புதிய பதிவுகள்
» சமையல் குறிப்பு - மோர்க்களி
by ayyasamy ram Yesterday at 6:19 pm

» மரவள்ளிக்கிழங்கு வடை
by ayyasamy ram Yesterday at 6:17 pm

» மாம்பழ குல்பி
by ayyasamy ram Yesterday at 6:16 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:51 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 4:42 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 4:30 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:22 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 4:15 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 12:51 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:28 pm

» இது அது அல்ல-(குட்டிக்கதை)- மெலட்டூர் நடராஜன்
by ayyasamy ram Yesterday at 12:06 pm

» அவன் பெரிய புண்ணியவான்! சீக்கிரம் போய் சேர்ந்து விட்டான்!
by ayyasamy ram Yesterday at 12:04 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 11:55 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 10:43 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 10:25 am

» டி20 உலகக் கோப்பை: இந்தியா விளையாடும் போட்டிகளை எத்தனை மணிக்கு பார்க்கலாம்? -
by ayyasamy ram Yesterday at 6:18 am

» கருத்துப்படம் 28/05/2024
by mohamed nizamudeen Tue May 28, 2024 10:27 pm

» காதலில் சொதப்புவது எப்படி?
by ayyasamy ram Tue May 28, 2024 8:25 pm

» இதுல எந்த பிரச்னைக்காக நீ ரொம்ப வருத்தப்படற
by ayyasamy ram Tue May 28, 2024 8:24 pm

» "ஸீஸன் பாஸ் எவ்வளவு ஸார்?"
by ayyasamy ram Tue May 28, 2024 8:22 pm

» தொந்தியினால் ஏற்படும் பலன்கள்
by ayyasamy ram Tue May 28, 2024 8:21 pm

» சிவன் சிலருக்கு மட்டும் தரும் பரிசு!
by ayyasamy ram Tue May 28, 2024 1:58 pm

» இன்றைய (மே 28) செய்திகள்
by ayyasamy ram Tue May 28, 2024 1:53 pm

» ஓ இதுதான் தக்காளி சோறா?
by ayyasamy ram Tue May 28, 2024 12:19 pm

» பொண்டாட்டியாய் மாறும்போது மட்டும் ...
by ayyasamy ram Tue May 28, 2024 12:10 pm

» வாழ்க்கையின் ரகசியம் என்ன...
by ayyasamy ram Tue May 28, 2024 12:01 pm

» அவங்கவங்க கஷ்டம் அவங்கவங்களுக்கு.
by ayyasamy ram Tue May 28, 2024 11:47 am

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Tue May 28, 2024 11:31 am

» ஏது பிழை செய்தாலும் ஏழையேனுக்கிரங்கி...
by T.N.Balasubramanian Mon May 27, 2024 8:45 pm

» விநாயகனே வெல்வினையை வேர் அறுக்க வல்லான்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:07 pm

» உருவாய் அருவாய் உளதாய் இலதாய்…
by ayyasamy ram Mon May 27, 2024 5:04 pm

» ’கேக்’ குதா!
by ayyasamy ram Mon May 27, 2024 12:33 pm

» சிட்டுக்குருவி தினம் - பொது அறிவு (கே & ப)
by ayyasamy ram Mon May 27, 2024 12:20 pm

» செண்பகமே! செண்பகமே!
by ayyasamy ram Mon May 27, 2024 11:55 am

» கடவுளைக் காண ....
by rajuselvam Mon May 27, 2024 11:20 am

» நாம தான் கார்ல போற அளவுக்கு வாழ்க்கையில முன்னேறணும்!
by ayyasamy ram Mon May 27, 2024 9:52 am

» ஆவேசம் - திரை விமர்சனம்
by ayyasamy ram Mon May 27, 2024 7:02 am

» யுவா -திரைப்பட விமர்சனம்:
by ayyasamy ram Mon May 27, 2024 7:00 am

» "கள்வன்"திரை விமர்சனம்!
by ayyasamy ram Mon May 27, 2024 6:58 am

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Sun May 26, 2024 11:35 am

» நீங்களே துணி துவைத்து காய வைங்க!
by ayyasamy ram Sun May 26, 2024 10:24 am

» திருஷ்டிக்கு வெள்ளைப் பூசணியை உடைப்பது ஏன்?
by ayyasamy ram Sun May 26, 2024 9:16 am

» வாஸ்து புருஷ மண்டலம் என்றால் என்ன?
by ayyasamy ram Sun May 26, 2024 9:15 am

» சந்தையில் அழகாய்த் தெரிந்தவள்…(விடுகதை)
by ayyasamy ram Sun May 26, 2024 9:07 am

» எட்டுவது போல் தெரியும்,ஆனால் எட்டாது!- விடுகதைகள்
by ayyasamy ram Sun May 26, 2024 9:05 am

» நுங்கு சர்பத்
by ayyasamy ram Sun May 26, 2024 9:03 am

» உமா ரமணன் பாடல்கள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:18 pm

» இன்றைய (மே 25) செய்திகள்
by ayyasamy ram Sat May 25, 2024 10:14 pm

» சினி மசாலா
by ayyasamy ram Sat May 25, 2024 10:11 pm

» பொது அறிவு தகவல்கள்- தொடர் பதிவு
by ayyasamy ram Sat May 25, 2024 10:09 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
'ஷ்ஷ்ஷ்.... Poll_c10'ஷ்ஷ்ஷ்.... Poll_m10'ஷ்ஷ்ஷ்.... Poll_c10 
37 Posts - 51%
heezulia
'ஷ்ஷ்ஷ்.... Poll_c10'ஷ்ஷ்ஷ்.... Poll_m10'ஷ்ஷ்ஷ்.... Poll_c10 
33 Posts - 45%
rajuselvam
'ஷ்ஷ்ஷ்.... Poll_c10'ஷ்ஷ்ஷ்.... Poll_m10'ஷ்ஷ்ஷ்.... Poll_c10 
1 Post - 1%
mohamed nizamudeen
'ஷ்ஷ்ஷ்.... Poll_c10'ஷ்ஷ்ஷ்.... Poll_m10'ஷ்ஷ்ஷ்.... Poll_c10 
1 Post - 1%
T.N.Balasubramanian
'ஷ்ஷ்ஷ்.... Poll_c10'ஷ்ஷ்ஷ்.... Poll_m10'ஷ்ஷ்ஷ்.... Poll_c10 
1 Post - 1%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
'ஷ்ஷ்ஷ்.... Poll_c10'ஷ்ஷ்ஷ்.... Poll_m10'ஷ்ஷ்ஷ்.... Poll_c10 
316 Posts - 46%
ayyasamy ram
'ஷ்ஷ்ஷ்.... Poll_c10'ஷ்ஷ்ஷ்.... Poll_m10'ஷ்ஷ்ஷ்.... Poll_c10 
299 Posts - 43%
mohamed nizamudeen
'ஷ்ஷ்ஷ்.... Poll_c10'ஷ்ஷ்ஷ்.... Poll_m10'ஷ்ஷ்ஷ்.... Poll_c10 
24 Posts - 3%
T.N.Balasubramanian
'ஷ்ஷ்ஷ்.... Poll_c10'ஷ்ஷ்ஷ்.... Poll_m10'ஷ்ஷ்ஷ்.... Poll_c10 
17 Posts - 2%
prajai
'ஷ்ஷ்ஷ்.... Poll_c10'ஷ்ஷ்ஷ்.... Poll_m10'ஷ்ஷ்ஷ்.... Poll_c10 
10 Posts - 1%
சண்முகம்.ப
'ஷ்ஷ்ஷ்.... Poll_c10'ஷ்ஷ்ஷ்.... Poll_m10'ஷ்ஷ்ஷ்.... Poll_c10 
9 Posts - 1%
Anthony raj
'ஷ்ஷ்ஷ்.... Poll_c10'ஷ்ஷ்ஷ்.... Poll_m10'ஷ்ஷ்ஷ்.... Poll_c10 
4 Posts - 1%
jairam
'ஷ்ஷ்ஷ்.... Poll_c10'ஷ்ஷ்ஷ்.... Poll_m10'ஷ்ஷ்ஷ்.... Poll_c10 
4 Posts - 1%
Guna.D
'ஷ்ஷ்ஷ்.... Poll_c10'ஷ்ஷ்ஷ்.... Poll_m10'ஷ்ஷ்ஷ்.... Poll_c10 
4 Posts - 1%
Jenila
'ஷ்ஷ்ஷ்.... Poll_c10'ஷ்ஷ்ஷ்.... Poll_m10'ஷ்ஷ்ஷ்.... Poll_c10 
4 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

'ஷ்ஷ்ஷ்....


   
   
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Mar 04, 2011 12:52 pm

'ஷ்ஷ்ஷ்



'ஷ்ஷ்ஷ்.... Sc
'அந்தச் சத்தம் காதில் அதிநாராசமாய் விழுந்தது. ஊளையிடும் நாயின் அர்த்தஜாம அலறல். கார்த்திகேயன் கதி கலங்கியிருந்தான். வயிற்றின் நாபியிலிருந்து, தொண்டை வழியாய் பந்தாய் அப்பிக்கொண்டது பயம். சட்டை மொத்தமும் தெப்பலாய் நனைந்து உடம்புடன் ஒட்டி உறவாடிக்கொண்டிருந்தது. சற்றேரக்குறைய ஐம்பது வினாடிக்கு முன்பு நிலாவெளிச்சம் பட்டுத் தெறித்த ஜன்னல் கண்ணாடியின் அந்தப் பக்கம், ஏதோ கரிய உருவம் உற்று நோக்கியது போல் இருந்தது.
மூன்றாவது மாடியில், நிழற்பலகைகளோ, குழாய்களோ எதுவமற்ற வெளியில் யாரால் அப்படி உற்று நோக்க முடியும்? நினைக்க மறுத்தது மூளை. அதையும் இழுத்துக்கொண்டு இப்போது
கண்ணாடி அருகே நகர்ந்திருந்தான். கனமாய் இருந்ததால் ஆசுவாசம் அதிமாக,
கண்ணாடியில் சற்றே சாய்ந்தான். இரு வினாடிக்குள் யாரோ தன்னையே பார்ப்பது போன்ற பிரமை. திடுக்கென நாடித்துடிப்பு அதிகரிக்க ஜன்னல் கண்ணாடி வழியே பார்த்தான்.
பல்லிரண்டும் துருத்திக்கொண்டு, அமானுஷ்ய பார்வை பார்த்தபடி ஒரு உருவம். நிச்சயமாய் இது பிரமையில்லை. கண்ணாடியில் தெரிந்த அந்த முகம் தனக்கு பரிச்சயம் போல் உணர்ந்தான். மீண்டும் அடி வயிற்று ஓலச் சத்தம் காற்றைக் கிழித்து
தெரித்தது. சந்தேகமின்றி முன்பு கேட்ட அதே சத்தம். அதையும் இழுத்துக் கொண்டு
மெதுவாய் ஹாலுக்கு வந்தான். சட்டையின் சொதசொதப்பில் சிவப்பாய் அதனின்று ரத்தம்
கசிந்து, வியர்வையுடன் கலந்த வாடை வீசியது.
அதன் கனம் அதிகரித்திருந்தது. சுவற்றில் சாய்த்து வைத்தாலும் துவண்டு
விழுந்தது. நேரம் விடியற்காலை ஒரு மணி இருக்க வாய்ப்புண்டு. சுவாசித்திருந்தால்
சற்றேறக்குறைய எழுவது கிலோ இருந்திருக்கும். அவன் என்பது 'அது'வாகி சரியாய்
முப்பத்தாறு நிமிடங்கள் ஆகியிருந்தன. கார்த்திகேயனுக்கு நூறு கிலோவை இழுத்து வந்த ஆசுவாசம் தேங்கியிருந்தது. 'அது' எழுவது கிலோவும், கார்த்திகேயனின் பயம்,
பதட்டம், அழுகை எல்லாவற்றிற்கும் முப்பது கிலோவுமாக எடை போடலாம். கண்ணாடியில்
தெரிந்த முகம், நிலா வெளிச்சத்தில் இறந்த பிரேதத்தை பிரதிபலித்தது இறந்த மனிதன்
கண்ணாடியின் பிம்பமாய் வரக்கூடுமா? தலை கிறுகிறுத்தது. மொத்த ஆக்ஸிஜனும்
உடம்பிலிருந்து பிடுங்கி விட்டது போல் மூச்சு விட சிரமப்பட்டான். மீண்டும் அந்த
ஊளை கேட்பதற்குள் இதை அப்புறப்படுத்தியாக வேண்டும். அவனின் பயமே
விஸ்வரூபமெடுத்து ஆங்காங்கே பிரேத வேஷம் போட்டதாய் சமாதானப்படுத்திக்கொண்டான்.
இழுத்து வந்த வழி முழுதும் திட்டுதிட்டாக கோடிட்டிருந்த ரத்தவரிகள்
காயத்தொடங்கியிருந்தது. அப்புறப் படுத்துவதற்கு முன் இதை கழுவியாக வேண்டும்
என்ற நினைப்பே ஆயாசமாய் இருந்தது. திடீரென நடு முதுகில் சிலிர் என உணர்வு. யாரோ
ஐஸ் கட்டி வைத்து இழுத்தால் ஏற்படும் சிலிர்ப்பு. உறைந்து போய் திரும்பினான்.

அப்போது...'





'ஷ்ஷ்ஷ்..நான் தான். கதவைத் திற' என்ற கிசுகிசுப்பான ரெகார்ட் செய்யப்பட்ட

காலிங் பெல் சத்தம். அடச்சே இந்த காலிங் பெல் முதன் முறையாய் என்னை

பயமுறுத்திருக்கு. என்ற நினைத்த படி, எழுதும் கதையை பாதியில் நிறுத்திவிட்டு,

கதவைத்திறந்தான் 'ஜீவன்' என்ற புனைப்பெயரில் திகில் மற்றும் மர்மக்கதைகள்

எழுதும் சத்யன். வெளியே, வாட்டசாட்டம் என்று சொல்லமுடியாவிட்டாலும் திடகாத்திர

தேகத்துக்கு சொந்தகாரனாய் கறுப்புக் கண்ணாடி அணிந்த ஒரு ஆள் நின்றிருந்தான்.





'வணக்ககம் நீங்க எழுத்தாளர் ஜீவன் தானே. நான் ரமாகாந்த் சொல்லியிருந்த ஆள்'


ஒவ்வொரு முறை பெல் அழுத்தும் போதும் ஜீவனுக்கு திகில் கற்பனைகள் சிறகடிக்கும்.
சியாமளா பெல்லை அழுத்தாமாலே கதவை தட்ட கற்றுக்கொண்டாள். பாதி நேரம் பெல்லின்
சுவிட்சை அணைத்தே வைத்திருப்பாள். பால்காரன் மளிகைக்காரன் முதல் மணி

அடித்துவிட்டு பேயரைந்த முகத்துடன் வெளியே நிற்பார்கள். இப்படிப்பட்ட ஒரு

அழைப்பு மணியை அவரகளால் யோசித்திருக்கமுடியாது. அதை விட இருமடங்கு வெளறிய
முகத்துடன் சியாமளா கதவைத் திறப்பாள்.
இப்பொழுது வந்தவனுக்கும் வியர்த்திருந்தது. 'என்ன சார்! திகில் கதை
எழுதறீங்கன்றதுக்காக இப்படி ஒரு பெல்லை வைக்கணுமா?' என்றான். மொத்தமாய்,
சுருக்கமாய் அவனைப்பற்றி இருவரிகளில் முடித்துக்கொண்டான். ஜீவனின் தீவிர ரசிகன். ரமாகாந்த் ஜீவனுக்கு சொந்தம் என்று அறிந்து ஆவலாய் பார்க்க
வந்திருக்கிறான்.

ஜீவனைப்பற்றி இந்த இடத்தில் சொல்லியே ஆகவேண்டும். இளம் எழுத்தாளர் பட்டியலில் சேர்க்க முடியாது. நாற்பதை இன்னும் அறுபது நாட்களில் தொட்டுவிடப்போகிறவன்.
வளர்ந்து வரும் எழுத்தாளர்களில் சேர்க்க முடியாது ஏனெனில் வளர்ந்து விட்ட
எழுத்தாளன். ஜீவனின் மர்ம நாவல்கள் என்றால் இரவு வேளைகளில் படிப்பதற்கு பல பலகீன இதயங்கள் பயப்படுவதுண்டு. திகில் கதைகளும் பேய்க்கதைகளும் எழுதும் ஜீவனுக்கு சினிமா கதாநாயகி போல் ஒரு மனைவி உண்டு. சியாமளா அவள் செய்த கர்மவினையால் வந்து மாட்டிக்கொண்டாள் என்றே சொல்ல வேண்டும்.

ஜீவனிடம் சியாமளாவுக்கு காதல், அன்பு, பாசம், இதெல்லாம் துளியும் இல்லை. பயம் உண்டு. அபரீமிதமான பயம். ஜீவனும் சியாமளாவும் குடும்பம் நடத்திய இடம், காட்டு இலாகா அதிகாரிகள், இன்னும் சில வருடங்களில் தங்கள் வசப்படுத்த நினைத்துள்ள ஒரு அத்வான பிரதேசம். கடை கண்ணியென்று ஆங்காங்கே சில வெளிச்சங்கள் இருக்கும்.

மொத்தமாய் கூப்பிடு தூரத்தில் பத்து குடும்பங்கள் இருந்தால் அதிகம்.
'திகில் கதை எழுதி எழுதி மூளைக் கலங்கி அதில் வர மாதிரி ஒரு நாள் என்னைக் கொன்று விடப்போகிறான்' என்று சில சமயம் சியாமளா தன் சித்தப்பா மகனும் உயிர் தோழனுமான ரமாகாந்திடம் கூறுவாள். மிக பயந்து சுபாவம் சியாமளாவுக்கு. இரவின் இருட்டில் விளக்கின்றி தூங்கக்கூட பயப்படுவாள். திருமணம் நடந்தேறிய போது ஜீவன்
பற்றி தெரியுமென்றாலும் இத்தனை தீவிர திகில் எழுத்தாளர் என்பது திருமணத்தில்
சிக்கிக்கொண்ட பின் தான் தெரிந்தது.

ஜீவன் சொற்ப சம்பளத்திற்கு கிராம மேம்ப்பாட்டு திட்ட அலுவலகத்தில் அரசாங்க உத்தியோகத்தில் இருந்தவன். இதனாலேயோ என்னமோ அவனுக்கு அத்வான வீட்டில் தான் தங்க வசதிப்பட்டது. திகில் கதைகள் எழுத அந்த வீடு ஏதுவாக இருந்ததா அல்லது அந்த வீடே திகில் கதைகள் எழுத வைத்ததா என்பது கேள்விக்குறி.
வீட்டில், ஜீவன் இருப்பது கொஞ்ச நேரமே. இருக்கும் சொற்ப நேரத்திலும் அவன் அதிகம் பேசியதில்லை. தனிமை பிடித்த விஷயம். வெறித்த பார்வை பார்த்தபடி அமர்ந்திருப்பான். கதை சிந்திக்கிறான் போலும் என்று நாமே நினைத்து சமாதானப்படுத்திக்கொள்ளலாம். புதிதாக வருபவர்கள் புத்திசரியில்லாதவனோ என்று நினைக்க வாய்ப்பிருக்கிறது. 'இதையெல்லாம் எப்படி சியாமளாவும் அவள் குடும்பத்தினரும் கவனிக்கத் தவறினர்?' என்றெல்லாம் சியாமளாவின்
அக்கம்பக்கத்தவர் பேசிக் கொண்டிருந்தனர்.

மணி நெடுநேரமாய் உட்கார்ந்திருக்கிறான். ஜீவனுக்கு யாருடனும் அதிகம்
பேசப்பிடிக்காது. 'சொல்லுங்க மணி என்ன விஷயம்'


'நான் உங்க ரசிகன் சார். சும்மா உங்களப் பார்த்துப் பேசிட்டு போலாம்னு வந்தேன்.
உங்க கதைகள் பலதை படித்திருக்கிறேன். ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு யுக்தி
கையாண்டிருக்கீங்க. கடைசி வரை யார் குற்றவாளின்னு கண்டுபிடிக்கவே முடியல. அதுவே உங்கள் வெற்றின்னு நினைக்கறேன். 'சிறுகச் சிறுக' கதை என்னால மறக்கவே முடியாது

சார். என்னமா சாமர்த்தயமா அந்த ஆளு விட்டுக்குள்ள ரசிகன்னு சொல்லி நுழையறான்.
கடைசி வரை, ரசிகன் தான் எழுத்தாளரைக் கொன்றான் என்ற அனுமானமே செய்ய முடிவதில்லை'
'சிறுக் சிறுக' கதை ஜீவனுக்கு பெயர் தேடித்தந்த கதை. ஒரு எழுத்தாளர் கொலையாவது தான் கதையின் கரு. அதை யார் செய்தனர் என்று துப்புத் துலக்க கடைசியில் அவரின் ரசிகன் என்று சொல்லி வீட்டில் நுழைந்தவன் குற்றவாளி. ஜீவனுக்கு சுரீர் என எங்கோ
தப்பு தட்டியது. எப்பொழுதுமே தேவையற்ற கற்பனைகள் மூலமின்றி பிறந்து
பராமரிப்பின்றி செழித்து வளரும். அதனால் தான் அவனால் திகில் எழுத்தாளராய் மெருகேற முடிகிறது. இவனுக்கு என்ன வேணும். எதுக்கு என்னைத் தேடி வந்தான்? என்று

பலவாறாக கோரக் கற்பனை ஓடியது.



'ஷ்ஷ்ஷ்.... Images



'ஆனாலும் உங்க வீட்டுல ஒரு இனம் புரியா அமைதியும் பயமும் இருக்கு. ஒரு வேளை ஆளரவமற்ற இடத்தில் இருப்பதால அப்படித் தோணுதா இருக்கலாம். உங்களப் பத்தி, உங்க குடும்பம் பத்தி சொல்லுங்களேன்'


'ஒண்ணும் பெரிசா இல்லை. என் பொண்டாட்டி வீட்டை விட்டு ஓடிப்போய்ட்டா' என்றான்
ஜீவன் வெறித்து பார்த்தபடி. மணிக்கு அடுத்து என்ன பேசுவது என்று தெரியாமல், எழுத்தைப் பற்றி மட்டும் ஓரிருவார்த்தைகள் பேசி விடைபெற்றான்.

ஜீவன் நெடு நேரம் அதே நாற்காலியில் உட்கார்ந்த படி விட்டத்தை வெறித்தான்.
சியாமளா கூறிய படி தனக்கு மனநோய் இருக்கலாம் என்ற எண்ணம் மேலிட்டது. எதையும்
சரியாக சிந்திக்க முடிவதில்லை. ஏனோ மணியை பார்த்தது அவனுக்கு மேலும் சங்கடம்
கூட்டியது. மணியின் ஊடுருவும் பார்வையும் வாட்ட சாட்ட உடலும் ஏதோ செய்தது.

'சிறுகச் சிறுக' கொன்று விடுவானோ? அடுத்த முறை அவனை உள்ளே அனுமதிப்பதில்லை

என்று தீர்மானித்தான். மேஜை டிராயரைத் திறந்து லைசன்ஸ் வாங்கிய துப்பாக்கியைத்

தடவிப் பார்த்தான்.


'ஷ்ஷ்ஷ்.... ImagesCAKW50ZH




என்றாவது இவனா வாய்திறந்து கெளரிம்மாவை கூப்பிட்டால் மட்டுமே அந்த வீட்டினுள் ஒலி பிறக்கும். சுற்றிலும் நிசப்தம், மயான நிசப்தம் கவ்விக்கொண்டிருக்கும்.

'கெளரிம்மா சாப்பாடு' என்ற அவன் கூவல், சாத்திய ஜன்னல் கதவில் பட்டு மீண்டும்

எதிரொலிக்கும். 'டொக்' கென்று தட்டு வைத்து விட்டு கெளரியம்மாள் போன பிறகு

அன்று முழுதும் விட்டில் ஒலியோ எதிரொலியோ அறவே இருக்காது. மீண்டும் ஜீவன் தன்

எழுத்துப்பணியில் தொலைந்து போவான்.


சியாமளா அடிக்கடி தெறிக்கும் சொற்கள், செவிப்பறையில் தாக்கிய வண்ணமிருந்தது.

'நீ பைத்தியம். என்னால உன்னோட வாழ முடியாது. எனக்கு பயமா இருக்கு' என்பாள்.

ஜீவனுக்கே சந்தேகம். தன் மனநிலை பாதிக்கப்பட்டு விட்டதாகவே கருதினான். ஆனாலும்

கதை எழுதும் சரளம் மட்டும் குறையவில்லை.

க்ரீச் என்ற கேட் சத்தம் கேட்கவில்லை. அத்தனை மும்முரம் எழுத்தில். மறுபடி

அழைப்பு ஒலி. அதே அமானுஷ்ய ஒலி. சத்ததை கிழித்துக் கொண்டு ரகசியக் குரலில்

பரவியது. ஜீவனுக்கு தூக்கி வாரிப் போட்டது. சியாமளா சொன்னது போல் இந்த பெல்லை

மாற்றவேண்டும். இனம் புரியா பயம் இப்பொழுதெல்லாம் ஜீவனுள் வாழ்கிறது. பழைய

ஜீவன் எங்கே தொலைந்துப்போனான்? ஏன் தொலைந்துப் போனான் என்றே தெரியவில்லை.
கெளரிம்மா கதவைத் திறக்க வெய்யிலின் தீவிரத்தைப் பற்றி அலுத்துக் கொண்டே உள்ளே

நுழைந்தாள் சியாமளா. சரியாய் ஒரு மணி கழித்து, ஜீவன் எழுதிக் கொண்டிருந்த

அறையில் சத்தமின்றி நுழைந்தாள்.
'ஜீவன் உங்க பொண்டாட்டி ஓடிப் போய்ட்டான்னு மணிகிட்ட சொன்னீங்களா? ரமாகாந்த்

போன் பண்ணிருந்தான்'.


' திகில் எழுத்தாளர் வீடு இல்லையா. அதான் திகிலா ஒரு சமாச்சாரம்,

சுவாரஸ்யத்துக்காக சொன்னேன். நம்பிட்டான் இடியட்'. ஜீவன் நெடு நேரம் சிரித்துக்

கொண்டிருந்தான். சியாமளாவால் சிரிக்க முடியவில்லை.

'அப்புறம் சியாமளா, நீ ரொம்ப வருஷமா கேட்ட மாதிரி அந்த பெல்லை மாற்றிடலாம்.

என்னவோ பயம்மா இருக்கு. நான் உளறுவதாய் உனக்கு ஏன் தோணுதுன்னு தெரிலை. நான்

தெளிவாத்தான் இருக்கேன். ஆனால் பார்த்துட்டே இரு. அந்த ஆளு, அதான் காலைல

வந்தானே வாட்ட சாட்டமா அவன் என்னைக் கொல்லப் போகிறான். அவனும் மோஹினியுமாக.

ஆனால் நான் சாக மாட்டேன் சியாமளா. எனக்கு தற்காத்துக் கொள்ள தெரியும். சிறுகச்

சிறுக என்னைக் கொல்ல முடியாது. மோஹினியை கிட்டவே நெருங்க விட மாட்டேன்.'





சியாமளா நெடுநேரம் ஜீவனைப் பார்த்துக் கொண்டிருந்தாள். பின் கெளரிம்மாவிடம்,

ஜீவன் சாப்பிட்டானா என்று கேட்டாள். தன் மனதுள் ஜீவனை எப்பொழுது மருத்துவரிடம்

அழைத்துப் போக வேண்டி வரும் என்று யோசித்தப் படி அன்றைய இரவைக் கழித்தாள்.





ஒரிரு வாரங்களில் மணி மீண்டும் வந்தான். இம்முறை சியாமளா அலுவலகம் கிளம்பிக்

கொண்டிருந்தாள். 'நீங்க தான் சியாமளாவா. ரமாகாந்த் சொன்னார். உங்க கணவர்

ஜோக்குக்காக சொன்னார்ன்னு அப்ப எனக்கு புரிலை. சாரி. எங்க வேலைப்

பார்க்கறீங்க?'

'நான் பக்கத்து ஊரின் தனியார் மருத்துவமனைல லேப் டெக்னிஷியனாக இருக்கேன்'





'பக்கத்து ஊரா? அவ்வளவு தொலைவா போய்ட்டு வரீங்க?'





'ஹ்ம்ம். போய்ட்டு வரது தான் ரொம்ப கஷ்டம். இரவு சில நேரம் நெடு நேரமானால்

வீட்டிற்கு வரவே பயமா இருக்கும். அதுக்கே, காலை சீக்கிரம் சென்று

இருட்டுவதற்குள் திரும்பிவிடுகிறேன்.'





'பேசாமல் நகர்புறத்திலோ டவுன் பகக்த்திலோ வீடு பார்த்து விடுங்களேன். ஜீவன்

சார் என்னவோ வேலையை விட்டு விட்டார் என்று ரமாகாந்த் சொன்னார். அவருக்கும்

ஒண்ணும் அட்சேபம் இருக்காதே'





சியாமளா நெடுநேரம் மௌனம் சாதித்தாள். அலுவலகத்திற்கு நேரமானபடியால் தன்னை

விடுவித்துக் கொண்டு புறப்பட்டாள்.





மணி வருவது சுத்தமாய் ஜீவனுக்கு பிடிக்கவில்லை. தவிர்க்க முடியாமல் தலையசைத்து

உட்கார்ந்திருந்தான். இல்லாவிட்டால் ரமாகாந்த்துக்கு செய்தி செல்லும். பிறகு

சியாமளா தன்னை வருத்தியெடுத்துவிடுவாள் என்ற நினைப்பே எரிச்சலூட்டியது. மணி

ஜீவனின் எழுத்தைப் பற்றி மட்டுமே பேசினான். யார் எந்தக் கதையில் குற்றவாளி.

அவன் அல்லது அவள் உபயோகித்த யுக்தி இது பற்றி மட்டுமே பேச்சு சுற்றிச் சுற்றி

வந்தது. ஜீவனின் ஆரம்பகால வாழ்க்கைப் பற்றி விசாரித்தான். ஜீவனுக்கு விட்டை

அமானுஷயமாய் வைத்திருப்பதில் இருந்த வெறியே கதைகள் எழுத உந்தியது என்று கேட்டு

வியப்புற்றான். அடுத்த முறை ஜீவனுக்கு ஒரு ஆச்சரியம் காத்திருப்பதாய்

சிரித்துச் சென்றான்.

ஜீவனுக்கு இரண்டு நாளாய் தூக்கம் வரவில்லை. என்ன ஆச்சரியம் இருக்கக் கூடும்?

மணியின் சிரிப்பு கண்முன் நிழலாடியது. 'சிறுகச் சிறுக'வில் வரும் மோஹினி

வருவாளோ? வந்தால் அவளுடன் பேசக் கூடாது என்று முடிவு செய்தான். அவள் எத்தனை
அழகானவளாய் இருந்தாலும் அவள் அழகில் மயங்கக் கூடாது. அதையே மந்திரம் போல்
ஜபித்துக் கொண்டிருந்தான்.


'ஷ்ஷ்ஷ்.... ImagesCARV9H1I

இரண்டு நாட்கள் கழித்து ஒரு இரவு சியாமளா நன்று உறங்கிக் கொண்டிருந்தாள். அசதி
மேலோங்கியிருந்ததால், அர்த்த சாமத்தில் பிரசவித்த சத்தம் அவளை எழுப்பவில்லை.
டக் டக்கென்று யாரோ நடக்கிற சத்தம். சரியாய் மூன்று நிமிடம் கழித்து
சியாமளாவுக்கு முழிப்பு வந்தது. கண நேரத்துக்குள் வியர்வை ஆறாய் வழிந்தது.
பக்கத்தில் படுத்திருந்த ஜீவனைக் காணவில்லை.





மெதுவாக நடந்து ஹாலைக் கடந்தாள். இறைச்சலற்ற இரவு வேளையில் காற்று மட்டும்

ஜன்னலை வெறி கொண்டு முத்தமிட்டுக்கொண்டிருந்தது. ஆடும் நிழல் ஒவ்வொன்றிலும் ஒரு

ருவம் தெரிந்தது போல் சியாமளாவுக்கு தோன்றியது. மணி கொல்ல வந்திருப்பானோ? முதன்

முதலாய் சியாமளாவுக்கு ஜீவன் கூற்றின் மேல் ஒரு பயம் வந்தது. திரைச்சீலைகளின்

ஆட்டமும், வரவேற்பறை பொம்மைகளின் நீண்ட நிழலும் மாறி மாறி பயமுறுத்தியது.





இருண்ட இடத்திலுருந்து திடீரென மின்னல் போல் வெளிச்சம். சமையலறையில் சத்தம்

துல்லியமாய்க் கேட்டது. இன்னும் அதிகமாய் இதயம் துடித்திருந்தால் அது நின்று

போயிருக்கக் கூடும். மெதுவாய் சமையல் அறைக்குள் எட்டிப் பார்த்தாள். சிவப்பு

புடவையும் ஜாக்கெட்டும் அணிந்த ஒரு உருவம் திரும்பி நின்றிருந்தது. செயலற்று

நின்றாள். ஒரே ஒரு நொடியில் உடம்பு மொத்தமும் உறைந்தது. அந்த உருவம் மெதுவாய்

திரும்பியது.

கெளரிம்மா புன்னகைத்தபடி நின்றிருந்தாள். 'என்னம்மா பயந்துட்டீங்களா. உங்க
முகமெல்லாம் வேத்து விட்டுருக்கு. நான் சும்மா தண்ணி குடிக்க வந்தேன்ம்மா'
மீண்டும் புன்னகைத்தாள்.





சியாமளா புன்னகைக்க முயன்றும் தோற்றாள். அவளுக்கு வரவர எல்லோர் மீதும் சந்தேகம்

வலுக்கிறது. இவள் இங்கே என்றால் ஜீவன் எங்கே? வந்த சுவடின்றி படுக்கை அறைக்குச்

சென்றாள். அங்கே ஜீவன், தன் துப்பாக்கியை பத்தாம் முறையாய் தடவிப் பார்த்து

தலையணை அடியில் புதைத்து வைத்துக் கொண்டிருந்தான். 'நான் உன்னைக் கொன்று

விடுவேன்' என்று முணுமுணுத்தது சியாமளாவின் காதில் விழுந்திருக்கக்கூடும்.





'மணி என்னைக் கொல்லப் போறான் சியாமளா அதுக்கு பாதுகாப்பு' என்றான். நெடு நேரம்

சியாமளா அவனை பார்த்திருந்தாள். கவலையும் பயமும் சந்தேகமும் அவள் முகத்தில்

அப்பட்டமாய் தெரிந்தது.





மூன்று நாட்களில் மணி வந்தான். அன்று வரப்போவதாய் முதலிலேயே தெரிவித்ததால்

ஜீவன் காத்திருந்தான். எந்தெந்த மாதிரியெல்லாம் அவனால் கொல்ல முடியும் என்று

யோசித்து அத்தனை வழியிலும் தன்னைப் பாதுகாக்க வழி யோசித்திருந்ந்தான்.





சரியாய் காலை பத்து மணிக்கு வந்தான். அவனுடன் கூடவே செக்கச்செவேலென்று ஒருத்தி

வந்திருந்தாள். நீண்ட அடர்த்தியான செம்பட்டை முடி. துருதுருப்பான முகம். பளீரென

புன்னகை. லிப்ஸ்டிக் போடமலே ஆரெஞ்ச் வண்ணத்தில் பளபளத்த உதடுகள், 'என்னை

இப்போதே முத்தமிடு' என்று ஆணையிட்டுக் கொண்டிருந்தன.
'ஜீவன் இது என்னுடைய கஸின். இவளும் உங்கள் ரசிகை. ரொம்ப நாளா பார்க்கணம்னு ஆசை.
அதான் அழைத்து வந்தேன்'

'ஹாய் ஜீவன்' என்று புன்னகைத்தாள். மூளை மழுங்கிய அல்லது மழுங்காத யாருமே
சொக்கி விழும் புன்னகை. ஜீவன் சொக்க ஆரம்பித்திருந்தான். கண்டதும் காதல் அல்ல.
கண்டதும் வரும் ஈர்ப்பு. அல்லது கண்டவற்றிடம் வரும் ஈர்ப்பு!
'உட்காருங்க. மிஸ்...'





'என் பெயர் மோஹினி'





அவனால் மேலும் சிந்திக்க முடியவில்லை. மோஹினி என்ற சொல் அறை முழுக்க

எதிரொலித்தது. அவள் ராட்சச உருவமெடுத்து அறையெங்கும், வீடெங்கும் சிரித்தாள்.

கத்தியுடன், துப்பாக்கியுடன், வாயில் நச்சு வைத்திருக்கும் விஷக் கன்னிகையாய்,

ஓடும் பொழுது முதுகில் குத்தும் சூன்யக்காரியாய், மயக்கும் நாகமாய் பலப்பல

வேடம் தரித்தாள்.

மணி மோஹினியைப் பார்க்க, மோஹினி வேகமாய் ஜீவன் அருகில் வந்தாள். 'என்னாச்சு

ஜீவன் ஏன் நடுங்கறீங்க'





'இல்லை. ஐ அம் ஓக்கே. சொல்லுங்க மோஹினி என் கதைகளில் உங்களுக்கு பிடித்தக் கதை

எது?"





மோஹினி புன்னகைத்தாள். " 'சிறுகக் சிறுக' தான். எல்லா கதைகளும் நல்லா

இருந்தாலும் அந்தக் கதைல முடிவு ஜீரணிக்க முடில ஜீவன்."





ஜீரணிக்க முடியாது தான். கெளரிம்மா குடிக்க காபி கொண்டு வந்தாள். மோஹினியும்

கெளரிம்மாவும் புன்னகைத்தனர். ஜீவனுக்கு கோவம் கோவமாய் வந்தது. மோஹினிக்கு

கெளரிம்மாவை தெரியும். எல்லோரும் சேர்ந்து தன்னைக் கொல்ல திட்டமிட்டிருப்பது

வெட்ட வெளிச்சமாய் புரிந்தது. மோஹினியும் கெளரம்மாவும் ஏதோ சமிக்ஞை

செய்தார்கள். எல்லாம் திட்டமிட்ட சதி.





மணி ஏதோ சொல்கிறான். என்னவென்று ஜீவனுக்கு காதில் விழவில்லை. பின் மூவருமாய்

புன்னகைக்கின்றனர். மெதுவாய் அவன் பாக்கெட்டில் கைவைத்துப் பார்க்கிறான்.

தோட்டாவுடன் துப்பாக்கி பத்திரமாய் இருக்கிறது. இவர்கள் முந்துவதற்குள் நான்

முந்த வேண்டும் என்று ஆணித்தரமாய் மனதுள் சொல்லிக்கொண்டான். சியாமளா இல்லாமல்

போய்விட்டாளே! இருந்திருந்தாள் நான் பைத்தியம் இல்லை என்று புரிந்திருப்பாள்.

என்னை காபாற்ற அவளும் துப்பாக்கி எடுத்திருபாள் என்று ஒரு ஓரமாய் சிந்தனை

ஓடியது. துப்பாக்கி எடுப்பதற்குள் ஏனோ அவனுக்கு கண் மங்கிக்கொண்டே வந்தது.

சுற்றிலும் ஒரே சத்தம். மோஹினியும் மணியும் ஏதோ கத்த கெளரிம்மா அவனைத்

தொடுகிறாள். ஜீவனுக்கு தான் கொல்லப்பட்டுவிட்டோமா என்று சந்தேகம் வந்தது.

சிறிது நேரத்தில் எல்லாம் வெறுமையாய் அடங்கிப் போனது.

நீண்டு படுத்திருந்தான் ஜீவன். பக்கத்தில் சியாமளா அவனையே கண்கொட்டாமல்

பார்த்துக்கொண்டிருந்தாள். கெளரிம்மாவுடன், மணியும் மோஹினியும் கூட அவள்

அலுவலகத்திலிருந்து வரும் வரை இருந்தனர். படுக்க வைத்திருப்பதாகவும் அருகில்

உள்ள நாட்டு மருத்துவர் ஏதோ தற்காலிக மருந்து கொடுத்திருப்பதாகவும் கூறினர்.

மணியைப் பற்றியும் மோஹினியைப் பற்றியும் எதற்கும் தெரிந்து வைத்துக்கொள்ளுதல்

நலம் என்று சியாமளா முடிவு செய்தாள். ரமாகாந்துக்கு ·போன் செய்து விஷயம்

சொன்னாள். நாளையே அவனைப் புறப்பட்டு வரும்படி விழைந்தாள்.

சிந்தனையும் தாண்டி தூக்கம் ஆட்கொண்டது. சியாமளா தூங்கிய சிறிது நேரத்தில்

ஜீவனுக்கு மெதுவாய்நினைவு திரும்பியது. குழப்பமாய் பல மனிதர்கள் வந்து பொயினர்.
மெதுவாய் எழுந்து தன் பிம்பத்தை கண்ணாடியில் பார்த்தான். 'இவனைக் கொல்ல
எத்தனைப் பேர்!' எண்ணிச் சிரித்தான். கண்ணாடியின் பிம்பம் கொஞ்ச கொஞ்சமாய்
மாறியது. அங்கே ஜீவனுக்கு பதில் மணி நின்றிருந்தான். கூடவே ஆரெஞ்ச் நிற உதட்டைப் பிதுக்கியபடி, செம்பட்டை முடி காற்றில் பறக்க மோஹினியும். இம்முறை தவற
விடக்கூடாது, என்ற வெறியுடன் வேகமாய் அவன் கை தலையணை அடியில் துப்பாக்கி
தேடியது. அங்கு இல்லாததால் அறை முழுதும் அவசரமாக, பயத்துடன் அலைந்தான்.
ஏதேச்சையாய் கை ஜிப்பா பாக்கெட்டை தழுவியது. துப்பாக்கி எடுப்பதற்கு முன் மணி
அவனை என்னவோ செய்தது நினைவு வந்தது. நல்லவேளை அவன் துப்பாக்கி எடுக்கவில்லை.

அதை அங்கு ஒளித்து வைத்திருப்பது யாருக்கும் தெரிய வாய்ப்பில்லை.





மின்னல் வேகத்தில் துப்பாக்கி கண்ணாடியைப் பதம் பார்த்தது. கண்ணாடி சுக்கு

நூறாய் உடைந்தது. ஜீவனின் ஆத்திரம் பன்மடங்கானது. மணியின் பிம்பம் காணவில்லை.

ஆனால் அவன் போட்டிருந்த ஜிப்பா தன்னைப் போலவே இருந்ததை நினைவுற்றான். சுற்றிச்

சுற்றி கண் சுழல விட்டான், அவனே அணிந்திருந்த ஜிப்பாமேல் கண் நிலைகுத்தி நின்றது. சியாமளா அரவம் கேட்டு என்னவென்று தெளிந்து தடுப்பதற்குள் ஜீவன்
ஜிப்பாவில் தெரிந்த மணியை, மணியின் பிம்பத்தில் இருந்த தன்னை, நெஞ்சில் சரியாய்
கை வைத்து சுட்டான்.





"பிரபல எழுத்தாளர் ஜீவன் மரணம். சில நாட்களாகவே மனநிலை சரியின்றி
இருந்திருக்கக் கூடும் என மருத்துவர்கள் தெரிவிக்கின்றனர்" அடுத்த நாள்
'தினமுரசு' நாளிதழ், கொட்டை எழுத்தில் தலைப்புச் செய்தியைத் துப்பியது.


"ஷீசோப்ரீனியா பற்றிய சோதனைக்காக எலிகளுக்கு எபிட்ரைன் பயன்படுத்தப்பட்டது.

கிட்டத்தட்ட ஆம்பிடமைனின் குணம் கொண்ட இந்த ரசாயனப் பொடியால் மூளை நரம்புகள்

தாக்குப்படுகிறது. மனிதனுக்கு இந்நோய் பீடிக்கப் பட்டால் மெல்ல மெல்ல பயம்,

மனச்சோர்வு முதலியவை படிப்படியாய் வளர்ந்து, ஹாலுசினேஷன் என்ற பிரமை நிலை

ஆட்கொள்ளும். தற்கொலை எண்ணத்திலும் கொண்டு போய் விட வாய்பிருக்கிறது" பிரபல

டாக்டரின் பேச்சை, அவள், நூறாவது முறையாய் ஒலிநாடாவில் கேட்டுக்கொண்டிருந்தாள்.
வாய்ப்பென்ன சாத்தியமே இருக்கிறது. ஆனால் அவளால் அதைச் சொல்ல முடியாது.



எபிட்ரைனை ரகசியமாய் உணவில் கலந்து கொடுக்கும் வேலை இனி இருக்காது. ஆறு மாதமாய் ஸ்டாக் வைத்திருந்த மருந்தை நீரில் கரைத்து கொட்டினாள். இப்பொழுதெல்லாம் அவளுக்கு பயம் பழகிவிட்டது. பயத்தால் அனுபவித்த வேதனைச் சுவடுகள் மட்டும் மறையவில்லை.

'ஷ்ஷ்ஷ்.... B



அவள் பயப்படும் பொழுதெல்லாம் ஜீவன் பெரிதாய் சிரிப்பான். பலகீனமான அவள், கணகற்ற முறை இறந்திருப்பாள். அவனையே பயத்தின் எல்லையில் நிறுத்திக் கொன்ற வெறியில் மெதுவாய் சிரித்தாள் சியாமளா.

-ரஞ்சன்



நியாஸ் அஷ்ரஃப்
நியாஸ் அஷ்ரஃப்
தளபதி

தளபதி
பதிவுகள் : 1313
இணைந்தது : 15/06/2010

Postநியாஸ் அஷ்ரஃப் Fri Mar 04, 2011 2:20 pm

'ஷ்ஷ்ஷ்.... 300136 'ஷ்ஷ்ஷ்.... 300136
ஓ மை காட்..



ஜாதி மதங்கள் மறுப்பதும்
போதை புறக்கணிப்பதுமே
புதிய சமுதாயம்


'ஷ்ஷ்ஷ்.... A'ஷ்ஷ்ஷ்.... S'ஷ்ஷ்ஷ்.... H'ஷ்ஷ்ஷ்.... R'ஷ்ஷ்ஷ்.... A'ஷ்ஷ்ஷ்.... F'ஷ்ஷ்ஷ்.... Blank
மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Mar 04, 2011 3:24 pm

திகில் படம் பார்த்ததை போல் இருந்தது....

திகில் கதை எழுதுவது என்ன உலகமகா குற்றமா? அதற்காக ஒரு பெண் தன் கணவனை கொல்ல இப்படி சிறுக சிறுக நீரில் மருந்து கலந்து கொடுத்து மூளைல இப்படி எல்லாம் ஸ்தம்பிக்க வைத்து தானே கொலை செய்ய தூண்டும் வரை செய்யனுமா? பாவம் ஜீவன்....

அன்பு நன்றிகள் ரேவ் பகிர்ந்தமைக்கு....



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

'ஷ்ஷ்ஷ்.... 47
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Fri Mar 04, 2011 3:36 pm

முதலில் நன்றி மஞ்சு அக்கா ,,,,,,,,,உங்களுக்கும், எனக்கும் தெரியும் ஜீவன் பாவம் என்று, ஆனால் அவளுக்கு மட்டுமே தெரியும் அவளின் தினம் தினம் நரக வேதனை.....நிரஞ்சனின் இந்த வரிகளே போதும்........ (இப்பொழுதெல்லாம் அவளுக்கு பயம் பழகிவிட்டது. பயத்தால் அனுபவித்த வேதனைச் சுவடுகள் மட்டும் மறையவில்லை அவள் பயப்படும் பொழுதெல்லாம் ஜீவன் பெரிதாய் சிரிப்பான். பலகீனமான அவள், கணகற்ற முறை இறந்திருப்பாள். அவனையே பயத்தின் எல்லையில் நிறுத்திக் கொன்ற வெறியில் மெதுவாய் சிரித்தாள் சியாமளா)



மஞ்சுபாஷிணி
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 9995
இணைந்தது : 06/05/2010
http://www.manjusampath.blogspot.com

Postமஞ்சுபாஷிணி Fri Mar 04, 2011 3:41 pm

ஹூம்..... இருக்கலாம் இப்படியும்.... இத்தனை படுத்தினால் பாவம் அவளும் என்ன தான் செய்வாள்..... ஆனா பயமா தான் இருக்கு......
மஞ்சுபாஷிணி
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் மஞ்சுபாஷிணி



மனோஜபம் மாருத துல்யவேகம் ஜிதேந்திரம் புத்திமதாம் வருஷ்டம் வாதாத்மஜம் வானர தூத முக்யம் ஸ்ரீராம தூதம் சரணம் பிரபத்யே:
என்றும் அன்புடன்...
மஞ்சுபாஷிணி

'ஷ்ஷ்ஷ்.... 47
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Fri Mar 04, 2011 7:58 pm

நல்ல கதை..!




நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!
ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jun 13, 2011 2:15 pm

கலைவேந்தன் wrote:நல்ல கதை..!

'ஷ்ஷ்ஷ்.... 678642 அண்ணா



ரேவதி
ரேவதி
நிர்வாகக் குழு

பதிவுகள் : 13100
இணைந்தது : 04/03/2011

Postரேவதி Mon Jun 13, 2011 2:18 pm

எனக்கு பிடித்த கதை அதனால் இதை மற்றவர்களும் படிபதற்காக
இதை இடுகிறேன் புன்னகை



Sponsored content

PostSponsored content



View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக