ஈகரை தமிழ் களஞ்சியம்



உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 ரா.ரமேஷ்குமார்

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 PKishanthini

நாவல் தேவை
 SK

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

கட்சி மாநாட்டில் சைவ சாப்பாடுதானாம் ...!!
 சிவனாசான்

இன்றைய செய்தித் தலைப்புகள் - சில….
 சிவனாசான்

நான் தேனி.
 சிவனாசான்

துன்பத்தோடு அனுபவம் வருகிறது…!!
 சிவனாசான்

வந்தியத்தேவன் வாள் - மென்னூல் வேண்டும்
 valav

TNPSC தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், பாட புத்தகத்தில் இருந்து எடுக்கப்பட்ட ஒரு வரி வினா விடைகள் (book back question and answers)
 thiru907

TNPSC மற்றும் RRB தேர்விற்கு பயிற்சி செய்ய உதவும் வகையில், Ramana Coaching Center வெளியிட்ட
 thiru907

உன்னை அடிச்சிக்கவே முடியாது
 T.N.Balasubramanian

இணைய உலகில் லீக்ஸ் ...பலவகை.
 T.N.Balasubramanian

விளம்பர படத்தில் நடிக்க பிரியா வாரியருக்கு ரூ.1 கோடி
 சிவனாசான்

கோழியும் மனிதனும்
 சிவனாசான்

அனைவருக்கும் இனிய வணக்கம்
 சிவனாசான்

கோவையில் தனியார் கல்லூரியில் பயிற்சியின் போது பயிற்சியாளர் தள்ளியதால் மாணவி உயிரிழப்பு
 சிவனாசான்

urupinar arimugam
 ரா.ரமேஷ்குமார்

காமாட்சியம்மன் விளக்கு
 சாமி

மீண்டும் காவேரி
 SK

வரகில் நிறைந்துள்ள சத்துகள்!
 SK

பூக்கும் நீரூற்று! - கவிதை
 SK

கற்களை சேகரிக்கும் கவர்ச்சி நடிகை
 SK

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 SK

சந்தேகம்
 சிவனாசான்

பொது அறிவு தகவல்
 சிவனாசான்

மின் இணைப்புக்கு ரூ.5 ஆயிரம் லஞ்சம்: மின் அதிகாரி கைது
 சிவனாசான்

மொக்க ஜோக்ஸ்
 Dr.S.Soundarapandian

இன்ஸ்டாகிராம் டிவி.
 Dr.S.Soundarapandian

ஆந்திராவில் இரும்பு ஆலையில் விஷவாயு கசிவால் 6 பேர் உயிரிழப்பு, 5 பேருக்கு சிகிச்சை
 Dr.S.Soundarapandian

ஏடிஎம் இயந்திரத்தை உடைத்து கொள்ளையடிக்க முயற்சி: கல்லூரி மாணவர் கைது
 Dr.S.Soundarapandian

உங்கள் போட்டோவை editing பண்ண சிறந்த software
 Meeran

இந்த வார இதழ்கள் சில jul
 Meeran

ஃபேஸ்புக் நிறுவனரின் சாதனையை முறியடித்த இளம் பெண்
 Mr.theni

இங்கிலாந்துடன் 2-வது ஒருநாள் போட்டியில் இன்று மோதல்; தொடரை வெல்லும் முனைப்பில் இந்தியா
 Mr.theni

பாகிஸ்தானில் தீவிரவாத தாக்குதல்: பலி எண்ணிக்கை 128 ஆக அதிகரிப்பு; காயம் 200
 Mr.theni

முட்டை கொள்முதல் விவகாரம்; ரூ. 5,000 கோடிக்கு ஊழல்: பொன்.ராதாகிருஷ்ணன் குற்றச்சாட்டு
 Mr.theni

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்புக்கு எதிர்ப்பு தெரிவித்து லண்டனில் ஆர்ப்பாட்டம்
 Mr.theni

மின்னூல்கள் தரவிறக்கம்

























Admins Online

பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு...

View previous topic View next topic Go down

பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு...

Post by மஞ்சுபாஷிணி on Sat Apr 02, 2011 6:49 pm

பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு...


மாதம் ரூ.45 ஆயிரம் கைகொடுத்த கார்மென்ட் பிஸினஸ் !
கு.ராமகிருஷ்ணன்
சாமான்ய பெண்களின் சாதனை கதை

தன் ஊரான தஞ்சாவூர் மாவட்டம், பாபநாசத்துக்கு கொஞ்சமும் சம்பந்தமில்லாத தொழில்தான் என்றாலும்கூட, தனித்துவமான பார்வையோடும்... நுட்பமான வியூகத்தோடும் கார்மென்ட்ஸ் தொழிலை கையிலெடுத்து, தான் ஒரு வெற்றிப் பெண்மணி என நிரூபித்துக் காட்டிய லோகநாயகி பற்றி, 'மனது வைத்தால்... 'மைனஸ்’கள் 'ப்ளஸ்’ஸாகும்!’ என்ற தலைப்பில் கடந்த இதழில் பதிவு செய்திருந்தோம். நிறைவான லாபம் பார்க்கும் லோகநாயகி தான் சந்தித்த சவால்களையும், இத்தொழிலில் கால் பதிக்க நினைப்பவர்களுக்குத் தேவையான வழிகாட்டல்களையும் தொடர்கிறார் இங்கு...


''சொந்தமா ஒரு தொழில் தொடங்கலாம்ங்கற எண்ணம் வந்தது. ஆனாலும், எந்தத் திசையில போறதுனு தெரியல. 'எனக்குத் தையல் தெரியும்ங்க’னு கணவர்கிட்ட சொன்னப்போ, 'எனக்கும் திருப்பூர்ல கொஞ்சநாள் வேலை பார்த்த அனுபவமிருக்கு’னு முன் வந்தார். 'அப்போ எக்ஸ்போர்ட் கம்பெனிகள்ல ஆர்டர் எடுத்து, பெரிய அளவுல செய்யலாம்ங்க’னு நான் சொன்னப்போ, 'ஆரம்பத்துலயே அகலக்கால் வேணாமே’னு தயங்கினார்.

'தெளிவான திட்டமும், தேவையான உழைப்பும் இருந்தா பயம் வேண்டாம். இதுக்காக நம்ம கைப்பணத்தைப் போட்டு பொருட்களை உற்பத்தி பண்ணிட்டு, விற்பனைக்காக தவிக்க வேண்டியதில்ல. எக்ஸ்போர்ட் கம்பெனிக்காரங்களே மொத்தமா துணி, நூல் எல்லாம் கொடுத்துடுவாங்க. அவங்க சொல்ற அளவுல துல்லியமா, நேர்த்தியா தைச்சுக் கொடுத்தாலே போதும். இங்க வேலைக்கும் நிறைய ஆட்கள் கிடைப்பாங்க. கண்டிப்பா இந்தத் தொழில்ல பெரிய அளவுல சாதிக்க முடியும்'னு அவர்கிட்ட எடுத்துச் சொன்னேன்... புரிஞ்சுக் கிட்டார். ஆனா, இதுக்கு 4 லட்சம் ரூபாய் தேவை... முதலீட்டுக்கு எங்க போறதுங்கற ஒரு கேள்வி, ரெண்டு பேர் மனசுலயுமே ஒரு சிறு தடையை ஏற்படுத்தப் பார்த்துச்சு'' என்று சொல்லும் லோகநாயகிக்கு, அப்போதுதான் பாதையைக் காட்டியிருக்கிறது, நாளிதழில் வெளியான ஓர் அறிவிப்பு.

' 'சிறு, குறு தொழில்கள் மேம்பாடு மற்றும் வளர்ச்சிக்கான திட்டம்’ங்கற அறிவிப்பை பார்த்துட்டு, உடனடியா விண்ணப்பம் போட்டேன். கும்பகோணம், இந்தியன் வங்கியில நேர்முகத் தேர்வு நடந்துச்சு. ஒரு மாசம் மேலாண்மைப் பயிற்சி, நிர்வாகம் தொடர்பா நிறைய கத்துக்கிட்டேன். அதுக்கிடையில கரூர்ல உள்ள ஒரு கார்மென்ட்ஸ் கம்பெனியில ஒரு வாரம் பயிற்சி. நாலு மாத காத்திருப்புக்கு அப்புறம் மாவட்ட தொழில் மையம், கலெக்டர் ஆபீஸ்னு அடுத்தடுத்து தொடர்ச்சியா பல நகர்வுகள். 'பெரியார் தொழில்நுட்ப வணிக காப்பக'த்துல திட்ட இயக்குநரா இருக்குற ராமசாமி தேசாய் உதவியோட, தெளிவான திட்ட அறிக்கையை இந்தியன் வங்கியில சமர்ப்பிச்சேன். எல்லாம் முடிஞ்சதும் லோன் 'ஓகே’ ஆச்சு!'' என்பவர் தனது நிறுவனத்துக்கான இடம், இயந்திரங்கள், பணியாளர்கள் தேர்வு உள்ளிட்டவைகளிலும் சிறப்பு கவனம் செலுத்தி, வெற்றிகரமாக தொழிலைத் தொடங்கியிருக்கிறார்.

''பெண் பணியாளர்களுக்கு வசதியா, பேருந்து நிலையப் பகுதியில உள்ள இந்தக் கட்டடத்தை வாடகைக்குப் பிடிச்சி, 25 இயந்திரங்களோடு நிறுவனத்தைத் தொடங்கினோம். ஆரம்பத்துல ஏகப்பட்ட பின்னடைவுகள்... தொடர்ச்சியா ஆறு மாசம் வரைக்கும் நஷ்டம். மின்சாரத்துல இயங்கற அதிநவீன இயந்திரங்களா இருந்ததுனால, பணியாளர்களால வேகமா வேலை பார்க்க முடியல. வாடகை, மின் கட்டணம், போக்குவரத்து செலவுகளுக்கே கட்டுப்படியாகல. ஆனாலும் அவங்க படிப்படியா, திறமையா வேலை பழகிகிட்டதால... வேகம் அதிகமாகி, நிறுவனம் பரபரப்பா இயங்க ஆரம்பிச்சுது. டவல், கிச்சன் ஏப்ரான், கிளவுஸ், ஜன்னல், கதவு விரிப்புகள், சேர் குஷன் துணி, பிளேட் விரிப்பு, மேஜை விரிப்பு, இன்னும் பலதரப்பட்டதையும் தைச்சு கொடுக்க ஆரம்பிச்சோம். இப்போ அது ஏறுமுகத்துல தொடர்ந்துட்டு இருக்கு'' என்று முகம் கொள்ளாத மகிழ்ச்சியோடு சொன்னவர்,

''இந்த அயிட்டங்கள் எல்லாமே வெளிநாடுகள்ல உள்ள ஸ்டார் ஹோட்டல்களுக்காக ஏற்றுமதி ஆகக்கூடியது. அதனால, எக்ஸ்போர்ட் கம்பெனிக்காரங்க சொல்ற அளவுல இருந்து ஒரு இன்ச் அதிகமாகவோ குறைவாகவோ போகக் கூடாது. சின்ன பிசிறுகூட இருக்கக் கூடாது. ரொம்பவே கவனமா இருக்கணும். இல்லைனா... எக்ஸ்போர்ட் கம்பெனிக்காரங்க நமக்கு வேலை கொடுக்க மாட்டாங்க. நாங்க ரொம்பவே நேர்த்தியா செஞ்சு கொடுக்குறதுனாலயும், சொன்ன நேரத்துக்கு சரியா முடிச்சுக் கொடுக்குறதுனாலவும், அடுத்தடுத்து வாய்ப்புகள் கிடைக்க ஆரம்பிச்சிருக்கு. இந்தத் தொழிலை தொடங்கி, கிட்டத்தட்ட மூணு வருஷம் ஆகுது. 17 பேர் வேலை பார்க்கறாங்க. 45 ஆயிரம் ரூபாய்க்கு மேல மாசா மாசம் லாபமா கிடைக்குது. சாதிச்சுட்ட சந்தோஷம் தினமும் கிடைக்குது!''

- உழைப்பும், முன் கணிப்பு ஆற்றலும்தான் லோகநாயகியை இந்தளவுக்குப் பெருமிதப்பட வைத்திருக்கின்றன!


நன்றி விகடன்
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு...

Post by அருண் on Sat Apr 02, 2011 6:58 pm

தன்னமிக்கையும் உழைப்பும் இருந்தால் வாழ்க்கையில் வெற்றி தான்நிருபித்து இருகிறார்கள்....
பகிர்தமைக்கு நன்றி அக்கா!
avatar
அருண்
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 12657
மதிப்பீடுகள் : 1748

View user profile

Back to top Go down

Re: பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு...

Post by மஞ்சுபாஷிணி on Sat Apr 02, 2011 8:42 pm

அருமையிருக்கு நன்றி
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு...

Post by முரளிராஜா on Sat Apr 02, 2011 8:51 pm

உழைப்பின் முக்கியத்துவத்தை உணர்த்திய பதிவு
avatar
முரளிராஜா
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 10488
மதிப்பீடுகள் : 1179

View user profile

Back to top Go down

Re: பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு...

Post by மஞ்சுபாஷிணி on Sat Apr 02, 2011 8:54 pm

நன்றி
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

Re: பூஜ்யத்திலிருந்து ராஜ்ஜியத்துக்கு...

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum