ஈகரை தமிழ் களஞ்சியம்உறுப்பினராக இணையுங்கள்
உள்நுழைய இங்கு அழுத்தவும்
புதிய இடுகைகள்
துணை ராணுவத்தில் 55 ஆயிரம் பேரை சேர்க்க திட்டம்
 SK

ஆர்யாவின் வில்லன் அவதாரம்!
 SK

ஸ்ரீதேவி மகள் ஜான்வி கபூர் நடிகையாக அறிமுகமாகும் படம்
 SK

1800 வாட்ஸ் ஆப் குழுக்கள்: பா.ஜ., அதிரடி
 SK

கரையே இல்லாத ஆறு
 SK

கனவென்ற ஒரு கிராமத்து பயணம்!
 SK

முத்தான 3000 பதிவுகள் கடந்த சிவனாசான் ஐயாவை வாழ்த்தலாம் வாருங்கள் ...
 கோபால்ஜி

கை தேர்ந்த அரசியல்வாதி - கார்ட்டூன் (தொடர் பதிவு)
 SK

தமிழில் பெயர் மாற்றம் செய்ய!
 SK

என் அப்பா.
 SK

அமெரிக்கர்களை மிரட்டி பணம் பறித்த புகார்: 21 இந்தியர்களுக்கு சிறை - நியூயார்க் நீதிமன்றம் உத்தரவு
 SK

சன்னி லியோனின் இன்னொரு பக்கம்!
 SK

வில்லியாக நடிக்க ஆசை!
 SK

‘திரில்’லர் படத்தில் நித்யா மேனன்!
 SK

வானுயர்ந்த சோலையிலே - புகைப்படங்கள் (தொடர் பதிவு)
 SK

போலி ரயில் டிக்கெட் தயாரித்து விற்பனை செய்தவா் கைது
 SK

‘சிங்கத்தின் வாலைப் பிடித்து விளையாடினால் வருத்தப்பட வேண்டியது வரும்’ அமெரிக்காவுக்கு ஈரான் கடும் எச்சரிக்கை
 SK

நாட்டில் முதல்முறையாக சிம்கார்டு இல்லாத செல்லிடப்பேசி சேவை: 25-ஆம் தேதி பிஎஸ்என்எல் அறிமுகம்
 SK

ஏழு தாளங்கள்
 ayyasamy ram

சமந்தாவின் ‘யு டர்ன்’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியீடு
 ayyasamy ram

ஒரு பெக் தர்மம் பண்ணுங்க சாமி...!!
 ayyasamy ram

குறுக்கு வழியில போனா நல்லா சம்பாதிக்கலாம்...!!
 ayyasamy ram

சினி துளிகள்
 ayyasamy ram

பாகிஸ்தான் தேர்தலில் புதன்கிழமை ஓட்டுப்பதிவு: ஆட்சியைப் பிடிப்பதில் இம்ரான்கான் உறுதி
 ayyasamy ram

பூங்கொத்து விளையாட்டு
 ayyasamy ram

சேலம் மாவட்டத்தின் பல பகுதிகளில் இன்று காலை நில அதிர்வு
 கோபால்ஜி

'ஆன்லைன்' ரயில் டிக்கெட் முன்பதிவு கூடுதல் கட்டணம் வசூலிக்க முடிவு
 ayyasamy ram

குச்சனூர் சனிபகவான் திருத்தலத்தில் - ஆடிப்பெருந்திருவிழா
 ayyasamy ram

ஆடி மாதத்தில் எந்த சுபநிகழ்ச்சியும் செய்வதில்லை ஏன்?
 ayyasamy ram

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 3 !
 சிவனாசான்

சென்னை ஐகோர்ட் தலைமை நீதிபதி ஆகிறார் தஹில்ரமணி
 சிவனாசான்

மனைவியை கைவிட்ட 8 என்ஆர்ஐ.க்களின் பாஸ்போர்ட் ரத்து
 சிவனாசான்

இந்திய ரூபாயின் மதிப்பு கடும் வீழ்ச்சி
 சிவனாசான்

முதியோர் காதல்
 சிவனாசான்

இது ஆரம்பம் தான் : ராகுல் பேச்சுக்கு சிவசேனா புகழாரம்
 சிவனாசான்

கல்லூரிக் குடும்பம் -காதலுண்டு காதலர் இல்லை
 Dr.S.Soundarapandian

தமிழ்நாட்டில் தாவரங்கள் (216)
 Dr.S.Soundarapandian

இதிலென்ன இருக்கு பேசுவோம் - 2 !
 seltoday

புத்தகங்கள் தேவை !
 ரா.ரமேஷ்குமார்

நாவல் தேவை
 SK

சைபர் கிரைம் விழிப்புணர்வு.
 SK

நம்பிக்கையில்லா தீர்மானம்: பா.ஜ.,வுக்கு தைரியம் எப்படி?
 SK

அவளுக்கு அறியாத வயசு ...!!
 சிவனாசான்

துயரங்களும் தூண்களாகுமே !
 சிவனாசான்

மனிதர்களை மட்டுமல்ல மொபைல்களை காப்பற்ற வருகிறது ஏர்பேக்!!
 சிவனாசான்

லிப்டு கால்கட்டு ...!!
 சிவனாசான்

போராட்டம்...
 சிவனாசான்

84 நாடுகளுக்கு பயணம் செய்த மோடி; ரூ.1,484 கோடி செலவு
 SK

நரை கூறிய அறிவுரை
 Mr.theni

வீர யுக நாயகன் ----ரமேஷ்குமாருக்கு பிறந்த தின வாழ்த்துகள்.
 ரா.ரமேஷ்குமார்

வீரயுக நாயகன் வேள் பாரி - 92 -சு.வெங்கடேசன் - சரித்திர தொடர்
 ரா.ரமேஷ்குமார்

முட்டையை மறுக்கும் இந்தியர்கள்
 SK

செய்யத் தகாத 16.
 SK

ஒரு குட்டி கதை: முயற்சி வெற்றி தரும்...
 சிவனாசான்

புத்தகங்கள் வேண்டும் இருந்தால் பகிரவும்
 சிவனாசான்

புற்றுநோய்: ரூ.32,200 கோடி இழப்பீடு வழங்க பிரபல குழந்தைகள் பவுடர் நிறுவனத்துக்கு உத்தரவு
 சிவனாசான்

தமிழ் நேசன் !?
 சிவனாசான்

குறியீடுகள், குறி ஈடுகள் மற்றும் நாம்
 சிவனாசான்

எது மென்மை
 சிவனாசான்

காடும் காடர்களும்
 சிவனாசான்

மின்னூல்கள் தரவிறக்கம்

Top posting users this week
SK
 
ayyasamy ram
 
கோபால்ஜி
 

Admins Online

என் மதிப்புக்குரிய ஆண்கள் !

View previous topic View next topic Go down

என் மதிப்புக்குரிய ஆண்கள் !

Post by மஞ்சுபாஷிணி on Sat Mar 19, 2011 12:57 am

என் மதிப்புக்குரிய ஆண்கள் !

'நடன மேதை’ பத்மா சுப்ரமணியம்

நடன மேதை, பத்மஸ்ரீ, டாக்டர் பத்மா சுப்ரமணியத்தின் அலுவலகம்... வாங்கிக் குவித்த பட்டங்களும் பரிசுகளும் அழகான அபிநயத்துடன் வீற்றிருக்க... ''என் மதிப்புக்கும் மரியாதைக்கும் உரிய ஆண்களா...'' என்று சொல்லிக் கொண்டே இமை மூடிய பத்மா சுப்ரமணியம், பரதத்தில் ஆயிரம் உணர்வுகளை அரை நொடியில் காட்டும் அந்த அழகிய கண்களைத் திறக்காமல் முதலில் சொன்னது...

''என் அபரிமிதமான பக்திக்கும் பெரும் மதிப்புக்கும் உரியவர், ஜெகத்குரு காஞ்சி மகாபெரியவர். அவருடைய கண்களைப் பார்க்கும்போது, காஞ்சி காமாட்சியையே நேரில் பார்த்த உணர்வு வரும். காஞ்சிக்குப் போன பல சமயங்களில் பெரியவாளை மட்டும் பார்த்துவிட்டு, அம்பாளைப் பார்க்காமலே திரும்பியிருக்கிறேன். அவரின் பேரன்பாலும் அவரிடம் எனக்கிருக்கும் பெரும் பக்தியாலும் அவரை என் குருவாகவும் வழிகாட்டியாகவும் ஏற்றுள்ளேன்'' என்றவர், தொடர்ந்தார்...

''என்னுடைய அத்தனை உயர்வுக்கும், புகழுக்கும், நாட்டியத்தில் நான் சென்றிருக்கும் எல்லைக்கும் காரணமான பிதாமகன்... என் அப்பா மறைந்த இயக்குநர் கே.சுப்ரமணியம். வீட்டில் நான் கடைசிக் குழந்தை என்பதால், என் மீது அவருக்கு ஏக பாசம். எப்போதும் என் மேல் அன்பை மட்டும் மழையாகப் பொழிந்தவர். எந்தச் சூழ்நிலையிலும் எதற்கும் என்னைக் கடிந்து கொண்டதுஇல்லை. இந்த உலகத்தையும் அதில் இருக்கும் கலைகளையும் உண்மையாக, மனமார நேசிக்க வேண்டும் என்பதைக் கற்றுக்கொடுத்த குரு. எதையும் விசாலமான தொலைநோக்குப் பார்வையால் அணுக வேண்டும் என்பதை தன்னுடைய நடவடிக்கைகளால் செயல்படுத்திக் காண்பித்த தேசாபிமானி. அதுவே அவரிடத்தில் எனக்கு அப்பா என்கிற பாசத்தை மீறிய மரியாதையையும் பக்தியையும் வளர்த்து, இன்று வரை அவற்றை பத்திரமாக, பாசமாக பூட்டி வைத்திருக்கிறது!

தாயுமாகி, தந்தையுமாகி ஒரு கட்டத்தில் எனக்கு சகலமாகவும் இருந்தவர் என் மூத்த அண்ணன் பாலகிருஷ்ணன். தங்கையை, தான் மட்டும் நேசிக்காது... தன் மனைவிக்கும், 'உன் நேசமும் பாசமும்தான் இவளுக்கு உரம்’ என்பதைச் சொல்லிக்கொடுத்த பொக்கிஷம். என்னிடம் கண்டிப்பாக இருக்க வேண்டிய இடத்தில் ஓர் ஆசிரியருக்கு உரிய கண்டிப்புடனும், கருணை யுடன் இருக்க வேண்டிய நேரத்தில் ஒரு தாயாகவும் இருந்தவர். அவரிடம் கேட்காமல் எந்தக் காரியத்தையும் நான் செய்ததே இல்லை. அது பயத்தினால் அல்ல; நான் அவர் மீதும், அவர் என் மீதும் கொண்ட பாசத்தால்!

ஒரு பச்சிளம் குழந்தைக்கு பால் புகட்டுவதைப் போல் ஆன்மிகத்தை எனக்குள் புகட்டிய சுவாமி தயானந்த சரஸ்வதி, என் அதீத மரியாதைக்கு உரியவர். முப்பது ஆண்டுகளுக்கும் மேல் இவரின் சொற்பொழிவைக் கேட்கிறேன். அவருடைய எளிமையான வேதாந்த கருத்துகள் எனக்கு ஆன்மிகத்தைப் பற்றிய சரியான புரிதலை ஏற்படுத்தியது. புகழ் என்னை உச்சத்தில் கொண்டு வைக்கும்போதும், விமர்சனம் என்னை கீறும்போதும் நிலை தடுமாறாமல் இருக்கும் கலையை இவருடைய போதனைகள்தான் எனக்கு கற்றுக் கொடுத்தன!

17 வயதிலேயே 72 ராகத்திலும் பாடல்களை சிருஷ்டித்த சரஸ்வதி புத்திரன் டாக்டர் பாலமுரளி கிருஷ்ணா என் பெரும் மரியாதைக்கு உரியவர். இத்தனை வயதுக்குப் பிறகும் இன்னும் இசைக் காகவே தன்னை அர்ப்பணித்துக் கொண்ட அவரின் ஈடுபாடுதான் அவர் மேல் நான் கொண்ட பெரு மரியாதைக்குக் காரணம்!

ருக்மணியம்மாவின் முதல் சீடர், 70 வயதுகளிலும் அசாத்தியமாக நடனமாடக் கூடிய நடன மேதை புரொஃபசர் சி.வி.சந்திரசேகரின் பாதங்கள் ஏற்படுத்தும் அதிர்வுகளை என் உள்ளத்தில் வாங்கிஇருக்கிறேன் நான். இந்தக் கலைக்கான அவரின் அர்ப்பணிப்பும் நடனத்தின் மேல் அவர் வைத்திருக்கும் தீரா காதலும் அவருக்கான மரியாதை சிம்மாசனத்தை என மனதில் ஏந்த வைத்துள்ளன!

பிற உயிர்களின் பிணி போக்குதலை தன் வாழ்வின் பெரும் பயனாக ஏற்றிருப்பவர் ஆயுர்வேத மருத்துவர் டாக்டர் கிருஷ்ணகுமார் வாரியார். கோவையில் இருக்கும் அவருடைய மருத்துவமனையில் மருத்துவராக மட்டுமில்லாமல், மிகச் சிறந்த நிர்வாகியாகவும் அவரை அறிய நேர்ந்தபோது, வியந்திருக்கிறேன். ஆயுர்வேத மருத்துவத்தில் இவருடைய அளப்பரிய ஞானமும், அதை மக்களுக்கு கொண்டு சேர்க்க முனையும் இவரின் சேவையும் பெரிது!

இவர்கள் மட்டுமல்ல... பெண்மையை மதிக்கும் எல்லா ஆண்களுக்கும் என் நமஸ்காரங்கள்!'' என்று கூப்பியவரின் கைகளின் விரல் நகங்களில்கூட, அத்தனை நளினம்! அதுதான் பத்மா சுப்ரமணியம்!


நன்றி விகடன்...
avatar
மஞ்சுபாஷிணி
வி.ஐ.பி

வி.ஐ.பி

நிகழ்நிலை
இணையாநிலை

பதிவுகள் : 9995
மதிப்பீடுகள் : 888

View user profile http://www.manjusampath.blogspot.com

Back to top Go down

View previous topic View next topic Back to top


Permissions in this forum:
You cannot reply to topics in this forum