ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 T.N.Balasubramanian

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 சிவனாசான்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 ayyasamy ram

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 ayyasamy ram

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 06
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 05
 தமிழ்நேசன்1981

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 T.N.Balasubramanian

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 சிவனாசான்

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 ayyasamy ram

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 T.N.Balasubramanian

அப்பா
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 M.M.SENTHIL

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

இசையமைப்பாளரான தம்பி ராமைய்யா!
 ayyasamy ram

சிந்தனையாளர் முத்துக்கள்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

... அழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

விண்மீன்களின் பிறப்பும், இறப்பும்

View previous topic View next topic Go down

விண்மீன்களின் பிறப்பும், இறப்பும்

Post by ஆத்மசூரியன் on Thu Apr 14, 2011 7:08 pm

விண்மீன் என்றால் என்ன ? அவை எவ்வாறு தோன்றியது ? அவை எப்படி ஒளியை தருகின்றன மேலும் எவ்வளவு காலம் ஒளியை தரும் ? அவற்றிர்க்கு இறப்பு என்று ஏதும் உண்டா போன்ற கேள்விகளுக்கு விடை தரும் வகையில் இக்கட்டுரை அமைந்துள்ளது.

நெபுலா நிலை
(NEBULA STATE):

Uploaded with ImageShack.us
நியூட்டனின் ஈர்பியல் விதிப்படி ஒவ்வொரு துகளும் அதற்க்கு அருகிலுள்ள துகளை
ஒரு குறிப்பிட்ட விசையுடன் ஈர்க்கின்றன. இந்த விசை ஈர்ப்பு விசை
எனப்படுகிறது. இவ்வாறே பிரபஞ்சத்திலுள்ள ஹைட்ரஜன் அணுக்கள் ஒன்றை ஒன்று
ஈர்ப்பதால் அவை அருகில் வருகின்றன. இவ்வாறு பல ஹைட்ரஜென் அணுக்கள் சேர்ந்து
ஹைட்ரஜென் வாயு மண்டலத்தை ஏற்படுத்துகின்றது.தன் சொந்த ஈர்ப்பு விசையால்
வாயு மண்டலம் சுருங்குகிறது. இதனால் அழுத்தம் அதிகமாகி அதன் வெப்பம்
உயர்கிறது. இந்த நிலை நெபுலா நிலை எனப்படும்.

Uploaded with ImageShack.us

Uploaded with ImageShack.us

சூரியனுக்கு பத்தில் ஒரு பங்கு நிறையுடைய விண்மீன்கள் ஒரு கட்டம்
வரை தன் சுருங்கும். பின் தன் சொந்த வெப்ப ஆற்றலால் ஒரு வாயு பந்தாக தன்
இருக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது. இவை தானாக பெருமளவு ஒளியை உமிழாது .
இவற்றை பழுப்பு குள்ளர் என்று அழைக்கின்றனர்.

விண்மீனின் பிறப்பு :


Uploaded with ImageShack.us
இவ்வாறு வான் முகில்கள் பல லட்சம் வருடங்கள் தன்னுள்ளே சுருங்கும்
போது மையத்தில் வெப்பமும் அழுத்தமும் அதிகரித்து ஹைட்ரஜன் அணுக்களிடையே
அணுக்கரு பிணைவு ஏற்ப்பட்டு ஹீலியமாக மாறுகிறது. (அணுக்கரு பிணைவு என்பது
ஒரு குறிப்பிட்ட வெப்ப ஆற்றலில் ஹைட்ரஜன் போன்ற லேசான தனிமங்கள் பிணைத்து
கனமான தனிமங்கள் உருவாகும் நிகழ்வு ஆகும் . இந்நிகழ்வின் போது பெருமளவு
வெப்ப ஆற்றலும் ஒளியும் வெளியிடப்படுகின்றன . இந்த அணுக்கரு பினைவினால்
ஆற்றல் வெளிப்பட்டு விண்மீன் பிரகாசிக்கிறது.
மையத்தில் 10 கோடி டிகிரி வரை வெப்பம் உயரும் போது இவ்வாறு பிணைவு
நிகழ்கிறது. இச்சமயத்தில் மெலிதாக மங்கலாக விண்மீன் ஒளிர்கிறது. இதையே
விண்மீனின் பிறப்பு என்கிறோம்.

Uploaded with ImageShack.us

சமநிலை விண்மீன் :


Uploaded with ImageShack.us
விண்மீனில் கருப்பிணைவு நிகழ்ந்து வெப்ப ஆற்றல் வெளிவர துவங்கியதும்
விண்மீனில் இரண்டு எதிரும் புதிருமான சக்திகள் மொத துவங்குகின்றன.
விண்மீனின் நிறையினால் மையத்தை நோக்கிய ஈர்ப்பு விசை பொருட்களி இழுக்கும்.
மேலும் மேலும் விண்மீன் சுருங்க முயற்சிக்கும். மறுபுறத்திலோ மையத்தில்
கருப்பிணைவு நிகழ்ந்து மேலும் மேலும் வெப்ப ஆற்றல் வெளிவரும். வெப்ப ஆற்றல்
மைய விளக்கு விசை உடையது. இவ்வாறு எத்திறம் புதிருமான மாற்றங்களுக்கு
பிறகு 2000 வருடங்களுக்கு பிறகு ஒரு வகையான சம நிலையை விண்மீன் அடைகிறது.
இந்த சம நிலையில் விண்மீன்கள் அமைதியாக ஒளிர்கின்றன. இந்த சம நிலை
விண்மீனின் எடையை பொறுத்து நீடித்திருக்கும். சூரியனை போன்ற எடையுடைய
விண்மீன்களில் சுமார் 1000 கோடி வருடங்கள் இச்சமநிலை இருக்கும். சூரியனை
விட எடை குறைவான விண்மீன்களில் இச்சமநிலை இன்னும் அதிக வருடங்கள்
நீடித்திருக்கும். சூரியனை விட அதிக எடையுடைய விண்மீன்களில் இச்சமநிலை
குறைவான வருடங்களே நீடித்திருக்கும்.

Uploaded with ImageShack.us


Uploaded with ImageShack.us

சிவப்பு அரக்கன் நிலை(RED GIANT STATE) :


Uploaded with ImageShack.us
மையத்தில் ஹைட்ரஜன் அணுக்கள் இணைந்து ஹீலியமாக மாறுகின்றன. இதனால்
மையக்கருவில் ஹைட்ரஜன் அடர்த்தி குறைகிறது. சுமார் 12 % ஹைட்ரஜன் ,
ஹீலியமாக மாறியதும் இச்சமநிலை சமசீரற்ற நிலையாக மாறுகிறது . மையத்தில்
ஹீலியம் அதிகம் இருப்பதால் கருப்பிணைவு குறைந்து போகிறது. இந்நிலையால்
வெப்பம் குறைவதால் விண்மீன் மேலும் சுருங்குகிறது. இவ்வாறு சுருங்குகையில்
மையக்கருவை சுற்றியுள்ள மேலடுக்கில் வெப்பமும் அழுத்தமும் அதிகமாகி
மேலடுக்கிலேயே அணுக்கருபினைவு நிகழ்கிறது . இப்போது வெளிப்படும் வெப்ப
ஆற்றலானது மேலடுக்குகளை வெளிநோக்கி உந்தும். விண்மீன் பலூன் போல்
விரியும். முன்பு இருந்தது போல் ஆயிரம் மடங்கு பெரிதாக காணப்படும். தன்
மேற்பரப்பு வெப்பம் 3000 டிகிரி வரை குறைவதால் விண்மீன் சிவப்பாக
தெரியும். எனவே இது சிவப்பு அரக்கன் நிலை எனப்படுகிறது. நமது சூரியன்
இன்னும் 500 கோடி வருடங்களில் இந்த நிலையை அடையும் என
கணக்கிடப்பட்டுள்ளது. அப்போது புதன், வெள்ளி, பூமியை விழுங்கி அந்த அளவு
பெரிதாக காணப்படும்.

Uploaded with ImageShack.us

வெள்ளை குள்ளன் நிலை(WHITE DWARFT STATE) :


Uploaded with ImageShack.us
மையக்கரு மேலும் மேலும் சுருங்கி வெப்ப நிலை 10 கோடிக்கு மேல்
உயரும் போது ஹீலியமும் கருப்பினைவில் ஈடுபடும். மையக்கருவில் ஹீலியம்
கார்பனாக மாறியதும் மேலடுக்கில் கருப்பிணைவு தொடங்கும். விண்மீன் மறுபடி
விரியும். சூரியனி விட 3 மடங்கு நிறை குறைவான விண்மீன்களில் ஒரு நிலையில்
மேலடுக்கு காற்றினால் வீசப்படுவது போல் விண்ணில் வீசப்படும். மேலடுக்கு ஒரு
வளையம் போல் வானவெளியில் விரியும். மையக்கரு வெள்ளை குள்ளன் என்ற வகை
விண்மீனாக மாறும். பின் இந்த வெள்ளை குள்ள வின்மீனிலும் மேலும் பல
வெடிப்புகள் ஏற்பட்டு விண்மீன் அழிந்துவிடும். இத்தகைய வெடிப்புகள்
நோவக்கள் எனப்படும்.,

Uploaded with ImageShack.us

சூப்பர் நோவா(SUPER NOVA) :


Uploaded with ImageShack.us
சூரிய எடைக்கு பத்து மடங்குக்கு மேல் நிறையுடைய விண்மீனின்
சரித்திரம் வேறு விதமானது. இவற்றில் மையத்தில் ஹீலியமும் கார்பனும்
இணைந்து ஆக்சிஜன அணுக்கள் உருவாகிறது. பின்னர் ஆக்சிஜன் அணுக்கள் இணைந்து
மேக்னிசியம் உருவாகிறது. தொடர்ந்து பல தனிமங்கள் உருவாகி கடைசியில்
இரும்பு உருவாகிறது.

இரும்பு மற்றும் அதற்க்கு அதிகமான அணு எண் உடைய தனிமங்களில்
அணுக்கரு பினைவிற்கு தேவையான சக்தி தேவைக்கு குறைவாக இருப்பதால் மையத்தில்
இரும்பு அணுக்கள் பிணைந்து புதிய தனிமங்களை உருவாக்க முடியாது. திடீரென
மையத்தில் கருப்பிணைவு நிற்பதால் மேலடுக்குகள் மையத்தில் பாயும்.
இந்நிலையில் விண்மீன் பெரும் ஒளியுடன் வெடிக்கும். இதுவே சூப்பர் நோவா
எனப்படும்.

Uploaded with ImageShack.us


நியூடிரான் விண்மீன் நிலை(NUTRAN STAR STATE) :


Uploaded with ImageShack.us
சூரியனை விட பத்தில்லிருந்து இருபது மடங்கு அதிக நிறையுடைய
விண்மீன்களின் கருவில் இக்கட்டத்தில் புதிய விண்மீன் பிறக்கும். மையத்தில்
500 கோடிக்கு மேல் அதிக வெப்பம் உருவாகும் போது நுட்ரிநோக்கள்(Nutrinos) எனப்படும்
அனுத்துகல்களாக இரும்பு மையம் மாறும்.ஒரே நாளில் நுட்ரிநோக்கள்(nutrinos) மூலம்
ஆற்றல் அனைத்தும் உமிழப்படும். வெப்பம் 600 கோடிக்கு மேல் உயரும் போது
இவ்வெப்பத்தில் இரும்பு அணு உருமாறி புரோடானாகவும்(proton) , நுட்ரானாகவும் (nutron)மாறும். இது நியூட்ரன் விண்மீன் எனப்படும். நியூட்ரன் விண்மீன்கள்
ஒளிர்வதில்லை ரேடியோ அலைநீலங்களில் ஒளியை உமிழ்கின்றன . இந்தன் நியூடரன்
விண்மீன்கள் பல்சார்கள்(Pulsars) எனப்படுகின்றன.

Uploaded with ImageShack.us

கருந்துளை விண்மீன்(BLACK HOLE) :


Uploaded with ImageShack.us
சூரியனை விட 30 லிருந்து 50 மடங்கு நிறையுடைய விண்மீன்களில்
நியூடரன் விண்மீனும் சுருங்கி கருந்துளையாக மாறுகின்றன. இந்த கருந்துளைகள்
அதிக ஈர்ப்பு சக்தி வாய்ந்தவை . இவற்றிலிருந்து ஒளி கூட வெளியேற முடியாது.

Uploaded with ImageShack.us

பெரும் நோவக்களில் ஏற்படும் பெரும் வெப்பத்தினால் அனைத்து
தனிமங்களும் உருவாகின்றன. இவை புதிய முகில்களில் சேருகின்றன.பின் அந்த
முகில்கள் புதிய விண்மீனாக பரிணமிக்கின்றன. சுமார் 510 கோடி வருடத்திற்கு
முன்பு நிகழ்ந்த பெரும் நோவா விலிருந்துதான் சூரியன் உருவானதாக
கருதப்படுகிறது. எனவே இது இரண்டாம் தலைமுறை விண்மீன் எனப்படுகிறது.


Last edited by ஆத்மசூரியன் on Sun Sep 30, 2012 2:11 am; edited 3 times in total (Reason for editing : For including some information)
avatar
ஆத்மசூரியன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 96
மதிப்பீடுகள் : 27

View user profile

Back to top Go down

Re: விண்மீன்களின் பிறப்பும், இறப்பும்

Post by மகா பிரபு on Fri Apr 15, 2011 11:52 am

விண்மீன்கள் பற்றி அழகாக எழுதிய நண்பனுக்கு வாழ்த்துக்கள். இன்னும் நிறைய கட்டுரைகள் எழுதி ஈகரையின் வளர்ச்சிக்கு உதவுங்கள்.
avatar
மகா பிரபு
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9587
மதிப்பீடுகள் : 1215

View user profile

Back to top Go down

Re: விண்மீன்களின் பிறப்பும், இறப்பும்

Post by கலைவேந்தன் on Fri Apr 15, 2011 3:19 pm

சூப்பருங்க மகிழ்ச்சி மகிழ்ச்சி

கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13411
மதிப்பீடுகள் : 684

View user profile http://kalai.eegarai.info/

Back to top Go down

Re: விண்மீன்களின் பிறப்பும், இறப்பும்

Post by ரா.ரமேஷ்குமார் on Fri Apr 15, 2011 7:07 pm

பயனுள்ள பதிவு நன்றி ஆத்மசூரியன் அவர்களே அருமையிருக்கு
avatar
ரா.ரமேஷ்குமார்
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4241
மதிப்பீடுகள் : 943

View user profile

Back to top Go down

Re: விண்மீன்களின் பிறப்பும், இறப்பும்

Post by ஆத்மசூரியன் on Fri May 20, 2011 3:25 pm

நன்றி நண்பர்களே ...
avatar
ஆத்மசூரியன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 96
மதிப்பீடுகள் : 27

View user profile

Back to top Go down

Re: விண்மீன்களின் பிறப்பும், இறப்பும்

Post by SK on Fri May 20, 2011 4:11 pm

பயனுள்ள தகவல்

இது வறுத்து சாப்பிடும் மீன் இல்லையா

ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல ஒன்னும் புரியல
avatar
SK
சிறப்புப் பதிவாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 6181
மதிப்பீடுகள் : 1110

View user profile

Back to top Go down

Re: விண்மீன்களின் பிறப்பும், இறப்பும்

Post by ANTHAPPAARVAI on Fri May 20, 2011 4:27 pm

@ஆத்மசூரியன் wrote:விண்மீன் என்றால் என்ன ? அவை எவ்வாறு தோன்றியது ? அவை எப்படி ஒளியை தருகின்றன மேலும் எவ்வளவு காலம் ஒளியை தரும் ? அவற்றிர்க்கு இறப்பு என்று ஏதும் உண்டா போன்ற கேள்விகளுக்கு விடை தரும் வகையில் இக்கட்டுரை அமைந்துள்ளது.
[b]
........................................
........................................

நல்ல தகவல்கள் நண்பா, பாராட்டுக்கள்! இன்னும் அறிவுப் பூர்வமான தகவல்களைத் தொடர்ந்து வாழங்கிட வாழ்த்துக்கள்!!

மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி மகிழ்ச்சி
avatar
ANTHAPPAARVAI
தளபதி

தளபதி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 1681
மதிப்பீடுகள் : 136

View user profile

Back to top Go down

Re: விண்மீன்களின் பிறப்பும், இறப்பும்

Post by சிவா on Fri May 20, 2011 4:34 pm

@மகா பிரபு wrote:விண்மீன்கள் பற்றி அழகாக எழுதிய நண்பனுக்கு வாழ்த்துக்கள். இன்னும் நிறைய கட்டுரைகள் எழுதி ஈகரையின் வளர்ச்சிக்கு உதவுங்கள்.

வழிமொழிகிறேன்!
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: விண்மீன்களின் பிறப்பும், இறப்பும்

Post by ஆத்மசூரியன் on Sun Sep 30, 2012 2:12 am

நன்றி
avatar
ஆத்மசூரியன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 96
மதிப்பீடுகள் : 27

View user profile

Back to top Go down

Re: விண்மீன்களின் பிறப்பும், இறப்பும்

Post by ஆத்மசூரியன் on Sun Sep 30, 2012 2:27 am

படங்களின் இணைப்பிற்குப்பின்
avatar
ஆத்மசூரியன்
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 96
மதிப்பீடுகள் : 27

View user profile

Back to top Go down

Re: விண்மீன்களின் பிறப்பும், இறப்பும்

Post by மாணிக்கம் நடேசன் on Sun Sep 30, 2012 6:35 am

படங்களுடன் பக்குவமாய் படைத்திட்ட உங்களுக்கு எனது நன்றி.

மாணிக்கம் நடேசன்
கல்வியாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 4240
மதிப்பீடுகள் : 1232

View user profile

Back to top Go down

Re: விண்மீன்களின் பிறப்பும், இறப்பும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum