ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
யார் இந்த ஆசிரியர் பகவான்? மாணவர்களின் மனதில் இவர் நீங்கா இடம்பிடித்தது எப்படி?
 ராஜா

என்ன ஆயிற்று ?
 ராஜா

சமையல் சிலிண்டர் உபயோகர்களுக்கு மிக முக்கிய அறிவிப்பு!
 T.N.Balasubramanian

தேர்வு எழுத வேண்டும் என்றால் தாலியைக் கழட்டுங்கள்: பெண்களை அதிர வைத்த உ.பி காவல்துறை
 பழ.முத்துராமலிங்கம்

ஆக்ஸிடன்ட், மரண வேதனை, மன அழுத்தம்... `கில்லி’ இயக்குநர் தரணி மீண்டெழுந்த கதை!
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இயங்கும் ஒரே ஒரு தனியார் ரயில்
 பழ.முத்துராமலிங்கம்

இனிமேல் இது இருந்தால் தான் வண்டி! புதிய சட்டம்!!
 பழ.முத்துராமலிங்கம்

அமித்ஷா இயக்குனராக இருக்கும் வங்கியில் ரூ.745 கோடி டெபாசிட், வாழ்த்துக்கள் ராகுல் காந்தி ‘டுவிட்’
 anikuttan

என்ன ஆனது கமல்ஹாசனின் சபாஷ் நாயுடு?
 ayyasamy ram

மாரி 2 படப்பிடிப்பில் நடிகர் தனுஷுக்கு ஏற்பட்ட காயம்!
 ayyasamy ram

தமிழர்களை அதிர வைக்கும் புதிய உத்தரவு! இனி எதுவும் நடக்கலாம்...
 பழ.முத்துராமலிங்கம்

இந்தியாவில் இந்த சொர்க்க பூமி இருப்பது உங்களின் யாருக்காவது தெரியுமா?
 பழ.முத்துராமலிங்கம்

எலியை எப்படி விசாரிப்பார்கள் .?
 ஜாஹீதாபானு

அதிபர் டிரம்ப் மனைவி ஆடையால் சர்ச்சை
 SK

மின்வாரிய ஊழியருக்கு ரூ.100 கோடி சொத்து
 T.N.Balasubramanian

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 SK

நீருக்குள் யோகாசனம் செய்து 8 வயது சிறுமி உலக சாதனை
 T.N.Balasubramanian

அரசு வங்கிகளை தனியார் மயமாக்கும் எண்ணம் இல்லை: அமைச்சர்
 SK

வேணும்னுதானே மனைவியை கிணத்துல தள்ளினே…?
 SK

கோவா கடற்கரையில் 24 இடங்களில் ‘நோ செல்ஃபீ’ ஜோன்கள்!
 SK

தயாரிப்பாளரான சுருதிஹாசன்
 SK

இனி இன்டர்நெட் இல்லாமல் கூகுள் பயன்படுத்தலாம்
 பழ.முத்துராமலிங்கம்

5ஜி ஏலத்தை அடுத்த ஆண்டு நடத்த வலியுறுத்தல்
 ayyasamy ram

சந்திரபாபு - தினமலர் வாரமலர்
 ajaydreams

மாவட்டங்களில் நீட் தேர்வு மையங்கள்: ஜவ்டேகர்
 ayyasamy ram

பதவி விலகுகிறார் தலைமைப் பொருளாதார ஆலோசகர் அரவிந்த் சுப்ரமணியன்
 பழ.முத்துராமலிங்கம்

மிஸ் இந்தியா பட்டம் வென்றார் அனு கீர்த்தி வாஸ்!
 பழ.முத்துராமலிங்கம்

அரசு ஏன் நடவடிக்கை எடுக்கவில்லை.?
 பழ.முத்துராமலிங்கம்

அப்பா
 பழ.முத்துராமலிங்கம்

சிக்கிம் அரசின் விளம்பரத் தூதராக ஏ.ஆர்.ரஹ்மான் நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

அய்யோ... வங்கிகள் இப்படியும் நம்மை ஏமாற்றுமா? பொதுமக்கள் ஜாக்கிரதை....!!
 பழ.முத்துராமலிங்கம்

கட்டாய விடுப்பில் அனுப்பப்படுகிறார் சந்தா கோச்சார்
 பழ.முத்துராமலிங்கம்

18 எம்எல்ஏக்கள் தகுதிநீக்க வழக்கில் 3-வது நீதிபதியாக விமலா நியமனம்
 பழ.முத்துராமலிங்கம்

”கடைல எல்லாமே இயற்கையானது... கல்லாப்பெட்டி கூட பனைஓலைதான்!” - எம்.சி.ஏ. பட்டதாரியின் முயற்சி
 பழ.முத்துராமலிங்கம்

பாதாம், முந்திரி, பிஸ்தா... எந்த நட்ஸில் என்னென்ன சத்துகள்? #VikatanPhotoCards
 பழ.முத்துராமலிங்கம்

நாட்டுக் கருப்புக் கோழி பற்றி உங்களுக்குத் தெரிந்ததும், தெரியாததும் ஒரு அலசல்...
 பழ.முத்துராமலிங்கம்

ஒரு ரூபாய் செலவின்றி நோய்கள் குணமாக! ஆண்மையை பெருக செய்யும் ரகசியம்...
 பழ.முத்துராமலிங்கம்

வீரயுக நாயகன் வேள் பாரி - 88 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

அமெரிக்காவில் அடைக்கலம் கேட்கும் 7,000 இந்தியர்கள்: ஐ.நா. தகவல்
 ayyasamy ram

படம் பாருங்கள்.. ரசியுங்கள்...சிரியுங்கள்....இது what 's up கலக்கல்:)III
 ayyasamy ram

டாடி லேங்குவேஜ் ஃபாலோ பண்றேன்…!!
 ayyasamy ram

காவல் துறையில் இனி ஆர்டலி முறை ஒழிக்கப்படும் - கேரள முதல்வர் உறுதி
 T.N.Balasubramanian

ஜூன் 25-ம் தேதி தேசிய கருப்பு தினமாக அனுசரிப்பு:பா.ஜ.,
 ayyasamy ram

இந்திராணிக்கு விவாகரத்து; பீட்டர் முகர்ஜி சம்மதம்
 ayyasamy ram

காவிரி ஆணையம் அமைப்பதில் சிக்கல் : குமாரசாமி
 ayyasamy ram

திண்டுக்கல் சீனிவாசனின் பேச்சு உளறல் அல்ல,
 ayyasamy ram

நிபா வைரஸுக்கு இசை வழி பிரிவு உபசரிப்பு: கேரள மக்கள் கொண்டாட்டம்
 ayyasamy ram

டிராஃபிக் ராமசாமி வேடத்துக்கு ரஜினி!
 T.N.Balasubramanian

ஜம்மு காஷ்மீர் மாநில முதல்வர் மெஹபூபா முஃப்தி ராஜிநாமா என்று தகவல்
 ayyasamy ram

ஒலித்தது இசையா? கேட்டது இசையா?
 T.N.Balasubramanian

வணக்கம் அன்பு நண்பர்களே
 T.N.Balasubramanian

நடிகை நயன்தாரா தயாரிப்பாளர் ஆகிறார்! புதிய படத்தை இயக்குபவர் விக்னேஷ் சிவனா?
 ayyasamy ram

சினி துளிகள்!
 ayyasamy ram

பத்து, ‘கெட்டப்’புகளில் மிரட்டும் சதீஷ்!
 ayyasamy ram

ரஜினிக்காக கதை எழுதும் தனுஷ்!
 ayyasamy ram

பூமி என் தாய்
 M.M.SENTHIL

நண்பர்களே
 jemsith

தமன்னாவின் பிகினி சுற்று!
 ayyasamy ram

தமிழ் பேச பயிற்சி எடுத்து வருகிறார் ரகுல்பிரீத் சிங்.
 ayyasamy ram

கீர்த்தி சுரேஷை கண்டு பயப்படும் த்ரிஷா!
 ayyasamy ram

மின்னூல்கள் தரவிறக்கம்

Admins Online

நாகலிங்கப்பூ

View previous topic View next topic Go down

நாகலிங்கப்பூ

Post by சிவா on Tue Mar 29, 2011 3:17 am

ஆன்மீக அதிசயம்

ஒரு லிங்கம் அதைச் சுற்றி தவம் புரியும் ஆயிரக்கணக்கான முனிவர்கள், அவர்களுக்கும் மேல் பல ஆயிரம் தலைகளையுடைய பாம்பு. என்ன மர்மக்கதை போல இருக்கிறதா. நான் இது வரை சொன்னது ஒரு பூவைப் பற்றி…இதன் பெயர் நாகலிங்கப் பூ,.

அறிவியல் அதிசயம்இதனை அதிசியப் பூ என்றே சொல்ல வேண்டும். அமைப்பில் சிவ லிங்கம், முனிகள், நாகம் என வினோதமாக இருப்பதைப் போலவே, நடைமுறை அறிவியலிலும் அதிசயமாக இருக்கிறது. இந்தப் பூ செடிகளில் பூப்பதில்லை. மரத்தில் பூக்கிறது. அதுவும் வேர்ப்பகுதிக்கு மேலேயும் கிளைகள் இருக்கும் பகுதிக்குக் கீழேயும் உள்ள இடைவெளிப் பகுதியில் தனியாகக் கிளை பரப்பி அதில் பூக்கின்றது.

தன்மை

மென்மையான கவர்ச்சிகரமான பூக்களாக இருந்தாலும், உலகமுழுவதும் சைவர்களால் சிவ அம்சமாக இந்தப் பூ பார்க்கப் படுகிறது. இதனுடைய காயின் அமைப்பு பந்து போலவே இருப்பதால், Cannon ball என்று வெளிநாட்டினர் அழைக்கின்றனர்.

மருத்துவத்திலும் அதிசயமே

ஆன்மீகம் மற்றும் அறிவியலில் இதன் அதிசியங்களைப் பார்த்துவிட்டோம். இந்த நாகலிங்க பூவும், மரமும் மருத்துவ உலகில் நோய் தீ்ர்க்க பெரிதும் உதவுகின்றன. இந்த நாகலிங்கப்பூ சில மூலிகை மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது. குளிர் மற்றும் வயிற்று உபாதைகளுக்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.இதன் இளம் இலைகள் தோல் நோய்களுக்கு மருந்தாக உதவுகிறது.

காணப்படும் இடங்கள்

இந்த அதிசயமான பூக்கள் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில சிவாலயங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சில இடங்களிலும் இருக்கிறது.


http://lordeswaran.wordpress.com
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நாகலிங்கப்பூ

Post by சிவா on Tue Mar 29, 2011 3:21 am

நாகலிங்கப்பூ மரம், தென்னமெரிக்காவின் வடபகுதி, வெப்பவலய அமெரிக்கா, தென் கரிபியன் பகுதிகளைத் தாயகமாகக் கொண்டது. இதைத் தாவரவியல் பெயராக "Couroupita guianensis" என்று அழைக்கிறார்கள். இது "மக்னோலியோபைட்டா" எனும் பிரிவில் "மக்னோலியோப்சிடா" எனும் வகுப்பில் "எரிகேலெஸ்" வரிசையில் "லெசித்திடேசியே" எனும் குடும்பத்தில் "கூருபிட்டா" எனும் பேரினமாக உள்ளது. இந்த மரம் 30 முதல் 35 மீட்டர் உயரம் வரை வளரக் கூடியது.

இந்த மரத்தின் பூ மரத்தின் மேல் பகுதியில் பூப்பதில்லை. வேர்ப்பகுதிக்கு மேலேயும் கிளைகள் இருக்கும் பகுதிக்குக் கீழேயும் உள்ள இடைவெளிப் பகுதியில் தனியாகக் கிளை பரப்பி அதில் பூக்களும் காய்களும் நிறைந்து கிடக்கின்றன. இதில் பூக்கள் உருண்டை வடிவில் மொட்டுக்களாக இருக்கும். இந்த மொட்டுக்கள் மலரும் போது சிகப்பு நிற இதழ்கள் விரிந்து உள்ளே நாகப்பாம்புகள் குடை விரித்திருக்க அதனுள்ளே சிவலிங்கம் இருப்பது போன்ற அமைப்பில் அருமையான பூவாக மலர்கிறது. சில மொட்டுக்கள் காயாகும் போது பெரிய உருண்டை போல் இருக்கிறது. இந்த அதிசயமான பூக்கள் தமிழ்நாட்டில் குறிப்பிட்ட சில சிவாலயங்களிலும், மேற்குத் தொடர்ச்சி மலைப்பகுதிகளில் சில இடங்களிலும் இருக்கிறது. இந்த நாகலிங்கப்பூ சில மூலிகை மருந்துகள் தயாரிக்கப் பயன்படுகிறது என்பது இங்கே குறிப்பிடத்தக்கது.
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நாகலிங்கப்பூ

Post by சிவா on Tue Mar 29, 2011 3:23 am

சிவாலயங்களில் கருவறையில் மட்டுமின்றி, உள் மற்றும் வெளிப் பிராகாரங்களிலும் சிவபெருமானின் அருவுருவ வடிவமாகத் திகழும் சிவலிங்கத்தை நாம் தரிசிக்கிறோம். பொதுவாக சிவலிங்க மூர்த்தத்தைத் தரிசிக்கும்போது பக்தர்கள் மனதில் ஒரு உன்னதமான பக்தியும் மனநிறைவும் ஏற்படுகிறது. கருவறையில் உள்ள சிவலிங்கத்திற்கு "நாகாபரணம்' எனப்படும் வெள்ளி அல்லது தங்கத்தாலான அணிகலனை சார்த்தி, அதன்மீது அலங்காரங்கள் செய்யும்போது, சிவலிங்கத்தின் கம்பீரமும் வனப்பும் நம் நெஞ்சை அள்ளுகின்றது.

நாகாபரணம் சார்த்தப்பட்ட சிவலிங்கத்தைப் போன்றே அமைப்புள்ள ஓர் அழகிய மலர்தான் நாகலிங்கப்பூ ஆகும். இந்த மலரை தெலுங்கு மொழியில் "நாகமல்லி' என்றும்; "மல்லிகார்ச்சுனம்' என்றும் அழைக்கின்றனர். அழகிய வட்ட வடிவமான வெண்மைநிற ஆவுடை, அதன் நடுவில் சிறிய பாணலிங்கம், சிவலிங்கத்தின்மீது கவிழ்ந்து குடை பிடிப்பது போன்ற எண்ணற்ற தலைகளையுடைய நாகம், ஆவுடையாரைத் தாங்குவதுபோல் குங்கும நிறத்தில் ஐந்து இதழ்கள்- இத்தகைய தோற்றம் கொண்ட ஒரு அழகான மலர்தான் நாகலிங்கப் பூ.

"பிரேஸில்நட்' என்ற குடும்பத்தைச் சேர்ந்தது நாகலிங்க மரமாகும். இந்த மரம் நம் நாட்டைச் சேர்ந்ததல்ல! தென் அமெரிக்காவின் பிரேஸில் நாட்டிலிருந்து இந்தியாவிற்கு வந்த பலவகை மரங்களில் இதுவும் ஒன்றாகும். கரடுமுரடான மேல்பட்டை யுடன் தூண்போல உயர்ந்து வளரும் தன்மையுடையது இந்த மரம். இதில் ஆரஞ்சு, குங்கும நிறம், இளஞ்சிவப்பு ஆகிய நிறங்களில் மலர்கள் மலர்கின்றன. இந்த மலர்கள் பீரங்கி குண்டுகளைப் போன்று உருண்டு திரண்ட காய்களாக மாறுகின்றன. இதனால் இந்த மரத்திற்கு பீரங்கி குண்டு மரம் (கானன் பால் மரம்) என்று பெயர் ஏற்பட்டது. மரத்தைச் சுற்றிலும் ஒட்டிக்கொண்டிருக்கும் தவிட்டு நிறக் காய்களைப் பார்த்தாலே சந்தோஷமாக இருக்கும்.

நாகலிங்க மலரானது, நாகாபரணத்து டன் திகழும் சிவலிங்கத்தை நினைவுபடுத்துவதால், பல சிவாலயங்களில் இது வளர்க்கப்படுகிறது. பூக்கள் பூஜைக்குப் பயன்படுத்தப்பட்டு பக்தர்களுக்குப் பிரசாதமாக விநியோகிக்கப்படுகின்றன. மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், நாகர்கோவில் நாகராஜர் ஆலயம் போன்ற இடங்களில் இந்தப் பூக்கள் கடைகளில் விற்பனைக்கு வைக்கப்பட்டுள்ளன.

தமிழ்நாட்டு ஆலயங்களில், அப்பகுதியில் அதிக அளவில் காணப்படும் ஒரு மரம் ஆலயத்தின் தலவிருட்சமாகப் போற்றப்பட்டு வருவதும், அந்த மரத்தின் பெயரை ஒட்டியே ஆலயத்தின் பெயர் அமைந்திருக்கும் என்பதையும் நாம் அறிவோம். ஆனால் நாகலிங்க மரம் நம் நாட்டைச் சேர்ந்தது அல்ல என்பதால், இது எந்த தலத்திலும் தல மரமாக இல்லை. இந்த மலரை நாம் நம் உள்ளங்கையில் வைத்துப் பார்க்கும்போது ஒரு அழகிய சிவலிங்கத் திருமேனியை நாம் நம் கையில் வைத்திருப்பது போன்ற ஒரு மென்மையான உணர்வை அனுபவிக்க முடியும்!

-விஜயலட்சுமி சுப்பிரமணியம்
avatar
சிவா
நிறுவனர்

நிறுவனர்

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 84440
மதிப்பீடுகள் : 10530

View user profile http://www.sivastar.net

Back to top Go down

Re: நாகலிங்கப்பூ

Post by அகீல் on Tue Mar 29, 2011 8:26 am

நாகலிங்க பூவை பார்த்து இருக்கின்றேன். நன்றி அண்ணா தகவலுக்கு .
avatar
அகீல்
இளையநிலா

இளையநிலா

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 336
மதிப்பீடுகள் : 11

View user profile

Back to top Go down

Re: நாகலிங்கப்பூ

Post by Lakshman on Tue Mar 29, 2011 9:49 am

வணக்கம் அண்ணா ,

எங்கள் ஊரில் நாகலிங்க பூ மரம் உள்ளது. அதன் மணம் மிகவும் அருமையாக இருக்கும்
avatar
Lakshman
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 91
மதிப்பீடுகள் : 13

View user profile

Back to top Go down

Re: நாகலிங்கப்பூ

Post by தாமு on Tue Mar 29, 2011 9:56 am

சூப்பர்
avatar
தாமு
வழிநடத்துனர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 13859
மதிப்பீடுகள் : 420

View user profile http://azhkadalkalangiyam.blogspot.com

Back to top Go down

Re: நாகலிங்கப்பூ

Post by krishnaamma on Thu Jun 04, 2015 2:49 pm

நல்ல பகிர்வு சிவா, எல்லோரும் பார்ப்பதற்காக இதை மேலே கொண்டு வருகிறேன் புன்னகை


என்னுடைய சமையல் குறிப்புகளடங்கிய அண்ட்ராய்ட் அப்ளிகேஷன்!
http://eegarai.org/apps/Kitchen4All.apk


http://krishnaammas.blogspot.in/

http://krishnaamma.eegarai.com/

Dont work hard, work smart புன்னகை


Krishna Please Chant ஹரே கிருஷ்ணா ஹரே கிருஷ்ணா, கிருஷ்ணா கிருஷ்ணா ஹரே ஹரே ! ஹரே ராமா ஹரே ராமா, ராமா ராமா ஹரே ஹரே !! !!
avatar
krishnaamma
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 55660
மதிப்பீடுகள் : 11650

View user profile

Back to top Go down

Re: நாகலிங்கப்பூ

Post by shobana sahas on Fri Jun 05, 2015 3:50 am

avatar
shobana sahas
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 2750
மதிப்பீடுகள் : 877

View user profile

Back to top Go down

Re: நாகலிங்கப்பூ

Post by ayyasamy ram on Fri Jun 05, 2015 7:16 am

avatar
ayyasamy ram
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 37096
மதிப்பீடுகள் : 11500

View user profile

Back to top Go down

Re: நாகலிங்கப்பூ

Post by anikuttan on Fri Jun 05, 2015 7:52 am

சிவா சார் ,நான் இந்த மரத்தை வளர்த்து வருகிறேன்.
avatar
anikuttan
பண்பாளர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 101
மதிப்பீடுகள் : 28

View user profile

Back to top Go down

Re: நாகலிங்கப்பூ

Post by T.N.Balasubramanian on Fri Jun 05, 2015 10:12 am

அதன் அமைப்பு பார்க்க பரவசத்தை ஏற்படுத்துகிறது .
ஹிதமான வாசம் இதயத்தை தொடுகிறது .
சென்னை பனகல் பார்க்கில் இம்மரம் உள்ளது .
காலை நடைபயிற்சி காலத்தே கண்டுளேன் .
சிலர் இதன் பூவை எடுப்பதற்கே பார்க்கிற்கு வருகிறார்கள் .

நல்ல அருமையான தகவல் சிவா /விஜயலட்சுமி சுப்ரமணியன் .

ரமணியன்


* கருத்துக்களை ரத்தினச்சுருக்கமாக கூற பழகிக் கொண்டால்
வாக்கில் பிரகாசம் உண்டாவதுடன், சக்தியும் வீணாகாமல் இருக்கும்*. ----"காஞ்சி மஹா பெரியவா
"

சாதிமதங்களைப் பாரோம் - உயர்சன்மம் இத் தேசத்தில் எய்தினராயின்
வேதியராயினும் ஒன்றே - அன்றி வேறுகுலத்தினராயினும் ஒன்றே -  பாரதி
avatar
T.N.Balasubramanian
நிர்வாகக் குழுவினர்


நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 22160
மதிப்பீடுகள் : 8272

View user profile

Back to top Go down

Re: நாகலிங்கப்பூ

Post by Sponsored content


Sponsored content

நிகழ்நிலை
இணையாநிலை


Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum