ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
மின்னூலகம் இணையதளத்தினுள் நுழைய அனுமதி பெறுவது எப்படி??
 sudhagaran

'50 ஆண்டுகளுக்கு சுத்தம்செய்ய வேண்டாம்'- பசுமைக் கழிப்பறையை உருவாக்கி அசத்திய மாணவர்கள்
 பழ.முத்துராமலிங்கம்

தேங்காய்ப்பாலுக்கு "அப்படி" ஒரு சக்தி...!
 பழ.முத்துராமலிங்கம்

வரும் மாதம் வானில் நடக்க இருக்கும் அதிசியம்..! மிஸ் பண்ணிடாதீங்க..!! இப்பவே ரெடியா இருங்க..!!!
 பழ.முத்துராமலிங்கம்

யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 T.N.Balasubramanian

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

எனக்குள் ஒரு கவிஞன் SK
 T.N.Balasubramanian

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 ஜாஹீதாபானு

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 SK

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 SK

ஈகரையில் காணாமல் போனவர்கள் பற்றிய அறிவிப்பு!
 SK

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 SK

சாண்டில்யனின் புகழ் பெற்ற 50 சரித்திர நாவல்கள் இலவசமாக டவுன்லோட் செய்ய ..
 sudhagaran

காடும் காடர்களும்
 முனைவர் ப.குணசுந்தரி

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 3:29 am

First topic message reminder :

மொழி பெயர்ப்பாளரின் நன்றியுரை

திரு. கர்மயோகி அவர்களின் SPIRITUALITY & PROSPERITY PART – I என்ற ஆங்கில படைப்பை தமிழாக்கம் செய்து வெளியிடுவதற்கு எனக்கு அனுமதி அளித்ததிற்கு என்னுடைய நன்றியறிதலை முதலில் அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இம்மொழிப்பெயர்ப்பை புத்தகமாக வெளியிடுவதற்கு வெளியிட முன்வந்த கடலூர் தியான மையத்திற்கும், இம்மொழி பெயர்ப்பை ஆங்கில மூலத்திற்கு ஏற்றபடி திருத்தம் செய்து கொடுத்த திரு. N.அசோகன் அவர்களுக்கும், தமிழாக்கத்தின் தரத்தை மேம்படுத்திக் கொள்ள உதவும் வகையில் தன்னுடைய தமிழாக்கப் பிரதிகளை படிப்பதற்கு எனக்கு வழங்கிய ராணிப்பேட்டை தியான மைய பொறுப்பாளர் திரு. S. லஷ்மிநாராயணன் அவர்களுக்கும் மற்றும் பல வகையில் உதவிய சக அன்னை அன்பர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

என்னால் முடிந்தளவிற்கு இம்மொழி பெயர்ப்பினை எனக்குத் தெரிந்தளவிற்கு செய்துள்ளேன். அதையும் மீறி மூலத்தின் கருத்துச் சிறப்பு சில இடங்களில் சரியாக வெளிப்படவில்லை என்று வாசகர்களுக்கு மனதில் பட்டால் பொறுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றேன்.

பகவான் ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ஸ்ரீ அன்னை அவர்களுக்கு இப்படி எழுத்து மூலமாக, இச்சிறு சேவையை செய்ய முடிந்ததிற்கு என் நன்றியறிதலை அவர்கள் பொற்பாதங்களில் சமர்ப்பணம் செய்கின்றேன்.

M. மணிவேல்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84429
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 4:02 am

75. மனிதனின் பர்சனாலிட்டி

சாதாரணமாக அன்றாட உரையாடலின் போது, பொதுவாக ஒருவரின் உடல் அமைப்பையும் அழகையும் குறிப்பிடும் வகையில், உயரமானவர், அழகானவர், வசீகரமானவர் என்ற சொல்லை உபயோகிக்கிறோம். பர்சனாலிட்டி என்ற சொல் ஒருவருடைய மனவலிமை, குணநலன்களை அடிப்படையாகக் கொண்டிருக்கிற உள்ளே உள்ள இயற்கையான பண்புகள், மற்றும் திறனைப் பற்றித்தான் குறிக்குமேயன்றி, வெளித்தோற்றமல்ல. வெளித் தோற்றத்தை விவரிக்க விரும்பினால் "இவர் நல்ல உடற்கட்டு கொண்டவர்" என்று சொல்லலாம். உடற்கட்டு என்பது வெளித்தோற்றத்தை மட்டும் குறிக்கிறது. ஆன்மா மனிதனுக்குள்ளே ஆழ்ந்த மையத்தில் உறைகிறது. அங்கிருந்து வரும் அழைப்பு அதிக சக்தி வாய்ந்தது.

பழக்கங்கள் என்பது வெளியில் தெரியும் நடத்தையைக் குறிக்கும். அது ஒருவர் தன் மனதில் என்ன நினைக்கிறார் என்பதைத் தெரிவிக்காது. வெளிப்புற பழக்கங்கள் உள்ளே உள்ள உண்மையான குணங்களை பிரதிபலிப்பதே நடத்தையாகும். பழக்கங்கள் வெளியில் தெரியும். நல்ல நடத்தை உள்ளே தெரியும். இரண்டுமே மனிதனின் ஜீவனின் மேல்மட்டத்திலிருந்து வரக்கூடியவை. முக்கியமான பிரச்சனைகளைச் சந்திக்கும் பொழுது இவை இரண்டுமே உதவிக்கு வராது. பழக்கங்கள், மற்றும் நடத்தைகளுக்குக் கீழே முறைப்படுத்தப்பட்ட சுபாவம் உள்ளது. சுபாவமானது, வலிமை, திறமை, ஞாபக சக்தி, விடாமுயற்சி இவைகளை வெளிப்படுத்துகிறது. இவைகள் யாவும் பலநிலைகளில் பலவித தீவிரத்துடன் முறைப்படுத்தப்பட்டுள்ளன. சுபாவத்தைக் கடந்து மனிதனின் முறைப்படுத்தப்படாத சக்தி உள்ளது. அந்த சக்தி, சுபாவம் கைகொடுக்காதபோது, புதிய பிரச்சனைகளைச் சந்திக்கத் தயாராகுகிறது.

ஆன்மாவை அழைத்தல் என்பது மேற்கண்ட நிலைகளில் ஏதாவது ஒன்றிலிருந்து அழைப்பதாகும். ஆழத்திலிருந்து வரும் அழைப்பு அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். நமது கட்டுப்பாட்டுக்குள் அடங்காத எண்ணங்கள் ஓடிக் கொண்டிருக்கும் பழக்கம், முதல்நிலையாகும். சிந்திப்பது, அடுத்த நிலையான நடத்தையாகும். நமது பண்புகளைக் குறிக்கும் எண்ணங்களின் ஆழத்திலிருப்பது சுபாவமாகும். நாம் நமது எண்ணங்களை ஒருமுகப்படுத்தினால், சுபாவத்தின் நிலைக்குச் சென்று ஆன்மாவை அழைக்க முடியும். அது அதிக சக்தி வாய்ந்ததாக இருக்கும். ஆன்மாவை அழைப்பதற்கு மனித இயல்பைக் கடந்து, எண்ணங்களை ஒருமுகப்படுத்த வேண்டும். மனிதன் தன்னால் புரிந்து கொள்ள முடியாத பிரச்சனையை எதிர்கொள்ளும் பொழுது, சுபாவமும் கைவிட்ட நேரத்தில், அங்கே ஆன்மாவை அழைத்தால் நமக்குத் தெரிந்ததும் தெரியாததுமான பிரச்சனைகள் எல்லாம் தீரும்.

நம்முள் இறங்கும் அமைதியின் சக்தி அழைப்பின் ஆழத்தைத் தெரிவிக்கிறது.
யோகத்தில் அழைப்பை விடுப்பது மனிதன் இல்லை. விழித்துக் கொள்ளும் ஆன்மாதான் அழைப்பு விடுக்கிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84429
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 4:03 am


76. ஒரு பரிசோதனை - ஒரு உரையாடல்


இப்பரிசோதனைக்கான நிபந்தனைகள் நம்பிக்கையை ஆன்மாவிற்கு மாற்றுவது, அதிகபட்ச வேலைத்திறன் மற்றும் மௌன சக்தி என்று புரிந்து கொள்கிறேன்.

நம்பிக்கையை ஆன்மாவிற்கு மாற்றுவது என்றால் என்ன என்பதைப் பற்றி புரிந்து கொள்வது மிகவும் முக்கியம். நாம் மனதாலும் உணர்வாலும் செயல்படும் வழிகளில் நம் நம்பிக்கையை வைத்துள்ளோம். இந்த வழிகளின் மீது வைத்துள்ள நம்பிக்கை முழுவதுமாக ஆன்மாமீது திரும்ப வேண்டும். உதாரணமாக, உங்கள் உற்பத்திப் பொருளுக்குள்ள நற்பெயர்மீது நம்பிக்கை வைத்திருப்பீர்கள். உங்கள் பொருள் தரம் குறைந்ததாக இருந்தாலும், ஆன்மா அதையும் மீறி செயல்பட முடியும் என்று நம்ப வேண்டும்.

இது உண்மை என்பதை நான் பலமுறை என்னுடைய பொருட்களிலும் மற்றவர்களுடைய பொருட்களிலும் பார்த்திருக்கின்றேன். எப்பொழுதும் சிறந்த பொருளுக்கே பரிசு கிடைப்பது இல்லை. சில நேரங்களில் இரண்டாவது மூன்றாம் தரமுள்ள பொருள்கூட பரிசுகளை தட்டிச் செல்கின்றது. அது ஒரு அனுபவம் என்பதை நான் அறிவேன்.

இந்த அனுபவங்களின் அடிப்படையில் ஆன்மாவின் செயல்பாட்டின் மீது, உங்கள் நம்பிக்கையை வளர்த்துக் கொள்ள வேண்டும். நான் உங்களைக் கேட்டுக் கொள்வது என்னவென்றால், எந்தவிதமான ஆராய்ச்சியையும் உதாரணமாக எடுத்துக் கொள்ளாமல், ஆன்மாமீது நம்பிக்கை வைக்க வேண்டுமென்பதாகும். அதுவே சிறந்தது. அது ஆன்மாமீது ஆன்மாவுக்காகவே வைத்திருக்கும் உண்மையான நம்பிக்கையாகும்.

அந்த மாற்றம் நிகழும். ஆனால் நிலையானதாக இருக்காது. அந்த மாற்றம் விட்டு விட்டு நிகழும்.

நம்பிக்கை உள்ள போதுதான், நீங்கள் செயல்பட வேண்டும் என்பதை முக்கியமாகக் கருதவேண்டும். நிலையான நம்பிக்கையிருந்தால் அதிகபட்சப் பலன் கிடைக்கும்.

மாற்றம் விட்டு விட்டு நிகழ்ந்தாலும் நம்பிக்கையால் செயல்படும் பொழுது, குறைந்த பலனாக இருந்தாலும், அது இப்பொழுது கிடைக்கும் பலனைவிட, அதிகமாகக் கிடைக்கும் என்று நம்பலாம்.

உங்கள் விஷயத்தில் தற்பொழுது விற்பனை ஆறு முதல் ஏழு கோடிகளுக்கு இடையில் உள்ளது. கம்பெனிக்கு சமநிலை எட்டு கோடியில் வரும். பிறகு குறைந்தபட்ச எட்டு கோடி அதிகபட்சமாக 80 கோடியாகவும் இருக்கும்.

நீங்கள் நல்ல நேரம், எண் கணித சாஸ்திரம், வாஸ்த்து போன்றவைகளை மறுக்கிறீர்கள்.

இவைகள் எல்லாம் கர்மத்தின் பயனால் ஏற்பட்ட பலன்களே, என்பதால் ஜாதகத்தில் கண்டுள்ளபடி அப்பலன்களை அளிக்கும். ஆன்மா இவற்றையெல்லாம் கடந்து நிற்கும். விருப்பம் உங்களுடையது. இவைகளில் ஏதாவது ஒன்றின் மீது நம்பிக்கை இருக்கும் வரையில், நீங்கள் ஆன்மாவை அழைக்க முடியாது. இந்த ஆராய்ச்சி உங்களுக்குப் பயன்படாது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84429
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 4:03 am


77. ஒரு ஆராய்ச்சி - முழுமையான முன்னேற்பாடுகள்


இப்பொழுது நீ உன் நிலையைக் கடந்து ஆன்மா மீது மாற்றம் நாடுபவராக உயர்ந்த நிலைக்கு வரத் தயாராகிவிட்டாய். அடுத்த கட்டம், வேலையில் பலதரப்பட்ட ஆராய்ச்சியை மேற்கொள்ள முன்னேற்பாடுகள் செய்வதாகும்.

நான் என் உள் அமைதியின் மூலம், என் நிலையைக் கடந்து ஆன்மாவை அழைக்கும் நிலைக்கும் மாறிவிட்டேன் என்பதை அறிவேன்.

மனம் பழைய சந்தேகங்களை நாடாமலும், கேள்விகளை எழுப்பாமல் இருப்பதும், எதிர்பார்ப்புகள் இல்லாமல் இருத்தலும், ஆன்மாவை அழைக்கும் அறிகுறிகளாகும்.

நான் ஏற்கனவே கூறியது போல் அமைதி வந்தும் போவதுமாக உள்ளது. அமைதி இருக்கும் பொழுது இந்த ஆராய்ச்சியைத் தொடங்க வேண்டுமென்று கூறுகிறீர்கள். அமைதி ஏன் விலகுகிறது?

நல்ல நேரம், உங்கள் பொருளுக்கு மார்க்கெட்டில் உள்ள பெயர் என்று இவற்றை நாடும் பொழுது, அமைதி விலகுகிறது. நீ அதிலிருந்து விலகி வரவேண்டும்.

நீங்கள் ஒருமுறை, முழுமையான ஏற்பாடு என்பது, நான் பழைய தவறுகளை செய்யாமல் இருத்தலும், காலந்தவறாமை, சுத்தம், மௌன உறுதி, முறைப்படுத்துதல் போன்றவற்றை கடைப்பிடிப்பதாகும் என்று கூறினீர்கள்.

ஒரு வேலையை சிறப்பாக முழுமையானதாக நிறைவேற்றுவதற்குத் தயாராக இருக்கவேண்டுமென்று கூறுகிறேன். அதுவே மிகச் சிறந்தது. குறைந்தபட்சமாக, உன்னுடைய உச்சகட்டத் திறமையை சிறிதளவும் விட்டுவிடாமல், வேலையில் வெளிப்படுத்த வேண்டும். இது இன்றியமையாததாகும்.

நான் என் வேலையை சிறு சிறு பகுதிகளாக, ஐந்து அல்லது பத்து பிரிவுகளாக பிரித்து, இந்த செயல்திறன் பரிசோதனைக்கு உட்படுத்துகிறேன்.

அது சிறந்த இலட்சியம். இதைவிட சிறப்பாகச் செய்ய முடியும் என்று யாராலும் கூற முடியாது.

என்னுடைய முந்தைய முயற்சிகளைவிட, அது சிறப்பாக இருக்க வேண்டும் என்று விரும்புகிறேன்.

நான் மீண்டும் கூறுகிறேன். இது நல்லது. ஆனால் உங்களுடைய சக்திகள் எல்லாம், செலவழிக்கப்பட வேண்டும். இந்த மனமாற்றத்தினாலும், முழுமையான முன்னேற்பாடுகளாலும், உன்னுடைய சூழலில் மாறுதல் ஏற்பட்டுள்ளதைக் காண்பீர்கள். வேண்டாத முரண்பாடான அறிகுறிகள் மறைந்து, உறுதியான நிச்சயமான பாஸிட்டிவ் சகுனங்கள் எழும். வேலையை நிறைவேற்றுமுன், அது முழுமையான உறுதியான உடன்பாடாக மாறவேண்டும். இப்பொழுது எஞ்சியிருப்பது வேலையை நிறைவேற்றுவது மட்டுமே.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84429
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 4:04 am

78. ஒரு ஆராய்ச்சி - மௌனமான செயல்பாடு

உன் மனநிலையை ஆன்மாவுக்கு மாற்றிக் கொண்ட பிறகு, விற்பனைக்காக எடுக்கும் முயற்சியில் ஆராய்ச்சியில் இறங்கிவிட்ட நீ, இப்பொழுது மௌன சக்தியின் மூலமாக செயல்படத் தயாராகிவிட்டாய்.

விற்பனை நடக்கும் இடத்தில் நான் பேசக்கூடாது என்கிறீர்களா?

அப்படி இல்லை. பேசும் பொழுது, விலை, பேரம் பேசுதல், விலையில் தள்ளுபடி போன்ற விஷயங்களில், நீ முதலிலேயே அதைப் பற்றி பேசக்கூடாது என்கிறேன். ஏனெனில், அது உன்னுடைய முன்கூட்டிய எதிர்பார்ப்பைத் தெரிவித்துவிடும்.

அப்படியானால் நான் தகுதிக்கு மீறிய சலுகைகளை கேட்கக்கூடாது என்கிறீர்களா?

ஆம். அது மட்டுமல்ல. உன் மனம் அமைதி அடைந்து, தேவையானதற்கு மட்டும் பதில் சொல்வதாகவும், சந்தர்ப்பத்திற்கு தகுந்த பதில் மட்டும், சொல்லக்கூடியதாகவும், இருக்க வேண்டும்.

சில நேரங்களில் நியாயமற்ற முறையில் பேரம் நடக்கும் போது, அனுகூலமாக இல்லாத சூழ்நிலையில், நான் என் தேவையின் அவசியத்தை முன்னிட்டு, அப்படிப்பட்ட சூழ்நிலையில் இருக்க வேண்டியவனாக இருக்கிறேன்.

அப்படிப்பட்ட நிலைகளில் பலன் அதிகமாகவே ஏற்பட்டிருக்க வேண்டும்.

ஆம், மிகவும் மெச்சத்தகுந்ததே. அதை நான் கவனிக்கவில்லை.

எல்லாம் நல்லபடியாகவே போகும். நல்லபடியாக, திறமையாக செயல்பட்ட பின்பு, எழுத்து மூலமாக உத்திரவுகள் வரும் வரை, மனம் அமைதியாக இருக்காது.

அது மிகவும் கடினமானதுதான்.

நம் விஷயம் கூடி வருவதற்கு முன்னால், நம் மனம் அதைப்பற்றிய சிந்தனையும், எதிர்பார்ப்பும் இல்லாமல், மன உறுதியுடன் இருக்க வேண்டும். நமது இந்த முடிவு நமக்கு வேறு பல வேலைகளை கொண்டு வந்து அதில் மூழ்கச் செய்து நாம் சாதித்த நல்ல விற்பனையை மறக்க வைக்கும்.

ஆகவே மாற்றம், முழுமையான முன் ஏற்பாடுகள், மௌனத்தின் மூலம் செயல்படுவது ஆகியவை எல்லாம் எனக்கு நல்ல பலனை அளிக்குமல்லவா?

நான் ஏற்கனவே உனக்கு கூறியது போல், இந்த மூன்று நிலைகளையும் முழுமையாகக் கடைப்பிடித்தால், உன்னுடைய மாற்றம் நிலையற்றதாக விட்டு விட்டு நிகழ்ந்தாலும், குறைந்தபட்சப் பலன் நிச்சயமாகக் கிடைக்கும்.

நாம் அதிகபட்ச பலன்களை குறிவைத்து நாடுவோம். அதே சமயம் பொறுமையாகவும் இருப்போம்.

அதிகபட்ச பலன், ஒருவருடைய பர்சனாலிட்டியால் நிர்ணயிக்கப்படுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84429
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 4:04 am

79. ஒரு அடையாளமாக எடுத்துக் கொண்ட பரிசோதனையின் மூன்று நிலைகள்

ஒருவர் தன் வாழ்வில் ஆன்மாவை அழைக்கும் வழியில் தன்னை ஈடுபடுத்திக்கொள்ளும் பொழுது, வாழ்க்கை அதிர்ஷ்டமாக மாறுகிறது. வெற்றியும் தோல்வியும் மாறி மாறி வரும் நிலை மாறி, தோல்வியற்ற வெற்றியைக் காணமுடியும். இந்த உயர்ந்த உண்மையைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு, நான் ஒரு பரிசோதனையை அடையாளமாக செய்து பார்க்கும்படி, கருத்துத் தெரிவித்தேன். இது நம்முடைய சாதாரண மனத்திற்கு ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும், நம்பும்படியாகவும் இருக்காது. நான் ஏற்கனவே கூறியபடி, இந்தியாவில் ஒரு தொழிலும் நசிந்து போகாது. அரசாங்கம் வேலைக்கு உத்திரவாதம் கொடுக்கும் பட்சத்தில், இந்தியா நடுத்தர வருமானம் உள்ள நாடாக மாறும். 2020 திட்டத்தின் குறிக்கோள், வெறும் கனவாக இருக்காது. அது குறிக்கோளைத் திட்டமிட்ட காலத்திற்குள்ளே சீக்கிரமாக அடைந்துவிடும். காலந்தவறாமை, அபரிமிதமான சுபிட்சத்தைத் தரும். ஆன்மா வெளிவரும் பொழுது, ஆன்மாவின் முன்னால் கர்மம் கரைந்துவிடும். இம்மாதம் நஷ்டத்தில் இருக்கும் கம்பெனி, அடுத்த மாதம் இலாபத்தை ஈட்டும். சுருங்கச் சொன்னால் முடியாதது என்பது எதுவும் முடியும் என்ற நிலை ஏற்படும்.

இந்தியன் மற்றவரைக்காட்டிலும், இதை அதிக திறமையுடன் செயலாற்றக் கூடியவன். ஏனென்றால் அவனது உடலில் ரிஷிகளின் ஒளி பரவியுள்ளது. ஒரு காலத்தில் அவன் முழுமையான மெய்மைக்கு எடுத்துக்காட்டாக விளங்கினான். இந்திய நாட்டில் ஜனநாயகப் பண்பின் வேர் ஊன்றியிருந்தது.

இந்த ஆராய்ச்சியின் சக்தி, வாழ்விலிருந்து ஆன்மாவுக்கு மாறுவதிலும் இயற்கையிலிருந்து ஜீவியத்திற்கு மாறுவதிலும், மனத்திலிருந்து நம்பிக்கைக்கு மாறுவதிலும் அடங்கும்.

இந்த சக்தியின் மகத்துவம், ஒருவருடைய திறமையின் சக்தியெல்லாம் தீர்ந்தவுடன் தெரியும்.

பலனின் அளவு மௌனமாக எந்தவிதமான எதிர்பார்ப்பும் இல்லாமல், அமைதி கலந்த பொறுமையுடன் காத்திருப்பதில் உள்ளது.

மேலே விவரிக்கப்பட்ட ஆன்மீகக் கருத்துக்களை, சாதாரண மொழியில் ஒவ்வொருவரும் புரிந்து கொள்ளும்படியாக சொல்லலாம். மற்றவர் அதிர்ஷ்டம் பெறவேண்டுமென்று ஒருவர் நெஞ்சம் நல்லெண்ணத்தால் நிரம்பி அவருக்கு அதிர்ஷ்டம் கிட்டும் பொழுது தானும் சந்தோஷப்படுகிறார் என்றால், அப்படிப்பட்டவரின் ஆன்மா உள்ளிருந்து விழித்துக் கொள்ளும். அவரை விட்டு அகலாது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84429
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 4:04 am

80. ஆன்மாவுக்கு மாறுவதின் பல பரிமாணங்கள்

ஒரு வாசகர் தன்னுடைய விற்பனைத் தொழிலில் ஆன்மாவை அழைத்ததினால் அன்றே அவருக்கு விற்பனையில் நல்ல பலனைக் கொடுத்தது என்று எழுதியிருந்தார். இன்னொருவர் ஆன்மாவை அழைத்ததால், உள்ளுறை அமைதியையும், இனிமையையும் கொடுத்தது என்று தெரிவித்தார். இவைகள் லௌகீகத்திலும், ஆன்மீகத்திலும் ஆன்மாவை வெற்றிக்கரமாக அழைத்ததைக் குறிப்பதாகும். இன்னொரு வாசகர், ஆன்மாவை அழைக்கும் முறை தெரியாததால், இதை தன்னால் செய்ய முடியவில்லை என்று தெரிவித்தார். ஆன்ம அழைப்பு என்பது, நாம ஸ்மரணையா என்று கேட்டிருந்தார். நல்லதே நடக்கும் என்பவர்களால் அதை சுலபமாக பின்பற்ற முடியும். நம்பிக்கையற்றவருக்கு, தோல்வி மனப்பான்மையே குறுக்கே நிற்கும்.

சோதிடம் முதலானவைகள் போற்றத்தக்கது என்ற பரம்பரை பழக்கத்தை விடாமல் பற்றி நிற்பது, ஆன்மாவை அழைப்பதற்குத் தடையாகும். ஒருவர் சடங்குகளை விட்டுவிட பிரியப்பட்டாலும், அவர் வீட்டை ஒழுங்கற்றதாகவும் ஒட்டடை முதலானவை படிந்து அழுக்காவும் அசுத்தமாகவும் வைத்திருப்பார். ஒழுங்கீனமும் அழுக்கும் ஆன்மாவுக்கு தடைகளாகும். வீடு சுத்தமாக இருக்க வேண்டும். சுத்தம் என்றால் உயர்ந்த நிலையில் பரிசுத்தமாக வைத்திருப்பதாகும். ஒழுங்கு மிக மிக முக்கியம். வீட்டில் கூச்சலிடுவதும், சத்தமாக பேசுவதும் அறவே விலக்கப்பட வேண்டும். ஒருவர் மெதுவாக பேச வேண்டும்.

மனம் நல்ல நேரத்தை நினைக்காமல் இருக்க சம்மதித்தாலும், அது மனத்தின் ஆழத்தில் தவிர்க்கமுடியாத நிலையில் அதிலே நிலைத்து நிற்கும். ஆன்மா, சோதிடத்தை விட சக்தி வாய்ந்தது என்று அறிவது, மனம் ஆன்மாவுக்கு மாறுவதற்கு உதவிடும். மாற்றம், எந்தவிதமான சமரசத்தையும் ஏற்காது. ஏனெனில் அது சிறியதிலிருந்து பெரியது வெளிப்படுவதாகும். அடிக்கடி என்ன நிகழ்கிறது என்றால், மனம் மாற்றத்தை நாடுவதில் ஊசலாடிக் கொண்டே இருக்கும். நிலையாக நிலைத்து இருக்காது. ஆனால் தற்காலிக மாற்றத்திற்குக் கூட, ஆன்மா மனத்தின் தூய்மையை வேண்டுகிறது. உணர்ச்சிபூர்வமாகவும், மனதாலும் எல்லாவிதமான மூடநம்பிக்கையிலிருந்து விடுபட வேண்டுமென்று ஆன்மா எதிர்பார்க்கிறது.

ஆன்மா வாழ்க்கையைவிட பெரியது என்று ஏற்றுக் கொள்வது நமக்கு ஆன்மாவிற்கு மாறுவதற்கு உதவும். அந்த அறிவு நம்மை உயர்த்தவும் செய்யும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84429
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 4:05 am

81. ஆன்மா நம் அழைப்புக்காகக் காத்திருக்கிறது - மனிதன் ஆன்மாவை அழைப்பானா?

ஆன்மாவை அழைப்பது கடினம் என்று பலர் கூறியுள்ளார்கள். இதில் பெரிய இரகசியம் என்னவென்றால், ஆன்மா மனிதனிடத்தில் அதிக அளவில் அன்பு வைத்து, அவன் தன்னை அழைக்கமாட்டானா என்று, ஆர்வமுடன் காத்திருக்கிறது. உண்மையில் அது தன் உயர்ந்த அடிப்பீடத்திலிருந்து எழுந்து வந்து, மனிதனின் வீட்டுக்கதவு அருகில் நின்று கொண்டிருக்கிறது. மனிதன் தன் கவனத்தை ஆன்மா மீது செலுத்துவானா? ஆன்மா மனிதனிடத்தில் வசீகரமாக இருப்பதுபோல், மனிதனும் ஆன்மாவிடம் வசீகரமாக இருப்பானா? ஒருவர், ஏன் ஆன்மா இவ்வளவு தூரம் கீழே இறங்கி வந்து அவனுள் பிரவேசிக்காமல், அவனுடைய அழைப்புக்காகக் காத்திருக்கிறது என்று, கேள்வி எழுப்பலாம்.

ஒரு காலத்தில், ஒருவர் ஆன்மாவின் கடைக்கண் பார்வைக்கு, வருடக்கணக்கில் தியானத்தில் அமர்ந்து இருக்க வேண்டியதாக இருந்தது. இப்பொழுதோ, ஆன்மாவின் சக்தி பூமியின் சூழலுக்கு இறங்கி வந்து, தன்னை மனிதன் அணுகுவதற்கு சுலபமாக்கிக் கொண்டுவிட்டது. மனித குலத்தில் ஏற்புத்திறன் அதிகரித்து வருவதால், மனிதன் ஆன்மாவை அழைக்காமலேயே, ஆன்மாவே அவன் வாழ்வில் வந்து செயல்படும் நேரம் வரும். இதுவரையில் அப்படிப்பட்ட நேரம் இன்னும் வரவில்லை. ஆன்மா இறங்கி வரும் பொழுது, ஏற்புத்திறனை வெளிப்படுத்தக்கூடிய மக்களை அதிக அளவில் உருவாக்கக்கூடிய ஒருவர் அந்த நேரத்தை வரும்படி செய்வார்.

ஆன்மாவை உள்ளே அழைப்பதில், உண்மையில் மனிதனுக்கு எந்தவிதமான கஷ்டமும் இல்லை. எது கடினம் என்றால், மனிதன் இதுவரையில் தன் மனத்தால் போற்றி வளர்த்து வந்த வாழ்வின் வழிமுறைகளான, தேசத்தைவிட குடும்பம் முக்கியம், மக்களிடம் விசுவாசத்தை விட சொத்தின் மீது விடாமுயற்சியுடன் இருப்பது, போன்றவற்றை விட முடியாது என்பதுதான். நாம் இன்றைய நாளில் சமூகத்தின் பண்புகளுக்கு கீழ்ப்படிதலாக இருக்க விரும்புகின்றோம். 38 வயதான நல்ல சம்பாத்தியமுள்ள ஒருவருடைய மகள், தன்னுடைய பெற்றோர்கள் அவள் திருமணத்தில் சிறிதும் அக்கரை காட்டாமல் இருக்கும் போதும், அவள் பெற்றோர்கள் மீது அதிக பாசம் வைத்திருந்தாள். நன்றியில்லாத, கடமை உணர்வு இல்லாத பெற்றோர்கள் மீது பாசம் இருக்கும் வரை, அவளால் ஆன்மாவை அழைக்க முடியாது. உலகத்தின் தாக்கம் நம்மேல் மிக அதிகமாகவுள்ளது. பல ரூபங்களிலும் வருகிறது. மனிதன் தன் வாழ்வை விட ஆன்மாவை அதிகமாக வசீகரிக்கக் கூடியவனாக இருப்பானா?
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84429
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 4:05 am

82. வாழ்வில் ஆன்மா செயல்படுவது

அநேக வாசகர்கள் ஆன்மாவை எப்படி அழைப்பது என்று கேள்வி கேட்டுள்ளார்கள். இந்தக் கேள்வி அடிக்கடி கேட்கப்படுகிறது. இதன் வழிமுறைகள் புரிந்துகொள்ள முடியாதது அல்ல. அது ஒருவருடைய ஜீவியத்தை உயர்த்த வேண்டுமென்பதேயாகும். நாம் கேட்பதால் மட்டும் கிடைக்கக்கூடியது அல்ல. ஒவ்வொருவரும் அதை அடைய வேண்டுமென்று, தீவிரமாக முயன்றால், மிகச் சிறந்த முறையில் அடைய முடியும். ஆன்மாவை அழைப்பதற்கு ஒரு நாள் முழுவதையும் ஒதுக்கி இந்த முறையில் உள்ள சக்தி மற்றும் கஷ்டங்களை எல்லா நிலையிலும் ஆராய்ந்து, ஜீவியத்தின் நிலையை உயர்த்திக் கொள்ளும் மாற்றத்தை ஏற்படுத்திக் கொள்ள, 24 மணி நேரமும் அமர்ந்திருக்க வேண்டுமென்பதே நான் சொல்ல விரும்பும் யோசனையாகும்.

ஒரு நாளுக்கு மேல் ஒதுக்குவதற்கு முன்னால், அந்த வழியில் உள்ள ஒவ்வொரு தடைகளையும் அறிந்து அதை அகற்றுவதற்கு மனதை தயார்படுத்திக் கொள்வது முக்கியம். ஆன்மாவுக்கு மாறுவதற்கு வழிமுறைகள் என்னவென்றால், நம்புவது, புரிந்து கொள்ளுதல், மற்றும் மாறுவது என்பதாகும். ஆன்மா மனதைவிட சக்தி வாய்ந்தது என்று நீ ஏற்றுக் கொள்கிறாயா என்று நீ உன்னையே கேள். அப்படி நம்பமுடியவில்லையென்றால், ஆன்மாவிற்கும் மனதிற்கும் உள்ள வேறுபாட்டை உணர்ந்து, நம்பிக்கை உண்டாக்கும் வரை அதை புரிந்து கொள்ள முயற்சி செய். எவ்வாறு உடலைவிட மனம் சக்தி வாய்ந்ததோ, அதுபோல் மனத்தைவிட ஆன்மா சக்தி வாய்ந்ததாகும். ஒரு முறை நம்பிக்கை ஏற்பட்டதும் அந்த நம்பிக்கையை தீவிரப்படுத்தினால், ஆன்மாவின் உயர்ந்த தன்மையை உன்னுடைய வாழ்வில் நடந்த நிகழ்ச்சிகளின் மூலம் காணமுடியும்.

சரியாகப் புரிந்து கொள்ளுதல், நம்பிக்கையை வலுப்படுத்தும். அமைதியும் மௌனமும் உள்ளே ஏற்படுவதற்கு, ஏற்கனவே தயாராகிவிட்டது என்பதை அறியலாம். தற்செயலாய் நடக்கக்கூடியது என்று எண்ணாமல், உள்ளே வேலையை ஒரு மனதாய் தீவிரமாக திடமான முயற்சியுடன் ஒவ்வொரு எண்ணத்தையும் அதன் அடுத்த கட்டமான உள்ளுரை உயர்ந்த அமைதிக்கு மாற்றவேண்டும். உள்ளே ஏற்பட்ட அமைதி, நீ உன்னுடைய எண்ணத்தை உயர்நிலைக்கு மாற்ற தயார் நிலைக்கு வந்து விட்டாய் என்பதைக் குறிக்கும்.

வெறுமனே சும்மா உட்கார்ந்திருக்காதே. ஏதாவது ஒன்றில் உன்னை ஈடுபடுத்திக்கொண்டு, அதை முழுமையாக செயல்படுத்து. அப்படி செயல்படும் பொழுது ஒவ்வொரு நிமிடமும் எண்ணத்தை மௌனத்திற்கு மாற்றம் செய். அது நகரும். வாழ்வு உன்னுடைய விருப்பத்திற்கு ஏற்ப இனிமையாக வளைந்து கொடுக்கும். பொறுமையுடன் காத்திரு. ஒரே நாளில் சூழல் முற்றிலும் மாறி உனக்கு சாதகமாகவும் இனிமையானதாகவும் அமையும். இப்பொழுது உனக்கு எப்படி செயல்பட வேண்டுமென்று புரியும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84429
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 4:06 am

83. ஒருவருடைய ஆன்மாவில் நம்பிக்கை

நம்மில் பெரும்பாலானோர் உண்மையின் மீது நம்பிக்கையிருப்பது போல் ஆன்மாவிடமும் பொதுவாக நம்பிக்கை வைத்துள்ளார்கள். இக்கட்டான நிலையில் பொய்மையைவிட வாய்மைதான் நம்மைக் காப்பாற்றும் என்று எத்தனை பேர் நம்புகிறார்கள்? நாம் உண்மை மீது வைத்திருக்கும் மதிப்பு வெறும் உதட்டளவுதான். ஆன்மா மீது நம்பிக்கையும் அத்தகையதே. நாம் ஆன்மாவின் மீது நம்பிக்கையில்லை என்பதல்ல. ஆனால் அது நம் வாழ்வில் சாதனைகளை புரியும் அளவிற்கு தூய்மையான நம்பிக்கைக்கு உயரவில்லை.

முதலாவதாக ஒருவர், தன்னைத் தானே உண்மையில் மனதைவிட ஆன்மாவின் சக்தி உயர்ந்தது என்பதில் நம்பிக்கை வைத்துள்ளாரா என்று கேட்டுக்கொள்ள வேண்டும். ஆன்மாவை நம்புபவராக இருந்தால் அவர் அந்த நிலையிலிருந்து முழுமையான நம்பிக்கையை உயர்த்த வேண்டும். நம்பிக்கையில்லாத பட்சத்தில் அவர் பூரணமான நம்பிக்கைக்கு உயர்த்திக்கொள்ள முயற்சிக்க வேண்டும். நம்பிக்கையை உயர்த்திக்கொள்ள முடியாதவர்களுக்கு அதை உயர்த்திக் கொள்வதற்கான வேறு வழிமுறைகள் உண்டா? அது கடினமானதுதான். ஆனால் கடின உழைப்புக்கு முடியாதது அல்ல. மனம் சக்தி வாய்ந்தது என்றும் அதைவிட ஆன்மா அதிக சக்தி வாய்ந்தது என்றும் அறிவார். ஆன்மா நம்மில் எல்லோரிடமும் உறங்கும் நிலையில் உள்ளதால், இதை புரிந்து கொள்வதற்கான முயற்சி ஆன்மாவை தூண்டுகிறது. அவர் தனக்குள்ளே தொடர்ந்து சிந்தித்த பின், மனதை விட ஆன்மா அதிக சக்தி வாய்ந்தது என்று உணர்ந்து கொண்டதும், மனம் அதை புரிந்து கொண்டு ஏற்றுக் கொள்கிறது. ஒரு முறை மனம் இதை புரிந்து கொண்டால், நம்பிக்கை ஏற்படுவது சாத்தியமே. இந்த புதிய அறிவின் தெளிவில் உள்ளே சென்று ஒருமுகப்படுத்த வேண்டும். அது நம்பிக்கை ஏற்படுவதற்கு வாய்ப்பாகும்.

நம்பிக்கையின்மையை விட நம்பிக்கை உயர்ந்தது, ஆனால் நம்பிக்கை காரியங்களை நடத்தாது. அவர் மேலும் நம்பிக்கையை சிரத்தையின் நிலைக்கு உயர்த்த முயற்சிக்க வேண்டும். இப்படிப்பட்ட நேரத்தில் ஒரு நண்பரைப் பார்க்க வேண்டுமென்ற ஒரு சிறு விருப்பமும் நிறைவேறுவதைக் காண்பார். இதுவே அவருக்கு சிரத்தை ஏற்பட்டதற்கு அறிகுறி. ஆன்மாவின் சக்தியைப்பற்றி மேலும் மேலும் அதிக அளவில் தெரிந்துகொள்வது, நம்பிக்கை ஏற்படுவதற்கு சாத்தியமாகிறது. நம்பிக்கை என்பது ஒரு துருப்புச்சீட்டு. அது அங்கு இருக்க வேண்டும் அல்லது உருவாக்கப்பட வேண்டும். அது அங்கு இருந்தால் அதை அதன் உயர்ந்த வெற்றி நிலைக்கு உயர்த்த வேண்டும். விடாமுயற்சி நம்பிக்கையை உருவாக்குகிறது என்று அன்னை கூறுகிறார். நம்பிக்கை பிறக்கும்வரை ஒருவர் விடாமுயற்சியுடன் முயன்று, அதை அதனுடைய முழுசக்திக்கு உயர்த்த வேண்டும். வாழ்வில் சாதனை படைப்பதற்கு, மேலும் வழிகள் உள்ளன. ஆனால் நம்பிக்கை மட்டும் திருப்பு முனையாக வாழ்வின் முக்கிய ஆதாரமாக விளங்கக்கூடியது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84429
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 4:06 am

84. பகுத்தறிவை விட ஆன்மா சக்தி வாய்ந்தது

இது வெளிப்படையான உண்மை. இதைப்பற்றி அறிவிக்க வேண்டியது ஒன்றுமில்லை. நாம் செயல்படும்போது அது தெள்ளத் தெளிவாகத் தெரிவதில்லை. நாம் பகுத்தறிவைக் கொண்டு செயல்படுவதாக நினைக்கிறோம். பகுத்தறிவை விட ஆன்மா அதிக சக்தி வாய்ந்தது என்று நமக்குத் தெரியும். ஆனால் செயலில் இறங்கும் பொழுது பகுத்தறிவைத்தான் நாம் சார்ந்திருக்கிறோம். வேறு வழியின்றி அதை நாடுவதையே நினைக்கிறோம்.

நம்முடைய வாழ்வில் சிறந்த சாதனை ஒன்று இருக்குமானால், அதை எண்ணிப் பார்த்தால் பத்து நிகழ்வுகளில், ஒன்பது வகைகள் தன்னாலேயே நிகழ்ந்திருக்க கூடுமேயன்றி, நம்முடைய முயற்சியாலோ அல்லது திட்டமிட்டதின் பலனாகவோ நிகழ்ந்திருக்காது. அந்த ஒரு நிகழ்வும் கூட நமது முயற்சியினால் கிடைத்த பலனாகத் தோன்றினாலும், அது எப்படி நிகழ்ந்தது என்று ஆழ்ந்து ஆராய்ந்துப் பார்த்தால், நெருக்கடியான நேரத்தில் அது தானாகவே நிகழ்ந்தது என்றும், நம்முடைய முயற்சியால் ஏற்பட்டதல்ல என்றும் தெரியவரும்.

இவை உன்னுடைய அனுபவமானால் அதை நீ நம்ப முன்வரவேண்டும். மேலும் ஒவ்வொரு முறையும் நம் மனம் செயல்படும் போது அதை ஆராய்ந்தால், நம் அனுபவ அறிவில், அந்த வேலை சிதறிப் போய்விட்டது என்றும் அல்லது அதன் பலன்கள் தாமதமானது என்றும் தெரியவரும். ஒவ்வொரு முறையும் நாம் நமது மனதை நம்பாமலும், பகுத்தறிவை நம்பாமலும் இருக்கும் போது பலன்கள் ஏற்படுகின்றன. நம் வாழ்வில் இது ஒரு சிறிய உண்மை. ஆனாலும் நாம் அதைக் காணத் தவறுகிறோம். சாதனைகள், பகுத்தறிவால் ஏற்படுவதன்று. அது உள்ளுரை மௌனத்தினால் ஏற்பட்டது என்று தெளிவாகத் தெரிகிறது. உண்மை என்னவென்றால், மௌனசக்தி பலனைக் கொண்டு வருகிறது என்பதாகும். அது பகுத்தறிவினால் அல்ல. மௌனம் என்பது ஆன்மா. ஆன்மா எப்பொழுதும் சாதிக்க வல்லது. மனம் சாதிப்பதைக் கெடுக்கும்.

ஆனால் மனம் என்பது நமக்கு இறைவனால் அளிக்கப்பட்ட மிகப்பெரிய தலைசிறந்த கருவியாகும். மனம் தானாகச் செயல்படும்பொழுது, அது அழிக்கும் தன்மையைப் பெறுகிறது. அது ஆதியான ஆன்மாவுக்கு சரணம் அடைந்தால், பெரிய சிருஷ்டிக்கு உரிய கருவியாகிறது. மனத்தை நம்புவதோ, நமது கருத்துக்களை வலியுறுத்துவதோ, திட்டமிடுவதில் நம் திறமையை நம்புவதோ, நம் காரியத்தைக் கெடுப்பதாகும். நம் உள்ளுரை ஆன்மா ஒப்புதல் அளித்து, மனத்தின் முறையான முடிவுகளுக்கு ஆன்மா சம்மதித்தால், நம்முடைய கருத்துக்கள் சக்தி வாய்ந்ததாகவும், திட்டமிடுவதில் செயல் ஊக்கமுடையதாகவும் இருக்கும்.

பகுத்தறிவை கைவிட்டால் நீ ஆன்மாவை அடைவாய்.

பகுத்தறிவை விடும்போது, நீ மௌனத்தை அடைகிறாய். அது ஆன்மாவின் சூழலாகும்.

அழியாத உண்மையான சக்தி ஆன்மாவின் இருப்பிடம். ஆன்மா என்பது எப்பொழுதும் நிலைத்து நிற்கும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84429
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 4:06 am

85. உள்ளுரை நிறைவு

திருப்தி என்பது ஏமாற்றத்தின் எதிர்மறை என்றும், சந்தோஷம் கவலையின் எதிர்மறை என்றும், நாம் அறிவோம். சந்தோஷம் என்பது, நாம் எதிர்பார்ப்பதை அடையும் பொழுது வரும் மகிழ்ச்சியாகும். சந்தோஷம் வெற்றியினால் ஏற்படுவது. இவை யாவும் உடன்பாடானதாகவும், எதிர்மறையாகவும், நம் வாழ்வில் ஏற்படும் உணர்வுகளாகும். இது ஆன்மாவின் பார்வையில் வாழ்வின் அடிமட்டத்தில் ஏற்படுபவையாகும். ஆன்மா வெளிப்படும் பொழுது நிறைவைத் தருகிறது. அது உள்ளே எழும் முழுமையாகும். உள்ளிருந்து நிறைவு ஏற்படும் பொழுது, மனம் நினைக்க முடியாது. உணர்வு, கவலையையும் தொந்தரவையும் அறிய முடியாது. நம்மைச் சுற்றிலும் தோல்வி என்பதற்கே இடமில்லை என்பதைக் காணலாம். நாம் வெற்றி அடையும் போது, சந்தோஷத்தையும் ஆனந்தத்தையும் காண்கிறோம். ஆனந்தம் என்பது உணர்வின் சிறந்த முழுமையாகும். ஆனந்தத்தின் முன்னால் சந்தோஷம் மங்கி மறைகிறது.

மனிதப் பிறவி என்பது, ஆன்மா உடம்பு என்ற வடிவத்திற்குள் வருவதாகும். ஆன்மா மட்டுந்தான் உலகில் உள்ள உண்மையாகும். அது அனந்தமானது, காலங்கடந்தது. அது ஆரம்பத்திலிருந்து உள்ளது. நாம் சத்தியம் என்பதை கடவுளைப்போல் வணங்குகிறோம். சத்தியத்தின் முந்தைய நிலை ஆன்மா. இது ஒரு தத்துவ விளக்கம். சத்தியம், மனம் உணர்ச்சிக்கு அப்பாற்பட்டது. சாதாரண வழக்கில் இதைக் கூற வேண்டுமானால், ஆன்மா நம் வாழ்வில் சத்தியம் என்ற தோற்றத்தில் வெளிப்படுகிறது. எனவே நமக்கு சத்தியம் என்பது ஆன்மா. சத்தியம் நமது கடவுள்.

ஆன்மா பூமியில் பிறவி எடுப்பதற்கு விரும்பி, ஒரு உடலைத் தேர்ந்தெடுத்தது. அதை நாம் ஆன்மா உறையும் உடல் என்று கூறுகிறோம். அது மனம் உணர்வைப் பெற்றது. ஆன்மா உறையும் உடலை நாம் நமது சரீரம் என்கிறோம். நமது உடலும், ஆன்மாவின் ஒரு வடிவம் என்பது உண்மைதான். அது மனம் வாழ்வு என்ற வேறு இரண்டையும் உடையது. அதற்கு மேலாக உடம்பிற்குள் ஆன்மாவும் உறைகிறது.

நமது ஜீவனின் எல்லா பாகங்களும், ஆன்மா, மனம், வாழ்வு, உடல் என்று ஆகிய அனைத்துமே ஆன்மாதான். ஏனென்றால் இந்த பிரபஞ்சமே ஆன்மாவால் உண்டாக்கப்பட்டது. அது ஆதியும் அந்தமும், இடைவெளியும் உள்ளடக்கி உள்ளது. அந்த ஆன்மா, மனம், வாழ்வு, உடல் என்றவற்றை வெளிப்படுத்துகிறது. ஆன்மா நம்மில் எழுகிறது என்று நாம் கூறும் பொழுது, ஆதியான ஆன்மா உடல், மனம், வாழ்வு என்ற மேல்மட்டத்திற்கு எழுகிறது என்பதைக் குறிக்கும். அப்படியெழும் பொழுது அது நிறைவு பெறுகிறது. உள்ளே நிறைவு வரும் பொழுது வாழ்வு முழுமையான சுபிட்சத்தை உடையதாக உள்ளது. அந்த முழுமை வெளிப்படும் பொழுது வாழ்வு யோகமாக மாறுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84429
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 4:07 am

86. பாராட்டும் குணம்

ஒவ்வொரு முறையும் முகஸ்துதி இல்லாமல் உண்மையாக பாராட்டும்போது அதற்கு பிரதிபலிப்பு, ஏமாற்றம் தருவதாக இருப்பதைப் பார்த்திருப்பீர்கள். பாராட்டும் ஆர்வம், அதை வெளிப்படுத்துவதில் இல்லை. அதை சரியாக வெளிப்படுத்தப்படாமல் இருப்பதிலேயே உள்ளது. இந்தக் கருத்தை ஆராய்ந்து பார்த்து அதில் திருப்தி ஏற்பட்டால், அதை நடைமுறைக்குக் கொண்டுவரலாம். நாம் எதிர்பார்க்கும் பலன் அதன் செயலின் சக்தியால் தீர்மானிக்கப்படுகிறது. அந்த கருத்தை வெளிப்படுத்தும் பொழுது, அந்தக் கருத்தின் சக்தி சிதறடிக்கப்படுகிறது, அதாவது அது பலவீனப்படுகிறது. நிலைமைக்குகந்தவாறு, திறமையைக் காட்டும் நேரம் வரும்பொழுது, அதைப் பயன்படுத்தி பேசுவதில் சக்தியை வெளியில் சிதறடிக்காமல் உள்ளே செலுத்தினால், செயலின் கருத்தும் சக்தியும் வீணாகாமல் பாதுகாக்கப்பட்டு, உள்ளே சக்தி அதிகரிக்கும்.

இந்த சக்தியின் செயல் நிறைவுறுவதை கவனித்துப் பார்க்கும்போது, உன்னுடைய சக்தி அதிகரிப்பதைக் காண்பாய். இந்த உண்மையை ஏற்றுக்கொள்வதற்கு இது போதுமானது. ஒருவர் தன்னைவிட இளையவரான நண்பரை உண்மையில் நேசித்ததால் அவருடைய நல்ல குணங்களால் கவரப்பட்டு, அவருடைய நல்ல குணங்களைப் பற்றி பாராட்டி பேசுவார். ஆனால் அந்த நண்பரிடமிருந்து இவருடைய பாராட்டுதலுக்கு எந்தவிதமான மறுமொழியும் கிடைக்கவில்லை. ஏனென்றால் அந்த நண்பர் யார் எந்த விஷயத்தைக் கூறினாலும், ஏற்றுக்கொள்ளத் தக்கவராக இல்லாமல், எதிர்மறையான உணர்வுகளைக் கொண்டவராக இருந்தார். இந்த இரண்டு நண்பர்களும் வருடக்கணக்காக ஒருவரை ஒருவர் அறிந்தவர்களாக இருந்தார்கள். பாராட்டை தெரிவித்தவரால், அந்த நண்பரிடமிருந்து எந்தவிதமான பிரதிபலிப்பையும் ஏற்படுத்த முடியவில்லை.

இந்த எண்ணம், வயதில் மூத்த நண்பரின் நினைவுக்கு வந்தது. அடுத்த முறை அந்த இளைய நண்பரை சந்திக்கும் சந்தர்ப்பம் வந்தது. அந்த நண்பரை பாராட்ட நினைத்தபோது, அதை வெளியில் தெரிவிக்காமல் அதை தன் உள்ளுக்குள்ளேயே நிறுத்தினார். அவருக்குள் ஒரு மென்மையான மௌனம் நிலைத்ததை உணர்ந்தார். எதிரில் அமர்ந்திருந்த அந்த இளைஞர், மனதிற்கு மகிழ்ச்சியளிக்கும் வகையில் புன்முறுவலுடன் இவ்வாறு கூறினார். "நீங்கள் உண்மையிலேயே மற்றவர்களுடைய சக்தியை அறிந்து கொள்வதிலும், அவர்களை உற்சாகமூட்டுவதிலும் வல்லமை படைத்தவராக இருக்கிறீர்கள்” என்று கூறினார். இந்த முழுமையான முறையினால் கிடைத்த வெற்றி, அவருக்கு திகைப்பூட்டுவதாக இருந்தது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84429
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 4:07 am

87. இசைக்கச்சேரியில் உச்ச கட்டம்

நேரு ஆகஸ்டு 15, 1947ல் பேசும் பொழுது, நாம் விதியுடன் செய்து கொண்ட முன்னேற்பாட்டின்படி, இந்தியா விடுதலைப்பெற்றது என்று குறிப்பிட்டார். வாழ்வில் நிகழும் ஒவ்வொரு வெற்றிகரமான செயலும், அது எளிமையானதாக இருந்தாலும் அல்லது இம்மைக்கு வேண்டியதாயினும் சரி, அது அந்த நபரைப் பொறுத்தவரை விதியோடு நிகழுமொரு சந்திப்பாகும். ஒரு வேலையின் ஒவ்வொரு பகுதியையும் வெற்றிகரமாக எந்தச் செயலிலும் வெற்றியை அடைய முடியாது. ஒரு வேலையை வெற்றிகரமாக முடிப்பதற்கும், அதன் உச்ச நிலையை அடைவதற்கும் வெகுதூரம் போக வேண்டியிருக்கும். அதாவது சிறப்பாக அதிகமாக உழைக்க வேண்டியதாக இருக்கும்.

ஒரு பாடகருக்கு எல்லா இசைக்கச்சேரியும் வெற்றிகரமாக அமைவதில்லை. ஒரு பாட்டுக்கச்சேரியில் உச்சகட்டத்தை நோக்கிப் போகும்பொழுது, ஒரு வினாடிக்கு முன் நிறுத்தினால் பாராட்டுக் கிடைப்பது இல்லை. முழுவதும் பூர்த்தியடைந்த நுண்மைமிக்க, உணர்ச்சிப்பூர்வமான நேரம்தான், உச்சக்கட்டத்திற்கு வருவதற்கு சாத்தியமாகும். அப்படிப்பட்ட நேரத்தில், ரசிகர்கள் ஆரவார கைதட்டல் ஒலி எழுப்புவார்கள். இது ஒரு சிறந்த பாடகருடைய தனி உரிமையன்று. எல்லாப் பாடகர்களும் தன்னுடைய கச்சேரியில் அத்தகைய உச்சகட்டத்தை அடையமுடியும்.

எளிமையான சமையல்காரர், கௌரவமான வழக்கறிஞர், வணக்கத்திற்குரிய ஆசிரியர், இவர்கள் யாவரும் தங்கள் தொழிலில் அப்படிப்பட்ட நேரத்தைக் காண்பார்கள். நாம் எல்லோரும் வாழ்க்கையோடு எந்நேரமும் உறவாடிக் கொண்டுள்ளோம். அடிக்கடி சாதிக்கிறோம். பலமுறை வழக்கமான வேலை முறைகளிலும் உச்சகட்டத்தைத் தொடுகிறோம். வேலையில் சிறப்பான திறமையை வெளிப்படுத்தும் தருணத்தில், வேலையின் ஆன்மா விழிப்புற்று, முன்னுக்கு வந்து நிற்கிறது. முக்கியமாக அந்த நேரங்கள்தான் மனித உறவில் முக்கியம் வாய்ந்தது. மேலும் அத்தகைய நேரங்கள் ஆன்மீக சிறப்பு வாய்ந்தவை. அத்தகைய அனுபவங்களை பெற்றவர்கள் இவ்வான்மீக உண்மையை உணர்ந்து ஏற்றால் இப்பொழுது ஆன்மாவை அழைப்பதில் பெரும் வெற்றியைக் காண்பார்கள்.

என்னுடைய வாசகர் ஒருவர் தன்னுடைய தொழிலில் இந்த முறையை வெற்றிகரமாகப் பின்பற்றி வாழ்வில் பெரும் பலனையும் மாற்றத்தையும் கண்டதாக எழுதியுள்ளார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84429
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 4:08 am

88. பரீட்சை ஜுரம்

லண்டனில் ஒரு அனுபவமிக்க டாக்டர், பல தேர்வுகளை நடத்தியவர், தன்னுடைய 50வது வயதில் பதவி உயர்வுக்கு, விதிமுறைகளின்படி பரீட்சை எழுத வேண்டிய கட்டாயத்திற்கு, உட்பட்டார். திகைப்பூட்டும் வகையில் அவருக்கு ஜுரம் வந்துவிட்டது. அது பரம்பரைப் பழக்கம், சூழ்நிலை, சமூக நம்பிக்கைகளால் ஏற்பட்ட நம்பிக்கையாகும். மனோதத்துவ நிபுணர்கள், இயற்கையாக வரும் பயத்திற்கும், செயற்கையாக சமூகம் உண்டு பண்ணும் பயங்களுக்கும் உள்ள வித்தியாசத்தை அறிவார்கள். தனி நபருடைய நம்பிக்கை மற்றும் சமூகத்தின் கூட்டு நம்பிக்கை என்றவற்றின் காரணமாக பயம் விளைவதுண்டு. சமூகத்திற்குக் கட்டுப்படும் மனிதனுக்கு சமூகம் கடவுளாகிறது.

மாணவனுக்கு பரிட்சை, வழக்கறிஞருக்கு வழக்கில் தீர்ப்பு, அலுவலகத்தில் வருடாந்திர ஆய்வு, தொழில் ஒப்பந்தத்தில் பேச்சுவார்த்தை நடப்பது, தேர்தல் கூட்டுக்கு உடன்பாடு ஏற்படுவது, சர்வாதிகாரி, போன்ற சக்தியுள்ளவர்களுடன், பலவீனமான இளைய கூட்டாளி இலாபத்தில் கணக்கைத் தீர்த்துக் கொள்வது, சுயநலவாதிகள், தந்திரமாக தலைமறைவாகியுள்ள கடத்தல்காரர்கள், போன்றவர்களுக்கு அநேக நேரங்களில் இதுபோன்ற பரீட்சை ஜுரம் வருவதுண்டு. லட்சியமான காதல் வயப்பட்டவர் தன் பிரியத்திற்கு உரியவர் அதே லட்சியக் காதலை கொண்டிருக்காவிட்டாலும் தன் எண்ணத்தை வெளியிடும் வேலையில் இப்படியொரு ஜுரத்தை அனுபவிப்பார். இருப்பக்கமும் லட்சியம் இருந்தபோதிலும், உண்மையான காதலுக்கு பல இடையூறுகள் ஏற்பட்டு, காதலை சுமூகமாக இருக்கவிடாது. காதலர்கள் முடிவு எடுக்க சந்திக்கும் பொழுது, அவர்களுக்கு காதல் ஜுரம் வருவதுண்டு.

சுருங்கக் கூறின் ஒவ்வொருவருடைய வாழ்விலும் ஏற்படும் நிகழ்ச்சியும், இந்த ஜுரத்தை ஏற்படுத்தும். வாழ்விலோ வழிபாட்டிலோ, நமக்குத் தெரிந்த வரையில் தீர்வு இல்லை. அதனுடன் வாழ்வதிலேயே பழகிவிடுகிறார்கள். நமக்கு சோதனை வருகின்ற நாளுக்கு பல நாட்கள் முன்னாலிருந்து தினமும் இரவில் படுக்கப்போகும் முன் மனத்தின் ஆழத்திலிருந்து அன்னையை அழைக்க வேண்டும். உன்னுடைய தூக்கம் சுகமாக இருக்கும். மறுநாள் விழித்தெழும் பொழுது, அந்த சோதனைப் பற்றிய எண்ணம் முதலெண்ணமாக வந்து பிரார்த்தனை செய்யலாம். அந்த ஜுரம் இனி இருக்காது. அதனுடைய இடத்தில் ஆன்மாவின் அமைதி ஆட்சி செய்யும். அந்த அமைதி எல்லோரிடத்திலும் பரவும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84429
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 4:08 am

89. சமர்ப்பணம் ஆன்மாவை அழைத்தலாகும்

நாம் நமக்காகவும் நமது குடும்பத்திற்காகவும் வாழ்கிறோம். உயர்ந்த ஆத்மாக்கள் பிறருக்காக வாழ்கிறார்கள். நாட்டுப்பற்று உடையவர் தேசத்திற்காக வாழ்கிறார். ரிஷி கடவுளுக்காக வாழ்கிறார். சமர்ப்பணம் இறைவனுக்காக செய்யப்படுவது. அவர் இறைவனின் இலட்சியங்களை நிறைவேற்றுவதற்காகவே பூமியில் வாழ்கிறார். நம்முடைய வாழ்வு தானாக இயங்கக் கூடியது. நடப்பதிலும் தும்முவதிலும் உடல், நம்முடைய விருப்பம் இல்லாமலே, அனுமதியில்லாமலே தானாகவே இயங்குகிறது.

ஒரு உரையாடலில் ஒரு குறிப்பிட்ட கேள்விக்கு பதிலளிக்க வேண்டாமென்று, நீ தீர்மானித்தாலும் உன்னை அறியாமலேயே அதற்கு பதில் அளிப்பாய். அது தும்முவது போல், ஆழ்மனத்திலிருந்து தன்னிச்சையாக செயல்படுவதால் அதை நீ தடுக்க முடியாது.

நமது செயல்கள் உடலால் செய்யப்படுபவை. நம்முடைய மனவெழுச்சிகள் உணர்ச்சியைச் சார்ந்தவை. நமது எண்ணங்கள் மனதைச் சார்ந்தவை. இவை யாவுமே நமது ஜீவியத்தினுடையது அல்ல. ஒரு ஆன்மீகவாதி இறைவனுக்காகவோ அல்லது ஆன்மாவுக்காகவோ வாழ்கிறார். அதற்காகவே செயல்படுகிறார். இறைவனுக்காக செயல்படுவது சமர்ப்பணம். அவ்வாறு செயல்படுவதில் ஒருவர், ஆன்மாவை நிச்சயமாக அழைப்பவராகிறார்.

பேச வேண்டுமென்ற எண்ணமிருந்தால் பேசாமலிருக்க முயற்சி செய்யவும். வெற்றி கிடைப்பதரிது. கட்டுப்பாட்டை மீறி பேச்சு வருவதைப் பார்க்கலாம். நீ உன் மகளின் திருமணத்திற்கு ஏற்பாடு செய்யும் பொழுதோ, அல்லது ஒரு பெரிய ஆர்டர் இதுவரை கிடைக்காததற்கு ஒப்பந்தம் செய்ய, பேச்சுவார்த்தை நடத்தும் பொழுதும் நீ உன் ஒவ்வொரு செயலையும் எண்ணத்தையும் சமர்ப்பணம் செய்தால் நீ எதிர்பார்த்த பலன் கிடைக்கும். உன் கற்பனையைவிட அதிகமாக பலன் வருவதைக் காண்பாய்.

சமர்ப்பணம் செய்வது இறைவனை, நம்முள் செயல்படச் செய்வதாகும். அவர் நம்மைவிட திறமைசாலியானதால், பலன் அபரிமிதமாக வரும். நம் திறமையில் அதிகமாக நம்பிக்கை வைத்திருப்பதால், நாம் கடவுளை நம்புவதில்லை. கடவுளை நம்புவது ஆன்மாவை நம்புவதாகும். நம்முடைய செயல்களை அவரிடம் ஒப்படைப்பது ஆன்மாவை அழைப்பதாகும். யோகத்தில் அது சமர்ப்பணம் எனப்படும். யோகம் செய்யும் சாதகருக்கு, சரணாகதி என்பது உயர்ந்த நோக்கமாகும். சமர்ப்பணத்தின் ஆரம்பம் சரணாகதியில் முடிகிறது. அது பூரணமாக முடிவு பெறுகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84429
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 4:08 am

90. நன்றியறிதல்

மனித வாழ்வில் இறைவன் செயல்படுவதை மனப்பூர்வமாக உணர்வதே நன்றியறிதலாகும். அப்படி புரிந்து கொள்வது ஒருவருடைய ஜீவியத்தை ஊடுருவி, அவர் ஏற்புடையவராக இருக்கும்பட்சத்தில் அவரை மெய்சிலிர்க்க வைக்கும். கண்ணில் விழுந்த தூசி அது அகற்றப்படும் வரை கண்ணை உறுத்திக் கொண்டே இருக்கும். ஒரு வருடமாக என் கண்ணில் தூசு விழுந்ததே இல்லை. அது எப்படி நிகழ்ந்தது என்று நான் அதைப் பற்றி எண்ணிப் பார்க்கவில்லை. கண் எப்பொழுதும் பாதுகாக்கப்படுகிறது என்றும், அது இறைவன் செயல் என்றும் நமக்கு எப்பொழுதாவதுதான் நினைவுக்கு வருகிறது. நமக்கு பல நேரங்களில் நல்லவை நடக்கின்றன. அப்பொழுது "இறைவனுக்கு நன்றி” என்று ஆச்சரியத்தால் கூறுகிறோம்.

சூட்சுமப் பார்வை உள்ள ஒருவருக்கு, தன்னைக் கடவுள் வழிநடத்திச் செல்வது தெரியும். ஒரு சாலையில் ஜீப் போய்க் கொண்டிருந்த பொழுது, குறுக்கே விழுந்து கிடந்த மரத்தை தவிர்க்க முயலும்போது, ஜீப் வயலில் இறங்கிவிட்டது. அந்த வளைவில் ஜீப்பின் இரண்டு சக்கரங்கள் பள்ளத்திற்கு மேலே தொங்கிக் கொண்டிருந்தன. அதிர்ச்சியடைந்த ஓட்டுநர் வண்டியை நிறுத்திவிட்டு கீழே குதித்துவிட்டார். வயலில் வேலை செய்து கொண்டிருந்த ஒரு பெண்மணி, "நான் அந்த ஜீப்பை அம்மா தன் சேலையின் நுனியில் தூக்கிப் பிடித்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்” என்று அலறினார். நாம் ஆபத்திலிருந்து தெய்வாதீனமாக பிழைத்தோம் என்று சொல்லுவோம். ஆனால் நாம் எப்பொழுதும் இறைவனின் பாதுகாப்பில் இருக்கிறோம் என்று நினைப்பது இல்லை.

மனம் உள்ளே முழுமையாக நிறைந்திருக்கும் பொழுது, உன்னுடைய இதயத்தில் நல்லெண்ணம் பொங்கி வரும் நேரத்தில், நீ பிரியமாக நேசிக்கும் சகோதரர், நண்பர், புதல்வர், ஆகியோருக்கு நிரம்பி வழியும் உன் நல்லெண்ணத்தை, உன் இதயத்தில் உள்ளதை மனதால் அனுப்பு. விரைவில் அவர் உன்னை சந்தித்து, நல்லெண்ணத்தை அவருக்கு அனுப்பிய ஏறக்குறைய அதே நேரத்தில், அவருக்கு நல்லது நடந்ததைக் கூறுவார். தான் சந்தித்து சண்டை போடுவதாக இருந்த விற்பனை வரி அதிகாரி எப்படி பழைய நண்பராக இருந்தார் என்பது போன்ற ஏதாவது ஒரு நல்ல செய்தியையும் கூறுவார்கள். இப்படிப்பட்ட நல்லெண்ணம் தவறாமல் பெறுபவர்க்கு அதிர்ஷ்டத்தை உண்டு பண்ணும்.

கடவுள், ஆன்மா, தெய்வீக அன்னை என்று இறைவனை நாம் பலவாறாகப் பெயரிட்டு அழைக்கும் அவர், நம் வாழ்வின் சுமையை அன்புடன் தாங்கிக்கொள்கிறார். இதை உணர்வுபூர்வமாக அறிவதே இறைவனுக்கு தெரிவிக்கும் மனத்தின் நன்றியறிதலாகும்.

நாம் நம் உணர்வில் அதை அறியும் பொழுது, நமது சக்தி கரைபுரண்டு வழிவதை, மனத்திற்கு மகிழ்ச்சி அளிப்பதை உணர்கிறோம். நாம் இந்த அறிவைப் பெறும் பொழுது நமது உடல் சிலிர்க்கிறது. பகவான் ஸ்ரீ அரவிந்தர் இதைத் தாங்கமுடியாத ஆனந்தப் பரவசம் என்று கூறுகிறார். அன்னை இதை இடையறா பேரானந்தம் என்று கூறுகிறார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84429
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 4:09 am

91. "நான்” யார்?

இது ஞானயோகத்தின் அடிப்படைத் தத்துவம். "நான்” என்பது உடலோ, மனமோ, உணர்ச்சிகளோ அல்ல. யோக சித்தி அடைந்தவர் அதை ஆன்மா என்றே அறிவார்.

சமூகத்தில் மனிதன் தான் யார், தன்னுடைய உரிமை என்ன என்று அறியாமல் இருக்கிறான். ஒரு நல்ல விழிப்புணர்வு உள்ள முன்னேறிய நாட்டில் அந்த நாட்டு மக்கள் தங்களது சட்ட உரிமை, மனித உரிமை, சமூக உரிமை பற்றி நன்கு அறிந்தவர்களாக இருப்பார்கள். குடிமக்களின் வழிப்புணர்வு ஒரு நாட்டின் சமூக நிலைக்கு சின்னமாகவும் அடையாளமாகவும் விளங்குகிறது. தன்னைப் பற்றி தெரிந்து கொண்டுள்ளவன், ஆன்மாவை, உடனே அதிக பயனுள்ள வகையில் அழைக்கும் சக்தியுள்ளவனாக இருப்பான். "நான்'' என்பது உடலோ, மனமோ, அல்ல. அது ஆன்மா என்று புரிந்து கொள்வதில் பலருக்கு கஷ்டம் இருக்காது. நெருக்கடியான சந்தர்ப்பங்களில் முடிவு எடுப்பதற்கு வாழ்வு நமக்கு அரை நிமிஷம் கொடுக்கும் போது, நாம் உடனே முடிவு எடுத்து செயல்படுகிறோம். அப்படிப்பட்ட வாய்ப்பு திரு.நரசிம்மராவுக்கு பிரதம மந்திரியாவதற்கு வந்த வாய்ப்பாக இருக்கலாம். அல்லது ஒரு திருடன் உன்னை துப்பாக்கி முனையில் உன்னுடைய பணப்பெட்டியின் சாவியைக் கொடுக்கும்படி மிரட்டியதாகவும் இருக்கலாம். அப்படிப்பட்ட நேரத்தில், முடிவு உடனே எடுக்கப்பட்டது என்று நாம் அறிவோம். உண்மையில் இந்த முடிவு பகுத்தறிவால் ஏற்பட்டதல்ல. நல்லது, கெட்டது என்று சிந்தித்து எடுக்கப்பட்ட முடிவு அல்ல. இந்த முடிவு நாம் விழிப்புணர்வுடன் எடுப்பதல்ல. ஆபத்தான கட்டத்தில் அந்தக் கணமே உடனே தானாக எடுக்கப்பட்டதாகும்.

இந்த முடிவு உன் ஆன்மாவால் எடுக்கப்பட்டது. அது ஆன்மீகத்தில் சொல்லப்படும் ஆத்மா அல்ல. அது நம் எண்ணங்களையும் உணர்வுகளையும் கடந்ததாகவும், நம்மால் விரும்பப்படும் உணர்ச்சிகளையும் கடந்த ஆன்மாவாகும். ஒருவர் சாதாரணமாக புறச்சூழலின் தீவிர நிர்பந்தத்தாலும், பெரும்பாலும் ஆபத்து ஏற்படும்பொழுதும், எப்பொழுதாவது ஒரு அதிர்ஷ்டம் வரும் போதும் ஆன்மாவை அழைக்கும் நிலைக்குப் போவார். எண்ணத்தின் ஆழத்திலும், தியானத்தின் ஆழத்திலும் சென்று, ஆன்மாவை அழைத்தால், மிகுந்த நற்பயனை அளிக்கக் கூடியதாக இருக்கும். ஏனென்றால் அதுதான் உண்மையான "நான்'' என்ற ஆன்மாவாகும். பிரார்த்தனையின் தீவிரம், எவ்வளவு உண்மையாக இருக்கிறதோ, அந்த அளவிற்கு ஆன்மா நிச்சயமாக நம் வாழ்வின் மேலே வருவது உண்மை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84429
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 4:09 am


92. விற்பனையாகாத சரக்கு


20 வயது வாலிபன் ஒருவன், 110 வருடங்களாக நடந்து வந்த தன்னுடைய கடையை 1974ல் மூடும் நிலைக்கு வந்துவிட்டான். எந்தத் துறையிலும் புதிய முறையை புகுத்துவது, குறிப்பாக தரமில்லாத பொருள்களை அறிமுகப்படுத்துவது அவ்வளவு சுலபமான காரியம் அன்று. அப்படிப்பட்ட தரமற்ற சரக்குகளைச் சந்தையில் விற்க முடியாத விற்பனையாளர்கள், அலங்காரமான கண்ணாடி டம்பளர்களை பரிசாக எடுத்துக்கொண்டு, கிண்கிணி ஓசையை எழுப்பிய வண்ணம் இந்தப் பையனுடைய கடைக்கு வந்தார்கள். பையனுடைய தகப்பனார் அதனால் மனம் கவரப்பட்டு 50 நாட்கள் விற்பனைக்கு ஈடான சரக்கிற்கு ஆர்டர் கொடுத்தார். ஆறு மாதங்கள் கழிந்தன. சரக்கு ஒரு சிறிதும் கூட விற்பனையாகவில்லை. அதுவே அந்த கடையை மூடுவதற்கு காரணமாய் அமைந்தது. அந்தப் பையன் ஒரு பெரியவரிடம் போய் வருவது பழக்கம். அந்தப் பெரியவர் அந்த வாலிபனின் வருத்தந்தோய்ந்த முகத்தைக் கண்டு, விசாரித்து நிலைமையை உணர்ந்து கொண்டார்.

அவர் அந்த பையனிடம் சரக்கை விற்கமுடியும் என்று கூறினார். அவர், ஆன்மாவை அழைத்தால் சரக்கு விற்றுவிடும் என்று கூறினார். அவர் கூறியதில் பையனுக்கு ஏதோ ஒன்று பளிச்சென்று தோன்றியது. அதில் தீவிரமாக கவனம் செலுத்தினான். பெரியவர் அந்த பையனிடம் சரக்கு வைத்துள்ள இடம் சுத்தமில்லாமல் இருந்ததை சுட்டிக்காட்டி, அந்த இடத்தை மாசற்ற தூய்மையாக சுத்தம் செய்யும்படிக் கூறினார். மேலும் அந்த இடத்திற்குச் சென்று மணிக்கு ஒரு முறை அன்னையை அழைக்கும்படி அறிவுறுத்தினார்.

அந்தப் பையன் பெரியவரிடம் தினமும் போய் வந்தான். பிறகு ஒரு வாரம் அவர் வீட்டுக்கு வரவில்லை. கடைசியாக ஒரு நாள் பெரியவர் வீட்டுக்கு வந்து, தான் இவ்வளவு நாட்களாக வராததற்குக் காரணம், தன் கடையில் வியாபாரம் மும்முரமாக நடந்து வந்தது என்று கூறினான். மேலும் கடந்த 7 முதல் 10 நாட்களில் மொத்த சரக்கில் பாதி அளவு விற்றுத் தீர்ந்துவிட்டது என்றும், மீதி பாதியை, மொத்தமாக ஒரு வியாபாரி வாங்கிக் கொண்டார் என்றும் கூறினான். அவனால் அழைக்கப்பட்ட ஆன்மா, விற்க முடியாத சரக்கை விற்றுவிட்டது.

அவன் ஆன்மாவை மட்டும் அழைத்தானே தவிர, பொருளின் ஜீவனை அழைக்கவில்லை. அப்படி அழைத்திருந்தால் பலன் இன்னும் சக்தி வாய்ந்ததாக இருந்திருக்கும். அவன் தன் தகப்பனார் முட்டாள்த்தனமாக, ஒரு புத்திசாலியான விற்பனையாளரின், வலையில் வீழ்ந்துவிட்டதிலிருந்து மீட்கப்பட்டதை ஒரு வெற்றியென எண்ணி மகிழ்ந்திருந்தான். அவனுடைய தகப்பனாரோ கடையில் மும்முரமாக வியாபாரம் நடந்து கொண்டிருந்த போதும், தன்னைப் பற்றியே பெருமை பேசிக் கொண்டிருந்தார். விற்பனை அதிகமாக இருந்ததால் இந்த சரக்கை தான் வாங்கியதற்கு பையன் வருத்தப்பட்டதுதான் முட்டாள்த்தனமென்று சொல்லி அதே சரக்கை இரு மடங்கு ஆர்டர் செய்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84429
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 4:10 am


93. அகமும் புறமும்


"ஒருவருடைய” புறவாழ்க்கை அவரது அகவாழ்வில் உள்ளதின் உண்மையான பிரதிபலிப்பு என்பது நம்முடைய பழங்கால மரபுகளால் கூறப்பட்டவையாகும். சங்க இலக்கியம் நல்லதும் கெட்டதும் வெளியிலிருந்து வருவதில்லை என்று கூறுகிறது. ஒருவர் தன் வாழ்க்கையை ஆன்மா ஆளவேண்டுமென்று விரும்பினால், இந்த விதி அவருக்கு முக்கியமானது.

ஒரு சாமார்த்தியமான ஏழை, செல்வந்தர் குடும்பத்தில் திருமணம் செய்து கொள்ளும் அதிர்ஷ்டக்காரராக இருந்தார். அவர் வெட்கமில்லாமல் மாமனார் வீட்டில் தஞ்சம் புகுந்து, மாமனாரின் வீடுகளில் ஒன்றில் குடியேறிவிட்டார். ஐந்து குழந்தைகள் பிறந்த பிறகு, மனைவியை மாமனார் வீட்டிலேயே விட்டுவிட்டு, நகரத்தில் பணக்கார வீட்டு மருமகப்பிள்ளை என்று கர்வமாகக் கூறிக்கொண்டு ஊரை சுற்றிக்கொண்டு இருந்தார். வாழ்வின் சட்டம் என்னவென்றால், ஒரு சிறிய உதவி பெறுபவர், உதவி செய்தவர் மீது, அதிக ஆதிக்கம் செலுத்துவார் என்பதாகும். அவரால் பழிவாங்கப்பட்டவர், அவருடைய மைத்துனரான அந்த செல்வந்தரின் சொத்துக்கு ஒரே இளைய வாரிசு ஆவார்.

அங்கே கடையில் சுவையான விளையாட்டுப் பேச்சுக்களாக ஆரம்பித்து அவையெல்லாம் பரிகாசமான கேலிப்பேச்சாக தரம்குறைந்து, பையன் கடையில் இருக்கும்பொழுதே ஒருநாள் அது உச்சக்கட்டத்திற்கு வந்தது. கேலி செய்து கொண்டிருந்த ஐந்து நண்பர்களும் மருமகனும் சேர்ந்து கொண்டு, பையனை அழவைக்கும் அளவிற்கு துன்புறுத்தினார்கள். பையன் தன் கண்ணீரை அடக்கிக் கொண்டான்.

பையன் தனக்கு தீர்வுகாண்பதைவிட, ஆறுதலைநாடி பாதுகாப்புக்காக ஒருவரிடம் ஓடினான். மனித விவகாரங்களில், மனிதனின் கஷ்ட நேரத்தில் தீர்வு காண்பது பலருக்கு சுலபமாக இருக்காது. அவன் ஆறுதல் தேடி வந்ததற்கு, முழு அளவில் பலன் கிடைத்தது. அதன் பிறகு அவனால் சந்தோஷத்தில் சிரிக்கவும் முடிந்தது. ஆறுதல் கூறியவர் சொன்னார். "கேலியினால் துன்பப்படுவது உள்ளத்தில் இருந்தால்தான் வரும். அது வெளியிலிருந்து வருவது அல்ல" என்று கூறினார். இதைக் கேட்டதும் பையன் தனக்கு இத்தகைய சுபாவம் இருந்தது என்று ஒப்புக் கொண்டான். தானே சிறுவயதில் ஒரு மாணவனை இப்படி கேலி செய்து துன்புறுத்தியதின் பலனாக, அந்த மாணவன் பள்ளியை விட்டு நின்று விட்டான் என்று கூறினான். அவன் தன்னைத்தானே ஆழ்ந்து பரிசோதனை செய்து பார்த்ததில், பழைய மனப்பான்மையை மாற்றிக் கொள்ள முடிந்தது.

இருபது நாட்களுக்குப் பிறகு பையன், ஆறுதல் கூறியவரிடம் வந்தான். அவன் தன்னுடைய மாமா எங்கேயோ அடிவாங்கிக் கொண்டு கடைக்கு வந்து, அடக்கத்துடன் கை கூப்பிக் கொண்டு, தன் முன்னே நின்று, இனிமேல் நான் உனக்கு கீழ்ப்படிந்து நடந்து கொள்வேன் என்று என்னிடம் கூறினார் என்று சொன்னான். இதை என் காதுகளால் நம்பமுடியவில்லை என்று கூறினான். பதினைந்து நாட்களுக்கு முன் என் தகப்பனார் காலமாகிவிட்டார். ஒருவேளை இதுவே அவரது மனமாற்றத்திற்கு காரணமாக இருக்குமோ என்றான்.

அகம் புறத்தைக் கட்டுப்படுத்தும் போது, ஆன்மா வாழ்வை கட்டுப்படுத்துகிறது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84429
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 4:10 am

94. அபிப்பிராயங்களும் மனப்போக்கும்

சூட்சுமப் பார்வையில் அபிப்பிராயங்கள் ஊசிகள் போன்றவை. மனிதனின் அன்றாட வாழ்வை நிர்ணயிக்கும் சூழலில் அது போன்று லட்சக்கணக்கான ஊசிகள் உள்ளன என்று தெய்வீக அன்னை கூறுகிறார். நீ திறந்த மனத்துடன் உன்னால் ஏற்கனவே தீர்மானிக்கப்பட்ட கருத்தை உதறித் தள்ளிவிட முயன்றால், அபிப்பிராயங்களிலிருந்து விடுபடுவது சிரமம் என்று புரியும். உன்னுடைய அனைத்து முயற்சிகளுக்குப் பின்னும் அபிப்பிராயம் இருப்பதைக் காண்பாய். அதுவே நிலைபெற்று இருக்கும்.

மனத்தின் போக்கு அபிப்பிராயங்களைவிட சக்தி வாய்ந்தது. அபிப்பிராயம் உணர்ச்சிகளால் அங்கீகரிக்கப்படும் பொழுது மனத்தின் போக்கு எழுகிறது. மனோபாவத்திற்கு சில உதாரணங்கள், (1) நான் சொந்தக் காலில் நிற்க வேண்டும் (2) என்னுடைய தொழிலின் உயர்வை நான் மதிக்க வேண்டும் (3) என்னைப்பற்றி யாரும் தவறாக பேசக்கூடாது, என்பன போன்றவைகள். இந்த மாதிரியான மனப்போக்குகள் ஒருவருடைய சாதனையை நிர்ணயிக்கும் தீவிர சக்தி வாய்ந்ததாகும். ஆன்மா, அபிப்பிராயம், மனப்போக்கு, இவற்றிற்கு அப்பாற்ப்பட்ட நிலையில் (Plane) உள்ளது. நோக்கம் என்பது, முழு ஜீவனைச் சார்ந்தது. அது அபிப்பிராயங்களையும் மனப்போக்கையும் உள்ளடக்கியுள்ளது. திடமான அபிப்பிராயங்கள் உள்ளவர் மற்றும் அபிப்பிராயங்களை உண்டு பண்ணிக் கொள்ள முடியாதவர் என்றிருவரிடையே தீவிர அபிப்பிராயமுடையவர் நினைத்ததை சாதிப்பவராக இருக்கிறார். தன் சொந்தக்காலில் நிற்க வேண்டுமென்ற மனோபாவம் உடையவர், பிறர் ஆதரவின்றி வாழ முடியாதவர்களை விட மேலானவராக, சாதனை படைப்பவராக இருப்பார்.

ஆன்மா, அதனுடைய நிலையில் அபிப்பிராயம், மனப்போக்கு, நோக்கம், இவற்றைக் கடந்த இடத்தில் உள்ளது. யோகியின் ஒரே நோக்கம் மோட்சத்தை அடைவது. ஒருவருடைய தனிப்பட்ட வெற்றிக்கும், அல்லது குடும்பத்தின் முன்னேற்றத்திற்கும் உழைப்பது, சகஜமானது. வாழ்வில் வெளிப்படும் ஆன்மாவின் மூலம் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்தை நாம் ஏற்றுக் கொள்ளலாம். அது நோக்கமாகவும் அல்லது மனத்தின் போக்காகவும் இருக்கட்டும். குறைந்தபட்சம், ஆன்மாவைப் பற்றிய அபிப்பிராயம் ஒன்று ஏற்றுக் கொள்வோம். அதாவது நம் ஆன்மா நம் அன்றாட வாழ்வில், வீட்டிலும் சரி, தொழில் புரியும் இடத்திலும் சரி, நம்மை வழிநடத்தினால் அநேக முன்னேற்றங்கள் வரும் என்ற அபிப்பிராயத்தை நாம் பெற வேண்டும்.

மனிதன் செய்வதைவிட ஆன்மா அதிக பயனுள்ள சாதனை படைக்கும் என்பதைப் புரிந்து கொள்வோம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84429
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 4:10 am

95. கடன் சுமை

மனிதன், கடன் உதவி வழங்கும் ஸ்தாபனத்தைக் கண்டுபிடித்ததும், தன்னுடைய சுயநலமாகிய குறுகிய மனப்பான்மை கூட்டிலிருந்து வெளிப்பட்டு, மற்றவருடைய வாழ்விலும் பங்கேற்க ஆரம்பித்தான். இன்றைய நவீன நாகரீக உலகில், பொருளாதாரம், கடன் என்ற உறுதியான தோளின் மீது நிற்கிறது. கல்வி என்ற ஸ்தாபனம் உலகில் செய்த சேவைக்கு ஈடாக நிதியுதவி செய்வதில் கடன் சிறப்பான சேவை புரிந்துள்ளது. கடன் கொடுப்பவரின் முதலீடு, கடன் வாங்குபவருக்கு சுமையாகிவிடுகிறது. மனிதன் தனக்காக உருவாக்கிய ஒவ்வொரு கருவிக்கும் தான் அடிமையாகிவிடுகிறான்.

இப்படி கடன், கடன் பெற்றவருக்கு, சுமையாகிவிடுகிறது. ஒரு காலத்தில், நகரத்தில் வாழும் இரண்டு நடுத்தர வர்கத்தினர் தங்களுடைய கடன் பத்திரங்களை ஒப்பிட்டுப் பார்த்த நேரம் உண்டு. இப்பொழுது புதிய முறைகள் தோன்றிவிட்டதால், அத்தகையவர்கள் கடனைப்பற்றி பேசுவதை தவிர்த்து, சேமிப்பைப் பற்றி ஆலோசிக்கலானார்கள். நம்முடைய கவலையெல்லாம் கடன் சுமையின் பிடியில் உள்ளவர்களை, எப்படி அவர்களை அதிலிருந்து விடுபடச் செய்வது என்பது தான். ஆன்மா அதற்கு ஓர் வழிகாட்டுகிறது. ஆன்மா, அதனுடைய நிபந்தனைக்கு உட்பட விரும்பியவருக்கு, தீர்வு அளிக்க முன் வருகிறது.

மனிதனுடைய அனுபவம் என்னவென்றால், ஒரு பொருள் தொலைந்துவிட்டால் அது தொலைந்தது தொலைந்ததுதான், அதை மீண்டும் பெறமுடியாது என்பதுதான். ஒரு தவறு நடந்துவிட்டால், அதை மீண்டும் சரியாக்க முடியாது. ஒருவர் தன்னுடைய முட்டாள்தனத்தினால் கடன் பொறியில் வீழ்ந்துவிட்டால், அதற்காக வருந்தினாலும், திரும்பவும் அதிலிருந்து மீளமுடியாது. அந்தச் செயலின் பலனை அவர் அனுபவித்துத்தான் ஆக வேண்டும். ஆனால் இதற்கு ஆன்மா என்ன கூறுகிறது என்றால், ஒரு முறை செய்துவிட்ட தவறுக்கு, உணர்ச்சிபூர்வமாக மனம் வருந்தினால், பழைய தவற்றிற்காக இன்று மனநிலையை மாற்றிக் கொள்ள விரும்பினால் உன்னுடைய கடன்கள் யாவும் கரைந்து, நீ எப்பொழுதும் போல் அதன் தலையிலிருந்து நிரந்தரமாக விடுதலைப் பெறுவாய் என்பதாகும்.

வாழ்வில் முட்டாள்தனமாக செய்த செயல்களை மாற்ற முடியாது.

ஆனால் ஆன்மா கடந்தகால முட்டாள்தனமாக செய்த செயல்களுக்கு, உணர்ச்சிபூர்வமாக இன்று வருத்தம் தெரிவித்தால் நிலைமையை மாற்றித் தரும்.

உண்மையாக, உணர்வுகளில் மாற்றத்தை ஆழத்தில் கொண்டு வரும்பொழுது, ஆன்மாவால் இருப்பதை மாற்ற முடியும்.

மலையளவுள்ள கடன், அதே மலையளவுள்ள உணர்ச்சிப் பெருக்கால் மனம் வருந்தும் போது, கடன் கரைந்து கண்ணுக்குத் தெரியாமல் மறைந்துவிடும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84429
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 4:11 am

96. மனம், இதயம் மற்றும் ஆன்மா

மனம் சக்தி வாய்ந்தது. நாம் அதை ஒருமுகப்படுத்தும் போது, அது மேலும் சக்திவாய்ந்ததாக உள்ளது. இதயம் மனத்தைவிட சக்திவாய்ந்தது. ஆன்மா இவற்றையெல்லாம் விட அதிகமான சக்தி உடையது. நாம் சிந்தனையை ஒரு நிலைப்படுத்தும் பொழுது அது மனத்திலும் அல்லது இதயத்திலும் பூர்த்தியாவதைக் காண்கிறோம். நாம் ஆன்மாவை எப்பொழுதாவது ஒரு நிலைப்படுத்துகிறோம். ஆன்மா இதயத்திற்குப் பின்னாலும் தலைக்கு மேலே சஹஸ்ரதளத்திலும் இருக்கிறது. சஹஸ்ரதளம் தலையின் உச்சியில் இருக்கிறது. வேதங்கள் சஹஸ்ரதளத்திற்கு மேலுள்ள மையத்திலிருந்து எழுதப்பட்டன. ஷேக்ஸ்பியர் மனத்திற்கு மேலேயும் சஹஸ்ரதளத்திற்கும் கீழேயுள்ள நிலையிலிருந்து எழுதினார்.

ஒருவருக்கு தான் ரூ.55,000/-க்கு வாங்கிய தன் சொத்தின் மீது கடன் தேவைப்பட்டது. அந்த சொத்தின் மதிப்பின் பாதி அளவுதான் கடன் வாங்கமுடியும் என்பதை, அவர் நன்கு அறிந்திருந்தார். அந்த நாட்கள் வங்கிகள் தேசிய மயமாக்கப்பட்டதற்கு முந்தைய காலம். விவசாயத்திற்கு வங்கிகளின் ஆதரவு இல்லாத நேரம். அவருக்கு மொத்தத்தில் ரூ.1,75,000/- கடன் தேவைப்பட்டது. அதில் முதல் தவணையாக ரூ.75,000 தேவைப்பட்டது. அதை அவர் மனதில் தீவிரமாக ஒருமுகப்படுத்திய போது, அது சக்தி வாய்ந்ததாக அமைந்ததால், தனக்குக் கடன் கிடைத்து விடும் என்று நம்பிக்கைக் பெற்றார்.

அந்த நிலத்தின் மீது அவர் எடுத்துச் செய்யும் வேலையானது, அந்த நாட்களில் திட்ட அளவில் புரட்சிகரமாக இருந்தது. அவர் அந்த வேலையின் மீது உண்மையான நம்பிக்கை வைத்து வங்கியை அணுகினார். வங்கியில் இருக்கும் பொழுது, அமைதியாக இருந்தார். அமைதி மட்டுமன்றி, அவர் இதயத்தில் அது வரையில் கண்டிராத அதிக அளவிலான அமைதியான மகிழ்ச்சி நிரம்பியிருந்ததை உணர்ந்தார்.

வங்கி அவருக்கு ரூ.4,25,000 கடன் வழங்க முன் வந்தது. அவர், கிடங்கு, சாலை வசதி, டிராக்டர் முதலானவற்றிற்கு கேட்காததால், அவற்றின் உபயோகத்திற்கும் சேர்த்து அதிகமாகவே கடன் வழங்கியது. வங்கி பரந்த மனப்பான்மை மட்டுமின்றி உதாரகுணமுள்ளதாகவும் நடந்து கொண்டது. அவருக்கு என்ன நடந்தது என்றே தெரியாமல் திகைப்புடன் திரும்பினார். அவருக்கு புரியாதது என்னவென்றால், அவர் தன் எண்ணத்தை ஒருமுகப்படுத்தியது முழுமையடைந்து, இதயத்திற்குப் பின்னால் அமர்ந்திருக்கும் ஆன்மாவின் மையத்திற்குச் சென்றதால்தான், அவ்வாறு நடந்தது. இது கேள்விப்படாத ஆன்மாவின் மறு மொழியாகும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84429
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 4:11 am

97. சூறாவளி

நாம் இந்தியாவில் புயல் வீசுவதைப் பற்றி தெரிந்து வைத்துள்ளோம். இங்கு புயல் சாதாரணமாக மணிக்கு 120 மைல்கள் முதல் 150 மைல்கள் வரை வீசும். ஆனால் மணிக்கு 300 மைல்கள், அதற்கு மேலும் வீசும் சூறாவளியை, நம் அனுபவத்தில் கண்டதில்லை. அமெரிக்காவில் பல பகுதிகள் அத்தகைய சூறாவளியால் பாதிக்கப்படக் கூடியவைகளாக உள்ளன. சூறாவளி அதிக சேதம் விளைவிக்கக் கூடியது. அது சில நிமிஷங்கள் வீசி அடங்கிவிடும். சூறாவளியின் போது, கார்கள் காற்றில் பறக்கும். ரெயில்வே கோச்சுகள், இரயில் பாதையிலிருந்து 100 முதல் 200 கெஜம் தூரம் வரை தூக்கி எறியப்படும். சில நேரங்களில் அவைகளை காற்றில் உயரே தூக்கி வெகுதூரத்தில் போட்டுவிடும்.

ஒரு இந்தியப் பல்கலைக்கழகப் பேராசிரியர் அமெரிக்காவில், சொற்பொழிவு ஆற்றும் பணிக்குச் சென்றபோது, தன்னுடைய நண்பர் வீட்டில் ஒரு இரவு தங்கினார். அங்கு மேஜையின்மீது அன்னையின் படத்தை வைத்து பிரார்த்தனை செய்துவிட்டு படத்தை அங்கேயே வைத்து விட்டார். மறுநாள் காலை, அவர் சொற்பொழிவு ஆற்ற வேறு ஊருக்குப் போனார். அங்கு, அவர் முதல் நாள் தங்கியிருந்த பகுதி சூறாவளியால் சேதம் அடைந்து விட்டது என்று அறிவித்தார்கள். பேராசிரியர் நண்பரை போனில் கூப்பிட்டு விசாரித்ததும், நண்பருக்கு ஆபத்தில்லை என்று கேள்விப்பட்டதும் நிம்மதி ஏற்பட்டது.

சொற்பொழிவு முடிந்ததும் பேராசிரியர், நண்பர் இருந்த இடத்திற்கு விரைந்தார். அங்கு அவர் கண்ட கோரக்காட்சி இரத்தத்தை உறைய வைத்தது. அதே சமயத்தில் அந்த இயற்கையின் இடர்பாட்டில் தன்னுடைய நண்பர் உயிர் தப்பியதால் வியப்படைந்தவராய் அன்னைக்கு நன்றி செலுத்தினார்.

அங்கு 60 அல்லது 70 வீடுகள் இருந்த இடத்தில், எல்லா வீடுகளும் தரைமட்டமாகி விட்டிருந்தன. அது ஒரு பேரழிவு. வாயு பகவான் சீற்றத்திற்கு ஆளான இடத்தில் மரங்களைக் காணவில்லை. எலக்ட்ரிக் கம்பங்கள் வளைந்து முறுக்கிக் கொண்டிருந்தன. ஆனால் நண்பருடைய வீடுமட்டும் நிலைகுலையாமல், ஆடாமல் அசையாமல் இருந்தது. அவருடைய காரும் சேதப்படவில்லை. மரக்கிளை ஒன்று ஒடிந்து கார் மீது விழுந்து, கண்ணாடி மட்டும் சேதப்பட்டிருந்தது. நண்பர் வீட்டின் முன்னால் நின்ற மரம், ஒரு கிளை ஒடிந்திருந்ததைத் தவிர அப்படியே இருந்தது. பேராசிரியரை நண்பர் மீண்டும் மீண்டும் "நான் எப்படிக் காப்பாற்றப்பட்டேன்'' என்றுக் கேட்டதற்கு பேராசிரியர் அச்சத்தால் வியப்படைந்தவராய் எதுவும் சொல்ல முடியவில்லை. நண்பருக்கு பதில் சொல்ல முடியாதது மட்டுமல்ல, அன்னையின் அற்புதங்களைப் பற்றி அவர் இதுவரையில் அறியாதவராகவே இருந்தார். அவர், அன்னையின் சக்தி அவர்களுடைய வீட்டை அரண்போல் சூழ்ந்து பாதுகாத்து இருக்க வேண்டும் என்று நினைத்தார். அன்னையின் படம், அவர்கள் வீட்டில் ஒரு இரவு இருந்ததால்தான் அவர்கள் காப்பாற்றப்பட்டார்கள் என்றுக் கூறி முடித்தார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84429
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 4:12 am

98. இரயிலில் கொள்ளை

பீஹாரில் பணியில் முழுமையாக ஈடுபட்டிருந்த ஒருவர் அலுவலக வேலையாக பிரயாணம் மேற்கொண்டார். அவர் அந்த வேலையில் கடமையின் பங்காக 7 லட்சம் பணம் வசூல் செய்த தொகையை எடுத்துக் கொண்டு இரயிலில் பிரயாணம் செய்தார். அவர் அப்படி பல லட்சக்கணக்கான பணத்துடன் பிரயாணம் செய்வது வழக்கமான ஒன்று. அவர் எப்பொழுதும், தைரியசாலியாக இருந்ததாலும், அவருக்கு எப்பொழுதும் பணத்துடன் பிரயாணம் செய்யும் பொழுது பயம் ஏற்பட்டதில்லை.

ஓடும் இரயிலில் அபாய அறிவிப்பு ஒலி கேட்டதும் ஒரே கூச்சலும் குழப்பமும் ஏற்பட்டது. அவர் அந்த இரயிலில் கொள்ளையர்கள் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை உடனே புரிந்து கொண்டார். அவரிடத்தில் அவ்வளவு பெரியத் தொகை இருந்திராவிட்டால் அவர் பயப்படுவதற்கு அவசியம் இல்லை. அது அவருடைய பணம் அல்ல. பணம் தொலைந்துவிட்டால், அலுவலகத்திற்கு பதில் சொல்லக் கடமைப்பட்டவர். அந்நிலையில் எண்ணங்கள் கட்டுக்கடங்காமல் ஓடின. ஆனால் பயம் ஏற்படவில்லை. அவர் வணங்கும் தெய்வத்தை அழைத்தார். அது பயனற்றதாக இருந்தது.

திடீரென்று அவர் மனதில், ஒரு வாரத்துக்கு முன் தொலைக்காட்சியில் பார்த்த நிகழ்ச்சி ஒன்று நினைவுக்கு வந்தது. அதில் சென்னையில் ஒரு பெண்மணி சூறாவளியைப் பற்றி பேசியதை நினைவு கூர்ந்தார். அன்னையின் படம் இருந்த வீடு சூறாவளியிலிருந்து காப்பாற்றப்பட்டது என்றும், அன்னையின் சக்தி மகத்தானது என்றும் அறிந்தார். உடனே அன்னையை அழைக்க எண்ணினார். அதற்குள் கொள்ளையர்கள் அவர் இருந்த பெட்டிக்குள் புகுந்து, ஒவ்வொருவரிடமும் துருவித்துருவிக் கொள்ளையடித்துவிட்டு சேதப்படுத்திக் கொண்டிருந்தார்கள். அவர் மனதில் எந்த எண்ணமும் எழவில்லை. அவர் வைத்திருந்த பணத்தைப் பற்றியும் எண்ணவில்லை. சில வினாடிகளுக்குமுன் மெதுவாக அழைத்த அன்னையை கூட நினைக்க முடியவில்லை. அந்த நேரம், அவர் வாழ்வில் அது ஒரு ஆபத்தான நேரமாக இருந்தது. அவர் தன் உள்ளே ஆழ்ந்து சென்றார். அப்படிப்பட்ட நேரத்தில் ஆன்மா மேலே வெளியே வருகிறது. இப்படி ஒருவர், தன் உள்ளே ஆழ்ந்து போகும் தருணத்தைத்தான் அன்னை விரும்புகிறார். கொள்ளையர்கள் நாசப்படுத்திக் கொண்டிருக்கும்போது தன் உணர்வுக்கு வந்தார். அமைதியாக தெய்வீக அன்னையை அழைக்க முற்பட்டார்.

இரயில் நின்று விட்டது. ஆயுதம் ஏந்திய போலீசார் ரூபத்தில் உடனே உதவி வந்தது. கொள்ளையர்கள் ஓட்டம் பிடித்தார்கள். தன் சுயஉணர்வு வந்ததும், தன்னுடைய பணப்பையை பார்த்தார். அது பாதுகாப்பாக அப்படியே இருந்தது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84429
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 4:12 am

99. கனவுகள்

கனவுகளினால் நமது சக்தி பெருமளவு குறைகிறது. கனவுகள் இல்லாத உறக்கம், இளைப்பாறுவதாகும். ஆழ்மனத்திலிருந்து வரும் கனவுகள் பயங்கரமாக இருக்கும். அடிமனத்திலிருந்து வருபவை, எதிர் காலத்தைக் குறிக்கும். அக்கனவுகள் ஒன்றுக்கொன்று தொடர்புடையவைகளாக இருக்கலாம். கனவுகள் சூட்சும நிலைகளில் (Planes) இருந்து நீண்டகால நிகழ்ச்சிகளை மிகக்குறுகிய நேரத்தில் உணர்த்துவதாக இருக்கலாம். விடியற்காலையில் காணும் கனவு பலிக்கும் என்பது, நம் பாரம்பரியத்தின் நம்பிக்கை. சில கனவுகள் அர்த்தம் நேர்மாறானதாக இருக்கும்.

சிலர், ஒரு குறிப்பிட்ட மனிதர், தன்னை தாக்குவதாக கனவு காண்பார். அன்னை அதற்கு அர்த்தம் நேர்மாறானது என்கிறார். நான் ஒருவர் மீது கோபப்பட்டு, அவர்மீது கெட்ட எண்ணம் கொண்டிருந்தால், கனவில் அவர் என்னை தாக்குவதைக் காண்பேன். அது தன்னைத்தானே பாதுகாத்துக் கொள்ளும் வழி. அது உண்மையில், நான், எப்பொழுதும் என்னை கெட்டவன் என்று நினைப்பது இல்லை. மாறாக நான் என்னை நல்லவன் என்று எண்ணிக் கொண்டிருக்கிறேன். ஆகையால் நான், மற்றவர்கள் மீது கொண்டிருக்கும் கெட்ட எண்ணம், மற்றவர் என்மேல் கொண்ட கெட்ட எண்ணமாக மாற்றிப் பார்க்கிறேன். தன்னைப் பற்றி உணர்ந்தவர்களுக்கு, இது ஒரு எடுத்துக்காட்டாக இருக்கும். தன்னை அறிதல், அன்னையை அழைப்பதற்கு அடிப்படை ஆதாரமாகும்.

ஒன்றை அறிகுறியாகக் கருதுவதும், கனவுகளும் வெவ்வேறாக இருந்தாலும் அவை இரண்டும் ஒன்றாகவே வரும். கனவில் தண்ணீரைக் காண்பது உணர்ச்சியைக் குறிக்கும். மயில் வெற்றியைக் குறிக்கும். மழை அருளைக் குறிக்கும். சிங்கம் தைரியத்தையும், வானத்தில் பறப்பது வாழ்வின் உயரிய குறிக்கோளையும் குறிக்கும். அதையே ஆன்மீகத்தில் ஜீவியம் வேகமாக வளர்ச்சி அடைகிறது என்று கருதலாம். ரயில், பஸ்சில் போவதும் ஜீவியத்தின் வேகமான முன்னேற்றத்தைக் குறிக்கும். கனவுகளில் அடிக்கடி, தான் அதிகமாக தாக்கப்படுவதாகத் தோன்றினால், அது அவருடைய தவறான வளர்ப்பு முறையினால் அவருக்கு சமூகவிரோத மனப்பான்மை உள்ளதைக் காட்டுகிறது. கனவில் அன்னையைக் காண்பது சூட்சும உலகில் அன்னையை தரிசனம் செய்வதாகும்.

தூக்கத்தில் பயங்கரக் கனவுகளைக் காண்பவர்கள் அன்னையை அழைத்தால், உடனே அது மறைந்துவிடும். அது, அன்னை கனவிலும் பாதுகாப்பு அளிக்கிறார் என்பதாகும். எல்லோராலும் கனவில் அன்னையை அழைக்க இயலாது. அன்னையை அழைக்க வேண்டுமென்றும் நினைக்க இயலாது. அது ஆன்மீகத்தின் சிறப்புரிமை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84429
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 4 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum