புதிய பதிவுகள்
» நாவல்கள் வேண்டும்
by Shivanya Yesterday at 11:21 pm

» நாம் பெற்ற வரங்களே - கவிதை
by ayyasamy ram Yesterday at 7:34 pm

» விபத்தில் நடிகை பலி – சக நடிகரும் தற்கொலை செய்ததால் பரபரப்பு
by ayyasamy ram Yesterday at 7:24 pm

» பெண்களை ஆக்க சக்தியா வளர்க்கணும்…!
by ayyasamy ram Yesterday at 7:22 pm

» நல்லவனாக இரு. ஆனால் கவனமாயிரு.
by ayyasamy ram Yesterday at 7:19 pm

» இன்றைய கோபுர தரிசனம்
by ayyasamy ram Yesterday at 7:11 pm

» ஈகரை வருகை பதிவேடு
by T.N.Balasubramanian Yesterday at 6:53 pm

» சிங்கப்பூர் சிதறுதே..கோர முகத்தை காட்டும் கொரோனா!
by ayyasamy ram Yesterday at 1:26 pm

» ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய அதிபர் ரைசி.
by ayyasamy ram Yesterday at 1:23 pm

» சினி மசாலா
by ayyasamy ram Yesterday at 1:09 pm

» இயற்கை அழகை ரசியுங்கள்!
by ayyasamy ram Yesterday at 1:06 pm

» இன்றைய (மே, 20) செய்திகள்
by ayyasamy ram Yesterday at 12:59 pm

» Relationships without boundaries or limitations
by T.N.Balasubramanian Yesterday at 10:00 am

» மலர்ந்த புன்சிரிப்பால் ரசிகர்களின் இதயம் கவர்ந்த E.V.சரோஜாவின் மறக்க முடியாத பாடல்கள்
by heezulia Yesterday at 2:02 am

» ஒரு படத்தில ரெண்டு தடவ வந்த ஒரே பாட்டு
by heezulia Yesterday at 1:39 am

» நிலா பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:31 am

» சினிமா கலைஞர்கள் பாடாத பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:26 am

» சினிமா கலைஞர்கள் பாடிய பாட்டு
by heezulia Yesterday at 1:21 am

» தமிழ் படங்களின் டைட்டில் பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:16 am

» கொழந்தைங்க, சின்ன புள்ளைங்க நடிச்ச பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:11 am

» தமிழ் படங்கள்ல வியாபார பாட்டுக்கள்
by heezulia Yesterday at 1:05 am

» சுசீலா பாடிய சிறப்பு பாட்டுக்கள் - வீடியோ
by heezulia Yesterday at 12:55 am

» தமிழ் சினிமாவில் இடம் பெற்ற கதாகாலட்சேபங்கள் மற்றும் தெருக்கூத்து, மேடை நிகழ்ச்சிகள்
by heezulia Yesterday at 12:46 am

» காமெடி நடிகை - நடிகர்கள் நடிச்ச பாட்டு
by heezulia Yesterday at 12:35 am

» காயத் திரியில் விளக்கேற்றி
by சண்முகம்.ப Sun May 19, 2024 11:02 pm

» விளக்கேற்றும்போது கண்டிப்பா இதை செய்யவே கூடாது... உஷார்...!!
by ayyasamy ram Sun May 19, 2024 6:07 pm

» விலகி இருக்கவும் கற்றுக் கொள்ளுங்கள்!
by ayyasamy ram Sun May 19, 2024 5:57 pm

» சிரித்துக்கொண்டே வாழ்வதுதான் மனிதனின் சிறப்பு!
by ayyasamy ram Sun May 19, 2024 1:55 pm

» கருத்துப்படம் 19/05/2024
by mohamed nizamudeen Sun May 19, 2024 10:17 am

» காதல் வேதாந்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:21 am

» தேளும் பாம்பும்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:20 am

» செந்தூர் சண்முகர் துதி
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:15 am

» செந்தூர் முருகன் போற்றி – எண்சீர் விருத்தம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:13 am

» திருச்செந்தூர் சிவக்கொழுந்தீஸ்வர் வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:11 am

» காதல் வரம்
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:09 am

» வெள்ளிமலை வெண்பா
by சண்முகம்.ப Sun May 19, 2024 7:05 am

» அப்பாடா! நம்ம இந்த லிஸ்டிலே இல்லே!
by ayyasamy ram Sat May 18, 2024 9:01 am

» சுத்தி போட்டா திருஷ்டி விலகும்!
by ayyasamy ram Sat May 18, 2024 8:55 am

» சனாகீத் நாவல் வேண்டும்
by Poomagi Sat May 18, 2024 12:00 am

» தங்கம் விலை பவுனுக்கு ரூ.240 அதிகரிப்பு
by ayyasamy ram Fri May 17, 2024 6:22 pm

» கல்யாண நாள் நினைவிலே இல்லை...!!
by ayyasamy ram Fri May 17, 2024 10:40 am

» எப்படி திருப்பி கட்டுவீங்க!
by ayyasamy ram Fri May 17, 2024 10:35 am

» எதையும் பார்க்காம பேசாதே...
by ayyasamy ram Fri May 17, 2024 10:32 am

» சென்று வருகிறேன் உறவுகளே ! மீண்டும் சந்திப்போம்
by T.N.Balasubramanian Thu May 16, 2024 9:02 pm

» வான்நிலா நிலா அல்ல
by ayyasamy ram Thu May 16, 2024 6:50 pm

» கோழி சொல்லும் வாழ்க்கை பாடம்.
by T.N.Balasubramanian Thu May 16, 2024 6:14 pm

» நலம்தானே !
by T.N.Balasubramanian Thu May 16, 2024 5:59 pm

» அவளே பேரரழகி...!
by ayyasamy ram Thu May 16, 2024 1:45 pm

» புன்னகை பூக்கும் மலர்கள்
by ayyasamy ram Thu May 16, 2024 1:39 pm

» நாட்டு நடப்பு -கருத்துப்படம் 31/01/2023
by ayyasamy ram Thu May 16, 2024 8:34 am

இந்த வார அதிக பதிவர்கள்
ayyasamy ram
தங்க பஷ்பம் Poll_c10தங்க பஷ்பம் Poll_m10தங்க பஷ்பம் Poll_c10 
19 Posts - 49%
heezulia
தங்க பஷ்பம் Poll_c10தங்க பஷ்பம் Poll_m10தங்க பஷ்பம் Poll_c10 
15 Posts - 38%
T.N.Balasubramanian
தங்க பஷ்பம் Poll_c10தங்க பஷ்பம் Poll_m10தங்க பஷ்பம் Poll_c10 
2 Posts - 5%
D. sivatharan
தங்க பஷ்பம் Poll_c10தங்க பஷ்பம் Poll_m10தங்க பஷ்பம் Poll_c10 
1 Post - 3%
Guna.D
தங்க பஷ்பம் Poll_c10தங்க பஷ்பம் Poll_m10தங்க பஷ்பம் Poll_c10 
1 Post - 3%
Shivanya
தங்க பஷ்பம் Poll_c10தங்க பஷ்பம் Poll_m10தங்க பஷ்பம் Poll_c10 
1 Post - 3%

இந்த மாத அதிக பதிவர்கள்
heezulia
தங்க பஷ்பம் Poll_c10தங்க பஷ்பம் Poll_m10தங்க பஷ்பம் Poll_c10 
217 Posts - 49%
ayyasamy ram
தங்க பஷ்பம் Poll_c10தங்க பஷ்பம் Poll_m10தங்க பஷ்பம் Poll_c10 
161 Posts - 37%
mohamed nizamudeen
தங்க பஷ்பம் Poll_c10தங்க பஷ்பம் Poll_m10தங்க பஷ்பம் Poll_c10 
17 Posts - 4%
T.N.Balasubramanian
தங்க பஷ்பம் Poll_c10தங்க பஷ்பம் Poll_m10தங்க பஷ்பம் Poll_c10 
10 Posts - 2%
prajai
தங்க பஷ்பம் Poll_c10தங்க பஷ்பம் Poll_m10தங்க பஷ்பம் Poll_c10 
10 Posts - 2%
சண்முகம்.ப
தங்க பஷ்பம் Poll_c10தங்க பஷ்பம் Poll_m10தங்க பஷ்பம் Poll_c10 
9 Posts - 2%
Jenila
தங்க பஷ்பம் Poll_c10தங்க பஷ்பம் Poll_m10தங்க பஷ்பம் Poll_c10 
4 Posts - 1%
jairam
தங்க பஷ்பம் Poll_c10தங்க பஷ்பம் Poll_m10தங்க பஷ்பம் Poll_c10 
4 Posts - 1%
Guna.D
தங்க பஷ்பம் Poll_c10தங்க பஷ்பம் Poll_m10தங்க பஷ்பம் Poll_c10 
4 Posts - 1%
ஜாஹீதாபானு
தங்க பஷ்பம் Poll_c10தங்க பஷ்பம் Poll_m10தங்க பஷ்பம் Poll_c10 
3 Posts - 1%

நிகழ்நிலை நிர்வாகிகள்

தங்க பஷ்பம்


   
   

Page 1 of 2 1, 2  Next

avatar
Guest
Guest

PostGuest Wed Feb 11, 2009 1:39 am

தங்கப்பஷ்பம் பற்றி நிறைய செய்திகளைக் கேள்விப்பட்டிருப்பீர்கள்.

பண்டைக்காலங்களில் அரசர்கள், மடாதிபதிகள் மற்றும் பணம் படைத்த வர்கள் வாலிப முறுக்கேறவும், இளமையான தோற்றத்திற்கும், மேனி மினு மினுப்புக்கும் தங்க பஷ்பத்தை உட்கொண்டார்கள்.

இவர்களுடைய மலத்தை சிலர் பணம் கொடுத்து வாங்கும் வழக்கமும் அக்காலத்தில் இருந்தது. காரணம், மலத்தை நீரில் கரைத்து ஜீரணமாகாத தங்கம் கலந்திருந்தால் அதை எடுத்துக் கொள்ளத்தான்.

இதனால் நாம் என்ன அறிகின்றோம்? ஒன்று தங்கம் பெரும்பாலும் ஜீரணம் ஆவதில்லை. இரண்டாவதாக ஜீரணம் ஆகாத தங்கம் பெருங்குடல் வழியாக வெளிவருவதைப் போல் தங்க அணுக்கள் சிலருடைய பிற உள் உறுப்புகளில் சென்று சிக்கக்கூடும். இந்நிலையில் அவ்வுறுப்புகள் அழிந்துபோகும். அகத்தியர் தங்க பஷ்ப முறையை அகத், வைத்தி, காண்டம் 600 பாண்டவைப்பு செ.152-ல் கூறியிருக்கிறார்.

தங்க பஷ்பம்: ஒரு பலம் (35 கிராம்) சுத்தி செய்த தங்கத்திற்கு அடுத்தப் பக்கத்தில் காணும் பட்டியலில் உள்ள அளவுகளின் படி சாறுகளை விட்டு முறைப்படி செய்து வரவும்.

இவ்வாறு செய்து வந்தால், அகத்தியருடைய பாடலில் குறிப்பிட்ட மாதிரி மஞ்சள் நிற பஷ்பம் கிடைக்கும்.

avatar
Guest
Guest

PostGuest Wed Feb 11, 2009 1:39 am

விஞ்ஞான விளக்கம்:

விஞ்ஞான விளக்கத்தை ஆராய்வ தற்குமுன், ஒரு பொருள் (உலோகம் அல்லது பட்டணம் போன்றவை) எவ்வாறு பஷ்பம் அல்லது செந்தூரமாக மாறுகிறது என்பதை தெரிந்துகொள்ள வேண்டும்.

சுருங்கச் சொல்லின், எப்பொருளாயினும் புடம் போடும்போது அப்பொருள் காற்றில் உள்ள ஆக்ஸிஜனுடன் அதாவது அமில வாயுடன் கலந்து பஷ்பமாகிறது. அப்பொருள்களை தூள் செய்வதால் சுலபமாக பற்பமாக மாறி விடும். ஆனால் இதில் ஒரு நுணுக்கமும் உண்டு. அதாவது புடம் போடும் போது மிகுந்த வெப்பமிருந்தால் அவ்வுலோகம் தன் சுயரூபத்திற்கு போய் விடும். அதற்காகத்தான் மேற் கூறியவாறு வரட்டியின் எண்ணிக்கை கூறப் பட்டுள்ளது.

வெப்பம் குறைவாக இருந்தால் அந்த உலோகம் பஷ்பமாக மாறாது. இவ்வாறு பஷ்பம் அல்லது செந்தூர மாகாதப்பொருளை உட்கொள்வது ஆபத்து. இதற்கு ஆதாரமாக மேல் கூறப்பட்ட தங்கச் செந்தூரத்தை எடுத்துக் கொள்வோம்.

நன்றாக சாற்றில் அரைக்கப்பட்டு, வில்லை தட்டப்பட்டு தங்கமானது மிகச் சிறு தூள் அளவில் இருக்கும். இந்த தூள் வெப்பத்தில் பஷ்பமாகவோ, செந்தூரமாகவோ மாறிவிடும். அதே பஷ்பம் அல்லது செந்தூரத்தை மேலும் வெப்பப்படுத்தினால் பற்பம் உருவம் மாறிவிட்டு அதன் சுய ரூபத்தை அடையும். அதாவது தங்கம் தங்கமாகவே மாறிவிடும்.

இது தவறு என வைத்தியர்கள் வாதாடுவார்கள். ஏனெனில் தங்கத்தை உருக்க வேண்டுமானால் 1336.1 டிகிரி வெப்பத்தை பயன்படுத்த வேண்டும். மேலும் தங்கத்துடன் கலந்துள்ள அமில வாயுவை அகற்ற வேண்டும். இதற்கு தகுந்த கருவிகள் சித்த வைத்தியர்களிடம் கிடையாது. ஆகையால் அவர்கள் தங்கம் மீண்டும் சுய ரூபம் அடையாது என்கிறார்கள். ஆனால் நாம் அறிய வேண்டியது என்னவென்றால் (1) சரியாகச் செய்யப்படாத பஷ்பம்- செந்தூரம் (2) சரியாகச் செய்யப்பட்ட பஷ்பம்-செந்தூரம் இவைகளின் நன்மை, தீமைகள்.

avatar
Guest
Guest

PostGuest Wed Feb 11, 2009 1:40 am

விவரங்களை கீழே காணலாம்.

1. முதலில் கூறப்பட்ட சரியாகச் செய்யப்படாத பஷ்பத்தின் தன்மையை பார்ப்போம். உதாரணமாக மேலே கொடுக்கப்பட்டுள்ள அகத்தியரின் தங்க செந்தூரத்தை எடுத்துக் கொள்வோம். (குணப்பாடம் பக்கம் 130)
அந்த பாடலில் பஷ்பத்தின் நிறம் மஞ்சள் என்கிறார். மற்ற பஷ்பங்கள் வெண்மையாக இருக்கும் போது இந்த பஷ்பம் ஏன் மஞ்சள் நிறமாக இருக்க வேண்டும்? இந்த நிறத்திற்கு காரணம் என்ன?

பஷ்பங்களுக்கு வெள்ளை நிறம் வருவதற்கு காரணம், அதில் கலந்திருக்கும் அமில வாயு அதாவது ஆக்சைட்.. இந்த நிலையில் இருப்பதினால் அதற்கு பஷ்பம் என காரணப் பெயர்.

ஆனால் மேலே கூறப்பட்டதைப் போல் ஏன்; இந்த பஷ்பத்திற்கு மட்டும் மஞ்சள் நிறம்? அதில் உள்ள பஷ்பமாகத் தங்கம் ஒரு உலோகத்தை பஷ்ப மாக மாற்றுவதின் நோக்கம் என்ன வென்றால், உலோகமாக எப்பொருளை யும் உட்கொண்டால் அது மருந்தாக பயன்படாது. மேலும் பல சித்தர் நூற்கள் அவைகளை உட்கொள்ளின் அவைகளின் ஆபத்துகளை சுட்டிக்காட்டி, இவைகளின் விளைவுகளை எடுத்து விளக்கியுள்ளார்கள் ஆகையால் வேகாத உலோகங்கள், அதாவது பஷ்பமாக மாறாத உலோகங்கள் விபத்தை உண்டாக்கும். அதாவது அவை கிட்னி, கல்லீரல் போன்ற உறுப்புகளை பாதிக்கக்கூடும். வயதானவர்கள், நோய்வாய்ப்பட்டவர்கள் ஆகியோருக்கு இத்தகைய நிறைவாகாத பஷ்பம் நிச்சயமாக பாதிப்பை உண்டாக்கும்.

இரண்டாவது வகையைச் சார்ந்த பஷ்பமாக மாற்றப்பட்ட உலோகங்களை இப்போது எடுத்துக் கொள்வோமா?

பஷ்பமாயிருப்பினும் அவை உலோக தன்மையை பெற்றிருக்கும். அந்நிலையினை முழுமையாக விட்டு விடாது. ஏனெனில் பஷ்பம் எப்போது வேண்டுமானாலும் அதன் சுயரூபத்தை அடையும் தன்மைப் பெற்று உள்ளது. காரணம் நாம் கையாளும் முறையின் குறைபாடு தான் என்பதை பார்த்தோம்.

பொதுவாக பார்ப்போமேயானால், மூலிகைச் சாறுகளும், தாவரப்பொருள் களின் சாறு, உதாரணமாக எலுமிச்சம் சாறு, காடி போன்றவை உலோகத்தின் தன்மையை முழுமையாக மாற்ற இயலாது. அவைகளுக்கு தகுந்த வலிமை யில்லை. மேலும் தாவரப் பொருள்கள் கடுமையான வெப்பத்தை தாங்க இய லாது. அவை கருகி சாம்பலாக மாறி விடும். ஆகையால் மருந்து செய்யும் முறை முதலில் விஞ்ஞான அறிவியலைச் சார்ந்ததாக இருத்தல் வேண்டும்.

மேலே கூறிய காரணங்களால் நன்றாக செய்யப்பட்ட சில பஷ்பங்களும் மனிதனுக்கு விபத்தை செய்யக்கூடும். ஆகையால் முன் கூறியவாறு நல்ல மருந்து செய்முறைகளைக் கடைப்பிடிக்கும் விற்பனையாளர்கள் மருந்து மட்டும் பயன்படுத்த வேண்டும்.

avatar
Guest
Guest

PostGuest Wed Feb 11, 2009 1:40 am

தங்கத்தை நீராகச் செய்ய முடியுமா?

தங்கத்தை நீராகச் செய்வதற்கு ஆக்குவா ரஜூனா என்ற அமிலத்தில் கரைத்து விடுவதாகும். ஆனால் நம் மருத்துவத்தில் இந்த முறையை யாரும் இதுவரையும் செய்ததில்லை. இந்த முறை பயன்படுத்துவதற்கு மேலும் பல ஆராய்ச்சிகள் செய்ய வேண்டும். அவ்வாறு செய்யாமல் இந்த முறையினை கையாளுவது ஆபத்தைச் செய்யும்.

நவீன மருத்துவத்தில் தங்கத்தை ஊசி மூலமாக ரத்தத்தில் அதாவது கோல்டு தைகுலோகோஸ் என்ற கெமிக்கல் எண்ணெய் ரூபத்தில் செலுத்தப்படுகிறது. மேலும் ஏதாவது தங்கம் தங்கியிருப்பின் அதனை டைமெர்கா போல் என்ற கெமிக்கலை பயன்படுத்தி உடம்பிலிருந்து அறவே அகற்றி விடுவார்கள். இவ்வாறு செய்வதால் உடலுறுப்புகளில் எந்த விதமான தீங்கும் அடைவதில்லை.

நவீன மருத்துவர்கள் எல்லா நோயாளிகளுக்கும் தங்க வைத்தியம் செய்வதில்லை. சிறுநீர் கோளாறு, கல்லீரல் கோளாறு உள்ளவர்களுக்கு கட்டாயம் இவ்வைத்திய முறையினைப் பயன்படுத்துவதில்லை. மேலும் இச்சிகிச்சை துவங்குவதற்கு முன்பும், பின்பும் பல ரத்த பரிசோதனைகளும், மற்றும் பல சோதனைகளையும் செய்த பிறகே அந்த சிகிச்சைக்கு அந்த நோயாளி தகுதியுடையவரா எனத் தீர்மானிக்கப்படுகிறார்கள்.

மேல் கூறப்பட்டதிலிருந்து நவீன மருத்துவர்கள் எவ்வளவு பயத்துடன் தங்கத்தை பயன்படுத்துகிறார்கள் என்று அறிகிறோம்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Sat Sep 05, 2009 3:40 am

தங்க பஸ்பம் பற்றிய தகவல்கள் எனக்கு இன்னும் தேவை. தெரிந்தவர்கள் தொகுத்தளிக்கவும். தங்க பஸ்பம் சாப்பிடுவதால் ஏற்படும் பக்க விளைவுகள் பற்றி ஆராய்ந்து கொண்டிருக்கிறேன். விளக்கவும்.

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Wed Sep 16, 2009 11:58 pm

தங்க பஸ்பம் என்று ஒன்று இருக்கிறதா? அல்லது சித்தரியலில் கண்ட உருவகமா?

தங்க பஸ்பத்தில் உண்மைலேயே தங்கம் சேர்கிறதா?




தங்கபஸ்பம் என்பது ஆயுர்வேத மருந்துகளில் ஒன்று. அதனைச்செய்யுமுறைகள் வேறுபடும். தற்சமயத்தில் மூன்று முறைகளைப் பயன்படுத்துவார்கள். தங்க ரேக்குதான் மூலப்பொருள். தங்கரேக்கு என்பது சுத்தமான தங்கத்தை மெல்லிய தகடாக அடித்துச்செய்யப்படுகிறது. தாளைவிட மெல்லியதாக இருக்கும். தங்கரேக்கை எடுத்து தனலில் வைத்து பழுக்கக் காய்ச்சுவார்கள். பின்னர் அதனை அப்படியே நல்லெண்ணெயில் முக்கி எடுப்பார்கள். இதுபோன்று ஏழு தடவைகள் செய்வார்கள். அதே மாதிரி, பழுக்கக்காய்ச்சி புளித்த மோரில் ஏழு முறை இட்டு எடுப்பார்கள். பின்னர் பசுவின் மூத்திரத்தில் அவ்வாறு செய்யப்படும். இறுதியாக கொள்ளு தானியத்தின் கொதிக்கவைத்த வடி தண்ணீரில் விட்டு எடுப்பார்கள். 'ரசகர்ப்பூரம்' என்று ஒன்று இருக்கிறது. 'Mercuric Chloride' என்னும் ரசாயனப்பொருள் அது. நவபாஷாணத்தில் ஒன்றாகும்.

'நவ பாஷாணம் நவ பாஷாணம் என்று சொல்கிறார்களே, அது என்ன?' என்று கேட்குமுன்னர் சொல்லிவிடுகிறேன்.

சாதிலிங்கம், மனோசிலை, காந்தம், தாரம், கெந்தி, ரஸகர்ப்பூரம், வெள்ளைப்பாஷாணம், கௌரி பாஷாணம், தொட்டிப் பாஷாணம் ஆகியவை.

ரஸகர்ப்பூரத்தை எலுமிச்சம் சாற்றிடன்சேர்த்து அரைத்து வைத்துக்கொள்வார்கள். இதனை எடுத்துத் தங்க ரேக்கின் மீது அப்பிவிடுவார்கள். அடுத்தபடியாக மண்சிமிழில் கந்தகத்துடன் சேர்த்து வைத்து வாய்ச்சீலையிட்டு மண்பூசி மூடிவிடுவார்கள். அது காய்ந்தவுடன் புடம்
போடுவார்கள். எட்டு முறையாவது புடம் போடுவார்கள். எட்டு முறையும் ரசகர்ப்பூரத்தைச் சிறிது சேர்த்துக்கொள்வார்கள். பஸ்பத்தின் தன்மையைப் பொறுத்து இன்னும் அதிகமாகவும் புடம் போட நேரிடலாம்.

இன்னொரு முறையும் இருக்கிறது. 'மஞ்சள் கடம்பு' என்னும் தாவரம் ஒன்று இருக்கிறது. அதிலிருந்து ஒருவகையான உப்பு தயாரிப்பார்கள். ஒரு வகைக் கள்ளியின் பாலுடன் இதனைச் சேர்த்து கலவையொன்றைச் செய்வார்கள்.இந்தக்கலவையுடன் தங்கரேக்கைச் சேர்த்து அரைப்பார்கள். அதனைக் காயவைத்த பின்னர், 'கபில நிறம்' போன்ற வண்ணத்தைக்கொண்டதொரு பஸ்பம் கிடைக்கும்வரை இரு முறையோ அல்லது அதற்கும் மேலாகவோ அதனைப் புடம் போடுவார்கள்.

வேறொரு முறையில் தங்கரேக்கின் மீது எலுமிச்சஞ் சாற்றுடன் கலந்த ரசகர்ப்பூரத்தை அப்பிப் பழுக்கக் காய்ச்சி, அதனை முள்ளுக்கீரையின் பொடியுடன் கலந்து புடம் போடுவார்கள்.

இதனை சிறிய அளவில் உட்கொள்ளவேண்டும்.



தங்க பஷ்பம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 17, 2009 12:01 am


தங்க பஸ்பம் சாப்பிடுவதால் இளமை திரும்புமா?


அமுக்குராக் கிழங்கு, பூனைக்காலி, கஸ்தூரி ஆகியவற்றுடன் சேர்த்து அதனைச் சாப்பிடவேண்டும். அந்த மூன்றையும் 'அனுபானம்' என்று சொல்வார்கள். முதுமை ஏற்படமாட்டாது. தாது புஷ்டியைத் தோற்றுவிக்கும். பாலுணர்வை அதிகரிக்கும். வீரியத்தையும் ஏற்படுத்தும்.

தங்க பஸ்பம் விஷத்தன்மை படைத்ததா?

விஷத்தன்மை படைத்தது என்று சொல்வதற்கில்லை. அதைத் தயாரிக்கும்போது ரசகர்ப்பூரம்சேர்கிறது. இது ஒரு விஷம். நவபாஷாணத்தைச் சேர்ந்தது. கந்தகம் போன்றவையும் வேறு சில மூலிகைகளும் சம்பந்தப்படுகின்றன. செய்முறையில் ஏதேனும் கோளாறு ஏற்பட்டால் விஷமாகி உயிருக்கு ஆபத்து நேரிடும்!



தங்க பஷ்பம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 17, 2009 12:05 am

நிங்கள் தங்க பஸ்பம் பார்த்து இருக்கிறிர்களா அது என்ன கலர் என்ன சுவை என்ன தேவைக்காக பயன்படுகிறது இதை சாப்பிட்டு வந்தால் வெள்ளையாக வரலாம் என்கிறார்களே இது உண்மையா இது விலை அதிகமா இப்பொழுது புழக்கத்தில் இருக்கிறதா தங்க பஷ்பம் Icon_question

சிவா
சிவா
நிறுவனர்

நிறுவனர்
பதிவுகள் : 91537
இணைந்தது : 19/09/2008
http://www.eegarai..net

Postசிவா Thu Sep 17, 2009 12:14 am

புகைப்படம் பின்னர் தருகிறேன். வாங்கி வைத்துள்ளேன், இன்னும் சாப்பிடவில்லை! மிகக் குறைவான அளவில் புழக்கத்தில் உள்ளது. விலை மிக மிக அதிகம்!



தங்க பஷ்பம் Q9CBqnj
அனுபவமொழிகள், பொன்மொழிகள் அடங்கிய நூற்றுக்கணக்கான காலை வணக்கம் படங்களைப் பெற:

https://picsart.com/u/sivastar
https://picsart.com/u/sivastar/stickers


ஈகரை டெலிகிராம் ஆப்பில் இணைய: https://t.me/eegarai
ரூபன்
ரூபன்
வி.ஐ.பி

வி.ஐ.பி
பதிவுகள் : 10783
இணைந்தது : 03/04/2009
http://www.eegarai.net/forum.htm

Postரூபன் Thu Sep 17, 2009 12:19 am

தங்க பஷ்பம் Icon_eek எனக்கு கொஞ்சம் பெரியப்பு

Sponsored content

PostSponsored content



Page 1 of 2 1, 2  Next

View previous topic View next topic Back to top

மறுமொழி எழுத நீங்கள் உறுப்பினராக இருக்க வேண்டும்..

ஈகரையில் புதிய பதிவு எழுத அல்லது மறுமொழியிட உறுப்பினராக இணைந்திருத்தல் அவசியம்

உறுப்பினராக பதிவு செய்க

ஈகரையில் உறுப்பினராக இணைவது மிக எளிது


பதிவு செய்ய

உள்நுழைக

ஏற்கனவே பதிவு செய்துள்ளீர்களா? இங்கு இணையுங்கள்.


உள்நுழைக