ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

அனைவருக்கும் இனிய வணக்கம்
 ரா.ரமேஷ்குமார்

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 SK

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 Mr.theni

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

துயரங்களும் தூண்களாகுமே !
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 ராஜா

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

நரை கூறிய அறிவுரை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 SK

கோழியும் மனிதனும்
 SK

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 Mr.theni

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 Mr.theni

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

சச்சின் டெண்டுல்கர் பதவிக்காலம் முடிந்தது: புதிய எம்.பி.க்களாக சோனால் மான்சிங் உள்ளிட்ட 4 பேர் நியமனம்
 SK

அப்பா
 SK

நடிப்பு - சிறுவர் கதை
 SK

நீர்வழிப் போக்குவரத்தை அதிகரிக்க கப்பல் கட்டணங்களில் 70% சலுகை: சென்னைத் துறைமுகம் அறிவிப்பு
 SK

சினிமாவிற்கு போன சூப்பர் சிங்கர் குழந்தைகள்
 SK

மருத்துவ கவுன்சிலிங்கை நிறுத்தி வைக்க தமிழக அரசு உத்தரவு
 SK

இங்கிலாந்துக்கு எதிரான முதலாவது ஒருநாள் போட்டியில் 8 விக்கெட் வித்தியாசத்தில் இந்தியா அபார வெற்றி
 SK

வைரலாகும் ‘வில் அழகி’ இது நம்ம ஆளு..!
 SK

'ஆப்ஸ்' மூலம் பாடம் நடத்தும் ஆசிரியர்; அசத்தும் கத்தாளப்பட்டு அரசுப் பள்ளி
 SK

சி.எம்.டி.ஏ.,வை ஏன் கலைக்கக் கூடாது? ஐகோர்ட் கேள்வி
 SK

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 SK

மதுரையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கு ரூ.1000 கோடி: அமைச்சர்
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: சந்திரபாபு முடிவு
 SK

Winmeen Academy வெளியிட்ட புதிய பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள்
 ayyasamy ram

RRB மாதிரி தேர்வுகள்(1-7) -2108 ஒரே pdf வடிவில்
 thiru907

#தமிழ்தேசியம்: சாதி, மத அடிப்படையில் கூறுபோடும் தமிழ் பாசிசமா?
 Dr.S.Soundarapandian

கட்சி கொடியை ஏற்றி வைத்து நிர்வாகிகள் பெயரை நடிகர் கமல்ஹாசன் அறிவித்தார்
 Dr.S.Soundarapandian

பிரபல சினிமா கதையாசிரியர் மாடியில் இருந்து குதித்து தற்கொலை
 Dr.S.Soundarapandian

ஏழு ஜென்மத்திற்கும் அதே கணவன்
 Dr.S.Soundarapandian

தமிழுக்கும் , தேன்கூட்டிற்கும் சிலேடை
 T.N.Balasubramanian

காலை 5 மணி காட்சியுடன் அமர்க்களமாக வெளியாகியுள்ள தமிழ்ப்படம் 2
 SK

எந்த பதவியிலும் இல்லாத உதயநிதி கட்சிக் கொடி ஏற்றுவதால் திமுக-வில் சலசலப்பு
 T.N.Balasubramanian

சதுரங்கத்தில் ராஜாவை மட்டும் வெட்ட முடியாது…
 SK

பெண்ணின் பெருந்துயர்!
 குழலோன்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Go down

”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை

Post by சிவா on Sat Apr 16, 2011 5:04 pmஅசுவதி, பரணி, கார்த்திகை 1-ம் பாதம் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: சு, சே, சோ, ல, லி, லு, லே, லோ, அ உள்ளவர்களுக்கும்)

முன்யோசனையுடன் செயல்பட்டால், முன்னேற்றங்கள் விரைவில் வரும்!

எந்தத் துறையில் ஈடுபட்டால் வெற்றி கிட்டும் என்பதை எளிதில் அறிந்து கொண்டு செயல்படும் மேஷ ராசி நேயர்களே!

விக்ருதி ஆண்டு முடிந்து, "கர'' வருடம் தொடங்குகிறது. வரப்போகும் கர வருடம் வாழ்க்கையை வசந்தமாக்குமா? வருங்காலத்தை செழிப்படைய வைக்குமா? வரங் கொடுக்கும் தெய்வங்களை வழிபட்டதன் பலன் இனியாவது நமக்கு கிடைக்குமா? என்று சிந்தித்துக் கொண்டிருக்கிறீர்கள்.

சீரும், சிறப்பும், செல்வாக்கும், பேறு பதினாறும் பெற வைக்கும் ஆண்டாக இந்த கர வருடம் உங்களுக்கு பலன் களை அள்ளி வழங்கப் போகிறது.

வருடத் தொடக்கத்தில் உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறார். இரண்டு, ஏழுக்கு அதிபதியான சுக்ரன் அதைப் பார்க்கிறார். தன ஸ்தானாதிபதியின் பார்வை, பஞ்சம ஸ்தானத்தில் பதிந்து கர வருடம் தொடங்குவதால், உங்கள் கரங்களிலே பொருள் வந்து சேரும். கல்யாண கனவு முதல் கப்பலில் ஏறி கடல் தாண்டும் கனவு வரை எல்லாம் கை கூடப் போகிறது.

ஆயினும், வருடத் தொடக்கத்தில் ராசிநாதன் செவ்வாய் விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து, சனியால் பார்க்கப் படுகிறார். எனவே, இனம்புரியாத கவலை இதயத்திற்குள் நுழைந்து கொண்டே இருக்கும். எதையும் சிந்திக்காமல் உங்கள் முன்னேற்றத்திலேயே அக்கறை செலுத்துங்கள். விரயாதிபதி வியாழன் ஆண்டின் தொடக்கத்திலேயே விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார்.

எனவே, நீங்கள் ஒரு காரியத்தை தொடங்கும் முன்பு ஏன் தொடங்கு கிறோம்? எதற்காக தொடங்குகிறோம்? இதனால், என்ன பலன் கிடைக்கும் என்பதை எல்லாம் அறிந்து தொடங்கினால் தான், எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

வருடத் தொடக்கத்தில் வக்ரச் சனியின் இயக்கம், எதிலும் அக்கறை காட்டினால் தான் ஆதாயத்தைக் கொடுக்கும். அடுத்து வரும் குருப்பெயர்ச்சி கொடுக்கல் - வாங்கல்களை ஒழுங் காக்கும். வைகாசியில் வரும் ராகு-கேதுப் பெயர்ச்சி வருங்காலத்திற்காக தீட்டிய திட்டத்தை வெற்றி பெற வைக்கும். வருடக் கடைசியில் வரும் சனிப்பெயர்ச்சி இட மாற்றத்தை இனிமையாக்கும்.

ஆவணி 24-ம் தேதி முதல் ஐப்பசி 18-ம் தேதி வரை நீச்ச செவ்வாயின் ஆதிக்க காலத்தில் நினைத்ததை நினைத்த நேரத்தில் செய்ய இயலாது. நிச்சயிக்கப் பெற்ற காரியத்தை திடீர் திடீரென மாற்றியமைத்துக் கொண்டே இருப்பீர்கள்.

சமயோசித புத்தியால் சாதனை நிகழ்த்துபவர்கள்!


மனக்கலக்கம் இல்லாதவர்களின் பட்டியலில் முதலிடம் பிடிப்பவர்கள் நீங்கள்தான். எதிரியை நினைத்து முதலில் பயப்படுவீர்கள். பிறகு, தன்னம்பிக்கையையும், தைரியத்தை யும் வரவழைத்துக் கொண்டு, என்ன நடந்தாலும் நடக்கட்டும் என்று எடுத்துச் சொல்வீர்கள்.

சுக்ரபலத்தைப் பொறுத்தே உங்களுக்கு வாழ்க்கைத்துணை அமை கிறது. சனியின் பலத்தைப் பொறுத்தும், புதனின் பலத்தைப் பொறுத்தும் உங்களுக்கு தொழில் வளர்ச்சியும், உத்யோக முன்னேற்றமும் ஏற்படு கிறது. கிரகங்களின் பலம் குறைகிற பொழுதெல்லாம், அதற்குரிய வழிபாடுகளை முறையாக வைத்துக் கொள்வதன் முலமும், எண்கணித அடிப் படையில் தொழில் நிலையங்களின் பெயர்களை அமைத்துக் கொள்வதன் மூலமும், பொன்னான எதிர்காலத்தை அமைத்துக் கொள்ள இயலும்.

குருபார்க்க கோடி நன்மை!


கர வருட தொடக்கத்தில் சித்திரை 25-ம் தேதி (8.5.2011) அன்று உங்களது ஜென்ம ராசியில் குருபகவான் சஞ்சரிக்கப் போகிறார். `ஜென்மகுரு வந்து விட்டதே' என்று நீங்கள் பயப்பட வேண்டாம். நம் வீடு தேடி வரும் விருந்தினர்களை நாம் வரவேற்று, உபசரித்தால், அவர்கள் மகிழ்ச்சியடைவதோடு, நாம் கேட்கும் போது உதவிக் கரமும் நீட்டுவர்.

அதேபோல, உங்கள் ராசிக்கு வந்த குருவை, வரும் முன்னதாகவே வரவேற்று, ஹோமங்கள் மற்றும் வழிபாடுகளை மேற்கொண்டால், பூ மகளும், நா மகளும் உங்களுக்கு புதிய வாழ்க்கையை அமைத்துக் கொடுப்பர்.

"ஜென்ம குரு வந்தால்,
சிறப்புகளே அதிகரிக்கும்!
பொன் பொருள்கள் வாங்குவதும்,
பூமிகளின் சேர்க்கைகளும்,
மன்பதையில் மேற்கொண்டால்,
மனம் இனிக்கும் வாழ்வமையும்!
வந்திணைந்த குருவை
வழிபட்டால் வளர்ச்சி வரும்!''


என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அடிப்படையில் குருவின் பார்வை 5, 7, 9 ஆகிய இடங்களில் பதிவதால், பூர்வ புண்ணிய ஸ்தானம் வலுப்பெறுகிறது. எனவே, பொருளாதார நிலை உயரும். புனித காரியங்கள் செய்வீர்கள். பிள்ளைகள் வழியில் நல்ல தகவல்கள் வந்து சேரும்.

கொடிகட்டி பறந்த குடும்ப பிரச்சினைகள் படிப்படியாக நல்ல முடிவிற்கு வரும். கல்யாண கனவுகள் நனவாகும். தந்தை வழியில் எதிர்பார்த்த ஒத்துழைப்புகள் கிடைத்து, தக்க விதத்தில் தொழில் முன்னேற்றம் காண்பீர்கள்.

நல்ல காரியங்கள் நடக்கும் ராகு-கேது பெயர்ச்சி காலம்!


மே மாதம் 16-ம் தேதி விருச்சிக ராசியில் ராகுவும், ரிஷப ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள்.

அஷ்டமத்து ராகு ஆதாயத்தை வரவழைத்துக் கொடுத்தாலும், அடுத்த நிமிடமே விரயத்தை யும் கொடுத்து விடும். எனவே, பணம் வரும் பொழுதெல்லாம் அதை பாதுகாப்பதை விட, அடிப்படைத் தேவைகளை பூர்த்தி செய்து கொள்ள செலவிடுவது நல்லது. "பின்நோக்கி நகரும் கிரகம்'' என்று வர்ணிக்கப்படும் இந்த பாம்பு கிரகங்கள் தான் உங்களை முன்நோக்கி செல்லவும் வைக்கும். முயற்சியில் தடையையும் உருவாக்கும். சர்ப்ப சாந்தி பரிகாரம் சந்தோஷத்தை வழங்கும்.

இரண்டாமிடத்து கேது எதிர்பாராத மாற்றங்களை உங்களுக்கு வழங்கும். குடும்ப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால், குடும்ப உறுப்பினர்களை நீங்கள் திருப்திபடுத்துவது என்பது இயலாத காரியம். உடனிருப்பவர்களை அனுசரித்து செல்வதே நல்லது. பெண்வழி பிரச்சினைகள் தலைதூக்கலாம். மூத்தவர்களின் ஆலோசனைகளை கேட்டு நடந்தால், அனுகூலம் கிடைக்கும். மற்றவர்களுக்கு வாக்கு கொடுக்கும் முன் ஒருகணம் சிந்திக்க வேண்டும்.

ஏழாமிடத்துச் சனியால் இனிய பலன் ஏற்படுமா?


உங்கள் ராசிக்கு 10, 11-க்கு அதிபதியான சனிபகவான் இதுவரை ஆறாமிடத்தில் சஞ்சரித்து வந்தார். இந்த ஆண்டு, மார்கழி மாதம் 5-ம் தேதி (21.12.2011) அன்று துலாம் ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். அப்போது சனி உங்கள் ராசியை அல்லவா பார்க்கப் போகிறார். இது கண்டகச் சனியாக இருக்கிறதே என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். சனிக்கிழமைதோறும் சனிபகவானை கொண்டாடி கும்பிட்டால், மணியான வாழ்க்கை மலரும்.

வாழ்க்கைத் துணை வழியே சிறுசிறு பிரச்சினைகள் தோன்றி மறையலாம். வரவு செலவு களை கவனித்து வந்த நண்பர்களில் ஒருசிலர் விலகலாம். சனியின் பார்வை பலத்தால், வாகன பழுதுச் செலவுகள் அதிகரிக்கும். புதிய வாகனங்கள் வாங்குவதில் ஆர்வம் காட்டுவீர்கள். உங்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக்கட்டையாக இருந்த உடன்பிறப்புகள் இனி ஒத்துவந்து உதவிக்கரம் நீட்டுவர். சுயஜாதகத்தில் சனி இருக்கும் இடமறிந்து அதன் பாதசார பலமறிந்து, அதற்குரிய வழிபாடுகளும், தெசாபுத்திக்கேற்ற தெய்வ வழிபாடு களையும் சனி பெயர்ச்சிக்கு சில மாதங்களுக்கு முன்னதாகவே செய்தால் செல்வ நிலை உயரும். செயல்பாடுகளிலும் வெற்றி கிடைக்கும்.

அக்கறை செலுத்த வேண்டிய வக்ர காலங்கள்!

வருடத் தொடக்கத்திலேயே சனி வக்ரமடைகிறார். 14.4.2011 முதல் 9.6.2011 வரை சனி வக்ர இயக்கத்தில் இருக்கிறார். மீண்டும் 4.2.2012 முதல் 25.3.2012 வரை துலாம் ராசியில் வக்ரம் பெற்று, அதன் பிறகு 26.3.2012 முதல் 12.4.2012 வரை கன்னி ராசியில் சனி வக்ரமாகி, பின்நோக்கிச் செல்கிறார்.

இக்காலத்தில் தொழில் கூட்டாளிகளிடம் கூடுதல் விழிப்புணர்ச்சி காட்டுவது நல்லது. யாருக்கும் பொறுப்பு சொல்வதை தவிர்க்கலாம். புதிய ஒப்பந்தங்கள் வருவது போல் தோன்றி மறையும். சனி வழிபாடு சந்தோஷம் வழங்கும்.

குருவின் வக்ர காலம் 31.8.2011 முதல் 15.12.2011 வரை. இக்காலத்தில் பயணங்களில் கவனம் தேவை. திடீர் இடமாற்றங்களால் தொல்லைகள் வந்து சேரலாம். உடன்பிறப்பு களோடு இருந்த ஒற்றுமை குறையாமல் பார்த்துக் கொள்வது நல்லது. தென்முகக் கடவுள் வழிபாடு நன்மைகளை வழங்கும்.

பலன்தரும் பரிகாரம்!

செவ்வாய்க்கிழமை தோறும் விரதமிருந்து, முருகப்பெருமானை வழிபட்டு வந்தால், செல்வ நிலை உயரும். தஞ்சை மாவட்டத்தில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்குச் சென்று யோக பலம் பெற்ற நாளில் வைத்தியநாதர், தையல் நாயகி வழிபாட்டோடு, பஞ்ச அர்ச்சனை செய்து வந்தால், காரியங் களில் வெற்றி கிட்டும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை

Post by சிவா on Sat Apr 16, 2011 5:07 pmகார்த்திகை 2, 3, 4 பாதங்கள், ரோகிணி, மிருகசீர்ஷம் 1, 2 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: இ, உ, ஏ, ஓ, வ, வி, வு, வே, வோ உள்ளவர்களுக்கும்)

குடும்பத்தினரை அனுசரிப்பதால், குதூகலம் வந்து குடியேறும்!

சவால் விடுவதையும், அதை சமாளிப்பதையும் கைவந்த கலையாகக் கொண்டிருக்கும் ரிஷப ராசி நேயர்களே!

விக்ருதி ஆண்டு முடிந்து விட்டது. கர வருடம் பிறந்து விட்டது. பிறந்திருக்கும் புத்தாண்டு நமக்கு பெருமைகளைச் சேர்க்குமா? நிரந்தரமாக நமக்கு நிம்மதி கிடைக்குமா? என்ற கேள்விகளுக்கு விடை காணும் விதத்தில் இந்த புத்தாண்டு உங்களுக்கு அமையப் போகிறது.

உங்களை பொறுத்தவரை, கர புத்தாண்டில் ராசிநாதன் சுக்ரன் தொழில் ஸ்தானத்தில் சஞ்சரித்து, சகாய ஸ்தானத்திற்கு அதிபதியான சந்திரனால் பார்க்கப்படுகிறார். எனவே, தொழில் வளர்ச்சி கூடும் ஆண்டாகவே இந்த ஆண்டைக் கருதலாம். எதிர்பார்த்த இடத்திலிருந்து தொகையும் கிடைக் கும் என்பதால், காலம் காலமாக உத்யோகத்தில் இருந்து மற்றவர்களுக்கு உழைத்துக் கொடுத்த நீங்கள் இப்பொழுது, சுயசம்பாத்தியத்திற்கு அடித்தளமிடப் போகிறீர்கள்.

என்னதான், ராசிநாதன் பலம் பெற்றிருந்தாலும், இடையில் வரும் கிரகப் பெயர்ச்சிகள் உங்களுக்கு ஒத்துழைக்க வேண்டுமல்லவா? எனவே, அவற்றையும் வைத்து எடை போட்டுத்தான் நாம் பலன்களை அறிந்து கொள்ள முடியும். இந்த ஆண்டு மாபெரும் கிரகங்கள் குரு, ராகு-கேது மற்றும் சனி ஆகியவை பெயர்ச்சியாகின்றன.

இடையிடையே வக்ரமாகியும் உங்கள் வளர்ச்சிப்பாதையில் சில மாற்றங்களைக் கொடுக்கப் போகின்றன.

நமக்கு நல்ல முறையில் பலன் கொடுக்காத கிரகங்கள் வக்ரமானால், அதைப்பற்றி கவலைப்பட வேண்டாம். ஆனால், நல்ல பலன்களை மட்டுமே வாரி வழங்கும் யோக கிரகம் வக்ரம் பெற்றால், நாம் பொறுமையோடு தான் செயல்பட வேண்டும். அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, வருடத் தொடக்கத்திலேயே உங்களுக்கு யோகம் செய்யும் சனி வக்ரமடைகிறார்.

எனவே, அதன் வக்ர காலத்தில் எதையும் ஒரு முறைக்கு பலமுறை யோசித்து செய்வது நல்லது. உங்கள் சுயஜாதகத்தை ஒருமுறை ஆராய்ந்து பார்த்து, தெசாபுத்தி பலம்பெற்று இருந்தால், வரும் மாற்றங்களை ஏற்றுக் கொள்ளலாம். இல்லையேல், விட்டு விடலாம்.

நட்புக்கு முக்கியத்துவம் கொடுக்கும் நல்லவர்கள்!

வாழ்க்கையில் புதிய மனிதர்களைச் சந்தித்து, வளர்ச்சிப் பாதையை அமைத்துக் கொள்ள வேண்டுமென்று நினைப்பீர்கள். கவர்ச்சியாகப் பேசி காரியங்களை சாதித்து விடும் திறமை உங்களுக்கு உண்டு. அதிகாரத்திற்கு கட்டுப்பட மாட்டீர்கள். அதேநேரத்தில் அன்புக்கு அடிபணிவீர்கள்.

சுக்ரனின் பலத்தோடு, புதனின் பலமும் உங்கள் சுயஜாதகத்தில் கை கொடுத்தால், சொல்லை செயலாக்கி காட்ட இயலும். நல்ல வாழ்க்கைத்துணையும் அமையும். மனைவியைத் தேர்ந்தெடுக்கும் பொழுது, மாங்கல்ய பொருத்தத்தோடு, மகத்தான ராசி அதிபதியும் பொருந்தினால் தான் மனதிற்கினிய வாழ்க்கை அமையும். ஆதியில் இருக்கும் பக்தியைக் காட்டிலும், பாதி வாழ்க்கைக்கு மேல் வரும் பக்தியே பார்ப்பவரை ஆச்சரியப்பட வைக்கும்.

ஆசைகளை நிறைவேற்றும் மேஷ குரு

கர வருடத் தொடக்கத்தில் சித்திரை 25-ம் தேதி (8.5.2011) உங்களது ராசிக்கு பன்னிரெண்டாம் இடத்தில் குருபகவான் சஞ்சரிக்கப்போகிறார். விரய ஸ்தானத்திற்கு வரும் குரு செலவுகளை ஏற்படுத்துமோ? என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதன் பார்வை பலமே உங்களுக்கு பக்கபலமாக இருக்கும்.

குறிப்பாக, குருவின் பார்வை 4, 6, 8 ஆகிய இடங்களில் பதியப் போவதால், அந்த இடங்கள் எல்லாம் புனிதமடைந்து, புதிய வாய்ப்புகளை உருவாக்கிக் கொடுக்கும்.

"பன்னிரெண்டில் குருவந்தால்,
பயணங்கள் அதிகரிக்கும்!
இனியென்றும் மகிழ்ச்சிவர
இணைவோரை அனுசரிப்பீர்!
மணியான செயலனைத்தும்
மற்றவர்க்கே பலன் கொடுக்கும்!
துணிவோடு செயல்பட்டால்,
தொடர்ச்சியான வெற்றி வரும்!''


என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

பொதுவாக, உங்கள் ராசிநாதன் சுக்ரனுக்கு, குரு பகை கிரகம் என்பதால், அது எப்படி நற்பலன் கொடுக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். பகைவனாக இருந்தாலும், நாம் வழி பட்டால், அவன் வழிவிடுவான். நாம் கரம் கூப்பினால், அவன் கரம் கொடுத்து உதவுவான்.

குருவிற்குரிய ஹோமங்கள் மற்றும் வழிபாடுகளை, குருப்பெயர்ச்சிக்கு முன்னதாகவே மேற்கொண்டு, குழப்பங்கள் அகல வழிவகை செய்து கொள்ளுங்கள். பொதுவாக, இந்த குருப்பெயர்ச்சியால், பயணங்கள் அதிகரிக்கும். பக்கத்தில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதன் மூலம் அவர்கள் உங்கள் சிக்கல்கள் தீர வழிவகுப்பர். துணிவும், தன்னம்பிக்கையும் உங்களுக்கு தொடர்ந்து வெற்றியைத் தேடி தரும்.

குருவின் பார்வை பலத்தால், வீடு, இடம் வாங்குவதில் இருந்த பிரச்சினைகள் அகலும். தாய்வழி ஆதரவு பெருகும். எதிரிகள் உதிரிகளாவர். உத்யோகம், தொழிலில் உன்னத நிலை கிடைக்கும். ஆரோக்கியம் சீராக மாற்று மருத்துவத்தை மேற்கொள்ளுங்கள். ஜோரான வாழ்க்கைக்கு இந்த குருப்பெயர்ச்சி அஸ்திவாரமிட்டுக் கொடுக்கும்.

ராகு-கேது பெயர்ச்சி காலம்!

மே மாதம் 16-ம் தேதி விருச்சிக ராசியில் ராகுவும், ரிஷப ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப்போகிறார்கள். ஜென்ம கேதுவால் சிறப்பான பலன் கிடைக்குமா? சப்தம ராகு சங்கடங் களைத் தீர்க்குமா? என்று நினைப்பீர்கள். ஜென்ம கேதுவால் ஆன்மிக நாட்டம் அதிகரிக்கும். குழந்தைகளின் எதிர்கால நலன்கருதி புதிய திட்டங்கள் தீட்டுவது நல்லது. குடும்பச் சுமை கூடும். தொழில் பங்குதாரர் களின் வழியில் தொல்லைகள் ஏற்படலாம்.

சப்தம ராகு நீண்டதூர பயணங்களை ஒரு சிலருக்கு வரவழைத்துக் கொடுக்கும். ஞாபக மறதி உருவாகும். பொல்லாதவர்கள் உங்களை விட்டு அகல, எடுத்த முயற்சி வெற்றி தரும். வாழ்க்கைத் துணை வழியே வந்த கசந்த காலங்கள் இனி வசந்த காலமாக மாறும். என்ன இருந்தாலும், ராகு-கேதுக்கள் சர்ப்ப தோஷத்தை உருவாக்கும் சூழ்நிலை இருப்ப தால் முறையாக சர்ப்ப சாந்திகளைச் செய்தால் தான் ஏற்ற, இறக்கம் இல்லாத வாழ்க்கை அமையும். லாபங்களும் கைக்கு வந்து சேரும்.

சஞ்சலம் தீர்க்கும் சனிப்பெயர்ச்சிப் பலன்கள்


இதுவரை 5-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான் 21.12.2011 அன்று துலாம் ராசியில் 6-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். தொழில், உத்யோகம், ஜீவனம், எதிர்ப்பு, வியாதி, கடன் எனப்படும் 6-ம் இடத்தில் சனி சஞ்சரிப்பது நன்மையையே வழங்கும். அதுவும் உச்சம் பெற்ற சனியாக விளங்குகிறார்.

எதிர்ப்புகள் மாறும். கூட்டாளிகளின் ஒத்துழைப்போடு கூடுதல் லாபம் பெற வழி கிடைக்கும். பாசத்தையும், நேசத்தையும் இதுவரை காட்டாத உறவினர்கள் இனி உங்க ளிடம் காட்டுவர். உடன்பிறப்புகளின் முன்னேற்றம் கருதி தொகை ஒன்றைச் செலவிடும் சூழ்நிலை உருவாகும். அவர்களின் கல்யாண நிகழ்ச்சிக்கோ, வேலை வாய்ப்புகளுக்கோ கொடுத்து உதவும் சூழ்நிலை உண்டு. 9, 10 ஆகிய இடங்களுக்கு அதிபதி உச்சம் பெறுவதால் தந்தை வழியில் இதுவரை இருந்த பாகப்பிரிவினை இப்பொழுது சுமூகமாக நடைபெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். பழைய தொழிலை விட்டு விட்டுப் புதிய தொழிலைத் தொடங்கும் வாய்ப்பு ஏற்படும். பொதுவாழ்வில் இருப்பவர்களுக்குப் புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும்.

அக்கறை செலுத்த வேண்டிய வக்ர காலங்கள்!

வருடத் தொடக்கத்திலேயே சனி வக்ரமடைகிறார். மீண்டும் பிப்ரவரி மாதத்தில் வக்ரம் பெறுகிறார். 2012 மார்ச் மாதம் 26 முதல் வருடக் கடைசி வரை கன்னி ராசியில் வக்ரம் பெறுகிறார். இந்தச் சனியின் வக்ர காலத்தில் வளர்ச்சியும், தளர்ச்சியும் மாறி மாறி வந்து கொண்டே இருக்கும். உங்கள் குறைகள் அகல வேண்டுமானால், கூடுதல் விழிப்புணர்ச்சி காட்ட வேண்டியது அவசியமாகும்.

குருவின் வக்ர காலம் 31.8.2011 முதல் 15.12.2011 வரை. இக்காலத்தில் தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். ஏனென்றால் அஷ்டமாதிபதியான குரு வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது அபரிமிதமான நன்மைகளையே வழங்குவார். தெய்வீகப் பணியில் ஆர்வம் கூடும். அசுர குருவையும், தேவ குருவையும் விடாது அடுத்தடுத்த நாட்களில் வழிபாடு செய்து வருவதோடு சிறப்பு தலங்களுக்கும் சென்று வழிபட்டு வந்தால், சிக்கல்கள் குறையும். செல்வ நிலை உயரும்.

பலன்தரும் பரிகாரம்!

வெள்ளிக்கிழமை தோறும் விரதமிருந்து தெற்கு நோக்கிய அம்பிகையை வழிபட்டு வந்தால், நல்ல வாய்ப்புகள் நாடி வந்து சேரும். மேலும், யோக பலம் பெற்ற நாளில் புதுக்கோட்டை மாவட்டம் வேந்தன் பட்டியில் உள்ள நெய் மணக்கும் நந்தீஸ்வரர் சந்நிதிக்குச் சென்று நந்தீஸ்வரரை வழிபட்டு வாருங்கள். "சிவனாரை என்றைக்கும் சுமக்கும் நந்தி, பக்தர்களைக் காக்கும் நந்தி'' உங்கள் குரலுக்கும் செவிசாய்த்து வழிகாட்டும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை

Post by Aathira on Sat Apr 16, 2011 5:09 pm

காத்து இருக்கிறேன் என் ராசிக்கு


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை

Post by சிவா on Sat Apr 16, 2011 5:09 pmமிருக சீர்ஷம் 3, 4 பாதங்கள், திருவாதிரை, புனர்பூசம், 1, 2, 3 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள் : க, கா, கி, கு, ஞ, ச, கே, கோ உள்ளவர்களுக்கும்)

நிதானத்தோடு செயல்பட்டால், நிச்சயம் வெற்றி கூடிவரும்!

எதையும் சமாளிக்கும் ஆற்றலால் எதிரிகளையும், நண்பர்களாக மாற்றிக் கொள்ளும் மிதுன ராசி நேயர்களே!


வந்து விட்டது புத்தாண்டு! வளர்ச்சிப் பாதைக்கு வித்திடும் விதத்தில் கிரகங்கள் உலாவரப் போகின்றன. சந்திரன் சகாய ஸ்தானத்திலும், சூரியன் லாப ஸ்தானத்திலும் வீற்றிருந்து தொடங்கும் இந்தாண்டு உங்களுக்கு ஒரு விநோதமான ஆண்டாகவே மாறப் போகிறது. பொதுவாக, புதுமைகளைச் செய்வதிலும், புரட்சிகளை செய்வதிலும் புகழ் பெற்றவர்களாக விளங்கும் நீங்கள் மதிப்பும், மரியாதையும் உயர, மக்கட் செல்வாக்கு மேலோங்க, வாழ்க்கைத் தேவைகள் பூர்த்தியாக, வரலாற்றில் இடம் பெறும் விதத்தில் நாளும் நற் பலன்களை சந்திக்கப் போகிறீர்கள்.

அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம் நடைபெறும் பொழுது, எப்படி இதெல்லாம் நடக்கும் என்று நீங்கள் நினைக்கலாம். ஆரம்பத்திலேயே அந்தச் சனி வக்ரமடைகிறார். அது மட்டுமல்ல, குருவின் பார்வையும் அதன்மீது பதி கிறது.

வருடத் தொடக்கத்திலேயே உங்கள் ராசிக்கு பதினோராமிடத்தில் குரு சஞ்சரிக்கப் போகிறார். எனவே, பொருளாதார நிலை உயரும். புதிய தொழில் வாய்ப்புகள் அலை மோதும். லக்னாதிபதி புதன் நீச்சம் பெற்று, நீச்சபங்க ராஜயோகமும் பெறுகிறார்.

கடந்த ஒன்றரை ஆண்டுகளாக சர்ப்ப தோஷத்தின் பிடியில் இருந்த உங்கள் ராசி இந்த புத்தாண்டில் மாற்றம் காண்கிறது. ராகு-கேதுக்களின் ஆதிக்கம் பின்நோக்கிச் செல்லும் பொழுது, முறையாக நீங்கள் அதற்குரிய தலத்தில் சர்ப்ப சாந்தியை செய்து கொண்டால், சந்தோஷமான வாழ்க்கையை நீங்கள் சந்திக்கலாம்.

சனியை செவ்வாய் பார்க்கும் காலங்களில் எல்லாம், நீங்கள் கொஞ்சம் கூடுதல் விழிப்பு ணர்ச்சியுடன் இருக்க வேண்டும். அஷ்டமாதிபதி சனியும், ஆறுக்கு அதிபதி செவ்வாயும், மேலும் இரண்டு ஆதிபத்யங்களைப் பெற்றிருப்பதால், அக்காலங்களில் மிகமிக பொறு மையைக் கடைப்பிடிக்க வேண்டியது அவசியமாகும். திடீரென நட்பு பகையாகும். பகை நட்பாகும். சாதாரண சிகிச்சை, ரண சிகிச்சையாகும். ரண சிகிச்சை செய்ய வேண்டிய நிர்பந்தத்தில் உள்ளவர்களுக்கு, சாதாரண சிகிச்சையே கைகொடுக்கும்.

முயற்சியால் முன்னுக்கு வந்தவர்கள்!

உங்கள் ராசிநாதனாக புதன் விளங்குவதால், எழுத்தாற்றல், பேச்சாற்றல் போன்ற எத்தனையோ ஆற்றல்களைப் பெற்றிருப்பீர்கள். தெய்வ பலத்தை தேவைப்படும் பொழுது மட்டுமே பின்னணியாக வைத்துக் கொண்டிருப்பீர்கள். மற்றவர்களுக்கு யோசனை சொல்வ தில் அசகாய சூரர்கள் நீங்கள்தான்.

"கற்றது கைமண் அளவு, கல்லாதது உலகளவு'' என்று அடிக்கடி சொல்வீர்கள். உங்கள் வெற்றிக்குப் பின்னால் வேறொரு நபர் ஒளிந்திருப்பதை ஆராய்ந்து பார்த்தால் தான் தெரியும். முயற்சி ஒன்றையே முழு ஆயுதமாக்கி முன்னுக்கு வந்தவர்களின் பட்டியலில் முதலிடமும் பிடிப்பீர்கள்.

குருபார்வையால் பலன் பெறப்போகும் நேரம்!


கர வருடத் தொடக்கத்தில் அதாவது, 8.5.2011 அன்று குருப்பெயர்ச்சி நடைபெறப் போகிறது. சப்தமாதிபதியாகவும், தொழில் ஸ்தானாதிபதியாகவும் விளங்கும் குருவை, பெயர்ச்சிக்கு முன்னதாகவே கொண்டாடி மகிழ்ந்து ஹோமங்களில் கலந்து கொண்டு, இன்றோடு துயர் விலகட்டும் என்று வேண்டிக் கொண்டால், நன்றாக வாழ்க்கை அமையும். நாம் செய்யும் முயற்சிகளும் வெற்றி தரும்.

"பதினோராம் இடத்தில் வந்து,
பார்த்திடும் குருதான் நின்றால்,
மதிப்பான வாழ்க்கை சேரும்!
மகிழ்ச்சியும் நிலைத்திருக்கும்!
துதிக்கின்ற தெய்வம் தன்னை
துணையாக்கி பார்த்திருந்தால்,
விதிகூட மாறிப்போகும்!
வெற்றிகள் நாளும் சேரும்!''


என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அடிப்படையில் குருவின் பார்வை, 3, 5, 7 ஆகிய இடங்களில் பதிவதால், அந்த இடங்கள் புனிதமடைகின்றன. எனவே, சகோதரர்களால் சகாயம் கிடைக்கும். தக்க தருணத்தில் கைகொடுத்து உதவுவர். நீண்ட நாள் வழக்குகள் நல்ல முடிவிற்கு வரும். பிள்ளைகளால் பெருமை சேரும். அதன் கல்யாண கனவுகளை நனவாக்கி வைப்பீர்கள். சப்தம ஸ்தானத்தை குரு பார்ப்பதால், குடும்ப முன்னேற்றம் கூடும். கூட்டு முயற்சிகளில் மாற்றம் செய்து தனித்தியங்க முற்படுவர்.

பொதுவாக, தொழில் ஸ்தானாதிபதியாக விளங்கும் குரு, லாப ஸ்தானத்தில் வரும்பொழுது, தொழிலில் லாபத்தை உருவாக்குவார். பணப் புழக்கம் அதிகரிக்கும். வாழ்க்கைத் துணை வழியிலும் வருமானங்கள் வந்துசேரும். அவர்களுக்கு ஏற்பாடு செய்திருந்த உத்யோக வாய்ப்புகள் கைகூடி வரும். தூர தேசத்தில் இருந்து வரும் தகவல் ஆச்சரியப்பட வைக் கும். மனதை வாட்டிக் கொண்டிருந்த பிரச்சினைகள் ஒவ்வொன்றாக நல்ல முடிவுக்கு வரும். கூட்டுத் தொழிலில் மாற்றம் காண்பீர்கள்.

ராகு-கேது பெயர்ச்சி காலம்!

மே மாதம் 16-ம் தேதி விருச்சிக ராசியில் ராகுவும், ரிஷப ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இதுவரை, ஜென்மத்தில் கேதுவும், ஏழில் ராகுவும் சஞ்சரித்துக் கொண்டு இருந்தார்கள். இப்பொழுது, ஜென்மத்தை விட்டு கேது விலகுகிறது. சப்தம ஸ்தானத்தை விட்டு ராகு விலகுகிறது.

ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் ராகு அஷ்டலெட்சுமி யோகத்தை உங்களுக்கு கொடுக்கப் போகிறது. மறைந்த ராகுவால், நிறைந்த தன லாபத்தை நீங்கள் காணப்போகிறீர்கள். குறைந்த அளவு மூலதனம் வைத்து தொடங்கிய தொழிலில் கூட கோடி கோடியாய் லாபத்தை வரவழைத்துக் கொடுப்பது ராகு தான். எனவே, பழைய தொழிலை மூடிவிட்டு, புதிய தொழில் தொடங்கும் முயற்சியில் ஆர்வம் காட்டுவீர்கள். பதவி உயர்வும், ஊதிய உயர்வும் கிடைக்காமல் ஏக்கப் பெருமூச்சு விட்டவர்கள், இப்பொழுது ஆச்சரியப்படும் விதத்தில் அதைக் காணப்போகிறீர்கள்.

அதேநேரத்தில் பன்னிரெண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் கேது பலவிதமான விரயங்களையும் கொடுக்கலாம். வீண் விரயங்களை, சுபவிரயமாக மாற்றிக் கொள்ளுங்கள். உற்றார், உறவினர்களுக்கு கொடுத்து உதவுங்கள். கல்விக்கு தொகை கேட்டும், கல்யாணத்திற்கு பணம் கேட்டும் வருபவர் களில் ஒருசிலருக்காவது வழங்கி மகிழுங்கள். வீட்டுப் பராமரிப்புச் செலவுகளை மேற்கொள்ள வேண்டிய நேரமிது.

அல்லல் தீர்க்கும் ஐந்தாமிடத்துச் சனி!

உங்கள் ராசிக்கு 8, 9-க்கு அதிபதியான சனிபகவான் ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். பிள்ளைகள் உங்கள் அறிவுரைகளை கேட்பார்களா? என்பது சந்தேகம்தான். அவர்களின் குணமறிந்து நீங்கள் நடந்து கொள்வதே நல்லது. உங்களை கேட்காமலேயே ஒருசில காரியங்களில் முடிவெடுத்து விடலாம்.

தந்தை வழியில் உங்களுக்கு கிடைக்க வேண்டிய சொத்துக்களில் இருந்த தடை, இப்பொழுது உச்சம் பெற்ற சனியால் அகலும். பெற்றோர் வழியில் மனக்கலக்கம் தரும் செய்தியும் வந்து சேரலாம். மக்கட் செல்வங்கள் வழியில் திடீர் விரயங்களும் உருவா கலாம். எனவே, மந்தனாம் சனியை மனதில் நினைத்து, சிந்தனை அனைத்தும் அதன்மேல் செலுத்தி, திருநள்ளாறு, பெரிச்சிக் கோவில், குச்சானூர் போன்ற தலங்களுக்குச் சென்று வழிபட்டு வந்தால், வளர்ச்சியில் எந்த குறுக்கீடுகளும் ஏற்படாது.

அக்கறை செலுத்த வேண்டிய வக்ர காலங்கள்!

வருடத் தொடக்கத்திலேயே சனி வக்ரமடைகிறார். 14.4.2011 முதல் 9.6.2011 வரை வக்ர இயக்க காலத்தில் உடல் நலத்தில் கொஞ்சம் கூடுதல் அக்கறை செலுத்துவது நல்லது. எந்த நோயும் வரும்பொழுதே மருத்துவ ஆலோசனைகளைப் பெறுவது அவசியமாகும். திட்டமிட்ட காரியங்களை திட்டமிட்டபடியே செய்ய இயலுமா? என்பது சந்தேகம் தான். குடும்பச் சுமை கூடும். கடுமையாக முயற்சித்தும் சில காரியங்கள் கைகூடாமல் போக லாம். சனி பகவானுக்கு, எண்ணெய் காப்பிட்டு, எள்ளோதரை நைவேத்தியமிட்டு, "கருநிற காகம் ஏறி காசினி தன்னைக் காக்கும்'' என்ற சனி கவசத்தைப் பாடுங்கள்.

குருவின் வக்ர காலம் 31.8.2011 முதல் 15.12.2011 வரை. கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் வக்ரமடையும் பொழுது, உங்களுக்கு யோகத்தையே வழங்கும். எனவே, முல்லைப்பூ மாலை சூட்டி, முத்தான குருவிற்கு சிறப்பு பரிகாரங்களைச் செய்தால், எல்லையில்லாத நற்பலன்கள் வந்து சேரும்.

பலன்தரும் பரிகாரம்!

புதன்கிழமை தோறும் ஒரு நேரமாவது விரதமிருந்து விஷ்ணுவை வழிபட்டு வந்தால், பொன்னான வாழ்க்கை அமையும். மேலும், சிவகங்கை மாவட்டம் கீழச்சீவல்பட்டி அருகில் உள்ள இரணியூரில் வீற்றிருந்து அருள்வழங்கும் ஆட்கொண்ட நாதர், சிவபுரந்தேவியை பூக்கொண்டும், பாக்கொண்டும் வழிபட்டு வந்தால், புதிய வாய்ப்புகள் வந்து சேரும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை

Post by சிவா on Sat Apr 16, 2011 5:12 pmபுனர்பூசம் 4-ம் பாதம், பூசம், ஆயில்யம் முடிய

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ஹி, ஹீ, ஹே, ட, டி, டே, டோ உள்ளவர்களுக்கும்)

வருகிற மாற்றம் வளம் சேர்க்கும்! வருங்காலத்தை நலமாக்கும்!


உதவிகள் செய்வதன் மூலம் பல பதவிகளை பெறும் கடக ராசி நேயர்களே!

பொது நலத்தில் அதிக ஆர்வம் காட்டும், உங்களுக்கு இந்த புத்தாண்டு புதிய பொறுப்புகளையும், பதவிகளையும் வழங்கப்போகிறது.

வருடத் தொடக்கத்திலேயே உங்கள் ராசிநாதன் சந்திரன் தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கிறார். அப்புறமென்ன, வருடம் முழுவதும் வசந்த காலம் தான்.

பொதுவாக, குருபார்க்க இந்த ஆண்டு பிறக்கிறது. குரு பார்க்க கோடி நன்மை என்பதற்கேற்ப, கர வருடம் கண்ணேறு படும் விதத்தில் உங்களுக்கு முன்னேற்றங்களைக் கொடுக்கப் போகிறது. எண்ணங்களை எளிதில் செயலாக்குவது இறைவழிபாடு தான். எனவே, கிரகங்கள் வக்ர நிலையில் இருக்கும் பொழுதெல்லாம், அலங்காரம், அபிஷேகம், ஹோமங்கள் செய்து வளங்களையும், நலங்களையும் வரவழைத்துக் கொள்ளலாம். மற்ற காலங்களில் அர்ச்சனைகள் செய்து மகத்தான பலன் காணலாம்.

சந்திரனுக்கு மற்றொரு பெயர் மதி. அந்த மதியின் வழியாகத்தான் உங்கள் விதியும், கதியும் நிர்ணயிக்கப்படுகின்றன. அந்த சந்திரன் தான் உங்கள் ராசிநாதன் என்பதால் நிலவு நிறைந்த நாளில் செய்யும் வழிபாடுகளும், திங்கட்கிழமையன்று செய்யும் சிறப்பு வழிபாடுகளும் உடனடியாக நற்பலன்களைக் கொடுக்கும். கிரகங்கள் வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது மட்டும் எதையும் யோசித்து செய்வதே நல்லது. கூட்டு முயற்சிகளில் இருந்தவர்கள் விலகுவர். எனவே, சுயஜாதகத்தில் தெசாபுத்தியின் பலமறிந்து யோகம் தரும் கிரகத்திற்குரிய சிறப்பு வழிபாட்டை மேற்கொண்டால், சிந்திக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும்.

வருடத் தொடக்கத்தில் ஒன்பதாமிடத்தில் குருவும், செவ்வாயும் இணைந்து குரு மங்கள யோகத்தை உருவாக்குகிறார்கள். எனவே, குடும்பத்தில் மங்கல ஓசை கேட்பதற்கான வாய்ப்புகள் மற்றும் மழலையின் ஓசைகள் கேட்பதற்கான வாய்ப்புகளும் உருவாகலாம். பன்னிரெண்டாம் இடத்துக் கேது பயணங்களை அதிகரிக்கச் செய்யும்.

கட்டளையிட்டதும் செய்யக் காத்திருப்பவர்கள் பலர்!

நவக்கிரகங்களில் மாதாகாரகன் என்று வர்ணிக்கப்படுபவர் சந்திரன். அந்தச் சந்திரன் சொந்த வீட்டின் ஆட்சியில் உச்சத்தில் இருப்பவர்களுக்கெல்லாம், தாய்பாசம் அதிகமாகவே இருக்கும். அதேநேரத்தில் உங்கள் ராசிக்கு சுக்ரன் பாவியாக விளங்குவதால், குடும்ப வாழ்க்கை திருப்திகரமாக இருக்குமா? என்பது சந்தேகம்தான்.

குடும்ப ஸ்தானாதிபதியாக சூரியன் அமைவதால், சூரிய, சந்திர பலத்தைப் பொறுத்தே உங்கள் வாழ்க்கையை எப்படி அமைத்துக் கொண்டால் முன்னேற்றம் வரும் என்பதை நீங்கள் அறிந்து கொள்ள இயலும்.

உங்களிடம் ஒப்படைத்த பொறுப்புகளை எப்பாடுபட்டாவது, செய்து முடித்து விடுவீர்கள். பொல்லாதவர் களையும் பழகி வைத்திருப்பீர்கள். நல்லவர்களையும் பழகி வைத்தி ருப்பீர்கள். எனவே, பொதுவாழ்வில் தலைமை பொறுப்புக்கு தகுதியானவர்கள் என்றும் மக்கள் சொல்வர். "தோன்றிற் புகழோடு தோன்றுக!'' என்ற வள்ளுவனின் வாக்கு, உங்களுக்கு முழுமையாகப் பொருந்தும்.

பதவியில் மாற்றம் தரும் பத்தாமிடத்துக் குரு!

குருபெயர்ச்சி வந்துவிட்டால், குதூகலமான வாழ்க்கை வருமென்று சொல்வார்கள். ஆனால், அந்த குரு பத்தாமிடத்திற்கு வரும்பொழுது மட்டும் பயப்படுவார்கள். காரணம், பத்தில் குருவந்தால், பதவியில் மாற்றம் வரும் என்பது பழமொழி. ஆனால், அதற்காக நீங்கள் கவலைப்பட வேண்டாம்.

பதவி இருந்தால்தானே மாற்றம் வரும். பதவி இல்லாதவர்களுக்கும், உத்யோகம், தொழில் அமையாதவர் களுக்கும் எப்படி இருக்கும் என்று ஒருசிலர் கேட்பார்கள். அவர்களுக் கெல்லாம், புதிய பொறுப்புகளும், பதவிகளும் திடீரென ஏற்படும். ஆனால், திருப்திகரமாக இருக்காது. எனவே, குருப்பெயர்ச்சிக்கு முன்னதாகவே உங்களுக்கு யோகம் தரும் நாட்களைத் தேர்ந்தெடுத்து, சிறப்பு வழி பாடுகளைச் செய்வது நல்லது.

வேலைப்பளுமிக்க உத்யோகத்தில் இருப்பவர்கள் வேறு வேலைக்கு ஏற்பாடு செய்த முயற்சி கைகூடும்.

"பத்தினில் குருவும் வந்தால்,
பதவிதான் மாறும் என்பார்!
அத்தகு நிலையில் கூட,
அனுகூலம் கிடைப்பதற்கும்,
சொத்துக்கள் சேர்வதற்கும்,
சுகமெல்லாம் கூடுவதற்கும்,
தக்கதோர் குருவை நீங்கள்,
தரிசித்தால் வளர்ச்சி கிட்டும்!''


என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, குருவின் பார்வை உங்கள் ராசிக்கு 2, 4, 6 ஆகிய இடங்களில் பதிவதால், குடும்பத்தில் ஒற்றுமை கூடும். கொள்கை பிடிப்போடு செயல்பட இயலும். வியாபார போட்டிகளை சமாளிப்பீர்கள். வீடுகட்ட அல்லது வாங்க எண்ணிய எண்ணம் கைகூடுவதற்கான அறிகுறிகள் தோன்றும். உத்யோகம், தொழிலில் வரும் மாற்றங்களை சுயஜாதகத்தின் பலமறிந்து தேர்ந்தெடுத்துக் கொள்ளலாம்.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்!

மே மாதம் 16-ம் தேதி விருச்சிக ராசியில் ராகுவும், ரிஷப ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள்.

இதுவரை பன்னிரெண்டாமிடத்தில் சஞ்சரித்த கேது, இனி பதினோராமிடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். ஆறாமிடத்தில் சஞ்சரித்து வந்த ராகு இனி ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். எனவே, ராகு-கேதுக்களின் ஆதிக்கம் அதிகம் இருக்கிறது.

புத்திர ஸ்தானத்தில் ராகு சஞ்சரிப்பதால், பிள்ளைகள் வழியில் சுபகாரிய பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். ஸ்தல யாத்திரைகள் அதிகரிக்கும். பூர்வீக சொத்துக்கள் மூலம் வர வேண்டிய தொகை வந்து சேரும். பழைய சொத்துக்களை விற்றுவிட்டு புதிய சொத்துக் களை வாங்கும் எண்ணம் மேலோங்கும்.

அதேநேரத்தில் லாப ஸ்தானத்தில் கேது சஞ்சரிப்பதால், வரும் லாபத்தை அசையாத சொத்துக்களாகவோ, அல்லது பொருட்களாகவோ மாற்றி வைத்துக் கொண்டால் தான் அது நிலைக்கும். கொடுக்கல்-வாங்கல் களில் இருந்த சிக்கல்கள் தீர மாற்று இனத்தவர்கள் ஒத்துழைப்புச் செய்வர். முட்டுக்கட்டையாக இருந்த மூத்த சகோதரர் இனி உங்கள் குணமறிந்து செயல்படுவார். ராகு-கேதுக்களுக்கு ப்ரீத்தி செய்வது நல்லது.

அர்த்தாஷ்டமச் சனியின் ஆதிக்கம்!

இதுவரை மூன்றாமிடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான், 21.12.2011 அன்று நான்கா மிடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். பெரிய கிரகங்கள் பெயர்ச்சியாவதற்கு ஆறு மாதங்கள் முன்னதாகவே பலன்களை கொடுக்க தொடங்கிவிடும்.

ஆயினும், தற்சமயம் சனி நான்காமிடத்தில் அல்லவா சஞ்சரிக்கப்போகிறார்? எனவே, எதையும் ஒருமுறைக்கு பலமுறை யோசித்து செய்வதே நல்லது. களத்திர ஸ்தானத்திற்கும், எட்டாமிடத்திற்கும் சனி அதிபதியாக வருவதால், குடும்ப ஒற்றுமை குறையாமல் பார்த்துக் கொள்வதும், அதை சமாளிப்பதும் உங்கள் புத்திசாலித்தனமாகும். வீடு மாற்றம், இடமாற்றம், தொழில் மாற்றம் ஆகியவைகள் தானாகவே வந்து சேரும். வீட்டில் கணபதி ஹோமம், சுதர்சன ஹோமம் போன்றவற்றை வைப்பது நல்லது.

பொதுவாகவே, இதுபோன்ற சனியின் ஆதிக்கம் ஏற்படும் நேரங்களில் முறையாக சனீஸ்வர வழிபாட்டை மேற்கொள்வதோடு, ஆதியந்த பிரபுவையும் வழிபடுவது நல்லது.

அக்கறை செலுத்த வேண்டிய வக்ர காலங்கள்!

வருடத் தொடக்கத்திலேயே சனி வக்ரமடைகிறார். மீண்டும் தை மாதம் வக்ரம் பெறுகிறார். அதன்பிறகு வருடக் கடைசியில் பங்குனி 13-ம் தேதி முதல் கன்னி ராசிக்கு வக்ரமாகிச் செல்கிறார். இதுபோன்ற வக்ர காலங்களில் நீங்கள் எந்தவொரு புதுமுயற்சிகளை செய்தாலும், அதில் கூடுதல் விழிப்புணர்ச்சி காட்ட வேண்டும். ஏழு, எட்டுக்கு அதிபதியாக சனி விளங்குவதால், வாழ்க்கைத் துணை வழியே பிரச்சினைகள் உருவாகலாம். விட்டுக் கொடுத்துச் செல்வது நல்லது. வேலை வாய்ப்பிலும் வி.ஆர்.எஸ். கொடுக்கும் எண்ணம் மேலோங்கும். சந்தோஷம் தரும் சனி கவசத்தை நாள் ஒன்றுக்கு எட்டுமுறை காக வாகனத்தான் சந்நிதியில் பாடுங்கள், கவலைகள் தீரும்.

குருவின் வக்ர காலம் 31.8.2011-முதல் 15.12.2011 வரை. இக்காலத்தில் வீண் விரயங்கள் கூடும். விலை உயர்ந்த பொருட்களை கையாளுவதில் கவனம் தேவை. நண்பர்களை நம்பிச் செய்த காரியம் மீண்டும் உங்களிடமே திரும்பி வரலாம். முறையான குரு வழிபாடு முன்னேற்றம் வழங்கும்.

பலன்தரும் பரிகாரம்!

திங்கட்கிழமை தோறும் சந்திரன் மற்றும் அம்பிகை வழிபாட்டை மேற்கொள்ளுங்கள். சிறப்பு வழிபாடாக, சிவகங்கை மாவட்டம் இளையாற்றங்குடிக்கு வாருங்கள். அங்குள்ள கைலாச விநாயகர், நித்ய கல்யாணி சமேத கைலாச நாதரை வழிபட்டு முத்தான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை

Post by சிவா on Sat Apr 16, 2011 5:13 pmமகம், பூரம், உத்ரம் 1-ம் பாதம் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ம, மி, மு, மெ, மோ, ட, டி, டு, டே உள்ளவர்களுக்கும்)

குருவின் பார்வை பலமாகும்! கொடுக்கும் சுகமோ ஏராளம்!


செல்லும் இடங்களில் எல்லாம் செல்வாக்கு அதிகம் பெற்ற சிம்ம ராசி நேயர்களே!

விடாமுயற்சி இருந்தால் விதியைக் கூட மாற்றி விடலாம் என்று சொல்பவர்கள் நீங்கள். உங்களுக்கு இந்த புத்தாண்டு ஒப்பற்ற வாழ்க்கையைக் கொடுக்குமா? உலாவரும் கிரக நிலைகள் சாதகமாக இருக்கின்றதா? நிலா என்றழைக்கப்படும் சந்திரன் உங்கள் ராசியிலேயே சஞ்சரிப்பதால், நினைத்ததை எல்லாம் நிறைவேற்றிக் கொள்ள இயலுமா? என்று நீங்கள் சிந்திப்பீர்கள்.

உங்கள் கனவுகள் எல்லாம் நனவாகும் விதத்தில் தான் கர வருடம் பிறக்கிறது. வருடத் தொடக்கத்திலேயே குரு பார்க்கப் போகிறார். எனவே, வாய்ப்புகள் எல்லாம் வாயில் கதவைத் தட்டும். ஆனால், இந்த வருடம் தொடங்குகிற பொழுதே ஏழரைச் சனி வக்ரம் பெறுகிறார்.

எட்டாமிடத்தில் மூன்று கிரகங்கள் முற்றுகையிடுகின்றன. சகட யோகத்தின் பின்னணியில் செயல்பட்டு வந்த இந்த ராசிக்காரர்களுக்கு இனி விமோச்சனம் கிடைக்கப் போகிறது. குரு மற்றும் செவ்வாய் மாறும் வரை கொஞ்சம் பொறுத்திருப்பது நல்லது.

உங்கள் சுயஜாதகத்தில் சூரியபலம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்தும், உங்கள் வாழ்க்கைத்துணையின் ஜாதகத்தில் சனியின் பலம் எப்படி இருக்கிறது என்பதைப் பார்த்தும் நீங்கள் செயல்பட்டால், வாழ்வில் வெற்றி மீது வெற்றி வந்து கொண்டே இருக்கும். வருடத் தொடக்கத்தில் வரும் குருப்பெயர்ச்சிக்கு பிறகு ராகு-கேதுவும் பெயர்ச்சியாகிறார்கள். இது ஓரளவு தொழில் வளத்தைப் பெருக்கும்.

அதன் பிறகு வரும் சனிப்பெயர்ச்சி தான் உங்களுக்கு அற்புத பலன்களை அள்ளி வழங்கும். எனவே, ஏழரைச்சனி முழுமையாக விலகும் இந்த நேரத்தில் ஏதேனும் ஒரு ஆலயத்திற்குச் சென்று, சனிபகவானுக்கு எண்ணெய் காப்பிட்டு, எள்ளோதரை நைவேத் தியமிட்டு, நீலவண்ண வஸ்திரம் அணிவித்து, நீலநிற மாலை சாற்றி சனீஸ்வர பகவானை வழிபட்டால், சந்தோஷத்தை தக்க வைத்துக் கொள்ள இயலும்.

குறிப்பாக, திருநள்ளாறு, குச்சானூர், பெரிச்சிக் கோவில் போன்ற தலங்களுக்கு திரு வோணம், அவிட்டம், உத்ராடம், பூரட்டாதி, உத்ரட்டாதி, ரேவதி ஆகிய நட்சத்திரங்கள் அல்லாத மற்ற நாட்களில் சென்று அன்ன தானம், சொர்ண தானம், வஸ்திர தானம் போன்றவற்றில் இயன்றதைக் கொடுத்து வழிபட்டு வந்தால், இல்லத்தில் நல்லது நடக்கும். உள்ளத்தில் அமைதி கூடும்.

24.7.2011 முதல் 10.9.2011-வரை சனியை செவ்வாய் பார்க்கும் காலத்தில் எந்த முடிவும், நினைத்த மாத்திரத்தில் எடுப்பதை தவிர்ப்பது நல்லது. அருகில் இருப்பவர்களை அனுசரித்துச் செல்வதோடு, உருகி மனமுருகி வழிபாட்டை மேற்கொண்டால், விரயங்களில் இருந்து தப்பிக்க இயலும்.

கம்பீரமான தோற்றத்தோடு காரியங்களை சாதிப்பவர்கள்!

சுயநலமும், பொதுநலமும் இணைந்து காணப்படும் உங்களை பகைத்துக் கொள்ள யாரும் பயப்படுவர். சீறும் குணமும், சிரிக்கும் குணமும் உங்களுக்கு மாறி, மாறி வந்து கொண்டே இருக்கும். பேரும், புகழும் உங்களுக்கு அதிகமாகவே இருக்கும்.

களத்திர ஸ்தானாதிபதி சனி என்பதால் வாழ்க்கைத் துணை வழியே அடிக்கடி பிரச்சினைகள் வரும். பரிகாரங்கள் மூலம் ஒற்றுமையை பலப்படுத்திக் கொண்டாலும், சிறிய விஷயங்கள் கூட பெரிதாகி, பிரச்சினைகளை உருவாக்கலாம். புகழுக்காக ஆசைப் படும் நீங்கள், நடுவயதில் தான் தொடு வானத்தில் இருக்கும் சூரியனைப் போல பிரகாசிப்பீர்கள்.

கனவுகளை நனவாக்கும் குருப்பெயர்ச்சி!


கர வருடத் தொடக்கத்தில் அதாவது, 8.5.2011 அன்று குருப்பெயர்ச்சி நடைபெறப் போகிறது. உங்கள் ராசிக்கு 5, 8-க்கு அதிபதியான குருபகவான் மேஷ ராசியில் சஞ்சரித்த படி, அதுபார்க்கும் பார்வை முதன்முதலில் உங்கள் ராசியில் தான் பதிவாகிறது. எனவே சகல பாக்கியங்களும் உங்களுக்கு வந்து சேரப்போகிறது.

"ஒன்பதில் குருவும் வந்தால்,
உயர்வுகள் வந்து சேரும்!
நண்பர்கள் ஒத்துழைப்பால்,
நலம் யாவும் வந்து கூடும்!
இன்பத்தின் எல்லை காணும்
இனியதோர் வாழ்வு கிட்டும்!
பொன்னான தொழில் தொடங்க
புதுப்பாதை அமையும் உண்மை!''


என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அடிப்படையில் உங்களுக்கு மன்னவன் குரு பொன்னான எதிர் காலத்தை அமைத்துக் கொடுக்கப் போகிறார். அதன் பார்வை 1, 3, 5 ஆகிய இடங்களில் பதிவதால், ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். பணப்பிரச்சினைகள் அகலும்.

புதிய தொழில் தொடங்கும் திட்டங்கள் கைகூடி வரும். சகோதர ஒற்றுமை பலப்படும். வழக்குகளில் வெற்றி கிட்டும். கல்யாண கனவுகள் நனவாகி, மகிழ்ச்சியை வரவழைத்துக் கொடுக்கும். கற்ற கல்வியில் இருந்த தடை அகலும். வெற்றிச் செய்திகள் வீடு தேடி வந்து கொண்டே இருக்கும்.

குரு உங்கள் ராசிக்கு 5, 8-க்கு அதிபதியாவதால், உங்கள் வாரிசு களால் ஏற்பட்ட பிரச்சினை அகலும். இருப்பினும், குழந்தைகளின் செயல்பாடுகளில் நீங்கள் அக்கறை காட்டுவது அவசியமாகும். வெளியூர், வெளிநாடுகளில் படிக்கும் அல்லது வேலை பார்க் கும் உங்கள் பிள்ளைகளிடம் அடிக்கடி தொலைபேசி மூலமாவது தொடர்பு வைத்துக் கொள்வது நல்லது.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்!

மே மாதம் 16-ம் தேதி விருச்சிக ராசியில் ராகுவும், ரிஷப ராசியில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இதுவரை உங்கள் ராசிக்கு ஐந்தாமிடத்தில் சஞ்சரித்து வந்த ராகு நான்காமிடத்திலும், பதினோராமிடத்தில் சஞ்சரித்து வந்த கேது இனி பத்தாமிடத்திலும் சஞ்சரிக்கப் போகிறார்கள். எனவே, அலைச்சல் அதிகரிக்கும். ஆதாயம் எதிர்பார்த்ததைக் காட்டிலும், ஓரளவே கிடைக்கும். பணத்தேவைகள் கடைசி நேரத்தில் பூர்த்தியாகும்.

பத்தாமிடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால், பணிகளில் ஏற்பட்ட தொய்வு அகலும். கட்டாய ஓய்வு பெற்ற பிறகும் கூட, உங்களை வேலையில் அமர்த்த முன்வருவர். புதிய தொழில் தொடங்கும் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வீர்கள். எதிர்ப்புகளின் காரணமாக, உத்யோகத்தில் ஏற்பட்ட இடமாற்றம் நன்மையாகவே முடியும்.

நான்காமிடத்தில் ராகுவால், ஆரோக்கிய பாதிப்புகள் ஏற்பட்டு அகலும். மருத்துவச் செலவு கூடும். தாய் மற்றும் பங்காளிகளின் மனக்கசப்பிற்கு ஆளாகாமல் பார்த்துக் கொள்வது நல்லது. சொத்துக்கள் வாங்கும் பொழுது, ஆராய்ந்து கையெழுத்திடுவதே உத்தமம்.

ஏழரைச்சனி விலகி இனிமை தரும் நேரம்!

இதுவரை உங்கள் ராசியோடு இணைந்து ஏழரைச்சனியாக வந்த சனிபகவான் இப்பொழுது, உங்கள் ராசியை விட்டு விலகப் போகிறது. விலகும் சனியை முன்னதாகவே வழிபட்டால், நிலையான புகழும், நிம்மதியும் கிடைக்கும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். கலையார்வம் மிக்கவர்களோடு இணைந்து பணியாற்றி, காரிய வெற்றி காணப்போகிறீர்கள்.

கர வருடத்தில் விலகும் சனியால், வரவு அதிகரிக்கும். வாய்ப்பு வாயில் கதவைத் தட்டும். நெஞ்சை நிமிர்த்தி, உங்களோடு வாதிட்டவர்கள் எல்லாம், இனி உங்களை தஞ்சமடைவர். அரசு அதிகாரிகளின் நட்பாலும், அரசியல்வாதிகளின் பழக்கத்தாலும், வாழ்க்கைத் தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வீர்கள்.

அக்கறை செலுத்த வேண்டிய வக்ர காலங்கள்!

வருடத் தொடக்கத்திலேயே வக்ரமடைகிறார். 14.4.2011 முதல் 9.6.2011 வரை வக்ர இயக்க காலத்தில் சனி இருக்கும் பொழுது, வாழ்க்கைத் துணை வழியே சில பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். எதிரிகளின் பலம் கூடும். மற்றவர்களுக்கு நீங்கள் நன்மை செய்தாலும், அதை தீமையாகவே கருதுவர். உத்யோகத்தில் நீண்டதூர பயணங்களும், உத்யோக மாற்றங்களும் உருவாகலாம். இக்காலத்தில் எள் தீபமேற்றி, சனிபகவானை வழிபடுவ தோடு, ஆஞ்சநேயரையும் வழிபட்டு வருவது நல்லது.

31.8.2011 முதல் 15.12.2011 வரை குருவக்ரம் பெறும்பொழுது, குழந்தைகள் வழி பிரச்சினைகளை சந்திக்க நேரிடலாம். மருத்துவச் செலவுகள் கூடும். திட்டமிட்ட காரியங் களில் திசை மாற்றம் ஏற்படலாம். இக்காலத்தில் குரு வழிபாட்டை முறையாக மேற் கொள்வது நல்லது. திசை மாறிய தென்முகக் கடவுளை வழிபட்டால் வளங்களும், நலங்களும் வந்து சேரும்.

பலன்தரும் பரிகாரம்!

ஞாயிற்றுக்கிழமை தோறும் காலை நேரத்தில் விரதம் இருந்து, சூரிய பகவானை வழிபட்டு வந்தால், சுகங்களும், சந்தோஷங் களும் வந்து சேரும். மேலும், தஞ்சை மாவட்டத்தில் உள்ள சூரியனார் கோவிலுக்கு யோக பலமிக்க நாளில் சென்று வழிபட்டு வந்தால், சகல யோகங்களும் உங்களுக்கு வந்து சேரும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை

Post by சிவா on Sat Apr 16, 2011 5:16 pmஉத்ரம் 2, 3, 4 பாதங்கள், ஹஸ்தம், சித்திரை 1, 2 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ப, பி, பூ, ஷ, ண, ட, பே, போ உள்ளவர்களுக்கும்)

ஜென்மச்சனி தான் விலகட்டும், சிந்தனை அனைத்தும் செயலாகும்!

ஓசைப்படாமலேயே நல்ல காரியங்களுக்கு பிள்ளையார் சுழி போடும் கன்னி ராசி நேயர்களே!


புத்தாண்டு கர வருஷம் பிறக்கப் போகிறது. புதிய திருப்பங்கள் பலவும் உங்களைத் தேடி வரப்போகிறது. முத்தான வாழ்விற்கு முன் உதாரணமாக நீங்கள் திகழப்போகிறீர்கள். அத்தனைக்கும் காரணம் உங்களுக்கு ஜென்மச்சனி விலகப் போவதுதான். இருந்தாலும், அது உடனடியாக விலகவில்லை. மார்கழி மாதம்தான் விலகப் போகிறது.

அதற்கிடையில் அஷ்டமத்தில் சஞ்சரிக்கப் போகும் குரு உங்களுக்கு அமைதிக் குறைவை உண்டாக்குமா? என்று நீங்கள் கவலைப்பட வேண்டாம். கேந்திராதிபத்ய தோஷம் பெற்ற கிரகம் மறைவிடங்களில் வரும் பொழுது யோகத்தையே வழங்கும். எனவே குருவின் பார்வை பதியும் குடும்ப ஸ்தானம் புனிதமடைவதால், இதுவரை இருந்த துயரங்கள் உங்களை விட்டு மறையும்.

இனத்தார் பகை மாற எடுத்த முயற்சிகள் வெற்றிபெறும் விதத்தில் ராகு-கேதுக்களும் மாறப் போகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக வருடத் தொடக்கத்தில் சஞ்சரிக்கும் கிரக நிலைகளை ஆராய்ந்து பார்க்கும் பொழுது உங்கள் ராசியைக் குருவும் பார்க்கிறார், ராசிநாதன் புதனும் பார்க்கிறார்.

ராசிநாதன் வலிமையிழந்து வருடம் தொடங்குவதால், குடும்பத்தில் யாரேனும் ஒருவருக்கு திடீர் தாக்குதல்கள், வைத்தியச் செலவுகள் உருவாகலாம். எனவே அனைவரின் ஜாதகத்தையும் ஆராய்ந்து பார்த்து யாருடைய ஜாதகத்திலாவது அஷ்டமத்துச்சனி, ஏழரைச் சனி, அர்த்தாஷ்டமச்சனி, இருக்கிறதா என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள். அதற்கேற்ப வழிபாடுகளையும் நீங்கள் முறையாக மேற்கொண்டால் வசதி வாய்ப்புகள் பெருகும்.

தற்சமயம் இந்தப் புத்தாண்டில் சில மாதங்கள் கழித்து 7 1/2 சனியில் விரயச்சனிதான் விலகப் போகிறது. இன்னும் ஐந்தாண்டுகள் சனியின் ஆதிக்கம் பாக்கி இருக்கிறது. அதுவரை பொறுமையோடு செயல்படுவதுதான் நல்லது. என்றாலும், சனிக்குரிய வழி பாடுகளும், சனியின் ஆதிக்கத்தில் இருந்து தப்பிக்க வைக்கும் விநாயகப் பெருமான் வழிபாடும், அனுமன் வழிபாடும் உங்கள் வாழ்க்கையில் வரும் இடையூறுகளைஅகற்றும். சனி, செவ்வாய் பார்க்கும் காலங்களில் மட்டும் நீங்கள் எதையும் ஒருமுறைக்குப் பலமுறை யோசித்துச் செய்ய வேண்டும்.

அதேபோல் அமைப்பு ஆண்டின் தொடக்கத்திலேயும் வருகிறது. இடையிலேயும் வருகிறது. அப்படி வரும் பொழுது உறவினர் மற்றும் உடன் பிறப்புகளின் பகையைச் சந்திக்க நேரிடலாம்.
மற்றவர்களுக்கு உதவி செய்வதன் மூலம் மகிழ்ச்சி காண்பவர்கள்!

அன்பாகப் பேசி அடுத்தவர்களை வசப்படுத்தும் ஆற்றல் உங்களுக்கு உண்டு. பொறுமைக்கு எடுத்துக்காட்டாக விளங்குபவர்களும் நீங்கள்தான். உங்கள் ராசிநாதன் புதன் என்பதால் அனுபவ அறிவு உங்களுக்கு அதிகமாகவே இருக்கும்.

இந்த ராசியைச் சார்ந்த பெரும்பாலானோருக்குத் தாமத விவாகமே தக்க துணையைத் தேர்ந்தெடுத்துக் கொடுக்கும். கணப்பொருத்தமும், மகேந்திரப் பொருத்தமும், ரஜ்ஜ×ப் பொருத்தமும் பார்த்துச் செய்தால் தான் இனப்பெருக்கமும், பணப் பெருக்கமும் இயல்பாக வந்து சேரும்.

ராஜயோகத்தை உருவாக்கும் குருப்பெயர்ச்சி!

கர வருடத் தொடக்கத்திலேயே 8.5.2011 அன்று குருப்பெயர்ச்சி நடைபெறப்போகிறது. உங்கள் ராசிக்கு 7, 5-க்கு அதிபதியான குருபகவான் அஷ்டமத்தில் சஞ்சரிக்கப் போகிறார். அதன் பார்வை பலம் 2, 4, 12 ஆகிய இடங்களில் பதிகிறது.

4, 7-க்கு அதிபதியான குருபகவான் 8-ல் வரும் பொழுது நல்ல வாய்ப்புகளை அள்ளி வழங்குவார். அஷ்டமத்து குரு மற்ற ராசிக்காரர்களுக்குத் தொல்லை கொடுத்தாலும் கன்னி ராசிக்காரர்களுக்கு மட்டும் இல்லத்தில் நல்ல சம்பவங்களை நடத்தி வைக்க வழிகாட்டுவார். ஆனால், அடிக்கடி மன அமைதிக் குறைவு மட்டும் ஏற்படும். தன்னம் பிக்கையோடு செயல்படுவது நல்லது.

"எட்டில் குரு வந்தால்
இடமாற்றம் உருவாகும்!
விட்டுக் கொடுப்பதனால்
வெற்றி வந்து சேர்ந்து விடும்!
பெட்டி பணம் அனைத்தும்
பெரிதும் செலவாகும்!
பற்றோடு குருவதனை
பணிந்தால் நலம் சேரும்!''


என்று ஜோதிட சாஸ்திரம் சொல் கிறது.

அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது எட்டில் சஞ்சரிக்கும் குரு, இடமாற்றங்களை வழங்கும். அப்படி வரும் மாற்றமும் நல்ல மாற்றமாகவே இருக்குமா என்பதை அறிந்து ஏற்றுக் கொள்வதுதான் நல்லது. ஏனென்றால் ஏழரைச் சனியின் ஆதிக்கமும் இருக்கிறது. அதேபோலத்தான் வீடுமாற்றம், வீடு ஒத்திக்கு வாங்குவது, விவசாய நிலங்களை விலை கொடுத்துப் பெறுவது போன்றவற்றில் பத்திரங்களைச் சரிபார்த்து வாங்குவதே நல்லது.

வீண் விரயங்களைத் தவிர்க்க வீட்டுப் பராமரிப்புச் செலவுகளை மேற்கொள்ளலாம். குடும்ப உறுப்பினர்களுக்கு ஆடை, ஆபரணங்கள் வாங்கிக் கொடுக்கலாம். ஒரு தொகை செல வழிந்த பின்னால்தான் அடுத்த தொகை வரும் வாய்ப்பு இக்காலத்தில் ஏற்படும்.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்!

இதுவரை உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் சஞ்சரித்து வந்த ராகு மே 16-ம் தேதி மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். அதேபோல 10-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த கேது 9-ம் இடத்தில் சஞ்சரிக்கப் போகிறார்.

3-ம் இடத்தில் சஞ்சரிக்கும் ராகு முக்கியத் திருப்பங்களை உங்களுக்குக் கொடுக்கும். இதுவரை சாதுவாக இருந்த நீங்கள் இனி சாமர்த்திய சாலியாக மாறுவீர்கள். சகோதர ஒற்றுமை பலப்படும். கூட்டுக் குடும்பத்தில் இருந்தவர்கள் பாகப்பிரிவினைகளைச் சுமூகமாக முடித்துக் கொள்வர்.

ஒன்பதாமிடத்தில் சஞ்சரிக்கும் கேதுவால் உறவினர் பகை அதிகரிக்கலாம். மற்றவர்களை விமர்சிப்பதைக் குறைத்துக் கொள்வது நல்லது. குடும்ப முன்னேற்றம் கருதி நீங்கள் எடுத்த முயற்சியில் மூன்றாம் நபரால் முட்டுக் கட்டைகள் வரலாம். எனவே இக்காலத்தில் பாம்புக் கிரகங்களுக்குரிய பரிகாரங்களை யோகபலம் பெற்ற நாளில் சர்ப்ப தோஷ நிவர்த்திக் கோவில்களில் செய்வது நல்லது.

சஞ்சலம் தீர்க்கும் சனிப்பெயர்ச்சி!

இதுவரை ஜென்ம ராசியில் சஞ்சரித்த சனிபகவான், 21.12.2011 அன்று இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். "இரண்டில் சனி வந்தால் திரண்ட செல்வம் வரும்'' என்று சொல் வார்கள். எனவே, எதைச் செய்ய நினைத்தீர்களோ அதைச் செய்து முடிப்பீர்கள். உங்கள் ராசிக்கு 5, 6-க்கு அதிபதியாக சனி விளங்குவதால் பிள்ளைகளால் பெருமை வந்து சேரும்.

பிரச்சினைகளோடு வாழ்ந்து வந்த நீங்கள் இனி அமைதி காண்பீர்கள். நிதிப்பற்றாக்குறை அகலும். நீங்கள் செய்யும் செயலுக்கு ஏற்ற தொகை வந்து கொண்டே இருக்கும். உத்யோகத்தில் இருப்பவர்களுக்கு உதிரி வருமானங்கள் கிடைக்கும். விருப்ப ஓய்வில் வந்தவர்களுக்கு திருநள்ளாறு மற்றும் பெருச்சிக் கோவில் போன்ற தலங்களுக்குச் சென்று சனிபகவானை வழிபடுவதோடு நாமக்கல் அனுமனையும் வழிபட்டு வந்தால் நல்ல சம்பவங்கள் இல்லத்தில் நடைபெறும்.

அக்கறை செலுத்த வேண்டிய வக்ர காலங்கள்!

ஆண்டின் தொடக்கத்திலேயே சனி வக்ரம் பெறுகிறார். 14.4.2011 முதல் 9.6.2011 வரை வக்ர இயக்கத்தில் இருக்கும்பொழுது உடல் ஆரோக்கியத்திற்கென்று ஒரு தொகையைச் செலவிடும் சூழ்நிலை உருவாகும். வாகனப் பழுதுச் செலவுகள் அதிகரிக்கும். குடும்பத் தில் விட்டுக் கொடுத்துச் செல்வதன் மூலமே விருப்பங்களை நிறைவேற்றிக் கொள்ள இயலும். மீண்டும் இரண்டு முறை சனி வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுதும் உங்கள் செயல்பாடுகளில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சந்நிதியில் சனி கவசம் பாடுங்கள், சந்தோஷங்கள் வந்து சேரும்.

31.8.2011 முதல் 15.12.2011 வரை குரு வக்ரம் பெறும்பொழுது கூடுதல் நன்மையை நீங்கள் காணலாம். வாகனம் வாங்கும் வாய்ப்புக் கிட்டும். வரவு செலவுகள் அதிகரிக்கும். உறவில் பகையானவர் மீண்டும் இணையாவர். தென்முகக் கடவுள் வழிபாடு நன்மை களையே வழங்கும்.

பலன்தரும் பரிகாரம்!

புதன்கிழமை தோறும் விஷ்ணுவையும், லட்சுமியையும் வழிபட்டு வாருங்கள். லட்சுமி கவசம் பாடுங்கள். தஞ்சை பெரிய கோவில் பிரகதீஸ்வரரையும், அம்பிகையையும் வழிபட்டு வருவதோடு அங்குள்ள தஞ்சபுரீஸ்வரர் மற்றும் தஞ்சைப் பெரிய கோவிலில் வராகியையும் யோகபலம் பெற்ற நாளில் வழிபட்டு வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளுங்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை

Post by சிவா on Sat Apr 16, 2011 5:19 pm
சித்திரை 3, 4 பாதங்கள், சுவாதி, விசாகம் 1, 2, 3 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: ர, ரி, ரு, ரே, த, தி, து, தே உள்ளவர்களுக்கும்)

ஏழரைச் சனியின் ஆதிக்கம், இரண்டாம் சுற்றெனில் ஆனந்தம்!

நம்பியவர்களுக்கு கைகொடுத்து உதவும் நல்ல உள்ளம் படைத்த துலாம் ராசி நேயர்களே!

உங்கள் ராசிநாதன் சுக்ரன் ஐந்தாமிடத்தில் சஞ்சரித்து ஆண்டு தொடங்குகிறது. இதுவரை விரயச்சனியின் பிடியில் சிக்கியிருந்த நீங்கள் இனி இழப்புகளை ஈடுசெய்யும் விதத்திலும், இனிய வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும் விதத்திலும் கர வருடம் பிறக்கிறது.

வருடப்பிறப்பன்று தொழில் ஸ்தானாதிபதி சந்திரன் லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து, ராசி நாதனைப் பார்ப்பதால், ஆண்டு முழுவதும் வேண்டிய நற்பலன்கள் உங்களுக்கு கிடைக்கப் போகிறது.

இருப்பினும், ஏழரைச்சனியின் ஆதிக்கம் நடப்பதால் எதையும் திட்டமிட்டுச் செய்ய இயலாது. நினைத்தது ஒன்றும், நடந்தது ஒன்றுமாகக் கூட சில சமயங்களில் மாறலாம். வருடத் தொடக்கத்திலேயே சனியும் வக்ரம் பெறுகிறார். உங்கள் ராசிக்கு 4, 5-க்கு அதிபதியான சனிபகவான் வக்ர நிலையை அடையும் பொழுது, மீண்டும் பழைய பிரச்சினைகள் தலை தூக்கலாம். அன்யோன்யமும், அனுசரிப்பும் குறையாமல் பார்த்துக் கொள்வது நல்லது.

பிள்ளைகள் வழியில் பிரச்சினைகளும், திடீர் விரயங்களும் ஏற்படாமல் இருக்க முன்கூட்டியே, யோசித்து எதையும் செய்வது நல்லது. கல்வி வளர்ச்சியில் தடை, கட்டிடப் பணியில் தொல்லை போன்றவற்றை சந்திக்காமல் இருக்க சனிபகவான் வழிபாட்டில் முழுக்கவனமும் செலுத்துவது நல்லது.

குரு உங்கள் ராசிக்கு பகைவனாக இருந்தாலும் கூட சகாய ஸ்தானத்திற்கும் அதிபதியாக அவர் விளங்கி வருகிறார். எனவே, அவர் பார்வை பதியும் நேரங்களில் ஓரளவு நற்பலன்களும் உங்களுக்கு வந்து சேரும்.

அடுத்து வரும் ராகு-கேது பெயர்ச்சியில் தான் நீங்கள் கொஞ்சம் கூடுதல் விழிப்புணர்ச்சி காட்ட வேண்டிய நேரமாகும். அந்த நேரத்தில் முறையான சர்ப்ப சாந்திகளைச் செய்து கொண்டால், முன்னேற்றத்தில் வரும் தடைகள் உங்களை விட்டு அகலும். அஷ்டமத்தில் கேது அல்லவா சஞ்சரிக்கிறார்?

ஆயுள் ஸ்தானம் என்றும், மாங்கல்ய ஸ்தானம் என்றும், இழப்புகள் ஸ்தானம் என்றும் வர்ணிக்கப்படும் எட்டாமிடத்தில் கேது சஞ்சரிக்கும்பொழுது, ஆன்மிகத்தில் அதிக ஈடுபாடு செலுத்தினால் தான் அன்றாட வாழ்க்கை நன்றாக அமையும். பொதுவாக, விநாயகப் பெருமான் வழிபாடு உங்கள் வேதனைகளை எல்லாம் தீர்க்கும்.

விரயச்சனி மாறிய பின்னால், ஜென்மச்சனியின் ஆதிக்கம், பிறகு குடும்பச் சனியின் ஆதிக்கம் நடைபெறும். குடும்பச்சனியின் ஆதிக்கம் நடை பெறும்பொழுது, வீட்டில் மங்கல ஓசை கேட்பதற்கான அறிகுறிகளும், மழலையின் ஓசை கேட்பதற்கான அறிகுறிகளும் தோன்றும்.

தளராத மனதிற்கு சொந்தக்காரர்!


"துயரங்களைப் பொடியாக்க துவளாத மனத்தோடு செயல்படுபவர்கள் துலாம் ராசிக்காரர்கள்'' என்று சொல்வார்கள். தோற்றத்தில் கவர்ச்சியைப் பெற்றும், பேச்சினில் இனிமையைச் சேர்த்தும் நீங்கள் செயல்படுவதால் தான் எதிரிகள் உங்களிடம் சரணடை கிறார்கள்.

புன்னகையைக் காட்டிலும் நீங்கள் பொன்நகைக்குத் தான் முக்கியத்துவம் கொடுப்பீர்கள். உங்கள் ராசி நாதன் சுக்ரன், "களத்திரகாரகன்'' என்று வர்ணிக்கப்படுகிறார். குடும்ப ஸ்தானம் மற்றும் களத்திர ஸ்தானத்திற்கு அதிபதியாக செவ்வாய் விளங்குகிறார். எனவே, நீங்கள் வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுக்கும் பொழுது, செவ்வாய் மற்றும் சுக்ரனின் ஆதிக்கம் உங்கள் ஜாதகத்திற்கு ஏற்ற விதத்தில் இருப்பவராக தேர்ந்தெடுத்தால் தான் இல்லறம் நல்லறமாக அமையும்.

சப்தம குருவால் ஏற்படும் சந்தோஷங்கள்!


கர வருடத் தொடக்கத்திலேயே 8.5.2011 அன்று குருப்பெயர்ச்சி நடைபெறப் போகின்றது. உங்கள் ராசிக்கு மூன்று, ஆறுக்கு அதிபதியான குரு பகவான் இதுவரை ஆறாமிடத் திலேயே சஞ்சரித்து வந்தார். சனி ஏழாமிடத்தில் சஞ்சரிக்கப் போகிறார்.

சபதம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு உங்கள் ராசியை நேர் பார்வையாக பார்க்கிறார். பகை கிரகமாக இருந்தாலும், பார்க்கும் பார்வையால் பலன் கொடுக்கும் கிரகம் குரு ஒன்றுதான். எனவே எதிர்காலத்தை இனிமையாக்க போட்ட திட்டங்கள் நிறைவேறும். தன்னம்பிக்கை கூடும். தக்கவிதத்தில் உங்கள் உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும்.

"ஏழில் குரு வந்தால்,
எதிர்காலம் சிறப்படையும்!
வாழ்வில் வசந்தம் வரும்
வருமானம் பெருகி விடும்!
சூழும் பகை விலகும்
சுற்றமெல்லாம் பாராட்டும்!
கோள்கள் குறுக்கிட்டால்,
குருபார்வை தவிர்த்து விடும்!''


என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது, ஏழில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை 1, 3, 11 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே உடல் நலம் சீராகும். உற்சாகத்தோடு பணி புரிவீர்கள்.

படிப்படியாக கடன்சுமை குறையும். பல நாட்களாக தொழிலில் எதிர்பார்த்த லாபம் வந்து சேரும். உதிரி வருமானங்கள் பெருகும். இதைச் செய்வோமா? அதைச் செய்வோமா? என்ற சிந்தனை மேலோங்கும். கூட்டுத் தொழிலுக்கு நண்பர்கள் கைகொடுத்து உதவுவ தாகச் சொல்வர். ஆனால், ஏழரைச் சனி ஆதிக்கம் நடைபெறுவதால், விரயத்தின் விளிம்பிற்கே செல்லக்கூடிய வாய்ப்பு உருவாகலாம். எனவே, யோசித்து புதுமுயற்சியில் ஈடுபடுவது நல்லது.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்!

இதுவரை உங்கள் ராசிக்கு மூன்றாமிடத்தில் ராகுவும், ஒன்பதாமிடத்தில் கேதுவும் சஞ்சரித்து வந்தார்கள். மே மாதம் 16-ம் தேதி ராகு-கேதுக்களின் மாற்றம் ஏற்படுகிறது. இரண்டில் ராகுவும், எட்டில் கேதுவும் சஞ்சரிக்கப் போகிறார்கள்.

தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு, தனவரவைப் பெருக்குவார். எனவே, வீட்டிற்குத் தேவையான அத்தியாவசியப் பொருட்கள் முதல் ஆடம்பரப் பொருட்கள் வரை வாங்கி மகிழப் போகிறீர்கள். குடும்பத்தினர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்ய வாய்ப்பு கிட்டும்.

அதேசமயத்தில் அஷ்டமத்தில் சஞ்சரிக்கும் கேது திடீர் திடீரென விரயங்களை உருவாக்குவார். சேமிப்பு ஒரு பக்கம் சேர்ந்து கொண்டே இருந்தாலும், மற்றொரு பக்கம் கரைந்து கொண்டே இருக்கும். தெய்வத்திருப்பணிகளுக்குச் செலவிடும் சூழ்நிலையும் உருவாகும். பாம்பு கிரகங்கள் பலன் கொடுக்கவும், தேம்பும் வாழ்க்கை மாறி தேசம் போற்றும் வாழ்வமையவும், யோக பலம் பெற்ற நாளில் சர்ப்ப சாந்திகளை முறைப்படி செய்வது நல்லது.

சஞ்சலம் தீர்க்கும் சனிப்பெயர்ச்சி!

இதுவரை விரய ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான், 21.12.2011 முதல் ஜென்ம ராசியில் சஞ்சரிக்கப் போகிறார். அங்கிருந்து இரண்டரை ஆண்டுகாலம் தனது ஆட்சியைத் தொடருவார். அதன்பிறகு இரண்டாமிடத்திற்கு வந்து, அங்கும் இரண்டரை ஆண்டு காலம் தங்கியிருப்பார். இந்த ஏழரைச்சனி தான் எண்ணற்ற மாற்றங்களை உருவாக்கும் ஜென்மச்சனி என்பதால், உடல் ஆரோக்கியத்தில் அதிக கவனம் செலுத்த வேண்டிய சூழ்நிலை உருவாகும்.

பணிகளில் தொய்வு ஏற்படும். பலரையும் அனுசரித்து செல்ல வேண்டிய சூழ்நிலை உருவாகும். கனிவாகப் பேசியவர்கள் உரத்த குரலில் பேசுகிறார்களே என்று கவலைப் படுவீர்கள். கடிதம் மூலம் வந்த தகவல் மன அமைதியைக் குறைப்பதாக இருக்கும். எனவே, சனிக்கிழமைதோறும் விரதமிருந்து எள்தீபமேற்றி சனிபகவானை வழிபடுவது நல்லது.

அக்கறை செலுத்த வேண்டிய வக்ர காலங்கள்!

ஆண்டின் தொடக்கத்திலேயே சனி வக்ரம் பெறுகிறார். அதன் பின்னால், மீண்டும் இரண்டு முறை வக்ரம் பெறுகிறார். இந்த வக்ர காலத்தில் வாழ்க்கைப் பாதையில் திசை மாற்றம் ஏற்படலாம். தாய்வழி ஒத்துழைப்பு குறையலாம். பங்காளிப்பகை அதிகரிக்கலாம். உத்யோகம், தொழிலில் இருப்பவர்களுக்கு ஊர்மாற்றம், இலாகா மாற்றம் உருவாகலாம். பிள்ளைகளின் திருமணம் சம்பந்தமாக எடுத்த முயற்சிகளில் தாமதம் ஏற்படலாம். பூர்வீக சொத்துக்களை யோசித்து விற்பது நல்லது.

31.8.2011 முதல் 15.12.2011 வரை குரு வக்ரம் பெறுகிறார். அக்காலத்தில் உங்களுக்கு ஆச்சரியப்படத்தக்க விதத்தில் பலன்கள் நடைபெறும். எக்காலத்திலும் இல்லாத அளவிற்கு நண்பர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். வரவு திருப்தி தரும். குரு ப்ரீத்தியும், சுக்ர ப்ரீத்தியும் செய்வது நல்லது.

பலன்தரும் பரிகாரம்!

வெள்ளிக்கிழமைதோறும் தெற்கு நோக்கிய அம்பிகையை வழிபட்டு வாருங்கள். யோக பலம் பெற்ற நாளில் காரைக்குடி அருகில் உள்ள மாத்தூருக்குச் சென்று அங்குள்ள ஐயநூற்றீஸ்வரர், பெரிய நாயகி அம்மன், மாப்பிள்ளை நந்தி, மகிழ மரத்தடி முனீஸ்வரரை வழிபட்டு வளர்ச்சி யைக்கூட்டிக் கொள்ளுங்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை

Post by சிவா on Sat Apr 16, 2011 5:21 pmவிசாகம் 4-ம் பாதம், அனுஷம், கேட்டை வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: தோ, ந, நி, நே, நோ, ய, யி, யு உள்ளவர்களுக்கும்)

வெற்றிச் செய்திகள் வீடு வரும்! வி.ஐ.பி.க்களின் உறவும் வரும்!

விரைவில் வி.ஐ.பி.க்களாக மாற வேண்டும் என்று நினைக்கும் விருச்சிக ராசி நேயர்களே!

புத்தாண்டு கர வருடம் உங்களுக்குப் பொருளாதார நிலையை உயர்த்தும் விதத்தில் பிறக்கிறது. உலா வரும் கிரக நிலைகளில் லாப ஸ்தானத்தில் சனி வீற்றிருக்க, அதை குரு பார்ப்பதால் வருடத் தொடக்கமே வசந்தமாக இருக்கும்.

வருட தொடக்க நாளில் ஒன்பதுக்கு அதிபதி சந்திரன் பத்தில் உலா வருவதால், தொட்ட காரியங்கள் எல்லாம் வெற்றியாகும். தொகை வந்து கொண்டே இருக்கும். தொழில் வளர்ச்சிக்கு உற்றார், உறவினர்களும், மற்றவர்களும், மாற்றினத்தவர்களும் போட்டி போட்டுக் கொண்டு உதவ முன்வருவர்.

இரண்டில் ராகுவும், எட்டில் கேதுவும் இருப்பதால் வசதி வாய்ப்புகளை பெருக்கிக் கொள்வதற்காகவே வருமானத்தை செலவிடுவீர்கள். வீடு கட்டும் முயற்சியிலும், வியக்கும் விதத்தில் தொழில் பங்குதாரர்களைச் சேர்த்து, புதிய முதலீடுகளைச் செய்வதிலும் ஆர்வம் காட்டுவீர்கள். குரு மங்கள யோகம் இருப்பதால் கல்யாண கனவுகளும் நனவாகும்.

தொழில் ஸ்தானத்தை சுக்ரன் பார்ப்பதால், கலைத்துறை, பத்திரிகைத் துறை, ஜோதிடத் துறை, ஆன்மிகம் மற்றும் மருத்துவ துறைகளில் ஈடுபட்டிருப்பவர்களுக்கு கர வருடம் கை நிறைய பொருள் கொடுக்கும் வருடமாக அமையப்போகிறது. செவ்வாய்க்குரிய தலங் களுக்குச் சென்று வழிபாடுகள் செய்வதன் மூலமும், ராகு-கேது பெயர்ச்சி காலத்தில் சர்ப்ப சாந்தி செய்வதன் மூலமும் வளர்ச்சியை மேலும் கூட்டிக் கொள்ளலாம்.

இந்த கர வருடத்தில் மார்கழி மாதம் ஏழரைச்சனி தொடங்கப்போகிறது. உங்கள் ராசிப்படி சகாய ஸ்தானம், சுக ஸ்தானம் ஆகியவற்றிற்கு அதிபதியாக சனி விளங்குவதால் அந்த ஏழரை ஆண்டுகளும், சுகங்களும், சந்தோஷங்களும் உங்களுக்கு தொடர்ந்து வந்து கொண்டே இருக்கும்.

எந்த நாள் ஆனபோதும் அதை இனிய நாளாக மாற்றுகிற ஆற்றல் சனிபகவானுக்கு உண்டு. அந்த சனீஸ்வர பகவானை தொடர்ந்து வழிபாடு செய்யுங்கள். சந்தோஷத்தை நாளும் சந்திக்கலாம்.

அதுமட்டுமல்லாமல், சனியின் ஆதிக்கம் நடைபெறும் பொழுது, விநாயகப் பெருமானையும், அனுமனையும் விடாது வழிபட்டு வருவது நல்லது. அந்த அடிப்படையில் சிவகங்கை மாவட்டம் பிள்ளையார் பட்டிக்கு வந்து, அங்கு வடக்கு நோக்கி வீற்றிருந்து அருள் வழங்கும் கற்பக விநாயகரை வழிபட்டு வாருங்கள். அதோடு, தென்திருப்பதி என்று வர்ணிக்கப்படும் காரைக்குடி அருகில் உள்ள அரியக் குடி விஷ்ணுவையும், லட்சுமியையும் வழிபட்டு வந்தால் உங்கள் விருப்பங்கள் அனைத்தும் நிறைவேறும். நல்ல திருப்பங்களும் உருவாகும்.
வெற்றியே குறிக்கோளாகக் கொண்டு செயல்படுபவர்கள்!

செவ்வாயின் ஆதிக்கத்தில் பிறந்த நீங்கள் தீர விசாரித்தே எதிலும் முடிவெடுப்பீர்கள். திடீர் திடீரென திட்டங்களை மாற்றுவீர்கள். வெற்றி ஒன்றுதான் உங்கள் குறிக்கோள் என்பதை வேகத்தில் காட்டுவீர்கள். யாரிடம் எதைச் சொன்னால், காரியம் நடை பெறும் என்ற ரகசியம் உங்களுக்குத் தெரியும்.

செவ்வாயின் பலத்தைப் பொறுத்தும், சுக்ரன் மற்றும் புதனின் பலத்தைப் பொறுத்தும் நீங்கள் செயல்பட்டால், உங்கள் சிந்தனைகள் அனைத்தும் வெற்றி பெறும். வாழ்க்கைத் துணை அமைவது முதல் வருங்காலத்தை நலமாக்கிக் கொள்ள, கூட்டாளிகளைச் சேர்த்துக் கொள்வது வரை சுக்ரன் மற்றும் புதன் கிரகத்தின் அடிப்படையில் தான் இருக்கிறது.

வியக்கும் வாழ்வுதரும் வியாழனின் பெயர்ச்சி!


கர வருடத் தொடக்கத்திலேயே 8.5.2011 அன்று குருப்பெயர்ச்சி நடைபெறப்போகிறது. உங்கள் ராசிக்கு 2, 5-க்கு அதிபதியான குருபகவான் ஆறாமிடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். அங்கிருந்தபடியே அதன்பார்வை, 2, 10, 12 ஆகிய இடங்களில் பதிவாகிறது. பார்வை பலம் உங்களுக்கு பக்கபலமாக இருக்கும்.

எனவே, குடும்பத்தில் குதூகலம் தரும் சம்பவங்கள் ஏராளமாக நடைபெறும். நாடு மாற்றச் சிந்தனைகளும், நல்ல காரியங்களும் நடைபெற எடுத்த முயற்சி வெற்றி பெறவும், குரு வழிபாட்டை முறையாக மேற்கொள்வது நல்லது.

"தேவகுரு ஆறில் வந்தால்,
தேவைகள் பூர்த்தியாகும்!
ஆவல்கள் தீரவேண்டின்
அனுசரிப்பும் தேவையாகும்!
கோபத்தை விலக்கினால்தான்
குடும்பத்தில் அமைதி கூடும்!
தீபத்தில் குருவைக் கண்டு,
தரிசித்தால் நன்மை சேரும்!''


என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அடிப்படையில் பார்க்கும்பொழுது, ஜீவ ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் குரு, தொழில் மற்றும் உத்யோகத்தில் எதிர்பார்த்தபடி உயர்வைக் கொடுப்பார். இடமாற்றம், ஊர்மாற்றங் கள் இனிமை தரும். ஆரோக்கியம் சீராகி ஆனந்தப்படுத்தும். பொதுவாக, ஆற்றல் பளிச்சிடும் இந்த நேரத்தில் பயணங்கள் அதிகரிக்கும். புதிய கூட்டாளிகள் வந்திணைவர். விலகிச் சென்ற சொந்தங்கள் விரும்பி வந்து சேரும். பொதுவாழ்வில், ஈடுபட்டிருப்பவர் களுக்கு புதிய பொறுப்புகளும், பதவிகளும் வந்து சேரும். திசைமாறிய தென்முகக்கடவுள் வழிபாடு செல்வ நிலையை உயர்த்தும்.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்!

இதுவரை உங்கள் ராசிக்கு இரண்டாமிடத்தில் சஞ்சரித்து வந்த ராகு இனி ஜென்ம ராசியிலும், எட்டாமிடத்தில் சஞ்சரித்து வந்த கேது இனி ஏழாமிடத்திலும் சஞ்சரிக்கப் போகிறார்கள். அந்த நிகழ்வு மே 16-ம் தேதி நடைபெற இருக்கிறது.

ஜென்மத்தில் சஞ்சரிக்கும் ராகு, விருச்சிக ராசி என்பதால் அள்ளிக் கொடுக்கும் நற்பலன்கள் அதிகமாகவே இருக்கும். குறிப்பாக, இடம், பூமியால் ஆதாயம், எடுத்த செயல்களில் வெற்றி, வழக்குகளில் நல்ல திசைதிருப்பம் அனைத்தும் ஏற்படும். பூர்வீக சொத்துக்களால் வரும் லாபத்தைக் கொண்டு, பொன்னான வாழ்க்கையை அமைத்துக் கொள்ளுங்கள்.

சப்தம ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் கேது சகல பாக்கியங்களையும் உங்களுக்கு வழங்கவும், மனநிம்மதியை கொடுக்கவும், திசைமாறிய விநாயகப் பெருமானை வழிபட்டு வருவது நல்லது. பயணங்களால் பலன் கிடைக்கும். மாமன், மைத்துனர் வழியில் மங்கலச் செய்தி கள் வந்து சேரும். பொதுவாழ்வில் புகழ் கூடும். புண்ணிய காரியங்களுக்கும் அள்ளிக் கொடுத்துப் போற்றும்படியான வாழ்க்கையை அமைத்துக் கொள்வீர்கள்.

சந்தோஷம் தரும் சனிப்பெயர்ச்சி!


இதுவரை லாப ஸ்தானத்தில் சஞ்சரித்து வந்த சனிபகவான் லாபத்தை அள்ளி வழங்கியிருப்பார். வங்கிச் சேமிப்பும் உயர்ந்திருக்கும். வாங்கிய பொருளும் குவிந்திருக்கும்.

21.12.2011 அன்று ஏழரைச்சனியாக உலாவரப் போகிறார். வரும் சனியையும் வரவேற்றுக் கொண்டாடி, தரும் சுகங்கள் அனைத்தையும் தாராளமாகத் தரச் சொல்லி, பெயர்ச்சியா வதற்கு முன்னதாகவே வழிபாடு செய்யுங்கள்.

திருநள்ளாறு, குச்சானூர், பெரிச்சிக் கோவில் போன்ற ஆலயங்களில் வீற்றிருந்து அருள் வழங்கும் சனிக்கு எள்தீபமேற்றி, நீலவண்ண ஆடை அணிவித்து, எள்ளோதரை நைவேத்தியமிட்டு வழிபாடு செய்தால், வல்லவர் களின் ஒத்துழைப்போடு வருங்காலத்தை நலமாக்கிக் கொள்ள வாய்ப்புகள் வீடுதேடி வரும். இந்த சனிப்பெயர்ச்சியால் சுபச்செலவுகள் அதிகரிக்கும்.

அக்கறை செலுத்த வேண்டிய வக்ர காலங்கள்!

ஆண்டின் தொடக்கத்தில் சனி வக்ரம் பெறுகிறார். அதன்பிறகும், தை மற்றும் பங்குனி மாதத்திலும் வக்ரம் பெறுகிறார். சனி வக்ர இயக்கத்தில் இருக்கும் பொழுது, சஞ்சலங்களும், சந்தேகங்களும் ஆட்கொள்ளும். தன்னம்பிக்கையையும், தைரியத்தையும் விடாது செயல்படுத்துவது நல்லது. இடமாற்றங்கள், இலாகா மாற்றங்கள் ஒருசிலருக்கு ஏற்படும். கட்டிடப் பணியிலும், கல்விப் பணியிலும் பொருளைச் செலவிட்டு, சுபவிரய மாக்குவது நல்லது.

31.8.2011 முதல் 15.12.2011 வரை குரு வக்ரம் பெறும் பொழுது, கூட்டாளிகளிடம் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும். வாகன மாற்றச் சிந்தனைகள் மேலோங்கும். பிள்ளைகளிடம் அன்பு காட்டி அரவணைத்து அவர்கள் மனமறிந்தும், குணமறிந்தும் செயல்பட்டால், பிரச்சினைகளில் இருந்து விடுபட இயலும். திசைமாறிய தென்முகக் கடவுளை சிவகங்கை மாவட்டத்தில் உள்ள பட்டமங்கலத்திற்குச் சென்று வழிபட்டு வந்தால், எதிர்பார்ப்புகள் நிறைவேறும்.

பலன்தரும் பரிகாரம்!


செவ்வாய்க்கிழமை தோறும் முருகப்பெருமானை வழிபட்டு வாருங்கள். பவுர்ணமி தோறும் கிரிவலம் வாருங்கள். சிவகங்கை மாவட்டம் வைரவன்பட்டிக்கு யோகபலம் பெற்ற நாளில் சென்று, அங்குள்ள வைரவர் வளரொளிநாதர், வடிவுடை அம்மனை வழிபட்டு வருங்காலம் செல்வம் வரும் காலமாக மாற்றிக் கொள்ளுங்கள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை

Post by சிவா on Sat Apr 16, 2011 5:24 pmமூலம், பூராடம், உத்ராடம், 1-ம் பாதம் வரை (பெயரின் முதல் எழுத்துக்கள்:

யே, யோ, ப, பி, பு, பூ, பா, ன, டே உள்ளவர்களுக்கும்)

ராகு மாற்றம், குரு மாற்றம் நன்மையறிந்து வளம் சேர்க்கும்!

சராசரி மனிதனாகப் பிறந்து சாதனையாளராகத் திகழும் தனுசு ராசி நேயர்களே!

உங்களுக்கு திடீர் திருப்பங்கள் பலவும் உருவாகும் விதத்தில் கர ஆண்டு வரப்போகிறது. ஜென்ம ராகு விலகினால் முட்டுக்கட்டைகள் அகலும், முன்னேற்றங்கள் கூடும். தொழிலில் கட்டு கட்டாக பணம் புரளும். கைகட்டி வேலை பார்ப்பவர்களின் எண்ணிக்கையும் அதிகரிக்கும்.

ஆண்டின் தொடக்கத்தில் உங்கள் ராசிநாதன் குரு சொந்த வீட்டில் சஞ்சரிக்கிறார். செவ்வாயோடு இணைந்து, குரு மங்கள யோகத்தை உண்டாக்குகிறார். பத்தில் உள்ள சனி பார்போற்றும் விதத்தில் உங்களுக்கு வாழ்க்கையை அமைத்துக் கொடுக்கும்.

இந்த புத்தாண்டில் வந்த வாய்ப்புகளை எல்லாம் நீங்கள் உபயோகப் படுத்திக் கொள்ளும் விதத்தில் சந்திர பலமும் கூடுகிறது. எனவே சந்தோஷமான தகவல்கள் ஏராளமாக வரும் ஆண்டாக இந்த ஆண்டு அமையப்போகிறது. முதலில் வரும் குருப் பெயர்ச்சி உங்கள் முன்னேற்றத்திற்கு முழுமையாக வித்திடும்.

அதன் பார்வை பலம் உங்களுக்கு பக்கபலமாக இருந்து, நீங்கள் பகல்-இரவாக பாடு பட்டதற்கேற்ற பலனை வரவழைத்துக் கொடுக்கும். குருபார்வை இருந்தால் போதும், கோடி கோடியாய் நன்மை சேரும் என்று பெரியோர்கள் சொல்லி வைத்திருக்கிறார்கள். அந்த குருவின் அருட்பார்வை ஒன்பதாம் பார்வையாக உங்கள் ராசியில் பதி கிறது.

பொன், பொருள்களை அள்ளி வழங்குவதும், பூமி யோகத்தைக் கொடுப்பதும், தெம்போடு ஆரோக்கியத்தைச் சேர்ப்பதும், தினந்தோறும் தீபாவளியாக மாற்றுவதும் குருவின் கையில் தான் இருக்கிறது. அதற்கு அடுத்து வரும் ராகு-கேது பெயர்ச்சி மேலும் நற்பலன்களை உங்களுக்கு அள்ளி வழங்கும்.

ஜென்ம ராகு விலகினால் சிக்கல்கள் தீரும். சிறு பகை மாறும். சப்தம கேது மாறும் பொழுது வாழ்க்கைத் துணை வழியே வந்த பிரச்சினைகள் தீரும். விலகியவர்கள் விரும்பி வந்து சேர்வர். விரயங்கள் குறையும். அந்நிய தேச பயணம் முதல் அரியணை ஏறும் யோகம் வரை எண்ணியபடியே நடைபெறுவது கண்டு ஆச்சரியப்படுவீர்கள்.

அடுத்து வரும் சனிப்பெயர்ச்சி லாப ஸ்தானத்தை பலப்படுத்துகிறது. எனவே, பொருளாதார வளர்ச்சி மேலோங்கும். புதிய வாய்ப்புகள் வந்து கொண்டே இருக்கும். உத்யோகத்தில் உயர் பதவிகள் கிடைப்பதற்கான அறிகுறிகள் தோன்றும். உதிரி வருமானங்கள் பெருகும்.

எதிர்காலத்தைப் பற்றியே எப்பொழுதும் சிந்திப்பவர்கள்!


உறவு பகையாவதும், பகை உறவாவதும் உங்களுக்கு வாடிக்கையானதாகும். நேற்று பகைவராக இருந்தவர் இன்று நண்பராக மாறுவார். நேற்று நண்பராக இருந்தவர் இன்று பகைவராக மாறுவார். உங்களிடம் நம்பி ஒப்படைத்த பொறுப்புகளை நிறைவேற்றி விடுவீர்கள்.

தனுசுக்கு தாரமும், தனயனும் வாய்ப்பது அரிது என்பார்கள். எனவே மூலம், பூராடம், உத்ராடம் ஆகிய நட்சத்திரங்களில் பிறந்தவர்கள் களத்திரதோஷ நிவர்த்தி பரிகாரத்தை அதற்குரிய தலங்களில் செய்தால், திருமண வாழ்க்கை தித்திப்பாக அமையும். ராசிநாதன் குரு என்பதால், உங்கள் போதனைகளை மற்றவர்கள் கேட்டுக் கொள்வார்கள். போதனை யாளராக விளங்கும் நீங்கள் சாதனையாளராக விளங்க குரு வழிபாடுதான் உங்களுக்கு அவசியம் தேவை.

குருபார்க்க கோடி நன்மை!

கர வருடத் தொடக்கத்திலேயே 8.5.2011 அன்று குருப்பெயர்ச்சி நடைபெறப்போகின்றது. இந்த குருப் பெயர்ச்சி உங்களுக்கு முக்கியத்துவம் வாய்ந்த குருப்பெயர்ச்சியாகும். இதுவரை உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் சஞ்சரித்து வந்த குருபகவான், இனி ஐந்தாமிடத்தில் சஞ்சரித்து மிஞ்சும் பலன்களை தரப்போகிறார்.

எனவே, தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொலைதூரத்தில் இருந்து நல்ல தகவல்கள் வந்து சேரும். கட்டளையிட்டதற்கு அடி பணிய ஆட்கள் காத்திருப்பர்.

ஐந்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை உங்கள் ராசியிலும், ஒன்பது, பதினொன்று ஆகிய இடங்களிலும் (1, 9, 11) பதிவாகிறது. பார்க்கும் இடமெல்லாம் பலன் தரும் என்பதால், உங்கள் நோக்கங்கள் எல்லாம் நிறைவேறும். தாக்கங்கள் எல்லாம் அகலும். பூக்களில் முல்லைப்பூ மாலை சூட்டி, பொன்னான குருவை வழிபட்டால், தேக்கநிலை மாறி தேனான வாழ்க்கை அமையும்.

"ஐந்தினில் குருதான் வந்தால்,
அனைத்திலும் வெற்றி கிட்டும்!
பைதனில் பணமும் சேரும்
பாராளும் யோகம் வாய்க்கும்!
வையகம் போற்றும் வண்ணம்
வாழ்க்கையும் அமையும் உண்மை!
செய்தொழில் வளர்ச்சியாகும்
செல்வாக்கும் அதிகரிக்கும்!''


என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அடிப்படையில், பார்த்தால் ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்கும் குரு அனைத்து வகை களிலும் வெற்றியைக் கொடுக்கப்போகிறார். அது மட்டுமல்ல, அடிப்படை வசதிகளையும் பெருக்கிக் கொள்ள வாய்ப்புகள் வந்து சேரும்.

கடந்த காலத்தைப் பற்றி இனி கவலைப்பட வேண்டாம். நிகழ்காலத் தேவைகள் அனைத் தும் பூர்த்தியாகும். எதிர்காலத்திற்காக தீட்டிய திட்டங்களும் வெற்றிபெறும். உல்லாச பயணங்கள் உள்ளத்திற்கு அமைதியைக் கொடுக்கும். நீடித்த நோயிலிருந்து நிவாரணம் பெறுவீர்கள்.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்!

பாம்பு கிரகம் என்றும், பின்நோக்கி நகரும் கிரகம் என்றும் வர்ணிக்கப் படும் ராகுவும், கேதுவும் மே மாதம் 16-ம் தேதி பெயர்ச்சியாகிறது. ராகு, விருச்சிகத்திலும், கேது ரிஷபத்திலும் சஞ்சரிக்கப் போகிறார்கள். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு பயணங் களால் பலன் கிடைக்க வைக்கும். தூரதேசத்தில் இருந்து வரும் அழைப்புகள் உங்கள் தொழிலுக்கு உறுதுணையாக இருக்கும். கணவன்-மனைவி உறவில் அன்யோன்யம் அதிகரிக்கும். குழந்தை உற்பத்தி முதல் குடும்பத்தில் ஒவ்வொரு சுபகாரியமாக நடை பெற்றுக் கொண்டே வரும்.

ஆறாமிடத்தில் சஞ்சரிக்கும் கேது, அதிகாரிகளால் உங்களுக்கு ஏற்பட்ட பூசல்களைப் போக்கும். உத்யோக மாற்றத்தை உறுதி செய்து கொடுக்கும். ஊதிய உயர்வும் கைகூடி வரும். பாதியில் நின்ற பணிகள் படிப்படியாக நடைபெறுவது கண்டு ஆச்சரியப்படுவீர்கள். கொடுத்த கடன்களும் வசூலாகும். நீங்கள் கொடுக்க வேண்டிய கடன்களையும் கொடுத்து முடிப்பீர்கள். இக்காலத்தில் யோகபலம் பெற்ற நாளில் சர்ப்ப சாந்திகளை முறைப்படிச் செய்து கொண்டால், முன்னேற்றங்கள் படிப்படியாக வந்து சேரும்.

லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் சனி!

இதுவரை சனி பத்தாமிடத்தில் சஞ்சரித்து வந்தார். இனி பதினோராமிடத்தில் சஞ்சரிக்கப் போகிறார். தனாதி பதியாகவும், சகாய ஸ்தானாதிபதியாகவும் விளங்கும் சனி, 21.12.2011 முதல் லாப ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, வரவை அதிகரித்துக் கொடுப்பார். வாழ்க்கைத் தேவைகளை எல்லாம் பூர்த்தி செய்து கொள்வீர்கள். குடும்ப முன்னேற்றம் கருதி எடுத்த முயற்சி வெற்றி தரும்.

தொழில் தொடங்கும் திட்டங்களில் இதுவரை ஏற்பட்ட தாமதங்கள் இனி அகலும். பிறரை நம்பி ஒப்படைத்த பெரிய பொறுப்புகள் நிறைவேறி மகிழ்ச்சியை வழங்கும். கட்டிடப் பணியைத் தொடர்வீர்கள். தாய்வழி உறவினர்களால் நன்மை ஏற்படும். தங்கம், வெள்ளி வாங்குவதற்கான வாய்ப்புகளும் கைகூடி வரும்.

அக்கறை செலுத்த வேண்டிய வக்ர காலங்கள்!

ஆண்டின் தொடக்கத்திலும், அதன் பின்னர் மீண்டும் இரண்டு முறை சனி வக்ரம் பெறுகிறார். இந்த நேரத்தில் தான் நீங்கள் கொஞ்சம் விழிப்புணர்ச்சியோடு செயல்பட வேண்டும். தனாதிபதி வக்ரம் பெறும் பொழுது, தன வரவில் தடைகள் ஏற்படும். தக்க விதத்தில் கைகொடுத்து உதவுவதாகச் சொன்னவர்கள், கடைசி நேரத்தில் கையை விரிக்கலாம். உடன்பிறப்புகளோடு அனுசரித்துச் செல்வது நல்லது. சனி வழிபாடு சஞ்சலம் தீர்க்கும்.

31.8.2011 முதல் 15.12.2011 வரை குருவின் வக்ர காலம். இக்காலத்தில் ஆரோக்கியத்திற்காக ஒரு தொகையைச் செலவழிக்க வேண்டிய சூழ்நிலை உருவாகும். அடுத்தவர் நலன்கருதி எடுத்த முயற்சிகளிலும் ஆதாயம் கிடைக்குமா? என்பது சந்தேகம் தான். வாகனங்களில் செல்லும் பொழுது கவனம் தேவை. குருப்ரீத்தி செய்வதன் மூலம் குதூகலத்தை வரவழைத்துக் கொள்ளலாம்.

பலன்தரும் பரிகாரம்!

வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து குரு தெட்சிணாமூர்த்தியை வழிபட்டு வருவது நல்லது. தஞ்சை மாவட்டம் பூந்தோட்டம் அருகில் உள்ள திலதர்ப்பண புரிக்குச் சென்று, அங்குள்ள ராமபிரானையும், அருகில் உள்ள ஆதி விநாயகரையும் வழிபட்டு வந்தால், பாதியில் நின்ற பணிகள் மீதியும் தொடரும். பணவரவும் திருப்தி தரும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை

Post by balakarthik on Sat Apr 16, 2011 5:36 pm

என்னோட ராசி நல்ல ராசி அது எப்போதும் பெரியவங்க ஆசி நன்றி தல


ஈகரை தமிழ் களஞ்சியம் கார்த்திக் பாலசுப்ரமணியம்

avatar
balakarthik
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 23847
மதிப்பீடுகள் : 2189

View user profile http://www.eegarai.net

Back to top Go down

Re: ”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை

Post by சிவா on Sat Apr 16, 2011 5:42 pmஉத்ராடம் 2, 3, 4 பாதங்கள், திருவோணம், அவிட்டம் 1, 2 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: போ, ஜ, ஜி, ஜீ, ஜே, ஜோ, க, கா, கி உள்ளவர்களுக்கும்)

தொழிலில் வளர்ச்சி கூடிவரும்! தொல்லைகள் அனைத்தும் ஓடிவிடும்!

வேகத்தைக் காட்டிலும், விவேகம் அதிகம் கொண்ட மகர ராசி நேயர்களே!

சுக்ர பலத்தோடும், குருமங்கள யோகத்தோடும் பிறக்கும் இந்த புத்தாண்டில், உங்களுக்கு பொருளாதார நிலை திருப்திகரமாக அமையும். புகழ் மேலோங்கும்.

ஆண்டின் தொடக்கத்தில் அஷ்டமத்தில் சந்திரன் சஞ்சரிக்கிறாரே என்று கவலைப்பட வேண்டாம். அதுமட்டுமல்லாமல், தொடக்கத்திலேயே ராசிநாதன் சனி வக்ரம் பெற்று செவ் வாயால் பார்க்கப்படுகிறார். மனிதர்கள் பலம் இழக்கும் பொழுது, மருந்துகளையும், மாத்திரைகளையும் சாப்பிட்டு உடலை தேற்றிக் கொள்வது போல, கிரகங்கள் பலம் இழக் கும் பொழுது, அதற்கு அபிஷேக, ஆராதனைகள் நடத்தி, அர்ச்சனைகள் செய்து வழி பட்டால் நிச்சயம் நற்பலன்களை வழங்கும் என்பது முன்னோர்களின் நம்பிக்கை.

ஆண்டின் தொடக்கத்தில் நவக்கிரகங்களில் மூன்று கிரகங்கள் உங்களுக்கு நற்பலன் களைத் தரும் விதத்திலும், மற்ற ஆறு கிரகங்கள் வழிபட்டால் வளர்ச்சியைக் கொடுக்கும் விதத்திலும் உலா வருவதால், ஆண்டின் தொடக்க நாளிலேயே விநாயகப் பெருமானையும் வழிபட்டு, நவக்கிரகத்தையும் வழிபட்டு வாருங்கள்.

சந்திராஷ்டமத்தோடு ஆண்டு பிறப்பதால், வரவைக் காட்டிலும் செலவுகள் கொஞ்சம் கூடலாம். எனவே, ஆதாயம் வரும்பொழுதெல்லாம் அதை பொருட்களாக மாற்றி வைத்துக் கொள்ளுங்கள். தேகநலனுக்காக செலவிடும் சூழ்நிலையை வக்ரச்சனி கொடுக்கலாம்.

குருப்பெயர்ச்சிக்கு பிறகு தொழில் வளம் சிறப்பாக இருக்கும். மூடிக் கிடந்த தொழிலுக்கு திறப்பு விழா காண்பீர்கள். முன்னோர்களின் சொத்துக்களால் ஒருசிலருக்கு முறையான வருமானம் கிடைக்கும். விரய ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு விலகிய பின்னர் சேமிப்புகள் அதிகரிக்கும். திடீர் திடீரென வரவுகள் வந்து சேரும்.

விருச்சிக ராகு சஞ்சரிக்கும் நேரம், ரிஷபத்தில் சஞ்சரிக்கப் போகும் கேதுவின் ஆதிக்கத் தில் பிள்ளைகளால் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். கேது ப்ரீத்தியை முறையாகச் செய்தால் வாதிட்டவர்கள் கூட வந்து நின்று சரணடைவர்.

சனியின் வக்ர இயக்கம் மாறினால் உடல்நலம் சீராகும். அதுவரை மருத்துவச் செலவுகள் கூடுவதைத் தவிர்க்க இயலாது. அந்த ராசிநாதன் சனி, தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக் கும் போது தொழில் வளம் மேலோங்கும்.

உதவிக்கரம் நீட்ட ஓடோடி வருபவர்கள்


பதவிக்கு ஆசைப்படாமல் உதவிக்கு ஆசைப்படுபவர்கள் நீங்கள். பக்கபலமாக இருப்பவர் களை பகைத்துக் கொள்ள மாட்டீர்கள். இருந்தாலும், பக்கத்து வீட்டார்களுடன் பகை திடீர் திடீரென வந்து கொண்டே இருக்கும்.

உங்கள் ராசிநாதனாக சனி அமைகிறார். அவரை மந்தன் என்று அழைப்பது வழக்கம். எனவே, நீங்கள் மந்தகதியில் எந்தக் காரியத்தைத் தொடங்கினாலும் மகத்தாக முடித்துக் காட்டுவீர்கள்.

அர்த்தாஷ்டமக் குருவின் சஞ்சாரம்


கர வருடத் தொடக்கத்திலேயே 8.5.2011 அன்று குரு பகவான் உங்கள் ராசிக்கு நான்காமிடத்தில் அர்த்தாஷ்டம குருவாக சஞ்சரிக்கப் போகிறார். அது ஆரோக்கியத்தில் அச்சுறுத்தல்களையும், வாகனத்தால் தொல்லைகளையும் வழங்குமிடம் தான் என்றாலும், அதன் பார்வை பதியும் இடங்களான 8, 10, 12 ஆகிய இடங்கள் புனிதமடைகின்றன அல்லவா?

எனவே, குருவின் பார்வை பதியும் இடங்களுக்குரிய ஆதிபத்யங்கள் நற்பலன்களைப் பெறப்போகின்றன. வழக்குகளில் வெற்றி கிடைக்கும். வருமானம் அனைத்தும் செலவாகி விட்டதே! சேமிப்பு அனைத்தும் கரைந்து விட்டதே! என்று கவலைப்பட்டவர்கள் இனி மகிழ்ச்சியடையும் விதத்தில் இழப்புகளை ஈடுசெய்ய வாய்ப்புகள் உருவாகும்.

தொழில் வளர்ச்சி கூடும். தொழில் நடைபெறப் போதிய மூலதனம் தர யாரும் முன் வரவில்லையே என்று ஏங்கியவர்கள் அரசு வழி அனுகூலம் பெறுவர். கேட்ட இடத்தில் உதவிகள் கிடைக்கும். போட்டியின்றி தொழில்கள் நடைபெறும்.

"நான்கினில் குருதான் வந்தால்
நடந்திடும் தொழில்கள் மாறும்!
வீண்பழி சிலருக்குச் சேரும்
வியாதிகள் அகன்று ஓடும்!
தூணெனத் தோள் கொடுத்தோர்
தொடர்பிலே மாற்றம் காண்பர்!
வானவருக்கு அரசை நீங்கள்
வழிபட்டால் வளர்ச்சி கூடும்!''


என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அடிப்படையில் பார்க்கும்போது, அர்த்தாஷ்டம சனிக்கு என்ன பலன் ஏற்படுமோ அதைப் போலவே தான் அர்த்தாஷ்டம குருவிற்கும் பலன்கள் ஏற்படும்.

தொழிலில் விழிப்புணர்ச்சி தேவை. வீண்பழி ஏற்படாமல் இருக்க பிறரை விமர்சிக்காமல் இருப்பது நல்லது. ஆரோக்கிய குறைபாடு அகலும். நண்பர்களில் சிலர் உங்களை விட்டுப் பிரியலாம். புதியவர்கள் வந்திணைவர். மன அமைதி கிடைக்கவும், மகிழ்ச்சியான வாழ்வு அமையவும் தென்முகக் கடவுளை திருப்தியாக வழிபாடு செய்வது நல்லது. மஞ்சள் வண்ண வஸ்திரம் அணிவித்து, முல்லைப்பூ சூட்டி, சுண்டல் நைவேத்தியம் இட்டு, குருவை கொண்டாடினால் அதன் அருட்பார்வையால் அனைத்துக் காரியங்களும் துரிதமாக நடைபெறும்.

ராகு, கேது பெயர்ச்சிக் காலம்!

இதுவரை உங்கள் ராசிக்கு 12-ம் இடத்தில் சஞ்சரித்து வந்த ராகு இனி லாப ஸ்தானத்திலும், இதுவரை ஆறாமிடத்தில் சஞ்சரித்து வந்த கேது, இனி 5-ம் இடத்திலும் சஞ்சரிக்கப் போகிறார்கள். இந்த நிகழ்வு மே மாதம் 16-ம் தேதி நிகழவிருக்கிறது.

ராகுவைப் போல கொடுப்பானும் இல்லை என்பது பழமொழி. அப்படி கொடுக்கும் ராகு, லாப ஸ்தானத்தில் சஞ்சரிப்பதால் இனி கிள்ளிக் கொடுக்காமல் அள்ளிக் கொடுப்பார். தொழில் வளம் சிறப்பாக இருக்கும். தொகை வந்து கொண்டே இருக்கும். எப்படி தொழிலை விரிவு படுத்துவது என்று நினைத்திருந்த உங்களுக்கு நண்பர்களின் ஆதரவு கிடைக்கும். மூத்த சகோதரத்தால் ஏற்பட்ட முட்டுக்கட்டைகள் அகலும்.

ஐந்தாமிடத்தில் சஞ்சரிக்கப் போகும் கேதுவின் பலத்தால் பூர்வீக சொத்து தகராறுகள் அகலும். மண், பூமி வாங்க போட்ட திட்டங்கள் நிறைவேறும். மங்கல நிகழ்ச்சிகள் நடை பெறுவதற்கான அறிகுறிகள் தோன்றும். ஆலய திருப்பணி செய்ய முன்வருவீர்கள்.

ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பு கிடைக்கும். ராகு-கேதுக் களால் நற்பலன் பெற நாக வழிபாடும், சர்ப்ப சாந்தியும், தேர்ந்தெடுக்கப்பட்ட திருக்கோவில்களில் செய்வது நல்லது.

சந்தோஷம் தரும் சனிப்பெயர்ச்சி!


இதுவரை ஒன்பதாமிடத்தில் சஞ்சரித்து வந்த சனி பகவான் 21.12.2011 அன்று பத்தாமிடமான தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கப் போகிறார். ராசி நாதன் பத்தில் சஞ்சரிக் கும் பொழுது, தொட்ட காரியங்களில் வெற்றி கிடைக்கும். தொழில் வளர்ச்சி மேலோங்கும். நட்பு வட்டாரத்தில் நம்பிக்கைக்குரியவர்கள் உங்களுக்கு கைகொடுத்து உதவுவர்.

உடல் சோர்வும், மனச் சோர்வும் அகலும். எதிர்பார்த்திருப்பவர்களுக்கு ஊதிய உயர்வும், உத்யோக உயர்வும் அது வந்து சேரும். வி.ஆர்.எஸ்.பெற்றுக் கொண்டு விருப்ப ஓய்வில் தொழில் தொடங்குவோர் சுய ஜாதகம் பலம் பெற்றிருந்தால், தொடங்கலாம். பத்தாமிடம் கர்ம ஸ்தானம் என்பதால், பத்தில் சனி வரும் பொழுது, பெற்றோர்களின் உடல் நலத்தில் கூடுதல் கவனம் செலுத்துவது நல்லது. சனி வழிபாடு சஞ்சலம் தீர்க்கும்.

அக்கறை செலுத்த வேண்டிய வக்ர காலங்கள்!


ஆண்டின் தொடக்கத்தில் சனி வக்ரம் பெறுகிறார். அதன்பிறகும் தை மற்றும் பங்குனி மாதத்திலும் வக்ரம் பெறுகிறார். இந்த வக்ர இயக்கம் அவ்வளவு நல்லதல்ல. ராசிநாதன் வக்ரம் பெறும்பொழுது, உடல் ஆரோக்கியத்தில் அதிக அக்கறை காட்ட வேண்டிய சூழ் நிலை உருவாகும். மருத்துவச் செலவு கூடும். இடமாற்றம், வீடுமாற்றம், இலாகா மாற்றம் போன்றவைகள் ஏற்படும்.

என்ன மாற்றம் வந்தாலும், அதை யோசித்து ஏற்றுக் கொள்வது நல்லது. சகோதரர்களால் பிரச்சினைகள் ஏற்பட்டு அகலும். 31.8.2011 முதல் 15.12.2011 வரை குரு வக்ரம் பெறும் பொழுது ஓரளவு நற்பலன்கள் உங்களுக்குக் கிடைக்கும். 3, 12-க்கு அதிபதி வக்ரம் பெறும்பொழுது, முன்னேற்றத்தின் முதல்படிக்கு கொண்டு போய் சேர்க்கும். சனியின் வக்ர காலத்தில் சனி பகவானையும், குருவின் வக்ர காலத்தில் தெட்சிணாமூர்த்தியையும் வழிபட்டு வருவது நல்லது.

பலன்தரும் பரிகாரம்!

சனிக்கிழமை தோறும் ஆனை முகப் பெருமானை வழிபட்டு வாருங்கள். யோகபலம் பெற்ற நாளில் நாமக்கல் ஆஞ்சநோயர் கோவிலுக்குச் சென்று வயதிற்கேற்ற மாலை சாற்றி வழிபாடு செய்யுங்கள். வளர்ச்சி கூடும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை

Post by மஞ்சுபாஷிணி on Sat Apr 16, 2011 6:07 pm

அமோகமா இருக்கு சிவா..... நல்ல பலன்களையே அள்ளி தருகிறது இந்த வருடம்..... அன்பு நன்றிகள் சிவா பகிர்வுக்கு.....
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை

Post by முரளிராஜா on Sat Apr 16, 2011 6:15 pm

ஜோசியர் சிவாவுக்கு என் நன்றி
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: ”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை

Post by Aathira on Sat Apr 16, 2011 6:18 pm

ஆவலா படித்து ...ஏண்டா படித்தோம் என்று நொந்து கொண்டு..

இருந்தாலும் இந்த கெரகமெல்லாம் நம்மள என்ன செஞ்சிடும் மிஞ்சி மிஞ்சி போனா... ..பாத்துருவோம்!

நன்றி சிவா..


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை

Post by சிவா on Sat Apr 16, 2011 6:38 pmஅவிட்டம் 3, 4 பாதங்கள், சதயம், பூரட்டாதி 1, 2, 3 பாதங்கள் வரை

(பெயரின் முதல் எழுத்துக்கள்: கு, கூ, கோ, ஸி, ஸீ, ஸே, ஸோ, தா உள்ளவர்களுக்கும்)

வழிபாட்டால் வளர்ச்சி வரும்! வருடக் கடைசியில் வரவும் வரும்!

தான் மட்டும் அல்லாமல் தன்னைச் சார்ந்தவர்களும் இன்புற்று வாழ வேண்டுமென்று நினைக்கும் கும்ப ராசி நேயர்களே!

விக்ருதி ஆண்டு முடிந்து, கர வருடம் தொடங்குகிறது. கர வருடம் பிறப்பதற்கு முன்னாலேயே இந்த புத்தாண்டு நமக்கு புதிய வாய்ப்புகளை வழங்குமா என்று நீங்கள் சிந்திப்பீர்கள். கடந்த காலத்தில் அஷ்டமத்துச் சனியின் பிடியில் சிக்கியிருந்த நீங்கள் இந்த கர வருடம் மார்கழி மாதம் 5-ம் தேதி வரை அதே அஷ்டமத்துச் சனியின் ஆதிக் கத்தில் தான் வாழ்க்கை நடத்தப் போகிறீர்கள்.

உங்கள் ராசியைப் பொறுத்தவரை ராசிநாதனாகவும், பன்னிரெண்டுக்கு அதிபதியாகவும் சனி விளங்குவதால், பெரிய அளவில் பிரச்சினைகள் ஏற்படாது என்றாலும், வீண் அலைச் சலும், அகால நேரத்தில் சாப்பிடும் சூழ்நிலையும், தன்னம்பிக்கை குறைவும் ஏற்படலாம். பிறரை விமர்சிப்பதன் மூலம் வீண் விவாதங்கள் வரலாம்.

வருடத் தொடக்கத்திலேயே சனி வக்ரம் பெறுவதாலும், அதை செவ்வாய் பார்ப்பதாலும், நிம்மதி குறைவு நிலைத்து விடாமல் இருக்க, பொன்னான நேரத்தில் ஒரு சில நிமிடங் களையாவது இறை வழிபாட்டிற்கென்று செலவிட வேண்டும். செவ்வாய், சனி பார்வை ஏற்படும் பொழுதெல்லாம் கொஞ்சம் முன்னெச்சரிக்கையுடன் செயல்படுவது நல்லது.

குருப்பெயர்ச்சிக்குப் பிறகு சகோதர ஸ்தானம் புனிதமடைவதால் உடன் பிறப்புகளால் உங்கள் கடன் சுமை குறையும். குருவின் பார்வை பலத்தால் கல்யாணக்கனவுகளும், வீடுகட்டுவ தில் இருந்த தொய்வு நிலையும் அகலும்.

தொழில் ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் ராகு தொழில் வளத்தைப் பெருக்கும். வேலைப்பளு கூடினாலும், உழைப்பிற்கேற்ற பலன் கிடைக்கும். சுக ஸ்தானத்தில் கேது இருப்பதால் அப்போதைக்கப்போது சுகக்கேடுகள் வந்து அகலும்.

மார்கழி மாதத்தில் வரும் சனிப் பெயர்ச்சி உங்களுக்கு ஒரு மகத்தான பெயர்ச்சியாகும். அதன்பிறகு நீங்கள் தொட்ட காரியங்கள் துலங்கும். தொல்லைகள் விலகும். மணவாழ்க் கையும், மழலைப் பேறும் எதிர்பார்த்தபடி வந்து சேரும். பணப்புழக்கம் அதிகரிக்கும். துயரங்கள் துள்ளி ஓட, துணையாக நண்பர்கள் வந்து சேர, திருநள்ளாறு சென்று காக வாகனத்தானை கைகூப்பி வழிபட்டு வருவது நல்லது.

மேலும், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் அருகில் உள்ள கண்டர மாணிக்கம் அருகில் பெரிச்சிக் கோவில் என்ற பிரபலமான தலம் உள்ளது. அதில் உள்ள வன்னிமரத்தடி சனீஸ்வரர் நீங்கள் எண்ணிய காரியங்களை எல்லாம் எளிதில் முடிக்க அருள் தருவார். யோகபலம் பெற்ற நாளில் வழிபட்டு வருவது நல்லது.

சிக்கனத்தால் சிறப்படைந்தவர்கள்!

பணப்புழக்கம் அதிகரித்தாலும் சரி, ஓரளவு வந்தாலும் சரி சிக்கனத்தைக் கடைபிடிப் பவர்கள் நீங்கள். தக்க தருணத்தில் நண்பர்கள் உங்களுக்குக் கைகொடுத்து உதவ வேண்டுமானால் நீங்கள் அனுசரித்துத்தான் செல்ல வேண்டும். எதிரிகளை உதிரியாக்கும் தன்மை உங்களிடம் உண்டு. ஆனால், மன்னிக்கும் குணம் உங்களிடம் இல்லை. குண்டூசி அளவுள்ள விஷயத்தை யானை அளவு மிகைப்படுத்திப் பார்க்கும் ஆற்றல் இருப்பதால் தான் பிரச்சினைகளை அதிகம் நீங்கள் சந்திக்கிறீர்கள். குருவும், சூரியனும் இருக்கும் நிலையறிந்துதான் வாழ்க்கைப் பயணத்தைத் தொடர வேண்டும்.

உடன்பிறப்புகள் உதவிக்கரம் நீட்டும் நேரம்!

கர வருடத்தின் தொடக்கத்திலேயே 8.5.2011 அன்று குருப்பெயர்ச்சி நடைபெறப்போகிறது. தன லாபாதிபதியான குரு உங்கள் ராசிக்கு 3-ல் சஞ்சரிக்கும் பொழுது, முன்னேற்றங்கள் ஏற்பட தன்னம்பிக்கைதான் உங்களுக்கு தேவை.

குருவின் பார்வைபலம் உங்கள் ராசிக்கு 7, 9, 11 ஆகிய இடங்களில் பதிவாகிறது. "குரு பார்க்க கோடி நன்மை'' என்பதால் அந்த இடங்கள் எல்லாம் புனிதமடைந்து பொன்னான வாய்ப்புகளை அள்ளி வழங்கப் போகின்றன. குறிப்பாக கல்யாண கனவுகள் நனவாகும். கடல்தாண்டிச் செல்லும் முயற்சியில் வெற்றி கிடைக்கும். குடும்ப ஒற்றுமை பலப்படும்.

"மன்னவன் மூன்றில் நிற்க
மாபெரும் மாற்றம் தோன்றும்!
எண்ணிய காரியங்கள்
எல்லாமே வெற்றி பெறும்!
தன்னம்பிக்கையுடன்
தைரியமும் இணைந்திருக்கும்!
மண்ணில் புகழ் பரவும்
மகத்தான வாழ்வு வரும்!''


என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது மூன்றில் சஞ்சரிக்கும் குரு உங்கள் முன்னேற்றத்திற்கு முட்டுக் கட்டையாக இருந்தவர்களை அகற்றும். அசையாச் சொத்துக் கள் ஒரு சிலவற்றை விற்க நேரிட்டாலும், அடுத்த சில மாதங்களிலேயே புதிய சொத்துக் களை வாங்கும் அமைப்பு கிட்டும். கடிதம் கனிந்த தகவலைக் கொண்டு வந்து சேர்க்கும்.

வாழ்க்கைத் துணை வழியே வருமானங்கள் வந்து சேரும். தந்தை வழித் தகராறுகள் அகலும். புதிய இல்லம் கட்டிக் குடியேற வேண்டும் என்ற எண்ணம் ஒருசிலருக்கு மேலோங்கும். வீடு கட்டிக் குடியேறலாமா, அல்லது கட்டிய வீடாக வாங்கலாமா என்பதை அறிந்து சுயஜாதகத்தைப் பார்த்துச் செயல்பட்டால் வாங்கிய வீடு நிலைக்கும்.

ராகு-கேது பெயர்ச்சிக் காலம்!

பாம்புக்கிரகம் என்றும், பின்னோக்கி நகரும் கிரகம் என்றும் வர்ணிக்கப் படும் ராகுவும், கேதுவும் மே மாதம் 16-ம் தேதி பெயர்ச்சி ஆகிறார்கள். ராகு உங்கள் ராசிக்கு 10-ம் இடத்திலும், கேது உங்கள் ராசிக்கு 4-ம் இடத்திலும் சஞ்சரிக்கப் போகிறார்கள்.

தொழிலை வளப்படுத்தும் பத்தாமிடத்து ராகு என்றும், தொகைகளைச் செலவிட வைக்கும் நான்காமிடத்து கேது என்றும் வர்ணிப்பது வழக்கம். ராகு பலத்தால் தொழில்வளம் பெருகும். நல்லவர்களின் நட்பால் இல்லத்தில் சுபகாரியப் பேச்சுக்கள் நல்ல முடிவிற்கு வரும். கேதுவின் பலத்தால் ஆரோக்கியக் குறைவுகள் அடிக்கடி ஏற்படலாம். விலை உயர்ந்த பொருட்களைக் கையாள்வதில் கவனம் தேவை. வாகனப் பழுதுச் செலவுகள் கூடும். காலையில் வரும் வரவு மாலையில் செலவாகி விடும். நீண்டதூரப் பயணங்களை யோசித்து ஏற்றுக் கொள்வது நல்லது. முறையாக யோகபலம் பெற்ற நாளில் சர்ப்ப சாந்தி களைச் செய்து கொண்டால் கும்ப ராசிக்காரர்கள் குழப்பத்தில் இருந்து விடுபட இயலும்.

சந்தோஷம் தரும் சனிப்பெயர்ச்சி!

சனிப்பெயர்ச்சி 21.12.2011 அன்று நிகழ இருக்கிறது. அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கத்தில் இருந்து விடுபட்டு அற்புதமான வாழ்க்கையை அமைத்துக் கொள்ள வாய்ப்புகள் கைகூடி வரும் நேரமிது. ஆனால் விலகிய சனியை விரும்பிச் சென்று முன்னதாகவே நீங்கள் வழிபட வேண்டியது அவசியமாகும்.

சனி திசை விலகிய பின்னர், நள மகாராஜாவிற்கு சாம்ராஜ்யத்தையும், சகல யோகத்தை யும் வழங்கிய சனி பகவான் திருநள்ளாற்றில் வீற்றிருந்து அருள் வழங்குவதால் அவரைச் சென்று தரிசித்து வர வேண்டியது அவசியமாகும். ஒன்பதாமிடத்தில் சஞ்சரிக்கப் போகும் சனியால் ஒளிமயமான எதிர்காலம் உங்களுக்கு வந்து சேரும். இழந்த பொன், பொருட்கள் மீண்டும் கிடைக்கும். அஷ்டமத்துச் சனியால் ஏற்பட்ட பகைமாறும். அரசியல் ஈடுபாடு கொண்டவர்களுக்குப் பொறுப்புகள் திடீரென மாறும். வாகன மாற்றமும், வீடு மாற்றமும் செய்ய உகந்த நேரமிது.

அக்கறை செலுத்த வேண்டிய வக்ர காலங்கள்!

ஆண்டின் தொடக்கத்திலேயே சனி வக்ரம் பெறுகிறார். அதற்குப் பின்னால் இரண்டு முறை மீண்டும் வக்ரம் பெறுகிறார். ராசிநாதனான சனி வக்ரம் பெறும்பொழுது, ஆரோக் கியத்தில் மட்டுமல்ல, அன்றாடம் நடைபெறும் நிகழ்ச்சிகளிலும் அக்கறை அதிகம் செலுத்த வேண்டியது அவசியமாகும். நன்மை ஏற்படும் என்று நீங்கள் நினைத்துச் செய்த காரியம் வேறுவிதமாக முடிவடையும்.

இதேபோல, 31.8.2011 முதல் 15.12.2011 வரை குருவின் வக்ர காலமாகும். தனாதிபதி வக்ரம் பெறும் இந்த நேரத்தில் பணப்புழக்கத்தில் தடை ஏற்படும். கொடுக்கல்-வாங்கல்கள் ஸ்தம்பிக்கலாம். உடன்பிறப்புகள் உங்களை உதாசீனப்படுத்தலாம். பொறுமையைக் கடைப் பிடிக்க வேண்டிய நேரமிது. லாபாதிபதியாகவும் குரு விளங்குவதால், "வானவருக்கு அரச ரான வளம் தரு குருவே'' என்ற குரு கவசத்தைப் பாடி குருவின் சந்நிதியில் வழிபட்டால் குழப்பங்கள் தீரும்.

பலன்தரும் பரிகாரம்!

சனிக்கிழமைதோறும் விரதமிருந்து சனீஸ்வரர் வழிபாட்டையும், அனுமன் வழிபாட்டையும் முறையாக மேற்கொள்வது நல்லது. கும்ப கோணம் அருகில் உள்ள உப்பிலியப்பன் கோவிலுக்குச் சென்று அங்குள்ள விஷ்ணுவையும், லட்சுமியையும், மாருதியையும் வழி பட்டு வாருங்கள். வெற்றிச் செய்தி வீடு வந்து சேரும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை

Post by அருண் on Sat Apr 16, 2011 6:42 pm

அணைத்தும் அருமை அண்ணா! நம்ம ராசிக்கு நல்லாத்தான் சொல்லிருக்கு பார்ப்போம்!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: ”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை

Post by சிவா on Sat Apr 16, 2011 6:42 pm
பூரட்டாதி 4-ம் பாதம், உத்ரட்டாதி, ரேவதி முடிய

(பெயரின் முதல் எழுத்துக்கள்: தீ, து, ஓ, ஸ்ரீ, தே, தொ, சு உள்ளவர்களுக்கும்)

காக வாகனம் கொண்டவனை கனிந்தே தொழுதால் குறை தீரும்.


எவரிடமும் எளிதாக நெருங்கிப்பழகும் இயல்பைப் பெற்ற மீன ராசி நேயர்களே!

விக்ருதி வருடம் முடிந்து கர வருடம் தொடங்கப்போகிறது. வியாழன் உங்கள் ராசிக்கு அதிபதியாக விளங்குவதால், ஆண்டின் தொடக்கத்தில் சகட யோகமும், குரு மங்கள யோகமும் ஏற்படுவதால், சென்ற ஆண்டைக்காட்டிலும் சிறப்பான ஆண்டாக இந்த ஆண்டு அமையப்போகிறது.

ராசிநாதன் உச்சம் பெற்றிருந்தால் அல்லது ஆட்சி பெற்றிருந்தால் யோசிக்காது செய்த காரியங்களில் கூட வெற்றி கிடைக்கும் என்பார்கள். அந்த அடிப்படையில் பார்க்கும் போது, உங்கள் ராசி நாதன் குரு பலம் பெற்று விளங்கினாலும், மாபெரும் கிரகம் சனி யல்லவா உங்கள் ராசியைப் பார்க்கிறது. கண்டகச் சனியாக விளங்கி கவலைகளைக் கொடுக்கும் சனி வக்ரம் அடையும் காலத்தில் மட்டும் வாழ்க்கைப் பாதையில் நல்லதைச் செய்யும்.

இந்த ஆண்டு முறையான குருப் பெயர்ச்சி நடைபெறப்போகிறது. தன ஸ்தானத்தை குரு பார்க்கப் போகிறார். எனவே பணம் பலவழிகளிலும் வந்து பையை நிரப்பும். இனம் புரியாத கவலை இருந்த இடம் தெரியாமல் ஓடி மறையும்.

ராகு-கேது பெயர்ச்சியும் ஓரளவு நற்பலன்களையே வழங்கும். பொதுவாக 10 ல் வந்த ராகு, இனி 9 ல் சஞ்சரிக்கப் போகிறார். 4 ல் உள்ள கேது இனி 3 ல் சஞ்சரிக்கப் போகிறார். இவை எல்லாம் உங்களுக்கு நற்பலன்களைக் கொடுத்தாலும், மார்கழி மாதம் பெயர்ச்சியாக போகும் சனி உங்களுக்கு அஷ்டமத்துச் சனியாக அல்லவா மாறப்போகிறார்.

எனவே மார்கழிக்கு முன்னால் மனதிற்கினிய சம்பவங்கள் ஏராளமாக நடைபெற்றாலும், மார்கழிக்குப்பிறகு எதையும் ஒரு முறைக்குப் பலமுறை யோசித்து செய்வதே நல்லது. திடீர் இடமாற்றங்கள், ஊர் மாற்றங்கள் உருவாகலாம். அந்நியர்களின் தொல்லை அதிகரிக்கும் இந்த நேரத்தில் அடுக்கடுக்காக வரும் சிக்கல்களைப் போக்க ஆனைமுகனையும், ஆஞ்ச நேயரையும், சனீஸ்வரரையும் விடாது வழிபட்டு வருவது நல்லது. பொதுவாக விடிந்தால் விக்னேஸ்வர வழிபாடு என்று வைத்துக்கொண்டவர்களுக்கு சனி பகவானால் சஞ்சலங்கள் ஏற்படாது.

இல்லத்தில் காகத்திற்கு தினமும் சோறு வைப்பதன் மூலம், மாற்றுத்திறனாளிகளுக்கு மனமுவந்து உதவி செய்வதன் மூலமும், தல யாத்திரைகளை மேற்கொண்டு ஆண்டவ னின் சந்நிதியில் அதிக நேரம் வழிபாடு செய்வதன் மூலமும் அஷ்டமத்துச் சனியின் வலிமையை குறைக்க முடியும்.

சனி ஆதிக்கம் நடைபெறும் போது நம்பிக்கைக்குரியவர்கள் கூட விட்டுவிலகலாம். எனவே, எல்லோரிடமும் அன்புகாட்டி அரவணைத்துச் செல்வதன் மூலமும், கோபத்தை தவிர்த்துக் குணத்தோடு செயல்படுவதன் மூலமுமே தொல்லைகளில் இருந்து விடுபட இயலும்.

விருந்தினர்களை சிறப்பாக உபசரிப்பவர்கள் நீங்கள்

வந்தவர்களை உபசரிப்பதில் உங்களுக்கு ஈடு இணை யாருமே இல்லை. சொந்தம், சுற்றம் என்று பாசம் காட்டுவதில் 12 ராசிகளிலும் நீங்கள் தான் முதன்மையானவர். குரு என்பவர் நவ கிரகத்தில் சுப கிரகமாக வர்ணிக்கப்படுபவர். அவரது சொந்த வீடு உங்களுக்கு ராசியாக அமைவதால் சமூகத்தில் மதிப்பும், மரியாதையும் அதிகம் பெற்றவர்களாக விளங்குவீர்கள்.

நீங்கள் சொல்லும் சொற்கள் வெல்லும் சொற்களாக இருக்கும். மற்றவர்கள் செய்யும் தவறுகளைப் பெருந்தன்மையோடு மன்னிக்கும் ஆற்றலும் உங்களுக்கு உண்டு. கற்ற கல்வியைக் காட்டிலும் பெற்ற அனுபவங்கள் தான் பெரிதும் வழிநடத்திச் செல்கின்றன.

குதூகலம் தரும் குருப்பெயர்ச்சி

கர வருடத் தொடக்கத்திலேயே 8-5-2011 அன்று குருப்பெயர்ச்சி நடைபெறப்போகிறது. இந்த குருப்பெயர்ச்சி உங்களுக்கு சாதகமான பலன்களை அள்ளி வழங்கப்போகிறது. பொதுவாக ராசி நாதனாகவும், 10 க்கு அதிபதியாகவும் விளங்கும் குரு தன ஸ்தானத்தில் சஞ்சரிக்கும் பொழுது, குடும்பத்தில் ஒற்றுமை மேலோங்கும். பிள்ளைகள் வழியில் நல்ல செய்திகள் வந்து சேரும்.

இரண்டாமிடத்தில் சஞ்சரிக்கும் குருவின் பார்வை, உங்கள் ராசிக்கு 6, 8, 10 ஆகிய இடங்களில் பதிகிறது. எனவே அந்த இடங்கள் எல்லாம் புனிதமடைந்து அற்புதப் பலன்களை அள்ளி வழங்கப்போகின்றன.

"இரண்டில் குரு வந்தால்
இல்லத்தில் மகிழ்ச்சி வரும்
திரண்ட செல்வமுடன்
தேனான வாழ்வமையும்
உறவினர் பகைமாறி
உற்சாகம் குடிகொள்ளும்
குருவின் வழிபாட்டால்
குதூகலமாய் வாழ்ந்திடலாம்''


என்று ஜோதிட சாஸ்திரம் சொல்கிறது.

அந்த அடிப்படையில் பார்க்கும் பொழுது வாக்கு, தனம், குடும்பம் எனப்படும் இரண்டா மிடத்தில் குரு சஞ்சரிக்கும் பொழுது, விலகிச்சென்ற உறவினர்கள் விரும்பி வந்து சேர்வர். பங்காளிப்பகை மாறும். தங்கு தடையின்றி தனவரவு வந்து கொண்டே இருக்கும். கொடுத்த வாக்கை காப்பாற்றுவீர்கள்.

கொடி கட்டிப்பறந்த குடும்பப் பிரச்சினைகள் படிப்படியாக நல்ல முடிவுக்கு வரும். தேங்கிய காரியங்கள் சுறுசுறுப்பாக நடைபெறத் தொடங்கும். தெய்வத்திருப்பணிகளில் ஆர்வம் காட்டுவீர்கள். நிகழ்காலத் தேவை பூர்த்தியாகும். அரசு அதிகாரிகளும், மேல் அதிகாரி களும் உங்களுக்கு ஆதரவாக நடந்து கொள்வர். செவ்வாய் ஆதிக்கம் பெற்ற நாளில் திசை மாறிய தெட்சிணா மூர்த்தியை வழிபட்டு வந்தால் மங்கல ஓசையும், மழலையின் ஓசையும் கேட்கும்.

ராகு-கேது பெயர்ச்சிக்காலம்

பாம்புக் கிரகம் என்று வர்ணிக்கப் படும் ராகுவும்,கேதுவும் மே மாதம் 11-ந் தேதி பெயர்ச்சியாகிறார்கள். இந்த அரவு கிரகப்பெயர்ச்சியால் ஆற்றல் மிக்கவர்களின் ஒத்துழைப்பு உங்களுக்கு கிடைக்கப்போகிறது. உடன்பிறப்புகளும் ஒத்துழைப்புச் செய்வர். உள்ளத்தில் ஒன்றும், உதட்டில் ஒன்றும் வைத்து பேசுபவர்கள் உங்களை விட்டு விலகுவர். வள்ளல் தன்மை மிக்கவர்கள் உங்களுக்கு வழிகாட்டியாக இருந்து குடும்பத் தேவையைப் பூர்த்தி செய்வர்.

9 ல் சஞ்சரிக்கும் ராகு ஒளிமயமான எதிர்காலத்திற்கு வித்திடுவார். பொன், பொருட்களை வாரி வழங்குவார். புதிய திருப்பங்களை ஏற்படுத்துவார். அன்புத் தந்தையின் பாசத்தை அதிகரிக்க வைப்பார். மூன்றாமிடத்தில் சஞ்சரிக்கும் கேது முன்னேற்றத்தில் சில இடை யூறுகளைக் கொடுத்துத் தான் நிவர்த்தி செய்வார். எந்தக் காரியமும் எடுத்தோம், முடித்தோம் என்று செய்ய இயலாது. இடையில் தடை ஏற்பட்டுத்தான் முடியும். பாகப்பிரி வினைகள் சுமூகமாக முடியும். யோக பலம் பெற்ற நாட்களில் சர்ப்ப சாந்திகளையும், யாகங்களையும் செய்தால் தேக நலனும் சீராகும், செல்வ நிலையும் உயரும்.

அஷ்டமத்துச் சனியின் ஆதிக்கம்


இதுவரை 7 ம் இடத்தில் இருந்த சனிபகவான் 21-12-2011 முதல் 8 ம் இடத்தில் சஞ்சரிக்கப்போகிறார். உங்கள் ராசியைப் பொறுத்த வரை 12 ம் இடத்திற்கு சனி அதிபதியாவதால், அது 8 ல் சஞ்சரிக்கும் போது விபரீத ராஜ யோகத்தை உருவாக்கலாம். `கெட்டவன் கெட்டிடில் கிட்டிடும் ராஜயோகம்' என்பது பழமொழி.

எனவே திட்டமிடாது செய்யும் காரியங்களில் வெற்றி கிடைக்கும். திறமை மிக்கவர்கள் உங்களுக்குத் திடீர் திடீரென்று உதவ முன்வருவார்கள். விலை உயர்ந்த பொருட்களைக் கையாள்வதில் கவனம் தேவை. விழிப்புணர்ச்சி கூடுதலாக இல்லாவிட்டால் பங்குதாரர் களிடம் ஏமாற்றத்தைச் சந்திக்க நேரிடலாம். மருத்துவச் செலவு கூடும். நினைத்த காரியங்கள் நினைத்தபடி நிறைவேற சனிக்கவசம் பாடிச்சனீஸ்வரரை முறையாக வழிபாடு செய்யுங்கள்.

அக்கறை செலுத்த வேண்டிய வக்ர காலங்கள்!

ஆண்டின் தொடக்கத்திலேயே சனி வக்ரம் பெறுகிறார். அதற்குப் பின்னால் மீண்டும் இரண்டு முறை வக்ரம் பெறுகிறார். இந்த வக்ர காலத்தில் கொஞ்சம் கூடுதல் விழிப்புணர்ச்சி காட்டுவதே நல்லது. பொதுவாக லாபம் வருவதில் தடைகள் ஏற்படலாம். பயணங்கள் அதிகரித்தாலும் அலைச்சலுக்கு ஏற்ற ஆதாயம் கிடைக்காது. பிறருக்குப் பொறுப்புச் சொல்வதைத் தவிர்ப்பது நல்லது.

31-8-2011 முதல் 15-12-2011 வரை குருவின் வக்ர காலம். இக்காலத்தில் ஆரோக்கியப் பாதிப்புகள் ஏற்பட்டு அகலும். ரண சிகிச்சைகள் ஒரு சிலருக்கு உருவாகலாம். வாகன மாற்றம் செய்ய உகந்த நேரம் இது. நண்பர்களை நம்பிச் செய்யும் காரியங்கள் மீண்டும் உங்களிடமே வந்து சேரும். உறவினர் வழியில் பகை வராமல் பார்த்துக்கொள்வது நல்லது. குடும்பச் செலவுகள் கூடும்.

பலன்தரும் பரிகாரம்!

வியாழக்கிழமை தோறும் விரதமிருந்து தென்முகக்கடவுளை இன்முகத்தோடு வழிபட்டு வருவது நல்லது. தஞ்சை மாவட்டம் திருக்கடையூருக்கு யோக பலம் பெற்ற நாளில் சென்று கள்ளவாரணப் பிள்ளையார், அபிராமி அம்மன், அமிர்த கடேஸ்வரரை வழிபட்டு வந்தால் எல்லா நாட்களும் இனிய நாட்களாக மாறும்.

நன்றி: தினதந்தி
கணித்தவர் : 'ஜோதிடக் கலைமணி' சிவல்புரி சிங்காரம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை

Post by மஞ்சுபாஷிணி on Sat Apr 16, 2011 6:55 pm

சிவா உங்க ராசி நட்சத்திரம் பிறந்த தேதி டைம் எல்லாம் சொல்லுங்க உங்களுக்கு ஜாதகம் பார்க்க சொல்றேன் ஊர்ல அம்மா போகும்போது சரியா?
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை

Post by சிவா on Sat Apr 16, 2011 6:56 pm

@மஞ்சுபாஷிணி wrote:சிவா உங்க ராசி நட்சத்திரம் பிறந்த தேதி டைம் எல்லாம் சொல்லுங்க உங்களுக்கு ஜாதகம் பார்க்க சொல்றேன் ஊர்ல அம்மா போகும்போது சரியா?

மகர ராசி, கடக லக்கனம், திருவோணம் நட்சத்திரம்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை

Post by மஞ்சுபாஷிணி on Sat Apr 16, 2011 6:59 pm

திருவோண நட்சத்திரம் அருமையான அமோகமான நட்சத்திரம் சிவா.....

தனிமடல்ல உங்க பிறந்த நாள் டைம் கூட அனுப்புங்க... அம்மா ஜூன் மாசம் போறச்சே உங்க ஜாதகம் பார்க்க சொல்வேன் சரியா?
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை

Post by சிவா on Sat Apr 16, 2011 7:16 pm

@மஞ்சுபாஷிணி wrote:திருவோண நட்சத்திரம் அருமையான அமோகமான நட்சத்திரம் சிவா.....

தனிமடல்ல உங்க பிறந்த நாள் டைம் கூட அனுப்புங்க... அம்மா ஜூன் மாசம் போறச்சே உங்க ஜாதகம் பார்க்க சொல்வேன் சரியா?

கலையின் ஜாதகப் பதிவில் முதல் வேண்டுகோளே என்னுடையதுதான் அக்கா!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84415
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை

Post by மஞ்சுபாஷிணி on Sat Apr 16, 2011 9:29 pm

அப்ப ஓக்கே டன் சிவா...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: ”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை

Post by கலைவேந்தன் on Sun Apr 17, 2011 12:25 am

இனிய பகிர்வுக்கு நன்றி சிவா..!

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13394
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: ”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை

Post by Aathira on Sun Apr 17, 2011 12:34 am

@சிவா wrote:
@மஞ்சுபாஷிணி wrote:திருவோண நட்சத்திரம் அருமையான அமோகமான நட்சத்திரம் சிவா.....

தனிமடல்ல உங்க பிறந்த நாள் டைம் கூட அனுப்புங்க... அம்மா ஜூன் மாசம் போறச்சே உங்க ஜாதகம் பார்க்க சொல்வேன் சரியா?

கலையின் ஜாதகப் பதிவில் முதல் வேண்டுகோளே என்னுடையதுதான் அக்கா!
சீக்ரமே கல்யாண ப்ராப்திரஸ்து...


avatar
Aathira
தலைமை நடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 14366
மதிப்பீடுகள் : 1878

View user profile http://www.tamilnimidangal.blogspot.

Back to top Go down

Re: ”கர” தமிழ் வருட ராசிபலன்கள்! 14-4-2011 முதல் 12-4-2012 வரை

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum