ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 ayyasamy ram

வளர்ப்பு...
 ayyasamy ram

பூமி என் தாய்
 பழ.முத்துராமலிங்கம்

உயிர் பிரிவதை பார்த்திருக்கிறீர்களா ?? இதோ !! உயிர் பிரியும் கடைசி நிமிடம் !!
 பழ.முத்துராமலிங்கம்

தமிழன் கண்டுபிடித்த ஈமெயிலை வெட்கமே இல்லாமல் உரிமை கொண்டாடும் அமெரிக்கர்
 பழ.முத்துராமலிங்கம்

6 பாஸ்போா்ட் வைத்திருந்ததாக நீரவ் மோடி மீது புதிய வழக்கு
 ரா.ரமேஷ்குமார்

கோழியும் மனிதனும்
 M.M.SENTHIL

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 பழ.முத்துராமலிங்கம்

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 பழ.முத்துராமலிங்கம்

இருவர் ஒப்பந்தம் – சினிமா
 பழ.முத்துராமலிங்கம்

ஓவியம் என்பது மெüனமான கவிதை!
 பழ.முத்துராமலிங்கம்

"காய் நகர்த்த பயிற்சி எடுக்குறாராம்''
 பழ.முத்துராமலிங்கம்

ழுதாக் கூட கண்ணில இருந்து தண்ணி வரமாட்டேங்குது'' -
 பழ.முத்துராமலிங்கம்

* சந்தர்ப்பம் என்பது கடவுளின் புனைபெயர்!
 பழ.முத்துராமலிங்கம்

`தூசு தட்டப்படுகிறதா நில உச்ச வரம்பு சட்டம்?' - அதிர்ச்சியில் உறைந்திருக்கும் பெரு விவசாயிகள்
 பழ.முத்துராமலிங்கம்

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 04
 தமிழ்நேசன்1981

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 03
 தமிழ்நேசன்1981

1,800 ஆண்டுகள் பழமையான யானைமலை சிற்பங்களை சீண்டும் ‘குடிமகன்கள்’ கேட்டை தாண்டி உள்ளே செல்கின்றனர் புராதன சின்னங்கள் அழியும் அபாயம் பாதுகாக்க ஊழியர்கள் நியமிக்கப்படுவரா?
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

அழகு வயது ஆபத்து - ராஜேந்திரகுமார் நாவல் வரிசை 16
 தமிழ்நேசன்1981

பிரபல சேனலை மூட உத்தரவு! சிறைக்குள் நடக்கும் பூகம்பம்!!
 பழ.முத்துராமலிங்கம்

இலங்கை வேந்தன் எல்லாளன் - சரித்திர நாவல் வரிசை
 தமிழ்நேசன்1981

ஹாஸ்டல் தினங்கள் - சுஜாதா நாவல் வரிசை 08
 தமிழ்நேசன்1981

புதர்களில் சீரழியும் தொல்லியல் பொக்கிஷங்கள்! சா. ஜெயப்பிரகாஷ்
 பழ.முத்துராமலிங்கம்

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

வாழை மரத்தண்டில் விவசாயம் செய்யும் இந்தோனேஷியர்கள்! நம் நாட்டிலும் பின்பற்றலாமே?!
 பழ.முத்துராமலிங்கம்

மனம் மாறும் எம்.எல்.ஏக்கள்? - காலியாகும் தினகரனின் கூடாரம்
 பழ.முத்துராமலிங்கம்

திருப்பதியில் தங்குவதற்கு எளிதான வழி
 பழ.முத்துராமலிங்கம்

"எட்டு அடி குழியில் 3000 லிட்டர் மழை நீர் சேமிப்பு" - அசத்தும் கோயம்புத்தூர்காரர்கள்!
 பழ.முத்துராமலிங்கம்

மிகவும் வேடிக்கையான examination answers உங்களுக்கு சத்தமாக சிரிக்க வைக்கின்றன
 பழ.முத்துராமலிங்கம்

உங்க கைரேகையில இப்படியான குறி இருக்கா? அப்ப வாங்க அதோட அர்த்தம் என்னன்னு தெரிஞ்சுப்போம்!
 பழ.முத்துராமலிங்கம்

நாவல் மழை-தமிழ்நேசன்-தொடர்பதிவு
 sree priya

வடலூரில் கண்டறியப்பட்ட இடைக்கால மக்களின் வாழ்விடம்!
 பழ.முத்துராமலிங்கம்

விஷத்தன்மை மிக்க எத்திலீன் வாழைப்பழம்... உஷார்!
 பழ.முத்துராமலிங்கம்

10 ரூபாய்க்கு இரு வேளை உணவு, தங்குமிடம் இலவசம்!
 பழ.முத்துராமலிங்கம்

சென்னை வாசிகளே இன்னும் இரண்டே வருடம் தான்! மூட்டை கட்ட தயாராகுங்கள்! வெளியான அதிர்ச்சி தகவல்!
 பழ.முத்துராமலிங்கம்

எம்ஐடி கல்லூரி மைதானத்தில்நாளை பிரம்மாண்ட யோகா நிகழ்ச்சி
 ayyasamy ram

‘வாய்மையே வெல்லும்’ நூல் சென்னையில் இன்று வெளியீடு
 ayyasamy ram

உலகக் கோப்பை கால்பந்து போட்- சிறப்பு தபால்தலை கண்காட்சி ஏற்பாடு
 ayyasamy ram

ஒவ்வொரு முறை படம் பதிவு செய்ய லாக் இன் கேட்கிறது
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு சொட்டு எண்ணெய் இல்லாமல் தண்ணீரில் சுடலாம் ஹெல்த்தி பூரி
 பழ.முத்துராமலிங்கம்

உங்கள் கிட்னி சரியாக வேலை செய்கிறதா என்று எப்படி கண்டுபிடிப்பது இப்படி டெஸ்ட் பண்ணுங்க
 பழ.முத்துராமலிங்கம்

ரூ.1.8 கோடி செலுத்த மல்லையாவுக்கு உத்தரவு
 T.N.Balasubramanian

குதிரையில் வேலைக்கு சென்ற கம்ப்யூட்டர் இன்ஜினியர்
 T.N.Balasubramanian

எண்டமூரி வீரேந்திரநாத் நாவல் வரிசை 02
 pkselva

ஒருத்திக்கே சொந்தம் - ஜெ.ஜெயலலிதா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஒருத்தி நினைக்கையிலே - சுஜாதா நாவல் வரிசை 07
 தமிழ்நேசன்1981

ஜெயகாந்தன் நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

ஜோதிர்லதா கிரிஜா நாவல் வரிசை 01
 தமிழ்நேசன்1981

வரி ஏய்ப்பு புகார்: ரொனால்டோவுக்கு 2 ஆண்டு சிறை?
 ayyasamy ram

பழைய பேப்பர் கடையில் கட்டுகட்டாக ஆதார் கார்டு: விற்று காசு பார்த்த தபால்காரர்
 ayyasamy ram

ஏன்யா நர்ஸ் கையைப் பிடிச்சு இழுத்த?
 ayyasamy ram

35,000 கன அடி தண்ணீர் கபினியிலிருந்து திறப்பு
 ayyasamy ram

தாமதத்தை தவிர்க்க 92 ரயில்களின் நேரம் மாற்றம்
 ayyasamy ram

கண்மணி 26ஜூன்2018
 தமிழ்நேசன்1981

அகதா கிறிஸ்டி நாவல் வரிசை 01
 sree priya

வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கான வங்கிக் கணக்குகள் - என்.ஆர்.இ
 Dr.S.Soundarapandian

புதுக்கவிதைகள் - குடும்ப மலர்
 Dr.S.Soundarapandian

70 ஆண்டாக தண்ணீரின்றி வாழும் விசித்திர துறவி!
 Dr.S.Soundarapandian

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Go down

ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 3:29 am

First topic message reminder :

மொழி பெயர்ப்பாளரின் நன்றியுரை

திரு. கர்மயோகி அவர்களின் SPIRITUALITY & PROSPERITY PART – I என்ற ஆங்கில படைப்பை தமிழாக்கம் செய்து வெளியிடுவதற்கு எனக்கு அனுமதி அளித்ததிற்கு என்னுடைய நன்றியறிதலை முதலில் அவருக்கு தெரிவித்துக் கொள்கிறேன். இம்மொழிப்பெயர்ப்பை புத்தகமாக வெளியிடுவதற்கு வெளியிட முன்வந்த கடலூர் தியான மையத்திற்கும், இம்மொழி பெயர்ப்பை ஆங்கில மூலத்திற்கு ஏற்றபடி திருத்தம் செய்து கொடுத்த திரு. N.அசோகன் அவர்களுக்கும், தமிழாக்கத்தின் தரத்தை மேம்படுத்திக் கொள்ள உதவும் வகையில் தன்னுடைய தமிழாக்கப் பிரதிகளை படிப்பதற்கு எனக்கு வழங்கிய ராணிப்பேட்டை தியான மைய பொறுப்பாளர் திரு. S. லஷ்மிநாராயணன் அவர்களுக்கும் மற்றும் பல வகையில் உதவிய சக அன்னை அன்பர்களுக்கும் என் நன்றியை தெரிவித்துக் கொள்கின்றேன்.

என்னால் முடிந்தளவிற்கு இம்மொழி பெயர்ப்பினை எனக்குத் தெரிந்தளவிற்கு செய்துள்ளேன். அதையும் மீறி மூலத்தின் கருத்துச் சிறப்பு சில இடங்களில் சரியாக வெளிப்படவில்லை என்று வாசகர்களுக்கு மனதில் பட்டால் பொறுத்துக் கொள்ளும்படி கேட்டுக் கொள்கின்றேன்.

பகவான் ஸ்ரீ அரவிந்தர் மற்றும் ஸ்ரீ அன்னை அவர்களுக்கு இப்படி எழுத்து மூலமாக, இச்சிறு சேவையை செய்ய முடிந்ததிற்கு என் நன்றியறிதலை அவர்கள் பொற்பாதங்களில் சமர்ப்பணம் செய்கின்றேன்.

M. மணிவேல்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down


Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 3:52 am


50. கவனம் ஆன்மீகமானது


ஒருவர் மீது, பற்றுதலாக இருப்பது உடலுக்குரிய பாங்காகும். கவனம் உணர்வைச் சார்ந்தது. பாசம் மனத்திற்குரியது. தெய்வீக அன்பு ஆன்மீகம். பாசம் மிகுந்த குடும்பங்கள், பாசப்பிணைப்பு இல்லாத குடும்பங்களைவிட உயர்கின்றன என்பதை நாம் பொதுவாக உணர்ந்துள்ளோம். மழைக்காகப் பிரார்த்தனை செய்வதால் அது அபரிமிதமான மழையைக் கொண்டு வரும். ஆனால் தண்ணீருக்கு கவனம் செலுத்துவது மழைக்காகப் பிரார்த்தனை செய்வதைவிட அதிக அளவில் தண்ணீரைக் கொண்டு வரும். இவ்வகையில் கவனம் பிரார்த்தனையைவிட சக்தி வாய்ந்தது. ஒரு அழகிய புதிய கம்பளம், தன் மீது நடப்பவர்கள் எல்லாருடைய கவனத்தையும் ஈர்த்து, அவர்கள் சற்று நின்று அதை உற்றுப்பார்த்து அதன் அழகைப் புகழ்ந்துவிட்டு போகுமாறு அழைக்கிறது. தெய்வீக அன்னை ஒரு புதிய தரை விரிப்பின் மீது நடந்து சென்ற போது அதைப்பார்த்து அவ்வாறு புகழ்ந்துவிட்டுப் போனார். ஜடப்பொருள்களுக்கு ஜீவன் உண்டு. அவைகளுக்கு கவனம் செலுத்தினால் அவைகளின் ஜீவன் மேலே வந்து அபரிமிதமான செல்வ வளத்தைத் தருகின்றன. ஒருவர் தண்ணீருக்கு அப்படிப்பட்ட கவனம் செலுத்தும் பொழுது, கடுமையான வறட்சி காலத்திலும் தண்ணீருக்குத் தட்டுப்பாடு இருக்காது. ஜடப்பொருளான தண்ணீர் தனக்கு கவனம் செலுத்தப்பட்டதை, எப்பொழுதும் மறவாமல் பிரதிபலனாக அது நமக்கு பலனைக் கொடுக்கிறது. அது நம் நிலைக்கு ஏற்றவாறு செயல்படுகிறது.

தண்ணீரை சிக்கனமாக உபயோகிப்பதும் வீணாக்காமல் இருப்பதும் தண்ணீருக்கு அளிக்கப்படும் கவனமாகும். தண்ணீரை சேமிப்பதும், மழைநீரை ஏரி, குளம், குட்டை, போன்ற நீர்நிலைகளில் நிரப்பிக் கொள்வதும், தண்ணீரை கவனத்துடன் உபயோகிப்பதும் தண்ணீருக்கு நாம் வழங்கும் கவனமாகும். மகாராஷ்ட்ராவில் ஒரு ஓய்வு பெற்ற ராணுவ வீரர், நிலத்தடி நீரின் மட்டத்தை உயர்த்தி ஒரு கிராமத்தையே சுபிட்சமுள்ள கிராமமாக மாற்றினார். அப்படி செய்வதற்கு அவர் அந்த கிராமத்தின் மறுபுற எல்லையில், ஏரியை உண்டாக்கினார். மண் தடுப்புக்கரைகளை உயரமாக்கி, மண்சரிவை தடுப்பது பழங்காலத்து விவசாய பழக்கம். நகரத்தின் மேற்குப்புற எல்லையில் பத்து மைல் தொலைவிற்கு மண் தடுப்புக்கள் உயர்த்தி, நிலத்தடி நீரின் ஆதாரத்தைப் பெருக்க சட்டம் கொண்டு வந்தால், நகரின் எல்லா இடத்திலும் நிலத்தடி நீர் உயர்ந்து, சென்னை நகருக்குத் தண்ணீர் பற்றாக்குறை ஏற்படாது. அப்படி செய்வதால் வருடா வருடம் நல்ல மழை பெய்யும்.

நாம் வீடுகளில் தண்ணீரை முக்கியமான தேவைகளுக்கு பயன்படுத்திய பின்பு, மற்ற பல வகையான தேவைகளுக்கு எப்படி பயனுள்ள வகையில் உபயோகிக்க முடியுமென்று சிந்தித்து பார்க்க வேண்டும். அதுவும் தண்ணீருக்கு செலுத்தும் ஒருவகை கவனமாகும். நாம் தண்ணீரை ஒரு நாளில் அநேக தடவைகளில் உபயோகிக்கிறோம். தண்ணீரும் ஜீவனுள்ளது என்று, அதற்கு நாம் உரிய கவனம் செலுத்தும் பொழுது, நாம் தண்ணீருக்குள் இருக்கும் வருண பகவானை அழைப்பதாகும். மாநகராட்சி, ஒவ்வொரு வீட்டிலும் காம்பவுண்டு சுவற்றிற்கும், வீட்டிற்கும் இடையிலுள்ள தரைமட்டத்தை சிமெண்ட்டினால் பூசக்கூடாது என்று சட்டம் கொண்டு வந்தால் மழை நீர் வெளியே போகாமல், பூமிக்குள் கசிந்து உள்ளே போகும். அதனால் நிலத்தடி நீர் ஆதாரம் பெருகும். தண்ணீருக்கு கவனம் செலுத்துவதில் தனிப்பட்ட அமைப்புகளைவிட, அரசாங்கத்தின் கவனிப்பு மிகவும் சக்தி வாய்ந்ததாக இருக்கும். ஏனென்றால் அரசாங்கம் ஒரு முறையான கூட்டமைப்பாகும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 3:52 am

51. கவனம் செலுத்துவதைவிட வழிபாடு மேலானது

வழிபடுதல் என்பது பக்தி. ஒரு ஆன்மாவின் வழிபாடென்பது எல்லா ஆன்மாக்களையும் உள்ளடக்கிய இறைவனுக்கு போகிறது. கடவுள், அழைப்பவரின் குரலுக்கு விதி விலக்கில்லாமல் செவி சாய்க்கிறார். இறைவனை அழைப்பதின் மூலம் மனம் ஒரு வசீகரிப்பில் கவரப்பட்டு தன்னை இழக்கிறது. ஒரு வாலிபன் ஒரு பெண்ணின் மீது காதல் வயப்படும்பொழுது அவள் நடந்து போகும் பாதையை உணர்ச்சி மேலிட்டால் வணங்குகிறான். அவள் அவன் மேல் காதல் கொண்டோ அல்லது லட்சியரீதியாகவோ அவனுக்கு விசுவாசமாக இருக்கிறாளோ இல்லையோ, அவனுடைய போற்றுதலால் அவள் கவரப்படுகிறாள் என்பது நிச்சயம். தண்ணீரை வழிபட முடியுமா? ஆம், தண்ணீர் பற்றாக்குறை ஏற்படும் பொழுது, மனத்தின் உள்ளேயிருந்து எழும் உணர்ச்சிகளால் தண்ணீரை வழிபடுவது அவசியம். ஒரு ஓய்வுபெற்ற தலைமை நீதிபதி குறுகிய கால கவர்னர் பதவி வகித்த பின், ஒரு பல்கலைகழகத்தின் துணைவேந்தராக நியமிக்கப்பட்டார். அங்கு மாணவர்கள் அடங்காத மூர்கத்தன்மை உடையவர்களாக இருந்தார்கள். அவர்கள் ஒரு பேராசிரியரை வேலை நீக்கம் செய்யும்படி கோரிக்கை எழுப்பினார்கள். தவறினால் அங்கு போடப்பட்டிருந்த ஒரு பெரிய பந்தலுக்கு தீ வைத்து விடுவதாக மிரட்டினார்கள். அவருடைய சமாதானத்தை மாணவர்கள் ஏற்க மறுத்துவிட்டார்கள். அவர் சென்னைக்குச் சென்று பார்க்க வேண்டிய அதிகாரிகளைப் பார்த்து, பெறவேண்டிய ராஜினாமா கடிதத்தைப் பெற்றுக் கொண்டு திரும்பும் பொழுது, ரயில்வே ஸ்டேஷனில் சந்தித்த பல்கலைகழக ஊழியர்களிடம் கடிதத்தை அவர் பத்திரமாக பாதுகாத்து கொண்டு வந்ததைப் பற்றிப் பேசும்பொழுது, அவர் வாழ் நாளிலே அப்படி வேறெதையும் பாதுகாப்பாக வைத்திருக்கவில்லை என்று கூறினார். அக்கரையுடன் தண்ணீரைப் பாதுகாத்து தண்ணீரைப் போற்றலாம். அதை வணங்கவும் செய்யலாம்.

சுயநலமின்றி, தண்ணீருக்கும் ஜீவன் உண்டு என்கிற மனோபாவத்துடன் தண்ணீரை உணர்வால் போற்றுவது நன்று. அப்படி தண்ணீரை உயிருள்ளதாகவும் அன்புக்குரியதாகவும் எண்ணி வழிப்பட்டால், நிச்சயமாக தண்ணீரின் பதில் கிடைக்கும். அந்த நிமிடத்திலிருந்து வீட்டில் தண்ணீர் தட்டுப்பாடு என்பது கேள்விப்படாததாக இருக்கும். தண்ணீர் உணர்ச்சிக்குரியது என்பது ஆன்மீக தத்துவம். மிகுந்த உணர்ச்சிக்குட்பட்டவர்கள் கனவில், அலைபுரளும் கடலைக் காண்பார்கள். அந்த அலைகளின் மீது மிதப்பது போன்றும் காண்பார்கள்.

போற்றுதல் என்பது கவனிப்பை உள்ளடக்கியதாகும்.

தண்ணீரை ஒருவர் வழிபடும் பொழுது வழிபடுகின்ற அந்த ஸ்தாபனத்திலும் வீட்டிலும் தண்ணீர் கஷ்டம் குறைவாகவே இருக்கும். தண்ணீருக்கு கவனம் செலுத்துவதால் தண்ணீர் பற்றாக்குறை தற்காலிகமாகத்தான் தீரும். ஆனால் அதைவிட தண்ணீரை வழிபடுவதால் நிரந்தரமான தீர்வு கிடைக்கும். நாம் தண்ணீரை வழிபடுவதால், இப்பொழுது நாம் உபயோகிக்கும் தண்ணீரின் தரத்தைவிட உயர்ந்ததான, சுத்தமான தண்ணீர் கிடைக்கும். கவனிப்பு எப்பொழுதும் பொய்ப்பதில்லை. தண்ணீருக்கு பக்தி செலுத்துவதால், அது அதிகப் பலன் தருவது எப்பொழுதும் பொய்ப்பதில்லை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 3:53 am


52. நகரத்தின் தண்ணீர் பிரச்சனைக்கு நிரந்தர தீர்வு காணுதல்


மழை, அருள் என்பது ஆன்மீகம். தண்ணீர் உணர்ச்சிக்குரியது. மனம் உணர்ச்சிப் பெருக்கால் நிறைந்திருக்கும் பொழுது, தேவைக்கு மிஞ்சிய அளவில் தண்ணீர் அபரிமிதமாகக் கிடைக்கும். நீர்வளம் உள்ள இடங்களில் இருப்பவர்கள் குடும்பப் பாசத்துடன் இருப்பதைக் காணலாம். தண்ணீர் பற்றாக்குறைக்கு நிரந்தரத் தீர்வு காண்பதற்கான இரகசியம் இதிலுள்ளது. உணர்ச்சிகளை நாம் கட்டளையிட்டு வரவழைக்க முடியாது. அப்படி எனில் இவ்வுண்மையை நாமெப்படி நடைமுறையில் பயன்படுத்திக் கொள்வது?

உணர்வு என்பது உயர்வானது என்பது உண்மை. இதுவுமன்றி வேறு ஒரு உண்மையும் உள்ளது. நமக்கு முக்கியமானதொன்று தேவைப்படும் பொழுது, அதை அடைய தீவிரமாக முயற்சிக்கும் பொழுது, நமக்கு உணர்ச்சி பெருகுகிறது. மேலும் குடும்பத்திலுள்ளவர்கள் மீதும், மற்றவர்கள் மீதும் காட்டும் பாசம், தேசபக்தி, நேர்த்தியான வேலை செய்வதில் காட்டுமார்வம் மற்றும் எதன் மீதும் காட்டும் உணர்ச்சியாலும் தண்ணீர் பிரச்சனைக்குத் தீர்வு காணமுடியும். அந்த உணர்ச்சியை தண்ணீருக்காக செலுத்துவது மிகவும் சிறந்தது. நன்றியுடைமை என்பது, இறைவன் வாழ்வில் செயல்படுவதை உணர்ச்சிப் பூர்வமாக அறிந்து கொள்வதாகும். அப்படி இறைவனுக்கு நன்றி செலுத்தும் பொழுது, உடலில் அதிர்வுகள் ஏற்பட்டு சிலிர்க்கின்றது.

பல நூற்றாண்டுகளுக்கு முன், நூறு வருஷத்திற்கு ஒரு முறைதான் நாட்டில் வறட்சி ஏற்பட்டது. ஆனால் 20ம் நூற்றாண்டில்தான் அதிகபட்சமாக 60 முறைகள் வறட்சிகள் ஏற்பட்டன. வறட்சி அதிகரிப்பது என்பது ஆன்மீக நோக்கில் மனிதன், இறைவனிடமிருந்து விலகிப் போய்க் கொண்டிருக்கிறான் என்பதைத் தெளிவுபடுத்துகிறது. வெளியில் ஏற்படும் வறட்சி, மனிதனின் இதயத்தில் அன்பின் ஊற்று வறண்டு விட்டதின் பிரதிபலிப்பாகும்.

வறட்சிக்குப் பின்னால் உள்ள ஆன்மீகக் காரணத்தை உணர்ந்து, மக்கள் சிருஷ்டி கர்த்தாவான இறைவனின் கருணை மீது உள்ளம் நிறைந்த நினைவுடன் மனதை செலுத்தினால், பருவ காலம் இல்லாத போதும், தூய்மையான மனத்தோடு மக்கள் யாவரும் இடைவிடாது வருண ஜபம் செய்வது போன்று, அதிக மழை பெய்யும். ஐரோப்பாவில் பிரம்மத்தை அப்சல்யூட் (ABSOLUTE) என்றும் இந்தியர்கள் பரப்பிரம்மம் என்றும் கூறுகிறார்கள். சத்தியத்திற்கு நம் வாழ்க்கையை அர்ப்பணித்தால் மழை இப்படி பருவம் தவறியும் பெய்யும். அரிதானது தண்ணீரில்லை, மனிதனுடைய உணர்வுகள்தான்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 3:53 am

53. தமிழ் நாட்டில் வறட்சி

உலகில் எந்தப் பகுதியிலும் வறட்சி ஏற்படலாம். ஆனால் ஆன்மீகம் நிறைந்த இந்தியாவில் வறட்சி ஏற்படாது. இருந்தபோதிலும், இந்தியாவில் வெள்ளச் சேதமும் வறட்சியும் ஏற்படுகிறது. இக்கூற்றை விரிவுபடுத்தி வறட்சி எந்தப் பகுதியில் நேர்ந்தாலும், தமிழ் நாட்டுக்கு வரக்கூடாது என்று கூற விரும்புகிறேன். ஆன்மீகம் மிகுந்த இந்தியா ரிஷிகளும், தபஸ்விகளும், முனிவர்களும், யோகிகளும் வாழ்ந்த நாடு. தமிழ் நாட்டில் அவதரித்த 63 நாயன்மார்களும், 12 ஆழ்வார்களும் பகவான் ஸ்ரீ அரவிந்தர் வளரும் ஆன்மா என்று வர்ணிக்கும் சைத்திய புருஷனுக்குரிய யோகத்தை செய்தவர்களாவார்கள்.

ஸ்ரீ அரவிந்தரின் பூரணயோகம், வாழ்வனைத்தும் யோகம் என்று கூறுகிறது. மற்ற யோகம் யாவும் வாழ்வை புறக்கணிக்கிறது. இங்கு ஆன்மா என்று குறிப்பிடுவது ஜீவனின் சாட்சி புருஷன் அல்ல. அது சைத்திய புருஷன் என்பதாகும். வாழ்வில் பங்கு கொண்டு செயல்பட்டுக் கொண்டு வருவது, சைத்திய புருஷனாகும். ஸ்ரீ அரவிந்தர், தமிழ்நாட்டில் சைத்திய புருஷனின் வெளிப்பாடு மிகுந்து காணப்படுவதால் இங்கே வந்தாரோ என்று கருத வேண்டியுள்ளது. எந்த விதமான இடர் வந்துள்ள போதும் வறட்சி என்பது தமிழ் நாட்டுக்கு வராது, வரவும் கூடாது. அதற்கு நாம் செய்ய வேண்டியது யாதெனில் நாம், நம்மை ஆன்மீகப் பாரம்பரியத்தில் ஈடுபடுத்திக் கொண்டு செயலாற்ற வேண்டும்.

மேற்கூறிய 75 மகான்களைத்தவிர, பெரிய ஆன்மாக்களான ரமணமகரிஷி, திருவாரூர் தட்சிணாமூர்த்தி சுவாமிகள், பட்டினத்தார், ராமலிங்க சுவாமி, போளூர் விட்டோபா, ராகவேந்திரர் மற்றும் பல மகான்கள் அவதரித்த நாடு, தமிழ் நாடாகும். இவர்களில் பலர் சூட்சும உலகில் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள். மற்றும் சிலர் பரப்பிரம்மத்துடன் ஐக்கியமாகி விட்டிருப்பார்கள்.

இந்த மகான்களுடன் லட்சக்கணக்கான மக்கள் பக்தியுடன் ஈடுபாடு கொண்டுள்ளார்கள். இதைத்தவிர இஸ்லாமிய கிருஸ்துவ மகான்களும் உள்ளனர். மக்கள், தாங்கள் வழிபடும் மகான்களின் மேலுள்ள பக்தியை தீவிரப்படுத்தி அவ்வகையில் பழைய தொடர்பை புதுப்பித்துக் கொண்டால் நாட்டிற்கு ஒரு புதிய முறையான வாழ்வு ஏற்பட்டு, இனி எந்த வருஷத்திலும் வறட்சி என்பதே வராத நிலைமை ஏற்படும். வறட்சி வராமல் தடுக்க மத சம்மந்தமான சடங்குகளும் பின்பற்றப்படுகின்றன. சடங்குகளை விலக்கி மழைக்காக தெய்வீக அன்னையை அழைக்கலாம். அப்படி ஒருமுறை அன்னையை அழைத்தபோது, மழை அதிகமாகப் பெய்தது. மழை, அளவு கடந்து பெய்த பொழுது அதை நிறுத்துவதற்காக வேறொரு பிரார்த்தனை செய்ய வேண்டியிருந்தது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 3:54 am

54. பணத்தை அதிகம் செலவழித்தால் பண வரவு பெருகும்

பணத்தை அதிகம் செலவழித்தால் பணவரவு அதிகரிக்கும் என்ற தலைப்பின் இந்தத் தத்துவம், பணத்தை சிக்கனமாக குறைந்த அளவில் செலவு செய்தால் பணம் அதிகரிக்கும் என்ற பரவலான நம்பிக்கைக்கு முரண்பாடானது. ஆனால் பணத்தை அதிகமாக செலவழிக்கும் முறையை கையாண்டவர்கள் பணத்தை அதிகமாக சேர்த்தார்கள் என்பது அனுபவபூர்வமான உண்மை. அதுவே நியாயமான ஆன்மீக உண்மையுமாகும்.

இதை நான் ஒரு மெக்கானிக்கல் விதிமுறை என்று கூட கூற விரும்புகிறேன். ஒரு குழாய் மூலமாகவோ, வாய்க்கால் மூலமாகவோ தண்ணீர் பாயும்போது, தண்ணீரின் வரத்து அதிகரிக்க தண்ணீரின் வெளியேற்றத்தை அதிகரிக்கிறோம். இது இயற்பியல் விஞ்ஞானம் என்று அறிகிறோம். அன்னை இப்படி ஒருமுறை பேசியதைக் கேட்டவர்கள் ஆச்சரியத்தால் திகைப்புற்றனர். இந்தப் புதிய கருத்தை ஒவ்வொருவரும் ஏற்றுக் கடைப்பிடித்து, அதன் உண்மையை அறிந்து கொண்ட பின் சிறிது காலத்திற்குள் பழைய முறைக்கே திரும்பினார்கள். பழங்காலத்து தொன்மையான தமிழ் இலக்கண நன்னூலில், நாம் நமது அறிவையும் புலமையையும் பலருக்கு போதிப்பதால், போதிப்பவர் மேலும் அதிக அறிவு பெறுவார் என்று சொல்லப்பட்டுள்ளது.

இசை, கலை, மொழி போன்றவற்றில் ஒருவரின் திறமை அதிகரிக்க அதை அவர் பயிற்சியை மேற்கொள்வதின் மூலம் அடையலாம் என்பது இதில் மறைந்துள்ள உண்மை.

