ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
நரை கூறிய அறிவுரை
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 ஜாஹீதாபானு

தமிழ் நேசன் !?
 valav

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

நான் தேனி.
 ஜாஹீதாபானு

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 amutha jothi

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ராஜா

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 SK

நாவல் தேவை
 PKishanthini

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

15 ஆண்டுகள் தவமிருந்து பெற்ற சித்ரா மகள்

View previous topic View next topic Go down

15 ஆண்டுகள் தவமிருந்து பெற்ற சித்ரா மகள்

Post by கார்த்திநடராஜன் on Thu Apr 21, 2011 9:32 am

பிரபல பின்னணிப் பாடகி சித்ராவின் மகள் நந்தனாவின் அகால மறைவால்
திரையுலகம் பெரும் சோகமும், அதிர்ச்சியும் அடைந்துள்ளது. இன்று
சென்னைக்குக் கொண்டு வரப்பட்ட நந்தனாவின் உடலுக்கு திரையுலகினர் திரண்டு
வந்து கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

சித்ராவுக்குத் திருமணமாகி 15 ஆண்டு காலம் கழித்துப் பிறந்த செல்ல மகள்
நந்தனா. ஆட்டிசம் பாதிப்பைக் கொண்டிருந்த தனது மகளை விட்டுப் பிரியாமல்
பாசத்துடன் வளர்த்து வந்தார் சித்ரா. எங்கு போனாலும் மகளையும் உடன்
அழைத்துச் செல்வார்.

மகளுக்காகவே பிரத்யேகமாக பாடல்கள் பாடி டிவிடி வடிவில் வீட்டில்
வைத்திருப்பார். தான் ஒருவேளை மகளை உடன் அழைத்துச் செல்ல முடியாமல் போனால்
இந்த டிவிடியை கேட்குமாறு வீட்டில் சொல்லி விட்டுச் செல்வார் சித்ரா. அந்த
அளவுக்கு சித்ராவின் குரல், நந்தனாவுடன் இருந்து கொண்டே இருக்கும்.

ஆட்டிசம் பாதிப்பைக் கொண்டிருந்தாலும், தனது மகளை சாதாரண குழந்தைகளைப்
போலவே வளர்த்து வந்தார் சித்ரா. சென்னையில் உள்ள பள்ளியில் முதல் வகுப்பில்
சேர்த்திருந்தார்.

8 வயதான நந்தனாவை, துபாயில் நடைபெறும் ஏ.ஆர்.ரஹ்மான் நிகழ்ச்சியில்
பங்கேற்பதற்காக அழைத்துச் சென்ற சித்ராவுக்கு இப்படி ஒரு பயங்கர துக்க
சம்பவம் நடைபெறும் என்பதை யாருமே எதிர்பார்க்கவில்லை. நீச்சல் குளத்தில்
மூழ்கிய குழந்தை நந்தனா பரிதாபமாக உயிரிழந்தார்.

இதைப் பார்த்து அதிர்ச்சி அடைந்த சித்ரா, குழந்தையை தனது மடியில் கிடத்தி
கதறி அழுதது அத்தனை பேரையும் உருக்கி விட்டது. நீண்ட காலம் கழித்து கடவுள்
தனக்கு வரத்தை மீண்டும் எடுத்துக் கொண்டு விட்டாரே என்று கதறி அழுதார்
சித்ரா.

நந்தனாவின் உடல் இன்று காலை விமானம் மூலம் சென்னை கொண்டு வரப்பட்டது. அதன்
பின்னர் சாலிகிராமத்தில் உள்ள சித்ராவின் வீட்டுக்கு உடலைக் கொண்டு
வந்தனர். இதையடுத்து திரையுலகினர் பெருமளவில் திரண்டு வந்து குழந்தையின்
உடலுக்கு கண்ணீர் அஞ்சலி செலுத்தினர்.

பழம்பெரும் பாடகிகள் பி.சுசீலா, எஸ்.ஜானகி, பாடகர்கள்
எஸ்.பி.பாலசுப்ரமணியம், மனோ உள்ளிட்டோர் கண்ணீர் விட்டு அழுதபடி அஞ்சலி
செலுத்தினர். எஸ்.ஜானகி பின்னர் கூறுகையில், சித்ராவுக்கு இப்படி ஒரு
துக்கம் ஏற்பட்டிருக்கக் கூடாது. மிகுந்த வேதனையாக இருக்கிறது.

நிச்சயம் சித்ராவுக்கு இன்னொரு குழந்தை பிறக்கும். அந்தக் குழந்தை,
சித்ராவின் வாழ்க்கையில் மீண்டும் மலர்ச்சியை உருவாக்கும் என்றார்.
நந்தனாவின் இறுதிச் சடங்குகள் இன்று நடைபெறவுள்ளன
நன்றி
TMT
avatar
கார்த்திநடராஜன்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 303
மதிப்பீடுகள் : 19

View user profile

Back to top Go down

Re: 15 ஆண்டுகள் தவமிருந்து பெற்ற சித்ரா மகள்

Post by மஞ்சுபாஷிணி on Thu Apr 21, 2011 10:02 am

இறைவன் சித்ராவின் சோகத்தை போக்க தானே எடுத்துக்கொண்ட குழந்தை வரத்தை மீண்டும் கொடுத்து சித்ராவின் வாழ்வில் மகிழ்வை கொண்டு வரச்செய்ய என் அன்பு பிரார்த்தனைகள்..
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: 15 ஆண்டுகள் தவமிருந்து பெற்ற சித்ரா மகள்

Post by அப்துல் on Thu Apr 21, 2011 11:25 am

@மஞ்சுபாஷிணி wrote:இறைவன் சித்ராவின் சோகத்தை போக்க தானே எடுத்துக்கொண்ட குழந்தை வரத்தை மீண்டும் கொடுத்து சித்ராவின் வாழ்வில் மகிழ்வை கொண்டு வரச்செய்ய என் அன்பு பிரார்த்தனைகள்..

கண்டிப்பாக
avatar
அப்துல்
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1119
மதிப்பீடுகள் : 132

View user profile

Back to top Go down

Re: 15 ஆண்டுகள் தவமிருந்து பெற்ற சித்ரா மகள்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum