புதிய பதிவுகள்
» காதல் பஞ்சம் !
by jairam Today at 11:24 pm

» கருத்துப்படம் 14/05/2024
by mohamed nizamudeen Today at 9:58 pm

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Today at 8:39 pm

» தென்காசியில் வீர தீர சூரன் -படப்பிடிப்பு
by ayyasamy ram Today at 6:58 pm

» அஜித் பட விவகாரம்- த்ரிஷா எடுத்த முடிவு
by ayyasamy ram Today at 6:56 pm

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Today at 6:52 pm

» ஆன்மிக சிந்தனை
by ayyasamy ram Today at 6:51 pm

» சின்ன சின்ன செய்திகள்
by ayyasamy ram Today at 6:44 pm

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Today at 6:30 pm

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Today at 6:15 pm

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Today at 6:02 pm

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Today at 5:44 pm

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Today at 5:36 pm

» நிலா பாட்டுக்கள்
by heezulia Today at 5:20 pm

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Today at 5:03 pm

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Today at 4:25 pm

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Today at 4:08 pm

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Today at 3:53 pm

» மார்க் எவ்ளோனு கேட்கறவன் ரத்தம் கக்கி சாவான்..!!
by ayyasamy ram Today at 3:28 pm

» ஈகரை வருகை பதிவேடு
by ayyasamy ram Today at 1:59 pm

» மாநகர பேருந்து, புறநகர் - மெட்ரோ ரெயிலில் பயணிக்க ஒரே டிக்கெட் முறை அடுத்த மாதம் அமல்
by ayyasamy ram Today at 1:28 pm

» இதுதான் கலிகாலம்…
by ayyasamy ram Today at 12:07 pm

» சாளக்ராமம் என்றால் என்ன?
by ayyasamy ram Today at 8:54 am

» 11 லட்சம் மதிப்புள்ள பொருட்களை தான் படித்த பள்ளிக்கு கொடுத்த நடிகர் அப்புக்குட்டி..!
by ayyasamy ram Today at 8:52 am

» நீங்கள் கோவிஷீல்டு ஊசி போட்டவரா..? அப்போ இதை மட்டும் செய்யுங்க.. : மா.சுப்பிரமணியன்..!
by ayyasamy ram Today at 8:50 am

» சிஎஸ்கேவின் கடைசி போட்டிக்கு மழை ஆபத்து.. போட்டி ரத்தானால், பிளே ஆப்க்கு செல்லுமா சென்னை?
by ayyasamy ram Today at 8:48 am

» இது தெரியுமா ? குழந்தையின் வளர்ச்சிக்கு இந்த ஒரு கிழங்கு கொடுங்க போதும்..!
by ayyasamy ram Today at 8:46 am

» ஜூஸ் வகைகள்
by ayyasamy ram Yesterday at 6:35 pm

» பாராட்டு – மைக்ரோ கதை
by ஜாஹீதாபானு Yesterday at 12:02 pm

» books needed
by Manimegala Yesterday at 10:29 am

» திருமண தடை நீக்கும் குகை முருகன்
by ayyasamy ram Yesterday at 7:59 am

» நாவல்கள் வேண்டும்
by Barushree Sun May 12, 2024 10:29 pm

» என்னது, கிழங்கு தோசையா?
by ayyasamy ram Sun May 12, 2024 7:38 pm

» பேல்பூரி – கேட்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:34 pm

» பேல்பூரி – கண்டது
by ayyasamy ram Sun May 12, 2024 7:32 pm

» ஊரை விட்டு ஓடுற மாதிரி கனவு வருது டாக்டர்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:27 pm

» ’மூணு திரு -வை கடைப்பிடிக்கணுமாம்!
by ayyasamy ram Sun May 12, 2024 7:25 pm

» அன்னையர் தின நல்வாழ்த்துக்குள
by ayyasamy ram Sun May 12, 2024 1:28 pm

» "தாயில்லாமல் நாமில்லை"... இன்று உலக அன்னையர் தினம்..!
by ayyasamy ram Sun May 12, 2024 1:27 pm

» சுஜா சந்திரன் நாவல்கள் வேண்டும்
by Guna.D Sat May 11, 2024 11:02 pm

» என்ன வாழ்க்கை டா!!
by ayyasamy ram Sat May 11, 2024 7:48 pm

» அக்காவாக நடிக்க பல கோடி சம்பளம் கேட்ட நயன்தாரா!
by ayyasamy ram Sat May 11, 2024 7:41 pm

» "தாம்பத்யம்" என பெயர் வரக்காரணம் என்ன தெரியுமா..?
by ayyasamy ram Sat May 11, 2024 7:30 pm

» தாம்பத்தியம் என்பது...
by ayyasamy ram Sat May 11, 2024 7:07 pm

» பிரபல திரைப்பட பின்னணி பாடகி உமா ரமணன் காலமானார்
by ayyasamy ram Sat May 11, 2024 6:49 pm

» அட...ஆமால்ல?
by ayyasamy ram Sat May 11, 2024 6:44 pm

» பார்க்க வேண்டிய திரைப்படங்கள்
by ayyasamy ram Fri May 10, 2024 9:04 pm

» இன்றைய தேதிக்கு தூணிலும் துரும்பிலும் இருப்பது…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:57 pm

» அவருக்கு ஆன்டியும் பிடிக்கும், மிக்சரும் பிடிக்கும்!
by ayyasamy ram Fri May 10, 2024 8:56 pm

» யாருக்கென்று அழுத போதும் தலைவனாகலாம்…!
by ayyasamy ram Fri May 10, 2024 8:55 pm

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
இலங்கை தமிழ் சிறுகதை வளர்ச்சிப் போக்கு தேக்க நிலையில் தான் இருக்கிறது.  Poll_c10இலங்கை தமிழ் சிறுகதை வளர்ச்சிப் போக்கு தேக்க நிலையில் தான் இருக்கிறது.  Poll_m10இலங்கை தமிழ் சிறுகதை வளர்ச்சிப் போக்கு தேக்க நிலையில் தான் இருக்கிறது.  Poll_c10 
30 Posts - 55%
heezulia

21 Posts - 38%
Manimegala
இலங்கை தமிழ் சிறுகதை வளர்ச்சிப் போக்கு தேக்க நிலையில் தான் இருக்கிறது.  Poll_c10இலங்கை தமிழ் சிறுகதை வளர்ச்சிப் போக்கு தேக்க நிலையில் தான் இருக்கிறது.  Poll_m10இலங்கை தமிழ் சிறுகதை வளர்ச்சிப் போக்கு தேக்க நிலையில் தான் இருக்கிறது.  Poll_c10 
1 Post - 2%
mohamed nizamudeen

ஜாஹீதாபானு

jairam

இந்த மாத அதிக பதிவர்கள்

151 Posts - 50%

113 Posts - 38%

12 Posts - 4%
prajai

9 Posts - 3%
Jenila

4 Posts - 1%
Rutu

3 Posts - 1%

Guna.D

2 Posts - 1%
Ammu Swarnalatha

Baarushree

நிகழ்நிலை நிர்வாகிகள்

இலங்கை தமிழ் சிறுகதை வளர்ச்சிப் போக்கு தேக்க நிலையில் தான் இருக்கிறது.

தமிழ்ப்ரியன் விஜி
தமிழ்ப்ரியன் விஜி
தளபதி

தளபதி
பதிவுகள் : 1500
இணைந்தது : 26/06/2009
http://www.eegarai.com

Postதமிழ்ப்ரியன் விஜி Mon Mar 28, 2011 9:38 am

இலங்கை நவீன தமிழ் இலக்கிய படைப்புத் துறையில் முக்கியமான ஒருவர் திருமதி கோகிலா மகேந்திரன். கடந்த 35 வருடங்களுக்கு மேலாக எழுத்துத் துறையோடு தம்மை ஆர்வமாக ஐக்கியப்படுத்திக் கொண்ட இவர், தமது எழுத்திலும் நோக்கிலும் படிப்படியான வளர்ச்சியைக் கண்டு தமது அறிவு, அனுபவம், சிந்தனை ஆகிய அனைத்தையும் தமது எழுத்து உலகிற்கு அர்ப்பணித்து வருகின்ற ஒருவர் என்றால் அதில் மிகையில்லை.

யாழ்ப்பாணம், தெல்லிப்பழை, விழிசிட்டி கிராமத்தைச் சேர்ந்த திருமதி கோகிலா மகேந்திரன் தெல்லிப்பழை மகாஜனாக் கல்லூரி மாணவி. பிறந்த ஊரின் வளமும் படித்த கல்லூரியின் இலக்கியத் தளமும் இலக்கிய ஆர்வமும் கற்பனைத் திறனும் அறிவுத் தேடலும் கோகிலா ஓர் சிறந்த படைப்பாளிஆகத் துலங்க அடிப்படைகளாக அமைந்திருக்கின்றன.

இத்தகையதொரு வளமான பின்னணியில் கல்வி கற்றுத்தேறிய இவர் பாடசாலை ஆசிரியராய் அதிபராய், பிரதிக் கல்விப் பணிப்பாளராய் சிறப்பான பணிபுரிந்து ஓய்வு பெற்றவர் என்பது தெரிந்த விடயமே. தவிரவும் கோகிலாவின் ஆர்வம், எழுத்தோடு மட்டும் மட்டுப்படுத்தப்பட்டு விடாமல் மேடை நாடகத் துறையிலும் அதனையும் அடுத்து சீர்மியத்துறையிலும் (Councelling) சென்றுள்ளது என்பதையும் குறிப்பிட வேண்டும். நிரம்பிய அறிவுத் தேடலும் எதனையும் துருவித்துருவி ஆராயும் பாங்கும் விடா முயற்சியும் இவரது குணாம்சங்கள். அத்துடன் இவர் ஒரு சிறந்த பேச்சாளராகவும் விளங்குகின்றார்.

சிறுகதை, நாவல், கட்டுரை, நாடகம், சீர்மியம் எனப் பல்துறைகளிலும் இவர் நூல்களை எழுதியிருக்கிறார். இவை தவிர வேறு சில நூல்களையும் இவர் தந்திருக்கிறார். இவரது நூல்களில் பிரசவங்கள், வாழ்வு ஒருவலைப் பந்தாட்டம் ஆகியன சாகித்தியப் பரிசைப் பெற்றிருக்கின்றன. இவை தவிர இவருக்கு ஈழத்து இலக்கிய உலகில் வேறு பல பாராட்டுதல்களும் கௌரவங்களும் கிடைத்திருக்கின்றன.

சிறுகதைத் துறையில் கோகிலா ஆழமாகவே தடம் பதித்தவர். இவர் தமது சிறுகதை எழுத்தனுபவத்தைக் குறிப்பிடும்போது, ""என்னைப் பாதித்தவற்றை என் மனதைத் தொட்டவற்றை என்னிடம் கோபம் ஏற்படுத்தியவற்றை பொருத்தமான வடிவங்களில் கொண்டு வர முயற்சித்திருக்கிறேன். மனிதத்துவம் மறைந்து போகின்ற சந்தர்ப்பங்கள் எனது உணர்வில் மறைத் தாக்கத்தை ஏற்படுத்தும்போது அந்த உணர்வைச் சமநிலைப்படுத்த வேண்டி நான் எழுதுகிறேன். அதே நேரத்தில் சமூகத்திற்கும் பொருத்தமான செய்தியைத் தருகின்றதோ என்றும் பார்த்துக் கொண்டிருக்கின்றேன்'' என்று ஒரு நேர்காணலில் குறிப்பிட்டதையும் இங்கு குறிப்பிடுதல் பொருத்தம்.

இத்தகைய பல்துறை ஆளுமை நிறைந்த எழுத்தாளரை அண்மையில் சந்தித்தபோது சிறுகதைத் துறையிலும் மற்றும் இன்றைய இலக்கியத்துறை குறித்தும் ஒரு சில கருத்துகளைக் கேட்டறிய முடிந்தது. அவற்றை கலைக்கேசரி வாசகர்களுடன் பகிர்ந்து கொள்கின்றோம். இலங்கையில் சிறுகதை வளர்ச்சிப் போக்கு தற்போது எந்தவிதமாக இருக்கிறது என்று கூறுங்கள்? எனக்கேட்டபோது, கோகிலா மகேந்திரன் பின் கண்டவாறு கூறினார்.

தேக்க நிலைக்கு வந்துவிட்டது என்ற உண்மையை ஒத்துக் கொள்ளத்தான் வேண்டும். அறுபதுகள், எழுபதுகள், எண்பதுகள் ஏன் தொண்ணூறுகளில் கூட மேலே சென்று கொண்டிருந்த சிறுகதைப் போக்கின் வேகம் இப்போது காணப்படவில்லை. ஆழ்ந்து நோக்குகிற போது எல்லாக் கலை இலக்கியப் பரப்பிலும் இந்தத் தேக்கம் அவதானிக்கப்படுகிறது. இதற்கு என்ன காரணம் என்று நோக்க வேண்டும். ஒரு சமூகம் மிக மகிழ்வுடன் வாழ்கிறபோது அந்தச் சமூகத்தின் உச்சியில் இருந்து நுண்மதி மிக்கவர்களில் இருந்து படைப்பாக்கத்திறன் அதிகம் கொண்டவர்களிடமிருந்து தான் நல்ல இலக்கியங்கள் தோன்றும்.

1960 1970 களில் எல்லாம் பல்கலைக்கழகங்களில் இருந்து நல்ல எழுத்தாளர்கள் தோற்றம் பெற்றார்கள். பொதுவாக உயர் நுண்மதி உள்ளவர்கள் அனைவரும் வந்து சேருமிடம் பல்கலைக்கழகம். அங்கிருந்து உயர் இலக்கியங்கள் தோன்றும் வாய்ப்பு அதிகம். அங்கே அவர்கள் கலை, இலக்கியங்களை பாடமாகவும் படிப்பதனால் இந்த வாய்ப்பு இன்னும் அதிகம். ஆயினும் துர்அதிர்ஷ்டவசமாக இந்த நாடு கடந்த முப்பது வருடங்களாகத் தொடரும் அனர்த்தங்களில் மூழ்கிப் போனது. சமூகத்தை வழி நடத்தும் திறன் கொண்ட இளைஞர்கள், அதிக நுண்மதி கொண்ட வர்க்கத்தினர் பெரும்பாலும் நாட்டை விட்டு வெளியேறும் நிலை ஏற்பட்டது.

இங்கே இருந்தவர்கள் பலரும் கூட தமது அடிப்படைத் தேவைகள் பற்றி தாமே மகிழ்வாக இருப்பதற்கான வழி பற்றிய தேடலில் இருக்க நேர்ந்தது. ஓரளவு நெருக்கீடுகள் சில வேளை நல்ல இலக்கியங்கள் தோன்ற உதவலாம். ஆயினும் பெரிய நெருக்கீடுகள் எதுவும் செய்ய முடியாத ஒரு நிலை நோக்கியே மனிதர்களைத் தள்ளும். ஒரு சில இளைஞர்கள் நன்றாக எழுது கிறார்கள். ஆயினும் மொத்தமான வளர்ச்சி மகிழ்வு அடையும்படி இல்லை'' என்று தெரிவித்தார். சிறுகதையில் பெண் எழுத்தாளர்களின் பங்களிப்பு குறிப்பிடும் படியாக அமைந்து இருக்கிறதா'' என்ற கேள்விக்கு இவர் பதில் தரும்போது இந்தக் கேள்விக்கான பதிலின் ஒரு பகுதி முதற் கேள்வியின் பதிலுக்குள் இருக்கிறது.

ஒரு சமூகம் மொத்தமாக பாதிக்கப்படுகிறபோது அதற்குள்ளே இலகுவில் பாதிப்படையும் கூட்டத்தி னராகப் பெண்களும் குழந்தைகளும் வயோதிபர்களும் அடங்குவது தெளிவு. குடும்பம் என்ற அலகின் சமநிலை குலைகிற போது அதனால் அதிகம் மனஉளைச்சலைப் பெறுபவர்கள் பெண்களே. குடும்பத்தினர் அனைவரும் சேர்ந்து அமைதியாகவும் சந்தோசமாகவும் வாழுகின்ற குடும்பங்களை இன்று நமது நாட்டில் விரல் விட்டு எண்ணி விடலாம்.

பெரும்பாலான குடும்பங்களில் ஒரு சில அங்கத்தவர்களாவது வெளிநாட்டில் இருக்கிறார்கள். இன்னும் பல குடும்பங்கள் இழப்புகளைச் சந்தித்து ஏங்கிப் போய் இருப்பவை. மற்றும் பலருக்குப் பொருளாதார நெருக்கடி வாழ்வைக் கொண்டு நடத்த முடியாத போது இலக்கியம் படைப்பது யார்? எமது நாட்டில் பெண் எழுத்தாளர்களின் பங்களிப்பு எப்போதுமே குறைவாகவே இருந்து வந்தது. இளந்தலைமுறையினர் மத்தியிலும் இன்னும் குறைந்து விட்டது'' எனக் குறிப்பிட்டார்.

இளந் தலைமுறையினரிடையே இலக்கிய நூல் வாசிப்பு எப்படி இருக்கிறது? என்ற கேள்விக்கு இவரது அவதானிப்பு பின் கண்டவாறு அமைந்தது. ""இளந் தலைமுறையினர் மற்றும் மாணவர்களிடையே வாசிப்புப் பழக்கம் அருகி வருவது பற்றி மேடைகள் தோறும் பலரும் கவலை தெரிவித்து வருவதை அவதானிக்கிறோம். ஏனைய இனத்தவருடன் ஒப்பிடும்போது, தமிழ் மக்கள் மத்தியில் இது இன்னும் மோசமாகக் குறைவடைந்திருப்பதைச் சில ஆய்வுகளும் நிரூபித்துள்ளன. வாசிப்பு என்பது கண் என்ற புலன் அங்கத்தினூடாக விடயங்களை மூளையில் உள்வாங்குவது கண், காது ஆகிய இரு புலன் அங்கங்கள் ஊடாகவும் அசையும் காட்சிகளை உள்வாங்கத்தக்க ஊடகங்கள் வந்துவிட்ட பிறகு வாசிப்பு வலுவற்றுப் போவதிலும் வியப்பில்லை. வானொலி வந்த பிறகு கிராமபோன் மெல்ல மெல்ல மறைந்து விடவில்லையா? வானொலி, தொலைக்காட்சி, கணனி ஆகியவை அடுத்த சந்ததியின் நூல் வாசிப்புப் பழக்கத்தை வெகுவாகக் குறைத்து விடும் என்பதில் சந்தேகமில்லை. தவிரவும் உலகம் முழுவதிலுமே புனைகதை நூல்களைவிடப் புனை கதை சாரா நூல்கள் அதிக ஆர்வத்துடன் படிக்கப்படும் போக்குத் தொடங்கி விட்டது. உலகில் அறிவு வெகு வேகமாக வளரத் தொடங்கிவிட்டது. அதில் ஒரு பகுதியையாவது பெற்றுக் கொள்ளாதவர்கள் மற்றவர்களோடு போட்டியிடுவது கஷ்டமாகி விட்டது. ஒரு சிறுகதையை ஆறுதலாகப் படித்து அது தரும் ஒரு செய்தியைப் பெற்றுக் கொள்ளும் பொறுமையும் நேரமும் இளைஞர்களிடம் இல்லை. அதை விட விரைவாக அவர்கள் இயங்க வேண்டி இருக்கிறது.

உயிர்களுக்கிடையேயான வாழ்வுப் போட்டியில் வல்லமை யுள்ளது வெற்றி பெறும் என்று டார்வின் எப்போதோ சொன்னார். நின்று தரித்து இலக்கியங்களை ரசிப்பதற்கு அவர்களுக்கு நேரமில்லை. ஒரு வகையில் பார்த்தால் அவர்களைப் பிழை சொல்ல முடியாது. ஆயினும் ஒரு சிலர் நன்கு வாசிக்கிறார்கள். விதி விலக்குகள் எப்போதும் இருக்கத்தான் செய்யும்'' என்றார்.

""எழுத்துத் துறையில் மிக ஈடுபாட்டுடன் இருந்த நீங்கள் சில காலமாக மன வளத்துறையில் அதிக ஈடுபாடு காட்டுவதற்கு ஏதாவது காரணம் உண்டா? என்ற வினாவுக்கு தந்த பதில்.

உண்டு, ஆசிரியராக அதிபராக, பிரதிக் கல்விப் பணிப்பாளராக நான் அரச சேவையில் பணியாற்றிய காலங்களில் மனிதர்களுக்கிடையில் ஏற்படும் பிரச்சினைகளைத் தீர்க்க வேண்டி ஏற்பட்டது.

ஆசிரியராக இருந்த காலத்திலேயே எனது வகுப்பில் இரண்டு மாணவர்கள் அடிபட்டுக் கொண்டார்களானால் அவர்கள் இருவரையும் கூப்பிட்டு நானும் தண்டனை கொடுத்துவிட்டுப் போகிற ஆசிரியராக இருந்ததில்லை. இவர்கள் ஏன் சண்டையிடுகிறார்கள் என்று ஆழ்ந்து ஆராய்வேன். சண்டையிட்ட அந்தப் பிள்ளைகள் பெரும்பாலும் குடும்பப் பிரச்சினை உள்ள இடங்களில் இருந்து வந்திருப்பார்கள். சிறுகதைகள் எழுதுவதற்காக மனித உறவுச் சிக்கல்களை ஆராய்ந்த போதும் கூட அந்த இடங்களில் எல்லாம் ஒரு உளநலக் குறைவு இருப்பதை அவதானிக்க முடிந்தது.

இவ்வாறு ஏற்பட்ட அக்கøறு காரணமாக சீர்மியர் பயிற்சி நெறி ஒன்றில் பயின்று முறைமையான தராதரத்தைப் பெற்றுக் கொண்டேன். இவ்வாறு நான் படித்து முடித்திருந்த வேளையில்தான் எமது பிரதேசத்தில் போர் அனர்த்தம் உக்கிரம் கொள்ளத் தொடங்கியது. பாடசாலை மாணவர்களின் உளநலம் தொடர்பாக ஆசிரியர்களையும் அதிபர்களையும் பயிற்றுவிக்க வேண்டி ஏற்பட்டது. உளநலப் பாதிப்புகள் பரீட்சைப் பெறுபேறுகளிலும் தாக்கம் விளைவித்தது.

ஆகவே அந்த நேரத்தில் வேறு எந்த உதவியையும் விட மாணவர்கள், ஆசிரியர்கள், அதிபர்களின் உளநலத்திற்கு உதவும் கட்டாயம் ஏற்படவே நானும் தொடர்ந்து வெளிநாட்டுக்குச் சென்று கற்க நேர்ந்தது. விடயங்கள் புரியப் புரிய அத்துறை சார்ந்த நாட்டம் இன்னும் அதிகரித்தது. எனது படைப்புகளிலும் உளவியல் கூறு ஒன்று வலிமை பெறுவது என்பது எனக்குரிய தனித்துவமானது. அதையும் நான் விரும்பினேன். எனவும் தெரிவித்தார்.கலைக்கேசரிக்காக அவர் எம்முடன் உரையாடியமைக்கு நன்றி தெரிவித்து விடைபெற்றோம்.

நேர்முகம்: அன்னலட்சுமி இராஜதுரை கலைகேசரி

தூற்றுதல் ஒழி
நேர்படப் பேசு
சொல்வது தெளிந்து சொல்
பூமி இழந்திடேல்
தோல்வியிற் கலங்கேல்
செய்வது துணிந்து செய்
ரௌத்திரம் பழகு
நையப் புடை

- பாரதியார்-
avatar
கலைவேந்தன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 13394
இணைந்தது : 04/02/2010
http://kalai.eegarai.info/

Postகலைவேந்தன் Mon Mar 28, 2011 10:01 am

ஒரு நாடு வளர்ச்சியின் பின்னடைவில் இருக்கும் போது இலக்கியங்களின் வளர்ச்சி தடைப்படுவது வியப்பே இல்லை.. முச்சங்கங்கள் வைத்து தமிழ் வளர்த்த தமிழகம் களப்பிரரின் ஆட்சிக்காலத்தில் இலக்கியம் கலை வளர்ச்சிகள் குன்றிப்போய் இருண்ட காலம் எனக்குறிப்பிடும் வகையில் அமைந்தது நாம் அறிந்ததே..

நாடு உன்னத நிலை பெறும்போது இலக்கியம் கலை ஆகியன அபாரவளர்ச்சி பெறும்.. ஈழத்திலும் தமிழர்கள் நிலை மேம்பட்ட பின் இலக்கியம் கலை ஆகியன செழித்து வளரும் .. நம்பிக்கையுடன் இருப்போம்.

பகிர்வுக்கு நன்றி விஜி..!
avatar
இந்த பதிவைத் துவங்கியவர் நன்றி கூறியுள்ளார் கலைவேந்தன்

நிலையற்றது வாழ்க்கை : நிலைபெற்றது மரணம்..!!
கலையுற்றது வறட்சி: நிலைபெற்றது மௌனம்..!!

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது

பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.

உள்நுழைக