எங்களிடம் வரும் வாடிக்கையாளர்களிடம் இந்த தத்துவத்தைப் பற்றி விளக்கிய போது, அதை அவர்கள் ஏற்றுக் கொண்டு செயல்பட்டதின் விளைவாக, அவர்களது பணவரவு ஆச்சரியம் தரும் வகையில் தொடர்ந்து அதிகரித்தது. பணத்தை தாராளமாகச் செலவு செய்வது என்பது பணவிஷயத்தில் பிஸிக்கலான அம்சமாகும். பணத்தை செலவு செய்வதில் நாம் காட்டும் ஆர்வம் மற்றும் இந்த உண்மையை நாம் ஆழமாக புரிந்து கொள்வது ஆகியவை பணவரவின் அதிகரிப்பை நிர்ணயிக்கும். செலவழிக்க வேண்டுமென்று சொல்வது, ஊதாரித்தனமாக வீண் செலவு செய்வதல்ல. நியாயமான செலவைத்தான் இங்கு செலவு என்று குறிக்கப்படுகிறது. வீட்டிலோ அல்லது உன்னுடைய வியாபாரத்திலோ நிர்பந்தம் இல்லாத இடத்தில் அவற்றிற்கு செலுத்த வேண்டிய பணத்தை உடனே செலுத்தாமல் தள்ளிப் போடுவதும், நிர்பந்தம் அதிகமாக இருக்குமிடத்தில் உடனடியாக செலுத்தி விடுவதும், சாதாரணமாக பழக்கத்தில் இருந்து வரும் நடைமுறைப் பழக்கமாகும். பணத்தை இவ்வாறு செலவிடுவது சரியான முறையன்று.

பண செலவிற்கு ஒரு முறையான வரிசை உள்ளது. இந்த வரிசையை மூன்று மாதங்கள் சரியாக பின்பற்றுங்கள். அது சம்பளம் கொடுப்பதிலாகட்டும் அல்லது வியாபாரத்தில் சரக்குகளை வழங்குபவர்களுக்கு பணம் கொடுப்பதிலாகட்டும், முன்னுரிமை கொடுத்து இந்த முறையைப் பின்பற்றுங்கள். இதை பின்பற்ற முடிவு செய்தால் இந்த வரிசை கிரமம் ஏன் முக்கியம் என்று உணர்ந்து செயல்படுங்கள்.

நம் செயல்பாடு சரியான விளக்கத்தின்படி இருக்க வேண்டும். அறிவு விளக்கத்தைத் தாண்டி ஆன்மீக நம்பிக்கையின் அடிப்படையில் செயல்படும் கட்டமும் உள்ளது. நாம் மேலும் ஒரு கட்டத்திற்குச் சென்று ஆன்மீக நம்பிக்கையை தெளிந்த ஆன்மீக அறிவாகவும் மாற்றிக் கொள்ளலாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 3:54 am


55. எப்பொழுதும் பெருகிக் கொண்டு வரும் வருமானம்


பொருள் ஈட்டுவது தங்கள் கொள்கைப்படி நேர்மையற்றது என்ற நம்பிக்கைக் கொண்ட உயர்ந்த ஆத்மாக்கள் உள்ளார்கள். நான் அவர்களுக்கு என் நிலையைப் பற்றியோ அல்லது அவர்கள் தொன்று தொட்டு கடைப்பிடித்து வந்த ஒழுக்க நெறி முறை தத்துவத்தின்படி வாழ்க்கைக்கு மிகக் குறைந்த பணமே போதுமென்ற நம்பிக்கையைப் பற்றியோ விளக்க முயற்சிக்கவில்லை. என்னுடைய முக்கியமான இரண்டு நம்பிக்கைகள்:

நவீன நாகரீக வாழ்க்கை செலவுக்கு அதிக பணம் தேவைப்படுகிறது.
வருடக்கணக்கில் தவத்தில் உட்கார்ந்து இருப்பதை விட நேர்மையாக பணம் சம்பாதிப்பது மிகவும் கடினமானது. தவம் என்பது தூய்மையான உயர்ந்த நிலையில் செய்வதாகும். ஆனால் பணம் சம்பாதிப்பது என்பது சிரமம் நிறைந்த நிஜ உலகில் செய்ய வேண்டியதாகும்.

எவரொருவர் தன் சூழ்நிலை அனுமதிக்கும் அளவிற்கு தன்னுடைய செலவுகளை முறையான வரிசைக்கு ஆட்படுத்துகின்றாரோ அவருடைய வருமானம் அந்த அளவிற்கு பெருகுவதைக் காணலாம். தவிர்க்க முடியாத செலவு என்று தற்பெருமைக்காக செலவிடுவதை தாராள செலவாகக் கருத முடியாது. கொடுக்க வேண்டிய சில கடினமான பாக்கிகளை தாமதப்படுத்துவதும், தனக்கு சேர வேண்டிய பணத்தைக் கேட்காமல் இருக்கும் தயாள குணம் உடையவருக்கு கொடுக்காமல், தனக்கு அவசரமாகத் தெரியும் செலவுகளுக்கு முன்னுரிமை கொடுத்து செலவிடுவதும், ஏமாற்றும் மனப்போக்கை காட்டுகிறது. முறையான வழியில் தாராளமாக செலவழிப்பது, நம்மிடத்திலுள்ள ஏமாற்றுகிற குணத்தின் களங்கத்தைப் போக்குவதாகும். நம்முடைய தேவைதான் முக்கியமென்ற மனப்பான்மையை தவிர்ப்பது, நம்முள் ஒரு கட்டுப்பாட்டைக் கொண்டுவரும். இந்த இரண்டு ஆன்மீகக் கோட்பாடுகளும் மிகவும் சக்தி வாய்ந்தவைகளாகும். உடலாலும், மனத்தாலும் பொருள் ஈட்டுவதைவிட ஆன்மா மூலம் அதிகமான பொருள் சம்பாதிக்கலாம்.

நியாயமாக கொடுக்க வேண்டிய பணத்தை நீ தாராளமாக மனமுவந்து கொடுக்கும் பொழுது, அதைப் பெறுபவர் பேரானந்தம் அடைவார். அதனால் அவருடைய ஆன்மாவின் சக்தி வெளிப்படுகிறது. பயனற்ற வகையில் ஆடம்பரமாக செலவழிக்கும் பொழுது அதைப் பெறுபவர், நம்மை ஒரு முட்டாளாக எண்ணுவார். சில சமயங்களில் நாம் கொடுப்பது நம் அகந்தையின் வெளிப்பாடாக கருதப்பட்டு அடுத்தவர் அப்பணத்தை வாங்க மறுக்கவும் செய்யலாம்.

வெற்றிகரமாக நடக்கும் வியாபாரத்தில் செலவிற்கு உரிய இடங்களில் நிறைய செலவாவதையும் காணலாம். அங்கு வியாபாரம் தொடர்ந்து வளர்ச்சியடைவதற்கு அது ஒரு முக்கிய காரணம். தெய்வீக அன்னை இதை வாழ்வின் அடிப்படையான கொள்கை என்று அறிவித்துள்ளார். பணத்தைப்பற்றிய இந்நியதிக்கு ஆன்மீக நிருபணம் தேவை என்று நினைப்பவர்கள் அன்னையின் கூற்றை நிருபணமாக எடுத்துக் கொள்ளலாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 3:54 am

56. பணம் உழைத்து சம்பாதிப்பதற்கு பண்புகள் சக்தி முக்கியம்

பணம் உழைத்து சம்பாதிப்பது, என்பது தேர்தலில் வெற்றி பெறுவது, பரீட்சையில் பாஸ் செய்வது போன்ற நடவடிக்கையைப் போன்றது. ஒரு செயலில் எனர்ஜி, நோக்கம், ஆர்கனைஷேஷன் மற்றும் திறமை என்று நான்கு அம்சங்கள் உள்ளன. எனர்ஜி ஆர்வத்திலிருந்து வருகிறது. நோக்கம் எனர்ஜிக்கு செயல்படும் திசையைக் காட்டுகிறது. ஆர்கனைஷேஷன் எனர்ஜியை சக்தியாக மாற்றுகிறது. திறமை சக்தியை பலனாக மாற்றுகிறது.

பணம் ஈட்டப்படுவது ஒவ்வொரு அம்சத்தின் திறனைப் பொருத்தது. மேலே குறிப்பிட்ட திறன்களின் அம்சம் ஒருங்கிணைந்து செயல்படும் பொழுதுதான், ஈட்டப்படும் பணத்தின் அளவு தெரியும். இதில் ஏதோ ஒரு அம்சம் இல்லாவிட்டாலோ அல்லது அரைகுறையாக செயல்பட்டாலோ, பணம் ஈட்டுவதில், எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது. எனவே பணத்தை நல்லமுறையில் ஈட்டுவதற்கு காரணமாக இருக்கும் எந்த அம்சத்தையும், தவறவிடக்கூடாது. ஈட்டப்படும் பணத்தின் அளவு, இந்த அம்சங்களின் பண்புகளால் நிர்ணயிக்கப்படுகிறது. இது ஏன் என்றால் பண்புகள் என்பது ஆன்மீகம் என்பதாகும்.

ஒருவர் மாதம் ரூ.10,000 அல்லது ஒரு லட்சம் சம்பாதிப்பவர் அந்த வருமானத்தை 5 மடங்காக உயர்த்திக் கொள்ள முடியும். அதற்கு அவர் செய்ய வேண்டியது என்னவென்றால் பண்புகளின் நிலையை கொஞ்சங் கொஞ்சமாக உயர்த்தி அதிகபட்ச நிலைக்கு உயர்த்திக் கொள்ள வேண்டும். இந்த முறையைப் பின்பற்றினால் ஒரு கம்பெனி மிகக் குறைந்த நஷ்டத்தில் இயங்கி வரும் பொழுது, குறைந்த அளவு இலாபம் ஈட்டும் அளவிற்கு உயர்த்திக் கொள்ள முடியும். இலாபத்தை மேலும் உயர்த்திக் கொள்ள வேண்டுமானால், பண்புகளை உயர்த்திக்கொள்ள வேண்டும். அல்லது செயலை மேலும் சிறப்பாக முறைப்படுத்துவதாலும் கம்பெனியின் முக்கியக் குறிப்பிட்ட தேவைகளுக்கு தேவையான வழிமுறைகளை பின்பற்றுவதன் மூலமாகவும், அதிக லாபத்தை எட்டமுடியும்.

பண்புகள் சம்பந்தப்படாத வேலையே இல்லை. கவனம், செயலை முறைப்படுத்துதல், புரிந்து கொள்ளும் திறன், நேர்மை, உண்மையாக இருத்தல் போன்ற பண்புகள் நாம் அறிந்தவைகளாகும். இதைப்பற்றி அதிகமாக பட்டியலிடலாம்.

ஒரு குடும்பத்தின் தலைவரான தகப்பனாரோ அல்லது தாயாரோ தன்னுடைய சொந்தத் தேவைகளை நாடுவது சுயநலமாகும். அவர் தன் சொந்த தேவைகளைப் பூர்த்தி செய்து கொள்வதற்குப் பதில் குடும்பத்தில் உள்ள அனைவரின் தேவைகளை பூர்த்தி செய்தால் சுயநலமற்றவராக இருப்பார். தனது கடமையாக இருந்தாலும் இல்லாவிட்டாலும், மற்றவர்களின் தேவைகளுக்காக தன்னை அர்ப்பணித்துக் கொள்வதில் முயற்சிப்பார். அப்படி மற்றவர்களுக்கு கவனிப்பு செலுத்துவதால் குடும்பத்தில் வருமானம் திடீரென்று பெருகும். கம்பெனி முதலாளிகள் அப்படிப்பட்ட முயற்சியில் ஈடுபடும் பொழுது, இது வரையில் வைக்கோற்போரில் ஊசி தேடுவது போன்று, ஆர்டர்களைத் தேடிக் கொண்டு இருக்கும் நிலை மாறி ஆர்டர்கள் தானாகவே வந்து குவியும்.

பண்புகள் ஆன்மீகச் சிறப்புடையது. அவை அபரிமிதமான செல்வத்தைக் கொண்டு வரும் திறன் உடையவை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 3:55 am

57. பண்புகள் 100 மடங்கு சக்தி உடையவை

ஆயிரம் வருடங்களுக்கு முன்பு மனிதன் உடல் அளவில்தான் வாழ்ந்தான். அப்பொழுது அவன் வாழ்வு ஆரம்ப நிலையாக எளிமையாக இருந்தது. அந்த நிலையில்தான் அவன் வாழ்ந்து கொண்டிருந்தான். இப்பொழுது மனிதன் தன் வாழ்வில் வசதிகளைப் பன்மடங்கு அதிகரித்துக் கொண்டான். ஆனந்தம், சௌகரியங்கள், திறமை, வேண்டுபவற்றை அடைதல், போன்றவைகளில் 100 மடங்கு வளர்ச்சியை அடைந்து விட்டான். இந்த முன்னேற்றங்கள் ஆயிரம் ஆண்டுகளில் ஏற்பட்ட வியக்கத்தகு நிகழ்ச்சிகளாகும். இதற்குக் காரணம் மனிதன் உடல் அளவிலிருந்து மனத்தின் நிலைக்கு உயர்ந்துவிட்டான் என்பதாகும். எனினும் அவன் தன் வாழ்வை முழுமையான மனத்தளவிலான வாழ்க்கையாக, முற்றிலுமாக அமைத்துக் கொள்ளவில்லை. பகுத்தறிவு வாழ்வாகவோ, மனதளவில் உயர்ந்த வாழ்வாகவோ, அமைத்துக் கொள்ள முடியாவிட்டாலும், அவன் உடலளவு நிலையிலிருந்து உணர்வு நிலைக்கு உயர்ந்துள்ளான், என்பது உண்மை. உடலை விட்டு விலகி மனிதன் உணர்வு நிலைக்கு வந்துள்ளான் என்பது உண்மை. அவனுடைய உடலும், உணர்வும் பிஸிக்கல் லெவலில் அறிவின் ஆதிக்கத்தை ஏற்றுக்கொள்கின்றன. ஆனால் உணர்வு சம்பந்தப்பட்ட விஷயங்களில் அறிவின் தலையீட்டை ஏற்பதில்லை. இருந்தாலும் மனிதன் அறிவால் செயல்படுகின்றவன் என்று சொல்வதில் தவறில்லை.

இத்தகைய வியத்தகு பெருக்கம் மனிதன் பிஸிக்கல் லெவலிலிருந்து அறிவு நிலைக்கு உயர்ந்ததால் வந்துள்ளது என்றால், இதே மாதிரியான மற்றொரு பெருக்கம் அறிவு நிலையிலிருந்து ஆன்மநிலைக்கு உயரும் பொழுதும் வரும். அப்படி உயரும் பொழுது வாழ்வு வளமான நிலைக்கு உயர்வதிலும், உள்ளுரை அமைதி ஏற்படுவதிலும், வெளிப்புற பாதுகாப்புப் பெறுவதிலும், பேதமற்ற பூசல் இல்லாத நிலையிலும், மனிதனின் நிலை ஆயிரம் மடங்கு உயரும். குறிப்பாக செல்வ வளம் அதிகமாக பெருகும் என்று ஒருவர் உறுதியாகக் கூறமுடியும்.

ஒளிபொருந்திய ஆன்மாவை அடைவது நமது குறிக்கோளானால், நமக்குத் தெரிந்துள்ள பண்புகளான நேர்மை, விஸ்வாசம், உண்மையைக் கடைப்பிடித்தல், சுத்தம், மௌனம் இவற்றைப் பின்பற்ற வேண்டும். இந்த பண்புகளை ஒருவர் அதிக அளவில் உபயோகப்படுத்தினால், ஆன்மாவின் சக்தியை வாழ்வில் செயல்பட வைக்கமுடியும். இந்தப் பண்புகள் ஆன்மாவின் திறமையானதால், நம் வேலையின் பலன்கள் ஆயிரம் மடங்காக இல்லாவிடினும் நூறு மடங்காக உயர்த்தும்.

நாம், பணத்தை உபயோகப்படுத்தும் பொருளாகக் கருதுகிறோம். ஆன்மீகத்தின் படி, பணம் என்பது இறைவனின் சக்தியாகும். நாம் ஆன்மீகப் பண்புகளை முழு அளவில் உபயோகிக்கும் பொழுது, பண வரத்து இடையறாமல், தடையின்றி வரும். ஆன்மீகப்பண்புகளை உபயோகிப்பதில், சிறப்பாகவும், பூரணமாகவும், முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும். ஆன்மீகப் பண்புகளை பற்றிய நீண்டதொரு பட்டியலை கொடுக்க முடியும். நஷ்டத்தில் போய்க்கொண்டிருக்கும் ஒரு கம்பெனி ஆன்மீகப் பண்புகளின் தன்மையை தெரிந்து கொண்டு, தன் சொந்த தேவைகளைக் கருதாமல் மற்றவர்களின் தேவைக்கு முன்னுரிமைக் கொடுத்து பூர்த்தி செய்வதில் கவனம் செலுத்தினால், அடுத்த மாதமே கம்பெனி இலாபம் ஈட்டத் தொடங்கும். உள்உணர்வில் உண்மையிருந்தால் ஆன்மீகச்சக்தி வெளிப்பட்டு பலன்கள் அக்கணமே வெளிப்படும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 3:55 am

58. மேதை என்பது ஆன்மாவின் சக்தி

பண்புகள் என்பது ஆன்மீகமானவை. ஆனால் அவை நமக்கு வியக்கத்தக்க அளவில் இவ்வுலக வாழ்க்கைக்குரிய பலன்களை உயர்த்துமா? நாம் ஏன் அவைகளை ஆன்மீகம் என்று அழைக்கிறோம்?

மேதைகள் பிறக்கிறார்கள். ஆனால் அவர்கள் உருவாக்கப்படுவதில்லை. மேதைகள் நூறு வருஷத்தில் சில நேரங்களில் தோன்றுகிறார்கள். மேதைகள் சிலர் இளம் பிராயத்திலேயே அறிந்து கொள்ளப்படுகிறார்கள். மற்றவர்கள் வாழ்நாளில் பிற்காலத்தில் தம்முள் உள்ள, மேதைத் தன்மை வெளிப்படுவதை உணர்கிறார்கள். அவர்களுக்குள் உள்ள திறமை, வெளிப்புற சூழல் உகந்ததாக அமையும் பொழுதுதான், அவர்களது மேதாவிலாசம் வெளிப்படுகிறது. மேலும், சாதகமான சூழ்நிலை உருவாகும் பொழுது மேதைத் தன்மை, தற்செயலாக, மனிதன், பொருள்கள், காலம், பிரபஞ்சம் இவைகளில் வெளிப்படுகிறது. ஆன்மீகப் பண்புகள் அத்தகைய சாதகமான சூழ்நிலையை எல்லோருக்கும் அளிக்கவல்லது.

ஒரு காலத்தில் இந்தியா மட்டுமின்றி உலகம் முழுவதிலும் ஒரு நிலைமை இருந்து வந்தது. அது எல்லோருக்கும் கல்வி இல்லாத நிலை, ஒவ்வொருவரும் போர் வீரராக ஆக முடியாத நிலை, நிர்வாகம் ஒரு சிலருக்கு மட்டும் ஒதுக்கப்பட்டிருந்த நிலை, நாட்டை ஆளும் உரிமை அரச குடும்பத்தினருக்கு மட்டும் உரியது என்ற நிலைமையாக இருந்து வந்தது. இப்பொழுது இவை அனைத்தும் அடியோடு மாறிவிட்டன. எனவே மேதாவிலாசம் பிறப்பால் வருவது என்ற கருத்தை மறு ஆய்வு செய்ய வேண்டியுள்ளது. ஒரு மேதை தன்னுடைய மேதா விலாசத்தை உணராத நிலையில், திடீரென்று ஒரு நாள் அவருள் இருக்கும் சக்தி முழுமையாக மலர்ச்சியடைந்து வெளிப்படுகிறது. திறமையின் பண்புகள், நோக்கத்தின் பண்புகள், மனத்தின் பண்புகள், யாவும் வேலையிலுள்ள ஆன்மாவை வெளிப்படுத்தக் கூடியன. ஆன்மா அப்படி வெளிப்படும் பொழுது அளவற்ற பலன்களை சுபிட்சமாக அளிக்கிறது.

உடல் உழைப்பு, திறமையை வழங்குகிறது. உணர்வால் செய்யும் வேலை, அதாவது வாழ்க்கை அனுபவங்கள் இதமான, மனோபாவங்களைக் கொடுக்கிறது. மனத்தால் புரிந்து கொள்வது, நன்றாக புரிந்து கொள்ளும் ஆற்றலைத் தருகிறது. ஒருவர் தன்னை ஆன்மாவின் நிலைக்கு உயர்த்திக் கொண்டு வேலையை செய்யும் பொழுது அவர், அமைதி, மௌனம், சாந்தி, உண்மை, நேர்மை, விஸ்வாசம், கடமை உணர்வு ஆகிய பண்புகளை உணர்கிறார். இந்தப் பண்புகளை தெரிந்தே உடல், உணர்வு, மனம் சம்பந்தப்பட்ட வேலைகளில் செலுத்தி செய்யும் பொழுது, அது ஆன்மாவை வெளிப்படுத்த உதவுகிறது. ஆன்மாவின் சக்தி அபரிமிதமானது. எனவே எப்பொழுதும் சுபிட்சம் அதிகரித்த வண்ணமாகவே இருக்கும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 3:55 am

59. பக்தியுள்ளவர்கள், வைதீகமானவர்கள், நல்லவர்கள் ஏன் ஏழ்மையில் இருக்கிறார்கள்?

பக்திமான்கள், வைதீகமானவர்கள், நல்லவர்கள், பெரும்பாலும் அடிக்கடி ஏழ்மையில் உள்ளார்கள். அதற்குப் பல காரணங்கள் உண்டு. அவற்றில் முக்கியமான மூன்று காரணங்களைக் கூறலாம். (1) பக்தி என்ற சொல்லுக்கேற்ப அவர்கள் உண்மையான பக்தி உடையவர்கள் அல்ல. (2) தானியத்தை உமி, பதர் இவற்றிலிருந்து சல்லடையிட்டு பிரிப்பதுபோல், அவர்கள் நல்லது, கெட்டது என்பதை வேறுபடுத்தி அறியக் கூடியவர்கள் அல்ல. (3) அவர்கள் பூஜிக்கத் தக்க சிவன், விஷ்ணு போன்ற கடவுளர்களின் பெயரில் உணர்வைத் தூண்டக்கூடிய கெடுதலான ஆவிகளை வணங்குகிறார்கள். ஆசாரமென்பது சடங்குகளை கடைபிடிப்பதில்லை. வைதீகத்தன்மை என்பது பரிசுத்தமான மனத்துடன் பேருண்மை மீது நம்பிக்கை வைப்பதும், தூய்மையான தன்னடக்கமுள்ள நிலையாகும். மரபு, கோயில்களில் உள்ள விக்கிரகங்களை வணங்கச் சொல்லவில்லை. இருதயக் குகையில் கட்டை விரல் அளவில் உறைந்துள்ள பிரம்மத்தை வழிபட வேண்டும். ஒரு ரிஷி கோபத்தை வெளிப்படுத்தும் பொழுதும், சிற்றின்ப உணர்ச்சியில் தூண்டப்படும் பொழுதும், அவர் பல வருடங்களில் தவம் செய்து பெற்ற தவவலிமையை இழக்கிறார். அவர் ஒரு சிறிய பொய் சொன்னாலும் இவர் ஒரு வைதீகர் என்ற நிலையை இழக்கிறார். அவர்கள் ஜாதகத்தைப் பார்க்க வேண்டியதில்லை அல்லது சுபகரமான நல்ல நேரத்தையும் அனுசரிக்க வேண்டியதில்லை. இவையெல்லாம் பாமரமக்களுக்கு உரியது.

இறைவனின் ஆன்மா எல்லா நிலைகளிலும் உண்மையில்லாதவைகளிலும் கூட கலந்துள்ளது. ஒருவர் நல்லது, கெட்டது என்பதை சீர்தூக்கிப் பார்த்து நல்லதை மட்டும் தேர்ந்தெடுக்க வேண்டுமென்று பாரம்பரியம் கூறுகிறது. அனேக பக்திமான்கள் அத்தகைய உயர்ந்த வேறுபாட்டை பகுத்தறிபவர்களாக இல்லை. அவர்கள் தங்களது சௌகரியத்திற்கு எது நல்லது என்று தோன்றுகிறதோ அதுவே வைதீகம் என்று எண்ணி அதைப் பின்பற்றி தீயசக்திகளுக்கு பலியாகிறார்கள்.

ஒரு சமயம் ஒரு காங்கிரஸ் தொண்டர் மகாத்மாகாந்தியின் சிறிய ஒள்பிரபையால் சூழப்பட்டவராகத் தோன்றினார். இப்பொழுது மகாத்மாகாந்தி இல்லை. அவரது ஆத்மாவின் தூண்டுதலும் இல்லை. இன்றைய அரசியல்வாதிகளை மகாத்மாகாந்தியைப் போன்ற புண்ணிய ஆன்மாவாக நினைப்பது அவர்கள் நம்மை ஏய்க்க உதவும். புகழ்பெற்ற பெரிய கோயில்கள், புண்ணிய புருஷர்களால் கட்டப்பட்டவைகளாகும். வழிபாடு தூய்மையாக இருக்கும் வரை கோயில்களில் இறைவனின் சாந்நித்யம் நிலைத்து இருக்கும். தூய்மை கெடும் பொழுது அந்த சூழல் கோயிலிலிருந்து விலகிவிடுகிறது. வழிபடுபவர்களும், நிர்வாகிகளும் அங்குள்ள சூழ்நிலையை தம் வசம் ஆக்கிக் கொண்டு, தங்களுடைய மனநிலைக்கு ஏற்ப செயல்படுவதால் கோயிலின் சூட்சும சூழல் மாறிவிடுகிறது. இரண்டு குறிப்புகளால் தூய்மையான இடத்தைப் பற்றித் தெரிந்து கொள்ளலாம். (1) மனத்தின் உள்ளே அமைதியும் சாந்தியும் நிலவுவது, ஆன்மீகத்தில் உயர்வடைந்ததைக் குறிக்கும். (2) நம்பூதிரிகள் குருவாயூரப்பன் கோயிலில் பரிசுத்தமான சுத்தத்தை பராமரிப்பது போன்ற சுத்தம் காணப்படுவது. ஆன்மா எப்பொழுதும் சுபிட்சம் அளிப்பதில் பொய்ப்பதில்லை. சுபிட்சம் கிடைக்கவில்லை என்றால் மனிதன் தவறான தெய்வத்தை வணங்குகிறான் என்று கருதலாம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 3:56 am

60. சோதிடம், எண் கணித சாஸ்திரம், சகுனம், வாஸ்த்து, நல்ல நேரம்

சோதிடம் என்பது, அடுத்த வேளைக்கு என்ன சாப்பிடப்போகிறோம் என்பதை துல்லியமாக கணிக்கும் தன்மை உடையது. எண் கணித சாஸ்த்திரமும் எதிர்காலத்தைப் பற்றி தெரிவிப்பதில், திகைப்பையூட்டும் வகையில் உணர்த்தக் கூடியது. வாஸ்த்து சாஸ்திரமும் நல்ல நேரமும் அடுத்து என்ன நடக்கும் என்பதைத் தீர்மானிக்கக் கூடியவை. ஒரு விதத்தில் அவைகள் எல்லாமே சூட்சும அறிவுப்படி சக்தி வாய்ந்தவைகளே. நாம் இவற்றைப் பின்பற்றுவது போல் மேலை நாட்டார்கள் இவைகளை நம்பமாட்டார்கள்.

நீ ஒரு கிராமத்தில் செல்வம் மிகுந்த பாசமுள்ள வைதீக குடும்பத்தில் பிறந்து, அந்தக் குடும்பம் நெல், கேழ்வரகு பயிர்த் தொழிலில் ஈடுபட்டு வாழ்க்கை நடத்தும் முறையை, சிறந்தது என்று கருதி நீ அதை ஏற்று நடத்துவதே உன்னுடைய இலட்சியமாகக் கருதினால், முடிவில் அன்பான வசதியான பழமைமிக்க குடும்பத்தின் உறுப்பினராய் இருப்பாய். ஆனால் உன் குடும்பம் நவீன குடும்ப வாழ்க்கையிலிருந்து விலகி இருக்கும். ஆனால் இந்த வாழ்வு முறையை ஏற்றுக் கொள்வது ஏன் என்று கேட்க முடியாது. ஏனெனில் இது ஒருவர் தெரிந்தே எடுக்கும் முடிவாகும். இப்படிப்பட்ட கிராமியக் குடும்பம், கிராமத்தை விட்டு விலகி நகரத்திற்குச் சென்று, வெளிநாட்டிற்கும் சென்று வந்துள்ள மற்றொரு குடும்பத்துடன் 30 வருடம் கழித்து தன்னை ஒப்பிட்டுப் பார்த்தால், எல்லா வகையிலும் வித்தியாசம் பிரத்யட்சமாகத் தெரியும். நடைமுறை வாழ்விலும் நம்முடைய உணர்விலும் பழமை மற்றும் புதுவை என்றிவ்விரண்டையும் நாம் கலந்துவிடுகிறோம். அப்படி செய்யும்பொழுது இரண்டினுடைய முழுப் பலனும் நமக்குக் கிடைக்காமல் போகிறது. ஏனெனில் இரண்டும் எதிர் எதிரானவைகளாக இருப்பதால் ஒன்றையொன்று முறியடிக்கிறது.

மேற்சொன்ன தெரிந்த காரணங்களைத் தவிர, பழங்கால ரிஷிகளும் இந்நாள் விஞ்ஞானிகளும் அறிந்திராத வேறொரு உண்மை உண்டு. அதையொரு உதாரணத்தின் மூலம் விளக்கலாம். முடியாட்சியில் வாழ்வு அரசனுக்குரியதாக இருந்தது. மக்கள் மிகவும் ஏழ்மையாக இருந்தார்கள். ஜனநாயகத்தில் முடி ஆட்சி போய் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதியை ஆட்சி பீடத்தில் அமர்த்தினார்கள். பாரதியின் வாக்குப்படி எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள். ஸ்ரீ அரவிந்தர், நேரம் வந்துவிட்டது, இது இறைவன் வரும் தருணம் என்று கூறினார். ஒவ்வொருவரும் ஆன்மாவை அழைக்கும் திறமை உடையவராக இருந்தால், அவர் அந்த நிலையில் ரிஷியாவார். சோதிடம், எண் கணித சாஸ்த்திரம் போன்றவை சாதாரண வாழ்விற்கு உரியன. அவை நம்மை இயற்கையின் நியதிக்கு கட்டுப்படுத்துகின்றன. மனிதன் ஆன்மாவுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொண்டால், அந்தத் தளையிலிருந்து விடுதலைப் பெற்று, வாழ்வு அவன் கட்டுப்பாட்டுக்குள் வந்துவிடுகிறது. சாதாரணமாக நமது மனப்பாங்கு என்னவென்றால், அவை இரண்டையும் ஒன்றாகச் சேர்த்து பார்க்கிறோம். அவை இரண்டும் வெவ்வேறு நிலைகளில் (planes) இருப்பதால் ஒன்று மற்றொன்றை பயனற்றதாக செய்து விடுகிறது என்பதை நாம் அறிவதில்லை.

மனிதன் இயற்கையினின்றும், சுயமாய் ஏற்படுத்திக் கொண்ட மூட நம்பிக்கையிலிருந்து விடுபட்டது போல தற்பொழுது வாழ்வின் அடிமைத்தனத்திலிருந்து தன்னை விடுவித்துக்கொண்டு, வாழ்வை தன் கட்டுப்பாட்டிற்குள் வைத்துக் கொள்ள முடியும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 3:57 am

61. பாரம்பரியமும் ஆன்மீகமும்

அந்தக்காலத்தில் மக்கள், இரயில் பயணம் எவ்வாறு நடைபயணத்தின் கஷ்டத்தைப் போக்கி, வழியில் திருடர்களின் வழிப்பறிக்கொள்ளை ஆபத்திலிருந்து நீங்கியதை உணர்ந்தார்களோ, அவ்வாறே ஆயிரமாயிரம் ஆண்டுகளுக்கு முன்பு சோதிடம் தோன்றியதை உணர்ந்தார்கள். அதை கவனித்துப் பார்க்கும் பொழுது அது ஒரு நல்ல முன்னேற்றமாகத் தெரிகிறது. இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் விமானப் பயணம் நடைமுறைக்கு வந்தது. இரண்டாம் உலகப்போருக்குப்பின் அது பிரபலமடைந்தது. தொலைபேசி கண்டுபிடிப்பும் அத்தகைய வளர்ச்சியைக் காட்டுகிறது. தொலைபேசி, காலத்தைச் சுருக்கி விட்டது. செல்போன் கூட ஒரு இடத்திற்குப் போகாமலேயே தூரத்தை வென்றுவிட்டது. செல்போன் எங்கு வேண்டுமானாலும் கூடவே எடுத்துச் செல்லலாம். அது ஒரு இடத்தில் நிலையாக பொருத்தி வைப்பது அல்ல.

சோதிடம் என்பது ஒரு பெரிய அறிவியற்கலை. புத்தர் பிறந்த பொழுது, அவர் இந்த உலகத்தை சக்தியாலோ அல்லது அன்பினாலோ ஆட்சிபுரிவார் என்று கணித்தது. ராஜாஜி பிறந்த பொழுது எழுதப்பட்ட ஜாதகத்தில், அவர் இந்தியாவின் வைஸ்ராய் ஆக வருவார் என்று கணிக்கப்பட்டது. வாஸ்த்து, சகுனம், மற்றும் சோதிடம் ஆகியவை நமக்கு கர்மவினை உள்ளது என்பதைப் பற்றித்தான் தெரிவிக்கும். ஆனால் என்ன நடக்கப் போகிறது என்பது பற்றி அவற்றிற்கு தெரியாது. கர்ம வினையை அழிக்கக்கூடிய சக்தியும் அவற்றிற்கு இல்லை. மனிதன் கர்ம வினையின் பிடியில் கட்டுப்பட்டிருப்பதால், அவன் இதுவரையில் தன் திறமையில் சிறிதளவும், சமூகத்தில் கிடைக்கும் வாய்ப்புக்களை குறைந்த அளவிலும், பயன்படுத்திக் கொண்டான். இவ்வுலகில் அவன் கர்ம வினையினால், அவ்வளவில் மட்டுமே பயன்களைப் பெற முடிகிறது. இறைவன் மீதுள்ள நம்பிக்கை, கர்மவினையின் தடைகளை விலக்குகிறது. அந்த நம்பிக்கை மனிதனுடைய முழுத்திறனையும், சமூகம் வழங்கும் வாய்ப்புகளையும் மனிதனுக்கு முழு அளவில் கொடுக்கவல்லது.

1956லிருந்து சத்திய ஜீவியம் பூமிக்கு இறங்கி வந்து, மனிதனின் அழைப்புக்காக காத்து இருக்கிறது. இந்த சத்திய ஜீவியத்தை அழைத்தால் அது ஒருவருடைய வாழ்வில் அவரது திறமையின் உதவி கூட இல்லாமல் அவருக்கு முடிவில் கிடைக்கக்கூடிய பலனை முதலிலேயே வழங்குகிறது. அந்த ஆன்மா கர்ம வினையை அழித்து, சமூக வாய்ப்புகளை, மனிதனின் திறமைக்கு ஏற்ப, உண்டாக்குகிறது. நான் ஏற்கனவே எழுதியது போல் ½ ரூபாய் கூட கடன் வாங்க முடியாத ஒருவருக்கு ரூ.10,000க்கு வங்கியின் காசோலை, அவர் வீட்டைத் தேடிவந்தது. ரூ.10,000 கடன் பெற முடியாத ஒருவர் 2 லட்சம் கடனுக்காக வங்கியை அணுகியபோது, வங்கி அவருக்கு 4 லட்சம் கடன் வழங்க முன்வந்தது. நீங்கள் உங்கள் கையிலுள்ள ஒரு திட்டத்தை செயல்படுத்த முடியாமல் ஒன்று அல்லது இரண்டு வருடகாலமாக தடங்கல்பட்டுப் போயிருந்தால், ஆன்மாவை அழைத்துப் பாருங்கள். உங்கள் வாழ்வில், அந்த திட்டம் நிறைவேற்றப்பட்ட உண்மையை அறிவீர்கள். ஒருவர் செல்வ வளம்பெற, ஆன்மாவை வெற்றிகரமாக அழைக்கும் தருணத்தில், குறை கூறும் மனைவி, கொடூரமான கணவன், கடுகடுப்பான மேலதிகாரி போன்றவர்களால் தொந்தரவுகள் நேர்ந்திருக்கக் கூடும். அப்படிப்பட்ட நேரங்களில் ஆன்மாவை அழைத்தால், இவைகள் அனைத்தும் ஆன்மாவினால் எதிர்மறை குணங்களாக திருவுருமாற்றம் அடையும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 3:57 am

62. அன்றாட வாழ்க்கையில் ஆன்மீகப் பரிசோதனை

ஒருவருடைய வாழ்வில் பரிசோதனை செய்வதற்கு ஆன்மா அனுமதிக்கிறது. பரிசோதனையை நடத்துவதற்கு ஒருவருடைய சொந்த வாழ்வே ஏற்றது. இந்த ஆராய்ச்சி ஆன்மாவுடன் ஒப்பு நோக்குவதில் தடையேதும் இல்லையென்றாலும், இதை ஒரு முறைக்கு மேல் செய்ய முயற்சிக்கக் கூடாது. நம்பிக்கை மலைகளை நகர்த்தக் கூடியது. ஆனால் அது சாதாரண மனிதனால் அன்று. ஒருவருடைய வாழ்வில் மலைபோன்ற தீர்க்க முடியாத பிரச்சனைகள் உண்டு. ஆனால் பெரிய வாய்ப்புக்களும் வாழ்வில் உண்டு.

வாய்ப்புக்களைப் பெறுவதற்கும் தடைகளை விலக்கிக் கொள்வதற்கும், நாம் ஆன்மாவை அழைக்கலாம். கணவன் தீய பழக்கத்திற்கு அடிமையாகியிருந்தாலோ, ஒரு கம்பெனி சிறுகச் சிறுக நஷ்டத்தில் போய், அது தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே போய்க்கொண்டிருந்தாலோ, அல்லது நீதிமன்ற வழக்கில் அரசியல், இலஞ்சம், போன்றவற்றால் அநீதி இழைக்கப்பட்ட பொழுதும், ஆன்மாவை அழைக்கலாம். வருமானம் எட்டுக் கோடியை தொடும் பொழுதுதான் ஒரு கம்பெனி லாபமோ, நஷ்டமோ இல்லாமல் நடுநிலையை எட்டுமென்னும் பொழுது அதனுடைய வருமானம் ஒரு ஏழு கோடியை தாண்ட முடியாத நிலையில் இருக்குமானால், இந்த ஆராய்ச்சியினால் வருமானம் 8 கோடியைத் தாண்டும். முரண்பாடான சுபாவத்தையும் எண்ணங்களையும் விலக்கி, முழு உண்மையுடன் வேலையில் ஈடுபட்டு செயல்படும் பொழுது, வருமானம் அடுத்த மாதமே 80 கோடிகள் வரும். இதை எவ்வாறு செய்வது?

ஒரு கம்பெனியின் தலைமை நிர்வாக அதிகாரி (CEO) வேலையில் ஊக்கமுடையவராய், தன்னுடைய சொந்த விருப்பு வெறுப்புக்கு அப்பாற்பட்டவராய், மதசார்பு அற்றவராய், பாரம்பரிய சடங்குகள் முதலான கொள்கைகளை விலக்கி செயல்பட வேண்டும். இந்தக் கொள்கைகள் யாவும் ஆன்மாவுக்கு தீங்கானவைகளாகும்.

இலக்கு தலைமை அதிகாரியினால் மட்டுமே அடைய முடியும். மற்றவர்களிடமிருந்து கிடைக்கும் ஆதரவும் பொன்னானது.
இதில் தலையாய முக்கியத் தேவை என்னவென்றால், ஆன்மா எதையும் சாதிக்கும் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை வேண்டும்.
ஆன்மாவை தாராளமாக வேலையில் ஈடுபடுத்த, எல்லா தடைகளையும் விலக்கி ஆன்மாவை தொடர்ந்து அழைக்க வேண்டும்.
இலக்கு சம்மந்தப்பட்ட எல்லா எண்ணங்களையும் ஒருமுகப்படுத்தி, வேண்டாதவைகளை மெல்ல விலக்கி, அற்பத்தனமான விஷயத்தில் மனதை போகவிடாமல் தடுத்து, மனதை ஒரு நிலைப்படுத்த வேண்டும்.
இது நிச்சயமாக அமைதியையும் மௌனத்தையும் கொடுப்பதால், மனத்தில் சக்தியின் அழுத்தத்தை உணர முடியும். இந்த அனுபவம் ஆன்மீக பாதை சரியானது என்பதைக் காட்டும்.
உன் உணர்ச்சிகளில் இலக்கை அடைவதில் நம்பிக்கை வைக்கவேண்டும். அப்பொழுது மனதைவிட்டு அகலாத தீவிர ஆர்வம் விலகி, அவ்வப்பொழுது சந்தோஷம் எழும்.
ஒரு நிலையில் இவ்வாறு எவ்வித காரணமுமின்றி தானாகவே சந்தோஷம் எழும்.

வழக்கமாக நூற்றுக்கணக்கான சிறியதும் பெரியதுமான தொடர்ந்து தொல்லைக் கொடுத்துக் கொண்டு வந்த சூழ்நிலைகள் யாவும் மறைந்து, இப்பொழுது இனிமையான சூழ்நிலையாக மாறுவதைக் காணலாம். எதிர்பார்ப்புக்களை அதிகமாக வளர்த்துக் கொள்ளாமல், இலக்கைப் பற்றிய நினைவை விலக்கினால், நீ 8 கோடிகளுக்கு மேல் வருமானம் வருவதைக் காண்பாய். அது 80 கோடிகளைக் கூட எட்டுமென்பதும் சாத்தியம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 3:58 am

63. கடலின் ஆன்மா

ஆன்மீகத்தில் நாட்டமுடையவர்கள் சமூகத்தின் வீரர்கள். அவர்கள் ஆன்மீக வீரர்கள். குரு அல்லது ஆன்மாவால் ஈர்க்கப்பட்டவர்கள் அரிது. அதைவிட அரிது சந்தர்ப்பம் வரும் போது ஆன்மா மீதும் குருவின் மீதும் எழும் நம்பிக்கையாகும். ராமகிருஷ்ணரின் ஆன்மீக உயர்வு பற்றி விவேகானந்தருக்கு கடைசி வரையில் சந்தேகமாகவே இருந்தது.

மகாத்மாவின் சுதந்திர போராட்ட அழைப்பில், மன உறுதியுடனும் விசுவாசத்துடனும் கலந்து கொண்டவர்கள் தங்களுடைய எல்லா உரிமைகளையும் உடைமைகளையும் தியாகம் செய்தார்கள். இருந்தாலும் இந்தக் களத்தில் இறங்கியவர்கள் அனைவருக்கும் மனிதனுடைய குறைபாடுகளிலிருந்து மீளமுடியவில்லை.

1920ம் வருடங்களில் பாண்டிச்சேரியில் நிலக்கரி கிடங்கின் சுவர் ஒன்றை கடல் அலைகள் அடித்துச் சென்றுவிட்டன. அந்தக் கிடங்கு அந்த நகரத்தின் மேயருக்குச் சொந்தமானது. அவர் இது சம்மந்தமாக பிரெஞ்ச்சு கப்பல் பொறியாளர்களிடம் ஆலோசித்த பொழுது, அதைத் தடுக்க முயற்சிக்கும் பிரயத்தனம் பயனற்றது என்று தெரிவித்துவிட்டார்கள். எனவே அவர் அந்த இடத்தை விற்க முற்பட்டார். ஆனால் அதை வாங்குவதற்கு யாரும் முன்வரவில்லை. பிறகு அவர், ஆசிரமத்தில் இருந்த, சக்தி வாய்ந்த தெய்வீக அன்னையால் அந்த கஷ்டத்திலிருந்து விடுபட முடியும் என்ற நம்பிக்கையில், ஆசிரமத்தில் உள்ளவர்களை அணுகினார். அந்தக் கிடங்கின் சுவர் பலமுறை ஆர்ப்பரிக்கும் சமுத்திர அலைகளால் அடித்துச் செல்லப்பட்டது. சாதகர் எவராலும், அந்தச் சுவரை அலைகளின் தாக்குதலினின்றும் காப்பாற்ற முடியும் என்று மனப்பூர்வமாக எண்ண முடியவில்லை.

அந்த இடம் ஆசிரமத்தால் வாங்கப்பட்டு, சுவற்றைக் கட்டுவதில் புதிய முயற்சிகள் எடுக்கப்பட்டும், மீண்டும் அந்த சுவற்றிற்கு பழைய கதியே ஏற்பட்டது. அலைகளிலிருந்து அதைக்காப்பாற்ற எடுக்கப்பட்ட பல முயற்சிகளும் தோல்வியுற்றன. இந்தத் தோல்விகளுக்குப்பின், தெய்வீக அன்னை அந்த இடத்தை பார்வையிட முன் வந்து, கடலின் ஆன்மாவை அழைத்தார். சமுத்திர ராஜன், அன்னை முன் தோன்றினான். அவன் அன்னையிடம், தான் கரைக்கு முன்னேற முடிவு செய்துள்ளதாக தெரிவித்தான். பொதுவாக எந்தத் தெய்வங்களும் அன்னையின் கட்டளைக்குப் பணிவார்கள். ஆனால் கடலரசன், பிடிவாதமாக இருந்தான். பிறகு அன்னை அவனிடம் தனக்கு அந்த இடம் வேண்டுமென்றும், அவன் தன் எண்ணத்தை மாற்றிக் கொள்வது நல்லது என்றும் தெரிவித்தார். சமுத்திர தெய்வம் அதற்கு சம்மதித்தது. அதன் பிறகு புதியதாக சுவர் எழுப்பப்பட்டது. அந்த சுவர் இன்றும் அப்படியே கம்பீரமாக நிலைத்து நிற்கிறது.

போகும் வழியில் யாரும் இல்லாத இடத்தில் உன்னுடைய கார் நின்றுவிட்டால், காரை ரிப்பேர் செய்வதற்கு இயலாத இக்கட்டான நேரத்தில், அன்னையை அழைத்தால் அது இயங்கும். அதில் தோல்வி ஏற்படாது. அப்படித் தோல்வி ஏற்பட்டால், காரின் ஆன்மாவை அழைத்தால் அது உடனே இயங்கும்.

ஆன்மா மிகப் பெரியது. அதைவிட மேன்மையானது, இன்னமும் மனிதர்களிடமும் பொருள்களிடமும் உள்ள ஆன்மாவாகும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 3:58 am

64. சிறப்பானதைத் தேடுவது

புத்தக வெளியீட்டாளர்கள் எழுத்தாளர்களை விட புத்தகங்கள் விற்பனையைப் பற்றி அதிகமாக தெரிந்து வைத்திருப்பார்கள். ஹார்ப்பர் (Harper) மற்றும் ரோவ் (Row) என்பவர்கள் சிறந்த பதிப்பாளர்கள். ஒரு சமயம் டாம் பீட்டர்ஸ் (Tom Peters) மற்றும் வாட்டர்மேன் (Waterman) எழுதிய அறிக்கையைப் பார்த்து வியப்பு மேலிட்டவர்களாய் அதை பிரசுரம் செய்வதற்கு அனுமதி பெற அந்த எழுத்தாளர்களைப் போய்ப் பார்த்தார்கள். அதற்கு டாம் (Tom) அது ஒரு அறிக்கையே தவிர படிக்கக் கூடிய முக்கியத்துவம் வாய்ந்தது அல்ல என்று திட்டவட்டமாகச் சொல்லிவிட்டார். மேலும் அவர்களிடம், அவர்கள் இதில் போடும் மூலதனத்தைத் திரும்பப் பெற 10,000 பிரதிகள் கூட விற்க முடியாத என்று கூறினார். பதிப்பாளர்கள் விடவில்லை. எழுத்தாளரின் வாதத்தை ஏற்காமல், அவரின் சம்மதத்தைப் பெற்று, அனுமதியைப் பெற்றுக்கொண்டபின் அச்சடித்து, அடுத்து வரும் ஆண்டுகளில் 60 லட்சம் பிரதிகள் விற்பனை செய்தார்கள். அது ஒரு நாவலாக இல்லாத போதிலும், இந்த அறிக்கை முக்கியத்துவம் வாய்ந்ததாக அமைந்தது, ஒரு வியப்புக்குரிய நிகழ்ச்சியாகும். தன்னுடைய விருப்பத்திற்காக மட்டும் எழுதும் எழுத்தாளர்களைவிட வாசகர்கள் எதை விரும்புவார்கள் என்று பதிப்பாளர்கள் நன்றாகத் தெரிந்து வைத்துக் கொண்டிருக்கிறார்கள்.

டாம் பீட்டர்ஸ் (Tom Peters) ஹிப்பியாக இருந்தவர். அவர் கட்டுப்பாடற்ற சுதந்திரம் வேண்டுமென்ற விருப்பத்தில், தீவிரமாக இருந்தார். ஹிப்பி இயக்கம் எந்தத் திசையில் சென்றாலும், மனிதனின் சுதந்திரத்திற்கு தூண்டுதலாக இருந்தது. அந்த சூழ்நிலை சுதந்திர தாகத்தின் சின்னமாக டாம் உணர்விலும் எழுத்திலும் விளங்கினார். ஆனால் எந்த சக்தி அவரை இயக்குகிறது என்று அவரால் தெரிந்து கொள்ளமுடியவில்லை. அந்தப் பதிப்பாளர் அதைப் பற்றி தெரிந்திருந்தாரா அல்லது அவருடைய வியாபார புத்திக் கூர்மையால் செயல்பட்டாரா என்பது தெரியவில்லை. டாம் (Tom) தன்னுடைய சுதந்திர வேட்கை தன் ஜீவனுடைய ஒரு அதிர்வாகவே மாறிவிடும் அளவிற்கு சக்தி பெற்றிருந்ததை அறியாதவராகவே இருந்தார். இது சமீபகாலத்திய சரித்திரம்.

ஒவ்வொரு மனிதனுக்குள்ளும், ஆன்மா இருக்கிறது. ஆனால் மனிதன் அதை அறியவில்லை. ஜெர்மன் டாக்டர்கள், ஒரு சமயம் ஆன்மா உண்டா என்பதைக் கண்டறியும் பொருட்டு மனிதனின் உடலில் எல்லா உறுப்புகளையும் அறுவை செய்து பார்த்த பிறகு, அவர்களால் அதைக் கண்டுபிடிக்க முடியவில்லை. ஆயிரக்கணக்கான ரிஷிகள், நூற்றாண்டு காலமாக தவம் செய்து பிரம்மத்தை உணர்ந்தவர்கள், இந்தியர்களின் உடலில், தவத்தின் பயனாய் தாங்கள் பெற்ற ஒளியினை தந்துவிட்டுச் சென்றார்கள். டாம் (Tom) பிறகு ஒருமுறை தாம் எழுதிய புத்தகங்களை பிரசுரிப்பதற்கு ஒரு மில்லியன் டாலர் முன்பணமாகக் கேட்டார் என்று சொல்லப்படுகிறது. நாம் நம்முள் ஆன்மாவை அறிந்து, அதை நம்வாழ்வில் செயல்பட அழைப்பதற்குத் தெரிந்து கொண்டால், நாம் இவ்வாழ்வில் பெரும் பலன்களை அடைய முடியும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 3:58 am


65. இந்தியாவில் எந்தத் தொழிலுக்கும் தோல்வி என்பதே இராது


இந்தியா, வியாபாரச் சந்தையில் பெருகி வரும் நாடாக உள்ளது. இங்கு மக்கள் அதிக சௌகரியங்களை விரும்புகிறார்கள். குறைந்தபட்ச வாழ்க்கைத் தரத்தை கேட்கிறார்கள். எவரொருவர் தனக்கு அதிக சௌகரியம் வேண்டுமென்று கேட்கிறாரோ அவர் அதிகமாக உழைக்கவும் விருப்பங்கொள்கிறார். வேலையை முறைப்படுத்துவதன் மூலம் அது அதிகப் பலனைக் கொடுக்கும். முறைப்படுத்தப்பட்ட வேலை நேர்மையானதாக இருக்க வேண்டும். இன்றேல் எதிர்பார்க்கும் பலன் கிடைக்காது. இந்தியாவில் எந்த ஒரு கம்பெனியும் அதனுடைய வேலையில் பண்புகளை வெளிப்படுத்தி, முறைப்படுத்தலில் கவனம் செலுத்தினால், தோல்வியைச் சந்திக்க வேண்டியிராது.

திட்டக்கமிஷனின் 2020 தொலை நோக்குத் திட்டத்தில், இந்தியா தற்பொழுது 153வது இடத்திலிருந்து 100வது இடத்திற்கு வந்துவிடும் என்று எதிர்பார்க்கிறது. இந்திய இளைஞர்கள் யாவரும் துடிப்பு மிக்கவர்களாக இருக்கிறார்கள். அவர்கள் இந்தியா காலனியாக இருந்தபொழுது இருந்த ஏழ்மையை நிராகரிக்கிறார்கள். அரசியல் அமைப்புப்படி கல்வி கட்டாயம் ஆக்கப்பட்டது போன்று இளைஞர்களுக்கு அரசியல் சட்ட அமைப்பில் வேலைவாய்ப்புக்கு உத்திரவாதம் அளிக்கப்பட வேண்டும். இந்தியாவின் சுபிட்சத்திற்காக ஒரு இயக்கம் நடத்தப்படுமானால், 2020 தொலை நோக்குத் திட்டத்தின் இலக்கு அடையக்கூடியதாகி விடும். இந்திய வியாபாரச் சந்தை துடிப்பாக உள்ளது. முறைப்படுத்தப்பட்ட நேர்மையான வேலை உயர்ந்த பரிசை வழங்கும்.

சுயத் தொழில்தான் இன்றைய தேசப்பற்று.
வணிக விவசாயப் பொருள் உற்பத்தி பசுமைப் புரட்சியாகும்.
அதிகமாக கேட்பதுவும், அதிகமாக விரும்புவதும் சுபிட்சமாகும்.
அதிகமான சௌகரியத்திற்கு உன்னையே கேட்பது, நீ சுபிட்சத்தை அதிகமாகப் பெறுவாய் என்பதாகும்.
அதிக சௌகரியத்தை விரும்புவது, வியாபாரச் சந்தையின் வளர்ச்சியாகும்.
வியாபாரச் சந்தையின் வளர்ச்சி இந்தியாவின் சுபிட்சம்.
அதிகப் பிரயாசைப்பட்டால் அதிகமான சுபிட்சத்திற்கு வழியுண்டு.
நாடு சுறுசுறுப்பாக உள்ளது.
கல்வி நாட்டுக்கு ஒரு வெகுமதி.
கல்வியுள்ள நாடு வளமான நாடு.
வேலை செய்வதற்கு தகுதியாக்கிக் கொள்.
வேலைக்கு உத்திரவாதம் அளிக்கப்பட வேண்டும்.

சுயதொழிலில் விருப்பங்கொள். வேலையை முறைப்படுத்தி, பண்புகளை வெளிப்படுத்தி தொடர்ந்து சிறப்புத் திறமையை வளர்த்துக் கொள்ள வேண்டும். குறிக்கோளை அடைவதற்கு முன்பாகவே, 2020 தொலை நோக்கு எதிர்பார்ப்பை அடைய வேண்டும்.

விழித்திரு - எழுந்திரு - முறைப்படுத்து - அதுவே சுபிட்சம்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 3:59 am

66. சுபிட்சத்தின் இயக்கம்

இந்திய தேசிய காங்கிரஸ் 1947க்கு முன்பு ஒரு கட்சியாக இல்லாமல், நாட்டின் விடுதலை இயக்கமாக இருந்தது. தேசத்தின் வளர்ச்சிக்கு, அத்தகையதொரு மக்களால் விரும்பப்படுகிற இயக்கம் தேவைப்படுகிறது. திட்டக்கமிஷன் 2020, தன்குறிக்கோளை அடைவதற்கு இத்தகைய இயக்கத்தின் மூலமாகத்தான் இலக்குகளை அடைய முடியும். நமது ஜனாதிபதி அப்துல்கலாம், நமது நாட்டு இளைஞர்கள் உயர்தரக் கல்வியையும் எதிர்கால சுபிட்சத்தைப் பெறுவதிலும் எழுச்சியுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதை அறிகிறார். இத்தகையதொரு எழுச்சிக்கு செயல்வடிவம் தருவதற்கு அரசாங்கமோ அல்லது கட்சியோ இல்லாமல், ஒரு இயக்கம் தேவைப்படுகிறது.

நல்ல அரசாங்கம் வேண்டுமென்று கொடுத்த மனுக்களால் சுதந்திரம் கிட்டவில்லை. ஆனால் அது பூரண சுதந்திரம் அடைய வேண்டுமென்ற உயர்ந்த திடமான உறுதிப்பாட்டால் பெறப்பட்டது. நிர்வாகத்தின் திறமையால் மட்டுமே இந்தியாவின் சக்தியை வெளிக்குக் கொண்டு வரமுடியாது. சுபிட்சத்தின் இரகசியம், அதிக சௌகரியங்களை நாடுவதிலும் அதற்காக அவன் அதிகமாக உழைப்பதிலும் உள்ளது. விவசாயத்தால் மட்டுமோ அல்லது உற்பத்தி அதிகரிப்பால் மட்டிலுமோ அந்த அற்புதம் நிகழாது. இலட்சக்கணக்கான ஆண்களும் பெண்களும் தங்களுக்குத் தேவையான வசதிகளை அதிகரித்துக் கொள்வதிலும், உயர்கல்வி பெறுவதிலுமே வியாபார சந்தையை, சர்வீஸ் துறையின் மூலம் அதிகமாக விஸ்தரித்துக் கொள்ள முடியும். அந்த வளர்ச்சி, ஓர் அளவுக்கு நாட்டின் தலைநகரங்களிலும் பெரிய நகரங்களிலும் காணப்படுகிறது.

இந்தியாவின் கிராமப்புறத்தில் அதிக உற்பத்தியை பெருக்க முடியும். விவசாயத்தை வணிகப்பயிரிடும் முறைக்கு மாற்றி பின்பற்றினால், இலாபகரமாக இருக்கும். ஆனால் கிராமவாசி, தன்னுடைய சொந்த முயற்சியால் நகர வாழ்வின் வசதிகளைப் பெற விரும்பினால் அத்தகைய முயற்சிகள் அதற்கு முன் கண்டிராத வியாபாரச் சந்தையை உருவாக்குகிறது. அது தேசத்தின் சுபிட்சமாகும். எல்லாவற்றையும் அரசாங்கம் நிறைவேற்றுவதற்கு, உள் கட்டமைப்புகள் தேவைப்படுகின்றன. அவை ரோடு வசதி, சேமிப்புக் கிடங்குகள், குளிர்சாதன வாகனங்கள், தகவல்கள் சேகரித்தல், போன்றவைகளாகும். அப்படி செய்வதின் மூலம் மக்களின் சக்தி வெளிப்படுத்தப்பட்டு, அவை முறைப்படுத்தப்படுவதின் மூலம் வாழ்வில் குறிப்பிடத்தக்க பலன்களைப் பெறமுடியும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 3:59 am

67. நிம்மதியான தூக்கம்

முன்னாள் ஆங்கிலேயருக்குச் சொந்தமான ஒரு கம்பெனியின் அதிகாரி ஒருவர் ஒரு கிராமத்து சிறிய பண்ணைக்கு வந்து ஓய்வு எடுத்துக் கொண்டிருந்த பொழுது, உடலின் சோர்வு நீங்கியதை உணர்ந்தார். அன்றிரவு அங்கேயே ஒரு சிறிய அறையில் தங்குவதற்கு விரும்பினார். மறுநாள் காலை தூங்கி எழுந்தவுடன், அந்த இடம் அவருக்கு பூலோக சொர்க்கமாகத் தெரிந்தது. அந்த சிறிய அறை, அவருக்கு இதற்குமுன் பதினைந்து வருடங்களாக அனுபவத்தறிந்திராத, புத்துணர்ச்சி வழங்கும் தூக்கத்தைக் கொடுத்தது. மனிதனுக்கு எல்லா செல்வத்தையும் அளித்த கடவுள், அந்த மனிதன் தன்னை மறந்துவிடுவான் என்று வேண்டுமென்றே, அத்தகைய நிம்மதியான தூக்கத்தைக் கொடுக்கவில்லை என்று ஒரு நம்பிக்கை உண்டு.

அநேக மனிதர்கள் நன்றாக உறங்குவார்கள். நல்ல புத்துணர்ச்சியை வழங்கும் ஆழ்ந்த தூக்கத்தையும் அனுபவிப்பார்கள். தூக்கத்தில் அச்சுறுத்தும் பயங்கர கனவுகள் காண்பவர்கள், ஒரு மணி நேரம் கூட தூங்க முடியாதவர்களாக இருப்பார்கள். அவர்களுக்கு நன்றாக தூங்குபவர்கள் வியப்பிற்குரியவர்களாவார்கள். அவர்களுடைய பொறாமைக்கு இவர்கள் இலக்கானவர்களாக இருக்கக் கூடும். எல்லோரும் அத்தகைய பிரச்சனைகளை ஆன்மாவிடம் சமர்ப்பித்துவிட்டால், நிம்மதியான தூக்கத்தை அனுபவிக்கலாம். அவர்களில் பெரும்பாலோர் பக்திமான்களாகவும் மதப்பற்று உடையவர்களாகவும் இருக்கலாம். அவர்கள் கடவுள் ஏன் தங்களுக்கு நல்ல தூக்கத்தைக் கொடுக்கவில்லை என்று ஆச்சரியப்படுவார்கள். சில நேரங்களில் அவர்கள் கடவுளை பழிப்பதும் உண்டு. அவர்கள், தாழ்ந்த உணர்வுள்ள குட்டி தேவதைகளை தெய்வம் என்று கருதி வழிபடுவதால், அது அவ்வாறு அடிக்கடி நிகழ்கிறது. காரணம் எதுவானாலும் அவைகளை வெற்றி கொள்ள முடியும்.

ஆன்மாவை அழைத்து உறக்கத்தை ஆட்கொள்ளச் செய்தால், இரவில் தூக்கமின்மை என்ற பிரச்சனையிலிருந்து அவர்கள் விடுபடமுடியும். படுக்கப் போகுமுன் சிறிது நேரம் தியானத்தை மேற்கொள்வதாலும், தூக்கம், கனவு, அச்சுறுத்தும் பயங்கரச் சொப்பனம் ஆகிய எல்லாவற்றையும் ஆன்மாவின் பொறுப்பில் விட்டு விடுவதால், தூக்கமின்மை மறைந்துபோகும். "போகன் வில்லா” என்று அழைக்கப்படும் ஆன்மீக குணமுள்ள பாதுகாப்பு மலரை தன்னுடன் வைத்துக் கொண்டு உறங்கினால், தீய பயங்கர சொப்பனத்திலிருந்து விடுபடுவார்கள்.

ஒரு உத்தியோகஸ்தர் வரம்பில்லாமல் கடன் வாங்கும் ஆர்வம் உடையவராக இருந்தார். அந்த கடன் சுமை அவரது சம்பளத்தைப் போல் 30 மடங்கு அதிகரித்துவிட்டதால் அவருக்கு தூக்கம் கெடுவது ஒரு பிரச்சனையாக ஆகிவிட்டது. அவர் ஆன்மாவை அழைத்து செயல்படும் நண்பர்களில் ஒருவருடைய வீட்டிற்கு போய் தங்கும் வாய்ப்பு பெற்றார். அன்று இரவு அங்கு தூங்கி, மறுநாள் எழுந்தவுடன், இப்படிக் கூறினார். "நான் இரவில் விடியற்காலை 2 மணி வரை தீய பயங்கர கனவுகளால் தூக்கமில்லாமல் அவதிப்படுவேன். அதன் பிறகு தூக்கம் வராமல் தவிப்பேன். அந்த பிரச்சனை எழுந்ததிலிருந்து, முதன் முறையாக இங்கு விடியற்காலை 2 மணி வரையில் நன்றாக ஆழ்ந்து தூங்கினேன். அதன் பிறகு விழித்துக் கொண்டிருந்த போதும் முன்பு இருந்த அச்சம் இல்லாமல் இருந்தேன்'' என்று கூறினார்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 3:59 am

68. எழுத்தர் பதவி உயர்வு

அட்டெண்டர் (Attender) கீழ் நிலை எழுத்தர், என்ற வார்த்தை சாதாரணமாக கேள்விப்பட்டதும் உபயோகத்தில் இருந்து வரும் வார்த்தையாகும். ஆங்கிலத்தில் அப்படிப்பட்ட வார்த்தை இல்லை. அந்த வார்த்தை அட்டெண்டெண்ட் (Attendent) வேலைக்காரன் என்பதுதான் உண்மையான பொருள். நம்முடைய சிறந்த தமிழ் மொழியானது, இந்தப் புதிய வார்த்தையை வழக்கத்தில் சேர்த்து, தமிழ்நாட்டில் இந்த ஆங்கில வார்த்தை அட்டெண்டர் (Attender), நடைமுறைக்கு வந்துவிட்டது. ஒருவர் அத்தகைய கீழ்நிலை எழுத்தராக (Attender) பத்து வருடம் பணி புரிந்து, எழுத்தர் (Clerk)பதவி உயர்வு பெற்றார்.

அந்த நாட்களில் பலவகை தரப்புகளிலும் சங்கங்கள் ஏற்படுத்தப்பட்டு வந்தன. மாவட்ட தலைநகரில் மாவட்ட சங்கம் அமைக்கப்படவிருந்தது. இந்த எழுத்தர் தன்னுடைய புதிய அனுபவ நிலையில், சங்கம் அமைக்கும் கூட்டத்திற்குப் போக விரும்பினார். அந்தக் கூட்டத்திற்குப் போகுமுன், தன்னுடைய உறவினர் ஒருவரை அவர் ஆன்மீக மையத்துக்குப் போகும் தருணத்தில் போய்ப்பார்த்தார். அவர் போகுமிடத்தின் விசேஷத்தை அறியாமலே உறவினருடன் அந்த இடத்திற்குச் சென்றார். அங்கே அந்த இடம் அவருக்கு மங்களகரமாகத் தோன்றிற்று. மகிழ்ச்சியால் தன்னைத் தானே, அந்த இடத்திற்கு வந்ததை பெருமிதமாக எண்ணினார். எல்லாமே ஒரு நன்மை என்று மகிழ்ந்தார். அவர் வாழ்நாளில் அப்படிப்பட்ட நல்லவைகளை அதிகமாகக் கண்டதில்லை.

அடுத்த மாதம் அவர் உறவினர் வீட்டுக்கு முக மலர்ச்சியுடன் சென்றார். அங்கு தன்னுடைய அபூர்வமான அனுபவத்தைப் பற்றி இவ்வாறு கூறினார். "நான் சென்ற மாதம் சங்கம் அமைக்கும் கூட்டத்திற்குச் சென்றேன். தாலுக்கா அளவில் அதிகமான பிரதிநிதிகள் வரவில்லை. அங்கு வந்திருந்தவர்கள் எல்லோரும் ஓய்வு பெறும் தறுவாயில் வயது முதிர்ந்தவர்களாக இருந்தார்கள். கூட்டத்தில் கூட்ட நடவடிக்கைகள் ஆரம்பமாயின. மாவட்ட அளவில் மாவட்டக் குழுக்கள் அமைக்க தீர்மானிக்கப்பட்டது. எதிர்பாராத வகையில் என்னுடைய பெயர் முன் மொழியப்பட்டு ஆமோதிக்கப்பட்டது, என்னை வியப்புக்குள் ஆழ்த்தியது. என்னுடைய வயதிற்கும், புதிய பதவிக்கு வந்த குறுகிய காலத்திற்கும் அது எனக்கு கிடைத்த ஒரு கௌரவம் என்றே கருதினேன். நான் மிகவும் உணர்ச்சிவயப்பட்டேன். பிறகு மற்றொருவர், என் பெயரை மாவட்ட சங்கத்தின் தலைவர் பதவிக்கு, முன் மொழிந்தார். இதை என் காதுகளால் நம்பவே முடியவில்லை. வியப்பின் மேலீட்டால் என்ன நடக்கிறது என்றுத் தெரியவில்லை. என்னை மாவட்ட சங்கத் தலைவராக ஏகமனதாகத் தேர்ந்தெடுத்து ஒவ்வொருவரும் வந்து எனக்கு வாழ்த்துத் தெரிவித்தார்கள்”.

அவர் தன் உறவினர் வீட்டுக்கு மறுபடியும் வந்து, தன்னுடைய வாழ்வில் ஏற்பட்ட அபூர்வமான நிகழ்ச்சிகளைப் பற்றித் தெரிவிப்பதற்காக வந்தது வெளிப்படையான விஷயம். அதைவிட வெளிப்படையானது, அவருடைய உறவினர் இவருடைய வாழ்வில் ஏற்பட்ட திடீர் மாற்றத்திற்கு, இவர் ஆன்மீக மையத்திற்கு வந்ததற்கும், தலைவர் பதவிக்கு தேர்தல் நடந்த நிகழ்ச்சியின் தொடர்பினையும் உணர்ந்தது என்பதுதான். பயன் அடைந்தவர் அதைப்பற்றி அறியாமல் இருந்த போதும், அவர் ஆன்மீக மையத்திற்குச் சென்று வந்ததால்தான் அந்நன்மை ஏற்பட்டது என்பதே உண்மை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 4:00 am

69. பரிதாபம், அனுதாபம், கருணை, அருள், பேரருள்

பலவீனமானவர்கள் கொடூரக்காட்சியைப் பார்க்க மாட்டார்கள். அதைக் கண்டால் மனத்தால் பாதிக்கப்படுவார்கள். அவரது நிலை பரிதாபத்திற்குரியது. நண்பருக்காக வருத்தப்படுவது அனுதாபமாகும். அனுதாபம் மற்றவருடைய துன்பத்தைப் போக்காது, ஆனால் ஆறுதல் அளிக்கும். கருணை என்பது தெய்வத்தின் செயல். அது தான் துன்பப்படாமல் மற்றவருடைய துன்பத்தைப் போக்கும். அருள் துன்பத்தின் காரணத்தின் வேரை அறுக்கும் தன்மையுடையது. அது கடந்தகால கர்மவினைப் பயனால், இப்பொழுது அனுபவிக்கும் கஷ்டங்களை அழித்துவிடும்.

இறைவன் மீது வைக்கும் நம்பிக்கை, அருளை வரவழைக்கிறது. அனுதாபம் நல்லெண்ணத்திலிருந்து எழுவது. பரிதாபம் என்பது ஒருவருடைய பலவீனமான மன நிலையிலிருந்து எழுவது. ஒருவர் பலவீனமாக இருப்பதால், துன்பத்தினால் பாதிக்கப்படுகிறார். இவருடைய பலவீனமான உணர்வுகளால், துன்பப்படுபவரை மேலும் கஷ்டத்திற்குள்ளாக்குகிறார். கடவுள் மீது வைக்கும் நம்பிக்கை மறைமுகமாக கர்மத்தின் மீதுள்ள நம்பிக்கையை இழக்கச் செய்கிறது. மனிதன் கர்மவினையின் மீதுள்ள நம்பிக்கையை மாற்றி இறைவனின் அருள் மீது நம்பிக்கை வைத்தால், பழைய கர்மவினை கரைந்துவிடும். இதில் இந்திய பாரம்பரியம் திடமான நம்பிக்கை வைத்துள்ளது. ரிஷி தவத்தை மேற்கொண்டு, இறைவன் மீது வைக்கும் திடமான நம்பிக்கையினால், அவர் தன்னுடைய பழைய கர்மவினைக்கு கட்டுண்டவராக ஆகமாட்டார். ரிஷி தவத்தால் பெற்றதை, தெய்வீக அன்னை நமக்கு அருளாக வழங்குகிறார். அன்னையின் மீதுள்ள நம்பிக்கை அருள். அது ஒருவருக்கு பழைய கர்ம வினைகளிலிருந்தும் விடுதலை அளிக்கிறது.

ஒருவர் தன்னுடைய திறமையை நம்பாமல் அன்னையை மட்டும் நம்பினால், அன்னை அவருக்கு எல்லை கடந்த பேரருளை வழங்குவார். அருள் பேரருளாக செயல்பட்டு, முடிவில் கிடைக்கக்கூடிய பலனை முதலிலேயே வழங்குகிறார்.

அன்னையை அறிவது அருள்.
அன்னையை நம்புவது பேரருள்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 4:00 am

70. சிந்திக்காமல் புரிந்துகொள்வது

நாம் புரிந்து கொள்வதற்கு மிகவும் கடினமாக சிந்திக்கிறோம். நினைக்க முடியாதவருக்கு புரிந்து கொள்வது கஷ்டம். அவர் விஷயங்களை மனப்பாடம் செய்து ஞாபகத்தில் வைத்திருப்பாரேயன்றி, புரிந்து கொண்டிருக்க மாட்டார். வக்கீல் குமாஸ்த்தாக்கள், நர்சுகள், மருந்தாளுனர்கள் தங்களின் தொழிலின் தன்மைப் பற்றி அறிவார்கள். ஆனால் அதன் விதிமுறைகளைப் பற்றியோ, மருந்தைப் பற்றியோ புரிந்து கொண்டிருக்க மாட்டார்கள். அந்தத் தொழிலைப் பற்றிய அறிவு, முறையான கல்வி அறிவினால் ஏற்பட்டதல்ல. அது நீண்ட கால அனுபவத்திலிருந்து வந்ததாகும். சில சமயங்களில் அவர்கள் தங்களுடைய தொழில் மேலதிகாரிகளைவிட திறமையாக இருப்பார்கள். இது ஒரு விதிவிலக்கேயன்றி, விதிமுறை அல்ல.

ஒரு பிரச்சனை புரிந்து கொள்ள முடியாமல் சவாலாக இருந்தால், அதை நாம் கைவிட்டு விடுகிறோம். சில நாட்களுக்குப் பிறகு திடீரென்று நம் மனதில் அது தெளிவாக விளங்குகிறது. சிந்திக்கும் திறன், தோல்வியுறும் பொழுது, புரிந்து கொள்ளும் சக்தி மனதில் உதயமாகிறது. புரிந்து கொள்ளும் திறன், மௌனத்தின் மூலம் அதிகம் வரும். அதிக அளவில் புரிந்து கொள்வதற்கு, சிந்திக்கும் திறனைவிட, மௌனம் ஒரு சிறந்த சாதனம் என்று நீண்ட கால விவேகம் நமக்குத் தெரிவிக்கிறது.

வெளியுலக அனுபவத்திலிருந்து நாம் அறிவை பெறுகிறோம். அது மனத்தின் அறிவு. அதே அறிவு, நம் மனத்தின் உள்ளே உயர்ந்த நிலையில் உள்ளது. அந்த சிறந்த அறிவைப் பற்றி நாம் உணராமல் உள்ளோம். ஒருவர் மௌனத்தை நாடி உள்ளே சென்றால், அங்குள்ள உயர்ந்த அறிவை அதிகமான அளவில் பெறமுடியும். அது சிந்தனை செய்யாமலே புரிந்து கொள்ளக் கூடியது. மௌனத்தை தினமும் பயிற்சியின் மூலம் கடைப்பிடிக்கும் பொழுது, குறிப்பாக ஒரு குறிப்பிட்ட நேரத்தில் பழக்கத்தில் கொண்டு வந்தால், உள்மனதில் மௌனம் கூடும். மௌனம் என்று நான் குறிப்பிடுவது பேச்சற்ற நிலை அல்ல, அது மனதில் எண்ணமற்ற மௌன நிலையில் இருப்பதாகும். மௌனத்தைப் பெறுவதற்கு எடுக்கும் முயற்சியை, எண்ணம் தடுக்கும். அப்படிப்பட்ட நேரத்தில் தியானம் செய்வது உகந்தது. அந்தப் பிரார்த்தனை, மௌனமான தியானமாக இருக்க வேண்டும்.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 4:01 am

71. தனி மனிதனிடத்துள்ள உண்மை நிலை, இந்தியனை ஆன்மீக பெருமகனாக உயர்த்தும்

சில நூற்றாண்டுகளுக்கு முன், ஒரு நேரத்தில் இந்தியா செல்வ வளமிக்க நாடாக இருந்தது. சமீபகாலத்தில் சுமார் 1800ஆம் ஆண்டு அளவில் இந்தியர்கள், மெக்காலேவின் (McCauley) வார்த்தைகளுக்கு ஒப்ப, பூரண உண்மைக்கும் பெயர் போனவர்களாக இருந்தார்கள். காலப்போக்கில் இந்தியா ஏழ்மைக்கும் பொய்மை நிலைக்கும் இறங்கிவிட்ட நேரத்தில் மேற்கத்திய நாடுகள் உண்மையை தனி மனிதன் அளவில் வலுவாக நிலைநாட்டியது. உண்மை, நேர்மை, ஒழுக்கம் போன்ற நற்பண்புகள் மேலைநாட்டோரின் மேதாவித்தனத்தைவிட அவர்களின் விஞ்ஞானத்தை வலுப்படுத்த உதவியுள்ளன.

ஆன்மீக ஒளி இந்தியர்களின் உடலில் பரவியுள்ளதையும், ஆன்மீக அமைதி இந்திய சூழலில் நிரம்பியுள்ளதையும், இந்த இரு நாடுகளில் வாழ்ந்தவர்களுக்கு பிரத்யட்சமாகத் தெரியும்.

வேத வாக்கின்படி உண்மை மீது உண்மையான ஆர்வப் பற்றுடையவர்கள் அறிவின் உச்சநிலைக்கு அல்லது சுபிட்சத்தின் மேன்மையான நிலைக்கு உயர்வடைவார்கள்.

சில உதாரணங்கள் மூலம் இந்த உண்மை தெரியவந்துள்ளது. உண்மை என்ற உயர்ந்த பண்பு வேலையில் முறையான செயல்பாடாக வெளிப்படும் பொழுது பெரிய பலன்களை கொடுக்கின்றது என்பது கணினித் துறையிலும் வெளிநாட்டில் வாழும் இந்தியர்கள் பெறும் நோபல் பரிசிலும் தெரியவருகிறது. அமர்த்தியாசென் வாங்கிய நோபல் பரிசு இதற்கு நிரூபணமாகும்.

திட்டக்கமிஷன் தீட்டியப் பார்வை 2020 என்ற திட்டம் இந்த உண்மையை ஒரு அளவிற்கு அங்கீகரிக்கிறது.

இந்தியா தன்னிடமுள்ள ஆன்மீக சக்தியை ஒரு தனிமனிதனின் உண்மையின் மூலமாக வெளிப்படுத்தினால், சீனிவாசராமானுஜம் போன்ற மேதைகள் தோன்றும் நிலை, விதிவிலக்காக இல்லாமல் சகஜமாகிவிடும்.

வறுமையை போக்குவதற்கு முயற்சி எடுப்பதற்குப் பதிலாக, கோடிஸ்வரர்கள் எங்கும் இல்லாதவாறு கூட்டங்கூட்டமாகத் தோன்றுவார்கள்.

சுவாமி விவேகானந்தர் நமக்குக் கொடுத்த குரல், விழித்தெழு, எழுமின், முறைப்படுத்துவீர் என்பதாகும். அதை நாம் முழுவதுமாக நடைமுறைப்படுத்துவோமாக.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 4:01 am

72. காலந்தவறாமை அபரிமிதமான சுபிட்சம்

ஆன்மா என்பது எல்லாவற்றிலும் உள்ளது. ஆத்மா மனிதனின் ஆன்மா. புத்தி கூர்மை, மனத்தின் ஆன்மா. உண்மை என்பது பேச்சு வெளிப்படுத்தும் ஆன்மா. திறமை என்பது வேலையின் ஆன்மா. இனிமை என்பது மனித உறவின் ஆன்மா. ஆன்மா இல்லாத வேலை இல்லை, மனிதனும் இல்லை. எந்தப் பொருளிலும் ஆன்மா இல்லாதது இல்லை. ஆன்மா தன்னை பலநிலைகளில் வெளிப்படுத்துகிறது.

திறமை என்பது வேலையின் ஆன்மாவின் ஆரம்பநிலை வெளிப்பாடாகும். இனிமையாக பழக உதவும் திறமை என்பது வேலையின் ஆன்மாவினுடைய அடுத்த உயர்ந்த வெளிப்பாடாகும். பிஸிக்கல் லெவலில் நடக்கும் வேலை ஒரு கருத்தை வெளிப்படுத்தும் பொழுது, ஆன்மாவின் உயர்ந்த நிலை வெளிப்படுகிறது. அறிவின் கருத்தை பிஸிக்கல் லெவலில் வெளிப்படுத்தும் வேலை அதே சமயத்தில் இனிமையையும் வெளிப்படுத்தினால் அது மேலும் உயர்ந்த ஆன்மீக வெளிப்பாடாகும். நேர்மை போன்ற பண்புகள் வேலையில் வெளிப்பட்டால் இன்னும் சிறப்பாகும். பண்புகள் ஆன்மீக திறமைகளாகும்.

காலம் என்பது "காலா" என்ற தெய்வமாகும். காலத்திற்கு கவனம் செலுத்தும் பொழுது, காலத்திற்குப் பின் மறைந்துள்ள ஆன்மா வெளிப்படுகிறது. வேலையில் நேரத்தை முறைப்படுத்துவது, காலத்தின் உயர்ந்த ஆன்மாவை வெளிப்படுத்துகிறது. ஒரு வேலையின் நேரம், மற்ற வேலையின் நேரத்தை மதிக்கும்போது, இணைந்து செயல்படுவதாகும்.

கம்பெனியில் ஒருங்கிணைந்து செயல்படும் பொழுது உன்னுடைய கம்பெனியில், காலத்தின் ஆன்மாவை வெளிப்படுத்துகிறது. ஒரு கம்பெனியில் காலந்தவறாமை எல்லா நிலைகளிலும் ஒருங்கிணைந்து செயல்படும் பொழுது, அது கம்பெனியின் காலத்தின் மிக உயர்ந்த ஆன்மா வெளிப்படுதலாகும். ஒரு கம்பெனியில் சராசரியாக 6½ நாட்களில் செய்யும் வேலை காலந்தவறாமையை கடைபிடிக்கும் பொழுது அரை நாள் வேலையாக சுருங்குகிறது. இது காலத்தையும், பணத்தையும் சேமிப்பதாகும். இதனால் இங்கு 13 மடங்கு சேமிப்பு கிடைக்கிறது. எந்தக் கம்பெனியும் நேரந்தவறாமையை நன்றாகப் புரிந்து கொண்டு பொறுப்பை ஏற்று செயல்பட்டால், இலாபம் ஐந்து அல்லது ஆறு மடங்கு அதிகரிக்கும். ஏனெனில் நேரம் அந்த அளவிற்கு மிச்சப்படுத்தப்படுகிறது.

காலந்தவறாமை என்பது இலாபத்துடன் நேரடி தொடர்புடையது.

காலந்தவறாமை ஒரு நலிந்த நிறுவனத்தை நஷ்டத்திலிருந்து இலாபத்திற்கு மாற்றும்.

காலந்தவறாமை ஒரு சிறந்த ஒழுங்குமுறைப்படுத்தும் தன்மையுடையது.

காலந்தவறாமை பழங்காலத்து மேல்நாட்டு அரசர்களின் பழக்கமாக இருந்தது என்று சொல்லப்பட்டது.

நாம் இப்பொழுது காலந்தவறாமையை, தோல்வியற்ற வெற்றியின் சின்னமாகச் சொல்லலாம்.

எதுவும் தோல்வியுறக்கூடியது. ஆனால் காலந்தவறாமை தோல்வியுறாது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 4:02 am


73. மனச்சோர்வு


சிலர் இயற்கையாகவே உற்சாகமின்றி மனச்சோர்வு உடையவர்களாக இருக்கிறார்கள். மற்றும் பலர் மனச்சோர்வை வளர்க்கும் சுபாவம் கொண்டவர்களாக இருக்கிறார்கள். வாழ்வில் தோல்வியை சந்திக்கும் போதும், அல்லது தாங்கள் புறக்கணிக்கப்பட்டபோதும், மனச்சோர்வு ஏற்படுகிறது. வேறு சிலர், உற்சாகமுள்ளவர்களாக இருந்தாலும் வாழ்வில், திருப்புமுனை ஏற்படும்பொழுது மன சோர்விலிருந்து மீளமுடியாத நிலையை அடைகிறார்கள். வழக்கமாக அப்படிப்பட்டவர்கள் எல்லோரும், இது தவிர்க்க முடியாது என்று மனச்சோர்வுக்கு அடிமையாகி விடுகிறார்கள். சிலர் மருந்தை நாடுகிறார்கள். அது தற்காலிக நிவாரணமாக இருந்தாலும், மேலும் அது தீவிரமாகி மறுபடியும் வருவதைத் தவிர்க்க முடியாததாக மாற்றிவிடுகிறது.

ஒரு பொறியாளர் 31வது வயதில் மனச் சோர்வு உடையவராக இருந்ததை அவர் நண்பர் ஒருவர் கண்டார். அந்த மனச்சோர்வு அவருக்குப் பல வருடங்களாக இருந்து வந்தது. அவருடைய நண்பர், மனச்சோர்வை போக்குவதற்கு, அன்னையிடம் பிரார்த்தனை செய்து ஆன்மாவை அழைக்கும்படி யோசனை கூறினார். அவ்வாறு அந்த முறையை பின்பற்றியதும் மறுநாள், மனச்சோர்விலிருந்து விரைவில் மீளமுடியும் என்று உணர்ந்தார். அவருடைய நண்பர், மனச்சோர்வின் மூலக்காரணத்தையும் அதனுடைய பல நிலைகளைப்பற்றி அறிவுபூர்வமாக தெளிவாக விளக்கக் கூடியவரிடம் அழைத்துச் சென்றார்.

அந்தப் பொறியாளர், மனச்சோர்வின் பலதரப்பட்ட நிலைகளைப் பற்றிய விபரங்களை ஆர்வமுடன் கேட்டார். அவர் கூறிய அனைத்தும் தன்னுடைய உள் சிரமத்திற்கு பொருத்தமாக இருந்ததைக் கண்டு ஆச்சரியத்துடன் மகிழ்ச்சி அடைந்தார். மனச்சோர்வின் தன்மையைப்பற்றி புரிந்து கொண்டார். அவர் மனச்சோர்விலிருந்து மீள்வதற்கு, ஒரு திடமான தீர்மானத்துடன் அங்கிருந்து கிளம்பிப் போய்விட்டார். இரண்டு வாரங்களுக்குப் பிறகு, அவரது நண்பர் இவரைப் பார்த்த போது இவருடைய முகம் பிரகாசமாக இருந்ததைக் கண்டு ஆச்சரியத்துடன் விசாரித்தார். பொறியாளரிடம் "எப்படி இருக்கிறீர்கள்? மனச்சோர்வு எந்த அளவில் உள்ளது?” என்று வினவினார். அதற்குப் பொறியாளர் "அது அன்றைய மறுநாளே விழித்தவுடன் என்னை விட்டு அகன்றுவிட்டது” என்றார். அந்த மனச்சோர்வு அடுத்த முப்பது வருஷங்களில் திரும்பவும் வரவே இல்லை.

மனச்சோர்வினால் பீடிக்கப்பட்டிருந்த அவருக்கு ஆன்மாவை அழைக்கும் கருத்து ஒன்றை தெரிவித்ததோடு, அவருக்கு எளிதில் புரியும்படியாக பலவிதமான விளக்கங்கள் சொல்லப்பட்டன. ஆன்மீக நோக்கில் மனச் சோர்வு, நம்மை பீடிப்பது இல்லை. அதை நாம்தான் பற்றிக் கொள்கிறோம் என்பதாகும். பொறியாளர் எடுத்த திடமான முடிவினால், அது மீண்டும் வந்து நிலைத்து நிற்க வாய்ப்பு இல்லாமல் போய்விட்டது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by சிவா on Tue Mar 29, 2011 4:02 am

74. மௌனம் எதிரிகளையும் அவர்களது சதி திட்டங்களையும் முறியடிக்கும்

எதிரிகளை தாக்குவதில் இரண்டு வழிகள் உள்ளன. ஒன்று தன்னுடைய முழுபலத்தையும் ஒன்று சேர்த்து எதிரிகளிடமிருந்து வரும் அடிக்கு திருப்பி பலமான பதிலடி கொடுத்தல். இது மனிதன், பிஸிக்கலாகவும், அறிவு ரீதியாகவும் செயல்படும் முறையாகும். மற்றொரு வழி, மனிதன் எந்த அஸ்திரங்களையும் நாடாமல், மௌனத்தைக் கடைப்பிடிப்பதாகும். மௌனத்தை அனுஷ்டிப்பது, அதிக கடினமானது என்றாலும், அது மிகவும் சக்தி வாய்ந்தது. நெருக்கடியான நேரத்தில், தன்மீது குறிவைக்கும் ஒவ்வொரு அடியும், தாக்கியவர் மீதே திரும்பிச் சென்று தாக்கும். அது மௌனத்தின் சக்தியாகும்.

அலுவலகங்கள் அநேக நேரங்களில் குடும்பங்கள் போலவும், நட்புரிமையுடையதாகவும், சகோதரத்தன்மை உள்ளதாகவும் இருக்கும். அது போட்டி, பொறாமை, கோள் சொல்லுதல், சதி செய்தல் போன்றவைகள் நிறைவாக நிகழும் இடமாகவும் இருக்கும். சில நேரங்களில் நல்லவரையும், களங்கமில்லாதவரையும், அப்பாவியையும், பாதிப்புக்குள்ளாக்கி அவருக்கு கேடுவிளைவிப்பார்கள். இப்படிப்பட்ட சதித்திட்டத்தின் சுழலில் சிக்கிக் கொண்டவர் கடவுள்மீது வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்கிறார். அவர் நல்ல வழியிலிருந்து பரஸ்பரம் நாசம் உண்டாக்கும் சண்டையிடும் தீய மனோபாவத்திற்கு ஆளாகிறார்.

அப்படிப்பட்ட நிறுவனம் ஒன்றில், புதியதாக வேலைக்கு வந்த இளைஞர் ஒருவர், தன்னுடைய வேலைத் திறமையாலும், உலக விவகாரங்களைப் பற்றிய அறிவு முதிர்ச்சிப் பெற்றவராகவும் விளங்கியதால் அவர் திடீரென்று பிரபலமடைந்தார். இரண்டு மூத்த அலுவலர்கள், இவரோடு நண்பர்களாக இருப்பதுபோல் வெளியில் போலியாக நடித்துக் கொண்டு, அவருக்கு தீங்கிழைப்பதில் மறைமுகமாக, விரோதமான செயல்களில் ஈடுபட்டு, அவர் மீது 29 புகார் மனுக்களை ஜோடித்து, அதிகாரிக்கு அனுப்பி வைத்தார்கள். அந்த அதிகாரி தன்னிச்சையாக முடிவு எடுக்க முடியாத பலவீனமானவர்.

அந்த அதிகாரி புகார் மனுவைப்பற்றி விசாரிக்க, கூட்டத்தைக் கூட்டினார். பாதிக்கப்பட்டவர் தன் மனதுக்குள்ளே சென்று மௌனமாக இருக்கத் தீர்மானித்தார். அந்த அதிகாரி விவரிக்க முடியாத காரணத்தால் எளிதில் அமைதி இழந்தார். புகார் மனுவை அனுப்பியவர்கள், தாங்கள் எதிர்பார்த்ததை அடைய முடியாமல் தோல்வி கண்டு, அது அவர்களுக்கே கெடுதலாக திருப்பித் தாக்கியது. சூழ்நிலை கடுமையாயிற்று. அதிகாரி கோபமுற்று புகார் கூறியவர்கள் மீது வெளிப்படையாகவே சீறி விழுந்தார். "இங்கு நான்தான் அதிகாரி. நான் என்ன செய்ய வேண்டுமென்று எனக்கு யாரும் சொல்ல வேண்டியதில்லை. உங்கள் வேலைகளை ஒழுங்காகச் செய்யுங்கள். என்னிடம் இது போன்ற புகார்களைக் கொண்டு வராதீர்கள்'' என்று கூறினார். அந்த இரண்டு மூத்த அலுவலர்களும் அதன் பிறகு எந்த புகாரையும் அதிகாரியிடம் எடுத்துச் செல்ல முடியவில்லை.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84516
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: ஆன்மீகமும் ஐஸ்வர்யமும்

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

Page 3 of 5 Previous  1, 2, 3, 4, 5  Next

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum