ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 சிவனாசான்

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 சிவனாசான்

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

"குவான்டனாமோ" சிறை மர்மம் அம்பலம்!

View previous topic View next topic Go down

"குவான்டனாமோ" சிறை மர்மம் அம்பலம்!

Post by ந.கார்த்தி on Mon Apr 25, 2011 6:57 pm

குவான்டனாமோவில் அமெரிக்கா அமைத்துள்ள சித்திரவதை சிறைக் கூடத்தில் அடைத்து வைக்கப்பட்டுள்ள பல கைதிகள் எந்தத் தவறும் செய்யாத அப்பாவிகள் என்பது விக்கிலிகீஸ் வெளியிட்டுள்ள புதிய ஆவணங்கள் மூலம் தெரிய வந்துள்ளது.


சின்னச் சின்னக் காரணங்களுக்காக அங்கு பலர் அடைத்து வைக்கப்பட்டு சித்திரவதை செய்யப்பட்டு வருகின்றனர். 89 வயது முதியவரையும் கூட அடைத்துப் போட்டு அழகு பார்த்துக் கொண்டிருக்கிறது அமெரிக்கா. சிறையை அடைக்க அமெரிக்க அதிபர் ஒபாமா உத்தரவிட்டும் கூட இன்னும் 172 பேர் அங்கு எதிர்காலம் என்னாகுமோ என்ற பெரும் கேள்விக்குறியுடன் தவித்துக் கொண்டுள்ளனர் என்று அந்த ஆவணத் தகவல் தெரிவிக்கிறது.

குழந்தைகள், முதியவர்கள், மன நலம் பாதிக்கப்பட்டவர்கள் என சகல தரப்பினரும் தவறான காரணங்களுக்காக இங்கு அடைக்கப்பட்டு கொடுமைக்குள்ளாகியுள்ளனர். கிட்டத்தட்ட 759 ஆவணங்களை விக்கிலீக்ஸ் மூலம் வாஷிங்டன் போஸ்ட் நாளிதழும், கார்டியனும் வெளியிட்டுள்ளன.

உலக அளவில் பெரும் சர்ச்சைகளை ஏற்படுத்திய குவான்டானாமோ சித்திரவதைக் கூடத்தின் மர்மங்களை அம்பலப்படுத்தும் வகையில் இந்த ஆவணங்கள் உள்ளன. இங்கு அடைத்து வைக்கப்பட்டுள்ள பலர் பல வருடங்களாக விசாரணையே இல்லாமல் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர். என்ன காரணத்திற்காக அவர்கள் அடைத்து வைக்கப்பட்டுள்ளனர் என்பது கூடத் தெரியவில்லை. மேலும் பலரை கட்டாயப்படுத்தி, சித்திரவதை செய்து வாக்குமூ்லம் வாங்கியுள்ளது அமெரிக்கா.

கிட்டத்தட்ட அங்கு அடைத்து வைக்கப்பட்டிருந்த, அடைத்து வைக்கப்பட்டுள்ள ஒவ்வொரு கைதி குறித்தும் ஆவணத்தை வெளியிட்டுள்ளது விக்கிலீக்ஸ். கடந்த 2002ம் ஆண்டு இந்த சிறைக் கூடம் திறக்கப்பட்டது. அன்று முதல் இன்று வரை அந்த சிறையில் நடப்பது பெரும் மர்மமாகவே இருந்து வருகிறது. இன்னும் 172 பேர் அங்கு வாடி வருகின்றனர்.

உண்மையில் இந்தக் கூடத்தில் பயங்கரமான தீவிரவாதிகளோ அல்லது எதிரி நாட்டு வீரர்களோ அடைத்து வைக்கப்பட்டிருக்கவில்லை. மாறாக அப்பாவிகள்தான் அதிகம் உள்ளனர். அவர்களில் 89 வயதான ஆப்கானிஸ்தான் கிராமவாசியும் ஒருவர். 14 வயதான சிறுவனும் ஒருவன்.

இந்த முதியவரை ஆப்கானிஸ்தானிலிருந்து இந்த சிறைக்குக் கொண்டு வந்துள்ளனர். அவரது வீட்டு வளாகத்தில் சந்தேகத்திற்கிடமான போன் எண்கள் அடங்கிய குறிப்பு கிடந்தது என்பதுதான் இந்த முதியவரை விசாரணைக்காக கொண்டு வந்து அடைத்துள்ளதற்கான காரணம். மற்றபடி இவருக்கு தீவிரவாதிகளுடன் எந்தத் தொடர்பும் இருப்பதாக தெரியவில்லை. அதேபோல உள்ளூர் தலிபான் தலைவர்கள் பற்றித் தெரிந்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் 14 வயது சிறுவனைக் கூட்டி வந்து அடைத்து வைத்துள்ளனர்.

இந்த ஆவணங்களில் கூறப்பட்டுள்ள பிற முக்கியத் தகவல்கள்:

- பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-யை தீவிரவாத அமைப்பாக அறிவிக்க அமெரிக்கா முன்பு திட்டமிட்டிருந்ததாம். அல் கொய்தா, ஹமாஸ்,ஹிஸ்புல்லா, ஈரான் உளவுத்துறை ஆகியவற்றுடன் சேர்த்து ஐஎஸ்ஐயையும் ஒரு தீவிரவாத அமைப்பாக அது வகுத்து வைத்திருந்தது. இந்த அமைப்புகளில் ஏதாவது ஒன்றுடன் யாருக்கு்த தொடர்பு இருந்தாலும் அவர்களை தீவிரவாதிகள் அல்லது தீவிரவாத செயல்களுடன் தொடர்புடையவர்கள் என்று அறிவிக்கவும் அமெரிக்கா திட்டமிட்டிருந்தது. இதை குவான்டனாமோ சிறையில் உள்ள விசாரணை அதிகாரிகளிடம் தெரிவித்து இந்த அமைப்புகளுடன் யாருக்காவது தொடர்பு இருந்தால் அவர்களை தீவிரவாதிகளாக கருதுமாறு அறிவுறுத்தப்பட்டிருந்ததாம்.

- சிறையில் அடைத்து வைக்கப்பட்டிருந்த 100க்கும் மேற்பட்ட கைதிகள் ஒரு கட்டத்தில் மனதளவில் கடும் பாதிப்பை சந்தித்துள்ளனர். பலர் உண்ணாவிரதத்தில் குதித்துள்ளனர். இன்னும் பலரோ தற்கொலை செய்யவும் கடுமையாக முயன்றுள்ளனர்.

- அதேபோல ஏராளமான இங்கிலாந்து பிரஜைகளும் கூட இங்கு பல வருட காலமாக அடைக்கப்பட்டிருந்தனர். அவர்களுக்கு அல் கொய்தாவுடனோ அல்லதி தலிபானுடனோ எந்தத் தொடர்பும் இல்லை என்பது அமெரிக்காவுக்கு தெரிந்திருந்தும் கூட தேவையில்லாமல் அடைத்து வைத்துள்ளனர். ஜமால் அல் ஹரித் என்ற இங்கிலாந்து பிரஜையை, தலிபான்களின் சிறையில் இருந்தார் என்பதற்காக கைது செய்து குவான்டனாமோவில் அடைத்து வைத்திருந்தனர். அதேபோல பின்யாம் முகம்மது என்ற இன்னொரு இங்கிலாந்து நாட்டவரை தூக்கிலிட்டுக் கொல்லவும் அமெரிக்க ராணுவம் முயன்றுள்ளது.

- பல கைதிகளை சித்திரவதை செய்து அவர்களை வற்புறுத்தி தங்களுக்கு சாதகமாக ஒப்புதல் வாக்குமூலத்தை அமெரிக்க ராணுவம் வாங்கியுள்ளது. இது நிற்காது என்று தெரிந்தும் கூட, அதை பெரிய ஆதாரமாக கருதி தொடர்ந்து அவர்களை சித்திரவதை செய்து வந்துள்ளது.

- வேறு வழியில்லாமல் பலரை அவரவர் சார்ந்த நாடுகளிடம் ஒப்படைத்தபோது, அவர்களால் அமெரிக்காவுக்கு பெரும் அபாயம் ஏற்படும் என்று எச்சரித்தே ஒப்படைத்துள்ளது அமெரிக்க ராணுவம்.

இப்படிப்பட்ட சித்திரவதைக் கூடத்தை மூட ஒபாமா மேற்கொண்ட முயற்சிகள் தோல்வியே என்றும் வாஷிங்டன் போஸ்ட் வர்ணித்துள்ளது. கைதிகளுக்கான அடிப்படை மனித உரிமைகளைக் கூட இந்த சிறைக் கூடத்தில் அமெரிக்க ராணுவம் கடைப்பிடிக்கவில்லை என்பது வெட்ட வெளிச்சமாகியுள்ளதாகவும் வாஷிங்டன் போஸ்ட் சாடியுள்ளது.

இந்த கைதிகள் கூட்டத்தில் சீன முஸ்லீம்களான உய்கூர் முஸ்லீம்களும் கணிசமான பேர் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடைக்கப்பட்டுள்ள கைதிகளில் ஒருவரான மாத் அல் குத்தானி என்பவர், 9 ஆண்டுகளுக்கு முன்பு பிடிபட்டார். இவர் செய்த தவறு என்னவென்றால், பின்லேடன் கடைசியாக காணப்பட்ட, தோரா போரா மலைப் பகுதியிலிருந்து 2001ம் ஆண்டு இவர் தப்பி வந்ததே. இதனால் இவருக்கு பின்லேடன் குறித்துத் தெரியும் என்று கூறி பிடித்து வந்து அடைத்து விட்டனர்.

இவரை பின்லேடனின் பாடிகார்டுகளில் ஒருவர் என்று அமெரிக்க ராணுவம் கூறுகிறது. இவரை விடுதலை செய்யவே முடியாது என்றும் அது கூறி வருகிறது.

அதேபோல காந்தஹாரில் உள்ள மனு மசூதி என்ற மசூதியில் முல்லாவாக இருந்த ஒருவரையும் பிடித்துப் போட்டனர். இவருக்கு தலிபான்கள் குறித்து நன்றாக தெரியும் என்பது இவர் மீதான குற்றச்சாட்டாகும். ஆனால் அவரிடமிருந்து எந்தத் தகவலையும் இவர்களால் கறக்க முடியாததால், ஒரு வருட சித்திரவதைக்குப் பின்னர் விடுவித்து விட்டனர்.

அதேபோல காபூல், கோவ்சத் ஆகிய பகுதிகளை நன்கு அறிந்து வைத்திருந்தவரான டாக்சி டிரைவர் ஒருவரையும் கைது செய்து இந்த சிறையில் அடைத்தனர்.

அல் ஜசீரா டிவியின் செய்தியாளர் ஒருவரையும் அமெரிக்க ராணுவம் கைது செய்து இங்கு அடைத்து வைத்திருந்தது. 6 வருட கால சிறைவாசத்திற்குப் பின்னர்தான் அவரை விடுவித்துள்ளனர். அல் ஜசீரா குறித்து அறிந்து கொள்வதற்காக இவரைக் கைது செய்துள்ளனர்.

விக்கிலீக்ஸ், குவான்டனாமோ குறித்து வெளியிட்டுள்ள இந்த தகவல்கள் பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியையும் தருவதாக உள்ளது.
TMT
avatar
ந.கார்த்தி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6114
மதிப்பீடுகள் : 950

View user profile http://karthinatarajan.blogspot.in/

Back to top Go down

Re: "குவான்டனாமோ" சிறை மர்மம் அம்பலம்!

Post by மஞ்சுபாஷிணி on Mon Apr 25, 2011 9:01 pm

வேதனை சோகம்
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9997
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: "குவான்டனாமோ" சிறை மர்மம் அம்பலம்!

Post by Aathira on Mon Apr 25, 2011 10:03 pm

உள்நாட்டுலயும் இப்படி அடக்குமுறைதானா அமெரிக்கா...இதெல்லாம் அச்சத்தின் அடையாளமே..


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14380
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: "குவான்டனாமோ" சிறை மர்மம் அம்பலம்!

Post by சிவா on Thu Feb 05, 2015 10:57 pm

2002ஆம் ஆண்டு ஜனவரி 12ஆம் தேதி அமெரிக்க விமானப் படை விமானம் ஒன்று குவான்டனாமோவில் உள்ள கடற்படைத் தளத்தில் தரையிறங்கியது. ஆரஞ்சு நிற கைதி உடை அணிந்த 20 பேர் விமானத்திலிருந்து இறக்கப்பட்டு, அங்குள்ள "கேம்ப் டெல்டா' சிறையில் அடைக்கப்பட்டனர்.

அவர்கள் ஆப்கனைச் சேர்ந்தவர்கள் என்றும், 2001, செப்டம்பர் 11ஆம் தேதி நியூயார்க் இரட்டைக்கோபுரத் தாக்குதலில் தொடர்புடையவர்கள் என்றும் அமெரிக்கா கூறியது. அதன்பிறகு அடுத்தடுத்த நாள்களில், அமெரிக்க மண்ணில் பயங்கரவாதச் செயலில் ஈடுபட்டவர்கள் என சந்தேகிக்கப்படும் நூற்றுக்கணக்கானோர் குவான்டனாமோவுக்கு கொண்டுசென்று அடைக்கப்பட்டனர்.

முறையான குற்றச்சாட்டுப் பதிவின்றி, சந்தேகப்படுபவர்களை எல்லாம் விசாரணை என்கிற பெயரில் அச்சிறையில் அமெரிக்கா சித்திரவதை செய்வதாக உலகம் முழுவதும் புகார்கள் எழுந்தது. ஆனால், எதைப் பற்றியும் அமெரிக்கா கவலைப்படவில்லை.

2009ஆம் ஆண்டு ஜனவரி 20ஆம் தேதி முதல்முறையாக அதிபராகப் பதவியேற்ற இரண்டு நாள் கழித்து, "குவான்டனாமோ விரிகுடாவில் உள்ள அமெரிக்காவின் ராணுவச் சிறை ஓராண்டுக்குள் மூடப்படும்' என ஒபாமா அறிவித்தார். ஓராண்டு அல்ல 6 ஆண்டுகள் கடந்தும் அவரது வாக்குறுதி நிறைவேறவில்லை. இப்போதும் தனது பதவிக்காலம் முடியும் முன்னர், அச்சிறை மூடப்படும் என நம்பிக்கை தெரிவிக்கிறார். ஆனால், அமெரிக்க அதிபரே நினைத்தாலும் செயல்படுத்த முடியாத அளவு குவான்டனாமோ ராணுவச் சிறை விவகாரம் சிக்கல் நிறைந்தது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: "குவான்டனாமோ" சிறை மர்மம் அம்பலம்!

Post by சிவா on Thu Feb 05, 2015 10:57 pm

திருப்பிக் கேட்கும் கியூபா

கியூபாவின் தென்கிழக்குக் கடலோரத்தில் அமைந்துள்ள இந்த குவான்டனாமோ விரிகுடாவில் 45 சதுர மைல் பரப்பளவு அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் உள்ளது. இந்தப் பகுதியை தங்களிடம் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என கியூபா கடந்த காலங்களில் தொடர்ந்து வலியுறுத்தி வந்திருக்கிறது. இருப்பினும், இப்போது அமெரிக்கா, கியூபா இடையிலான உறவை 50 ஆண்டுகளுக்குப் பின்னர் புதுப்பிக்கக் கிடைத்த சந்தர்ப்பத்தில் இந்த விவகாரம் மீண்டும் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளது.

அமெரிக்க அதிபர் ஒபாமாவும், கியூபா அதிபர் ரவுல் காஸ்ட்ரோவும் இரு நாடுகளுக்கு இடையிலான உறவைப் புதுப்பிக்க இணைந்து பணியாற்றப் போவதாக, கடந்த டிசம்பர் மாதம் அறிவித்தனர். அதைத் தொடர்ந்து, அமெரிக்க வெளியுறவு துணை அமைச்சர் கியூபாவுக்கு சென்று, அந்நாட்டு அதிகாரிகளுடன் இதுதொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்தினார். அத்துடன் அரசு எதிர்ப்பாளர்களையும் அவர் சந்தித்ததால் ஏற்பட்டது வினை. உறவைப் புதுப்பிப்பதாகச் சொல்லி மீண்டும் கியூபாவின் உள்நாட்டு விவகாரத்தில் அமெரிக்கா தலையிடுகிறதோ என்ற சந்தேகம் கியூபா அரசுக்கு. இந்தச் சந்தேகத்தைப் போக்கிக்கொள்ளவும், அமெரிக்காவுக்கு ஓர் எச்சரிக்கை விடுக்கும் வகையிலும், இருநாட்டு உறவு தொடர்பான பேச்சுவார்த்தையில் முன்னேற்றம் ஏற்பட வேண்டுமென்றால் தங்களது மூன்று கோரிக்கைகளை அமெரிக்கா முன்கூட்டியே நிறைவேற்ற வேண்டும் என்றார் ரவுல் காஸ்ட்ரோ.

1) கியூபாவுக்கு எதிரான வர்த்தகத் தடையை நீக்க வேண்டும்.

2) குவான்டனாமோ விரிகுடாவை கியூபாவிடம் ஒப்படைக்க வேண்டும்.

3) அமெரிக்காவில் கொள்கை முடிவுகளால், கியூபாவுக்கு ஏற்பட்ட மனித, பொருளாதார இழப்புகளுக்கு இழப்பீடு வழங்க வேண்டும் என்பதே அந்தக் கோரிக்கைகள்.

இதில், மற்ற 2 கோரிக்கைகளுக்குப் பதிலளிக்காத அமெரிக்கா, குவான்டனாமோ விரிகுடாவை திரும்ப ஒப்படைக்கப்போவதில்லை என்பதை மட்டும் உடனடியாகச் சொன்னது. "குவான்டனாமோ விரிகுடாவில் உள்ள சிறை மூடப்பட வேண்டும் என அதிபர் விருப்பம் தெரிவித்துள்ளார். ஆனால், அங்குள்ள கடற்படைத் தளம் மூடப்பட வேண்டும் என்பதில்லை' என வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் ஜோஷ் எர்னஸ்ட் கூறியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: "குவான்டனாமோ" சிறை மர்மம் அம்பலம்!

Post by சிவா on Thu Feb 05, 2015 10:58 pm

சித்திரவதை முகாம்?

குவான்டனாமோ விரிகுடாவில் உள்ள அந்த ராணுவச் சிறையை 2002ஆம் ஆண்டு அமெரிக்கா ஏற்படுத்தியது. 2001, செப்டம்பர் 11 தாக்குதல் மற்றும் அமெரிக்க மண்ணில் நடந்த பல்வேறு பயங்கரவாதத் தாக்குதலில் தொடர்புடையவர்கள் என அமெரிக்காவால் சந்தேகிக்கப்படும் 700-க்கு மேற்பட்டோர் இச்சிறையில் அடைக்கப்பட்டிருந்தனர். அவர்கள் மிகக் கொடூரமான வகையில் சித்திரவதை செய்யப்படுவதாக அமெரிக்கா மீது குற்றச்சாட்டுகள் உள்ளன. எப்படியெல்லாம் சித்திரவதை செய்வது என்பதை பரிசோதனை செய்யும் ஆய்வுக்கூடமாக அமெரிக்கா இச்சிறையைப் பயன்படுத்தி வருவதாகவும் புகார்கள் எழுந்தன.

இரட்டைக் கோபுர தாக்குதலில் தொடர்புடையவராகக் குற்றம்சாட்டப்பட்டு இச்சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் மௌரிடானியா நாட்டைச் சேர்ந்த முகமது சலாகி எழுதி, அவரது வழக்குரைஞரால் வெளியிடப்பட்டுள்ள "குவான்டனாமோ டைரி', இச்சிறையில் பணியாளராக இருந்த ஜோசப் ஹிக்மேன் எழுதியுள்ள "கேம்ப் டெல்டாவில் கொலை' ஆகிய நூல்கள், அச்சிறையில் நடத்தப்படும் மனித உரிமைகளுக்கு எதிரான சித்திரவதை கொடூரத்தை வெளிப்படுத்தி, அமெரிக்காவுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தின.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: "குவான்டனாமோ" சிறை மர்மம் அம்பலம்!

Post by சிவா on Thu Feb 05, 2015 10:58 pm

மூடும் நேரம்?

இந்தச் சூழ்நிலையில்தான், குவான்டனாமோ விரிகுடாவை கியூபா திரும்பக் கேட்பதும், அங்குள்ள சிறையை மூட வேண்டும் என்ற விருப்பத்தை அதிபர் ஒபாமா அவ்வப்போது கூறி வருவதும் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்னர்கூட ஒபாமா ஒரு கூட்டத்தில் பேசுகையில், ""அமெரிக்கர்களாக, நீதிக்காக ஓர் ஆழமான அர்ப்பணிப்பை நாம் கொண்டுள்ளோம். அதனால், ஒரு சிறையைத் திறந்துவைத்து ஒரு கைதிக்கு 3 மில்லியன் டாலரை இன்னும் செலவு செய்வதில் எந்த அர்த்தமும் இல்லை. அச்சிறையை மூட வேண்டும் என்கிற எனது உறுதியை நான் கைவிட மாட்டேன். நாம் யார் என்பதற்கு குவான்டனாமோ சிறை உதாரணமாக இருக்கக் கூடாது. இது சிறையை மூடவேண்டிய நேரம்' என்றார்.

ஆனால், இந்த விவகாரத்தில் அதிபரின் விருப்பத்தைவிடவும் நாடாளுமன்றத்தின் ஒப்புதல்தான் முக்கியமானது. கியூபாவுடனான உறவைப் புதுப்பிக்கும் வகையில், அங்கு அமெரிக்

கர்கள் சுற்றுலா செல்வதற்கான தடையை நீக்கும் மசோதாவை நாடாளுமன்றத்தில் ஜனநாயக, குடியரசுக் கட்சி செனட்டர்கள் சேர்ந்து அறிமுகம் செய்துள்ள நிலையில், குவான்டனாமோ சிறை விவகாரம்குறித்து மட்டும் அமைதி காக்கிறார்கள்.

இது ஒரே நாளில் நடந்துவிடக்கூடிய விஷயமும் அல்ல. அதேவேளையில், கியூபா மட்டுமன்றி உலகின் அனைத்து நாடுகளிலும் மனித உரிமை மீறல்கள்குறித்து அதிகமாகவே கவலைப்படும் அமெரிக்கா, குவான்டனாமோ சிறையில் நடக்கும் மனித உரிமை மீறல்குறித்தும் கவலைப்பட்டாக வேண்டும் அல்லவா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: "குவான்டனாமோ" சிறை மர்மம் அம்பலம்!

Post by சிவா on Thu Feb 05, 2015 10:59 pm


சிறையின் கதை

1898: சுதந்திர நாடாக அறிவிக்கக் கோரி, ஸ்பெயினை சார்ந்திருந்த கியூபா போராடத் தொடங்கியது. அப்போது கியூபாவுக்கு ஆதரவாக அமெரிக்கா களமிறங்கியதால், ஸ்பானிஷ்-அமெரிக்கப் போர் ஏற்பட்டது. போரின்முடிவில் கியூபா அமெரிக்காவின் கட்டுப்பாட்டில் வந்தது. 3 ஆண்டுகள் கழித்து கியூபா சுதந்திர நாடாகியது.

1903: கியூபாவின் தென்கிழக்கு கடலோரம் உள்ள குவான்டனாமோ விரிகுடாவை கியூபாவுடன் ஒரு குத்தகை ஓப்பந்தத்தை ஏற்படுத்தி, அதில் தனது கடற்படைத் தளத்தை அமெரிக்கா அமைத்தது.

1959: பிடல் காஸ்ட்ரோ கியூபா அதிபராகப் பதவியேற்றதைத் தொடர்ந்து, குவான்டனாமோ விரிகுடாவை மீண்டும் தங்களிடம் ஒப்படைக்கும்படி கியூபா வலியுறுத்தி வருகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: "குவான்டனாமோ" சிறை மர்மம் அம்பலம்!

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum