்கள்.
லாபம் நன்றாக இருக்கும். பிறதொழில் செய்பவர்கள் இவர்களை விட நல்ல லாபம்
பெறுவர்.
லட்சியங்கள் நிறைவேறும். பொருட்களின் தரம் உயரும். தொழில்
கூட்டமைப்புகளில் சமூக அந்தஸ்து உள்ள பதவிப்பொறுப்பு கிடைக்கும்.
பணியாளர்களின் ஒத்துழைப்பு திருப்திகரமாகும். புத்திரர்கள் தொழில் சிறக்க
உதவுவர். உபதொழில் துவங்க யோகம் உண்டு.
வியாபாரிகள்: நகை,
ஜவுளி, வாகனம், மளிகை, அழகு சாதனம், பர்னிச்சர், தோல் பொருட்கள், கண்ணாடி,
பீங்கான், பிளாஸ்டிக் பொருட்கள், கட்டுமானப் பொருள், ஆட்டோமொபைல்
உதிரிபாகங்கள் வியாபாரம் செய்பவர்கள் விற்பனை சிறக்க புதிய நடைமுறையை
பின்பற்றி வளர்ச்சியும், தாராள பண வரவும் பெறுவர். பிற பொருட்களை
விற்பவர்களுக்கு இவர்களை விட நல்ல லாபம் கிடைக்கும். வியாபார கூட்டமைப்பில்
சிலருக்கு பதவி கிடைக்கும். சரக்கு வாகனம் வாங்குவதற்கு அதிக அனுகூலம்
உள்ளது. வியாபாரம் பெருக புத்திரர் சொல்லும் திட்டங்களை
செயல்படுத்துவீர்கள். நீண்டகால கடன் தீரும். பாக்கிகளை வசூலிக்க சாதகநிலை
ஏற்படும்.
பணியாளர்கள்: அரசு,
தனியார் துறையில் பணிபுரிபவர்கள் தமக்கு வழங்கப்பட்ட பணி இலக்கை குறித்த
காலத்தில் நிறைவேற்றுவர். நிர்வாகத்திடம் நற்பெயரும், பதவி உயர்வு, சம்பள
உயர்வு உள்ளிட்ட சலுகைகளும் தேடிவரும். சக பணியாளர்கள் மதிப்பு
மரியாதையுடன் நடந்துகொள்வர். கூடுதல் வேலைவாய்ப்பு கிடைப்பதை பயன்படுத்தி
முன்னேற்றம் பெறுவீர்கள். நினைத்த பொருட்களை வாங்குமளவு வாய்ப்பு வசதி
பெருகும்.
பெண்கள்: பணிபுரியும்
பெண்கள் பணிகளை எளிமையாக முடிப்பர். நிர்வாகத்திடம் நற்பெயர் ஏற்படுவதுடன்
பதவி உயர்வு, சம்பள உயர்வு, இடமாற்றம் உள்ளிட்ட சலுகைகள் கிடைக்கும்.
குடும்பப் பெண்கள் தமக்குரிய பொறுப்பை உணர்ந்து குடும்ப வாழ்வை
சீராக்குவர். கணவரின் அன்பும், பணவசதியும் வாழ்க்கை வளம் பெற உதவும்.
புத்திரப்பேறுக்குரிய வாய்ப்பு உண்டு. தகுதிக்கேற்ப ஆபரணச் சேர்க்கை
கிடைக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் உற்பத்தி, விற்பனை சிறந்து தாராள
பணவரவு காண்பர். கணவர், தோழியின் உதவியால் தொழில் அபிவிருத்திப்பணிகள்
நிறைவேறும்.
மாணவர்கள்:
இன்ஜினியரிங், மருத்துவம், விவசாயம், சட்டம், ஆசிரியர் பயிற்சி, இதழியல்,
வணிகவியல், ஓட்டல் மேனேஜ்மென்ட், பியூட்டிஷியன், பிரிண்டிங் டெக்னாலஜி,
பயோடெக்னாலஜி, கம்ப்யூட்டர் துறை மாணவர்கள் ஞாபகத்திறன் அதிகரித்து
தரத்தேர்ச்சி பெறுவர். பிற துறை மாணவர்களுக்கு ஆசிரியர், உறவினர்களின்
பாராட்டு கிடைக்குமளவு படிக்கும் திறன் உயரும். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2
மாணவர்கள் முயன்றால் மாநில ராங்க் கூட பெறலாம். படிப்புக்கு தேவையான பணவசதி
சீராக இருக்கும். சக மாணவர்கள் நட்புடன் நடந்து கொள்வர். படிப்பை
முடித்தவர்களுக்கு தகுதியான வேலை கிடைக்கும். சிலர் விளையாட்டுத் துறையில்
சாதனை நிகழ்த்துவர்.
அரசியல்வாதிகள்:
சமூகப்பணியில் புத்துணர்வுடன் செயல்படுவீர்கள். திட்டங்கள் நிறைவேறி
கூடுதல் ஆதரவாளர்களை பெற்றுத்தரும். எதிர்பார்த்த பதவி கிடைக்கும். சொத்து
சேர்க்கை உண்டு. சுபநிகழ்ச்சி, விருந்து உபசரிப்புகளில் கலந்துகொள்வீர்கள்.
புத்திரர்கள் உங்கள் பணி சிறப்புபெற உதவிபுரிவர். எதிரிகளே வியக்கும்
வகையில் வாழ்க்கைத்தரம் உயரும்.
விவசாயிகள்:
விவசாயப்பணிகள் திட்டமிட்டபடி நிறைவேறும். மகசூல் அதிகரிக்கும். கால்நடை
வளர்ப்பில் சுமாரான லாபம் உண்டு. பூர்வ சொத்தில் வளர்ச்சியும் உபரி
பணவரவும் பெறுவீர்கள். நில விவகாரங்கள் தொந்தரவு தராது.

பாட வேண்டிய பாடல்
யாவையும் படைப்பாய் போற்றி
யாவையும் துடைப்பாய் போற்றி
யாவையும் ஆனாய் போற்றி
யாவையும் அல்லாய் போற்றி
யாவையும் அறிந்தாய் போற்றி
யாவையும் மறந்தாய் போற்றி
யாவையும் புணர்ந்தாய் போற்றி
யாவையும் பிரிந்தாய் போற்றி

பரிகாரம்
சிவபெருமானை வழிபடுவதால் செயல்களின் வெற்றி அதிகரிக்கும். மதுரை சுந்தரேஸ்வரரை வழிபட்டு வாருங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

கன்னி (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2)

Post by krishnaamma on Wed May 04, 2011 1:02 pmகுரு பகவான், 2011, மே 9 அதிகாலை (மே8
நள்ளிரவு) 1.09 மணிக்கு, மீனராசியில் இருந்து மேஷராசிக்கு
பெயர்ச்சியாகிறார். இவர் 2012 மே 17 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.

கன்னி (உத்திரம் 2,3,4, அஸ்தம், சித்திரை 1,2)

துணிச்சலுடன் சிரமங்களை எதிர்கொள்ளும் கன்னிராசி அன்பர்களே!
உங்கள்
ராசிக்கு வீடு, வாகன, களத்திர, நட்பு ஸ்தான அதிபதியாகிய குருபகவான்
எட்டாம் இடமான மேஷத்திற்கு பெயர்ச்சியாகி உள்ளார். அஷ்டம ஸ்தான குருவின்
அமர்வு மனதில் சில குழப்பங்களை உருவாக்கலாம். இருப்பினும், குரு பகவான்
தனது 5, 7, 9 ஆகிய பார்வைகளால் முறையே சுப விரயம், பணவரவு, சுக ஸ்தானங்களை
பார்ப்பதால் சில சிறப்புகளும் ஏற்படும். மனதில் உருவாகிற இனம் புரியாத
சஞ்சலங்களை பெரியவர்களின் ஆலோசனை பெற்று சரிசெய்வது நல்லது.
உங்கள்
சொல்லுக்கு மரியாதை கிடைக்கும் இடங்களில் மட்டுமே பேசுவது நலம். பணவரவு
பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டாலும், உரிய வகையில் பயன்படுத்தாவிட்டால்
தட்டுப்பாட்டை தவிர்க்க இயலாது. தம்பி, தங்கைகளின் செயல்களினால் உங்களுக்கு
சிரமம் ஏற்படும். பொறுத்துக் கொள்வது நல்லது. வீடு, வாகன வகையில் கடந்த
காலங்களில் செய்த அபிவிருத்தி பணிகளால் தாராள வசதி பெறுவீர்கள். தாயின்
தேவையை ஓரளவுக்கே நிறைவேற்ற முடியும் என்றாலும், அவரது பரிபூரண அன்பு
உங்களை நெகிழ வைக்கும். புத்திரர்கள் சேர்க்கை சகவாசங்களினால் சிரமங்களை
எதிர்கொள்ளும் கிரகநிலை உள்ளது. அவர்களை கவனித்து வழி நடத்துவதால் நன்மை
ஏற்படும். உடல்நிலை பாதிக்கலாம் என்பதால், உணவு பழக்க வழக்கத்தில் கவனம்
வேண்டும். சிறு பிரச்னைகளைக் கூட டாக்டரிடம் காட்டுவது நல்லது. வம்பு,
விவகாரம் உருவாகிற இடங்களில் விலகிப் போவதால் சட்ட பிரச்னை மற்றும்
பணவிரயத்தை தவிர்க்கலாம். உணர்ச்சிவசப்படுவது அறவே கூடாது.
கணவன்,
மனைவியிடையே சச்சரவு ஏற்படும். தேவையற்ற பேச்øŒ குறைத்து,
விட்டுக்கொடுக்கும் போக்கில் நடந்தால் சிரமம் குறையும். நண்பர்களிடம்
உங்கள் மீதான நல் எண்ணம் குறைய வாய்ப்புண்டு. அவர்கள் கோபித்தாலும், பொறுமை
காப்பதால் எதிர்காலத்தில் நட்பு தொடரும். தாய்வழி உறவினர் தருகிற
உதவியும், ஆறுதலும் நம்பிக்கையை ஏற்படுத்தும். பாதுகாப்பு குறைவான
இடங்களுக்கு செல்லக்கூடாது.
தொழிலதிபர்கள்:
கல்வி, நிதி நிறுவனம், லாட்ஜ், ஓட்டல், டிராவல்ஸ், மருத்துவமனை, ரியல்
எஸ்டேட், லாரி அதிபர்கள், டெக்ஸ்டைல்ஸ், ஆட்டோமொபைல், சிமென்ட், காகிதம்,
மருந்து, மின் சாதனங்கள், மரஆலை, குளிர்பானம், மினரல் வாட்டர் உற்பத்தி
செய்பவர்கள் குளறுபடிகளை சரிசெய்வதால் மட்டுமே வளர்ச்சி ஏற்படும்.
பாக்கிப்பணம் பெருமளவில் வசூலாகும். மற்றவர்கள் உற்பத்தி இலக்கை முடிக்க
தாமதமாகும். பணியாளர்களின் ஒத்துழைப்பை பெற நிர்வாக நடைமுறையில் மாற்றம்
செய்வது அவசியம். லாபம் சுமாராக இருக்கும். வாகனம் வாங்குவீர்கள்.
வியாபாரிகள்:
நகை, ஜவுளி, மளிகை, வாகனம், கட்டுமானப்பொருட்கள், ஸ்டேஷனரி, ஆட்டோமொபைல்
உதிரிபாகங்கள்,கண்ணாடி, மருந்து, பூஜை பொருட்கள, பர்னிச்சர், புத்தகம்,
சமையலறை சாதனங்கள் விற்பனை செய்பவர்களுக்கு வியாபாரம் சுமாராக இருக்கும்.
பணம் கையில் இருக்கிறது என்று அதிக பொருட்களை கொள்முதல் செய்யக்கூடாது.
மற்ற வியாபாரிகளுக்கும் சற்று கடினமான நிலையே. சரக்கு வாகன வகையில் ஓரளவு
பணம் கிடைக்கும். கூட்டு வியாபாரம் செய்பவர்கள் வரவு செலவு இனங்களை
வெளிப்படையாக நடத்துவதால் மட்டுமே நம்பிக்கை குறைவு வராமல் தவிர்க்கலாம்.
பணியாளர்கள்: அரசு,
தனியார் துறையில் பணிபுரிபவர்கள் வேலைகளை முடிக்க தாமதமாகும்.
அனுபவசாலிகளின் ஆலோசனைப்படி நடப்பதால் பணி இலக்கு நிறைவேறும். சலுகைகள்
அதிகம் கிடைக்க வாய்ப்பில்லை. தற்போதைய வருமானத்திற்கு பங்கமில்லை. சக
பணியாளர்களில் சிலர் உங்களை விமர்சித்தாலும், கண்டு கொள்ளாமல் சென்றால்
எதிர்காலம் திருப்திகரமாக இருக்கும்.
பெண்கள்: பணிபுரியும்
பெண்கள் உடல்நலக்குறைவு காரணமாக பணியில் சுணக்கம் கொள்வர். சலுகைகளை
எதிர்பார்க்க இயலாது. அவசரப்பட்டு கேட்டாலும் கிடைப்பதில் இடைஞ்சல்
ஏற்படும். கொடுக்கல் வாங்கலில் தகுதிக்கு மீறிய தன்மை கூடாது. குடும்பப்
பெண்கள் தெய்வ வழிபாட்டின் மூலமே வாழ்வை திருப்திகரமாக நடத்த இயலும்.
கணவருடன் கருத்து வேறுபாடு ஏற்படும். தாய்வழி உறவினர் கவுரவத்துடன்
நடத்துவர். கர்ப்பிணிப் பெண்கள் உடல்நலம் பேணுவதில் அக்கறை கொள்வது நலம்.
சுயதொழில் புரியும் பெண்கள் கடுமையாகப் பாடுபட்டாலும் குறைந்த லாபமே
கிடைக்கும்.
மாணவர்கள்: இன்ஜினியரிங்,
மருத்துவம், விவசாயம், சட்டம், வங்கியியல், வணிகவியல், ஜர்னலிசம்,
ஆசிரியர் பயிற்சி, கேட்டரிங், மேனேஜ்மென்ட், கம்ப்யூட்டர் துறை சார்ந்த
மாணவர்கள் தன்னைச்சுற்றி நிகழும் செயல்பாடுகளில் அதிக கவனம் செலுத்தாமல்,
படிப்பில் உயர்வு பெறுவதற்குரிய வழியை மட்டுமே பார்க்க வேண்டும். மற்றதுறை
மாணவர்களும் படிப்பில் தீவிர கவனம் கொண்டால் தான் நிறைந்த மார்க் பெறலாம்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் அதிக அக்கறையுடன் படித்தால்,
டிசம்பருக்கு பிறகு சூழ்நிலை கை கொடுக்கும். பணத்தேவை ஓரளவுக்கு
நிறைவேறும். சக மாணவர்களுடன் வாக்குவாதம் கூடாது. படித்து
முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் தாமதம் இருக்கும்.
அரசியல்வாதிகள்:
உற்சாகம் குறையும். கடந்தகாலத்தில் சம்பாதித்த பணத்தை பாதுகாப்பான
இனங்களில் முதலீடு செய்வது அவசியம். அதிக அலைச்சலின் பேரில் இருக்கிற
பொறுப்பை தக்க வைத்துக் கொள்ளலாம். புத்திரர்கள் ஒத்துழைப்பு
தரமாட்டார்கள். எதிரிகளுடன் பேச்சு, பழக்கம்தவிர்க்கவேண்டும்.
விவசாயிகள்: சாகுபடி
செலவு கூடும். மகசூல் சுமாரான அளவில் கிடைக்கும். கால்நடை வளர்ப்பில் உபரி
பணவரவு குடும்பத்தேவைக்கு உதவும். நிலம் தொடர்பான விவகாரங்கள்
இழுத்தடிக்கும்.

பாட வேண்டிய பாடல்
மாசுமெய்யர் மண்டைத்தேரர்
குண்டர் குணமிலிகள்
பேசும் பேச்சை மெய்யென்று
நம்பி அந்நெறி செல்லன்மின்
மூசுவண்டார் கொன்றை சூடி
மும்மதிலும் உடனே
நாசம் செய்த நம்பெருமான்
மேயது நள்ளாறே!

பரிகாரம்
ஏழரைச்சனி
தொடர்வதால், சனிக்கிழமைகளில் சனீஸ்வரருக்கு எள் எண்ணெய் தீபம் ஏற்றி
வழிபட்டால் சிரமம் விலகும். திருநள்ளாறுக்கும், ஆலங்குடி ஆபத்சகாயேஸ்வரர்
கோயிலுக்கும் சென்று வழிபட்டு வாருங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

துலாம் (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3)

Post by krishnaamma on Wed May 04, 2011 1:03 pmகுரு பகவான், 2011, மே 9 அதிகாலை (மே8
நள்ளிரவு) 1.09 மணிக்கு, மீனராசியில் இருந்து மேஷராசிக்கு
பெயர்ச்சியாகிறார். இவர் 2012 மே 17 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.

துலாம் (சித்திரை 3,4, சுவாதி, விசாகம் 1,2,3)

தன்னிடம் பழகும் அனைவரையும் சமமாக நடத்தும் துலாம் ராசி அன்பர்களே!
உங்கள்
ராசிக்கு புகழ், தைரிய, விவகார, பிணி ஸ்தான அதிபதியாகிய குருபகவான் ஏழாம்
இடமான மேஷத்திற்கு பெயர்ச்சியாகி உள்ளார். இந்த அமர்வு வளம் பல பெற உதவியாக
இருக்கும். மேலும், குரு தனது 5, 7, 9 பார்வைகளால் முறையே ஆதாயஸ்தானம்,
ராசி, புகழ் ஸ்தானத்தை பார்க்கிறார். குருவின் நேரடி பார்வை ராசியில்
பதிவதால் மனதில்
புத்துணர்வும், அன்பு நிறைந்த சிந்தனைகளும் அதிகரிக்கும்.
எவரிடத்திலும்
அன்புடன் பேசி நட்பு கொள்வீர்கள். தைரியமாக செயல்புரிந்து புகழ் பெறும்
வாய்ப்புண்டு. தம்பி, தங்கைகள் வகையில் தடைபட்ட சுபநிகழ்வு சிறப்பான
முறையில் நிறைவேறும். வீடு, வாகன வகையில் வளர்ச்சி மாற்றம் செய்து
மகிழ்வீர்கள். தாயின் தேவைகளை நிறைவேற்றி அவரது ஆசியைப் பெறுவீர்கள்.
புத்திரர்கள் நல்லவிதமாக நடந்து படிப்பு, வேலைவாய்ப்பில் முன்னேற்றம்
பெறுவர்.
பூர்வ சொத்தில் பெறுகிற வருமானம் உயர்ந்து சேமிப்பை
உருவாக்கும். கருத்து மாற்றங்களால் விலகிப்போன உறவினர்கள், நண்பர்கள்
விரும்பி வருவர். உடல்நிலை நன்றாக இருக்கும். வம்பு, விவகாரம் விலகும்.
அதனால் மனநிம்மதியும் சந்தோஷமும் ஏற்படும். கடன்களை விரைவில் அடைத்து
விடுவீர்கள். புதிய செயல் திட்டங்களை உருவாக்கி உரிய பாதுகாப்புடன்
நடைமுறைப்படுத்துவதால் வளர்ச்சியும் எதிர்பார்த்த பணவரவும் கிடைக்கும்.
கணவன்,
மனைவி பாசத்துடன் நடந்துகொள்வர். நண்பர்கள் உதவுவதும் உதவி பெறுவதுமான
நன்னிலை ஏற்படும். திட்டமிட்ட மற்றும் திடீரென ஏற்பாடு செய்யப்படும்
திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகள் கூட நடந்தேறும். தந்தைவழி உறவினர்கள்
தேவையான உதவி வழங்குவர். மூத்த சகோதர, சகோதரிகளின் ஆலோசனை உங்கள் வாழ்வு
சிறக்க நல்வழி காட்டும். பயணங்களால் நன்மை உண்டு.
தொழிலதிபர்கள்: ஓட்டல்,
லாட்ஜ், மருத்துவமனை, டிராவல்ஸ், லாரி அதிபர்கள், ரியல் எஸ்டேட்,
பால்பண்ணை, மினரல் வாட்டர், குளிர்பானம், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள்,
டெக்ஸ்டைல்ஸ், காகிதம், தோல் தொழிலதிபர்கள் வளர்ச்சியும், நிறைந்த லாபமும்
பெறுவர். உபரி வருமானம் உண்டு. தொழிற்கூட்டமைப்புகளில் முக்கியப்பதவி
எளிதாக கிடைக்கும். புதிய தொழில்நுட்பங்களை செயல்படுத்தி தரம்
உயர்த்துவீர்கள். நிறுவனத்தின் புகழ் பரவும். புதிய நிறுவனம் தொடங்க
அனுகூலம் உண்டு. ஆதாய பணவரவுகளை சேமிப்பு அல்லது புதிய முதலீடாக
மாற்றுவீர்கள். பணியாளர்களின் ஒத்துழைப்பு திருப்திகரமாக இருக்கும்.
வியாபாரிகள்: நகை,
ஜவுளி, மளிகை, கட்டுமானப்பொருள், வாகனம், அழகுசாதனம், பால், மினரல்
வாட்டர், குளிர்பானம், ஆட்டோ மொபைல் உதிரிபாகங்கள், இறைச்சி, காய்கறி,
பழம், பூ விற்பனை செய்பவர்கள் போட்டி குறைந்து விற்பனையில் அதிக
முன்னேற்றம் காண்பர். லாபம் அதிகரிக்கும். வெகுநாள் பாக்கி பணம் திரும்ப
கிடைக்கும். கடன் இல்லாத நன்னிலை உருவாகும். சரக்கு வாகனத்தினாலும் உபரி
வரவு கிடைக்கும்.
பணியாளர்கள்: அரசு,
தனியார் துறையில் பணிபுரிபவர்கள் திறமையுடன் பணியாற்றி சகல சலுகைளும்
பெறுவர். உயர் அதிகாரிகளின் பாராட்டு கிடைக்கும். பதவி உயர்வு,
எதிர்பார்த்த கடனுதவி பெறுவீர்கள். சக பணியாளர்கள் உங்களின் குணத்தை
புரிந்து அன்பு கொள்வர். தாராள பணவரவில் குடும்பத்தேவை பெருமளவில்
நிறைவேறும். நண்பர்களிடம் கொடுத்த பணம் திரும்பக்கிடைக்கும். வீடு, வாகனம்
வாங்க யோகம் உண்டு.
பெண்கள்: பணிபுரியும்
பெண்கள் பணியில் பெரும் கவனம் செலுத்தி முன்னிலை பெறுவர். பதவி உயர்வு,
விரும்பிய சலுகை எளிதாக கிடைக்கும். சக பணியாளர்களிடம் மதிப்பு ஏற்படும்.
குடும்பப் பெண்கள்,கணவரின் சொல்லை வேதவாக்காக மதித்து நடப்பர்.
குடும்பத்தில் ஒற்றுமை அதிகரிக்கும். நிறைந்த பணவசதி பெற்று ஆடை,ஆபரணம்
வாங்குவர். சுயதொழில் புரியும் பெண்களுக்கு உற்பத்தி அதிகரித்து விற்பனை
சிறந்து தாராள பணவரவு கிடைக்கும்.
மாணவர்கள்:
இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம், விவசாயம், வணிகவியல், கம்ப்யூட்டர்,
ஓட்டல் மேனேஜ்மென்ட், ஆசிரியர், இதழியல், கேட்டரிங் துறை மாணவர்கள்
ஞாபகத்திறன் அதிகரித்து சிறப்பாகப் படிப்பர். மற்றதுறை மாணவர்கள்
இவர்களையும் விட நன்றாகப் படிப்பர். பத்தாம் வகுப்பு, பிளஸ் 2
மாணவர்களுக்கு பொன்னான காலம். படிப்புக்கான பணவசதி நிறைவாக கிடைக்கும்.
பெற்றோர் தரும் பணத்தை மிச்சம்பிடித்து சேமிப்பீர்கள். சக மாணவர்கள் அன்பு
கொள்வர். பாராட்டு, விருதுபெறுவதற்கு உகந்த காலம்.படித்து
முடித்தவர்களுக்கு தரமான வேலை கிடைக்கும்.
அரசியல்வாதிகள்:
கடந்த காலத்தில் செய்த சமூகப்பணிக்கு உரிய நற்பலன் இப்போது கிடைக்கும்.
மூத்தவர்களின் ஆலோசனை உயர்வைத் தரும். பதவிப்பொறுப்பு கிடைத்து புகழ்
பெறுவீர்கள். ஆதரவாளர்களின் மனதில் நம்பிக்கை வளரும். அரசு தொடர்பான
செயல்களில் முயற்சி வெற்றியாகும். புத்திரர் அளவுடன் உதவுவர். எதிரிகள்
இடம்மாறிப் போகிற நன்னிலை உண்டு.
விவசாயிகள்: பயிர் வளர்க்க தேவையான வசதிகள் தாராளமாக கிடைக்கும். மகசூல் உயர்ந்து மனநிறைவு பெறுவீர்கள். புதியநிலம் வாங்க யோகம் இருக்கிறது.

பாட வேண்டிய பாடல்
காற்றின் மைந்தனை
கதிரோன் சீடனை
கார்வண்ண ராமன் தூதனை
பார்கண்ட பரமன் போல்வனை
தார்சூடும் தூயோனை
துதி செய்குவாம்.

பரிகாரம்
ஆஞ்சநேயரை வழிபடுவதால் கிடைக்கின்ற பலனின் அளவு இரட்டிப்பாகும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

விருச்சிகம் (விசாகம் 4, அனுஷம், கேட்டை)

Post by krishnaamma on Wed May 04, 2011 1:05 pmகுரு பகவான், 2011, மே 9 அதிகாலை (மே8
நள்ளிரவு) 1.09 மணிக்கு, மீனராசியில் இருந்து மேஷராசிக்கு
பெயர்ச்சியாகிறார். இவர் 2012 மே 17 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.

விருச்சிகம் (விசாகம் 4, அனுஷம், கேட்டை)

தர்மம் செய்ய தாராளமாக செலவிடும் விருச்சிகராசி அன்பர்களே!
உங்கள்
ராசிக்கு தன, குடும்ப, பூர்வ புண்ணிய, புத்திர ஸ்தான அதிபதியாகிய
குருபகவான் ஆறாம் இடமான மேஷத்திற்கு பெயர்ச்சியாகி உள்ளார். இந்த அமர்வு
சில எதிர்மறையான பலன்களைத் தரும். இருப்பினும் குருபகவானின் 5, 7, 9 ஆகிய
பார்வை பெறுகிற ஸ்தானங்களான தொழில், வெளியூர் வேலை வாய்ப்பு,
குடும்பவளர்ச்சி ஆகிய ஸ்தானங்களின் வழியாக நற்பலன் கிடைக்கும். எந்த
செயலையும் நிதானமாகச் செய்வது அவசியம்.
இனிய பேச்சால் முக்கிய
செயல்பாடுகளை வெற்றிகரமாக நிறைவேற்றுவீர்கள். தாராள பணவரவு கிடைக்கும்.
தம்பி, தங்கைகளின் எண்ணங்களுக்கு உரிய மதிப்பு தருவதால் அவர்களுடான உறவு
பலப்படும். வீடு, வாகன வகையில் இப்போது இருக்கிற நிலை நீடிக்கும்.
அபிவிருத்தி பணிகளை இன்னும் ஓராண்டு செய்ய வேண்டாம். இதனால் குளறுபடியும்
தேவையற்ற செலவும் ஏற்படும். இதுவரை உங்களுடன் ஒத்துழைத்த புத்திரர்களுடன்
இனி கருத்து வேறுபாடு ஏற்படலாம். உங்கள் நலனை விரும்புபவர்களைக் கொண்டு
அவர்களுக்கு ஆலோசனை சொல்லுங்கள்.
பூர்வ சொத்தில் அளவான வருமானம் உண்டு.
சொத்து தொடர்பான ஆவணங்களை பிறர் பொறுப்பில் தரக்கூடாது. உடல்நலம் பேணுவதில்
கூடுதல் கவனம் வேண்டும். சிறு உபாதைக்கும் சிகிச்சை பெறுவது சிக்கலைத்
தவிர்க்கும். வழக்கு விவகாரங்களில் தீர்வுபெறுவதில் தாமதம் ஏற்படும்.
சமாதானமாக போக வேண்டிய நிலை உருவாகும்.
கணவன், மனைவி இடையே கருத்து
வேறுபாடு உண்டாகும். விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையே குடும்ப ஒற்றுமையை
வளர்க்கும். நண்பர்களிடம் பேசுவதிலும், கொடுக்கல், வாங்கலிலும் நிதானம்
பின்பற்றுவது நல்லது. பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்வதைத் தவிர்க்க
வேண்டும். சுபநிகழ்ச்சிகள் வெற்றிகரமாக நடக்கும். ஆனால், அதிக
செலவாகும். சேமிப்பு குறையவும், கடன் வாங்கவும் வாய்ப்புண்டு.
தொழிலதிபர்கள்: கல்வி,
நிதிநிறுவனம், மருத்துவமனை, ஓட்டல் லாட்ஜ், ரியல் எஸ்டேட், ஆட்டோமொபைல்,
காகிதம், டெக்ஸ்டைல்ஸ், பிளாஸ்டிக், குளிர்பானம், கண்ணாடி, மரஆலை
அதிபர்களின் வளர்ச்சி நிலை தொடரும். திட்டமிட்ட உழைப்பால் இலக்கு நிறைவேறி
தாராள பணவரவைத் தரும். அனுபவசாலிகள், நல்லவர்களின் ஆலோசனை பெறுவது நல்லது.
முறையான திட்டமிட்டு வளர்ச்சி அடைவீர்கள். மற்ற தொழில் செய்வோருக்கும்
லாபம் அதிகரிக்கும். பயணங்களை அளவுடன் மேற்கொள்வது உடல்நலத்திற்கு
பயன்தரும். பணியாளர்களின் ஒத்துழைப்பு பெற நிர்வாகச்செலவில் தாராளம் காட்ட
வேண்டியிருக்கும்.
வியாபாரிகள்:
நகை, ஜவுளி, வாகனம், மளிகை, மருந்து, ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள்,
எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள், வாசனை திரவியம், ஸ்டேஷனரி,
கட்டுமானப்பொருள், பிளாஸ்டிக், ரப்பர், தோல் பொருட்கள் விற்பனை
செய்பவர்களுக்கு சுமாரான விற்பனை, அளவான லாபம் கிடைக்கும். மற்றவர்களுக்கு
இவர்களை விட லாபம் கூடும். சரக்கு இருப்பு வைக்கும் இடங்களில் பாதுகாப்பு
நடைமுறை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும். நீண்டகால பாக்கி வந்து சேரும்.
பணியாளர்கள்:
அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பணியின் பொறுப்பை உணர்ந்து
செயல்படுவது அவசியம். கவனக்குறைவால் குளறுபடி ஏற்படலாம். அனுபவசாலிகளின்
ஆலோசனை உதவும். சலுகைகள் கிடைக்க தாமதமாகும். நிர்வாகத்தை அனுசரித்து
சென்றால் நன்மை பெறலாம்.
பெண்கள்:
பணிபுரியும் பெண்கள் சுறுசுறுப்பாக செயல்படுவதால் மட்டுமே பணி இலக்கை
திறம்பட நிறைவேற்ற இயலும். சலுகைகள் தாமதமாக கிடைக்கும். குடும்பப் பெண்கள்
கணவருடன் கருத்து வேறுபாடு கொள்ளலாம். குடும்பச்செலவுக்கான பணம்
தட்டுப்பாடின்றி இருக்கும். சுயதொழில் புரியும் பெண்கள் போட்டியை சமாளித்து
உற்பத்தி, விற்பனையை தக்கவைத்துக் கொள்வர். உபரி வருமானத்தால் குடும்பத்
தேவைகளை பெருமளவில் நிறைவேற்றுவர்.
மாணவர்கள்: இன்ஜினியரிங்,
மருத்துவம், விவசாயம், சட்டம், கேட்டரிங், வணிகவியல், ஆசிரியர் பயிற்சி,
இதழியல், கம்ப்யூட்டர், மேனேஜ்மென்ட் துறை மாணவர்கள் அக்கறையுடன் படித்தால்
மட்டுமே தேர்ச்சி கிடைக்கும். பிறதுறை மாணவர்கள் இவர்களை விட நன்றாகப்
படிப்பர். பத்தாம் வகுப்பு, பிளஸ்2 மாணவர்கள் ஆரம்பம் முதலே மிகுந்த கவனமாக
படித்தால் தான் அதிகமார்க் பெறலாம். படிப்புக்கான பணவசதி சீராக
கிடைக்கும். படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் ஓரளவு அனுகூலம்
உண்டு.
அரசியல்வாதிகள்: முன்யோசனையுடன்
செயல்படுவது நல்லது. பொது விவகாரங்களில் நல்ல கருத்தை சொன்னாலும்
அதிருப்தி எண்ணம் உருவாகும். எதிரிகள் நேரம் பார்த்து இடையூறு செய்ய
முயற்சிப்பர். விலகிப் போவதால் பணவிரயம், நேர விரயம் தவிர்க்கலாம்.
புத்திரர்களால் அதிக பலன் இல்லை.
விவசாயிகள்:
பயிர் வளர்க்க முயற்சியுடன் செயல்படுவது அவசியம்.
சுமாரானமகசூல்கிடைக்கும். இருப்பினும், விளைபொருட்களுக்கு நியாயமான விலை
கிடைக்கும். கால்நடைவளர்ப்பில் ஓரளவு பணவரவு உண்டு. நிலப்பிரச்னைகளை
கோர்ட்டுக்கு இழுக்காமல் பேசி தீர்ப்பது நல்லது.

பாட வேண்டிய பாடல்
வாழ்வு ஆனவள்
துர்க்கா வாக்குமானவள்
வானில் நின்றவள்
இந்தமண்ணில் வந்தனள்
தாழ்வு அற்றவள்
துர்க்கா தாயும் ஆனவள்
தாபம் நீக்கியே
என்னைத் தாங்கும்
துர்க்கையே!

பரிகாரம்
துர்க்கையை வழிபடுவதால் சிரமபலன் குறைந்து நற்பலன் அதிகரிக்கும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம்)

Post by krishnaamma on Wed May 04, 2011 1:07 pmகுரு பகவான், 2011, மே 9 அதிகாலை (மே8
நள்ளிரவு) 1.09 மணிக்கு, மீனராசியில் இருந்து மேஷராசிக்கு
பெயர்ச்சியாகிறார். இவர் 2012 மே 17 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.

தனுசு (மூலம், பூராடம், உத்திராடம்)

சொல்லைவிட செயலுக்கு முக்கியத்துவம் தரும் தனுசுராசி அன்பர்களே!
உங்கள்
ராசிநாதனும், வீடு, வாகன ஸ்தான அதிபதியாகிய குருபகவான் பூர்வ புண்ணிய
இடமான மேஷத்திற்கு பெயர்ச்சியாகி உள்ளார். இந்த அமர்வு மிகுந்த நன்மை
தரக்கூடியது. குருவின் 5, 7, 9 ஆகிய பார்வை பதிகிற இடமான பிதா, பாக்ய,
ஆதாய, சுய ஸ்தானத்தின் வழியாகவும் நற்பலனை பெறுவீர்கள். உங்களின் செயல்கள்
நேர்த்தியாகவும் ரசனை நிறைந்ததாகவும் இருக்கும்.
பேச்சு, நடை, உடையில்
மாற்றம் ஏற்படும். தம்பி, தங்கைகள் உங்கள் சொல்லை வேதவாக்காக கருதி
உதவிகரமாக செயல்படுவர். வீட்டில் வளர்ச்சி மாற்றம் செய்து மகிழ்வீர்கள்.
புதிய வாகனம் திட்டமிட்ட வகையில் வாங்கி மகிழ்வீர்கள். தாய்வழி
உறவினர்களிடம் பாசம் வளரும். புத்திரர்களின் நற்செயலால் கவுரவம்
பெறுவீர்கள். நல்லவர்களின் நட்பு கிடைக்கும்.
பூர்வ சொத்தில்
வளர்ச்சியும் உபரி வருமானமும் ஏற்படும். உடல்நலக்குறைவு நீங்கி ஆரோக்கியம்
பெறுவீர்கள். வழக்கு, விவகாரம் அணுகாத சுமூக நடைமுறை உருவாகும். கடன்களை
ஓரளவுக்கு அடைத்து விடுவீர்கள். குடும்பத்தேவைகள்
பூர்த்தியாகும்.
திட்டமிட்ட சுபநிகழ்ச்சி சிறப்பாக நிறைவேறும். கணவன், மனைவி குடும்பநலன்
கருதி தியாக மனப்பான்மையுடன் நடந்துகொள்வர். உறவினர் இல்ல விருந்து
உபசரிப்புகளில் திருப்திகரமான வரவேற்பு உண்டு.
நண்பர்கள் ஆலோசனை
சொல்வதும் கேட்டு நடப்பது மான ஆரோக்கியமான சூழ்நிலை இருக்கும். சிலருக்கு
தந்தைவழி சொத்து கிடைக்கும். வாழ்வில் சுக சவுகர்யம் அதிகரிக்கும். மூத்த
சகோதர, சகோதரிகள் ஆசிரியர் போல கண்டிப்புடன் நடந்து வாழ்வு வளம்பெற
உதவுவர். திருமணமாகாதவர்களுக்கு யோகம் வந்துவிட்டது.
தொழிலதிபர்கள்:
ரியல்எஸ்டேட், கல்வி, நிதி நிறுவனம், ஆஸ்பத்திரி, டெக்ஸ்டைல்ஸ்,
ஆட்டோமொபைல், எலக்ட்ரானிக்ஸ் சாதனம், கட்டுமானப் பொருட்கள், பிளாஸ்டிக்,
தோல், கண்ணாடி, கட்டுமானப்பொருள், காகிதம், பர்னிச்சர் உற்பத்தியாளர்கள்
வளர்ச்சித் திட்டங்களை நிறைவேற்றி முன்னேற்றம் பெறுவர். மற்ற தொழில்
செய்வோரும் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உற்பத்தி, தரத்தில் முன்னேற்றம்
காண்பர். லாபம் அதிகரிக்கும். புதிய ஒப்பந்தங்கள் கிடைக்கும். சந்தையில்
வரவேற்பு கூடும். நிர்வாகத்திறனால் உபரி வருமானம் கிடைக்கும்.
புத்திரர்களின் உதவி கிடைக்கும்.
வியாபாரிகள்:
நகை, ஜவுளி, வாகனம், மளிகை, இயந்திர உதிரிபாகங்கள், புத்தகம், "சிடி',
கண்ணாடி, பீங்கான், பிளாஸ்டிக், ரப்பர், தோல், கட்டுமானப் பொருள்,
எலக்ட்ரிக்கல், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள் விற்பனை செய்பவர்கள் அபிவிருத்தி
பணியை மேற்கொள்வார்கள். விற்பனை சிறந்து லாபம் அதிகரிக்கும். மற்ற
வியாபாரிகளுக்கு இவர்களை விட அதிக லாபமும் கிளை துவங்கும் யோகமும் உண்டு.
புத்திரர்களின் உதவி வியாபார வளர்ச்சிக்கு துணைநிற்கும்.
பணியாளர்கள்:
அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் வேலையை சுறுசுறுப்புடன் செய்து
எவ்வளவு பெரிய இலக்கையும் அடைவர். பணி தொடர்பாக வெளிநாடு செல்ல யோகமுண்டு.
பதவி உயர்வு, விரும்பிய இடமாற்றம், ஓவர்டைம் உள்ளிட்ட சலுகைகள் எளிதாக
கிடைக்கும். சக பணியாளர்கள் நட்பு கொள்வர். மனைவிவழி உறவினர்கள் மதிப்புடன்
விருந்து உபசரிப்பு செய்வர். சேமிப்பிலும் வளர்ச்சி ஏற்படும்.
பெண்கள்: பணிபுரியும்
பெண்கள் திறமையுடன் செயல்படுவர். குறித்த காலத்தில் பணிகள் முடியும். பதவி
உயர்வு, தாமதமான சலுகைகள் கிடைக்கும். சக பணியாளர்கள் அன்புடன் நடந்து
கொள்வர். குடும்ப பெண்கள் கணவரின் அன்பு, பாசம் கிடைத்து சந்தோஷ வாழ்வு
நடத்துவர். புத்திரப்பேறு வகையில் அனுகூலம் உண்டு. தாய்வழி சீர்முறை
கிடைக்கும். ஆடை, ஆபரண சேர்க்கை உண்டு. சுயதொழில் புரியும் பெண்கள்
உற்பத்தியை பெருக்குவர். விற்பனை சிறந்து லாபம் கூடும். இளம்பெண்களுக்கு
தடை நீங்கி திருமணம் நடக்கும்.
மாணவர்கள்:
இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம், விவசாயம், ஆசிரியர் பயிற்சி,
வணிகவியல், மேனேஜ்மென்ட் துறை மாணவர்கள் ஆசிரியரின் அன்பைப் பெற்று
படிப்பில் முன்னேறுவர். மற்ற துறை மாணவர்களும் படிப்பில் முன்னிலை அடைவர்.
பத்தாம் வகுப்பு, பிளஸ்2 மாணவர்கள் சிறப்பாகப் படித்து நல்ல மதிப்பெண்
பெறுவர். தந்தையின் சொல் வேதம் என மதிப்பர். உறவினர்களின் வாழ்த்து
கிடைக்கும். விரும்பிய பொருள் வாங்க அனுகூலம் உண்டு. படிப்பை
முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமை கிடைக்கும்.
அரசியல்வாதிகள்:
சுயகவுரவம், புகழை உயர்த்தும் விதமாக செயல்படுவீர்கள். எதிரிகள்
விலகிச்செல்வர். ஆதரவாளர்களின் நம்பிக்கையைப் பெற்று தலைமையிடம் நற்பெயர்
பெறுவீர்கள். அரசு தொடர்பான செயல்பாடுகள் வெற்றியடையும்.
விவசாயிகள்:
விவசாயப்பணியில் ஆர்வமுடன் ஈடுபடுவீர்கள். பயிர் வளர்க்க தேவையான வசதிகள்
எளிதாக கிடைக்கும். மகசூல் அதிகரிக்கும். தானியங்களுக்கு கூடுதல் விலை
கிடைக்கும். கால்நடை வளர்ப்பிலும் முன்னேற்றம் உண்டு.

பாட வேண்டிய பாடல்
இடர்கள் யாவும் எவனருளால்
எரிவீழும் பஞ்சென மாயும்
தொடரும் உயிர்கள் எவனருளால்
கரர் வாழ் பதியும் உறச்செய்யும்
கடவுள் முதலோர்க்கு ஊறின்றி
கருமம் எவனால் முடிவுறும்
அத்தடவ மருப்பு கணபதி
பொன் சரணம் சரணம் அடைகின்றோம்.

பரிகாரம்
விநாயகரை வழிபடுவதால் நன்மைகள் பலமடங்கு அதிகரிக்கும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

மகரம் (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2)

Post by krishnaamma on Wed May 04, 2011 1:09 pmகுரு பகவான், 2011, மே 9 அதிகாலை (மே8
நள்ளிரவு) 1.09 மணிக்கு, மீனராசியில் இருந்து மேஷராசிக்கு
பெயர்ச்சியாகிறார். இவர் 2012 மே 17 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.

மகரம் (உத்திராடம் 2,3,4, திருவோணம், அவிட்டம் 1,2)

இறைபக்தியில் ஆர்வம் கொண்ட மகரராசி அன்பர்களே!
உங்கள்
ராசிக்கு தைரிய, புகழ், விரய ஸ்தான அதிபதியாகிய குருபகவான் சுக ஸ்தானமாகிய
மேஷத்திற்கு பெயர்ச்சியாகி உள்ளார். இந்த அமர்வு நன்மைகளைக் குறைக்கும்
தன்மையுடையது. இருப்பினும் குருவின் 5, 7, 9 ஆகிய பார்வை பெறுகிற
ஆயுள்,தொழில், சுபவிரய ஸ்தானங்களின் வழியாக நற்பலன் நடக்கும். மனதில்
குழப்பம் ஏற்படும். இதை சரிசெய்வதால் மட்டுமே செயலில் வெற்றி அதிகரிக்கும்.
அளவுடன் பேசுவதால் சிரமம் இல்லாத தன்மை உருவாகும்.
தைரியக்குறைவு
ஏற்படும். தம்பி, தங்கைகள் வகையில் கருத்து வேறுபாடு ஏற்படும். உங்கள்
பணிகளை பிறரை நம்பாமல் நீங்களே முடிப்பது நல்லது. வீடு, வாகன வகையில்
இப்போது பெறுகிற வசதிக்கு குறைவில்லை. ஆனால்,
வாகனங்களை சரிவர
பராமரிக்க வேண்டும். பயணத்தில் வேகம் குறைப்பது நல்லது. தாய்வழி உறவினர்கள்
கண்டுகொள்ளாத தன்மையில் செயல்படுவர். ஆனாலும், நீங்கள் பெருந்தன்மையுடன்
நடந்துகொள்வீர்கள். புத்திரர்கள் உங்களின் சிரமம் உணர்ந்து ஆறுதல் தரும்
விதமாக நடந்துகொள்வர். அவர்களது படிப்பில் உயர்வும், வேலைவாய்ப்பில்
முன்னேற்றமும் ஏற்படும்.
எதிரிகளிடம் விலகிப் போவதால் தேவையற்ற
செலவும், விவகாரங்களும் குறையும். கணவன் மனைவி இடையே கருத்தொற்றுமை
ஏற்படும். இதனால் மனநிம்மதி உண்டு. பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்வதை
தவிர்க்க வேண்டும். தந்தைவழி உறவினர்கள் பாசத்துடன் நடந்துகொள்வர்.
தேவையின்றி கடன் வாங்குவதை தவிர்க்க வேண்டும். குழந்தைகள் திருமண வகை,
உறவினர் இல்ல விழா வகை, வீடு கட்டுமான வகைகளில் சுபவிரயம் அதிகரிக்கும்.
தொழிலதிபர்கள்:
ரியல் எஸ்டேட், கல்வி, நிதிநிறுவனம், மருத்துவமனை நடத்துவோர்,
ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல்ஸ், சிமென்ட், பால்பண்ணை, எலக்ட்ரானிக்ஸ், மரஆலை,
பிளாஸ்டிக், தோல், காகிதம் உற்பத்தி செய்பவர்கள் கூடுதல் கவனத்துடன் செயல்
படுவது அவசியம். அதிக உழைப்பிலும் சுமாரான பலனே பெறுவீர்கள். மற்ற தொழில்
செய்பவர்களுக்கு அளவான உற்பத்தியே இருக்கும். லாபம் சுமார். ஒப்பந்தங்களை
பெறுவதில் பேரம் பேசவேண்டி வரும். பணியாளர்களின் ஒத்துழைப்பை பெற சற்று
சிரமப்பட வேண்டியிருக்கும். ஓய்வுநேரம் பெருமளவு குறையும். நிர்வாகச்செலவு
அதிகரிக்கும். நிலைமையை சரிசெய்ய கடன் வாங்க வேண்டி வரும்.
வியாபாரிகள்: நகை,
ஜவுளி, வாகனம், மளிகை, இயந்திர உதிரிபாகங்கள், கட்டுமானப்
பொருள்,ஸ்டேஷனரி, பேக்கரி,எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் சாதனம்,
பால்பொருட்கள், காய்கறி, பூ, இறைச்சி, குளிர்பானம், அழகுசாதனம், மருந்து,
பட்டாசு விற்பனை செய்பவர்களுக்கு போட்டி அதிகரிக்கும். லாபம் ஓரளவே
இருக்கும். பிறருக்காக பணப்
பொறுப்பு ஏற்கக்கூடாது. அளவான கொள்முதல், ரொக்கத்திற்கு விற்பனை என்கிற நடைமுறை பாதுகாப்பை ஏற்படுத்தும்.
பணியாளர்கள்: அரசு,
தனியார் துறையில் பணிபுரிபவர்கள், மனச்சோர்வுக்கு உட்படுவர். புதிதாக
ஏற்படும் பணிகளால் உங்கள் வேலைப்பளு அதிகரிக்கும். வேகமாகவும்
பொறுப்பாகவும் பொறுமையாகவும் பணிகளைச் செய்து இந்த ஆண்டைக் கழியுங்கள்.
நிர்வாகத்திடம் நற்பெயர் குறையாது என்றாலும், சலுகைகள் எதிர்பார்க்க
முடியாது. வருமானம் வீட்டுச்செலவுக்கு பயன்படும் அளவே இருக்கும். சக
பணியாளர்களிடம் எதிர்பார்த்த ஒத்துழைப்பு கிடைக்கும்.
பெண்கள்: பணிபுரியும்
பெண்கள் மனக்குழப்பத்துடன் செயல்படுவர். அதிகாரிகளை அனுசரித்து நடந்தால்
தான் சிரமம் ஏற்படாமல் தவிர்க்கலாம். சலுகைகள் பெறுவதில் தாமதம் ஏற்படும்.
குடும்பப் பெண்கள் கணவரின் சொல்லை மதித்து நடந்து குடும்பநலன் காத்திடுவர்.
வீட்டுச்செலவுக்கு சற்று சிரமமே. தாய்வழி உறவினர்களிடம் மனவேறுபாடு வந்து
சரியாகும். இரவல் நகை கொடுக்க, வாங்க கூடாது. சுயதொழில் புரியும் பெண்கள்
உற்பத்திக்குறைவும், விற்பனையில் கூடுதல் போட்டியையும் எதிர்கொள்வர்.
சுமாரான லாபம் இருக்கும். உபதொழில் துவங்குவதை இப்போது ஒத்திவைப்பது
நல்லது.
மாணவர்கள்: இன்ஜனியரிங்,
மருத்துவம், சட்டம், விவசாயம், கம்ப்யூட்டர், பியூட்டிஷியன், மேனேஜ்மென்ட்,
கேட்டரிங் துறை மாணவர்கள் படிப்புக்கு சம்பந்தமில்லாத பிற விஷயங்களில்
கவனம் கொள்வதை தவிர்க்க வேண்டும். மற்ற துறை மாணவர்களும் தேர்ச்சி பெற மிக
கவனமாக படிக்க வேண்டும். பத்தாம் வகுப்பு, பிளஸ்2 மாணவர்கள் பள்ளி
துவங்கும்முன்பே பாடங்களை படிக்க ஆரம்பித்து விடுவது அதிக மார்க் பெற
உதவும். படிப்புக்கான பணம் கிடைப்பதில் தாமதம் ஏற்படும். சக மாணவர்களிடம்
விட்டுக்கொடுக்கும் மனப்பான்மையுடன் செயல்பட வேண்டும். படித்து
முடித்தவர்கள் வேலைவாய்ப்பு பெறுவதில் தாமதம் உண்டாகும்.
அரசியல்வாதிகள்: எதிரான
சூழ்நிலைகளை சந்திப்பீர்கள். ஆதரவாளர்களின் நம்பிக்கையை தக்கவைக்க கடன்
வாங்கி செலவழிக்க வேண்டியிருக்கும். வழக்கு விவகாரங்களில் ஒதுங்கி இருப்பது
நல்லது. தலைமையிடம் கெட்ட பெயர் வாங்கலாம் என்பதால் சற்று
ஒதுங்கியிருப்பது நல்லது.
விவசாயிகள்:
சாகுபடிக்குரிய இடுபொருட்கள், பணம் கிடைப்பதில் தாமத நிலை இருக்கும்.
கால்நடை வளர்ப்பின்மூலம் வருகிற பணவரவு குடும்பத்தேவைக்கு உதவும். சொத்தின்
பேரில் சிலர் கடன் பெறுவர். நிலம் தொடர்பான வழக்குகள் இழுத்தடிக்கும்.

பாட வேண்டிய பாடல்
மென்னடையன்னம் பரந்து விளையாடும்
வில்லிபுத்தூர் உறைவான் தன்
பொன்னடி காண்பதோர் ஆசையினால்
என் பொருகயற்கண்ணிணை துஞ்சா
இன் அடிசிலொடு பாலமுநூட்டி
எடுத்த என் கோலக்கிளியை
உன்னொடு தோழமை கொள்ளுவன்
குயிலே! உலகளந்தான் வரக்கூவாய்.

பரிகாரம்
ஆண்டாளை வழிபடுவதால் வாழ்வில் நிம்மதியும் தொழில் சிறப்பும் ஏற்படும். ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயிலுக்கு சென்று வாருங்கள்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

கும்பம் (அவிட்டம், 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3)

Post by krishnaamma on Wed May 04, 2011 1:10 pmகுரு பகவான், 2011, மே 9 அதிகாலை (மே8
நள்ளிரவு) 1.09 மணிக்கு, மீனராசியில் இருந்து மேஷராசிக்கு
பெயர்ச்சியாகிறார். இவர் 2012 மே 17 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.

கும்பம் (அவிட்டம், 3,4, சதயம், பூரட்டாதி 1,2,3)

எதிர்பார்ப்பு இல்லாமல் பிறருக்கு உதவுகின்ற கும்பராசி அன்பர்களே!
உங்கள்
ராசிக்கு தன, குடும்ப, ஆதாய ஸ்தான அதிபதியாகிய குருபகவான் தைரிய
ஸ்தானமாகிய மேஷத்திற்கு பெயர்ச்சியாகி உள்ளா. குருவின் 3ம் இட அமர்வு
அவ்வளவு சிறப்பானதல்ல. இருப்பினும் குருவின் 5, 7, 9 ஆகிய பார்வை பெறுகிற
இடங்களான களத்திர, நட்பு, பிதா, பாக்ய, ஆதாய ஸ்தானங்களின் வழியாக சுபபலன்
கிடைக்கும். வீட்டிலும், வெளியிலும் நற்பெயரை பாதுகாத்துக் கொள்வதில் கவனம்
வேண்டும்.
புதிய முயற்சிகளை துவங்கும்போது திட்டமிடுதல் இல்லாவிட்டால்
பிரச்னைகளை சந்திக்க நேரும். திறமை குறைய வாய்ப்புள்ளது. நம்பகமானவர்களின்
ஆலோசனையுடன் எதையும் செய்யுங்கள். பேச்சில் சாந்தம் ஏற்படும். இளைய
சகோதரர்கள் அன்புடன் நடந்து கொள்வர். வீடு, வாகன வகையில் மாற்றம் செய்வதை
தவிர்ப்பது நல்லது. தாயின் ஆசி கிடைக்கும். பூர்வீக சொத்தில் கிடைக்கிற
வருமானம் குருவருளால் அதிகரிக்கும்.
புத்திரர்கள் நல்லவிதமாக படித்து
உங்களுக்கு மகிழ்ச்சியைத் தருவர். இஷ்ட, குலதெய்வ அருள் பரிபூரணமாக
துணைநிற்கும். உடல்நலம் பேணுவதில் கவனம் வேண்டும். வழக்கு, விவகாரங்கள்
இழுத்தடிக்கும். எதிரிகளிடம் விலகிப் போவதால் சிரமம் குறையும். சேமிப்பு
பணம் குடும்பச்செலவுகளை பூர்த்திசெய்ய பயன்படும். தம்பதியர் குடும்பப்
பொறுப்பை உணர்ந்து பாசத்துடன் நடந்து கொள்வர். நண்பர்கள் முக்கிய
சூழ்நிலைகளில் தேவையான உதவியை வழங்குவர். மனைவி வழி உறவினர்களிடம்
கருத்துவேறுபாடு மறையும்.
பணவரவு அவ்வப்போது குறைந்தாலும்,
அன்றாடச்செலவுகளுக்கு சிக்கல் ஏதும் இருக்காது. சுக சவுகர்ய வாழ்க்கை சீராக
இருக்கும். தந்தைவழி சொத்தில் பங்கு கிடைக்க இது உகந்த காலம். மூத்த
சகோதரர்கள் ஒரு ஆசிரியரைப் போல் கண்டிப்புடன் நடந்தாலும், நன்மையே செய்வர்.
பாக்கிப்பணம் சிறு முயற்சியினால் வந்துசேரும். பயணங்களின் போது மிகுந்த
கவனம் தேவை.
தொழிலதிபர்கள்:
லாட்ஜ், ஓட்டல், ரியல் எஸ்டேட், மருத்துவமனை, டிராவல்ஸ், கல்வி,
நிதிநிறுவனம் நடத்துவோருக்கு லாபம் சுமாராக இருக்கும். ஆட்டோமொபைல்,
டெக்ஸ்டைல்ஸ், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், மருத்துவ உபகரணங்கள்,
குளிர்பானம், கட்டுமானப் பொருள், தோல் பொருட்கள் உற்பத்தி செய்பவர்கள்
பொருளின் தரத்தை உயர்த்துவதிலும். நிர்வாக வகையிலும் கவனம் கொள்வது
அவசியம். மற்ற தொழில் செய்வோருக்கு பணியாளர்களின் ஒத்துழைப்பு ஓரளவுக்கு
கிடைக்கும். புதிய ஒப்பந்தம் பெறுவதில் குறுக்கீடு உருவாகும். லாபம்
குறையும்.
வியாபாரிகள்: நகை,
ஜவுளி, விவசாய இடுபொருட்கள், எலக்ட்ரிக்கல் எலக்ட்ரானிக்ஸ் பொருட்கள்,
மருந்து, கட்டுமானப் பொருட்கள், குளிர்பானம், பர்னிச்சர், இறைச்சி,
ஆட்டோமொபைல் உதிரிபாகங்கள் விற்பனை செய்பவர்களுக்கு போட்டி அதிகரிக்கும்.
லாபம் சுமார். மற்ற வியாபாரிகளுக்கு இவர்களை விட சற்று அதிக லாபம்
கிடைக்கும். திறமை, நேர்மையைப் பயன்படுத்தி வாடிக்கையாளர்களைத் தக்கவைப்பது
அவசியம். அளவான கொள்முதல், சரக்கு பாதுகாப்பில் கவனம் வேண்டும்.
பிறருக்காக பணப்பொறுப்பு ஏற்கக்கூடாது. வாடிக்கையாளரிடம் கொடுத்த
சரக்குக்கான பாக்கிபணம் வசூலாகி முக்கிய தேவைகளுக்கு பயன்படும்.
பணியாளர்கள்: அரசு,
தனியார் துறையில் பணிபுரிபவர்கள் பொறுப்புடன் செயல்படுவதால் பணியில்
குளறுபடி வராத தன்மை இருக்கும். சக பணியாளர்கள் அன்பு பாராட்டுவர்.
அஷ்டமத்து சனியின் தாக்கம் இருப்பதால் அலுவலகத்தில் பெயரைக் கெடுக்கும்
சம்பவங்கள் நிகழலாம். மிகுந்த கவனமாக இருக்கவும்.
பெண்கள்: பணிபுரியும்
பெண்கள் குழப்பமான மனதுடன் செயல்படுவதால் பணி நிறைவேறுவதில் தாமதம்
ஏற்படும். சக பணியாளர்களின் உதவியால் நிலைமை சீராகும். பதவி உயர்வு,
சலுகைகள் பெறுவதில் நிர்வாகத்தை அவசரப்படுத்தும் போக்கு வேண்டாம்.
குடும்பப் பெண்கள் கணவரின் அன்பு, தாய்வீட்டு சீர்வரிசை பெற்று சந்தோஷ
வாழ்வு நடத்துவர். ஆன்மிக சுற்றுலா சென்று வரலாம். சுயதொழில் புரியும்
பெண்கள் அளவான மூலதனமிடுவது நல்லது. எதிர்பார்த்த அளவு லாபம் இருக்காது.
மாணவர்கள்: மருத்துவம்,
விவசாயம், இன்ஜினியரிங், சட்டம், கேட்டரிங், ஆசிரியர் பயிற்சி,
பயோடெக்னாலஜி, ரசாயனத்துறை மாணவர்கள் குழப்பத்துடன் செயல்படுவதால்
படிப்பில் ஆர்வம் சிறிதளவு குறையும். சக மாணவர்களின் ஊக்கத்தினை ஏற்பதால்
படிப்பில் சீரான முன்னேற்றம் கிடைக்கும். மற்ற துறை மாணவர்கள் சுமாராகப்
படிப்பர். பத்தாம் வகுப்பு, பிளஸ்2 மாணவர்கள் மிகுந்த கவனத்துடன் படித்தால்
தான் அதிக மார்க் பெறலாம். தந்தையின் சொல் கேட்டு நடந்து குடும்பத்தில்
நற்பெயர் பெறுவீர்கள். கல்விநிறுவனங்களுக்கு வாகனங்களில் செல்லும் போது
மிகுந்த கவனம் வேண்டும். படித்து முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில் ஓரளவே
அனுகூலம் உண்டு.
அரசியல்வாதிகள்: கடந்தகாலத்தில்
உங்களுக்கு கிடைத்த நற்பெயர் கெடலாம். அரசு தொடர்பான செயல்கள் நிறைவேற
தாமதமாகும். ஆதரவாளர்கள் நம்பிக்கையுடன் நடந்து கொள்ளமாட்டார்கள்.
எதிரிகளிடம் இருந்து விலகுவதால் சிரமம் குறையும். அரசியல் பணிக்கு
புத்திரர் வகையில் ஆலோசனை கிடைக்கும்.
விவசாயிகள்:
விவசாயப் பணிகளில் தேவையற்ற தாமதம் ஏற்படும். அளவான மகசூல் கிடைக்கும்.
கால்நடை வளர்ப்பின் மூலம் கிடைக்கும் பணம் செலவுக்கு கைகொடுக்கும். சொத்து
ஆவணங்களை பிறர் பொறுப்பில் தரக்கூடாது.

பாட வேண்டிய பாடல்
பாடிக் கொண்டு ஆடிடப் பணிந்து
இடும் அன்பர் தம் பாதமலர்
சூடிக் கொண்டு ஆடித் திரிந்திடவே
என்னைத் தொண்டு கொள்வாய்
தேடிக் கொண்டு ஆடி வருவோர்கள்
வல்வினைச் சிக்கை எல்லாம்
சாடிக் கொண்டு ஆடிய
வாகாழி யாபதுத் தாரணனே.

பரிகாரம்:பைரவரை வழிபடுவதால் கஷ்டங்கள் விலகி நன்மை அதிகரிக்கும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

மீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி)

Post by krishnaamma on Wed May 04, 2011 1:12 pmகுரு பகவான், 2011, மே 9 அதிகாலை (மே8
நள்ளிரவு) 1.09 மணிக்கு, மீனராசியில் இருந்து மேஷராசிக்கு
பெயர்ச்சியாகிறார். இவர் 2012 மே 17 வரை இந்த ராசியில் சஞ்சரிப்பார்.

மீனம் (பூரட்டாதி 4, உத்திரட்டாதி, ரேவதி)

செல்வம் சேர்ப்பதை விட நற்பெயர் பெற விரும்பும் மீனராசி அன்பர்களே!
உங்கள்
ராசிநாதனும் பத்தாம் இட தொழில் ஸ்தான அதிபதியுமாகிய குருபகவான் தன,
குடும்ப ஸ்தானமாகிய மேஷத்திற்கு பெயர்ச்சியாகி உள்ளார். குருவின் இந்த
அமர்வு வாழ்வை வளமாக்கும். இதுதவிர குருவின் 5, 7, 9ம் பார்வை பெறுகிற
இடங்களான விவகாரம், ஆயுள், தொழில் ஸ்தானங்களின்வழியாகவும் அதிக நன்மை
கிடைக்கும். பேச்சில் சத்தியமும் சாந்தமும் கலந்திருக்கும். திருமணம்
மற்றும் சுபநிகழ்ச்சிகள் தடையின்றி நடக்கும்.
பணவரவு அதிகம் பெறுவதற்கான
புதிய வழிவகை தோன்றும். இளைய சகோதரர்கள் உங்களிடம் கூடுதல் நம்பிக்கை
கொள்வர். சமூகப்பணியில் ஆர்வத்துடன் செயல்பட்டு நற்புகழ் பெறுவீர்கள்.
வீடு, வாகன வகையில் பராமரிப்பு பணிகளை சிறப்பாகச் செய்து புத்தம் புதிதாக
மாற்றுவீர்கள். புதிய வீடு, வாகனம் வாங்க யோகம் உண்டு. தாய்வழி உறவினர்கள்
மதிப்புடன் நடத்துவர். புத்திரர்கள் உங்கள் எண்ணங்களை உணர்ந்து
செயல்படுவர். பூர்வசொத்தில் வளர்ச்சியும் தாராள பணவரவும் கிடைக்கும்.
எதிரிகளின் செயலாக்கம் குறையும். வழக்கு விவகாரத்தில் வெற்றி கிடைக்கும்.
உடல்நலம் பலம் பெறும். கடன்களை திட்டமிட்ட வகையில் அடைத்து நிம்மதி
பெறுவீர்கள். தாய்வழி உறவினர்கள் உங்களைத் தேடி வந்து நட்பு கொள்வதுடன்,
அவர்களது பிரச்னைகளுக்கும் ஆலோசனை கேட்டுப்பெறுவர். குடும்பத்தேவை
பெருமளவில் நிறைவேறும்.
சிரமம் எதுவும் அணுகாத நல்வாழ்வு அமையும்.
தந்தைவழி உறவினர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு சரியாகி அன்பு வளரும்.
சுற்றுலா பயணத்திட்டம் நிறைவேறி புதிய அனுபவங்களை பெற்றுத்தரும்.
குடும்பத்தில் சுபநிகழ்ச்சி எளிதாக நிறைவேறும்.
தொழிலதிபர்கள்:
கல்வி, நிதி நிறுவனம், மருத்துவமனை, லாட்ஜ், ஓட்டல், டிராவல்ஸ்
நடத்துவோர், காகிதம், ஆட்டோமொபைல், டெக்ஸ்டைல்ஸ், சிமென்ட், ஐஸ்கிரீம்,
சோப்பு, பட்டாசு உற்பத்தி செய்பவர்கள் திறமையை பயன்படுத்தி வளர்ச்சியும்
கூடுதல் பணவரவும் பெறுவர்கள். மற்ற தொழிலில் உள்ளவர்களுக்கு இவர்களை விட
ஆதாயம் அதிகமாக கிடைக்கும். சேமிக்க வழி யுண்டு.அபிவிருத்தி பணிகள்
நிறைவேறும். உற்பத்தியும் பொருள்தரமும் பிறர் பாராட்டும் வகையில்
இருக்கும். போட்டி குறையும். பணியாளர்கள் ஒத்துழைப்புதருவர். உபதொழில்
துவங்கும் முயற்சி நிறைவேறும்.
வியாபாரிகள்:
நகை, ஜவுளி, மளிகை, புத்தகம், சிடி, பூஜைப் பொருட்கள், வாகனம்,
உதிரிபாகங்கள், கட்டுமானப் பொருட்கள், பர்னிச்சர், இறைச்சி, காய்கறி,
பழங்கள், பூ, எண்ணெய் வியாபாரிகளுக்கு போட்டி குறைந்து கூடுதல் லாபம்
கிடைக்கும். மற்றவர்களுக்கும் தாராள விற்பனையும் லாபவிகித அதிகரிப்பும்
உண்டு. கூட்டு வியாபாரம் துவங்க முன் வருபவர்களை தவிர்ப்பது நல்லது.
பணியாளர்கள்:
அரசு, தனியார் துறையில் பணிபுரிபவர்கள் உற்சாக மனதுடன் செயல்படுவர்.
தொழில் இலக்கு குறித்த காலத்தில் பூர்த்தியாகும். பாராட்டு, பதவி உயர்வு
பெறுவீர்கள். உடல்நல ஒத்துழைப்பால் அதிகநேரம் பணிசெய்து சலுகை பெறுவீர்கள்.
சக பணியாளர்களிடம் இருந்த கருத்து வேறுபாடு விலகி நட்பு வளரும். தாராள
பணவசதி இருக்கும்.
பெண்கள்:
பணிபுரியும் பெண்கள் திறமையுடன் பணி இலக்கை சிறப்பாக நிறைவேற்றுவர்.
எதிர்பார்த்த பதவி உயர்வு, விரும்பிய சலுகை தாராளமாக கிடைக்கும். குடும்பப்
பெண்கள் எதிர்கால வளர்ச்சிக்கு தேவையான திட்டங்களை செயல்படுத்துவர். நகை,
சொத்து வாங்க யோகமுண்டு. கணவரின் அன்பு சீராக கிடைக்கும். குரு பார்வையால்
மாங்கல்ய பலம் அதிகரிக்கும். ஆபரண சேர்க்கை உண்டு. சுயதொழில் புரியும்
பெண்கள் உற்பத்தி, விற்பனையைப் பெருக்கி அதிக லாபம் காண்பர். உபதொழில்
துவங்கும் வாய்ப்பு நிறைவேறும். இளம் பெண்களுக்கு திருமணம் கைகூடும்.
மாணவர்கள்:
இன்ஜினியரிங், மருத்துவம், சட்டம், விவசாயம், ஆசிரியர் பயிற்சி, லைப்ரரி
சயின்ஸ், பிரிண்டிங் டெக்னாலஜி, பயோ டெக்னாலஜி, வங்கியியல், வணிகவியல்,
கம்ப்யூட்டர், ஓட்டல் மேனேஜ்மென்ட், கேட்டரிங் துறை மாணவர்கள் சிறப்பாகப்
படிப்பர். மற்ற துறை மாணவர்கள் இவர்களையும் விட சிறப்பாகப் படிப்பர்.
பத்தாம் வகுப்பு, பிளஸ் 2 மாணவர்கள் ஆரம்பம் முதலே படிக்க ஆரம்பித்து
விட்டால், மாநில ராங்க் பெறும் யோகமுண்டு. பணவசதி சீராக கிடைக்கும். சக
மாணவர்களாலும் உதவி உண்டு. படிப்பை முடித்தவர்களுக்கு வேலைவாய்ப்பில்
முன்னுரிமை உண்டு. சிலர் விளையாட்டுத் துறையில் சாதனை நிகழ்த்துவர்.
பாதுகாப்பு குறைவான இடங்களுக்கு செல்லக்கூடாது.
அரசியல்வாதிகள்:
அரசியலில் புகழ்பெற வெகுநாள் நினைத்திருந்த திட்டங்களை எளிதாக
செயல்டுத்துவீர்கள். தாராள பணவசதி உதவிகரமாக இருக்கும். ஆதரவாளர்களின் உதவி
கிடைக்கும். புதிய பதவி கவுரவமான வகையில் வந்து சேரும். எதிரிகள்
வியப்படையும் வகையில் முன்னேறுவீர்கள்.
விவசாயிகள்: பயிர்
வளர்க்க தேவையான பொருட்கள் நேரத்திற்கு கிடைக்கும். மகசூல் சிறந்து
சந்தையில் தாராள விலை பெறுவீர்கள். கால்நடை வளர்ப்பிலும் பலன் உண்டு. புதிய
நிலம் வாங்கலாம்.

பாட வேண்டிய பாடல்
செடியாய வல்வினைகள்
தீர்க்கும் திருமாலே
நெடியானே வேங்கடவா
நின் கோவில் வாசலில்
அடியாரும் வானவரும்
அரம்பையரும் கிடந்தியங்கும்
படியாய்க் கிடந்து உன்
பவளவாய் காண்பேனே.

பரிகாரம்
வெங்கடாஜலபதியை வழிபடுவதால் கடந்த காலத்தில் விரயமான பணமும் கிடைக்கும்.


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55626
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: குருப்பெயர்ச்சி பலன்கள் - 2010-2011

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum